நல்வரவு_()_


Tuesday, 3 December 2019

04.12.2019

ஞ்சு[5] ஞ்லுக்கு
ஆஆ வந்துவிட்டது வந்துவிட்டது அடுத்த பிறந்தநாளும் வந்துவிட்டது.. திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வயசு கூடிப்போச்சு:).. ஏன் அஞ்சுவுக்கு மட்டும் இப்பூடி கடகடவென வயசு ஏறிக்கொண்டு போகுதெனத் தெரியவே இல்லையே:)).. ஹா ஹா ஹா சரி சரி இப்ப அதுவோ முக்கியம்..:).
அஞ்சு பயப்பூடக்கூடா:) மீ ஊதுறேன் கன்டிலை:))

எல்லோரும் வாங்கோ அஞ்சுவை மனதார வாழ்த்துங்கோ.. வாழ்த்த வயதில்லை எனில், வணங்குங்கோ:), வணங்கி ஆசிர்வாதம் வாங்குங்கோ.. நான் ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)) ஹா ஹா ஹா:).

அஞ்சு ஆரெனத் தெரியாமல் இருப்போரும் இருக்கலாம்:), சிலர் மறந்தும் இருக்கலாம்:), அப்பப்ப தூசு தட்டப்படும்:)..  “காகிதப் பூக்களின்” ஓனர், பூனைகள் படுக்கவும் எலிகள் ஓடி விளையாடவும் என்றே, சமைக்காமல் “டேவடைக் கிச்சின்” எனும் பெயரில ஒரு புளொக்கை திறந்து வைத்திருப்பவர்[இப்பூடி நல்ல மனசு ஆருக்கு வரும் சொல்லுங்கோ?:)].. கிராஃப்ட் வேலைகளுக்கென ஒரு புளொக்கை தன் சொந்தக் காசில வாங்கி அதையும், ஊத்தையாகிடாமல் பூட்டி வச்சிருப்பவர்.. இப்படி பல வீடுகளின் ஓனர் தான் இவர்.

அதிரா கையால அஞ்சுவுக்கு இந்தாங்கோ ரோஜாப்பூ....

ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் இப்பூடியே சொல்லிச் சொல்லி ஸ்பீச் குடுத்திட்டேன், இம்முறை புதுசா என்ன பண்ணலாம் என நினைச்சேன் ஒண்ணுமே வருகுதில்லை:)), சரி ஒண்ணுமே பண்ணாமல் பேர்த்டேயை தேம்ஸ்கரையில் அமைந்திருக்கும், அழகான, அமைதியான, பொஸிடிவ் வைபிரேஷன் நிறைந்த ஆச்சிரம வாசலில் வச்சுக் கொண்டாடலாம் எனும் முடிவுக்கு வந்து, உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். அஞ்சுவின் முற்பிறப்பு அண்ணன் ஹரி தலைமையில் கேக் கட் பண்ணும் வைபவம் நடக்கவிருக்கிறது:)) வாங்கோ வந்து கேக் கட் பண்ணும் வைபவத்தில் கலந்துகொண்டு, அஞ்சுவை வாழ்த்தி, என்வலப்புக்கள், நகைகள் குடுக்க விரும்புவோர் அவற்றை  ஆச்சிரம உண்டியலுக்குள் போடும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள், கையில வாங்க அஞ்சு கூச்சப்படுவா என்பதால, நீங்கள் கூச்சப்பட்ட்டிடாமல் உண்டியலில் போடுங்கோ, நான் பின்னர் கொடுக்கிறேன் அஞ்சுவுக்கு:).

விளக்கேற்றி வைக்கிறேன், விடிய விடிய எரியட்டும், இனி வரப்போகும் நாட்களெல்லாம், நல்ல மங்களகரமானதாக அமையட்டும் என வாழ்த்துகிறேன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சு..

பார்ட்டிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் அழகிய, விதம் விதமான விருந்தும், செமிபாட்டுக்காக கொக்கு மாங்காய்காய் ரசமும் உண்டு, அனைத்து உணவும் எங்கட ஆரியபவான் கிச்சினில்:), அதிரா செலவில்:), அதிரா வீட்டு ஆயா கையாலயே செஞ்சது:), ரெசிப்பி தேவை எனில், பெயரைக் கிளிக் பண்ணிப் பார்க்கவும்:))





9 * 10 = 90 [நான் வயசைச் சொன்னேன்:)]
====================

இன்று இன்னொரு விஷேசம், எங்கட புளொக்ஸ் கொமெண்ட் புகழ், தமிழ்ப் புரொபிஸர்:), நெல்லைத்தமிழன் அண்ணாவுக்கும் அண்ணிக்கும் இனிய திருமணநாள்.. கூச்சப்பட்டுக்கொண்டே அண்ணி கழுத்தில் தாலி கட்டிய நாள் இன்றுதான், கஜூனா beach இன் கடற்கரை மணல்போல பல்லாண்டு காலம், மகிழ்வோடும் நலமோடும் இருவரும் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்.
----------------------------------------------------------------
==================

 “ஒரு வெளவால் வீட்டுக்கு இன்னொரு வெளவால் வந்தால், அதுவும் தொங்கிக் கொண்டுதான் இருக்கும்”
💃💃💃💃💃💃

110 comments :

  1. ஹலோ மியாவ் தாங்க்ஸ் தேங்க்ஸ் :)
    அந்த கேக் சூப்பரா இருக்கு பாடலும் மிகவும் பிடிச்சது :)
    மற்றவைக்கு நாளைக்கு வரேன் 

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
      என்று மகிழவுடன் எல்லோருக்கும் சேவை மனபான்மையுடன் உதவிக் கொண்டு இருங்கள் ஏஞ்சல்.

