நல்வரவு_()_


Thursday 25 October 2012

போனா வருவீரோ?:(

(நான் இலைகளுக்குச் சொன்னேன்:))
வந்தால் போவீரோ?:)
இலையுதிர் காலமே..
உன் அழகால.. நான்
பூஸாஆஆஆ உருகுறேனே:(

லையுதிர்காலம் வந்துவிட்டது... வீதியோரம் நிற்கும் மரங்களின் அழகோ சொல்ல முடியாது.. அந்த அழகை ரசிக்க இரு கண்கள் போதாமல் இருக்கு...
பச்சை மரம் மஞ்சளாக மாறிவிட்டது... அது சூரியன் பட்டபோது... தங்கம்தேன்ன்ன்:)..
படமெடுப்பதற்காகவே, ஊரெல்லாம் நடந்தேன்ன்.. கொஞ்சம் இருங்கோ.. கால் வலிக்குது:) கொஞ்சூண்டு ஹொட் வோட்டர் பாக் வச்சிட்டு ரைப்பண்ணுறேன்ன்.. காலுக்குத்தேன்ன்:)..


இதிலே ஒரு ரெயினும் நிண்டுதே.. நான் பார்த்தேன்.. படமெடுக்கும்போது தெரிஞ்சுது.. அந்த போர்ட்க்குப் பக்கமாக, ஆனா இப்போ காணல்ல.. ஆரோ சுட்டுப்போட்டினம் ரெயினை.. கர்ர்ர்ர்ர்ர்ர்:))..
 =====================இடைவேளை===================
அன்பும் + பண்பும் நிறைந்த, பெருமதிப்புக்குரிய, மணியம் கஃபே ஓனர் அவர்களுக்கு:)...( உஸ்ஸ் ஸப்பா இப்பவே கை நடுங்குது:)).

போன தலைப்பிலே நீங்க தந்த தாயத்தை:), அம்மம்மாவிடம் கொடுத்துக் கட்டிக் கொண்டேன்ன்:)... என்ன மாயமோ.. என்ன மந்திரமோ.. கட்டிய பிறகு, நேக்குப் பாம்பைக் கண்டால் ஏறி உளக்கிக்கொண்டு போகலாம் போல:) துணிச்சல் வந்திருக்கு:)... இங்கின சிலருக்கும்(வான்ஸ், அஞ்சு, மகி, கீரி:)) அது தேவைப்படுது:) நீங்க ஒரு சைட் பிஸ்னஸாக இதை ஆரம்பித்தால் என்ன?:) 
கொஞ்சம் மாத்தி ஓசியுங்கோ:). 
பணத்தைப் பவுண்ட்டில மாத்தி அனுப்பிடலாம்:).

அதுக்காக நீங்க ஆசைப்படும் 20 பவுண்ட் நோட்.. வச்சிருக்கிறன் எடுங்கோ..:)) எங்க காணல்லியே எனத் தேடவேண்டாம், மேசைக்குக் கீழ இருக்கு:)...
-----இப்படிக்கு அன்பே இல்லாத  “அதிரா”----
==============இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்:))===========


இதில பச்சையாக தெரியும் மரங்கள் எப்பவுமே அப்பூடித்தேன் இருப்பினம்:)).. அதாவது அதிராவைப்போல:)) ஐ மீன் சுவீட் 16 ஆக.. இலையுதிர் காலமும் இல்லை, இளவேனிற் காலமுமில்லை.. அப்பவும் இப்பவும் எப்பவும் அப்பூடித்தேன்ன்:))


என் ரோசாப் பயங்களும்:) எல்லாம் வதங்கிப்போயிட்டுதே:))

மனிதர்களில்தான், வயது வித்தியாசமாம்:) ஆனா இவர்களுக்கு?.. இலை உதிரும்போது வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்குமே உதிருதே.. என்னே புறுணம்:) இது ஆண்டவா:) 

குட்டி இணைப்பு:)
இது ரெயின் பிரியர்களுக்காக... நீல நிறப் புகை வண்டி:)(இது வேற வண்டி:)) நிற்பது தெரியுதோ?..

ஊசி இணைப்பு:)
உதிர்வதென்பது எப்போதும்
 சோகமானதுதான் என்கிற 
என் நினைப்பை 
உன் உதட்டிலிருந்து உதிர்க்கின்ற 
ஒரு சின்னப் புன்னகை 
பொய்யாக்கி விடுகிறதே
====================================================
உதென்ன உதெல்லாம் பெரிய “புறுணமோ”? எனச் சொல்லிப்போட்டுப் பேசாமல் போனீங்களெண்டால், நான் டக்கென ரிக்கெட்டைப் போட்டுக் கொண்டு காசிக்குப் போயிடுவேன்:) ........................... பிறகும் நீங்கதான் கவலைப்படுவீங்க டொல்லிட்டேன்:)..................... 
========================================================



Saturday 20 October 2012

என்னா பெரிசூஊஊ!!!

இதன் நிறை 2.6 கிலோ:)
ஓடிவாங்கோ.. ஓடிவாங்கோ... இது எங்கட பக்கமாக்கும்:).. ஐ மீன் சமையல் பக்கம்.. அதுக்காக எதிர்ப் பாலார் வராமல் விடலாமோ? நோஓஓஓஒ.. இப்போ முக்கியமா வெளி நாடுகளில்.. பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் கிச்சினில் நிற்கிறார்களாம்:).. அதனால பெண்களை விட,  எம் எதிர்ப்பாலார் தானே முக்கியமா இப்பகுதியைப் படிக்கோணும்:)...
ஆனாலும் பாருங்கோ.. இதில அஞ்சு, கீரி, நான் எல்லாம் நல்ல அடக்கொடுக்கமாக:) எந்நேரமும் கிச்சினில் நின்று எல்லாம் சமைப்போம்ம்:).. ஆத்துக்காரருக்கு கஸ்டம் கொடுப்பதில்லை:), ஆனா எல்லோரும் அப்பூடியா?:))... ஹையோ கொஞ்சம் இருங்க.. அமெரிக்காவில, ஜேர்மனியில பாத்திரம் நொருங்கும் சத்தம் கேட்குதே ஜாமீ:))...

