நல்வரவு_()_


Showing posts with label ரீ பிரேக்:). Show all posts
Showing posts with label ரீ பிரேக்:). Show all posts

Sunday, 11 June 2023

 பாதி ஞானி, ஆகிவிட்ட அதிரா👧

 


வாங்கோ வாங்கோ ஏற்கனவே அதிரா ஒரு ஞானி என்பது, என் தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில, எல்லோருக்கும் நான் தீட்சை கொடுக்கும்போதே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்:), இருப்பினும் எல்லோருக்கும் இங்கின மறதி அதிகமாகிவிட்டதால அடிக்கடி சொல்லவேண்டிக் கிடக்கே கர்ர்ர்ர்ர்:)).

சரி சரி இப்போ எதுக்குப் பாதி ஞானி எனச் சொல்றேன் எண்டுதானே ஓசிக்கிறீங்க:)), அதுவந்து பாருங்கோ, கங்காதேவியில போய் முக்கோ முக்கென முக்கி எழும்பி வந்தேனாக்கும்:).. 

Monday, 23 March 2020

என்றும் இளமையாக.. சே..சே பசுமையாக இருக்க, வாருங்கள்👧..

அதிரா வீட்டுக்குள்:)..

எனக்குப் பாருங்கோ, வீடு முட்ட குட்டிப் பிளாண்டுகள் வைக்க விருப்பம், ஆனா இங்கு குளிர் அதிகமென்பதால, வளர்ந்தாலும் நெடு நாட்களுக்கு நிற்பதில்லை, பட்டு விடுகின்றன, ஆனாலும் நானும் விடுவதில்லை, ஒவ்வொரு சமரின் போதும் புதிதாக வாங்கி வைத்து விடுவேனே.. சரி சரி இப்போ அதிகம் அலட்டக் கூடாதாம்:)) வாய் மூடிப் பேசோணும் என்பதால, அதிரா அடக்கொடுக்கமாப் பேசிவிட்டு போஸ்ட்டுக்குள் சே..சே அதிரா வீட்டுக்குள் நுழைவோமா?:))
வாங்கோ வாங்கோ முதலில் இந்தாங்கோ நல்ல நெஸ்டமோல்ட்டும் போன்விட்டாவும் போட்ட ஸ்ரோங் ரீ குடியுங்கோ:))

Friday, 27 December 2019

அதிரா வீட்டுத் தோட்டம் 2019

இந்த 2019 கோடை விடுமுறையில் சுற்றுலாப் போக முன், எங்கள் வீட்டுத்தோட்டம் பயிரிட்டுள்ளேன் என ஒரு போஸ்ட் போட்டிருந்தேன், அதுக்கு கோமதி அக்கா உள்பட சிலர் கேட்டிருந்தனர், நன்கு வளர்ந்த பின்பும் படம் எடுத்துப் போடுங்கோ என்று.

ஹொலிடே முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் படமெடுத்தேன், ஆனா போட நேரம் அமையவில்லை. இன்று வருடம் முடிவதற்குள் போட்டிடோணும் எனப் போடுகிறேன்.

Thursday, 16 May 2019

ஆரம்பமாகிவிட்டதே:)🙋

தலைப்பையும் படத்தையும் பார்த்துக் குழம்பிப் போயிருப்பீங்களே:).. அதே குழம்பிய மனநிலையோடு உள்ளே வாங்கோ:) அப்போதான் எனக்கு நல்லது:).

Wednesday, 27 March 2019

பள்ளிக்கூடம்...💃💃

இப்படிப் பள்ளிக்கூடம் என எழுதும்போதே, கொஞ்சம் டவுட்டாகவும், ஏதோ புதுசா எழுதுவதுபோலவும் இருந்துது:), பலதடவை.. எழுத்துக்கள் எல்லாம் சரிதானா எனவும் செக் பண்ணினேன், ஏன் தெரியுமோ, இப்படித்தமிழில் பள்ளிக்கூடம் என யாராவது சொல்லுவதுண்டோ? வயதான /ஆங்கிலம் தெரியாதோர் கூட ஸ்கூல் எனத்தான் சொல்கின்றனர்.. நாங்களும் ஸ்கூல் எனச் சொல்லித்தானே பழக்கம்... அதனால எழுதும்போது புதுச்சொல்லாக இருந்துது, இப்படி புளொக் எழுதுவதனாலேயே இச்சொல் இன்னும் புழக்கத்தில் இருக்குது என எண்ணிப் பெருமைப்பட்டேன்ன்.. எனக்கு நானேதேன்ன்ன்ன்ன்:).

