நல்வரவு_()_


Thursday 31 October 2013

கங்கையிலே என் படகு மிதந்து கொண்டிருக்கிறது!!!

அன்புள்ள அம்மாவுக்கு!!ம்மா.. நலமாக இருக்கிறீங்களோ? அப்பா எப்படியம்மா இருக்கிறார்? எனக்கு தெரியும், என்னையும் தம்பியையும் விட உங்கள் மனதில் வேறு எந்த சிந்தனையுமே இருக்காது.

ம்பி இப்போ நன்கு வளர்ந்து விட்டானம்மா.பார்க்க அப்பா மாதிரியே இருக்கிறான்.அவனின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தும், அப்பாவை என் கண் முன்னே கொண்டு வருகிறதம்மா!. என்னப் பார்ப்போரெல்லாம், “மேரி அக்கா” போலவே இருக்கிறாய் என உன்னைத்தானம்மா சொல்கிறார்கள்.

நாங்கள் என்ன பாவம் செய்தோமம்மா? ஏன் எம்மை ஆண்டவன் படைத்தார்? ஆரைக் கேட்டாலும் சொல்கிறார்கள், “உங்கள் அப்பா, அம்மா போல தங்கமான மனிஷரைக் காணவே முடியாது” என. அப்போ, அப்படிப் பெற்றோருக்குப் பிறந்த நமக்கு, ஏனம்மா இப்படி நிலைமை வந்தது? எதுக்காக அம்மா சுனாமி வரவேண்டும்? சரி வந்ததுதான் வந்துது.. எதுக்காக அம்மா என்னையும் தம்பியையும் விட்டு விட்டு, உன்னையும் அப்பாவையும் கொண்டு போக வேண்டும்?.

ன்று நீங்கள் இருவரும் இறந்தே போய்விட்டீர்கள் என்ற செய்தி கேட்டதும், செய்வதறியாது, நானும் சாகிறேன் என கடல் நோக்கி ஓடினேன் அம்மா, ஆனால் என்ன காலமோ பின்னாலே தம்பி, அக்கா!! அக்கா!! என எழுப்பிய ஓலம் காதில் கேட்டதும்,என்னால் கடலில் குதிக்க முடியவில்லையம்மா!!.

ப்போ அவனுக்கு ஐந்து வயதுதானே அம்மா? அவனுக்கு என்ன தெரியும் குழந்தை!!. எனக்காவது அப்போ பத்து வயதாகியிருந்தது. அதன் பின்பு இன்றுவரை எவ்வளவோ நடந்து விட்டதம்மா...அனைத்தையும் உன்னிடம் சொல்ல வேணும் என மனம் துடிக்கிறதம்மா. அதன் பின்னர் எங்கள் மாமா எங்களை வெளிநாட்டுக்குக் கூப்பிட்டார். நாங்கள் வந்து சில வருடங்களில், அவரும் மாரப்பால் போய் விட்டார். இப்போ பொறுப்புக்கள் அனைத்தையும் சுமந்தபடி, நானும் தம்பியும் வாழ்கிறோமம்மா.

னக்கு உங்களிருவரின் முகமும் நினைவிருக்கிறது, ஆனால் தம்பி, கண்ணை மூடிப் பார்த்துவிட்டுச் சொல்கிறான், நினவு வருகுதில்லையாம். அவனுக்குக் காட்ட, ஒரு படம் கூட இல்லையே அம்மா.. அத்தனையும் சுனாமியோடு போய் விட்டதே..

ப்போ நான் ட்ரைவிங் லைசன்ஸ் எடுத்து விட்டேனம்மா. நன்றாகக் கார் ஓடுகிறேன். அப்பாவின் மடியில் இருந்து, வீட்டுக் கேட்வரை, கோன் அடித்து அடித்துக் கார் ஓடியது, என்  கண் முன்னே எப்பவும் வருகிறது. எங்கள் காரின் கலர்கூட, தம்பிக்கு நினைவில்லையாம் அம்மா.

