நல்வரவு_()_


Sunday 11 November 2018

 “எங்கள்புளொக்” இலிருந்து ஒரு  “நூல்வேலி”

ப்போ அதிராவின் போஸ்ட் தலைப்புப் பார்த்தாலே ரென்ஷன் வந்திடுதே:)) ஹா ஹா ஹா.. ஆரும் பயப்பிட்டு ஹார்ட் அட்டாக் வர வச்சிடாதையுங்கோ, எல்லாம் நல்ல விசயம் தான்:)..  ஹா ஹா ஹா:)).
நான் இப்போதெல்லாம் ஸ்ரீராமின் வெள்ளிக்கிழமைப் போஸ்ட் பார்த்து, அதை வைத்தே சில பழைய படங்கள் பார்த்து வருகிறேன், அந்த வகையில் சமீபத்தில் “சிலநேரங்களில் சில மனிதர்கள்” பார்த்தேன், ஒரு வித்தியாசமான, விறுவிறுப்பான, போரடிக்காத கதை.

அதன் பின்பு “நூல்வேலி” யை அறிமுகப்படுத்தியிருந்தார், எனக்கு எப்பவும், பாட்டுப் பிடிச்சிருந்தால், அல்லது படத்தின் தலைப்புப் பிடிச்சிருந்தால், உள்ளே போய்ப் படம் பார்க்கும் எண்ணம் வரும். அந்த வகையில் இப்படம் எனக்கு மிகவும் பிடிச்ச சரத்பாபு அங்கிளும்:).. சுஜாதா அன்ரியும்:) நடிச்சது என்றதும், பார்க்கும் ஆர்வம் அதிகமாச்சு.. அவர்களோடு சரிதாவும்.., அப்போ சொல்லவா வேண்டும்.. சரி பார்ப்போமே என ஆரம்பித்தேன்.

இப்படத்தில் நம் எல்லோருக்குமே தெரிந்த ஒரு பேமஸ் ஆன பாட்டு இருக்கு.. “மெளனத்தில் விளையாடும் மனச் சாட்சியே...”.. இதை பல நூறு தடவைகள் சின்ன வயதிலிருந்தே ரேடியோவில் கேட்ட்டிருக்கிறேன், ஆனால் படம் என்ன எனத் தேடிப் பார்க்க நினைத்ததில்லை.

அம்மாவோடு தனியே வாழ்ந்து வரும் ஒரு 16,17 வயது ஸ்கூல் போகும் சுட்டிப் பெண்ணாக சரிதா.. அவர்கள் பக்கத்து வீட்டுக்கு, சரத்பாபுவும் மனைவி சுஜாதாவும் குடி வருகிறார்கள், ,  அவர்களுக்கு ஒரு 10,12 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை.

இந்த சரிகா சுட்டிப் பெண் என்பதால், மதிலில் ஏணி வைத்து ஏறி இருந்து பக்கத்து வீட்டுக்கு குடி வந்தவர்களின் வேலைக்காரரை மிரட்டுகிறார், அவரோடு சேட்டை பண்ணுகிறார்.

இச்சேட்டை கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி, சரத்பாபுவையும் சுஜாத்தாவையும் கவர்ந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கும் சரிதா ஒரு செல்லப் பெண்ணாகி விடுகிறார்.

அங்கிள் ஆன்ரி என அவர்களை உரிமையோடு அழைக்கிறார், வீட்டுக்குள் போய்ப் பழகி வருகிறார்.

இங்கு ஒன்று சொல்ல விருப்பம் எனக்கு. என்னதான் சுட்டி எனினும், நல்ல பெண்ணாக இருப்பினும், ஒரு கொன்றோல் தேவை, ஆனா அந்தக் கொன்றோல், சரிதாவின் தாயிடமிருந்து சரிதாவுக்குக் கிடைக்கவில்லை, சுட்டிப்பெண் என்பதனால கண்டிப்பு இல்லாமல் வளர்கிறார். அதற்காக தப்பான பெண் அல்ல, ஆனா பக்கத்து வீடாயினும் ஒரு அளவு கோல் வைத்துப் பழகக் கற்றுக் கொடுக்கவில்லை.

அங்கு சரத்குமாரும் சுஜாதாவும், மிக அந்நியோன்னியமான தம்பதிகள், மிகவும் அன்பாக ஒருவரை ஒருவர் அனுசரித்து நடக்கின்றனர்... ஒரு நல்ல கணவன் மனைவிக்கு எடுத்துக் காட்டான குடும்பமாக இருக்கிறார்கள்.

இங்கு சுஜாதா கொஞ்சம் தன் கடமையிலிருந்து தவறி விடுகிறார் என்றே சொல்வேன், அதாவது தன் கணவன்,  என்னதான் ராமனாக இருப்பினும், நல்லவராக இருப்பினும், ஒரு மனைவி சில சமயங்களில் கணவனைக் கொஞ்சம் கண்டித்து வைப்பதே நல்லது என நான் எண்ணுவேன். அதுக்காக சந்தேகமோ தவறான கண்ணோட்டமோ கணவனில் இருந்திடக்கூடாது, ஆனா எப்பவும் எதிலும் ஓவர் வெள்ளாந்தி மனைவியாகவும் இருந்திடக் கூடாது[இது கணவன்மார்களுக்கும் பொருந்தும்].

ஏனெனில், முன்பு எங்கோ வாசித்திருக்கிறேன்[கண்ணதாசன் அங்கிள் சொன்னவர்], ஆண்கள் பொதுவாக பொறுப்பின்றி, விளையாட்டுப் பிள்ளையாகத் திரிவார்கள், அவர்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள், பொறுப்புணர்வுக்குள் கொண்டு வருவதற்காகவும் ஏற்படுத்தப் பட்டதே திருமணம் என.
பெண்கள் செண்டிமெண்ட்டுக்கு - உணர்வுகளுக்கு அதிகம் அடிமையானவர்கள், ஆண்கள் இலகுவில் சபலப்பட்டுவிடக் கூடியவர்கள். ஆளானப்பட்ட விசுவாமித்திரரே இதுக்கு உதாரணம்:).

அதனால சில விசயங்களில் மனைவி, ஒரு எல்லை உருவாக்கி வைத்திருப்பதே நல்லது. சின்னப் பெண் தானே, பெரியவர் தானே என்றெல்லாம் கணக்குப் போட்டிடாமல் எதுக்கும் ஒரு லிமிட் உருவாக்கி வைத்திருப்பது நல்லது என்றே பல விசயங்களைப் பார்க்கும் போதும், கேட்கும் போதும் தோணுது.
--------------------------------------------------------------------------------
முன்பு ஒரு படம் வந்துது “சார்லிசப்ளின்” என நினைக்கிறேன்... அதில் மூன்று விதமான ஜோடிகளை வைத்துப் படம் எடுத்திருப்பார்கள்.. அதில்தான் ஒரு பாட்டு வரும் ..”சும்மா சும்மா அஞ்சு மணிக்கு.. சும்மா சும்மா அவளும் நானும்..”.. இப்படி, இப்படம் வந்தது 2000 ஆண்டின் பிற்பகுதி என நினைக்கிறேன், அப்போ எங்கள் மூத்தவர் 5,6 மாதக் குழந்தை, இப்பாட்டைப் போட்டு விட்டால், நம் கையைப் பிடித்துக் கொண்டு துள்ளித் துள்ளி ஆடுவார்...

அதில் ஒரு ஜோடி, மனைவி மிகவும் அப்பாவி, வெள்ளாந்தியானவர்.. கணவனை 100 க்கு 200 வீதம் நம்புவார், இதைச் சாட்டாக வைத்தே கணவன் சில பெண்களோடு விளையாடுவார்.

ஆனா இன்னொரு ஜோடி, கணவனோ மிக மிக தங்கமானவர் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத பதிவிரதர்:).. ஆனா அவரின் மனைவியோ.. படு சந்தேகக்காரி.. அதனால அவர் படும் பாடு சொல்லி முடியாது.. ஹா ஹா ஹா.

இதிலிருந்து அவர்கள் சொல்ல வருவது யாதெனில், எதுக்கும் ஒரு எல்லை வேண்டும்.. இப்படியும் இருக்கக்கூடாது.. அப்படியும் இருந்திடக்கூடாது என்பதே.
ஆவ்வ் என் நாரதர் கலகத்தை மெதுவா ஆரம்பிச்சு விட்டேன்ன்ன்ன்:))
------------------------------------------------------------------------------------

அப்படித்தான் இக்கதையில் வரும் சுஜாதா ஒரு வெள்ளாந்தி.., ஓவராக சரிகாவுக்கும் இடம் கொடுக்கிறார், சரத்பாபுவுக்கும் எதுவும் சொல்வதில்லை. கொஞ்சக் காலத்தில் சரிகாவின் அம்மா திடீரென இறந்துவிட, சரிகாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து, நீ எங்கள் மூத்த மகளாக இங்கிரு என தம்மோடு இருத்தி, ஒரு ஹொஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கிறார்.

எல்லோரும் நல்லவர்கள்தான், தங்கமானவர்கள்தான்.. யாரிலும் எக்குறையும் சொல்ல முடியாதுதான், சரிகா ஓவராக ஒட்டிப் பழகுகிறா அங்கிள் அன்ரி என...

ஆரம்பம் முதலே எனக்கு திக் திக் என இருந்துது.. போகிற போக்கைப் பார்த்தால் பிரச்சனையாகிடுமோ என உள்ளுணர்வு சொல்லியது.. ஹா ஹா ஹா.. அதேபோல ஒருநாள் திடீரென தனியே வீட்டில் இருந்தபோது சலனப்பட்டு சரிகாவோடு தப்பு நடந்து விடுகிறது.. இதனை அந்நேரம் வீட்டுக்கு வந்த மனைவி சுஜாதாவும் அவர்களின் மகளும் நேரில் பார்த்து விடுகின்றனர்.

