நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Wednesday, 22 May 2019

நான் செய்த ICE LOLLIES💅

வாங்கோ வாங்கோ... இப்போ வெயில் வெக்கைக்கு உறைப்பு காரம் சேர்த்த உணவை விட, கூலான உணவுகள்தானே நன்றாக இருக்கும், அதனாலதான் அதிரா, உங்களுக்காகவே கஸ்டப்பட்டு:) இஸ்டப்பட்டு இதனைச் செய்தேன்..


ICE LOLLY MOULDS வாங்கி, இப்படி பழங்களை அப்படியே அரைத்து எடுத்து.... இதில் இருப்பது- மாம்பழம், மாதுளம்பழம், வோட்டமெலன்,  அப்பிள் மற்றும் பாலை நன்கு காச்சி சீனி சேர்த்திருக்கிறேன், பழங்களுக்கு எந்த இனிப்பும் சேர்க்கவில்லை.


இப்படி என் விருப்பத்துக்கு பழங்களை மேல் பகுதிக்கு ஒன்று கீழ்ப்பகுதிக்கு ஒன்றெனச் சேர்த்தேன்..இப்படி அனைத்தையும் நிரப்பியபின்,

இப்படி மூடியால மூடி.. பாருங்கோ மூடியில் தடிபோல உள்ளே இறங்குது..

பின்பு அப்படியே தட்டோடு ஃபிரீசரில் வைத்து விட்டால் 8-10 மணித்தியாலங்களில் ஐஸ் லொலி ரெடியாகும்.... அப்படியே ஃபிரீசரில் இருக்கட்டும் அதுக்குள் ஓடிவாங்கோ கோமதி அக்கா வீட்டுக்குப் போய் ஒரு ஸ்ரோங் ரீ குடிச்சிட்டு ஓடி வருவோம்ம்:))
===================இடைவேளை===================
கோமதி அக்கா நேற்றைய போஸ்ட்டில், மணிப்பிளாண்ட் படம் போட்டிருந்தா, எங்களிடமும் இருக்குது படம் போடுகிறேன் என்றேன்.... இதில் மணி-பணம் எனப் பெயர் வருவதால்:).. எங்களுக்கும் ஜன்னலைப் பிரிச்சுக்கொண்டு பணம் கொட்டோ கொட்டெனக் கொட்டுது:)).. உங்களிடம் இல்லை எனில் நீங்களும் வளருங்கோ:)) பணம் சீலிங்கைப் பிரிச்சாவது கொட்டும்:))..
இதுக்கு வயசு 2,3 மாதமோ எனக் கேட்டிடாதீங்கோ:) இதன் வயசு சுமார் 4,5 வருடங்கள்.. இரவில் எடுத்தமையால் கலர் எல்லாம் மாறிக் காட்டுது:))
==================================================
ஃபிரீசரால் எடுத்தாச்சு..

மெதுவாக கையிலெடுத்து மூடியைத் தட்டித் திறந்தால் கவர் கழண்டு வரும்... அப்படியே குடிக்க வேண்டியதுதான்..

இதுதான் குல்பி:)).. கவிதை மழையை, நித்திரைத்தூக்கத்திலும் தவறாமல் எழுதி அனுப்பும் கவிஞர், மேஜர்.. சீராளனுக்காக இச் செல்ஃபி ஹையோ இல்ல குல்ஃபி:)
பழங்களுக்கு இனிப்புச் சேர்த்தால் சுவை இன்னும் அதிகமாகும்..
பாருங்கோ இதில ஃபினிசிங் ரச்/டச்சும்:) நல்லாவே வந்திருக்கு:)... ((நெல்லைத்தமிழன் இம்முறை இதை எல்லாம் கவனிக்க மாட்டாரே கர்ர்ர்ர்:))

குருவே என்ன இது.. என் ஐஸ் லொலி குடிச்சு இப்பூடி ஆச்சே உங்களுக்கு:))

ஊசிக்குறிப்பு:


ஊசி இணைப்பு:
 “எல்லோருக்கும் முன்னுக்கு வர ஆசைதான், ஆனால் காலம் நம்மைப் பின்னுக்குத் தள்ளாமல் இருக்க வேண்டுமே”- கண்ணதாசன் அங்கிள்
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

147 comments :

 1. வெயிலுக்கு ஏற்ற ஐஸ் நன்றாக இருக்கிறது எடுத்து சாப்பிடத்தான் இயலவில்லை.

  ஊசிஇணைப்பு
  என் மனதை காயப்படுத்தி கவர்ந்தது அருமை.
  வாழ்த்துகள் அதிரா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. முதலாவதாக வந்திருக்கும் உங்களுக்கு.. எந்த லொறி சே..சே.. லொலி பிடிக்குதோ அதை எடுத்துக்கோங்க:)).. மிக்க நன்றி.

   ஊசி இணைப்பு. அனுபவம்தானே வாழ்க்கை:(.

   Delete
 2. வா...வ் சூப்பரா இருக்கே ஐஸ்லொலி. பினிசிங் ம் நல்லா இருக்கு. நான் மாங்கோ வில செய்ய இருக்கிறன்.
  ஊசி இணைப்பு சூப்ப்ப்ப்ப்ப்பர். உண்மைதான்.
  பிறகு வாறேன். மிகுதிக்கு....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ.. இம்முறை நல்லவேளை என் புளொக் வழக்கப்படி ரெண்டாவதாக வருபவருக்கு ஆயாவைக் கூட்டிப்போகச் சொல்லுவேன் எல்லோ:)).. ஆனா போன தடவை ஆயாவை அஞ்சுவுடன் அனுப்பி விட்டேன்:)).. அதனால இப்போது இருக்கும் ஆயாவுக்கு வயசு 18:)).. அவவை அனுப்பும் ஐடியா இல்லை:)) ஹா ஹா ஹா தப்பிட்டீங்க:)).

   //பினிசிங் ம் நல்லா இருக்கு//

   ஆங்ங்ங்ங் உரக்கச் சொல்லுங்கோ:) நெல்லைத்தமிழனின் காதில கேய்க்கட்டும்:)).. பயண ரெயின் சத்தத்தில இதெல்லாம் அவருக்கு கேய்க்காதே கர்ர்:))

   Delete
 3. பணம் சீலிங்கைப் பிரிச்சாவது கொட்டும்:))..// haa..haa..haa..ஆமா கொட்டோ கொட்டென கொட்டும் பணம். (எனக்கு இதை வாசிக்க காதலிக்க நேரமில்லை படம் பாலையா ,நாகேஷ் ஞாப்கம் வந்தது. பலமுறை திரும்ப திரும்ப பார்க்கும் படம்)
  (அலுவல் ஒன்று இருந்தது அதுதான் பிறகு வாறேன் என்றேன் ஆனா அது இல்லையாகிவிட்டது. உங்களுக்கு கொமண்ட் உடனே போட்டிடோனும். இல்லையென்றா கஷ்டம்.ஹா..ஹா..ஹா)
  உதிரிபூக்கள் சூப்பர், எனக்கு பிடித்த படம். பாடல்களும் அருமை.
  மணிப்ளாண்ட் படத்தில் எதோ போட்டோ இருக்கா. ரோஜாவால் பரைத்திருக்கிறீங்களா?
  குருவுக்கே இந்த நிலமை என்றால் நாங்க என்ன பாடுபடுவம்... சரி மெனக்கெட்டு செய்து படமெல்லாம் அழகா போட்டிருக்கிறீங்க. அச்சு வாங்கிவிட்டு செய்து படம் போடுவம். இங்கன இருக்கும் குளிருக்கு நல்லாஆஆ இருக்கும்..ஆவ்வ்வ்வ். டெய்ஸி குடிச்சாவோ..
  ஊசிஇணைப்பு உண்மைதான். கலர்புல்லா இருக்கு ஐஸ்லொலி...

  ReplyDelete
  Replies
  1. ///(அலுவல் ஒன்று இருந்தது அதுதான் பிறகு வாறேன் என்றேன் ஆனா அது இல்லையாகிவிட்டது. //

   பார்த்தீங்களோ .. வைரவர் எப்பவும் அதிரா பக்கம்தேன்ன்:))..

   //உதிரிபூக்கள் சூப்பர், எனக்கு பிடித்த படம்.//
   இதனை ரீவியில் அடிக்கடி போட்டார்கள்.. மீயும் அதிகம் பார்த்த மூவி எனில்.. இதுதான். கவலையான படம்:(.

   //மணிப்ளாண்ட் படத்தில் எதோ போட்டோ இருக்கா.//
   புரியல்லியே.. ரோஜாப்படம் பிரேம் பண்ணி கொழுவியிருக்கு.. அதன் கீழே லைட் இருக்கு அந்த லைட் இருக்கும் வளைவுக் கம்பியில் மணிப்பிளாண்ட் சாடியைத்தொங்க விட்டிருக்கிறேன்ன்.. ஃபிளாஸ் போட்டு எடுத்தமையால் நிழலும் கூடவே தெரியுது:)).

   //டெய்ஸி குடிச்சாவோ..///
   எங்கட ஃபிரிஜ்ஜுக்கு முன்னால பிளேட் இருக்கு.. அந்த பிளேட் இல் மட்டும் ஏறி இருக்க அனுமதி உண்டு டெய்சிப்பிள்ளைக்கு.. அப்போ ஃபிரிஜ்ஜை எப்போ திறந்தாலும் அந்தப் பிளேட்டிலிருந்து எட்டிப் பார்ப்பா.. எடுக்கும் பொருட்களை எல்லாம் மணக்கக் குடுப்பேன்.. மணந்து போஒட்டுப் பேசாமல் இருப்பா..

