நல்வரவு_()_


Monday 1 October 2012

நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)

என் தலைப்பைப் பார்த்ததும் உலகத்திலுள்ள அத்தனை நாடுகளிலிருந்தும்:) ஓடி வருவீங்க படிக்க:)).. படிங்க!!!..
நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)...
படிச்சிட்டு சும்மா போக மனம் வராது உங்களுக்கு:)) பின்னூட்டம் போடுவீங்க:).. போடுங்க!!!
நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:))..

ஹையோ இது ரெண்டாம் சுற்று:) அறிவிப்பு:) அதாவது வந்து “இத் தலைப்பு என் கொப்பிரைட் தலைப்பூஊ:))” இதை நான் எங்கினயும் களவாடல்ல:).. சுட்டிட்டு வரல்ல:)).. எங்கட “பறம்பறை” யிலயே இப்பூடிப் பழக்கமில்ல:) என்பதை மிகவும் ஏழ்மையுடன்.. சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே:)) தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்:)).

சரி வாங்க!!! ஓன் பண்ணுங்க பூஸ் ரேடியோவை:)


நண்பன்: நீ ரொம்பக் குடித்திருக்கிறாய், நான் வேண்டுமென்றால் கூட்டிப்போய் வீட்டில விடட்டோ?

குடித்தவர்: அதெல்லாம் நான் ஸ்ரெடியாத்தான் இருக்கிறேன், ஆனா இங்கு ரெண்டு ரோட்டுப் போகுதே, இதில எந்த ரோட்டில் நான் போக வேண்டுமெனக் காட்டு.. அதுபோதும்.
(என்ன பார்க்கிறீங்க:) விழுந்தூஊஊஊஊஊஉ விழுந்தூஊஊஊஊ சிரிங்கோ:))


குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால்.... பூஸை மறந்துவிடலாம்:),
மறப்பதுக்கு ஒரு மனமிருந்தால், குடித்து விடலாம்:),
இருப்பதோ ஒரு மனம்.. நான் என்ன செய்வேன்:)!!..
ல்ல குடிபோதையில் வீட்டுக்கு வந்தவர், கதவைத் திறக்கமுடியாமல் தள்ளாடினார், இதைப் பார்த்த...

பக்கத்து வீட்டுக்காரர் ஓடிவந்து,
“தாங்க திறப்பை, நான் திறந்து விடுகிறேன்”

குடித்தவர்:  "அதெல்லாம் ஒண்ணும் வாணாம், நான் ஸ்ரெடியாத்தான் நிற்கிறேன், ஆனா இந்த வீடுதான் ரொம்ப ஆடுது, கொஞ்சம் ஆடாமல் பிடிங்க நான் திறக்கிறேன்"..
( தட்டுங்க தட்டுங்க.... கை தட்டுங்க.. இது நக:)ச்சுவை:) எல்லே.., கர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னால்தான் புரியுமாக்கும்:))

ஒரு வீடுக்குத் திருடப் போனான் திருடன், வீடு திறந்திருந்துது. ஆனா அவர் வாசல் வழியா உள்ளே போகாமல், பின்பக்கம் போய், குழாயைப் பிடித்து கஸ்டப்பட்டு ஏறி உள்ளே குதித்தார், அதைப் பார்த்த 

வீட்டிலிருந்தவர் கேட்டார்..
 "கதவெல்லாம் திறந்துதானே இருக்கு, எதுக்கு அதன் வழியே வராமல் இப்படிக் கஸ்டப்பட்டு வருகிறாய்?".

திருடன்:  "எங்கட அப்பா சொல்லியிருக்கிறார், “கஸ்டப்பட்டுச் சம்பாதித்த பணம்தான் தங்கும்” என அதனால தான்.
(ஒடிடாதீங்க.. இன்னொன்று இருக்கு:), அதையும் படிச்சிட்டு மொய் எழுதிட்டுப் போங்க:))

ஒரு வீட்டுக்குள் போய் பார்க்கிறார் திருடன், அலுமாரி நிறைய, பணமும் நகையும் இருக்கு ஆனா அதை எடுக்காமல், அங்கிருந்த பெண்ணின் கழுத்தில் இருக்கும், தாலியை அறுக்கப் போனார்,

உடனே பெண் கேட்டா
“இவ்ளோ நகை, பணம்.. அதுவும் திறந்தே இருக்கு, அதை எடுக்காமல் என் தாலியை அறுக்கிறியே எதுக்கு இந்த அநியாயம்” என.

அதுக்கு திருடன்: இது என் முதல் திருட்டு, அதுதான் மங்களகரமாக ஆரம்பிக்கிறேன்”.
* * *

ஊசி இணைப்பு:
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருக்கின்றது..
பறந்தோடி புளொக் தேடி பின்னூட்டம் போடுகின்றது:)....
சிறு பூஸு நான் செய்த பாவம் என்ன?:)...
என் மீதுதான் கொண்ட கோபம் என்ன?....:)
படிச்சிட்டும் பின்னூட்டம் போடாமல் போகும் எண்ணம் என்ன?:)
மணி மாளிகை உங்க புளொக்குத்தான் ...:)
தேம்ஸ் கரையிலே  “என் பக்கம்” தான்..:)..

காதோடு கிசுகிசு:
இன்று நான் வெளியே வரமாட்டேன், அமாவாசையாக்கும்:))நாளைதான் வருவேன்.... அதுவரை கோச்சிடப்பூடா:) ஆரும்:).
====================================================
உங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் 
நேரமில்லை எனில், நீங்கள் கட்டாயம் 
தவறாக வாழ்ந்து வருகிறீர்கள்...
ஓடினால்தான் நதி..  பறந்தால்தான் பறவை....
சிரிச்சால்தான் மனிதன்....
இப்படிக்கு... புலாலியூர் பூஸானந்தா...
====================================================

108 comments :

 1. ஹா.... ஹா.... திருடன் ஜோக்ஸ் கலக்கல்....

  ReplyDelete
 2. பறம்பறை” ///

  ROFL:))

  ReplyDelete
 3. . சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே:)) //

  Giri :)) come soon

  ReplyDelete
 4. PENNY FARTHING CYCLE ஓட்டிக்கிட்டு ஜீப்பாம் :)))

  ReplyDelete
 5. நானும் நாளைக்கு வந்து கலாட்டவை தொடர்கிறேன் மி அஆவ்

  ReplyDelete
 6. அதிரா எனக்கு சிரிச்சு கண்ணீர் வந்துவிட்டது. நாங்களெல்லாம் படிச்சுட்டு பின்னூட்டம் போடுற ""பரம்பரை"" யாக்கும். எங்களுக்கு தொப்பி பொருந்தேல்ல.

  ReplyDelete
 7. //இன்று நான் வெளியே வரமாட்டேன், அமாவாசையாக்கும்:))// அமாவாசை வர 13 நாள் இருக்கு. மதியார் ஜொலிக்கிறார்.இது வேற மதி.

  ReplyDelete
 8. அதிராட ஜீப் ஜூப்ப்ப்ப்ர்.

  ReplyDelete
 9. பூஸ் ரேடியோவை ஓன் பண்ணுங்க என்று சொன்னீங்க. ஓன் ஆகுதில்லை.
  சிங்கர் கேட் சூப்பர்

  ReplyDelete
 10. //ஒரு வீட்டுக்குள் போய் பார்க்கிறார் திருடன், அலுமாரி நிறைய, பணமும் நகையும் இருக்கு ஆனா அதை எடுக்காமல், அங்கிருந்த பெண்ணின் கழுத்தில் இருக்கும், தாலியை அறுக்கப் போனார்,

  உடனே பெண் கேட்டா
  “இவ்ளோ நகை, பணம்.. அதுவும் திறந்தே இருக்கு, அதை எடுக்காமல் என் தாலியை அறுக்கிறியே எதுக்கு இந்த அநியாயம்” என.

  அதுக்கு திருடன்: இது என் முதல் திருட்டு, அதுதான் மங்களகரமாக ஆரம்பிக்கிறேன்”.//
  இதுதான் ""நகை"" ச்சுவை

  ReplyDelete
 11. எனக்கொரு உம்மை தெரிஞ்சாகோணும் ஜாமி:)
  இன்னிக்கு ஏன் பூஸ் இப்புடி தண்ணீல வுழுந்து தள்ஆஆஆடுது????
  பூஸுக்கு தண்ணீன்னா பயம். பாஞ்சு பிறாண்டிக்கொண்டு ஓஓடிடும். இங்கை எல்லாம் தலைகீழாவெல்லோ நடக்குது:( ம்......என்னா மாட்டர்ர்ர்ர்ர்ர்ர்.....

  ReplyDelete
 12. இங்கை பாருங்கோ! பூஸ் தண்ணீ போட்டதாலை அஞ்சு சொன்ன
  // PENNY FARTHING CYCLE // எடுத்து கண்மண் தெரியாம ஸ்பீட்டா ஓடுறதை.
  கடவுளே... பிள்ளையாரே... முருகா பூஸையும் காப்பாத்தி எங்கள் எல்லாருக்கும் உயிர்பிச்சை குடு:))))
  காணிக்கையை பூஸேஏஏ தரும். ஹா...ஹா....ஹா....