வீடே மயான அமைதியாகி விடுகிறது. இதனை எப்படி ஹண்டில் பண்ணுவது என சுஜாதாவுக்குத் தெரியவில்லை, ஆனா ஒன்று மட்டும் அவவுக்குப் புரிந்தது, இது வேண்டுமென்றோ அல்லது பிளான் பண்ணியோ நடந்த தப்பு அல்ல, ஏதோ சந்தர்ப்பம் சூழ் நிலையால் நடந்த தவறு ஆகிவிட்டது, இனி அப்படி நடக்காது, அதனால பழையபடி எல்லோரையும் ஒன்றாக்கி, இப்படி நடந்ததை மறக்கப் பண்ணுவோம் என எண்ணுகிறார்.

ஆனாலும் சுஜாதாவால் முடியவில்லை, தன் தந்தையிடம் போய் சொல்லி அழுகிறார், அப்போ தந்தை வந்து இருவரோடும் தனித்தனியே பேசுகிறார், அதுக்கு சரத்பாபு சொல்கிறார், எனக்கு சரிதாவைப் பிடிச்சிருந்தது அதனாலகூட தப்பாகி இருக்கலாம் என்பது போல, அதே நேரம் சரிதா சொல்கிறார், தான் எப்பிரச்சனைக்கும் வர மாட்டேன் இக்குடும்பத்தில், ஆனால் சரத்பாபுவின் நினைவோடுதான் வாழ்வேன் என.

இதனால அப்போதுதான் டென்சனாகிறார் சுஜாதா. உடனே சரிகாவுக்கு எங்காவது திருமணம் செய்து வைப்பதுதான் சரி என போய்ப் பேசுகிறார். அதுக்கு சரிகா சொல்கிறார்.. “அன்ரி நான் உங்கள் வாழ்க்கையில் குறுக்க வரமாட்டேன், அவர் உங்களுக்குத்தான் சொந்தம், ஆனால் அவரின் நினைவுகள் எனக்குச் சொந்தம், அந்நினைவுகளோடுதான் நான் வாழ்வேன், இனி ஒரு மணம் முடிக்க மாட்டேன்” என.

இதனால கோபமாகிறார் சுஜாதா. சரத்பாபுவோடு போய்ப் பேசிப்பார்க்கிறார், அவரோ எதுக்கும் எந்தப் பதிலும் சொல்லாமல், தான் செய்தது தப்பு என்பது போல மட்டும் சொல்கிறார்.

இதேநேரம், சுஜாதாவின் தம்பிக்கு சரிகாவில் விருப்பம், என்ன தப்பு நடந்திருந்தாலும் தான் ஏற்றுக் கொள்கிறேன் என்னை மணம் முடி எனக் கேட்கிறார், ஆனா அந்நேரம் சரிதா, பிரக்னெண்ட் ஆகி விடுகிறார்.., குழந்தையோடு ஏற்கிறேன் என்கிறார் தம்பி. ஆனாலும் ஒரே கசமுசக் குழப்பமாகிவிடுகிறது வீடு ஹா ஹா ஹா.. எனக்கோ ஒரே டென்ஷன்.. ஹா ஹா ஹா.. அடுத்து என்னாகுமோ என விறுவிறுப்பாகப் போன ஒரு படம்..

சரிதா எதுக்கும் ஒத்து வராமல் தன் குழ்ந்தையைப் பெற்று வளர்க்கப்ப்போகிறேன் என வீட்டை விட்டுப் போக, சுஜாதா தன் மகளோடு தன் தந்தை வீட்டுக்குப் போக, சுஜாதாவின் தம்பியோ, சரிதாவின்பெயரில் ஒரு கிளினிக்கை திறந்து வைத்து திருமணம் முடிக்காமல் தனியே வாழ, சரத்பாபு மட்டும் அவ்வீட்டில் தனியே.. இப்படி காலம் உருண்டு ஓடுகிறது, ஆனால் அந்த ஒருநாள் தவறி நடந்த ஒரே ஒரு தப்புத்தான் அதன் பின்னர், கொஞ்சம்கூட சரத்பாபுவோ, சரிதாவோ சபலப்படவில்லை, ... 

சரிகாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து 2 வயதாகிறது... எல்லோரும் எங்காவது சந்திக்கும்போது நோர்மலாகப் பேசி விட்டுப் பிரிகிறார்கள் கோபமில்லாமல்.

இதைப் பொறுக்க முடியாமல், சுஜாதாவின் தந்தை, சரிதாவைச் சந்திச்சு சொல்கிறார்.. இந்தக் குடும்பத்தை உன்னால்தான் ஒன்று சேர்க்க முடியும், நீ நல்ல முடிவெடு என...

முடிவை எடுக்கிறார் சரிகா... சுஜாதா சரத்பாபுவை ஒன்றிணைச்சு வைக்கிறார்.. ஆனா அவர் எடுக்கும் முடிவு?.. அது ஜொள்ள மாட்டேனே:)).. படம் பாருங்கோ.. ஆனா அஞ்சுவும் கீதாவும் அவதிப்பட்டு.. கீழிருந்து மேலே போகிறேன் பேர்வழி என முடிவு பார்த்திடக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

என்னைப் பொறுத்து சரிதாவின் முடிவு சரி எனச் சொல்ல மாட்டேன், ஆனா  அவரால முடியவில்லை, அதனால் எடுத்த முடிவுதான்  “அது” என மனம் எண்ணுது..
======================சுபம்_()_=======================

தொட்டுக் - கெட்டவர் ராமன்
தொடாமல் - கெட்டவர் இராவணன்
இட்டுக் - கெட்டவர் இந்திரன்
இடாமல் - கெட்டவர் சந்திரன்
மயங்கிக் கெட்டவர் - விசுவாமித்திரர்...

மொத்தத்தில கெட்டதெல்லாம்..... “ஆண்கள்”..:)
தொட்டதெல்லாம் .....   “பெண்கள்”..:)

ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ஹா ஹா ஹா:).
()()()()()()()()()()()******()()()()()()()()()()()

ஊசி இணைப்பு:

ஊசிக் குறிப்பு:
()()()()()()()()()()()***_()_***()()()()()()()()()()()

130 comments :

 1. சஷ்டி விரத நேரத்தில் பார்க்கும் படமா?
  படத்தைப் பார்த்து அதற்கு விமர்சனம் வேறு.
  அதிராவை காணவில்லை என்று தேடியவர்களிடம் எல்லாம் அதிரா சஷ்டி விரதம் இருக்கிறார். நம் எல்லோருக்கும் நலம் வேண்டி என்றேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ...

   ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ் மாட்டிக்கிட்டேனா:) இல்ல கோமதி அக்கா இது சஷ்டிக்கு முன் பார்த்த படம், சில படம் பார்த்தால் அதுபற்றி அலசோணும் எனும் ஆர்வம் வந்துவிடுகிறது அதனாலேயே இது:)..

   //அதிராவை காணவில்லை என்று தேடியவர்களிடம் எல்லாம் அதிரா சஷ்டி விரதம் இருக்கிறார். நம் எல்லோருக்கும் நலம் வேண்டி என்றேன்.///

   ஆவ்வ்வ்வ் எல்லோருக்கும் கந்தன் அருள் புரியக் கடவது... எல்லோரும் நலமோடும் மகிழ்வோடும் இருந்தால்தான் அதிராவும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

   கந்த சஷ்டி கவசம் கொம்பியூட்டரில் ரிப்பீட்டில போய்க் கொண்டிருக்குது:)

   Delete
  2. சஷ்டி க்கு முன்ன பார்த்தாலும் review வந்தது இப்போ தானே அதிரா...

   நல்லா கேளுங்க கோமதி மா..

   உங்க பதிவு பார்த்து ஆசையா நானும் முருகன் பத்தி போட்டா அதிரா சினிமா பத்தி போடுறாங்க..

   Delete
  3. நான் கேட்ட கேள்விக்கு இங்கு பதில் பார்த்துட்டேன்...நீங்க இப்ப நான் என்ன கேள்வி அப்பூடி கேட்டுட்டேன்னு நினைச்சா கீழ் போகோணும் ஹா ஹா அஹ் பாய்ந்து பார்த்துட்டு வாங்க...

   கீதா

   Delete
  4. ஆஆஆஆவ் இடையில அனு வந்திருக்கிறா, நான் கவனிக்கத் தவறிட்டேன்.. வாங்கோ அனு வாங்கோ..

   //சஷ்டி க்கு முன்ன பார்த்தாலும் review வந்தது இப்போ தானே அதிரா...
   நல்லா கேளுங்க கோமதி மா..///

   ஆவ்வ்வ்வ்வ் விரத காலத்தில கடவுள் நம்மை அதிகம் சீண்டி கோபப்பட, கஸ்டப்பட வைப்பாராம் ஆனா நாமதான் ஸ்ரெடியா இருக்கோணும் என அம்மம்மா ஜொள்ளியிருக்கிறா:)) ஆவ்வ்வ்வ்வ்.. சரி ஜமாளிச்சிடலாம்:).. அது ரிவியூ எழுதினது முன்பு:) பப்ளிஸ் பட்டினைத் தட்டி விட்டதுதான் இப்போ:)) ஹா ஹா ஹா..

   //உங்க பதிவு பார்த்து ஆசையா நானும் முருகன் பத்தி போட்டா அதிரா சினிமா பத்தி போடுறாங்க..//

   ஹா ஹா ஹா.. முருகன் என்ன ஜொன்னார்ர்?:) கடவுளையும் வணங்குங்கோ பாடத்தையும் படிங்கோ என்றார்:).. அப்போ மீ செய்தது கரீட்டுத்தானே:))..

   நன்றி அனு..

   Delete
  5. என்னாதூஊஊஊஊஉ கீதாவுக்கும் கிளவி சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே.. கேள்வி வருதோ?:)).. கேள்விகளை ஸ்ரீராமிடம் கேய்க்கவும்:).. கீதா மேலே பாட்டுப் போட்டிருக்கிறேன் பார்க்கலியோ?:)) நண்பிகள் சார்பாக டெடிகேட்:)) ஹா ஹா ஹா..

