நல்வரவு_()_


Monday 28 May 2012

வாழைப்பழ ரொட்டி...ஈஈஈ:))

அவ்வ்வ்வ்வ்வ் ஒட்டீஈஈஈஈஈ:))


Remember... buy 1 get 1 free:))

தற்கு.. கோதுமை ஒரு கப் எனில் வாழைப்பழம்.. பெரிது ஒன்று..., சின்னதாக இருப்பின் 2 அ 3 சேர்த்தால்தான் சுவை அதிகம்.. அத்துடன் சக்கரை(சீனி அல்ல) + கொஞ்சம் உப்பு(கட்டாயமில்லை)...

முதலில் வாழைப்பழம் + சக்கரையைப் போட்டு கோதுமை மாவுடன் நன்கு பிசைந்து குழைக்கவும், தண்ணி பெரிதாக தேவைப்படாது... கொஞ்சம் கொஞ்ச மாக சேர்க்கவும், டக்கெனத் தண்ணியாகிவிடும்... அத்தோடு குழைத்து நீண்ட நேரம் வைத்தாலும் தண்ணியாகிவிடும்..



இதனையும் ரொட்டியாகத் தட்டி மெல்லிய தீயில், எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.. நீஈஈஈஈஈஈஈண்ட நேரம் பொரிக்கவும்.. இல்லையெனில் உள்ளே அவியாது... இது எங்கள் வீட்டில், நவராத்திரி காலங்களில் தவறாமல் செய்வோம்.

 ........டொட்ட டாங்...... டொட்டடாங்.... டொட்டடாங்......

ஐ... இதுதான் காணாமல் போய் கண்டெடுத்த படம்... மகியின் குறிப்புப் பார்த்துச் செய்த

1.“சேப்பங் கிழங்கு வறுவல்”




2. “சேப்பங் கிழங்கு மோர்க் குழம்பு”

அவ்வ்வ்வ்வ் ஒட்டீஈஈஈஈஈ:))
இது சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு,
சூப்பராக இருந்துது . மகியின் குறிப்புத்தான்,
லிங் தேடிக் களைச்சிட்டேன்:(..
மகி யெல்ப் பிளீஸ்ஸ்!!
88888888888888888888888888888888888888888888888888888888888888
ஊசி ரிப்ஸ்:)
கறிவேப்பிலை அதிகம் வாங்கி விட்டால், அதை உருவி ஒரு பேப்பர் bag இல் அல்லது என்வலப்பில் போட்டு நன்கு மூடி, ஃபிரீசரில் வைத்து விட்டால், எப்போ கறிக்குப் போடாலும், அதே பச்சைக் கலரில் கிடைக்குது.... புது இலைபோல சூப்பராக இருக்கு... எப்பூடி என் கண்டு பிடிப்பூ:)).
88888888888888888888888888888888888888888888888888888888888888


ஊசி இணைப்பு:
கண்டதும் படித்தால் பூஸானந்தா ஆகலாம்:)

இம்முறை அவசரத்துக்கு என் ஐ ஃபோன் அப்லோட் பண்ண மறுத்துவிட்டது படங்களை:(( ,அதனால அதிராவுக்கு சாட்:(((.. உங்களுக்கு அப்பாடா!! படம் பார்க்கும் தொல்லை இல்லை என ஹப்பி:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எப்படி எல்லாம் வாழக்கூடாதோ..
அப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறேன்ன், ஆகவே,
“இப்படித்தான் வாழ வேண்டும்” என்று 
புத்தி சொல்லக்கூடிய யோக்கியதை எனக்குண்டு....
.................................எங்கட கண்ண... தாசன் சொன்னவர்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Friday 25 May 2012

ஆ.. நய..கரா:))

யகரா நீர் வீழ்ச்சிக்குப் போனதும், அங்கிருந்த ஷொப்பில், இவர் என் கண்ணில் பட்டார்ர்... சந்தோஷம் பொயிங்கிட்டுது எனக்கு:))

வழமைபோல அனைத்துப் படங்களையும் லெஃப்ட் கிளிக் அண்ட் பெரிசூஊஊஉ ஆக்கிப் பாருங்கோ....
சரி இனி ரொரன்ரோவிலிருந்து நயகராவுக்குப் போகலாம் வாங்கோ:)).. விடுமுறை நாள், அத்தோடு காலை நேரம் என்பதால் வாகன நெரிசல் இருக்கவில்லை.