      Delete
    2. பிரியசகி அம்மு பதிவும் அருமை.(பிறந்த நாள் வாழ்த்து பதிவு)
      ஏஞ்சலின் அன்பு தோழிகள் நட்பும் நூறாண்டு தொடர வாழ்த்துக்கள்.
      வாழ்க வளமுடன்.

      Delete
    3. வாங்கோ பேர்த்டே பேபி வாங்கோ கேக் கட் பண்ணுவோமா ரெண்டுபேரும் சேர்ந்து?:)

      Delete
    4. அந்த நெக்லஸை முதலில் தாங்க  நான் கேக்கை கட்டறேன் :)

      Delete
  2. வருடம் தவறாமல் அஞ்சுவுக்குப் பிறந்த நாள் கொண்டாடி மகிழும் அஞ்சுவோட பாட்டி அதிரடி, கார்த்திகைப்பிறை அதிராமியாவுக்கு நன்னி, அஞ்சு சார்பில்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. போனதடவை கேக் செய்து போட்டேன், அதுக்கு முன் முறுக்கு, கார்ட் இப்பூடிச் செய்திருக்கிறேன் ஆனா இம்முறை செலவைக் குறைச்சிட்டேன் பிக்கோஸ் ஆச்சிரம புனரமைப்புக்கு ரொம்பச்ச்ச்ச்ச் செலவாகுது அதுக்கு காசு சேர்க்கிறேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கீதாஅக்கா :)

      Delete
  3. சமையலும் நல்லா இருக்கு பார்க்க, கேக்கும் நல்லா இருக்கு. அது சரி உங்களுக்குத் தொண்ணூறு வயசுனு போட்டிருக்கீங்க! அப்போப் பேத்தி அஞ்சுவுக்கு என்ன வயசாகுது?

    ReplyDelete
    Replies
    1. கீசா மேடம்... என்ன நீங்க பதிவை சரியாவே படிக்கலை.

      அதிரா, அவங்களுக்கு 90 வயசுன்னு போடலையே..... 90 வருஷமா அவங்களுக்கு 16 வயசு என்றுதானே போட்டிருக்காங்க.

      Delete
    2. //சமையலும் நல்லா இருக்கு பார்க்க//
      அது கீசாக்கா அதிரா செலவில அதிராவின் ஆரியபவான் ஆயா செய்தவ.. ரெசிப்பி வேணுமெனில், அந்த லிங்கைக் கிளிக் பண்ணுங்கொ[உணவின் பெயரை].

      //நெல்லைத்தமிழன்Wednesday, December 04, 2019 3:48:00 am
      கீசா மேடம்... என்ன நீங்க பதிவை சரியாவே படிக்கலை.//

      அச்சச்சோஓஒ வந்திட்டார்ர்ர்ர் ஹா ஹா ஹா :))

      Delete
    3. ஹாஹாஆ தாங்க்ஸ் கீதாக்கா :)

      Delete
  4. என்னதான் பதிவு போட்டிருந்தாலும் ஊசிக்குறிப்பும், ஊசி இணைப்பும் இல்லைனா அது பதிவாவே தெரியறதில்லை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை கீசா மேடம்.... அதிலும் களவாடிய ஊசிக் குறிப்பும், காவிய ஊசி இணைப்பும்னு சொல்லியிருக்கணும்.

      Delete
    2. அது இரண்டையும் அஞ்சுவுக்காக தியாகம் பண்ணிட்டேன்ன் கீசாக்கா.. மீ ஒரு “தியாகச் செம்மல்” ஆக்கும்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

      //அதிலும் களவாடிய ஊசிக் குறிப்பும், காவிய ஊசி இணைப்பும்னு சொல்லியிருக்கணும்.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) நெ.தமிழன் அதுக்கும் ஒரு திறமை வேணுமாக்கும்:))

      Delete
    3. ஹாஹாஆ :) பூனையின் பிரதாபங்களை கேட்க கேட்க ஆனந்தம் 

      Delete
  5. ஆஹா...    அஞ்சுவுக்குப் பிறந்த நாளா?  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  வாழ்க பல்லாண்டு வளமுடனும், நலமுடனும்.

    ReplyDelete
  6. நிஜமாய் பார்ட்டியிலிருப்பது போலவே ஒரு உணர்வு.  கலகலவென நண்பர்கள் சுற்றியிருப்பது போலவும் ஒரு உணர்வு.  உணவு வகைகளை கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. நன்றி நன்றி.. அனைத்தும் ஆரியபவன் கிச்சினில் ஆயா செய்தவ, குறிப்பு தேவை எனில் பெயரில லிங் இணைச்சிருக்கிறேன்:))

      Delete
    2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் :)

      Delete
  7. அதிராவை எங்கள் பிளாக்கில் பார்த்ததுமே தெரிந்து விட்டது ஒரு பதிவு வெளியாகியிருக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது என்று!  வந்து பார்த்தால், நிஜம்தான்...   தோழிகள் இருவரும் இணைபிரியாமல் வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. //தெரிந்து விட்டது ஒரு பதிவு வெளியாகியிருக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது என்று! //

      ஹா ஹா ஹா அதில ஒரு சின்ன டப்பூஉ நடந்து போச்ச்ச்:)), பெயரை மாத்தமுன்பு போஸ்ட் போட்டுவிட்டேன், பின்பு பெயரை அவசரமாக மாத்தப்போனேன், தமிழ் ஃபொண்ட் வேர்க் பண்ணாமல் கொம்பியூட்டரை சட்டவுன் பண்ணிட்டேன் கர்ர்:)) அதனால பெயர் மாற்றம் தாமதமாகிட்டுது, இல்லை எனில் அதை வச்சும் கண்டுபிடிச்சிருப்பீங்க:).

