நல்வரவு_()_


Friday 8 November 2013

பழகலாம் வாங்க!!.. வாங்க!!!:)

அட எதுக்கு இவ்ளோ கூச்சப் படுறீங்க... உள்ள வாங்க..:)..
அஞ்சு விதமாமே:))
இதை நான் எந்த “மீன்” வீட்டிலயும்:) களவெடுத்து வரவில்லை என்பதையும்:), இது அஞ்சுவின் செல்லம் “ஜெஷி”  [தான் என்பதையும்.. ஹையோ நானே பிடிச்சுக் கொடுத்திடுவன் போல இருக்கே வைரவா:))...] அல்ல என்பதையும்:) தேம்ஸ் கரைக் கல்லின் மீது அடித்துச் சத்தியம் செய்கிறேன்ன்:).. 
 பழகத்தானே கூப்பிடுறேன்:).. அதாவது சமைச்சுப் பழகலாம் வாங்க எனக் கூப்பிட்டேனாக்கும்:)... அதிரா வீட்டில தோசை சுடுகிறாவாம் எண்டால், ஆருமே வரமாட்டீங்க:).. அதனாலதான்..  பின்பாதியை மட்டும் சொன்னேன்ன் அது டப்பா?:).

சரி இப்போ விஷயத்துக்கு வருவம்... இது இன்று நேற்றுச் சமைத்தவை அல்ல:) ஒருகாலத்தில சமைச்சு, இங்கின போட்டு வச்சேன்ன்.. 

1.இது அதிராவின் ஸ்பெஷல் தோசை... இதில போட்டிருக்கும் இன்கிறீடியன்ஸ் எல்லாம்.. அதிரா கபேட்டைத் திறந்து தேடும்போது, என்ன என்ன அகப்படுதோ, அவை எல்லாம் இன்கிறீடியன்ஸ்தான்:). அதனால தோசை ஸ்பெஷலிஸ்ட் ஆரும் சண்டைக்கு வந்திடப்பூடா சொல்லிட்டேன்:)).. அதுக்குத்தான் பழகலாம் வாங்கன்னேன்ன்:)).

சரி இப்போ இங்கின இருப்பவை என்ன?
கொண்டைக் கடலை அரைகப்..
பச்சைப் பட்டாணிக் கடலை அரை கப்..
உழுந்து அரை கப்..
சமைத்த ரைஸ்(சோறு) அரைக் கப்..
வாழி அரிசி அதாவது.. பார்லி ரைஸ் - 3 மேசைக்கரண்டி.

சோறு தவிர்த்து அனைத்தையும் ஊறப்போட்டு அரைத்து, அதனோடு சோறும் சேர்த்து அரைச்சு... வழமைபோல அப்பச்ச்சோடா உப்பு சேர்த்து புளிக்க வச்சுச் சுட்டேனா... ஸ்ஸ்ஸ்ஸ் நல்லெண்ணெய் ஊத்தி ஊத்தி சுட... சூப்பரா வந்துதே.....


இந்தாங்க தேங்காய்ப் பூச் சட்னியோடு சாப்பிட்டுப் பாருங்கோ!!! உஸ்ஸ்ஸ் அப்பாடா அஞ்சில ஒண்டு சொல்லிட்டேன்ன்:)
=================================================
2.இது என்ன தெரியுதோ? உங்களுக்கு எங்க தெரியப்போகுது, நானே சொல்லிடறேன்ன்.. இது பயற்றங்காய் வித் பலாக்கொட்டைப் பிரட்டல் கறி( என் ஃபேவரிட் ஆக்கும்:)).