சரி சரி எனக்குப் பாருங்கோ அலட்டுவது பிடிக்காது:).. அதனால ஸ்ரெயிட்டா ஸ்கூலுக்குள் போவோமா?:).
என்னை ஆஜீர்வாதம்:) பண்ணுங்கோ குருவே:)

Monday, 23 July 2018

 “அதிரா வளவுக்குள்ளே திருவிழா”

ஹா ஹா ஹா தலைப்புப் பார்த்து பொத்துப் பொத்தென மயங்கி விழுந்திடாதீங்கோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஆருக்காவது தெரியுமோ “வீட்டுகுள்ளே திருவிளா”.. என்ற ஒரு தலைப்பு?:).. உங்களுக்கெங்கே தெரிஞ்சிருக்கப் போகுது:).. அதுபற்றி ஒரு மட்டர் வச்சிருக்கிறேன், விரைவில போடுவேன் வெயிட்:)).. இது எங்கட வளவுக்குள்ளே அழகு மலர் ஆடுவதைப் பார்க்கலாம் வாங்கோ..

Saturday, 20 January 2018

கடவுளுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை கர்:))

கடவுளின் சாகசங்களைக் கண்டு:) பல தடவைகள் நான் வியர்த்திருக்கிறேன்:) வெரி சோரி வியத்திருக்கிறேன்:).. முற்றும் துறந்த ஞானிகள் சொன்னார்கள்:).. ஒருவருடைய வாழ்வில் துன்பம் என்பது, அவரால் தாங்கக் கூடிய அளவுக்குத்தானாம் கடவுள் கொடுப்பார் என, ஆனா இதில் எனக்கு உடன்பாடில்லை, மனித மனத்தை சாந்தப்படுத்தவே அப்பூடிக் கடவுள் ஜொன்னார்:) என எல்லோரும் ஏமாத்துறாங்க, மீ இதுக்கெல்லாம் ஏமாற மாட்டேன்:)..
இந்த பூங்கன்று கிரிஸ்மஸ் க்கு கிவ்ட் டாக கிடைச்சது, இந்த அழகிய மலர்க்கொத்தைப் பார்த்ததும் என் மனதில் பல எண்ணங்கள் தோன்றின, அதில் ஒன்றுதான் இந்த தாங்கும் சக்தி பற்றிய ஆராச்சி.

ஒரு பெரீய அலரி மரத்திற்கு.. பாரமே இல்லாத குட்டிப் பூக்கள்... அதுபோல செம்பரத்தைக்கும் பாரமில்லாத குட்டிப் பூக்கள்... நாகலிங்கம் மரமோ பென்னாம் பெரியது ஆனா அதன் பூக்களோ மிகவும் மென்மையான பாரமில்லாத பூக்கள்... 

ஆனா இச் செடியையும் பூவையும் பாருங்கோ.. பாவம், தண்டு பூவை விட மென்மையானதாக இருக்கு... பூவின் சைசோ பென்னாம் பெரிசு.. அப்போ அதனை அத்தண்டு எப்படித் தாங்கும்? ஏன் கடவுள் இப்படிப் பண்ணினார், நிலத்தில் எனில், அப்படியே பூவோடு தண்டு சரிந்துவிடுமே.

இது நான் தூண்போல வோட்டர் ஜக் ஐ தோளாகக் கொடுத்து நிமித்தியிருக்கிறேன்.... “முல்லைக்கு முட்டுக் குடுக்க தேரைத் தேடாதே, சாய்ந்த மலருக்கு உன் தண்ணி ஜக் ஐக் கொடு”:) என என் காதில் ஆரோ சொல்வதுபோல ஒலித்தது:) அதுதான் உதவினேன்:)..

பிந்தைய இணைப்பு:

========================================================
இது என்ன எனத் தெரிகிறதோ?
இங்கே பெரும்பாலும் ஆற்றங்கரை எல்லாம் இப்படி பெஞ் கள் போடப்பட்டிருக்கும், நடப்போர்.. இருந்து புறுணம்:) பார்க்க என, சிலர் ஏதும் வாங்கி வந்து ஆற்றைப் பார்த்தபடி சாப்பிடுவர் இப்படி, ஆனா சில வயதானோர், எப்பவும் தங்களுக்கென ஒரு பெஞ் செலக்ட் பண்ணி பெரும்பாலும் அதில் வந்து இருப்பர், அப்படி இருப்போருக்கு ஏதும் ஆகி விட்டால், அவர்கள் அடிக்கடி இருக்கும் அந்த பெஞ் இல்,, இப்படி மலர்க்கொத்துக்கள் கொண்டு வந்து வைத்து விட்டுப் போவார்கள்.

