நல்வரவு_()_


Monday, 26 November 2018

鮽鮽鮽அதிராஸ் ஸ்பெஷல் சீனி அரியதரம்鮽鮽鮽

தெக்கினிக்கா தலைப்பைப் போடோணும், அப்போதானே, இது என் செய்முறை, ஆரும் நோ குறொஸ் கொஸ்ஸன் பிளீஸ் எனச் சொல்லி வாயை அடைச்சிடலாம்:))
அப்பாவி போல முகத்தை வச்சிருந்தால்தால் இண்டைக்குத் தப்பலாம்:)

அதிரா வீட்டுச் சீனி அரியதரம் சாப்பிடலாம் வாங்கோ. எங்கள் வீட்டிலதான் இனிப்பு என்பது யாருக்குமே பிடிக்காதே.. அதாவது பலகாரங்கள், மற்றும்படி சொக்கலேட் ஐஸ்கிரீம் பற்றி இங்கு நான் பேசவே இல்லை:).

ஆனாலும் செய்ய வேண்டிய கட்டாயம், ஏனெனில்..கெளரி விரதம் என்பது 21 நாட்கள் நோன்பிருந்து முடிவில் கையில் இருக்கும் பழைய காப்பை கழட்டி வைத்து விட்டுப் புதிய காப்பைக் கட்டிக் கொள்வோம். அந்த காப்புக் கட்டும் அன்று காப்புக் கட்டுபவர், ஒருநேர உணவாக இந்த சீனி அரியதரம் மட்டுமே சாப்பிடோணும்.. இப்படித்தான் நம் வழக்கம். கோயில் இருக்கும் ஊர்களில் பூஜைக்கு பணம் கொடுத்தால் கோயில்லயே சுட்டுத் தருவார்கள், அதிரா என்ன பண்ண முடியும் ஜொள்ளுங்கோ:).. அதனால நானே சுட்டு எடுப்பேன்.. சிலசமயம் பாறாங்கல்லுப் போலவும் வந்திருக்கு:) என் பற்கள்தான் எதையும் உடைச்செறியுமே அதனால எனக்கு இதுபற்றிய கவலை எல்லாம் இருந்ததேயில்லை:) ஹா ஹா ஹா.

ஆனா அடிபட்டு இடிபட்டு.... போனவருடத்தை விட இம்முறை மிகவும் சூப்பராகவும் சொஃப்ட்டாகவும் வந்துது.. இந்த நேரம் பார்த்துப் பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக, தீபாவளி வாழ்த்துப் பரிமாற்றத்தோடு.. அம்முலு[பிரியசகி] கேட்டா, அதிரா சீனிஅரியதர ரெசிப்பி போடுங்கோ.. இதுவரை நான் செய்ததில்லை, எனவே செய்யப்போகிறேன் என:)).. அவ்வ்வ்வ்வ் கிடைச்ச சான்ஸ் ஐ மிஸ் பண்ணுவேனோ நான்?:).. அதனாலதான் ரெசிப்பி போடத் துணிஞ்சேன்:)..


முதலில் வாங்கோ சுவாமி அறைக்குப் போய்க் கும்பிடலாம்..
தில ஒரு குட்டிக் கதை சொல்லோணும் உங்களுக்கு, எனக்கு இந்தக் கெளரி காப்பு[படத்திலிருக்கே] கனடாவிலிருந்துதான் வரும், அதை அங்கு பூஜையில் வைத்து, கடைசி வாரம்தான் எடுத்துப் போஸ்ட் பண்ணுவார்கள், ரைமுக்குக் கிடைத்துவிடும், ஆனா இம்முறை நான் அனைத்து வேலைகளும் முடித்து, சுவாமிக்குப் படைத்தும் விட்டேன், காப்பு வந்து சேரவில்லை, நேரமோ பகல் 1.30 தாண்டி விட்டது, சரி இனி நாளைக்குத்தான் வரலாம், பறவாயில்லை, தொடர்ந்து கந்தசஷ்டி விரதம் தானே, அதுக்குள் கட்டிடலாம் என எண்ணிக் கொண்டே, கும்பிட்டு முடித்து விட்டு, எதுக்கும் லாஸ்ட்டா ஒரு தடவை ஜன்னலால பார்ப்போமே, போஸ்ட்மான் வருகிறாரா என எண்ணி, ஜன்னல் அருகே போனேன், வீட்டு டோரில், டொங்ங்ங்ங் எனக் கேட்டுதா.. ஓடிப்போய்ப் பார்த்தால் காப்பு வந்திருக்குது.. எப்படி இருந்திருக்கும் எனக்கு.. மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை:).

சரி செய்முறைக்குள் நுழைவோமா?:).. தீட்டல் பச்சை அரிசிதான் இதுக்குப் பாவிப்போம், அது வெள்ளை அல்லது சிவப்பு எதுவாயினும், நான் பொதுவாக சிவப்புத் தீட்டல்ப் பச்சைதான் பாவிப்பேன். ஒரு கப் அரிசி எடுத்து 2,3 மணி நேரம் ஊறவிட்டு, பின்னர் வடித்து வைத்து விடுங்கோ, கொஞ்சம் ஈரத்தன்மை போகும்வரை.

பின்பு அரிசியை அரைத்து, அரித்து எடுக்க வேண்டும். அரிப்பதற்கு அரிதட்டு பெரிய கண் உள்ளதாக இருக்கோணும், அதாவது குருணலும் சேர்ந்து மாவுடன் வர வேண்டும், தனி மா எனில் சரியில்லை. சிலர் என்ன பண்ணுவார்கள் எனில், அரித்துப்போட்டு, மிகுதி மாக்கட்டையை கொளித்தெடுத்துக் குருணலையும் இதனோடு கலப்பார்கள், அதுக்கு கொஞ்சம் பிறக்டிஸ் வேணும் என்பதால, இப்படி பெரிய கண் அரிதட்டைப் பாவிப்பது நல்லது.

இனி நீங்கள் செய்வதற்கு ரெடியாகியதும்தான், மிகுதி வேலையைத் தொடரோணும், பிக்கோஸ்ஸ்ஸ்.. சீனியைக் கலந்துவிட்டால், உடனேயே சுட்டிட வேண்டும்.. இலை எனில் தண்ணியாகிடும்.

இப்போ ஒரு கப் இற்கு அரைக் கப் அல்லது முக்கால் கப் சீனி எடுத்து மாவுடன் கலந்து குழைக்க வேணும். தண்ணி சேர்க்கக்கூடாது, மாவில் இருக்கும் ஈரத்தன்மையுடன் சீனி கரைந்து வரும், அல்லது கையை மட்டும் தண்ணியில் தொட்டுத் தொட்டு குழைத்தால் போதும், 10 நிமிடம் அப்படியே விட்டாலே தன் பாட்டுக்கு மா குழைந்து வரும்.

இப்படியே விட்டேன்ன்..

பத்து நிமிடத்தில் இப்படி ஆச்சு..

இப்போ சுட ஆரம்பிச்சிடோணும், இல்லை எனில் இன்னும் தண்ணியாகிவிடும். இப்படிக் குட்டிக் குட்டி உருண்டைகளாக்கிப்போட்டு...