      Delete
    2. //தோழிகள் இருவரும் இணைபிரியாமல் வாழ்க//

      நாங்க பிரிஞ்சு 3 நாளாகிட்டுது:)) எல்லாம் உங்களாலதான் ஹா ஹா ஹா:))

      Delete
    3. @)) ஹாஹா ஸ்ரீராம் அந்த ஸ்டோரியை உங்களுக்கு சொல்லியே ஆகணும் :) பூனை ஒரே சண்டை அது சண்டே போஸ்டை தேதி மாத்தி போட்டதால் :) அது சாட்டர்டே போஸ்ட்னு அடம் :) எப்பவும்போல் விட்டுக்கொடுத்தேன் நான் :)

      Delete
    4. ///எப்பவும்போல் விட்டுக்கொடுத்தேன் நான் :)//

      ஹையோ முருகா:) எனக்கு நெஞ்சுவலி தாங்க முடியல்லியே:)).. அம்பியூலன்ஸ் க்கு அடியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)) முதல்ல அன்னக்கிளியைக் காப்பாத்துங்கோ:))

      Delete
  8. அதிராவும் சரி, நேரமில்லை நேரமில்லை என்று சொல்லும் அஞ்சுவும் சரி...    எங்களுக்கு கதையும், ரெசிப்பியும் அனுப்பி கன நாட்களாகின்றன என்பதையும் இங்கு நினைவுபடுத்துகிறேன்.  அஞ்சு தினமும் ரெண்டு வரி கதை எழுதி வந்திருந்தாலே இந்நேரம் மூன்று கதைகள் எழுதி இருக்கலாம்!  அதிரா...    உங்களிடமிருந்து இரண்டும் சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தும்போதும் சந்தடி சாக்கில் அவருடைய வேலையிலேயே குறியாக சிலர் இருப்பதுபோல் எனக்கு மட்டும்தான் தெரியுதா?

      Delete
    2. ஸ்ரீராம் அனுப்புவதற்கு நான் ரெடி, ஆனா என் பிரச்சனையே இந்த திங்கள் செவ்வாய் வேர்க்தான்.. போஸ்ட் வந்தால், அதைக் கவனிக்க முடியாமல் இருக்கும்போது கஸ்டமாக இருக்கும். அல்லது என் விடுமுறை நாளைச் சொன்னால், அதில நீங்க போட்டால் பறவாயில்லை, நீங்கள் அப்படி அஜஸ்ட் பண்ண மாட்டீங்களெல்லோ கர்ர்ர்ர்ர்ர்:)).

      Delete
    3. //நெல்லைத்தமிழன்Wednesday, December 04, 2019 3:36:00 am
      வாழ்த்தும்போதும் சந்தடி சாக்கில் அவருடைய வேலையிலேயே குறியாக சிலர் இருப்பதுபோல் எனக்கு மட்டும்தான் தெரியுதா?//

      ஹா ஹா ஹா நெ.தமிழன் இந்தக் கொமெண்ட் மட்டும் ஸ்ரீராம் கண்ணுக்கு பிளாங்காத் தெரியுதாம் ஹா ஹா ஹா...

      Delete
    4. @ஸ்ரீராம் ..அடுத்த வருஷம் வேற ஷிஃப்ட் கேட்டிருக்கேன் ..அப்போ கண்டிப்பா எழுத முயல்கிறேன் :)

      Delete
  9. ஏஞ்சலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றுதான் எங்களுக்கும் மண நாள். (அதிரா வயதை விட கம்மியான திருமண வருடங்கள்)

    ReplyDelete
    Replies
    1. இனிய திருமணநாள் வாழ்த்துகள் நெல்லை தமிழனுக்கும் அண்ணிக்கும் :)

      Delete
    2. இனிய திருமணநாள் வாழ்த்துகள் நெல்லை....

      Delete
    3. நெல்லைத்தமிழன் ஸ்வாமிக்கும் மாமிக்கும், திருமணம் நடந்த அதே நாளில், எப்படி ஓர் தேவதை பிற்ந்திருக்க முடியும்? ஒரே ஆச்சர்யமாகவும் குழப்பமாகவும் உள்ளது. அதிரா வருகை தந்து, இதுபற்றி விளக்கினால்தான் எனக்கு ஒரு தெளிவு பிறக்கும். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

      Delete
    4. விளக்குறேன் கோபு அண்ணன் விளக்குறேன் அதுக்கு இன்னும் 4 நாள் வெயிட் பண்ணுங்கோ:)) ஹா ஹா ஹா:)..

      Delete
    5. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நெல்லைத் தமிழன்.
      வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்!

      Delete
    6. ///இன்றுதான் எங்களுக்கும் மண நாள்.//

      போன வருடம் நீங்கள் சொல்லி, நான் வாழ்த்தை இணைச்சும் மறந்திட்டேன்.. வெரி சொறி இனி மறக்க மாட்டேன்:))..

