நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Wednesday, 13 January 2010

நீயும் என்னைக் காதலித்தாயா??...

மெளன பூகம்பம்
தாடியையும் சோகத்தையும்
சரி விகிதத்தில்
வளர்த்துக்கொண்டு
வாழ்பவன் அவன்,
அவளின் ஞாபகங்களே
அவனுக்கு சுவாசம்!

ன்னிரண்டு பாலைவன
வருடங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க
நேருகிறது எங்கெனில்......
ஒரு ரயில் நிலையத்தில்

ப்போதெனில்.....
ஒரு நள்ளிரவில்
எதிரெதிர் திசையில்
செல்லும் ரயில்கள்
இளைப்பாறிக்கொள்ளும்
அந்த இடைவெளியில்

யில்களின் எதிரெதிர்
பெட்டிகளில் பழைய
கண்கள் நான்கு
பார்த்துக்கொள்கின்றன
அப்பொழுது - மனதில்
எத்தனை மெளன பூகம்பம்!!!

ன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக் காணாமல்
போட்டுவிட்டன கண்கள்....
நீதானா?.. இல்லை,
வேறொருவன் கண்களால்
நான் பார்க்கின்றேனா?
மனதின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு பிரவாகம்

தயத்தின் ஆழத்தில் கிடந்த
உன்முகம்-- மிதந்து மிதந்து
மேலே வருகிறது....
ஓ... வருஷங்கள்
எத்தனையோ
கழிந்த பிறகும்
என் மார்பு தடவும்
அதே பார்வை.. அதே நீ.....

ன் பழையவளே!!!
என் கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே....
உன் நினைவுகளில்
நான் எத்தனையாவதாக
இருக்கிறேன்?.. அறிவாயா?
என் மீசைக்கும்
என் காதலுக்கும்
ஒரே வயதென்று அறிவாயா?
உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரைகூடத்
தோற்றுப்போனதே....

ஓ... நீ மாறியிருக்கிறாய்..
உன் புருவ அடர்த்தி
கொஞ்சம் குறைந்திருக்கிறது
உன் சிகப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன் இதழ்களில் மட்டும்
அதே பழைய பழச்சிவப்பு
இப்போதும் நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?
உன் நினைவுகள் - உன்
கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம் - ஆனால்
என் நினைவுகள்
உன்னைப்போலவே
விழித்திருக்கின்றன

... இந்த ரயில் வெளிச்சம்
நீ அழுவதாய் எனக்கு
அடையாளம் காட்டுகிறது
வேண்டாம்!!!!!
விழியில்ஒழுகும் வெந்நீரால்
மடியில் உறங்கும் உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!!!

தோ விசில் சத்தம் கேட்கிறது..
நம்மில் ஒரு வண்டி
நகரப்போகிறது
போய்வருகிறேன் அல்லது
போய் வா....!!!

விதியை விடவும்
நான் ரயிலை
நம்புகிறேன் - அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்
"நீயும் என்னைக் காதலித்தாயா???"


