நல்வரவு_()_


Tuesday 12 May 2020

வடகங்கள் 16 உம் உருவான வரலாறு🙈

பொன்னியின் செல்வன் படிக்கும்போது அறிஞ்சேனம்மா!!!

ன்று போவோம், நாளை போவோம் என இப்படியே ஒரு கிழமை ஆகிவிட்டது.. ஆரும் தேட முன்பு வந்திடோணும் என நினைச்சேன், முடியாமல் போச்சா:)).. இப்பூடித்தான் இனிக் கோடை காலம் ஆரம்பிச்சாலே, அதிரா அடிக்கடி காணாமல் போகக்கூடும்:)).. அதனால ஓவராக் ஹப்பி ஆகிடாதீங்கோ:))


சரி சரி மாஸ்க் கட்டியிருப்பதால நிறையப் பேச முடியுதில்லை:)), அதனால என் வடகத்துள் குதிக்கலாம் வாங்கோ:))..

நான் இம்முறை மோர் மிளகாய், ஊறுகாய் இப்படித்தான் செய்ய நினைச்சிருந்தேன், ஆனா நாம் நினைப்பது எதுதான் நடக்குது?:), மிளகாய் வாங்குவதாயின் தமிழ்க் கடைக்குப் போகோணும் என்பதால அந்த ஆசைக்கு இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுகிறேன்.

அதுக்குள், அஞ்சுதான் என்னை நித்திரை கொள்ளவும் விடாமல், பொன்னியின் செல்வன் படிக்கவும் விடாமல்[இதனை நன்கு நோட் பண்ணவும் பிளீஸ்:)] கலைச்சதால கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), வடகத்துக்குள் குதிச்சேன்...ஹா ஹா ஹா...

இது மரக்கறி வடாம்... பாருங்கோ எனக்கு நோக்கிள் கூட பிங்கியாகவே கிடைக்குது ஹா ஹா ஹா.. இது இப்போ கோடையில்தான் இப்படி வருது...

காய்ந்து விட்டது நன்கு, ஆனா பொரிக்கும்போது 
கலர் இன்னும் டார்க் ஆகுது..

இது அரிசியை அரைத்துக் கஞ்சி காச்சிய வடகம்..

காய்ஞ்சு போச்ச்ச்ச்ச்:)

  இதுதான் அனைத்திலும் சூப்பராக இருக்குது, பொரிச்சுச் சாப்பிட, கடையில வாங்கும் prawn crackers  போலவே இருக்குது ஹா ஹா ஹா..

இது சவ்வரிசி வடாம்

என்னா சூப்பராக வந்திருக்குது பாருங்கோ..

இது பொரித்ததும் பொரிக்காததும், ஆனா ஒரு சிறு குறை,
 சாப்பிடும்போது பல்லில் ஒட்டுகிறது... அனைத்தையும் ரின்களில் போட்டு வைச்சிட்டேன், இப்போ பொரிச்சு முடிக்கக்கூடாதெல்லோ:)

இடைவேளை வாணாமோ?:))
என் பூரி எப்பூடிப் பொயிங்கிப் பூரி:)ச்சிருக்குது பாருங்கோ:)).. அஞ்சுவுக்கு இப்பூடி வராதாக்கும்:))

நான் எப்பவும் வித்தியாசமாகத்தான் செய்வேனாக்கும்.. இது ஆளு பூரி:)) சே சே ஆலு பூரி யாக்கும்:)).. ஆலுப் பரோட்டாதான் செய்யோணுமோ?:)
========================================
ஆவ்வ் இது என் பாயாச வடாம்:)).. கீசாக்காவால இப்படி ஒரு வடாம் செய்ய முடியுமோ?:)).. ஹா ஹா ஹா ஆனா என்ன புரொப்ப்ப்ப்லம் எனில்:)).. சீனி சேர்ந்ததால, பொரிச்சேன், கரைஞ்சு போயிடிச்சீஈஈஈஈ எண்ணெயோடு சங்கமமாகி:)) ஹா ஹா ஹா:))
======**********======
இது ஒரு பெரிய கதைங்கோ:)).. உருளைக்கிழங்கு வத்தல் போடு, சிப்ஸ் போல சூப்பராக இருக்குமென அஞ்சு மிரட்டியதால, ஓடிப்போய் 2.5 கிலோ வாங்கி வந்து போட்டேன், இது ஏனோ எனக்குப் பெரிசாகப் பிடிக்கவில்லை, நான் பொதுவா எந்த ஒரு சமையல் எனினும், பல ரெசிப்பிகள் தேடிப் பார்த்தபின்பே செய்வேன், ஆனா இது அஞ்சு சொன்னதை நம்பி அப்பூடியே செய்தேனா:)) பிழைச்சுப் போச்ச்ச்ச் கர்ர்ர்:)), அதாவது, இது சிவப்புக் கிழங்கு, அடுத்து நான் எப்பவும் கிழங்கை தோலோடு நன்கு கழுவிப்போட்டு, பின்பு அப்படியே சமைப்பேன், அப்படியே இதையும் செய்தேன்..

ஆனா இந்த வத்தல் போடுவதாயின், வெட்டியபின் நன்கு பல தடவைகள் கழுவ வேண்டுமாம்:)). அதாவது அதன் சத்துக்கள் எல்லாம் அழியும்வரை ஹையோ ஹையோ:), ஆனா பொரியல் ரேஸ்ட்டாக இருக்குது, பார்க்கத்தான் அழகில்லை...

இப்போ வெங்காய வடாம் செய்து, காய்ந்து கொண்டிருக்குது.. இனி வடகம் செய்ய மாட்டேன், தேசிக்காய் ஊறுகாயும் செய்திட்டேன், இனி மோர் மிளகாய்தான் செய்வேனாக்கும்.. இன்னும் வெயில் காலம் இருக்குதுதானே...
====================================================
இன்று ஒரு தகவல்
இஞ்சி, உள்ளி வாங்கினால், இப்படி தனித்தனியே தண்ணியில்லாமல் அரைச்சுப் போத்தலில் போட்டு பிரிஜ்ஜில் வைத்தால் ஒரு கிழமைக்கு மேல் இருக்கும், பசுமையாக அரைக்காமல் இருவல் நருவலாக அரைப்பது நல்லது... காலையில் இஞ்சி ரீ ஊத்த ஈசியாக இருக்குது.. உள்ளி/பூண்டு அரைக்கும்போது  மட்டும், ஒரு மேசைக்கரண்டி ஒலிவ் ஒயிலும் சேர்த்து அரைச்சால், பழுதடையாது..
===============================================
இது உளுந்து கோதுமைத் தோசை
உளுந்து ஒரு கப்
பச்சை கோதுமை மா ஒரு கப்
அவிச்ச கோதுமை மா ஒரு கப்.. மானே தேனே சேர்க்கவும்.

அவிச்ச மாவை நன்கு ஆறவிட்டபின், கட்டியில்லாமல் நன்கு கரைச்சு நோர்மல் தோசைக்கு வைப்பது போல் புளிக்க, பொயிங்க:) விட்டுச் சுடவும்.

நீண்ட நாட்களின் பின்பு நம் ஆற்றங்கரையில் நடந்தோம்... நடக்கும்போது கண்ணில் கண்ட காட்சிகள்...



இது நெல்லைத்தமிழனின் கவனத்துக்கு:)).. இம்முறை அதிகம் செயார்களில் இப்படி வைத்திருக்கிறார்கள்...   அதில் ஒரு பப்பியும் கட்டியிருக்கினம்:(... நான் எங்குமே இருக்கவில்லையாக்கும்:))

அம்முலுவுக்கு மட்ட்டும்தேன் சாப்பிடத் தெரியுமோ?:) நாங்களும் உப்பிலயும் புளியிலயும் தொட்டூஊஊ தொட்டூச் சாப்பிடுவமாக்கும்:)).. இது எங்கட சூப்பர் மார்கட்டுக்கு வந்திருந்த கிளிச்சொண்டு மாங்காய்[அப்பூடித்தான் இருந்தது சேப்], ஒரு காய் 75 pence, காயாக இருக்கும் என வாங்கினால், உள்ளே கனிஞ்சு போச்ச்ச்ச் கர்ர்ர்ர்:))

ஊசிக்குறிப்பு
ஆண்டவா  முருகா...என் கண்ணுக்கு மட்டும் எப்பூடி இப்படியான டமில்:)) வசனம் கரீட்டாக் கிடைக்குது:))... சே சே இதுக்குத்தான் டமில்ல:) டி எடுத்திருக்கப்பிடாது எனச் சொல்றது:)).. கண்ணுக்கு எல்லாம் தெரியுதே:))

ஊசி இணைப்பு

ஒரு குட்டிக் கதை சொல்லி இதை நிறைவு செய்யட்டோ?:), ஒரு குக்கிங் ஷோ பார்த்துக் கொண்டிருந்தோம், அதில் ஒரு black man  சமைச்சுக் கொண்டிருந்தார், அப்போ அவர்  சொன்னார்.. மை ஹஸ்பண்ட் என ஒரு வசனம்... உடனே நான் நினைச்சேன், ஆஆஆஆ நெல்லைத்தமிழனைப் போல பேசுகிறாரே எண்டு பார்த்தால், ஓடியன்ஸ் இலிருந்து ஒருவர் கையைத் தூக்கினார்... அவர்தான் ஹஸ்பண்ட்டாம் இவரின்.. அவர் ஒரு வைட் மான் ஹா ஹா ஹா..
🙏🙏🙏🙏🙏🙏😺🙏🙏🙏🙏🙏🙏

145 comments :

  1. படங்கள் அழகாக வந்து இருக்கிறது.

    அது பூரியா ? நான் முட்டை போண்டானு நினைச்சேன்.

    ஆளு செய்த புரோட்டா நல்லாத்தான் இருக்கு.

    அடுத்தவர்மீது சேற்றை இறைக்கும்போது ஆறு லிட்டர் பிளாஸ்டிக் பக்கெட் எடுத்துக்கொண்டு நமது கையில் படாமல் இறைத்து வீசி விடலாமே....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. முதலாவதாக வந்திருக்கும் உங்களுக்கே அந்தப் பொயிங்கியிருக்கும் பூரி:) ஹா ஹா ஹா..

      //அது பூரியா ? நான் முட்டை போண்டானு நினைச்சேன்.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முட்டை போண்டா இவ்?ளோ பெரிசாகவோ இருக்கும்?:)

      //ஆளு செய்த புரோட்டா //
      ஹா ஹா ஹா..

      //ஆறு லிட்டர் பிளாஸ்டிக் பக்கெட் எடுத்துக்கொண்டு நமது கையில் படாமல் இறைத்து வீசி விடலாமே....//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:)) நம் மக்கள் எப்பூடியும் ஒரு ஓட்டைபோட்டு, இன்னொரு வழியைக் கண்டு பிடிச்சிடுவினம்.. அதிலயும் இந்தியாவின் - நியூயோர்க் ஆட்களைக் கேட்கவும் வேணுமோ:)).. நன்றி கில்லர்ஜி..