   Delete
 2. நான் இந்த படம் பார்க்கவில்லை, பார்க்கும் எண்ணமும் இப்போது இல்லை.
  ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.
  பாடல் வரவில்லை.
  மீண்டும் வந்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் படம் பார்த்திருப்பீங்கள் என நினைச்சேன் கோமதி அக்கா. மிக்க நன்றி .. பாட்டுக் கேளுங்கோ அனுஸ்:) எப்படி டான்ஸ் ஆடுகிறார் எனவும் மறக்காமல் பாருங்கோ:).. மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

   Delete
  2. பாட்டு கேட்க முடியவில்லை ஏன் என்று தெரியவில்லை. சஷ்டி என்று அதிராவை கோப்பித்து கொண்டாயே! உனக்கு எதற்கு என் பாட்டு என்று அனுஷ்கா கோபித்துக் கொண்டார் போல அவர் சமாதானம் ஆன பின் வருகிறேன்.

   Delete
  3. கீழே குடுத்திருக்கிறேன் கோமதி அக்கா லிங்.. அனுக்காவுக்கு கோபமோ?:) என் மேலோ?:) சே..சே.. அவவுக்கு கோபமில்லை.. ஆனா ஸ்ரீராமுக்குத்தான்.........:)) ஹா ஹா ஹா.

   Delete
 3. சந்தர்ப்பம்கிடைக்கும்போது எந்த ஆணும் தவறுவதுசகஜம் எனக்கு ஒரு டவுட் சரிகாவா சரிதாவா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..

   //சந்தர்ப்பம்கிடைக்கும்போது எந்த ஆணும் தவறுவதுசகஜம்//
   இது பொதுவான கருத்துத்தானே ஆனா நிறைய விதி விலக்கானோரும் உண்டுதானே.

   சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுமே பலசமயம் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது..

   ஹா ஹா ஹா எனக்கும் அதே டவுட்தான்.. சரிகா என்றே பல இடத்தில் எழுதி பின்பு மாற்றினேன்.. ஆனா சரிகா என்பது கமல் அங்கிளின் மனைவி, சரிதாதான் சரியென நினைக்கிறென்.

   மிக்க நன்றி.

   Delete
  2. ஆஹா நானும் இதைச் சொல்லிருக்கேனே....அதிரா அது சரிதா....

   மாற்றுங்க...

   கீதா

   Delete
  3. ஓ டாங்கூஊ கீதா.. எனக்கு கை தானாக ரைப் அடிச்சுது சரிகா என.. அதேபோல சரத்பாபு என்பது சரத்குமார் எனத்தான் வருது:)..

   Delete
 4. அப்புறமாட்டிக்கு வர்றேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. அப்புறமாட்டியும் ஹா ஹா ஹா வாங்கோ.

   Delete
 5. உங்களை சொல்லி குற்றமில்லை... ஸ்ரீராம் சாரிடம் பேச வேண்டும்... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ:))
   ஹா ஹா ஹா.. நல்லவேளை நான் தப்பிச்சேன்ன்ன் “எய்தவர் இருக்க அம்பை நோகலாமோ”:).. அதோ ஸ்ரீராம் இப்போ மேசைக்குக் கீழே:)) ஹா ஹா ஹா மீயும் ஓடித் தப்பிடுவோம்.. இது என்ன பிள்ளையார் பிடிக்கப்போய், மங்கியா மாறின கதையாகிடப்போகுதே:))

   [im] https://media.giphy.com/media/3ov9k53PdxeLXjnpIs/giphy.gif [/im]

   Delete
  2. அதிரா ஸ்ரீராம் கோர்ட்டில என்ன பதில் சொல்லி கேஸிலிருந்து வெளிய வரணும்னு லீகல் கன்சல்டேஷன் நடத்திக்கிட்டிருக்கார் ஹா ஹா ஹா ஹா

   கீதா

   Delete
  3. டிடி ஹா ஹா ஹா ஆனா பாவம் ஸ்ரீராம் ஞானியின் சஷ்டி விரதத்தைக் கலைத்த பழி எதுக்கு அவருக்கு....ஹா ஹா அஹா

   ஞானிக்கு இருப்புக் கொள்ளவில்லை...இரண்டு நாள் சஷ்டி விரதம்னு காணலைனு பார்த்தா விரதம் தியானம் நடுவே ஓட்டைக் கண் போட்டு இங்க பார்த்ததும் கையும் வாயும் மனசும் துருதுருக்க....முடிலசாமீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயி முருகா மன்னிச்சுக்க கொஞ்சம் எட்டிப் பார்த்தூஊஊஊஊஊஊஉட்டு வந்துடுவேன் என்று சொல்லி குதிச்சுட்டார்...ஹா ஹா ஹா ஹா ஹா...

   கீதா

   Delete
  4. ///Thulasidharan V ThillaiakathuSunday, November 11, 2018 2:34:00 pm
   அதிரா ஸ்ரீராம் கோர்ட்டில என்ன பதில் சொல்லி கேஸிலிருந்து வெளிய வரணும்னு லீகல் கன்சல்டேஷன் நடத்திக்கிட்டிருக்கார் ஹா ஹா ஹா ஹா//

   ஹா ஹா ஹா கீதா, ஸ்ரீராமுக்கு நுளம்படிச்ச கேஸ் ஒண்ணு.. நூல்வேலிக் கேஸ் ரெண்டு என ஆச்சே:)) எல்லாம் அந்த முருகனின் திருவிளையாடல்தான் ஹா ஹா ஹா...

   ஆவ்வ்வ்வ்வ் டிடியும் படம் போட தொடங்கிட்டார்ர் ஹா ஹா ஹா..

   Delete
  5. ///ஞானிக்கு இருப்புக் கொள்ளவில்லை...இரண்டு நாள் சஷ்டி விரதம்னு காணலைனு பார்த்தா விரதம் தியானம் நடுவே ஓட்டைக் கண் போட்டு இங்க பார்த்ததும் கையும் வாயும் மனசும் துருதுருக்க.//

   ஹா ஹா ஹா கரீட்டாச் சொன்னீங்க கீதா, நான் எப்பவும் புளொக் பக்கம் போகாதுவிட்டால், ஓபின் பண்ணவே மாட்டேன்ன், அஞ்சுவுக்கும் சொல்லியிருந்தேன், இனி பாறணை முடிச்சுத்தான் புளொக் திறப்பேன் என, ஆனா காலையில் கொஞ்சம் ஃபிரீயா இருந்தேனா, மெதுவா என்ன போஸ்ட் பார்க்கலாம் என திறந்தனா.. அப்படியே நம்ம ஏரியாவும் தெரிஞ்சுதா.. களம் குதிச்சிட்டேன்ன்ன்.. பாரணை முடிஞ்சபின் போடலாம் எனத்தான் இதையும் நினைச்சிருந்தேன், ஆனா இன்றே போட்டிட்டேன் ஹா ஹா ஹா எல்லாம் அந்த திருத்தணிகைப் பழனியாண்டவரின் திருவிளையாடல்தானே:))

   Delete
  6. திருத்தணிகைப் பழனியாண்டவரின் திருவிளையாடல்தானே:))//

   உண்மைதான் . அவன் ஆட்டிவைக்கிறான், நாம் ஆடுகிறோம்.

   Delete
  7. ஹா ஹா ஹா கோமதி அக்கா, இன்றுகூட அண்ணியுடன் ஃபோனில் பேசும்போது ஏதோ கதையில சொன்னா, நாம் நமக்கு கடவுள் ஒன்றும் செய்வதில்லை என நினைக்கிறோம், ஆனா உண்மை அப்படியில்லை, அப்பப்ப நமக்குத் தெரியாமலேயே வந்து கைகொடுத்துக் காப்பாற்றி விட்டுச் செல்கிறார் என்றா.. யோசிச்சுப் பார்க்கையில் அது உண்மைதானே.. ச்சும்மா ச்சும்மா எல்லாம் வர மாட்டார்ர்.. நமக்கு நிட்சயம் தேவை எனும்போது, அவரே வந்து நின்று காப்பாற்றிடுவார்ர்..

   Delete
  8. பாறணைன்னா விரதமா? அதனால் பரவாயில்லை... அது வேற... இது வேற...

   Delete
  9. ஸ்ரீராம் உங்களுக்கு பாரணை எண்டால் என்ன எனத் தெரியாதோ? இது என்ன கொடுமை முருகா:).. நோன்பிருப்போர் விரதம் முடிந்த மறுநாள், நிறைய சோறு கறிகள் பொரியல் வடை பாயாசம் இப்படிக் கல்யாணச் சாப்பாடுபோல சமைத்து படைத்து சாப்பிடுவது.. அதுதான் விரதம் நிறைவுபெற்றதன் அடையாளம்.. இது எப்படித்தெரியாமல் போச்சு உங்களுக்கு ஆச்சர்யக்குறி!!:).

   Delete
 6. இந்த சரிகா//

  யாரங்கே செக் எங்கே போனீங்க...கானவே இல்லையே...இங்கன பாருங்கோ சரிகா மையம் மாஜி மனைவி இங்கு எங்கு வந்தார்....ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வாங்கோ கீதா வாங்கோ.. பாதி சரிகா.. பாதி சரிதா என மிக்ஸ்ட் ஆகியிருக்குது பாருங்கோ.. நினைவோடு எழுதும்போது சரிதா என எழுதினேன்.. உணர்ச்சிவயப்பட்டு எழுதும்போது சரிகா என ஆகிட்டுது ஹா ஹா ஹா.. மாத்தோணும்:).

   Delete
 7. அசோ...

  என்னமோ எனக்கு இப்படி வர கதையும். ...படமும் பார்க்க முடிறது இல்ல..

  சரிதா, சுஜாதா எல்லாம் பிடிக்கும் தான் ஆனாலும் tv ல யே இப்படி வந்தா பார்க்க மாட்டேன்..

  இந்த படம் எல்லாம் நான் பொறக்கும் முன்னே வந்தது..இப்போ வரதுயே பார்க்கவே முடில ..இதில் இவொலோ பழசா... பழசு கூட ok ஆன சோகமா வா..

  மீ வரல விளையாட்டுக்கு ..

  மீ very பாவம்..

  இந்த கதையெல்லாம் எனக்கு மறக்காது MIND குள்ள சுத்திட்டே இருக்கும் ,,ஆனாலும் ஒரு கதை சொல்லிட்டு கிளைமாக்ஸ் சொல்லல அதிரா ...நான் என்ன பண்ண...