   அவவுக்காகவே ஹாம் வாங்கி வச்சிருப்போம்.. அதை மணந்தால் உடனே சாப்பிடக் கேட்பா:)) அது மட்டும்தான் பிடிக்கும் அல்லது கே எஃப் சி யும் பிடிக்கும் அவவுக்கு:)).

   லொலி..செய்வதெனில் கொஞ்சம் சீனி சேர்த்து செய்தால் சுவை அதிகமாகும் அம்முலு.

   பழத்தை சும்மா சாப்பிடும்போது இனிப்பாக இருக்குது, ஆனா அரைத்தபின் இனிபு குறைவானதுபோல தெரியுது.

   மிக்க நன்றிகள் அம்முலு.

   Delete
 4. கோடை வெயிலுக்கு ஏற்ற பதிவு.
  கண்களுக்கும் குளிர்ச்சி.
  ருசித்தால் வயிறும் மனமும் குளிர்ந்து போகும் அதிரா.


  //பின்பு அப்படியே தட்டோடு ஃபிரீசரில் வைத்து விட்டால் 8-10 மணித்தியாலங்களில் ஐஸ் லொலி ரெடியாகும்.... அப்படியே ஃபிரீசரில் இருக்கட்டும் அதுக்குள் ஓடிவாங்கோ கோமதி அக்கா வீட்டுக்குப் போய் ஒரு ஸ்ரோங் ரீ குடிச்சிட்டு ஓடி வருவோம்ம்:))//

  வாங்க வாங்க டீ குடிக்க, காத்து இருக்கிறேன்.
  எனக்கும் பறந்து வந்து அதிரா பழக்கலவையில் செய்த ஜஸ் சாப்பிட ஆசை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

   //கோடை வெயிலுக்கு ஏற்ற பதிவு.//

   போஸ்ட் போடுவதில்லை எனத்தான் நினைச்சிருந்தேன், ஆனா இப்படி ஏதும் செய்து பார்த்ததும் ஆசை வந்திடுது.. அதுதான் உடனேயே போட்டு விட்டேன். உங்களுக்கு அங்கு நல்ல நொங்கு கிடைக்குமே கோமதி அக்கா.. நொங்கிலும் இப்படி செய்து குடிச்சால் சூப்பராக இருக்கும். நன்றி.

   Delete
  2. நொங்கில் ஜூஸ் போட்டு குடிப்போம்.
   கிடைக்கிறது ஆனால் நாங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெகு தூரத்தில் வாங்க போக கஷ்டம்.

   Delete
  3. தமிழ் நாட்டிலதான் ரோட்டோரமெல்லாம் நொங்கு வைத்து விற்கிறார்கள் ரீவியில் பார்ப்போம்.. ஆனா உண்மைதான், எல்லா ஊர்களிலும் கிடைக்காதே.

   Delete
  4. அதிரா.. இங்கு சென்னையில் வீட்டருகில், 10 நுங்கு (சுளை) 50-60 ரூபாய்க்கு கிடைக்கிறது. நான் பொதுவா 20 வாங்குவேன், தோலை மெதுவாக எடுத்து, ரொம்ப இளசாக இருப்பதை மனைவி/பெண்ணுக்குக் கொடுத்துவிட்டு, கடினமாக இருப்பவைகளை (அப்படிச் சொல்லியே வாங்குவேன்) நான் சாப்பிடுவேன். எனக்கு நுங்கு அவ்வளவு இஷ்டம்.

   நேற்றைக்கு முந்தைய நாள் குற்றாலத்தில் ஓலையில் அழகாகச் செய்து அதில் 12 நுங்கு வைத்துத் தந்தார் (50 ரூபாய்க்கு). அவ்வளவு ஃப்ரெஷ்ஷா குளிர்ச்சியா இளசா இதுவரை நான் சாப்பிடலை. தோல் எடுக்காமல் அப்படியே சாப்பிட்டேன்.

   Delete
  5. ஆவ்வ்வ்வ் அங்கு அப்படிக் கிடைக்கும்தான்.. அதன் சுவையே சுவை. இங்கு 2 வருடம் முன்பு தமிழ்க் கடையில் கிடைச்சது... ஆனா அது நொங்கல்ல. முத்தல் தேங்காய்போல இருந்துது.. நான் மட்டும் சாப்பிட்டேன்ன்.. எனக்கும் அதிகம் வழுக்கல் இல்லாததும்.. ஓவர் முத்தல் இல்லாததுமான நடுப்பதம்தான் பிடிக்கும்.

   ஊரில் வீட்டில் மரமே இருந்தது... மலிவாகவும் கிடைக்குதே உங்களுக்கு.

   Delete
 5. இதுக்கு வயசு 2,3 மாதமோ எனக் கேட்டிடாதீங்கோ:) இதன் வயசு சுமார் 4,5 வருடங்கள்.. இரவில் எடுத்தமையால் கலர் எல்லாம் மாறிக் காட்டுது:))//

  நாலு, ஐந்து வருடம் என்றால் கட் செய்து விடுவீர்களோ! அல்லது அது உண்மையான செடி இல்லையா?
  வெள்ளை ரோஜா அழகாய் இருக்கிறது .

  ReplyDelete
  Replies
  1. நான் எப்பவும் கட் பண்ணியதில்லை கோமதி அக்கா.. பெரிசாக வளருறா இல்லையே கர்:)).. ஜாடி குட்டியாக இருக்கலாம் இல்லை இங்கத்தைய ஓவர் குளிராக இருக்கலாம், கீழே ஹீட்டர் இருகு.. அதனாலதான் இந்தளாவுக்கு உசாராக இருக்கு இலைகள்.

   இடையில் ஒரு தடவை இரு கெவர்போல வளர்ந்து.. அதில் ஒன்று பட்டு.. இது மற்றைய கெவர் மட்டும் வளருது.

   வெள்ளை ரோஜா.. ஹா ஹா ஹா அது பிரேமுக்குள்:))

   Delete
 6. குரு ஆர்வகோளாறில் ICE LOLLY MOLDS சேர்த்து விழிங்கி விட்டதோ அதுதான் வாயை திறக்க முடியாமல் இருக்கா?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா குளிரில தொண்டை இறுகியும் இருக்கலாம்:)).. ஆண்டவா என்னாலதான் எனும் பழி வந்திடக்கூடாது ஆஞ்சனேயா:)).

   Delete
 7. ஊசிக்குறிப்பு கேட்கும் கேள்வி சரிதான்.

  நலம் விசாரிக்க வேண்டாமா?
  ஊசி இணைப்பு சொல்வது சரிதான்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அதுதானே.. ஏதோ எல்லோரும் எப்பவும் நலமாகவே இருப்பதைப்போல நினைச்சு அனுப்புறாங்க..:)

   டிடி, கீதாவிடம் கேட்டது நினைவுக்கு வந்துது ஹா ஹா ஹா, கவலையான போஸ்ட்டுக்கு வந்து.. மகிழ்வான காலை வணக்கம் எனச் சொல்லிட்டா கீதா:)) ஹா ஹா ஹா நானும் 1ஸ்ட்டா வருவதெனில் அப்பூடிச் சொல்லி திட்டு வாங்கியிருப்பேன்ன் அன்று கடவுள் என்னைக் காப்பாத்திப் போட்டார்ர்:)) ஹா ஹா ஹா.

   Delete
 8. ஊசிக்குறிப்பினை மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 9. உதிரிப்பூக்கள் பாடல் ஓரளவுக்குப் பிடித்த பாடல் எனினும் தேடிக்கேட்பதில்லை! என்ன ஆனாலும் இளையராஜா! உதிரிப்பூக்கள் என்று அந்தப் படத்துக்கு பெயர் வைத்ததே இளையராஜாதானாம். சமீபத்தில் படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...

   எனக்கும் அதில் அத்தனை பாடலும் பிடிக்கும்.. தேடி எல்லாம் கேட்பதில்லை நானும், ஆனா ரேடியோவில் போகும்...

   //அந்தப் படத்துக்கு பெயர் வைத்ததே இளையராஜாதானாம்.//
   ஓ...

   அதில் ஒரு நகைச்சுவைப்பாடல்[கவலை கலந்த] மிகவும் பிடிக்கும்.. ஒரு பாட்டி பாடுவா...

   https://www.youtube.com/watch?v=13a07AiDzwk

   Delete
  2. இளையராஜா இசைல, எஸ்.ஜானகி அம்மா இதுமாதிரி வித்தியாசமான குரல்கள்ல பல பாடல்கள் பாடியிருக்காங்க. எங்க பள்ளிக்கால ஹாஸ்டல் நினைவு வந்துவிட்டது....

   Delete
 10. ஐஸ்க்ரீம் செய்யும் விபரீத முயற்சி எல்லாம் செய்வதே இல்லை. ஃபிரிஜ் வாங்கிய மிக ஆரம்ப காலங்களில் ஓரிரு முறை தோல்விகரமாக முயற்சித்ததுண்டு!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா .. உண்மைதான் நானும் செய்வதில்லை.. இது ஒரு விபரீத ஆசை...