இப்படி சம்பவங்கள் இங்கு அடிக்கடி காணலாம்.. 

ஊசி இணைப்பு:
இது எனக்குத் தெரியாதே.. புதுசூஊஊ ஹா ஹா ஹா எனச் சிரிக்கோணும் ஸ்ரீராம்:) ஜொள்ளிட்டேன்ன்ன்:)).. 


ஊசிக்குறிப்பு:
தூரத்து மணியோசை சொல்லி விடுகிறது
தபாற்காரரின் வருகையை!!
அடுப்பங்கரையில் கொதிக்கும் கறியின் வாசம்
சொல்லி விடுகிறது உறவுகளின் வருகையை!!
தரையைத்தேய்க்கிற செருப்புச் சத்தம் 
சொல்லி விடுகிறது அந்நியரின் வருகையை!!
பூனைப் பாதம் பதித்து மெல்லப் பின் வந்து
1ஸ்ட்டூஊஊ என்கையில்தான் தெரிகிறது உன் வருகையை!!
ஹா ஹா ஹா இதனை உங்களுக்காக வெற்றிகரமாகக் களவாடி எடுத்து வந்திருப்பவர்:- உங்கள் அன்புக்கும் பண்புக்கும் பாத்திரமான புலாலியூர்ப் பூசானந்தா அவர்கள்[மருவாதை:)]
<><><><><><><><><><><><>_()_<><><><><><><><><><><>

மெயில் இணைப்பு:
இதுதான் கீழே கொமெண்ட்டில் நாங்க பேசியிருக்கும், நெல்லைத்தமிழன் சொன்ன பெரீய வாழைப்பழங்கள்... இதை அனுப்பியவர்:) எனக்கு தலைப்புக் கொடுத்திருந்தார்   “நெ த உ அ சொ”    என:))  இதில ஏதாவது உங்களுக்குப் புரியுதோ?:)) ஹா ஹா ஹா மீக்கும் பிரியல்லே:)) , ஆனா இப்போ கேட்டுப் புரிஞ்சிட்டேன்:), நீங்க கேட்டால் புரிய வைப்பேன்:))) ஹா ஹா ஹா

_()_ நன்றி நன்றி _()_

Monday, 5 June 2017

அதிரா வீட்டில் புய்ப்பம்:)

வாங்கோ வாங்கோ.. அதிரா வீட்டுப் பூங்காவைச் சுத்திப் பார்க்கலாம் வாங்கோ... எனக்கொண்ணும் தரவேண்டாம்.. ச்சும்மா பாருங்கோ:) ஆனா கையில மை வச்சு,  மொய் எழுதாமல் போனால்.. நுளம்பு வந்து காதில கடிக்கும் டொல்லிட்டேன்ன்ன்ன்:)

Tuesday, 22 October 2013

அதிரா வீட்டில்.. 
 இன்னொரு அதிரசம்:) சே..சே.. அதிசயம்:))

ஹா..ஹா..ஹா..ஹா.... வாங்கோ.. வாங்கோ.. அதிரசம்.. சே..சே... அதிசயம் காண வாங்கோ.. முன்பு இதேபோல ஒன்று நிகழ்ந்ததே... அதை மறந்தோர்ர் அல்லது படிக்காதோர் ஒரு தடவை.. அதிரா வீட்டு ஜன்னலுக்கு வாங்கோ... போய்ப் படிக்காட்டில், இரவைக்குக் கனவு கண்டு, கட்டிலால விழுவீங்க:) அதுக்கு மீ பொறுப்பல்ல இப்பவே சொல்லிட்டேன்ன்ன்ன்:)).

