நல்வரவு_()_


Monday 18 January 2010

அதிராவைத் தேடிய அன்னம்இரண்டு நாட்களுக்கு முன்பு, என் ஜீப்பில் தனியே போய்க்கொண்டிருந்தேன். நேரம் இரவு ஏழு மணியைத் தாண்டியிருந்தது. வீடு போய்ச்சேர இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும். வின்ரர் நேரம் என்பதால் 3/3.30 க்கே நன்கு இருட்டத் தொடங்கிவிடும்.

மனதில் பதட்டத்தோடு.. ஓடிக்கொண்டிருக்கிறேன். நான் ஓடிய பாதை 40 mile/hour. அதிலிருந்து 70 mile/hour Motorway இல் என்ரர் பண்ண வேண்டும். பிரித்தானியாவில் Highway என்பதை Motorway என்றுதான் அழைப்பது வழக்கம். கனடா, அமெரிக்காப் பகுதிகளில்தான் ஹைவே என்கிறார்கள். ஏனைய நாடுகள் பற்றித் தெரியவில்லை.அப்போ நான் 40 மைல் வேகத்திலிருந்து, 70 மைல் வேகத்துக்கு, கொஞ்சம் கொஞ்சமாக கூட்டியபடி வளைவான பாதையூடாக வந்துகொண்டிருந்தேன் மோட்டவேயில் நுழைய. அப்பொழுது பார்க்கிறேன், மோட்டவே வெறிச்சோடிக்கிடக்கிறது. வழமையான அந்த நேரம், உள் நுழைய முடியாதபடி வாகனமாக இருக்கும். இன்று இப்படித் தெரிந்ததும் எனக்கு நெஞ்சு பக்கென்றது. தனியே வருகிறேன். ஏதாவது பாதை மூடிவிட்டார்களோ, திரும்பவேண்டிவருமோ என்றெல்லாம் மனம் எண்ணியபடி, வளைவு நேரானதும் முன்னே பார்த்தேன்.

என் முன்னே வந்த கார்கள் எல்லாம், மோட்டவேயில் நுழையாமல் அப்படியே நிற்கின்றன. நானும் நிறுத்திவிட்டேன். என்னவென்றே புரியாமல் தடுமாறியபடி மோட்டவேயைப் பார்க்கிறேன்... அங்கே இரண்டு மூன்று போலிஸ் கார்கள் ரோட்டின் குறுக்கே, முன்னே போவதும் பின்னே போவதுமாக நடனமாடுவதுபோல, அசைந்து கொண்டிருந்தன.சில பொலீஸ்காரர்கள், கையிலே பொலீஸ் ஜக்கெட்டைப் பிடித்தபடி குறுக்கும் நெடுக்குமாக ஓடுவது தெரிந்தது. இது என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்தேன், என் கண்களையே நம்பமுடியாமல், பெரிய ஒரு சுவான்(swan), கிட்டத்தட்ட ஒரு மாட்டுக்கன்றின் அளவிருக்கும் ரோட்டின் குறுக்கே ஓடிக்கொண்டிருந்தது. சுவான் பிள்ளையைப் பிடிப்பதற்காகவே இவர்கள் இந்த ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தார்கள். பொலீஸைப் பார்த்தால் நெடுநேரம் ஓடிக் களைப்படைந்து விட்டவர்கள்போல தெரிந்தது.சுவான் பிள்ளையும் களைத்துவிட்டார், ஓடுகிறார் பின்னர் ரோட்டிலே படுக்கிறார், அவர் படுத்ததும் பொலீஸ் கிட்டப் போகிறார்கள், உடனே எழுந்து இவர் ஓடுகிறார். இப்படியே நடந்துகொண்டிருந்தது. எங்கேயோ பக்கத்து ஆற்றிலிருந்து வழிமாறி வந்து மோட்டவேயில் நுழைந்திருக்கிறார். அதனால்தான் பாதையெல்லாம் மூடிவிட்டு, சுவானைப் பிடிக்கும் முயற்சியில் பொலீஸ் தோற்றுக் கொண்டிருந்தார்கள். குளிர் வேறு அவர்களை விறைக்க வைத்துக்கொண்டிருந்தது.