  “கஸ்டப்பட்டுச் சம்பாதித்த பணம்தான் தங்கும்” எண்டு மங்களகரமா திருட்டை ஆரம்பிச்ச திருடன் திறமையை பாராட்டியாகணும்;)))

  ReplyDelete
 13. // உங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும்
  நேரமில்லை எனில், நீங்கள் கட்டாயம்
  தவறாக வாழ்ந்து வருகிறீர்கள்... //

  அதெப்படி???? நேரமிருக்கு ஆனால் பாவம் அவையவைக்கு என்ன பிரச்சனையோ? உ +ம்: வயிறு சரி இல்லாமல், உடம்பு சரியில்லாமல் இருந்தால் அப்ப வந்தவை கண்டவையிட்டை சிரிச்சுப்பேசவோ முடியும்.
  அவர்ட கஷ்டம் தெரியாம பூஸானந்தா எப்புடி உப்புடி சொல்லலாம்ம்ம்ம்ம்;)))

  ReplyDelete
 14. எங்கள் மனதை திருடிவிட்டீர்கள் .. நகைச்சுவையாக எழுதி ,தத்துவமும் சேர்த்து, பூஸாரின் படமும் போட்டு.. ம்ம் செம கலக்கல்.உங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும்
  நேரமில்லை எனில், நீங்கள் கட்டாயம்
  தவறாக வாழ்ந்து வருகிறீர்கள்...நல்ல தத்துவம்தான்,

  ReplyDelete
 15. ஹி.ஹி.ஹி.ஹி...........நான் கமண்ட் போடாமல் போனால் நீங்க ஒன்னும் வேனாம் சொல்லலையே

  ReplyDelete
 16. (அதி)காலை (உங்களுக்கு)வணக்கம்,அதிரா!!!!!(எப்பூடீ?)காலை எழுந்து கொஞ்சம் சிரித்தேன்.பூசார் செம ஸ்பீட்டாப் போறார்,பொலிசு புடிக்கப் போறார்!(மரியாதை,பொலிசுக்கு)

  ReplyDelete
 17. நகைச் சுவைகள் (தமிழில்;ஜோக்ஸ்)நன்றாக இருந்தன,இருக்கின்றன,இருக்கும்!

  ReplyDelete
 18. ஓடினால்தான் நதி.. பறந்தால்தான் பறவை....
  சிரிச்சால்தான் மனிதன்....////ஒரு சந்தேகம்::தேம்ஸ் உம் நதி தானே?(விளங்காது,உஸ்................நிம்மதி)

  ReplyDelete
 19. சிரிச்சால்தான் மனிதன்...////

  ஹஹா ஹஹா ஹஹாஆ ....குருவே நான் சிரிச்சிட்டணன்,..

  ReplyDelete
 20. அய்யகோ இண்டைக்கு லீவ் ..அஞ்சு அக்கா ,கிரி அக்கா ,அதிரா அக்கா எல்லாரும் ஓடி வாங்களேன் ..

  கும்மி அடிச்சி எவ்வளவு நாள் ஆகுது ....

  ReplyDelete
 21. குடித்தவர்: அதெல்லாம் நான் ஸ்ரெடியாத்தான் இருக்கிறேன், ஆனா இங்கு ரெண்டு ரோட்டுப் போகுதே, இதில எந்த ரோட்டில் நான் போக வேண்டுமெனக் காட்டு.. அதுபோதும்.
  (என்ன பார்க்கிறீங்க:) விழுந்தூஊஊஊஊஊஉ விழுந்தூஊஊஊஊ சிரிங்கோ:))///
  \


  குருவே , மிஸ்டர்.குடிகாரர் ன்னு மரியாதையா சொல்லி இருப்பீங்க போல....

  குருவே எனக்கு இத படிக்கும் போது கவிக்க நியபாம் தான் வருது ...

  அவரை ஒருக்கா சொன்னோமே அனிஷ் ஒரு குடிகாரப் பயல் ன்னு ...ஹ்ஹ்ஹா ...அனிஷ் நினைச்சி நீங்க இத எழுதலை தானே ,,,

  ReplyDelete
 22. ஓரம் போங்க பூசொட வண்டி வருது (நல்ல வேளை அஞ்சுவ என்னைய எல்லாம் கடவுள் பூஸ் இடம் இருந்து ரொம்ம்ம்ப தூரத்தில் வெச்சு இருக்காங்க Thank GOD :))

  ReplyDelete
 23. //படிச்சிட்டு சும்மா போக மனம் வராது உங்களுக்கு:)) பின்னூட்டம் போடுவீங்க:).. போடுங்க!!!
  நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:))..//

  மிரட்டி அழு புரண்டு கமெண்ட் போட சொல்லி கேட்டு பார்த்து இப்போ இப்புடி டெக்னிக்கா ?? ஹும்ம்ம்ம் உங்க கிட்னி நல்லாத்தேன் வர்க்கிங் :))

  ReplyDelete
 24. //சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே:)) // அஞ்சு ஐ ஆம் ஹியர். இப்புடி ஏழ்மைன்னு பேச்சு வாக்குல ஸ்லிப்பாகி சொன்னா காஞ்சி காமாச்சி பட்டு புடவையையும் நாராயணா முத்து மாலையையும் கான்ஸல் பண்ணிடுவாங்க ன்னு பூஸ் இஸ் ட்ரீமிங் :))

  ReplyDelete
 25. //என்ன பார்க்கிறீங்க:) விழுந்தூஊஊஊஊஊஉ விழுந்தூஊஊஊஊ சிரிங்கோ:))//

  விழுந்து ஊஊஉ விழுந்தூஊஊஉ சிரிச்சு அஞ்சுவுக்கு வான்சுக்கேல்லாம் செம அடியாம். அவங்க ஆத்து காரர் எல்லாம் மேல் கோர்ட்டுக்கு பூச சூ பண்ணி கேஸ் போட்டு இருக்காங்களாம் (சந்தோசம் போயிங்குதே ஏ ஏ ஏ:))

  ஊ.குறிப்பு : நான் ஸ்டெடியா டேபில் எ புடிச்சு கிட்டே படிச்சதுல கீழே எல்லாம் விழலே ஹீ ஹீ

  ReplyDelete
 26. //குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால்.... பூஸை மறந்துவிடலாம்:),
  மறப்பதுக்கு ஒரு மனமிருந்தால், குடித்து விடலாம்:),//  எனக்கு ரெண்டுக்கும் மனம் இல்லை. பூசை தேம்சில் தள்ளி விடத்தான் மனம்ம்ம் இருக்கு வாட் கேன் ஐ டூ ஊஊ :))

  ReplyDelete
 27. // தட்டுங்க தட்டுங்க.... கை தட்டுங்க.. இது நக:)ச்சுவை:) எல்லே.., கர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னால்தான் புரியுமாக்கும்:))//  தட்டுங்க தட்டுங்க ன்னு பார்த்த ஒடனே அவசர பட்டு பக்கத்தில் இருந்த என் பாஸ் முதுகில் தட்டிட்டேன் கர்ர்ர்ரர்ர்ர்ர் :))

  ReplyDelete
 28. //சிறு பூஸு நான் செய்த பாவம் என்ன?:)...//  அஞ்சு சிறு பூஸ் ன்னு சொன்னத வன்னன்ன்ன்மையா கண்டிக்குறேன்:))  //காதோடு கிசுகிசு://  இதெல்லாம் கிசுகிசுன்னு சொன்ன பூச என்ன பண்ண நானும் திரிஷாவோட காதல் உண்மையா இல்லையான்னு ஒரு களு கொடுக்க போறாங்கன்னு பார்த்தா கர்ர்ர்ரர்ர்ர்ர் :))


  ReplyDelete
 29. //இன்று நான் வெளியே வரமாட்டேன், அமாவாசையாக்கும்:))/  தினமும் அமாவாசையா இருந்தால்..... :)) ஓகே மீ கமிங் லேட்டர் யா

  ReplyDelete
 30. திண்டுக்கல் தனபாலன் said... 1
  ஹா.... ஹா.... திருடன் ஜோக்ஸ் கலக்கல்....//

  [co="dark purple"]வாங்கோ.. வாங்கோ.. நீங்கதான் இன்று முதல் வரவு.. அதனால அந்தச்(மேலே இருப்பது) சைக்கிள் உங்களுக்கே:).

  மியாவும் நன்றி.[/co]

  ReplyDelete
 31. angelin said... 2
  பறம்பறை” ///

  ROFL:))
  [co="dark purple"]வாங்கோ.. அஞ்சூஊ வாங்கோ.. நீங்கதான் இன்று செகண்ட்(இது வேற செகண்ட்:))வரவு.. அதனால அஞ்சுவுக்கு இண்டைக்கு....

