நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Sunday, 23 June 2013

ப்பாடா முடிஞ்சிடுச்சா?:))...

ன நீங்க எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விடுவது எனக்கு கேட்குது:)).. ஒஃப் கோர்ஸ்:)) முடிஞ்சிடுச்சு:).... ஆனா இல்லை:).. ஹையோ அதிகம் குழம்பிடாதீங்க:)).. ஃபிரான்ஸ் ட்ரிப் பதிவுகள் இத்தோடு நிறைவடைகின்றன:)..  என்றேன் அதுக்கு மேல .. எதுவும் சொல்றதுக்கில்ல:)).. அனைத்தும் ஆண்டவன் சித்தம்..:)).. இதை நிறைய எடிட் பண்ணி, இப்பதிவோடு முடிவுக்கு கொண்டுவர, மீ... பட்ட பாடிருக்கே:)).. (முடியல்ல,, டிஷ்யூ பிளீஸ்ஸ்:)) பிங் லதான் வேணும்:))


ரி வாங்கோ இம்முறை ஃபிரான்ஸ்சின் தலநகரம் பரிஸில் இருந்தே, அனைத்துப் படங்களும் இணைக்கிறேன்.

இது பிரசித்திபெற்ற ஒரு சேர்ஜ்.. பெயர்.. நோத்ர் டாம்[ Notre Dame] சேர்ஜ்.. 
இந்த சேர்ஜ்ஜின் ஒரு பக்கத்தால் செந்நதி ஓடுகிறது. அதைக் கடந்து போக பாலம் போடப்பட்டிருக்கு. அப்பாலத்தின் இரு கரையிலும், இப்படி பூட்டுக்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. இது எதற்காகவெனில்.. காதலர்கள்.. திருமணம் முடிக்க இருப்போர் எல்லாம், தாம் இருவரும் பிரிந்திடாமல் இணையவேண்டும் என நேர்த்தி வச்சு, இப்பூட்டில் தம் பெயர்கள் திகதி ஆண்டு எல்லாம் எழுதி இப்படி பூட்டி விடுகின்றனராம். இனி பூட்ட இடமே இல்லாமல் இரு பக்கமும் அழகிய பல வண்ணப் பூட்டுக்களால் நிறைந்திருக்கு.


இந்த சென் நதியிலே போர்ட் ட்ரிப்பும் உண்டு.இது பாலத்திலிருந்து எடுத்த படம்.
இது செந்நதியின் இன்னொரு பக்கம்.. இது லூவ்ர் மியூசியத்துக்கு பின் பக்கத்தால் போகிறது.இதுதான் பிரசித்திபெற்ற “லூவ்ர்” மியூசியம். இங்குதான் “மோனாலீசா” வின் ஒரிஜினல் ஓவியம் வைக்கப்பட்டிருக்கு.(இது பொது அறிவுக்கு பயன்படும் குறிச்சு வையுங்கோ.. சமீபத்தில் “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில்” பிரகாஸ்ராஜ் அவர்கள், இக்கேள்வி கேட்டிருந்தார்.======()======()=======()======()============()======()========()======()======

இதுதான் ட்ராம்:). தார் ரோட்டிலே தண்டவாளத்தில்... கார் பஸ்போல ஓடிக்கொண்டிருக்கும். முன்பெல்லாம் பிரித்தானியாவில் இதுதான் இருந்ததாம்ம்.. 18ம் நூற்றாண்டுகளில்.. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இப்போ முழுவதும் தார் ரோட்டாக்கி வாகனம் ஓடப்பண்ணிட்டினம்.

ஆனால் பரிசில் இப்பவும் புதுசு புதுசா கட்டி விடுகினம், சூப்பராக இருந்துது. என் ஒரு கனவும் இதில் ஏறோணும் என்பது ஏறிட்டேன்ன்:)).
இந்த வீடியோவைப் பாருங்கோ. இது யூ ரியூப்பில் எடுத்தேன். இதே ட்ராமில் தான் நாங்கள் ஏறியதாக நினைவு.  “போர்த்து வன்ஸன்” போகிறது. முழு வீடியோவும் பாருங்கோ சூப்பர்.

(((((((((((((((((((((((())))))))))))))))))))))))

இதுவும் இன்னொரு பிரபல்யமான இடம், இது
[Arc de Triomphe] “நெப்போலியன் வளைவு” எனச் சொல்லப்படுகிறது. அதாவது 2ம் உலகப் போரிலே, வெற்றியோடு நெப்போலியன் திரும்பி வரும்போது, அவரை வரவேற்பதற்காக கட்டிய வளைவாம். இங்கு ஒரு நெருப்பு சுவாலை இருக்கு, அது எப்பவும் ஒலிம்பிக் தீபம்போல அணையாமல் எரிஞ்சுகொண்டிருக்கு.

இது முன் பக்கம்

இது சைட் வியூ..

==()==()==()==()==()==()==()==

ஆவ்வ்வ்வ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சு:). இதுதான் பரிசில் இருக்கும் “லா ஷபேல்” எனும் ஏரியா. இது கிட்டத்தட்ட தமிழிடமாகவே இருந்துது. தமிழ்க் கடைகள் அனைத்தும் இங்கிருக்கு. கடை மட்டுமல்ல.. தமிழர் அலுவலகங்கள்.. அனைத்தும் இங்கு காணக்கூடியதாக இருந்துது.இது முனியாண்டி விலாஸ். இங்கு கொத்து ரொட்டி, மட்டின் ரோல்ஸ் எல்லாம் சாப்பிட்டோம்.. நல்ல சுவை. பக்கத்திலே அண்ணாச்சி உணவகம், அங்கு மட்டின் கறி ரொட்டி வாங்கினோம். ஆனா உள்ளே ஒரு சிறிய துண்டு மட்டின் மட்டுமே இருந்துது, அதன் பின், அதை எட்டியும் பார்க்கவில்லை.


இதில் தூர தெரிகிறதே சிகப்பு நிறத்தில், அதுதான் சென்னையில் பேமஸாக இருக்கும் “நாளா அப்பக்கடை”. நாளா அப்பக்கடையினர்தானாம்,”அது இது எது” நிகழ்ச்சியில் சிரிச்சாப் போச்சு பகுதிக்காக பரிசு கொடுப்போர் எனக் கேள்விப்பட்டோம்.

இது சேரன் உணவகம். இது ஒரு தமிழ் Buffet. நன்றாகவே இருந்துது. இனிப் போனாலும் போக ஆசையாக இருக்கு. நிறைய ஐட்டங்கள் வைத்திருந்தனர்.


பக்க இணைப்பு:
நான் முன்பு போட்ட லூட்ஸ் இங்கே பாருங்கள் பதிவில் இருக்கும் சேர்ஜ் இடங்களுக்கு போனவாரம், படு மழை காரணமாக, வெள்ளம் ஏற்பட்டதாம், நாம் நடந்த இடங்கள், மெழுகுதிரி எடுத்த இடமெல்லாம் தண்ணியால் மூழ்கியிருக்கிறதைப் பார்க்க கவலையாக இருக்கு. இதிலே பாருங்கள் நான் சொன்ன அந்த மொட்டையான மரங்களெல்லாம் துளிர்த்து நிற்கின்றன.


குண்டு:) ஊசி இணைப்பு:
ஆவ்வ்வ் எங்களுக்கு வரும் புதன் கிழமை 26 ம் திகதி, Summer ஹொலிடே விடுகிறது..(கவனிக்கவும் அஞ்சுவுக்கு இல்லை.. ஆவ்வ்வ்வ் :)) ஹா..ஹா..ஹா...அவர்களுக்கு யூலையில்தான்:)).. எங்களுக்கு ஹொலிடேஏஏஏஏஏஏஏஏ.. அதனால நாங்க “இந்தாட்டிக்கா” போகிறோம்ம்.. நீண்டகாலமில்லை ஓகஸ்ட்டில் திரும்பிடுவோம்ம்.. ஆனா இம்முறை அங்கிருந்தும் புளொக்கில் பதிவு போடோணும் என ரெடி பண்ணி வச்சிருக்கிறேன்.

