அம்மா!!!
என்னை ஆசீர்வதித்துப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய நீ, ஏன் அழுதழுது அஞ்சல் அனுப்புகிறாய்?
பட்டம் பெறுவதற்காக, உன் பாதுகாப்பு வட்டத்துக்குள்ளிருந்து நான் வெளியே வந்துவிட்டது உண்மைதான், அதற்காக நீ அஞ்சாதே!!. புத்தகப் படிப்பைவிட உன் புத்திமதிகள் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன.
அம்மா!! உன் கண்காணிப்பின் கீழ் இருந்தபோது, நான் கண்ணை மூடிக்கொண்டும் நடந்திருக்கிறேன், விழுந்தாலும் உன் மடியில்தான் விழுவேன் என்று எனக்கு நிட்சயமாகத் தெரிந்திருந்தது.
சின்னச் சின்ன ஷேஷ்டைகள் செய்து உன்னிடம் திட்டுவாங்குவது அப்போது என் பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இப்போது நான், பொழுதைப்போக்கும் போக்கிரிப் பெண்ணாக இல்லைத்தாயே. ஏனெனில் நான் விழுந்தால் தாங்க இங்கே மடியில்லை இடிதான் உண்டு.
அதனால்தானம்மா, அக்கரைப் பச்சைகளிடமிருந்து அழைப்புக்கள் வந்தபோதெல்லாம் அவற்றை நான் கிழித்துப் போட்டேன். என்னைக் கைது செய்ய வந்தவர்களிடமெல்லாம், நான் ஏற்கனவே சிறையில் இருப்பதாகச் சொல்லி அனுப்பினேன். நீயே சொல்லம்மா, "காவல்காரன் இல்லையென்பதற்காக, நிலா பகலெல்லாம் உலாப் போகுமோ?".
எனக்கு நினைவிருக்கிறது, பல்கலைக்கழகத்தை முட்கள் நிறைந்த காடு என்றும், அதற்குள் நுழைந்தால் பழுதில்லாமல் திரும்புவது அபூர்வம் என்றும் நம் கிராமத்தவர்கள் பலவாறாகப் பேசியபோது, நீ என்ன சொன்னாய்? "என் மகள் அன்னம் போன்றவள், பாலையும் நீரையும் பிரித்துண்பதற்கு அவளுக்குத் தெரியும்" என அடித்துச் சொன்னாயே.
உனது அந்த அபார நம்பிக்கையை வாழவைப்பதற்காக, எனது அற்ப ஆசைகளை நான் சாகடித்துவிட்டேனம்மா.......
என்னைப் பொறுத்தவரை கலாசாலையும் வயலும் ஒன்றுதான், சேறும் உண்டு சோறும் உண்டு. சேற்றுத் தண்ணீரில் தவழ்ந்து விழையாடுவதற்குத் தவளைகள் வேண்டுமானால் ஆசைப்படலாம், நான் தாமரை அல்லவா?.
ராக்கிங்கின்போது கூட அழாதவள் நான், உன்னை அழ வைக்கவேண்டுமென்பதே என் ஆசை...... ஆமாம்!! வெற்றிகளோடு நான் வீடு திரும்புகையில், என்னைப் பார்த்து நீ, ஆனந்தக் கண்ணீர் வடிக்கவேண்டும். உன் கனவுகளின் மொத்த உருவமாய் நான் மாறிவருவேனம்மா கொஞ்சம் அவகாசம் கொடு, அவசரப்படாதே...
வளாகத்துக்குள்ளும் வம்புதும்புகள் நடக்கலாம்தான், ஆனால் நடவடிக்கைகளால் என் நாமம் நாறிப்போக விடமாட்டேன். சந்தனக் காட்டிலிருந்து வந்தவளுக்கு சாக்கடையைக் கண்டால் ஒதுங்கிக்கொள்ளத் தெரியும்.
கடைசியாகச் சொல்கிறேன், வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருக்கிறதே எனக் கண்ணீர் வடிக்காதே..... "இந்தச் சூரியன் என்றைக்குமே கறுக்காது".
