நல்வரவு_()_


Tuesday 26 January 2010

இது!!! நீங்களும் நானு... ம்.

"தேம்" பி அழுவோரை... வாரி அணைத்திடும்..லண்டன்
"தேம்" ஸ் நதி..

கேள்வியும், அர்த்தமுள்ள நகைச்சுவை கலந்த பதில்களும்...

ஒரு பிரபலமான பத்திரிகையில், பல பல வருடங்களுக்கு முன்னர் வெளியான, மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பிரபலமான ஒருவரின் பதில்கள்..

இது cut and paste அல்ல.. நானே ரைப் பண்ணியது..

கேள்வி:-
கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தெரியாதவர்களை என்ன செய்யலாம்??

பதில்:-
வள்ளல் சீதக்காதியிடம் பாடம் கேட்கச் சொல்லலாம்.

உடலை வைத்து தொழில் நடத்தும் ஒரு பெண்ணிடம், அவளது தொழிலை நிறுத்தும்படியும், அவளது தேவைக்கேற்ற பணத்தை மாதாமாதம் தருவதாகவும், சொன்னார் சீதக்காதி.

கோயில் மாடத்தில், மாதாமாதம் அவளுக்குத் தேவையான பணம் வைக்கப்படும், அவள் வந்து எடுத்துச் செல்லலாம் என்பதுதான் ஏற்பாடு.

அப்படியே முதல்மாதம் வந்து பணமெடுத்துச் சென்றவள் பின்னர் வரவில்லை. 7 வருடங்களின் பின், அப்பெண் சீதக்காதியிடம் வந்தாள்.

"ஐயா எனக்குப் பணம் தந்து உதவுங்கள்!! மகளுக்குக் கல்யாணம்" எனக் கேட்டாள்.

ஒரு தொகைப் பணத்தை உதவியாகக் கொடுத்த வள்ளல் சீதக்காதி, “கோயில் மாடத்தில் சென்றுபார்” என்றார்.

அங்கே மாடத்தில், ஏழு வருட காலமாக, அவள் வந்து எடுக்கத் தவறிய பணம், அப்படியே சேர்ந்திருந்தது. வாங்க வருபவர் மறந்தாலும், வாக்குக் கொடுத்தவர் மறக்காமல் இருந்திருக்கிறார்.

நம்மில் சிலர் இருக்கிறார்கள், கடன் வாங்கியதைக்கூட மறந்துவிடுவார்கள்.


கேள்வி:-
எதற்கெடுத்தாலும் குறுக்குக் கேள்வி கேட்பவர்களை என்ன செய்யலாம்?

பதில்:-
குறுக்குக் கேள்விகளைப் பொறுமையாக நேர்ப்படுத்திப் பாருங்களேன். ஒரு குட்டிக் கதை.

ஓர் ஆசிரியர், பொறுமையாகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

“உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” எனச் சொன்னார். . அப்போது ஒரு குறும்புக்கார மாணவன் குறுக்குக் கேள்வி கேட்டான்:

"சில பண்டங்களுக்கு உப்பே இல்லையே. லட்டு போன்ற இனிப்பு வகைகளிலும் உப்புக் கிடையாது. அதற்காக அவற்றையெல்லாம் குப்பையில் போடலாமோ?” எனக் கேட்டான்.

சிலர் என்றால் முறைத்திருப்பார்கள், அந்த ஆசிரியர் அமைதியாகப் பதில் சொன்னார்.

“உண்மையில் உப்பு இல்லாத பண்டமே கிடையாது, லட்டு, ஜிலேபி, போன்ற இனிப்புக்களிலும் உப்பு இருக்கின்றது. அதுபோக, அறுசுவைப் பதார்த்தங்களிலும் உப்பு இருக்கிறது. எப்படித் தெரியுமா? இதோ பார் என எழுதிக் காட்டினார்...

இன் + உப்பு = இனிப்பு
கச + உப்பு = கசப்பு
துவர் + உப்பு = துவர்ப்பு
எரி + உப்பு = எரிப்பு
கை + உப்பு = கைப்பு
புளி + உப்பு = புளிப்பு.

இது இடைவேளை.......
United Kindom Parliement.

வினாத் தொடர்கிறது.........

கேள்வி:-
இந்தக் காலத்துப் பிள்ளைகளின் புத்திசாலித்தனம், வளர்ந்திருக்கிறதா? தேய்ந்துபோகிறதா?

பதில்:-
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்..

