நல்வரவு_()_


Friday 31 May 2019

வீட்டுக்குள்ளே திருவிழா:) + பூசணிப் பக்கோடா:)

ங்கட வீட்டுக்குள் இப்போ நான் வளர்க்கும் சில குட்டிச் செடிகளை உங்களுக்குக் காட்டப் போகிறேன்.. பார்த்து மகிழ்ந்து சிரியுங்கோ:), இதில் நான் பேச வேண்டியதில்லை:), படம் பேசும்:).
இது வீட்டுக்கு வெளியே.. கோழிக் கொண்டைப்பூ என்போம் ஊரில்:)..

இது முற்றத்தில்.. டெய்சிப்பிள்ளைக்குக் கடிக்குதாம் சொறிகிறா:)


 ((((((((((((((((((((((((இடைவேளை)))))))))))))))))))))))
நியூஸ் பாருங்கோ.. குயின் அம்மம்மாவைப் பார்க்க ட்றம்ப் அங்கிள் வாறார்:).. அதுக்கு தலைமை தாங்க அதிராதான் வரோணும் என குயின் அம்மம்மா பாதி லெக்கில் நிக்கிறா:)).. நான் என்ன பண்ண முடியும்?:) போகத்தான் போகிறேன்ன்:))
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

ஆவ்வ்வ் யாருக்குப் ஃபலூடா வேணும்:)) என்ன சுசியப்பா:))
++++++++++++++++++++++++++++++++++++++++
==========================

வாவ்வ்வ் இது என் பூசணிப்பக்கோடா, செய்தேன், மிக அருமை எனச் சொல்ல மாட்டேன், நன்றாக இருந்தது, இனிப்புத்தன்மையாக இருந்தது...
கடலைமா, அரிசிமா, உள்ளி, இஞ்சி.. ஆனா இஞ்சி போட்டிடாதீங்கோ.. படத்தில் இருக்குது, ஆனா போட வேண்டாம், சுவை மாறுது. மற்றும்படி வெங்காயம், பச்சை மிளகாய், பூசணியைக் கிரேப் பண்ணி எடுக்கோணும்..


உப்பும் சேர்த்து அனைத்தையும் பிசைந்து.. அழகிய பக்கோடா:))

விரும்பிய சோஸ் உடன் தொட்டூத்...தொட்டுச் சாப்பிடுங்கோ:))
ஊசி இணைப்பு:)
ஹா ஹா ஹா:)
ஊசிக்குறிப்பு
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
இந்தப் பாடல்கள் வெளிவந்த படம் ~வீட்டுக்குள்ளே திருவிழா~.. இது மாமியிடமிருந்து எடுத்து வந்த சிடியில் இருந்துது ஒரு 6,7 வருடங்களின் முன்பு, அப்போ படம் என்ன எனவும் தெரியாது.. அப்போ தொடங்கி யூ ரியூப்பில் தேடினேன் கிடைக்கவில்லை, சமீபத்தில்தான் ஒரு அண்ணா தேடிக் குடுத்தார்.. அது பத்திரமாக இருக்கட்டுமே என இங்கு லிங் இணைக்கிறேன், விரும்பினால் கேட்டுப் பாருங்கோ.. மொத்தமும் நகைச்சுவைப் பாடல்கள்.. ஆனா படம் வெளியாகவில்லைப்போல தெரியுது, வீடியோ நல்லமில்லை, பாடல் மட்டும் கேட்கலாம்.


💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

120 comments :

 1. படங்களின் தெளிவு மிக மிக அருமை வாழ்த்துகள் அதிரா.

  பக்கோடாவை பார்சல் அனுப்பலாமே...

  ஊசி இணைப்பு அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

   படங்கள் தெளிவு// ஹா ஹா ஹா சத்தமாச் சொன்னால் நெல்லைத்தமிழன் அடிக்க வருவார்ர்ர்:)) ஓவர் தம்பட்டம் அடிக்கிறேன் என:)) ஆனாலும் ஜொள்ளத்தானே வேணும்:)) அது நான் ஐ ஃபோன் 10 வாங்கிட்டேன்ன்:)) ஆஆஆஆஅவ் பிளீஸ்ஸ் கில்லர்ஜி படிச்சதும் கிழிச்சு உங்கட அந்த அம்மன் கோயிலுக்கு முன்னால இருக்கும் ஜேம்ஸ் ஊரணி[கில்லர்ஜி பாஷையில:)] எறிஞ்சிடுங்கோ பிளீஸ்ஸ்:))..

   ஆஆஆஆஆ என் பக்கோடாவுக்கு வந்திருக்கும் முதல் ஓடர்ர்:)).. சே..சே ஓடரை எடுக்காமல் என் செக் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறா அங்கு கர்ர்ர்ர்ர்:))..

   மிக்க நன்றி கில்லர்ஜி..

   Delete
  2. ஐபோன் 10க்கே பகோடா இந்தக் கலரில் தெரிந்தால், சாதாரண போனில் எடுத்திருந்தால் பழைய 'புகை இரதத்தை' நினைவுபடுத்தியிருக்குமோ? ஹாஹா

   Delete
  3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இல்ல பக்கோடாவை எடுத்தது பழைய ஐஃபோன்:))

   Delete
 2. பூசனிப் பக்கோடா - உலகத்துல கேள்விப்படாததெல்லாம் செய்து பார்க்கிறீர்களே...

  இனிப்பா இருந்ததா? என்ன கொடுமை சரவணன்.... உப்பு போட மறந்தீங்களா இல்லை இது பறங்கிக்காய் பகோடாவா?

  ReplyDelete
  Replies
  1. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSORMinxDjJMDR-OZ0aURcK8Grjw8mMhAIGSaU6nl-i07jrOQ3D2A[/im]

   இந்த ட்ரெய்லர் எனது பரிசு நெல்லைத்தமிழனுக்கு :) சைக்கிளில் அட்டாச் செஞ்சி இதில் அந்த ஆயாவை கூட்டிட்டு போக சொல்லுங்க .இன்னிக்கு செகண்ட் வந்தவர் அவர்தான்

   Delete
  2. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. ஆவ்வ்வ்வ் கரெக்ட் ரைமுக்கு வந்திருக்கிறிங்க:) என் புளொக் வழக்கப்படி என் கண்ணான ஆயாவை இன்று உங்களிடம் ஒப்படைக்கிறேன்.. ஏசிக் காரில ஏத்திப் போங்கோ:).. அவவுக்கு அங்கு சென்னை வெயில் ஒத்துக் கொள்ளாது:) அதனால எபவும் ஏசி போட்டே வச்சிருங்கோ பிளீஸ்ஸ்:)).. அடிக்கடி அவவுக்கு லர்ஜி, சொறி கூட வந்திடுது எதுக்கும் நல்ல ஆயுள்வேத டொக்டரிடம் ஸ்ரெயிட்டாக் கூட்டிப் போங்கோ:).. அவவுக்கு இப்போ 99.5 வயசு:)) எப்படியும் அவ 100 வயசு பேர்த்டே கொண்டாடோணும் என்பதே எங்கட ஆசை:)).. அவவின் 100 ஆவது பேர்த்டேக்கு அஞ்சு ஆயாவுக்கு வைர மூக்குத்தி போடுவேன் எனச் சொல்லியிருக்கிறா:)).. ஹா ஹா ஹா... பின்பு பேர்த்டே எந்த ஹோலில் கொண்டாடலாம், சாப்பாட்டு அரேஞ்மெண்ட் எல்லாம் வட்ஸப்பில் பேசுவோம் இங்கு வாணாம் ஹா ஹா ஹா:))

   Delete
  3. //
   பூசனிப் பக்கோடா - உலகத்துல கேள்விப்படாததெல்லாம் செய்து பார்க்கிறீர்களே...//

   அதிரா எப்பவும் வித்தியாசமான பிள்ளை:)) இப்போதாவது நம்புங்கோ:)) ஹா ஹா ஹா.
   ஹையோ இது பறங்கிக்காயேதேன்ன்ன்:)).. நாங்கள் பொதுவில பூசணி என்போம்.. இது சக்கரைப்பூசணி:))

   போனதடவை விளக்கமாக இரு பெயரையும் போட்டேன், ஸ்ரீராம்தான் சொன்னார், இல்ல சக்கரைப்பூசணி எனவும் சொல்லுவோம் பறங்கிக்காயை என.. அப்போ புரியும் என நினைச்சு பூசணி என்றேன் சோட் அண்ட் சுவீட்டா:)) ஹா ஹா ஹா...

   Delete
  4. //சைக்கிளில் அட்டாச் செஞ்சி இதில் அந்த ஆயாவை கூட்டிட்டு போக சொல்லுங்க .இன்னிக்கு செகண்ட் வந்தவர் அவர்தான்//

   ஹா ஹா ஹா அஞ்சுவின் கொமெண்ட்டை இப்போதான் பார்த்தேன்:)).. இது ஆயாவுக்கு சரிவராது அஞ்சு.. நல்ல பி எம் டபிள்யூ அல்லது அவ்டிக் காரில ஏசி போட்டு.. ஆட்டாமல் குலுக்காமல் நல்ல ஸ்மூத் ரோட்டால கூட்டிப் பொகோணும் ஆயாவை.. இல்லாட்டில் அவவை மசாஜ் பண்ணக் கூட்டிப் போகவேண்டி வந்திடும்:))..

   நாங்க அவவி எங்கட வலது கண்ணாகப் பாதுகாத்தோம்ம்.. இப்போ எங்க கண்ணையே ஒப்படைக்கிறோம் நெ.தமிழனை நெம்ம்ம்ம்பி:)) ஹா ஹா ஹா...