எப்பூடியெனில், வெங்காயம் செத்தல் மிளகாய் போட்டு எண்ணெயில் வதக்கி, அதனுள் பயத்தங்காய், பலாக்கொட்டை போட்டு உப்பும் போட்டு, உள்ளியும் போட்டு கொஞ்சம் வதக்கி, பின் கொஞ்சம் வெந்தயமும், கறித்தூளும் சேர்த்து நன்கு பிரட்டி, மூழ்கும் அளவு மட்டும், கொதி தண்ணி விட்டு, மூடி அவிய விடுங்க.. அவிந்து வந்ததும், மூடியை எடுத்துப்போட்டு, கறிவேப்பிலை சேருங்க, பக்கத்திலயே நின்று:).. பிரட்டிப் பிரட்டி நன்கு தண்ணீர் வத்தும் வரை, பிரட்டி... இறக்கி தேசிக்காய்/எலுமிச்சம் புளி பிளிந்து விடுங்க... கறிவேப்பிலையை கடசியாப் போட்டால்தான் அப்படியே பபபச்சையா இருக்கும், முன்னமே போட்டிட்டால் கலர் போயிந்தி:).

சைவக் காரர் எல்லாம் கண்ணை மூடுங்க:)
=========================இடைவேளை=======================
3.இடைவேளையில அசைவம் உண்ணலாம் வாங்க:).. இது sea bass [ uk kind:) ] மீனில் செய்த பிரட்டல் கறி.. தோசைக்கு சூப்பராம் என, வீட்டுக்கு வந்த விருந்தினர் புகழ்ந்தாங்கோ:)).. செய்முறை வேணுமெண்டால்ல்.. செக் -பவுன்டில அனுப்புங்க:) சொல்லித் தாறேன்:)

^._.^ ==== ^._.^ ==== முடிஞ்சு..^._.^ போச்ச்ச்ச்:)==== ^._.^ ==== ^._.^ 
சரி சரி இப்போ திறங்க.... கண்ணைத்தான்:)

4.இது உங்களுக்கு பழக்கப் பட்டுப் போய்விட்ட... அதே புதினா மேடைதான்ன்:)
இது புதினா சட்னி. இது நான் செய்வது, கொஞ்சூண்டு எண்ணெயில், செத்தல் மிளகாய், மிளகு, உள்ளி அதனோடு ஒரு கைப்பிடியளவு ஷனா டாலை ஊறப்போட்டு சேர்ப்பேன், அல்லது ரோஸ்டட் ஷனா டால் சேர்த்து வறுத்து, அதனுள் இவ்விலைகளைக் கொட்டி நன்கு வதக்கி இறக்கி ஆறியதும்... பழப்புளி உப்பு, தேங்காய் சேர்த்து நன்கு அரைத்தெடுப்பேன், அல்லது, அரைத்து பாதி தேசிக்காய்ப்புளி சேர்ப்பேன்...

எனக்கொரு டவுட்டு:).. நான் பல நேரங்களில் இலைவகை/கீரைவகை வாடியிருந்தால், அவற்றை துப்பரவு செய்து, வெட்டமுன் தண்ணியில் போட்டு விடுவேன். பின்பு பார்க்க அவை எல்லாம் புதுசா மரத்தில் இருப்பதுபோல துளிர்த்து நிற்கும். அதன்பின் சமைக்க ஆசையாக இருக்கும்.

அந்த நினைப்பில், நல்லாயிருந்த புதினாவை பிடுங்கி வந்து, நைட் தண்ணியில் போட்டு விட்டு, காலை எழுந்து பார்க்கிறேன், அத்தனை இலைகளும் கறுத்து விட்டது, அத்தோடு தண்ணியும் கறுப்பாகியிருந்தது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஏன் புதினாவுக்கு மட்டும் இப்பூடி ஆகுது?:).
==================================================================
5. ஆவ்வ்வ்வ் தலைப்பிலே சொன்னபடி இது அஞ்சூஊஊஊஊ ஆவது குறிப்பாக்கும்:)).. 
இது என்னவெனத் தெரியுதோ? இதுதான் துவரம்பருப்பு வடைக்கறி:).. நான் ஆவியில் அவிக்காமல் நேரடியாகப் பொரித்தெடுத்தேன். இது பொதுவா எல்லோருக்கும் தெரியும் முறையில்தான் செய்தேன், அதனால குறிப்பெல்லாம் தேவையில்லை.. பேசாமல் சாப்பிடுங்கோ:).

