நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Friday, 28 December 2018

நம் எனர்ஜி லெவல்:)

(1)
ந்த நம்முடைய எனர்ஜி லெவல் பற்றி, பல பல விசயங்கள்.. அனுபவங்களாகவும், கேட்டதும் அறிஞ்சதும் தெரிந்ததுமாக பல விசயங்கள் இருந்தாலும், போஸ்ட்டாகப் போடலாமே எனும் எண்ணம் தோன்றியதில்லை, ஆனா அடிக்கடி டெய்சிப் பிள்ளைக்கு இப்படிச் செய்வேன், இருப்பினும் சமீபத்தில் டக்கென நினைச்சேனா, உடனே போஸ்ட்டில் எழுதும் ஆசை வந்துது.
(2)

அதாவது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு எனர்ஜி இருக்குதுதானே, அது அனைவருக்கும் மாறுபடும்.. இந்த எனர்ஜி தான் நம்மை வெளிக்கொணர உதவுகிறது, அதாவது நல்லவராகவும் மாற்றும், தீயவராகவும் மாற்றும், கெட்ட செயல்கள் செய்யத் தூண்டும்.. இப்படி.

(3)

முதலில் கணவன் மனைவியிலிருந்து ஆரம்பித்தால், இருவருக்கும் எனர்ஜி லெவல் சேம் எனில் பிரச்சனை இல்லாமல் வண்டில் ஓடும்:).. ஆனா பொதுவாக ஆண்கள் வேலைக்குப் போய் வருவதனால் அவர்களின் எனர்ஜி செலவழிக்கப்படும், பெண்ணும் அதேபோல வேர்க் பண்ணுபவராயின் ஓகே, ஆனா பெண் வீட்டிலிருப்பவவாயின்... அதிலும் அவவின் எனர்ஜி லெவல் அதிகமாகவும் இருக்கும் இடத்து....

அவவின் எனர்ஜியை எவ்வழியிலாவது செலவழிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்... இப்போ நம்மைப்போல புளொக் எழுதி... கொமெண்ட்ஸ் போட்டு, இல்லை சிலர் விதம் விதமாக சமைப்பார்கள், கைவேலை செய்வது, கார்டினிங், வீட்டை அலங்கரிப்பது, இப்படி எதுவாயினும் ஒரு வழியில் பெண்கள் ஈடுபடும்போது, தேவையில்லாத பிரச்சனைகள் தவிர்க்கப்படும்... அதாவது அவர்களின் எனர்ஜி.. இவ்வழியில் செலவழிக்கப்பட்டுவிடும்.

ஹா ஹா ஹா மன்னிச்சுக்கோங்க, இம்முறை அதிக ஆசையா இருந்தமையால இரண்டு ஆங்கில கோட்ஸ் போடுறேன்ன்:))
(4)


எங்காவது பெட்டி வைத்தால் போதும், உடனே அதனுள் இறங்கி 
இடம் பிடிச்சிடுவா:) கர்ர்ர்ர்ர்:)))
(5)

ஆனா இப்படி எதுவும் செய்யாமல் பொழுது போகவில்லையே என இருப்போர்தான் அதிகமாக வீண் வம்புகளில் சிக்கல்களில் மாட்டி தம் எனர்ஜியை தப்பான வழியில் செலவழித்து விடுகின்றனர். இதனால வீட்டிலிருப்போரை, எப்பவும் அடக்கி வைத்திருக்க நினைக்கக்கூடாது, அவர்களின் எனர்ஜி நல்ல வழியில் செலவழிவதற்கு நாம் ஊக்கம் கொடுக்க வேண்டும். அதையும் தாண்டி தப்புப் பாதையில் போவோரை ஒண்ணும் பண்ண முடியாது:)..

அதேபோலத்தான் ஆண்களிலும் ஓவர் எனர்ஜி உள்ளோர், வேலை முடிந்த பின்பும்.. எப்பவும் ஓடி ஆடி அங்கு போக வேண்டும், இங்கு போக வேண்டும் என அமளிப்படுவோரும் இருக்கிறார்கள், அதுக்கேற்ப நாமும் அவர்களோடு ஒத்துப் போக வேண்டும். சண்டை, வெட்டுதல், போராட்டம் இப்படியானவைகூட ஒருவிதத்தில் அவர்களின் எனர்ஜி வேறு வழியில் செலவழிக்கப்படாமையாலேயே, இப்படிப் பாதையில் செலவாகிறது...
(6)

பிள்ளைகள் விசயத்தில் இது சரியான முறையில் கையாளப்பட வேண்டும். அவர்களை எப்பவுமே வீட்டில் இரு, படி படி எனச் சொல்லிக் கொண்டிருந்தால்.. சில பிள்ளைகள் முளுக்க முளுக்க படிப்பில் செலவிடக்கூடும், ஆனா பெரும்பாலான பிள்ளைகளுக்கு வேறு பொழுது போக்கு, விளையாட்டும் தேவைப்படுகிறது, அதை நாம் கண்டித்து முடக்கினால், அது தப்பாக தேவையில்லாத சட்டிங்குகளில் ஈடுபடுதல்[காதல் பிரச்சனை], இல்லை சிகரட், குடி என இறங்குதல் இப்படி தப்பான வழியில் செல்லும் வாய்ப்பும் அதிகம்.

(7)

முக்கியமாக ஆண்குழந்தைகளை நன்கு விளையாட அனுமதிக்க வேண்டும்.. அப்போதான் எனர்ஜி வெளியேறி, அமைதியாக அடக்கமாக இருப்பார்கள். எங்கள் வீட்டில் சில நாட்களில் இரவு 10 மணிக்கும்.. கோல் வரும்[வீட்டுக்குள் இருந்தே:)] அல்லது கதவு தட்டப்படும்.. ரெட்மில் செய்யப் போகிறேன் என, ஓம் செய்யுங்கோ எனத்தான் ஓகே பண்ணுவது, போய் 20-30 நிமிடங்கள் செய்வார்கள், பின்பு குளித்துவிட்டுப் படுப்பார்கள்.. இப்படி எந்த வழியிலாவது ஒவ்வொருவரின் எனர்ஜியும் செலவழிக்கப் பட வேண்டும், அது நல்ல வழியில் செலவழியும்போது பிரச்சனை இல்லை, மாறி தீய பாதையில் கால் வைத்திட்டால் மீள்வது கஸ்டமாகிவிடும்.

இதேபோல்தான் எங்கள் டெய்சிப்பிள்ளையும் எப்பவும் வெளியே விடு வெளியே விடு என அடம் பிடிப்பா....

கவனமாகப் பாருங்கோ.. இடப்பக்கம் அணில்பிள்ளை ஜம்பண்ணி வேலியால ஓடுறார், எனக்கு இவ கீழே குதிக்கும்வரை நெஞ்சுக்குள் தண்ணியே இல்லை:)..

 சாதாரண பூனைகளை விட இவவுக்கு எனர்ஜி லெவல் கொஞ்சம் அதிகம்.. எப்பவும் ஓவரா ஓடோணும் துள்ளோணும் என இருப்பா. சிலசமயம் வெளியே போய் மழையில் நனைந்து வந்திருப்பா, அப்படி உள்ளே வந்தால் உடனே அவவை புரட்டிப் புரட்டி துடைச்சு விடோணும்.. அதுவரை விடமாட்டா.. மீயா மீயா எனக் கத்திக் கொண்டே பின்னால வருவா, துடைக்கும்போது கீழே படுத்திருந்து, வடிவேல் அங்கிளைப்போல .. இங்க துடை.. ஆ இங்க துடை எனபது போல கை காலை தூக்கித் தருவா, பின்பு 5 நிமிடத்தில் உடனேயே அடம் பிடிப்பா, கதவைத்திற வெளியே போக என...