   Delete
  5. //அதனால எபவும் ஏசி போட்டே வச்சிருங்கோ பிளீஸ்ஸ்:)).. // - அடடா... ஒரு சின்ன பிரச்சனையாயிடுச்சு. சென்னை வெயில் தாங்க முடியாமல், புது ஏசி வாங்கினேன். ஆனா ஃபிக்ஸ் பண்ணினவன் அவுட்டோர் யூனிட்டை வீட்டுக்குள்ளயும், இண்டோர் யூனிட்டை மாடிலயும் வச்சு ஃபிக்ஸ் பண்ணிட்டான். அதுனால நாங்களே வீட்டைப் பூட்டிவிட்டு மொட்டை மாடிலதான் குடியிருக்கிறோம்.

   அதுனால அடுத்த சம்மர்ல கூட்டிட்டுப்போறேன். இப்போ ஏஞ்சலிண்ட தள்ளிவிட்டுடுங்கோ

   Delete
  6. //இப்போ எங்க கண்ணையே ஒப்படைக்கிறோம் // - அவனவன், தன்னோட பெண்ணைத்தான் இன்னொருத்தண்ட ஒப்படைச்சு இந்த வசனத்தைச் சொல்லுவான். நீங்க என்னடான்னா? ஸ்காட்லாந்துனாலே எல்லாம் தலைகீழ் போலிருக்கு...

   Delete
  7. //அதுனால நாங்களே வீட்டைப் பூட்டிவிட்டு மொட்டை மாடிலதான் குடியிருக்கிறோம்.//
   அது பறவாயில்லை நெல்லைத்தமிழன்:) அவவுக்கு நிலா வெளிச்சத்தில் குடும்பமாகப் படுப்பதுதான் பிடிக்குமாம்:)) ஆயாவைப் பத்திரமாக நடுவில் விட்டு நீங்க எல்லோரும் சுற்றிவரப் படுத்துத் தூங்குங்கோ பிளீஸ்ஸ்:) அவவுக்கு இருட்டுக்குப் பயம்:))..

   //அதுனால அடுத்த சம்மர்ல கூட்டிட்டுப்போறேன். இப்போ ஏஞ்சலிண்ட தள்ளிவிட்டுடுங்கோ//

   ஹா ஹா ஹா அஞ்சுவிடம் போனதடவை அனுப்பிய ஆயாவையே சமாளிக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறா அவ:))

   Delete
  8. //நீங்க என்னடான்னா? ஸ்காட்லாந்துனாலே எல்லாம் தலைகீழ் போலிருக்கு...//

   வயசானால்ல். ஆயாவும் குழந்தைதானே:)).. நீங்க என்ன ஜொன்னாலும்பறவாயில்லை ஆயாவை மட்ட்டும் பத்திரமாகக் கூட்டிப் போய் வச்சிருங்கோ:)) அவவுக்கும் பழைய பிரசித்தியான கோயில்கள் பார்க்க ஆசையாம்:)) நீங்க போகும்போது அவவையும் கூட்டிப்போய்ப் படமெடுத்து செல்பி அனுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)).. ஆயா இல்லாமல் எங்களுக்கு ஒரே போறிங்கா இருக்கு:)) ஹா ஹா ஹா...

   Delete
 3. செடிகள், பூக்கள் படங்கள் மிக அருமை.

  அந்த முள்முள்ளா இருக்கற கள்ளிச்செடிதான் எனக்குப் பிடிக்காது. தவறுதலா குத்திவிடும் என்பதால்.

  நதி, மலை, வானம் இவை மிக அழகாக வந்திருக்கின்றன (அதிசயமாக). போட்டோகிராபிக் கோர்ஸ் ஏதேனும் சமீபத்தில் படித்தீர்களா?

  ReplyDelete
  Replies
  1. கள்ளிச்செடி வீட்டுக்குள் வளர்த்தால் நல்லதாமே. இதுக்கு ஒரு 5 வயசாவது இருக்கும். கடையில குட்டிக் குட்டி கள்ளிச் செடி விற்கிறார்கள் அது பல்ப் பூட்டியதுபோல பச்சை மஞ்சள் நிலம் சிவப்பு என பூத்திருக்கு, ஆனா இது பூக்கவில்லை.. வேறு இனமோ தெரியவில்லை... ஆரம்பம் எங்களுக்கும் பயம் முள்ளு குத்துமோ என, ஆனா அப்படி இல்லை, தொட்டால் மட்டுமே குத்தும்.. நமக்கெதுக்கு ஊர் வம்பு.. களியைத் தொடுவானேன் கவலைப்படுவானேன் என இருப்பதால் இதுவரை எந்தத் தொல்லையும் இல்லை:))...

   ///(அதிசயமாக). போட்டோகிராபிக் கோர்ஸ் ஏதேனும் சமீபத்தில் படித்தீர்களா?///

   மேலே கில்லர்ஜிக்கு குடுத்த பதிலைப் படியுங்கோ.. இப்ப படிக்கக்கூடா கர்:)) நான் கொம்பியூட்டரை மூடிவிட்டு ஓடியபின் படிங்கோ:)) ஹா ஹா ஹா:))

   Delete
 4. ஃபலூடா பாட்டில்ல வருதா? நல்லாவா இருக்கும்? அவங்களே உடனேயே செய்துகொடுக்கும்போதுதான் (ஜெல்லி, சேமியா, நட்ஸ், ஐஸ்க்ரீம், மற்றவைகள்) பார்க்க அழகாகவும் ருசியாகவும் இருக்கும்.

  ஏதோ.... ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி

  ReplyDelete
  Replies
  1. ///ஃபலூடா பாட்டில்ல வருதா? நல்லாவா இருக்கும்?//
   ஓம் இங்கு பொட்டிலில்தான் கிடைக்குது.. விதம் விதமாக ஒரு பொட்டிலின் விலை 2.35 ஓ என்னமோ.. நல்ல ரேஸ்ட்.. ஆனா கடையில் கப் இல் குடிப்பதுபோல வராது.. இதன் உள்ளே கசகசா போன்ற விதை மட்டுமே இருக்கும்.. அது வேறு ஏதோ விதை எனவும் சொன்னார்கள்.

   //ஏதோ.... ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது என்னமோ உண்மைதான்:))

   Delete
  2. அது சப்ஜா விதை ...

   Delete
  3. சப்ஜா என்பது ஹிந்தி எல்லோ அனு?.. அதுக்கு தமிழில் ஏதோ நன்கு தெரிஞ்ச பெயர் கேள்விப்பட்டேன்.. விசாரிச்சுச் சொல்றேன்ன்..

   Delete
  4. சப்ஜா விதை திருநீற்றுப் பச்சை, துன்னூற்றுப் பச்சிலை அதான் பேசில் என்று சொல்லுவோமெ அதன் விதைகள் தான்...ஆனா பொதுவாவே சப்ஜானுதான் சொல்லுறோம்...நாங்கள் அடிக்கடி ஜூஸில் சேர்த்துச் சாப்பிடுவது. ஃபல்லூடாவிலும்.

   இங்கெல்லாம் ஃபல்லூடா அப்பப்போ கலந்துதான் தராங்க அதிரா...நன்றாக இருக்கும் மிக ருசியாக இருக்கும். வீட்டிலும் செய்யலாம் ரொம்ப ஈசிதான். நான் சமீபத்தில் செய்யவில்லை அதனால செய்து ஃபோட்டோ எடுத்துப் போட முடியல...

   கீதா

   Delete
  5. திருநீற்றுப்பச்சிலை விதையோ? எனக்கு இந்த சப்ஜா விதை ரொம்பப் பிடிக்கும். நாக்கில் வைத்து அதனைப் பிடிப்பதே ஒரு வேலை. உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

   Delete
  6. ஆஆஆஆங் கீதா, கேட்டறிஞ்சிட்டேன்ன் அது சப்ஜா என்றால், திருநீற்றுப் பச்சை இல்லை.. அது ஒருவித “நன்னாரி விதைகளாம்”.. நான் பார்த்த நன்னாரி எங்கள் ஊரில்... நிலத்தில் பூண்டுபோல வளரும் அது காய்க்காது வேர் மட்டும் எடுக்கலாம்.

   ஆனா இந்த நன்னாரி பெரிய மரம், வீடியோ பார்த்தேன்
   here is the link..

   https://www.youtube.com/watch?v=UcD4gogk6Yc

   Delete
  7. //உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது.//

   ஓ... எங்கள் வீட்டிலும் எல்லோருக்குமே அது பிடிக்கும் நெல்லைத்தமிழன், ஆனா இவ்ளோ காலமும் அது பொப்பி சீட்ஸ் எனத்தான் நினைச்சிருந்தேன்.

   Delete
 5. ஆரஞ்சு நிறம், வெண்மை நிறம் (வெங்காயம், பூண்டு), கடலைமா, அரிசிமா, பச்சை மிளகாய் இதெல்லாம் போட்டு, கறுப்புக் கலர்ல போண்டா செய்கிற வித்தை உங்களுக்குத்தான் வரும்.

  இதுக்குத்தான் அடுப்பு வேலையில் இருக்கும்போது மொபைல்ல நோண்டிக்கிட்டே இருக்கக்கூடாது, வாட்சப் மெசேஜ் வந்திருக்கான்னு விநாடிக்கு ஒரு தடவை பார்க்கக்கூடாது

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அது நெலைத்தமிழன் எனக்கென்றே அமைஞ்சிடுது கறுப்பு உளுந்தைபோல.. இதுவும் அரிசிமா சிவப்பு:)) அதனால கறுத்துப் போச்சு:)) ஹா ஹா ஹா.

   //வாட்சப் மெசேஜ் வந்திருக்கான்னு விநாடிக்கு ஒரு தடவை பார்க்கக்கூடாது//
   நான் அஞ்சு இல்லையாக்கும்:))...
   பொதுவா ஆண்களாலதான் ஒரு நேரம் ரெண்டு வேலை செய்ய முடியாது.. மீறிச் செய்தால் தப்பாகிடும்.. ஆனா நாங்க அப்படி இல்லையாக்கும்.. ஒரே நேரத்தில 3 வேலை செய்வோம்:)) ஹா ஹா ஹா.