ஒரு சூரியகாந்தியின் கதை 

சரி இது நடந்தது போன வருட ஆரம்பம் என நினைக்கிறேன்.. ஒவ்வொரு அதிசயத்துக்கும் காரணம் எங்கட அம்மாதான்:).. போன தடவை அம்மா வந்து நின்ற நேரம், எங்கட வீட்டு ஜன்னலில் நான் ஏதோ ஒரு செடி, சாடியில் வச்சிருந்தேன். சில நாட்களில் செடி பட்டுவிட்டது, ஆனா அந்த சாடி மண்ணில், சில புல் பூண்டுகளோடு, ஒரு குட்டி மரமும் முளைத்திருந்தது.

அப்போ அந்தக் குட்டி மரத்தைப் பார்த்து, அம்மா சொன்னா, “அதிரா இது ஏதோ தேசி மரம்போல தெரியுது, பிடுங்கி எறிஞ்சிடாதே, வளர விடு பார்ப்போம்” என.

அவ இங்கு நிற்கும்வரை நான் அதைக் கவனிப்பதில்லை. அம்மாதான், ஏனைய பூண்டுகளைப் பிடுங்கி விட்டு, இதை மட்டும் பத்திரப்படுத்தி, தண்ணி ஊத்தி வந்தா.. அதுவும் கிசுகிசுவென.. இலை வச்சு வளர்ந்துது.

பின்னர் அம்மா அவட ஊருக்குப் போயிட்டா. ஆனா போனதிலிருந்து, டெய்லி ஃபோன் பண்ணும்போது, அம்மரத்தையும் விசாரிக்கத் தவறுவதில்லை. போன கிழமைகூடக் கேட்டா, இப்போ எப்படியிருக்கென. கிடுகிடுவென நிறைய இலைகள் வச்சு, முட்களும் வந்திருக்குது என்றேன்.

 “ஓ அது அந்த யெலோ லெமனாகத்தான் இருக்கோணும், அதன் விதையை நான் சும்மா அதில் போட்டதாக நினைவு” என்றா. நான் சொன்னேன்,  “இருக்காதே அம்மா.. இது லைம் ஆகத்தான் இருக்கும், நான் தான் மஞ்சள் லெமன் வாங்குவதில்லையே” என்றேன்.  “இல்ல, நீ ஒரு தடவை வாங்கியதாக நினைவு” என்றா:).. ஹா..ஹா..ஹா.. சரி காய்க்கட்டும் பார்ப்போம் என விட்டிருக்கு.

இதுக்கு..தாவர எக்ஸ்பேர்ர்ட்ட் எல்லோரும் என்ன சொல்லப் போறீங்க?:)

ஒருவேளை குட்டி ஒரேஞ் ஆக இருக்குமோ?:)..அதுக்கு, பெரிய சாடி மாத்து, மண் போட்டு வை என பெரும் ஆரவாரம்.. விரைவில பெரிய சாடிக்கு இடம் மாற்ற இருக்கிறேன்.
======================__()__======================

இதுதான் நான் கூறிய, எங்களிடம் இருக்கும் ஐந்தூரியம் ..இமா...
====================================================

ஆவ்வ்வ்வ் எங்கட வீட்டு ”மின்ட்” அறுவடை இது.. மகியை நம்பி:) அப்படியே அடியோடு:), ஒவ்வொரு கிணுக்காக வெட்டி எடுத்துட்டேன்ன்ன்ன்:)).. மரம் பட்டிட்டால்ல்ல்.. நேரே அமெரிக்காதான் வருவேன்:))

இது முதலாவது ஆறுவடை.. சே..சே.. டங்கு ஸ்லிப்பாச்ச்ச்:)) அறுவடை:)
இது ரெண்டாவது அறுவடை:.. இன்னும் ஒறுவடை:) செய்யலாம்ம்:) பின்பு அடுத்த வறு:)டம்தான்ன்:))

ஊசி இணைப்பு:
எங்கிட்டயேவா?:).. ஹையோ இம்முறை பதிவு முழுவதும் இமாறீச்சரின் கதையே அடிபடுதே:). இமா சொன்னா, இங்கத்தைய சூப்பர் மார்கட்டுகளில் குட்டிக் குட்டிப் போத்தல்களில் “மணித்தக்காழி” வத்தல் கிடைக்குது என. நானும் சரி பார்க்கலாமே என தேடினேன்.. இவர் கிடைத்தார், ஆனா இது ஒன்றுக்குமே போதாதே.. மூக்குப் பொடிபோல இருக்கே:)... ஆனா இதுதான் அதா:)??.