ஒரு சின்னப் பையன், தன் அப்பாவிடம் சென்று, “அப்பா, நீங்கள் இந்த உலகத்தில் ஒரு மனிஷனாகப் பிறந்தது, என்னுடைய அதிர்ஷ்டம்” என்றான். அப்பாவுக்கு மஹா சந்தோசம்.

ஏன் மகனே அப்படிச் சொல்கிறாய்? எனக் கேட்டார். மகன் சொன்னான்...

"நீங்கள் ஒரு கரடியாகப் பிறந்திருந்தால், இந்நேரம் நானும் ஒரு கரடிக்குட்டியாகத்தானே இருந்திருப்பேன்”


கேள்வி:-
வேலைக்காரர்களை இளக்காரமாக நினைத்து, அடக்கி ஒடுக்குபவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

பதில்:-
ஒரு அடிமை இருந்தான், தன்னுடைய முதலாளிக்கு மிக விசுவானமானவன்.

ஒருநாள் அந்த அடிமை, முதலாளியின் கால்களை அமுக்கிக்கொண்டிருந்தான். முதலாளி கொஞ்சம் ஜாலி டைப். பணத்திமிரும் அதிகம். முதலாளி அடிமையிடம் சொன்னார்..

“டேய்! உனக்கு கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்துவிட்டேன்” என்றார். அடிமைக்கோ அளவில்லாத மகிழ்ச்சி.

“ஆனால் ஒரு நிபந்தனை” என்றார் முதலாளி .

என்ன எஜமான்?

“உன்னுடைய மனைவியும், அப்பப்ப எனக்கு கால் அமுக்கிவிட வேண்டும். சம்மதமா” என்றார் முதலாளி..

“சரிங்க எஜமான்”| என்றான் அடிமை. முதலாளிக்கு மஹா சந்தோஷம்.

“ஆனால் ஒரு நிபந்தனை”” என்றான் அடிமை.

“என்னடா நிபந்தனை| எனக்கேட்டார் முதலாளி.

அடிமை சொன்னான்,

“உங்கள் மகளையே எனக்குத் திருமணம் முடித்து வைக்க வேண்டும்”.

கேள்வி:-
எப்போதுமே, எதிலும் குறைகண்டு பிடிப்பவர்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:-
ஏசுநாதரும், அவரது சீடர்களும் சென்றுகொண்டிருந்த பாதையில் ஒருநாய் செத்துக்கிடந்தது. நாற்றமோ தாங்க முடியவில்லை. ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. சீடர்கள் மூக்கைப் பொத்திக்கொண்டார்கள், ஏசுநாதர் மட்டும் நாயைக் கவனித்துவிட்டு,"அடடா, அழகான பற்கள்” என வியந்து கொண்டார்.

இந்த நாற்றத்தைச் சகித்துக்கொண்டு, உங்களால் எப்படி வியக்க முடிகிறது? என்று ஒரு சீடர் கேட்டார்.

அதற்கு ஏசுநாதர் சொன்னார்..
"எதிலும், நல்லவற்றையே காண்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்”.

கேள்வி:-
பெண்களை ஆண்கள் கொடுமைப்படுத்துவதை மட்டும்தான் கண்டிப்பீர்களா?ஆண்களைப் பெண்கள் அதிகாரம் செய்வது உமக்குத் தெரியாதோ?

பதில்:-
தெரியுமே.. ஒரு அம்மா, மகனிடம் விடுகதை ஒன்று கேட்டார் “சிங்கம் போல உள்ளே வரும், ஆடு போல வெளியே போகும், அது என்ன?”.