  ஒண்டுமே இல்லை:)) ஹா..ஹா..ஹா.. எங்கிட்டயேவா:)).. நானே இன்னும் மீன் பிடிக்க முடியாமல் பெயிலாகிக்கொண்டிருக்கிறேன்ன்:)

  மியாவும் நன்றி அஞ்சு...[/co]

  [im]http://www.desktopsunlimited.com/screensavers/fish_bowl.jpg[/im]

  ReplyDelete
 32. angelin said... 4
  PENNY FARTHING CYCLE ஓட்டிக்கிட்டு ஜீப்பாம் :)))//

  [co="dark purple"]karrrrrr:)) மசமசவெனக் கதைப்பதை விட்டுப்போட்டு.. படக்கென பத்தைக்குள்ள பாயுங்கோ:)) ஐ மீன் ரோட்டை விட்டு:) ஹையோ சைக்கிள் இடிக்கப்போகுதே பிரேக் வேற இல்லையே:)..[/co]

  ReplyDelete
 33. angelin said... 5
  நானும் நாளைக்கு வந்து கலாட்டவை தொடர்கிறேன் மி அஆவ்//

  [co="dark purple"]அவ்வ்வ்வ் எந்த நாளைக்கு?:)) சரி சரி மெதுவா வாங்கோ.. வரும்போது என் சிஷ்யையையும் ஊ...கூட்டி வாங்கோ:)..[/co]

  ReplyDelete
 34. ammulu said... 6
  அதிரா எனக்கு சிரிச்சு கண்ணீர் வந்துவிட்டது. நாங்களெல்லாம் படிச்சுட்டு பின்னூட்டம் போடுற ""பரம்பரை"" யாக்கும். எங்களுக்கு தொப்பி பொருந்தேல்ல//

  [co="dark purple"]வாங்கோ அம்முலு வாங்கோ.... நீங்க ரொம்ப நல்லவர். நல்ல நல்ல பின்னூட்டம் எல்லாம் போடுறீங்க. .. பாருங்க சிலர் இருக்கினம்.. பெயரிலதான் “தங்கம்:)” இருக்கு.. ஆனா பேச்சில தங்கம் இல்லை:)) ஹா..ஹா..ஹா.. ஆங்கிலத்தில் மாத்திப் படிங்கோ:)..

  தொப்பியோ? அது உங்களுக்குப் பொருத்தாது..:)) திரு பூஸுக்கும் + திருமதி பூஸுக்கும் மட்டும்தேன் பொருந்தும்:)) ஹா..ஹா..ஹா..[/co]

  ReplyDelete
 35. பெயரிலதான் “தங்கம்:)” இருக்கு.. ஆனா பேச்சில தங்கம் இல்லை:)) ஹா..ஹா..ஹா.. ஆங்கிலத்தில் மாத்திப் படிங்கோ:)..//

  yaarai sonneenga :)) enakku naalu naala theriyuthu ..naalai vanthu kummaren

  ReplyDelete
 36. angelin said... 37
  பெயரிலதான் “தங்கம்:)” இருக்கு.. ஆனா பேச்சில தங்கம் இல்லை:)) ஹா..ஹா..ஹா.. ஆங்கிலத்தில் மாத்திப் படிங்கோ:)..//

  yaarai sonneenga :)) enakku naalu naala theriyuthu ..naalai vanthu kummaren//

  [co="blue"] ஹா...ஹா..ஹா... கோடைக்கானல இடி இடிச்சா... பாண்டிச்சேரியில மழை பெய்யுதே அவ்வ்வ்வ்வ்வ்:)).. வேர்க்கவுட் ஆகிட்டுதூஊஊஊஊஊஉ நம்மட :))[/co]

  ReplyDelete
 37. **/என்ன பார்க்கிறீங்க:) விழுந்தூஊஊஊஊஊஉ விழுந்தூஊஊஊஊ சிரிங்கோ:))//**

  அதிரா ...இந்த நேரத்தில விழுந்து விழுந்து சிரிக்க கீழ்வீட்டுக்காரி தும்புக்கட்டையால என்ர வீட்டில இடிச்சு அச்சுறுத்துறா.....அடக்கிச் சிரிக்க வயித்துக்க வலிக்குது...ஆனாலும் சிரிக்காத என்னைப்போல ஆக்களை சிரிக்க வைக்கிற முயற்சியில வெற்றிதான் உங்களுக்கு.நன்றி நன்றி அதீஸ்க்கும் பூஸாருக்கும் !

  ReplyDelete
 38. நானும் சிலநேரம் நேரமில்லாட்டி வந்து பாத்திட்டு பின்னூட்டம் போடாம போறனான்.....எனக்கும் சொன்னீங்களோ...உதுக்கெல்லாம் தேம்ஸ்க்கு ஓடுறேல்ல.ஓடுறீங்களே தவிர இன்னும் தேம்ஸ்க்குக் கிட்டக்கூடப் போகேல்லை.....ஹிஹிஹி !

  ReplyDelete
 39. ** உங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும்
  நேரமில்லை எனில், நீங்கள் கட்டாயம்
  தவறாக வாழ்ந்து வருகிறீர்கள்...**

  அச்சோ....என்ன பூஸார் இப்பிடிச் சொல்லிப்போட்டார் !!!!!!!!!

  ReplyDelete
 40. //வசந்த காலங்கள்.. இசைந்து பாடுங்கள்...:)..

  ஓரம்போங்கோ:)) ஓரம்போங்கோ.:)) அதிராட ஜீப்:) வருதூ:))//

  திருமதி அதிரா மேடத்தின் படத்தை இன்று தான் முதன்முதலாகப் பார்த்தேன்.

  ஒரே சிரிப்பா இருந்துச்சு. அவங்க ஜீப் அதைவிட அருமை. என்ன ஒரு குலுக்கல் ஆட்டம். அடடா அழகோ அழகு தான்.

  தொடரும்....

  ReplyDelete
 41. //உங்களுக்குப் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் நேரமில்லை எனில், நீங்கள் கட்டாயம் தவறாக வாழ்ந்து வருகிறீர்கள்...

  ஓடினால்தான் நதி..

  பறந்தால்தான் பறவை....

  சிரிச்சால்தான் மனிதன்....//

  அது சரி தான். ;)))))

  படித்தேன்

  ரஸித்தேன்

  சிரிப்பாய்ச் சிரித்தேன்.

  எல்லாமே ஒரே தேன் தேன் தேன் !
  ஒரே இனிப்போ இனிப்பு தான்.

  பகிர்வுக்கும் சிரிக்க வைத்ததற்கும் நன்றி.

  ReplyDelete
 42. //படிச்சிட்டு சும்மா போக மனம் வராது உங்களுக்கு:)) பின்னூட்டம் போடுவீங்க:).. போடுங்க!!!
  நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:))..//

  //சிறு பூஸு நான் செய்த பாவம் என்ன?:)...
  என் மீதுதான் கொண்ட கோபம் என்ன?....:)
  படிச்சிட்டும் பின்னூட்டம் போடாமல் போகும் எண்ணம் என்ன?:)// பூஸுக்கு டங்கு ஸ்லிப் ஆகுதே!!!!!!!!!நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டி போனாலும் நாங்கள் பின்னூட்டம் போடத்தான் செய்வோமாக்கும்.

  ReplyDelete
 43. ammulu said... 7
  //இன்று நான் வெளியே வரமாட்டேன், அமாவாசையாக்கும்:))// அமாவாசை வர 13 நாள் இருக்கு. மதியார் ஜொலிக்கிறார்.இது வேற மதி.//

  [co="purple"] ஹா...ஹா..ஹா... எனக்கு அமாவாசை என்பதைப் பார்த்ததும், முன்பு படித்த ஒரு கவிதை நியாபகம் வருதே... :))

  “இன்று அமாவாசை
  வீட்டுக்குத் தூரம்
  வெளியே வரமாட்டேன்
  அம்மா திட்டுவா
  நாளைக்கு
  இதே நேரம்
  பளீச்செனத்
  தோன்றுவேன்
  காத்திருங்கள்”
  ...இப்படிக்கு நிலவு.[/co]

  ReplyDelete
 44. ammulu said... 9
  பூஸ் ரேடியோவை ஓன் பண்ணுங்க என்று சொன்னீங்க. ஓன் ஆகுதில்லை.
  சிங்கர் கேட் சூப்பர்
  [co="blue"] ஹா...ஹா..ஹா... அது பூஸ் குடும்பத்துக்கு மட்டும்தேன் ஓன் ஆகும்:) :).

  மியாவும் நன்றி அம்முலு .[/co]

  ReplyDelete
 45. இளமதி said... 11
  எனக்கொரு உம்மை தெரிஞ்சாகோணும் ஜாமி:)
  இன்னிக்கு ஏன் பூஸ் இப்புடி தண்ணீல வுழுந்து தள்ஆஆஆடுது????
  பூஸுக்கு தண்ணீன்னா பயம். பாஞ்சு பிறாண்டிக்கொண்டு ஓஓடிடும். இங்கை எல்லாம் தலைகீழாவெல்லோ நடக்குது:( ம்......என்னா மாட்டர்ர்ர்ர்ர்ர்ர்....

  [co="purple"]வாங்கோ யங்மூன் வாங்கோ....