   இங்குதான் விதம் விதமாக, அதுவும் மலிவாக கிடைக்குதே.. பின்பு எதுக்கு கஸ்டப்படோணும்:))

   Delete
 11. கோமதி அக்கா வீட்டுக்குப்போனேன். அவங்க பால்கனில செடியை பார்த்துப் பேசி, போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தாங்க... ஜன்னல் வழியா அப்படியே ஒரு குருவியையும் போட்டோ புடிச்சுக்கிட்டிருந்தாங்க... சரி, தொந்தரவு செய்யவேண்டாம்னு வந்துட்டேன்!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஹையோ அவட கையால ஒரு கப் ரீ குடிக்காம வந்திட்டீங்களே ஸ்ரீராம்:).. கவலைப்படப்போறா...

   அப்போ அடுத்தது அந்தக் குருவிப் போஸ்ட்டா போடப்போறா கோமதி அக்கா:))..

   Delete
  2. ஆஹா ஸ்ரீராம் !
   குருவியை போட்டோ எடுத்துக் கொண்டு இருக்கும் போதா வந்தீர்கள்?
   தெரியாமல் போச்சே !

   Delete
  3. அக்காவை நன்கு அறிந்து வைத்து இருக்கிறா தங்கை.
   குருவிகள் படமும் நிறைய சேர்ந்து விட்டது போடலாம் தான்.

   Delete
  4. ஹையோ ஸ்ரீராம் நீங்களும் ஒரு சின்ன கதை போட்டிருக்கீங்களா...ஆஹா நான் ஒரு பெரிய கதை போட்டிருக்கேன் கோமதி அக்கா வீட்டுக்குப் போனதைப் பத்தி!! ஹா ஹா ஹா

   கோமதிக்கா நானும் நிறைய எடுத்து வைச்சுருக்கேன் ஆனா எப்ப போடப் போறேன்னு தெரியலை...

   கீதா

   Delete
  5. கனவில் வந்து போனது மகிழ்ச்சி.
   நேரம் கிடைக்கும் போது
   போடுங்கள் படத்தை.

   Delete
  6. போடுங்கோ கோமதி அக்கா போடுங்கோ... ஆனா இந்த சனி, ஞாயிறு திங்கள் செவ்வாயில் எனக்கு எங்கும் வருவது கஸ்டமென நினைக்கிறேன்..

   கீதாவுக்கு குட்டிக் கதை வராது பெரிய கதைதான் வரும் அதிராவைப்போல எனச் சொல்வது சரிதானே ஹா ஹா ஹா.. இன்னும் இருக்கோ கீதா.. போடுங்கோ...

   Delete
 12. குல்ஃபி பார்க்க அழகாய் இருக்கிறது... என் பாஸுக்குப் பிடிக்கும். நான் நோர்மல் ஐஸ்க்ரீமே சாப்பிடுவதில்லை.. ஏனோ இஷ்டமிருப்பதில்லை!

  ReplyDelete
  Replies
  1. //நான் நோர்மல் ஐஸ்க்ரீமே சாப்பிடுவதில்லை.. ஏனோ இஷ்டமிருப்பதில்லை!//

   ஹா ஹா ஹா என் இனம் நீங்க:)).
   எப்பவாவது ஒருநாள் மிக அவலாக ஆசையாக இருக்கும்.. இப்பவே ஐஸ்கிரீம் சாப்பிடோணும் என.. மற்றும்படி எப்பவும் தொடவே மாட்டேன்.

   Delete
  2. ஸ்ரீராம்.... மெரீனா பீச்சில், கண்ணகி சிலை பின்புறம் (அல்லது பக்கத்தில்) தினமும் ஒருவர் குல்ஃபி விற்கிறார். அவ்வளவு ஃபேமஸ் அவர். இரவு 6.30க்கு ஆரம்பித்து நடு இரவு வரையிலும் விற்கிறார். நல்ல குவாலிட்டி. 35 ரூபாய்தான். என் பெண் எங்களை அங்கு கூட்டிச் சென்றாள்.

   நீங்க ஒரு நாள் (மணநாள் இல்லை பிறந்த நாள்) சென்றுவாருங்கள்.

   Delete
  3. எல்லோரும் குல்ஃபி குல்ஃபி என்பினம்.. நான் ஒருதடவை குடிச்சுப் பார்த்தேன்ன் ஒகே.. பெரிசாக எனக்கு இப்படியானவை விருப்பமில்லை.

   //நீங்க ஒரு நாள் (மணநாள் இல்லை பிறந்த நாள்) சென்றுவாருங்கள்.//

   ஏன் நெல்லைத்தமிழன்.. சும்மா இடை நாளில் போனால் ஸ்ரீராம் குடிக்க மாட்டாரோ?:)) நல்லநாள் பெருநாளில்.. கண்ணகி சிலைக்குப் பின்புறமாக அழைத்துச் சென்றாரானால் என்ன ஆகும் ஹா ஹா ஹா...

   Delete
 13. ஊகு 1 : குட்மார்னிங், குட்நைட் மேசேஜ் எல்லாம் க்ரூப்பில் அனுப்பப்படும்போது எனக்கும் அப்படிதான் தோன்றும்! ஊகு 2: ஆணின் அகந்தையை அடக்கிய பெண்ணோ!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நாம் இதை நினைச்சுப் பார்ப்பதில்லை:), இனிமேல் நினைக்கத் தோணுது..

   //2: ஆணின் அகந்தையை அடக்கிய பெண்ணோ!//
   அவரை விட்டு விலகியமையாலதான் படிச்சிருக்கலாம்:)).. ஒன்றை இழந்தால்தானே இன்னொன்றைப் பெற முடியும்.. அப்படி இருக்குமோ:))

   Delete
 14. கண்ணதாசன் சொல்வது சரிதான், காலத்தின் கையில் தான் எல்லாம். காலம் அறிந்து நடந்தால் எல்லாம் நலமே!

  ReplyDelete
  Replies
  1. விதி வரைந்த பாதை.. கோமதி அக்கா.. வருவதை ஏற்கும் மனப்பக்குவத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ளோணும்.. பல நேரங்களில் கஸ்டம்தான்.. இருப்பினும் என்ன பண்ண முடியும்..

   Delete
  2. நீங்கள் சொல்வதும் சரிதான் அதிரா. வருவதை ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்.
   எல்லாம் அவன் விருப்பம். நானும் அதையே சொல்கிறேன் சந்தோஷம் வந்த போது அக்கா குதிக்கவில்லை, கஷ்டத்தை கொடுத்த போதும் அக்கா இடிந்து அமரவில்லை. அவன் செயல் எப்படி நடத்த வேண்டுமோ நடத்தட்டும் என்று தான் இருக்கிறேன் அதிரா.
   கஷ்டமாய் தான் சில நேரம் இருக்கும் அப்போது இப்படி அதிரா போஸ்ட், பறவை , வானம், மரம், செடி என்று பார்த்து போக்கி விடுவேன்.
   எல்லாம் விதிபடிதான் நடந்து கொண்டு இருக்கிறது.

   Delete
  3. கோமதி அக்கா.. இது எல்லோர் வாழ்விலும் வந்து போகும் சாதாரண விசயம்தானே..என்ன சிலபேர் துன்பம் வந்தால் தனக்கு மட்டும்தான் இப்படி துன்பம் ஏனையோருக்கெல்லாம் இல்லை என்பது போலவும் .. சந்தோசம் வந்தால்ல்.. ஓவராக கூத்துப் போட்டு அருகில் இருப்போரை வெறுப்பேத்துவோரும் உண்டு...

   ஆனா எந்த நிலையிலும் பெரிதாக அமளிப்படாமல் இருப்பதே நல்லது.

   உண்மைதான் அனைத்தும் விதிப்படியே... புளொக்கில் எல்லோரோடும் பேசுவதும் ஒருவித mind therapy தான்.

   Delete
 15. ஊசி இணைப்பு சூப்பர். அது சொல்லும் செய்தி முற்றிலும் உண்மை.

  ReplyDelete
 16. பாடல் மிகவும் பிடித்த பாடல் அதிரா.
  கேட்டு ரசித்தேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அனைத்துக்கும் மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

   Delete
 17. சும்மா ஜில்லுன்னு ஒருபதிவு போட்டு அசத்திட்டீங்க....

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா பாராட்டுறீங்க?:)) மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.. என் செக் இன்னும் இதைப் பார்க்கல்லப்போல:)) பார்த்தாவோ அவ்ளோதேன்ன்ன்ன்:)).. அவ ஏதோ புறாப் பிடிக்கப் போயிருப்பதாகக் கேள்வி ஹா ஹா ஹா.

   Delete
  2. ஒரு அனிமல் நேசிப்பாளரின் பெற்றோராயிருப்பது என்பது :) எனக்கு சொல்ல வார்த்தை வர்ல :)
   புறாக்குஞ்சை 30 நிமிடம் ட்ரைவ் செஞ்சு ஒரு இடத்தில கொண்டு விட்டோம் :) இல்லேனா எங்க வீட்டு குட்டி பொண்ணுங்க லபக்க தயாரா இருந்தாங்க

   Delete
  3. அம்மாஎனக்கு ஐஸ் பார்த்து வந்து .. நாளைக்கே கோர்ட் லெட்டர் வரும் உங்களுக்கு மியாவ்

   Delete
  4. ///AngelWednesday, May 22, 2019 1:07:00 pm
   ஒரு அனிமல் நேசிப்பாளரின் பெற்றோராயிருப்பது என்பது :) எனக்கு சொல்ல வார்த்தை வர்ல :)//

   உண்மைதான்.