  ReplyDelete
  Replies
  1. //என்னமோ எனக்கு இப்படி வர கதையும். ...படமும் பார்க்க முடிறது இல்ல..//

   படம் பார்த்த பின்புதானே கதை தெரியவருது:)... எனக்கு விறுவிறுப்பாக குடும்பக் கதையாக இருப்பின் பார்க்கப் பிடிக்கும் அனு. எக்கதை ஆயினும்.

   //இந்த படம் எல்லாம் நான் பொறக்கும் முன்னே வந்தது..இப்போ வரதுயே பார்க்கவே முடில ..இதில் இவொலோ பழசா... பழசு கூட ok ஆன சோகமா வா..///

   பழைய படங்கள்தான் கதை இருக்கும் படங்களாக இருக்குது அனு.. அதனாலேயே தேடிப் பார்க்கிறேன். இப்போதெல்லாம் எண்ணிச் சொல்லக்கூடிய படங்களே பார்க்க முடியுது.
   இதில.. பெரிய சோகம் எனச் சொல்ல முடியாது.. ஒரு வித்தியாசமான கதை..

   //ஆனாலும் ஒரு கதை சொல்லிட்டு கிளைமாக்ஸ் சொல்லல அதிரா ...நான் என்ன பண்ண...//

   ஹா ஹா ஹா படம் பார்த்தமா முடிச்சமா என விட்டிடோணும்.. அழுகை வந்தா ஓடிப்போய் பாத்ரூம் கதவைப் பூட்டிப்போட்டு நன்கு அழுதிட்டு வந்திடோணும் ஹா ஹா ஹா அப்போ அனைத்தையும் மறந்து இலகுவாகிடும் மனம் எப்பூடி என் ஐடியா?:) இது போதுமோ? இன்னும் ஐடியாஸ் வேணுமோ அனு?:) ஆஆஆஆஆ ஓடாதீங்கோ. ஹா ஹா ஹா. மிக்க நன்றி.

   Delete
  2. குடு குடு ன்னு ஓடி போய் ...

   ஒரு இருவது நிமிசத்தில் இந்த படத்தை பார்த்துட்டேன் ...வழக்கம் போல் கஷ்டமே ..

   நிறைய லாஜிக் ஓட்டைகள் ...மிடில..

   இந்த படத்துக்கு அழுகை எல்லாம் வரல..

   சில படங்களுக்கு வரும் அப்போ பாத் ரூம் போய் லாம் அழுக மிடியாது பார்க்கும் போதே கண்ணில் இருந்து தாரை தாரை யாக கண்ணீர் வடியும் ..

   மீ very soft...

   வித்தியாச அனுபவம்

   Delete
 8. அது சரி இந்தப் படத்தை எப்போது பார்த்தீர்க்ள்? விரதத்திற்கு முன்பா? அப்புறமா? சஷ்டி விரதம் இருக்கும் போது இப்படியான படமா...ஞானியாரே!!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்தக் கேள்விக்கான பதில் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது:) பிக்கோஸ் முருகன் இப்போ திருத் “தணிகை” யில் இருக்கிறார்:) பகதர்களுக்கு அருள் கொடுக்க:)).. ஹையோ இதை ஸ்ரீராமிடம்தான் கேட்கோணும்:) அவர் எதுக்கு விரத காலத்தில இதைப் போட்டார்ர்ர்ர்?:)).. மீ பச்சைக் கொழந்தை எல்லோ:)) உடனே காவி வந்திட்டேன்ன் ஹா ஹா ஹா:).

   Delete
 9. சரிகா சரிகா என்றே வருகிறது பின்னாடி லைன்களில்...ஞானியாரின் முதற் சொற்பொழிவு முடிந்ததும் வரும் சினிமா கதையில் சரிகா என்றே சொல்லிருக்கீங்க ...போனா போகுது...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அது முருகனின் திருவிளையாடலாக இருக்க்குமோ கீதா? ஹா ஹா ஹா..

   Delete
 10. கட்டுப்பாட்டுக்குள், பொறுப்புணர்வுக்குள் கொண்டு வருவதற்காகவும் ஏற்படுத்தப் பட்டதே திருமணம் என.//

  இப்படித்தான் நினைத்துப் பல ஆண்களுக்குக் கால்கட்டு போட்டுவிட்டாலும் கால்கட்டை எளிதாகப் பிரித்துக் கொண்டு மேயத் தொடங்கிவிடுகிறார்களே...திருமணம் செய்தாலும் சரி, செய்யலைனாலும் சரி மனக் கட்டுபாட்டில்தான் இருக்கு எல்லாமே..செய்யாமல் சாமியார் என்று சொல்லிக் கொண்டும் வரம்பு மீறுபவர்கள் இருக்காங்க..,ஸோ மனக்கட்டுப்பாடு.....இல்லையா ஞானியாரே?! சரிதானே?!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அது உண்மைதான் கீதா, சுயகட்டுப்பாடுதானே முக்கியம், ஆனா சில ஆண்பிள்ளைகள் விளையாட்டுத்தனமாகவே ஊதாரியாக இருப்பார்கள், அவர்களுக்கு திருமணம் என முடித்ததும், டக்கென தாம் பெரிய ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவன் என்பதுபோல மாறுவதையும் பார்த்திருக்கிறோம் தானே.. அவரா இவர் என்பது போல ஆச்சரியமகவும் இருக்கும் ஹா ஹா ஹா..

   Delete
 11. ஊசி இணைப்பு, குறிப்பு இரண்டும் அருமை...ரசித்தேன்..

  கீதா

  ReplyDelete
 12. முடிவை எடுக்கிறார் சரிகா... சுஜாதா சரத்பாபுவை ஒன்றிணைச்சு வைக்கிறார்.. ஆனா அவர் எடுக்கும் முடிவு?.. அது ஜொள்ள மாட்டேனே:)).. படம் பாருங்கோ.. ஆனா அஞ்சுவும் கீதாவும் அவதிப்பட்டு.. கீழிருந்து மேலே போகிறேன் பேர்வழி என முடிவு பார்த்திடக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

  என்னைப் பொறுத்து சரிதாவின் முடிவு சரி எனச் சொல்ல மாட்டேன், ஆனா அவரால முடியவில்லை, அதனால் எடுத்த முடிவுதான் “அது” என மனம் எண்ணுது..//

  ஹா ஹா ஹா ஹா அதிரா அதே அதே...ஆனா இப்பல்லாம் கொஞ்சம் மாறியிருக்கு...எனக்கு..ஏன்னா சில சமயம் கருத்துகள் மேல இருக்கும் பதில் மேல இருக்கும் கீழருந்து பார்த்துட்டு எக்குத் தப்பா கருத்து சொன்னா?....அதான்..

  முடிவு தெரிஞ்சு போச்சே...ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //முடிவு தெரிஞ்சு போச்சே...ஹா ஹா ஹா
   //

   ஆஆ கீதா படம் பார்த்திருக்கிறீங்களோ? எனக்கு எப்பவும் முடிவு தெரிஞ்சிட்டால் படம் பார்க்கவே மாட்டேன்.. பிடிக்காது..

   Delete
 13. முடிவு?.. அது ஜொள்ள மாட்டேனே:)).. படம் பாருங்கோ.. ஆனா அஞ்சுவும் கீதாவும் அவதிப்பட்டு.. கீழிருந்து மேலே போகிறேன் பேர்வழி என முடிவு பார்த்திடக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

  என்னைப் பொறுத்து சரிதாவின் முடிவு சரி எனச் சொல்ல மாட்டேன், ஆனா அவரால முடியவில்லை, அதனால் எடுத்த முடிவுதான் “அது” என மனம் எண்ணுது..//

  இந்த வரிகள் லயே நீங்க சொல்லும் முடிவு இருக்கே!! ஹே ஹெ ஹெ ஹெ....அதை நான் ஜொள்ளமாட்டேன்....நீங்களே கண்டு பிடியுங்கள்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ம்ஹூம்ம்.. சுஜாதாவின் தம்பி சரிதாவுக்காக வெயிட்டிங் எல்லோ:)) மீ குழப்பி விட்டிட்டனே:)) ஹா ஹா ஹா..

   Delete
  2. பாலசந்தர் படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாதா என்ன?

   Delete
  3. ஓ கோமதி அக்கா, அப்படியும் ஒன்று இருக்கோ? நேக்குத் தெரியாதே ஆவ்வ்வ்வ்வ்வ்வ்:)) சத்தியமா நீங்க சொல்லித்தான் தெரிகிறது அது பாலசந்தர் படம் என:).. மீ எழுத்தோட்டம் பார்ப்பதில்லை தெரியுமோ:)) ஹா ஹா ஹா..

   Delete
 14. மீதிக்கு நாளை வரேன்....முக்கியமான நபர் கோர்ட்டில் ஆஜர் ஆனாரா தெரியலையே...

  சரி நாளை பார்க்கிறேன்...உறக்கம் வருது...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //முக்கியமான நபர் கோர்ட்டில் ஆஜர் ஆனாரா தெரியலையே...//

   இல்ல கீதா இன்னும் ஆஜர் ஆகல்ல:)) ஆள் தலைமறைவு.. ஒரு கேஸ் க்கே ஒளிச்சவர்:) இப்போ ரெண்டு கேஸாகிட்டுதெல்லோ எப்பூடி வருவார் ஹா ஹா ஹா.. நாளைக்கு வாங்கோ..

   Delete
 15. நாளை வரேன்...தூக்கமும் கண்களைத் தழுவட்டுமேனு நித்ரா தேவி என்னைக் கொஞ்சுகிறாள்...அந்த முக்கியமான நபர் எபி கோர்ட்டுக்கு வந்தாரா தெரியலை...சரி நாளை பார்க்கலாம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. போயிட்டு வாங்கோ கீதா.. நாளைக்கு நுளம்புக் கேஸ் க்கு ஒரு முடிவு கட்டுவோம்:)

   Delete
 16. எச்சூஸ்மீ யாராவது ஸ்ரீராம் அட்ரஸ் எனக்கு தரீங்களா :)

  //“நூல்வேலி” யை அறிமுகப்படுத்தியிருந்தார், //


  [im]https://vignette.wikia.nocookie.net/villains/images/e/e6/Devil_%28Tom_%26_Jerry%29.jpg/revision/latest?cb=20120704024541[/im]

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ:)

   ஹையோ எதுக்கு இப்போ ஸ்ரீராமின் அட்ரஸ்:)? அவர் எதுவும் பண்ணல்லியே:)) எல்லாத்துக்கும் காரணம் அந்த சரிதா தான் ஹா ஹா ஹா:))

   Delete
  2. ஹல்ல்ல்ல்ல்ல்லலோ... நான் அறிமுகப்படுத்தவில்லை! நான் பகிர்ந்திருந்தேன். அவ்வளவுதான்! வித்தியாசம் இருக்கு தெரியும் இல்லே?