அத்தோடு எல்லா புளொக்கும் வருவேன் எனவும் மனதில் கங்கணம் கட்டியிருக்கிறேன்ன்ன்:)) எந்தளவு தூரம் சாத்தியமாகுமோ ஆண்டவனுக்கே வெளிச்சம்:).. எதுக்கும் உங்க உங்க குல தெய்வங்களுக்கு நேர்த்தி வையுங்கோ:)..(நல்ல நல்ல நேர்த்தியா வச்சு.. நீங்களே நிறைவேத்திடுங்கோ எனவும் வேண்டப்படுகிறீர்கள்:) பூஸோ கொக்கோ?:) நாங்க இதில எல்லாம் வலு ஷார்ப்பாக்கும்:)).
==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==
ஒரு வெளவால் வீட்டுக்கு, இன்னொரு வெளவால் வந்தால், 
அதுவும் தொங்கிக் கொண்டுதானிருக்கும்..
இந்த அரிய தத்துவத்தை, உங்கள் எல்லோரின் நலனுக்காகவும் சொன்னவர்:)).. 
வேறு ஆருமல்ல:) புலாலியூர்ப் பூஸானந்தாவேதான்ன்:)).
==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==v==

103 comments :

 1. //ஒரு வெளவால் வீட்டுக்கு, இன்னொரு வெளவால் வந்தால்,
  அதுவும் தொங்கிக் கொண்டுதானிருக்கும்..// உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஸ்! புல்லா அரிச்சுப் போச்சு வௌவாலாரே! ;)

  ReplyDelete
 2. பிரான்ஸ் பதிவு முடிவு பெற்றது மெத்த மகிழ்ச்சி. நல்ல படங்கள். இருங்கோ, அதிராவின் மறுபக்கத்தைப் பார்க்க டிரை பண்ணிப்புட்டு வாரேன்ன்ன்ன்! அதான், லேப்டாப்புக்கு அந்தாஆஆஆஆஆப் பக்கம் போய்ப் பார்க்கப் போறேன்! ;))))

  ReplyDelete
 3. ஆஆஆ! முடியாது, நம்ப முடியாது,,இது அதிரா என நம்ப முடியாது! கைகீல்ஸ்;)-ஐக் காணாம்..முத்துராமன் அங்கிள் மகன் கார்த்திக் தொப்பி போட்டிருக்கினம், ஆறடி கூந்தலை அரையடியாக் கத்தரிச்சிரிக்கினம். இது அதிரா இல்லே, இல்லே, இல்ல்ல்ல்ல்லே!! ;)))

  ReplyDelete
 4. //“நாளா அப்பக்கடை”. // இஸிண்ட் இட் "நளா அப்பக் கடை"??!!!

  எஞாய் தி வகேஷன் மிஆவ் பெயார்! மாசாமாசம் ஹொலிடே போறீங்க..என் காதில புகை புகையாய் வரலேஏஏஏ! ஹேவ் எ நைஸ் டைம்!

  ReplyDelete
 5. அழகான படங்கள்... நன்றி... என்னே தத்துவம்...! ஒரு படத்தின் மறுபக்கத்தை எதிர்ப்பார்க்கிறேன்...

  ReplyDelete
 6. என்ன அதிரா இப்படி சொல்லிட்டீங்க. பிரான்ஸ் டூர் அவ்வளவுதானா?
  //ஒஃப் கோர்ஸ்:)) முடிஞ்சிடுச்சு:).... ஆனா இல்லை:)..// அப்போ அடுத்த டூர் தொடரும்.

  ReplyDelete
 7. //சரி வாங்கோ இம்முறை ஃபிரான்ஸ்சின் தலநகரம் பரிஸில் இருந்தே, அனைத்துப் படங்களும் இணைக்கிறேன்.// இப்ப பரிஸிலயோ இருக்கிறீயள்.ஆவ்வ்வ் அதிரா...நீங்களோ.நம்பமுடியவில்லை.ல்லை.லை.சீ.ச்சீ அதிரா
  பொய் சொல்லமாட்டா.அவாதான் 6இயர்ஸ் இருந்து நல்லபெண்ணாச்சே.
  பக்கத்தில அவராஆஆஆ...இவரூஊஊஊ.ஆவ்வ்வ்வ்.

  ReplyDelete
 8. லா சப்பலுக்கு போனீங்களோஓஓ. அப்போ முக்கியமாக ஒரு கடைக்கு
  போயிருப்பியளே. அந்த படத்தைக்காணலையே.
  ஆ..ங் மறந்திட்டன். அதன் ஓனர்தான் உங்ககூடவே வந்திருந்தார்.
  அதுதான் கடைக்கு லீவு போல.
  நல்ல நல்ல தத்துவம் எல்லாம் சொல்றீங்கோ.

  ReplyDelete
 9. நீங்கள் போன இடங்களெல்லாம் நானும்போயிருக்கிறேன். நல்ல நல்ல‌
  டூரிஸ்ட் ப்ளேஸ் இருக்கு பிரான்ஸில்.நீங்கள் அழகாக,தெளிவான படங்களுடன் விளக்கப்படுத்தியிருக்கிறீங்க அதிரா.
  உங்க summar ஹொலிடே நல்லபடியாக சந்தோஷமாக அமையவேணும்.
  உங்க விடுமுறையை குடும்பத்தினருடன் நல்லா சந்தோஷமாக அனுபவியுங்கள். have a nice journey athira.

  ReplyDelete
 10. //அப்பாடா முடிஞ்சிடுச்சா?:))...//

  தலைப்பு அருமை ! ;)

  >>>>>

  ReplyDelete
 11. ஹாண்ட்பேக்கில் உள்ள பூனை அதைவிட அருமை.

  >>>>>

  ReplyDelete
 12. //இனி பூட்ட இடமே இல்லாமல் இரு பக்கமும் அழகிய பல வண்ணப் பூட்டுக்களால் நிறைந்திருக்கு.//

  அடடா, இனிமேல் போக நினைக்கும் என்னால் பூட்ட முடியாதா? ;(

  இனி அங்கு போய்ப் பிரயோசனமில்லை.

  சரி ... சரி ! வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு விடுகிறேன். ;)

  >>>>>

  ReplyDelete
 13. //படத்திலே நிற்பது.. சந்தேகமே இல்லை அதிராதான்.//

  நான் பார்த்த உடனேயே கண்டு பிடிச்சுட்டேன். சந்தேகமே இல்லை. அதிராவே தான். ;)

  ReplyDelete
 14. //முகம் பார்க்க ஆவலாக இருக்கோ? சுத்திக்கொண்டு முன்னுக்கு வந்து நின்று பாருங்கோ:)//

  நல்ல ஐடியா!

  ”சுத்திச்சுத்தி வந்ததனால் சொந்தமாகிப் போனேனே, சித்தம் குளிர இப்போ .... ” ன்னு ஒரு பாட்டு ... ”ஆட்டுக்கார அலமேலு” படத்தில் வரும்.ஏனோ அந்த ஞாபகம் வருது. ;)

  >>>>>

  ReplyDelete
 15. //ஒரு வெளவால் வீட்டுக்கு, இன்னொரு வெளவால் வந்தால்,
  அதுவும் தொங்கிக் கொண்டுதானிருக்கும்..//

  நல்ல அரியதொரு அருமையான கண்டுபிடிப்பு. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 16. அன்புள்ள அதிரா,

  இன்றைய படங்கள் எல்லாமே சூப்பரோ சூப்பராக உள்ளன. எதைப்பாராட்டுவது எதை விடுவது எனக் குழப்பமாக [கொயப்பமாக] உள்ளது.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  நாளை முதல் ஒரு 45 நாட்களுக்கு நானும் மிகவும் பிஸியோ பிஸியாகத் தான் இருப்பேன்.

  ஆளைக்காணோமே என நினைக்காதீங்கோ !

  அன்புடன் கோபு அண்ணன்

  ReplyDelete
 17. அடுத்த சுற்றுலாப் படங்கள் தாறதுக்கு ஆயத்தமாய் முதல் எடுத்த படங்களைப் போட்டு முடிச்சிட்டீங்கள் போல...:)

  ம். அத்தனையும் அழகாக இருக்கு அதிரா!

  ReplyDelete
 18. ஒவ்வொரு இடத்திலயும் நிண்டு சுழட்டிச் சுழட்டி படம் எடுத்துவிட்டிருக்கிறியள்.

  அருமையான இடங்கள்! வாழ்கையில ஒருக்காவெண்டாலும் போய்ப் பார்த்திட வேண்டிய இடங்கள்தான்.

  படத்தை நானும் சுத்திச் சுழட்டிப் பார்த்தும் அதிராவை ஒழுங்கா முன்னுக்கு முகம் பார்க்கமுடியேலையே... சரி இம்முறை இப்பிடிப்பார்த்தாச்சு. அடுத்தடுத்த படங்களில எங்கள் குறை நீக்கபட்டுமென எதிர்பார்க்கிறேன்...:)

  ReplyDelete
 19. வீடியோவும் சூப்பர்!
  எங்கள் ஊரில் மாரிகாலத்தில தோடம்துரவுகளில வாற பௌண்டன்பேனை எண்டு செல்லப்பெயரால் அழைக்கப்படும் பெரீய அட்டை போல அம்புட்டு நீஈஈஈட்டு ட்ராம் பரீசில ஓடுது...:) பார்க்க அழகாத்தான் இருக்கு.