   அல்லோ மீயும் ஒரு அன்ன்னிமல் நேசிப்பாளர்தேன்ன்ன்:))..

   என்னாதூஊஊஊஊ என் ஐஸ் பார்த்ததால் உங்களுக்கு என்ன வந்துது?:) கமான் அஞ்சு கமான்.. எனக்கு கோர்ட் லெட்டரோ? சொத்தை எழுதி எனக்கு அனுபுறீங்களோ கோர்ட் மூலம்:)).. ஹையோ நேக்கு காண்ட்டும் ஓடல்ல லெக்ஸும் ஆடல்ல:))

   Delete
 18. கர்ர்ர்ர் :) எப்போ போட்டீங்க போஸ்ட் :) இப்போதான் கவனிக்கிறேன் .

  ReplyDelete
  Replies
  1. அதே அதே ஏஞ்சல் மீக்கும் தெரியலை இங்கு வேறு கரன்ட் போய் போய் வருதா ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   கீதா

   Delete
  2. புறாவை காப்பாற்றி கொண்டு விட்டீர்களா?
   நல்ல உள்ளம் . என்னாச்சு புறாவுக்கு?

   Delete
  3. அது ஒரு பெரிய ஸ்டோரி அக்கா :) எங்க மகள் நேற்று ஸ்கூலில் இருந்து ரெண்டு பஸ் பிடிச்சி வீட்டுக்கு வரும் வழியில் பஸ் ஸ்டேஷனில் ஒரு அடிபட்ட புறாக்குஞ்சை பார்த்து அதை அங்குள்ள சிலையுடன் சேர்த்து பெட்டியில் போட்டு வீட்டுக்கு கொண்டாந்திட்டா .அது பறக்கவும் முடியாது அப்புறம் இன்று காலை ஒரு sanctuary இருக்கு அங்கே ட்ரைவ் செஞ்சி கொண்டுபோய் கொடுத்தோம் .நகர வாழ்க்கை விட்டு அந்த குஞ்சு கிராம இயற்கை சூழலில் வளரும் இனி .
   பஸ் நிலையம் உள்ளே கூரை இடுக்கில் இருந்து விழுந்ததை அவ்வழியே வந்த ஸ்கூல் மாணவர்கள் காலால் உதைத்து இருக்காங்க ரெண்டு நாளா அங்கேயே பிரண்டு மூவ் செஞ்சதாம் சிலர் பிடிக்க முயன்றும் முடியாம போச்சு பிறகு மகளுக்கு நாலு பேர் அங்கே உதவி எல்லாருமா பிடிச்சாங்களாம் .அதோட அதன் காலில் முடி கயிறு ந ஏதேதோ மாட்டி அதெல்லாம் வெட்டி எடுத்தேன் .
   அவ எடுக்காம வந்திருந்தா கவலைப்பட்டுட்டு இருந்திருப்பா நல்லவேளை தைரியமா கொண்டாந்திட்டா

   Delete
  4. ஏஞ்சலின் பெண் ஏஞ்சல் போல்தான் இருப்பா.
   உதவி செய்யும் குணம் வாழ்க. சேவை உள்ளம் வாழ்க.
   மகளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
   கிராம வாழ்க்கை வாழ அது கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அமைதியான இடம் கிடைத்து இருக்கு.
   நல்ல உள்ளங்களால் அதற்கு நல்ல கிராம வாழ்க்கை.

   Delete
  5. வாங்கோ அஞ்சு வாங்கோ.. நீங்க ரெம்ம்ம்ப லேட்ட்டூஊஊஊ:)).. போன தடவை ஆயாவை அன்பா அனுப்பி வச்சேனே:)) எப்பூடி இருக்கிறா என் செல்ல ஆயா?:))..

   ஆஆஆஆஆஆ கீதாவுக்கு எதுக்கு அடிக்கடி கரண்டு கட்டாயிடுதூஊஊஊ:)).. அப்போ சென்னைக்கு ரிட்டேன் ஆகிடுங்கோ கீதா...

   Delete
  6. //AngelWednesday, May 22, 2019 4:29:00 pm
   அது ஒரு பெரிய ஸ்டோரி அக்கா :)//

   உப்பூடிச் சொல்லிப்போட்டு சின்னதா முடிச்சிட்டீங்க.. ஒரு போஸ்ட் வரும் என எதிர்பார்த்தேன் நான்..

   ஓ நீங்க மகள் புறாக்குஞ்சு கொண்டு வந்தா என அரைகுறையாச் சொன்னதும்... என் நினைவுக்கு வந்தது 4 கால் மகளின் நினைவு ஹா ஹா ஹா... இனி அது நல்ல சூழலில் வளரும்தான்... உங்கள் மகளுக்கு பேரனின்[உங்கட அப்பா] குணம் அப்படியே வந்திருக்குது அஞ்சு...

   Delete
  7. ஏஞ்சலையும் மகள் குட்டி தேவதையை பாராட்டி போட்ட பின்னூட்டம் என்னாச்சு?
   அதிரா அதை கவனித்து போடுங்கள்.

   Delete
  8. இம்முறை படிச்சு விட்டே பப்ளிஸ் பண்ணினேன் கோமதி அக்கா.. இங்குதான் எங்கோ இடம் மாறி இருக்கோ தெரியல்லியே.. பின்பு செக் பண்ணிப் பார்க்கிறேன்ன்.. வெளியே போகிறோம்..

   Delete
  9. இல்லை கோமதி அக்கா... பழைய கொமெண்ட்டைத்தான் ஏதோ நித்திரைத்தூக்கத்தில் பார்த்திருக்கிறேன் போலும்... மெயிலுக்கும் வரும்... அதனால ரீ சைக்கிள் பின்னும் பார்த்தேன் எங்கும் இல்லை... எனக்கு அனுப்புப்படவில்லை என்றே நினைக்கிறேன்... முடிஞ்சால் திருப்பி அனுப்புங்கோ பிளீஸ்... சொறி.

   Delete
  10. //கோமதி அரசுWednesday, May 22, 2019 5:06:00 pm
   ஏஞ்சலின் பெண் ஏஞ்சல் போல்தான் இருப்பா.
   உதவி செய்யும் குணம் வாழ்க. சேவை உள்ளம் வாழ்க.
   மகளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
   கிராம வாழ்க்கை வாழ அது கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அமைதியான இடம் கிடைத்து இருக்கு.
   நல்ல உள்ளங்களால் அதற்கு நல்ல கிராம வாழ்க்கை.//

   மிக்க நன்றி அக்கா .மகளிடம் சொல்றேன் .என்கிட்டே சொன்னா // அம்மா நானா அதை எடுத்திட்டு வரலைன்னா மனசு ரொம்ப கஷ்டமாயிருந்திருக்கும்னு .அங்கிருந்த இன்னும் இரண்டுபேரும் நல்ல விஷயம் செய்கிறாய்னு பாராட்டினாங்களாம்

   Delete
  11. ஆஆஆஆஆ மேலே போட்ட கொமெண்ட்டையா கோமதி அக்கா தேடினா.. நான் புதுசு எனப் பயந்து வேர்க்க விறுவிறுக்க ஊரெல்லாம் தேடினேன்... ஹா ஹா ஹா.. அப்பாடா கண்டு பிடிச்சாச்சு:).

   Delete
 19. வாவ் ஐஸ் லோலிஸ் செமையா இருக்கு எனக்கும் மேங்கோ அப்புறம் ஆரஞ் ஐஸ் மட்டுமே பிடிக்கும்னானும் செய்யனம் :)
  அந்த மில்க் கட்டாயம் சேர்க்கணுமா ?
  சரி எதுக்கும் இன்சூரன்ஸ் எடுத்து வைங்க நான் செஞ்சதும் சொல்றேன் :)

  ReplyDelete
  Replies
  1. வெயில் முடிய முந்தி செய்திடுங்கோ அஞ்சு... நீங்க உங்கட விருப்பம்போல எது வேறுமெண்டாலும் சேர்க்கலாம் /விடலாம் ...

   Delete
 20. எனக்கு பன்னீர் சோடா ஐஸ் செஞ்சு பார்க்க ஆசை :) அதில் basil சீட்ஸ் போடணும் :) பார்க்கிறேன் இதேபோல் செஞ்சி படம் அனுப்பறேன்

  ReplyDelete
  Replies
  1. செய்யுங்கோ செய்யுங்கோ... விரைவில எனக்கும் படம் வாணாம் போஸ்ட்டில் அனுப்புங்கோ:)..

   Delete
 21. ஹலோ :) நல்லா இருக்கிறதால்தானே நல்ல இருக்கணும்னுதானே குட்மார்னிங் குட்நைட் சொல்றாங்க :) எல்லாத்துக்கும் குற்றம் சொல்லக்கூடாது .நான் டெயிலி தோட்டத்துக்கு poye பூக்களுக்கு பட்டாம்பூச்சிக்கு வண்டுகளுக்கு கூட குட்மார்னிங் சொல்வேன் :)
  நீங்களும் சொல்லுங்க :)

  ReplyDelete
  Replies
  1. அது செடி கொடிகளுக்கு நேரில் சொல்வது வேறெல்லோ அஞ்சு... இதுவரை எந்தப் பயிரும் போட்ட மாதிரித்தெரியல்ல மோனிங் சொல்றாவாம் மோனிங் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. போன வருடமும் எதுவும் செய்யாமல் பேய்க்காட்டிப்போட்டீங்க:)) இந்த வருடமும் எதுவும் செய்யேல்லைப்போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சுவுக்கு இப்போ வேலை செய்யக் கள்ளம் வந்திருக்கு:)) ஹா ஹா ஹா.. ஒழுங்கா கீரை போடுங்கோ.