எண்ணெயை நன்கு கொதிக்க விட்டு, பின்பு உருண்டைகளை தட்டையாக பருப்பு வடைபோலத்தட்டி, ஸ்லோ ஃபயரிலேயே பொரித்தெடுக்க வேண்டும், அப்போதான் உருண்டையின் உள்ளும் மா அவிந்திருக்கும். நெருப்பு அதிகம் எனில், சீனி சேர்த்திருப்பதால் வெளிப்பகுதி டக்கெனக் கருகி விடும்.

ஆஆஆவ்வ் அதிராஸ் ஸ்பெஷல் சீனி அரியதரம் ரெடீஈஈஈ:)

இது என்ன தெரியுதோ? சுவீட் பொட்டாட்டோவும்[நாங்கள் வத்தாளங்கிழங்கு எனச் சொல்லுவோம்] சாதாரண பொட்டாட்டோவும், இது கிட்டத்தட்ட ஒரு கிலோ அளவு இருக்கும். அதன் அழகில் மயங்கி வாங்கினேன், சின்னவருக்கு மட்டும் இது ரொம்பப் பிடிக்கும்.

அதில் இதுவரை அவித்தே குடுப்பேன், இம்முறை அதிகம் என்பதால், பாதியைப் பொரித்து, உப்பு, தூள் எதுவும் போடாமல் பொரித்து எடுத்து அந்த சூட்டிலேயே உப்பையும் தூளையும் கொட்டிப் பிரட்ட வேண்டும், பொரியல் வகைகளுக்கு இப்படிச் செய்து பாருங்கோ... எண்ணெயும் பழுதடையாது, சுவையும் சூப்பர்.

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா கந்தசஷ்டி பாரணையும் முடிஞ்சு போச்சு..  மகிழ்ச்சி, நிறைவு...
 இனி அடுத்து...:))

ஊசி இணைப்பு:
[ஸ்ரீராம்:-///"பிள்ளையாரப்பா... இருக்கற பிரச்னைகள் யாவும் சீக்கிரம் நல்லபடியா முடியணும்..."//
அதிரா:- ஹா ஹா ஹா...இதுக்கொரு மீம்ஸ் வச்சிருக்கிறேன்ன்.. போட்டு விடுறேன் விரைவில்:)..]
ஸ்ரீராமுக்குச் சொல்லியிருந்தேன் அதுதான் இது:)

ஊசிக் குறிப்பு:

சரி அப்போ புறப்படலாமோ?:).. மீண்டும் இன்னொரு இனிய சமையல் குறிப்புடன் உங்களைச் சந்திக்கும் வரை நன்றி கூறி விடை பெறுபவர் உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா:)_()_.

கடுதாசி இணைப்பு:-
இக்கிழமை முழுவதும் மீ பிசியாக இருப்பதால், பதில் தர பலசமயம் தாமதமாகலாம்.. பல நாட்கள்கூட ஆகலாம்:).. அதனால கோபிச்சிடாதீங்கோ என இப்பவே மன்னிப்புக் கேட்கிறேன்_()_.
அப்போ இப்போ எதுக்கு அவசரமாக போஸ்ட் போட்டீங்க என நெ.தமிழனின் மைண்ட் வொயிஸ் கேட்குது:).. அது அம்முலு எங்காவது அந்தாட்டிக்கா அப்புறிக்கா எனப் பயணம் போயிட்டாலும் எனத்தான் அவசரப் போஸ்ட்:)... ஸ்ஸ்ஸ் அப்பா முடியல்ல:)
銏銏銏銏銏銏銏銏銏銏銏銏銏銏銏銏 

95 comments :

  1. [im]http://3.bp.blogspot.com/_XR8IP6-HtQo/R7HINizp54I/AAAAAAAAAl0/f6OjfZFv2mc/s320/mouse.jpg[/im]

    நான் வந்திட்டேன் :))))))))))

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆ நீங்க வந்திட்டீங்க.. மற்றும் எல்லோரும் வந்திட்டினமோ என ரெஜிஸ்டர் மார்க் பண்ணிட்டு வாறேன்ன்ன்... ரைமுக்கு வராதோருக்கு நோ சீனி நோ அரியதரமாக்கும் கர்ர்ர்ர்ர்:)

      Delete
    2. வாங்கோ அஞ்சு வாங்கோ... நல்லா இருக்கிறீங்களா? சமோசா பரோட்டா எதுவும் சாப்பிடேல்லைத்தானே?:) அப்பாடா இப்போதான் நிம்மதி நேக்கு... மீ சேவ்ட்ட்ட்ட்ட்:)

      Delete
  2. /அதிரா வீட்டுச் சீனி அரியதரம் சாப்பிடலாம் வாங்கோ. //

    நோ நான் மாட்டேன் ..இன்னும் லைஃப் இன்சூரன்ஸை ரின்யூ பண்ணலை :)
    முதலில் நெல்லைத்தமிழன் ஸ்ரீராம்லாம் சாப்பிடட்டும் :) ஒரு மாசம் கழிச்சே நானா சாப்பிடுவேன்

    ReplyDelete
    Replies
    1. நோ அஞ்சு அடம் புய்க்காதீங்க அவர்கள் இருவரும் சுவீட்டானவர்களாக்கும்:).. ஹையோ இது வேற சுவீட்:) அதனால நீங்கதான் சாப்பிடோணும்:).. தேம்ஸ் இருக்க இன்சூரன்ஸ் எதுக்கு?:)..... ஏதும் ஆபத்தெனில் தேம்ஸ்ல தள்ளி விடுவேனே சோ எதுக்கு அலர்ஜி க்கெல்லாம் பயப்பிடுறீங்க:)

      Delete
  3. /என் பற்கள்தான் எதையும் உடைச்செறியுமே அதனால எனக்கு இதுபற்றிய கவலை எல்லாம் இருந்ததேயில்லை:) ஹா ஹா ஹா.//

    ஆஹாங் :) எங்களுக்கு தெரியுமே நீங்க சின்ன வயசில் அதாவது 50 வருஷத்துக்கு முன்னாடி :) கிச்சன் கதவு பின்னே ஒளிஞ்சி உடைஞ்ச மண் சட்டி துண்டையே டேஸ்ட் செஞ்சி விழுங்கின ஆளாச்சே :)

    ReplyDelete
    Replies
    1. Proof


      ///ஒருநாள், எங்கள் வீட்டில் சமைக்கும் மண் பாத்திரம் உடைந்துவிட்டதாம், கொஞ்ச நேரத்தில் என் சத்தம் ஏதுமில்லையாம், என்னைக் காணவில்லையாம், அம்மா பயந்திட்டா, பயத்தில எல்லா இடமும் தேடினால், நான் கிச்சின் கதவுக்குப் பின்னால், கதவு திறந்திருப்பின், சுவரோடு ஒட்டினால் ஒரு இருட்டிடம் வருமெல்லோ அந்தச் சுவரோடு மூலையில் ஒளித்து நின்று, அந்த உடைந்த மண்பாத்திரத்தின் ஒரு துண்டைக் கடித்துக் கொண்டு நின்றேனாம்:))... ஹையோ இது அதிராதானா?:).//


      hahhahaaa [im]https://i.gifer.com/2vuf.gif[/im]

      Delete
    2. ///நீங்க சின்ன வயசில் அதாவது 50 வருஷத்துக்கு முன்னாடி :) ////
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வர வர கோபு அண்ணனைப்போல என் வயசை உங்க வயசுக்கு கிட்ட கூட்டிக்கொண்டே வாறீங்க:).. 12 வருசத்துக்கு முன்பு என தெளிவாச் சொல்லிங்கோ :).. உடைந்த ஓட்டுத் துண்டை சொண்டில ஒட்டி தொங்க விடுவோம் தெரியுமோ? நீங்க அப்படி செய்ததுண்டோ....:)..