      /// (அதிரா வயதை விட கம்மியான திருமண வருடங்கள்)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:)) எனக்கு இப்போ சுவீட் 16 நடக்குதாக்கும்:))

      Delete
    7. மிக்க நன்றி ஸ்ரீராம், ஏஞ்சலின், கோபு சார், கோமதி அரசு மேடம் மற்றும் 'மறதி அதிரா' ஹா ஹா.

      Delete
    8. ///மற்றும் 'மறதி அதிரா' ஹா ஹா.//

      இதுக்குக் காரணம் அஞ்சுதான்ன்ன்ன் நில்லுங்கோ இன்று பேர்த்டே முடிஞ்சுபோச்சுதெல்லோ:) இப்பவே தேம்ஸ்ல தள்ளப்போறேன்:)).. எல்லாம் சொல்லுவா, தேவையில்லாததைக்கூட:)) இதை மட்டும் அவவும் மறந்திட்டாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    9. ஹையோ அத என்னன்னு  சொல்வானேன் எப்படி சொல்வேன் .முழு நேர வேலை எனையே விழுங்குது எனக்கே என் பெர்த்டே நினைவில்லை நடுஇரவு வரைக்கும் ..

      Delete
  10. ஏஞ்சலினுக்கு நல்ல மனசு. பிறரை நோக விடாமல் இருக்கணும்னு நினைக்கறவங்க. யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ய அவங்களுக்கு மனசு வராது. மற்றவர்கள் உடல் நலத்தில் ரொம்பவும் அக்கறை உள்ளவங்க. (அதுனாலதான் டேவடைக் கிச்சனை நல்லா பூட்டுப் போட்டு இழுத்து மூடிட்டாங்க. இல்லைனா நிறைய செய்முறைகளை எழுதியிருப்பாங்களே).

    ReplyDelete
    Replies
    1. ஹையோ நெல்லைத்தமிழன் அஞ்சுவைப் பற்றி எழுதுறதைப் படிக்கப் படிக்க எனக்குக் கார்ட் அட்டாக் வந்திடும்போல நெஞ்சடைக்கத் தொடங்கியவேளை..:))

      //(அதுனாலதான் டேவடைக் கிச்சனை நல்லா பூட்டுப் போட்டு இழுத்து மூடிட்டாங்க. இல்லைனா நிறைய செய்முறைகளை எழுதியிருப்பாங்களே).//

      ஹா ஹா ஹா இப்போதான் மூச்சே வந்துதெனக்கு:)) ஹா ஹா ஹா

      வாங்கோ நெ த வாங்கோ..

      Delete
    2. ஹாஹா @நெல்லைத்தமிழன் உண்மைதான் நான் சிறு பூச்சிக்கும் தீங்கு செய்யேன் :) அப்போ மனுஷங்களுக்கு எவ்ளோ கேர்புல்லா இருப்பேன் :)பொதுநலன் கருதி  கிச்சன் தற்காலிகமா மூடியிருக்கு 

      Delete
  11. இந்த தட்டை இட்லி ரெசிப்பில, உளுந்து 5க்கு 1, 6க்கு 1 என்றெல்லாம் போட்டிருக்காங்களே.. ஏஞ்சலின் இட்லி செய்ய முயற்சித்தாரா இல்லை அவங்க தோட்டத்துக்கு செங்கல் செய்ய முயற்சித்தாரான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. அது நெல்லைத்தமிழன் நிறையச் சொல்லுவேன் ஆனா பிறந்தநாள் முடியட்டும் என என் வாய்க்குப் பிளாஸ்டர் போட்டுக்கொண்டு சுற்றுகிறேன்:). பிக்கோஸ் என் வாய்தேன் நேக்கு எடிரி:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி நெ.த.

      Delete
    2. ஸ்ஸ்ஸ்ஸ் :) @நெல்லைத்தமிழன் தெரிஞ்சோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ ரெண்டு நல்ல விஷயம் ஒரே நாளில் நடந்திருக்கு ஒன்று உங்க மணநாள் அடுத்தது என் பெர்த்டே அதனால் நாம் இப்போ உறவுக்கரங்க இனிமே எங்கியும் நாம நம்ம ரெண்டுபேரையும் கலாய்ச்சிக்கக்கூடாது சரியா :)))

      Delete
    3. //எங்கியும் நாம நம்ம ரெண்டுபேரையும் கலாய்ச்சிக்கக்கூடாது// - இப்படி பூப் போன்ற மனசு இருந்தால் எப்படி நீங்க 'மனநிலை சம்பந்தமான வார்டுகள்ல' வேலை பார்க்க முடியும்?

      என் உறவினர் ஒருவர் மிக அறிவாளி, ப்ரொஃபஷனல் கோர்ஸ் படிக்க அவருக்கு இடம் கிடைத்தது (நான் சொல்வது 45 வருட முந்தைய கதை. நிறைய கேள்விப்பட்டதுதான்..பார்த்தது குறைவு). அங்கு சேர்ந்து ஒரு வருடத்தில் மன நிலை சரியில்லாமல், கோர்ஸை பாதியிலேயே நிறுத்தி வாழ்வு முழுவதும் அனேகமாக மனநிலை சரியில்லாமல் வாழ்ந்தார். ரொம்ப ப்ரைட் பெர்சன். ஒரு சமயம், திடுமென 'நான் எப்போதும் உண்மைதான் பேசுவேன் என்று கேஸ் ஸ்டவ்வை ஆன் பண்ணி (அதனை ஏற்றாமல்) அதில் கை வைத்தார். இது போல ஒரு தடவை வேகமாக எழுந்திருந்து 50 வருட பழமையான அலங்கார லைட்டை உடைத்துவிட்டார். அவரை அவரது ரத்த சம்பந்தமானவர்கள் இந்த மாதிரி அதீதமான செய்கைகளின்போது நன்றாக ட்ரீட் செய்யவில்லை.