   Delete
  2. அது என்ன சிவப்பா ன்னு பார்த்தேன் ...அரிசி மாவா ..ஓகே

   Delete
 6. என்னன்னவோ பாடல் காணொளி லிங்க் கொடுத்திருக்கீங்க... மத்தவங்க கேட்டுட்டு என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு முடிவெடுக்கிறேன்.

  இந்தத் தடவை ஊசிக்குறிப்பு சுமார்தான்.

  ReplyDelete
  Replies
  1. அது இந்தப் பாட்டுக்களை சிடியையும் துலைச்சிட்டேன் அதனால தேடி எடுக்க எவ்ளொ கஸ்டப்பட்டேன் தெரியுமோ?:).. அதுதான் தலைப்பையும் கொடுத்து உள்ளே லிங்கையும் இணைச்சேன்ன்.. அது நீங்க ஆரும் விரும்பினால் கேட்கலாம் மற்றும்படி எனகாகவே சேவ் பண்ணியிருக்கிறேன்ன்.. வேறு எங்கு வச்சாலும் அழியும் அபாயம் உண்டு ஆனா புளொக்கில் போட்டு வச்சால் கால காலத்துக்கும் இருக்கும். பல படங்கள்கூட அப்படித்தான்.. புளொக்கில் போட்டு வைப்பதனால இப்பவும் கிடைக்குது.

   இப்போ நம் மக்கள்ஸ் இருக்கும் விறுவிறு பிஸியில் எங்கே லிங் ஓபின் பண்ணிப் பாட்டுக் கேட்பது:))..

   ஊசிக்குறிப்பு எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே என்ன... நெக்ஸ்ட் ரைம் பெட்டரா போடுறேன்:))

   Delete
 7. //வீடியோ நல்லமில்லை// - இது என்ன மொழி? யாருக்கேனும் புரியுதா?

  ReplyDelete
  Replies
  1. அது :) பாடல் மட்டும் கேட்கலாம் காணொளி அவ்ளோ நல்லா பொருத்தமில்லைனு சொல்றாங்க :))

   not too good is the meaning

   Delete
  2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெ.தமிழன்...:)
   நல்லமில்லை எனில்.. நல்லது இல்லை:))) பாருங்கோ என் செக் எவ்ளோ தெளிவா இருக்கிறா:)).. அஞ்சூஊஊஊஊஉ எனக்கென்னமோ டவுட்டா இருக்கு:)) அவர் தெரிஞ்சுகொண்டேதான் கேட்கிறார்:)) ஹா ஹா ஹா

   மிக்க நன்றி நெ.தமிழன்..

   Delete
  3. அதிரா... உங்க மொழி அனேகமா எனக்குப் புரிந்துவிடும் (உருளையை தாட்டியதைத் தவிர ஹாஹா)

   Delete
  4. //அதிரா... உங்க மொழி அனேகமா எனக்குப் புரிந்துவிடும் //

   ஹா ஹா ஹா.. நானும் புரியும்வரை விடமாட்டனே:)).. இன்னொரு சங்கதி கேள்விப்பட்டேன் நெல்லைத்தமிழன்.. கவனிச்சீங்களெண்டால் தெரியும்...

   தமிழ்நாட்டில் உணவு வகைகள் சரி, பாசை சரி.. இலங்கைப் பக்கம் போகப்போக இலங்கையைப்போலவே இருக்குது...

   பாருங்கோ, தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் இருப்போர்.. இறா என்கின்றனர், ஆனா தஞ்சாவூர்ப்பக்கம் இருப்போர் இறால் என்கின்றனர் .. நாங்களும் அப்படித்தான். அதுபோல.. ராமேஸ்வரப்பக்கம் .. நீங்க பையன் எனச் சொல்வதை, பெடியன் என்கின்றனர் எங்களைப்போல ஹா ஹா ஹா யூ ரியூப் பார்ப்பதால் நிறைய அவதானிக்க முடியுது:)..

   Delete
 8. ஹலோவ்வ்வ் மியாவ் வந்துட்டே இருக்கேன் :) மிக மிக பிசி டே இன்னிக்கு எச்சூஸ்மீஈ

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. எனக்கும்தான்.. ரைம் சரியாக கிடைக்குதில்லை, ஆனாலும் சோர விடாமல் ஏதாவது போடோணும் என நினைச்சு போஸ்ட் போட்டேன்ன்.. இன்று விட்டால் இனி புதன் கிழமைதானே போட முடியும்.. அதனாலதான்.

   Delete
 9. முதல் படம் anthurium செடி அழகுதான் ஆனா பூஸார்ர்களுக்கு வாய் கழுத்தில் அலர்ஜி வரும் ஆகவே நீங்களும் டெய்சியும் இந்த செடிகிட்ட போகாதீங்க .இட் is டொக்ஸிக் ஐ மீன் toxic

  ReplyDelete
  Replies
  1. அந்தூரியத்தில் அலர்ஜி உண்டோ? ஓ அந்த பூவினுள் ஒரு மஞ்சளாக வருமே அதிலிருக்குமோ.. தெரியல்ல அஞ்சு.. அப்படி ஏதும் வித்தியாசம் இதுவரை வந்ததில்லை.. ஒரு வருடமாகுது நட்டு.. எப்பவும் பூத்தபடியேதான் நிக்கிறா.

   //நீங்களும் டெய்சியும் இந்த செடிகிட்ட போகாதீங்க///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

   ///இட் is டொக்ஸிக் ஐ மீன் toxic// டோண்ட் நோ அஞ்சு பட் இன்சைட் பிளாண்ட்...

   Delete
 10. second is SPIDER PLANT - CHLOROPHYTUM COMOSUM

  இது formaldehyde and carbon monoxide ஐ சுற்றுப்புறத்தில் இருந்து எடுத்துக்கும்

  ReplyDelete
  Replies
  1. அல்லோ ஆராட்சி அம்புஜமே.:).. எங்க தேடித்தேடி இதெல்லாம் எடுத்து வாறீங்க:).. இவை எல்லாம் வீட்டு எயாரை சுத்தப்படுத்தும் பிளாண்ட்ஸ் வகைதான் அஞ்சு.. இவை வளர்த்தால் நமக்கு நல்லதாம். அதுவும் வெளிநாடுகளில் எப்பவும் கதவு ஜன்னல் மூடியே இருப்பதால், இப்படி பிளாண்ட்ஸ் நமக்கு கெல்ப் பண்ணும்.

   இந்த ஸ்பைடரை வேறு வேறு இடங்களிலும் வைத்திருக்கிறேன்ன்.. ஒரு தண்டிலேயே வேர் விட்டு அதிலேயே கன்று உருவாகும்.. அதைப் பிடுங்கி நட்டால் வளரும்..

   Delete
 11. மூன்றாவது indoor palm இல் ஐவியியை ஏத்தி விட்டிருக்கிங்க :) இந்த ஐவியை ஐ மீன் ivy யை பின்தோட்டத்தில் வச்சி புத்தராகிடுச்சி எங்க தோட்டம் .ஆனா சிட்டுஸ் என்ஜாய் செய்றாங்க

  ReplyDelete
  Replies
  1. இது என்ன புதுசா? தோட்டம் புத்தராகுதா இல்லை புதராகுதா? அவசரத்துல ஒவ்வொரு பின்னூட்டத்திலும் இன்னைக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. (கீரிக்கும்? இது என்ன பாம்பு கீரின்னு நினைச்சீங்களா? கீறி. அப்புறம் செலோசியா ஏன் காஞ்சீபுரம் போனது? 'வள ப்ரூன் செய்யணும்'-இது என்ன ஆப்பிரிக்கன் லேங்குவேஜ்? சொரியரா - சொறியறா) இருந்தாலும் அவசர அவசரமா வந்து நிறைய பின்னூட்டம் போட்டிருக்கீங்க. அதிரா மன்னிச்சுடுவாங்க (அவங்களுக்கு இந்த பிழைகள்லாம் புரிஞ்சா)

   Delete
  2. ஸ்ஸ்ஸ் யப்பாடி :) இன்னிக்கு நிறைய மிஸ்டேக்ஸ் தான் கண்ணாபின்னானு அடிச்சி விட்டிருக்கேன் :) அது வேறொரு வேலை
   மல்டி டாஸ்க்கிங்கில் பிழைகளை கவனிக்கலை :) ஹாஹாஆ

   Delete
  3. அந்தக் கொடி உள்ளேதான் இங்கு நல்லா வளருது அஞ்சு, வெளியேஎயும் வச்சேன்ன். அது கொடி மட்டும்தான் இருக்குது இலை வருகுதில்லை.. குளிர் ஓவரா இருந்தாலும் தாங்காதுபோலும்.

   //நெல்லைத்தமிழன்Friday, May 31, 2019 2:38:00 pm
   இது என்ன புதுசா? தோட்டம் புத்தராகுதா இல்லை புதராகுதா?//

   ஹா ஹா ஹா மீயும் நடுங்கிப்போயிட்டேன்ன் அஞ்சுவுக்கு எப்போ ஞானோபதேசம் கிடைச்சுது என:))..

   //இது என்ன ஆப்பிரிக்கன் லேங்குவேஜ்? சொரியரா - சொறியறா) //
   ஹா ஹா ஹா என் கண்ணுக்கு பாதி தெரிவதில்லை நெ.தமிழன்:)).. அது சரி சொறிவது என்பதுதானே சரி.. சொரிவது என்றால் அது வேறு மீனிங் எல்லோ?:))

   Delete
  4. மல்டி டாஸ்கிங்கா? பெண்கள் அதில் எக்ஸ்பர்ட்னு இப்போதான் ஸ்காட்லாந்த் மேடம் அதிரா அம்மையார் சொன்னாங்க. நீங்க என்னடான்னா ரெண்டு ராஸ்க் பண்ணும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா?