நில்லுங்க.. மடிரொப்:) ஐத் தூக்கிக் கொண்டு கட்டிலுக்குக் கீழ போய் சேஃப்ட்டியா இருந்து ரைப் பண்ணுறேன்ன்.. எங்கிட்டயேவா?:)).. சொல்ல வந்ததைச் சொல்லாமல் விடமாட்டமில்ல:))..

சொல்லிப் போட்டு அடி வாங்கினாலும் சரிதான்:).. இந்த இடத்தில உங்களுக்கு ஒரு கதை சொல்லியே ஆகணும்... சின்னனாக இருக்கும்போது விடுமுறை காலத்தில ஊருக்குப் போவது வழமை. வருடத்தில 2 தடவைகள்தான் போகக் கிடைக்கும், அப்படிப் போனால் அம்மம்மா வீடுதான் நம் வீடு. அப்பம்மா வீட்டுக்குப் போய்ப்போய் வருவோம்.

அப்பா தினமும் பின்னேரம் போய், 8,9 மணிக்கு திரும்புவார், எல்லோரும் இடைக்கிடை போவோம் தங்கி வருவோம். ஆனா அப்பா போகும்போது நானும் தொத்திக்கொண்டு போய் விடுவேன்.

அங்கு மாமியின் மகள்மாரோடு தான் நாம் நல்ல ஒட்டு. அங்கு போனால் பொழுதுபோவதே தெரியாது. ஆனால் அங்கு தங்க நெடுகவும் வீட்டில விடமாட்டினம், அப்பாவோடு திரும்ப வந்திடோணும், இல்லையெனில் இங்கிருப்போர் ஏசுவினம்(சித்தி, மாமா), எங்களோடு நிற்க உனக்கு ஆசையில்லையா.. அங்கு போனால் நின்று விடுகிறாயே என. அப்போ இரு பகுதியையும் சமாளித்து நடப்போம்.

அப்படித்தான் ஒருதடவை மாமி வீட்டுக்குப் போனேன் அப்பாவோடு, எனக்குப் பத்து வயதிருக்கும்.. போகும்போதே அம்மாவின் கட்டளை,  “அதிரா .. அப்பாவோடு திரும்பி வந்திடோணும்”...  “சரி அம்மா”.

போயாச்சு, அங்கு இரவு 9 மணி, அப்போ அப்பா போக வெளிக்கிடுகிறார், மாமியின் பிள்ளைகள் கையைப் பிடிச்சு இழுக்கினம், அதிரா இன்று நில்லுங்கோ... அப்பா சொன்னார்,  “இல்லை ஆச்சி!! அம்மா பேசுவா, நீ வா நாளைக்கு நாம் திரும்ப வருவோம்.. வேணுமெண்டால் இன்னும் கொஞ்சம் இருந்திட்டுப் போவோம்”.

அந்நேரம் மாமியின் மகன் கொழும்பால் வந்து நிற்கிறார்.. வயதில் பெரியவர்.. அவர் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார் (நகைச்சுவையாகத்தான்)... இங்க பாருங்கோ அதிரா... உங்களுக்கு ஒரு விஷயம் பிடிச்சிருக்கெனில், அது தப்பில்லை எனில், போனால் போகுதெனச் செய்யுங்கோ.. பின்பு வீட்டில அடிச்சாலும் அடியை வாங்குங்கோ.. ஒரு சந்தோசத்துக்காக, பின்பு அடி வாங்கினாலும் தப்பில்லைத்தானே..  என்றார்... எனக்கு உஷார் வந்திட்டுது:))... ஒரு காலைத்தூக்கி நிலத்திலே துள்:ளித் துள்ளிச் சொன்னேன்... அப்பா பிளீஸ் அப்பா.. அம்மாவுக்குச் சொல்லுங்கோ.. நான் நாளைக்கு வருகிறேனே என, எல்லோருமாக அப்பாவைச் சமாளிச்சு அனுப்பி விட்டோம்.

அன்றிலிருந்து சின்னச் சின்ன விஷயங்களுக்கு நான் மாமியின் மகன் சொன்னதை மனதில் நினைச்சுக் கொள்வதுண்டு... அப்பூடித்தான் இப்பவும்.. சொல்ல வந்ததைச் சொல்லிட்டேன்:) இனி அமெரிக்காவில இருந்து எரிகுண்டு வந்தாலும் சமாளிச்சிடுவோம்:)).

இன்னொரு முக்கியமான கதை சொல்லோணும். பல பெண்களுக்கு தம் ஆத்துக்காரர் சமைச்சுத் தரோணும் என ஆசை இருக்கு. ஆனா என் ஆய்வின்படி:), இக்கரைக்கு அக்கரைப் பச்சைபோலவும் தெரியுது.

எனக்கு ஒரு இந்திய - கேரள நண்பி இருக்கிறா, அவவின் ஆத்துக்காரரும் டாக்டர். ஆனா அந்த டாக்டர் சூப்பராச் சமைப்பாராம். ஆனால் அந்த நண்பிக்கு அது விருப்பமில்லை, அப்படியென்றுமில்லை, திருப்தியில்லை காரணம்.

அவ சொல்லுவா, அவர் சமைப்பாராம், ஆனால் சமைத்து முடியக் கிச்சினுக்குள் போனால் தனக்கு விசர் வராத குறையாம்.. ஒரே பொருட்கள் சிந்தி, எடுத்த பொருள் எடுத்த இடத்தில் இப்படி இருக்குமாம், அதை ஒழுங்குபண்ணுவதிலேயே தனக்கு போதுமென்றாகிடுமாம், இதைவிட தான் சமைப்பது பெட்டர் என்பா. அத்தோடு அவருக்கு சமையல் தெரிந்தமையால், சில உணவுகள் இவ சமைப்பது அவருக்குப் பிடிக்காதாம், தான் தான் சமைக்கோணும் என்பாராம்.... இப்படிக் குட்டிக் குட்டிப் பிரச்சனைகள்.

அப்போ எனக்கு சொன்னா,   “அதிரா என்னைப்பொறுத்து ஆண்கள் சமைக்காமல் இருப்பதுதான் பெட்டர்”:) என்றா:)). 

விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:), உடனே நான் மாத்தி ஓசிச்சேன்:)... “தொட்டில் பழக்கம் உடுகாடு:) வரை” என்பினமெல்லோ.. அப்போ பழக்கும்போதே கரீக்டாப் பழக்கிட்டால் போச்சு:)....