ப்பவெல்லாம் அப்பாவோடு, கோன் அடித்தபடி காரால் நாம் வந்து இறங்க, நீ ஓடிவந்து கதவு திறந்து ரீ ஊத்தித் தருவாய் அம்மா. இப்போ திறப்பைப் போட்டு நானே வீட்டைத் திறந்து வந்து, ரீ ஊத்திக் குடிக்கிறேன் அம்மா.

ம்பி நன்றாகப் படிக்கிறானம்மா, அப்பா அடிக்கடி சொல்வதுபோல, அவனை ஒரு டாக்டர் ஆக்கவே நானும் பாடுபடுகிறேனம்மா. நீ எனக்குச் சொன்ன அறிவுரைகளையெல்லாம், நான் அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறேனம்மா. அவனை எப்படியெல்லாம் உயர்த்தி, ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவர முடியுமோ, அப்படியெல்லாம் பாதுகாக்கிறேன் அம்மா.

னக்குக் காதல் பிடிக்காதென்பது எனக்குத் தெரியுமம்மா. ஆனாலும் அது தெரிந்திருந்தும்,நானும் ஒரு சின்னப் பெந்தானே அம்மா, அப்பாவைப்போல, உன்னைப்போல எம்மில் ஒருவர் அதிக பாசம், அக்கறை காட்டும்போது, மனம் அப்படியே துவண்டு விடுகிறதம்மா.... அதனால் நானும் ஒருவரைக் காதலித்தேனம்மா.. நல்லவர், அன்பானவர், இங்கு பெரிய பதவியில் இருப்பவர், எம் கவலைகளை மறக்கடித்து, எமக்கு வெளிச்சம் காட்டுவார் என, விரும்பினேன் அம்மா..

“கங்கையிலே என் படகு மிதந்து கொண்டிருக்கிறது..
அதில் ஒருவர் ஏறினார்..
கரைசேர்க்கப் போகிறார் என நம்பினேன்ன்..ஆனால்
நடுக்கடலிலேயே விட்டுவிட்டு இறங்கி விட்டாரம்மா..”

காதலித்தது தப்பா அம்மா? எனக்கு வாழ்க்கையில் எல்லாமே வெறுத்துவிட்டதம்மா, ஒரு 20 வயதுப் பெண் பேசக்கூடாத பேச்சுத்தானம்மா, ஆனால் “பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்” என நீ முன்பு சொல்லும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறதம்மா.

ன் வாழ்க்கையின் வசந்த காலங்கள் எல்லாம் முடிந்து விட்டனவம்மா. இனிமேல் என் வாழ்வுக்கு வசந்தம் கிடைக்குமென, நான் ஆரையும் நம்ப மாட்டேனம்மா. இப்போ நான் வாழ்வது தம்பிக்காகவே. அவன் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்வரை, நான் ஒரு நடைப்பிணமாகவெனினும், வாழ்ந்தே ஆகவேணுமம்மா.

சூரன்போர் வருகிறது, ஊரிலே அப்பா என்னைத் தோளிலே தூக்கி, சூரன் ஒளிந்துவரும் மாங்கொப்பில் மாங்காய் பிடுங்க, மக்களோடு மக்களாக இடிபடுவது, மனக் கண்ணிலே வந்து போகுதம்மா.நான் எந்த நினைவையும் தம்பியோடு பகிர்ந்து கொள்வதில்லையம்மா, ஏனெனில் அவன் சந்தோசமாக இருக்கிறான், நன்கு படிக்கிறான். அதனால் நான், என் எண்ணங்கள், கனவுகள், கவலைகள் அனைத்தையும் என்னுள்ளே புதைத்து விடுவேனம்மா.

ன் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள எனக்கு ஆருமே இல்லையம்மா. அதனால்தான் கண்ணீர் வழிந்து ஓட ஓட இக்கடிதத்தை எழுதுகிறேன். இதன் மூலம் எனக்கு கொஞ்சமாவது ஆறுதலும், உன்னோடு பேசிவிட்ட திருப்தியும் கிடைக்கிறதம்மா.

இப்படிக்கு,
என்றும் உன் அன்பு மகள்,
பிலோமினா!.
===============================================================================

குட்டிச் சிந்தனை:
சமீபத்திலே, என் காதுக்கு எட்டிய ஒரு உண்மைத் தகவலை வைத்து, என் கற்பனையில் ஒரு கடிதம் வரைந்திருக்கிறேன். இதன் கரு மட்டுமே உண்மை, மற்றவை யாவும், என் கற்பனை கொடுத்து எழுதப்பட்ட கடிதமே.

எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும், என அனைத்தையும் நகைச்சுவையாக்கி, சிரித்தபடி வாழப் பழகி வந்தாலும், இப்படியான சம்பவங்களைக் கேட்கும்போது, மனம் ஒரு கணம் கலங்கத்தான் செய்கிறது. சுனாமியால் பாதிக்கப் பட்டோர்..இப்படி எத்தனை எத்தனை ...
==============================================================


புலாலியூர்ப் பூஸானந்தாவின், களவெடுத்த கைவண்ணம்:)

47 comments :

 1. நாங்கதான் 1ஸ்ட்ட்ட்ட்ட்ட்!!!

  ReplyDelete
 2. டீ - ப்ரேக்ஃபாஸ்ட் வேலை அழைக்கிறது மிஸ்.பூஸ்! விரைவில் மீண்டும் வருகிறேன். நன்றி, வணக்கம்! ;) :)

  ReplyDelete
 3. பட்ட காலிலேயே பட்ட, கெட்ட குடியே கெடும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  உண்மை தான்...

  தீப திருநாளில் இருள் விலகி ஒளி பரவட்டும்... இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. அதிரா நலமா?
  என்னை கண் கலங்க வைத்து விட்டது உங்கள் கடிதம்.ஆறு மாதம் முன்புதான் என் தாயாரை நான் இழந்தேன்.எல்லாம் கிடைத்தும் நமக்கு அந்த தாய் என்ற உறவு பறிபோனதே தாங்க முடியவில்லை.இன்னும் என்னால் துயரத்திலிருந்து மீளமுடியவில்லையே....
  இது போன்று சுனாமியால் பிரிந்து போன குடும்பங்களும்,அநாதையாய் இருக்கும் குழந்தைகளும் தான் எத்தனை?
  அவர்களின் சோகங்களும்,கஷ்ட்டங்களும் எவ்வளவு இருக்கும்.
  இதற்கு மேல் ஏதும் என்னால் எழுத முடியவில்லை... அதிரா... கண்ணீர் தான் வருகின்றது.
  அப்சரா.

  ReplyDelete
 5. //கங்கையிலே என் படகு மிதந்து கொண்டிருக்கிறது!!!//

  நல்லவேளை. தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்யப் போனீங்களோ!

  >>>>>

  ReplyDelete
 6. //எனக்கு உங்களிருவரின் முகமும் நினைவிருக்கிறது, ஆனால் தம்பி, கண்ணை மூடிப் பார்த்துவிட்டுச் சொல்கிறான், நினவு வருகுதில்லையாம். அவனுக்குக் காட்ட, ஒரு படம் கூட இல்லையே அம்மா.. அத்தனையும் சுனாமியோடு போய் விட்டதே..//

  இதைப்படித்ததும் எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது, அதிரா.;(

  >>>>>

  ReplyDelete
 7. //“கங்கையிலே என் படகு மிதந்து கொண்டிருக்கிறது..
  அதில் ஒருவர் ஏறினார்..
  கரைசேர்க்கப் போகிறார் என நம்பினேன்ன்..ஆனால்
  நடுக்கடலிலேயே விட்டுவிட்டு இறங்கி விட்டாரம்மா..”//

  அடப்பாவமே, நட்டாற்றில் விட்டு விட்டாரா ? ;(

  >>>>>

  ReplyDelete
 8. //குட்டிச் சிந்தனை:
  சமீபத்திலே, என் காதுக்கு எட்டிய ஒரு உண்மைத் தகவலை வைத்து, என் கற்பனையில் ஒரு கடிதம் வரைந்திருக்கிறேன். இதன் கரு மட்டுமே உண்மை, மற்றவை யாவும், என் கற்பனை கொடுத்து எழுதப்பட்ட கடிதமே.//

  கற்பனையென்றாலும் மிக அருமையாக, அழகாகவே எழுதியுள்ளீர்கள், அதிரா, பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 9. கடிதம் கலங்க வைத்தது...