  இங்கை இப்பவும் ட்ராம் இருக்கு. ஆனா சிவப்பு அட்டை சைஸில்தான். உந்தாப் பெரீசான ட்ராம் இங்கை இல்லை. உதில் பாதிதான்.

  படங்கள் அனைத்தும் அழகு!
  எங்களுக்கும் பார்க்க காட்டியதுக்கு மிக்கமிக்க நன்றி அதிரா!

  உங்கள் அடுத்த பயணம் ஆனந்தமாக பாதுகாப்பாக அமோகமாக இருக்க மனமார வாழ்த்துகிறேன்!

  நல்லபடியா போய் வாங்கோ!

  ReplyDelete
 20. [im]https://www.facebook.com/ajax/messaging/attachment.php?attach_id=55f0dc996e32240bcd130fafd432611b&mid=mid.1372061393780%3A212af7670390c91b55&hash=AQCdNfKnbtWos71r[/im]

  ReplyDelete
 21. அப்பாடா முடிஞ்சிடுச்சா?:))... ////

  [co="green"]கஷ்டப்பட்டு உழைச்சு, உடுப்பு, சாப்பாடு :))) எல்லாம் வாங்கிக் கொடுத்து, கவனமா கொண்டு போய் ஸ்கூல், டியூஷனில விட்டு, பிறகு பத்திரமாய் :)))கூட்டிக்கொண்டு வந்து வீட்டில விட்டு, பிறகு நல்லதொரு மாப்பிள்ளையை :)))கல்யாணம் பண்ணிக் கொடுத்த, ஒரு அப்பாவை, தந்தையை...... ஃபாதரை..... “டா” போட்டு, “அப்பாடா” என்று சொல்றாங்க...!

  இந்த உலகம் ஏன் இன்னும் அழியல....!!:)))[/co]

  ReplyDelete
 22. ஒஃப் கோர்ஸ்:)) முடிஞ்சிடுச்சு:) ////

  [co="green"]இங்கிலீஸ் கோர்ஸ், ஃபிரெஞ்சு கோர்ஸ், கம்பியூட்டர் கோர்ஸ், தையல் :))) கோர்ஸ், ஐஸிங் கோர்ஸ் மாதிரி, இதுவும் ஒரு கோர்ஸா? அதைப் படிச்சு முடிச்சுட்டீங்களா?:))) பலே பலே நல்ல கெட்டிக்காரி:)))தான் போல[/co]

  ReplyDelete
 23. இதை நிறைய எடிட் பண்ணி, இப்பதிவோடு முடிவுக்கு கொண்டுவர, மீ... பட்ட பாடிருக்கே:)).. (முடியல்ல,, டிஷ்யூ பிளீஸ்ஸ்:)) பிங் லதான் வேணும்:)). ////

  இந்தாங்க நீங்க கேட்ட பிங் கலர் டிஷ்...!:)))

  [im]http://ecx.images-amazon.com/images/I/41I1msN-OAL._SX300_.jpg[/im]

  ReplyDelete
 24. சரி வாங்கோ இம்முறை ஃபிரான்ஸ்சின் தலநகரம் பரிஸில் இருந்தே, அனைத்துப் படங்களும் இணைக்கிறேன். ///

  ஐயையோ.... இன்னும் ஃபிரான்ஸை விட்டுப் போகலையா? இங்கவா இருக்கீங்க...! அப்போ ஃப்ரீயா இருந்தா - மணியம் கஃபே பக்கம் வாறது - சர்வண்ட் க்கு ஆள் தேவையா இருக்கு!

  - நல்ல சம்பளம் தருவேன் -

  கஷ்டமர் கூட நல்லா சிரிச்சு சிரிச்சு பேசணும்!

  -- விக்காதா பழைய சாப்பாடு எல்லாத்தையும் பேசி பேசியே வித்துடணும்! - இதுதான் வேலை :))))

  -- வரும் போது “பிடி” பணமாக 5000 பவுண்ஸ் கொண்டுவரவும்! நீங்கள் வேலைவிட்டுப் போகும் போது, திருப்பித் தருவோம்ம் :))))))

  ReplyDelete
 25. இனி பூட்ட இடமே இல்லாமல் இரு பக்கமும் அழகிய பல வண்ணப் பூட்டுக்களால் நிறைந்திருக்கு. ////

  [co="green"]அப்போ என் பெயரையும், கனடா மாமியின் மகள் சந்தனவல்லியின் பெயரையும் ஒன்றாக எழுதி, எப்படி நாங்கள் பூட்டுறதாம்? விளக்கம் ப்ளீஸ்[/co]

  ReplyDelete
 26. பக்கத்திலே நிற்பவர், இன்றுதான் ஈபிள் டவரைப் பார்ப்பவர்போல:) பார்ப்பவர்...  பரிசிலிருக்கும் பிரபல பதிவர், மாத்தி யோசிப்பவர்ர்:)... அடுக்குமொழியிலே பெயர் வைத்திருப்பவர்:), மணியம் கஃபேயின் ஓனர்(ஹையோ ஒரு கதைக்குச் சொன்னேன்:)) அவர்கள்தான். அங்கு இவரை மட்டுமே எம்மால், இத்தடவை சந்திக்க முடிஞ்சது.  ///

  [co="green"]ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் - இந்தப் படம் எப்ப எடுத்தது? சொல்லவே இல்ல? நான் ஈஃபில் டவரையா பார்க்கிறேன் - நல்லா கவனியுங்க..... அதோட தூரத்தில்....... வெள்ளையாய்............ கையில் குழந்தையுடன்...................நிற்கிறதே ஒரு சிலை! அதை அல்லவா பார்த்தேன்!

  சரி சரி அடுத்ததடவை வரும் போது சொல்லுங்க - இங்கிருக்கும் எல்லா பதிவர்களையும் சந்திச்சிடலாம் :)))))[/co]

  ReplyDelete
 27. பக்கத்தில அவராஆஆஆ...இவரூஊஊஊ.ஆவ்வ்வ்வ். ////

  இல்லை ப்ரியசகி...., படத்தைப் பார்த்து எடை போட்டிடாதீங்க!:))) இந்தப் படம் கறுப்பாகிடுச்சு! நான் நேரில் பார்க்க நல்ல வெள்ளையா :))), செகப்பா :))), ச்சும்மா கமலஹாசன் மாதிரி :)))இருப்பேனாக்கும்ம்!

  -- இதையெல்லாம் ஏன் சொன்றேன்னா - நாளைக்கு நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் பிரகாஷ்ராஜ் கேட்டால், தெரியாதுன்னு சொல்லக் கூடாது பாருங்க! அதுனால தான் :)))

  ReplyDelete
 28. [co="purple"] அச்சச்சோஓஒ.... மன்னிச்சிடுங்கோ... விரைவில்வருகிறேன்ன்ன்ன்... அதுவரை இந்தாங்கோ ஒவ்வொருவருக்கும் ஒண்ணொண்ணு எடுங்கோ.... [/co]

  [im]http://i172.photobucket.com/albums/w5/p8ballsupergurl/kitty-cat-cupcakes.jpg[/im]

  ReplyDelete
 29. Gஅற்ர்ர் :))) எங்களுக்கு லீவு இப்ப இல்லைன்றதில பூசுக்கு இன்னா சந்தோஜம் :))
  நோ வொர்ரிஸ்:))எங்களுக்கு ஜூலை க்ளோஸ் செஞ்சு செப்டம்பர் வரை லீவாச்சே ஹா ஹாஹா:))

  வளவால் தத்துவம் ஜூப்பர் ...ஏற்கனவே வைக்கோல் பீவர்ல அச்சுமா இருக்கு :)
  இந்த தத்துவத்தை படிச்சதும் புல் மூட்டைக்குள்ள விழுந்த மாறி இருக்கு அச் அச் அச் அச சும் ம்ம்ம்ம்ம்ம் @@@@

  ReplyDelete
 30. அக்கா போலதான் தம்பி ..பூசாருக்கு ஏற்கனவே ஒரு படத்தை அனுப்பிட்டேன் ..நாங்க ரண்டு பெரும் சுண்டினா ரத்தம் தெறிக்கும் நிறம்

  ReplyDelete
 31. ஆமா தில்லா பாகுக்குள்ளே உக்காந்திருக்கீங்க ..:)சைட் பவுச்சில் பச்சை நிற வால் ஆடுராபோல இருக்கு :))

  ReplyDelete
 32. பாரிஸ் வரும் செய்தி தெரிந்து இருந்தாள் வெடி தோரணம் எல்லாம் போட்டு பூஸாரை கலக்கியிருப்போம் :)))
  அருமையான படங்கள்!