விடாமுயற்சி:)

அந்நேரம் திரும்பவும் மழையில விட்டு துடைக்கோணுமெல்லோ.. அதனால நான் அவவுக்கு ஓடப்பண்ண விளையாட்டுக்கள் காட்டுவேன்.. ஓடி ஓடி பாய்ந்து பிடித்து உருண்டு பிரண்டு விளையாடுவா.. ஒரு 5 -10 நிமிடத்தில் எனர்ஜி இழந்து களைத்து ஓடிப்போய்ப் படுத்து அமைதியாக நித்திரை கொள்ளுவா... இதனை நோட் பண்ணியே.. இந்த எனர்ஜி லெவல் உண்மை என நம்பி.. இப்போஸ்ட் எழுத ஆரம்பிச்சேன்.

(8)

இது உண்மைதானே?
(9)

கீசாக்கா போனதடவை .. மீ கேக்கூஊஊ தரவில்லை எனச் சொல்லியிருந்தா, அதனால இந்தாங்கோ கிறிஸ்மஸ்க்கு[வாங்கிய:)] எக்லெஸ் ஃபுருட் அண்ட் நட் கேக்:)

ஊசி இணைப்பு:)
ஆஆஆஆ புதுவருடத்துக்கு இம்முறை அதிரா நிறையக் காசு தரப்போறேனாக்கும் எல்லோருக்கும்:))).. என்னிடம் இருந்தவற்றை மட்டும் வச்சுப் படமெடுத்தேன்:).. இதில முதலாவதாக வருபவருக்கு.. 20 ரூபாய்த் தாள்கள்.. 2 வதாக வருபவருக்கு 10 பவுண்ட் தாள்கள்.. லேட்டா வருபவருக்கு கேக் துண்குகள்:).. கடசிப் பெட்டியில் ஏறுவோருக்கு வெற்றலை பாக்கு:)) ஹா ஹா ஹா அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்💝.

ஊசி இணைப்பு
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மேலே படங்களுக்கு நம்பர் கொடுத்திருக்கிறேன், ஏதும் சொல்ல நினைச்சால் உங்கள் வேலையை ஈசியாக்க:).
கமலா சிஸ்டர் சொன்னா, தான் வருசம் முடிவதற்குள் 4 போஸ்ட்டாவது போட்டிட வேணும் என, அப்பூடித்தான் நானும் நினைச்சேன், 2018 சூசைட்டு பண்ண முந்தி:) மீயும் போட்டிடோணும் என.. போட்டிட்டேன்ன்ன்:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

90 comments :

 1. aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa:))))))))))))))))

  ReplyDelete
 2. ஆஆவ் நானே எனக்கே அந்த 20 பவுண்ட்ஸ் கட்டூ :)))))

  [im]https://media1.tenor.com/images/7bbc36b77a7a4e401d4365a7fc97297c/tenor.gif?itemid=11693236[/im]

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு... ஓவரா டான்ஸ் ஆடினா.. இருக்கிற அடுத்த முழங்காலும் விழுத்திடப்போகுது ஜாக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தை கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   அல்லோ... கட்டோட தரமாட்டேன்ன் ஒரு தாள்தான்:))

   Delete
 3. ஒன்றாம் இரண்டாம் படங்களில் செம டயர்டோ குழந்தைக்கு :)
  உங்களுக்கு ஒரு குட் நியூஸ் .இன்னிக்கு என் செல்ல மகன் உங்க அழகான மருமகன் வந்தான் ரொம்ப நாள் கழிச்சி விசிட் செய்ய என்னை :) அவனுக்கு நல்ல எனர்ஜி லெவல் அதிகம் ஹாஹாஹா

  ReplyDelete
  Replies
  1. அது அவட றெஸ்ரிங் ரைம்:)...

   //இன்னிக்கு என் செல்ல மகன் உங்க அழகான மருமகன் வந்தான் ரொம்ப நாள் கழிச்சி விசிட் செய்ய என்னை :)//
   கர்ர்ர்ர்ர்ர்:) அவர் இன்னும் பொம்பிளை கேட்பதை நிறுத்தேல்லைப்போல:) அவருக்கு சொல்லுங்கோ நாங்க டெய்சிக்கு வீடும் வாங்கிட்டம் என:).. ஓசியில வந்து இருக்கப் போகிறார்போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. குண்டர் இன்னும் மெலியேல்லையோ?:).

   //அவனுக்கு நல்ல எனர்ஜி லெவல் அதிகம் ஹாஹாஹா///
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்படியாவது டெய்சியோட ஜொயின் பண்ணிடோணும் எனத்தான் நீங்களும் ஆசைப்படுறீங்க:) எதுக்கும் அவரை மெலியச் சொல்லுங்கோ டெய்சிப்பிள்ளையிடம் கேட்டுப் பார்க்கிறேன்ன்:)) ஹா ஹா ஹா..

   Delete
 4. எனர்ஜி லெவல்ஸ் பத்தி சொன்னது எல்லாம் உண்மையே .பட் தம்பதியறில் எல்லாராக்கும் இப்படி குணம் இருக்காது மியாவ் .நற்குணம் நற்குணத்தை அன்பை மட்டுமே எப்பவும் வெளிப்படுத்தும் .அன்பிற்கும் இடத்தில இருவருக்கும் எனர்ஜி ஏறக்குறைய வந்தாலும் சமனாகிடும் .ஆனாலும் சில இடங்களில் நீங்கள் சொன்ன மாதிரி நடப்பது உண்மைதான்

  ReplyDelete
  Replies
  1. அது அஞ்சு தம்பதிகள் பற்றி சொல்ல வெளிக்கிட்டால் பெரிய எழுத்தாகிடும் எனத்தான் பெரிசா சொல்லாமல் விட்டேன், கில்லர்ஜி பக்கத்திலும் இதுபற்றி பேசியிருக்கிறோம்.

   அது அஞ்சு, ஆண்கள்[எல்லோரையும் சொல்லவில்லை] வேர்க்கால களைத்து வந்து, சிலர் மனைவியைக் கவனிப்ப்பதில்லை, தானும் ரிவி... ஃபோன், புத்தகம், இப்படி மூழ்கிவிடுகின்றனர், மனைவியோ ஃபுல் எனர்ஜியோடு வீட்டில் இருப்பா, கதைத்துப் பேசினால் நோர்மலாகிடும்... சிலர் பேசுவதற்கு காசு கொடுக்க வேண்டும்..

   இப்படியான இடங்களில்தான், ஏதும் ஒரு மிஸ்ட்கோல்.. அல்லது வேறு வழியில் இன்னொரு ஆண் தொடர்புக்கு வந்து, அவர் இவவோடு அதிக நேரம் செலவழித்துக் கதைக்கும்போது.. அது அப்படியே தீய பாதைக்கு இழுத்துச் சென்று விடுகிறது... இது பலருக்குப் புரிவதில்லை... பின்னர் பெண்ணைக் குறை சொல்வார்கள்... இப்படி தப்பு செய்ய தூண்டுதலாக இருப்பதே சில கணவன்மாரின் சோம்பேறித்தனம்தான்... என்ன பண்ணுவது.. திருமணம் முடிக்கக்கூடாது:).. முடித்து விட்டால் ஒவ்வொருவருக்கென்றும் சில கடமைகள் இருக்கிறதுதானே.. அதை செய்யத்தானே வேண்டும்... அன்பு மனதில் இருந்தால் மட்டும் போதாதெல்லோ..

