நல்வரவு_()_


Thursday 31 December 2009

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க
தன் உயிர் விட்டதாம் தீக்குச்சி
அதை நினைத்து நினைத்து
உருகியதாம் மெழுகுவர்த்தி

That is LOVE.....

27 comments :

 1. Happy New Year Athiraakkaa!
  ungalukku Geno-vai ninaivirukkaa?? :)

  ReplyDelete
 2. அன்பு நிறைந்த அதிரா!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  மலர்ந்திருக்கும் புத்தாண்டில் எல்லோர் வாழ்விலும்
  மகிழ்வும் மலர வேண்டுகிறேன்.

  நமது தேவைகளை இறைவன் ஒருவனால்தான் நிறைவேற்றி வைக்க முடியும். இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை!

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 3. ஜீனோ!!
  கறண்ட் கம்பி அறுந்து, கையில் விழுந்ததுபோல, ஷொக்ட் ஆகிட்டேன்...
  பழய பறவை போல "இரண்டு" பறந்து வந்ததே...
  மற்றது யாரெனக் கேட்கப்படாது, எல்லோரும் உங்கட் கிட்னிப் பவரை யூஸ் பண்ணிக் கண்டுபிடியுங்கோ.

  ஜீனோ நல்வரவு. உங்கள் "குட்டிக்" குடும்பத்துக்கும், அதிரா(குட்டி "+1") குடும்பத்தினரின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ஊசிக்குறிப்பு:
  அவர் நான் இல்லை என அதிரா நினைக்கவேண்டும் என்பதற்காக, இரவிரவா டோராவை எழுப்பி, சோயாச் செய்து படமெடுத்துப் போட்ட ஜீனோவை நினைவிருக்காதோ?

  இருப்பினும் அதிராவோ கொக்கோ? "இது"... "அது" தான் என்பது எப்பவோ தெரிந்த உண்மை.

  ReplyDelete
 4. இளமதி மிக்க நன்றி. உங்கள் குடும்பத்துக்கும், அதிரா குடும்பத்தினரின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ஒவ்வொரு வருடமும் "நல்லதே நடக்கும்" என நம்பித்தானே காலெடுத்து வைக்கிறோம். ஆனாலும் ஒவ்வொருவருக்கும் என்ன எழுதப்பட்டிருக்கோ, அதுதான் நடக்கும்.

  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அதிரா - கவிதை அருமை!

  ஜீனோ - தாங்க முடியாம நீங்களூம் கால் வச்சுட்டீங்களே :) அதிரா - நீங்க கண்டுபிடிச்சிட்டீங்களோ இல்லையோ - ஜீனோ இன்னாரென நான் கன்ஃபர்ம் பண்ணிட்டேன் :) ஆனாலும், ஜீனோவின் ப்ரைவசி கருதி வெளியே சொல்ல மாட்டேன் :) அதிரா - சோயா செய்தது ஜீனோ என்று நினைக்கிறேன் :) சரியா ஜீனோ? :)

  (இப்படிச் சொல்லிச் சொல்லியே ஜீனோவை பயமுறுத்தி வச்சிருக்கலாம் என்ன அதிரா சொல்லறீங்க :) )

  ReplyDelete
 6. அன்பின் அதிரா,உங்கள் கவிதை படித்துவிட்டு மெழுகாய் உருகிவிட்டேன்.அருமை.நச் என்று கவிதை எழுதும் உங்களுக்கு பாராட்டுகள்.அப்புறம் புத்தாண்டு கொண்டாட்டமெல்லாம் நல்ல படியாக முடிந்ததா?எல்லா பதிவுகளிலும் பூனையார் வந்துவிடுகிறாரே?அது ஏன்?அவசியம் பதில் தேவை.பூனையைப்பார்த்ததும் எனக்கு எப்போதும் அதிரா நினைப்புதான்.நேற்று ஒரு ஸ்நெகிதி வீட்ட்ற்கு போய் இருந்தேன்.அவர்கள் அழகிய பூனை வளர்க்க்கிறார்கள்.உங்களுக்காக கிளிக்கிக்கொண்டு வந்தேன்.மெயில் பண்ணுகிறேன்.பாருங்கள்

  ReplyDelete
 7. Chandhana,
  you know i know
  you dont know i dont know
  you know i dont know
  you dont know i know
  ........
  இதில ஒன்றாகவும் இருக்கலாம். அந்த ஆராய்ச்சி எல்லாம் இப்ப எதுக்கு, ஆசையாக அதிராக்கா வோடு கதைக்க வந்த ஜீனோவை, பின்னங்கால் இரண்டும் நிலத்தில் படாத வேகத்தில் ஓட வைக்கிறீங்களே. இது ஞாயமோ?