  ReplyDelete
 33. முனியாண்டி விலாஸ் எல்லாம் நாங்க போறதில்லை சுத்த சைவம்:)))

  ReplyDelete
 34. வசந்தகால விடுமுறையை
  வடிவாக கொண்டாட
  வாழ்த்துக்கள்:))))

  ReplyDelete
 35. பாலத்தின் இரு கரையிலும், இப்படி பூட்டுக்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. இது எதற்காகவெனில்.. காதலர்கள்.. திருமணம் முடிக்க இருப்போர் எல்லாம், தாம் இருவரும் பிரிந்திடாமல் இணையவேண்டும் என நேர்த்தி வச்சு, இப்பூட்டில் தம் பெயர்கள் திகதி ஆண்டு எல்லாம் எழுதி இப்படி பூட்டி விடுகின்றனராம். இனி பூட்ட இடமே இல்லாமல் இரு பக்கமும் அழகிய பல வண்ணப் பூட்டுக்களால் நிறைந்திருக்கு.

  நம்பிக்கை விதைக்கும் பூட்டுப் பிரார்த்தனை ..!

  ReplyDelete
 36. இதே ட்ராமில் தான் நாங்கள் ஏறியதாக நினைவு. “போர்த்து வன்ஸன்” போகிறது. முழு வீடியோவும் பாருங்கோ சூப்பர்.//

  மிக அருமையான பகிர்வு..குட்டி டாக் ஒன்று ட்ராம் பார்த்து ஓடி வர முயற்சிப்பது அழகு..!

  ReplyDelete
 37. Mahi said...

  [co="purple"]ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ பேர்த்டே கேர்ள் வாண்டோ.... நான் இப்பல்லாம் பானர் கட்டுவதை நிறுத்திட்டேன்ன்ன்... அதனால வாழ்த்த முடியல்ல பெரிசா... ஆனாலும் இந்தாங்கோ இது உங்களுக்காக ஸ்பெஷலா எங்கட கார்டினில பறிச்சது நொட் அஞ்சூஸ்ஸ் கார்டின்:)).. http://cherubcrafts.blogspot.co.uk/2013/06/geno.html [/co]

  [im] http://thumbs.dreamstime.com/z/ginger-tiger-kitten-11986920.jpg [/im]

  ReplyDelete
 38. [co="blue green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆரும் கிட்ட வரப்பூடா:) பிராண்டிடுவேன்ன்ன்:)).. 30 ம் திகதிக்குள் குஞ்சு பொரிக்கிறமாதிரித் தெரியேல்லை.. ஏனெண்டால்ல் சூடு பத்தாதாம்.. அதேன்... மீ களம் இறங்கிட்டேன்ன்ன் பூஸோ கொக்கோ:))).. குறை மாதத்தில, ஆனா நிறை குழந்தையா வரப்பண்ணப்போறேன்ன்ன்ன்:)))..

  ஊ.கு: இப்படத்தை அஞ்சு எடுக்கேல்லை:) இது அந்த தேம்ஸின் நடுக்கடலில்:) இருக்கும் தெய்வானை மீது சத்தியம்:))..[/co]

  [im]http://2.bp.blogspot.com/-XcgxJ_L7cqY/UcjEY3XMCII/AAAAAAAAFZo/Zf3-SjHxuHA/s400/GetAttachment.aspx(2).jpg[/im]

  ReplyDelete
 39. [co="blue green"]இவை இன்று எடுத்த படங்கள்... அவ நித்திரை கொள்ளும் அழகை.. அவர் ரசிக்கிறாராம்ம்ம்:)) [/co]

  [im]https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc1/v/998669_387994814638037_1281137135_n.jpg?oh=4539372b157222c3eae77483d182b5d9&oe=51CA9347&__gda__=1372272450_bd6f22934f4c054f3239cb96acb30b5b[/im]

  [im]https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/v/1044224_387994834638035_197250883_n.jpg?oh=d79a8a13fa5e54eb480eec428378eab9&oe=51CAD69E&__gda__=1372292658_4811c081a1e31b5ff323bc1e86b33e76[/im]

  ReplyDelete
 40. என்னது.... பிரான்ஸ் சுற்றுப் பயணம் முடிஞ்சுதோ.. நோ... இது செல்லாது செல்லாது....எங்க ஆனைமார்க் சோடா? படங்கள் ஜுப்பர்....

  ReplyDelete
 41. ஹையோ.... அதிஸ் அண்ட் கோ (அதாங்க நம்ம மணியத்தார்) வைப் முன்னாடி பார்க்கலாமேன்னு என் மொபலை சுத்தி சுத்தி வந்தேனா... அது பாட ஆரம்பிச்சுடுச்சு... " சுத்தி டிச்சா வந்தீக சுட்டும் விழியால்" ஙே.... எல்லாம் வில்லங்கமா இருக்கே.... பேசாம நீங்களே திரும்பி நிக்க கூடாதா?

  ReplyDelete
 42. அடுத்த முறை பதிவர் சந்திப்புக்கு எங்களுக்கும் இன்விடேசன் குடுத்தா நாங்களும் வருவோமாக்கும்.. :)) டிக்கட் ஒபாமா அங்கிளிட்ட சொல்லி அதிரா புக் பண்ணுவா. அது தான் அவவுக்கு ஸ்வீட் 16 எண்டு பெயர்... :)))

  ReplyDelete
 43. //இந்தாங்கோ இது உங்களுக்காக ஸ்பெஷலா எங்கட கார்டினில பறிச்சது நொட் அஞ்சூஸ்ஸ் கார்டின்:)).. // தேங்க்யூ, தேங்க்யூ, தேங்க்யூ மிஸிஸ்.மியாவ்! :))))) ஸோ ஸ்வீட் ஆஃப் யூ! மஞ்ச ரோஸ், ஒரேஞ்ச் கேட் இரண்டுமே மிக்க அழகாய் உள்ளன, நீங்க பேனர் கட்டி வாழ்த்தாவிட்டால் என்ன? மனசுக்குள் வாழ்த்தினாக் கூட போதும். மிக்க மிக்க மிக்க நன்றிகள் அதிராவ்!

  வெகேஷன் போகும் பிஸியிலும் பூவுடன் வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 44. //குறை மாதத்தில, ஆனா நிறை குழந்தையா வரப்பண்ணப்போறேன்ன்ன்ன்:))).. // ஆஆஆஆஆஅவ்! கோக்கு மாக்கா ஏதும் பண்ணாம சமர்த்தா எந்தாட்டிக்கா போய்வாங்கோ. ஸ்வான் பிள்ளையளை வந்து படமெடுத்துப் பகிருங்கோ என அன்புடன் கேட்டுக்கொள்கிறென், நன்றி வணக்கம்! ;) :)

  ReplyDelete
 45. மகி உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 46. Mahi said...
  //ஒரு வெளவால் வீட்டுக்கு, இன்னொரு வெளவால் வந்தால்,
  அதுவும் தொங்கிக் கொண்டுதானிருக்கும்..// உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஸ்! புல்லா அரிச்சுப் போச்சு வௌவாலாரே! ;)///

  [co="blue green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு அழகான:), அறிவான:), பண்பான:), பாசமான:)... பால்போன்ற வெண்மையான:)).. நேராக நிமிர்ந்து நடக்கும்:).. இருக்கும்:)) ஒரு பூஸைப் பார்த்து:)) வெளவாலாரே எனச் சொன்னமைக்கு:) என் படுபயங்கரமான:)) கண்டனங்கள்:)).. [/co]


  ReplyDelete
 47. Mahi said...
  பிரான்ஸ் பதிவு முடிவு பெற்றது மெத்த மகிழ்ச்சி. நல்ல படங்கள். இருங்கோ, அதிராவின் மறுபக்கத்தைப் பார்க்க டிரை பண்ணிப்புட்டு வாரேன்ன்ன்ன்! அதான், லேப்டாப்புக்கு அந்தாஆஆஆஆஆப் பக்கம் போய்ப் பார்க்கப் போறேன்! ;))))//

  [co="purple"]ஆவ்வ்வ்வ்வ்வ் அனைவரது வீரத்தையும் இதிலதான் மீ பார்க்கப் போறேன்ன்ன்ன்:)).. முடிஞ்சால் முன்னால வந்து முகம் பார்த்து:) அதிரா ஆரைப்போல:)) எனச் சொல்லுங்கோ பார்ப்பம்:)) [/co]