   Delete
 5. 4 வது quote ஹாஹாஹா ROFL இதேபோல சிங்கம் படமும் பார்த்திருக்கேன் எங்கியோ :) எங்க வீட்ல ஒரு ஜோடி சேவல் கோழி இப்படித்தான் .கோழி முன்னே நடக்க சேவல் பின்னல் மெதுவா போவான் பாதுகாப்பா .சிரிப்பா இருக்கும் .ஹென் பெக்ட் :)

  ReplyDelete
 6. 5 வது படம் :) பூனைகள் இருக்கும் வீட்டில் கவனமாவே இருக்கணும் எங்கே இடைவெளி கிடைச்சாலும் ஒளிவாங்க .இங்கே DUVET கவரில் ஒருதரம் ஜெசி நுழைஞ்சிருக்கா அதில் ஓப்பனிங் மட்டும் உண்டு ஈஸி ஸ்லிப் இவ மாட்டிகிட்டது நானாக சர்ச்சுக்கு போன நேரம் பெட்ரூமில் ஆராய்ச்சி செய்யப்போய் விளையாட்டில் மாட்டிக்கிட்டா எங்களுக்கு தெரியல்ல .நல்லவேளை வீட்டுக்கு வந்து பார்த்தா எதோ அசையவும் அலறி கத்தி எடுத்து விட்டேன்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அஞ்சு நிலத்தில ஒரு பேப்பர் பாக் இருந்தாலும் பூந்து இருந்திடுவா.. நடக்கும்போது உளக்கிப்போடுவினமே எனும் பயமே இல்லாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நமக்குத்தான் எதுக்கெடுத்தாலும் ஹார்ட் பீட் அதிகமாவதுதானே வேலை ஹா ஹா ஹா..

   Delete
 7. உண்மைதான் நிறையபேருக்கு எப்படி நல்லவழியில் பொழுதை போக்குவதுன்னு இன்னும் புரியலை ...இதற்க்கு எங்காவது உள்குத்து போஸ்ட் வரலாம் :))))))))))) சிலருக்கு எதை பார்த்தாலும் சண்டை குணம் சண்டை மூட் வரும் அதுவும் தவறே .சிறு விஷயத்தையும் பெரிசுபடுத்த யூஸ் பண்ணும் எனர்ஜியை வேறு விஹயத்துக்கு டைவர்ட் ஆக்கினால் நன்மை

  ReplyDelete
  Replies
  1. இதில் எவ்ள ஸ்ட்ராட்டஜிக்கா நம்ம எனர்ஜியை யூஸ் செய்ரோம்னும் அப்புறம் எவ்ளோ எனர்ஜியால் எங்களை நிரப்பிகொள்ளரோம்னும் கவனிச்சிக்கணும் .மனதை சந்தோஷப்படுத்தும் விஷயத்துக்கு எவ்ளோ எனர்ஜி செலவானாலும் அது மீண்டும் கிடைக்கும் :) எனர்ஜியால் நிரம்பிக்கறோம்னு நெகட்டிவிட்டியை fill பண்ணகூடாதது :)
   பூனைகளை கவனிச்சா தெரியும் நல்லா ஊர் சுற்றி ஆட்டம் போட்டாலும் தூங்குவதில் வெகு கில்லாடிஸ் .எங்க ஜெசி கண்ணில் கையை வைத்து மூடிக்கிட்டு டிஸ்டர்பன்ஸ் வராம தூங்குவா :) வெளியேறின எனர்ஜிலாமா மீண்டும் கிடைச்சிடும்

   Delete
  2. /எதுவும் செய்யாமல் பொழுது போகவில்லையே என இருப்போர்தான் அதிகமாக//

   ஹாஹாஹா :) சிலரை பற்றி சொல்லியே ஆகணும் இங்கே இருவர் இருக்கிறார்கள் .ஒருவர் என் கணவரின் தூரத்து நண்பர் :) தூரத்து என்று சொல்ல காரணம் நானா இவரிடம் நெருங்க விடுவதில்லை ..காரணம் அவ்ருக்கு மனைவி இருக்கிறார் அவருடன் பேசுவது அவருடன் காலநேரம் செலவழிப்பது விட்டுட்டு அவர் தனது எனர்ஜியை உலக நாடுகளில் உள்ள தன நட்புக்களுக்கு குறைந்தது 10 பேருக்கு அன்றாடம் gossip பேசுவார் .இப்படிப்பட்டவர்களுடன் பேசினாலே நமக்கும் கெட்டதே .வாட்ஸாப்பில் அன்றாடம் 30 fwd மெசேஜஸ் வரும் .ஒரே வாரத்தில் 300 மெசேஜ் வந்து போன் லாக் ஆகிடும் :)
   இன்னொருவர் எதுக்கெடுத்தாலும் என்ன வாழ்க்கை இதுனு சலிப்பவர் :) எக்கசக்க எனர்ஜியை வச்சிகிட்டு சும்மா கிடக்கிறார் .அநேகமா இப்படிப்பட்டவர்களை கண்ணை மூடி அத்துவான காட்டில் விட்டா திரும்பி வீட்டுக்கு வர 2 நாள் எடுக்கும் :) எனர்ஜி ஓவரா இருப்போருக்கு இதுதான் ட்ரீட்மெண்ட்

   Delete
  3. //இதற்க்கு எங்காவது உள்குத்து போஸ்ட் வரலாம் :)//

   ஹையோ கடவுளே இதில என்ன இருக்கு உள்குத்து குத்த?:).

   //சிறு விஷயத்தையும் பெரிசுபடுத்த யூஸ் பண்ணும் எனர்ஜியை வேறு விஹயத்துக்கு டைவர்ட் ஆக்கினால் நன்மை//
   உண்மைதான்.

   //மனதை சந்தோஷப்படுத்தும் விஷயத்துக்கு எவ்ளோ எனர்ஜி செலவானாலும் அது மீண்டும் கிடைக்கும் :)//

   இப்படி விசயத்தில எப்பவும் எனர்ஜி இழப்பு ஏற்படாது மாறாக பூஸ்ட் ஆகத்தன் இருக்கும்.

   //எனர்ஜியால் நிரம்பிக்கறோம்னு நெகட்டிவிட்டியை fill பண்ணகூடாதது :)//
   100 வீதம் உண்மை.

   //எங்க ஜெசி கண்ணில் கையை வைத்து மூடிக்கிட்டு டிஸ்டர்பன்ஸ் வராம தூங்குவா :) வெளியேறின எனர்ஜிலாமா மீண்டும் கிடைச்சிடும்//

   ஹா ஹா ஹா குழந்தைகளுக்கு தூக்கத்தில்தானே எனர்ஜி லெவல் அதிகமாகுது.

   Delete
  4. //சிலரை பற்றி சொல்லியே ஆகணும் இங்கே இருவர் இருக்கிறார்கள் .//

   அதேதான், பலருக்கு தம்மிடம் இருக்கும் திறமைகளை எங்கே காட்ட வேண்டும் எனத் தெரிவதில்லை.. இதனை தம் குடும்பத்துக்குள்ளேயே செலவழிச்சால் எங்கேயோ போயிடுவார்கள்.