நானும் நன்கு ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தவேளை, திடீரென, சுவான் மோட்டவேயை விட்டு இறங்கி நான் நின்ற பாதைக்கு ஓடிவந்தது. அதுவும் என் ஜீப்பை நோக்கி. அன்னம்போல வாழப் பழக வேண்டும் என அடிக்கடி சொல்லும்..... “அதிராவைத் தேடி அன்னமா?” அதிர்ந்து விட்டேன். என் ஜீப்பின் பக்கத்திலே ஜன்னலுக்குக் கிட்ட வந்துவிட்டது, என் கை துரு துருவென்றது, பொக்கட்டிலே இருக்கும் போனை எடுத்து, படமெடுப்போம் என்று. ஆனால் பின்னாலே பொலீஸ் துரத்திக்கொண்டே வந்தமையால், பயத்தில் அப்படியே இருந்துவிட்டேன். தொட்டில் பழக்கம், பொலீஸ், ஆமி என்றால், தானாடாவிட்டாலும் தசை ஆடும்.

என் ஜன்னலோரம் வந்த சுவான்.. அப்படியே ஜீப்பைச் சுற்றிக்கொண்டு முன்னாலே சென்று, பக்கத்திலிருந்த மரங்களுக்குள் சென்றது. பொலீஸும் விடுவதாக இல்லை. கலைத்துக்கொண்டே போனார்கள். சொல்வார்களே ”முயல் பிடிக்கும் நாயை மூஞ்சையைப் பார்த்தால் தெரியும்” என்று. அப்படித்தான், அவர்களைப் பார்த்தால் சுவானைப் பிடிப்பார்கள்போலத் தெரியவில்லை எனக்கு. பின்னர் பாதையைத் திறந்துவிட்டார்கள். நான் வந்து சேர்ந்துவிட்டேன். இப்படியான பல காட்சிகளை ரீவியில் பார்த்து ரசித்திருக்கிறேன், ஆனால் நேரில் பார்த்தபோது, அது ஒரு இன்ப அனுபவமாக இருந்தது.

பின் குறிப்பு:
அன்னப்பறவையை நான் இதுவரை பார்க்கவில்லையாக்கும், சுவான் தான் அன்னம் என்று ஒரு கணிப்பு.

பின் இணைப்பு:
இது, அன்புச் ஸாதிகா அக்கா, என் கொசுமெயிலுக்கு, எனக்காக அனுப்பிய அன்புப் பரிசு ~பூஸ்~
அவரது நண்பியின் செல்லம். பிங் ~போ~ போட்டிருக்கிறார் அப்போ Girl தான்.

16 comments :

 1. சூப்பர் அதிரா!

  ReplyDelete
 2. அன்னத்தை தேடிய அன்னத்தை காவல்துறை காட்டுக்குள் விரட்டிவிட்டு விட்டதா? சென்னையில் இருந்து வந்த பிங்~போ~கட்டிய பூஸ்ஸை விட்டு காட்டுக்குள் போன அன்னத்தை தேட சொல்றீங்களோ?

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 3. இலா, அதிராவைத்தானே சூப்பர் என்கிறீங்கள் மிக்க நன்றி. அப்போ அன்னம்?. thanks ila. இன்று சதுர்த்தி, எனக்கு மனம் உடல் எல்லாம் சோர்வாக இருக்கு. கண்ணை மூடியபடி படுப்பதுதான் நல்லதுபோல இருக்கு. நான் வெல்கிறேனா மனமும் உடலும் வெல்கிறதா என ஒரு கை பார்க்கவேண்டும்.

  ReplyDelete
 4. மிக்க நன்றி ஹைஷ் அண்ணன், இப்பவெல்லாம் உங்களை உங்கட பூவில காண்பது கஸ்டமாக இருக்கு.

  பார்த்தீங்களோ, காவல்துறையினரின் அநியாயத்தை?, காவல்துறையினர் என்றாலே அப்படித்தானே? உங்களுக்குத் தெரியாததோ(எல்லாம் தெரிஞ்சவராச்சேன்னேன்). என்னைப் படமெடுக்கவாவது அனுமதித்திருக்கலாம்:).