  ReplyDelete
 48. Mahi said...
  ஆஆஆ! முடியாது, நம்ப முடியாது,,இது அதிரா என நம்ப முடியாது! கைகீல்ஸ்;)-ஐக் காணாம்..முத்துராமன் அங்கிள் மகன் கார்த்திக் தொப்பி போட்டிருக்கினம், ஆறடி கூந்தலை அரையடியாக் கத்தரிச்சிரிக்கினம். இது அதிரா இல்லே, இல்லே, இல்ல்ல்ல்ல்லே!! ;)))///

  [co="blue green"]ஹா..ஹா..ஹா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முத்துராமன் அங்கிளின் மூத்தமகன் போட்டிருப்பது ஆம்பிளைத் தொப்பி:))... ஹையோ புஷ்பா அங்கிள் கடைப் புகை வராத கற்பூரத்தின் மீது சத்தியம்:)... ஆறடி அரையடியாகி.. இடைக்கிடை கால் அடியும் ஆகும்:)).. நாங்க இருப்பது.. ஆறடியிலயாக்கும் அதேன் இப்பூடி:)).. நான் ஆற்றைச் சொன்னேன்:)).. [/co]

  ReplyDelete
 49. Mahi said...
  //“நாளா அப்பக்கடை”. // இஸிண்ட் இட் "நளா அப்பக் கடை"??!!! ///

  [co="blue green"] ஹா..ஹா..ஹா.. அது நளாவோ?:)) என்னமோ போங்கோ:)).. [/co]

  எஞாய் தி வகேஷன் மிஆவ் பெயார்! மாசாமாசம் ஹொலிடே போறீங்க..என் காதில புகை புகையாய் வரலேஏஏஏ! ஹேவ் எ நைஸ் டைம்!

  [co="blue green"] மியாவும் நன்றி மகி. [/co]

  ReplyDelete
 50. திண்டுக்கல் தனபாலன் said...
  அழகான படங்கள்... நன்றி... என்னே தத்துவம்...! ஒரு படத்தின் மறுபக்கத்தை எதிர்ப்பார்க்கிறேன்...

  [co="blue green"] வாங்கோ வாங்கோ.. என்னாது ஒரு படத்தின் மறு பக்கமோ?:) ஹா..ஹா..ஹா...:))

  மியாவும் நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும். [/co]

  ReplyDelete
 51. priyasaki said...
  என்ன அதிரா இப்படி சொல்லிட்டீங்க. பிரான்ஸ் டூர் அவ்வளவுதானா?
  //ஒஃப் கோர்ஸ்:)) முடிஞ்சிடுச்சு:).... ஆனா இல்லை:)..// அப்போ அடுத்த டூர் தொடரும்.//

  [co="purple"] ஆவ்... வாங்கோ அம்மலு வாங்கோ... சே.. சே.. புது நாடு போனால் மட்டும்தான் டூர் படங்கள் தொடரும்.. போட்ட நாட்டையே திரும்ப போட விருப்பமில்லை நேக்கு:)) [/co]

  ReplyDelete
 52. இமா said...
  ;)))))))))))

  [co="purple"] இது ஆரிது?:)) ஓ றீச்சரோ? என்னா இது?:) ஆரம்பத்திலிருந்தோ?:) ஹையோ ஆண்டவா.. ஆரம்பக்காலம் நான் இந்த ஸ்மைலியை நிப்பாட்டப் பட்டபாடு:)) திரும்படியுமா? முதல்ல இருந்தோ?:))..


  ஆங்ங்ங்ங்ங்ங்ங் வாங்க இமா வாங்கோ.. மியாவும் நன்றி.. சுவான் தம்பதிப் படம் போட்டிருக்கிறேன் பாருங்கோ கீழ.. இன்னும் பேபி கிடைக்கல்ல:((.. அது நான் படமெடுக்க சான்ஸ் இல்லைப்போலும்:((. மியாவும் நன்றி இமா.[/co]

  ReplyDelete
 53. priyasaki said...
  //சரி வாங்கோ இம்முறை ஃபிரான்ஸ்சின் தலநகரம் பரிஸில் இருந்தே, அனைத்துப் படங்களும் இணைக்கிறேன்.// இப்ப பரிஸிலயோ இருக்கிறீயள்.ஆவ்வ்வ் அதிரா...நீங்களோ.நம்பமுடியவில்லை.ல்லை.லை.சீ.ச்சீ அதிரா
  பொய் சொல்லமாட்டா.அவாதான் 6இயர்ஸ் இருந்து நல்லபெண்ணாச்சே.
  பக்கத்தில அவராஆஆஆ...இவரூஊஊஊ.ஆவ்வ்வ்வ்.

  [co="purple"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு சுவீட் 16 பிள்ளை:) ஏதோ எழுத்துப் பிழைபோல வசனம் பிழைச்சிட்டுது என காக்கா போகாமல்:))...

  அது அது.. மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்.. சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:))... வேணுமெண்டால்ல்.. மேலே இருப்பவரிடமும் கேட்டுப் பாருங்கோவன்:)).. ஹையோ ஏதும் ஏடாகூடமாச் சொன்னாலும் சொல்லிடுவார்ர்:)) முருகா என்னைக் காப்பாத்தப்பா:). [/co]

  ReplyDelete
 54. priyasaki said...
  லா சப்பலுக்கு போனீங்களோஓஓ. அப்போ முக்கியமாக ஒரு கடைக்கு
  போயிருப்பியளே. அந்த படத்தைக்காணலையே.///

  [co="purple"] அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க:)).. ஊராக்களாச்சே.. நல்ல.. சாப்பாட்டாக இருக்குமே என நம்பிப் போனால்ல்:)) அப்பூடி ஒரு கஃபேயே இல்லை:))..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. [/co]

  ReplyDelete
 55. [co="purple"] மிக்க நன்றி அம்முலு.. அப்பாடா அதிராவின் தியேட்டரில் ப்டம் போடும் தொல்லை விட்டது என நிம்மதியா இருங்கோ 5,6 கிழமைக்கு:)).. ஹா..ஹா..ஹா..:)) [/co]

  ReplyDelete
 56. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //அப்பாடா முடிஞ்சிடுச்சா?:))...//

  தலைப்பு அருமை ! ;)
  [co="purple"] வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... [/co]

  ஹாண்ட்பேக்கில் உள்ள பூனை அதைவிட அருமை.


  [co="blue green"] ஹா..ஹா..ஹா.. அவர்.. ட்ரிப் போக உடுப்படுக்கிறாராம்:)) [/co]

  ReplyDelete
 57. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //இனி பூட்ட இடமே இல்லாமல் இரு பக்கமும் அழகிய பல வண்ணப் பூட்டுக்களால் நிறைந்திருக்கு.//

  அடடா, இனிமேல் போக நினைக்கும் என்னால் பூட்ட முடியாதா? ;(

  இனி அங்கு போய்ப் பிரயோசனமில்லை.

  [co="blue green"] ஹா..ஹா..ஹா.. அதெல்லாம் திருமணத்துக்கு முன்னாடி பூட்டோணும்.. இனிப் பூட்ட வெளிக்கிட்டால்ல்... வாணாம் மீ ஒண்ணும் சொல்லமாட்டேன்ன்:))ஜாமீஈஈ:)) ஏனெண்டால் மீ தான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே:)). [/co]

  ReplyDelete
 58. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //படத்திலே நிற்பது.. சந்தேகமே இல்லை அதிராதான்.//

  நான் பார்த்த உடனேயே கண்டு பிடிச்சுட்டேன். சந்தேகமே இல்லை. அதிராவே தான். ;)///

  [co="blue green"] ஆவ்வ்வ்வ்வ் கரெக்ட்டாக் கண்டுபிடிச்ச உங்களுக்கு.. இந்தாங்கோ ஒரு கலர் ரீவி...:)).. அது இது எது.. புரோகிராமை இனி இந்த ரீவியில பாருங்கோ:)).. [/co]

  [im]http://cdn102.iofferphoto.com/img/item/543/328/891/l_n7Vkphillips-radio-tv-electronics-vintage-ad-cat-tv.jpg[/im]

  ReplyDelete
 59. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //முகம் பார்க்க ஆவலாக இருக்கோ? சுத்திக்கொண்டு முன்னுக்கு வந்து நின்று பாருங்கோ:)//

  நல்ல ஐடியா!

  [co="blue green"] ஹா..ஹா..ஹா.. இதிலிருந்து தெரியுதோ மீ ரொம்ப நல்ல பொண்ணு என:)).. நான் ஒண்ணும், முகம் பார்க்காதீங்கோ எனச் சொல்லல்ல இல்ல?:)) [/co]

  ReplyDelete
 60. வை.கோபாலகிருஷ்ணன் said...
  நாளை முதல் ஒரு 45 நாட்களுக்கு நானும் மிகவும் பிஸியோ பிஸியாகத் தான் இருப்பேன்.