பின் குறிப்பு: சந்தோசம் பொயிங்குதே:) என வாங்கிட்டு வந்து.. கூகிளில் தேடினேன்ன்.. இது “அது” இல்லையாம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
=========================================================================
சரி சரி இத்தோடு பதிவை நிறுத்திடலாம் என ஓசிக்கிறேன்ன்:) இதுக்கு மேல எழுதினால்ல் உங்கட எல்லோரின்:)வயசுக்கும்:) மயக்கம்:) வந்திடும்.
=========================================================================

பின் செருவல்:)
பார்த்தீங்களோ இவர் தெரியும்தானே என்னோட(bro..) புரோ:) வும்..அதாவது குயின் அம்மம்மாட மூத்த பேரனும்.. ஆத்துக்காரங்களும்:).. அவங்க வெடிங்குக்கு இதில பிஸ்கட் வந்துது வாங்கிச் சாப்பிட்டோம்ம்ம்...

அது செமிக்க முதல்.. எனக்கு பெறாமகன் பிறந்திட்டார்ர்:)) அவருக்கும் பிஸ்கட் வித்தவை.. நாங்க வாங்கிச் சாப்பிட்டோம்ம்.. மொத்தத்தில சாப்பிடும் குடும்பமா இருக்கே:) என தப்புக் கணக்குப் போடாதீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது சேவை மனப்பாங்காக்கும்:))
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ 
இறைவன் மனிதனுக்கு நிர்ணயித்த வேகத்தில், ஏறுகின்ற வேகத்தை விட, இறங்குகின்ற வேகம்தான் அதிகம். விதையைப் பார்க்கும்போது, கண்களுக்கு மரம் தெரியாது, விதை மரமான பின் தான், கண்ணுக்கு தெரிகிறது. வினை அறுவடை செய்யப்பட்ட பின்புதான் அனுபவம் கிடைக்கிறது. “ஏன் நடந்தது?”, “நமக்கா இது நடந்தது?” என எண்ணிப் பார்க்கும்போது, ஏதோ ஒன்று நடந்திருக்கும்.
இவ் அளப்பரிய அரிய சிந்தனையை.. உங்களுக்காக வேர்வை சிந்தி:), படித்து:) கண்ணதாசன் அங்கிளிடமிருந்து சுட்டு வந்தவர்... உங்கள் பெருமதிப்பிற்குரிய: புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..:)
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^

Friday, 4 October 2013

ச்சும்மா.. சும்மா முளைக்குதாமே:)

என்னது  “ச்சும்மா சும்மா” முளைக்குதா?:) அதென்னது எண்டுதானே எல்லோரும் மூச்சிறைக்க:) ஓடிவாறீங்க:).. வெயிட் வெயிட் முதல்ல கன்றோல் பண்ணுங்க:) உங்கட மூச்சுக்குச் சொன்னேன்:)..

 “இது மணத்தக்காழியாக இருக்குமோ”?:)
கொஞ்சம் “சும்மா” இதில இருங்கோ, என் சொந்தக் கதை:) யோகக் கதை:) சொல்றன் கேளுங்கோ:)..

நானும் எவ்ளோ நாளைக்குத்தான் நல்லபிள்ளையாகவே நடிப்பது?:) இல்ல ”சும்மா” சொல்லுங்கோ?:) எவ்ளோ நாளைக்குத்தான்?:).. அதனாலதான் இன்று பொயிங்கிட்டேன்ன்ன்:)).. எரிமலை எப்படிப் பொறுக்கும்?:) .ம்ம்ம்ம்ம்ம்ம்:).

சரி பொயிண்ட்டுக்கு வருவம்:).. இலங்கையில் இருந்த காலத்தில நான் சாப்பிடாத இலைவகை இல்லை எனலாம்...
1)பசளிக்கீரை, புளிக்கீரை, தட்டைக் கீரை, குப்பைக் கீரை,அறக்கீரை, மரக்கீரை, மிகுதி நினைவிலில்லை.

2)அடுத்து, இலைவகையில்.... குறிஞ்சா, முசுட்டை,அகத்தி இலை, மொசுமொசுக்கை இலை, காணாந்தி இலை, முள்முருக்கம் இலை, முருங்கை இலை,பாஷன்ஃபுரூட் இலை, வாதநாராணி இலை, லெச்சகட்டை இலை,தூதுவளை இலை,செம்பரத்தம் இலைகூட நல்லதெனச் சொல்லி சுண்டிய நினைவு:)...