   Delete
  5. ///நீங்க என்னடான்னா ரெண்டு ராஸ்க் பண்ணும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா?

   Delete///

   சே.சே..சே.. எப்பூடித்தான் நம்பாலாரை நாலுவார்த்தை நல்லதா சொல்லி பில்டப் குடுத்து மெயிண்டைன் பண்ணினாலும்:)) இப்பூடி எங்காவது இடையில புகுந்து அஞ்சு புரட்டிப்போட்டிடுறா கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் கண்ணில விளக்கெண்ணெயோடுதான் இப்போ என் பக்கமெல்லாம் வ்ந்து உலாவுறார் என்பது அஞ்சுக்கு மறந்து போச்ச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா:).

   Delete
 12. காக்டஸ் நாலாவது :) என் பொண்ணு அவ ரூமில் வச்சிருக்கா .நான் லிவிங் ரூமில் வைப்பதில்லை குழந்தைங்க கீரிக்குமேனு

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இந்தக் கீரி:) யைத்தானோ நெ.தமிழன் மேலே சொல்லியிருக்கிறார் ஹா ஹா ஹா.. எங்கட டெய்சிக்கு தெரியும் அஞ்சு, அவ படு ஷார்ப்பூஊஊஊ அவட மம்மியைப்போலவேதான்.. நான் சும்மா கீழே நடைபாதையிலதான் வச்சிருக்கிறேன்.. கிட்டப் போக மாட்டா... அவர்களுக்கு புரியும் எதனருகில் போகலாம், எதனருகில் போகக்கூடா என:))

   Delete
 13. கேக்டஸுக்கு கீழிருப்பது நம்ம ராஜ்கிரா அமரந்த் வெரைட்டியில் ஒன்று celosia நானும் வளர்த்து வச்சேன் தோட்டத்தில் அது பெரிசா வளர்ந்து இடத்தை அடைச்சு அப்புறம் காஞ்சி போனது .ஒரு ஆப்பிரிக்க நண்பர் சொன்னார் அதையும் சாப்பிடலாம்னு நான் ரிஸ்க் எடுக்கலை அதுகூட இருப்பவை மரிகோல்ட் பூக்கள்

  ReplyDelete
  Replies
  1. அந்தப்பூ காய்ஞ்சால் உள்ளே கீரை விதைபோலதான் வரும்.. அதை மீண்டும் விதைச்சால் கன்றுகள் உருவாகும்... ஆனா இங்குதான் சமரோடு எல்லாம் பட்டு விடுமே.. பின்பு திரும்ப வாங்கித்தான் வைக்கோணும்.. ஓம் அது மரிகோல்ட் தான் ஆனா நாம் அப்படி அழைப்பதில்லையே.. செவ்வந்தி என நம் பாசையில அழகாகத்தானே சொல்லுவோம்ம்ம். நீங்க அப்படி சொல்ல மாட்டீங்களோ..

   Delete
 14. முற்றத்து செடிகள் அழகு அதில் வரிசையா இருப்பவர் ஹெட்ஜிங் செடார் //cedar .எங்க தோட்டத்தில் வச்சிருக்கேன் அது வளர வள ப்ரூன் செய்யணும் நீங்க தொட்டியில் வச்சது நல்லது .டேய்ஸ் எதுக்கு சொரியரா ?? குழந்தைக்கு பிளாண்ட்ஸ் அலர்ஜி வராம பார்த்துக்கோங்க

  ReplyDelete
  Replies
  1. அது 4 அடி உயரம் வரைதான் வளரும் வெரைட்டியாக வாங்கி வச்சோம் அஞ்சு.. இனி அகலமாக வளருமே தவிர உயரம் வராது. இலைகளை மணந்து பார்த்தால் ஒருவித மிண்ட் வாசம் வரும்:).. டெய்சிப்பிள்ளைக்கு செல்லம்:)) நான் படம் எடுக்கிறேனாம் அதுதான் சும்மா எல்லாம் சொறிஞ்சு காட்டுறா ஹா ஹா ஹா...

   Delete
 15. உங்க அக்கா குவீன் கூப்பிட்டா போயி ஆகணும் :) அதனால் போய் வாங்க வந்து விளக்கமா பதிவும் போடணும்

  ReplyDelete
  Replies
  1. //குவீன்//

   நெல்லைத்தமிழன் ஓடிவாங்கோ இதை விட்டிட்டீங்களே:)) ஹா ஹா ஹா.. இப்போ குயின் அம்மம்மா அஞ்சுவை நாடு கடத்தப்போறா:))..

   //அதனால் போய் வாங்க வந்து விளக்கமா பதிவும் போடணும்//

   ஹா ஹா ஹா ஒஃப் கோஸ்ஸ்:)) அதுதான் எனக்குப் பந்தி பந்தியா எழுத வருமே:)) போட்டிட்டால் போச்ச்ச்ச்:)).. ஆனா அதுக்கு ட்றம்ப் அங்கிளின் அனுமதி தேவை:)).. அவர் எழுதப்படாது என்றால் எழுத மாட்டேனாக்கும்:)) பிக்கோஸ்ஸ்ஸ்ஸ் மீ அவரின் பேசனல் செக்கரெட்டரி அல்லோ:))

   Delete
 16. எனக்கு ஆர்டிபிஷியல் சேர்மானங்கள் சேர்த்த அந்த பல்லு போன நீங்க சாப்பிடும் பலூடா வேணாம் :)
  ஸ்ஸ்ஸ் யப்பா முடில :) பூசணிக்காயில பகோடா செய்த முதல் ஆள் நீங்களாத்தான் இருக்கும் :) இதுக்கு தொட்டுக்க hp சாஸ் periperi சாஸ் கர்ர்ர்ர் :) அதுவும் எனக்கு வேணாம் பேரன்போட ஸ்ரீராமுக்கு கொடுங்க

  ReplyDelete
  Replies
  1. நான் வெங்காய பகோடா தவிர வேறு எதுவும் சாப்பிட மாட்டேனாக்கும்!

   Delete
  2. //அந்த பல்லு போன நீங்க சாப்பிடும் பலூடா வேணாம் :) //

   நீங்க இப்பவும் அந்த ஆயா நினப்பிலேயே இருக்கிறீங்க:)) ஹா ஹா ஹா.. பொறுங்கோ உங்களுக்கு ஒரிஜினல் ஃபலூடா வாங்கிக் குடிக்கும்போது செல்வி:)) எடுத்து வந்து போடுறேன் ஓகே?:))..

   //பூசணிக்காயில பகோடா செய்த முதல் ஆள் நீங்களாத்தான் //

   ஹா ஹா ஹா இது இது இதுதான் நேக்குத் தேவை:)).. அதிரா எப்பவும் டிபெரெண்டா இருக்கவே விரும்புவேனாக்கும்:))..

   //இதுக்கு தொட்டுக்க hp சாஸ் periperi சாஸ் கர்ர்ர்ர் :)//
   அது இல்லை எனில் எங்கட வீட்டில எதுவும் இறங்காது.. வடைக்கும் பெரிபெரி சோஸ் வேணும்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு.

   நீங்க கூப்பிட்டது செனையில கேட்டிருக்கே:)) அவ்ளோ ஜத்த....மாஆஆஆ .....வாஆஆஆஆஅ கூப்பிட்டீங்க:))

   Delete
  3. ஹா ஹா ஹா ஸ்ரீராம், நெலைத்தமிழன் வெங்காயப்பக்கோடா தவிர ஏனையதெல்லாம் சாப்பிடுவாராம் ஹா ஹா ஹா என்னா பொருத்தம் உங்கள் இருவரிலும்:))

   Delete
  4. ஶ்ரீராம்.... அதிரா சொல்றதை நம்பி, நாளை நான் வீட்டுக்கு வரும்போது வெங்காய பகோடா தராமல் தண்ணீர் மட்டும் குடுத்து அனுப்பிராதீங்க. நான் வெங்காய பகோடாவும் சாப்பிடுவேன். பிரேமா விலாஸ் முந்திரி பகோடாவும் சாப்பிடுவேன். காபி, டீ சாப்பிடமாட்டேன். ஹாஹா

   Delete
  5. நெல்லைத்தமிழன்Saturday, June 01, 2019 7:06:00 am
   ஶ்ரீராம்.... அதிரா சொல்றதை நம்பி, நாளை நான் வீட்டுக்கு வரும்போது வெங்காய பகோடா தராமல் தண்ணீர் மட்டும் குடுத்து அனுப்பிராதீங்க. நான் வெங்காய பகோடாவும் சாப்பிடுவேன்.////


   ஆஆஆஆஆஆஆஆ அண்ணி இதைப் படிக்க மாட்டா எனும் தைரியத்தில சொல்லிட்டார்ர் கர்ர்ர்ர்ர்:)) வெங்காயம் வீட்டுக்குள்ளே எடுப்பதில்லையே நீங்க:)) பிறகெப்படிச் சாப்பிடுவீங்க:)).. விடமாட்டேன்ன் ரகசியமாகச் சாப்பிட விடமாட்டேன்ன்.. இப்பவே சொல்லி அனுப்புறேன்ன்ன்:)) ஹா ஹா ஹா:).

   Delete
 17. ஊசிகுறிப்பு சூப்பர் :) வீட்டுக்குள்ளே திருவிழா கொஞ்சம் பார்த்தேன் காணொளி :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஞ்சு... வீடியோவாகப் பார்த்தால் புரியாது, பெரிசா நல்லா இருக்காது.., பாட்டை மட்டும் கேட்டால் நல்ல நகைச்சுவையாக இருக்கும்.