      Delete
    4. Very true ,now I am having a bit of difficult time and emotionally distressed . This happened after my new job involving dementia care.

      But mhfa helps me now and then to overcome my stress.

      Delete
    5. நெல்லைத்தமிழன் இப்போ முடிவா என்னதான் சொல்ல வாறார்ர்?:))... அஞ்சூஊஊஊஊஉ நீங்க ஒண்ணும் பயந்திடாதீங்கோ:)) நெ.தமிழன் சொன்னதெல்லாம் பூப் போன்ற மனசுடையோருக்காம்ம்ம்:)) ஹா ஹா ஹா

      Delete
    6. கர்ர்ர்ர்ர் மியாவ் :) யூ ஜெலஸ் cat 

      Delete
    7. /இப்போ முடிவா என்னதான் சொல்ல வாறார்ர்?// - மனநிலை சரியில்லாதவங்களை அனுசரித்துப் பார்த்துக்கொள்வது மிகக் கடினமான செயல். உடம்பு சரியில்லாத அம்மாவையே பார்த்துக்கொள்வது கடினம். இந்த ஸ்ட்ரெஸ் நம்ம மனசை ஆக்கிரமிக்கக்கூடாதுன்னு சொல்ல வர்றேன். அதுனால கலாய்ப்பதை சீரியஸா எடுத்துக்கக் கூடாது (ஆனா என் மனைவி சொல்லுவா... எப்போதும் கிண்டல் பண்ணுவது தவறு. அது மத்தவங்களோட தன்னம்பிக்கையைக் குலைத்துவிடும் என்பாள்)

      Delete
    8. ///அதுனால கலாய்ப்பதை சீரியஸா எடுத்துக்கக் கூடாது ///

      இது உண்மைதானே, அதிலும் ஆழம் அறிஞ்சுதானே கலாய்ப்பது:) எல்லோரையும் கலாய்க்க முடியாதெல்லோ:)), அதை நகைச்சுவையாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களோடு மட்டுமே, முன்பின் யோசிக்காமல் கலாய்க்க முடியும்...

      //ஆனா என் மனைவி சொல்லுவா... எப்போதும் கிண்டல் பண்ணுவது தவறு. அது மத்தவங்களோட தன்னம்பிக்கையைக் குலைத்துவிடும் என்பாள்)//

      இதுவும் உண்மைதானே இடைக்கிடை பிரியாணி குடுத்துக் குடுத்துத்தான் அடிக்கோணும் ஹா ஹா ஹா:)

      Delete
  12. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஞ்சூஊஊ. நோய்நொடியின்றி, நீண்ட ஆரோகியத்துடன், சந்தோஷமாக இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன்.
    HAPPY BIRTHDAY ANJU
    GERZLICHEN GLÜCKWUNSCH ZUM GERBURSTAG ANJU
    இடிதாங்கி கேக் சூப்பரா இருக்கு. அஞ்சுதான் மெழுகுதிரி அணைச்சு கேக் கட் ப்ன்னோனும். நீக்க உப்பூடி மெழுகுதிரியை அடிச்சுபிடிச்சு அணைக்ககூடாது...
    மணிப்புட்டு, தட்டை இட்லி, ரசம், குழம்பு ஆவ்வ்வ்... சூப்பர்
    வெளவால்...ஹா..ஹா..ஹா..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //(இடிதாங்கி கேக் சூப்பரா இருக்கு..//

      ஸ்ஸ்ஸ்ஸ் அன்னக்கிளி அன்னக்கிளி:))

      //நீக்க உப்பூடி மெழுகுதிரியை அடிச்சுபிடிச்சு அணைக்ககூடாது...//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் அஞ்சுவுக்கு யெல்ப் பண்ணுறேன் அது டப்பா?:))

      //மணிப்புட்டு, தட்டை இட்லி, ரசம், குழம்பு ஆவ்வ்வ்//

      எங்கட கிச்சினில தான் செய்தது:)) நன்றி நன்றி..

      ஹா ஹா ஹா பயண அமளியும் வந்தமைக்கு நன்றி அம்முலு.

      Delete
    2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ப்ரியா ..உங்க வீட்டுக்கும் வரணும் இதோ வரேன் :) 

      Delete
  13. எங்கடக் குழந்தை அஞ்சுவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பல்லாண்டு பல்லாண்டு பல நூற்றாண்டுகள் இன்றுபோல் இனிமையாய் வாழ்க!

    வழக்கம்போல் இனிமையான குளுமையான குதூகலமான குறும்பான கரும்பான பதிவு, அதிராஆஆஆஆஆஆஆஆஆ. பாராட்டுகள். :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ..

      //எங்கடக் குழந்தை அஞ்சுவுக்கு//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விடுங்கோ என் கையை விடுங்கோ.. என்னைத்தடுக்காதீங்கோ:)) என்னை ஆரும் தடுத்தால் .. ந்நான் ஜெயிலுக்குப் போகவும் துணிஞ்சிட்டேன்ன்ன்ன்ன்ன்:)).. ஃபயர் எஞ்சினுக்கு அடிங்கோ மீ தேம்ஸ்ல ஜம்ப்பாகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. சே..சே எவ்ளோ நேரம்தான் நானும் வாயில பிளாஸ்டர் ஒட்டிக்கொண்டு பேசாமலே திரிவது கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:))..