சரி இப்ப அதுவோ முக்கியம், மேலே இருக்கும் கபேஜ்(கோவா) ஐப் பாருங்கோ... ஒரு கிழமைக்கு முன்பு சுப்பமார்கட் போனபோது, கொண்டு வந்து கொட்டியிருந்தார்கள், ஒவ்வொன்றும்.. 2.5, 2.6 கிலோ எடை, விலை என்ன தெரியுமோ, ஒன்று மட்டும்(each) 49 சென்ஸுகள். அதாவது பாதிப் பவுண்ட்டுகள். எனக்கு மனம் கேட்கவேயில்லை.. எதுக்கு எதுக்கு எனச் சொல்லச் சொல்ல:) ரெண்டைத்தூக்கி:) ட்ரொலியிலே வைத்து, காரில் ஏத்தி, வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்திட்டேன்:)... எங்கிட்டயேவா?:).. பத்துறாத்தல் கபேஜை எப்பூடிச் சாப்பிட்டு முடிப்பது சொல்லுங்கோ...

எனக்குச் சின்னனிலிருந்தே கபேஜ் பைத்தியம் இருக்கு. நம் வீட்டு ஃபிரிஜ்ஜில் கபேஜ் இல்லாமல் இருப்பின் அது வாழ்க்கையில் பெரிய அதிசயமே... நம்புவீங்களோ தெரியாது.. இப்பகூட ..இந்த கபேஜ், கோவாஇலை அதாவது கபேஜ் லீவ்ஸ், அடுத்து முட்டைக்கோவா எனப்படும், கல்லாக இருக்கும் உருண்டைக் கபேஜ்... இத்தனோடு பேஷில் ஸ்பிரவுட்ஸ் எனப்படும்.. குட்டிக் குட்டிக் கபேஜ்.. இவ்வளவும் இருக்கு?:))...  

டெய்லி.. சுண்டல், பருப்புப் போட்டுக் கறி, குஸ்குஸ் உடன் பிரட்டுவது... இப்படிச் செய்தும், ஒரு கிலோத்தான் செலவாகியிருக்கும் மீதி இருக்கு. அப்போ ரீவியில் ஒரு சமையல் குறிப்பு பார்த்தேன், கபேஜை மெல்லிதாக அரிந்து, கொஞ்சம் வெங்காயம், பச்சைமிளகாய் அரிந்து சேர்த்து, உப்பும் மிளகாய்த்தூளும் சேர்த்து, கடலை மாக் கொஞ்சம் போட்டுப் பிரட்டி, உருண்டைகளாக்கி பொரித்தெடுத்தினம்.

அப்படிச் செய்ய ஓசிச்சேன், கடலை மா வாங்க மறந்துட்டேன். நேற்று ஆசியா வீட்டுப் பக்கம் போனபோது...பார்த்தேன் மைதாவில் குறிப்பு... ஆஆ.. விடுவனோ நான்... நைட் செய்தேன்ன்..  குட்டி எலிகளுக்குப் பிடிக்காதோ எனப் பயந்தேன்... சுட்டு முடியமுன் எல்லாமே காலி.. கோவாவும் பாதி முடிஞ்சுது:).

நான் செய்தது மேலே சொல்லியிருக்கும் ரீ வீ யில் காட்டிய முறை, ஆனா சேர்த்தது மைதா மா.


CABBAGE ROTTI
தேவையானவை:
மைதா/கோதுமை மா -: 250 கிராம்
கபேஜ்/கோஸ் -:200 கிராம்
வெங்காயம் ஒன்று.
பச்சைமிளகாய்... விருப்பப்படி.. 3/4.
உப்பு ஒரு தேக்கரண்டி(tea spoon)
இப்பெல்லாம், கைரேகை பார்க்கினமாம்:) அதுதான்
நாங்க ரொம்ப விபரமில்ல:) கிளவுஸ் போட்டிட்டோம்:)
செய்முறை:
அனைத்தையும் குட்டியாக அரிந்தெடுத்து, மாவுடன் சேர்த்து உப்பும் சேர்த்து, மெல்லிய சுடுநீரில்... ரொட்டிப்பதமாகக் குழைத்து, எண்ணெயை சூடாக்கி, குட்டிக் குட்டி தட்டை வட்டமாக தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். எப்பவும் நெருப்பை குறைவாக வைத்து பொரிக்கவும்.

எண்ணெய் பெரிதாக செலவாகவில்லை, அதனால் அடிக்கடி செய்யலாம் என ஓசிச்சிருக்கிறேன்:).. இங்கின ஆருக்கும் கோவா வேணுமா?:) றாத்தல் 12 பவுண்டுகள்:).. காசை இப்பவே என் எக்கவுண்டில போடுங்கோ..:).... ஆஆ.. ஓடதீங்கோ.. ஒழுங்கா மொய் எழுதுங்கோ பிளீஸ்ஸ் பொறகு பூஸ் குத்தமாகிடப்போகுதூஊஊ:) ஐ மீன் தெய்வக் குற்றம்:).

நிறையக் குறிப்பு போட வெளிக்கிட்டு, பாருங்கோ கதை சொன்னதிலேயே பெரிசாகிடுத்து, அதனால இத்தோடு நிறுத்திடுறேன்:).

ஊசி இணைப்பு:)..
இலை உதிர் காலம் ஆரம்பமாகிட்டுதெல்லோ.. சாலைகளின் அழகோ சொல்ல முடியாது கொள்ளை அயகு:)..

====================================================
 “மழைக்கால இருட்டானாலும், மந்தி கொப்பிழக்கப் பாயாதாம்”

என் குரு சொல்லித்தந்தவர்:).
====================================================

Monday 15 October 2012

சந்தோசம்!!!

சந்தோசம் எங்கிருக்கிறது?

அது வேறெங்கும் இல்லை, நமக்குள்ளேயே, நம் மனதுக்குள்ளேயே, நம் குடும்பத்துக்குள்ளேயே இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளாமலேயே நம்மில் பலர், அடுத்தவரிடம் சந்தோசத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு பணக்காரருக்கு எதிலுமே சந்தோசம் கிடைக்கவில்லையாம், எத்தனையோ தொழில்கள் செய்தார், அதிலும் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. முடிவில் நினைத்தார், சரி இனித் துறவியாகிடுவோம், அப்பத்தான் சந்தோசம் கிடைக்கும் என்கிறார்கள், அப்பவாவது கிடைக்குதோ பார்ப்போம் என முடிவெடுத்தார்.