  இனிய தீபத் திருவிழா நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. //எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும், என அனைத்தையும் நகைச்சுவையாக்கி, சிரித்தபடி வாழப் பழகி வந்தாலும், இப்படியான சம்பவங்களைக் கேட்கும்போது, மனம் ஒரு கணம் கலங்கத்தான் செய்கிறது. சுனாமியால் பாதிக்கப் பட்டோர்..இப்படி எத்தனை எத்தனை ...//

  சுனாமியின் தாக்கம் மிக மிகக் கொடுமை தான், அதிரா.

  நான் கற்பனையாக எழுதியுள்ள என் முதல் கதையும் - இதில் வரும் குழந்தை போல ஓர் மூன்று வயதுக்குள் உள்ள சிறுமியின் கதை தான். சுனாமியினால் அனாதை ஆனவள் பற்றியது. சுனாமியின் செய்திகளால் ஏற்பட்ட தாக்கத்தினால் உருவான கதை. நான் முதன் முதலாக எழுதிய என் முதல் கதையும் கூட. பரிசு பெற்ற கதை.

  http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html

  >>>>>

  ReplyDelete
 11. அதிரா.. மனம் வலிக்கும் சம்பவம்...
  துயரத்தில் வரிகளைத் தோய்த்தெடுத்து கடிதமென வரைந்துள்ளீர்கள்.

  நாம் இழந்துகொண்டே இருக்கிறோம். என்ன முடிவு என்பதுதான் தெரியவில்லை!

  பிலோமினாவின் கதை நெஞ்சைப் பிழிகிறது. பேச வார்த்த்ழைகள் இல்லை அதிரா!

  சகோதரிக்கு விரைவில் நல்ல எதிர்காலத்தை இரைவன் அருளட்டும்!

  த ம.3

  ReplyDelete
 12. தாங்கள் எழுதியுள்ள கடிதம் தான் மனதைப் பிழிவதாக உள்ளது என்றால்,

  //புலாலியூர்ப் பூஸானந்தாவின், களவெடுத்த கைவண்ணம்:)//


  என்ற படம் என்னை அப்படியே சுட்டுத் தள்ளிவிட்டது, அதிரா.

  >>>>>

  ReplyDelete
 13. அன்புள்ள அதிரா,

  தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள,

  கோபு அண்ணன்

  ReplyDelete
 14. ஆனால் ஒன்று அதிரா...
  நகைச்சுவையாய் மட்டுமல்ல கனமான மனவலியைக் காட்டும் உணர்வினைப் பிரதிபலிக்கும் விதமாகவும் உங்களால் எழுதமுடியுமென இதனால் நிரூபித்துள்ளீர்கள்!..
  அதற்கு.. உங்கள் எழுத்துத் திறமைக்கு என் பாராட்டுக்கள்!..

  நீங்கள் சொன்னதுதான் சொல்வதுதான்...

  ”இதுவும் கடந்து போகும்”

  நானும் எல்லோருக்காகவும் பிரார்த்திக்கின்றேன்!

  இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. எங்கனாச்சும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குமான்னு தேடி அலை பாயும் கண்கள் :((( இன்னிக்கு கடிதம் படிச்சு குளமாகிவிட்டது :(

  சுனாமி ..அந்த கோர சம்பவம் எத்தனை பெயரை சூறையாடியுள்ளது .. ராயபுரம் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று ......ஒவ்வொருவர் மனநிலை வேறு ..அதனால் மெயிலில் தெரிவிக்கிறேன் ..

  மறைந்த எங்கம்மாவுக்கு நான் முன்பு எழுதுவேன் அவ்வப்போது ..அம்மா சொல்வாங்க ..கொஞ்சம் நீண்ட லெட்டரா எழுதேன் ...நாலு வரிதானே இருக்குன்னு ...போனில் பெசுவதின்னா மணிகணக்கில் பேசுவேன் ..

  இப்பவும் அம்மாஎன் மகளுக்கும் எனக்கும் அனுப்பிய பார்சல் கவர் பத்ரமா வச்சிருக்கேன் ..அவங்க கையெழுத்து இருக்கே அதில் !!!!!!!!!!!!!!