      Delete
  4. /இந்த நேரம் பார்த்துப் பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக, தீபாவளி வாழ்த்துப் பரிமாற்றத்தோடு.. அம்முலு[பிரியசகி] கேட்டா, அதிரா சீனிஅரியதர ரெசிப்பி போடுங்கோ.. இதுவரை நான் செய்ததில்லை, //

    ப்ரியா கொஞ்சம் உங்க கையை மட்டும் நீட்டுங்க அடிக்க மாட்டேன் தைரியமா நீட்டுங்க :)
    ஆனாலும் அசாத்திய தைரியம்தான் உங்களுக்கு பூனைக்கிட்டே ரெசிப்பி கேட்டதை சொல்றேன் ..

    ஆமாமா மியாவ் அதென்ன பழம் நழுவி பாலில் விழுந்த கதை ..எப்படி எப்படி வாழைப்பழ /கொய்யாப்பழ மரத்துக்கீழே பால் சட்டி தயாரா இருக்குமா ??? எனக்கு விளக்கம் தேவை ப்ளீச்

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் தைரியமா இருந்த என்னை இப்படி பயமுறுத்தினால் எப்படி இதை செய்வது. எனக்கு இது ரெம்ப்ப்ப பிடிக்கும். பூசார் நல்லா வந்ததா சொன்னாவா அதுதான் கேட்டேன் அஞ்சு 😳 😳

      Delete
    2. அது பூஸ் இப்படி ஆயிரம் ஸ்டோரீஸ் சொல்லுவாங்க நாம்தான் கவனமா இருக்கணும் :) சரி சரி இது சாமிக்கு படைச்சதால் பூனையை கொஞ்சமா கிண்டல் பண்ணிட்டு விட்டுடலாம்

      Delete
    3. ////ஆமாமா மியாவ் அதென்ன பழம் நழுவி பாலில் விழுந்த கதை ..எப்படி எப்படி வாழைப்பழ /கொய்யாப்பழ மரத்துக்கீழே பால் சட்டி ///
      அல்லோ இது புதன்கிழமைக்கு சொந்தமான கேள்வி:).. அங்கு கொப்பி பேஸ்ட் பண்ணோனும்:)

      Delete
    4. அம்முலு நீங்க தையமா களமிறங்குங்கோ ஆர் பேச்சையும் கேட்க வேண்டாம்:)., பிழைச்சால் உடனே எனக்கு டி ஏச் எல் ல பார்சல் பண்ணிடுங்கோ:) நான் டக்கெண்டு தேம்ஸ்ல கொட்டிடுவேன் ஆரும் பார்க்க முன்:)...

      Delete
    5. ///AngelTuesday, November 27, 2018 9:14:00 pm
      அது பூஸ் இப்படி ஆயிரம் ஸ்டோரீஸ் சொல்லுவாங்க நாம்தான் கவனமா இருக்கணும் :)///

      அஞ்டூஊஊஉ ஆருக்காவது இப்போ பேர்த்டே வந்தால், அதுக்கு இதை செய்து பாருங்கோவன்:)

      Delete
  5. /ஓடிப்போய்ப் பார்த்தால் காப்பு வந்திருக்குது.. எப்படி இருந்திருக்கும் எனக்கு.. மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை:).//

    ஆஹா மகிழ்ச்சி இன்ப அதிர்ச்சி ..சரி போஸ்ட்மானுக்கு ஒரு ஸ்வீட் கொடுத்திருக்கலாமே :) டேஸ்டுக்கு .

    அப்புறம் இந்தமுறை தட்டுல அந்த ஸ்கொட்டிஷ் பணத்தை காணோமே எங்கே ???????????

    ReplyDelete
    Replies
    1. ஏதோ ஒரு செய்முறை போட்டு, அதை அடுத்தவங்க முயற்சித்துப் பார்த்து ஏதாவது ஆகிச்சுனா ஸ்காட்டிஷ் போலீசார் கைகளுக்பு "காப்பு" கொண்டுவருவாங்களே.. அது வேற காப்பா? நானும் போஸ்ட்மேன் கீப்பு கொண்டுவந்தார்னு எழுதினதைப் படிச்சதில கன்ப்யூஷ் ஆயிட்டேன்.

      கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் ஏஞ்சலின்.

      Delete
    2. Its saami. Swami kayiru:) namma ooril nonbu kayiru

      Delete
    3. அது நோன்பு கயிறுன்னு சொல்றதைத்தான் பூனை காப்புன்னு சொல்றாங்க :)

      Delete
    4. /////ஆஹா மகிழ்ச்சி இன்ப அதிர்ச்சி ..சரி போஸ்ட்மானுக்கு ஒரு ஸ்வீட் கொடுத்திருக்கலாமே :) டேஸ்டுக்கு .///
      கர்ர்ர்ர்ர்:) இதில ஒரு முறை இருக்கு, சுவாமிக்கு 21 எண்ணிப் படைக்கோணும், பின்பு அதை வீட்டுக்காரர் மட்டும்தான் சாப்பிடோணுமாம்:)... படைக்காத மிகுதியை வெளி ஆட்களுக்குக் குடுக்கலாம்.

      ///அப்புறம் இந்தமுறை தட்டுல அந்த ஸ்கொட்டிஷ் பணத்தை காணோமே எங்கே ???????????///

      அல்லோ மிஸ்டர் அது சித்திரை புதுவருசத்துக்குத்தான் காசு வச்சுக், கை விஷேடம் பரிமாறுவோம் ஹா ஹா ஹா..

      Delete
    5. அஞ்சு நெல்லைத்தமிழன் டமில் புரொபிஸர் எல்லோ:) அவருக்கு எல்லாம் புரியும் வேணுமென்றே புரியாத மாதிரி நடிக்கிறார் ட்றம்ப் அங்கிளைப்போல கர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா...

      Delete
  6. //அரிப்பதற்கு அரிதட்டு //
    கோனார் நோட்ஸ் விளக்கவுரை :))
    =========================================

    அதாகப்பட்டது நண்பர்களே ..நம்ம சல்லடை ஜல்லடை னு சொல்றதுதான் இவங்க அரி தட்டு னு சொல்றாங்க :)

    ReplyDelete
    Replies
    1. அல்லோ அது அரித்தட்டு அல்லது அரிதட்டுத்தான் சரியான டமில்:).. சல்லடை என்பது, சீமந்து குழைக்கும்போது மண் அரிக்கப் பாவிக்கும் பெரீஈஈஈய தட்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நேக்கு டமில்ல ஆரும் பிழை விட்டால் பிடிக்காது பாருங்கோ:) பிக்கோஸ் மீக்கு டி ஆக்கும்:)..