இப்படிக்கு உன்
அன்பு மகள்.
|
Tweet |
|
|||
படம் சூப்பர் ப்பூஸாரை சொன்னேன். மடலும் சூப்பர், எப்படி பாராட்டுவது என தெரியவில்லை ஒவ்வொருதாயும் ஆசைப்படும் அளவுக்கு இருக்கு இந்த மடல்
ReplyDeleteதாயின் மகிழ்ச்சி:
”ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”
குழந்தையைப் பெறும் போது அடைந்த மகிழ்ச்சியை விட, ஒரு தாய் அவனைச் சான்றோன் எனக் கேட்கும் பொழுது மிகவும்
மகிழ்ச்சி அடைவாள் என்கிறார் வள்ளுவர்.
இப்பதான் புரிகிறது ஏன் பூஸ் நர்ஸரி ரைம்ஸ் ஏன் பாடுது என. குட்டி பூஸா இருக்கே :)
ReplyDeleteSuper Athira
ReplyDelete//வெற்றிகளோடு நான் வீடு திரும்புகையில், என்னைப் பார்த்து நீ, ஆனந்தக் கண்ணீர் வடிக்கவேண்டும். உன் கனவுகளின் மொத்த உருவமாய் நான் மாறிவருவேனம்மா கொஞ்சம் அவகாசம் கொடு, அவசரப்படாதே//
ReplyDelete...
”ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
நல்லா இருக்கு!!
ஒவ்வொரு பெற்றோருக்கும் இப்படி ஒரு மகனோ மகளோ கிடைத்துவிட்டால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்கமுடியாது.
ReplyDeleteஆழமான கருத்துச்செறிவுள்ள மடல்.
பகிர்வுக்கு மிக்க நன்றி!
* ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.
என் அம்மாக்கு நான் எழுதின கடிதம் உங்க கையில் எப்படி கிடைத்தது அதிரா???
ReplyDeleteசும்மா சொன்னேன் - இது நீங்கள் அம்மாவுக்காக எழுதினதோ?
ஹைஷ் அண்ணன் மிக்க நன்றி, மடலையும் பூஸையும் பாராட்டியமைக்கு. உடன் பின்னூட்டம் பார்த்து மிகவும் சந்தோஷமாகிவிட்டேன்.
ReplyDeleteவள்ளுவர் ஏதோ யோசிக்காமல் மகனை மட்டும் சொல்லிட்டு, சிவனே எனப் போயிட்டார்.... மகளுக்கும்தான்.
இலா மிக்க நன்றி.
ReplyDeleteசுஸ்ரீ நல்வரவு, மிக்க நன்றி. எத்தனை முறை படித்தாலும் அலுக்காத மடல் இது.
உண்மைதான் இளமதி மிக்க நன்றி. அழகான தத்துவம் சொல்லியிருக்கிறீங்கள்.
ReplyDeleteஎல் போர்ட்... நல்வரவு. சந்தனாதானே...மிக்க நன்றி, பெயரைப்போட்டுச் சொல்லுங்கோ... பயம்........மாஆஆ இருக்கு.....
இப்படித்தான் அம்மாக்கு எழுதினேன், But... போஸ்ட் பண்ணாமல் விட்டுவிட்டேன்..:)
அதிரா,
ReplyDeleteஅழகாக எழுதியிருக்கீங்க. தொடருங்கள்.
வாவ்..அதிரா இப்போதான் என் கண்ணில் பட்டது.ம்ம்..எங்கேயோ போய்ட்டீங்க..!தொடருங்கள்..
ReplyDeleteஹூசைனம்மா.... நீங்கள் வந்து பின்னூட்டம் தருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. மிக்க நன்றி.
ReplyDeleteஸாதிகா அக்கா நல்வரவு. மிக்க நன்றி. நேரமுள்ளபோது ஒரு எட்டு வந்திட்டுப்போங்கோ.
அதிரா ஓவ்வொரு வரிகளும் அருமை இது என் கண்ணில் படவே இல்லையே,
ReplyDeleteசும்மாதான் இது நீங்க உங்கள் அம்மாவுக்கு எழுதியதா.... //
ஜலீலாக்கா!!! தேடித் தேடிப்படித்து, அதோடுவிடாமல் பதிவும் போடுறீங்கள் மிக்க நன்றி.