      வருவீங்க என நினைச்சிருந்தேன் கோபு அண்ணன் மிக்க நன்றி.

      Delete
    2. ஹாஹா :) மிக்க நன்றி கோபு அண்ணா ..பூனையை ஜெலசாக்கியத்துக்கும்தான் :)) ஹையோ ஹாங் அந்த ஸ்வீட் பாக்ஸ் ஆன்லைனில் உடனே ஆர்டர் பண்ணி அனுப்பனும் கோபு அண்ணாவுக்கு ஸ்பெஷலா

      Delete
  14. விளக்கேற்றி வைக்கிறேன், விடிய விடிய எரியட்டும், இனி வரப்போகும் நாட்களெல்லாம், நல்ல மங்களகரமானதாக அமையட்டும் என வாழ்த்துகிறேன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சு......



    அருமையான வாழ்த்து அதிரா ...


    அஞ்சு வுக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்களும் ...

    விருந்தும்,உணவும் அருமை ..


    ஆனாலும் கடைசி இரு வரி ...ஆஹா ஹா ஹா ...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா அனு :)

      Delete
    2. அச்சச்சோ நேற்று அனுவுக்கு பெரிய பதில் எழுதிப்போட்டனே.. எப்பூடி மிஸ் ஆச்சு... மன்னிக்கவும் அனு.. மிக்க நன்றிகள்.

      Delete
  15. பல வீடுகளின் ஓனர் தான் இவர்.//

    தேவதையை தெரியாமல் இருந்தால் தானே ! எப்படியாவது எல்லா வீடுகளிலும் ஒளி பரவட்டும் என்று சொல்கிறீர்கள். அவர் இப்போது மகத்தான ஒளி தீபம் ஏந்தி கவலை படுவோருக்கு மனமகிழ்ச்சியை கொடுக்கும் பணியில் இருக்கிறார். வருவார் அவர் சொந்த வீடுகளுக்கும் நேரம் கிடைக்கும் போது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. நான் இண்டைக்கு அஞ்சுபற்றி வாயே திறக்க மாட்டேன் ஜாமீஈஈஈ வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டிக்கொண்டு திரிகிறேன்ன்.. பிறந்தநாள் எல்லோ:)) ஹா ஹா ஹா

      Delete
    2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோமதி அக்கா :)

      Delete
  16. //பேர்த்டேயை தேம்ஸ்கரையில் அமைந்திருக்கும், அழகான, அமைதியான, பொஸிடிவ் வைபிரேஷன் நிறைந்த ஆச்சிரம வாசலில் வச்சுக் கொண்டாடலாம் எனும் முடிவுக்கு வந்து, உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். அஞ்சுவின் முற்பிறப்பு அண்ணன் ஹரி தலைமையில் கேக் கட் பண்ணும் வைபவம் நடக்கவிருக்கிறது:)) வாங்கோ வந்து கேக் கட் பண்ணும் வைபவத்தில் கலந்துகொண்டு, அஞ்சுவை வாழ்த்தி, என்வலப்புக்கள், நகைகள் குடுக்க விரும்புவோர் அவற்றை ஆச்சிரம உண்டியலுக்குள் போடும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள், கையில வாங்க அஞ்சு கூச்சப்படுவா என்பதால, நீங்கள் கூச்சப்பட்ட்டிடாமல் உண்டியலில் போடுங்கோ, நான் பின்னர் கொடுக்கிறேன் அஞ்சுவுக்கு:).//

    தேவதைக்கு பதிலாக நகைகள் கேட்கும் உத்திராட்ச பூனையின் அழைப்பு அருமை.

    ReplyDelete
    Replies
    1. மொத்தமாக் கொப்பி பண்ணிப் போட்டிட்டீங்க ஹா ஹா ஹா நன்றி கோமதி அக்கா.

      Delete
    2. உருத்திராட்ச பூனைக்கு உண்டியல் எதுக்காம் கேளுங்கக்கா :)

      Delete
  17. //விளக்கேற்றி வைக்கிறேன், விடிய விடிய எரியட்டும், இனி வரப்போகும் நாட்களெல்லாம், நல்ல மங்களகரமானதாக அமையட்டும் என வாழ்த்துகிறேன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சு.//

    நல்ல வாழ்த்து நானும் இணைந்து கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள் ஏஞ்சல் வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  18. ஏஞ்சலுக்கு எமது வாழ்த்துகளும் கூடி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ :)

      Delete
  19. பிறந்த நாள் விழாவில் பகிர பட்ட உணவுகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அக்கா, அதன் பெயரைக் கிளிக் பண்ணி எப்படிச் செய்வதெனப் பாருங்கோ:))

      Delete
  20. என்னை வாழ்த்திய வாழ்த்தப்போகும் அன்புள்ளங்களுக்கு கோடானுகோடி நன்றி .ஈவ்னிங் வந்து தனி ரிப்லைஸ் தரேன் அனைவருக்கும் 

    ReplyDelete
  21. வணக்கம் அதிரா சகோதரி

    முதலில் சகோதரி அஞ்சுவுக்கு என்னுடைய மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சிறப்பாக வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நீங்களும் சகோதரிக்கு அருமையாக, மிக அருமையான பிறந்த நாள் பார்ட்டியாக தந்திருக்கிறீரகள். படங்களும் வர்ணனைகளும் மிக அழகாகவும், ரசனையாகவும் இருந்தது. உங்களுடன் நாங்களும் பங்கேற்று குதூகலமாக கொண்டாடிய உணர்வை தங்களது பதிவு தந்தது நன்றி..

