நல்வரவு_()_


Tuesday 20 October 2009

தத்துவ முத்துக்கள் தொகுப்பு -2

1)நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன்?, நினைப்பவ்ந்தான் நீ, முடிப்பவன் அவன்(இறைவன்).

2)நித்திரை கொள்பவனை எழுப்பலாம், ஆனால் நித்திரை போல் பாசாங்கு செய்பவனை எழுப்பவே முடியாது.

3)மல்லிகை புதரில் பூத்தாலும், அதன் மணம் வெளியே பரவாது விட்டுவிடுமா?

4)சுட்டுவிரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில், மற்றும் மூன்று விரல்களும் உங்கள் மார்பினைத்தான் காட்டுகிறது.

5)விளக்கு எரிவதற்காக வெந்து கருகிப்போகிற திரிமாதிரி, சிலர் தங்கள் வாழ்க்கையைத் திரியாக்கிக் கொள்கிறார்கள், "திரி இல்லாதுவிட்டால் தீபம் ஏது?".

6)ஆடையைப் பார்த்து எடை போடாதீர்கள், சேற்றிலேதான் செந்தாமரை மலர்கிறது.

7)ஆலயமுன்றலில் பாடக்கூடாத பாடல்கள், யார் அதைக் கவனிக்கிறார்கள்?, கடவுளை வணங்க வைப்பதற்குக்கூட, எதையாவது காட்டித்தானே மக்களை அழைக்க வேண்டி இருக்கிறது.

8)பாலைப்போல கள்ளும் உண்டு, நிறத்தாலே இரண்டும் ஒன்று.

9)குப்பைகளை நாடிச் செல்லும் கோழிகளை எத்தனை நாள் கூட்டில் வைத்துக் காக்க முடியும்?

10)முகத்தில் சுருக்கங்கள் விழலாம், ஆனால் இதயத்தில் விழக்கூடாது.

28 comments :

 1. மீதி ஒன்பதையும் நான் சுட்டு செல்கிறேன். சூப்பரா இருக்கு.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 2. அதிரா, காணமப் போனதன் ரகசியம் இதுதானோ?

  நலம்தானே?

  ReplyDelete
 3. நல்ல பதிவு படிப்பவர்கள் பயண்டைவார்கள் நன்றி

  ReplyDelete
 4. ஹைஷ் அண்ணன் நான் ஏதோ என் கொப்பியில் இருப்பவற்றை இங்கு பதிக்கலாமே என ஆரம்பித்தேன், நேரமின்மையால் முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டேன். இப்போ நீங்கள் இதுக்கு பின்னூட்டமும் தர ஆரம்பித்து விட்டீங்கள் மிக்க நன்றி.

  இருப்பினும் என்ன அது, ஒன்பதை மட்டும் எடுத்துச் செல்கிறேன் என்கிறீங்கள்... ஏன் பத்தாவதை நான் எங்கேயோ கொள்ளை அடித்து வந்து போட்டிருக்கிறேனோ???.

  நன்றி,

  பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுமாம்.

  ReplyDelete
 5. ஹூசைனம்மா மிக்க நன்றி. காணாமல் போன ரகசியம் இதுவல்ல. இது எப்போவோ ஆரம்பித்தது, தொடர நேரம் ஒடுக்க முடியாமல் இருக்கிறேன்.

  சின்ன வயதிலிருந்தே, உன் பொரு|ளைவிட அடுத்தவரின் பொருளை அதிகம் பாதுகாக்க வேண்டும், அதேபோல் அடுத்தவருக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பழக்கப்பட்டு வந்துவிட்டமையால், எப்பவோ ஆரம்பித்த புளொக்காயினும் இதுக்கு பெரிதாக முன்னுரிமை கொடுத்து முன்னேற்ற நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது.

  நன்றி,
  செய்வன திருந்தச் செய்.

  ReplyDelete
 6. சுவையான சுவை மிக்க நன்றி. உங்களை எப்படி அழைப்பது ?

  JKR மிக்க நன்றி.

  ஆரம்பிக்க முன்னமே பின்னூட்டங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு.