இது Niagara Water Falls Area வுக்குள் நுழையும் காட்சி...



ஆஹா இந்தத் தண்ணீரைப் பாருங்கோ... எங்கிருந்து வருகிறதென்றே தெரியாது, ஆனா இப்படியேதான், நாம் முன்பெல்லாம் பார்த்தபோது எப்படி இருந்ததோ, அதே அளவில், கொஞ்சமும் குறைவில்லாமல் எங்கிருந்தோ ஓடிவந்து அந்தாப்பெரிய பாதாளத்தில் விழுகிறது... இதுதான் அதிசயம்...
இப்போ தண்ணி விழும் பாதாளம்(நீர் வீழ்ச்சி) தெரியுதோ? படத்தில் ஆளம் தெரியவில்லை, ஆனால் நேரில் பார்த்தால்... தலை சுத்தும்... அந்தளவு பாதாளம்...

குளிர் நேரம் என்பதால், தண்ணி விழும் வேகத்தில் ஒரே புகையாக(ஆவி) இருக்கிறது.. இடது பக்கம் மக்கள்ஸ்ஸ்ஸ் நிற்பது தெரியுதெல்லோ....

இந்த நிலைமையிலும் ஒரு சீகல்(Seagull) பிள்ளை பறக்கிறார்:)) என்னா தைரியம்:))


எங்கேயோ இருந்து தண்ணி வந்து குதிக்கிறது...

இதில் தெரியும் பாலம்தான் கனடாவையும் அமெரிக்காவையும்( Buffalo) இணைக்கும் பாலம். இடது பக்கம் இருப்பது கனடிய இமிகிரேஷன், வலது பக்கம் இருப்பது அமெரிக்க இமிகிரேஷன். வலது பக்கத்தில் குட்டியாகத் தெரியுதே... அதுதான் அமெரிக்காவின் “நயகரா”:))


இதுதான் அமெரிக்கப் பக்கம் இருக்கும் நயகரா... இதில் பெரிதாக்கிப் பாருங்கோ.. சிவப்பு ஏணிப்படிகள் இருக்கு, மக்கள் ரெயின்கோட் போட்டுக்கொண்டு நீர் வீழ்ச்சிக்கு அருகில் போய் வரக்கூடியவாறு செய்திருக்கிறார்கள், பார்க்கவே பயங்கரம், பேரிரைச்சல், அதில் கிட்டப் போவதோ? நோ சான்ஸ்ஸ்ஸ்:)))



பின்னேரம் மழை தூறியது, அப்போ வானவில்லும் தோன்றிச்சுதே:))

அங்கு குதிரை வண்டில் சவாரியும் இருந்தது...

இது அங்குள்ள ஒரு கிட்டத்தட்ட குட்டி டிஷ்னி வேர்ட் போல.. சின்னவர்களுக்கு, ஏன் நமக்கும் ஏற்ற இடம்:))

இது அங்கிருந்த ஒரு ஷொக்கலேட் ஷொப், ஷொக்கலேட் செய்கிறார் உந்த அண்ணா:))

இதில் தெரிவது Lights, அதாவது “ஆரோ” சொல்லிச்சினம், ஈஃபிள் ரவர் இரவில் ஓர் அழகாக இருக்குமென்று:), அப்படித்தான், நயகராவின் நீர் வீழ்ச்சியும், இரவில், இந்த லைஸ்ட் ஐப் போட்டுவிடுவார்கள், நிறம் மாறிக் கொண்டிருக்கும் லைட், அந்த வெளிச்சம் , இந்த நீர்வீழ்ச்சியில் போய் அடிக்கும்போது, நீர் வீழ்ச்சியும் கலர் மாறிக் கொண்டிருக்கும், இருட்டிய பின்பே லைட்ஸ் போடுவார்கள். அதுவும் ஒருவித கொள்ளை அழகே... நாம் அதுக்கு நிற்கவில்லை..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஊசி இணைப்பு:
இந்த லிங் பாருங்கோ.. இது வெப்கமெராமூலம் எடுக்கப்படுது, 24 மணிநேரமும் நேரடி ஒளிபரப்பு... இந்திய நெரம் காலையில் இதைப் பார்த்தால், நான் கூறிய லைட்டுகளின் அழகை நேரடியாக ரசிக்கலாம்.
இதனையும் full screen ஆக்கிப் பாருங்கோ ஆட்கள் நடந்து கொண்டிருப்பதெல்லாம் தெரியும்.