      Delete
  7. இதை நாங்க கச்சாயம் னு சொல்லுவோம் ..
    அஆவ் இந்த அநியாயத்தை பாருங்களேன் :) இதை கட்டாயம் நெல்லை தமிழன் பார்த்தே ஆகணும் பிக்காஸ்
    இங்கே கச்சாயம் அப்படின்னு போட்டு தேடியதில் கிடைச்சது நான் முந்தி செஞ்ச கோதுமை கச்சாயம் அதை எடுத்து மைதா கச் சாயம் ஆக்கிருக்காங்க இந்த பிளாக்கில் :) எங்க வீட்டு தட்டு என் வீட்டு கச்சாயம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..அப்போல்லாம் பேர் போடாம படத்தை போடுவேன்

    https://www.thokuppu.com/news/newsdetails/item_18827/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/

    ReplyDelete
    Replies
    1. ///இதை கட்டாயம் நெல்லை தமிழன் பார்த்தே ஆகணும் பிக்காஸ்
      இங்கே கச்சாயம் அப்படின்னு போட்டு தேடியதில் கிடைச்சது நான் முந்தி செஞ்ச கோதுமை கச்சாயம் ////

      ஆஹா நெல்லைத் தனிழன் எங்கே ஓடிட்டார் என நினைச்சேன்... இந்த அஞ்சுட கச்டாயம் தான் காரணம் போல கர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்பப்ப உங்கட சமையல் குறிப்பின் பெருமைகளை எடுத்துச் சொல்லி எல்லோரையும் திரும்பிப் பார்க்காமல் ஓடப்பண்ணுவதே இவவுக்கு வேலை கர்ர்ர்ர்ர்ர்:).

      இது கச்சாயம் இல்லை... உங்கள் அதிரசம் ஆக்கும்.....

      Delete
  8. நீங்க செஞ்சிருக்கிறது ரொம்ப ஈஸியா இருக்கே !! நான் ஒரு ரெசிப்பி பார்த்தேன் ஒரு லண்டன் லேடி செஞ்சாங்க ..அம்ம்மாடியோ மாவை சலிச்சி அதில் எண்ணெயெலலாம் நிறைய விட்டு பிசைஞ்சி செஞ்சாங்க ..நான் கலோரிஸ் கலோரிஸ்ன்னு அலரிட்டிருந்தேன்
    அவங்க செய்முறை பார்த்து !!
    அநேகமா இதை நானா செய்வேன் என்று உல் மனசு சொல்லுது :) உங்க ரெசிபியை தான் சொல்றேன் .அதிரசம் எப்பவும் அதிர்ச்சி ரசம்தான் எனக்கு டூ டைம்ஸ் செஞ்சி சரி வரல ..இதை செஞ்சி இதான் அதிரசம்னு சொன்னா எங்காத்துக்காரர் நம்பிடுவார் :) ஹாஹாஹா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது நானும் பார்தென் அஞ்சு எண்ணெயை சூடாக்கி ஊத்துறா.. அம்மாடியோ பார்க்கவே பயமா இருந்துது... எவ்ளோ எண்ணெய்...

      நானே பல வருசத்துக்குப் பிறகு இம்முறைதான் நல்ல சொவ்ட்டாச் செய்தேன், இன்னொன்று அரிசி ஊறவிட்டு பின்பு ஓவர் நைட் அப்படியே உலர விட்டேன், சும்மா பேசினில் போட்டு, காய விடக்கூடாது, மற்றது தீட்டல் பச்சையில்தான் செய்யோணும், ரெஸ்கோ பச்சை அரிசியில் செய்தால் கல்லுப்போல வரும்.

      அப்போ இந்த கிரிஸ்மஸ்க்கும் ஆத்துக்காரரை வேலை வாங்கப் போறீங்க அதிரசம் எனச் சொல்லி:).. போனத்டவை தானே அச்சு பலகாரம் செய்ய வச்சீங்க கர்ர்ர்ர்:).

      Delete
  9. நம்ம ஊர் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சுவையே தனி இங்கே கிடைக்கிறது குழஞ்சிடும் சீக்கிரமா ..
    பச்சையை தானே பொரிச்சிங்க ?

    ஹாஹ்ஹா அந்த fish சிக்கன் படத்துக்கு இசைப்பாட்டா நான் அருகம்புல் ஜூஸ்னு எடிட்ப்பண்ணி வச்சிருந்தேன் ..
    ஊசிகுறிப்பு சூப்பர் :)
    வர வர பஞ்ச் டயலாக்கெல்லாம் பேசறீங்க :) அரசியலில் இறங்கப்போறீங்களா :))))))
    ஆமா டெய்சி எதுக்கு பாகில் ஏறி உக்காந்திருக்க என் பொண்ணு ஜெசி உள்ளேயே ஏறி உக்காருவா :) ஜிப்பை இழுத்து பார்க்க கூட தெரியும் அவளுக்கு :)

    ReplyDelete
    Replies
    1. அதேதான் அஞ்சு இங்குள்ளது குழைந்திடுது, பச்சையாத்தான் பொரிச்சேன்.

      டெய்சிக்கு கண்ணில பாக், பெட்டி எதுவும் பட்டிடக்கூடாது, உடனே அதில் ஏறிப் படுப்பா.

      Delete
  10. /அது அம்முலு எங்காவது அந்தாட்டிக்கா அப்புறிக்கா எனப் பயணம் போயிட்டாலும் எனத்தான் அவசரப் போஸ்ட்:)... ஸ்ஸ்ஸ் அப்பா முடியல்ல:)//

    ஸ்ஸ்ஸ்ஸ் அது அம்முலு மேலே பூஸ் சொன்னதன் அர்த்தம் என்னன்னா :))
    எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவால்ல அம்முலு இதை செஞ்சி சாப்பிட்டு ............கோடிட்ட இடத்தை நிரப்பிக்கோங்க அம்முலு :)

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்...... அந்தாட்டிக்காவா..... அப்புறிக்காவா அது எங்கன இருக்கு பூஸாரே.
      பூஸ் அப்படியெல்லாம் நினைக்காது அஞ்சு. அது ஒரு அப்பாஆஆஆவி பூஸ். நம்பிக்கை வைத்து செய்துபார்ப்போம். இல்லாவிட்டால் சந்நிதியான் பார்த்துக்கொள்வார்..அங்கன போய் வரவேண்டியதான்....

      Delete
    2. இது தப்பாச்சே :))

      //பூஸ் அப்படியெல்லாம் நினைக்காது அஞ்சு. அது ஒரு அப்பாஆஆஆவி பூஸ்//

      Delete
    3. ////ஸ்ஸ்ஸ்ஸ் அது அம்முலு மேலே பூஸ் சொன்னதன் அர்த்தம் என்னன்னா :))
      எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவால்ல அம்முலு இதை செஞ்சி சாப்பிட்டு ////

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நான் ஒருமாதிரி பட்டர் பூசி ரெடிப்பண்றேன் அம்முலுவை, போன டிசம்பரிலதான் அவ என் கீரை வடை செய்தவ தெரியுமோ:).. இந்த டிசம்பரில சீனி அரியதரம் செய்யப்போறா:)... அதைக் கெடுக்க திட்டமிட்ட ஜதி நடக்குதூ கர்ர்ர்ர்ர்ர்:)...