   Delete
  2. உண்மைதான் மியாவ் :) நடுவில் இரண்டு வருடமா வராத pollen அலர்ஜி மீண்டும் வந்திடுச்சு போன வருஷம் இப்ப இந்த வருஷமும் தும்மல்தான் தோட்டத்துக்கு போனாலே மகரந்தம் மூக்கை நெருடுது தொட்டியில் மணத்தக்காளி வளருது .அதை படமெடுத்து அனுப்பறேன்

   Delete
  3. இந்த வருடம்.. வெயில் கொஞ்சம் ஏழியாகவே தொடங்கி விட்டமையால்.. போலன் அலெர்ஜி அதிகமாகியிருக்கலாம்.. மழையும் இம்முறை வழமையை விடக் குறைவெல்லோ அஞ்சு.

   Delete
 22. ஒரு தப்பு பண்ணிவிட்டேன்:) சமீபத்தில் இயக்குனர் மகேந்திரன் இறந்தாரே அதுவரைக்கும் இந்த பாட்டில் வரும் ஹீரோயின்தான் அவர் மனைவின்னு நினைச்சிட்டிருந்தேன் !!! ..பிறகுதான் தெரிஞ்சது அவர் மனைவி வேற யாரோன்னு awww

  ReplyDelete
  Replies
  1. இதிலென்ன டப்பூஊஊஊ... ஊர் உலகில உள்ள எல்லோரையும் நமக்குத் தெரிஞ்சிருக்கோணும் என்றில்லையே...ஹா ஹா ஹா நான் கூட சில ஜோடிகளை மாத்தி மாத்தி ஜோடியாக்கி வச்சிருந்தேன் ஹா ஹா ஹா...

   Delete
 23. அந்த ex படத்துக்கு :) பார்த்திங்களா ஒரு பிரிவு தோல்வி ஒரு மருத்துவரை உருவாக்கியிருக்கு

  ReplyDelete
  Replies
  1. அதேதான் அஞ்சு.. சிலரை உயர்த்துது சிலரை சூசைட் பண்ண வைக்குது.. இதுதான் விதியின் விளையாட்டு.

   Delete
 24. அந்த கத்தி :) கருத்து கொஞ்சம் குத்துது .அந்த மாதிரி அறிவு தெளிவிருந்தா எங்கேயோ போயிருப்போம் நாமெல்லாம்:)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. அடிபட்டாலும் திருந்தமாட்டோம் நாம்:))

   Delete
 25. மணி பிளான்ட் என்ன எந் பிளாண்ட்டையும் எங்க வீட்ல உள்ளே வைக்க கஷ்டம் :)ஜெசி சுத்தி வச்சி விளையாடுவா

  ReplyDelete
  Replies
  1. அதிரா போல் மேலே கட்டி விடுங்களேன் ஏஞ்சல்.

   Delete
  2. செய்றேங்கா மேலே கட்டி பார்க்கிறேன்

   Delete
  3. மேலே தொங்க விடலாம், அல்லது ஜாடி முட்ட எதையாவது குத்தி வைப்பேன் நான்.. மண் தெரிஞ்சால்தான் டெய்ஸி கிண்டிக் கிளறுவா.

   Delete
 26. ஆகா! குல்பி அசத்துங்க.

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆ திரும்படியும் மாதேவி வாங்கோ வாங்கோ.. உங்கள் புளொக் தேடிப்போனேன் கொமெண்ட் போட, ஆனா நீங்க போஸ்ட் போடுவதை நிறுத்திப் பல காலமாகுது எனக் காட்டிச்சுது.. இரு வீடுகட்ட்டி வச்சிட்டு ஏன் பேசாமல் இருக்கிறீங்க.. நல்ல நல்ல மரக்கறிகள் பற்றிய தகவல் போட்டிருக்கிறீங்க...

   மிக்க நன்றிகள் மாதேவி.

   Delete
  2. மாதேவி , இரண்டு வலைத்தளம் வைத்து இரண்டிலும் மிக அருமையான பதிவுகள் போடுவார்கள். இலங்கை பழைய காலப் பாத்திரங்கள் (சமையல் பாத்திரங்கள்) பேர் எல்லாம் போட்டு போஸ்ட் போட்டு இருந்தார்கள். இலங்கையின் இயற்கை அழகை படம் பிடித்து போடுவார்கள். அருமையான சமையல் குறிப்பு போடுவார்கள். நானும் பதிவு போடுங்கள் என்று கேட்டு இருக்கிறேன்.

   Delete
  3. ஓ கோமதி அக்காவுக்கு மாதேவியை முன்னமே தெரிஞ்சிருக்கே...

   Delete
 27. பூஸார் இனி போஸ்ட் போடும் போது எங்கிட்ட சொல்லிட்டுப் போடோணூம் உங்க மூட்டையை எல்லாம் இங்கு எப்பூடி பார்த்திட்டுருக்கேன் ஹா ஹா ஹா ஹா ஹாஹ் ஆ..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ..

   //பூஸார் இனி போஸ்ட் போடும் போது எங்கிட்ட சொல்லிட்டுப் போடோணூம்//


   ஹா ஹா ஹா சொல்லலாம் கீதா ஆனா சொல்லி ஆரையும் தொந்தரவு செய்வது எனக்க்கு விருப்பமில்லை, நேரமிருக்கும்போது எல்லோரும் வருவீங்களெனத் தெரியும்.

   ஈ மெயில் நோட்டிபிகேசன் வரும்தானே கீதா.

   //உங்க மூட்டையை எல்லாம் இங்கு எப்பூடி பார்த்திட்டுருக்கேன்//

   அது இன்னும் குட்டி போடேல்லையோ? மூட்டைக்குள்:)) ஹா ஹா ஹா.

   Delete
 28. இந்தப் பாட்டு கேட்டிருக்கேன் மிகவும் பிடித்த பாடல்...சூப்பர் பாட்டு!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதா.. பெரும்பாலும் அனைவருக்கும் பிடிக்கும் பாடல்.

   Delete
 29. முதல் பூஸார் லாலி பாப் சூப்பர்...

  ஹையோ அதிரா நினைவு படுத்திட்டீங்களே...இப்படி எத்தனை ஃப்ரூட் குல்ஃபி, ஐஸ் குல்ஃபி மில்க் குல்ஃபி, நட்ஸ் குல்ஃபி ரோஸ்மில்க் குல்ஃபி, மிக்ஸட் ஃபூரூட், என்று செய்திருக்கேன். சம்மர் என்றால் பெரும்பாலும் மாமியார் வீடுதான் அங்கு எல்லா குட்டீஸும் சேர்ந்துருவாங்க அம்புட்டுத்தான் குல்ஃபி தன...ரவுன்ட் கோன் குல்ஃபி மோட் தான் அப்போது இருந்தது இப்படி நீங்கள் செய்திருப்பது போல் அகலமான குச்சி ஐஸ் மோல்ட் இல்லை.

  எல்லாமே சூப்பரா வந்திருக்கு செமையா வந்திருக்கு....அப்படியே கொடுத்துருங்க...இங்கிட்டு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உண்மையாகவே செய்யும்போது உங்களை நினைச்சேன் கீதா. இப்போ விதம்விதமாக, ஸ்ரைல் ஸ்ரைலாக எல்லாம் அமேசனில் கிடைக்குது கீதா 2ice lolly mould.

   Delete
 30. நெல்லை இன்று வரலை ஸோ உருகிப் போயிடும் நாளை வரை ஃப்ரிட்ஜில் வைக்க் கூடா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அதனால நெல்லை வரதுக்குள்ள அவர் பங்கையும் இங்கிட்டு தள்ளிவிடுங்கோ உருகாம தள்ளிவிடோணும் ஓகே!!? அந்த ஐஸ் பாக்ஸ்ல வைச்சு அனுப்பிடுங்க!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு பொமகிரனேட் தாறேன் கீதா.
   நெல்லைத்தமிழன் திரும்பவும் கோயில் சுற்றுலா ஆரம்பித்திட்டார் போலும்... இல்லை வேலையாகப் போயிட்டாரோ தெரியவில்லை.. அதென்ன சொல்லாமல் போகும் பழக்கம் அவருக்கு கர்ர்:)) ஹா ஹா ஹா..

   Delete
 31. கோமதி அக்கா வீட்டுக் கதவைத் தட்டினே அதிரா...அப்ப உள்ளிருந்து கீச் கீச் நு சத்தம் கோமதி அக்கா பறவைகளோடு சேர்ந்து அக்காவின் குரலும் அப்படி ஆகிப் போச்சோனு ஹையோ அப்ப நாமும் அப்படித்தான் பேசனுமோ என்று என் தொண்டையைச் சரிசெய்து குயில் கூவுவது போலக் கூவினேன்...என்ன ஆச்சரியம் அக்கா ...மாமாவிடம்...ஹையோ சீக்கிரம் வாங்க...கேமரா வேனும்....குயில் இப்ப கூவும் காலம் இல்லையா...நம்ம வீட்டுக்கே குயில் வந்திருக்கு மெதுவா திறங்கஓ அது பறக்கறதுக்குள்ள நான் ஒரு க்ளிக் அடிச்சுடறென் அப்படினு ஒரே ஹா ஹாஹ் ஆ...