3)அடுத்து பொன்னாங்காணி, வல்லாரை, பீற்ரூட் இலை,
4)வெளிநாட்டுக்கு வந்தபின்னர்...
கரட் இலை(இப்போ கண்டுபிடிச்சது:)), மேத்தி இலை, மல்லி இலை, கடுகு இலை...

இன்னும் இருக்கலாம், நினைவில் இப்போ இருப்பது இவ்ளோதான்ன்... இத்தனையும் சாப்பிட்டிருக்கிறேன், ஆனா..ஆனா.. இந்த மணத்தக்காழி என்பது... பெயரே மீ கேள்விப்படவில்லை... 2008 ம் ஆண்டு அறுசுவைக்குள் நுழைந்தபோதுதான், முதன் முதலில் இப்பெயர் கேட்டு, இப்படியும் இருக்கோ என வியந்துபோய்.. வேர்த்திருந்தேன்:)).. சரி அதுவும் போகட்டும்...

அது முடிந்து போன வருடம்.. ஆசியா பக்கம் என நினைக்கிறேன்,வோக் போனபோது,“ச்சும்மா சும்மா” மணத்தக்காளி நிறைய முளைத்திருப்பதைக் கண்டு, ஆய்ந்து வந்து சமைத்து, குறிப்புப் போட்டிருந்தா... சரி இருக்கட்டும் என விட்டிருந்தேன்ன்..:))

அடுத்து இமா பக்கத்திலே... குருவி போட்ட எச்சத்தாலோ என்னவோ. “ச்சும்மா சும்மா” முளைச்சுதே மணத்தக்காளி என படம் போட்டு.. பழமும் சாப்பிட்டேன் எனக் கூறியிருந்தா...:)) அதையும் பார்த்திட்டு:), என் கிட்னி:), என் மனதுக்கு சொல்லியது “இங்க பார், நீ இருக்கும் நாடு அப்படி:), முழு வெள்ளைகள் இருக்குமிடம், அதனால கன்றோல் பண்ணிக்கொண்டு இரு என”:).. சரி என மனமும், கேட்டுவிட்டுப் பேசாமல் இருந்துது:).

கொஞ்ச நாளால், சமீபத்தில் பார்க்கிறேன்ன்ன்..  “எங்க வீட்டு தொட்டியில் “ச்சும்மா சும்மா” ஒரு மணத்தக்காளி முளைச்சு.. இங்கின பாருங்கோ பழங்களை.. எவ்ளோதான் நானும் சாப்பிடுவது.. பிரிஜ்ஜிலும் வச்சு, இப்போ குழம்பு செய்தோம்” என குறிப்பு போட்டிருந்தா.. மஞ்சள்பூ மகி:).. இதைக் கேட்டதும்.. என் மனம் கொன்றோலை இழந்து:).. பொயிங்க:) ஆயத்தமானது:).. கிட்னி சொல்லிச்சுது:)..  “அடங்கு அடங்கு... அடுத்த தடவை கனடா போகும்போது, நிட்சயம் வாங்கிப் பார்த்திடலாம்” என:)..  சரி அதுவும் சரிதான் என.. ஒருமாதிரி, மோர் எல்லாம் குடிச்சு:).. நோர்மலுக்கு வந்த வேளை:))..


===============================INTERVAL================================
இதேபோலவே, முன்பும் நான் பொயிங்கிய:) ஒரு பதிவு:).. 

அன்று வாங்கிய ஒரியினல் “அகரகர்” இன்றும் செய்யாமல், என் கிச்சின் றோயரிலே, அதைத் திறக்கும் போதெல்லாம் “என்னை எப்போ பிள்ளை..... நீ செய்யப்ப்ப்ப்ப்போறேஏஏஏஏஏ?:) எனக் கேட்குது:))
=========================முடிஞ்சு போச்ச்ச்ச்:)============================

சரி, அடுத்து போனகிழமை எனக்கொரு படம் வந்திச்சே..:))..
 “அதீஸ்.. இது என்ன மரம்?:) கண்டு பிடிங்க பார்க்கலாம்”?:))என.. நான் கொஞ்சமும் டவுட்டே இல்லாமல்:).. “ஓ நேக்குத் தெரியுமே.. இது கத்தரி”:) எண்டேன்ன்ன்... உடனே பதில் வந்திச்சா.. “இல்ல இல்ல இது மணத்தக்காளி”:) நான் நடல்ல:), எங்க வீட்டு கார்டினில் “ச்சும்மா சும்மா”:) முளைச்சிருந்துது.. நான் கன்ஃபோமா கண்டு பிடிச்சேன்ன் இது மணத்தக்காளிதானாம்:))” என.. கோல்ட் பிஸ்ஸு அஞ்சு சொன்னாவா...:))...