http://www.niagarafallslive.com/niagara_falls_webcam.htm

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பின் - ஊசி இணைப்பு:))
========================================================
அன்பற்ற இடத்திலிருந்து வரும், மலையளவு எதிர்ப்பையும் தாங்குகிற இதயம், அன்புள்ள இடத்திலிருந்து வரும் கடுகளவு எதிர்ப்பைக்கூட ஏற்க மறுக்கிறதே..... எங்கட கண்ண..தாசன் சொன்னவர்
========================================================
முதலாவது பின்னூட்டம் போடுபவருக்கு, வடை சுடும் ஆயாவும்:), 2வது பின்னூட்டமிடுபவருக்கு மட்டின் பிர்ராணி செய்யும் ஆயாவும் ஒப்படைக்கப்படும்:)) பத்திரமாக ஏசிக் காரில் ஏற்றிச் செல்லும்படி வேண்டப்படுகிறீர்கள்.. மியாவும் நன்றி.

Friday 18 May 2012

ஐ..கார்ட்:)) நொட் ஐடண்டிடிகார்ட்:))


என்ன தலைப்பே குழப்புதோ?:)) அதுதானே என் தொழிலே:)).. சரி இப்போ விஷயத்துக்கு வாறன்:))..

கண்!!!!

இங்கின இரண்டு வட்டங்கள் .. உள்ளுக்குள் வெள்ளை அதனுள் கறுப்பு வட்டம் எல்லாம் தெரியுதோ?:)) அதுதான் கண்ண்ண்ண்ண்!!!! நோ குரொஸ் குவெஷ்ஷன் பிளீஸ்:))!!! அதைப்பற்றித்தான் இப்ப கதைக்கப்போறேன்..

இதயம்!!!!
அத்தோடு இதயமும் சேருது.. இது லபக் டபக் அல்ல:)) ஏற்கனவே சொன்னதுபோல புஸுக் பூஸ்:))
நான் படிக்கும்போது, கண் என்னும் பகுதி எனக்கு தண்ணி மாதிரி, சூப்பராக கண்ணின் குறுக்குவட்டம் கீறி, குறிப்பேன், எப்படிக் கேள்வி கேட்டாலும் கண்பற்றிய அத்தனை விஷயமும் சொல்வேன்... அதென்னமோ தெரியவில்லை, நித்திரையில் தட்டிக் கேட்டால்கூட அத்தனையும் தெளிவாக ஒப்புவிப்பேன்... எந்த வித தடங்கலோ, டவுட்டோ இல்லாமல், கண்ணில், நான் வலு கெட்டிக்காரியாக இருந்தேன். அதேபோல இதயமும் படம் கீறி அனைத்தையும் விளங்கப்படுத்துவேன், ஆனால் கண்ணளவுக்கு வராது. இது எங்கள் விஞ்ஞான ரீச்சருக்கு நன்கு தெரியும்.

அப்போ ஒரு முறை, நாங்கள் ஒன்பதாம் வகுப்பென நினைக்கிறேன் படித்தவேளை. 11, 12ம் வகுப்பினருக்கான விஞ்ஞானக் கண்காட்சி(Exhibition), அந்த மாவட்டப் பாடசாலைகள் அனைத்தும் சேர்ந்து நடாத்தின.