^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ 
ஊசிக்குறிப்பு:
வாங்க!! வாங்க... கையைக் கழுவுங்கோ:), வெயிட்..வெயிட்ட்.. உடனேயே சாப்பிடுவதா?:) சாப்பிட முன்.. “மொய்ய்ய்ய்” எழுதுங்க:)).. ஆங்ங்ங்ங்.. வெயிட் வெயிட்.. இன்னும் இருக்கில்ல:)) ச்சும்மா அவதிப்படப்பூடா:).. எங்க உங்கட சின்னி விரலைக் காட்டுங்க.. ஆஆஆஆஆ.. வோட் பண்ணிட்டீங்களா?:)).. ஆவ்வ்வ்வ்வ் இப்போ சாப்பிடுங்கோ... “பொன்ன பித்தி”.. இது ஃபிரெஞ்சாக்கும்:)
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ 
இந்தத் தொப்பியும் கண்ணாடியும், போனமுறை நீங்கள் எல்லோரும் கொடுத்த, மொய்ப் பணத்தில் வாங்கியதென்பதை மிகவும் தாழ்மையுடன் கூறிக்கொள்கிறார்.. பு.பூ:)
^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ 

50 comments :

 1. //பழகலாம் வாங்க!!.. வாங்க!!!:)//

  ஆஹா, இதுபோல யாரு உள்ளன்போடு பிரியமாகக் கூப்பிடுவாங்கோ!

  அதிரான்னா அதிரா தான். ;)

  ReplyDelete
 2. //அட எதுக்கு இவ்ளோ கூச்சப் படுறீங்க... உள்ள வாங்க..:)..//

  ஆஹா, வரவேற்பெல்லாம் ஜோராத்தான் ‘தேன்’ போல இருக்குது. ;)

  //அஞ்சு விதமாமே:))//

  அஞ்சு விதமான அடி தரப்படுமோ என அஞ்சுகிறேன், அதிரா. ;)


  ReplyDelete
 3. //எங்க உங்கட சின்னி விரலைக் காட்டுங்க.. ஆஆஆஆஆ.. வோட் பண்ணிட்டீங்களா?:))..//

  நல்லவேளை ஞாபகப்படுத்தின்னீங்க

  இரண்டாவது வோட் என்னோடதாக்கும்.

  //ஆவ்வ்வ்வ்வ் இப்போ சாப்பிடுங்கோ... //

  சாப்பாடெல்லாம் எனக்கு ஒண்ணும் வேண்டாம்.

  நீங்களே சாப்பிடுங்கோ.

  நான் வேறு என்னவோ எதோ பேசலாம்ன்னு கூப்பிடுறீங்களோன்னு நினைச்சு ஆசையாக ஓடியாந்தேன். ;(((((

  கடைசியில் சப்பென்ற ஓர் சமையல் ! போதும் போதும் ஏன் இனி இங்கிருக்கணும். இப்போதே எஸ்கேப்.

  ReplyDelete
 4. பூனைப்படங்களும் பூஸானந்தாவின் பழமொழியும் வழக்கம் போல அருமை.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள் அதிரா.

  Bye Bye

  vgk

  ReplyDelete
 5. புதீனா இலைகளை சுத்தமாக கழுவி குடிக்கும் தண்ணீரில் போட்டு வைத்து பிறகு அந்த தண்ணீரை அருந்தினால் நன்கு ஜீரணம் ஆகும் ..

  ReplyDelete
 6. ஆஆவ் மீஎ லாண்டட் :)


  shall come after a while crocodile :)

  ReplyDelete
 7. வை.கோபாலகிருஷ்ணன் said...
  நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊ///

  [co="purple"]வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. வலது காலை எடுத்து வச்சு வாங்கோ.. அடை சுட்ட உங்களுக்கு இதெல்லாம் யூ..யூ..பி தானே?:)) [/co]

  ReplyDelete
 8. வை.கோபாலகிருஷ்ணன் said...