இதுக்கு மேலும்.. ஒரு சுவீட் 16 பிள்ளை:) ச்சும்மா இருக்குமோ?:) நீங்களே சொல்லுங்கோ?:) மீ பொயிங்கிட்டேன்ன்:)... இன்று காலை லேசான மழை... வானம் கறுத்திருந்தது, பெரிதாக குளிரவில்லை.... இப்படிப் பொழுதிலே.. பூஸ் ஒன்று புறப்பட்டது “ச்சும்மா வோக்” போகலாமே என:))

என் கணவர், என் வலது கையைப் புடிச்சு இழுத்துச் சொன்னார்:) “அதிரா.. நீங்க ஓல்ரெடி சுவீட் 16 தானே:) இந்த மழை குளிருக்குள் வோக் வாணாமே:).. இன்னும் எதுக்கு மெலியோணும்:) ஏதும் சுகயீனமாகிடப்போகுது” என:).. மீ சொன்னேன் “இஞ்ச பாருங்கோ.. நான் ஒரு இலட்சியத்துக்காகப் போகிறேன்ன்:)) என்னை வாழ்த்தி அனுப்பி வையுங்கோ”:) என சொல்லிப்போட்டு:) “ச்சும்மா“ தான் போனேன்ன்.. ஆத்தங்கரைக்கு வோக் பண்ண....

நான் என்பாட்டிலே நடந்து போனனா:).. அங்கின ஒரு குட்டிமரம்.. பார்க்க அஞ்சுவின் மணத்தக்காளி போலவே இருந்துது:).. சே..சே.. அப்படி இருக்காதே..:) என எண்ணிக்கொண்டு தொடர்ந்து நடந்தனா.. குட்டி குட்டியா நிறைய மரங்கள்.. நிறையப் பூ கொஞ்சம் காய்களோடு... உடனே பாதையை விட்டு, மணலில் இறங்கிட்டேன்ன்ன்.. படம் எடுக்கத்தான்ன்ன்:):)..

ஒரு தக்காளி மரத்தை ஆரும் கிட்ட கொண்டுவந்தால், கண்ணை மூடியபடி அதன் வாசத்தை வைத்தே சொல்ல முடியுமெல்லோ இது என்ன மரம் என.... அப்படித்தான், இதனிலிருந்தும் ஒரே தக்காளி வாசம்.. கமகமத்தது...

இப்போ மணத்தக்காளி ஸ்பெஷலிஸ்ட்.. இமா றீச்சரும்.. மஞ்சள் பூ மகியும்... இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?:).. தெரிந்தவர் எல்லோரும் வந்து என் டவுட்டைக் கிளியர் பண்ணிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்.. நான் எடுத்ததும் இப்போ சமைக்க மாட்டேன்ன்../ இல்ல சமைக்கலாமோ? ஆனா, கன்ஃபோம் பண்ணினா,  கன்றுகள் பிடுங்கி வந்து எங்கட கார்டினில் நடலாம் எனும் ஓசனை:).. 


 காய்கள் கொஞ்சம் பெரிதாக இருக்கே....
 வேறு தாவரத்தோடு பின்னிப் பிணைந்து முளைச்சிருக்கினம்...



பூ தெரியுதெல்லோ?

குண்டூசி:) இணைப்பு:
இம்முறைக் கோடைகாலம் வழமையை விட நல்ல வெயிலாக இருந்ததாம், அதன் காரணத்தால் எங்கு பார்க்கிலும் ஒரே பழங்களாக பழுத்துக் கிடக்கு.. அதிகம், பிளாக்பெரீஸ், கிரான்பெரீஸ்..  இன்றும் கொஞ்சம் பிளாக்பெரீஸ் புடுங்கி வந்தனே...


இதேபோல ஆற்றங்கரையில் பிடுங்கி, அதில் செய்த கிரான்பெரி ஜாம், என் ஃபிரெண்ட் ஒருவர் தந்தா... சூப்பராக இருக்கு...