அப்போ ஒரு வெள்ளிக்கிழமை, விஞ்ஞான ரீச்சர்.. எங்கள் வகுப்புக்கு வந்து என்னை அழைத்தா, அழைத்துச் சொன்னா, அதிரா நாளைக்கு விஞ்ஞானக் கண்காட்சி.. இந்த ஹோலில்.. நடைபெறப் போகிறது, அதுக்கு நீங்கள் வந்து கண்ணையும், இதயத்தையும் விளங்கப்படுத்த வேண்டும், விஞ்ஞான லாப் இல் இருக்கும் பெரிய குறுக்குவட்டப் படங்கள் தருவேன்(ஏதோ கிளே பாவித்துச் செய்யப்பட்டிருந்தது), அதை வைத்து விளங்கப்படுத்துங்கோ, இத்தனை மணிக்கு பஸ் வெளிக்கிடும் கரெக்ட்டா வந்திடுங்கோ என மளமளவெனச் சொல்லிப்போட்டுப் போய்விட்டா, என்னிடம் okay ஆ? என்றுகூடக் கேட்கவில்லை, கட்டளையிட்டுவிட்டு ஓடிவிட்டா.

நான் அப்படியே பேயறைந்த மாதிரி ஆகிவிட்டேன். இதுவரை எந்தக் கண்காட்சியிலும் பங்குபற்றியதில்லை வெளியிடங்களில்.. இது வெளியிடத்தில் அதுவும் உயர்தர மாணவர்களோடு... நானோ சரியான ஷை:)).. எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை... என்ன செய்வதென யோசித்தவேளை டக்கென கிட்னியில் ஐடியா உதித்தது:)...

என் பெஸ்ட் ஃபிரெண்ட் இருக்கிறாவெல்லொ.. இதில பாருங்கோ.. .... “என் பரிசுப் பொருள் நீதான்”...
அவ, “இதயத்தில்” என்னைவிடக் கெட்டிக்காரி... அவவை இணைத்தால் எனக்கும் உதவியாக இருக்கும், ஜாலியாகவும் இருக்குமே என எண்ணி, அவவைக் கேட்டேன், என்னோடு வருவதெனில் அவ உடனேயே சம்மதிப்பா... வருகிறேன் என்றிட்டா... அப்போ இனி மீண்டும் போய் ரீச்சரிடம் கேட்க வேண்டும், தயங்கித் தயங்கிப் போய்ச் சொன்னேன்... ரீச்சரும் சரி அவவையும் கூட்டி வாங்கோ என்றிட்டா... சொல்ல முடியாத மகிழ்ச்சி...

அடுத்த நாள் நல்ல ஸ்டைலா யூனிஃபோம் போட்டு வெளிக்கிட்டுப் போயாச்சு:)... நண்பி இதயத்தையும் நான் கண்ணையும் விளங்கப்படுத்தத் தொடங்கினோம். பல்கலைக்கழகம் தொடங்கி, நேசறிக் குட்டீஸ் வரை வந்தார்கள், என்னென்னமோ கேள்வி எல்லாம் கேட்டார்கள்.. நானுமோ சும்மா மின்னி மிழங்கிக்கொண்டிருந்தேன்.. எனக்குத்தான் டவுட்டே இல்லையே.. ஒரே பெருமையாக இருந்தது.. பின்னேரம் 3 மணியாகிவிட்டது, அப்போதான்...

அதுக்கு முதல் இன்னொரு கதை சொல்ல வேணும்.. எப்பவும் ஸ்கூல் விட்டதும்... ஆண்கள் கல்லூரி அண்ணன்மார்.. எம் ஸ்கூல் வாசலால் வட்டமடித்துச் சுத்துவது வழக்கம்... அக்காமாரைப் பார்ப்பதற்காக.. நாம் அதைக் கவனிப்போம் ஆனா நம்மை ஆரும் கவனிப்பதில்லை:)) ஏனெனில் நாம் குஞ்சுப்பார்ட்டிதானே?:)(குட்டீஸ்:)).