      Delete
  2. Replies
    1. ஆமா ஆமா நீங்கதான் 1ஸ்ட்டூ அதாவது ஆயாவைத் தூக்கிக் கொண்டு போவதில் இம்முறை நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊஊ:)).. அஞ்சு ஆயாவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கோ.. காச்சல் 100 டிகிரில காயுது.. ஒருவேளை ஆயாவுக்குக் கொரொனாத் தாக்கம் இருக்குமோ?:) ஆனாலும் அவ நல்ல உசாராத்தான் இருக்கிறா.. பயப்பூடாதீங்கோ:))

      Delete
    2. நோஓஓஓஒ நீங்க இப்படி 2வரும் போஸ்ட் போட்டால் எங்கன முதல்ல போறது... 🙇‍♀️ 🙇‍♀️
      (இதையே இங்கதான் எழுதுறன்)

      Delete
    3. வாங்கோ அம்முலு வாங்கோ.. இதிலென்ன டவுட்டூஊஊஊஊஊ முதலில் அதிடா சே சே டங்கு ஸ்லிப்பாகுதே:) அதிரா வீட்டுக்குத்தான் வரோணும்:) இல்லை எனில் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்:))

      Delete
    4. போங்கோ நீங்க எனக்கு போட்டியா மாங்காயை போட்டீங்களா (ஹா...ஹா பழுத்துபோச்சா) அஞ்சு நல்ல நெகிழ்ச்சியான போஸ்ட் போட்டிருந்தாவா பின்ன அங்கன ஞான் போயி வந்திட்டேன்.
      அது என்ன மாங்காய் உப்பிலயும்,புளியிலயும் தொட்டு சாப்பிடறது..உப்பு,மி.தூள் லதானே தொட்டு சாப்பிடுறது. பக்கத்தில என்ன டீ யோ?

      Delete
    5. //priyasakiTuesday, May 12, 2020 5:32:00 pm
      போங்கோ நீங்க எனக்கு போட்டியா மாங்காயை போட்டீங்களா//

      ஹா ஹா ஹா அடுத்து என்னத்தைப் போட்டியாகப் போடலாம் என ஓசிக்கிறேன், பப்பாக் காய் கிடைக்கட்டும்:)).. அது ரீ குடிக்கிறேனாம்ம்:))

      Delete
  3. //வடகங்கள் 16 உம் உருவான வரலாறு🙈
    பொன்னியின் செல்வன் படிக்கும்போது அறிஞ்சேனம்மா!!!///ஹலோ பொய் சொல்லப்படாது நீங்தான் பொன்னியின் செல்வனை திறக்கவேயில்லையே எப்புடி அந்த வசனம் தெரிஞ்சுது ????????

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நான் பொய் சொல்ல மாட்டனே.. இப்போ இந்த ஒரு வாரமாக பொன்னியின் செல்வனைக் கையில தூக்கி வச்சு செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறேன்ன்:)) வீட்டில எல்லோரும் என்னை ஒருமாதிரிப் பார்க்கினம்:)) இங்குளூடிங் டெய்சிப்பிள்ளை கர்:)) ஆனா இன்னும் படிக்கத் தொடங்கவில்லை:)).. வெள்ளோட்டம் பார்க்கிறேனாக்கும்.. பாருங்கோ என் செல்ஃபி போடுவேன் விரைவில்:))

      Delete
  4. ட்ரூத் சொன்ன உருளை கீரை பொடிமாஸ் செஞ்சுட்டு வரேன் மற்றவைக்கு :) நிதானமா கலாய்க்கணுமில்ல 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ... ஆள்ந்த உறக்கத்தில் நயனுடன் டான்ஸ் ஆடி மகிழ்ந்துகொண்டிருக்கும் ட்றுத்தின் கனவைக் கலைக்காதீங்கோ கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. நயனை நான் டைவோர்ஸ் பண்ணி ரொம்ப நாளாகிவிட்டது,,,

      Delete

    3. வடகம் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது அரிசி வடகம் மிக நன்றாக வந்திருக்கிறது,,, பாராட்டுவதை உடனடியாக பாராட்டிவிடுகிறேன், காரணம் ஒருவேளை செத்துகித்து போனால் இந்த ட்ரூத் பாராட்டாமல் செய்து போயிட்டானே என்று காலம் முழுவதும் வருத்தப்பட்டு இருக்க கூடாது பாருங்க... இப்ப ஹாப்பியா அதிரா...

      Delete
    4. வாங்கோ ட்றுத் வாங்கோ.. என்னாதூஊஊஊஉ நயனோடு டிவோஸ் ஆ? அப்போ கோடி கொடியாகத் தந்துதானே டிவோஸ் நடந்திருக்கும்?:)) எல்லாத்தையும் எங்கு பதுக்கி வச்சிருக்கிறீங்கள் ஹா ஹா ஹா..

      பாராட்டுக்கு நன்றி நன்றி...

      //ஒருவேளை செத்துகித்து போனால் இந்த ட்ரூத் பாராட்டாமல் செய்து போயிட்டானே என்று காலம் முழுவதும் வருத்தப்பட்டு இருக்க கூடாது பாருங்க... இப்ப ஹாப்பியா அதிரா...//

      ஹா ஹா ஹா உங்களுக்கு இனி 100 வய்சு ட்றுத்... பயமில்லை.. ஏனெனில் நீங்கள் ஏற்கனவே புளொக் உலகில் .. காணாமல் போய் வந்திட்டீங்களெல்லோ:) இது வேற காணாமல் போறதாக்கும்...

      ஆனாலும் இப்போ கவலைதான், ஏனெனில் ஒரு நாட்டுக்குள் எனில் பறவாயில்லை, இன்னொரு நாட்டில் ஒரு இழப்பு அல்லது சுகயீனம் எனில் போய்ப் பார்க்க முடியாதே... எப்போதான் பிளேன் ஓடுமோ எனப் பயமாகத்தான் இருக்குது.

      Delete
  5. பாடல் பிடித்த பாடல் கேட்டேன்.

    //வடகங்கள் 16 உம் உருவான வரலாறு🙈
    பொன்னியின் செல்வன் படிக்கும்போது அறிஞ்சேனம்மா!!!//

    வ்டகங்கள் 16 அதில் வருதா!
    அதிரா பாவம் வத்தல், வடகம் போட்டு அக்கடா என்று சோர்வாய் உட்கார்ந்து இருக்கிறா நாம் தொந்திரவு செய்யகூடாது என்று பூஸார் நினைத்து டல்லாக உட்கார்ந்து இருக்கோ!
    வடகங்கள் எல்லாம் அருமை. நல்ல உழைப்பு. வடகம் போட ஆரம்பித்தால் இப்படித்தான் தொடர்ந்து போட சொல்லும் அது ஒரு போதை போல . நான் இப்படித்தான் என் குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும் போது வித விதமாய் தினம் வத்தல் போடுவேன். வெயில் வீணாகாமல் என்னை வருத்திக் கொண்டு. அப்புறம் அவர்கள் கல்யாணம் ஆகி போன பின்னும் அவர்களுக்கு போட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தேன்.

    இப்போது சில வருடங்களாக தங்கை போட்டு கொடுக்கிறாள், வெளியில் கொஞ்சம் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறேன்.
    நாமே போட்டால் அதில் கிடைக்கும் ஆனந்தம் சொல்ல முடியாது.

    முடிந்தவரை போடுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ... இந்தப் பாட்டு தமிழ் தெரியாத நம் பிள்ளைகள்கூட ஃபோனில் வைத்துக் கேட்டார்கள் அந்நேரம்,,, அப்படி ஒரு அழகிய பாட்டு..

      சொய் சொய்...இது மொபைலில் பார்க்கும் ஸ்ரீராமுக்காக:))..

      //வ்டகங்கள் 16 அதில் வருதா!///

      எண்ணினால் வரும் கோமதி அக்கா ஹா ஹா ஹா..

      உண்மையில இந்த அத்தனை வடங்களிலும் என் பயங்கர லவ் கொட்டிக் கிடக்குது கோமதி அக்கா.. அவ்ளோ தூரம் ரசிச்சு, அதிலேயே பிரமிச்சு.. கிட்டத்தட்டப் பாகுபலி பார்த்ததைப்போல செய்தேன்..

      என்னில ஒரு பழக்கம், விரும்பாமல் எதையும் செய்ய மாட்ட்டேன், எது செய்தாலும்... அதில் உள் நுழைஞ்சே செய்வேன்ன்.. “செய் அல்லது செத்துப்பொ” என்பது என் வசனம்:))...

      இங்கு வெயிலைக் கண்டாலே ஏதாவது செய்யோணும் என கை கால் துடிக்குது, ஆனாலும் இப்போ கொஞ்ச நாட்கள் வெயிலோடு குளிர் காத்தாக இருக்குது..

      கார்டினில் பயிர்கள் வளருது.. குளிர் அதிகம் எனில் பட்டுப்போகுமெல்லோ..

      Delete
    2. என்ன பாட்டோ... அறியேன் ஞானத் தங்கமே..

      Delete
    3. வடகம், தோசை என்று ஐந்தாறு இடுகைகளுக்கான மேட்டரை ஒர்ரே பதிவில்... கர்ர்ர்ர்ர்...

      Delete
    4. ஆல் பூரி அமர்க்களம். மாங்காயின் புளிப்பு ஆவதில்லை. சாப்பிட மாட்டேன். வடகங்கள் ஓகே. எதில் காய வைப்பீர்கள்? அவ்வளவு வெயில் இருக்கா அங்கே,?

      Delete
    5. திதிப்பு வடகம் புதுமையான ஐடியா. அதை எண்ணெயில் பொரிக்காமல் தோசைக் கல்லிலோ, அவனிலோ வைத்தால்?

      Delete
    6. உளுந்து ஒரு கப்பா? உளுந்து மாவு ஒரு கப்பா? ஏன் இரண்டு டைப் கோதுமை மாவு?

      Delete
    7. ஆற்றங்கரையோரப் படங்கள் அழகு.

      Delete
    8. ஹஆஹாஆ :) ஒரு காலத்தில் நானும் இப்படித்தான் ஒரே பதிவில் ஊர்பட்ட விஷயம் எழுதுவேன் ..ஒருமுறை தாங்கமுடியாம மதுரை தமிழன் உண்மையை சொல்லவும்தானே என்னை மாற்றி இப்போல்லாம் சுருக்கி எழுத பழகிட்டேன் 

      Delete
    9. vஆங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. என்ன ஆச்சு இன்று:), கோமதி அக்காவின் பதிலுக்குக் கீழயே அனைத்துக் கொமெண்ட்டையும் கடுகதி வேகத்தில போட்டிட்டு ஓடிட்டீங்க ஹா ஹா ஹா..

      //
      ஸ்ரீராம்.Tuesday, May 12, 2020 12:12:00 pm
      என்ன பாட்டோ... அறியேன் ஞானத் தங்கமே..//
      ஹா ஹா ஹா.. உங்களுக்காகத்தானே மேலே, கோமதி அக்கா பதிலில் சொல்லியிருக்கிறேன் சொய் சொய்.. ஹா ஹா ஹா கும்கி படப்பாட்டு.. பட்டி தொட்டி எல்லாம் பாடினதை ஆரும் மறக்க மாட்டினம்:).

      Delete
    10. //ஸ்ரீராம்.Tuesday, May 12, 2020 12:13:00 pm
      வடகம், தோசை என்று ஐந்தாறு இடுகைகளுக்கான மேட்டரை ஒர்ரே பதிவில்... கர்ர்ர்ர்ர்...//

      இதில் தோசைகென ஒரு போஸ்ட் போட்டால் நானும் பானு அக்கா ரேஞ்சுக்கு உயர்ந்திடுவேன் ஹா ஹா ஹா.. அதைத் தனியாகப் போட ஒன்றுமில்லை என்பதாலதான் ஸ்ரீராம், இப்பூடி எங்காவது ஒட்டி விடுகிறேன் பலதை:)).. இன்னொரு காரணம், போஸ்ட் போட நிறைய விசயம் இருக்குது, அதனாலும் இப்படிப் போட்டு விடுகிறேன்.