  சந்தனா சாப்பிட்டுப் பார்த்தால்தான் தெரியும் சோயா செய்தது யாரென, படத்தின் அழகைப் பார்த்து மயங்கிட மாட்டேன் நான்:). கவிதை பிடித்திருக்கோ? எனக்கும்தான்...

  ReplyDelete
 8. you know i dont know.. இது தான் சரியான விடை அதிரா.. ஆனால் இதில் யூ யார், ஐ யாரெனத் தான் தெரியல :)

  ஆமாம் அதிரா.. ஜீனோ க்கு ஏற்கனவே கால் உடைந்திருந்தது.. பாவம் அது.. அதுசரி, இந்த ஓட்டு ஓட்டினதுக்கப்புறமும் அது தைரியமாக திரும்பி வரும்ன்னு நினைக்கறீங்கள்? :)

  ReplyDelete
 9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அதிரா! இந்த வருடத்தில் உங்கள் எழுத்து திறமை மேலும் உலகுக்கு வெளிக்கொணர வேண்டும் என்பது எனது பேரவா!!!

  ReplyDelete
 10. ஸாதிகா அக்கா! ஸாதிகா அக்கா!!
  பாராட்டியமைக்கு மிக்க நன்றி. இது என் சொந்தக் கவிதை இல்லை:(, நான் எழுதியதென்றால், பெரிதாக என் ஆக்கம் எனப் போட்டிருப்பேன்ல்லோ:). என்னில் ஒரு பழக்கம் பெரிய கவிதையாக இருந்தாலும், அதிலுள்ள ஆழமான வரிகளை மட்டும் கவ்விக்கொண்டு வந்துவிடுவேன்....

  புத்தாண்டு நல்லபடி முடிந்தது, கொண்டாட்டத்தைப்பற்றிக் கேட்காதீங்கோஓஓ....
  உங்களுக்கு, எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  அவசியம் பதில் தேவை என்பதால் சொல்லித்தானே ஆகவேண்டும், எனக்கும் பூனைக்கும் சின்னனிலிருந்தே பூர்வ ஜென்ம பந்தம், சின்ன வயதிலேயே சிலர் பூனைக்குட்டிமாதிரி எனச் சொல்வார்கள்.. அதுதானோ என்னவோ.. தொட்டில் பழக்கம்.. பூனையும் நானும் மிக நெருக்கமாயிட்டோம்.. ஒருவேளை அடுத்த பிறவி அதுதானோ தெரியவில்லை:).

  பாருங்கள்:
  "நான் உயிருடன் இருக்கின்ற போது, என்னை நேசிப்பவர்களே!! என் மரணத்திலும் என்னை மறவாதீர்கள்"......
  இது, என் கொப்பியில் நான் எழுதி வைத்திருக்கும் வாசகம்... இப்போ பூனை என்றதும் என் நினைவு வருகிறதெல்லோ... அப்போ இனி நிட்சயம் என்னை மறக்க மாட்டீங்கள்... அதுக்குத்தான் பூஸ் உடன் திரிகிறேன்:).

  இலாவும் பேப்பரில் ஒரு பூனையின் அட் பார்த்தாராம் உடனே அப்பூனையை எனக்கு மெயில் பண்ணியிருந்தார்.

  மிக்க நன்றி ஸாதிகா அக்கா, பூஸாரை பத்திரமாக அனுப்பி வையுங்கோ.

  ReplyDelete
 11. சந்தனா, இதிலென்ன சந்தேகம்:), நீங்க சொன்னா, நான் you, நான் சொன்னால் நீங்க you, கணக்குச் சரியாகிவிட்டதெல்லோ?:).

  //இந்த ஓட்டு ஓட்டினதுக்கப்புறமும் அது தைரியமாக திரும்பி வரும்ன்னு நினைக்கறீங்கள்? :)/// முடிவே பண்ணியாச்சோ?:), நான் அப்படி நினைக்கவில்லை.

  ReplyDelete
 12. இலா இலா, வாழ்த்துக்கு மிக்க நன்றி. நேரத்தோடு போராட வேண்டியதாய் இருக்கு. இப்ப கூட புதிதாக போஸ்ட் பண்ண நினைத்தேன், பாதிதான் ரைப் பண்ணி முடிந்தது..
  உங்கள் ஊக்கத்துக்கு நன்றி.