  பாவம் அக்கா ஏமாறக் கூடாதே என்று அக்கு அக்கு நான் கீதா குயில் வந்திருக்கேன் அப்படினு குயில் பாஷையில் சொல்லிட அக்காக்கு ஒரே சந்தோஷம் என்னைப் பார்க்க.....அக்காவும் ஆமாம் நீங்க குயிலே தான் ...ஹையோ சின்னக் குயில் சித்திராஅது.... நான் சும்மா குயில் பாஷையில் சும்மா பேசினேன் என்று சொல்ல அக்கா ஆமாம் நானும் அதைத்தான் சொன்னேன் நீங்கள் தான் பாட்டை நினைச்சுட்டீங்கனு சொல்ல நான் பிங்கியாயிட்டேன்...

  குயில் கூவும் சத்தம் ஆஹா ஃபோன் ரிங்க்...அப்ப இதெல்லாம் கனவோ..ஆஆஆஆஆஆஅ

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆஹா கீதா, நன்றாக எழுதி விட்டீர்கள்.
   குயில் போன்ற குரல் தானே உங்களுக்கு ராகங்களை பாடி பார்த்து பார்த்து
   பாடி பாடி குரல் குயில் குரல் ஆச்சு உங்களுக்கு.

   தங்கையை பார்க்க அக்காவுக்கு மகிழ்ச்சி பொங்காதா? ஸ்ரீராம் தான் சொல்லாமல் வந்து போய் விட்டார்.
   நீங்களாவது குயில் மாதிரி பாடி வந்தீர்கள் என்று நினைத்தால் அத்தனையும் கனவு என்று சொல்லி விட்டீர்களே அதிகாலை கனவு பலிக்கும்.

   Delete
  2. ஹா ஹா ஹா சூப்பர் கற்பனை.. அப்படியே மீயும் அருகிலேயே கூட வந்து ஒட்டி ஒட்டி ஜன்னலால கோமதி அக்கா என்ன பண்ணுறா எனப் பார்த்தது போலவே இருக்கு.. மியாவ் மியாவ் எனக் கத்தியிருந்தா கோமதி அக்காவுக்குக் கேட்டிருக்கும்:) அதிரா வந்திட்டா என ஓடி வந்திருப்பா:)..

   //அக்காவும் ஆமாம் நீங்க குயிலே தான்///

   விடுங்கோ என்னை விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்:)) ஹா ஹா ஹா

   Delete
  3. அதிரா , நீங்களும் கீதாரெங்கன் கூட வந்தீர்களா ஒட்டிகொண்டு கோமதி அக்கா என்னபண்ணுறா என்று பூனை போல் வந்து பார்த்து போய் விட்டீர்களா?
   சத்தம் கொடுத்து இருக்கலாம்.

   என் புண்ணியத்தில் காசி போய் வாங்கோ அதிரா. இப்போது விடுமுறை சமயம் நல்ல வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

   Delete
  4. ஹா ஹா ஹா காசி போக அஞ்சு ஓம் படுறா இல்லையே கோமதி அக்கா:))).. அஞ்சுவாலதான் மீ வெயிட்டிங்:))..

   நாளைக்கு இங்கு ஆரம்பமாகுது எங்கட சுற்றுலா:)).. எங்களுக்கு இன்னும் விடுமுறை விடவில்லை கோமதி அக்கா.. யூன் கடசியில்தான் இங்கு சமர் ஹொலிடே ஆரம்பமாகும்.. இது இடையில் ஒரு 5 நாட்கள் ஹொலிடே....

   Delete
 32. இந்த mouldஐ பார்த்திருக்கிறேன். சின்னக்குழந்தைகள் வைத்துக்கொண்டு விளையாடுவதையும் பார்த்திருக்கிறேன். இன்றைக்குத்தான் இதன் உபயோகம் தெரிந்தது. நல்ல குறிப்பு அதிரா! தாங்க்ஸ்.ஊசிக்குறிப்பு வழக்கம்போல் அருமை!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. உண்மைதான் பல விசயங்கள் என்ன எனத் தெரியாமலேயே போய் விடுஇறது, இப்படி எங்காவது பார்த்தால்தான்.. ஓ அப்போ இப்படியும் செய்யலாமோ எனும் எண்ணம் வருது.

   மிக்க நன்றிகள் மனோ அக்கா.

   Delete
 33. ஊசிக் குறிப்பில் அந்த பெண் பிடித்துக் கொண்டு நிற்கும் வேர்ட்ஸ் ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்சது....அப்படி போடு என் ராசாத்தி என்று சொல்ல வைக்குது!!

  ஊ இ செம செம!! ரொம்பவே உண்மைதான்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா .. மிக்க நன்றிகள் கீதா அனைத்துக்கும்.

   Delete
 34. வணக்கம் அதிரா சகோதரி

  அருமையாக குல்ஃபி செயல்முறையை தயாரித்து காட்டியமைக்கு நன்றி.செய்முறை படங்களை ரசித்தேன. கலர், கலராக மிகவும் நன்றாக உள்ளது. சாப்பிட வேண்டும் போல் உள்ளது. (உருகாமல் பார்சல் அனுப்பவும். உங்கள் குரு மாதிரி வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன். ஹா ஹா. ) மிகுதியையும் படிக்கிறேன். இங்குகரண்ட் போய் விட்டால் நெட்டும் தொந்தரவு தரும். அதற்குள் இந்த கமெண்டை நிறைவு செய்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா வாங்கோ.. இம்முறை கரண்டு கட்டாகி, உங்களை கார்ட் பெட்டியில் ஏற வச்சிட்டுதே:))..

   //உங்கள் குரு மாதிரி வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன். ஹா ஹா//

   குரு குல்ஃபி சாப்பிட்ட மயக்கத்தில பார்க்கிறார் அப்பூடி:)) நீங்க சாப்பிட முதலே அப்பூடிப் பார்த்தால்:)) சாப்பிட்ட பின்ன்ன்?:)).

   .. கரண்டு கட்டாக முன் வந்தமைக்கு மிக்க நன்றி.

   Delete
 35. வாறேன் வாறேன்... இப்போதான் வெளியே போய் லஞ் எல்லாம் முடிச்சு வீட்டுக்கு வந்தோம்:)... எல்லோரும் ஹொலிடேயில்....

  ReplyDelete
 36. இது என்ன சின்ன புள்ளையாட்டம் பழத்தை போட்டு ஜஸ் பண்ணுறது..... நானெல்லாம் ரம்மை இப்ப்டி ஊற்றி பீரஷரில் வைத்துவிட்டு அதன் பின் எடுத்து சாப்பிடுவோம் அல்லது ஐஸ் க்யூப்பாக பண்ணி க்ளாஸில் கோக் ஊற்றி அதில் இந்த ஐஸ் க்யூப்பை போட்டு அருந்தினால் அருமையாக இருக்கும் அதைவிட்டுவிட்டு இப்படியா பழம் கிழம் என்று சொல்லிகிட்டு ஹும்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. ஏன் இப்போ 9தாராவை கைவிட்டிட்டீங்கபோல:))..

   //அதைவிட்டுவிட்டு இப்படியா பழம் கிழம் என்று சொல்லிகிட்டு ஹும்ம்ம்//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்கட லெவலே வேற ட்றுத்:)) கவனம் மயங்கி விழுந்து அடிகிடி படாமல் பார்த்துக்கோங்க.. ஐஸ் கியூப் போட்டுக் குடிக்கும்போது:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்.

   Delete
 37. நான் வரதுக்குள்ளே அதிராவோட இந்தப் பதிவுக்கு எல்லோரும் கருத்துச் சொல்லிடறாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எப்போப் போடுவாங்கனு தெரியறதில்லை. ஒரு நாள் போடும்போது கையும் களவுமாப் பிடிக்கணும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. நீங்க ரெம்ம்ம்ம்ம்ப லேட்டூஊஊ.. மாமாவுக்கும் ரைமுக்கு சமைக்காமல்:)) அங்கு என்னதான் பண்ணுறீங்க கர்:))

   Delete
 38. குல்ஃபி நான் அடிக்கடி பண்ணுவேன். அதுவும் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு எல்லாம் போட்டு! இந்தப் படத்தையும் குல்ஃபி மோல்டையும் பார்த்ததும் மறுபடி பண்ணும் ஆசை வந்திருக்கு. பார்ப்போம். பண்ணினால் நானும் படம் எடுத்துப் போட்டு அதிராவை விட அதிகமாப் பீத்துப் பீத்துனு பீத்திக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. கீசா மேடம்... நீங்க ஒண்ணும் பீத்திக்கவேண்டாம். நான் வரும்போது எனக்கு இரண்டு மூன்று கொடுத்தால், நானே, நன்றாக இருந்தால் டமாரமடித்துவிடுவேன்.... (ஃபலூடாவும்தான்)

   Delete
  2. //பண்ணினால் நானும் படம் எடுத்துப் போட்டு அதிராவை விட அதிகமாப் பீத்துப் பீத்துனு பீத்திக்கலாம்!//

   ஹா ஹா ஹா கர்ர்ர்:)) நான் ஒரு சாம்பிளுக்காகவே சும்மா செய்தேன்.. இனி முறைப்படி குல்ஃபி செய்யப் போறேன் கீசாக்கா:)).. நீங்களும் செய்யுங்கோ கமான் ஸ்ராட் மூசிக்க்க்:)).