   Delete
  3. ஹா ஹா ஹா ஸ்ரீராம் எதையாவது ஜொள்ளித் தப்பிடுவார் எனும் தைரியத்திலதான் போஸ்ட் போட்டேன்:)..

   Delete
 17. இன்னிக்கு armistice டே ..நான் இன்னும் நிறைய வேலை முடிக்க இருக்கு அப்புறமா வர்ர்ர்ரென்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ மெதுவா வாங்கோ.. நீங்க நைட்தான் வருவீங்க என நினைச்சிருந்தேன்..

   [im] http://blog.ryanrodrickbeiler.com/wp-content/uploads/20120227-palestine-0021-M.jpg [/im]

   Delete
  2. அது ஒன் hour கேப் கிடைச்சிதா அங்கே எங்கள் பிளாகில் ரெண்டு கொசுங்க நீதி கேட்டு வந்ததால் எட்டி பார்த்தேன்

   Delete
  3. ஹையோ அது கொசுவல்ல:)) அதன் ஆவீஈஈஈஈ.. அதுக்குள் மறுபிறப்பெடுத்து விட்டதுவோ?:) என்ன கொடுமை முருகா:))

   Delete
  4. ஹலோவ் மியாவ் எல்லாரும் இன்னாருக்கு நீதி கிடைக்க போராட்டம்னுதானே சொல்றாங்க :) இன்னார் ஆவிக்கு னு சொல்றதில்லையே அதனால ஆவிக்கு இடமில்லை

   Delete
  5. கொசு நேரே வந்ததா சொன்னீங்க அதுக்குச் சொன்னேன்:)).. அப்போ இதுக்கு நீதி கிடைக்காட்டில் அதையும் “காவி” வந்து இங்கு ஒரு போஸ்ட் போட்டிட வேண்டியதுதேன் ஹா ஹா ஹா:)) இது எங்கட “மீ 2 பக்கமாக்கும்”:) அவ்வ்வ்வ்வ்வ்வ்:))

   Delete
  6. கொசு நீதி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!

   Delete
  7. சே..சே.. எஸ்கேப் ஆகிட்டீங்களே பிஸி எனக்கூறி கர்ர்ர்:)

   Delete
 18. ஊசி இணைப்பு,ஊசி குறிப்பு 2மே பதிவுக்கேற்ற மாதிரி போட்டிருக்கிறீங்க. நூல்வேலி படம் பார்த்துவிட்டு நல்லா அலசி ஆராய்ந்து இருக்கிறீங்க.. நானும் ஊர்ல பார்த்தது. சரிகாவா என ஒருகணம் திகைத்துபோனேன். இது என்ன உங்களுக்கு புதுசோ..ள, ழ மாதிரி க.கா.போ.
  ஒரு திருவருள், கந்தன் கருணை, திருவிளையாடல் என இந்த நேரம் பார்க்கிறதை விட்டுபோட்டு, நூல்வேலி படம் பார்க்கிறீங்களோ.......நானும் பாவம் விரதத்தில இருக்கிறாவே என நினைத்தேன். சந்நிதியான் பார்த்துக்கொண்டிருக்கிறார் பூஸாரை.....

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே ஞானி எந்த படமானல் என்ன எல்லாம் ஒன்றுதான் ஞானிக்கு அம்மு.

   Delete
  2. வாங்கோ அம்முலு வாங்கோ..

   //2மே பதிவுக்கேற்ற மாதிரி போட்டிருக்கிறீங்க. //
   இந்த 2 மே பார்த்ததும் நான் நினைச்சேன்ன் மே மாதம் 2ம் திகதி போட்டு விட்டேன் எனச் சொல்றீகளோ என:)).

   //சரிகாவா என ஒருகணம் திகைத்துபோனேன். இது என்ன உங்களுக்கு புதுசோ..ள, ழ மாதிரி க.கா.போ.//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது என் புத்திக்கு தெரியுது தா.. என வரும் என:) ஆனா எழுதும்போது மனசு கா எனப் போட்டு விடுது அதுதான் பாருங்கோ அங்கங்கு மாறி மாறி வந்திருக்கு.. எனக்கே ஆச்சர்யம்:))..

   //ஒரு திருவருள், கந்தன் கருணை, திருவிளையாடல் என இந்த நேரம் பார்க்கிறதை விட்டுபோட்டு, நூல்வேலி படம் பார்க்கிறீங்களோ..//

   சே..சே.. மீ பக்திப் படம் மட்டும்தான் பார்க்கிறேன்ன் நோ அசைவப் படம் நம்போணும் ஜொள்ளிட்டேன்ன்ன்:))...

   //சந்நிதியான் பார்த்துக்கொண்டிருக்கிறார் பூஸாரை.....//

   கடவுளே விட்டாலும் ஐயர் விடமாட்டாராமே அப்பூடி எல்லோ இருக்குதூஊஊஉ இதூஊஊஊஊ:).. முருகன் கூட, பாவம் கொயந்தை என மன்னிச்சு விட்டிட்டார்.. விரதக் களைப்பில பிள்ளைக்கு எது பார்க்கிறேன் என்றுகூடத் தெரியாமல் பார்க்குதே என விட்டிட்டார்ர்:)).. இது அவரைக்கூட மறக்க விடாமல் போட்டுப் போட்டுக் குடுக்கினமே:)) முருகா மயிலேறி வாங்கோ.. அப்போதான் வள்ளிக்கு வைர மூக்குத்தி தருவேனாக்கும்:))..

   ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு.

   Delete
  3. அப்பூடிச் சொல்லுங்கோ கோமதி அக்கா, இந்தப் பொயிண்ட் எனக்கு ஆரம்பமே வராமல் போயிட்டுதே:) இனி இதை வச்சே ஓட்டிடுவேன்ன்:)).. பாருங்கோ நான் வணங்கும் முருகன் என்னைக் கைவிடேல்லை:))..

   ஆவ்வ்வ்வ்வ் அதாவது வந்து மனிதர்களுக்குத்தான் இந்தப் படம் அந்தப்படம் எனும் பாகுபாடெல்லாம்ம். நேக்கு ஐ மீன் ஞானிக்கு எதைப் பார்த்தாலும் எல்லாம் ஒன்று போலவே தெரியுதூஊஊஊஊஊஉ:))

   ஆவ்வ்வ்வ் மியாவும் நன்றி கோமதி அக்கா:) பூஸோ கொக்கோ:).. ஹா ஹா ஹா..

   Delete
 19. ஆஆஆ :) இன்னிக்கு தான் அனுஷ் பாட்டுக்கு டான்ஸ் பார்த்தேன் ..அதெப்படி ஸ்ரீராம் போடுற படம்ஸ் மட்டும் அழகா இருக்கு :)
  எனக்கு உண்மை தெரினும் ...
  அதோட குளிரில் ஸ்னோவில் Bardot நெட் டிரஸ் off ஷோல்டர்லாம் தேவையா அனுஷ்க்கு :)
  நான் நினைக்கிறேன் அனுஷ் அந்த ஆட்டுக்குட்டிக்கு குடை பிடிக்கிற சீனில்தான் செம கியூட்

  ReplyDelete
  Replies
  1. //அதெப்படி ஸ்ரீராம் போடுற படம்ஸ் மட்டும் அழகா இருக்கு :)//

   அவர் ஏதோ அப்:) வச்சு அழகுபடுத்திப் போடுறார்.. ஸ்லிம்மாக்கி:)) ஆனாலும் அனுஸ்[ஸ்ரீராம் முறையில ஜொன்னேன்] குண்டூஊஊஊஊ ஹா ஹா ஹா:).

   //நான் நினைக்கிறேன் அனுஷ் அந்த ஆட்டுக்குட்டிக்கு குடை பிடிக்கிற சீனில்தான் செம கியூட்//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு செக்கண்ட்டில கவுந்திட்டீங்களே:)) நீங்களே இப்பூடி எனில் ஸ்ரீராமின் நிலை?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

   Delete
  2. ஏஞ்சல், எனக்கு பாடல் தெரியவில்லை, 'மன்னிக்கவும் இந்த வீடியோ இல்லை 'என்று வருகிறது. உங்களுக்கு தெரிந்து பார்த்து இருக்கிறீர்கள்.

   Delete
  3. கோமதி அக்கா இதில் லிங் போட்டு விடுறேன் முYஅற்சி பண்ணுங்கோ, இங்கத்தைய யூ ரியூப் பலது இந்தியாவில் தெரிவதில்லையாம்., எங்களுக்கு இங்கு யூ ரியூப்பில் நிறைய புதுப்படங்கள் கிடைக்குது, ஆனா இந்தியாவில் ஓபின் ஆகாதாமே.

   Delete
 20. ஹலோவ் மியாவ் எல்லாரும் சொல்றாங்க இப்போ விரத காலமாமே !! இந்த நேரத்தில் இந்த அத்தை பார்த்ததுக்கு 100 தோப்புக்கரணம் அப்பறம் விரதம் முடிஞ்சும் ஒரு மாசத்துக்கு விரதத்தை தொடரணும்னு உங்ககிட்ட உள்ள சொல்லி என் கனவில் மெசேஜ் அனுப்பிட்டார் lord கந்தர்

  ReplyDelete
  Replies
  1. /இந்த அத்தை //

   இந்த படத்தை என்று வாசிக்கவும் :)

   Delete
  2. /// இந்த நேரத்தில் இந்த அத்தை பார்த்ததுக்கு//

   ஆஆஆஆவ்வ்வ் பார்ஹ்தீங்களோ பார்த்தீங்களோ:) மீ பல தடவை கவனிச்சிருக்கிறேன்ன்.. கடவுள் அப்பப்ப ஜம்ப் பண்ணி என்னைக் காப்பாற்றிடுறார்ர்:)) அவருக்கு அதிராவை ரொம்பத்தான் பிடிக்குது:)... ஹா ஹா ஹா.. நோ ரியாக்‌ஷன்ஸ் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

   அல்லோ மீ தான் ஞானியாச்சே:) எனக்கு எல்லாம் ஒன்றுபோலவேதான் தெரியுது:) நீங்க எல்லோரும் தான் அது புரியாமல் குய்யோ முறையோ எனக் குதிக்கிறீங்க ஹா ஹா ஹா.. இங்கு ஒரு கதை நினைவுக்கு வருது..