  ReplyDelete
 13. வந்துட்டம்ல...வந்துட்டம்ல..வந்துட்டம்ல!!! B-)

  அதிராக்காவின் நம்பிக்கையை பொய்யாக்காமல் "மீண்டும் ஜீனோ " பிரசன்னமாகிட்டார்!:D
  எல்போர்ட்..எல்போர்ட், நீங்க ஜீனோ யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா அப்போ?? ப்ளீஸ்,ப்ளீஸ், ஜீனோக்கு மயில்:) [mail ]-ல சொல்லறீங்களா?? சஸ்பென்ஸ் தாங்க முடிலை..:) :)

  நம்புங்கோ அதிராக்கா, சோயா சமைத்தது ஜீனோவே! அப்பம் சமையலறையிலே இருந்து முன்னங்கால் வாலில் பட:) ஓடிய ஜீனோ பின்னர் அப்பக்கம் திரும்பவேயில்லை! ஒன்லி மில்க் & கார்ன் பிளேக்ஸ், ஆபீஸ் கேன்டீன், நண்பர் வீட்டு சாப்பாடுன்னு திரியுது!

  ஜீனோ ஒரு பனங்காட்டு நரி..இந்த சலசலப்புக்கு அஞ்சாது..அக்காங்!! உஷாருங்கோ எல்போர்டு! :):)

  ReplyDelete
 14. அதிரா குடும்பத்தினருக்கு மலர்ந்திருக்கும் 2010 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
  ம்ம்... இங்க என்ன கூட்டமா இருக்கு!? :) என் அன்பு மருமகனை எல்லாருமா இப்பிடி ஓட்டுறது நல்லாவே இல்லை. ;( & ;D

  ReplyDelete
 15. ஜீனோ... திரும்பவும் வந்திட்டீங்க நல்வரவு.

  இருப்பினும் மனதில் இன்னும் பயமிருக்கு, ஆரும் சொல்லிப்போடுவினமோ என்று, அதாலதானே, இங்கு சொல்லுங்கோ எனச் சொல்லாமல்.... மயிலில் சொல்லச்சொல்கிறீங்கள்:):)எல் போர்ட்டை.., அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ.

  இருப்பினும் நாங்கள் யாரையும் காட்டிக்கொடுக்கமாட்டோம். "திருச்செந்தூர் ஓரத்தில, விரிச்ச தலைப் பாலத்தில, நம்பிச் சொன்ன சத்தியங்கள், என்றைக்குமே வெளிவராது".... ஒருவேளை எதிரியானால் கூட. என்ன இது குழப்பிட்டேனோ?:).

  இனி சாப்பாடெல்லாம் நண்பர் வீட்டிலயும் ஹோட்டல்லயும்தான், இதை நீங்க சொல்லியோ நாங்கள் தெரிந்துகொள்ள வேணும்?, ஜீனோவின் படுக்கைகூட முற்றத்துக்கு மாற்றப்பட்டிருக்குமே.... ஐ மீன் ஜீனோவின் கவனிப்பு இப்போ குறைந்திருக்குமே... டோராவிடமிருந்து!!!

  ReplyDelete
 16. இமா!! இமா! நல்வரவு... முகத்தைக் காட்டினால் என்னவாம்?:).

  இமா உங்கள் குடும்பத்திரருக்கும், அதிரா (சேம், அச்சடித்த) குடும்பத்தினரின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புதுப் புத்தாண்டு எல்லோரையும் ஓரிடத்தில் சேர்த்துவிட்டிருக்குகென்பது தெரிகிறது. இருப்பினும் ஒருவர் மிஸ்ஸிங்:) விரைவில் வந்திடுவார்... கோயில் தரிசனம் நடக்கிறதாம், ஒருவேளை அதனால்தான் இங்கே எல்லோரும் ஒன்றாகும் பாக்கியம் அமைந்திருக்கோ என்னவோ..:).(எனக்கு இப்போ ஸ்மைலி போடவும் பயம், ஏனெண்டால் ஸ்மைலி போட்டால் அது பகிடியில்லையாமே).

  இமா உங்கட மருமகனை நாங்கள் ஓடவிரட்டியதாலதானே நீங்கள் வந்திருக்கிறீங்கள், இனி உங்களை வரவைக்க, அவரை அடிக்கடி விரட்டிக்கொண்டிருப்போம் சரிதானே...