   நெல்லைத்தமிழனுக்கு இன்னும் 2 கிலோ வெயிட் ஏத்த ஆசைபோல இருக்கே கர்:))..

   ஹையோ ஃபலூடா, ஐஸ்கிரீமுக்குப் புகழ்.. யாழ்ப்பாணத்து லிங்கம் கூல்பார் தான்.. அதே கிளையை இப்போ கனடா ரொரண்டோவில் திறந்திருக்கிறார்கள்.. போன தடவை போனபோது அண்ணன் கூட்டிப் போய் அடிக்கடி வாங்கித் தந்தார்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஅ என்னா சுவை:))..

   Delete
 39. பழங்கள் நிறைய இருந்தால் அநேகமா சாலட் தான். கொஞ்சம் போல் மிளகு, உப்பு தூவித் தேன் விட்டுச் சாப்பிட்டு விடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. சலாட் க்கு தேன் விட்டுச் சாப்பிட சூப்பராக இருக்கும். மிளகு உப்பு நான் அன்னாசிக்கு மற்றும் அவகாஅடோவுக்கு மட்டுமே போடுவேன்.. பிள்ளைகளுக்கு சீனி அல்லது ஸ்றப் போட்டு விடுவேன். மிக்க நன்றிகள் கீசாக்கா.

   Delete
 40. குல்ஃபி, மற்றும் குச்சி ஐஸ் படங்கள் ரொம்ப அருமையா இருக்கு. வீட்டிலேயே செய்வதால் நல்ல பொருட்களுடம் ஆரோக்கியமானவை. அடிக்கிற வெயிலில் ஆசையைத் தூண்டுபவை.

  //அப்படியே குடிக்க வேண்டியதுதான்..// - என்னாது... குச்சி ஐஸை குடிப்பீங்களா? என்ன ரசனையோ.....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

   //குல்ஃபி, மற்றும் குச்சி ஐஸ் படங்கள் ரொம்ப அருமையா இருக்கு//
   வாவ்வ்.. நன்றி நன்றி..

   //என்னாது... குச்சி ஐஸை குடிப்பீங்களா? என்ன ரசனையோ.....//

   ஹா ஹா ஹா ஐஸ் கிரீமைக் குடிப்பது எனச் சொல்லிப் பழகிட்டோம்ம்:)).. அதே பழக்க தோசம்:))

   Delete
 41. சீராளனுக்காக அருமையா செய்த குல்ஃபியை நான் ஏன் வேலை மெனக்கெட்டு பாராட்டி எழுதணும் (ரொம்ப நல்லாவே வந்திருப்பது தெரிந்தாலும்?). நானெல்லாம் சாப்பிடமாட்டேன் என்று நீங்களாகவே நினைத்துக்கொண்டுவிட்டீர்களே....

  இருந்தாலும் குல்ஃபி நல்லா வந்திருக்கு. நான் அதில், பிஸ்தா, பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சையைச் சிறுது சேர்த்திருப்பேன். இன்னும் ருசியா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. //சீராளனுக்காக அருமையா செய்த குல்ஃபியை நான் ஏன் வேலை மெனக்கெட்டு பாராட்டி எழுதணும்//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)).. பாருங்கோ ஆளைக் காணம் இன்னும்...

   //நானெல்லாம் சாப்பிடமாட்டேன் என்று நீங்களாகவே நினைத்துக்கொண்டுவிட்டீர்களே....//
   நீங்கதான் இனிப்பை விட்டுவிட்டேன் என பாரைன் இல் இருக்கும்போதே எங்களுக்கெல்லாம் வட்சப் ல மெசேஜ் போட்டீங்களே:)) மறந்திட்டீங்களோ ஹா ஹா ஹா...:).

   //நான் அதில், பிஸ்தா, பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சையைச் சிறுது சேர்த்திருப்பேன். இன்னும் ருசியா இருக்கும்.//

   எப்படி வருமோ எனும் பயத்தில பெரிசா மினக்கெடவில்லை.. இனி செய்யப்போகிறேன்.

   Delete
 42. மணி ப்ளாண்ட், நாலு வருடத்தில் 8 இலைகள்தாம் விட்டிருக்கு? ஒருவேளை நீங்கள் வைத்திருக்கும் அறையில்தான் சத்தம், கோபப்படுவது எல்லாம் நடக்குமோ? அந்த பயத்திலேயே ரொம்ப ரொம்ப மெதுவாக வளருதோ? அதுகிட்ட அன்பா பேசிப்பாருங்க... சீக்கிரம் வளந்தாத்தானே நிறைய காசு கிடைக்கும்னுலாம் அன்பா மெதுவா தன்மையாப் பேசிப்பாருங்கோ. அடுத்த வருடத்துக்குள்ளேயே ரொம்ப அதிகமா வளரும்.

  ReplyDelete
  Replies
  1. //ஒருவேளை நீங்கள் வைத்திருக்கும் அறையில்தான்//
   அறையில வைக்கவில்லை நெல்லைத்தமிழன், இது நடுக் ஹோலில் வச்சிருக்கிறேன்.. வாசலால் ஏறினால் ஒரு ஹொரிடோ வரும்.. ஹொரிடோவால் உள்ளே வந்தால்ல்.. இந்த சதுர ஹோல் வரும்... இதிலிருந்துதான்... விசிட்டிங் றூம், கிச்சின்... கீழ் பார்த்றூம் , குளோசெட்.. மாடிபப்டி என.. பக்கம் பக்கமாகப் பிரியும்.. அதிலதான் வைத்திருக்கிறேன் இதை.

   //அதுகிட்ட அன்பா பேசிப்பாருங்க.// ரேடியோ எல்லாம் போடுவனே... இம்முறை கார்டினில் புல்லு வெட்டும்போது, என் மொபைலில் பாட்டுப் போட்டு அப்பிள் மரட்த்ஹிலும் பின்பு பெயார்ஸ் இலும் கொழுவி விட்டேன்ன்.. அம்மா கேட்டா என்ன பண்ணுகிறாய் என.. அது பூவெல்லாம் காய்க்க இப்படி செய்கிறேன் என்றேஎன் ஹா ஹா ஹா.

   //அந்த பயத்திலேயே ரொம்ப ரொம்ப மெதுவாக வளருதோ?//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது குட்டிச் சாடி, மண் மாத்தினேன் அது சொகுசாக இல்லைப்போலும்.. அதனாலயே இலை வருகுதில்லை.. அப்படியே நிக்குது முழிசிக்கொண்டு கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

   Delete
 43. //என் ஐஸ் லொலி குடிச்சு இப்பூடி ஆச்சே // - ஐயையோ... வெறும் படத்தைப் பார்த்து இவ்வளவு பாராட்டிட்டேனே..... சாப்பிட்ட ஆள் மூஞ்சி இப்படி ஆகிடுத்தே...

  இனிமேல் படத்தைப் பார்த்து அபிப்ராயம் வளத்துக்கக்கூடாது... சாப்பிட்டுப் பார்த்தால்தான் விவரம் தெரியும் போலிருக்கு

  ReplyDelete
  Replies
  1. ///இனிமேல் படத்தைப் பார்த்து அபிப்ராயம் வளத்துக்கக்கூடாது//

   இது தமனாக்காவுக்கும் பொருந்துமாக்கும் ஹா ஹா ஹா... நெல்லைத்தமிழன் யூப்பர் மாட்டீஈஈஈ:))..

   Delete
 44. ஐஸ் லாலீஸ்லாம் அழகா வந்திருக்கு. ஆனால் டேஸ்ட் செய்த பூசார் முகம் போன போக்கு, உங்க 'குரு'வின் முகம் இதெல்லாம் பார்க்கும்போது, சீனிக்குப் பதிலா அஜினமோட்டோ போட்டுட்டீங்களான்னு எனக்கு ஒரு டவுட்டு. எதுக்கும் நீங்களே சாப்பிட்டுப் பார்த்து, உடம்பு குணமான பிறகு எங்களுக்கு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க..

  ReplyDelete
  Replies
  1. அஜினோமோட்டோவை எல்லோரும் இங்கு வெளியே கொட்டச் சொன்னதனால் கொட்டிட்டனே:)).. சீனி சேர்த்திருந்தால் இன்னும் சுவை அதிகமாகியிருக்கும்.. நான் குல்ஃபிக்கு மட்டுமே சீனி சேர்த்தேன்..

   //எதுக்கும் நீங்களே சாப்பிட்டுப் பார்த்து, உடம்பு குணமான பிறகு எங்களுக்கு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.///
   ஹா ஹா ஹா நான் சாப்பிடுவதெனில் கடையில வாங்கித்தான் சாப்பிடுவேனாக்கும்:))

   Delete
 45. இன்றைக்கு போட்டிருக்கும் பாடல், 'அழகிய கண்ணே' .... மிக அருமையான பாடல்.