  ReplyDelete
 16. Happy Diwali ...to everybody :))


  gun picture :))) sooooooopar :)

  ReplyDelete
 17. [co="red purple"]வாங்கோ மகி வாங்கோ.. நான் போஸ்ட்டை பப்ளிஸ் பண்ணிக் கை எடுக்கவில்லை:) கொமெண்ட் வந்திருந்தது:) என்னா ஸ்பீட்டு.. ஆனா நேக்கு ரைம் ஆச்சோன்னோ.. அதனால நில்லாமல் ஓடிட்டேன்ன்ன்..

  மியாவும் நன்றி மகி. [/co]

  ReplyDelete
 18. [co="red purple"] வாங்கோ வெற்றிவேல் வாங்கோ.. உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.[/co]

  ReplyDelete
 19. [co="red purple"] வாங்கோ அப்சரா வாங்கோ.. மிக நீண்ட இடைவேளையின் பின் சந்திக்கிறோம்ம்.. நலம்தானே?..

  உண்மைதான்.. இது முக்கால்வாசியும் என் கற்பனைக் கடிதமே.. இன்னும் எழுத நினைத்தேன், ஆனா தீபாவளி வரப்போகும் இக்காலத்தில் எதுக்கு எல்லோரையும் அழவைக்கோணும் என விட்டு விட்டேன்ன்...

  சிலதைப் படிக்கும்போது, என் நினைவலைகள் நம்மையும் மீறிப் பாயும் என்பது உண்மைதான்.. மியாவும் நன்றி அப்சரா வரவுக்கும் கருத்துக்கும்./co]

  ReplyDelete
 20. [co="red purple"] வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ..

  அது கங்கா ஸ்நானம் அல்ல:).. சமீபத்தில் 2, நாட்களுக்கு முன்பு பிரித்தானியாவின் கீழ்ப் பகுதியில் பெரும் காற்று மழை வெள்ளம் ஏற்பட்டு... மூவர் உயிரிழந்தும் விட்டனர்.. இச்செய்தி சி என் என் ல் சொல்லியதும், சிஸ்டர் இன் -லோ ஃபோன் பண்ணி உங்களிடம் எப்படி? முன்னாலே ஆறெல்லோ என்றா.. நான் சொன்னேன்ன்.. ஓம்.. இப்போ அந்த ஆற்றில் மிதந்துகொண்டுதான் ஃபோன் பேசுகிறேன் என:))..

  அதைச் சொல்லி சிரித்ததும்.. எப்பவோ படித்த கண்ணதாசனின் இவ்வரிகள் நினைவு வந்தது தலைப்பாக்கிட்டேன்ன்ன்... “அவளுக்காக ஒரு பாடல்” எனும் கதைப் புத்தகத்தில்.. இருக்கிறது.[/co]

  ReplyDelete
 21. இதைப்படித்ததும் எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது, அதிரா.;(

  [co="red purple"] உண்மைதான், அது என் கற்பனையில் உதித்த வசனம். இதை எழுதும்போது நானே கண்ணைத் துடைத்து துடைத்து எழுதினேன் என்றால் பாருங்கோவன்.. இப்போவாவது தெரியுதோ.. அதிரா ஒரு லூஸு என:))[/co]

  ReplyDelete
 22. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //“கங்கையிலே என் படகு மிதந்து கொண்டிருக்கிறது..
  அதில் ஒருவர் ஏறினார்..
  கரைசேர்க்கப் போகிறார் என நம்பினேன்ன்..ஆனால்
  நடுக்கடலிலேயே விட்டுவிட்டு இறங்கி விட்டாரம்மா..”//

  அடப்பாவமே, நட்டாற்றில் விட்டு விட்டாரா ? ;(//

  [co="blue green"]ஹா..ஹா..ஹா.. அப்படியெல்லாம் இல்லை... படிப்போருக்கு.. கொஞ்சம் சோகம் வரட்டுமே என ஒரு ஃபுலோல எழுதினேன்ன்:). [/co]

  ReplyDelete
 23. [co="blue green"]மிக்க நன்றி கோபு அண்ணன். முதல் கதை படிக்க விரைவில் வருகிறேன். [/co]

  ReplyDelete
 24. [co="blue green"] வாங்கோ தனபாலன்.. இடையிடை இப்படியும் எழுதினால் நன்றாக இருக்குமே என, கேள்விப்பட்ட கதையை.. ஊதிப் பெரிசாக்கிட்டேன்:).. மிக்க நன்றி.

  உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். [/co]

  ReplyDelete
 25. [co="blue green"] வாங்கோ இளமதி வாங்கோ.. சுனாமிக் கதைகள் ஒன்றா இரண்டா.. சொல்லியும் அடங்கா.. கேட்டும் அடங்கா...

  தம்ம.. வோட்..க்கு மியாவ் மியாவ்வ்..

  ஆமா ஆமா.. ஓமோம்ம்..
  இதுவும் கடந்து போகும்... வாழ்க்கையில் எதுவுமே நிலையானதில்லை...

  மிக்க நன்றி இளமதி. [/co]

  ReplyDelete
 26. Cherub Crafts said...
  எங்கனாச்சும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குமான்னு தேடி அலை பாயும் கண்கள் :((( இன்னிக்கு கடிதம் படிச்சு குளமாகிவிட்டது :(

  [co="blue green"] வாங்கோ அஞ்சு வாங்கோ... ஆனா இண்டைக்குத்தான் நான் அதிகம் எழுத்துப் பிழைகள் விட்டிட்டேன்ன்:).. பட் ழ/ள வில் இல்லையாக்கும்:).

  மெயில் பார்க்கிறேன்.

  என்ன செய்வதஞ்சு..
  “நடந்தவை யாவும் நடந்தவை தானே?”... இதுவும் கடந்து போகும் என மனதை தேற்றிக் கொள்ள வேணும்...

  மிக்க நன்றி அஞ்சு. [/co]

  ReplyDelete
 27. பிரிவின் துயரை வெளிக்காட்டிய விதம் கண்களைக் கலங்க வைத்து விட்டது
  சகோதரி .துன்பத்தில் வாடும் உயிர்களெல்லாம் இன்பங் கண்டு மகிழவேனும் இனிய தீப ஒளியே வழி காட்ட வந்து விடு .இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கும் உறவினர்கள் அனைவருக்கும் .

  ReplyDelete
 28. இனிய வணக்கம் சகோதரி அதிரா...

  அன்புள்ள அம்மாவுக்கு என்று
  பாடகி சின்னப்பிள்ளை அவர்கள் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது..

  சுனாமியின் கொடுமையை சில அடிகள் தூரத்தில் நேரில்
  கண்டு பிரமித்தவன் என்ற நிலையில் என்னால் இந்தக் கொடுமையை
  அப்படியே நினைவுக்கு கொண்டுவர முடிகிறது..
  படித்துக்கொண்டே வருகையில் விழிகளில்
  வழிநீர் பனித்துப் போகிறது...
  ஆண்டவா இந்த உலகில் நிகழின் நிதர்சனத்துக்காக
  பாடுபடும் எத்தனை உள்ளங்கள் தங்கள் உணர்சிகளை
  மனதிற்குள் புடம்போட்டு வைத்திருக்கிறார்கள்...


  வாழ்வில் துணை நிற்பான் என்றவனும்
  நட்டாற்றில் விட்டானே.. அவனெல்லாம் ஒரு மனிதன்...


  தாயாக வாழும் தமைக்கையவள்
  வாழ்வினில் இனியேனும் வசந்தம் பிறக்கட்டும்...

  சொல்லவே வார்த்தையில்லை பா..
  நெஞ்சம் கனத்துப்போனது பதிவினில்...

  ReplyDelete
 29. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும், என அனைத்தையும் நகைச்சுவையாக்கி, சிரித்தபடி வாழப் பழகி வந்தாலும், இப்படியான சம்பவங்களைக் கேட்கும்போது, மனம் ஒரு கணம் கலங்கத்தான் செய்கிறது. சுனாமியால் பாதிக்கப் பட்டோர்..இப்படி எத்தனை எத்தனை ...

  தலைப்பும் கதையும் அருமையான கைவண்ணம் .....பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 30. கடிதம் சோகத்தை கொடுக்கின்றது பூசாரே!