    பிறந்த நாளுக்கு செய்த உணவுகள் அருமை. தட்டை இட்லி மேல் தொட்டுக்கொள்ள இருப்பது என்ன சட்னியா? இல்லை சாம்பாரா? என்னவென்று தாங்கள் குறிப்பிடவே இல்லையே!

    ஊசி. கு, ஊசி. இணைப்புக்கு பதிலாக வெளவால் தத்துவமா? ரசித்தேன். தோழியர் இருவரும் பல்லாண்டு காலம் இப்படியே இணைபிரியாது வாழவும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

    ஆமாம்.. தோழிக்கு பி. நாள் கொண்டாடும் மூடில், தங்களது பட்டமளிப்பு விழா மறந்து விட்டதே! ஹா. ஹா. ஹா. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா.. வாங்கோ..

      //தட்டை இட்லி மேல் தொட்டுக்கொள்ள இருப்பது என்ன சட்னியா? இல்லை சாம்பாரா?//

      அது வந்து கமலாக்கா எங்கட அதிராக் கிச்சின் ஆயாவைத்தான் கேய்க்கோணும்:)) ஹா ஹா ஹா...

      //தங்களது பட்டமளிப்பு விழா மறந்து விட்டதே! ஹா. ஹா. ஹா//
      அதேதான், போஸ்ட் போட்டபின்பே திடுக்கிட்டு, லேட்டாத்தான் மாத்தினேன்:)).. பாருங்கோ அஞ்சுவுக்காக எவ்வளவெல்லாம் தியாகம் பண்ணுகிறேன்:))

      மிக்க நன்றிகள் கமலாக்கா.

      Delete
    2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கமலாக்கா :)

      அது மிளகாய்ப்பொடி எண்ணெயில் குளிச்சிருக்கு :)) அதுவும் நல்லெண்ணெய் குளியல் 

      Delete
  22. ஆஆஆ இன்னொரு வாழ்த்துச் செய்தி, போன வருடமும் நெல்லைத்தமிழன் சொன்னபின்பு அறிஞ்சு வாழ்த்து இணைத்தேன், இம்முறை நினைவுக்கு வரவில்லை எனக்கு, இருப்பினும் இதுக்குள் ஏதோ ஒன்று.. அண்ணியின் பி.தினமோ என்னமோ வரோணுமே என நினைச்சேன், இன்று சொன்னபின்னர்தான் நினைவுக்கு வந்தது...திருமணநாள் என.

    மேலே போஸ்ட்டில் வாழ்த்து இணைச்சுவிட்டேன், எல்லோரும் ஒருதடவை படிச்சு.. வாழ்த்துங்கோ மணமக்களையும்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நெல்லை தமிழனுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
    2. மிக்க நன்றி பிரியசகி (அம்முலு?) அவர்களுக்கு

      Delete
  23. அதிராவின் அழைபை ஏற்று பார்ட்டிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி, நானும் லேட்டாத்தான் வருவேன் இப்போ முடியல்ல:(.

    எல்லோரும் கேக் கட் பண்ணி கிஃப்ட் எல்லாம் அதிராவிடம்:) தரும்வரை எங்கும் போயிடாதீங்கோ:).. நல்ல சுவையான விருந்து ரெடி, இன்னொரு ஸ்பெஷல்..அதிராவின் குழைஜாதமும் ரெடியாகுது:) அனைவரும் விருந்தில் கலந்து கொள்ளும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்க விருந்தைச் சாப்பிட்டு, அது ஒர்த் ஆக இருந்தால், அதுக்கு ஏத்த மாதிரிதான் கிஃப்ட் கொடுக்கலாம்னு நினைக்கறேன்.

      யாரது? பின்னாலிருந்து, 'அப்படீன்னா நீங்க பென்சில் மட்டும் கிஃப்டா எடுத்திட்டுப் போங்க' என்று சொல்வது? ஓ... ஏஞ்சலினா?

      Delete
    2. //உங்க விருந்தைச் சாப்பிட்டு, அது ஒர்த் ஆக இருந்தால், அதுக்கு ஏத்த மாதிரிதான் கிஃப்ட் கொடுக்கலாம்னு நினைக்கறேன்.//

      கழிப்பதைக் கழிச்சுப்போட்டு பரிசை மறக்காமல் காசா, அதுவும் பவுண்டில மாத்திப் போட்டிடுங்கோ நெ தமிழன்...

      Delete
    3. @நெல்லைத்தமிழன் ஆமா ஆமா அந்த வைர tip பென்சில் குடுங்க :)

      Delete
  24. அஞ்சுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நெல்லை தமிழன் தம்பதியினருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள். 

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பானு அக்கா :)

      Delete
    2. நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.

      Delete
  25. எனக்கு ஒரே ஒரு சந்தேகம். பூஸாருக்கு எழுத எதுவும் கிட்டவில்லையா? படங்களாக போட்டுத் தள்ளி விட்டீர்கள்?ஊசிக்கு குறிப்பும் தக்குணூண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ..

      //படங்களாக போட்டுத் தள்ளி விட்டீர்கள்?ஊசிக்கு குறிப்பும் தக்குணூண்டு.//
      வழமையான போஸ்ட் போல போடக்கூடாதெல்லோ , வாழ்த்தெனில் கொஞ்சம் வித்தியாசமாக எல்லோ இருக்கோணும் என நினைச்சே ஊசி இணைப்பை எல்லாம் தியாகம் பண்ணிட்டேன்ன் ஹா ஹா ஹா:)) மிக்க நன்றிகள்.