  //சென்னையில் இருந்து வந்த பிங்~போ~கட்டிய பூஸ்ஸை விட்டு காட்டுக்குள் போன அன்னத்தை தேட சொல்றீங்களோ?/// என்ன இப்படிப் புகையுது. பூஷை வெளியே செல்ல அனுமதிக்கமாட்டேன், அன்னத்துக்கே இந்த நிலைமை என்றால் பூஸாரைக் கண்டால்...:).

  மிக்க நன்றி.

  ReplyDelete
 5. அதிரா, நல்ல கதை.. இல்லையில்லை. உண்மைச் சம்பவம். :)

  பூனையாரும் அழகாக இருக்கிறார்.

  ReplyDelete
 6. இமா, உண்மைப்பதிவுக்கு.. மிக்க நன்றி.

  ReplyDelete
 7. நல்ல வேளை பூஸிடம் இருந்து தப்பிசிடுச்சு! ஹி,ஹி!!

  ReplyDelete
 8. அன்னத்திடம் வந்த அன்னம் ஏன் ஓடித்தப்பியது தெரியுமா?

  தன் அழகில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற கர்வத்தில் ஹைவேயில் எல்லோருக்கும் அன்ன நடை நடந்துகாட்டி காவற்துறைக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தவ(ர்)(வ) நீங்கள் அங்கே வந்துவிடவே,
  ஹா! இத்தனை அழகான என்னைவிட இன்னொரு அன்னம் இந்த ஹைவேயிலா பார்த்துவிடுவோமென

  //என் ஜன்னலோரம் வந்த சுவான்.. அப்படியே ஜீப்பைச் சுற்றிக்கொண்டு முன்னாலே சென்று, பக்கத்திலிருந்த மரங்களுக்குள் சென்றது//

  உங்கள் வாகனத்தின் ஜன்னலோரம் வந்து, உள்ளே உங்களைப் பார்த்து அதிர்த்துபோய், வாகனத்தை சுற்றி, நான்கு திசைகளிலும்(கோணங்களிலும்) நின்று பார்த்ததும், மிக்க கவலையோடு
  ஐயோ! இங்கே நான்தான் பேரழகு என வீணாக கர்வப்பட்டுவிட்டேனே என வெட்கி, மேலும் அங்கே நிற்கமுடியாமல் அழுதுகொண்டு மரங்களுக்குள் ஓடி ஒளிந்துவிட்டது. அன்னம் ஓடியதன் காரணம் இப்பொழுது புரிகிறதா?...........( %கூடாது)

  அதிரா! நீங்கள் எழுதிய உண்மைச்சம்பவத்தை நான் ஒரு குறும்படமாகவே கண்டுகொண்டேன். அத்தனை அழகாக எழுத்துமூலம் காட்சியை கண்ணில் கொண்டுவந்துள்ளீர்கள். சம்பவத்தையும் உங்கள் எழுத்துத்திறமையையும் ரசித்தேன். வளரட்டும் உங்கள் திறமை. வாழ்த்துக்கள்!

  பூஸாரும் பிங் ~போ~ போட்டிருப்பதால் கண்களை கவருகிறார்.

  ReplyDelete
 9. அப்பப்பா..கன்றுகுட்டியின் அளவுக்கு அன்னம்!!!!அப்படியே நேரில் பார்த்ததுபோல் பதிவிட்டு இருக்கின்றீர்கள்.சமர்த்து அதிரா.பொலிஸுக்கு பயபடாமல் அப்படியே ஒரு ஸ்நாப் எடுத்து இருக்கலாம்.ஹ்ம்ம்ம்..உங்களோடு சேர்ந்து நாங்களும் மிஸ் பண்ணி விட்டோம்.