ரெயின் போய் விட்டது..தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.. நான்
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்...(ரெயின் போய் விட்டது..

~~~~~~~~ ~~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~ ~~~~~~~~~~ ~~~~~~~~~ஒகே ஓகே நான் சொல்கிறேன்...


அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..


இது சிலருக்கு மட்டும்:):)


இனிய பொங்கலுக்கு ~அடுத்த தின~ பொங்கல் வாழ்த்துக்கள்.

25 comments :

 1. அதிரா & குடும்பத்தாருக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
  அது தண்டவாளத்தில இருக்கிறவர் சொன்ன கவிதையோ! சரியா மனம் உடைஞ்சு போய் இருக்கிறார் போல! அடுத்த ட்ரெய்ன் வர முன்னம் தூக்கி பிளாட்ஃபோமில விடுங்கோ.

  ReplyDelete
 2. ஹ‌ ஹ ஹா!!! கவிதை அருமை.. அதுக்கு கொடுத்த விளக்கப்படங்கள் இன்னும் அருமை :))

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! வாழ்வில் இன்று போல் என்றும் இன்பம் பொங்கட்டும்!!!

  ReplyDelete
 3. இமா, வாழ்த்துக்கு மிக்க நன்றி. தண்டவாளத்தில இருக்கிறவரில உங்களுக்கு அதிக அக்கறைதான் இமா, ஆனால் அதால இப்ப ரெயின் வாறேல்லையாம்... அதுதான் பயமில்லாமல் இருப்பதுபோல நடிக்கிறாராக்கும்.

  ReplyDelete
 4. இலா மிக்க நன்றி. இப்ப அங்கும் இதயம் அடிக்கடி துடிப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கு.

  உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. இலா, கையைத் தூக்கிக்கொண்டிருப்பவர் நீங்கள் மயிலில் அனுப்பிய பூனையார்தான் நினைவிருக்கோ...

  ReplyDelete
 6. இமா சொன்னதையே ரிப்பீஈஈட்டு :) நாங்கூட ரெண்டு சைட் டோன்னு முதல்ல நினைச்சிட்டேன்.. ஒரு சைட் க்கே இவ்ளோ ஃபீலிங்க்ஸ் - கொஞ்சம் ஓவர் அதிரா :))))

  ReplyDelete
 7. ரெயினா? எங்க போச்சு அங்கேதானே நிக்குது :) புறப்படும் முன் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 8. அதிரா ரொம்ப நல்ல பகிர்வு , படம் அருமை,

  எல்லோருக்க்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அருமையான கவிதையும் படமும்.

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அதிரா!


  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 10. கவிதை படித்ததில் கண் இமைகள் சற்றே நனைந்தன அதிரா.

  ReplyDelete
 11. கா...ஆ..ஆ..தல் :) கவிதைகள் படித்திடும் நேரம்..இதழோரம் இனி ---- அச்சச்சோ..ஸ்டாப் ஜீனோ ஸ்டாப்! இது குழந்தைப் பிள்ளைகள் எல்லாம் படிக்கிற பகுதி!:)

  அதிராக்கா, நலமோ?

  மாடுகளுக்கு, மனுஷ ஜந்துக்களுக்கு:) எல்லாம் மட்டும்
  பொங்கல் வாழ்த்துச் சொல்லிருக்கீங்கள்..ஜீனோக்கு மட்டும் சொல்லலை! இந்த உடன்பிறப்பை மறந்துட்டீங்களோ??...ஸோ sad! :(

  ம்ம்..ஜீனோ உங்கள் (மொப்பி இருக்கும்) முகவரிக்கு ஒரு மயில் அனுப்பிருக்கார்..ஆன்ட்டி சொற்படி மயில் முட்டையை பொரிக்க வைத்து:) அழகான மயிலாய்த் தான் ஜீனோ அனுப்பியது..நீங்கள் மயிலைக் கண்டீங்களா?