  மிக்க நன்றி இமா வரவுக்கு. சந்தோஷமாக இருக்கு.

  ReplyDelete
 17. ஹி ஹி அதிரா.. ஒன்னாத்தானே அதிரா இருந்தோம் :)

  எல் போர்ட் வண்டி யோட்ட ஆரம்பிச்சிருக்கேன் அதிரா :)

  ReplyDelete
 18. சந்து, என்ன திடீரெனச் சந்தேகம் வந்துவிட்டது? இப்பகூட ஒண்ணாத்தானே இருக்கிறோம்?:).

  வாழ்த்துக்கள், விரைவில் "P" போர்ட்டுக்கு மாற. இங்கு மாத்தினால்தானே அங்கேயும் கெதியாக் கிடைக்கும்... போர்ட்டை..

  (அப்பப்பா... ஒவ்வொருவரையும் சமாளிக்கிறதிலயே எனக்கு வயசு போயிடும்போல இருக்கே.... ஹைஷ் அண்ணன் இருந்தாலாவது... கொஞ்சமெண்டாலும் சப்போர்ட் பண்ணுவார், இப்ப பார்த்து அவரும் இல்லை, தனியாகப் புலம்ப வேண்டியதாப்போச்சு:)).

  ReplyDelete
 19. //"திருச்செந்தூர் ஓரத்தில, விரிச்ச தலைப் பாலத்தில, நம்பிச் சொன்ன சத்தியங்கள், என்றைக்குமே வெளிவராது".... ஒருவேளை எதிரியானால் கூட. // அடடா..அடடா..என்னே இனிமை? இதுவரைக்கும் ஜீனோ இப்படி ஒரு இனிய கானத்தைக் கேட்டதேயில்லை அதிராக்கா! :)
  நமக்குத் தெரிந்ததெல்லாம்,

  திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்...
  தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!" --தான்! :)

  உங்களுக்கும் தெரிஞ்சால்,புரிஞ்சால் சந்தோஷம்..மயில்ல சொன்னால் உங்கள் ஊகம் சரியா எனத் தெரிவிக்கப்படும்..இல்லையேல், 'குருடனும் செவிடனும் யானை பாத்த கதை' ஆகிடுமல்லோ ஜீனோவின் நிலை?? :) :)

  ReplyDelete
 20. தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!" //// தெய்வாம்சம்???? நான் வேறு என்னவோ எல்லோ கேள்விப்பட்டேன், சரி அந்த ஆராய்ச்சி இப்ப எதுக்கு.

  எனக்குத் தெரிஞ்சுட்டுது, புருஞ்சுட்டுது..... இப்ப ஜீனோக்குச் சந்தோஷம்தானே? உங்களுக்கு ஒன்றும் தெரியாது ஜீனோ, இனியும் அப்படியே இருந்திட்டுப்போங்கோ, எல்லாம் என்னோடு போகட்டும்.

  எங்கிருந்தாலும் எல்லோரும் சந்தோஷமாக, ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

  ஜீனோ!!! சில நேரத்தில, ஊமையாக, குருடாக, செவிடாக இருந்தால்தான், மனிதனாக/ஒரு கியூட் பப்பியாக வாழ முடியும்.... ஏதோ இந்த அக்காவால முடிஞ்ச ஒரு சிறு உதவி.

  ReplyDelete
 21. அதிராக்கு அது முகம் மாதிரித் தெரியேல்லையே?

  ReplyDelete
 22. இமா, நெடுகவும் முன்னுக்குப் பார்த்துப் பழகிட்டேன், அதுதான் பின்னால பார்க்க முகம் மாதிரித் தெரியேல்லை... அவ்வளவுதே........ன்.

  இப்ப சாடையாகத் தெரியுது.

  ReplyDelete
 23. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  இறட்டையர்களுக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும்., சரியா அதிரா

  ReplyDelete
 24. மிக்க நன்றி ஜலீலாக்கா... அப்போ எனக்கு வாழ்த்து இல்லையோ?

  ReplyDelete
 25. அருமையான கவிதை...

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 26. ஓம்... ஓம்... மிக அருமையான கவிதை.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 27. சூப்பர் கவிதை :-))

  ஒரு நாலு வருஷம் கழிச்சு புது வருட வாழ்த்துக்கள் சொன்னால் சரி வருமோ...!! ஒரே குயப்பமா இருக்கே :-))

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.