   Delete
 18. வீட்டுக்குள் செடிகள் வைத்து இருப்பதால் அதை பார்ப்பதே இந்த சீஸனில் திருவிழா சரிதான்.
  அதற்காக பொருத்தம் என்பதால் இந்த பாட்டா? கொடுமை.
  ஓட்டு மேலே பஜ்ஜி. உங்கள் வீட்டில் பக்கோடா.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

   //அதற்காக பொருத்தம் என்பதால் இந்த பாட்டா? கொடுமை//

   ஹா ஹா ஹா இந்தப் போஸ்ட்டே ச்ச்ச்சுமா தான் போட்டேன்ன் ஒரு பொழுது போக்கிற்காக..:) அது கோமதி அக்கா அந்தப்பாட்டுக்கள் இடம் பெற்ற படத்தின் பெயரையே தலைப்பாக வைத்தேன்:)))..

   //ஓட்டு மேலே பஜ்ஜி. உங்கள் வீட்டில் பக்கோடா.//
   ஹா ஹா ஹா இது கோமதி அக்கா, அதிராவைப் புகழ்றாவோ இல்ல திட்டுறாவோ:))

   Delete
 19. மூன்றாவது படத்தில் தூதுவளை செடி போல் இலைகள் இருக்கும் அதடில் உள்ள வெள்ளைப்பூ அழகாய் இருக்கிறது. அதை ஜூம் செய்து காட்டி இருக்கலாம்.

  //anthurium செடி அழகுதான் ஆனா பூஸார்ர்களுக்கு வாய் கழுத்தில் அலர்ஜி வரும் ஆகவே நீங்களும் டெய்சியும் இந்த செடிகிட்ட போகாதீங்க//

  அதுதான் டெய்சி சொறிந்து கொண்டு இருக்கிறாளா? கவனம்.

  ReplyDelete
  Replies
  1. //மூன்றாவது படத்தில் தூதுவளை செடி போல் இலைகள் இருக்கும் அதடில் உள்ள வெள்ளைப்பூ அழகாய் இருக்கிறது.//
   இல்லை கோமதி அக்கா அது பூக்காது, நீங்கள் வெள்ளைப்பூ எனச் சொல்வது வோல் பிரிண்ட் என நினைக்கிறேன்ன்.. அந்த கள்ளிச்செடிப் படத்தில பாருங்கோ சுவரில் அழகாக தெரியுது... மொபைலில் பார்கும்போது பெரிசாக விளங்காது.

   //அதுதான் டெய்சி சொறிந்து கொண்டு இருக்கிறாளா? கவனம்.//
   ஹா ஹா ஹா இல்ல, அந்தூரியம் வீட்டுக்குள் இருக்கு.. இது டெய்ஸியும் நானும் முற்றத்தில நின்று எடுத்த படம்.. அது சும்மா சொறிகிறா:)).. பூஸ் களின் இயற்கைச் சொறியல்:))

   Delete
 20. பறங்கிக்காய் பகோடாவை பூசணி பக்கோடா என்று சொல்கிறீர்கள்.
  இதை சிலர் மஞ்சள் பூசணி என்றும் சொல்வார்கள் அதுதான் பூசணி என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
  இதற்கு இனிப்பு சுவை உண்டு தானே!  காரம் எல்லாம் போட்டாலும் அதன் இனிப்புச் சுவையை மறைக்க முடியாது.
  பூசணி இலை சுண்டல் செய்தீர்களோ?

  தேங்காய் பச்சை மிளகாய் வைத்து அரைத்த சட்னி நன்றாக இருக்கும் அடுத்த தடவை தேங்காய் சட்னி செய்யுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சக்கரைப்பூசணி கோமதி அக்கா.. நாங்கள் பொதுவாக சக்கரைப்பூசணியை.. பூசணி என்போம், ஏனையவற்றைத்தான் குறிச்சொல்லோடு சொல்லுவோம்ம்.. வெள்ளைப்பூசணி.. டுபாய் பூசணி இப்படி:)).. நம்மவர்களிடம் பூசணிக்காய் எனச் சொன்னால்.. இந்த சக்கரைப்பூசணி தான் எனப் புரிந்து கொள்ளுவினம்... அதனால எனக்கும் பழக்கதோசம்:)).

   //பூசணி இலை சுண்டல் செய்தீர்களோ?//
   அது போன வருடம் செய்து போட்டேனெல்லோ இங்கு.. இவ்வருடமும் நட்டிருக்கிறேன் இலை வரட்டும். இது கடையில் வாங்கிய காய் கோமதி அக்கா... இங்கு காய்ப்பதற்குள் குளிர் வந்துவிடும், அதனால வீட்டில் வளர்த்துக் காய் பிடுங்குவது கஸ்டம்.

   வடை, ரொட்டிக்கு எனில் சட்னி செய்வேன்ன்.. பக்கோடாவுக்குமோ? அடுத்தமுறை செய்கிறேன்.

   Delete
 21. ஊசி இணைப்பு, ஊசி குறிப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 22. ஃபலூடா பாட்டில்ல வருதா?
  இங்கே கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. இங்கு பொட்டிலில்தான் கிடைக்குது கோமதி அக்கா.. சுவை ஓகே:). கிடைக்கும் பாருங்கோ கடைகளில் ஃபிரிஜ்ஜில்..

   மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

   Delete
 23. எல்லா படமும் அழகோ அழகு ...

  கோழிக் கொண்டை , ரோஸ் படங்கள் ரொம்ப பிடிச்சி ..

  டெய்சிபிள்ளை cute..


  பூசணிப்பக்கோடா ரொம்ப வித்தியாசம் ...

  ஃபலூடா my all time favorite..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ..
   பூசணிப்பக்கோடா செய்து பாருங்கோ:))..
   பெரும்பாலும் இனிப்புப் பிடிக்காதோருக்கும் ஃபலூடா பிடிக்கும், எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்காது ஆனா இது பிடிக்கும்... மிக்க நன்றிகள் அனு.

   Delete
 24. செடிகள் படம் நல்லாயிருக்கு. முதல் படம் பிளாஸ்டிக் பூ மாதிரி இருக்கிறது! கோழிக்கொண்டை எல்லாம் பார்ததில்லையாக்கும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. உண்மைதான் அது பிளாஸ்ரிக் போலதான் இருக்க்கு. கடையில சில பிளாண்ட்டைக் கிள்ளிப் பார்த்தே வாங்குவேன் நான்:) அப்படியே பிளாஸ்டிக்காகவே தெரியும்.

   Delete
  2. //பிளாண்ட்டைக் கிள்ளிப் பார்த்தே வாங்குவேன் நான்// - இதுனாலத்தான் ஆண்களும் 'பெண் பார்க்க'வரும்போது, பாடச் சொல்லி, நடக்கச் சொல்லி, பேசச் சொல்லி - எல்லாம் செக் பண்ணறாங்க. அது மட்டும் டப்ப்ப்ப்ப்ப்பா?

   Delete
  3. ~நெல்லைத்தமிழன்
   ///அது மட்டும் டப்ப்ப்ப்ப்ப்பா?//

   ஹா ஹா ஹா அது டப்பு இல்லை:)).. நீங்க பாடச் சொல்லுங்கோ நடக்கச் சொல்லுங்கோ:)).. அதுபோல நாங்களும் மாப்பிள்ளையை ஒருக்கால் நுள்ளிப் பார்த்திட்டே ஓகே பண்ணுவோம் அது டப்பா?:)) ஹா ஹா ஹா..

   Delete
 25. ட்ரம்ப் அங்கிளை கேட்டதாகச் சொல்லவும்! பலூடா சமீபத்தில் சாப்பிட்டு ஏமாந்தேன்!

  ReplyDelete
  Replies
  1. உங்கட செல்பி ஒன்று அனுப்பினால், அதைக் காட்ட்டிச் சொல்லுவேன்:)).. இல்லை எனில் அவருக்கு ஆயிரம் ஸ்ரீராமைத்தெரியுமாமே:)) எந்த ஸ்ரீராம் எனக் கேட்டால் என்ன சொல்லுவேன் நான் ஹா ஹா ஹா...

   ஏன் சரியில்லையோ ஃபலூடா? சில இடத்தில் சகரினைக் கரைத்துக் கலர் போட்டு..ஃபலூடா எனக் கப்பில் விற்பினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  2. படம் அனுப்பியிருக்கிறேன். அதை ட்ரம்ப் அங்கிளிடம் மட்டும் காட்டவும்!

   Delete
  3. ஓகே ஸ்ரீராம் ஓகே:) நான்கூடப் பார்க்க மாட்டேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

   Delete
 26. பூ சனி பக்கோடாவா?!!! அதுவும் வெள்ளிக்கிழமையில்?!!! படத்தைப் பார்த்தால் அசைவம் மாதிரி இருக்கிறது?

  ReplyDelete
  Replies
  1. //பூ சனி/

   ஹா ஹா ஹா கர்ர்:) செவின் பொயிண்ட் ஃபைவ் அங்கிளுக்குக் கோபம் வரப்போகுது:)). இதனாலதான் இக்குறிப்பை எல்லாம் எங்கள்புளொக்குக்கு அனுப்பவில்லை:)).. இலை எனில் பானுமதி அக்காவுக்குப் போட்டியாக சோட் அண்ட் சுவீட் குறிப்பு என அனுப்பியிருப்பேன்:)) ஹா ஹா ஹா.

   Delete
 27. ஊசி இணைப்பு நிதர்சனம்! ஊசிக்குறிப்பும் ரசனை. பாடல் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்று பார்க்கிறீர்களா? இன்னும் கேட்கவில்லை. என் வீட்டில் மக்கள் கே டீவியில் சாமி படம் சத்தமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! அதனால் கேட்க முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.. பாட்டு ஒன்றும் அவசரமில்லை, ஆனா இவை நிட்சயம் கேட்டிருக்க மாட்டீங்க.. இவை எங்கும் கிடைக்காத பாட்டுக்கள்.. ரைம் இருபின் கேட்டுப்பார்த்துச் சொல்லுங்கோ கேட்டதோ இல்லை புதுசா இருக்கொ என.. ஒன்றும் அவசரமில்லை.. இல்லை எனினும் ஓகே.. சும்மாதான் போட்டேன் என் தேவைக்கு சேஃப் பண்ணி வைப்பதற்காக.

   மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
 28. வணக்கம் அதிரா சகோதரி

  வீட்டுக்குள்ளே திருவிழா செடி, கொடி, பூக்களுடன் அமர்க்களமாக இருக்கிறது "காட்டுக்குள்ளே திருவுழா..
  கன்னிப்பெண்ணின் மணவிழா..." பழைய பாட்டொன்று நினைவுக்கு வருகிறது.

  செடி. கொடி, பூக்கள் வகையறா மிகவும் அழகாக உள்ளது. கோழிக்கொண்டை பூ ரோஜா இவையெல்லாம் கண்ணை கவர்கிறது. உங்கள் டெய்சிபிள்ளை வெகு அழகு.

  ட்ரம்ப் அங்கிள் உங்களுக்கு உறவா? அப்படி உறவென்றால் எங்களுக்கும் சந்தோஸந்தான் எங்களுக்கும் குடியுரிமை சுலபமாக கிடைத்து விடும்.விழாவுக்கு நீங்கள் தலைமை தாங்க போகும் போது எங்களையும் பற்றி பேச்சு வாக்கில் செய்திகளை தெளித்து விடுங்கள். ஹா ஹா.

  பூசணி பக்கோடா செய்முறை மிக அருமை. கற்பனையிலேயே சாப்பிட்டு பார்த்தேன். நன்றாக உள்ளது. வெரி டேஸ்டியாக கரகரவென்று இருந்தது. நானும் ஒரு முறை செய்து பார்க்கிறேன். பலூடா என்றால் என்னவென்று சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் மூலம் கேட்டு தெரிந்து கொண்டேன். நான் இதையெல்லாம் பார்த்ததேயில்லை. ஐஸ் ஒத்துக்காது.. அப்புறமல்லவோ சாப்பிட... இனி வாங்கி டேஸ்ட் பண்ணனும்.(கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் மாதிரி..)

  ஊசி இணைப்பு. ஊசி குறிப்பு அனைத்தையும் ரசித்தேன்.

  வீட்டுக்குள்ளே திருவிழா பாடல்களில் முதலாவது முகப்பு பாடல் போலும் அது கொஞ்சம் ரசிக்கும்படி இருந்தது. ஆனந்த் பாபு நடனம் நன்றாக இருக்கும். அதனால் பாடலும் ஒரளவு நன்றாக இருந்தது. மீதி பாடல்கள் கேட்டதேயில்லை . பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா வாங்கோ... இம்முறை 1ஸ்ட் கிளாஸ் ல வந்து ஏறிவிட்டீங்க:)).. ஸ்ரீராம் ஏறிய பெட்டிக்குப் பின் பெட்டியாக்கும்:).

   //"காட்டுக்குள்ளே திருவுழா..
   கன்னிப்பெண்ணின் மணவிழா..." பழைய பாட்டொன்று நினைவுக்கு வருகிறது.//

   ஓ இப்படியும் ஒரு பாட்டோ.. வரிகளே மிக அழகாக இருக்கு.

   //உங்கள் டெய்சிபிள்ளை வெகு அழகு. //

   தங்கூ தங்கூ.. அவட மம்மியைப்போலவேதான்[நான் என்னைச் சொன்னேன்:))].

   //ட்ரம்ப் அங்கிள் உங்களுக்கு உறவா? //

   இல்ல உறவில்லை, ஆனா நான் அவரின் பேசனல் செக்கரட்டறி எல்லோ?:)).. இது உங்களுக்கு எப்பூடித் தெரியாமல் போச்சு கர்ர்:))..

   //நீங்கள் தலைமை தாங்க போகும் போது எங்களையும் பற்றி பேச்சு வாக்கில் செய்திகளை தெளித்து விடுங்கள். ஹா ஹா.//
   நிட்சயமாக:)) அதுக்காகத்தான் எல்லோரையும் செல்பி எடுத்து அனுப்பச் சொல்லி இருக்கிறேன்ன்:) முதலாவதாக ஸ்ரீராம் அனுப்பிட்டாராம்.. அது வந்து கொண்டிருக்குது:) அநேகமாக பிரித்தானிய எல்லைக்குள் வந்திருக்கும்:) நாளைக்கு என் கைக்குக் கிடைச்சிடும்:)).. நீங்களும் கெதியா அனுப்பி வையுங்கோ:)))

   Delete
  2. //நானும் ஒரு முறை செய்து பார்க்கிறேன்//
   இல்ல.. ரெண்டுமுறைகூடச் செய்யலாம்:))

   //பலூடா என்றால் என்னவென்று சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் மூலம் கேட்டு தெரிந்து கொண்டேன். நான் இதையெல்லாம் பார்த்ததேயில்லை//

   நீங்க உண்மையில தமிழ்நாட்டிலதானோ இருக்கிறீங்க?:)) நான் நம்பமாட்டேனாக்கும்:)).

   //ஐஸ் ஒத்துக்காது.. //
   அது குளிர் அடங்கவிட்டும் குடிக்கலாம்.. ஐஸ் யூஸ்போலத்தானே இருக்கும்.

   இந்தப் பாடல்கள் வீடியோவாகப் பார்க்கையில் ரசனை பெரிசா இல்லை, கண்ணை மூடிக் கேட்கும்போது நன்றாக இருக்கும்.

   மிக்க நன்றிகள் கமலாக்கா.

   Delete
 29. பூசணி பகோடா எண்ணெய் குடிக்கலையா? மாவைப் போட்டுக் கலக்கும்போதே நீர் விட்டுக்காதோ? என்றாலும் அருமையான முயற்சி! அஞ்சுவுக்குக் கூடத் தோணலை பாருங்க!

  அது சரி, ட்ரம்ப் அங்கிளைப் பார்க்கப் போறச்சே அவர் கிட்டே விசாவுக்குக் கெடுபிடி காட்ட வேண்டாம்னு சொல்லி வைங்க. ராணி அம்மா, அம்மம்மா? வையும் கேட்டதாய்ச் சொல்லுங்க. ஊசிக்குறிப்பு அருமைனா ஊசி இணைப்பு அருமை, பெருமை, எருமை! உங்க வழக்கம் போல்! :P:P:P:P:P:P

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ... இல்லை எண்ணெய் குடிக்கவில்லை, ஆனா ஏதோ தப்பு இருக்கு என் மாவில்:)) அதனால மொறுமொறுப்புக் குறைவாக இருந்தது.

   இல்லை தண்ணி சேர்க்காமல் குழைக்க சரியாக வந்துது... அதுக்காகத்தானே அரிசிமா சேர்த்தேன்.

   //அஞ்சுவுக்குக் கூடத் தோணலை பாருங்க!//
   ஹா ஹா ஹா அதுதானே:)).. இப்போதான் ஓசிப்பா.. சே..சே.. அவசரப்பட்டு டேவடைக் கிச்சினை மூடிட்டமே என:)).

   //அது சரி, ட்ரம்ப் அங்கிளைப் பார்க்கப் போறச்சே அவர் கிட்டே விசாவுக்குக் கெடுபிடி காட்ட வேண்டாம்னு சொல்லி வைங்க//
   உங்கட செல்ஃபி அனுப்பி விடுங்கோ கீசாக்கா.. அவருக்குக் காட்டப் போறேன்ன்:)) பிறகு விசா இல்லாமல் நீங்க நேரே போய் மகன் வீட்டு மொட்டை மாடியில் லாண்ட் பண்ணலாம்:)) ஹா ஹா ஹா.

   //ராணி அம்மா, அம்மம்மா? வையும் கேட்டதாய்ச் சொல்லுங்க/
   நிட்சயம் சொல்லுவேன்:)).. இம்முறை அவ டயமண்ட் ஒன்று தாறேன் எனச் சொன்னவ பார்க்கலாம்:)).

   ///ஊசிக்குறிப்பு அருமைனா ஊசி இணைப்பு அருமை, பெருமை, எருமை! உங்க வழக்கம் போல்///

   ஹா ஹா ஹா நன்றி நன்றி:))

   Delete
 30. செடி, கொடிகள் எல்லாம் அமர்க்களமாய்க் கண்ணுக்கு விருந்தாய் இருக்கின்றன. அந்தக் கோழிக்கொண்டைப்பூவை நாங்களும் அப்படித் தான் சொல்லுவோம். நல்லா பராமரிக்கிறீங்க!வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆங்ங்ங் பார்த்தீங்களோ சென்னையில் இருக்கும் ஸ்ரீராமுக்கு அந்தப் பூ தெரியாதாம் கர்ர்:))..

   நான் “விபசாயி அதிரா” வாக்கும்:)) ஹா ஹா

   Delete
 31. வீட்டுக்குள்ளே திருவிழா படம் எப்போவோ பார்த்த மாதிரி இருக்கு. நாகேஷ் பிள்ளை தானே!

  ReplyDelete
  Replies
  1. கீசாக்கா உண்மையாவோ? ஏனெனில் படம் வெளிவரவில்லை எனவும் சொல்கிறார்களே.... அவரேதான்.. ஆனந்தபாபு.

   மிக்க நன்றிகள் கீசாக்கா.

   Delete
 32. இந்தப் பாடல் இதுவரை கேட்டதில்லை. இப்படியொரு படம் வந்ததும் தெரியவில்லை. லேசாய் சுவாரஸ்யம் காட்டிய பாடல். படம், இசையமைப்பாளர் பற்றிய விவரங்கள் இணையத்திலும் கிடைக்கவில்லை. முழுநீள படம் கிடைக்கிறது! எனக்குக் கொஞ்சம் ஆனந் பாபுவைப் பிடிக்கும். சங்கவி.. ஆரம்பகால விஜய்யின் ஆஸ்தான கதாநாயகி... ஒரு காட்சியில் 'மறுபடியும்' ரோகிணி (ஆசை அதிகம் வச்ச) காஸ்டியூமில் வருகிறார்!