   Delete
 8. இங்கே ஒரு குடும்பத்து பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் மூவரும் படிக்கும்போதே நன்கு வரைந்து ஆர்ட்டிஸ்ட் வேலையும் பார்க்கிறாங்க .நல்ல சம்பாத்தியம் வேலையும் இருவருக்கு கிடைத்து .பார்க்க சந்தோஷமா யிருக்கும் .
  இங்கே சொன்ன குடும்பம் நல்லா என்கரேஜிங் அதான் எனர்ஜி வீணா விரயமாகாமல் நல்லா அமைஞ்சு

  ReplyDelete
  Replies
  1. இதேதான் அஞ்சு, பல பிள்ளைகள் பழுதாகுவதற்குக் காரணம், அவர்களின் எனர்ஜி லெவலை சரியான முறையில் கண்டறிஞ்சு அதுக்கேற்ப வழி நடத்தாமையே... யாரையும் சும்மா இருக்க விடக்கூடாது.. ஏதாவது ஒரு பொழுது போக்கிற்குள் இறக்கி விட்டிட வேண்டும்.

   இல்லை எனில் அதனை வேறு வழியில் காட்டி வீணாகப் போய் விடவும் வாய்ப்பிருக்கெல்லோ.

   Delete
 9. இரண்டு வீடியோஸும் பார்த்தேன் ஹாஹாஹா :) எங்க வீட்ல மல்ட்டி என்னை போல் அலர்ஜி இருப்பதால் கொஞ்சம் லேசி ஆனா ஜெசி அட்டகாசமா அட்டகாசம் தவறி .மழையில் நனைஜு வந்து எங்கமேலேயே துடைய்ச்சிப்பா :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இவர்களின் கதைகள் சொல்லி முடியாது.

   Delete
 10. ஊசி குறிப்பு இணைப்பு கேக் எல்லாம் ஜூப்பர் .கேக் VEGAN க்ளூட்டன் ப்ரீயா இருந்தா மட்டுமே தொடுவேனாம் நான்

  ReplyDelete
  Replies
  1. இப்போ நீங்க வீகனுக்கு மாறிட்டீங்களோ? கர் அப்போ மில்க் உம் குடிப்பதில்லையா? யோகட்?...

   Delete
 11. யார் செய்த மாயம் >>பாட்டு யார் நடிச்ச மூவி ??னு கேட்டுட்டே கண்டுபுடிச்சேன் :))

  ReplyDelete
  Replies
  1. ஓ நீங்க தேடிக் கண்டு பிடிச்சிட்டீங்களோ? நான் அதுபற்றிய ஆராட்சியில் இறங்கவில்லை.. படம் பார்க்கும் ஆர்வம் இருந்திருப்பின் தேடியிருப்பேன்.. இது அப்படி எண்ணம் வரவில்லை..

   Delete
 12. // அதுக்கேற்ப நாமும் அவர்களோடு ஒத்துப் போக வேண்டும். சண்டை, வெட்டுதல், போராட்டம் இப்படியானவைகூட ஒருவிதத்தில் அவர்களின் எனர்ஜி வேறு வழியில் செலவழிக்கப்படாமையாலேயே, இப்படிப் பாதையில் செலவாகிறது...//
  இது அந்த ரிமா 2 படம் ஹீரோ கேரக்டரோ :))
  எதையாச்சும் கொளுத்திப்போடுவோம் :) நம்ம எனர்ஜி நிரம்பிடும் பூனையை கலாய்ச்சாலே :))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) எனர்ஜியை ஏத்துவது சரி.. ஆனா அதை செலவிடும்போது யோசியுங்கோ.. பிரயோசனமான விசயத்துக்கா செலவிடுறோம் என... சிலசமயம் சம்பந்தமே இல்லாத விசயத்துக்கெல்லாம் தேவையில்லாமல் எனர்ஜியை வேஸ்ட் பண்ணிடுவோம்:) பின்புதான் யோசிப்போம் எதுக்காக இதுக்கு இவ்வளவு இம்போட்டன்ஸ் கொடுத்தோம் என:)..

   மிக்க நன்றி அஞ்சு.. போஸ்ட் போட முடியுமோ முடியாது அடுத்த வருடத்துக்கு முன்பு என நினைச்சிருந்தேன்.. ஆனா போட்டிட்டனே:).

   Delete
 13. எனர்ஜி இல்லாமல் இருந்த எனக்கு இதை படித்ததும் எனர்ஜி கூடியது போன்ற உணர்வு.

  எனர்ஜி இல்லாதவங்க இந்த எனர்ஜி பதிவுக்கு வந்து படித்தால் எனர்ஜி கிடைப்பது உறுதி இது எனர்ஜி மீது சத்தியம்.

  படித்து முடித்து கருத்துரை போட்டதும் எனர்ஜி குறைந்தது போன்ற உணர்வு.

  ஆகவே எனர்ஜி ஏற்றிக்கொள்ள மீண்டும் எனர்ஜி பதிவை படித்து எனர்ஜியை கொடுக்கப் போறேன்.

  குழந்தைக்கு நல்ல அப்பா கிடைத்ததை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ
   //எனர்ஜி இல்லாமல் இருந்த எனக்கு இதை படித்ததும் எனர்ஜி கூடியது போன்ற உணர்வு.//

   ஆவ்வ்வ்வ் உண்மையாவோ?..

   //எனர்ஜி இல்லாதவங்க இந்த எனர்ஜி பதிவுக்கு வந்து படித்தால் எனர்ஜி கிடைப்பது உறுதி இது எனர்ஜி மீது சத்தியம்//
   ஹையோ இது எங்கயோ இடிக்குதே:) ஹா ஹா ஹா..

   //படித்து முடித்து கருத்துரை போட்டதும் எனர்ஜி குறைந்தது போன்ற உணர்வு.//
   ஹா ஹா ஹா கர்ர்ர்:) நல்ல விசயத்துக்காகத்தான் எனர்ஜியை குறைச்சிருக்கிறீங்க அதனால ஓகே.

   //ஆகவே எனர்ஜி ஏற்றிக்கொள்ள மீண்டும் எனர்ஜி பதிவை படித்து எனர்ஜியை கொடுக்கப் போறேன்//
   அதனாலதான் என் வியூஸ் ஏறியிருக்குதோ?:) ஹா ஹா ஹா மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 14. அஞ்ஞானி அதிரா விஞ்ஞானி அதிரா ஆகி எனர்ஜி தீசிஸ் எழுத எத்தனை எனர்ஜி செலவழித்திருப்பார்?
  சும்மா எனர்ஜி என்பதை மாற்றி கொழுப்பு (கொலஸ்ட்ரால் அல்ல) என்று திருத்தி வாசித்தேன். அப்படியே பொருந்துது.

  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ.. ஹா ஹா ஹா நல்லாத்தான் உங்கள் எனர்ஜியைச் செலவழித்து என்னைப் பற்றிக் கண்டு பிடிக்கிறீங்க:).

   இல்ல எனர்ஜி நல்ல முறையில் செலவழிந்தால் அது எனர்ஜியாகவே இருக்கும்.. ஆனா தீய வழியில் செலவழிச்சால் கொழுப்பு எனப் பெயர் எடுக்கும்:)).. நல்ல கண்டுபிடிப்புத்தான்.

   மிக்க நன்றிகள்.

   Delete
 15. வணக்கம் அதிரா சிஸ்டர்

  தங்கள் பதிவு அமர்க்களம். எனர்ஜி லெவல் பத்தி நீங்கள் எழுதியது அனைத்தும் நூற்றுக்கும் மேலாகவே உண்மை. ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தேன். ஓவ்வொன்றுக்கும் கமெண்ட் போட மனது ஆசைபடுகிறது. இப்போது நேரமின்மை காரணமாக அதை ஒத்தி வைத்து பிறகு வருகிறேன். என்னையும் எனர்ஜி லெவலில் புகுத்தியது பார்த்து எனக்கும் எனர்ஜி வந்தது. மிக்க நன்றி. எனக்கு வெற்றிலை பாக்கு கிடைக்குமா? நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலா சிஸ்டர் வாங்கோ..