  நன்றி.
  இன்று ஒரு SMS செய்தி.....
  நீண்ட நாட்கள் உயிரோடு இருக்க என்ன வழி?
  ..........
  ............
  ............
  வேறென்ன சாகாமல் இருக்கவேண்டியதுதான்:).

  ReplyDelete
 7. அன்புநிறைந்த அதிரா!

  ”காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்லசெய்கை எல்லாத் திசைகளிலும் மணம் பரப்பும்”
  அதுபோல உங்களின் இந்த நல்ல செய்கை, எல்லா இடமும் பரவி மணம்பரப்புவதைப் பாருங்கள். வாழ்த்துக்கள்!

  இது போல உங்கள் கவிதைகளையும் எம்முன்னே படைக்கலாமே! பசியோடிருக்கிறோம் புசிப்பதற்கு:)

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 8. இளமதி மிக்க நன்றி. நல்வரவு. நீங்கள் இதைப் பார்க்கவில்லையோ என நினைத்தேன். உண்மைதான் சின்ன வயதிலிருந்தே எனக்கொரு பழக்கம், காதில் ஒலிக்கும் பாட்டு வசனங்கள், நல்ல கவிதைகள், புத்தகம் படிக்கும்போது கிடைக்கும் தத்துவ வசனங்கள் இவற்றையெல்லாம் கொப்பியில் அழகாக எழுதி ஸ்ரிக்கர் எல்லாம் ஒட்டி கலர் பென்னால் அலங்கரித்து நீற்றாக வைத்திருப்பேன்... அவற்றைத்தான் இதில் பதித்துவிட்டால், கொப்பியைப் பாதுகாக்கும் வேலை இல்லையல்லவா.

  என்னிடம் இருந்த எனக்குப் பிடித்த சில கவிதைகளைப் போட்டிருக்கிறேன், என் சொந்த ஆக்கமும் விரைவில்????? வரும். மிக்க நன்றி.

  ReplyDelete
 9. //ஹைஷ்126 said...

  மீதி ஒன்பதையும் நான் சுட்டு செல்கிறேன். சூப்பரா இருக்கு.

  வாழ்க வளமுடன் //

  முதல் ஒன்னு ஏற்கனவே போட்டது அவ்வ்வ் :-))))

  ReplyDelete
 10. //2)நித்திரை கொள்பவனை எழுப்பலாம், ஆனால் நித்திரை போல் பாசாங்கு செய்பவனை எழுப்பவே முடியாது.//

  யார் சொன்னது..??? முதுகில ஓங்கி ஒன்னு வையுங்க ...அப்புறம் பாருங்க ...போடுற சத்தத்துல பாட்டி ஞாபகம் தானா வரும் ஹி..ஹி... :-)))

  ReplyDelete
 11. //3)மல்லிகை புதரில் பூத்தாலும், அதன் மணம் வெளியே பரவாது விட்டுவிடுமா?//

  ம்..இந்த காலத்துல எங்கே பூக்க விடுறாங்க ..??? அதான் மொக்கா இருக்கும் போதே கட்டி ஃபிரிஜ்ஜுக்குள்ளே போயிடுதே :-))))))

  ReplyDelete
 12. //4)சுட்டுவிரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில், மற்றும் மூன்று விரல்களும் உங்கள் மார்பினைத்தான் காட்டுகிறது.//


  ஹை..இதுக்குதான் நான் முழு கையையும் நேரா காட்டிடுறது ஹி..ஹி... :-)))))

  ReplyDelete
 13. //6)ஆடையைப் பார்த்து எடை போடாதீர்கள், சேற்றிலேதான் செந்தாமரை மலர்கிறது.//

  வள்ளி..ச்சே.. அல்லி யும் அங்கேதானே பூக்குது ஹி..ஹி.. :-))))

  ReplyDelete
 14. //8)பாலைப்போல கள்ளும் உண்டு, நிறத்தாலே இரண்டும் ஒன்று//

  பினாயில விட்டுட்டீங்களே...!! :-))))

  ReplyDelete
 15. //9)குப்பைகளை நாடிச் செல்லும் கோழிகளை எத்தனை நாள் கூட்டில் வைத்துக் காக்க முடியும்?//

  நோ சான்ஸ்..சீக்கிரமே பிரியாணி போட்டுட வேண்டியதுதான் :-))))