  ReplyDelete
  Replies
  1. ஆங்ங்ங் பார்த்தீங்களோ ஸ்ரீராம், முன்பொரு தடவை சொன்னேன், என்னிடம் சில பாடல்கள் இருக்கு நீங்க கேட்டிருக்க மாட்டீங்க என..

   அதில தவறவிட்ட இன்னொரு பாட்டு.. ஹா ஹா ஹா இப்போ “கல்யாணவீடு” சீரியலில் நடிக்கும் சுந்தர்ராஜன் அங்கிளுக்கு வந்த யோகத்தைப் பாருங்கோ ஹா ஹா ஹா... இதில் எல்லாமே கொமெடிப்பாட்டுத்தான்..

   படம் வெளியாகவில்லை எனத்தான் சொல்கிறார்கள் ஆனா கீசாக்கா எதைப் பார்த்திட்டு சொல்றாவோ தெரியேல்லை பார்த்திட்டேன் என..:)

   https://www.youtube.com/watch?v=6QxKtjDRpoQ&fbclid=IwAR0iNynvsiofjkE4tKmRW9EEKHM_iopqMM83xLje4nH3aplAycVNQeHDk8g

   Delete
 33. நேற்று/அதற்கு முந்தைய நாள் நீங்க நெல்லைக்கு அங்க இருக்கு வெடி ந்னு ஏதோ சொல்லிருந்தீங்களா உடனே இங்கு வந்த் பார்த்தேன் பதிவு இல்லை...சரி அது புஸ்வான வெடி போல என்று போய்ட்டேன் அப்புறம் தான் இருக்கெ நம்ம கம்ப்யூட்டர் ரொம்பவே மக்கர் செய்கிறது. வரும் வராது ந்ற போல...ஹா ஹா ஹா ஹா...நேற்று மதியத்திலிருந்து மக்கர். இப்ப வருது...எப்ப போகுமோ...ஹிஹ்ஹி சரி காற்றுள்ள போது தூற்றிக் கொள் போல எல்லா ப்ளாகும் ஓடிப் போய் விசிட் செய்யணுமே விட்டது தொட்டது என்று...

  வரேன் ஒவ்வொன்றாக

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ..

   //நேற்று/அதற்கு முந்தைய நாள் நீங்க நெல்லைக்கு அங்க இருக்கு வெடி ந்னு ஏதோ சொல்லிருந்தீங்களா//
   ஹா ஹா ஹா “அங்கு” எனச் சொல்லியிருந்தேன்.. அது கில்லர்ஜி பக்கம் கீதா:)).

   //அப்புறம் தான் இருக்கே நம்ம கம்ப்யூட்டர் ரொம்பவே மக்கர் செய்கிறது. //
   இவ்ளோ போராட்டத்தோடும் எங்கள்புளொக்கில் ஜம்ப் ஆகிடுறீங்க முதலாவதாக ஹா ஹா ஹா கெட்டிக்காரிதான் நீங்க கீதா..

   Delete
 34. செடிகள் எல்லாம் அட்டகாசம். நாங்களுகும் அதைக் கோழிக் கொண்டைப் பூ என்றுதான் சொல்வது அதிரா...ஹையோ கமென்ட் அடித்தால் போக பதிய மாட்டேங்குதே....கணினி மீண்டும் ஹேங்க்....சொங்கிப் போச்சு.இது போனதும் மீண்டும் க்ளோஸ் செய்யனும்...ப்ளேச் மன்னிச்சுக்கோங்க....ப்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆ கீதாவுக்கும் கோழிக்கொண்டை தெரிஞ்சிருக்குது... ஓ பெங்களூர்க் குளிருக்கு அடிக்கடி பிரச்சனைப்படுத்துது போல:)).. அதுக்கு குளிர் ஒத்துக்கொள்ளவில்லைப்போலும் கீதா:).. நீங்க சென்னைக்குக் கூட்டிப்போங்கோ:)) ஒழுங்கா வேர்க் பண்ணும்..

   Delete
 35. படங்கள் அனைத்தும் அழகோ அழகு...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ மிக்க நன்றி.

   Delete
 36. விலகி நின்றால் பிடிக்க வில்லை என்று அர்த்தமா அதிரா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜிஎம்பி ஐயா, அப்படி அர்த்தமில்லை, விலகக்கூடிய இடமெனில், பிடிக்காவிட்டால் விலகிவிட வேண்டுமே தவிர, எதுக்கு பிடிக்காமலேயே கூட இருந்து எதுக்கு நம் மனதுக்கும் கஸ்டம் ஏற்படுத்தி அடுத்தவருக்கும் கஸ்டம் குடுக்கோணும்...
   மிக்க நன்றி.

   Delete
 37. //உனக்கு எது பிடிக்கவில்லையோ அதனிடமிருந்து விலகி நில்[ஊசிக் குறிப்பு]//

  நமக்குப் பிடிக்காத அதனிடமிருந்து விலகி நிற்பது சுலபம்தான். நமக்குப் பிடித்திருந்து நம்மைப் பிடிக்காத அதனிடமிருந்து விலகிப் போவது[உள்மனம் ஒத்துழைப்பதில்லை] எளிதல்லதானே அதிரா?!

  வழக்கம்போல அழகழகான படங்கள், செய்முறைக் குறிப்புகள், விவரிப்புகள். மகிழ்ச்சி; மனம் நிறைந்த பாராட்டு.

  ReplyDelete
  Replies
  1. ஆ வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ..

   //நமக்குப் பிடித்திருந்து நம்மைப் பிடிக்காத அதனிடமிருந்து விலகிப் போவது[உள்மனம் ஒத்துழைப்பதில்லை] எளிதல்லதானே அதிரா?!//

   கஸ்டம்தான், ஆனா அடுத்தவருக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிஞ்சபின், நமக்குப் பிடிச்சாலும், மனதைத்தேற்றிக் கொண்டு விலகுவதுதான் நமக்கு நல்லதும் மரியாதையும் கூட...

   மிக்க நன்றிகள் வரவுக்கும் கருத்துக்கும் அறிவுப்பசிஜி.

   Delete
 38. அதிரா என் கமென்ட் வந்ததோ?

  உங்கள் ப்ளாக் கலர் எதுவும் இல்லாம வருது. படம் எல்லாம் சின்னதாக...கணினிக்கு என்னவோ ஆகிடுச்சு!!

  மஞ்சல் பூஷ்ணிக்காய் தனியாகப் போட்டு பக்கோடா செஞ்சதில்லை. ஆனால் மிக்ஸ்ட் வெஜிட்டபிள் வெ பூஷணி, ம பூஷணி, கேபேஜ், காரட் வெங்காயம் போட்டு செஞ்சதுண்டு. நான் இஞ்சி எப்பவுமே சேர்ப்பதில்லை பக்கோடாவுக்கு.

  உங்க பக்கோடா நல்லா வந்திருக்கு. தனியா ம பூஷணி போட்டு செஞ்சு பார்த்துவிட்டால் போச்சு..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //அதிரா என் கமென்ட் வந்ததோ?//
   வந்தது கீதா:)..

   ஹா ஹா ஹா கணனியின் ஸ்பீட் குறையும்போது சிலசமயம் அப்படித்தான் காட்டும்..

   //உங்க பக்கோடா நல்லா வந்திருக்கு. தனியா ம பூஷணி போட்டு செஞ்சு பார்த்துவிட்டால் போச்சு..
   //
   நல்லா வந்தால் அதிராவின் குறிப்பு என எல்லோருக்கும் சொல்லுங்கோ கீதா, சரிவரல்லயா.. டக்கென அது அஞ்சுட டேவடைக் கிச்சின் குறிப்பு என மாத்திடுங்கோ:)) ஹா ஹா ஹா.

   Delete
 39. ஊசிக் குறிப்பு...ம்ம்ம்ம் அப்படி விலகி இருந்துவிட முடியாதே!!! ஒரு சில உறவுகள் அப்படி விலகி இருக்க முடியாதே...மட்டுமல்ல அக்செப்ட் பீப்பிள் ஆஸ் தெ ஆர் நும் சொல்லுவதை எடுக்கும் போது இது முரண் ஆகுதல்லோ?

  ஓரளவு எட்ட நிற்கலாம் அவ்வளவுதான்...நமக்கு அந்த வேவ்லெங்க்த் ஒத்துப் போகலைனா...எட்ட நிற்கலாம்...
  அப்படி எட்ட நின்றதே கூட அந்த உறவே இல்லை என்று ஆகிப் போகவும் செய்துவிடுமே...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அது உறவுகளின் நெருக்கடத்தைப் பொறுத்ததுதான் கீதா.. ஆனா விலக முடியாதெனத் தெரிஞ்சால் அமைதியாகிவிடுவது நல்லதெல்லோ..

   //மட்டுமல்ல அக்செப்ட் பீப்பிள் ஆஸ் தெ ஆர் நும் சொல்லுவதை எடுக்கும் போது இது முரண் ஆகுதல்லோ? //
   அது உண்மைதான், ஆனா நமக்குப் பிடிச்ச ஆட்கள் எனில்தான் அவர்களை அப்படியே அக்செப்ட் பண்ணோனும்.. பிடிக்கவில்லை எனில்.. அவர்களை மாற்ற வெளிக்கிடாமல்.. விலகுவது மேல் எனச் சொல்லுதாக்கும் என் குறிப்பு..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா எனக்கு இன்னொரு பொட்டில் ஃபலூடா இப்போ வேணும்:))..

   ///அப்படி எட்ட நின்றதே கூட அந்த உறவே இல்லை என்று ஆகிப் போகவும் செய்துவிடுமே...//
   பிடிக்காத ஒருவரோடு நட்போ உறவோ.. கூட இருந்து சண்டை போடுவதை விட விலகி விடுவது நல்லதே.. விலக முடியாதெனில். சிவனே எனக் கண்ண மூடிக்கொண்டு இருந்திடோணும் ஹா ஹா ஹா:))..