      Delete
    11. //ஸ்ரீராம்.Tuesday, May 12, 2020 12:16:00 pm
      திதிப்பு வடகம் புதுமையான ஐடியா. அதை எண்ணெயில் பொரிக்காமல் தோசைக் கல்லிலோ, அவனிலோ வைத்தால்?//

      நன்றி...அதை ஒன்றுமே பண்ணத் தேவையில்லை ஸ்ரீராம், நன்கு காய்ந்ததும், உணவோடு சேர்த்து அல்லது தேத்தண்ணியோடு[ரீ/பிளேன் ரீ] உடன் சாப்பிடலாம்.... மீ அப்பூடித்தான் சாப்பிட்டு முடிச்சேன் ஹா அஹ ஹா... இனிப்பெல்லோ.

      Delete
    12. //ஸ்ரீராம்.Tuesday, May 12, 2020 12:18:00 pm
      உளுந்து ஒரு கப்பா? உளுந்து மாவு ஒரு கப்பா? ஏன் இரண்டு டைப் கோதுமை மாவு?//
      எந்த வித்தியாசமுமில்லை ஸ்ரீராம், தோசைக்கு அரிசி சேர்ப்பீங்களெல்லோ.. அந்த அரிசிக்குப் பதில் கோதுமை மா சேர்ப்போம், மற்றும்படி சாதாரண தோசைபோல, உழுந்தை ஊறப்போட்டு வெந்தயம் சேர்த்து அரைச்சு, இவ்விரு மாக்களையும் சேர்த்து சோடாவும் போட்டு நன்கு குழைத்து, ஓவர் நைட் புளிக்க விட்டுச் சுட வேண்டும்..

      மா .. தெரியவில்ல்லை, இதுக்கு அப்படித்தான் சேர்ப்போம். கடுமையாக அவிஅவி எண்டு அவிக்கத் தேவையில்லை, நான் மைக்குரோவேவ் ல வைத்து எடுப்பேன்.

      இந்த தோசை மெத்து மெத்தென வரும், றோஸ்ட் ஆவது கடினம், எனக்கு இப்படி மொத்தமான தோசைதான் பிடிக்கும்... ஆனால் வீட்டில் றோஸ்ட் பண்ணியதுபோல முறுகல்தான் பிடிக்குது:))..

      நன்றி ஸ்ரீராம்.

      Delete
    13. //AngelTuesday, May 12, 2020 12:25:00 pm
      ஹஆஹாஆ :) ஒரு காலத்தில் நானும் இப்படித்தான் ஒரே பதிவில் ஊர்பட்ட விஷயம் எழுதுவேன்//

      எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதேன்:)).. அடிக்கடி போஸ்ட் போட்டால் ஓகே, இது ஆண்டுக்கொருக்கால் போடும்போது இப்பூடி ஆகிடுது நிலைமை:)).. இனி அடுத்தது எப்போ போடுவேன் என அந்த கொள்ளிமலை வைரவருக்கே தெரியாது ஹா ஹா ஹா:).

      Delete

    14. ஆண்டுக்கு ஒரு முறை போடுவது பதிவு போடுவது கனடா தேவதை ப்ரியசகி ஆச்சே

      Delete
    15. /// Avargal UnmaigalTuesday, May 12, 2020 3:32:00 pm

      ஆண்டுக்கு ஒரு முறை போடுவது பதிவு போடுவது கனடா தேவதை ப்ரியசகி ஆச்சே//

      ட்றுத் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........... நான் இப்போ மாதத்துக்கு ஒரு பதிவாவது போடுறேன் தெரியுமோ.. பிஞ்சு இதையெல்லாம் கேட்க மாட்டா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
      ஆ........என்ன இது இடம்பெயர்ந்த மாதிரி நாடுபெயர்த்திருக்கிறார் ட்றுத் என்னை. கனடா தேவதையா ஆவ்வ்வ் 😳 😳
      நான் ஜேர்மனி யில இருக்கிற தேவதை. 😛 😛

      Delete
    16. //கனடா தேவதை ப்ரியசகி ஆச்சே//
      ட்றுத் க்கு என்னமோ ஆச்சூஊஊஊஊஉ.. எல்லோரையும் வாழ்த்துறார், தேவதை என்கிறார்:)).. கொரோனா எஃபெக்ட் ஆக இருக்குமோ?:)).. அது செரி.. என்னாதூஊஊஊஊஉ கனடாத் தேவதையோ... ஹையோ வைரவா இதை எல்லாம் பார்க்கவோ இன்னும் பிளேனை ஓட விடாமல் வச்சிருக்கிறாயப்பா.. விரைவில பிளேன் ஓடட்டும் மீ காசிக்குப் போயிடுறேன்ன்:))..

      ----------------------

      அச்சச்சோ ஜேர்மனித் தேவதையாமே...:)) ஐயா ஜாமீஈஈஈஈ நல்லவேளை நாம இந்த டேவடை லிஸ்ட்டில இல்லை:)).. நாலுகால் லிஸ்ட்டில் இருப்பதால் ஒருவரும் என்னோடு கூட்டுச் சேர மாட்டினம்:)) மீ சேஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ஃப்:)) ஹா ஹா ஹா...

      எல்லோரும் சமைச்சு.. சிரிச்சு மகிழ்ச்சியாய் இருப்போம்...

      Delete
  6. இஞ்சி, பூண்டு குறிப்புகள், கோதுமை, உளுந்து தோசை எல்லாம் நன்றாக இருக்கிறது.

    ஆற்றங்கரை கண்ட காட்சிகள் அழகு. வானமும், மலையும் படகு போவதும் பார்க்க அழகு.

    உங்கள் கண்ணில் பட்ட பிழை மருதமலை முருகனைப்பார்த்தவுடன் காணாமல் போய்விட்டது.
    ஊசி இணைப்பும் அருமை.

    //அவர் ஒரு வைட் மான் ஹா ஹா ஹா..//

    குட்டி கதை ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அக்கா அனைத்துக்கும் நன்றிகள்.

      Delete
  7. அதிரா விதம் விதமா, வகை வகையா, சுவை சுவையா, அழகழகா, பக்குவமா பண்டங்கள் தயாரிக்கிறாரே, எல்லார்த்தையும் அவர் விரும்பிச் சாப்பிடுவது உண்டா?!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அறிவுப்பசிஜி வாங்கோ... நீங்கள் வருகிறீங்கள் ஆனால் இக்கடனைத்திருப்பி அடைக்க முடியாமல் உங்கள் கொமெண்ட் பொக்ஸ் ஐத்தூக்கிக் காவேரியில எறிஞ்சிட்டீங்க ஹா ஹா ஹா..

      “அன்புடையோர் என்றும் பிறர்க்குரியர், அன்பிலார் என்றும் நமக்குரியர்”.. ஹா ஹா ஹா இப்பூடித்தான் உணவும், சிலதுக்கு பெரிய டிமாண்ட் கிடைக்கும் வீட்டில்... முக்கியமாக அந்த அரிசி கூழ் வத்தல்.. அதனை விட்டிடுவேன், ஆனா சிலதை பெரிசாக விரும்ப மாட்டினம்.. அது எனக்குள் சங்கமம்:)) ஹா ஹா ஹா பின்ன கஸ்டப்பட்டுச் செய்துபோட்டு.. சாப்பிட்டுத்தானே முடிக்கோணும்:))

      மிக்க நன்றி அ.ப ஜி.

      Delete
  8. அஆவ் கொக்கும் ரசம் ,ட்ரூத்தின் உருளை கீரை பொடிமாஸ் வீட்டு வற்றல் எல்லாம் சாப்பிட்டு இப்போதான் வரேன் லெட் மீ கொன்டின்யூ :)

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீ இன்று டயட்டில இருக்கிறேனாக்கும்.. நீங்க எப்பூடி ஆசை காட்டினாலும் மீ ஆப்பிடப்போவதில்லை:)).. இது அந்த தேம்ஸ் கரையில தலைகீழாகக் கிடக்கும் கல்லின் மீது ஜத்தியம்.

      Delete
    2. ஏஞ்சல் சொல்றதைப் பார்த்தால், இன்னைக்கு 'அவர்' ஆபீஸ் போகலையா? எல்லாம் இப்போதான் செய்து வைத்தாரா?

      Delete
    3. அந்த காமெடியை சொல்லியே ஆகணும் .எங்க வீட்டில் இவர் சும்மானாவும் லீவ் எடுக்க மாட்டார் ஆனா இப்போ லாக் டவுன் செஞ்ச வேலையால்  வீட்டில்தான் இருக்கார்  .ஜூன் வரைக்கும் வீட்டிலிருந்துதான் வேலை .ஆனா பொடிமாஸ் செஞ்சது நான்தான் 

      Delete
    4. //எங்க வீட்டில் இவர் சும்மானாவும் லீவ் எடுக்க மாட்டார்///
      ஆபிஸில் ஒரு அழகான தேவதை இருந்தால் யாருக்குதான் சும்மா சும்மா லீவ் எடுக்க தோன்றும்


      இது புரியாமல் ஏஞ்சல் பெருமையா சொல்லுறாங்க பாவம் ஏஞ்சல்

      Delete
    5. ஹையோ அய்யயோ ட்ரூத்  அவர் அப்பாவி :) பொய் சொல்றது சும்மா வீட்ல இருப்பது எல்லாம்  பிடிக்காதது 

      Delete
    6. ஆயிரம் தேவதைகள் வந்தாலும் ஏஞ்சல் தேவதைக்கு ஈடாகுமா :)))))))))))))))))  என் ஹப்பிக்கு சொன்னேன் 

      Delete
    7. //இது புரியாமல் ஏஞ்சல் பெருமையா சொல்லுறாங்க பாவம் ஏஞ்சல்//

      ஹா ஹா ஹா ஆஆஆஆஅ ட்றுத் கை குடுங்கோ.... ஆ.... வாணாம் நீங்க அந்த நயகராவில ஓங்கி அடியுங்கோ மீயும் இங்கின தேம்ஸ்ல ஓங்கி அடிக்கிறேன்ன்ன்ன்:)) சியேர்ஸ் சொல்லுறோம்ம்:)).. ஹா ஹா ஹா வரவர தேவதைப் பிரச்சனை வந்திடப்போகுது எல்லாம் ட்றுத்தாலதான்:))

      Delete
  9. பாட்டு கேட்டேன் பார்த்தேன் ..சொய் சொய் நல்லா இருக்கு ஆனா சீன்ஸ் பார்க்கும்போது எதோ ஒரு கெட்டது இல்லைன்னா கவலையான சம்பவம்போல் இருக்கு ,இந்த படத்தை பார்க்கலை .இந்த டைரக்டரின் படம் மைனா பார்த்துட்டு அழுகாச்சி வந்து அதனால் இதை பார்க்கலை .