  ReplyDelete
 12. சந்தனா, ஹைஷ் அண்ணன்...

  சந்தனா.. இங்கேயும் ரிப்பீட்டோ?
  என்ன செய்வது.. பீலிங்ஸ்:) என்றாலே ஓவர் தானே?... மிக்க நன்றி.

  ஹைஷ் அண்ணன் மிக்க நன்றி. ரெயின் இந்தக்காலத்தில் புறப்படும் மாதிரித் தெரியவில்லை. அதுசரி இது என்ன புதுப்பழக்கம்... உள்ளேன் அம்மா... சொல்ல வந்தவர்போல இருக்கே... அதிராக்கு ஒருவரிப் பதிலும் பிடிக்காது... உள்ளேன் .. என பிறசண்ட் மார்க் பண்ணிட்டு ஓடுவதும் பிடிக்காதாக்கும்.... ரைம் மனேஜ்மெண்ட் சொல்லித்தரட்டோ?:), ரோஜர் ரோஜர்... %) வேண்டாம். நன்றி.

  ReplyDelete
 13. ஜலீலாக்கா, இளமதி..

  ஜலீலாக்கா நல்வரவு.. மீண்டும் தருக.. சீ.. மீண்டும் வருக. மிக்க நன்றி அக்கா அனைத்துக்கும்.

  மிக்க நன்றி இளமதி. எல்லோரும் பொங்கல் வாழ்த்தை மட்டும்தான் சொல்கிறீங்கள்.. மற்ற நாளை மறந்ததுபோல:) விட்டுவிட்டீங்கள்.

  ReplyDelete
 14. ஸாதிகா அக்கா மிக்க நன்றி.
  உண்மையிலேயே... இக்கவிதை எனக்கு ஒரு நண்பி மூலம் கிடைத்தது, அப்ப தொடங்கி 500 தடவைகளுக்கு மேல் படித்திருப்பேன். ஒவ்வொரு முறையும் படிக்கும்போதும் இதயமெல்லாம் என்னவோ செய்வதுபோல இருக்கும். அந்த பீலிங்ஸ் எல்லோருக்கும் வராமல் இருக்கவே... பொங்கல் வாழ்த்தை தொடர்ந்து போட்டு நகைச்சுவையாக மாற்றிவிட்டேன்.

  ReplyDelete
 15. ஜீனோ வரமாட்டீங்களோ என தப்பாக நினைச்சுட்டேன். மிக்க நன்றி.

  டோராவுக்குப் பாடுற பாட்டை இப்படிப் பப்ளிக்கில் பாடப்படாது...:), அதுவும் குழந்தைகள் பக்கத்தில்... சரி எனக்கெதுக்கு ஊர்வம்பு.

  ஜீனோ நீங்க கற்பூரம் மாதிரி என்றல்லவா நினைத்திருந்தேன்... இல்லை நான் ரியூப் லைட்டே தான் என அடிச்சுச் சொல்லுறீங்களே... பொங்கல் வாழ்த்தும் சொல்லி சிலருக்கு மட்டும் வாழ்த்தும் சொல்லியிருக்கே... சரி சரி முறைக்கப்படாது.. %) ஆகாது.. இது குழந்தைகள் பகுதி.

  "கொசு"மயிலுக்கு(அதுதா..ன் "ஈ"மெயில்) நீங்கள் அனுப்பிய புறா முட்டை:), குஞ்சு பொரிக்குமுன் கண்டெடுத்திட்டேன்.. நான் அதைத் திறப்பதில்லை.. நல்லவேளை இங்கு சொன்னதால் அங்கு பார்த்தேன்... இதிலேயே மிகுதியை முடிக்கட்டோ... வேண்டாமோ?:)..

  ReplyDelete
 16. //ஜீனோ வரமாட்டீங்களோ என தப்பாக நினைச்சுட்டேன்.// கர்ர்ர்ர்....கிர்ர்ர்....வவ்வ்....வ்வ்..வவ்! ஜீனோவைப் பற்றி தவறா நினைக்கறதே உங்களுக்கு வழமையாகப் போச்சு அதிராக்கா!

  ஜீனோ ஒரு கூச்ச சுபாவி:) எண்டு உங்களுக்கே தெரியும்..பழகிய ஆக்கள் எல்லாரும் தனிக்குடித்தனம் வந்திருக்கினம்..அங்கே இருக்கும் புதுமுகங்களிடம் பழக:) ஜீனோ வெக்கப்படுது..அதனாலேதான் ஜீனோவும் தனிக்குடித்தனம் வந்திருக்கிறது. ----> இது நீங்கள் அனுப்பிய கொசு விடு தூதில் வந்த கேள்விக்குப் பதில்! :D :D :D

  ReplyDelete
 17. ஜீனோ!!!