  கேட்க மறந்துட்டேனே ...அந்த கோழி நம்ம சொந்த கோழியாதான் இருக்கனுமா ஹி...ஹி... :-))))))))

  ReplyDelete
 16. //10)முகத்தில் சுருக்கங்கள் விழலாம், ஆனால் இதயத்தில் விழக்கூடாது. //


  சுருங்கி விரியாட்டி டெட் பாடிதான் அவ்வ்வ்வ் :-)))))

  ReplyDelete
 17. யப்பா...உஸ்.... ஒரு இஞ்சி டீ குடிச்சுபோட்டு வாரேன் ..யாரோ திட்டுரதுப்போல கனவா வருதே....அவ்வ்வ் :-))))

  ReplyDelete
 18. என்னாச்சு இண்டைக்கு ஜெய்க்கு?:)).. மீன் முள்ளுக்குத்தினதுக்குப் போட்ட ஊசியால, பழைய நினைவெல்லாம் கிளறுப்பட்டுப் போட்டுதுபோல அவ்வ்வ்வ்வ்வ்வ்:))...

  அதில ஸ்பெல்லிங் மிசுரேக்கு வேற.. அல்லியை வள்ளியாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... எங்க வேணுமெண்டாலும் கை வையுங்க, ஆனா வள்ளில மட்டும் வச்சிடப்பூடா.. :))) வள்ளிக்கு மீ காவல்:)) ஹையோ... இனியும் இங்கின நிண்டால் ஆபத்து... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))))

  ReplyDelete
 19. //எங்க வேணுமெண்டாலும் கை வையுங்க, ஆனா வள்ளில மட்டும் வச்சிடப்பூடா.. :))) வள்ளிக்கு மீ காவல்:))

  //புதுசா பிடுங்கிய வள்ளி கிழங்குகள்//


  ஹி...ஹி... இப்போதான் எனக்கு வடிவா விளங்குது ..அவ்வ்வ்வ் :-))))

  ReplyDelete
 20. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதென்ன வம்பாப்போச்சு:)).. என்ன எழுதினாலும்.. தேடித்தேடி என்னென்னமோ கண்டுபிடிக்கிறாங்கப்பா.. அவ்வ்வ்வ்வ்வ்.. நான் கூட இப்பத்தானே பார்த்தேன்... விடுங்க நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்ன்:))

  ReplyDelete
 21. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதென்ன வம்பாப்போச்சு:)).. என்ன எழுதினாலும்.. தேடித்தேடி என்னென்னமோ கண்டுபிடிக்கிறாங்கப்பா.. அவ்வ்வ்வ்வ்வ்..//
  ம்...கொஞ்சம் டைம் கிடைச்சது ..விடுவோனா... ஹி..ஹி...

  //நான் கூட இப்பத்தானே பார்த்தேன்...//

  அதான் வள்ளி கிழங்குல வருதே அவ்வ்வ்வ் :-)))))

  ReplyDelete
 22. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அஞ்சுஊஊஊ .. இனியும் தாமதிக்க வாணாம், அந்த முள்ளுநிறைஞ்ச ஆத்துமீன் ஃபிரையைக் கெதியாக் கொண்டுவாங்கோ.. கிராஃப்ட் வேலையைப் பிறகு கவனிக்கலாம்... முதல்ல இதுக்கொரு முடிவு கட்டோணும்:))) எங்கிட்டயேவா... விட்டிடுவனோ நான்... காய்ச்சல் 175 டிகிரி சியில காஞ்சாலும் பறவாயில்லை(எனக்குத்தான்:)).

  ReplyDelete
 23. //அந்த முள்ளுநிறைஞ்ச ஆத்துமீன் ஃபிரையைக் கெதியாக் கொண்டுவாங்கோ.. கிராஃப்ட் வேலையைப் பிறகு கவனிக்கலாம்... முதல்ல இதுக்கொரு முடிவு கட்டோணும்:)))//

  கிணற்று மீனா இருந்தாலும் , தொட்டி மீனா இருந்தாலும் இன்று விடுவதா இல்லை ஹி...ஹி... :-)))
  //... விட்டிடுவனோ நான்... காய்ச்சல் 175 டிகிரி சியில காஞ்சாலும் பறவாயில்லை(எனக்குத்தான்:)).//