  ReplyDelete
 31. 20 வயதில் வாழ்க்கை இப்படி புலம்பலே!ம்ம் கொடுமைதான்.

  ReplyDelete
 32. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. [co="blue green"] வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ.. உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 34. [co="blue green"] வாங்கோ மகேந்திரன் அண்ணன் வாங்கோ.. எனக்கும் கதை அறிந்ததும் மனம் கனத்து விட்டது, அதனால்தான் இப்படி ஒரு கடிதமாக்கினேன்.

  ஆனா, இது எல்லோரையும் சோகமாக்கிவிட்டதோ தீபாவளி நாளில் என நினைக்கிறேன்.. இன்றே பதிவை மாத்திட எண்ணுகிறேன்.. என்ன செய்வது.. கடந்ததை நினைத்துக் கவலைப்படாமல், இருப்பதை எண்ணி மகிழப் பழகுவோம்.

  மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 35. [co="blue green"] வாங்கோ ராஜேஸ்வரி அக்கா, மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 36. [co="blue green"] வாங்கோ நேசன் வாங்கோ... கொஞ்சம் சோகமாக்கிவிட்டது என் எழுத்து... தீபாவளி நாளில் சோகம் வேண்டாமென நினைக்கிறேன்ன்... அடுத்த பதிவைப் போட்டிடுறேன்.

  மிக்க நன்றி நேசன், உங்களுக்கும் இனிய ”தலைத்” தீபாவளி வாழ்த்துக்கள். [/co]

  ReplyDelete
 37. ஆனா இண்டைக்குத்தான் நான் அதிகம் எழுத்துப் பிழைகள் விட்டிட்டேன்ன்:).. பட் ழ/ள வில் இல்லையாக்கும்:)...this time i am not going to point them out ..garrr there are loads as you said :)

  மெயில் பார்க்கிறேன்.// no athis i typed it buttttttt then deleted ..i dont want to make you sad:( aaah ..

  ReplyDelete
 38. கடைசி படத்தில இருக்கிற பூஸ் போல என் கண்ணிலும். ;(

  வாழ்க்கை... ஒவ்வொருக்கு ஒரு அமைப்பு. இந்த மனநிலையிலிருந்து அவ வெளிய வரவேண்டும். வருவா. காலம் எல்லாம் மாற்றிக் கொடுக்கும். என் பிரார்த்தனைகள்.

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அதிரா.

  ReplyDelete
 39. ஆவ்வ் அதிரா. ஆனாலும் இப்படி படிக்க கஷ்டமா இருக்கு.நீங்க எழுதிய விதத்தை நிச்சயம் பாராட்டவேணும்.பாராட்டுக்கள். எப்படியாயினும் யாதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேணும்.காலம் அவரின் மனக் கவலையை மாற்றட்டும்.
  //கடைசி படத்தில இருக்கிற பூஸ் போல என் கண்ணிலும்.// எனக்கும்தான்.

  ReplyDelete
 40. This comment has been removed by the author.

  ReplyDelete
 41. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 42. Vote No. 9 is mine.

  அன்று மறந்தே பூட்டேன். இன்று தான் வோட் போட்டேன், அதிரா.

  மன்னிச்சுக்கோங்கோ, ப்ளீஸ்.

  ReplyDelete
 43. பிலோமினாவின் கடிதம் மனதை என்னவோ செய்கிறது...கார்ட்டூன் ஞே ந்னு விழிக்க வைத்தது.

  ReplyDelete
 44. [co="OrangeRed"] வாங்கோ இமா வாங்கோ.. மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 45. [co="OrangeRed"]வாங்கோ அம்முலு வாங்கோ மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 46. [co="OrangeRed"] சரி கோபு அண்ணன் மன்னிச்சுட்டேன்ன்.. ஆனா இதுக்காக, அடுத்தமுறை ரெண்டு வோட் போடோணும் சொல்லிட்டேன்ன்.. ஹா..ஹா..ஹா.. [/co]

  ReplyDelete
 47. [co="OrangeRed"] வாங்கோ ஆசியா வாங்கோ மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.