அப்போ அங்கு ஒரு பேமஸ் ஆன டொக்ரரின் இரு மகன்கள்(இரட்டையர்கள்) இருவரும் ஒரே மாதிரித்தான் உடுப்புப் போடுவினம், ஒரே மாதிரி சைக்கிளில் ஒன்றாக வட்டமடிப்பினம்.. அவர்களை எல்லோருக்கும் தெரியும், ஆனா மரியாதையானவர்கள்.. ச்ச்ச்ச்சும்மா சுத்துவது மட்டும்தான் வேறு எப்பிரச்சனையிலும் அகப்பட்டதாக நான் அறியவில்லை:)... பின்பு அவர்களும் பல்கலைக் கழகம் போய்விட்டிருந்தார்கள்.

இப்போ அவர்கள் என் முன்னால்... எனக்கு ஒருவித பயமாக இருந்தது... யூனிவசிட்டி ஆட்களாயிற்றே என்ன கேள்வி கேட்கப் போகினமோ என... இருப்பினும் எங்கிட்டயேவா? எனக்குத்தான் கண் என்றால் தண்ணி மாதிரி... என உஷாராக நின்றேன்... அவர்கள் என் முன் வந்ததும் கேட்ட முதல் கேள்வி.. “இது ஆருடைய கண்?”.

எனக்கு தூக்கிவாரிப்போட்டது... விஞ்ஞானத்தோடு சம்பந்தப்படுத்திக் கேட்கினமோ?, இல்லை நிஜமோ?, இல்லைக் கிண்டலோ? எனக்கு எதுவும் புரியவில்லை... பதில் சொல்லத் தெரியவில்லை... வாழ்க்கையில் முதன் முறையாக.. கண் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்காமல்.. கண்களை உருட்டினேன்... அதைப் புரிந்துகொண்ட அவர்கள் சொன்னார்கள்..

“இது முலையூட்டிகளின் கண்”.. இனிமேல் மறந்துவிடாதீர்கள் எனச் சொல்லிக் கொண்டு நகர்ந்தார்கள்... அத்தோடு என் அகங்காரம்:), துடிப்பு, ஆணவம்:))உஷார், அத்தனையும் உடைந்துவிட்டது:)), ஒரு சாதாரண கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் போய் விட்டேனே... இது தெரியாமலோ இவ்ளோ நேரம் கொக்கரித்து ஆரவாரம் செய்தேன்.. என அடடடங்கிப் போயிட்டேன் பாருங்கோ:((((... இதுக்குத்தான் சொல்லுறது அதிகம் துள்ளப்பூடாது:)) “இதுவும் கடந்து போகும்”.
=============================================

இதில ஒண்டுமே இல்லை:)), இருந்தாலும் நான் சொல்லுவன்:)). என்னவெண்டால்..
கடவுளே!!! உந்த நெக்லஸ் மட்டும், ஆற்றை கண்ணிலயும் பட்டிடக்கூடாது:))
உப்பூடித்தான், கொபியூட்டரில ஒரு ஷெக்‌ஷனில நான் சூப்பர்.. தண்ணிமாதிரி எல்லாம் விளங்கப்படுத்துவன்... அப்போ யாழ் பல்கலைக்கழகத்தில ஒரு தடவை, கொம்பியூட்டர் எக்‌ஷிபிஷன் நடந்துது, அதுக்கு என்னையும் என்னோடு இன்னொரு பிள்ளையையும் தெரிவு செய்து போட்டார்கள்.

அது காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை நடந்தது, யாழ் பல்கலைக்கழகம் என்றதனால் நிறையக் கிரவுட் வரும் என்று, ஒருவர் கஸ்டம் என எம் இருவரையும் போட்டவை. அப்போ என்னோடு சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு ஒரு boy ஃபிரெண்ட் இருந்தார். அவ அவருக்குச் சொல்லிப்போட்டா, நீயும் வா “நான் தான் ..இந்தப் பகுதியை விளங்கப்படுத்துறன்” என. என்னைக் காட்டிக் கொடுக்காமல் தான் மட்டும் என்பதுபோல சொல்லிட்டாவாக்கும்.