   //தங்கள் பதிவு அமர்க்களம். எனர்ஜி லெவல் பத்தி நீங்கள் எழுதியது அனைத்தும் நூற்றுக்கும் மேலாகவே உண்மை//

   ஆவ்வ்வ்வ் மியாவும் நன்றி.

   //என்னையும் எனர்ஜி லெவலில் புகுத்தியது பார்த்து எனக்கும் எனர்ஜி வந்தது. மிக்க நன்றி. எனக்கு வெற்றிலை பாக்கு கிடைக்குமா? நன்றி.//
   ஹா ஹா ஹா இல்ல இம்முறை நீங்க கொஞ்சம் வெள்ளன வந்தமையால உங்களுக்கு கேக்கூஊஊஊஊ:)).. ரெயினின் கடசிப்பெட்டிக்காரருக்குத்தான் வெற்றலை பாக்கு:).

   Delete
 16. எனர்ஜி லெவல் பற்றிய சிந்தனைகள் சிறப்பு 👌.

  பறவைகளில் கணவன்.... ஹாஹா....

  அனைத்தும் சிறப்பு. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. ரசித்தமைக்கு மிக்க நன்றிகள்.

   Delete
 17. ஏஞ்சல் ஒட்டுமொத்தக்குத்தகை எடுத்துட்டு எல்லாத்தையும் அள்ளிட்டுப் போயிட்டாங்க! இது நியாயமே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எனக்குக் கேக் மட்டும் தானா?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..
   முதல் வருபவர்களுக்கே தட்டில் இருக்கும் காசெல்லாம்:) நீங்க லேட்டானாலும் ஆகவும் லேட் இல்லை:) அதனால உங்களுக்கு கேக்கூஊஊஊஊ:).

   அநேகமாக இம்முறை நெல்லைத்தமிழன் அண்ட் ஸ்ரீராமுக்கே வெற்றலை பாக்கு ஹா ஹா ஹா:).

   Delete
 18. எல்லாப்படங்களும் நல்லா இருக்கு. உங்க டெய்சிப்பிள்ளை ரொம்பவே செல்லம் கொஞ்சுறா! பொறாமையா இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ))))) அநேகமா நீங்க போட்டிருக்கும் எல்லா மீம்ஸும், கடைசி வெற்றிலை, பாக்கு, மாத்திரைகள் உட்பட ஏற்கெனவே வந்தவை தான்! :)))))) ஹாஹாஹா, இது எப்பூடி இருக்கு?

  ReplyDelete
  Replies
  1. //உங்க டெய்சிப்பிள்ளை ரொம்பவே செல்லம் கொஞ்சுறா! பொறாமையா இருக்கு//

   உண்மைக்கு கீசாக்கா நானும் நினைப்பேன்.. இப்படி என்னைப்போல அஞ்சுவைப்போல செல்லம் கொஞ்சி வளர்க்கும் வீட்டில் வந்திருப்பதால கொடுத்து வச்சிருக்கினம் என.. ஒருவேளை எனக்கு அடுத்த ஜென்மம் பூனை:) எனில்.. என்னையும் இப்படி செல்லம் கொஞ்சும் வீட்டில பிறக்கப் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா:)..

   //மாத்திரைகள் உட்பட ஏற்கெனவே வந்தவை தான்! //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உப்பூடிச் சொல்லக்கூடாது..:).. ஆவ்வ்வ்வ்வ் வாவ்வ்வ்வ்வ் அதிரா இவற்றை எல்லாம் எங்கிருந்து எடுக்கிறீங்க.. நான் பிறந்து வளர்ந்ததுக்கு இப்போதான் பார்க்கிறேன்ன்:).. ஹா ஹா ஹா இப்பூடிச் சொல்லோணுமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

   Delete
 19. இப்போ விஷயத்துக்கு வரேன். பெண் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தா எனர்ஜியைச் செலவு செய்யறதில்லைனு யாரு சொன்னாங்க உங்களுக்கு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேலைக்குப் போகாமல் ஒரு நாள் மட்டும் வீட்டில் இருந்து பார்த்தால் தெரியும். இது பத்தின ஒரு வாட்சப் செய்தியும் இருக்கு. ஆனால் அதை டெலீட் செய்துட்டேன். அநேகமா அது எல்லோருக்கும் சுத்திச் சுத்தி வந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கீதாக்கா ஹைஃபைவ்!!! ஹப்பா நான் சொல்ல வந்ததை நீங்க சொல்லிட்டீங்க....அதுக்காகவே இந்த விஷயத்துக்கு கீதக்கா கமென்ட் போட்டுருப்பாங்களே நு தேடினேன்...அதே அதே அதே அதே....ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றியோ நன்றி அக்கா......கை கொடுங்க...

   கரீக்டா சொல்லிட்டீங்க...
   இதை அப்படியே வழி மொழிந்துவிடுகிறேன்...

   கீதா

   Delete
  2. //இப்போ விஷயத்துக்கு வரேன். //
   வாங்கோ..:).

   //பெண் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தா எனர்ஜியைச் செலவு செய்யறதில்லைனு யாரு சொன்னாங்க உங்களுக்கு? //
   நான் அப்படி எல்லாப் பெண்களுக்கும் எனச் சொல்லவில்லையெல்லோ கர்ர்ர்ர்ர் திரும்பப் படியுங்கோ.. பல பெண்கள் வேலைக்குப் போகாட்டிலும் தம்மை ஏதோ ஒரு பொழுது போக்கில் ஈடுபடுத்துகின்றனர்...

   ஆனா உண்மையில் அக்காலத்தில் எல்லாம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை அல்லது, சொந்த ஊரிலேயே வாழ்வதால் ரோட்டில் நின்று பேச்சுக் கொடுத்தாலே எனர்ஜி செலவாகிடும்.. ஆனா இக்காலம் அப்படியில்லை.. பக்கத்து வீடு ஆரெனத்தெரியாமலேதானே பலருக்கு வாழ்க்கை ஓடுது..

   அப்போ கணவன் தானே மனைவியை நேர் படுத்தோணும்.. இன்னொன்று இலங்கையில் இப்போ வீட்டு வேலைக்கு என ஆள் பிடிக்கவே முடியாதாம், வீடு துடைப்பது கூட்டுவது பாத்திரம் கழுவுவது எல்லாமே நாம் தான் செய்யோணும்.. அல்லது பெரிய தொழிலாளர்களாக வந்து வீடு கழுவி விடுவார்களாம் பெரும் தொகைக்கு.. இப்போ உண்மையில் நாட்டுப் பிரச்சனை தீர்ந்த பின் அங்கு கஸ்டத்தில் இருப்போர் என ஆரும் இல்லை என்றே சொல்லோணும்.. அதனால சின்ன வேலைகளுக்கு ஆட்கள் இல்லை.

   ஆனா இந்தியாவைப் பொறுத்தவரை, கழுவ ஒருவர், துடைக்க ஒருவர், வோசிங் மெசினில் இருக்கும் உடுப்பை எடுத்துக் காயப்போட ஒருவர் என்றெல்லோ ஆட்களைப் பிடிக்க முடியுமாம்.. அப்போ இப்படி எனில்.. அந்த வீட்டுப் பெண்ணுக்கு என்ன வேலை இருக்கப்போகுது? அவ தன்னை ஏதும் பொது விசயங்களில். பொழுது போக்கில் ஈடுபடுத்தினால் ஒளிய.. அவவின் எனர்ஜி எங்கே செலவாகிடப்போகுது? போதுமான நேரம் இருக்குமே.... இப்படியான நேரங்களில் ஏதும் தப்பான நட்பு[ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்] கிடைக்கும்போது தவறாகி விடுமெல்லோ..