    ReplyDelete
    Replies
    1. நான் படம் பார்த்தேன் அஞ்சு, முடிவு நல்ல முடிவுதான் கவலை இல்லை என நினைக்கிறேன்.. இடையிலதான் இப்படிக் கவலைபோல வருது.. நல்ல படம் அனைவராலும் பேசப்பட்ட ஒரு படம்... பாடலும் அப்படியே....

      Delete
  10. //சரி சரி மாஸ்க் கட்டியிருப்பதால நிறையப் பேச முடியுதில்லை:)), அதனால என் வடகத்துள் குதிக்கலாம் வாங்கோ:))..//

    எனக்கு மூச்சே விடமுடில நீங்க எப்படி பேசறீங்க :)
    ஹாஹாஆ :) நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறணும்னே உங்களை உசுப்பேத்தி விட்டேன் இப்போ ஸ்கொட்லாந்து ஏரியா  வற்றல் டிஸ்ட்ரிபியூஷன் உங்களுக்கு லண்டன் எனக்கு டீல் :)

    ReplyDelete
    Replies
    1. பாருங்கோ டீல் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா ஆசைக்கு ஒன்று கூட, ஒரு நட்புக்குக் குடுக்க கூட முடியாமல் கொரோனா பண்ணியிருக்குது கர்ர்ர்ர்:))

      Delete
  11. இந்த பிங்க் டர்னிப்பில் ஊறுகாய் அச்சார் போடலாமாம் அதையும் ட்ரைபண்ணனும் .எங்க ளுக்கும் பச்சை பிங்க் இரண்டும் கிடைக்கும் .
    ///காய்ந்து விட்டது நன்கு, ஆனா பொரிக்கும்போது கலர் இன்னும் டார்க் ஆகுது..//
    பின்னே ஊர்பட்ட காய்க்கூட்டத்தை சேர்த்தா டார்க்காதான் வரும் :) தனித்தனியா சேர்க்கணும். நான் கீரை தனியே பிறகு கேரட் தனியேன்னு அரைத்து சேர்த்தேன் 

    ReplyDelete
    Replies
    1. கரட் வகைதானே இதுவும், முன்பு கரட் வெங்காயம் மிளகாயில் அச்சாறு போட்டிருக்கிறோம், ஆனா சரியான ரெசிப்பி மறந்திட்டேன் அம்மாவைக் கேட்கோணும்.

      //பின்னே ஊர்பட்ட காய்க்கூட்டத்தை சேர்த்தா டார்க்காதான் வரும்//

      அல்லோ அது கரட் என்றாலும் பொரிச்சால் கறுப்பாகும் பாருங்கோ.... தனித்தனியே மினக்கெடாமல் இது கூட்டுப்போல செய்தேனே:))

      Delete
    2. //ஊறுகாய் அச்சார் போடலாமாம்// - ஊறுகாய் அச்சாரா? ஓ... இவங்க 'பூவும் புஷ்பமும்' கோஷ்டி போலிருக்கே.

      Delete
    3. ரெண்டு வார்த்தைக்கும் நடுவில் ஒரு / விட்டுப்போச்சு :)))))))))))))

      Delete
  12. காயவைத்த வடாம் பறக்காம இருக்க உங்களுக்கு அந்த அம்மாம்பெரிய கத்திதான் கிடைச்சுதா அவ்வ்வ்வ்வ் :)
    அந்த பிரான் க்ரேக்கரில் ஜவ்வரிசி சேர்ப்பங்கன்னு கேள்வி அதான் நம்ம ரெசிபியை சுட்டிருக்காக சைனா 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது தேங்காய் உடைப்பதற்காக வாங்கினோம், இல்லை எனில் உடைப்பது கஸ்டம்.
      அன்று காத்து அடிக்கத் தொடங்கியதால், அவசரத்துக்கு வீட்டுக்குள் ஓடிப்போய்க் கையில் கிடைச்சதை எடுத்து வந்து வச்சேன்:)..

      //அந்த பிரான் க்ரேக்கரில் ஜவ்வரிசி சேர்ப்பங்கன்னு கேள்வி //
      இருக்கலாம், பேஸ் இதுதான் அஞ்சு[அரிசி+சவ்வரிசி], இதனுள் நாம் எதை வேணுமெண்டாலும் சேர்க்கலாம் தானே..

      Delete
  13. எல்லா வற்றலும் சூப்பரா வந்திருக்கு .அம்மா என்ன சொன்னாங்க படங்கள் பார்த்து .அம்மாகிட்டே சொன்னிங்களா இதெல்லாம் என் லண்டன் பிரென்ட் சொல்லிக்கொடுத்ததின்னு :)

    ReplyDelete
    Replies
    1. அம்மா சொக்கிப் போய் இருக்கிறா:)) அம்மா மட்டுமோ?:)) எங்கட சொந்த பந்தம் எல்லாமும்தேன்:)) ஹா ஹா ஹா.. ஊரில இப்போ மாமியும் செய்யத் தொடங்கிட்டாவாம்:) அவவுக்கு மீதான் இப்போ றீச்சர்ர்ர்ர்:))..

      உங்களைச் சொல்லாமலோ.. உங்களைச் சொல்லித்தான் வடகம் பற்றிச் சொன்னேன் ஏனில் ஏன் கறுப்பாக வந்திருக்குது எனக் கேட்டவ, அது அஞ்சு கழுவோணும் எனச் சொல்லித்தரவில்லை கிழங்கை எண்டு சொல்லித் தப்பிட்டேனே:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. @ஏஞ்சலின் - அதுல சந்தேகமே வேண்டாம். அழகா ருசியா வந்ததுன்னா, தானே ஓசிச்சு செய்தது என்றும், கறுப்பா வந்ததற்குக் காரணம், லண்டன் ஃப்ரெண்ட் கன்ஃப்யூஸ் பண்ணிட்டாங்கன்னும் நிச்சயமா அதிரா சொல்லியிருப்பாங்க.

      Delete
    3. ஆமாம் நெல்லைத்தமிழன் முந்தி இப்படித்தான் குக்கரின் பார்ட் ஒன்றை போடாம ஹை ஹீட்டில் வச்சிட்டு என் மேல் ப்லேமிங் நடந்தது .நானா சொல்லுமுன் எல்லாம் தெரியும்னு குடுகுடுன்னு செய்றது அப்புறம் ஒரு அப்பாவியை மாட்டி விடறது 

      Delete
    4. ///ஊரில இப்போ மாமியும் செய்யத் தொடங்கிட்டாவாம்:) அவவுக்கு மீதான் இப்போ றீச்சர்ர்ர்ர்:))..//

      அச்சோ பாவம் அந்த மாமி :)

      Delete
    5. நோஓஓஓஓஓ.... இது அநியாயம் அக்கிரமம்.. நீதி இல்லை நியாயம் இல்லை:)) நெல்லைத்தமிழன் டக்குப் பக்கெனக் கட்சி மாறிட்டார்ர்:)).. ஆனா இப்போ அஞ்சு உச்சிக் கொம்பில ஏறி இருக்கும்போது, நாளைக்கு வந்து காலை வாரி விட்டிடுவார்ர் ஹா ஹா ஹா..

      எனக்கொரு விசயம் சிரிப்பாக இருக்குது... இந்த என் ராசிப்பலன் கேட்டேன்.. அதில் ஒருவர் கரெக்ட்டாகச் சொல்றார்... இந்த ராசிக்காரர் எப்பவும் நீதி ஞாயம் எனப் பேசிக்கொண்டிருப்பினம் அதால எல்லாச் சந்தர்ப்பங்களையும் தவற விட்டிடுவினம் என ஹா ஹா ஹா..

      அஞ்சூஊஊஊஊ மாமிக்கு மீ கரெக்ட்டாச் சொல்லிக் குடுத்து, சூப்பராக வெள்ளை வெளீரென உருளைக்கிழங்கு வத்தல் செய்து எடுத்திட்டாவாம்.. இனி கூழ் வடாம் செய்யப்போகிறேன் என்றா..:) பூஸோ கொக்கோ:))

      Delete
  14. ஸ்ஸ்ஸ்ஸ் எனக்கு பூரியே வேணாம் :) அதை செய்றதில்ல மகளுக்கு எண்ணெய் பொருள் இஷ்டமில்லை .ஹாஆஹாஆ கிழங்கு பூரணத்தை  மாவிட இட்டு சோமாஸ் ஷேப்பில் சுட்டு ஆலூ பூரியாம் :)))))

    ReplyDelete
    Replies
    1. எங்கள் வீட்டிலும் சிலருக்குப் பூரி, சிலருக்கு எண்ணெய் இல்லாத சப்பாத்தி.. அதனால எப்பவும் இரண்டும் செய்வேன் நான்.

      இன்றுகூட கட்லட் அல்லது பற்றிஸ் செய்ய கிழங்கு அவித்தேன், பெரியவர் சொன்னார் தனக்கு பற்றிஸ் ஐ, பேக் பண்ணித் தரச்சொல்லி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  15. அந்த பாயாச வடாமை நீங்க பாயசத்தில் இல்லைன்னா ஜெல்லியை செய்யும்போது போடலாம் :)கர்ர்ர் கிழங்கை 4/5 முறை கழுவித்தான் வெட்டி கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கணும் அதுதான் வற்றல் கறுத்து .அதோடா இன்னும் மெலிசா நறுக்கணும் .ஸ்ஸ் நான்லாம் உடனே அரைத்து  தான் செய்வேன் இதுவறைக்கும் பேஸ்ட் கூடட யூஸ் செஞ்சதில்லை தோசை நல்லாருக்கு ஆனா மீக்கு வேணாம் தேங்க்ஸ் 

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு, பாயாச வடாமை எப்படி வேணுமெண்டாலும் யூஸ் பண்ணலாம், ஸ்மூத்தியில், ஃபலூடாவில் இப்படி எதனோடும் ஸ்டைலாச் சேர்க்கலாம் ஹா ஹா ஹா.

      //கர்ர்ர் கிழங்கை 4/5 முறை கழுவித்தான் வெட்டி கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கணும்//

      இப்போ சொல்லுங்கோ.. அன்று சொன்னீங்களா?? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), நான் ஏன் கறுத்தது என, யோசித்தபோது, அம்மாதான் சொன்னா, வெட்டியபின்னரும் கழுவியிருக்கோணும் இது கயர் ஊறிவிட்டது என, பின்புதான் யூ ரியூப்பில் தேடினால்.. நன்கு 4,5 தண்ணியில் கழுவச்சொல்லி இருக்கினம் கர்ர்:)).. அது பெரிசாகப் பிடிக்கவில்லை இங்கு யாருக்கும், அதனால இனிச் செய்ய மாட்டேன்.. அத்தோடு உருளைக்கிழங்கு இங்கு வருடம் முழுவதும் பயங்கர மலிவுதானே பிறகேன் இப்படிக் கஸ்டப்படோணும்...

      Delete
  16. ஆற்றங்கரை காட்சி பெர்ப்பில் மலர்கள் எல்லாம் அழகு ..அந்த பப்பி யின் ஓனர் வாக்கிங் போயிருந்திருப்பார் அந்த பக்கம் பப்பியுடன் ..காசா பணமா போய் அந்த பெஞ்சை நலம் விசாரிச்சிருக்கலாமே :))

    ReplyDelete
    Replies
    1. நான் நினைக்கிறேன், ஓனர் போய்ச் சில நாளில் பப்பியும் போய் விட்டதோ என...:(.