   நான் 1ம் வகுப்பில படிச்சபோது, ரீச்சர் ஸ்ரோறி ரீடிங்கின் போது எல்லோரையும் கீழே இருக்கச் சொன்னா.. அப்போ முன்னால இருந்த குட்டிப் பையனின் சோட்ஸ் கொஞ்சம் கீழே இழுபட்டு பம் கொஞ்சம் தெரிஞ்சுது.. அதில் பேப்பர் போட்டார் இன்னொரு குட்டி.. இதைப் பார்த்த ரீச்சர் உடனே ரீடிங்கை நிறுத்தி விட்டு, அழகாக விளங்கப் படுத்தினா.. அப்போ எனக்கு 5 வயசுதான் இருக்கும்போல.. ஆனாலும் அது ஆழமாக மனதில பதிஞ்சு விட்டது.. என் வாழ்க்கையில நிறைய நல்லவர்களை, தத்துவம் பேசுபவர்களைச் சந்திச்சே வளர்ந்திருக்கிறேன் என நினைக்கிறேன்ன்.. அவ சொன்னது..

   கவனியுங்கோ பிள்ளைகள் ... நம் கை கால் முகம் என அனைத்து உறுப்பும் ஆடையில்லாமல் தானே வெளியில தெரியுது, அதுபோலதானே பம் உம் ஒரு உறுப்பு, அது தெரிஞ்சால் மட்டும் எதுக்கு இவ்ளோ ரியக்‌ஷன் காட்டுறீங்க.. புறிச்சுப் பார்க்காதீங்க.. அதுவும் நம் உடலின் ஒரு பகுதிதானே என நினைக்கப் பழகுங்கோ என்றா.. அதிலிருந்து அப்படிப் பிரச்சனை எழவில்லை அந்த வகுப்பில்..

   அப்பூடித்தான் இதுவும்.. ஆவ்வ்வ்வ் எப்பூடி எல்லாம் ஜமாளிக்க வேண்டி இருக்கூஊஊஊஊ:)) ஹா ஹா ஹா..

   Delete
 21. //பாட்டுப் பிடிச்சிருந்தால், அல்லது படத்தின் தலைப்புப் பிடிச்சிருந்தால், உள்ளே போய்ப் படம் பார்க்கும் எண்ணம் வரும்.//

  ஹையோ மீ அப்படியே ஆப்போஸிட் :)

  சரி சரி சர்க்கார் விமரிசனம் எப்போ :)))))))

  ReplyDelete
  Replies
  1. //சரி சரி சர்க்கார் விமரிசனம் எப்போ :)))))))//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா என்னை ஆரும் உசுப்பேத்த முடியாதூஊஊஊ:)) நான் தான் இப்போதைய பெரும் புள்ளிகளின் படம் பெரும்பாலும் பார்ப்பதே இல்லையே...:).. “டோர்ச் லைட்”.. விமர்சனம் எழுத நினைச்சேன்ன்ன்.. சரி நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் என விட்டு விட்டேன் ஹா ஹா ஹா...ரித்விகா நடிச்சது:).

   Delete
 22. //ஒரு ஹொஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கிறார்.//

  ஹையோ இப்போ பார்த்து டவுட் வருதே :) அங்கிருந்த பிள்ளையோட எப்படி தப்பு நடந்தது ????????????

  //பிளான் பண்ணியோ நடந்த தப்பு அல்ல, ஏதோ சந்தர்ப்பம் சூழ் நிலையால் நடந்த தவறு ஆகிவிட்டது, //
  தெரிஞ்சு பிளான் பண்றவரை கூட மன்னிக்கலாம் ஆனா சந்தர்ப்பது மேலே பழி போடறவங்களை ..ஒரு ஒரு புல்லட்டில் முடிக்கணும் ..பின்னே தன் வீட்டில் மகளுக்கு கொஞ்சமே வயது பெரிய பிள்ளைக்கிட்ட தவறா நடந்தா அந்த ஜென்மம்னுலாம் வாழ தகுதியற்றது ..

  ReplyDelete
  Replies
  1. ///ஹையோ இப்போ பார்த்து டவுட் வருதே :) அங்கிருந்த பிள்ளையோட எப்படி தப்பு நடந்தது ????????????//

   ஹா ஹா ஹா.. இதுக்குத்தான் படம் பார்க்கச் சொன்னேன்:) எல்லாக் கதையையும் நானே ஜொள்ளிட்டா படம் எப்பூடி ஓடும்?:)).

   //தெரிஞ்சு பிளான் பண்றவரை கூட மன்னிக்கலாம் ஆனா சந்தர்ப்பது மேலே பழி போடறவங்களை ..ஒரு ஒரு புல்லட்டில் முடிக்கணும்//

   ஹா ஹா ஹா உண்மைதான் மீயும் இப்பூடித்தான் பொயிங்கியிருப்பேன் படம் பார்க்காது விட்டால்:), எனக்கு சரத்பாபு அங்கிளை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்... அதுவும் முள்ளும் மலரும் படத்தில அந்த ஜீப் ஓட்டிக் கொண்டு பாடுவாரே ஒரு அபட்டு.. அத்தோடு மீ அவுட்:) ஹா ஹா ஹா...

   அதைவிட அஞ்சு, இப்படத்தில அப்படி ஒரு மிக நல்ல கரெக்ட்டராகக் காட்டுகிறார்கள்.. அது பார்த்தால்தான் தெரியும் .. அதில் கொஞ்சம் வெகுளிப்பெண்ணான சரிதாவில்தான் தப்பு.. மனதில எந்தப் பயமும் இல்லாமல் வீட்டுக்கு ஓடினது சரிதாவின் தப்பு.. அதுக்கு இன்னொரு காரணம், சுஜாதாவின் வெகுளித்தனமான போக்கு... இன்னொரு காரணம், சரிதாவின் தாயின் கண்டிப்பு இல்லாத்தன்மை.. மொத்தத்தில் பெண்களால்தான் இந்நிலைமை ஏற்பட்டது என்றுகூடச் சொல்லல்லாம் இக்கதையில்...

   //பின்னே தன் வீட்டில் மகளுக்கு கொஞ்சமே வயது பெரிய பிள்ளைக்கிட்ட தவறா நடந்தா அந்த ஜென்மம்னுலாம் வாழ தகுதியற்றது ..//
   இது உண்மைதான், சரிதா குட்டிப் பெண்[வேடம்], அப்போ அவ்விடத்தில் சரத்பாபுதான் யோசிச்சிருக்க வேண்டும்.. அவர் தப்புப் பண்ணிட்டார்ர்... இதுக்குத்தான் மேலே சொன்னேன், சந்தர்ப்பம் சூழ்நிலை சிலநேரங்களில் நல்லோரையும் கவிட்டு விடுகிறது...

   எனக்கு அதில பிடிக்காத இன்னொரு விசயம், இப்படி தப்பு நடந்து, அதை நேரில பார்த்த பின்பும், சுஜாதா சமாளிக்கிறா, சரி பறவாயில்லை இனி அப்படி நடக்காது, இதை மன்னிப்போம் என்பதுபோல மூவ் ஆகிறா.. ஆனா இந்த சரத்பாபு, அவ்விடத்தில் கொஞ்சம் கூட குற்ற உணர்வோ... இல்லை, மன்னிப்புக்கூட கேட்கவில்லை சுஜாதாவிடம், இதுபற்றி பேசவே இல்லை.. அதுதான் மனதைக் கொதிக்கப் பண்ணி விட்டது எனக்கு...

   Delete
  2. ஹ்ம்ம் என்ன சொல்ல ஆண் குழந்தைகளுக்கும் இப்போல்லாம் விழிப்புணர்வு சொல்லி கொடுக்கும் நிலையில் இருக்கிறோம்
   எங்க சர்ச்சில் நான் உட்பட அனைவருக்கும் குறிப்பா குழந்தைகளுடன் பழகும் அனைவருக்கும் டேட்டா கிரிமினல் ரெக்கார்ட் செக்கிங் கட்டாயம் செய்யணும் .அதோட பெண் குழந்தைகள் ரெஸ்ட் ரூமுக்கு போகும்போது தனியே ஒருவரா கூட போககூடா ரெண்டு அடல்ட்ஸ் துணையுடன் போகணும் .அதேபோல் லூயிஸ் ஷூ லேச கட்டும் நான் அவன் பேண்ட் ஜிப்போ பெல்ட்டோ அடஜஸ்ட் செய்ய போக மாட்டேன் அவனுடைய ஆண்டீஸ் கிட்டாதான் கூட்டிட்டு கொண்டு விடுவேன் .இப்படி நிறையா இருக்கு .நம்மூரில் க்ரிமினல்ஸ் தானே வாச்மேனாவும் அங்கிள்ஸ் ஆகவும் வெளிப்படையா திரிறாங்க :(

   Delete
  3. ஹா ஹா ஹா உண்மைதான் அஞ்சு... உலகில் நடக்கும் பல விசயங்களால், நாம் தொட்டதுக்கும் பயப்படவும் வேண்டிக் கிடக்கு.

   Delete
 23. தவறு சுஜாதா மற்றும் சரத் மேலும் அதிகப்ரசங்கி சரிதா மூவரிலும் இருக்கு ..அதோடு அந்த இறந்த அம்மாவும் மெகா குற்றவாளி ..ஒரு வயது வந்த பெண்ணுக்கு எப்படி நடக்கணும்னு சொல்லித்தரல்ல ..இந்த நாடா இருந்தா நமக்கு முன்னாடி ஸ்கூலிலேயே சொல்லி குடுத்ருவாங்க ..

