நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Monday, 14 December 2009

படித்ததில் பிடித்த கவிதைகள்(தொ- 1)


நூலகம்
எப்பவுமே
அமைதியாக இரு
எல்லாம் இருந்தும்
அமைதியாக இருக்கும்
நூலகத்தைப்போல

குப்பை
கறுத்த வளையல்களோடு
குனிந்து நிமிர்ந்து
குப்பை பெருக்கிச்
சென்றாள் ஒருத்தி
நிலமோ சுத்தமானது
என் மனமோ
குப்பையானது!!!

விழுது
ஆலமரமே
நீயும் தாடி
வளர்க்கிறாயே
உனக்கும் காதலில்
தோல்வியோ?

சீதனம்
மணமகளே
நீ ஏன் தலை
குனிந்து இருக்கிறாய்?
பணம் கொடுத்து
வாங்கியிருக்கிறாய்
மணமகனை
நீ நிமிர்ந்திரு
அவர் குனியட்டும்!!!

ஒட்டகம்
நீ சற்று உயரமாக
இருந்ததனால்
உன்னை ஒட்டகத்துக்கு
ஒப்பிட்டேன்
பலைவனத்தில்
என்னைத் தவிக்க
விட்டுப் போனவனே
ஒட்டகமேதான் நீ
தவறில்லை ஒப்புக்கொள்!!!

பல்லக்கு
இத்தனை ஆண்டுகளாய்
நான் சுமந்து வந்த
பல்லக்கை இடையில்
இறக்கி வைத்து
சற்று இளைப்பாறுகையில்
திரை கொஞ்சம் விலகியது
அப்போதுதான் தெரிந்தது
உள்ளே நீ இல்லை
என்ற உண்மை!!!

வாக்கு
அம்மாவின்
வார்த்தைகளே
வேதவாக்கானால்
நீ தொட்டிலிலே
கிடந்திருக்கலாம்
கட்டிலுக்கு வந்திருக்க
வேண்டியதில்லை!!!

கொடி
கொடி கட்டிக்
காயப்போட்டிருப்பது
குழந்தைகளின்
ஆடைகளும் கொடிகட்டிப்
பறந்த அவளின்
குதூகலங்களும்தான்

அழகு
உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும்வரை
நான் உணர்ந்ததில்லை
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்குமென்று!!!

காந்தம்
பெண்ணே!
நீ உன் இதயத்தை
இரும்பாக்கினாய்
நான்
காந்தமானேன்!!!

(இன்று இது போதுமல்லவோ....? தொடரும்...)

9 comments :

 1. என்னை மிகவும் கவர்ந்தவைகள்: நூலகம், பல்லக்கு

  சூப்பர் கவிதைகள்.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 2. அதிரா!
  அத்தனையும் நன்றாக இருக்கிறது. என்னை முந்திக்கொண்டு அண்ணன் சொல்லிவிட்டார். எனக்கும் பிடித்தது அமைதியாய் இருக்கின்ற நூலகம். இணைப்புக்கு மிக்க நன்றி!

  சமீபத்தில் வாசித்ததில் என் முகத்தில் அறைந்த கவிதை இது.

  ”நாள்தோறும் காலையில்
  நாட்காட்டி கேட்டது என்னைப்பார்த்து
  என்னை தவிர வேறு என்ன கிழிக்கின்றாய்......”

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 3. ஹைஷ் அண்ணன் மிக்க நன்றி.

  மியாவுக்கு வேலை வந்துவிட்டது... கண்டுபிடிக்காமல் விடமாட்டேன்:).

  ReplyDelete
 4. இளமதி மிக்க நன்றி. உங்கள் ஹைகூ கவிதை சூப்பர்.

  ReplyDelete
 5. குப்பை
  //கறுத்த வளையல்களோடு
  குனிந்து நிமிர்ந்து
  குப்பை பெருக்கிச்
  சென்றாள் ஒருத்தி
  நிலமோ சுத்தமானது
  என் மனமோ
  குப்பையானது!!!//
  அருமையான வரிகள்.நிறைய பதியுங்கள் அதிரா.

  ReplyDelete
 6. சுஸ்ரீ, ஸாதிகா அக்கா இருவரும் உங்கள் பொன்னான நேரத்தை எனக்காகவும் ஒதுக்கி பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி.

  ஸாதிகா அக்கா... பார்த்துக்கொண்டிருங்கோ இன்னும் வரும்.

  ReplyDelete
 7. வடிவாக எழுதுறீங்கள் அதிரா. தொடர்ந்து எழுதுங்கோ.

  ReplyDelete
 8. இன்றுதான் இமா இதனைக் கண்டேன், மிக்க நன்றி.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.