  //அஞ்சு விதமாமே:))//

  அஞ்சு விதமான அடி தரப்படுமோ என அஞ்சுகிறேன், அதிரா. ;)//

  [co="purple"] ஹா..ஹா..ஹா.. நோஓஓ.. நோ... இதுக்கே இப்பூடிப் பயந்தால் எப்பூடி?.. இன்னும் நிறைய வரப்போகுதெல்லோ.. ஆரியபவான் கிச்சினில் இருந்து:) [/co]

  ReplyDelete
 9. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //எங்க உங்கட சின்னி விரலைக் காட்டுங்க.. ஆஆஆஆஆ.. வோட் பண்ணிட்டீங்களா?:))..//

  நல்லவேளை ஞாபகப்படுத்தின்னீங்க

  இரண்டாவது வோட் என்னோடதாக்கும்.//

  [co="purple"] ஹா..ஹா..ஹா.. விடமாட்டனில்ல.. இந்த விஷயத்தில மட்டும்:) அதிராக்கு நோ வெட்கம்.. நோ ரோஷமாக்கும்:)) [/co]

  கடைசியில் சப்பென்ற ஓர் சமையல் ! போதும் போதும் ஏன் இனி இங்கிருக்கணும். இப்போதே எஸ்கேப்.//

  [co="purple"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பூடி ஒரு சமையல் குறிப்புக்களை.. இந்த ஹோல் வேல்ட்டிலை எங்கயுமே பார்த்திருக்க மாட்டீங்க தெரியுமோ?:))..

  ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி கோபு அண்ணன்.. [/co]

  ReplyDelete
 10. [co="blue green"]வாங்கோ ராஜேஷ்வரி அக்கா வாங்கோ... அப்படியா? நல்ல ஒரு புது ரிப்ஸ் சொல்லியிருக்கிறீங்க.. இனிப் பயன்படுத்துகிறேன்ன்..

  மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 11. Cherub Crafts said...
  ஆஆவ் மீஎ லாண்டட் :)


  shall come after a while crocodile :)//
  [co="blue green"]ஆவ்வ்வ்வ்வ் கோல்ட் ஃபிஸ்ச்சூ ஒருநாள் முந்தி லாண்டட்ட்ட்ட்:)) அதாவது நாளைக்குத்தான் விரதம் முடியுதென்னேன்ன்ன்:))..

  வாங்கோ அஞ்சூ வாங்கோ... மீ ரொம்ப ரயேட்ட் ஆக்கும் இன்று... ஸ்லீப் பண்ணப் போறேன்ன்ன்:)) [/co]

  ReplyDelete
 12. [im]https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc3/p480x480/1375908_552313378171446_1397547390_n.jpg[/im]

  ReplyDelete
 13. [co="OrangeRed"] மீ ரொம்ப ரயேட்டாக்கும்.. இனி பாரணை.. வட:) பாயாசம்:) எல்லாம் முடிச்சு வந்து உங்களைச் சந்திக்கிறேன்ன்ன்ன்.. அதுவரை அனைவருக்கும் நல்லிரவு..மூட்டைப் பூச்சி காதில ஊரும் கனவுகளா வரட்டும்..:) இது அஞ்சுவுக்காக அல்ல:).. [/co]

  [im]http://cache.desktopnexus.com/thumbnails/1386356-bigthumbnail.jpg[/im]

  ReplyDelete
 14. ஆஆஆஅ ..என்னோட புது சாம்சங் கலக்சி போனை ரெண்டு நாளா காணோம் :)
  அதில் ஜெசி சிம்பு படமெல்லாம் இருந்துதே !!!!!!!

  ReplyDelete
 15. மகி இது மல்டி கிரேயின் தோசை மாதிரியே இருக்குது இல்ல :))

  ReplyDelete
 16. அஞ்சுவின் அஞ்சாத அஞ்சாவது வோட்டு :))த ம five :)

  ReplyDelete
 17. அதுவரை அனைவருக்கும் நல்லிரவு..மூட்டைப் பூச்சி காதில ஊரும் கனவுகளா வரட்டும்..:) இது அஞ்சுவுக்காக அல்ல:).. [/co]//

  அதிஸ் பார்த்து காதில் பஞ்சு வச்சுக்கிட்டு படுங்க :))

  மத்தவங்களுக்கு என்ன நினைக்கிறோமோ அதே நமக்கு நடக்கும்னு சத்தியானந்தா இங்கிலிஷ்ல ஒரு சொற்பொழிவில சொன்னார் :))