      Delete
    4. ///பூஸ் அப்படியெல்லாம் நினைக்காது அஞ்சு. அது ஒரு அப்பாஆஆஆவி பூஸ்.////

      ஆஆஆஆஆ நான் பெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்ன் நேக்கு சுட்டாறின தண்ணி தெளிச்சு எழுப்புங்கோ பிளீஸ்:)..

      Delete
  11. அந்த முத்து ராமன் தாத்தாவின் சன் கூட அந்த பொண்ணு படம் தம் நெயில் பார்த்ததும் கண்டுபுடிச்சிட்டேன் ..பாட்டு என்னனு தெரியாதது .will listen later
    அந்த படத்திலேயே ஒரு பெட்டில வச்சி மூடறமாதிரி ஒரு சீன வரும் ..திக்திக்ன்னு இருந்தது படம் பார்க்கும்போது .ஆனா அந்த பொண்ணு இப்போ இல்லை ..அந்த பொண்ணுக்கு மயில் தோகை போல தலை முடி எவ்ளோ அழகு பாவம் :(

    ReplyDelete
    Replies
    1. ///அந்த படத்திலேயே ஒரு பெட்டில வச்சி மூடறமாதிரி ஒரு சீன வரும் ..திக்திக்ன்னு இருந்தது படம் பார்க்கும்போது ///

      ஓஓ எனக்கும் அந்த சீன் நினைவிருக்கு:).. ஓ இந்த பெண்ணும் இப்போ இல்லையோ...

      மிக்க நன்றிகள் அஞ்சு... மொபைல்லயே கொமெண்ட்ஸ் போடுறேன் ...

      Delete
  12. அதிரசம் பாகே வைத்துக்கிளறாமல் இப்படியும் செய்யலாமா? ஒரு முறை செய்து பார்க்கணும். நாங்க ஈரமாவில் வெல்லம் சேர்த்து (நீங்க சொல்லும்சீனி) தேங்காய்ப் பூவும் போட்டுக் கனிந்த வாழைப்பழங்களைப் போட்டுப் பிசைந்து அப்பக்காரையில் அப்பமாகச் செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. இப்படித்தான் ஊரில் செய்வார்கள், அதுவும் அம்மம்மா ஆட்கள் செய்தால் மிகவும் சொவ்ட்டா வரும், வெளித்தோல் கிரிஸ்ப்பியா இருக்கும்...
      பாகு காச்ச்சுவது, அரைத்துக் கறி வைப்பது, இப்படிக் கஸ்டமான ரெசிப்பிகள் செய்ய நினைப்பதில்லை நான், ஏனெனில் அது நல்ல கைப்பக்குவம் வந்தால் மட்டுமே சரி வரும்...

      Delete
  13. பாரணை முடிஞ்ச உடனே ஃபிஷும், சிக்கனுமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நல்ல ரசனையுடன் தேர்ந்தெடுத்திருக்கும் மீம்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. பின்ன என்ன கீசாக்கா... நவராத்திரியில் ஆரம்பிச்சது மொத்தம்45 நாட்கள் தாண்டிப்போசு அப்போ மீ பாவம் எல்லோ:)... ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

      Delete
  14. அரியதரம்னா என்னன்னு யோசித்து படத்தைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் அப்பம் மாதிரியும் இல்லை, இனிப்பு உருண்டை மாதிரியும் இல்லை. இருந்தாலும் பாராயணத்துக்குச் செய்தவைகளைக் குற்றம் சொன்னால் நல்லதில்லை என்பதால் குறை எதுவும் சொல்லப்போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ... ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர் இது உங்கள் முறையில் அதிரசம்:)..
      அப்பாடா தப்பிச்சேன்:) அதனாலதானே சுவாமிப் படத்தோடு வெளியிட்டிருக்கிறேன்:).. அந்த ஊஞ்சல் பிள்ளையார் காப்பாத்திப் போடுவார் என்னை எனும் நம்பிக்கைதான்:)..

      Delete
  15. நீங்க மெதுவா வருவதும் நல்லதுதான். டிரெயின் கிளம்புவதற்குள் உங்க செய்முறைப்படி செய்துபார்த்துவிட்டு நன்றாக வந்தால் பாராட்டலாம்.

    இல்லைனா....................... அடுத்த முறை இன்னும் சிறப்பா செஞ்சு பார்க்கலாம்னு சொல்லவந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இல்லைன்னா..........////
      ஹாஹா ஹா தேம்ஸ்ல தள்ளிடுவேன் எனும் பயம்தானே காரணம்:)...

      Delete
  16. சீனிக்கிழங்கை சீவிப் பொரித்தால் (உருளை சிப்ஸ் போல) ரொம்ப நல்லா சுவையா இருக்கும். என்ன, கொஞ்சம் எண்ணெய் அதிகமாகக் குடிப்பதுபோல் இருக்கும். செய்துபாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் செய்திருக்கிறேன் மேலே.. அல்லது சீனிக்கிழங்கு என்பது ராசவள்ளிக்கிழங்கோ?

      இதில் எனக்கு எண்ணெய் குடிக்கவில்லை... ஆனா கிழங்கு சோர்ந்து விட்டது( பொரியல்).... மொறுமொறுப்பாக வராது போலும்.

      Delete
  17. இன்னொன்று, சீனிக்கிழங்கை கரி அடுப்பில் போட்டு தணலில் வேகவைத்து பிறகு தோலுரித்துச் சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும். நீங்க கிரில் செய்து பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஓஒ கிரில் செய்து பார்க்கலாம்தான். இப்போதான் எனக்கும் நினைவு வருது, ஊரில் மரவள்ளிக் கிழங்கை உப்படி தணலில் சுட்டு சாப்பிட்ட ஞாபகம் வருதே... அவ்வ்வ்வ்வ்வ்வ்

      Delete
  18. அரியதரம் பலவித சைசுகளில் செஞ்சிருக்கீங்க. நீங்க மட்டும்தான் சாப்பிடப்போவதால் (கடவுள் கொஞ்சம் டேஸ்ட் பார்த்துட்டு அலறி அடிச்சுக்கிட்டு பிற வீட்டுப் பிரசாதங்களைச் சாப்பிடப் போயிருப்பார்) ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சைசுல இருக்கறதுல தப்பில்லை.

    ReplyDelete
  19. தீட்டல்ப், குருணலும், கொளித்தெடுத்துக், பிறக்டிஸ் - சும்மா ஒரு பகுதியைப் படித்தாலே இத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக் குழப்பங்கள் இருக்கு. இதுலவேறு செக் ஏஞ்சலின் காணாமல் போயிட்டாங்க. படிக்கிற எத்தனை பேருக்கு இதெல்லாம் புரியுமோ.