  ஆளைக்காணோமே என நினைக்காதீங்கோ !

  அன்புடன் கோபு அண்ணன் [co="purple"] அடடா நீங்களும் பிசியோ கோபு அண்ணன்.. கோடை காலம் வந்தாலே எல்லோரும் பிசியாகிவிடுகினம்... மிக்க மிக்க நன்றி கோபு அண்ணன் வரவுக்கும்.. கருத்துக்களுக்கும். [/co]

  ReplyDelete
 61. இளமதி said...
  அடுத்த சுற்றுலாப் படங்கள் தாறதுக்கு ஆயத்தமாய் முதல் எடுத்த படங்களைப் போட்டு முடிச்சிட்டீங்கள் போல...:)

  ம். அத்தனையும் அழகாக இருக்கு அதிரா!//

  [co="blue green"]ஆவ்வ்வ் வாங்கோ இளமதி வாங்கோ... இல்ல அப்படியில்லை.. வரும் வழியில் பனிமழையில் வேறு எங்காவது போனால் மட்டும் அதுபற்றிய பதிவு வரும் இல்லாட்டில் இல்லை:)).

  ஒரு தொடர்ப் பதிவு எனில் கடகடவெனப் போட்டு முடிச்சால்தானே... படிப்போருக்கும் நல்லாயிருக்கும்.. இதுவே 4 பதிவுக்கு 2 மாதம் எடுத்திட்டேன்ன்.. அதுதான் கங்கணம் கட்டி முடிச்சுட்டேன்ன்.. அப்பாடா பூஸோ கொக்கோ:)).. [/co]

  ReplyDelete
 62. [co="purple"]மன்னிச்சிடுங்கோ.. மிகுதிப் பதில்கள் முடிந்தவரை விரைவில் போடுவேன்ன்.. அல்லது முடியாவிட்டால் ”இந்தாட்டிக்கா” :)விலிருந்தாவது போடுவேன்:)).. அதுவரை அனைவருக்கும் வணக்கமும் சுவீட் ட்ரீமும் கூறி விடைபெறுபவர்.. புலாலியூர்ப் பூஸானந்தா:)). [/co]

  [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQQxKYv8GZjKLBYcZNpqvXHLNZn7wTUO51DnCCJxaUrhfI0MKYPbw[/im]

  ReplyDelete
 63. காசு..... பணம்....துட்டு..... மனீ மனீ....!!

  காசு.... பணம்..... துட்டு.... மனீ மனீ...!!

  ச்சே டைட்டில் சாங்க்லாம் போட்டுக்கிட்டு, கொஞ்சம் பரபரப்பா வரலாம்னும் பார்த்தா கடைய மூடிட்டாய்ங்களே??

  அம்மா..... தாயே ..... சாப்டு 4 நாள் ஆச்சும்மா...... ஏதாச்சும் பழைய சோறு கறி இருந்தா போடும்மா.....!

  உனக்கு ரெட்டைக் குழந்தை பொறக்கும்மா.....!!

  ச்சே.... இராத்திரியில பின்னூட்டம் போட வந்தா...... அந்த நாள் ஞாபக்ம் வந்து தொலைக்குதே???

  ReplyDelete
 64. அப்போ, எங்களுடைய பின்னூட்டம் எல்லாத்துக்கும் நொந்தாட்டிக்கா........ஸாரி அந்தாட்டிக்காவில இருந்து வந்ததுக்கு அப்புறம் தான் பதிலா?

  நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ!

  கூட்டுங்க பஞ்சாயத்தை...!

  எங்கே நாட்டாமை??
  எங்கே சொம்பு??
  எங்கே ஆலமரம்???

  ஒழுங்கா வந்து பின்னூட்டம் போடுங்க! இல்லைன்னா.... இங்கேயே உண்ணாவிரதம் இருப்போம்!

  அன்னம் தண்ணி அருந்த மாட்டோம்!
  லெமன் யூஸ் குடிக்க மாட்டோம்!

  அவ்ளோ ஏன் செல்லப்பா கடை டீ கூட குடிக்க மாட்டோம்!

  இது ஸ்வானின் முட்டை மீது சத்தியம்!!

  ReplyDelete
 65. ஐ..... ஜாலீஈஈஈஈஈஈஈ... பூஸார் சட் டவுன் பண்னிட்டு போயிட்டார் போல....! இதுதான் நல்ல சான்ஸ்! நாங்கள் இங்கே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஜாலியாக இருக்கலாம்!

  நேயர்கள் இப்பொழுது முதல் பலவகையான நடன நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்!

  காசு....... பணம்.......துட்டு...... மனீ.... மனீ............!!

  [im]http://25.media.tumblr.com/tumblr_m9ab0nfdZK1r1mtsdo1_400.gif[/im]

  இவர்களின் நடனத்தை தொடர்ந்து, இதோ உங்கள் அபிமான ஆஃபிரிக்கன் ஆண்டியின் அரிய டான்ஸ்.....

  காசு...... பணம்.....துட்டு..... மனீ மனீ

  [im]http://media.tumblr.com/tumblr_m40ij3Tu591r6fge6.gif[/im]

  ReplyDelete
 66. இவரு நம்ம குரூப்புக்கு புதுஷா வந்திருக்காரு...... வெரி நைஸ் டான்ஸர்! ஆஃபிரிக்க சேனலில் நடந்த “கரடி ஆட காட்டெருமை ஆட” அப்டீங்கற நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர். ஆஃபிரிக்காவில் 40 லட்சம் பெறுமதியான வீடு, இவருக்கு குடுத்திருக்காய்ங்க...

  ஸ்டார்ட் மியூஸிக் :)))

  [im]http://cdn.gifbay.com/2012/11/the_carlton_dance-11407.gif[/im]

  ReplyDelete
 67. மக்களே....... மக்களே..... எல்லோரும் ஓடி வாங்க..... அந்தார்ட்டிக்கா போறேன்னு பச்சைப் பொய் சொல்லிட்டு, பூஸார் எங்க போயி நிக்குறான்னு......!! ஐயோ ஐயோ.... இதைப் பார்க்க எங்களுக்கே ஷை ஷையா வருதே......!!!

  சரி மேடம்! நாங்க டிஸ்டர்ப் பண்ணல! வீ ஆர் வெயிட்டிங் ஃபார் யூ!

  என் ஜாய் யுவர் லைஃப் :)))

  கையில போத்தல் வேற...... என்ர முருகா.............!! :)))))

  [im]http://24.media.tumblr.com/c3a2d5c6d3374e35481e908d582eabdf/tumblr_mm3ua17Pxy1rx8cx9o1_500.gif[/im]

  ReplyDelete
 68. இது ஸ்வானின் முட்டை மீது சத்தியம்!!////

  Nooooo saththiyaththai vaapas edunko:)..... I am going to write 2moro:)... god Muruga...... Vallikku diamond ring conforma poduven:)) ... Suwan babies ai kaappaaththungkoo:).

  Maniyam cafe owner..... Ungada vaaykku briyani tharuveen appudiye reddaik kulanthai pirakkaddum athuvum empaalakavee:))) mee suwaanukkuch sonnen:).

  ReplyDelete
 69. Nooooo saththiyaththai vaapas edunko:)..... I am going to write 2moro:)... god Muruga...... Vallikku diamond ring conforma poduven:)) ... Suwan babies ai kaappaaththungkoo:).

  Maniyam cafe owner..... Ungada vaaykku briyani tharuveen appudiye reddaik kulanthai pirakkaddum athuvum empaalakavee:))) mee suwaanukkuch sonnen:). ////

  ஐயகோஓஓஓஓ.... பின்னூடம் போடுங்கன்னு கேட்டது என்னமோ உண்மைதான்..... அதுக்காக இப்படியா? :))))

  லிஃப்கோ டிக்‌ஷனரியில் பார்த்தேன்.....,

  ஆக்ஸ்ஃபோர்ட் டிக்‌ஷனரியில் பார்த்தேன்......

  ஒண்ணுமே புரியல....! என்னமோ வசமா திட்டி வைச்சிருக்காய்ங்கன்னு மட்டும் புரியுது....!!

  அக்கா........ அஞ்சு அக்கா உங்களுக்கு ஏதாவது புரியுதா?

  இளமதி.... உங்களுக்குப் புரியுதா??

  ப்ரியசகி....... பூங்கோதை..... கோபு அண்ணா........ யாருக்காவது புரிகிறதா?

  என்னது ஒருத்தருக்குமே புரியலையா?