  ReplyDelete
 18. தத்துவம் சூப்பர் :)) இப்போ டெஸ்ட் பண்ணட்டா உங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்கான்னு :))

  தம்பி எஈ எஈ ஈஈஈ ஒரு பெரிய Eunectes murinus இங்கே ஒருத்தருக்கு கொண்டாங்க ..இதயம் தாங்குதான்னு பார்ப்போம் :))

  ReplyDelete
 19. அட.. அட... தோசை..:)

  பார்க்கவே பசிக்குதே..:)

  பார்லி அரிசி போட்டு செய்ததில்லை. ஊறினா அரைபடுமோ ...
  கேள்விப்பட்டிருக்கிறன் செய்து பார்க்கேலை... செய்திடுவம்.
  அதிரா... எனக்கும் நீங்க சுட்டதுபோல நல்லாச் சிவக்கவிட்டு
  மொருமொருன்னு சுட்டா இன்னும் 2 தோசை மேலால சாப்பிடுவன்..:)
  சூப்பர்..;)

  த ம.7

  ReplyDelete
 20. பயற்றங்காய் வித் பலாக்கொட்டைப் பிரட்டலுக்கு தே. பால் கொஞ்சமென்டென்றாலும் கடைசியில சேர்க்கிறதில்லையோ.. வித்தியாசமா இருக்கு. செய்து பார்ப்போம்.

  முதல்ல இங்கை இப்ப பலாக்கொட்டை கடையில இருக்கான்னு பார்க்கணும்.
  நல்ல காரப்பிரட்டல்போல கிடக்கு. படத்தைப்பார்க்கவே..:)
  வீட்டில சின்னவை சாப்பிடுவினமோ!..

  ReplyDelete
 21. புதினாச் சட்னியும் புதினமாத்தான் இருக்கு. ஐ மீன் புதுசா இருக்குன்னேன்...:)
  து.ப. வ. கறி பார்க்க சூப்பரா இருக்கு..
  எப்படிச் செய்யுறதெண்டு போடேலை... கர்ர்ர்ர்ர்ர்...:)

  ரெஸிப்பி ப்ளீஸ்...!
  பூஸார் பொன் மொழி சூப்பருங்கோ...
  அதான் எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு மீயும் லாண்டட்..:)

  அஞ்சூவின் செல்லம் அருமை!
  மீராவும் ஜெஸியை ரொம்பவே விசாரிச்சதா சொல்லச் சொன்னா..:)

  எல்லாமே அசத்தல் இம்முறையும்!
  வாழ்த்துக்கள் அதிரா!

  ReplyDelete
 22. பூஸார், எல்லாமே ஜூப்பரு. புதினா சட்னி என் ஆ.காரருக்கு பிடிக்காது எனவே சமைப்பதில்லை. தத்துவம் எல்லாமே அருமை.

  ReplyDelete
 23. [im]http://3.bp.blogspot.com/-dR9_pw3MhmE/Un9xcxLEmPI/AAAAAAAAFyQ/FF7H6qe--VA/s400/images(4).jpg[/im]

  [co="blue green"] உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பேபி அதிரா.. றீச்சரைக் கூப்பிடாதையுங்கோ:) அவ கூப்பிடப்படாதெனச் சொல்லியிருக்கிறாவெல்லோ:).. [/co]

  ReplyDelete
 24. Cherub Crafts said...
  ஆஆஆஅ ..என்னோட புது சாம்சங் கலக்சி போனை ரெண்டு நாளா காணோம் :)
  அதில் ஜெசி சிம்பு படமெல்லாம் இருந்துதே !!!!!!!
  [co="purple"] வாங்க அஞ்சு வாங்க...
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதை வெளில இருக்கும் ஃபிஸ் ராங்கில தேடுங்கோ:)) [/co]

  ReplyDelete
 25. Cherub Crafts said...
  மகி இது மல்டி கிரேயின் தோசை மாதிரியே இருக்குது இல்ல :))[co="purple"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மகீஈஈஈஈஈஈஇ ககா..போங்கோஓஓஓஓஒ:) [/co]