      //காசா பணமா போய் அந்த பெஞ்சை நலம் விசாரிச்சிருக்கலாமே :))//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆத்தங்கரை முழுக்க ஒரு 100- பெஞ்சுகளாஅவது இருக்கும் அஞ்சு.. அதில் குறைஞ்சது 60 இலாவது இப்படிப் பூக்கள் வைத்திருக்கினம்.. சிலது பிளாஸ்ரிக்.... நான் நினைக்கிறேன் கொரோனா இல்லை எனில், புல்லு வெட்டும் போது கவுன்சில் ஆட்கள் இவற்றைக் கிளீன் பண்ணுவினம், இப்போ புல்லும் வெட்டாமல் இருக்கு.

      Delete
  17. கிளிமூக்கு நம் நாட்டு வெரைட்டி இது அநேகமா ஏதாச்சும் deformed மாங்காயா இருந்திருக்கும் இந்நாட்டு வெரைட்டில இனிப்புதான் வரும் அதென்னா அவ்ளோ கூட்டமா காரம் .வயிறு நெஞ்செல்லாம் எரியும் 

    ReplyDelete
    Replies
    1. இது இடைக்கிடை ரெஸ்கோ வுக்கு வருது அஞ்சு.. சிலசமயம் தான் இப்படி வெளியே பச்சையாக காய்போல இருக்கும்...

      //அதென்னா அவ்ளோ கூட்டமா காரம் .வயிறு நெஞ்செல்லாம் எரியும் //
      ஹா ஹா ஹா அது சில்லிப் பவுடர் அல்ல, கறிப்பவுடர்.. அதனுள் உப்பும் போட்டு புளியம்பழமும் சேர்த்திருக்கிறேனாக்கும் ஹா ஹா ஹா

      Delete
  18. ஹாஹாஆ இப்போல்லாம் யாரு கையில் சேறு அழுக்கெல்லாம் தொடறா :) shovel போதும் தூக்கி அடிக்க :)அந்த தமிழ் பார்த்து முருகன் வந்து அடிக்கப்போறார் உங்களை 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா முருகனுக்கு அதை ஆரும் கவனிக்கவிலையே எனும் கவலை.. இப்போ அதிரா கண்டுபிடிச்சு விட்டதால அவர் ஆப்பீஈஈஈஈஈ.. அந்த ஆப்பியில் இருக்கும்போதே.. மீ ஓடிப்போய்ய்.. என் நேர்த்தியில் சிலதை வாபஸ் வாங்கச் சொல்லிட்டேன் ஹா ஹா ஹா பூஸோ கொக்கோ..

      மிக்க நன்றிகள் அஞ்சு.. அனைத்துக்கும்[இது சொல்லாட்டில் நெ தமிழன் வந்து கேய்ப்பார்ர்:)]

      Delete
  19. //கோமதி அக்காவின் பதிலுக்குக் கீழயே அனைத்துக் கொமெண்ட்டையும் கடுகதி வேகத்தில போட்டிட்டு ஓடிட்டீங்க ஹா ஹா ஹா..//

    அப்படியா? அதைக்கூட கவனிக்கவில்லை நான். மொபைல் கஷ்டங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த திங்களில் இருந்து காலை முதல் 5 மணிவரை அங்கு அனைத்துக் கடைகளும் திறக்குமாமே... அதனால முதலில் உங்கள் கொம்பியூட்டரைத்தான் நினைத்தேன், திருத்தக் கொடுத்திருப்பீங்கள் என... இன்னும் திருத்த முடியவில்லையோ.. கொம்பியூட்டர் இல்லை எனில் கை உடைஞ்சதுபோலத்தான் இருக்கும்.

      பழைய நினைவலை ஒன்று:).. முன்பு 2008 இல் பெரிய அட்டகாசமாக மின்னி முழங்கிக்கொண்டிருந்தேன் வலையுலகில்.. அப்போ திடீரெனக் கொம்பியூட்டர் பழுதாகிப்போச்சு... ஹஸ் போய்க் கடையில விசாரிச்சால் அது கிரிஸ்மஸ் காலம் என்பதால நியூ இயர் முடியும்வரை கடை திறக்காது என்றிட்டினம்.. என் முகத்தின் கவலை பார்த்துப் பொறுக்காமல், எனக்குச் சொல்லாமல் புதுக் கொம்பியூட்டர் வாங்கிக்கொண்டு, ஈவினிங் வேர்க் முடிஞ்சு வந்தார், ஓடிப்போய்க் கதவைத்திறந்தேன் கையில கொம்பியூட்டருடன் நிற்கிறார் ஹா ஹா ஹா.. மறக்க முடியாத இன்ப அதிர்ச்சிகள் பல:) அதில இதுவும் ஒன்று:).

      Delete
  20. வடாம்ஸ் மிகவும் பிடித்தது... அழகாக செய்துள்ளீர்கள்...

    கண்ணில் கண்ட காட்சிகள் அனைத்தும் பரவசமூட்டின...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ.. ஹா ஹா ஹா இது என் கன்னி முயற்சி.. மிக்க நன்றி.

      Delete
  21. // மணக்காவலை நமக்கேதுக்கு //

    முத்தமிழ் முருகா... வாசித்த அனைவரையும் மன்னித்து விடு...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.. இன்னொன்று அதுவும் நியூஸில் தலைப்பாக வந்திருந்துது.. தோழனின் உடலைத் “தோலில்” சுமந்த சந்தானம் என ஹையோ ஹையோ... தமிழ் நாட்டில் தமிழ் எங்கே போய்க் கொண்டிருக்குது என நினைக்கக் கவலையாக இருக்குது.

      மிக்க நன்றி டிடி.

      Delete
    2. /// மணக்காவலை நமக்கேதுக்கு /

      இது அதிரா எழுதி போஸ் பண்ணியதென்று நினைத்து வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தேன்... அதுவும் சாமி படத்தின் கீழ் இப்படி இருந்தது மனதை சற்று உறுத்தியது

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
      ஹலோஓஓஒ அதிரா பிழை விடுவாதான். ஆனா இப்படியெல்லாம் பிழை விடமாட்டா. அவசரப்பட்டு இப்படி திட்டக்கூடாது. .

      Delete
    4. ///ஹலோஓஓஒ அதிரா பிழை விடுவாதான். ஆனா இப்படியெல்லாம் பிழை விடமாட்டா. அவசரப்பட்டு இப்படி திட்டக்கூடாது. .////

      ஆஆஆஆஆஆஆஆஅ பாருங்கோ மக்களே மீக்கும் சப்போர்ட்டுக்கு ஆட்கள் இருக்கினம்:)).. ஆங்ங்ங் அம்முலு காதைக் கிட்டக் கொண்டு வாங்கோ .. நீங்க ஜேர்மன் தேவதைதேன்.. ஹா ஹா ஹா...

      ட்றுத் ஓடுறார் பிடியுங்கோ பிடியுங்கோ.. அதிரா இவ்ளோ தூரம் பிழை விடுவேன் என நினைச்சிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இந்த ழ/ள வை தமிழில இருந்து தூக்கிட்டால் நான் பிழை விடமாட்டனாக்கும்:)).. நீங்கள் மோடி அங்கிளைத் திட்டாமல், இந்த எழுத்துக்களை நீக்கச் சொல்லி ஒரு மனுக் கொடுத்தால் என்ன ட்றுத்?:)).. ஹா ஹா ஹா சரிசரி முறைக்காதீங்கோ...

      Delete
  22. பிங்க் நூக்கோல் அல்ல. அது டர்னிப் (Turnip). ஆலு பூரி அல்ல. ஆலு சோமாஸ். பூரி சதுரமாக போடத்தெரியும்? 2.5 கிலோ உருளைக்கிழங்கு வற்றல். எவ்வளவு காஸ் உண்டாக்கும். அரிசி முறுக்கு வடாம் செய்யவில்லையா? வெள்ளை முறுக்கு என்று தெருவில் விற்பார்கள். காலணா கொடுத்தால் கையில் ஒன்று மாட்டி விடுவார்கள். 
    ஏரி போட்டோ அருமை. Loch ness monster இருக்கும் ஏரியா அது? 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ... ஹா ஹா ஹா ரேர்னிபைத்தானே ஒரு வகையில் நோக்கிள் என்கிறோம்... அனைத்தும் ஒருவகைக் குடும்பத்தைச் சேர்ந்தவைதானே.. கரட் போல இருக்கும் ரேனிப் எனக்குப் பிடிப்பதில்லை, ஒரு வித மணமாக இருக்கும், ஆனா இது நோக்கிள் போலவே வாசம் வருது, அதனால பிடிக்குது, ஆங்கிலத்தில் ரேனிப் எனத்தான் விற்கிறார்கள்:).

      //பூரி சதுரமாக போடத்தெரியும்?//
      ஹா ஹா ஹா

      //2.5 கிலோ உருளைக்கிழங்கு வற்றல். எவ்வளவு காஸ் உண்டாக்கும். //
      அது வற்றல் ஆனதும் அளவில் குறைஞ்சுபோச்சு.. அத்தோடு அடிக்கடி பொரிக்க மாட்டேனே:) ..

      //அரிசி முறுக்கு வடாம் செய்யவில்லையா? வெள்ளை முறுக்கு என்று தெருவில் விற்பார்கள். //
      ரெசிப்பி பார்த்தேன், ஆனா ஏனோ அது முறுக்குப்போல இருந்தமையால், இதைவிட முறுக்கே செய்யலாமே எதுக்கு கஸ்டப்படோணும் என நினைச்சேன்.. பார்ப்போம் வெயில் காலம் இன்னும் இருக்குதுதானே.. முயற்சிக்கிறேன்...

      நன்றி நன்றி.. ஆஆஆஆஆ அது லொக்னெஸ் மொன்ஸ்ரெர்.. ஸ்கொட்லாந்தின் மேல் பகுதில இருக்குது.. அங்கு மக்கள் குறைவு.. நாங்கள் காரில் ட்றைவ் போய்ப் பார்த்து வந்தோம்... மொன்ஸ்டரைக் காணவில்லை ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் ஜேகே ஐயா.

      Delete
  23. வடகத்தின் மேல் கசாப்பு கடை கத்தியை வைத்தால், பயத்தில் காய்ந்துவிடும் என்று நினைப்பா?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      //கசாப்பு கடை கத்தியை வைத்தால், பயத்தில் காய்ந்துவிடும் என்று நினைப்பா?//
      ஹா ஹா ஹா இப்படியும் ஒரு பக்கம் இருக்கோ:)) அதனாலதான் போலும் அந்தத் தடவை டக்குப்பக்கெனக் காய்ந்து விட்டதே ஹா ஹா ஹா.. இனிமேல் இந்த தக்கினிக்கையே பாவிக்கிறேன்:))

      Delete
  24. அரிசி வடாமும் அழகு. அதைவிட ஜவ்வரிசி வடாம் அழகா இருக்கு. பொரிச்சதும் நல்லா இருக்கு.

    எனக்கு மட்டும் உண்மையைச் சொல்லணும். ஜவ்வரிசி வடாம் லண்டன்லேர்ந்து வந்ததாமே

    ReplyDelete
    Replies
    1. ஆனா சுவையில அரிசி வடாம் தான் பெஸ்ட்டூஊஊஊ:)).. சவ்வரிசி வடாம் பல்லில ஒட்டுது கர்ர்ர்:))..