    அதிரா சொல்லிச் சொல்லி, இலங்கைல இப்போ 'தமிழ்ல டி' இப்போல்லாம் சுலபமாக் கொடுக்கறதில்லையாம். லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் கொடுக்கலாமா என்று யோசிக்கிறாங்களாம். ஏன்னா அதிரானால அந்த 'டி' பட்டத்தை எல்லாரும் கிண்டல் பண்றாங்களாம்.

    ReplyDelete
    Replies
    1. //தீட்டல் பச்சை அரிசி///

      அதோட தீட்டிய அரிசியை நாம் குத்தரிசி னு சொல்வோமே நாட்டரிசி அதுதான் தீட்டல் அரிசினு அவங்க எழுதுவச்சி :)

      குருணை /நொய்யரிசி இதை மேடம் குருணல் என்று எழுதியிருக்காங்க குருநெல் தான் இங்கே குருணல் ஆகியிருக்கு ..
      //கொளித்தெடுத்துக்//
      அஆவ்வ் :) எனக்கு நினைவில் இருக்கிற கொஞ்சம் தமிழும் மறக்கப்போது .

      ஆனா ஒண்ணு இவங்களுக்கு தமிழில் டி கொடுத்த அந்த டீச்சர் எங்க கண்ணில் படாம இருக்கிறது அவருக்கு நல்லது

      Delete
    2. //கொழித்தெடுத்தல்//
      ஸ்ஸ்ஸ் ஹாஹா நெல்லை தமிழன் உண்மையில் இதோட அர்த்தம் இப்படி ஒரு வார்த்தை நான் கேள்விப்படலை இங்கே பூனை பக்கமும் இந்த வார்த்தையை இன்னிக்குதாம் பார்க்கிறேன் ..
      அதனால்தான் அப்படியே எஸ்கேப்பிட்டேன் ..கீழே ப்ரியசகி சொன்ன விளக்கத்தை பார்த்த பின்னே எனக்கு தெரிஞ்சது அது கொழித்தெடுத்தல் அதை இந்த பூனை ழ /ள தெரியாம போட்டு விளையாடியிருக்கு :))

      Delete
    3. நெல்லைத்தமிழன் இப்போ டி சிஸ்டம் நிண்றுவிட்டது என நினைக்கிறேன் ஏ ஆக்கியிருக்கினம் போல, சரியாத் தெரியாது எனக்கு

      Delete
    4. ///
      ஆனா ஒண்ணு இவங்களுக்கு தமிழில் டி கொடுத்த அந்த டீச்சர் எங்க கண்ணில் படாம இருக்கிறது அவருக்கு நல்லது///
      அல்லோ அஞ்சூஊஊ நீங்க மேல போனால்தான் அவவை சந்திக்கலாமாக்கும்:) இப்பவும் சந்திக்க ஆசையா இருக்கோ?...
      ஆனா எனக்கொரு சந்தேகம்ம்ம் அஞ்சு ஹால்வ் இந்தியன் கால்வ் ஶ்ரீலங்கன் போல இருக்கே:)..

      Delete
  20. ஆகா!..

    அதிரா வீட்டுச் சீனி அரியதரமும் அருமை..
    அரியதரம் பற்றிய பதிவும் அருமை!...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ மிக்க நன்றி.

      Delete
  21. அப்புறமாட்டிக்கு வர்றேன்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பல்வலி இருக்கு அதனால் செய்வதற்கு யோசனையாகவும் இருக்கு. படங்களை ருசித்தேன்.

      Delete
    2. வாங்கோ கில்லர்ஜி, இதைச் சாப்பிட்டீங்களெண்டால் பல்வலி காணாமல் போயிடும்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  22. Replies
    1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி...

      Delete
  23. ஆவ்வ்வ்வ்..... அரியதரம் ரெசிப்பி போட்டாச்சு. நன்றி நன்றி நன்றி பூசானந்தா 💐
    எனக்கு இதை பற்றி (அனுபவசாலிகள் கூட) நெகட்டிவா சொன்னதால் செய்யமுயற்சிக்கவில்லை. எனக்கு இதுவும் பயற்றம் உருண்டையும் பிடிக்கும். இது செய்து பார்க்கிறேன். ஆனா டைம் இப்ப இல்லை. நீங்க செய்திருக்கும் அரியதரம் சூப்பரா இருக்கு. 👍

    உங்கட சாமியறை அழகா இருக்கு. அழகா பிரசாதம் படைத்து பூஜையை செய்திருக்கிறீங்க. அந்த அம்மனின் அருள் கண்டிப்பா கிடைக்கும்.

    நல்லமுறையில செய்முறையை எழுதியிருக்கிறீங்க. அங்கங்கே எழுத்துப்பிழை இருக்கு. //கொளித்தெடுத்துக்// இது பிழை. இந்த ழ்,ள் உங்களுக்கு பெரிய பிரச்சனை. அதில் கொழித்தெடுத்தல் என ழ தான் வரவேணும்.

    வத்தாளைக்கிழங்கு பொரியல் மாதிரி நான் இராசவள்ளிக்கிழங்கில் செய்வேன் அதிரா. சூப்பரா இருக்கும்.இனி உங்க முறையை செய்துபார்க்கிறேன். எனக்கு இந்த பொரியல் இங்கு நமுத்து போகுது. அது நமுத்து போகாமல் இருக்க டிப்ஸ் சொல்லுங்கோ . (வாழைக்காய்,மரவள்ளி,இராசவள்ளி கிழங்கில் செய்தால்..சில நேரம் அப்பளமும் கூட..)

    ஆ..கடவுளே விரத சாப்பாடு சாப்பிட்டு கை ஈரம் காயமுன் ............. கேட்குதோஓஓ....... 🤭

    ஊசி இணைப்பு,ஊசிகுறிப்பு அருமை.

    என் வேண்டுகோளுக்கு இணங்கி ரெசிப்பி அவசரமா,ஆனா அழகா எழுத்தியமைக்கு 🌹 🌹 🌹 மிக்க நன்றி, Thank you, Danke schön 🌹 🌹 🌹

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      ////கொளித்தெடுத்துக்// இது பிழை. இந்த ழ்,ள் உங்களுக்கு பெரிய பிரச்சனை. அதில் கொழித்தெடுத்தல் என ழ தான் வரவேணும். ///

      அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

      //அது நமுத்து போகாமல் இருக்க டிப்ஸ் சொல்லுங்கோ . (வாழைக்காய்,மரவள்ளி,இராசவள்ளி கிழங்கில் செய்தால்..சில நேரம் அப்பளமும் கூட..)///

      1). பொதுவாக பொரியல் வகைக?லுக்குப் புது எண்ணெய்தான் பாவிக்கோணும், பொரித்த எண்ணெயில் மீண்டும் பொரிக்கும்போது எண்ணெயைக் குடிக்கும்+ சொவ்ட்டாக வரும், மொறு மொறுப்பு இருக்காது.

      2). எண்ணெய் நன்கு கொதிக்க முன்பு பொரிக்க வெளிக்கிட்டால், எண்ணெய் கொதிக்கும்வரை அது கிழங்கில் ஊறி, மொறு மொறுப்பு வராது.