  பூஸ் எங்க தள்ளாடுது?:) அது தள்ளாடுவதுபோல நடிப்பூஊஊ:)) எங்கிட்டயேவா?:)..[/co]


  // PENNY FARTHING CYCLE // எடுத்து கண்மண் தெரியாம ஸ்பீட்டா ஓடுறதை.
  கடவுளே... பிள்ளையாரே... முருகா பூஸையும் காப்பாத்தி எங்கள் எல்லாருக்கும் உயிர்பிச்சை குடு:))))
  காணிக்கையை பூஸேஏஏ தரும். ஹா...ஹா....ஹா...


  [co="purple"]ஹா..ஹா..ஹா.. அது மோட்டவேயில் போறார் எல்லோ.. 100- 120 மைல் பே அவரில போகும்போது அப்பூடித்தானே இருக்கும்...:))

  ஓம் முருகா.. ஓமோம்.... யங்மூனின் காதில இருக்கும் வைரத்தைக் கழட்டி காணிக்கையாப் போட்டு என் நேர்த்தியை நான் நிறைவேத்திடுவேனே:).[/co]

  ReplyDelete
 46. இளமதி said... 13

  அதெப்படி???? நேரமிருக்கு ஆனால் பாவம் அவையவைக்கு என்ன பிரச்சனையோ? உ +ம்: வயிறு சரி இல்லாமல், உடம்பு சரியில்லாமல் இருந்தால் அப்ப வந்தவை கண்டவையிட்டை சிரிச்சுப்பேசவோ முடியும்.
  அவர்ட கஷ்டம் தெரியாம பூஸானந்தா எப்புடி உப்புடி சொல்லலாம்ம்ம்ம்ம்;)))//


  [co="purple"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வயித்துக்குத்தோட கஸ்டப்பட்டுச் சிரிக்கச் சொல்லேல்லையாம்:).. 24 மணி நேரமும் உம்மென இருக்காமல்.. அப்பப்ப சிரிப்பூஊஉ.. கதைப்பூஊ என கிடைக்கும் நேரங்களை ஊஸ் பண்ணோனும் அதைத்தேன் சொல்லிக்கிடக்கு:))

  மியாவும் நன்றி யங்மூன்.[/co]

  ReplyDelete
 47. [co="purple"]வாங்கோ விச்சு வாங்கோ..

  என்ன இண்டைக்கு ரொம்ப அமைதியா.. ஒரு ஆசியர்போல வந்திருக்கிறீங்க:)).. மியாவும் நன்றி.. இனிமேல் மாணவர்போல வாங்க.. அதுதான் கலகலப்பாக இருக்கும்:).[/co]

  ReplyDelete
 48. K.s.s.Rajh said... 15
  ஹி.ஹி.ஹி.ஹி...........நான் கமண்ட் போடாமல் போனால் நீங்க ஒன்னும் வேனாம் சொல்லலையே

  [co="purple"]வாங்கோ ராஜ் வாங்கோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) போட்டிட்டுப் போனால்தான் நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)))

  ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி.[/co]

  ReplyDelete
 49. ஓம் முருகா.. ஓமோம்.... யங்மூனின் காதில இருக்கும் வைரத்தைக் கழட்டி காணிக்கையாப் போட்டு என் //

  நோ ஓ ஓ ஓ :)))) அந்த வைரத்தோடு மற்றும் வைர அட்டிகை குருதட்சினையா ஏற்க்கனவே எனக்கு என்று நான் சொல்லிட்டேன் .
  பூஸ் :))

  ReplyDelete
 50. இருப்பதோ ஒரு மனம்.. நான் என்ன செய்வேன்:)!!..//

  உங்க கையில் போட்டிருப்பீன்களே அந்த பச்சைக்கல் மோதிரம் தருவதாக இருந்தா நான் ஒரு சொல்யூஷன் தரேன்
  ஒன்றுமில்லை
  குடிச்சிட்டு மறந்திடுங்க :))))))))))
  நான் சொன்னது டீ டீ டீ tea

  ReplyDelete
 51. (ஒடிடாதீங்க.. இன்னொன்று இருக்கு:), அதையும் படிச்சிட்டு மொய் எழுதிட்டுப் போங்க:))//

  மொய் ....ஒருதரம்
  மொய்......2 தரம்
  மொய்.... 1000 தரம்.

  :)))))போதுமா இல்லைன்னா இன்னும் எழுதணுமா ஹாஆஆஆ

  ReplyDelete
 52. அஞ்சு சிறு பூஸ் ன்னு சொன்னத வன்னன்ன்ன்மையா கண்டிக்குறேன்:)) //

  Thats second infancy ROFL:))))

  ReplyDelete
 53. [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSqyO_cLAz9Uh-mPFRfiV3iqR2v6R-u-poeyyvGf8dhRC6gURszkw[/im]

  very busy in the kitchen :))

  ReplyDelete
 54. Yoga.S. said... 16
  (அதி)காலை (உங்களுக்கு)வணக்கம்,அதிரா!!!!!(எப்பூடீ?)காலை எழுந்து கொஞ்சம் சிரித்தேன்.பூசார் செம ஸ்பீட்டாப் போறார்,பொலிசு புடிக்கப் போறார்!(மரியாதை,பொலிசுக்கு)//

  [co="purple"]வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ...

  நீங்களும் சிரிச்சனீங்களோ? ஹா..ஹா..ஹா.. கேட்க சந்தோசமாக இருக்கு.

  அது பூஸார் மோட்டவேயில போறார்:).. 100 கி.மீ பே.அவரில:)).. திரு பூஸாரெனில் 120 இல போவார்:)) அதுக்க்கு மேல போனால்.. நீங்கள் சொன்னதுபோலதான்:)).. போலீசூஊஊஊஊஊஊஊஊ:)))...[/co]

  ReplyDelete
 55. Yoga.S. said... 17
  நகைச் சுவைகள் (தமிழில்;ஜோக்ஸ்)நன்றாக இருந்தன,இருக்கின்றன,இருக்கும்!////

  [co="purple"]நன்றி நன்றி யோகா அண்ணன்... சாப்பாட்டுக் கடைகள், பியூட்டி பாலர்கள் மாதிரி நகைச்சுவைக்கும் எப்பவும் எக்காலத்திலும் வரவேற்பு இருந்துகொண்டே இருக்கும்.[/co]

  Yoga.S. said... 18
  ஓடினால்தான் நதி.. பறந்தால்தான் பறவை....
  சிரிச்சால்தான் மனிதன்....////ஒரு சந்தேகம்::தேம்ஸ் உம் நதி தானே?(விளங்காது,உஸ்................நிம்மதி)//

  [co="purple"]ஹா..ஹா..ஹா.. தேம்ஸ்சும் ஓஓஓஓஓடிட்டேதான் இருக்கூஊஊஊஊ:))

  மியாவும் நன்றி யோகா அண்ணன்..[/co]

  ReplyDelete
 56. வாங்கோ என் சிஷ்யையே.. நலம்தானே? அடிக்கடி காணாமல் போயிடுறீங்க:(.

  கலை said... 19
  சிரிச்சால்தான் மனிதன்...////

  ஹஹா ஹஹா ஹஹாஆ ....குருவே நான் சிரிச்சிட்டணன்,..

  [co="purple"]ஆஆஆஆஆஆஆஆஆஅ என் சிஷ்யையும் மனிதன் தான்ன்ன் அவட குருவைப்போலவே:)) ஐ மீன் என்னைப்போலவே:) [/co]

  ReplyDelete
 57. கலை said... 20
  அய்யகோ இண்டைக்கு லீவ் ..அஞ்சு அக்கா ,கிரி அக்கா ,அதிரா அக்கா எல்லாரும் ஓடி வாங்களேன் ..

  கும்மி அடிச்சி எவ்வளவு நாள் ஆகுது ....//

  [co="purple"]இல்ல கலை.. இப்போ கும்மி முடிஞ்சு பல்லாங்குழி வெளாடுறமாக்கும்:)) நடுவர் யோகா அண்ணன்:). [/co]

  ReplyDelete
 58. [co="purple"]உஸ்ஸ்ஸ்ஸ் கலை தமனாவின் காதலரைப் பார்த்துக் குடிகாரர் என்றால்.. உலகமே அடிக்கக் கலைக்கப் போகுது உங்களை.. ஐ மீன் கவிக்காவைச் சொன்னதுக்காக:)..

  மியாவும் நன்றி கலை. [/co]

  ReplyDelete
 59. வாண்டோ கீரி வாண்டோ!!!