      //எனக்கு மட்டும் உண்மையைச் சொல்லணும். ஜவ்வரிசி வடாம் லண்டன்லேர்ந்து வந்ததாமே//
      ஆஆஆஆஆஆ இப்பூடி ஒரு புரளியைக் கிளப்பி விட்டுவிட்டாவோ அஞ்சு?:)) அநேகமாக வட்சப்பிலதான் உங்களுக்கு மெசேஜ் போட்டிருப்பா:)).. நில்லுங்கோ இப்பவே ஓடிப்போய்த் தேம்ஸ்ல தள்ளிப்போட்டு மீயும் அதில இறங்கித் தோய்ஞ்சிட்டு வாறேன்ன்ன் ஹா ஹா ஹா

      Delete
    2. ஹாஹாஹா நெல்லைத்தமிழன் உங்களை நல்லா அறிஞ்சு வைச்சிருக்கார் பிஞ்சு 

      Delete
    3. AngelTuesday, May 12, 2020 5:35:00 pm
      ஹாஹாஹா நெல்லைத்தமிழன் உங்களை நல்லா அறிஞ்சு வைச்சிருக்கார் பிஞ்சு


      [im] http://s3.amazonaws.com/assets.prod.vetstreet.com/5c/1d/29740f154636858af697dbc3a217/cat-hiding-thinkstock-147061125-225sm121813.jpg[/im]

      Delete
  25. மாங்காய் பற்றி போட்ட கருத்தை காணோமே?

    ReplyDelete
    Replies
    1. இல்லையே கோமதி அக்கா, வேறு எதுவும் வரவில்லை.. பாதியில ஸ்கொட்லாந்து வரும்போது அஞ்சு வீட்டுக் கூரையில தவறி விழுந்திருக்குமோ ஹா ஹா ஹா.. கொக்கத்தடியால அடிச்சு விழுத்தியிருப்பா நான் நம்பமாட்டேன்:))

      Delete
    2. மாங்காய் பள்ளி பருவத்தில் 10 காசுக்கு வாங்கி கண் சிமிட்டாமல் சாப்பிட்ட கதை இப்போது அது முடியாது என்பதால் மாங்காய் சாதம், மாங்காயை சாம்பாரில் போடுவது, மாங்காய் ஊறூகாய் போடுவது என்று போகிறது. பெரிதாக போட்டேன் இந்த கிளி மூக்கு மாங்காய் பற்றி. அந்த கருத்து ஏன் வரவில்லை என்று தெரியவில்லையே!

      Delete
  26. பொரிக்கின்ற பூரி அழகா இருக்கு. தட்டுல போட்ட உடனே பட்டூரா மாதிரி இருக்கே (சென்னா பட்டூரா கூகிளிட்டுப் பாருங்க).

    உண்மையிலேயே ஆற்றங்கரை படங்கள் ரொம்ப அழகா இருக்கு. வற்றல், வடகம் படங்களும் நல்லா இருக்கு. பொரித்தால் யம்மியா இருக்கும்.

    கண்ணாடி மாதிரி நீங்க கையில் வைத்திருக்கும் வடாம், நன்றாக பொரியுமோ?

    ReplyDelete
    Replies
    1. //தட்டுல போட்ட உடனே பட்டூரா மாதிரி இருக்கே//
      அது எண்ணெயில் பொரிவது பிளேன் பூரி நெல்லைத்தமிழன், கீழே இருப்பது உருளைக்கிழங்கு வைத்துப் பொரிச்சது, இரண்டும் ஒன்றல்ல கொயம்பிட்டீங்கபோலும் ஹா ஹா ஹா.. ஓ கூகிளில் பார்க்கிறேன்.

      //பொரித்தால் யம்மியா இருக்கும்.//
      நன்றி நன்றி உண்மையில் மனதுக்கும் பெரிய மகிழ்ச்சி...

      //கண்ணாடி மாதிரி நீங்க கையில் வைத்திருக்கும் வடாம், நன்றாக பொரியுமோ?//
      ஹா ஹா ஹா அது எண்ணெயில் போட்டதும் அது சுருண்டுபோய் ஒட்டத் தொடங்கிட்டுது.. சீனிப்பாகைப்போல :)).. ஆனா நல்ல சூப்பராக கண்ணாடியாக வந்துது வட்டம் வட்டமாக...

      Delete
  27. வைட் மேன், ப்ளாக் மேன் - நான் ஒரு தடவை ஹீத்ரூ விமான நிலையத்தில் பார்த்த இரண்டு 'பையன்கள் - 19 வயசு இருக்கலாம்' காதலையே டைஜஸ்ட் பண்ண முடியலை.

    காலம் கலிகாலம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது?

    ReplyDelete
    Replies
    1. ஓம் இங்கு இப்படி பலர் இருக்கினம்... எங்கட பக்கத்து வீட்டுக் ஸ்கொட்டிஸ் காரர் டின்னருக்கு இன்வைட் பண்ணியிருந்தார்கள், அப்போ நம்மோடு இன்னொரு தம்பதியையும் அழைச்சிருக்கிறோம் அவர்கள்.. பெண்கள் என ஏற்கனவே நம்மிடம் சொல்லி அலேர்ட் பண்ணியிருந்தார்..

      இரு தம்பதிப் பெண்களும் வந்திருந்தனர்.. அதில் ஹஸ்பண்ட்டாக இருப்பவ கொஞ்சம் கம்பீரமாகவும் மனைவியாக இருப்பவ அடக்கொடுக்கமாக அதிராவைப்போலவும் இருந்தா ஆனா அந்த மனைவி ஒரு பொலீஸ்.. இங்கு அனைத்தும் பிள்ளைகளின் முடிவென்பதால, பெற்றோர் அனைத்தையும் ஏற்று ஆதரவு கொடுக்கின்றனர்.. இதில் குறை என எதைச் சொல்வது.. அனைத்தும் கடவுள் ஏற்படுத்திய ஒன்றுதானே, யாரும் வெண்டுமென அப்படி நடப்பதில்லை .. தனக்குள் ஏற்படுத்திய மாற்றம் தானே.. புரோக் பக் மவுண்டின் படம் பார்த்தனீங்களோ.. தியேட்டரில் பார்த்தோம்.. அழகிய சீனறி.. ஆனா என்ன ஒரு சோகப் படம்... brokeback mountain

      Delete
    2. சொல்ல மறந்திட்டேன், இப்படம் பிள்ளைகளோடு பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது என நினைக்கிறேன்.

      Delete
    3. //மனைவியாக இருப்பவ அடக்கொடுக்கமாக அதிராவைப்போலவும் இருந்தா//

      எப்ப சான்ஸ் கிடைக்கும் அந்த சந்தர்ப்பத்தில் தன்னையே புகழ்ந்துக்குதே பிஞ்சு நோ நோ :)இது டப்பூ .வி ஆர் வாச்சிங் 

      Delete
    4. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஊஉ:) நம்மள நாமளேதேன் புகழோணுமாக்கும்.. பின்ன நெல்லைத்தமிழனோ வந்து புகழுவார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      இப்படிக்கு அடக்கொடுக்கமான அதிரா:))

      Delete
    5. இவங்கள்லாம் தத்தெடுத்துக்குவாங்களோ? இல்லைனா கொஞ்சம் வயதாகும்போது வாழ்க்கை வெறிச் என்று இருக்காது? இங்கல்லாம், ஒருத்தனுக்கு திருமணம் ஆயிருந்தாத்தான் விழாக்கள் FUNCTION, வீட்டுக்கு இன்வைட் பண்ணுவது என்றெல்லாம் செய்வாங்க.

      இந்தப் படம் இன்று பார்க்கிறேன். ஹால்ல எந்த ஆங்கிலப்படமும் (அனேகமா) பார்க்க முடிவதில்லை. சீன் இல்லாமல் ஆங்கிலப் படமே கிடையாது போலிருக்கு. ஹா ஹா.

      Delete
    6. //மனைவியா இருப்பவ அடக்க ஒடுக்கமா இருக்கணும் // - இதுவே நம் இந்தியச் சிந்தனை போலத் தெரியுது. காலம் மாறிவிட்டதே.

      Delete
    7. அது பெண் ஆண் எனும் வித்தியாசம் எங்கும் இருக்கிறது நெல்லைத்தமிழன், அதாவது அடிமைத்தனம் என இல்லை.. பெண் எனில் ஒரு மென்மை, கூச்சம், அடக்கம் , அமைதி... மொத்தத்தில அதிராவைப்போல ஹா ஹா ஹா.. ஹையோ அஞ்சுவால இப்போ ஓடிவந்து அடிக்க முடியாதே:)).. மீ தும்முகிறேனாக்கும்.. கிட்ட வரக்கூடாது ஆரும் ஹா ஹா ஹா..

      Delete
  28. //மருதமலை முருகன்// - நிறைய வாட்சப் செய்திகளில் தமிழ்ப் பிழைகள் பார்க்க, எனக்கு அந்த வாட்சப் மெசேஜ் உருவாக்கினவங்க படிக்காத பாமரர்கள் என்று நினைத்துக்கொள்வேன். சொந்த மொழியையே ஒழுங்காக எழுதத் தெரியாதவனுக்கெல்லாம் வாட்சப் எதற்கு, செய்தித் தயாரிப்பு எதற்கு? இதுல மத்தவங்களுக்கு அந்த வாட்சப் செய்திகள்ல அட்வைஸ் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், இப்படித்தயாரிக்கும்போது, ஆரிடமாவது காட்டி எடிட் பண்ணிவிட்டு அனுப்பலாமே...

      Delete
  29. தோசையை விட, அதை கொலாஜ் செய்து போட்டிருக்கும் படம் என்னைக் கவர்ந்தது.

    இப்போதான் பலாப்பழ பணியாரம் செய்து சாப்பிட்டு இடுகையைப் பார்க்க வருகிறேன். அதனால் பசியில்லை. ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா என்னிடம் ஃபோன் கொலாஜ் உம் இருக்கு, இது அஞ்சு எனக்கு அறிமுகப்படுத்திய கொலாஜ் லிங் இல் செய்தேன்.

      //இப்போதான் பலாப்பழ பணியாரம் செய்து சாப்பிட்டு இடுகையைப் பார்க்க வருகிறேன்//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இன்னமும் இனிப்பைக் கைவிடவிலைப்போலும்..

      Delete
  30. அந்த ஆப்பிரிக்கா நிற வற்றல் படம் போடலையே... பொரிச்ச பிறகு பார்க்கச் சகிக்கலையா?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது நல்ல கறுப்பாக வந்துதே...

      Delete
  31. ஆற்றங்கரையோர பெஞ்சுகளில் புதிதாக இருக்கும் மலர்கள், கொரோனா ஆட்களுக்கோ?

    கொரோனா வந்தாலும் வந்தது... யாரும் பக்கத்தில் வந்தாலோ அல்லது தவறுதலா பட்டுட்டாலோ உடனே விலகத் தோணுது, கொஞ்சம் கடு கடுன்னு முகத்தை வைத்துக்கொள்ளத் தோணுது.

    ReplyDelete
    Replies
    1. // கொரோனா ஆட்களுக்கோ?//

      இல்லை இங்கு அப்படி ஆருக்கும் கொரோனாப் பாதிப்பு இல்லை, இருவர் மட்டுமே கொரோனாவால இறந்துவிட்டதாக செய்தி பரவியது...