அதனால் தன்னிடமுள்ள பணம், தங்கம், வைரம் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு ஒரு துறவியாக இருக்கும் சாமியாரிடம் போனார்ர்..

அங்கு போய் அந்த மூட்டையைத் துறவியின் முன்னால் வைத்துவிட்டு, “துறவியே எனக்கு எதுவும் வேண்டாம், நான் சந்தோசத்தைக் காணவே துறவியாகப் போகிறேன்” எனச் சொன்னார்.

ஆனால் அந்தத் துறவியோ, கொஞ்சமும் இவரின் கதையைக் கவனிக்காதவர்போல, அந்த மூட்டையை அவசர அவசரமாக அவிழ்த்துப் பார்த்தார், பார்த்துவிட்டு, டக்கென அதைத் தூக்கித் தன் தலையிலே வைத்துக் கொண்டு ஓடத் தொடங்கினார்.

(கொஞ்சம் நில்லுங்கோ என்னால சிரிப்பை அடக்க முடியல்ல:))
இதைப் பார்த்த பணக்காரர், “அச்சச்சோ ஒரு போலிச் சாமியிடம் பொருட்களைக் கொடுத்து ஏமாந்து விட்டேனே” என நினைத்துக் கோபமாக, அந்தச் சாமியாரைக் கலைக்கத் தொடங்கினார்:).

அச் சாமியாரோ, சந்து பொந்தெல்லாம் ஓடி, இறுதியில் தான் இருந்த அதே மரத்தடிக்கே வந்து சேர்ந்தார். சேர்ந்ததும் அப்பொதியை, மீண்டும் அப்பணக்காரரிடமே ஒப்படைத்தார்.

தன் பொதி, தனக்குக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், பணக்காரர் திக்கு முக்காடிப்போனார். உடனே சாமியார் சொன்னார்....

“இத்தனை காலமும் இந்தச் சொத்துக்கள் உங்களிடமே இருந்தன, ஆனால் அப்போதெல்லாம் அவை மகிழ்ச்சியைத் தரவில்லை, ஆனால் இப்போ அவற்றை நான் தூக்கிச் சென்று, மீண்டும் தந்தபோது, உங்களுக்கோ எல்லையில்லா மகிழ்ச்சியாக இருக்கிறது, இதிலிருந்து என்ன தெரிகிறது? சந்தோசம் உங்களுக்குள்ளேயே தான் இருக்கிறது, இது தெரியாமல் வெளியே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

இதேபோல் இன்னொருபாலார் இருக்கிறார்கள், எவ்வளவுதான் மகிழ்ச்சி வந்தாலும், அதை வைத்து மகிழத் தெரியாமல், அதில் ஏதும் குறை கண்டுபிடித்து, இருக்கும் மகிழ்ச்சியையும் தொலைத்து விடுவார்கள்.

ஒரு தாய் தன் குழந்தையோடு கடற்கரைக்குச் சென்றார், அப்போ எதிர்பாராமல் ஒரு அலை வந்து குழந்தையை இழுத்துப் போய் விட்டது, இத்தாய் ஓலமிட்டு அழுது புரண்டா, இழுத்துப் போன வேகத்திலேயே அலை அக்குழந்தையைக் கரையிலே கொண்டு வந்து விட்டது.

உடனே குழந்தையைக் கட்டித் தழுவி முத்தமிட்டு மகிழ்ந்தவேளை, குழந்தையின் காலைப் பார்த்தாவாம், காலில் போட்டிருந்த விலை உயர்ந்த சப்பாத்தில் ஒன்று, கடலோடு போய் விட்டதாம், தாயின் மகிழ்ச்சியும் பொசுக்கெனப் போய் விட்டதாம், உடனே கவலையோடு அதைத் தேடத் தொடங்கினாவாம்.

இப்படித்தான் கிடைத்த பெரிய மகிழ்ச்சியை அனுபவிக்கத் தெரியாமல்,  குட்டிக் குட்டிப் பிரசனைகளைப் பெரிதாக்கி, இருக்கும் சந்தோசத்தையும் இழப்போரும் உண்டு.

மொத்தத்தில், மகிழ்ச்சி என்பது எம்மிடம்தான் உண்டு. இருப்பதையே பெரிதாக எண்ணி சந்தோசமாக, இனிமையாக வாழப் பழகுவோம்.
======================================================
“என் கால்களுக்குப் போடச் செருப்பில்லையே என எண்ணி வருந்தினேன், பின்னாலே பார்த்தேன், கால்களே இல்லாமல் ஒருவர் தவழ்ந்து வருவதை” 
======================================================

கழுகு இருக்கிறதெல்லோ, அதுக்கு ஒரு குறிப்பிட்ட வயதானதும், அது என்ன செய்யுமாம் எனில், ஒரு மலையிலே ஏறி இருந்து, தன் இறக்கைகளை உதிர்த்துவிடுமாம், கூரான நகங்களைக் கஸ்டப்பட்டுக் கழட்டி எறிந்து விடுமாம், தன் சக்தி வாய்ந்த சொண்டை அடித்து நொருக்கி, பாறையில் மோதி உடைக்குமாம், இப்போ எதுக்குமே உபயோகமில்லாமல், எதையுமே எதிர்க்க முடியாமல், ஒரு குஞ்சுப்பறவைபோல, அப்பாவியாக ஒதுங்கி இருக்குமாம். சில மாதங்களில், அதுக்கு புது அலகு, இறக்கைகள், நகங்கள் முளைக்குமாம், அவை முன்பு இருந்ததைவிடப் பலமடங்கு சக்தி வாய்ந்திருக்கும், அதனைக் கொண்டே மீண்டும் பலகாலம் உயிர் வாழுமாம்.

இப்படித்தான் மனிதருக்கும், சிலநேரம் துன்பங்களை ஆண்டவன் கொடுப்பது, பின்னாளில் சந்தோசத்தைக் கொடுக்கவே... இதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை, அல்லது நம் மனம் அதை ஏற்பதில்லை.

குட்டி இணைப்பு:)
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி:)).. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, என் ஜிகொசுமெயிலில் ஒரு மயில்:))... எப்ப வந்துதோ .. அந்தப் பழநிமலை முருகனுக்கே வெளிச்சம்:) .. ஆனாலும் கரக்ட் டைமுக்கு பார்த்திட்டமில்ல.. 