  ஹை..என் தோழி மெஹ்ருன் வளர்கும் பூஸாரை உங்கள் வலைப்பூவில் மலரவிட்டுட்டீங்க..ரொம்ப சந்தோஷம்.தோழி வீட்டு கார்டனில் அமர்ந்து காபி சாப்பிட்டுக்கொண்டே அளவாளாவிக்கொண்டிருந்த பொழுது இந்த பூஸ் காலுக்கடியில் இங்கும் அங்குமாக ஓடித்திரிந்து ரொம்பவே இம்சை செய்து விட்டது.(பூஸ் என்றால் இந்த ஸாதிகாவுக்கு ரொம்ப பயம்)

  ReplyDelete
 10. ஜீனோ... என்ன அடிக்கடி காணாமல் போறமாதிரித் தெரியுது.

  ///நல்ல வேளை பூஸிடம் இருந்து தப்பிசிடுச்சு!\\ பொலீசைத்தானே சொல்றீங்க?:) ஆமாம் தப்பிவிட்டார்கள்.. பூஸ் என்றால் படையும் நடுங்குமாம்... அனுபவசாலிகள் சொன்னார்கள்.

  ReplyDelete
 11. இளமதி... அன்னம் போட்டும் இளமதியைக் காணவில்லையே என பீல் பண்ணினேன். வந்திட்டீங்கள், வந்தமைக்கும் என்னைப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.(கன இடத்திலிருந்து கறுப்பு கறுப்பாப் புகை வருவது தெரியுதோ?).

  நானும்தான், அன்னம் ஏன் ஓடியதென விடை தெரியாமல் யோசித்தேன், அழகாக விளங்கப்படுத்திவிட்டீங்கள்.. உங்கள் பதிவு பார்த்து நான் அழுத கண்ணீர்...(ஆனந்தக்கண்ணீர்தான், ஒரே பீலிங்ஸு:)) ஹைவே(இது ஹை...வே.., முதல் எழுத்தை மட்டும் பார்த்திட்டு மாறிப்படிக்கப்படாது%)) வழியோடி ஆற்றிலே கலக்க, அதில் இப்போ அன்னப்பிள்ளை நீராடுகிறாராம்.

  மிக்க நன்றி இளமதி.

  ReplyDelete
 12. மிக்க நன்றி ஸாதிகா அக்கா. எனக்கு பொலிஸ், ஆமி என்றால் பயமாக்கும், இல்லாட்டில் எடுத்திருப்பேன் படம்.

  பூஸாரின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிட்டீங்கள். அவவுக்கு திருஷ்டி சுற்றிப்போடச் சொல்லுங்கோ.

  இப்பத்தானே தெரியுது, ஆரெல்லாம் பூஸுக்குப் பயந்து ஒளிக்கிறார்கள் என்று:).

  ReplyDelete
 13. அதிரா வை நோக்கி அன்னமா/ என்ன உனக்கு பூஸை தான் பிடிக்குமா என்னையும் பார் என்று சொல்லிவிட்டு போச்சா...

  ஸாதிகா அக்கா அனுப்பிய கேர்ள் பூஸ் ரொம்ப சூப்பரா இருக்கு.

  வாங்க அதிரா என் பக்கத்துக்கு வாழை பற்றி போட்டுள்ளேன்.
  படித்து பயன் பெற்று கொள்ளுங்கள்.

  ReplyDelete
 14. ஜலீலாக்கா.. மிக்க நன்றி. அன்னம் இன்னும் பல விஷயம் சொல்லிட்டுப் போயிருக்கு... மெதுவா மெதுவாச் சொல்கிறேன்.

  நீங்க கூப்பிட முன்பே, உங்கட வாழைப்பழம் பார்த்தவுடனேயே ஓடிவந்தேன், கதவு திறக்கமுடியாமல் போச்சு... பகலில் ஓபின் பண்ணக் கஸ்டமாக இருக்கு. இரவில் வருகிறது...லோட் அதிகமோ தெரியாது. இப்போ வந்திட்டேன்... உங்கள் வீடல்லவா.. கூப்பிடாமலே வருவேன்.

  ReplyDelete
 15. யுவாங் சுவாங் கேள்வி பட்டிருக்கேன் ஆனா இன்னைக்கு தான்.... சுவான்னு கேள்வி படுறேன்.. ஹி ஹி

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.