என்னிடம் சொன்னா, இஞ்ச பாருங்கோ அதிரா, என் boy ஃபிரெண்ட், தன் ஃபிரெண்ட்ஸோடு வருவார்.... அந்நேரம் என்னை விட்டிடவேணும் விளங்கப்படுத்த என. எனக்குத்தான் எந்தப் பிரச்சனையுமில்லையே... சரி அப்படியே ஆகட்டும் என்றிட்டேன். நாம் மாறி மாறி விளங்கப்படுத்திகொண்டு நின்றோம். கன்ரீனில சுடச்சுட பிஸ் கட்லட்டும், சூப்பர் ரீயும் அப்பப்ப போய்ச் சாப்பிடுவதும், வந்து விளங்கப் படுத்துவதுமாக இருந்தோம்:).

சனமோ சொல்ல முடியாது, முட்டி மோதியவண்ணம் வந்து கொண்டிருந்தார்கள். அப்போ நான் விளங்கப் படுத்திக் கொண்டிருந்தேன். பின்னேரமாகிவிட்டது, களைத்தே போய்விட்டோம்.. 

என் நண்பி கதையில பிஸியாக இருந்திட்டா... boy friend உள்ளே வந்ததைக்  கவனிக்காமல்:(.

இருந்தாப்போல பாருங்கோ எனக்கு ஒரு இடி விழுந்துது தோள்ள:)) நான் அப்பூடியே சரிஞ்சு மற்றப்பக்கம் கீழ விழாத குறையாக நிமிர்ந்தன்:), இவ படபடவென , விளங்கப்படுத்தத் தொடங்கிட்டா...:)) அப்பத்தான் பார்த்தன், பக்கத்து மேசைக்கு அவவின் boy friend  வந்திட்டார்:)).. இவ திடீரெனக் கண்டதும் என்னை இடிச்சுப் போட்டு நிண்டிட்டா:))).. நான் தான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவன் எண்டது அவவுக்கும் தெரிஞ்சு போச்சூஊஊஊ:))).
====================================================
பின் இணைப்பு:
என் “குரு” எனக்கு உபதேசம் செய்தபோது எடுத்த படம்:))).. இப்பவும் பத்திரமா வைத்திருக்கிறேன்:))

======================================================
ஊசி இணைப்பு:
நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...
இன்று விதைத்தால் நாளை முளைக்கும் 
அதை நீ மறவாதே..
=======================================================
எங்கு போய்ச் சொல்வதெனத் தெரியாமல் இங்கு சொல்கிறேன், ராஜராஜேஸ்வரி அவர்களின் வலைப்பூவும், ரேவாவின் வலைப்பூவும் ஓபின் பண்ணினால்... அப்படியே ஆடுகிறது.. கண்ணிமைப்பதைபோல, அதனால் பின்னூட்டம் எதுவும் போட முடியவில்லை:(.
========================================================

Monday 14 May 2012

சின்ன சின்ன ஆசை:))

ம்ம்ம்ம்ம்ம்ம் அடுத்து என்ன கைவேலைப்பாடு செய்து, இதைப்போல:)) அசத்தலாம் எல்லோரையும்:))).... கொஞ்சம் பொறுங்கோ.. கல் எறியும் சத்தம் கேட்குதே:)) சே..சே.. அது பிரமையாகத்தான் இருக்கும்:))))
முன்பு இமா, இப்போ அஞ்சுவைப் பார்த்து இப்பூடியெல்லாம் செய்யோணும் எனும் ஆசை வந்திட்டுது. ரெடிமேட் கார்ட் செய்ய பொருட்கள் வாங்கி அது ஒரு பக்கம் இருக்கு... இது கனடா போன நேரம் டிவி யில் செய்து காட்டினார்கள்.. சூப்பராக இருந்துது, மனதில கங்கணம் கட்டிக்கொண்டு வந்து, வந்த வேகத்திலயே செய்திட்டன்:))).

என்ன செய்தனீங்க என ஆரும் கேட்டிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... வீட்டில் இருந்த பழைய பொருட்களைக்கொண்டு(அஞ்சு உபயம்:)) செய்தமையால்.... அங்கின இங்கின அப்பூடித்தான் இருக்கும்..:)) அஜீஸ் பண்ணிக்கொள்ளுங்கோ.. அடுத்தமுறை நல்ல அயகா:)) செய்து காட்டுவன்:)))).