அதில் இப்படி எழுதப்பட்டிருந்துது.. இப்பாடலோடு....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

இப்படிக்கு  சகோதரர் ஹைஷ் 126.

ஊசி இணைப்பு:
அடுத்து , பிறந்தநாளை அறிஞ்சதும் அஞ்சுவின் கை புளியங்காய் ஆயப் போயிடுமோ சொல்லுங்கோ?:) அஞ்சுவோ கொக்கோ:)?, உடனேயே அழகிய கார்ட் செய்து எனக்கு அனுப்பிட்டா, 

கார்ட்டில் கீழே இப்படி இருந்துது:) அதிரா பதிவைப் போட்டதும் கட்டிலுக்குக் கீழ ஒளிக்கப் போவதாக சொன்னீங்க, மறந்திடாதீங்க, எனக்கும் இடம் வச்சு இருங்கோ நானும் ரெண்டு நாளைக்கு உங்களோடயே “அதே பதுங்கு குழியிலேயே” இருக்கப் போறேன் என:). கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னையும் காட்டிக் கொடுக்கிற பிளான்போல:).
========================================================
தன் பிறந்தநாளை வெளியே சொல்லக்கூடாதென்பது அன்புத் தோழியின் கட்டளை, ஆனால் எம்மால் வாழ்த்த முடியாமல் இருக்க முடியவில்லை, அதனால் மனதார வாழ்த்துகிறோம், ஏதும் தவறுகள் இருப்பின், எம்மிருவரையும் மன்னித்து விடுங்கோ டோழியே:)). ஆனா வீட்டில இருந்த பட்டர் எல்லாம் அள்ளிப் பூசி:) இப்போ பெர்மிஷன் வாங்கிட்டோம்:)) சொல்லலாமாம்ம்ம்.. அது யங்மூன் எனும் இளமதிக்கு, ஆரம்பமே விட்டிருந்தால் மூன் கார்ட் அயகா செய்திருக்கலாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))  நீங்க எப்பூடித் திட்டினாலும் எமக்குக் கேட்கப் போவதில்லை:)) நாமதான் கட்டிலுக்குக் கீழயாச்சே:)_( )_ .
========================================================

Tuesday 9 October 2012

இது முடிவு.. வைதேகி ஒரு லூஸேதான்:)

பாகம் ஒன்றிலிருந்து தொடர்கிறது... முதலாவது பாகம் படிக்க.. கையை இங்க வைங்க:)
யார் என்னதான் சொன்னாலும், காலம் இப்போ எவ்வளவோ முன்னேறிவிட்டதே என ஊடகங்களில், மீடியாக்களில் புலம்பினாலும், ஒரு பெண்ணுக்கு விலைமதிக்க முடியாத சொத்தெனில் அது அவளுடைய கற்புத்தான். அதைக்கூட நான் விரும்பிய போதெல்லாம் விட்டுத் தந்தாயே வைதேகி. என்னை ஒரு காதலனாக எண்ணாமல், கணவனாக எண்ணி, முழு நம்பிக்கையோடு வாழத் தொடங்கினாய்.

“ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும் என்பார்கள்” அது உண்மையேதான், அந்த நூலாகிய என்னை, நூறு வீதத்துக்கும் மேலாக நம்பியமையால், நுழைய இடம் கொடுத்தாய். ஆனால் என் இளரத்தம், உன்னை மதிக்கத் தவறினேன். என் நட்புக்கே முன்னுரிமை அளித்தேன். ஆனாலும் எப்பவுமே உன்னில் எந்த மாறுதலையும் நான் கண்டதில்லை, எப்பவும் ஒரே மாதிரித்தான் நீ இருந்தாய்.

எம் மூன்று வருடக் காதலில் ஒருநாள் நீ சொன்னாய், “என் உடம்பில் ஏதோ மாற்றம் தெரிகிறது, எனக்குப் பயமாக இருக்கிறது, வாருங்கள் சேஜ்க்குப் போய் மோதிரம் மாத்திடலாம், பதிவுத் திருமணம் செய்திடலாம் என. அப்ப கூட நண்பர்கள்தான் எனக்குப் பெரிதாகத் தெரிந்தர்கள், திருமணம் பற்றி யோசிக்க முன்னமே, நண்பர்களோடு சேர்ந்து நடாத்திய சண்டையில், தவறுதலாக பொதுமகன் ஒருவர் இறக்க,  குற்றம் செய்யாத என்னில் பழி வந்து விழுந்தது.

நான் “கொலைக் குற்றவாளி” எனும் பெயரில் கைது செய்யப்பட்டு உடனேயே பாதாள சிறையில் அடைக்கப்பட்டேன். அதை அறிந்து நீ, எப்படித் துடித்திருப்பாய் வைதேகி.

னக்குக் காச்சல்க்குணமாக, தடிமன்குணமாக இருக்கு எனச் சொன்னாலே.. பத்துத் தரம் விசாரிப்பாய், சூப் செய்து எடுத்து வந்து ஊட்டி விடுவாய், தைலம் பூசி விடுவாய், அப்படிப்பட்ட நீ, இதை எப்படித் தாங்கியிருப்பாய்?.

எனக்குத் தெரியும் நீ என்னை நம்புவாய். நான் கத்துவேன், கூப்பாடு போடுவேன், கோபிப்பேன், ஆனால் கொலை செய்யுமளவுக்குத் துணிய மாட்டேன், அந்தளவு தூரம் கெட்டவனுமல்ல, அவை எல்லாம் உதட்டிலிருந்து உருவாபவையே தவிர உள்ளத்திலிருந்தல்ல என்பது உனக்கு மட்டும் நன்கு தெரியும். என் பெற்றோரைவிட, சகோதரத்தை விட, என் நண்பர்களையும் காட்டிலும் என்னைப் புரிந்து கொண்டவளும், என் மீது தூய அன்பைக் காட்டியவளும் நீதான். நான்தான் அதைக் காலம் தாழ்த்தி உணர்ந்திருக்கிறேன் வைதேகி.