  ReplyDelete
  Replies
  1. //ஒரு வயது வந்த பெண்ணுக்கு எப்படி நடக்கணும்னு சொல்லித்தரல்ல//

   இதேதான் அஞ்சு.. முக்கியமாக வளர்ப்பில் தப்பு.. செல்லம் குடுக்கிறோம் பேர்வழி என சில பெற்றோர் நல்லது கெட்டதைக்கூடச் சொல்லிக் குடுப்பதில்லை, செல்லமும் வேணும் அதே நேரம் கண்டிப்பும் வேணும், சொல்லிக் குடுத்தால்தானே குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியும்... இல்லை எனில், தான் நடப்பது சரி என்றே குழந்தை நினைக்கும்.. அத்தோடு கள்ளம் கபடமும் கொஞ்சம் சொல்லிக் குடுக்கோணும்.. அன்ரி இல்லாத நேரம் வீட்டுக்குள் போகாதே.. அங்கிளோடு தொட்டு விளையாடாதே இப்படி எதுவும் தெரியாமல்தான் சரிதா மாட்டுப்பட்டு விட்டா...

   Delete
  2. இன்னொன்றும் சொல்ல நினைவுக்கு வந்து . ஜெர்மனியில் இருந்தப்போ நடந்தது .நான் அப்போ 9 மந்த்ஸ் ப்ரெக்னன்ட் .நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு வர லேட்டாகி மனைவிக்கு (சொந்த மனைவி இல்லை கேர்ல்ப்ரண்ட்) கணவர் என்னனரோன்னு கவலை அவரது 14 வயது மகளை அனுப்பி என் கணவருடன் சென்று 45 மினிட்ஸ் ட்ராவல் அந்த ஹோட்டல் அங்கு பார்த்து வர சொல்லி கேட்டார் ..இவர் என்னிடம் கூட வரச்சொல்லி கெஞ்சோ கெஞ்சி எனக்கோ முடியலை காலில் விழா குறையா கெஞ்சுறார் ....தனியா போக பயமாம் :) அப்போ சீரியஸ்னஸ் தெரில வேற வழியின்றி நானா கஷ்டப்பட்டு கார்வரைக்கும் வரவும் அவர் வீட்டுக் வரவும் சரியா இருந்தது .பிறகு இதை இவரின் சகோதரகிட்ட சொன்னப்போ திட்டினார் ஏனென்றால் அந்த பெண் கொஞ்சம் டிஸ்லெக்சிக் வயது அண்டர் 16 ஆகவே ஹைப்பரா ஏதாச்சும் செஞ்சா இவரில் தான் குற்றம்னு வருமாம் .எதுக்கு சொல்றேன்னா ஆண்களும் பாவம்தான் ..
   எல்லாருக்கும் தங்களை காத்துக்கொள்ளும் மனப்பக்குவம் மற்றும் மனா உறுதி இருக்கணும் .
   இங்கே இது வரையிலும் எங்க மகளை பிறர் வீட்டில் நைட் ஸ்டே விட்டதில்லை ஒரே ஒரு எக்ஸ்க்ளூசிவ் கிறிஸ்தவ குடும்பத்தில் ஒரு முறை தவிர ..ப்ரண்ட்ஸ் பிறந்த நாள் விழான்னா கூட இரவு 10 வரைதான் அல்லோவ்ட் :) .
   அதேபோல் இங்குள்ள ஈஸ்டர்ன் ஐரோப்பிய பெண்கள் பார்ப்போரிடம் பணம் கேட்பாங்களாம் ,அப்புறம் காரில் லிப்ட் கேப்பாங்க சிலர் ..இரத்தமே கிடந்தாலும் போலீசுக்கு தான் தகவல் சொல்ல சொல்லி இவருக்கு கோச்சிங் குடுத்து வச்சிருக்கேன் .எதுக்கு சொல்றேன்னா இக்காலத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஆபத்து எங்கிருந்து வருதுன்னே தெரியாதது

   Delete
  3. இங்கே ஆலயத்தில் ஒரு 14 வயது பெண் ஒரு 64 வயது ஆண் அவர் ரொம்ப அன்பானவர்தான் ஆனா இந்த பெண் அவர் மடியில் ஏறி உக்காருவா அவர் பக்கத்தில்தான் இருப்பா ..எனக்கு என்ன செய்யனு தெரியாதது அவ்ளோ கோபம் வரும் அந்த 64 வயது ஆண் பேச்சிலர் .அவராவது சின்ன பெண் கிட்ட அளவோட டிஸ்டன்ஸ் வைக்கணும் செய்யலை அவரும் கொஞ்சம் லெர்னிங் குறைபாடு உள்ளவர் .கடைசில் ஒரு ஜமைக்கா பாட்டி கண்டிச்சாங்க , சலனம் எப்போ ஏற்படும்னு சொல்ல முடியாதே

   Delete
  4. ஓம் அஞ்சு இப்படி நிறைய விசயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம், தவறு எங்கிருந்து ஆரம்பிக்கும் என்றே சொல்ல முடியாது, எதுவும் இல்லாமலேயே சில சமயம் கெட்ட பெயர் ஏற்படவும் வாய்ப்புண்டு,

   இங்கு ஒரு தடவை மோலில் நடந்து கொண்டிருந்தோம், அப்போ தூரத்தில் ஒருவர் திடீரென கீழே விழுந்திட்டார் மயக்கம்போல, உடனே நான் பதறினேன், கணவரை சொன்னேன் ஓடுங்கோ ஓடிப்போய்ப் பாருங்கோ ஏதோ வருத்தம் போல என, உடனே அவர் சொன்னார், இல்ல அதிரா இதுக்கெல்லாம் நாம் போய் தலையிடக்கூடாது அது என்ன கேசோ, ரக்ஸ் ஆகக்கூட இருக்கலாம், பொலீஸ் கேசாகிடும், இந்நாட்டில் எதுக்கும் கவனமாக இருக்கோணும் என.. அப்போதான் எனக்கு புரிந்தது... இப்படித்தானே நமக்கு புரியாது பல விசயங்கள்.. பதற மட்டுமே தெரியும்:).

   ஆனா ஒன்று இப்படியான பிரச்சனைகளால், நல்லவர்களும் பாவம், இன்னொன்று, உதவி செய்யக்கூடிய மனமிருந்தும் உதவி செய்ய முடியாமலும் போய்விடுகிறது.

   Delete
 24. அந்த முடிவு என்னன்னு லாஸ்ட் ஸீனையாவது பார்த்துட்டுவந்து மொத்தறேன் உங்களை ..
  இந்த மாதிரி இப்ப நடந்தா மீ மீ மீ 2 வில் தள்ளியிருக்கலாம் .ஊசி குறிப்பும் இணைப்பும் நைஸ் :)

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ்வ் வாணாம் அஞ்சு பார்க்காதீங்க:)) ஹா ஹா ஹா:), ஆனா துன்பமான முடிவெனினும் எனக்கு என்னமோ மனம் அதை ஏற்றுக் கொண்டது[ஹையோ என்னை அடிக்கக் கலைக்காதீங்க:)], ஏனெனில் சிலரின் மனதை மாற்ற முடியாது.. சரிதாவின் மனம் ஸ்ரோங்காக இருக்குது... அப்போ மொத்தக் குடும்பத்துக்கும் எப்பவும் சரிதாவால் நிம்மதி இல்லாச் சூழ்நிலைதான் நிகழும் .. இந்தக் கோணத்தில் நான் சிந்திச்சேன்:).

   Delete
  2. அது வேறொண்ணுமில்லை ஏஞ்சல்... சரிதா (சரிகா அல்ல) மொட்டை மாடியிலிருந்து குதித்து விடுவார்!

   Delete
  3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வை திஸ் கொலவெறி ஸ்ரீராம்:)) .. நான் கவனீஅளவில, பூஸ் பப்பிக்கு காட்டும் இரக்கத்தை விட குறைந்தளவே நீங்க மனிசருக்குக் காட்டுறீங்க:).. ஏன் இந்த வெறுப்போ?:)

   Delete
 25. ஹலோவ் மியாவ் இது பாலச்சந்தர் அங்கிள் படம் .இந்த மாதிரி வில்லங்க கான்செப்ட் அவரால் மட்டுமே யோசிக்க முடியும் .
  அப்புறம் கூகிள் பண்ணி பார்த்திட்டேன் லாஸ்ட் சீனை ..அறிவுகெட்ட ஜென்மம்ஸ் ..மீடியா நாலுபேருக்கு நாளைய சமூகத்துக்கு நல்லதை சொல்லிபோகணும்.ஒரு வழிகாட்டியா இருக்கணும் .எனக்கு நெகட்டிவிட்டி பிடிப்பதில்லை ..அதோட சரிதாவின் பிஹேவியரும்தான் .

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இது அக்காலப் படமெல்லோ.. இப்போ இப்படிச் சீன்கள் வருவதில்லைத்தானே..குறைவு. ஆனா சமீபத்தில ஒரு புதுப்படம் பார்த்தேன் “பள்ளிப்பருவத்திலே”.. சூப்பராப் போச்சுது கண் வெட்டாமல் பார்த்து உடனேயே ரிவியூவும் எழுத நினைச்சேன்.. ஆனா முடிவு படு மோசம்.. அதனால ரிவியூ எழுதும் யோசனையை விட்டு விட்டேன்.

   //அதோட சரிதாவின் பிஹேவியரும்தான் .//
   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ.. சரிதா கோபு அண்ணனுக்கு மிகவும் பிடித்த நடிகையாக்கும் ஹா ஹா ஹா:)..

   ஏன் அஞ்சு படத்தை வசுச் சொல்றீங்களோ இல்லை, சரிதாவையே பிடிக்காதோ? எனக்கு சாதாரணமா அவவை ரொம்பப் பிடிக்கும்[நடிப்பில்]..

   மிக்க நன்றிகள் அஞ்சு.