  நான் படம்லாம் சின்ன வயசுல அவ்வளவு பார்த்ததில்லை (அதுக்கெல்லாம் காசு கொடுக்க மாட்டாங்க. எங்க அப்பா, படம் நல்லாருக்குன்னா, என்னையும் கூட்டிக்கிட்டுப் போவாங்க). எங்க கல்லூரில, 'திரைப்பட அப்ரிசியேஷன் சங்கம்'னு வச்சு, ஒரு வாரமோ பத்து நாளோ தினம் ஒரு படம் போட்டு அதனை விமர்சிக்கிற, அதன் அழகைப் பற்றிப் பேசுவதாக வைத்திருந்தார்கள். அதில்தான் இந்த உதிரிப்பூக்கள் படத்தைப் பார்த்த ஞாபகம்.

  நீங்களாவது ரொம்பப் பிடித்த பாடலைப் போடறீங்களே... வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ///நீங்களாவது ரொம்பப் பிடித்த பாடலைப் போடறீங்களே... வாழ்த்துகள்.///

   நன்றி நன்றி...
   ஹா ஹா ஹா அப்போ ஸ்ரீராம்?:))...

   ஸ்ரீராம் இதைப் பார்த்திட்டும் எப்பூடி அமைதியாக இருக்கிறார்ர்:)) ஒருவேளை காசிக்குப் போய் வந்தமையாலோ:))

   Delete
  2. மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.. நான் தான் பதில் போடத் தாமதம் ஆகிட்டேன்ன்.. காரணம் வேறு ஒன்றும் பிஸியாக இருந்தேன்ன்.. சத்துப் பொறுங்கோ அது என்ன எனச் சொல்றேன்ன்:)))

   Delete
  3. //சத்துப் பொறுங்கோ அது என்ன எனச் சொல்றேன்ன்:)))// - ஐயையோ... மீண்டும் உங்களிடமிருந்து 'திங்கக் கிழமை செய்முறையா?' - இன்னும் குழைசாதம் போன்ற பலவற்றைச் செய்துபார்க்கவில்லையே.... லிங்க் கொடுங்க, நிச்சயமா கேக் மாதிரி கட் பண்ணும் உங்க செய்முறைல கேசரி செய்துடறேன்.

   Delete
  4. //நெல்லைத்தமிழன்
   ஐயையோ... மீண்டும் உங்களிடமிருந்து 'திங்கக் கிழமை செய்முறையா?' //

   இதுக்காகவே விரைவில ஒரு குறிப்பு அனுப்பி:) எல்லோரையும் காவிரில ஜம்ப் பண்ண வைக்கோணும்:)).. பூசோ கொக்கோ:))..

   ///லிங்க் கொடுங்க, நிச்சயமா கேக் மாதிரி கட் பண்ணும் உங்க செய்முறைல கேசரி செய்துடறேன்.///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜம்ப் ஆகி ஓட விடமாட்டேன்ன்ன்ன்ன்ன்:)) முதல்ல ஓடர்ல வாங்கோ.. குழை ஜாதம்.. பிறகு ஒடியல் கூழ்.. இவ்ளோம் செய்து முடிச்ச பின்புதான் கேசரி செய்ய விடுவேன்:)).. முடிவில குல்ஃபி:)).. ஹா ஹா ஹா நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 46. வணக்கம் அதிரா சகோதரி

  கார்ட் பெட்டியிலும் இடமில்லை என்ற போதும், எப்படியோ தொத்தி ஏறிக்கொண்டவள், மறுபடியும் விட்டதை தொடர ரயிலிலிருந்து இறங்காது தொடருகிறேன்..

  முகப்பு பாடல் இனிமையானது. எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாதது. இப்போதும் கேட்டு ரசித்தேன். நன்றி.

  ரோஜா மலர்களுக்கிடையே வைக்கப்பட்ட மணிப்பிளாண்ட் செடி அழகாக இருக்கிறது. இங்கு எங்கள் இல்லத்தில் வாசலில் தொட்டியில் வளர்க்கிறோம். முதலில் மடமடவென்று இலைகள் வளர்ந்து விரிந்து அழகாக கம்பியை சுற்றி படர்ந்து வந்தன. இப்போதும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஏதோ "மணியான பிளானில்" சற்று யோசித்துக்கொண்டு உள்ளது. இதில் நிறைய வகைகள் வேறு உண்டோ? தெரியவில்லை.

  ஊசி குறிப்பும், ஊசிஇணைப்பும் அருமை. கண்ணதாசனின் வரிகள் ஆழமானவை. அனைத்தும நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. //கார்ட் பெட்டியிலும் இடமில்லை என்ற போதும்,//
   இல்ல இல்ல கவலைப்படாதையுங்கோ.. நடு நடைபாதையிலும் குஷன் போட்டு எல்லோரையும் இருக்க விட்டிருக்கிறேன் உங்களுக்கும் இடமிருக்குது கமலாக்கா..:)

   பாட்டை ரசித்தமைக்கு நன்றி.

   //இங்கு எங்கள் இல்லத்தில் வாசலில் தொட்டியில் வளர்க்கிறோம்//
   இங்கு வெளியே வைக்க முடியாதெல்லோ.. வீட்டுக்குள்ளேயும் அவவுக்கு குளிர் பிடிக்குது போலும்.. அதனாலேயே வளரக் கஸ்டப்படுறா...

   //ஆனால் ஏதோ "மணியான பிளானில்" சற்று யோசித்துக்கொண்டு உள்ளது. இதில் நிறைய வகைகள் வேறு உண்டோ? தெரியவில்லை.
   //
   ஒரே வகைதான் பார்க்கிறேன்ன்.. என்ன சிலது இலைகள் கொஞ்சம் பெரிதாகவும் சிலதுக்கு குட்டியாகவும் இருக்கும்.. பசளையைப் பொறுத்து... ஆனா இந்த மணிப்பிளாண்டின் விசேசம் என்னவெனில்.. வீட்டுக்குள்தானாம் வைக்க வேணும்.. அப்போதான் மணி மணியாக் காய்ச்சுக் கொட்டுமாம்:)) ஹா ஹா ஹா.

   மிக்க நன்றிகள் கமலாக்கா.

   Delete
 47. ஆஹா ...ஆஹா ...


  செம்மையா இருக்கு அதிரா குல்பி ..

  போன வருஷம் இந்த mould தேடி இந்த வருஷம் அழகிய வண்ணத்தில் வாங்கி ...mango குல்பி செஞ்சா சொதபிடுச்சு ...பரவாயில்ல ..

  திரும்ப இந்த வாரம் செய்யணும் ன்னு இருக்கும் போது ரொம்ப ஈசியா அதிரா போஸ்ட்....இதோ போறேன் ..திரும்ப குல்பி செய்ய ...

  செய்றேன் படம் போடுறேன் ...எப்புடி ..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ.. வந்த வேகத்திலேயே குல்பி செய்ய ஓடலாமோ ஹா ஹா ஹா செய்து போடுங்கோ பார்ப்போம்.. மிக்க நன்றி அனு.

   Delete
 48. அழகாக அருமையாக செய்து உள்ளீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ மிக்க நன்றிகள்.

   Delete
 49. குல்பி ஐஸ் என்பதும் நடிகை லைலா நினைவில் வருகின்றது.உங்கள் ஐஸ் செய்முறை இனித்தான் செய்து பார்க்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வாங்கோ.. அடிக்கடி காணாமல் போயிடுறீங்க உங்கட புளொக்கைப்போல:)) நலம்தானே? குட்டீஸ் இருவரும் எப்படி இருக்கிறார்கள்?..
   குல்ஃபி செய்து படம் போடுங்கோ..

   Delete
 50. கண்ணதாசன் பொன்மொழிகள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. கண்ணதாசன் அங்கிள் வாய் திறந்தாலே முத்தாகத்தான் கொட்டும்:)) அதனால்தான் அவருக்கு முத்து எனப் பெயரோ.. ஹா ஹா ஹா.

   Delete
 51. உதிரிப்பூக்கள் பாடல் நெஞ்சில் ஓர் ராகம்.இலங்கை பண்பலையில் ஒலிநாடா தேய்ந்து போனது![[[

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அப்படியோ நேசன் அவ்லோ பிடிக்குமோ ..
   மிக்க நன்றி..

   Delete
 52. ஜில்லென்று ஒரு பதிவு
  அருமை சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கரந்தை அண்ணன்.. மிக்க நன்றி.

   Delete
 53. ஆஹா, அதிராவே செய்த ஐஸ் லொள்ளூ....ஸா?

  அதாவது லொள்ளு லூஸா?

  பின்னூட்டமிட்ட அனைவருக்குமே குச்சி ஐஸ் கொடுத்தீங்களோ?

  நெல்லைத்தமிழன் ஸ்வாமிக்கு நிறைய கிடைத்திருக்குமே !

  எனக்குக் குச்சி ஐஸ் கிடையாதா? :( கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... புதுப்போஸ்ட்டும் வந்துவிட்டது இங்கு நீங்க இன்னும் பழசிலேயே நிக்கிறீங்க:)).. போனாப்போகுது ஒரு குல்ஃபி ஐஸ் மட்டும் எடுங்கோ:) ஓவர் சீனி உங்களுக்கு ஆகாது:).. பிறகு எப்படி மொட்டைமாடிப்படியில ஏறுவீங்க உச்சியில் இருக்கும் குண்டுப்பிள்ளையாரைப் பார்க்க:)).. ஹா ஹா ஹா..

   உங்கட ஸ்வாமி:) புதுப்போஸ்ட்டில நிக்கிறார்:))..

   மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.