      Delete
    2. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பானு அக்கா :)

      Delete
  26. பெண்களின் வயதை கேட்கக் கூடாது என்பார்கள்வாழ்த்தவோ வணங்கவோ வயது தெரியவேண்டும் அல்லவா அஞ்சுவுக்கு வயதென்ன

    ReplyDelete
    Replies
    1. ஜி எம் பி ஐயா... அதிராவுக்கு சுவீட் 16, அஞ்சுவுக்கு இப்போ சுவீட் முடிஞ்சு 18 நடக்குது:)).. இனி வாழ்த்தப்போறீங்களோ வணங்கப்போறீங்களோ?:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. ஹாஹாஆ :) ஜிஎம்பி சார் எனக்கு 18 வயதுதான் :) ஒருத்தரை போல் பலவருஷமா 16 னு சொல்லமாட்டேன் 

      Delete
  27. ஏஞ்சலுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    நெல்லைத்தமிழன் தம்பதியினருக்கு மனங்கனிந்த மணநாள் வாழ்த்துக்கள்!
    அதிரா! கேக் மிகவும் சூப்பர்! இனிய பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா மிக்க நன்றி.

      Delete
    2. வாழ்த்துக்களுக்கு மிகக நன்றி மனோ அக்கா :)

      Delete
    3. மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      Delete
  28. அஞ்சுவின் பிறந்தநாளுக்காக இன்று மட்டும் மாலை 5-6 தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில் இலவச யோகா நடாத்தப்பட இருக்கின்றது அதிரா றீச்சரால்:)).. எனவே விரும்பியவர்கள் ரைமுக்கு வந்து கலந்து கொள்ளும்படி மிகவும் ஏழ்மையுடன் ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீங்க:))..thankoo thankoo

    [im]http://www.toxel.com/wp-content/uploads/2012/02/yogacats06.jpg[/im]

    ReplyDelete
    Replies
    1. மக்களே யாரும் போனா மறக்கமா அந்த உண்டியலை எடுத்திட்டு வாங்க :) 

      Delete
  29. தேவதை சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ டிடி :)

      Delete
  30. எனது பிறந்தநாளை சிறப்பாக்கியமைக்கு மிக்க நன்றி அன்னக்களி :) ஹாஹா சாரி டங் ஸ்லிப்ட் :)அன்னப்புலி :) சேசே அன்னக்காலி :) பாருங்க யாரும் உங்க பட்டப்பெயரை கலாய்க்கலை 

    ReplyDelete
  31. ஹலோ அன்னக்கோழி :) அரிஞ்சோ அறியாமலோ எனக்கொரு நல்லது செஞ்சிட்டீங்க தேவதை கிச்சனில்  சமையலுக்கும் வியூவர்ஸ் கூட்டம் அலை மோதுது :))

    ReplyDelete
    Replies
    1. இறைவா... என்னவோ சொல்ல நினைக்கறேன்... இவங்க என்னடானா... 'கலாய்க்கக்கூடாது'ன்னு சொல்லிட்டாங்களே.... எதுக்கும் வியூவர்ஸ் கையில் ஏதேனும் இருக்கான்னு செக் பண்ணிடுங்க.

      Delete
    2. //இவங்க என்னடானா... 'கலாய்க்கக்கூடாது'ன்னு சொல்லிட்டாங்களே.//

      ஹா ஹா ஹா இப்போ புரியுதோ நெல்லைத்தமிழன் அவகட:) தக்கினிக்கி:)).. இனிக் கலாய்க்கலாம் பயப்புடாதீங்கோ ஏதும் யெல்ப் தேவை எனில் ஒரு குரல் குடுங்கோ மீ வந்திடுறேன் ஹா ஹா ஹா..

      Delete
  32. அதிராவின் அழைப்பை ஏற்று, வருகை தந்து, அஞ்சுவின் பிறந்தநாளையும் நெல்லைத்தமிழனின்[அண்ணி] திருமண நாளையும் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி நன்றி...._()_

    [im]https://www.cats.org.uk/uploads/images/news/8a1cd12a-35b9-42fe-b2f9-34f45530da60.jpg[/im]

    ReplyDelete
    Replies
    1. இது நன்றி சொல்லும் பூனை மாதிரி இல்லையே.. பாய்ந்து பிடுங்க வரும் குட்டிப் புலி மாதிரின்னா எனக்கு மனசுல தோணுது.

      இடுகை வெளியிடணும்னு நினைத்த உங்களைப் பாராட்டறேன். வாழ்க வளமுடன்.

      Delete
    2. //இது நன்றி சொல்லும் பூனை மாதிரி இல்லையே.. பாய்ந்து பிடுங்க வரும் குட்டிப் புலி மாதிரின்னா எனக்கு மனசுல தோணுது.//
      ஹ்ஹ்ஹாஅ ஹா கர்ர்ர்ர்:))

      Delete
  33. ஆஹா... அஞ்சு அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று போல் என்றும் இனிதாக அமைந்திடட்டும்.

    நெல்லைத் தமிழன் அவர்களுக்கும் திருமண நாள் நல்வாழ்த்துகள். எல்லாம் வல்லவனின் பூரண அருள் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கிடைத்திடட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் மிக்க நன்றிகள்.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.