      Delete
  32. முதல் படத்தில் காலிஃப்ளவர் மிக அழகாக இருக்கு. அங்கெல்லாம் புத்தம் புதிதாக உருளை, காலிஃப்ளவர், கேபேஜ், கேரட், பீட்ரூட்/நூல்கோல் போன்றவை கிடைக்கும் இல்லையா? குளிர் பிரதேசம் வேறு. காய்லாம் புதுசா இருக்கும். உருளைக்கிழங்கையும் ரொம்ப சுத்தமா விற்பாங்க.

    என்ன ஒண்ணு... பூசணி (வெள்ளை), அவரை, புடலங்காய்லாம் கிடைக்காது.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ வெள்ளைப் பூசணி புடல்ங்காய எல்லாம் இங்கே கிடைக்கிரது நெல்லைத்தமிழன்

      Delete
    2. என் பெண்ணிற்கு மிகவும் பிடித்தது புடலங்காய் கூட்டுதான்

      Delete
    3. //உருளைக்கிழங்கையும் ரொம்ப சுத்தமா விற்பாங்க.//

      ஹா ஹா ஹா இக்கரைக்கு அக்கரைப் பச்சை நெ தமிழன்.. ஏன் தெரியுமோ.. கோடை காலங்களில் அப்படியே உடன் பிடுங்கிய கிழங்கை மண்ணோடு ஈரமாக கொண்டு வந்து விற்பார்கள்.. அதைத்தான் அந்நேரம் நான் வாங்குவேன்.. மற்றும்படி பக்கட்டில் எல்லாம் அழகாக இருக்கும்.

      இங்குள்ளவர்கள், இங்கு வாங்கும் அரிசி, பருப்பு பழங்கள் எதையும் கழுவ மாட்டினம், அப்படியே கொட்டிச் சமைப்பினம்[அவ்ளோ சுத்தமாகத்தான் இருக்கும்] சாப்பிடுவினம், அதைப் பார்த்து நம்மவர்களும் சிலர் அப்படியே... ஆனா இப்போ கொரோனாப் பயத்தால தேய்ச்சுத் தேய்ச்சுக் கழுவீனம் ஹா ஹா ஹா..

      Delete
    4. ட்றுத் சொன்னதைப்போல நெல்லைத்தமிழன், நம் ஏசியன் கடைகளில் நம் நாட்டு மரக்கறிகள் அனித்துமே கிடைக்கும்.. அதுவும் இன்னொரு புதினம் என்னவெனில், நம் நாடுகளில் அந்த அந்த சீசனில்தான் அவை அவை கிடைக்கும் ஆனா இங்கு பொதுவா எல்லாச் சீசனிலும் எல்லாம் கிடைக்குது... வெவ்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வார்கள் போலும்... நம் தமிழ்க் கடையிலும் எப்பவும் பென்னாம் பெரிய பெரிய புடலங்காய் கிடைக்கும்.

      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.. ட்றுத்.

      Delete
  33. ஏஞ்சல் பதிவில் போட்டிக்கு அதிரா உடனே ஒரு சமையல் பற்றி பதிவு போடுவாங்க என்று சொல்லிட்டு வந்து இங்கே பார்த்தால் அதிரடி அதிரா நிறைய விஷயம் பொட்டு இருக்காங்க.. ஹீஹீ அதிரடி அதிரா நல்லா இருக்கா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. வரவர நீங்க ரொம்ம்ம்ப நல்லவராக இருப்பது எனக்கு ஒரே டவுட்டு டவுட்டாவே வருதே:))... எல்லோர் வீட்டுக்கும் போய், நல்லா இருக்குது எனச் சொல்லுறீங்க:)) முக்கியமாக அஞ்சு வீட்டில:)) ஹா ஹா ஹா..

      Delete
  34. பிள்ளைகள் துள்ளி விளையாடுற trampolin ஐ நீங்க வடகம் காயவைக்கிற இடமா மாத்திட்டீங்க. கர்ர்ர்ர்ர்.
    வடகங்கள் எல்லாமே பார்க்க நல்லாயிருக்கு. prawn crackers சூப்பரா இருக்கு. நானும் இதை பொரித்து அப்படியே சாப்பிடுவேன். அடுத்து வாற நல்ல வெயிலுக்கு நானும் போடறேன் வடகத்தை. மரக்கறி வடகத்தை பார்த்தால் ஒனியன் வடகம் மாதிரி இருக்கு.
    இங்கு உ.கிழங்கு பெரிதா எடுபடாது. சிப்ஸ் சாப்பிடுவதே இல்லை.
    பூரியா அது. அவ்வ்வ்வ் நான் பன் Bun என நினைத்தேன். எங்களுக்கும் பொயிங்கி வருமாக்கும்.க்கும்.
    வித்தியாசமா நினைப்பதிலிருந்து, வித்தியாசமா செய்யும் வித்தியாசமான ஆள்(பூரி) பாயச வடகம் என்னமோ செய்றீங்க. பார்க்க கண்ணாடி மாதிரி இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. இப்போ ரம்பொலின் ல ஆரும் விளையாடுவதில்லை அம்முலு.. டெய்சி தவிர:).. வளர்ந்திட்டினமெல்லோ.. அதில் சும்மா வெயிலுக்குப் படுத்திருப்பது அல்லது ஏறி இருப்பது இப்படி மட்டுமே.. புல்லுக்கு மேலே இருந்ததை, நான் தான் கீழே முற்றத்தில் இறக்கி வச்சேன்.. வடகத்துக்கு நன்கு உதவுது இப்போ:)..

      //மரக்கறி வடகத்தை பார்த்தால் ஒனியன் வடகம் மாதிரி இருக்கு.//

      இரண்டுமே நான் செய்திட்டேன், பொரிச்சால் மரக்கறி சுவை அதிகம், அனியனும் நன்றாகவே இருக்குது, ஆனா ஒன்று, இரண்டுமே கொஞ்சம் ஹார்ட் ஆக இருக்குது.. அரிசி வடாமுடன் ஒப்பிடும்போது...

      //வித்தியாசமா நினைப்பதிலிருந்து, வித்தியாசமா செய்யும் வித்தியாசமான ஆள்//

      ஹா ஹா ஹா மியாவும் நன்றி:))

      Delete
  35. இஞ்சி,உள்ளி அரைச்சு வைப்பது நல்ல ஐடியாதான் நான் உடனுக்குடனே அரைப்பதுதான். இங்கு இஞ்சிதான் அதிகம் செலவாகும்.

    //பசுமையாக அரைக்காமல் இருவல் நருவலாக அரைப்பது நல்லது// ஹலோ பிஞ்சு அது அருவல்,நொருவலாக அரைப்பது.

    ஆஹா என்னோட பேவரிட் தோசை பார்க்கவே நல்லாஇருக்கே. தோசை எல்லா வெரைட்டியாகவும் செய்தாச்சு. ஆரம்பத்தில் அ.கோதுமை மா சேர்த்தேன். பின் இங்கு ஒருவர் சொன்னதால் ப.கோதுமை மாவும் போடுவதுண்டு நல்ல சொப்ட் ஆ வரும்.
    இனி எல்லாமே பார்க்க பச்சை பசேல் என அழகா இருக்கு. உங்கட ஆற்றங்கரை எத்தனை அழகு. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
    முத்தமிழ் படும்பாட்டை கண்டு அந்த முருகன் இரத்த கண்ணீர்தான் வடிப்பார். இப்படி எத்தனை பார்த்தாச்சு. காலை வணக்கம் கூட பிழையாக எழுதுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்படிச் செய்து வைப்பதால டெய்லி மோனிங்ல ஜிஞ்சர் ரீ ஊத்த முடிகிறது அம்முலு. இல்லை எனில் அலுப்பிலேயே விட்டு விடுவேன்.

      //ஹலோ பிஞ்சு அது அருவல்,நொருவலாக அரைப்பது.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:)) இல்ல எங்கள் வீட்டுப் பாசை இருவல் நருவல் ஹா ஹா ஹா..

      மீயும் தான், எல்லா விதமான பொருட்கள் போட்டும் தோசை சுட்டாச்சு, ஆனா கம்புத்தோசை, கோதுமை தோசை[என் முறையில்], ரவ்வைத்தோசை இவைதான் எனக்குப் பிடிச்சவை...

      ரசித்தமைக்கு நன்றி அம்முலு.

      Delete
  36. பாடல் கேட்பதுதான். அந்த சொய்ங் சொய்ங் நல்லாயிருக்கும். படமும் நல்லா இருந்தது. பார்க்கலாம். ஊசி இணைப்பு அருமை.
    பூசார் படம் அழகு. பொன்னியின் செல்வன் எல்லா பாகமும் சேர்ந்தது வாங்கி கொண்டு வந்தேன்.இன்னமும் படிக்கல.

    ReplyDelete
    Replies
    1. //பொன்னியின் செல்வன் எல்லா பாகமும் சேர்ந்தது வாங்கி கொண்டு வந்தேன்.இன்னமும் படிக்கல.//

      வெயிட் வெயிட்.. தலை இருக்க வால் ஆடக்கூடாதாக்கும்:)) நான் தான் முதலில் வாங்கினேன்:)), ச்சோ... நான் படிச்சு முடிச்சபின் ஜொள்ளுவேன் அப்போ நீங்க ஸ்ராட் பண்ணினால் போதும் இப்போ ஒண்ணும் அவசரப்பட்டுப் படிக்கத் தேவையில்லை ஓக்கே??
      ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அம்முலு... விரைவில் சந்திப்போம்.. என் பற்றீஸ் உடன்:))

      Delete
  37. வணக்கம் அதிரா சகோதரி

    நலமா? உங்களை எங்கும் காணவேயில்லையென நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம். எ. பியில் கூட "இரட்டையர்களே சீக்கிரம் வாருங்கள்" என சகோ ஸ்ரீராம் விண்ணப்பம் வைத்திருந்தார். கடைசியில் நீங்கள் வ(தா)டாகத்திலிருந்து எழுந்த தாமரை மாதிரி ஒரு மட்டும் தலை காட்டியிருக்கிறார்கள். ஹா. ஹா.

    முதலில் என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் வரவை நேற்றே நான் பார்த்து சந்தோஷமடைந்தாலும் என்னால் வர இயலவில்லை. அதுதான் இன்று விடிந்ததும் உடனே இங்கு விசிட் அடித்து விட்டேன்.

    இந்தப் பதிவு அமர்க்களமாக இருக்கிறது. "பதினாறு வகை வடாம் உருவான வரலாறு" என்றதும், முகப்பு பாடலும், "ராகங்கள் பதினாறும் உருவான வரலாறு" என்றிருக்கும் என நினைத்து பாடலை ரசிக்கப் போனவளை "கும்கி யானை" கொண்டு விரட்டி விட்டீர்கள். ஆனாலும் பாடல் நன்றாக இருந்ததினால் பயமில்லாமல் முழுமையாக கேட்டேன். நன்றி.

    என் கைபேசிக்கு இப்போது உணவு தேவைப்படுவதால், அதற்கு பலமூட்டி விட்டு பிறகு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ.. மீ தான் ரொம்ப லேட்டு.. மன்னிச்சுக்கோங்கோ..

      சமரில நான் இப்பூடி அடிக்கடி காணாமல் போகக்கூடும் என வானிலை அறிக்கைகள் சொல்கின்றன:)) அதனால காணவில்லை எனில் யோசிச்சுக் கவலைப்படாதீங்கோ..:) வந்திடுவேன் மறுபடியும்:)).