  //En Samaiyal said... 22
  ஓரம் போங்க பூசொட வண்டி வருது (நல்ல வேளை அஞ்சுவ என்னைய எல்லாம் கடவுள் பூஸ் இடம் இருந்து ரொம்ம்ம்ப தூரத்தில் வெச்சு இருக்காங்க Thank GOD :))//

  [co="purple"]ஹா..ஹா..ஹா... எதுக்கு இந்த நடுக்கம் நடுங்குறீங்க:).. ஏறிப் பின்னால இருங்கோ பயப்பூடாதீங்கோ நான் பத்திரமாக் கொண்டுபோய் விடுவன்... தேம்ஸ்ல:). [/co]

  ReplyDelete
 60. En Samaiyal said... 23


  மிரட்டி அழு புரண்டு கமெண்ட் போட சொல்லி கேட்டு பார்த்து இப்போ இப்புடி டெக்னிக்கா ?? ஹும்ம்ம்ம் உங்க கிட்னி நல்லாத்தேன் வர்க்கிங் :))

  [co="purple"]ஹா..ஹா..ஹா.. திரும்படியும் சிரிக்கிறேன் நான்ன்ன்:)).. காசா பணமா.. ஒரு “ஊசி ஊட்டம்” தானே?:)) போட்டால் என்ன குறைஞ்சா போவீங்க?:) அப்பூடியெண்டெல்லாம் மீ கேய்க்க மாட்டன்:))) ஏனெண்டாம் மீ ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:). [/co]

  ReplyDelete
 61. En Samaiyal said... 24
  //சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே:)) // அஞ்சு ஐ ஆம் ஹியர். இப்புடி ஏழ்மைன்னு பேச்சு வாக்குல ஸ்லிப்பாகி சொன்னா காஞ்சி காமாச்சி பட்டு புடவையையும் நாராயணா முத்து மாலையையும் கான்ஸல் பண்ணிடுவாங்க ன்னு பூஸ் இஸ் ட்ரீமிங் :)) //

  [co="purple"]ஹா..ஹா..ஹா.. திரும்படியும் விழுந்து விழுந்தூஊஊஉ சிரிக்கிறேன் நான்ன்ன்:)).. வில்லிப்புத்தூர் நாராயணா!! நாராயணா....:)) காஞ்சி காமாட்சி மறந்தாலும் இவிங்க மறக்க விடாயினமே:)). [/co]

  ReplyDelete
 62. En Samaiyal said... 25
  //என்ன பார்க்கிறீங்க:) விழுந்தூஊஊஊஊஊஉ விழுந்தூஊஊஊஊ சிரிங்கோ:))//

  விழுந்து ஊஊஉ விழுந்தூஊஊஉ சிரிச்சு அஞ்சுவுக்கு வான்சுக்கேல்லாம் செம அடியாம். அவங்க ஆத்து காரர் எல்லாம் மேல் கோர்ட்டுக்கு பூச சூ பண்ணி கேஸ் போட்டு இருக்காங்களாம் (சந்தோசம் போயிங்குதே ஏ ஏ ஏ:))

  ஊ.குறிப்பு : நான் ஸ்டெடியா டேபில் எ புடிச்சு கிட்டே படிச்சதுல கீழே எல்லாம் விழலே ஹீ ஹீ

  [co="purple"]என்னாது:)) அஞ்சுவால வான்ஸ்சால எல்லாம் பூஸை மடக்க முடியாமல்:) இப்போ ஆத்துக்காரரைக் கொண்டு கேஸ் போட்டிருக்கினமோ:))...

  அவ்வ்வ்வ்வ் நாம இனி பேமனNடாக் கட்டிலுக்குக் கீழ போயிட வேண்டியதுதான்ன்ன்ன்:)).. இல்லாட்டில் நம்மட ஆத்துக்காரரின் கையைக் காலைப் புய்ச்சாவது ஒரு ஊழ்சி:) வாங்கி கீரிக்குப் போட்டிடுவேன்ன்.. ஜாக்ர்ர்ர்ர்ர்ர்தை:))

  ஹையோ முருங்ஸ் எங்கப்பா...[/co]

  [im]http://1.bp.blogspot.com/-7u4P4pOp41A/TqECoyTyP2I/AAAAAAAAAr4/CJTVZ1sf3gw/s400/kitty-cat+climbing+a+bush+phi+stars+blog+photo.jpg[/im]

  ReplyDelete
 63. En Samaiyal said... 26
  //குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால்.... பூஸை மறந்துவிடலாம்:),
  மறப்பதுக்கு ஒரு மனமிருந்தால், குடித்து விடலாம்:),//  எனக்கு ரெண்டுக்கும் மனம் இல்லை. பூசை தேம்சில் தள்ளி விடத்தான் மனம்ம்ம் இருக்கு வாட் கேன் ஐ டூ ஊஊ :))//

  [co="purple"]என்னாது:)) karrrrrrrrrrr:)) சமயபுரத்து மாரியம்மாஆஆஆஆஆ நேக்கு உயிர்ப்பிச்சை தாருமம்மாஆஆஆஆ:)

  [/co]
  [im]http://static1.pixdaus.com/files/items/pics/5/78/243578_f0768e981f66920001f138f2b40c2d19_large.jpg[/im]

  ReplyDelete
 64. En Samaiyal said... 27
  // தட்டுங்க தட்டுங்க.... கை தட்டுங்க.. இது நக:)ச்சுவை:) எல்லே.., கர்ர்ர்ர்ர்ர்ர் சொன்னால்தான் புரியுமாக்கும்:))//  தட்டுங்க தட்டுங்க ன்னு பார்த்த ஒடனே அவசர பட்டு பக்கத்தில் இருந்த என் பாஸ் முதுகில் தட்டிட்டேன் கர்ர்ர்ரர்ர்ர்ர் :))//

  [co="purple"]ஹா..ஹா..ஹா..ஹா..ஹா... இதுக்குத்தான் ஓவரா உணர்ச்சிவசப்பட்டிடாமல் மீயைப்போல:) ஸ்ரெடியா இருக்கோணும் எண்றது:))... உஸ்ஸ் நல்ல வேளை மனிசனுக்குப் பொசுக்கெனப் போயிடேல்லை:)) போயிருந்தால் என்னையுமெல்லோ யாட்சிக்கு:) கூப்பிட்டிருப்பினம் ஜாமீ:)) ஆஆஆஆஆ நாராயணர் காப்பாத்திட்டார்ர்ர்:))

  [/co]

  ReplyDelete
 65. En Samaiyal said... 29
  //இன்று நான் வெளியே வரமாட்டேன், அமாவாசையாக்கும்:))/

  தினமும் அமாவாசையா இருந்தால்..... :)) ஓகே மீ கமிங் லேட்டர் யா//

  [co="purple"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதெப்பூடி?:)) பூஸு கண்ணை மூடினாலே பூலோகமே இருண்டிடும்:)).. அமாவாசை டெய்லி வந்தால்ல் என்ன ஆவுறது? அல்லி எப்போ மலர்றது... ? பேபி அதிராவுக்கு, எப்பூடி அவட மம்மி நிலாச்சோறு ஊட்டுறது?:)).. சரி சரி முறைக்க வாணாம்ம்:))..

  மியாவும் நன்னி கீரி.... நானும் நிறையச் சிரிச்சிட்டேன்.

  [/co]

  ReplyDelete
 66. மனிசனுக்குப் பொசுக்கெனப் போயிடேல்லை:)) போயிருந்தால் என்னையுமெல்லோ யாட்சிக்கு:) //

  மெட்டம்:)))))) நாங்க அழுத்தித்தான் உச்சரிப்போம் :))
  இங்கே குற்றவாளியைவிட குற்றம் செய்ய தூண்டியவங்களுக்குதான் தண்டனையாம் :)) அங்கே பாருங்க போலிஸ் வராங்க வித் handcuffs:)))
  [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTX7f2V8TqwT86qgkKbYTPFX8BXf2AGKAB1JoauYkA6TPKRBxgL[/im]

  ReplyDelete
 67. angelin said... 66
  மனிசனுக்குப் பொசுக்கெனப் போயிடேல்லை:)) போயிருந்தால் என்னையுமெல்லோ யாட்சிக்கு:) //

  மெட்டம்:)))))) நாங்க அழுத்தித்தான் உச்சரிப்போம் :))
  இங்கே குற்றவாளியைவிட குற்றம் செய்ய தூண்டியவங்களுக்குதான் தண்டனையாம் :)) அங்கே பாருங்க போலிஸ் வராங்க வித் handcuffs:)))///

  குருவே போலீஷாம் என்னைக் காப்பத்துங்கோ:)).. எங்காவது.. கொப்பிழக்காமல் தாவிடுங்கோ:).. நான் குரங்குப் பிடி பிடிச்சு வந்திடுறேன்:))

  [im]http://4.bp.blogspot.com/_KTUslcBMLV8/THdW6G5ru0I/AAAAAAAACM0/XHYbeYN09as/s640/MonKa5.jpg[/im]

  ReplyDelete
 68. athira said...//இனிமேல் மாணவர்போல வாங்க.. அதுதான் கலகலப்பாக இருக்கும்:)// நான் என்றைக்கும் மாணவன்தான். ஆதிரா மாதிரி நல்ல டீச்சரா தேடிக்கிட்டு இருக்கேன். எனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத்தான்.

  ReplyDelete
 69. அதென்ன லேபில்ல Poosh Radio! புதுசா ஆரம்பிச்சிருக்கீங்களா? திறப்பு விழாவுக்கு எங்களை எல்லாம் கூப்பிடவே இல்லை. பரவாயில்லை... சுவீட்டாவது அனுப்பி வையுங்கோ.. இதுக்கெல்லாம் கோவிச்சுக்கிட்டு தேம்ஸ் பக்கம் போறேன்னு பிலிம் காட்டக்கூடாது.

