எங்கட வீட்டுக்குள் இப்போ நான் வளர்க்கும் சில குட்டிச் செடிகளை உங்களுக்குக் காட்டப் போகிறேன்.. பார்த்து மகிழ்ந்து சிரியுங்கோ:), இதில் நான் பேச வேண்டியதில்லை:), படம் பேசும்:).
இது வீட்டுக்கு வெளியே.. கோழிக் கொண்டைப்பூ என்போம் ஊரில்:)..
இது முற்றத்தில்.. டெய்சிப்பிள்ளைக்குக் கடிக்குதாம் சொறிகிறா:)
((((((((((((((((((((((((இடைவேளை)))))))))))))))))))))))
நியூஸ் பாருங்கோ.. குயின் அம்மம்மாவைப் பார்க்க ட்றம்ப் அங்கிள் வாறார்:).. அதுக்கு தலைமை தாங்க அதிராதான் வரோணும் என குயின் அம்மம்மா பாதி லெக்கில் நிக்கிறா:)).. நான் என்ன பண்ண முடியும்?:) போகத்தான் போகிறேன்ன்:))
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
ஆவ்வ்வ் யாருக்குப் ஃபலூடா வேணும்:)) என்ன சுசியப்பா:))
++++++++++++++++++++++++++++++++++++++++
==========================
வாவ்வ்வ் இது என் பூசணிப்பக்கோடா, செய்தேன், மிக அருமை எனச் சொல்ல மாட்டேன், நன்றாக இருந்தது, இனிப்புத்தன்மையாக இருந்தது...
கடலைமா, அரிசிமா, உள்ளி, இஞ்சி.. ஆனா இஞ்சி போட்டிடாதீங்கோ.. படத்தில் இருக்குது, ஆனா போட வேண்டாம், சுவை மாறுது. மற்றும்படி வெங்காயம், பச்சை மிளகாய், பூசணியைக் கிரேப் பண்ணி எடுக்கோணும்..
உப்பும் சேர்த்து அனைத்தையும் பிசைந்து.. அழகிய பக்கோடா:))
விரும்பிய சோஸ் உடன் தொட்டூத்...தொட்டுச் சாப்பிடுங்கோ:))
ஊசி இணைப்பு:)
ஹா ஹா ஹா:)
ஊசிக்குறிப்பு
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
இந்தப் பாடல்கள் வெளிவந்த படம் ~வீட்டுக்குள்ளே திருவிழா~.. இது மாமியிடமிருந்து எடுத்து வந்த சிடியில் இருந்துது ஒரு 6,7 வருடங்களின் முன்பு, அப்போ படம் என்ன எனவும் தெரியாது.. அப்போ தொடங்கி யூ ரியூப்பில் தேடினேன் கிடைக்கவில்லை, சமீபத்தில்தான் ஒரு அண்ணா தேடிக் குடுத்தார்.. அது பத்திரமாக இருக்கட்டுமே என இங்கு லிங் இணைக்கிறேன், விரும்பினால் கேட்டுப் பாருங்கோ.. மொத்தமும் நகைச்சுவைப் பாடல்கள்.. ஆனா படம் வெளியாகவில்லைப்போல தெரியுது, வீடியோ நல்லமில்லை, பாடல் மட்டும் கேட்கலாம்.
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
|
Tweet |
|
|||