ஊசி இணைப்பு:))
இதைக் கட்டாயம் சொல்லியே ஆகோணும். நான் இங்கு கதைப்பது போலவேதான் வீட்டிலும் கதைப்பது வழக்கம். அப்போ ஏதும் கதையில், எங்கட மகனுக்குச் சொல்வேன் “கிட்னியை யூஸ்” பண்ணுங்கோ அப்போதான் கெட்டித்தனமாகக் கண்டு பிடிப்பீங்கள் என:))..... அவர் அதை மனதிலே கிட்னியேதான் என எடுத்து வைத்திட்டார்.

ஸ்கூலில் இவர்களின் வகுப்பு ரீச்சரோடு நன்றாக அலட்டுவார்களாம். இவர்கள் வகுப்புக்கு “சட்டிங் கிளாஸ்”(Chatting Class) எனச் செல்லப் பெயரும் உண்டு:). அப்போ இவர் ரீச்சருக்குச் சொல்லியிருக்கிறார்... மம்மி சொல்றவ கிட்னியை யூஸ் பண்ணினால் கிளெவராக இருக்கலாம் என்று. அதுக்கு ரீச்சர் சொன்னாவாம், அப்படியா? நான் அதுபற்றி அப்படி ஏதும் கேள்விப்பட்டதில்லையே என:))(ரீச்சர் இப்போ பழைய புத்தகம் எல்லாம் தேடித் தேடி வாசிப்பா என நினைக்கிறேன்:)).

இன்று திரும்பவும் இந்தக் கிட்னிக் கதை வந்தபோது, இக்கதையை எனக்குச் சொன்னார்:)).. இன்றுதான் நான் மகனுக்கு விளக்கம் கொடுத்தேன்.. எப்பூடி? எப்பூடி?:)).

பின் இணைப்பு:
பல காலமாக நான் தேடிக் களைத்துப் போனபின்பு, போனகிழமை தம்பி ஜீனோ வந்திருந்தாரே... சந்தோசம் பொங்குதே... சந்தோசம் பொங்குதே.. விரும்பினால் நீங்களும்.. இதில் கடசிப் பின்னூட்டம் பாருங்கோ:))

பூ... பூ.. இனிப்பூஊஊ

======================================================
குண்டூசி இணைப்பு:
அனைவருக்கும் ஒரு நற்செய்தி:)) இம்முறை ஆரும் மொய் வைக்கத் தேவையில்லை:)) ஆனால் மறக்காமல் சைன் பண்ணிடுங்கோஓஓ:))
======================================================
சிந்தனை இணைப்பு:

கொஞ்ச நேரம் காத்தடித்து ஓய்ந்துபோகலாம்

வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்

======================================================


Sunday 6 May 2012

Toronto - CN Tower..

ஹா...ஹா..ஹா.. படம் பார்க்க வாங்கோ..ங்கோ..ங்கோ:))).. மனமே ரிலாக்ஸ்ஸ் பிளீஸ்ஸ்ஸ்:))) பொறுமை தேவை:))


வாங்கோ!!! வாங்கோ. என்ன?:)) என்னைத் தேடுறீங்களோ?:)) நான் முன்னெச்சரிக்கையா மேல இருக்கிறேன்:)) மேலே பாருங்கோ:)) கல் எறிஞ்சாலும் படாத தூரத்தில, ஜாக்கிர்ர்ர்ர்தையா இருந்து கொண்டேதான் பதிவை வெளியிடுகிறேன் தெரியுமோ:)))) எங்கிட்டயேவா:)) நான் ரொம்ம்ம்ம்ம்ப ஷார்ப்பாக்கும்..க்கும்..க்கும்:)))..
=============================================
இம்முறையும், ஏற்கனவே சொன்னதுபோல, படத்தின் மேலே கேர்ஷரை வைத்து இடது பட்டனைத் தட்டினால் படம் பெரிதாகும், அழகை ரசிக்க விரும்பினால் பெரிதாக்கிப் பாருங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்!!!!