  அப்பொ எனக்கு இல்லையா... அவ்வ்வ் :-)))

  ReplyDelete
 24. காலைச் சுத்தின பாம்பு கடிக்கும்வரை விடாதாமே:).. அவ்வ்வ்வ்வ்வ் அந்த நிலைமையா இருக்கே என்ர நிலைமை:)... அதுவும் புதுசுக்கு வரமாட்டேன்.. பழசிலயேதான் என் வீரத்தைக் காட்டுவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு இங்கயே நிற்கினம்...:))

  நோ... வெடி சொடி:)).. இண்டைக்கு சிவராத்திரி... அதாவது வள்ளி தெய்வானையோட மாமா, முருகனோட அப்பாவுக்கான நாள்... இண்டைக்கு நான்.. மீ..., இன்:).. இந்த ரெண்டு எழுத்தையும் உச்சரிக்கவும் மாட்டேன் அபச்சாரம் அபச்சாரம்...:)))...

  சே..சே.. எப்பத்தான் வள்ளிக்கு சங்கிலி போட்டு என் நேர்த்திக்கடனை நிறைவேத்தப் போறேனோ...

  சொன்னார்.. கோணாண்டி குறிபார்த்து... ”பிள்ளை கெதியா நேர்த்திக்கிக் கடனைச் செய்திடுங்கோ இல்லாட்டில் இப்பூடித்தான் பின்னூட்டங்கள் வரும்”:) எண்டு... சே..சே.. எங்கின போய் லோன் எடுப்பேன் .. இப்போ தங்கம் வேற ஏறிட்டே போகுதே:))

  ReplyDelete
 25. //காலைச் சுத்தின பாம்பு கடிக்கும்வரை விடாதாமே:).. அவ்வ்வ்வ்வ்வ் அந்த நிலைமையா இருக்கே என்ர நிலைமை:)... அதுவும் புதுசுக்கு வரமாட்டேன்.. பழசிலயேதான் என் வீரத்தைக் காட்டுவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு இங்கயே நிற்கினம்...:))//

  அடுத்ததுல ம பொ ர வுல மூழ்கிகிட்டு இருக்கேன் ..மேலே வரும் போது ...... எடக்கு முடக்கான கேள்வியா வரும் உஷாரா இருங்கோ ஹா..ஹா... :-)))

  ReplyDelete
 26. //சொன்னார்.. கோணாண்டி குறிபார்த்து... ”பிள்ளை கெதியா நேர்த்திக்கிக் கடனைச் செய்திடுங்கோ இல்லாட்டில் இப்பூடித்தான் பின்னூட்டங்கள் வரும்”:) //

  அந்த 5 பவுனை என்கிட்டே குடுத்துடுங்கோ நேர்த்தி கடனுக்கு நான் கேரண்டி :-)))))))))))))))))..(((அது யாருக்கு போகுமுன்னு கேட்கப்பிடாது ))) :-)))

  ReplyDelete
 27. என்னாது? அடுத்தது ம.பொ.ர மா? அவ்வ்வ்வ்வ்... முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈஈ... ஒரு கிழமைக்கு தேம்ஸ்ல எறியப்போறேன் பி.பெ ஐ:)).(இதுவல்ல அதுக்கு காரணம், ஆரும் பயந்திடாதீங்க:))
  ஏன் எறிகிறீங்க எனக் கேட்கப்பூடா:)) அது வேற இது வேற okay?:)).


  //அந்த 5 பவுனை என்கிட்டே குடுத்துடுங்கோ நேர்த்தி கடனுக்கு நான் கேரண்டி :-)))))))))))))))))..(((அது யாருக்கு போகுமுன்னு கேட்கப்பிடாது ))) :-)))//

  இண்டைக்கு என் ராசிப்பலன்.. ஆரையும் நம்பிடாதீங்க என இருந்துது.... நான் என்ர கையாலதான் வள்ளிக்குப் போடுவேன்... நீங்க மாறிக்கீறி லபக்கென தெய்வானைக்குப் போட்டுவிட்டால்... என் நேர்த்திக்கடன் என்ன ஆவுறது:))

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.