   Delete
  2. ஹையோ இந்த படத்தில் அவரின் பிஹேவியர் :) எனக்கு இந்த மாதிரி ஹைப்பர் ஆக்டிவ் இஷ்டமில்லை

   Delete
  3. //கண் வெட்டாமல் பார்த்து உடனேயே ரிவியூவும் எழுத நினைச்சேன்/noooooooooooooooooooooooooooooooo/

   [im]https://www.mememaker.net/api/bucket?path=static/img/templates/full/2013/Jul/14/3/tom-and-jerry.jpg[/im]

   Delete
  4. [im] https://www.londonfer.com/api/thumbnail?img=/Kotisivukone/files/londonfer.com.kotisivukone.com/kotisivupitka4.jpg&width=692[/im]

   Delete
 26. பொதுவா மனுசன் உத்தமபுத்திரன்க
  சமயம் கிடைச்சா சங்கதியில் மன்னனுங்க

  சரிகாவா ? சரிதாவா ?
  விமர்சக வித்தகி நிறைய இடங்களில் குசம்பி ச்சே குழம்பி இருக்கிறார்.

  என்னைப் பொருத்தவரை யார்மீதும் குற்றமில்லை சொன்னபடி நடித்து விட்டு சம்பளத்தை வாங்கி கொண்டு இடத்தை காலி செய்து 39 வருடங்களாகி விட்டது.

  பாவம் உங்கள் ஊர் ஆன்ட்டியும் இறந்து விட்டார், பாலசந்தரும் இறந்து விட்டார், எம்.எஸ்.வியும் இறந்து விட்டார், பாலமுரளி கிருஷ்ணாவும் இறந்து விட்டார்.

  ReplyDelete
  Replies
  1. ///விமர்சக வித்தகி நிறைய இடங்களில் குசம்பி ச்சே குழம்பி இருக்கிறார்.
   ////
   ஹா ஹா ஹா விமர்சக வித்தகி எனச் சொல்லிட்டீங்களே கில்லர்ஜி அதனால குழம்பினாலும் ஓகே:)...

   ///
   என்னைப் பொருத்தவரை யார்மீதும் குற்றமில்லை சொன்னபடி நடித்து விட்டு சம்பளத்தை வாங்கி கொண்டு இடத்தை காலி செய்து 39 வருடங்களாகி விட்டது.///
   ஹா ஹா ஹா சூப்பரா தலையில அடிச்சு பட்டி மன்றத்தைக் கலைச்சிட்டீங்க ... இதுவும் சரிதான்.. நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)
   மிக்க நன்றி.

   Delete
  2. ஹா ஹா ஹா கில்லர்ஜி எனக்கும் இதேதான் தோன்றியது.

   Delete
 27. ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு வைக்கிறேன்... அப்பால வாரேன்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஶ்ரீராம் மெதுவா வாங்கோ,

   நானும் எல்லோருக்கும் கொஞ்சம் லேட்டாத்தான் பதில்தருவேன் என நினைக்கிறேன்.. பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

   Delete
 28. அருமையாய் படத்தினை அலசி இருக்கிறீர்கள்
  வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கிறேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கரந்தை அண்ணன் மிக்க நன்றி.

   Delete
 29. நிறைய இடங்களில் சரிதா, சரிகா குழப்பம் தெரிகிறது. அனுஷ் பற்றிய உங்கள் பொறாமை பாடலின் அறிமுகத்தில் தெரிகிறது. அப்பால வாரேனே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

   சரிதா.. சரிகா குழப்பம்தான்:)..

   //அனுஷ் பற்றிய உங்கள் பொறாமை பாடலின் அறிமுகத்தில் தெரிகிறது.//

   ஹா ஹா ஹா கடலூரில இடி இடிச்சதுக்கு, கோடைக்கானல்ல மழைகொட்ட்டியதாம்:)).. எதிர்பார்த்தேன் நடந்திடுச்சூஊஊஊஊ ஹா ஹா ஹா..

   Delete
 30. Replies
  1. வாங்கோ ஜே கே ஐயா.. மிக்க நன்றி வரவுக்கு.

   Delete
 31. //ஸ்ரீராமின் வெள்ளிக்கிழமைப் போஸ்ட் பார்த்து, அதை வைத்தே சில பழைய படங்கள் பார்த்து வருகிறேன், //


  தெரியுமே...... சொல்லி இருக்கீங்க ஏற்கெனவே...

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ் வரவர உங்களுக்கு ஞாபகசக்தி கூடிட்டே வருதே:) ஹா ஹா ஹா..

   Delete
 32. கண்டித்து வைக்க கணவன்கள் என்ன கைக்குழந்தையா என்ன! உணர்வுகளை\ச் சமாளிக்க முடியாமல் அல்லது கட்டுப்படுத்த முடியாமல் இருப்பவர்களுக்குதான் கஷ்டம்.

  ReplyDelete
  Replies
  1. கண்டித்து வைப்பது எனச் சொல்லவில்லை.. கணவனை மட்டும் சொல்லவில்லை மனைவிமாரையும் தான்... இருவரும் ஒருவரை ஒருவர் கொஞ்சம் கவனித்து வருதல் நல்லதே.. ஆகவும் எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்காமல் எனச் சொன்னேன்..

   Delete
 33. சும்மா சும்மா பாட்டு எனக்கும் பிடிக்கும். அனுராதா ஸ்ரீராம்! காட்சியில் யார் தெரியுமோ? பிக் பாஸ் புகழ் காயத்ரி ரகுராம்!

  ReplyDelete
  Replies
  1. ஓ அபப்டியா... நான் படம் பார்த்தேன் அப்போ, திரும்ப பட்டுப் பார்க்கோணும்.

   Delete
 34. சரிகா என்பது கமலின் முன்னாள் மனைவி. சரிதா நடிகை. இருவரையும் போட்டுக் குழப்பி மாற்றி மாற்றி 'ரைப்'படித்திருக்கிறீர்களே....!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ரைப் அடிக்கும்ப்போது குழப்பமாகி விட்டது, பின்பு சரி அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டேன்.. என்னைப் போன்றோர் பலர் இருப்பினம் தானே:) அவர்களும் குழம்பட்டும்..:)

   Delete
 35. சரிதாவின் முடிவுதான் முடிவு! இதில் என்ன சஸ்பென்ஸ்! அந்த வயசில் அப்படித்தானே தோன்றும்!!!

  ReplyDelete
 36. லிஸ்ட்டில் தயங்கிக் கெட்டவர், பேசிக் கெட்டவர், பேசாமல் கெட்டவர், தழுவிக் கெட்டவர் நழுவிக் கெட்டவர், எல்லோரையும் விட்டு விட்டீர்களே...!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா முழுவதையும் எழுத வெளிக்கிட்டால் போஸ்ட் போட இடமிருக்காதெல்லோ:)..

   Delete
 37. ஊசி இணைப்பு விட ஊசிக்குறிப்பு செம...

  ReplyDelete
 38. வணக்கம்
  பதிவை அசத்தி விட்டீங்கள் சொல்ல வெண்டிய விடயத்தை நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அடடா வாங்கோ ரூபன் வாங்கோ.. மிக நீண்ட இடைவேளையின் பின்பு வந்திருக்கிறீங்க.. மிக்க நன்றி.

   Delete
 39. ஊசிக்குறிப்பு நன்று...

  சினிமா நீங்கள் சொன்னது பார்த்ததில்லை. பார்க்கும் எண்ணமும் இல்லை 👎.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. சிஅல்ருக்கு சினிமா என்றாலே அலர்ஜிதான்.. மிக்க நன்றி.

   Delete
 40. ரொம்ப லேட்டா வந்திருக்கேன். அதனால் எதுவும் சொல்லலை. ஊசிக்குறிப்பு நல்லா இருக்குனு மட்டும் சொல்லிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. ரெயின் புறப்படமுன் வந்து ஏறிட்டீங்க.. இம்முறை விரதம்+ வேர்க் எல்லாம் சேர்ந்து என்னாலும் சரியாக எங்கும் விசிட் பண்ண முடியுதில்லை. மிக்க நன்றி.

   Delete
 41. இடுகையைப் படித்துவிட்டேன். கருத்தையும் எழுதியாச்சு...

  இந்த மாதிரி எல்லாம் செஞ்சாலும், நீங்க கீசா மேடமாக முடியாது. அவங்கதான் மிகப் பழைய படங்களுக்கு விமரிசனம் எழுதுவாங்க. நீங்களும் அதைக் கடைபிடிக்கப் பார்க்கறீங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெ.தமிழன் வாங்கோ.. நீங்கதான் சொல்லாமல் கொள்ளாமல் கோபு அண்ணனையும் கீசாக்காவையும் பார்க்கப் போயிட்டீங்க.. தெரிஞ்சிருந்தால் ஒரு சீக்ரெட் கமெரா பூட்டி இருக்கலாம்:))..

   கீசாக்காவுக்கு சினிமாவே தெரியாதே:)).. எனக்கு சினிமாப் பிடிக்காது:) சினிமா பார்க்க மாட்டேன் எனச் சொல்லிச் சொல்லியே ஒருவருக்கும் தெரியாத சினிமாக் அக்தை எல்லாம் அவிட்டு விடுவா கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   மிக்க நன்றி.

   Delete
 42. நான் எப்போதுமே கடைசியில்தான் வருவது வழக்கம் என்பதால், அதற்காக எந்த விளக்கமும் அளிக்கப் போவதில்லை. சினிமாவில் பார்தீர்கள் என்றால் எல்லோரையும் தவிக்க விட்டுவிட்டு ஹீரோ கடைசியில்தான் என்ட்ரி கொடுப்பார். விஷயதிற்கு வருகிறேன். எப்போதோ வந்த படத்திற்கு இப்போது சரிகாவா? சரிதாவா என்ற குழப்பத்தோடு விமர்சனம், அதில் சல்பென்ஸ் வேறு. இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லை?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பானுமதி அக்கா.. ஆறிய கஞ்சி பழங்கஞ்சியாப் போச்ச்:).. இப்பூடி ரிவியூ எழுதுவதனாலதானே எனக்கு மட்டும் இல்லை பலருக்கு பல விசயம் தெளிவாகுது.. ஹா ஹா ஹா... மிக்க நன்றி கடைசியாக ஓடியாந்து கார்ட் பெட்டியில் ஏறியமைக்கு.

   Delete
 43. இது மலையாள படத்தின் ரீ மேக். ஐ.வி.சசி இயக்கத்தில் சீமா நடித்த படம் என்று நினைக்கிறேன். முடிந்தால் பாருங்கள். முடிவு பாலசந்தர் படம் போல் சொதப்பலாக இருக்காது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.