  ReplyDelete
 70. ஓடினால்தான் நதி.. பறந்தால்தான் பறவை....
  சிரிச்சால்தான் மனிதன்...//
  ஓடினால்தான் கால் நல்லாயிருக்கு.. பறந்தால்தான் இறக்கை நல்லாயிருக்கு.... சிரிச்சால்தான் பல்லு நல்லாயிருக்கு...
  இப்படிக்கு...புலாலியூர் புஸ்வானந்தா...

  ReplyDelete
 71. ஐயோ இரண்டு போஸ்ட்டு மிஸ்ஸிங்.....
  எப்பிடி மிஸ் ஆகிச்சு......
  ஒரு வேலை அப்பிடி ஆகியிருக்குமோ...சீ ஆகியிருக்க மாட்டா....
  இப்பிடி ஆகியிருக்குமோ.... இல்ல இப்பிடியும் ஆகியிருக்காது
  பின் எப்பிடி மிஸ் ஆகிச்சு.......

  ReplyDelete
 72. என்னது பூஸாருக்கு உடம்பு வலி ஏதுமோ இப்பிடி ஆடுறாரு........
  ஒரு நல்ல எஞ்சினியரிட்ட கொண்டு போய் காட்டுங்க முதல்ல அவர் தான் நல்லா வைத்தியம் பார்ப்பாரு......:(((

  ReplyDelete
 73. ஊசி இணைப்பு எங்கயோ கேட்டமாதிரி இருக்கு
  ஆனா கேக்கல்ல...........
  சத்தியமா இது பாட்டுத்தானே

  ReplyDelete
 74. என்ன இது அநியாயமாயிருக்கு பௌர்ணமிக்குத்தான் சில பேர் வெளியில வரமாட்டாங்க......
  நீங்க அந்த வகையில்லையா.....
  தப்பா புரிஞ்சிட்டோமோ.....

  இப்ப என்னத்த சொல்லிப்புட்டேன்னு விளக்குமாற தூக்கிறீங்க.....
  மி எஸ் கேப்

  ReplyDelete
 75. ஹேமா said... 37
  **/என்ன பார்க்கிறீங்க:) விழுந்தூஊஊஊஊஊஉ விழுந்தூஊஊஊஊ சிரிங்கோ:))//**

  அதிரா ...இந்த நேரத்தில விழுந்து விழுந்து சிரிக்க கீழ்வீட்டுக்காரி தும்புக்கட்டையால என்ர வீட்டில இடிச்சு அச்சுறுத்துறா.//

  [co="dark green"]..

  வங்கோ ஹேமா வாங்கோ.. உடனுக்குடன் பதில் போடத்தான் ஆசை.. ஆனாலும் தோத்துப் போயிடுறேன்..:).

  ஹா..ஹா..ஹா.. இனிமேல் விழாமல்.. அக்திரையில கட்டில்ல பிடிச்சுக்கொண்டு சிரிக்கச் சொல்றேன்:).

  [/co]

  ReplyDelete
 76. ஹேமா said... 38
  நானும் சிலநேரம் நேரமில்லாட்டி வந்து பாத்திட்டு பின்னூட்டம் போடாம போறனான்.....எனக்கும் சொன்னீங்களோ...
  [co="dark green"]அவ்வ்வ்வ்.. எனக்கு எழுதும்போது என்ன வருதோ அதை அப்பூடியே எழுதிடுவேன்ன்.. ஓசிச்சு எழுதுவது குறைவுதான்:).. அது தானா வருது ஹேமா:)..
  [/co]

  உதுக்கெல்லாம் தேம்ஸ்க்கு ஓடுறேல்ல.ஓடுறீங்களே தவிர இன்னும் தேம்ஸ்க்குக் கிட்டக்கூடப் போகேல்லை.....ஹிஹிஹி !

  [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் எத்தனையோ தரம் தேம்ஸ்ல வலது காலயும் எடுத்து வச்சுப் பார்த்திடன்:)) ஏதோ ஒரு அசரீரி ஒலிக்குது ஹேமா:)).. ஒவ்வொரு முறையும் இப்பூடி ஆகிடுது:))... சே..சே.. காலம் கூடாது போல:)) அதுதான் தடைப்படுது:)).. ஹையோ ஹையோ:)

  வேலைக்குப் பொவதைப்போல, வீட்டில் கதைக்க சிரிக்கவும் நெரம் ஒதுக்கோணும், எத்தனையோ கப்பிள்ஸ்க்கு ஒருவரை ஒருவர் சந்திக்க கூட நேரமில்லாமல்,மனைவி பகல் வேலையும், கணவர் இரவு வேலையுமா ஓடித்திரிகினம்...

  என்ன இருந்தாலும் ஒரு நாளாவது ஒதுக்கி, கதைச்சுப் பேசிச் சிரிக்கோணும்.. இல்லையெனில் வாழ்வதில் அர்த்தமில்லாமல் போயிடும்... என்பது என் கருத்து மட்டுமே.

  மியாவும் நன்றி ஹேமா.

  [/co]

  ReplyDelete
 77. [co="dark green"]ஆஆஆ.. வாங்கோ கோபு அண்ணன்... நான் தான் வரவேற்கத் தாமதமாகிட்டேன்ன் குறை நினைச்சிடாதீங்கோ....[/co]

  திருமதி அதிரா மேடத்தின் படத்தை இன்று தான் முதன்முதலாகப் பார்த்தேன்.
  [co="dark green"]ஹையோ நான் “மேடம்” இல்லை:)) “கன்னி”.....:)) வேணுமெண்டால் என் கொரஸ்கோப்பை ஸ்கான் பண்ணிப் போடுறேன்:)

  [/co]
  ஒரே சிரிப்பா இருந்துச்சு. அவங்க ஜீப் அதைவிட அருமை. என்ன ஒரு குலுக்கல் ஆட்டம். அடடா அழகோ அழகு தான்.
  [co="dark green"]ஹா..ஹா..ஹா.. ஸ்பீட்டைப் பற்றி ஒருவசனம் சொல்லாமல் விட்டிட்டீங்களே:)!!..

  [/co]

  தொடரும்....///
  [co="dark green"]கோபு அண்ணன் உங்கட ஸ்பெஷாலிட்டியில.. இந்த “தொடரும்” ஒன்று என்பதை நான் எப்பவோ கண்டு கொண்டேன்ன்.. கீப் இட் அப்...

  [/co]

  ReplyDelete
 78. வை.கோபாலகிருஷ்ணன் said... 41

  அது சரி தான். ;)))))

  படித்தேன்

  ரஸித்தேன்

  சிரிப்பாய்ச் சிரித்தேன்.

  எல்லாமே ஒரே தேன் தேன் தேன் !
  ஒரே இனிப்போ இனிப்பு தான்.

  பகிர்வுக்கும் சிரிக்க வைத்ததற்கும் நன்றி.
  [co="dark green"]மியாவும் நன்றி கோபு அண்ணன்... வாழ்வில் எப்பவுமே மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டும் ஒற்றுமையாகவும் இருக்கோணும் எல்லோரும் என்பதே என் விருப்பம்.

  [/co]

  ReplyDelete
 79. [co="dark green"]வாங்கோ ஸாதிகா அக்கா.. நாங்க ச்ச்ச்சும்மா சொல்லுவோம்:)) ஆனா நீங்க பின்னூட்டம் போடாமல் போனால் விடமாட்டமில்ல:).

  மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

  [/co]

  ReplyDelete
 80. angelin said... 51
  (ஒடிடாதீங்க.. இன்னொன்று இருக்கு:), அதையும் படிச்சிட்டு மொய் எழுதிட்டுப் போங்க:))//

  மொய் ....ஒருதரம்
  மொய்......2 தரம்
  மொய்.... 1000 தரம்.

  :)))))போதுமா இல்லைன்னா இன்னும் எழுதணுமா ஹாஆஆஆ
  [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
  [/co]
  [im]http://static.desktopnexus.com/thumbnails/493492-bigthumbnail.jpg[/im]

  ReplyDelete
 81. athira said... 77
  //ஆஆஆ.. வாங்கோ கோபு அண்ணன்... நான் தான் வரவேற்கத் தாமதமாகிட்டேன்ன் குறை நினைச்சிடாதீங்கோ....//

  குறையொன்றும் இல்லை

  //திருமதி அதிரா மேடத்தின் படத்தை இன்று தான் முதன்முதலாகப் பார்த்தேன்.

  ஹையோ நான் “மேடம்” இல்லை:)) “கன்னி”.....:)) வேணுமெண்டால் என் கொரஸ்கோப்பை ஸ்கான் பண்ணிப் போடுறேன்:)//

  நீங்க கன்னி ராசியோ? கன்னிராசிக்காரங்க எல்லாம் கன்னியாகவும் இருக்கலாம் மேடமாகவும் இருக்கலாம்.

  சரி இதைப்பற்றி விசாரிக்க வேண்டியவங்ககிட்டே விசாரிச்சுக்கறேன்.
  ஜாதகமெல்லாம் வேண்டாம்/

  //ஒரே சிரிப்பா இருந்துச்சு. அவங்க ஜீப் அதைவிட அருமை. என்ன ஒரு குலுக்கல் ஆட்டம். அடடா அழகோ அழகு தான்.