நான் “பயங்கரக் கொலையாளி” யாம், அதனால் வெளித்தொடர்பேதும் இருக்கப் படாதென, யாரையாவது சந்திப்பதையோ அல்லது கடிதத் தொடர்பு வைப்பதையோ தடுத்து விட்டர்கள் வைதேகி, இறுதியாக அன்று, உன்னோடு ஒரு வசனமாவது பேச விடும்படி ஆசைப்பட்டுக் கெஞ்சிக் கேட்டேன், ஆனால் மறுத்து விட்டார்கள் வைதேகி.

ஆரம்பம் நான் சிறைவைக்கப் பட்டிருந்த ஒரு ஜெயிலில், கடைசியும் முதலுமான உன் ஒரு காதல் மடல் என் கைக்குக் கிடைத்தது, அந்த ஜெயிலர் மிகவும் நல்லவர் என்பதனால் என்னிடம் தந்தார். அதில் நீ எனக்காகக் காத்திருப்பதாகவும், நமக்கு ஒரு மகன் பிறந்திருப்பதாகவும் எழுதியிருந்தாய்.. சாந்து.. சாந்து என, நீ அன்பைக் கொட்டி எழுதியிருந்த மடல் பார்த்து நான் துடித்துப் போய் விட்டேன் வைதேகி... இப்பகூட அதை என்னுடனேயே வைத்திருக்கிறேன்ன்.. அதை தினமும் அடிக்கடி படிப்பதுதான் என் சந்தோசம், பொழுதுபொக்கு, மன அமைதி எல்லாமே.
னக்கு, என் மனைவி எனும் அஸ்தத்தைத் தரமுன்னமே கைது செய்துவிட்டார்களே வைதேகி. இப்போ நம் மகனுக்கு 11 வயதாகியிருக்கும், நன்கு வளர்ந்திருப்பான், உன்னைப்போலவா இல்ல என்னைப்போலவா இருப்பான்?.

எனக்குத் தெரியும், நீ எப்பவுமே என்னைக் குறை கூற மாட்டாய், அடுத்தவர் கூறினாலே சண்டைக்குப் போவாய், அப்படிப்பட்ட நீ, என்னை ஒரு நல்லவராகவே நம் மகனுக்கு ஊட்டி வளர்த்திருப்பாய். நான் நிரபராதி வைதேகி, அது உனக்கு நன்கு தெரியும்.

இந்தப் 12 வருட ஜெயில் வாழ்க்கையில், நீ கொட்டிய அன்பையும் கூறிய தத்துவங்களையும் மட்டுமே இரைமீட்டிக் காலத்தைக் கடத்தி இருக்கிறேன். உன் அன்பு எனக்குக் கிடைத்திராவிட்டால் நான் என்றோ காணாமல் போயிருப்பேன் வைதேகி.

நாளைக்கு நாம் சந்திக்கப் போகிறோம், “நீ என்னைத் திட்டுவாயா வைதேகி?”, இல்லை நிட்சயமாக என்னைத் திட்ட மாட்டாய், உனக்குத் திட்டத் தெரியாது. இறைவன் எனக்காக அனுப்பிய ஒரு தேவதையாகத்தான் பார்க்கிறேன் உன்னை இப்போ.

திருமணமாகாமலே கையில் ஒரு கைக் குழந்தையையும் தந்துவிட்டு வந்தேனே..இந்தப் 12 பாலைவன வருடங்களையும், எப்படி நீ கடந்திருப்பாய்? ஊராரின் வசை மொழிகளை எல்லாம் எப்படித் தாங்கியிருப்பாய்?. நான் முடிவெடுத்திட்டேன் வைதேகி, நாளைமுதல், உனக்காகவும் நம் மகனுக்காகவுமே வாழப் போகிறேன்.

இனி நான் பேச மாட்டேன், உன்னையே பேசவிட்டு, 24 மணி நேரமும் உன் பேச்சையே கேட்டு மகிழப் போகிறேன். நான் இப்பொழுது பழைய “சாந்தன்” அல்ல.. மூலஸ்தானத்திலிருந்து வெளிப்பட்டிருக்கும், நீ நம்பிய, நீ எதிர்பார்த்த உன் “சாந்து” வாகத்தான் வெளியே வரப்போகிறேன்.

இந்த ஜெயில் வாழ்க்கையில் உன்னை நினைக்காத நேரமில்லை, நிறையவே உன்னை மிஸ் பண்ணிவிட்டேன். ஒருவேளை, இப்படி ஒரு பழி என்னில் விழுந்திராவிட்டால், உனை நான் புரிந்து கொள்ளாமலே போயிருப்பேனோ என்னவோ?, இப்பிரிவின் மூலம் உன்னை நான் நிறையவே புரிந்து கொண்டேன்.

என்னை அழைத்துச் செல்ல, நாளைக்கு நீயும் மகனும் வருவதாகச் சொன்னார்கள், அந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன், உனக்கு தூக்குவதுதானே ரொம்பப் பிடிக்கும், நாளை உன்னைப் பார்த்ததும் தூக்கப் போகிறேன், அதை நம் மகன் வெட்கத்தோடு பார்க்கப் போகிறான்.

நிஜமாகவே என்னை விரும்பிய “நீ ஒரு லூஸுதான், எனக்கு மட்டும் நீ லூஸுப் பெண்தான்”

நாளையிண்டைய தீபாவளிதான் நமக்கு “தலைத் தீபாவளி”



அனைத்தும், அதிராவின் “சொந்தக் கிட்னியில்” உருவான கற்பனையே:...
====================================
காதல் என்றால்
தெய்வம் கூட மறுப்பதில்லையே
அது, வேதம் தெரிந்த குருவைக் கூட 
விடுவதில்லையே
சொன்னவர் நம்மட கண்ணதாசன்
==============================================

Sunday 7 October 2012

வைதேகி ஒரு லூஸு:)

காலையில் பத்திரிகையைக் கம்பிவழியே வீசிவிட்டுப் போகிறார் ஜெயில் காவலர்.எடுத்துத் திறந்தேன் முகப்பிலேயே தலைப்பு.. “பயங்கரக் கொலையாளி எனக் கைது செய்யப்பட்டு, 12 வருடங்களின் பின்பு, நிரபராதி எனத் தீர்பாகி, நாளை விடுதலையாகிறார் சாந்தன்”.

டித்ததுமே என்னால் நம்ப முடியவில்லை, நாளை எனக்கு விடுதலையா? 12 பாலைவன வருடங்களின் பின், நான் என் வைதேகியையும் மகனையும் சந்திக்கப் போகிறேனா?...