   //இது பத்தின ஒரு வாட்சப் செய்தியும் இருக்கு. ஆனால் அதை டெலீட் செய்துட்டேன்//
   அது நானும் படிச்சேன் கீதாக்கா.. ஆனா அது எல்லாப் பெண்களுக்கும் பொருந்துமோ?.. உண்மையில் பேஸ்புக்கில் இருந்த காலத்தில் பார்த்தால் தெரியும் எத்தனைபேரின் பெயர் எப்பவும் பச்சை விளக்கிலேயே இருக்கும்... அப்போ நான் நினைப்பது அவர்களுக்கு உண்மையில் பொழுதுபோகவில்லை.. என்ன பண்ணுவார்கள்.. அதுவும் வீட்டில் தனியே இருக்கும் பெண்கள், ஆண்கள்..

   இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. மியாவும் நன்றி கீசாக்கா.

   Delete
  3. அல்லோ கீத்ஸ்ஸ்ஸ்:) கீசாக்காவே ஏதும் விசேசம் வந்தால் மட்டும்தானே பிசியாகிறா:)) ஹா ஹா ஹா ஹையோ மீ ரன்னிங்.. இல்ல இல்ல..ஃபிளையிங்:))

   Delete
  4. //கீசாக்காவே ஏதும் விசேசம் வந்தால் மட்டும்தானே பிசியாகிறா:)) ஹா ஹா ஹா ஹையோ மீ ரன்னிங்.. இல்ல இல்ல..ஃபிளையிங்:))// அநியாயமா இல்லையோ? நான் இப்போ அக்கி வந்தப்புறமாத் தான் நரம்பு வலி பொறுக்கமுடியாமல் பாத்திரம் கழுவ மட்டும் ஒரு பெண்மணியை ஏற்பாடு செய்திருக்கேன். அதுவும் ஒரே வேளை. எல்லா வேலையும் நானே செய்துக்கிறேனாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))))

   Delete
 20. இந்த எனர்ஜி இல்லாமல் கஷ்டப்படுகிறேன் இந்த வயதில் எங்கு கிடைக்கும் சொல்லுங்களேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜி எம் பி ஐயா...

   எனர்ஜிக்கு வயசு ஒரு விசயமில்லை ஐயா.. மனமும்தான் காரணம்.. நல்ல கொமெடிகள் பாருங்கோ.. வெளியே நடவுங்கோ 4 பேருடன் நன்கு சிரிச்சுப் பேசுங்கோ.. ஏன் நீங்கள்தான் புளொக் வைத்திருக்கிறீங்களே.. நீங்கள் விரும்பும் புளொக்கில் கொஞ்சம் அதிகநேரம் உரையாடிப்பாருங்கோ எனர்ஜி தானாக வரும்...

   மிக்க நன்றிகள்.

   Delete
 21. சாதாரண பூனைகளை விட இவவுக்கு எனர்ஜி லெவல் கொஞ்சம் அதிகம்.. எப்பவும் ஓவரா ஓடோணும் துள்ளோணும் என இருப்பா. //

  அதிரா ஹையோ அதை ஏன் கேக்கறீங்க எங்க வீட்டு கண்ணழகி இருக்காளே இப்ப 10 வயசு ஆகப் போகுது இன்னும் ஒரு மாதத்தில்...ஆனாலும் ஓட்டமோ ஓட்டம்...மொட்டை மாடி ஏறுவா...எலி பிடிக்கப் போவா....படங்கள் எல்லாம் எடுத்து வைச்சுருக்கேன் போஸ்ட் போட..கொஞ்ச நேரம் வீட்டுக்குள்ள இருந்தா போதும் உடனே கதவைத் திற என்று சொல்லி வீட்டுக்குள்ள இருக்கற ஒத்தையடிப் பாதை காம்பவுண்டுக்குள்ள சுத்தி வந்து ஓடி, என்று ஹைப்பர்தான்...வாசலில் எந்த பைரவர் பூஸார் எலி அல்லது அணில் போகக் கூடாது அவ்வலவுதான் அங்கு ஓடி இங்கு ஓடின்னு...மஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் என்று மூச்சிரைத்துக் கொண்டு ஓடுவாள்...நான் ரசிப்பேன்....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ..

   ஓ கண்ணழகியும் அப்படித்தானோ ஹா ஹா ஹா அவர்களின் துள்ளல் பார்த்தால் நமக்கும் உற்சாகம் பிறக்கும்.

   Delete
 22. நீங்க சொல்லிருக்கற எனர்ஜி லெவல் கரீக்டு....பாயின்ட்ஸ் அனைத்தும் சரியே. இதைப் பேச நிறைய இருக்கு....

  படங்கள் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு

  சரி சரி நான் லேட்டோ லேட்டு போல அதனால வெத்தலை பாக்கும் கூட கிடைக்காது போல...ஹா ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இல்ல நீங்க லேட் இல்லை கீதா.. உங்களுக்கும் கேக்...கூஊஊஊ இருக்குது:).

   Delete
 23. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...அதிரா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் டெய்சி பிள்ளைக்கும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கீதா, எவ்வளவு விரைவாக வந்திட்டுது புதுவருடம்..மிக்க நன்றி.

   Delete
 24. உங்களின் கருத்துரைகளை வாசித்தாலே எனர்ஜி வந்து விடும்...! இந்த மாதிரி பதிவெல்லாம் வேற லெவல்...! வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ..

   //உங்களின் கருத்துரைகளை வாசித்தாலே எனர்ஜி வந்து விடும்...//
   ஆவ்வ்வ்வ் இது எனக்கு பூஸ்ட்ட்:) நன்றி நன்றி.

   //இந்த மாதிரி பதிவெல்லாம் வேற லெவல்...! வாழ்த்துகள்...//
   ஹா ஹா ஹா ஹையோ ஊரெல்லாம் புகைப்புகையாப் போகுதே:) ஆவ்வ்வ்வ்வ்.. மிக்க நன்றிகள்.

   Delete
 25. முகப்புப் பாடல் நல்லாருக்கு...கேட்டுருக்கேன் ஆனால் அதிகம் கேட்டதில்லை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. புதிசுபோல இருக்குது கீதா, பார்த்தேன் பிடிச்சுப்போச்சு அதுதான் போட்டேன்ன்..

   இன்னொன்று சொல்லோணும் கீதா.. அந்தப் பாட்டு கண்டு பிடிச்சிட்டேன்.. இம்முறை போஸ்ட் பெருத்துவிட்டமையால் போடவில்லை.. அடுத்த போஸ்ட்டில் போடுகிறேன்... மாலைக் கருக்கல் வந்து மனசைக் கெடுக்குதடி மயிலே மயிலே.....

   Delete
 26. கேக்கு படம் நல்லாருக்கு.

  நானும் ப்ளம் கேக் - ட்ரை ஃப்ரூட்ஸ் கேக் செய்தேன்...அதிரா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஓ நான் அஞ்சுவுக்கு செய்ததுக்கு பின்பு இம்முறை செய்யவில்லை கேக், அதனால இது ஒவ்வொருவருடமும் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் இக்கேக் செய்து விற்பார்கள் சூப்பரா இருக்கும்.. அதை வாங்கினோம்..

   ஓ நீங்க செய்தீங்களோ.. அப்போ எங்கள்புளொக்கில் எதிர்பார்க்கலாமோ?:)..

   மிக்க நன்றிகள் கீதா.