  ReplyDelete
 26. Cherub Crafts said...
  தத்துவம் சூப்பர் :)) இப்போ டெஸ்ட் பண்ணட்டா உங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்கான்னு :))

  தம்பி எஈ எஈ ஈஈஈ ஒரு பெரிய Eunectes murinus இங்கே ஒருத்தருக்கு கொண்டாங்க ..இதயம் தாங்குதான்னு பார்ப்போம் :))
  [co="purple"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சிவனே என தன்பாட்டில, நல்லபிள்ளையா வந்து:) வோட் மட்டும் போட்டிட்டுப் போயிருக்கிறார்ர்.. அவரைப் போய்க் கூப்பிட்டுக் கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி அஞ்சு..[/co]

  ReplyDelete
 27. [co="purple"] வாங்கோ இளமதி வாங்கோ.. [/co]

  பார்லி அரிசி போட்டு செய்ததில்லை. ஊறினா அரைபடுமோ ...
  கேள்விப்பட்டிருக்கிறன் செய்து பார்க்கேலை...

  [co="purple"] அப்போ பார்லி அரிசி தோசைக்கு சேர்க்கலாம் என கேள்விப்பட்டாவது இருக்கிறீங்க.. நான் கேள்விப்படவில்லை.. ச்சும்மா உடம்புக்கு நல்லதுதானே எனத்தான் சேர்த்தேன்... அது ஒரு குறையுமில்லை நல்லா அரைபட்டுதே... [/co]

  ReplyDelete
 28. இளமதி said...
  பயற்றங்காய் வித் பலாக்கொட்டைப் பிரட்டலுக்கு தே. பால் கொஞ்சமென்டென்றாலும் கடைசியில சேர்க்கிறதில்லையோ.. வித்தியாசமா இருக்கு. செய்து பார்ப்போம்.[co="purple"] இந்தக் காலத்தில ஆருமே பால் சேர்ப்பதில்லை.. உறைப்புக் கறிகளுக்கு..

  வெள்ளைக்கறிக்கு மட்டுமே பால் சேர்ப்பேன்.

  குழம்பு வேணுமெனில் தண்ணியைத்தான் அதிகம் சேர்ப்பேன். ஏதும் உறைப்புக் கூடிட்டால் மட்டுமே பலன்ஸ் பண்ண பசுப்பால் சேர்ப்பேன்.

  என்னாது துவரம்பருப்பு வடக் கறிக்கு ரெசிப்பியோ? ஆவ்வ்வ் அஞ்சுவும் கேட்டதா நினைவு சொல்லுறேன்ன்..

  மியாவும் நன்றி இளமதி... [/co]

  co="purple"] [/co]

  ReplyDelete
 29. [co="purple"] வாங்கோ வான்ஸ்ஸ் வாங்கோ.. என்னாது ஆத்துக்காரருக்குப் பிடிக்காதோ?..:) பொதுவா எல்லா ஆத்துக்காரருக்கும் பிடிக்குதில்லைத்தான்:).. பிடிக்காதெனில் சமைக்கப்படாதுதான்ன்..:)

  மியாவும் நன்றி வான்ஸ்ஸ்..

  இம்முறை றீச்சரை அதிரா, “றீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”:)... எனக் கூப்பிடவில்லையாம் எனச் சொல்லிடுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்:)))[/co]

  ReplyDelete
 30. ''எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்''. அருமையான தத்துவம். இப் பதிவை படிப்பதற்கும் தத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லையே! (ஒரு சின்ன சந்தேகம்தான்)

  ReplyDelete
 31. பந்திக்கும்,பதிவுக்கும் முந்தோனும் இல்லையென்றா இப்படித்தான். நல்ல காலம் வோட் பண்ணீட்டன்.
  உங்கட இந்த பலாக்கொட்டை வித் பயற்றங்கா,சோயாமீற் கறியை மறக்கேலுமோ அதிரா.
  தோசையைப் பார்க்க செய்யவேணும் போல இருக்கு.செய்துபார்க்கிறேன்.
  து.ப.வ.க.ரெசிபி காணோம்???
  அஞ்சுவின் செல்லம் அழகு.