ஊசி இணைப்பு:
இது எங்கட வீட்டுக்கு அருகாமையில்... ஆப்பிள் பழங்கள் பழுத்து சொரிந்து விழுகுது.. ஆரும் தேடுவதில்லை.. ரோட்டோரம் நிற்கும் மரத்தில் மட்டும், நான் எட்டிப் பிடுங்கி வந்து உப்போடு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கு... இங்குள்ளவர்கள் கடையில் பக் பண்ணி வருவதை மட்டுமே வாங்கி உண்கின்றனர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

============================================================
கணவன் - மனைவி.. குடும்ப உறவில்...உடலைத் தாண்டி, அதனுள் அடங்கியிருக்கும் ஆன்மா குளிர்ச்சியாக இருக்க வேண்டும், இருவரும் துன்பங்களைப் பங்கு போட்டுக் கொள்பவர்களாக அமைய வேண்டும்,இன்பத்தில் பங்குபெற எவ்வளவோ பேர் கிடைப்பார்கள், தமக்கு வரும் சோதனைகளைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியை உருவாக்குபவர்களே.. அபூர்வமான கணவன், மனைவி...
 இவ் அரிய தத்துவத்தை.. கண்ணதாசனின் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து... படித்து எடுத்து வந்தவர்.. 
மேன்மைமிகு:) புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)..
============================================================

Sunday, 2 October 2011

எங்கட கார்டினும், மக்கு:) பையும்:)

முதல்ல வாங்கோ வெங்காயம் பிடுங்குவோம்


இனி உருளைக்கிழங்கு...


இம்முறை பெரிசா ஒன்றும் செய்யவில்லை:(.
இது கிச்சின் வாசலில், சாடிகளில் நட்ட, ரன பீன்ஸும், ஸ்னோ பீஸும்..








இது கபேஜ் இலைகள்..




இது கார்டினில் பிடுங்கிய கபேஜ் இலையும், பீஸும்..


==================BREAK TIME===================

இது இப்போதான் பார்த்தேன் இன்னொரு வீட்டில காய்த்திருக்கு பிங்ங்ங்ங்ங் கலர்:)) விடமாட்டமில்ல:)) எங்கிட்டயேவா?:))




=====================================================

பின் கார்டினைக் கொஞ்சம் பார்ப்போம்:)).. 
இம்முறை ஏதுமே நடவில்லை, அதனால் வெறிச்சுப்போயிருக்கு:)


இதில தெரிவது பியேர்ஸ் மரம். ஒவ்வொரு வருடமும் ஒழுங்காகப் பூக்கிறார், ஆனால் காய்த்ததில்லை, அதுக்குள் மழையும் வந்து பூக்களைக் கொட்டிவிடும்.

மரத்துக்குப் பின்னால, வடிவா உத்துப் பாருங்கோ, எங்கட மொப்பியின் பிரதர்:)(கடவுளே.. இதில மட்டும் ஆருக்கும் சந்தேகம் வந்திடப்புடா:))) இருக்கிறார்.:), சமர் முழுவதும் வந்து சாப்பிட்டார், இப்போ குளிர் அதிகமாகிவிட்டதால் ஆளைக் காணவில்லை:(.


இது “சமரில” சப்மரின் போகிறபோது, வீட்டில இருந்து எடுத்தது... தெரியுதோ?..


ஓக்கை விஷயத்துக்கு வந்தாச்ச்ச்ச்ச்:)).. இவர்கள்தான் எங்கட மக் பை:)(Mc Pie)... கரிக்குருவிகள்(குருவி அல்ல:)). இவை ஜோடியாகப் பார்த்தால்தான் நல்லது என்பதால்... கஸ்டப்பட்டு ஜோடியாக இருக்கும்போது படம் எடுத்தேன்... வடிவாப் பாருங்கோ.... இண்டைக்கு உங்களுக்கு ஹப்பி டேதான்:)).



குட்டியூண்டு இணைப்பு:
உஸ்ஸ்ஸ்ஸ் நான் என்ன தப்புச் செய்தேன்?:)) படம் படமாப் போட்டது தப்பாஆஆ?:)) ஆரெண்டே தெரியேல்லை..:)) உப்பூடிக் கலைக்கினம்:)), நாம ஆரு? 1500 மீ ஓட்டப்போட்டியில 2வதா வந்தாளாச்சே:)) விட்டிடுவமா? ஓடிப்போய் முருங்ஸ்சில ஏறிட வேண்டியதுதான்:))).