நல்வரவு_()_


Friday, 10 February 2017

கிரில் உம் பரிசும்:)மீயும்:)


ன்னுடைய புரொப்ளம் என்னன்னா... நினைக்கும்போது நிறைய எழுத வருது, ஆனா எழுதும்போது நினைவுக்கு நிறைய வருகுதில்ல:)).. [ஆனா மீ சுவீட் 16 என்பதனை இங்கே நினைவுகூர விரும்புறேன்[ஸ்ஸ்ஸ் இதை இங்கின கரெக்ட்டாச் சொல்லாட்டில்... 61 தான் என ஸ்ராம்ப் ஒட்டிடுவாங்க கர்ர்ர்ர்ர்ர்:))].

ங்கு நாம் நண்பர்கள் குடும்பங்கள் மாத்தி மாத்தி ஒவ்வொரு வீட்டுக்கும் கூப்பிட்டு ஹெட்டுகெதர் போல லஞ் அல்லது டின்னர் கொடுப்பதுண்டு.  அப்போ போகும்போது பிஸ்கட், சொக்கலேட் , கேக், இப்படிக் கொண்டு போவது பிடிக்காதெனக்கு.. அதனால தேடித் தேடி ஏதும் பிரயோசனமான பொருட்களாக கொடுக்க விரும்புவேன். குழந்தைகளுக்கு அவர்களுக்குப் பிடித்ததை வாங்கிவிட்டு,

பெரியாட்களுக்காக, நல்ல அழகான நொன் ஸ்ரிக் சமையல் பாத்திரங்கள், அழகழகான டிசைன்களில் மின்னும் மின் விளக்குகள்(Table lamps), Flower vase, Perfume, விதம் விதமான வாசனை மெழுகுவர்த்திகள் இப்படியானவற்றை தேடி வாங்கிக் கொடுத்திருக்கிறேன்,

ந்த வகையில் இம்முறை கிரிஸ்மஸ் க்கு என்ன கொடுக்கலாம் என தேடிய இடத்தில், நல்ல ஒரு பொருளாக இந்த கிரில் தெரிஞ்சுது, 4 குடும்பங்களுக்கு இதை பிரசண்ட் பண்ணினோம்.. கிரிஸ்மஸ் க்காக.

னைவரும் சந்தோசப்பட்டார்கள், மிகவும் பிரயோசனமாக இருக்கிறது என்கிறார்கள், கேட்க எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்குது. இதில் நாங்கள் சாம்பிளுக்காக முதலில் குட்டிக் கிரில் வாங்கினோம், எங்களுக்கு பிரயோசனமாக இருந்ததனால், இதில் பெரிய சைஸ் வாங்கி பிரசண்ட் பண்ணினோம், நாமும் பெரிதாகவே வாங்கியிருக்கலாம் என எண்ணுகிறோம் இப்போ..., ஆனா பிள்ளைகளுக்கு அவசரமா ஒரு சான்விச் செய்து கொடுக்க, குட்டிக் கிரில்தான் வசதி.

இதில் செய்த சீஸ் சான்விச், ஹாம் சான்விச்.. அவரவர் விருப்பத்துக்கேற்ப நன்கு முறுகவிட்டும் எடுக்கலாம்.

நீங்களும் வாங்குங்கோ அல்லது அட்ரஸ் தாங்கோ அடுத்த கிரிஸ்மஸ் க்கு பிரசண்ட் பண்ணுறேன்:).

இது என்ன தெரியுமோ?:) இதையும் இதில்தான் கிரில் பண்ணி எடுத்தேன்:)..வாழைத்தண்டு:)

நாம் கிரில் பண்ணும் பொருட்களில் கொழுப்பு இருப்பின், கீழே இருக்கும் தட்டில் முழுவதும் வடிந்துவிடும், அதனால்தான் இதை அனைவரும் விரும்புகின்றனர்.

Breaded chicken, Asparagus. இதில் அஸ்பரகஸ் ஐ எதுவும் பண்ணத் தேவையில்லை, சும்மா கழுவிப்போட்டு அப்படியே கிரில் பண்ணிட்டால் சரி பின்பு சோல்ட் அண்ட் பெப்பர் போட்டு அப்படியே சாப்பிடலாம்.