  ஹா..ஹா..ஹா.. ஸ்பீட்டைப் பற்றி ஒருவசனம் சொல்லாமல் விட்டிட்டீங்களே:)!!..//

  ஆமாமில்ல. சொல்லாம விட்டுட்டேன். ஸாரி.

  ரொம்பவும் ஹைஸ்பீடுலே ஜீப் சக்கரம் சுழலுது. பின்பக்கம் உள்ள மரங்களெல்லாம் ஜோரா ஸ்பீடோ ஸ்பீடா ஓடுது.

  ஆனாக்க பூனையார் அதாங்க அதிரா ஒரு இஞ்ச் கூட நகரவே காணும்.

  இருந்த இடத்திலேயே இருந்துக்கிட்டு உடம்பைக் குலுக்கோ குலுக்குன்னு குலுக்க்வதோடு சரி போலிருக்கு.

  தொடரும்....///
  கோபு அண்ணன் உங்கட ஸ்பெஷாலிட்டியில.. இந்த “தொடரும்” ஒன்று என்பதை நான் எப்பவோ கண்டு கொண்டேன்ன்.. கீப் இட் அப்...//

  இந்த தங்கமலை ரகசியத்தை எப்படிக் கண்டு கொண்டீர்கள்?????

  ReplyDelete
 82. வை.கோபாலகிருஷ்ணன் said... 81

  நீங்க கன்னி ராசியோ? கன்னிராசிக்காரங்க எல்லாம் கன்னியாகவும் இருக்கலாம் மேடமாகவும் இருக்கலாம்.//

  [co="dark green"]ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன் நீங்க என்னா ஸ்பீட்டாப் பதில் போட்டுவிட்டிங்கள்.. சிரிச்சதில கீழ விழுந்திட்டேன்ன்... நல்லவேளை.. அஞ்சு, கீரி மாதிரி எனக்கு அடிகிடி படேல்லை:)...

  ஆ.. நீங்க மாத்தியோசிகப் பழகிட்டீங்க.. கன்னி, மேடத்துக்குச் சொன்னேன்:).
  [/co]

  ஆனாக்க பூனையார் அதாங்க அதிரா ஒரு இஞ்ச் கூட நகரவே காணும்.

  இருந்த இடத்திலேயே இருந்துக்கிட்டு உடம்பைக் குலுக்கோ குலுக்குன்னு குலுக்க்வதோடு சரி போலிருக்கு.//

  [co="dark green"]ஹா..ஹா..ஹா.. நீங்களும் என் “பூஸுமலை ரகசியத்தைக்” கண்டு பிடிச்சிட்டீங்க...:)).. சுவிம்மிங் பூல்ல.. சும்மா லெவ்ட்டு ரைட்டுஊ என கை கால் எல்லாம் அரை மணி:) நேரமா அடிஅடி என அடிச்சுப் போட்டு எழும்பிப் பார்த்தால் என்னா அதிசயம்:).. அதிலயே இருக்கிறேன்:)) ஒரு அடிகூட நகராமல்:)) பார்த்தீங்களோ என் ராசி அப்பூடி:)
  [/co]

  ReplyDelete
 83. திருடன் ஜோக்ஸ் கலக்கல்.

  ReplyDelete
 84. //நல்லவேளை.. அஞ்சு, கீரி மாதிரி எனக்கு அடிகிடி படேல்லை:)...//

  karrr :))  ReplyDelete
 85. அதெப்பட்ட்டி உங்களுக்கு மட்டும் வித விதமாக பூஸார் படம் கிடைக்குது

  ReplyDelete
 86. [co="dark green"]வாங்கோ விச்சு வாங்கோ.. என்னாது உங்களுக்குப் படிப்பிக்கோணுமோ? சரி சரி அடுத்ததடவை வரும்போது கொப்பி எல்லாம் எடுத்து வாங்க.. முதலில் ஃபிரெஞ் வகுப்பு ஆரம்பமாகும்.. அதுக்கு முதல்.. ஃபீஸை என் எக்கவுண்ட்டில போடிடுங்கோ:).

  பூஸ் ரேடியோ.. எவ்ளோ காலமா இருக்கு.. நீங்கதான் கேட்கேலைப்போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
  [/co]

  விச்சு said... 70

  ஓடினால்தான் கால் நல்லாயிருக்கு.. பறந்தால்தான் இறக்கை நல்லாயிருக்கு.... சிரிச்சால்தான் பல்லு நல்லாயிருக்கு...
  இப்படிக்கு...புலாலியூர் புஸ்வானந்தா..

  [co="dark green"]ஹா..ஹா..ஹா.. எங்காவது பொண்ணு பார்க்கப் போன அனுபவமோ?:) இல்லை ஆராவது வந்து விச்சுவை மாப்பிள்ளை பார்த்த அனுபவமோ?:))..

  மியாவும் நன்றி விச்சு.... கருத்துக்கும் .. மிகவும் தாமதமான:) வருகைக்கும்:)..
  [/co]

  ReplyDelete
 87. [co="dark green"]அடடா ஜிட்டு வந்திருக்கிறாக!!!.. ஆனா மிஸ்ஸாகி வந்திருக்கிறாக.. இது வேற மிஸ்:).

  ஜிட்டு இதுக்குத்தான் ஜொல்றது:) ஒழுங்கா பீச்சுக்குப் போங்க என:).. அப்பத்தான் அங்க இருந்து ஃபோன்ல என்பக்கம் பார்ப்பீங்க.. புதுப்பதிவு தெரியும்.. ஓடிவந்து பின்னூட்டம் போடுவீங்க:))..

  எஸ்கேப் ஆக வாணாம்ம்.. விரைவில வாங்க அடுத்த பதிவுக்குப் பின்னூட்டம் போடோணுமெல்லோ:).
  [/co]

  ReplyDelete
 88. [co="dark green"]வாங்கோ வியபதி மிக்க நன்றி.
  [/co]

  ReplyDelete
 89. Chennai Plaza - சென்னை ப்ளாசா* said... 86
  அதெப்பட்ட்டி உங்களுக்கு மட்டும் வித விதமாக பூஸார் படம் கிடைக்குது//
  [co="dark green"]வாங்கோ ஜல் அக்கா..... அது எண்ணம் அழகானால் எல்லாம் விதம் விதமாக் கிடைக்கும்:))

  மியாவும் நன்றி.
  [/co]

  ReplyDelete
 90. அட, வீட்டில ஒருத்தரும் இல்லைப் போல கிடக்கு! நைஸா உள்ளுக்க போவம்!

  அசரீரீ - நான் ஒண்ணும் வேணாம் சொல்லலியே................. !!!!

  மணி - ஐயோ ஆரது, சாமத்தில அடித்தொண்டையால கதைக்கிறது? ஏதாவது ரேடியோவில சேருறதுக்கு பயிற்சி எடுக்கினமோ?

  ReplyDelete
 91. மணி - பூஸ் மேடம்! என்னுடைய மணியம் கஃபேக்கு ஒரு மைக்ரோ அவன் தேவைப்படுது. உங்கள் வீட்டில் இருப்பதை எடுக்கவோ?

  பூஸ் - தாராளமா எடுங்க! நான் ஒண்ணும் வேணாம் சொல்லலியே?

  ReplyDelete
 92. மணி - பூஸ் மேடம்... எனக்கு சட்டி, பானை, கோப்பை, அகப்பை, இடியப்பத்தட்டு, இடியப்ப உரல், அரிதட்டு, அரிக்கன் சட்டி, இதெல்லாம் தேவைப்படுது. உங்கள் வீட்டு கிச்சனில் இருப்பதை எடுக்கவோ?

  பூஸ் - தாராளமா எடுங்க! நான் ஒண்ணும் வேணாம் சொல்லலியே? :)))

  ReplyDelete
 93. மணி - எனக்கு அவசரமா 5 பவுண் சங்கிலி தேவைப்படுது...................!

  பூஸ் - ( மறந்து போய் ) தாராளமா தாறேன்...... நான் ஒண்ணும்........ ஐயோ ஜாமீஈஈஈஈஈஈஈஈஈ தெரியாத்தனமா ஒரு தலைப்பு போட்டதுக்கு மணியம் கஃபே ஓனர் இப்படி போட்டு வாங்குறாரே, நான் இப்பவே போறன் சென்னுக்கு! ( எத்தனை நாளைக்குத்தான் தேம்ஸுக்குப் போறது? விடுங்கோ என்னைத் தடுக்காதேங்கோ :^))))

  ReplyDelete
 94. ஜோக்ஸ் சூப்பர், விழுந்து விழுந்து சிரிக்காட்டியும் சிரிப்பு சிரிப்பாக வந்தது.ஹைய்யோ ஹைய்யோ !

  பூஸ் ரேடியோவை நேற்றே ஆன் செய்தேன்,ப்ளாக்கே கானாமல் போய்விட்டது..என்னுடைய சிஸ்டத்திற்கே தாங்க முடியலை.அம்மாடி...