மகன் சட்டெனப் பதில் சொன்னான் “அது அப்பா”.

~~~~~~~படிச்சுப் பயன் பெறுங்கோ~~~~~~~

பின் இணைப்பு..

அன்பு இளமதி, தன் செல்லங்களை, எனக்காக சில நாட்கள், விளையாட அனுப்பியது..


இன்னும் நாங்கள் விளையாடி முடியேல்லை...

21 comments :

 1. ஓரே நாளில் இத்தனை கதைகளா? எல்லா கதைகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. சூப்பர்.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 2. மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்.

  வெளியீடுதான் ஒருநாளில்.. ஆனால் ரைப்பண்ணியதோ... எப்பவோ தொடக்கம்... மனம் இருக்கும்போது நேரமிருப்பதில்லை, நேரம் கிடைக்கும்போது மனம் வருவதில்லை. பல நேரங்களில் இதுதான் நிலைமையாக இருக்கு.

  ReplyDelete
 3. கதைகள் எல்லாம் சுவாரசியமாக இருக்கு அதீஸ். :)

  ஹாய் ஹைஷ் அண்ணா... எப்பிடி இருக்கிறீங்கள்? கண்டு நாளாச்சுது. :)

  ReplyDelete
 4. //"தேம்" பி அழுவோரை... வாரி அணைத்திடும்..லண்டன்
  "தேம்" ஸ் நதி..// அழகாய்த்தானிருக்கு.:D

  //இது cut and paste அல்ல.. நானே ரைப் பண்ணியது..// நோ கமெண்ட்ஸ்! ஹி,ஹி,ஹீ!!

  எது எப்படியோ..கதையெல்லாம் நன்னாயிட்டுண்டு அதிரா சேச்சி! :)

  ReplyDelete
 5. மேலோட்டமாகப் பார்த்தால் நகைச்சுவை. ஆனால் ஒவ்வொன்றுக்குள்ளும் பொருள் பொதிந்துள்ளது.

  உப்பு விளக்கம் அருமை.

  விளையாட்டுப்பூனைக்குட்டிகள்! இணைத்தமைக்கு நன்றி.

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 6. அதிரா,பதிவு நன்றாக உள்ளது.வள்ளல் சீதக்காதி எங்களூரில் பிறந்து இப்பொழுது எங்களூரிலேயே அடக்கஸ்தலமும் உள்ளது.எனக்குத்தெரியாத விடயங்கள் கொடுத்து இருக்கின்றீர்கள்.//அங்கே மாடத்தில், ஏழு வருட காலமாக, அவள் வந்து எடுக்கத் தவறிய பணம், அப்படியே சேர்ந்திருந்தது. வாங்க வருபவர் மறந்தாலும், வாக்குக் கொடுத்தவர் மறக்காமல் இருந்திருக்கிறார்.//இந்த வரிகள் எங்கள் ஊர்க்காரர்கள் அனைவருமே அடுத்தவர் பொருளுக்கு ஆசையே படமாட்டார்கள் என்ப்தையல்லவா குறிக்கின்றது.வரிகள் எனக்கு மிகவும் மக்ழ்ச்சியைத்தந்தது.ஏழு வருஷங்களாக கோவில் மாடத்திலேயே இருந்த பணம் அப்படியே இருப்பதென்றால்..?எங்கள் ஊராரை இப்பொழுது புரிகின்றதோ?

  ReplyDelete
 7. மிக்க நன்றி இமா..

  கண்டு நாளாச்சு//// என்ன கண்டு இமா நட்டனீங்கள்? மாங்கண்டோ? கொய்யாக்கண்டோ? இப்பத்தான் காய் வந்திருக்கோ?... ///ஹாய்///... அது பழுக்க நாளாகுமாக்கும்.. %) கூடாது.

  ReplyDelete
 8. ஜீனோ மிக்க நன்றி.. அழகாக ரசித்திருக்கிறீங்கள்.. நீங்களும் ஒருக்கால் எட்டிப்பாருங்கோ ஜீனோ தேம்..ஸ் நதியை.. உங்கட நிழல் அதில் தெரியும்.

  இதென்ன இது?? கண்ட பாசையெல்லாம் சொல்லுறீங்கள்... அதிரா... சேச்சி இல்லை... குடும்பத்தலைவி”யாக்கும்:)”.

  ReplyDelete
 9. வாங்க சந்து.... இப்பத்தானே தெரியுது இன்னும் ஏன் “L” போர்ட்டைக் கழட்டாமல் திரிகிறீங்களெண்டு... இப்பவும் கரடி, புலி, சிங்கக்கதைகள்தான் படித்துக்கொண்டு திரிகிறீங்கள்போல... குழந்தையாக:).
  இது பூனை விடும் கதைகளாக்கும்:). மிக்க நன்றி.

  ReplyDelete
 10. உண்மைதான் இளமதி... நிறைய விஷயங்கள் இதில் அடங்கியிருக்கு.. இதில் முதலாவது கதை படித்தே.. நிறையப்பேர் திருந்திவிட்டார்களென நினைக்கிறேன்... எனக்கெதுக்காக்கும் ஊர்வம்பெல்லாம்.. மிகவும் நன்றி.