  //ஜீனோவைப் பற்றி தவறா நினைக்கறதே உங்களுக்கு வழமையாகப் போச்சு அதிராக்கா!// இது பப்ளிக் பிளேஸ் என்றதால இதுக்கு நோ கொமென்ஸ்:).

  ஜீனோ இதுக்குத்தான் வெள்ளம் வருமுன் அணைபோடவேண்டுமாம். பட்டிமன்றம் ஒன்று நடந்துதில்ல? ”அங்கு”, அதில தீர்ப்பும் சொல்லப்பட்டதெல்லோ, தனிக்குடித்தனம்தான் நல்லதென. அதுதான் எல்லோருக்கும் ஐடியாக் கொடுத்தது தனிக்குடித்தனம் போக. ஆனால் ஜீனோ தனிக்குடித்தனம் வந்தபின்னர்தானே தெரியுது ஒவ்வொருவரிடமும் எத்தனை திறமை எல்லாம் ஒளிஞ்சிருந்திருக்கென்று(உங்களையும் சேர்த்துத்தான்). அப்போ அங்கேயே ஊக்கப்படுத்தி கூட்டுக்குடும்பத்திலேயே இதை வெளிப்பண்ணச் செய்திருக்கலாமோ என அதிராக்கா யோசிக்கிறேன். ஆனால், நீங்களும் நானும் யோசிச்சால் காணாது ஜீனோ... கூட்டுக்குடும்பம் குலையாமல் பாதுகாக்க வேண்டியது, மாமா, மாமியின் பொறுப்பெல்லோ.

  இருப்பினும் எங்களோடு சேர்ந்து நீங்களும் தனிக்குடித்தனம் வந்து, தனியே திரிவதைப் பார்க்க எனக்கு அழுகை அழுகையா வருகுது ஜீனோ...,
  கொஞ்சம் தள்ளி இருங்கோ... அக்காவின்ர கண்ணீர் வழிந்து, உங்கட வாலில் படப்போகுது.... இமா டிஸ்ஸூ பிளீஸ்... புது ஸ்ரொக் வாங்கியிருப்பீங்களென நம்புகிறேன்.

  ReplyDelete
 18. ரொம்ப ரொம்ப ரொம்ப நாளைக்கு அப்புறம் கண்ணுல ஒரு துளி கண்ணீர் வந்திச்சு... கவிதை ரொம்ப நல்லா இருக்கு...

  ReplyDelete
 19. மிக்க நன்றி கவிக்கா.

  சில கவிதை படிக்கும்போது, கவிதைதானே எதுக்கு கவலைப்படவேணும் என நினைக்க முடிவதில்லை... அனுபவித்ததுபோல அழுகை வந்துவிடுகிறது.

  ReplyDelete
 20. கவிதை நன்று. ஜெயித்த காதல்களை விட, தோற்ற காதல்கள்தான் மனதில் நிற்குமோ? இருக்கலாம். வெற்றிகளை விட, தோல்விகளையே மனதில் தாங்கி நிற்பதும் ஒரு மனித பலவீனம்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம்... சோகங்கள் தான் அதிகம் நிலைத்து விடுகிறதுபோலும் மனத்தில்.

   அதுதானே சொல்வார்கள்..”நீ யாருடன் சிரித்தாய் என்பது மறந்து போய் விடலாம், ஆனால் யாருடன் அழுதாய் என்பதை மறக்கவே முடியாது “ என.

   மிக்க நன்றி.

   Delete
 21. 2010-இல் நீங்க கவிதையெல்லாம் கூட எழுதுவீங்களா அதிரா !

  சபாஷ். நல்லா எழுதியிருக்கீங்க. உணர்வு மயமான கவிதை. ரஸித்துப் படித்தேன்.

  படங்களும் பொருத்தமாகக் கொடுத்துள்ளீர்கள்.

  2010 நான் (வலையுலகில்) பிறக்கவே இல்லை.

  பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி, அதிரா.

  Your Ref in my Comment Box: https://gopu1949.blogspot.in/2017/06/5-of-8.html

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணன்... ஹையோ இதை நான் எழுதவில்லை.. யாரோ ஒரு பிரபலத்தின் கவிதை, அதனை பலகாலமாகஎன் டயறியில் எழுதிப் பாதுகாத்து வந்து, இங்கு எழுதியது மட்டும்தான் நான்.

   மிக்க நன்றி உடன் வருகைக்கு... ஓ நீங்க 2011 இல் இல்லையோ?..

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.