  என்ன கொடுமை கோவிந்தா....!

  பாருங்க பக்கத்து வீட்டில் இருக்கும் இந்த ஆளுக்கு, பூஸாரின் பின்னூட்டத்தைப் படிச்சுக் காட்டினேன் - நல்லா இருந்த மனுஷன்! எப்புடி ஆகிட்டாருனு....?????? :)))

  [im]http://awesomelyluvvie.com/wp-content/uploads/2013/03/HeadShake.gif[/im]

  ReplyDelete
 70. (((((:)))))

  வெல்டன் தம்பி :)) இதைத்தான் :)இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் ஹஹாஹாஅஹ்ஹ்

  ReplyDelete
 71. போட் பாலத்தில் இருந்து எடுத்த ரொம்ப அருமை..

  ட்ரெயின் இங்கு இப்படி தான் இருக்கு நானும் போட்டோ விடியோ எல்லாம் எடுத்து வைத்துள்ளேன், இப்ப பதிவுகள் பகிற ரொம்ப சோம்பேறி தனமாகி விட்டது..

  ReplyDelete
 72. அடாடா! முடிந்து விட்டதா? சூப்பர் பெரிய பகிர்வு.போட்டோஸ் சூப்பர்.பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி.
  அய்யோடா,விடுமுறையில் செல்கிறீர்களா? நான் அறிவிப்பதற்கு முன் உங்க கிட்ட இருந்தா?
  என்ஞாய்!

  ReplyDelete
 73. //ஒரு வெளவால் வீட்டுக்கு, இன்னொரு வெளவால் வந்தால்,
  அதுவும் தொங்கிக் கொண்டுதானிருக்கும்..//  இப்ப நான் வந்திருக்கேன். நான் தொங்கலையே ?
  அடே ! என் வால் தொங்குது. !!

  சுப்பு தாத்தா

  ReplyDelete
 74. ஓசியில் பிரான்ஸ் சுற்றிக்காண்பித்ததற்கு மிக்க நன்றி.. நாங்கெல்லாம் இப்படி பார்த்தாதான் உண்டு. ரொம்ப தேங்க்ஸ்..

  ReplyDelete
 75. ஒரு பூனை இருக்கும் வீட்டிற்கு இன்னொரு பூனை வந்தால் அதுவும் மியாவ் என்றுதான் கூப்பிடும்.

  ReplyDelete
 76. [im]http://31.media.tumblr.com/883094714a174b9c944c29b01e7830c7/tumblr_mjiysc819L1s1f4sxo1_250.gif[/im]

  [co="blue green"] மீஈஈஈஈஈஈ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))..

  அதாவது அதிரா வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. கேட்குதாஆஆஆஆஆ? மீ கூப்பிடுவது கேட்குதோ?:)).. ஹையோ என்பக்க புளொக் ஓனர் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்:)).

  சே..சே.. ஆருக்கும் கேட்கிறமாதிரி இல்லை:)).. சரி சரி.. கீழ விழுந்தாலும் ”கன்னத்தில” மண் ஒட்டாத கதையா.. காக்கா போயிடுவோம்ம்..:)). [/co]

  ReplyDelete
 77. ஆஹா.. வாங்கோ வாங்கோ.. உங்கள் வரவு இங்கும் அங்கும் நல்வரவாகட்டும்!

  குட்டிபூஸ் செம க்யூட்டா இப்படி ஆடுதே... சூப்பர்!
  சுகமா வந்து சேர்ந்தீங்களோ???

  களைப்பாறுங்கோ.. பிறகு வாறேன்..:)

  மிக்க நன்றி அதிரா!

  ReplyDelete
 78. athira August 9, 2013 at 11:05 AM

  //கோபு அண்ணன் நீங்கள் மற்றும் வீட்டில் அனைவரும் நலம்தானே? மீ வந்திட்டேனாக்கும்.. டும்..டும்..டும்....:).//

  வாங்கோ அதிரா, செளக்யமா நல்லா இருக்கீங்களா. உங்களை மீண்டும் சந்தித்ததில் எனக்கு கையும் ஓடலை லெக்கும் ஆடலை. நலம். நலமறிய ஆவல்.

  //பெரியவாளின் தொடர் இன்னும் முடியவில்லைப்போலும், நான் முன்பே முடிந்துவிட்டதாக்கும் என நினைத்தேன்.//

  அது இப்போதைக்கு முடியாது அதிரா. தொடர்வருகை தர நினைக்கும்
  உங்களுக்கெல்லாம் இன்னும் நிறைய பரிசுகள் தர வேண்டியுள்ளதே ! ;)))))

  //இதை நீங்கள் ஒரு புத்தகமாக்கலாமே கோபு அண்ணன்?.//

  நீங்க முன்னாடி விட்டுப்போன எல்லாப்பகுதிகளுக்கும் வருகை தாங்கோ, அதிரா.

  எங்கே நாம் விட்டோம்னா .... ஸ்வீட் சிக்ஸ்டீனில் விட்டோம். அதாவது ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆகிய அதிரா கடைசியாக வருகை தந்தது பகுதி-16 க்கு.

  பகுதி-17 முதல், வரிசையாக அதிரா உடனடியாக வரணும்.

  அதிரா நீங்க வராததால் உங்க நண்பியும் வராமல் இருக்காங்கோ. அவங்க மேல நான் கடும் கோபத்தில் இருக்கிறேன்னு சொல்லிடுங்கோ.

  //நல்ல நல்ல குட்டிக் குட்டிச் சம்பவங்களோடு கதை கூறிச் செல்லும் விதம், படிக்க இன்றஸ்ட்டாக இருக்கு.//

  பகுதி-17 முதல் படித்துப்பாருங்கோ. எல்லாமே குட்டிக் குட்டி தான். குட்டிகளாக இருப்பதனாலேயே அவைகள் ஜோராக இருக்கும். ;)

  பகுதி-25 மற்றும் பகுதி-35 அர்ஜெண்டாப்பாருங்கோ. அப்போ தான் உங்களுக்கு நாட்டு நடப்பே தெரியும்.

  http://gopu1949.blogspot.in/2013/07/25.html

  http://gopu1949.blogspot.in/2013/08/35.html

  அன்புடன்
  கோபு அண்ணன்

  ReplyDelete
 79. என் பக்கம் அதிரா என் பக்கம் வந்தது .. ஐ மீன் என் வலைப்பக்கம் கடைசியாக வந்தது ஜூன் 27, 2013.

  ஜூலை பூராவும் காணும், ஆகஸ்டு 10 தேதிக்கு திரும்பக்கிடைத்துள்ளதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

  44 நாட்கள் மிஸ்ஸிங் ;((((((

  நடுவில் “உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல”ன்னு பாட்டுப்பாடிக்கிட்டு இருந்தேன்.

  ஒரு நாள் என் கனவில் அதிரா கனடாவில் இருப்பது போல காட்சி வந்ததூஊஊஊஊ.

  இன்று இப்போது பகுதி-38 வெளியிட்டுள்ளேன். அதையும் முடிச்சுட்டு பகுதி-17 முதல் ஆரம்பித்து மளமளன்னு வாங்கோ.

  நம்ம ஃப்ரண்டு ஒண்ணு, கண்டுக்காம மசமசன்னு, ஊரெல்லாம் போய் க்விதை பாடிக்கிட்டு இருக்குது.

  அதன் பேரில் நான் கடுங்கோபத்தில் இருக்கிறேன் என்று மறக்காமச் சொல்லிவிடுங்கோ.

  கோபு அண்ணன்

  ReplyDelete
 80. Welcome athira . நல்வரவாகட்டும்.

  ReplyDelete
 81. எங்கோ இருக்கும் ஒருநாட்டை நேரில் சென்று பார்த்த உணர்வு படங்களும் வார்த்தைகளும் (நையாண்டி உள்ளடங்கலாக ) அத்தனையும் அருமை

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 82. [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcS8AZ0YdxIomN3udif7LTne2-FKTvFXVPe6DoRke_bToM7sXNNc[/im]

  ஹையோ எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈஈஈஈ:))

  [co="blue green"] மிக்க நன்றி இளமதி வரவுக்கும் கருத்துக்கும்..