ReplyDeleteசும்மாதான் இது நீங்க உங்கள் அம்மாவுக்கு எழுதியதா.... //// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்பவும் எல்லோரும் அதிராவை சந்தேகக் கண்ணோடயே பார்க்கினம்...
//"காவல்காரன் இல்லையென்பதற்காக, நிலா பகலெல்லாம் உலாப் போகுமோ?"//
ReplyDeleteஆ.... கவித கவித ...:-)))
//சேற்றுத் தண்ணீரில் தவழ்ந்து விழையாடுவதற்குத் தவளைகள் வேண்டுமானால் ஆசைப்படலாம், நான் தாமரை அல்லவா?.//
ReplyDeleteஆ...தத்துவம்...:-)))
//"இந்தச் சூரியன் என்றைக்குமே கறுக்காது".//
ReplyDeleteகடைசியில கவுத்துட்டிங்களே...!!! சூரிய கிரகணம் கேள்வி பட்டதில்லையா..!! :-)))))
அழகான லட்டர் ..அம்மாக்கு படிக்க தெரியுமான்னுதான் தெரியல ஹி..ஹி... :-)))
ReplyDelete//ஹைஷ்126 said...
ReplyDeleteஇப்பதான் புரிகிறது ஏன் பூஸ் நர்ஸரி ரைம்ஸ் ஏன் பாடுது என. குட்டி பூஸா இருக்கே :)//
குட்டிக்கு இப்போ 56 வயசாம்..மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
அச்சச்சோ.. ஆரம்பிச்சுட்டாரையா.. ஆரம்பிச்சிட்டார்:))... காலைவரைக்கும் நல்லாத்தானே இருந்தார்...:)) இப்போ பழையபடி பழசெல்லாம் கிழறத் தொடங்கிட்டார்... இனி என்ன எல்லாம் கிளறிக் கேள்வி கேட்கப்போறாரோஒ?:)).. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))....
ReplyDeleteஅங்கின.. 16 ஐ 61ஆம் கீரி..
அதுக்கங்கின.. 75 ஆம்.. வான்ஸ்ஸ்..
இங்க 56 ஆஆஆஆ?:)) வை திஸ் கொல வெறி?:)).. மீ என்றென்றும் 16:)))).
ஹாக்..ஹாக்க்க்க்..ஹாக்க்க்க்க்க்ஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ .... இந்தச் சிரிப்பைப் பார்த்தாலே தெரியேல்லை? சுவீட்டா இருக்கெல்லோ?:)) அப்போ சுவீட் 16தானே?:)) ஹையோ துரத்தீனமே.. கும்பலாத் துரத்தீனமே:)))
வணக்கம் பூசாரே, உண்மையாகவே மிகவும் அருமையான மற்றும் உருக்கமான மடல். உங்கள் வார்த்தை ஜாலங்களும், உருவகங்களும் பிரமாதம். வாழ்த்துக்கள். இது நான் வாசிக்கும் உங்கள் முதல் பதிவு. என்னை திருப்தியோடு அனுப்புவதற்கு நன்றிகள்.
ReplyDeleteஎன்னவென்று சொல்வது... மிக மிக மிக அருமையான பதிவு..
ReplyDeleteவாங்கோ அமல்ராஜ்.. முதன்முதலா வந்திருக்கிறீங்க, நல்வரவு, மிக்க மகிழ்ச்சி... ஆரம்பமே லெட்டர் படிச்சிருக்கிறீங்க... திருப்தியோடு போய் வாங்கோ மிக்க நன்றி.
ReplyDeleteவாங்கோ சிட்டுக்குருவி....
ReplyDeleteபெயரைப் பார்த்ததுமே ரொம்ப சந்தோசமாகிட்டேன்.... ஏனெண்டால் என் பக்கத்தில சுண்டெலி, குட்டி எலி, எலிக்குட்டி என பலவகையான ஆட்கள் இருக்கினம்... இப்போ பூஸாருக்குப் பிடிச்ச “சிட்டுக்குருவி” ....
நல்வரவு மிக்க நன்றி.