இது எப்பூடி? இதில் மேலே இருக்கும் குட்டி வட்டம் வரை ஆட்கள் போகலாம்....
********************************
இது வாகனத்திலிருந்து கிட்டப் போகப் போக எடுத்த படங்கள்:))








***********************************************
இது அங்கிருக்கும் ஒரு ரெயில்வே ஸ்டேஷன்.... இதனூடாக நடந்தால்...
 SKY WALK என இருக்கும்... அதைப் பின் தொடர்ந்தால்... உள்ளுக்குள்ளாலேயே குளிரில்லாமல்.. நடந்து...
{இது ஜெய் செய்து த்ந்த மிக்ஸிங் படம்:)).. இவர் இப்போ 8 வயசுக்கு வளர்ந்திட்டார்:)}

CN TOWER  ஐச் சென்றடையலாம்...இதில் வலது பக்கம் இருப்பது, அதன் நிழல் எதிரிலுள்ள கட்டிடத்தில் படுகிறது:)

*******************************************************************
உள்ளே போனால் ரிக்கெட் எடுக்க வேண்டும், ஒருவருக்கு 23 டொலர்கள் என்ற நினைவாக இருக்கு. எடுத்தபின், லிவ்ட்டில் அழைத்துப் போவார்கள்... வெளியேயும் கண்ணாடியூடு தெரியும், அதே நேரம் கீழே கால் இருக்கும் இடத்தில் கண்ணாடி போடப்பட்டிருக்கும் அதனூடு, மேலே செல்லச் செல்ல அடி வரை தெரியும்....பயம்ம்ம்மாஆஆஆ இருக்கும்:)))
****************************************
கீழே, இதில் சைட்டில் தெரியும் கண்ணாடிதான் லிவ்ட் செல்லும் பாதை, இந்த பெரிய வட்டத்தில் இறங்கினால், அங்கு ஷொப்ஸ், ரெஸ்ரோரண்ட் எல்லாம் இருக்கிறது, அதில் பல விளையாட்டுக்கள் எல்லாம் இருக்கு. விரும்புபவர்கள் இதுக்கு மேலே தெரியும் குட்டி வட்டம் வரை போகலாம்... முன்பு போயிருக்கிறோம், இம்முறை மேலே போகவில்லை. இதுவே 120 மாடியாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

***********************************************
அந்த 120 மாடியில் இருந்து கீழே பார்க்க TORONTO CITY முழுக்க தெரியும்... குட்டிகுட்டியாக சூப்பராக இருந்தது.....


இந்தக் கீழே இருக்கும் படத்தில் வெள்ளைக் கோடு போட்டதுபோல பச்சைத்தலையுடன் புழுப்போல தெரிகிறதே:)) அது ஸ்டேஷனில் ரெயின் தரித்து நிற்கிறது... இதன் பெயர் “GO TRAIN”  எனச் சொல்வார்கள். உள்ளுக்குள்ளே ஓடித்திரியும் ரெயின்.....

நான் அதிகம் மினக்கெட்டது, இந்த எயார்போர்ட்டைப் பார்த்தபடியேதான்:))... மேலே இருந்து பார்க்க மிகவும் சூப்பராக இருந்தது, ரன்வேயில் ஓடி, பிளேன் எழும்பும் காட்சி சூப்பரோ சூப்பராக இருந்தது.. இதை எல்லாம் ரசிக்கத் தெரியோணும்:)) என்னைப்போல:)))..
இது அங்குள்ள லோக்கல் எயார்போர்ட்....
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
இம்முறை படங்கள் அதிகமானமையினால்... எந்த இணைப்பையும் சேர்த்துக்கொள்ள முடியவில்லை... பொறுமையாகப் படம் பார்த்து, ரிக்கெட் காசையும் எழுதிவிட்டுச் செல்லும்படி மிகவும் பணிவன்புடன் வேண்டப்படுகிறீர்கள்:)).... நன்றி...
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
பறவையின் சிறகுகள் விரிந்தால்தான், வானத்தில் அது பறக்கும்
======++++++++++++++++++++++++++++++++++++++=======