   Delete
 40. படங்கள் மிக மிகத் தெளிவாக இருக்கு அதிரா. செமையா இருக்கு..ரொம்ப ரசித்தேன்..

  சரிஇன்னும் கும்மி அடிக்க ஆசை ஆனால் என் கம்ப்யூட்டர் மூடில் இருக்கும் போதுதானே எல்லா தளமும் போக முடியும்...இன்னும் எபி காலையில் கருத்து போட்டதோடு நிற்கிறது அங்கு ஏஞ்சலின் பதிவு இன்னும் வாசிக்க வில்லை...போனும்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //படங்கள் மிக மிகத் தெளிவாக இருக்கு அதிரா. செமையா இருக்கு..ரொம்ப ரசித்தேன்..//
   நன்றி கீதா நன்றி.. இதைவிட அடுத்ததை இன்னும் ரசிக்கப் போறீங்க:)) டெய்லி செக் பண்ணுங்கோ அதிராவின் போஸ்ட் வந்திருக்கோ என:))

   Delete
 41. அதிரா பாட்டு கேட்க பயமா இருக்கு ரெண்டாவது இப்ப உங்கள் தளம் ஓப்பன் பண்ணியப்ப வீடியோ எதுவும் வரலை ஒன்லி பதிவும் கமென்ட்ஸும் மட்டுமெ வருது....

  அப்புறம் தேடி வீடியோ போட்டா கம்ப்யூட்டர் மூட் போகிடுமோன்னு ஹா ஹா ஹா

  நான் ஒரு பாட்டு கேட்டிருக்கேன் வீட்டுக்குள்ளே திருவிழா என்று அந்தப் பாட்டுதானா இது என்று தெரியலை...மெட்டும் நினைவுக்கு வருது அந்தப் பாட்டோனு தெரியலை கேட்டாத்தான் தெரியும்...பார்க்கிறேன் மொபைலில் கேட்டுப் பார்த்துவிட்டு வருகிறென்...கம்ப்யூட்டர் ஒத்துழைத்தால்...உங்க பக்கம் இப்படி வெள்ளையா வந்தா ஒழுங்கா வருது. காலையில் இரு முறை ஓப்பன் செய்தும் கணினி சோர்ந்து போயிடுச்சு ஹா ஹா ஹா ஹா....படங்கள் இருந்தால் படுத்துது...!!!!!!!!!!!!!!!!!!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. போஸ்டின் முடிவில் லிங் இணைச்சிருக்கிறேன் கீதா. அதில் போய்க் கேளுங்கோ.. இல்ல நீங்க யாரும் கேட்டிருக்க மாட்டீங்களெண்டே நம்புறேன்ன்ன்.. ஸ்ரீராமே கேட்கவில்லையாம்ம்... ஹா ஹா ஹா ..

   மிக்க நன்றிகள் கீதா.. இவ்ளோ கஸ்டப்பட்டு கொம்பியூட்டரோடு போராடி வந்து கொமெண்ட் போட்டிருக்கிறீங்க.

   Delete
 42. படங்கள் எல்லாம் துல்லியமாக, தெளிவாக, அழகாக உள்ளன. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆ வாங்கொ கெள அண்ணன் வாங்கோ.. எவ்ளோ நாளாச்சு உங்களை இங்கு பார்த்து... இருங்கோ ஃபலூடாவும் குடிச்சுப் பக்கோடாவும் சாப்பிட்டுப் போகலாம்... ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கெள அண்ணன்...

   Delete
 43. ஆ...இது என்ன பூசணி பகோடாவோ.. எனக்கு மரவள்ளிக்கிழங்கோடு சேர்த்து கறி (உறைப்பு கொஞ்சம் கூடவாய்) வைத்து சாப்பிட தான் விருப்பம். என்னவோ புதுசு புதுசா செய்து பார்க்கிறீங்க. பாவம் கணவர்,பிள்ளைகள். படத்தில் பகோடா எண்ணெய் குடித்த மாதிரி இருக்கு.
  படங்கள் எல்லாமே சூப்ப்ப்ப்ப்பராக இருக்கு. ஆ.... கோழிகொண்டைப்பூ எவ்வளவு நாலாச்சு பார்த்து. இப்ப ஊரிலயும் காணலே அதிரா. வேறவேற பூச்செடிகள் பார்த்தேன். அதைவிட மெயின் ரோட்டுகளில் பூக்கன்றுகள் விற்பனை நிலையம்,கடை என நர்சரிகள் வந்துவிட்டது. தெற்கு பக்கமிருந்து நிறைய வெரைட்டி வருது. சில வீடுகளில் பூஞ்சோலையாக வைத்திருக்கினம் பார்க்க ஆசையா இருக்கு. நானும் என் படங்களை போடோனும். நீங்க பிறகு அதை பார்த்துவிட்டு மயங்கி விழக்கூடாது. நான் சுட்டாறின தண்ணீர் இங்கிருந்து தெளிக்கேலாது....
  இங்கு சில செடிகளை வீட்டில வளர்க்ககூடாது என்கிறாங்க.. முள் மரம், மணி ப்ளாண்ட் வைக்க கூடாது என சிலபேர் ,ஆனா இங்குள்ள வைட் வாங்கி வைக்கினம். சில ப்ளாண்ட் வீட்டுக்கு நல்லது என சிலபேர். எதை நம்புவது,விடுவது. ஆனா அலர்ஜி சில செடிகளில் இருக்கத்தான் செய்கிறது.
  டெய்சிக்கு ஓரேஹப்பிதான். நானும் அந்த கொடியை தூதுவளையோன்னு நினைச்சேன்.ஐந்தூரியம் என்னிடமும் இருக்கு.
  சரி சரி ட் ரம்ப் அங்கிளை பார்க்கிற குஷியில கொமண்டி போட மறக்காதீங்க.
  பாட்டு கேட்டதே இல்லை. ஆனா எனக்கு கமலாக்கா சொன்ன பாடல்தான் நினைவு வந்தது. கேட்டுபாருங்கோ. படம் தாய் சொல்லைத்தட்டாதே.
  ஊசிகுறிப்பு செம..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ.. அம்முலுவையும் காணம் எங்கட கவிஞரையும் காணம் என ஓசிச்சேன்ன்... நல்லவேளை ரெயின் புறப்படமுன் கார்ட் பெட்டியில வந்து ஏறிட்டீங்க...:))

   ஓம் நாங்களும் மரவள்ளிக்கு பூசணி போட்டு ஆனா வெள்ளைக்கறியாகத்தான் பால் விட்டு வைப்போம்ம்...

   //பாவம் கணவர்,பிள்ளைகள். படத்தில் பகோடா எண்ணெய் குடித்த மாதிரி இருக்கு. //

   எண்ணெயைக் குடிச்சது பகோடா:)).. அதற்காக ஏன் கணவரும் பிள்ளைகளும் பாவம் என்கிறீங்க:)) ஹா ஹா ஹா அதிராதான் பாவம் பிக்கோஸ் அதிராவின் எண்ணெயெலோ:)) ஹாஅ ஹா ஹா குழப்பிட்டேனோ... அஜீஸ் பண்ணுங்கொ இது ஒண்டும் புதிசில்லைத்தானே உங்களுக்கு:)).

   //கோழிகொண்டைப்பூ எவ்வளவு நாலாச்சு பார்த்து. இப்ப ஊரிலயும் காணலே அதிரா. //
   அதைத்தான் நான் ஸ்கொட்லாண்டுக்கு எடுத்து வந்திட்டனெல்லோ:)) ஹா ஹா ஊரில் எங்கட வீட்டிலும் நிண்டது அம்முலு..

   //அதைவிட மெயின் ரோட்டுகளில் பூக்கன்றுகள் விற்பனை நிலையம்,கடை என நர்சரிகள் வந்துவிட்டது. தெற்கு பக்கமிருந்து நிறைய வெரைட்டி வருது//
   ஓ கேட்க சந்தோசமாக இருக்குது. இப்போ அங்கு எங்கு பார்த்தாலும் மரங்களும் பூக்களும் என ஒரே சோலைதானாமே.. கொஞ்சம் கவனிக்காமல் விட்டாலே.. கொய்யா, மா... என ஒரே பத்தையாகிடுதாம்.

   Delete
  2. //நானும் என் படங்களை போடோனும். நீங்க பிறகு அதை பார்த்துவிட்டு மயங்கி விழக்கூடாது. நான் சுட்டாறின தண்ணீர் இங்கிருந்து தெளிக்கேலாது....///
   ஹா ஹா ஹா எதுக்கும் போடமுன் அலேர்ட் பண்ணுங்கோ:)) நான் அஞ்சுவீட்டு வேலியைப் பிடிச்சுக்கொண்டு ஸ்ரெடியாக நிற்கிறேன்ன்:)).

   முள் மரம் வாசலில் வைக்கக்கூடாதுதானாம், ஆனா இந்த கள்ளி வகை அதனுள் அடங்காது.. பொதுவாக பால் வடியும் மரங்கள் வீட்டுமுன் நிற்பது நல்லதாம்.. நான் ரப்பர் மரம் வைக்கப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா..

   //ஆனா அலர்ஜி சில செடிகளில் இருக்கத்தான் செய்கிறது.//
   ஓ எனக்கு இன்னும் அப்படி லர்ஜி எதுவும் இதுவரை தெரியவில்லை..

   //ஆனா எனக்கு கமலாக்கா சொன்ன பாடல்தான் நினைவு வந்தது. கேட்டுபாருங்கோ. படம் தாய் சொல்லைத்தட்டாதே.//

   ஓ அப்படியோ கேட்கிறேன் இன்றே....

   மிக்க நன்றிகள் அம்முலு.. ரெயின் ஸ்பீட் எடுக்கிறதூஊஊஊஊஊ:))..

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.