   Delete
 27. வணக்கம் அதிரா சிஸ்டர்

  தங்கள் டெய்சி பிள்ளையின் போட்டோக்கள் மிகவும் நன்றாக உள்ளது. அவர் குறும்புகள் படு ஜோர். அலமாரியை எப்படியோ திறந்து உள்ளே சென்று விட்டாரே.! முயற்சி திருவினையாக்கும் என்பதை மெய்பித்த அவருக்கு பாராட்டுகள்.
  அனைத்துமே அருமையாக இருக்கிறது. எதை படிப்பது, எதற்கு கமெண்ட்ஸ் போடுவது எனத் தெரியவில்லை அந்த ஸ்டார்ஸ் மாதிரி...(சரவணா நீதான் அருள் செய்யனும்.)

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்டோர்ஸ் என திருத்தி படிக்கவும். எழுத்துப் பிழை விழுந்து விட்டது.

   Delete
  2. //அலமாரியை எப்படியோ திறந்து உள்ளே சென்று விட்டாரே.! //
   அலுமாரிக்குள், கிச்சின் கபேட்டுகுள்.. இப்படி உள்ளே பூந்து ஆராட்சி பண்ணுவதெனில் அவவுக்கு ரோலர் ஹோஸ்டரில் போகும் மகிழ்ச்சி:).

   ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
 28. வணக்கம் அதிரா சிஸ்டர்

  போட்டோ வாக்கியங்கள் நன்றாக உள்ளது. இந்த வயதிலேயே பள்ளி சென்று கணக்கு பாடத்தை சொல்லித் தரும்படி கேட்கும் குழந்தை மிக அழகு. அந்த வயதிலேயே பள்ளி செல்வது வருங்காலத்தில் நடந்தாலும் நடக்கும். ஹா. ஹா.

  பறவை கணவன் ரசித்தேன். எப்போதும் கத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஊகமா?

  ஜோக்ஸ் நன்றாக உள்ளது..

  இரண்டு காணொளியும் மிக அருமையாக இருந்தது.

  எக்லெஸ் கேக் என்பதால் ஒரு துண்டு, அதுவும் தயாராக வெட்டி வைத்திருந்த துண்டுக்கு எதிர்புறம் (அதில் கண்ணை கவரும் வண்ணம் ஒரு நட்ஸ் கூட இல்லை) ஒரு துண்டு எடுத்து கொண்டேன்.

  மற்றவருக்கு ஆறுதல் சொல்லும் இருக்கும் தைரியம் தனக்கு தேவைபடும் சமயம் இருப்பதில்லை. உண்மை.. உண்மை. ஊசி இணைப்பும், குறிப்பும் மிக நன்றாக உள்ளது.

  அது போல் மற்றவர்களுக்கு அட்வைஸ்களை வாரி வழங்கும் போது, கிடைக்கும் ஒரு சுகம், மற்றொரு பொழுதினில் தன் முன்னால் அதே அட்வைஸ் வந்து நிற்கும் போது சுமையாக மட்டுமல்லாது துக்கமாகவும் தோன்றுவது இயற்கை..

  அனைத்தும் மிக அருமையாக தேர்ந்தெடுத்து பதிவு செய்திருக்கிறீர்கள். பாராட்டுகளுடன், அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகளும்..

  நாளையோ, மறுநாளோ, மற்றொரு பதிவையும் எதிர்பார்க்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. //வணக்கம் அதிரா சிஸ்டர்//
   ஹா ஹா ஹா நாங்க இப்போ சிஸ்டேர்ஸ் ஆனதால நிறைய இடத்தில இருந்தெல்லாம் புகை வரப்போகுதே ஹா ஹா ஹா:))..

   //அந்த வயதிலேயே பள்ளி செல்வது வருங்காலத்தில் நடந்தாலும் நடக்கும். ஹா. ஹா.//
   அது உண்மைதான், ஆனா இன்னும் வெளிநாடுகளில் இந்தியாபோல மோசமாகவில்லை குழந்தைக் கல்வி.

   //எப்போதும் கத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஊகமா?
   //
   ஹா ஹா ஹா அப்படித்தான் நினைக்கிறேன், கணவர் பேசாமல் முகத்தை வேறுபக்கம் திருப்பியிருக்கிறாரேஎ:) ஹா ஹா ஹா..

   //இரண்டு காணொளியும் மிக அருமையாக இருந்தது. //
   மிக்க நன்றி. இப்படி நிறைய எடுப்பேன்.. சொந்த பந்தகளுக்குள் அனுப்பிப்போட்டு அழிச்சிடுவேன்.

   //அதுவும் தயாராக வெட்டி வைத்திருந்த துண்டுக்கு எதிர்புறம் (அதில் கண்ணை கவரும் வண்ணம் ஒரு நட்ஸ் கூட இல்லை) ஒரு துண்டு எடுத்து கொண்டேன். //
   ஹா ஹா ஹா இல்லை அது வெட்டிய துண்டை பிரட்டி வைட்த்ஹுப் படமெடுத்தேன், அப்போதானே கேக்கின் கீழ்பகுதி எப்படி இருக்குமெனத் தெரியும்...

   Delete
  2. //அது போல் மற்றவர்களுக்கு அட்வைஸ்களை வாரி வழங்கும் போது, கிடைக்கும் ஒரு சுகம், மற்றொரு பொழுதினில் தன் முன்னால் அதே அட்வைஸ் வந்து நிற்கும் போது சுமையாக மட்டுமல்லாது துக்கமாகவும் தோன்றுவது இயற்கை.. //

   இதுவும் 100 வீதம் உண்மை..

   //நாளையோ, மறுநாளோ, மற்றொரு பதிவையும் எதிர்பார்க்கிறேன். //
   இல்லை இல்லை.. இதுதான் இந்த வருடத்துக்கான பதிவு:).. இதுக்காகத்தான் கூக்க்குரல் போட்டேன்ன்.. ஏனெனில் வருடக் கடசியில் விருந்து .. ஹெட்டுகெதர் என வருகிறமையால் போட முடியுமோ தெரியாதே என யோசித்தேன்..

   இனி அடுத்த வருடம் இன்னொரு போஸ்ட்டில் சந்திப்போம்.. மிக்க நன்றிகள் கமலா சிஸ்டர்.

   Delete
 29. ஆஆஆஆஆ இன்று விடிய எழும்பிய உடனேயே எல்லோருக்கும் பதில் குடுக்கோணும் எனப் பல கனவுகளோடு படுத்தேன்.. எழும்ப லேட்டாகிட்டுது.. இன்று விருந்தினர் வருகை வேறு அத்தோடு நாளைக்கும் ஒரு ஹெட்டுகெதர் பாட்டி.. அதுக்காக ரோல்ஸ் உம் செய்தேன்... கிஃப்ட் பக்கிங்.. இப்படி நேரம் ஓடியே போச்சு.. மன்னிச்சுக்கோங்க.. தோஓஓஓஓஒ வந்திட்டேன்ன்:).

  ReplyDelete
 30. முன்பெல்லாம் புலாலியூர் பூசானந்தா இரண்டு வரில உங்க இடுகைல சொல்லுவார். இன்றைக்கு முழு இடுகையாவே த்த்துவங்களை அள்ளி விட்டிருக்காரே.

  எனக்கு எனர்ஜி இல்லை. பிறகு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

   உங்களுக்கு எனர்ஜியைக் கூட்ட கேக் கூட இல்லை:) தருவதற்கு ஏனெனில் கார்ட் பெட்டியில எல்லோ ஏறியிருக்கிறீங்க:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.. ஆனாலும்

   //பிறகு வருகிறேன்.//
   வாக்குக் கொடுக்கக்கூடாது:) கொடுத்திட்டால் காப்பாத்தோணும் ஹா ஹா ஹா இம்முறை அவசரமாக நியூ போஸ்ட் வருது:). மிக்க நன்றிகள்.