      //முகப்பு பாடலும், "ராகங்கள் பதினாறும் உருவான வரலாறு" என்றிருக்கும் என நினைத்து பாடலை ரசிக்கப் போனவளை "கும்கி யானை" கொண்டு விரட்டி விட்டீர்கள்.//

      ஹா ஹா ஹா அப்பாடலைத்தானே எல்லோரும் நினைப்பார்கள் எனத் தெரிஞ்சே அதைப் போடாமல் குண்டுக் கும்கியை உள்ளே இறக்கினேன்:)) என் 16 வகை வடகத்துக்கும் பாதுகாப்பு வேணுமெல்லோ:))

      மிக்க நன்றிகள் கமலாக்கா.

      Delete
  38. செய்த வடகம் எல்லாம் பார்ஷலில் அனுப்புங்கோ கூடவே அந்த தோசை மட்டும் அதிகம் வேணும்![[[

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. மறக்காமல் நீங்கள் வருகை தருவது மனதுக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றிகளும் உங்களுக்கு.

      ஹா ஹா ஹா இப்படிக் கோதுமைத்தோசை பிடிக்காத இலங்கையர் உண்டோ?.. இன்றும் இந்தத் தோசை சுடப்போகிறேன்ன்:)).. பொயிங்க வச்சிட்டேன்ன்:))

      Delete
  39. ஏன் சொய் சொய் பாடல் பிடிச்சதோ உங்களுக்கு![[[

    ReplyDelete
    Replies
    1. அந்த மியூசிக் ரொம்ப பிடிச்சிருக்கு நேசன்...

      Delete
  40. படங்கள் அழகாய் இருக்கு அந்த பூக்கொத்து மட்டும் தனிமரம் சினேஹாவுக்கு வைத்தது போல[[[[[[

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கொரோனா வந்ததால சிலருக்கு நினைவு போச்சாம், சிலருக்கு வாசனை போச்சாம்ம்.. ஆனா நீங்க இன்னும் ஸ்நேகாவை மறக்கலியே ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி நேசன்..

      Delete
  41. நான் தான் வழக்கம் போல் கடைசியா? நேற்று உங்களைப் பார்த்தேன். ஆனால் பதிவு போட்டிருக்கிறது தெரியாமல் போச்சு! அதுவும் இத்தனை வடகங்கள்! எல்லாமே பார்க்க நல்லா இருக்கு. சாப்பிட எப்படி இருக்கும்னு எங்களுக்கு என்னமோ தெரியப் போறதில்லை! இஃகி,இஃகி,இஃகி!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. கடசி எண்டெல்லாம், கார்ட் பெட்டி உங்களுக்காக காலியாக வச்ச்சிருந்தேன், அத்தோடு ரெயினின் ஸ்பீட்டையும் கூட்டவில்லை:).. மெதுவா ஏறுங்கோ..

      சிலசமயம் அப்படித்தான் கீசாக்கா.. பல பதிவுகள் ஒரு நாளில் வரும்போது, கீழே போய்விட்ட சில பதிவுகள் மிஸ்சாகி விடுகிறது.... போஸ்ட் பார்த்தால் வருவீங்கள் எனத் தெரியும்தானே..

      வடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை, ஆனாலும் கூழ் வடாம் தான் சூப்பர்.

      Delete
  42. இந்த ஜவ்வரிசி வடாம் இன்னும் காயணுமோனு நினைக்கிறேன். அதால் பற்களில் ஒட்டிக்குது! எதுக்கும் இன்னும் ஓரிரு நாட்கள் முடிஞ்சால் காய வைச்சுப் பாருங்க! நான் இங்கே வந்து முதல் இரண்டு வருஷம் போட்டது தான். 2013ஆம் வருஷமோ என்னமோ எல்லா வடகத்தையும் தூக்கிக் கொண்டு போயிட்டாங்க! அதிலும் அரிசி+ஜவ்வரிசி+வெங்காயம் சேர்ந்தது. அத்தனை நன்றாக வந்திருந்தது. வெள்ளை வெளேர் எனக் கண்களைப் பறித்தது. அவங்க கண்ணையும் பறிச்சிருக்குப் போல! தட்டுக்களை மட்டும் வைச்சுட்டு மொத்த வடாமும் போயிந்தி! :)))))

    ReplyDelete
    Replies
    1. காய்ந்துவிட்டது கீசாக்கா சூப்பராக, ஆனா எனக்கிருக்கும் டவுட், இன்னும் நன்கு காச்சி, சவ்வரிசியைக் கரைச்சிருக்கோணுமோ? இது அங்காங்கு அரிசி தெரிகிறதே.. ஆனால் கடிபடவில்லை, வாயிலதான் ஒட்டுது கர்:)).. சின்னவருக்குத்தான் இப்படி வகைகளில் விருப்பம்[ஸிப்ஸ்] , இதை சாப்பிட்டவுடன், தனக்கு வேண்டாம் ஸ்ரிக்கியாக இருக்கு என்றிட்டார்ர் கர்ர்ர்:))..

      //தட்டுக்களை மட்டும் வைச்சுட்டு மொத்த வடாமும் போயிந்தி! :)))))//

      ஹா ஹா ஹா இதிலும் ஒரு சந்தோசம் தானே.. சமைத்தவுடன், உணவு முடிஞ்சுவிட்டதெனில்.. அதில இருக்கும் மகிழ்ச்சியே சுகம்.. இது ஒவ்வொரு வீட்டுத்தலைவிக்கும் தெரியும்:))

      Delete
  43. உங்களுக்குனு தனியா ஊசிக்குறிப்பெல்லாம் கிடைக்குதே! மத்தவங்க மேலே சேற்றை வாரி இறைக்கிறவங்க தங்கள் கைகளில் சேறு இருப்பதை எல்லாம் யோசிக்க மாட்டாங்க. பின்னால் கை கழுவினால் போதும்னு இருப்பாங்க! :(

    ReplyDelete
    Replies
    1. //தங்கள் கைகளில் சேறு இருப்பதை எல்லாம் யோசிக்க மாட்டாங்க. பின்னால் கை கழுவினால் போதும்னு இருப்பாங்க! :(//

      ஹா ஹா ஹா சூப்பர் கீசாக்கா.. தனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பறவாயில்லை.. எதிரிக்க்கு ஒரு கண்ணாவது போகோணும் எனும் நிலை:))..

      மிக்க நன்றிகள் கீசாக்கா..

      எல்லாம் வட்சப் வைபரில் வருபவைதான் அதிகம்.

      Delete
  44. விதம் விதமாக வடகம். எஞ்சாய். பார்க்க நல்லா இருக்கு. சுவையா இருக்கா இல்லையான்னு சொல்லணும்னா கொஞ்சம் தில்லிக்கு பார்சல் பண்ணினால் சொல்லுவேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ..
      //சுவையா இருக்கா இல்லையான்னு சொல்லணும்னா கொஞ்சம் தில்லிக்கு பார்சல் பண்ணினால் சொல்லுவேன்!//

      ஹா ஹா ஹா பிளேன் ஓடட்டும் அப்போ மோடி அங்கிளைப் பார்க்க வருவேன்.. வரும்போது கொண்டுவந்து தருகிறேன்:)..

      மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  45. வடகங்கள் அருமை! பொடேடோ பூரி என்றால் அது சமோசா ஆகி விடாதா?நீங்கள் போடும் பூனை படங்களைக் கொண்டு ஒரு கண்காட்சியே நடத்தலாம். எங்கிருந்து பிடிக்கிறீர்கள்?  விண்ணில்தான் நட்சத்திரங்கள் பூக்குமா? மண்ணிலும் உண்டே நீல நட்சத்திரங்கள் என்று சொல்வது போல் இருக்கிறது சங்குப் பூக்களின் கூட்டம். 

    ReplyDelete
    Replies
    1. vஆங்கோ பானு அக்கா வாங்கோ..

      //பொடேடோ பூரி என்றால் அது சமோசா ஆகி விடாதா//

      ஹா ஹா ஹா அதேதான்.. உருவத்தில சின்னது எலி.. பூனை, பெரியது யானை.. புலி:)) அப்பூடித்தான் இதுவும் ஹா ஹா ஹா.

      //எங்கிருந்து பிடிக்கிறீர்கள்? //
      இவை எல்லாம் நெட்டில் வலை வீசியும் மற்றும் சிலது தமக்குக் கிடைச்சால், எனக்கு அனுப்புவர் என் ஜொந்தோம் பண்டோம் எல்லோரும் ஹா ஹா ஹா..

      அது சங்குப் பூக்களோ? இல்லை இது ஒருவகை மலையடிவார மலர்கள்.. ச்சும்மா சும்மா பூக்குது.

      மிக்க நன்றிகள் பானு அக்கா.

      Delete
  46. https://thanimaramnesan.blogspot.com/2020/05/blog-post_14.html/ /விரும்பினால் நல்ல படம் பார்க்க அழைப்பு![[

    ReplyDelete
  47. வடகங்கள் எல்லாம் சூப்பர்.

    ReplyDelete
  48. வண்டி கிளம்பி விட்டது...

    ஆனாலும் ஓடி வந்தேன் வடகங்கள் காண...


    பொன்னியின் செல்வன் எனது 12 ம் வகுப்பு விடுமுறை யில் படித்த நூல்...அதன் பிறகு பலமுறை வாசித்து.. வீட்டில் இரண்டு செட் அந்த புத்தகங்கள் வைத்து இருக்கிறேன் ..

    அரிசி கூழ் வடாம் சூப்பர்...அதை பசங்க ஸ்பூன் வத்தல் ன்னு சொல்லி அதுக்குள்ள சாதம் வச்சு சாப்பிடுவாங்க...

    காய்கறி வடாம் அருமை..

    ஜவ்வரிசி வடாம் சில நேரம் அப்படி தான் அதில் கொஞ்சம் அரிசி சேர்த்தால் வாயில் ஒட்டாது அதிரா..

    உருளை வடாம்..ம்ம்..அஞ்சு ரெசிபி பார்த்து செய்யும் ஆசை வந்தது...இப்போ ஒரே யோசனை...செய்யணுமா ன்னு

    இஞ்சி துருவி வைப்பது...நல்ல ஐடியா..

    இயற்கை காட்சிகள் வாவ்...சூப்பர்...



    ReplyDelete
  49. அடிக்கும் வெயில் வீணாகப்போகாமல், ஏதேதோ வற்றல், வடகம் என நீங்களே மிகவும் கஷ்டப்பட்டு பல வரைட்டிகளில் செய்தது போல படமெல்லாம் போட்டுக்காட்டி, எல்லோரையும் ஒட்டுமொத்தமாக ஏமாற்றி, எல்லோருக்கும் நாக்கில் நீர் ஊறச் செய்து விட்டீர்கள்.

    அஞ்சுவுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்திருந்தும், நட்புக்காக, எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், கம்முன்னு இருந்திருப்பாங்கோ. கொரனா ஊரடங்கு முதலியன வேறு, வாயைத் திறந்து உண்மையைக்கூற விடாமல், அந்த மாஸ்க் தடுத்திருக்கும்.


    மொத்தத்தில், நீங்கள் இதுபோல அடிக்கும் கும்மியும் கோலாட்டமும், நம் நெல்லைத் தமிழன் ஸ்வாமிக்கு, நல்ல பொழுது போக்காக இருந்திருக்கும்.

    அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.