      3). பொதுவாக வாழைக்காய் கொஞ்சம் ஆறினாலே சொவ்ட்டாகிடும். பப்படம் பொரித்து ஒரு பேப்பரில் போட்ட ஒரு நிமிடத்திலேயே ஒரு சொப்பிங் பாக்கில் அல்லது ரின்னில் அடைத்து விடுவேன், அவிச்ச மிளகாயும் இப்படிச் செய்தால், 2 நாட்களுக்குக்கூட மொறுமொறுப்பாக இருக்கும், காற்றுடன் கலந்து ஆறி விட்டால் நமுத்து விடும்[ஐ இது எனக்கு புதுப்பாசை, ஆனாலும் புரிஞ்சு கொண்டேன், பிக்கோஸ் மீக்கு டமில்ல டி எல்லோ:))..

      மரவள்ளிக்கி ழங்கு எண்ணெய் கொதிக்க முன் பொரிச்சிருப்பீங்க, அதுதான் அப்படி ஆகி இருக்கும், அல்லது நன்கு பொரிய முன் இறகியிருப்பீங்க, சோயா மீற்றும் இப்படித்தான் நன்கு பொரியமுன் எடுத்திட்டால், அவிந்திருக்கும் ஆனா மொறுமொறுப்பு இருக்காது, மற்றும்படி வத்தாளைக் கிழங்கெல்லாம் சொவ்ட்டாகத்தான் வரும் அதை ஒண்ணும் பண்ண முடியாது.. கத்தரி, பாவற்காய்ப் பொரியலைப்போல.

      மிக்க நன்றி அம்முலு பொன் வொயாஜ்:)..

      Delete
  24. படத்துல தக்காளிப் பழம் மாதிரி சைனா பழம் இருக்கே. அதைச் சாப்பிட்டிருக்கீங்களா? எனக்கு என்னவோ அந்தப் பழம் பார்ப்பதற்கே பிடிக்கலை என்பதால் சாப்பிட்டதே இல்லை.

    தட்டுல விபூதிப் பொட்டணமா இல்லை சீனிப் பொடியா? (சாமிக்கு அரியதரம் இனிப்பு குறைவா இருக்குன்னு தோணினால் சீனிப் பவுடர் தூவிச் சாப்பிடுவதற்காக வைத்தீர்களோன்னு நினைத்தேன் ஹா ஹா ஹா)

    ReplyDelete
    Replies
    1. அது சைனாப் பழமோ? இல்லையே? இதில் பாருங்கோ... அந்த சுவை பெரிதாகப் பிடிப்பதில்லை, இருப்பினும் சாப்பிடுவதுண்டு, நெடுகவும் அப்பிள் ஒரேஜ் என சாப்பிடாமல், கண்ணில் காணும் பழங்களை மாத்தி மாத்தி வாங்குவதுண்டு..

      [im] http://eathealthylivefit.com/wp-content/uploads/2013/12/Persimmons-eathealthylivefit_com.png [/im]

      Delete
    2. //தட்டுல விபூதிப் பொட்டணமா இல்லை சீனிப் பொடியா//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது காப்புடன் வந்த திருநீறு, குங்குமப் பக்கட்:) ஆக்கும்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் நெ.தமிழன்.

      Delete
  25. அரியதரம் ரெசிப்பி அதிரசம் என்பதை அரியதரம் என்று சொல்வீற்கள் போல!
    சுவாமி அறைக்குப் போய்க் கும்பிடலாம்.//
    உங்கள் பூஜை அறைக்கு வந்து சுவாமியை கும்பிட்டேன்.
    இலங்கையில் கதிர்காம கோவிலில், மற்றிம் சில சிவன் கோவிலில் பழத்தட்டுக்களில் இப்படி எல்லா பழங்களையும் வெட்டி வெட்டி வைத்து விற்றார்கள். சின்ன பழதட்டு, பெரிய தட்டு எல்லாம் விற்றார்கள்.
    நீங்களும் வெட்டி வைத்து இருக்குறீர்கள்.

    சீனீ பாகு வைக்காமல் அப்படியே போட்டு செய்வதால் இளைதாக இருக்கும். அரிதட்டு பொடி ரவை, பெரிய குருணை சைஸ் ரவை, மாவு என்று பலவிதங்களில் மாற்றி மாற்றி போடும் அரிதட்டுகள் உண்டு தானே! அதை வைத்து அரித்தெடுத்து கொள்ளலாம்.
    கொஞ்சம்
    தட்டையாக தட்ட வேண்டாமோ இப்படி குண்டாகவே தட்ட வேண்டுமோ அப்பதுதான் நன்றாக இருக்கும் இல்லையா?

    உங்கள் பக்குவத்தில் செய்து பார்க்கிறேன்.

    விரததிற்கு 21 என்று அதிரசம் செய்வார்கள். ஒற்றைபடையில் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பார்கள் எங்கள் பக்கத்து வீட்டில் (மாயவரத்தில்)

    நீங்கள் எப்படி?
    இரண்டு விரதங்களும் இறைவன் அருளால் நிறைவாக செய்து விட்டீர்கள்.
    இறைவன் எல்லா நலங்களையும் தரட்டும் உங்கள் குடும்பத்திற்கு.

    காரத்திற்கு சிப்ஸ் நன்றாக இருக்கும். சீனீ கிழங்கு, சர்க்கைரை வள்ளிக்கிழங்கு என்று சொல்லுவோம்.
    ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.

    மீண்டும் பயணமா?

    மகிழ்ச்சியாக சென்று நலமே வந்து பதில் தாருங்கள்.
    வாழ்க வளமுடன்.







    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. ஓ நீங்க கதிர்காமம் போயிருக்கிறீங்களோ? அங்கு செல்லக் கதிர்காமம் கோயிலைச் சுற்றி தண்ணி ஓடும் கற்களின் மேல்.. பார்க்கவும் அந்த கோயில் மண்டபத்தில் இருப்பதிலும் ஒரு சுகமே.

      நாங்கள் எப்பவும் பழங்களை வெட்டித்தான் வைப்போம் கோமதி அக்கா, வாழைப்பழத்துக்கும் தண்டுப்பகுதியையும் அடிப்பகுதியையும் வெட்டியே வைப்போம்.

      தனிக்குருணலாகவும் இருக்கக்கூடாது, மாவுடன் சேர்ந்து இருக்கோணும், அதனாலேயே அரித்து எடுக்கிறோம்.

      நான் குண்டாகத் தட்டவில்லை கோமதி அக்கா, தட்டையாகத்தான் தட்டிப் போடுவோம், அது எண்ணெயில் மூழ்கியதும் குண்டாக எழும்பிடுது:)).. அப்படி எழும்பினால்தான் சொவ்ட்டாகும் பூரியைப்போல..

      அதேதான் கோமதி அக்கா, நிறையச் செய்வோம் ஆனா படைப்பது மட்டும் எண்ணி 21.

      இரண்டு விரதம் அல்ல நவராத்திரியுடன் சேர்த்து 3. எதற்காக இப்படி அடுத்தடுத்து அனைத்தையும் ஒன்றாக வைத்தார்களோ.. நல்லவேளை நான் பிள்ளையார்கதை பிடிப்பதில்லை, முன்பு திருவெம்பாவையும் பிடிச்சேன் வெளிநாடு வந்து விட்டு விட்டேன். எங்கள் அம்மா எல்லாமும் பிடிப்பா.. அதனால தொடர் விரதம்தான்.