என் மனமோ பின்னோக்கிப் பறக்கிறது...நான் சின்னப் பையனாக வயல் வெளியில் சுற்றித் திரிந்தேன், அன்பு பாசம் என்றால் என்னவென எனக்குத் தெரியாது, என் வீட்டிலோ வெளியிலோ ஆருமே என்னில் அன்பு காட்டியதில்லை, ஏதோ உண்டேன், உறங்கினேன், படித்தேன்.... நண்பர்களோடுதான் என் வாழ்க்கை நகர்ந்தது.

நண்பர்களோடு சேர்ந்து நீதி, நியாயம், சட்டம் என ஊரைத் திருத்துவது, இதனால் இவன் உதவாக்கரை, உருப்படாதவன் எனும்  பட்டங்களையே மக்கள் எனக்குச் சூட்டினார்கள்.

ஆனால், என் மனமெனும் மூலஸ்தானத்திலும் ஒரு உள்ளம் இருக்கிறது, அது தூய்மையானது, அன்புக்காக ஏங்குகிறது என்பதை ஆருமே உணர்ந்து கொள்ளவில்லை.

அப்போதுதான் என் வாழ்வில் ஒரு தென்றலாக வைதேகி வந்தாள், அடுத்த தெருவில் வசிப்பவள், 
பெற்றோருக்கு ஒரே பிள்ளை.

எப்படி வைதேகி என்னுள் நீ வந்தாய்?ஒரு பூ மலர்வதை எப்படி பார்க்க முடியாதோ, அப்படித்தான் எமக்குள்ளும் அன்பு மலர்ந்தது. என் மூலஸ்தானம் எனும் அடி மனதில் இருந்து புறப்பட்ட அன்பை மட்டுமே அவள் பார்த்தாள், ஒரு துளி அன்புக்காக ஏங்கிய எனக்கு, குடம் குடமாக அன்பைக் கொட்டினாள். நான் பிறந்து வளர்ந்ததற்கு அப்படி ஒரு அன்பை ஆரிடமும் பெற்றதில்லை. திக்குமுக்காடிப் போனேன்.

நீ நிறையப் பேசுவாய் வைதேகி, உன் அன்பில் கட்டுண்ட நான், அந்த மழையிலிருந்து  நிமிர முடியாமல் மூழ்கிக் கிடந்தேன். பின்பு சில நாட்களில் எனக்கது பழகிவிட்டது, அன்பின் அருமை தெரியாதவனாகிவிட்டேன், நீ அதிகமாகக் காட்டிய அதீத அன்பும் அக்கறையும் எனக்கு மலிவாகிப் போனது.

எனக்கு அப்பொழுது வயது 22. இளமைத் துடிப்பு, இளரத்தம்.. வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தேன். நீ வாழ்க்கை முறைபற்றி அதிகம் சொல்லுவாய், கணவன் மனைவி உறவுபற்றி விலாவாரியாய் விபரிப்பாய், அப்போதெல்லாம் போதும் நிறுத்து என்பேன், உன்னோடு கோபிப்பேன் காரணமே இல்லாமல் திட்டுவேன்.

நீ அனைத்தையும் பொறுத்துக் கொண்டாய், எதிர்த்துப் பேச மாட்டாய், மெளனமாக அழுவாய், ஆனால் அன்பைச் சொரிவதை மட்டும், எப்போதும் நீ நிறுத்தியதில்லை. அது எப்படி வைதேகி, எப்பவுமே உன்னால் ஒரேமாதிரியே இருக்க முடிந்தது?.


எனக்கு நீ ஒரு பாட்டிபோல புத்திமதி சொல்வாய், நண்பர்களை விடு, எனக்கவர்களைப் பிடிக்கவில்லை, படித்து முன்னேறு, உன்னுள் இருக்கும் அதீத பவரைப் படிப்பில் காட்டு என்பாய், நான் தான் அன்று அதனைக் கேட்கத் தவறிவிட்டேன். நட்புத்தான் பெரிசு என்றேன்.  “நீ எனக்கு முக்கியமில்லை, நண்பர்கள்தான் முக்கியம்” என்றுகூடத் திட்டினேனே.. அதைக்கூடப் பொறுத்துக் கொண்டாயே வைதேகி? அது எப்படி உன்னால் முடிந்தது? அப்படி எதைத்தான் என்னிடம் கண்டாய்?

ஒரு சிறிய பிரச்சனையைக் காரணம் காட்டியே, எதிர்த்துச் சண்டை போட்டுப் பிரிந்து செல்லும் காதலிகள் மத்தியில், நீ இப்போ எனக்கு ஒரு சூரியனாகத் தெரிகிறாய். அதை அன்று உணரத் தவறி விட்டேனே.

நான் எது கேட்டாலும் மறுக்காமல் புன்னகையோடு செய்தாய். மொத்தத்தில் நீ என்னை நம்பி, மனதால ஏற்றுக் கொண்டிருந்தாய். அப்போதுதான் நான் உன்னை அடக்கி ஆள/ழ:) த் தொடங்கினேன்.

இப்படித்தான் நீ இருக்க வேண்டும் என்றேன், நீ கதைப்பதைக் குறைத்து, நான் கதைப்பதைக் கூட்டினேன், என் கருத்துக்களையே நீ கேட்கும் சூழலை உருவாக்கினேன். எனக்குக் கிடைக்கும் நேரத்தில் நீயும் என்னோடு வந்து பேசவேண்டும் என்றேன்.

அதெப்படி வைதேகி அத்தனைக்கும் முகம் சுழிக்காமல் வளைந்து கொடுக்க உன்னால் முடிந்தது. பெற்றோர் ஊரார் உன்னைத்தான் திட்டினார்கள், சாந்தனைக் கைக்குள் போட்டுக்கொண்டுவிட்டாய்  என. அதை எல்லாம் எனக்காகப் பொறுத்துக் கொண்டாயே.

என் துன்பங்களிலெல்லாம் பங்கெடுத்தாய், இதமாக தடவிக் கொடுத்தாய். நல்ல காதலியாக, நண்பியாக, நல்ல ஒரு தாயாக மொத்தத்தில் ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டுமோ அதுக்கும் மேலாக நீ எனக்கு அமைந்திருந்தாய், உனக்காக வாழாமல் எனக்காகவே வாழப் பழகிக் கொண்டாய்.