  ReplyDelete
 11. ஸாதிகா அக்கா மிக்க நன்றி.

  உண்மையிலேயே அவர் பிறந்து இறந்தது உங்கள் ஊரிலோ? அது எந்த ஊர் எனச் சொல்லியிருக்கலாமெல்லோ.

  கதை படித்தவுடன் தம்பட்டமடிக்கப்படாது ஊர்ப்பெருமை பற்றி. நான் ஒருக்கால் வந்து, கோயிலில் பத்தாயிரம் ரூபா பணம் வைத்துப்போட்டு ஒழித்திருந்து பார்க்கப்போறேன்... அதன் பின்னர்தான் ஷேர்ட்டிபிகேற் எல்லாம் தருவேன்...:).

  இருப்பினும் ஸாதிகா அக்கா வள்ளல் ஒருவர் வாழ்ந்த ஊரென்றால்... அந்தப் பண்பு கொஞ்சமாவது அம்மண்ணில் வேரூன்றி இருக்கும்.

  ReplyDelete
 12. http://vallankai.wordpress.com/

  http://lovekilakarai.com/

  http://selvanuran.blogspot.com/2009/08/blog-post_13.html

  அதிரா இந்த லிங்கை பாருங்கள்

  ReplyDelete
 13. ஸாதிகா அக்கா, மூன்றும் பார்த்தேன்... கீழக்கரை என்றாலே வள்ளல் சீதக்காதியைத்தான் கதைக்கிறார்கள்... என் ஒரு கதையால், நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்... கீழக்கரை அழகான கடல் பிரதேசமாக இருக்கு.

  ReplyDelete
 14. அதிரா செல்விமாவின் வலைப்பக்கம் மூலமா உங்கவலைப்பக்கம் வந்தேன்.இந்த பதிவு நல்லாயிருக்கு..

  ReplyDelete
 15. அருமையான கதைகள் அதிரா!! சீதக்காதியின் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....

  ReplyDelete
 16. மேனகா, நல்வரவு.. மிக்க நன்றி. நான் இன்னும் செல்வியக்காவைப் பார்க்கப்போகமுடியவில்லை...

  இலா மிக்க நன்றி... கதை படித்தால் மட்டும் போதாது இலா... நடந்து காட்டவும் வேண்டும்.. அதிராவைப்போல.... கடவுளே.. எங்கோ புகைக்குதே.

  ReplyDelete
 17. அதிரா எப்படி இருக்கீங்க? கதைத்து ரொம்ப நாளாகி விட்டது :-(. ப்ளாகில் வந்து தேடினால் இங்கு நம் தோழிகள் எல்லோரும் :-). அப்படியே ஒவ்வொருவராக தேடி இப்போ நானும் உங்களில் ஒருவராக சேர வந்து விட்டேன் :-). எல்லாரும் எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க?! ரொம்ப பிடிச்சிருக்கு

  ReplyDelete
 18. அதிரா தேம்பி அழுவோரை வாரி அணைத்திடும் லண்டனை எனக்கு ரொம்ப பிடித்திருக்கு நல்லா இருக்கு படிக்க இன்னும் படிக்கனும் மீதி வந்து பதிவு போடுகிறேன். ஆமாம் நாங்களும் ஒரே வருடமும் இப்ப அப்ப என்று தேம்ஸ் நதியை பார்க வரவேண்டும் என்று நினைக்கிறோம் முடியவே இல்லைப்பா. என்ன அதிரா பக்கிங்ஹாம் பக்கம் போனேளோ போனேள்ன்னா ஒரு படத்தை இங்கு போடுங்கோ அட்லீஸ்ட் அதிராவின் தயவால் பாலஸ்க்குள்ளே போ முடியாவிட்டாலும் பார்க்கலாமில்லையோ. கெதியா வந்து போடுங்கோ.

  ReplyDelete
 19. கவிசிவா... நல்வரவு... பழையவர்களைக் காணும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கு. இப்பவும் Ferry பார்க்கும்போது உங்களை நினைத்துக்கொள்வேன். நீங்களும் தனிக்குடித்தனமோ? விரைவில் வருகிறேன். வருகைக்கு மிக்க நன்றி கவிசிவா.

  ReplyDelete
 20. விஜி வாங்கோ... மிக்க நன்றி. எல்லா இடமும் போய் படங்களும் எடுத்தேன்.. பிசியில் போட்டு வைத்ததாக நினைவு.. எதையுமே காணவில்லை. அப்போ பிக்காசா அல்பம் இல்லாததால் பெரிதாக கவனம் எடுக்கவில்லை. இனிமேல் எங்குபோனாலும் சூட்டிங் நடக்கும்.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.