      பயணம் இல்லை கோமதி அக்கா. இங்கு ஸ்கூல் ஹொலிடே இன்னும் விடவில்லை, எனக்கு ஸ்கூல் தொடர்ச்சியாக வேலை இருந்தது அதனாலதான் முடியாமல் போயிற்று.

      Delete
    2. செல்லக்கதிர்காமம் ஆறு ஓடுவதும் மண்டபமும் அருமையாக இருக்கும் படங்களுடன் பதிவு செய்து இருக்கிறேன்.
      வள்ளி ஓடி விளையாடிய இடங்களையும் பார்த்தோம்.
      அதுதான் வள்ளி கிழங்கு அங்கு மிகவும் சிறப்பு.

      Delete
  26. முத்துராமன் மாமாவின்
    மூத்த மகன் பாடுறாராக்கும்:)//

    வாய் அசைக்கிறார் அருமையாக.

    பாடல் இனிமை.

    ReplyDelete
    Replies
    1. //வாய் அசைக்கிறார் அருமையாக.
      //
      ஹா ஹா ஹா.. மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  27. அட அட ..அடுத்த புது ரெசிப்பி ..

    நியாபகத்தில் வச்சிகிறேன் ..முடியும் போது செஞ்சு பார்க்கலம் .

    ரொம்ப சுலபமா இருக்கு அதிரா...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ, இது ரொம்ப ஈசி.. மிக்க நன்றி.

      Delete
  28. Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன் .. மிக்க நன்றி.

      Delete

  29. மாவிளக்கு மாவை எடுத்து எண்ணையில் பொரிச்சால் அரியதரம் ஆகிவிடுமா?
    அதிரசத்திற்கும் அரியதரத்திற்கும் என்ன வித்தியாசம்?
    Jayakumar​​

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ.. மா விளாக்கு மாவோ? மாவிளக்கு நான் தினையில் எல்லோ செய்தேன்...

      இரண்டும் ஒன்றுதான் பெயர்தான் ஒன்று இந்தியா மற்றது சிறீ லங்கா.. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

      Delete
  30. அதிரா இதை இந்த சீனி அரியதரத்தை என் பாட்டி செய்வதுண்டு. ஆனால் அரிசி இனிப்பு போண்டா என்று சொல்லி செய்வார். நல்லாருக்கும் இனிப்பு பிடிப்பவர்களுக்கு. என் பாட்டி இதில் கொஞ்சம் ஏலம் சேர்ப்பார். சில சமயம் தேங்காய் கீறிப்போட்டும்...வெல்லம் கலந்து செய்தால் அப்பம்...

    சீனிக் கிழங்கில் பல ரெசிப்பிஸ் செய்யலாம். அவித்து , இல்லை நீங்க செய்திருப்பது போல பிரட்டி, இப்படி பிரட்டல் உ கி, சேனை கி, சேம்பு, எல்லாத்துலயும் செய்வதுண்டு. அப்புறம் சீனிக் கிழங்கு அவித்து ஸ்டஃப்ட் சப்பாத்தி, போளி என்று குழம்பு, கத்தரியுடன் போட்டு கூட்டு, தனியாக பொரியல் என்று பல டிஷ்..

    மீம்ஸை மிக மிக ரசித்தேன்...அதனாலதான் ஸ்ரீராம் பிள்ளையார் ஏன் ஒல்லியானார் நு தெரிஞ்சு போச்சு...ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...

    பாட்டு நல்ல பாட்டு அதிரா...எனக்குமிகவும் பிடிக்கும்...
    அப்பாவி பூஸார் ஹையோ செம க்யூட்!!!! தூக்கி எடுத்துக் கொஞ்சனும் போல இருக்கு...

    ரசித்தேன் அதிரா...

    கும்மி அடிக்க முடியலை....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. நீங்க சன்பார்த் எடுக்கப்போனதால லேட் எனத் தெரியும்:)) ஹா ஹா ஹா.. தாமதமானாலும் வருகை தந்தது மகிழ்ச்சி.. மிக்க நன்றி.

      Delete
  31. வானம் இடி இடிக்க..பாடல் சுமாரான பாடல். கே...... ட்பதுண்டு... அவ்வளவு பிடித்தமான பாடல் இல்லை. இதே படத்தில் இன்னொரு பாடல் மிக நன்றாய் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஓ படம் நான் பார்த்ததில்லை இன்னமும்..

      Delete
  32. கடைசிவரை அரிய தரம் என்கிற வார்த்தை எதற்கு வருகிறது என்று புரியவில்லை. ஸூப்பர் குவாலிட்டி என்று பொருளா?!!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதுதான் புரியவில்லை:)

      Delete
  33. பார்க்க நன்றாய் இருக்கிறது. அளவான தித்திப்பாய் இருந்தால் வாய்க்கும் இதமாய் இருக்கும். எண்ணெயில் பொறிப்பது உடல்நலத்துக்கு உகந்ததா? (உகாண்டா என்று படிக்கவேண்டாம்!)

    ReplyDelete
    Replies
    1. அது இந்த விரதத்துக்கு இப்படிச் செய்துதான் நோன்பு நோகுமாமே.. உங்களுக்கு எப்படி விரதமுறைகள் பாரணை எல்லாம் தெரியாமல் இருக்கு?:).. ஆச்சரியக்குறி..:)

      Delete
  34. விரதங்கள் முடித்தது குறித்து சந்தோஷம். பொறுப்பாய், பொறுமையாய் கடைப்பிடித்திருப்பதற்குப் பாராட்டுகள். சர்க்கரை வள்ளிக்கிழங்கின்மீது எனக்கு பெரிய ப்ரியமில்லை!

    ReplyDelete
    Replies
    1. எங்கள் வீட்டிலும் பிறியமில்லை:)) சின்னவருக்கு மட்டுமே பிடிக்கும்..

      Delete
  35. எனக்கான மீம்ஸை ரசித்தேன். பின்னாலிருந்து பார்க்கும்போதே வடிவேலு என்று தெரிகிறது. ஊசிக்குறிப்பையும் ரசித்தேன். எந்த இடத்தில இருந்தாலும் சந்தோஷம் முக்கியம்.

    ReplyDelete
  36. எனக்கும் சில பிரச்னைகள். எனவே இணையத்துக்கு வரமுடியவில்லை. இனிதான் அரியர்ஸ் முடிக்கவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. பிஸியாக இருக்கிறீங்க எனத் தெரியும், என்னைப் பொறுத்து நாம் புளொக் எழுதுவது ஒரு சந்தோசத்துக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் மட்டும்தானே.. அப்போ ஏன் கஸ்டப்பட்டு டென்சனாகி, வேலையோடு புளொக்கிலும் போராட வேண்டும்? இடைக்கிடை விடுமுறை எடுத்து தொடரலாமே...

      மிக்க நன்றிகள் வரவுக்கு ஸ்ரீராம்.

      Delete
  37. சுவையான குறிப்பு.

    சுலபமாகத் தான் இருக்கிறது. முடிந்தால் செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் . மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.