   Delete
 31. எனர்ஜி லெவல் பற்றி நீங்கள் சொல்லி இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். இருக்கலாம். எப்படி இந்த போஸ்ட் என் கண்ணில் படாமல் போயிற்று என்று தெரியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

   இதுக்குத்தான் அடிக்கடி அதிராவின் பக்கம் எட்டிப் பார்க்கோணுமாக்கும்:).. மிரேக்கிள் எப்ப வேணுமெண்டாலும் நடக்கலாமெல்லோ:).. என் போஸ்ட்டுக்குச் சொன்னேன்:).

   Delete
 32. ஊசி இணைப்பு முக்காலும் உண்மை. கேக்தான் எனக்கு. கடைசிப்பெட்டியில் ஏறி இருப்பதால்! ஆனால் எனக்கு இவ்வகை கேக்குகள் பிடிபப்தில்லை. வெண்மையான அல்லது சிவப்பு நிறத்தில் பஞ்சு போல நட்ஸ் இல்லாமல் இருக்கும் கேக்கே என் சாய்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு கேக்கூஊஊஉ கூட இல்லை ஸ்ரீராம்:).. கடசிப்பெட்டியில் ஏறுவோருக்கு வெற்றிலை பாக்குத்தேன்ன் ஹா ஹா ஹா..

   நீங்கள் சொல்லும் வெள்ளைப்பஞ்சுக் கேக் எனில் முட்டை போட்டால்தானே சாத்தியம்...

   Delete
 33. ஆறாவது படம் புன்னகைக்க வைக்கிறது. நல்ல கற்பனை இதைத் தயார் செய்தவருக்கு. ஏழாவது படம் புன்னகையைத் தக்கவைக்கிறது. எட்டாவது படம் கிர்ர்ர்ர்ர்ர். ஒன்பதாவது படம் : ஆம், உண்மைதான்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அவசரமாகப் பார்க்கிறீங்க போல இருக்கே:).

   Delete
 34. பெட்டிக்குள் உட்கார பழக்கி வைத்திருக்கிறீர்கள் போலும். பயம், தயக்கம் இல்லாமல் இறங்கி விடுகிறது உள்ளே...

  ReplyDelete
  Replies
  1. பெட்டி, பாக் எனில் சரியான விருப்பம்.. உடனே உள்ளே ஏறிடுவா, அதேபோல லாச்சி திறக்க முடியாது டக்கென ஏறி ஒளிப்பா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

   Delete
 35. நான்காவது படத்தில் ஹஸ்பெண்டைப் பார்க்க பாவமாக இருக்கிறது இல்லையா? பாவம்..

  ReplyDelete
  Replies
  1. ஹஸ்பண்ட் என்றாலே பாவம்தானே ஹா ஹா ஹா...

   Delete
 36. மூன்றாவது படத்திலி இருக்கும் கருத்து மிகவும் உண்மை. அது பெண்ணுக்கும்பொருந்தும். ஆன் பெண் என்றில்லாமல் எந்த ஒரு பொருளையுமே அடையும் வரைதான் ஆசை. அப்புறம்? அலட்சியம்தான்!

  ReplyDelete
  Replies
  1. அது பெண்ணைவிட ஆண்களுக்கு கூடப் பொருந்தும்.. ஏனெனில் லவ் ஓகேயாகும்வரை விடாமுயற்சி பண்ணிக் கலைப்பது பெரும்பாலும் ஆண்கள்தானே.. அதனாலதான்:).

   Delete
 37. யார் செய்த மாயம் பாடல் இப்போதுதான் கேட்கிறேன். இனிமையாக இருக்கிறது. அந்தப்படம் பார்த்திருந்தாலும் பாடல் கேட்ட நினைவில்லை. காட்சியில்லாமல் பாடல் வருவது சிறப்பு. எனக்கு பகிரவேண்டும். காட்சி படுத்துவதால் சில பாடல்களை நானும் பகிராமல் இருக்கிறேன். சிலபாடல்கள்தான் இப்படி காட்சி இல்லாமலும் கிடைக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சில பாடல்கள் நன்றாக இருந்தாலும் வீடியோ பார்க்க சகிக்காமல் இருப்பதால் இங்கு போட முடிவதிலை.. வீடியோ இல்லாப் பாடல் கிடைப்பதும் கஸ்டம்தான்..

   மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
 38. உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் இவ்வருடம் நல்வருடமாக அமைய என் நல்வாழ்த்துகள்.
  HAPPY NEW YEAR ATHIRA.

  டிடிஅண்ணா சொன்ன மாதிரி உங்க போஸ்ட் வாசித்தாலே எனர்ஜி வந்துவிடும். அதனால அடுத்த வருடம் கிழமைக்கு 3 போஸ்ட் போடுங்கோஓஒ..
  வீடியோ ஓபன் ஆகுதில்லை சந்நிதியானிட்டை உங்களை பற்றி சொல்லிட்டு வந்து பார்க்கிறேன்.

  //சில பிள்ளைகள் முளுக்க முளுக்க படிப்பில் செலவிடக்கூடும்,// ஹலோ பூஸ் விட்டால் நீங்க இன்னும் தப்புதப்பா எழுதுவீங்க... ஒருத்தரும் பார்க்கேல்லை என சந்தோஷம் வேற..முழுக்க முழுக்க இப்படி வரவேண்டும்.

  ReplyDelete
 39. ஹப்பி நியூ இயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அம்முலு வாங்கோ வாங்கோ.. பதில் தருவதுக்குள் குழந்தை பிறந்துவிட்டது 2019:)..

  வாங்கோ அம்முலு வாங்கோ.. நீங்களும் ஊரும் நலமோ?.. நல்லா வேர்த்துக் கொட்டுதோ?:).

  //அதனால அடுத்த வருடம் கிழமைக்கு 3 போஸ்ட் போடுங்கோஓஒ//
  உப்பூடி என்னை உசுப்பேத்தினால் அவ்ளோதான்:) பிறகு நாடு ரெண்டுபட்டுவிடுமாக்கும்:).

  //ஹலோ பூஸ் விட்டால் நீங்க இன்னும் தப்புதப்பா எழுதுவீங்க...//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நெடுகவும் படி படி என வற்புறுத்தக் கூடாதெல்லோ ஓடி ஆடி விளையாடி என்சோய் பண்ணவும் விடோணும் எனச் சொன்னேன் அது டப்பா?:) ஹா ஹா ஹா..

  உங்கள் மிகுதிக் கொமெண்ட்ஸ்க்கு பதில் தருவேன் அதுவரை பொறுத்தருள்க.

  மிக்க நன்றி அம்முலு.

  ReplyDelete
  Replies
  1. நான் எழுத்து(முளுக்க///முழுக்க) பிழையை சொன்னேன். பிள்ளைகளை நல்லா விளையாட விடவேணும் அதில மாற்று கருத்து இல்லை.

   Delete
 40. எனர்ஜி லெவல் பற்றிய கருத்துக்கள் அருமை ...


  கேக் வாவ் சூப்பரா இருக்கு ...

  கடசிப் பெட்டியில் ஏறுவோருக்கு வெற்றலை பாக்கு :)) ஹா ஹா ஹா...ஹி ஹி அப்போ எனக்கு தான் அந்த வெற்றலை பாக்கு ..ok ...

  ReplyDelete
 41. பொங்கல் திருநாள் வாழ்த்துகள் அதிரா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் சுற்றத்தார் அனைவருக்கும்!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 42. அருமையான கருத்துகள் அதீஸ்.
  உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.