  இப்போ வந்தவுடன் வரவேற்றமைக்கும். [/co]

  ReplyDelete
 83. [co="blue green"] வாங்கோ மணியம் கஃபே ஓனர்ர்... அனைத்துக்கும் விலாவாரியாகப் பதில் தர நினைச்சேன் ஆனா முடியல்ல..:) அதனால நன்றி மட்டும் இம்முறை சொல்லிடுறேன்.. அடுத்த பதிவில்.. ஒழுங்காக பதில்கள் போடுவேன், மியாவும் நன்றி அனைத்துக்கும். [/co]

  ReplyDelete
 84. [co="blue green"] வாங்கோ அஞ்சு.. மியாவும் நன்றி. என் அடுத்த பதிவுக்கு ஓடிவந்து , வந்த வேகத்திலயே முப்பது பின்னூட்டம் போடக் கடவது:). [/co]

  ReplyDelete
 85. [co="blue green"]வாங்கோ தனிமரம் மியாவும் நன்றி.. [/co]

  ReplyDelete
 86. [co="blue green"]வாங்கோ ராஜேஸ்வரி அக்கா மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 87. [co="blue green"] வாங்கோ கோதை.. மியாவும் நன்றி... [/co]

  //அது தான் அவவுக்கு ஸ்வீட் 16 எண்டு பெயர்... :)))//

  [co="purple"] அது.. அது.. அது:)) இதுக்காகவே உங்களுக்கு இந்தாங்கோ புடிச்சுக்கோங்க:).. [/co]
  [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSWZB0Klk484R9DqBL3aGp3Zt9mJPacct8HhX_7RRxM4jRPoNcDJg[/im]

  ReplyDelete
 88. Mahi said...
  //குறை மாதத்தில, ஆனா நிறை குழந்தையா வரப்பண்ணப்போறேன்ன்ன்ன்:))).. // ஆஆஆஆஆஅவ்! கோக்கு மாக்கா ஏதும் பண்ணாம சமர்த்தா எந்தாட்டிக்கா போய்வாங்கோ. ஸ்வான் பிள்ளையளை வந்து படமெடுத்துப் பகிருங்கோ என அன்புடன் கேட்டுக்கொள்கிறென், நன்றி வணக்கம்! ;) :)////

  [co="purple"]அவர்கள் என்ன கண்டிஷனில் இருக்கினம் என இன்னும் எட்டியும் பார்க்க முடியேல்லை மகி. பேபியும் முட்டைபோடும் வயசுக்கு வந்திருக்கும் இப்போ:)) [/co]

  ReplyDelete
 89. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...
  காசு..... பணம்....துட்டு..... மனீ மனீ....!!

  காசு.... பணம்..... துட்டு.... மனீ மனீ...!!///

  [co="purple"] ஹையோ சிலருக்கு, தன் பெயரைத்தான் சொல்லீனம் என்ற நினைப்பாக்கும்:)).. அது இங்கிலீசாக்கும்:))) [/co]

  ReplyDelete
 90. [co="purple"] வாங்கோ ஜலீலாக்கா... யாருக்கும் விடுமுறையில் பதில் போடமுடியாமல் போய்விட்டது. மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 91. [co="purple"] வாங்கோ ஆசியா. என்னோடு நீங்களும் விடுமுறை எடுத்திட்டீங்கபோல. நோன்பு முடிஞ்சுதே.. ஆனா ஆசியாவை இன்னும் காணம். மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 92. sury Siva said...
  //ஒரு வெளவால் வீட்டுக்கு, இன்னொரு வெளவால் வந்தால்,
  அதுவும் தொங்கிக் கொண்டுதானிருக்கும்..//  இப்ப நான் வந்திருக்கேன். நான் தொங்கலையே ?
  அடே ! என் வால் தொங்குது. !!

  சுப்பு தாத்தா

  [co="purple"] என் பக்கத்தில அக்கா இருக்காக..
  அண்ணா இருக்காக..
  ஆன்ரி இருக்காக...:)
  அங்கிள் இருக்காக:)
  தம்பி இருக்காக..
  தங்கை இல்லை:) ஏனெனில் இங்கு தங்கை நானேதான்:)..


  ஆனா ஒரு தாத்தா இல்லையே.. எனக் கவலைப்பட்டேன்ன்ன்.. சுப்பு தாத்தா வந்திட்டார்ர்...

  வாங்கோ வாங்கோ நல்வரவு.. மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி. [/co]

  ReplyDelete
 93. [co="blue green"] வாங்கோ விச்சு.. நீண்ட இடைவெளிக்குப் பின் காண முடிகிறது உங்களை.. மியாவும் நன்றி.. மியாவ்.. மியாவ்வ். [/co]

  ReplyDelete
 94. வை.கோபாலகிருஷ்ணன் said...

  நீங்க முன்னாடி விட்டுப்போன எல்லாப்பகுதிகளுக்கும் வருகை தாங்கோ, அதிரா.

  [im]http://2.bp.blogspot.com/-R7amqQ2d9fA/UXYImlxCblI/AAAAAAAALbw/KdgazlehYrA/s1600/RunningCat.jpg[/im]

  [co="blue green"] வரவேற்றமைக்கு மிக்க நன்றி கோபு அண்ணன்.... முடிந்தவரை முயற்சிக்கிறேன்ன். நன்றி. [/co]

  ReplyDelete
 95. [co="blue green"]வரவேற்றமைக்கு மியாவும் நன்றி அம்முலு. [/co]

  [im]http://0.tqn.com/d/create/1/0/-/q/8/-/kitten-phone.jpg[/im]

  ReplyDelete
 96. சீராளன் said...
  எங்கோ இருக்கும் ஒருநாட்டை நேரில் சென்று பார்த்த உணர்வு படங்களும் வார்த்தைகளும் (நையாண்டி உள்ளடங்கலாக ) அத்தனையும் அருமை

  வாழ்த்துக்கள்//

  [co="blue green"] வாங்கோ சீராளான்... என்னமோ சொல்றீங்க போங்க:))) மியாவும் நன்றி. [/co]

  ReplyDelete
 97. [im]http://www.dreamstime.com/kitten-on-the-phone-thumb7432461.jpg[/im]

  [co="blue "] ஆருக்குப் ஃபோன் பண்ணலாம்ம்???:)) ஒபாமா அங்கிளுக்கு??????????:) [/co]

  ReplyDelete
 98. [co="blue green"]இது நைன்ரி ஒன்பதாக்கும்:)) [/co]

  [im]http://3.bp.blogspot.com/-OU_so9mX4b4/UUHub5WVDrI/AAAAAAAAWP0/HsOXnb6sjD0/s1600/Bluebell_on_the_phone.jpg[/im]

  ReplyDelete
 99. [co="blue "] ஐஐஐஐஐ 100 ஊஊஊஊஊஊ.. மீ ஃபோன் ஐச் சொல்லல்ல:)).. இப்பூடி நாமளே எதையாவது போட்டுக்கீட்டு :) நிரப்பினால்தான் உண்டு:)).. நான் பதில்களைச் சொன்னேனாக்கும்:).. [/co]

  [im]http://25.media.tumblr.com/tumblr_lyxu2dwqxH1r0ezqso1_500.jpg[/im]

  ReplyDelete
 100. அன்புடையீர்,

  வணக்கம்.

  இன்று என் வலைத்தளத்தில், ஓர் புதிய, முற்றிலும் மாறுபட்ட, சிறப்புப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

  அவசியம் வருகை தந்து கருத்தளிக்க வேண்டுகிறேன்.

  இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

  தலைப்பு:

  “ஆயிரம் நிலவே வா !... ஓர் ...
  ஆயிரம் நிலவே வா !!”

  அவசரம் ! அவசியம்!!

  ஓடியாங்கோ .... ஓடியாங்கோ .....
  உடனடியா ஓடியாங்கோ,
  ப்ளீஸ்ஸ்ஸ்.

  பிரியமுள்ள

  வை. கோபாலகிருஷ்ணன்
  [VGK ..... கோபு]

  ReplyDelete
 101. அன்புடையீர்,

  வணக்கம்.

  என் வலைத்தளத்தில் “ஆடி வெள்ளிக்கிழமை” யாகிய இன்று

  ”அறுபதிலும் ஆசை வரும்”

  என்ற தலைப்பினில் ஓர் சிறப்புப்பதிவு
  வெளியிடப்பட்டுள்ளது.

  இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html

  இந்த என் பதிவு டேஷ் போர்டில் ஏனோ தெரியாமல் இருப்பதால் தங்களுக்கு இந்த மெயில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

  செளகர்யப்பட்டால் வ்ருகை தந்து கருத்துக்கள் கூறுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

  இப்படிக்கு தங்கள் அன்புள்ள,
  வை. கோபாலகிருஷ்ணன்

  ReplyDelete
 102. அழகான வண்ணப்படங்களுடன் இடம்பெற்றுள்ள பயணக்கட்டுரையில்கூட இவ்வளவு ஜோவியலாக எழுதமுடியுமா? மிகவும் ரசி்க்கும் படி எழுதியிருக்கிறீர்கள்.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.