  ReplyDelete
 32. பழக அஞ்சாமல் வந்து விட்டேன்.சூப்பர்.கண்ணால் ருசித்தாயிற்று..

  ReplyDelete
 33. ஒரு பெரீ..ய டௌட்!! அது எதுக்கு அதீஸ்... பயற்றங்காய், பலாக்கொட்டை கறிக்குப் பக்கத்தில சந்தனக்குச்சு!!

  தோசை சுப்பர்.

  //பொதுவா எல்லோருக்கும் தெரியும் முறையில்தான் செய்தேன்// எனக்குத் தெரியாதே. ;(

  ReplyDelete
 34. ;))))))) என்னைக் கூப்பிடாமல் கூப்பிட்டதால்... அதிராத அதிராவுக்கு அமைதியாக மயில் ஒன்று அனுப்பி அருளுகிறேன். ;))

  ReplyDelete
 35. அதிராவின் ஸ்பெஷல் தோசையும் , புதினா துவையலும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்குய் பூஸாரெ எப்படி இருக்கிறீர், நான் தான் உங்க ஜலீலாக்க்க்காவ்

  ReplyDelete
 36. viyapathy said...
  ''எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்''. அருமையான தத்துவம். இப் பதிவை படிப்பதற்கும் தத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லையே! (ஒரு சின்ன சந்தேகம்தான்)

  [co="red purple"] வாங்கோ வையாபதி வாங்கோ... ஹா..ஹா..ஹா... என் சமையலை ரிசிப்போருக்கும் எதையும் தாங்கும் இதயம் வேணும்தான்ன்:)) நல்ல கண்டு பிடிப்பு... மியாவும் நன்றி.[/co]

  ReplyDelete
 37. [co="red purple"]வாங்கோ அம்முலு வாங்கோ.. நா இதப் பார்க்கல்லியே:))..

  து.ப.வ.கறிக்கு ரெசிப்பியா? அவ்வ்வ்வ்வ் அஞ்சு கேட்டாக... இளமதி கேட்டாக.. இப்போ நீங்களுமோ?.. சைவமாக இருப்போருக்குள் என்னா ஒரு ஒற்றுமை.... :) முடிவில் எழுதி விடுறேன்ன்..

  மியாவும் நன்றி அம்முலு. [/co]

  ReplyDelete
 38. [co="red purple"]வாங்க ஆசியா வாங்க... அஞ்சாமல் வந்திட்டீங்க, ஆனா அஞ்சாமல் சாப்பிடுங்க பார்க்கலாம்ம்:))..

  மியாவும் நன்றி ஆசியா. [/co]

  ReplyDelete
 39. ஆஷா போஸ்லே மியாவ்!!! ;)

  ReplyDelete
 40. வலைச்சரத்தில் சகோ பாண்டியன் உங்கள் தளத்தை அறிமுகம் செய்ததன் மூலம் வந்தேன்..உங்கள் தளம் அழகாக உள்ளது. வாழ்த்துகள்

  ReplyDelete
 41. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. RIP ராஜேஸ்வரி அக்கா, மறக்க முடியவில்லை.

   Delete
 42. பயற்றங்காய் வித் பலாக்கொட்டைப் பிரட்டல் கறி - இது நல்லா இருக்காதா? வாசனை சகிக்காதா? பக்கத்துல ஊதுபத்தி ஏத்தி வச்சிருக்கீங்க.

  தேசிக்காயை, இனிமேலாவது 'பிழிவீர்களா'. எப்போதும் 'பிளிஞ்சுக்கிட்டே இருக்கீங்களே'

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத் தமிழன்... இவ்ளோ காலமும் அஞ்சுவைக் கண்டால்தான் நடுங்கும்;) இப்போ உங்களைப் பார்த்தாலும் நடுங்குதூஊஉ ...:) எங்கே பிழிஞ்சிடப்போறீங்களோ என:) ஹா ஹா ஹா ...
   ஊதுபத்தி அது ச்ச்ச்ச்ச்ச்சும்மா:) ...

   மிக்க நன்றி.

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.