ஊசிக்குறிப்பு: 
வானத்தில்... கடும் காத்து, மழை காரணமாக, தவிர்க்க முடியாமல்:). .. அடுத்த பாகம் வரை தொடர்ந்து, அத்தோடு நிறைவு பெறும் என்பதை மிகவும் ஏழ்மையாக...:)) ஹையோ இப்பவும் டங்:) ஸ்லிப்பாகுதே:.. தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்:).
==========================================
நீ ஏமாற்றப் பட்டாலும், பிறரை ஏமாற்றாதே,
உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்..!!!
==========================================

Monday 1 October 2012

நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)

என் தலைப்பைப் பார்த்ததும் உலகத்திலுள்ள அத்தனை நாடுகளிலிருந்தும்:) ஓடி வருவீங்க படிக்க:)).. படிங்க!!!..
நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)...
படிச்சிட்டு சும்மா போக மனம் வராது உங்களுக்கு:)) பின்னூட்டம் போடுவீங்க:).. போடுங்க!!!
நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:))..

ஹையோ இது ரெண்டாம் சுற்று:) அறிவிப்பு:) அதாவது வந்து “இத் தலைப்பு என் கொப்பிரைட் தலைப்பூஊ:))” இதை நான் எங்கினயும் களவாடல்ல:).. சுட்டிட்டு வரல்ல:)).. எங்கட “பறம்பறை” யிலயே இப்பூடிப் பழக்கமில்ல:) என்பதை மிகவும் ஏழ்மையுடன்.. சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே:)) தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்:)).

சரி வாங்க!!! ஓன் பண்ணுங்க பூஸ் ரேடியோவை:)


நண்பன்: நீ ரொம்பக் குடித்திருக்கிறாய், நான் வேண்டுமென்றால் கூட்டிப்போய் வீட்டில விடட்டோ?

குடித்தவர்: அதெல்லாம் நான் ஸ்ரெடியாத்தான் இருக்கிறேன், ஆனா இங்கு ரெண்டு ரோட்டுப் போகுதே, இதில எந்த ரோட்டில் நான் போக வேண்டுமெனக் காட்டு.. அதுபோதும்.
(என்ன பார்க்கிறீங்க:) விழுந்தூஊஊஊஊஊஉ விழுந்தூஊஊஊஊ சிரிங்கோ:))


குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால்.... பூஸை மறந்துவிடலாம்:),
மறப்பதுக்கு ஒரு மனமிருந்தால், குடித்து விடலாம்:),
இருப்பதோ ஒரு மனம்.. நான் என்ன செய்வேன்:)!!..
ல்ல குடிபோதையில் வீட்டுக்கு வந்தவர், கதவைத் திறக்கமுடியாமல் தள்ளாடினார், இதைப் பார்த்த...

பக்கத்து வீட்டுக்காரர் ஓடிவந்து,
“தாங்க திறப்பை, நான் திறந்து விடுகிறேன்”

குடித்தவர்:  "அதெல்லாம் ஒண்ணும் வாணாம், நான் ஸ்ரெடியாத்தான் நிற்கிறேன், ஆனா இந்த வீடுதான் ரொம்ப ஆடுது, கொஞ்சம் ஆடாமல் பிடிங்க நான் திறக்கிறேன்"..
( தட்டுங்க தட்டுங்க.... கை தட்டுங்க.. இது நக:)ச்சுவை:) எல்லே.., கர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னால்தான் புரியுமாக்கும்:))

ஒரு வீடுக்குத் திருடப் போனான் திருடன், வீடு திறந்திருந்துது. ஆனா அவர் வாசல் வழியா உள்ளே போகாமல், பின்பக்கம் போய், குழாயைப் பிடித்து கஸ்டப்பட்டு ஏறி உள்ளே குதித்தார், அதைப் பார்த்த 

வீட்டிலிருந்தவர் கேட்டார்..
 "கதவெல்லாம் திறந்துதானே இருக்கு, எதுக்கு அதன் வழியே வராமல் இப்படிக் கஸ்டப்பட்டு வருகிறாய்?".

திருடன்:  "எங்கட அப்பா சொல்லியிருக்கிறார், “கஸ்டப்பட்டுச் சம்பாதித்த பணம்தான் தங்கும்” என அதனால தான்.
(ஒடிடாதீங்க.. இன்னொன்று இருக்கு:), அதையும் படிச்சிட்டு மொய் எழுதிட்டுப் போங்க:))

ஒரு வீட்டுக்குள் போய் பார்க்கிறார் திருடன், அலுமாரி நிறைய, பணமும் நகையும் இருக்கு ஆனா அதை எடுக்காமல், அங்கிருந்த பெண்ணின் கழுத்தில் இருக்கும், தாலியை அறுக்கப் போனார்,

உடனே பெண் கேட்டா
“இவ்ளோ நகை, பணம்.. அதுவும் திறந்தே இருக்கு, அதை எடுக்காமல் என் தாலியை அறுக்கிறியே எதுக்கு இந்த அநியாயம்” என.

அதுக்கு திருடன்: இது என் முதல் திருட்டு, அதுதான் மங்களகரமாக ஆரம்பிக்கிறேன்”.
* * *

ஊசி இணைப்பு:
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருக்கின்றது..
பறந்தோடி புளொக் தேடி பின்னூட்டம் போடுகின்றது:)....
சிறு பூஸு நான் செய்த பாவம் என்ன?:)...
என் மீதுதான் கொண்ட கோபம் என்ன?....:)
படிச்சிட்டும் பின்னூட்டம் போடாமல் போகும் எண்ணம் என்ன?:)
மணி மாளிகை உங்க புளொக்குத்தான் ...:)
தேம்ஸ் கரையிலே  “என் பக்கம்” தான்..:)..

காதோடு கிசுகிசு:
இன்று நான் வெளியே வரமாட்டேன், அமாவாசையாக்கும்:))நாளைதான் வருவேன்.... அதுவரை கோச்சிடப்பூடா:) ஆரும்:).
====================================================
உங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் 
நேரமில்லை எனில், நீங்கள் கட்டாயம் 
தவறாக வாழ்ந்து வருகிறீர்கள்...
ஓடினால்தான் நதி..  பறந்தால்தான் பறவை....
சிரிச்சால்தான் மனிதன்....
இப்படிக்கு... புலாலியூர் பூஸானந்தா...
====================================================