  ReplyDelete
 95. அதீஸ் ரொம்ப மோசம் நீங்க நா எவ்வளவு சின்சியரா உனக்கு மொய் வச்சுட்டிருக்கேன் என்னப்போயி இப்படி கடோசி பெஞ்சுல தள்ளி விடுடியே நியாயமா தர்மமா அடுக்குமா உனக்கு

  ReplyDelete
 96. athira said...மியாவும் நன்றி விச்சு.... கருத்துக்கும் .. மிகவும் தாமதமான:) வருகைக்கும்:)//.
  என்னைப்பார்த்து எப்படி சொல்லலாம். தாமதமான வருகைன்னு! நான் முதல்லயே வந்துட்டேனாக்கும். நீங்கள் கலாய்க்காமல் கொமெண்ட் போட்டுவிட்டீர்கள் என்று தேம்ஸுக்கு குதிக்கப்போனதால் மீண்டும் கலாய்த்து கொமெண்ட் போட்டால்...ம்ம்க்கும்.. இருக்கட்டும்.
  //முதலில் ஃபிரெஞ் வகுப்பு ஆரம்பமாகும்.. அதுக்கு முதல்.. ஃபீஸை என் எக்கவுண்ட்டில போடிடுங்கோ:// அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்டு எல்லாம் கொடுங்க. போட்டுறேன்.
  //ஹா..ஹா..ஹா.. எங்காவது பொண்ணு பார்க்கப் போன அனுபவமோ?:) இல்லை ஆராவது வந்து விச்சுவை மாப்பிள்ளை பார்த்த அனுபவமோ?:))..// பொண்ணுங்க தேடி வந்துக்கிட்டே இருக்காங்க.. (ஐய்யோ! அடிக்க இல்லைப்பா.. அது வந்து...) இப்போ சுந்தரபாண்டியன் பட ஹீரோயின் (அவங்க பேர் என்ன?)...விச்சுவை தேடுவதாக தகவல்.

  ReplyDelete
 97. [co="dark green"]அவ்வ்வ்வ்வ்வ் காணாமல் போனோரெல்லாம் வந்திருக்கினம்போல.. ஹையோ விடுங்கோ விடுங்கோ வழி விடுங்கோ ..நான் கட்டிலுக்குக் கீழ போயிடுறேன்ன்.. அங்கிருந்துதான் வரவேற்பேனாக்கும்:).
  [/co]

  [im]http://funnyanimals.zayebo.com/files/2009/04/hello-kitty.jpg[/im]

  மாத்தியோசி - மணி said... 91
  மணி - ஐயோ ஆரது, சாமத்தில அடித்தொண்டையால கதைக்கிறது? ஏதாவது ரேடியோவில சேருறதுக்கு பயிற்சி எடுக்கினமோ?

  [co="dark green"]ஆஆ.. வாங்கோ வாங்கோ மணியம் கஃபே ஓனர் வாங்கோ... அதெப்பூடி கரெக்ட்டக் கண்டு பிடிச்சிட்டீங்கள் என் பயிற்சியை:)... இனிமேல் பிரித்தானியாவில இருந்தும் ”நேயர் விருப்பம்” ஒலி/ஒளி:) பரப்பாகும் என்பதனை மிகவும் டாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்:)..
  [/co]

  ReplyDelete
 98. மாத்தியோசி - மணி said... 94
  மணி - எனக்கு அவசரமா 5 பவுண் சங்கிலி தேவைப்படுது...................!

  [co="dark green"]அதுக்கென்ன, உங்கட பொஸ்ட:) வைஃப்ட கழுத்தில இருப்பதை:) லபக்கென எடுத்திடுங்க நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:))... ஹையோ.. மஞ்சவனப்பதி முருகா... வள்ளி தெய்வானையை விட்டுப் போட்டுக் கொஞ்சம் ஓடிவந்து என்னைக் காப்பாத்துங்கோ.. 4 பவுனில அட்டியல் போடுவேன்ன்ன் வள்ளிக்குத்தேன்ன்ன்:)))..

  மியாவும் நன்றி.. ரெயினின் “ஹார்ட் பெட்டியைப்” பிடித்தமைக்கு.
  [/co]

  ReplyDelete
 99. அவ்வ்வ்வ்வ் மீ 100 ஊஊஊஊஊஊஊ:)

  [im]http://2.bp.blogspot.com/-GxP078fhzTo/UGFlIPMOr2I/AAAAAAAAALg/eTBPiTNbvps/s1600/laughing-cat-80917308215.jpeg[/im]

  ReplyDelete
 100. Asiya Omar said... 95
  ஜோக்ஸ் சூப்பர், விழுந்து விழுந்து சிரிக்காட்டியும் சிரிப்பு சிரிப்பாக வந்தது.ஹைய்யோ ஹைய்யோ !

  பூஸ் ரேடியோவை நேற்றே ஆன் செய்தேன்,ப்ளாக்கே கானாமல் போய்விட்டது..என்னுடைய சிஸ்டத்திற்கே தாங்க முடியலை.அம்மாடி...

  [co="dark green"]வாங்கோ ஆசியா வாங்கோ.. என்னாது பூஸ் ரேடியோவைக் காணேல்லையோ?:)) இது என்ன கொடுமை சாமீஈஈஈஈஈ.. என் ரேடியோவையும் ஆரோ களவெடுத்திட்டினமோ?:)) அவ்வ்வ்வ்வ்வ் கண்ணாடியோட ஆட்கள் வரும்போதே நினைச்சேன்ன்:))

  ஆனா நகையைத்தான் பாதுகாத்தேன்ன்:).. ரேடியோவை நான் ஓசிக்கவே:) இல்லையே ஹையோ ஹையோ..

  மியாவும் நன்றி ஆசியா...
  [/co]

  ReplyDelete
 101. Lakshmi said... 96
  அதீஸ் ரொம்ப மோசம் நீங்க நா எவ்வளவு சின்சியரா உனக்கு மொய் வச்சுட்டிருக்கேன் என்னப்போயி இப்படி கடோசி பெஞ்சுல தள்ளி விடுடியே நியாயமா தர்மமா அடுக்குமா உனக்கு//

  [co="dark green"]வாங்கோ லக்ஸ்மி அக்கா வாங்கோ.. சே.சே.. உங்களுக்காகவும் மற்றும் சிலருக்காகவும்:) கார்ட் பெட்டியைப் ஃபிரீயா விட்டிருந்தேன்:)).. பாருங்கோ பூஸ் ரேடியோவில பாட்டும் போட்டு ஏசியும் போட்டிருக்கு.. இதைவிட வேறென்ன வேணும் சொல்லுங்கோ:))... வேணுமெண்டால் சோடாவுக்கும் பருப்புவடைக்கும் ஓடர் கொடுக்கிறேன்ன்:)).

  மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.
  [/co]

  ReplyDelete
 102. [co="dark green"]அவ்வ்வ்வ்வ் திரும்படியும் விச்சூஊஊஊ..வாங்கோ.. வாங்கோ.. என்னாது தேம்ஸ்க்குப் போன கதையோ?:)).. நோஓ.. தேம்ஸ்க்குப் போவதை இப்போ ஒத்தி வச்சிருக்கிறன், குளிர் கூடிப்போச்ச்ச்ச்ச்ச்:)).


  எக்கவுண்ட் நம்பர் சரி, அது எதுக்காம் பாஸ்வேர்ட் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓன்லைன்ல செக் பண்ணவோ.. எங்கிட்டயேவா:) நீங்க செக் ஆகவே அனுப்புங்கோ:)..

  என்னாது பொண்ணுங்க தேடி வாராங்களோ? எந்த நாட்டில எல்லாம் இருந்து வாறங்க?:)..

  சுந்தரபாண்டியன் பட ஹீரோயினோடு ஜோடியா நடிக்க விச்சுவைத் தேடீனமோ?:) கிழிஞ்சுது போங்கோ:)... படம் 200 நாளைத் தாண்டப்போவது உறுதி:)).. ஹா..ஹா..ஹாஅ... மியாவும் நன்றி விச்சு.
  [/co]

  ReplyDelete
 103. [im]http://icanhascheezburger.files.wordpress.com/2008/03/funny-pictures-catfish-fishcat.jpg[/im]

  ReplyDelete
 104. [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTWJXNcOEYcLWv2fFi-aleqmx6drXnrPetGEDewNjruWtLpyPTvwQ[/im]

  ReplyDelete
 105. அதீஸ் ஜி டிவில

  மூன்று முடிச்சு ..ஹாஆஅ :)) வசந்த கால நதிகளிலே பாட்டு

  ReplyDelete
 106. சுபர்ப் அதீஸ். ;)))

  $.... ப்ளாங்க் செக். நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கோ. ;)

  ReplyDelete
 107. //[co="dark green"]ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன் நீங்க என்னா ஸ்பீட்டாப் பதில் போட்டுவிட்டிங்கள்.. சிரிச்சதில கீழ விழுந்திட்டேன்ன்... நல்லவேளை.. அஞ்சு, கீரி மாதிரி எனக்கு அடிகிடி படேல்லை:)...//

  அஞ்சு யாருன்னு, அவங்க அதிரஸம் எனக்குக் [நமக்குக்] கொடுத்தபோது தெரிஞ்சுக்கிட்டேன். ஆனாக்க இந்த கீரி யாருங்க? ப்ளீஸ் சொல்லுங்க! மேடம் ஸாரி சொல்லுங்க கன்னி.

  கோபு

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.