ங்கு எல்லோரிடமும் சமைக்கும் குக்கரோடும் கிரில் இருக்கு ஆனா அது பெரிசு, நிறைய செய்யும்போது அதைப் பாவிக்கலாம், இது பிரெட் சான்விச் செய்ய இன்னும் சூப்பராக இருக்கு...

முன்பு இந்த சான்விச் ரோஸ்டர்தான் டிமாண்ட்டாக இருந்துது வீட்டில், இப்போ கிரில் க்குத்தான் முதலிடம், ரோஸ்ட்டர் உள்ளே ஒளிச்சிட்டார்ர்:).


சில சமையல் ரிப்ஸ்:)...
கவனமாக் கேட்டு:) கிட்னியில் சேஃப் பண்ணிடுங்கோ.. எப்பவாவது பிரயோசனமாகும்:)..

ரெடிமேட் பூக்களாக வாங்கி வைப்பதை விட, தேங்காய் வாங்கி வந்து இப்படி உடைச்சு உடனேயே திருவி, பிரீஸர் பாக்குகளில் போட்டு பிரீஸ் பண்ணிடுங்கோ.. தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.



நம் வீட்டு பிரிஜ் இல், அப்பப்ப கறி வாசனைகள் அல்லது மரக்கறி வேறு ஏதாவது வாசமோ வராமல் இருக்க, பிரிஜ்ஜில் ஒவ்வொரு தட்டிலும் அங்கங்கு பிளிந்து விட்ட தேசிக்காய் கோதுகளை ச்ச்சும்மா ச்சும்மா வச்சு விடுங்கோ.. எந்த விதமான மணமும் இருக்காது, சுத்தமான நல்ல மணம் மட்டுமே இருக்கும். ஸ்ஸ்ஸ்ஸ் அதிரா பிரிஜ்ல என்ன என்ன வச்சிருக்கிறா எனப் பார்க்காமல்:) தேசிக்காய் கோதுகள் எங்கெங்க இருக்கு எனப் பாருங்கோ:) கர்ர்:))


ஊசிக்குறிப்பு:-
இம்முறை ஊசிக்குறிப்பேதும் இல்லை:)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அதிரா எழுதும் டயரியிலிருந்து:)..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

59 comments :

  1. 2-வது வோட் என்னோடது. வோட் போடுவதற்குள் களைத்துப் போய் விட்டேன்.. சும்மா சுத்திக்கிட்டே இருக்குது.. சுற்றியது என் தலை அல்ல .. தமிழ்மணம் வோட் பகுதி ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... இம்முறை உங்களுக்குப் பரிசு உண்டு:) முதலாவதா வந்து, வந்த வேகத்தில தலைசுத்தினாலும் பறவாயில்லை என வோட்டும் போட்டிட்டீங்க:).. நீங்க சுத்துவதுபற்றிக் கவலைப்பட வேண்டாம், லொகின் கொடுத்திட்டு அதனை குளோஸ் பண்ணாமல் அப்படியே விட்டுப்போட்டு, வேறு வேலை பாருங்கோ, அது சுத்தும் வரை சுத்தி, வோட்டை இணைத்துவிடும்.

      Delete
  2. இந்த முறைதான் ஊசிக்குறிப்பு பகுதி உருப்படியாக ‘ஒன்றும் இல்லாமல்’ ஜோராக்கீதூ என நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் ..........


    அதை நான் சொல்லாமலேயே நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஊசிக்குறிப்பில் ஏதுமில்லை என ஓவரா ஹப்பி ஆகிடாதீங்கோ:)).. புலி பதுங்குவது பாய்வதற்கே:)..

      Delete
  3. டைரியில் உள்ள வரிகளும் கையெழுத்தும் அழகாக சூப்பராக உள்ளன.

    அதனால் இது அதிராவின் டைரியாக இருக்காதோ .... நம் அஞ்சுவின் டைரியாக இருக்குமோ .... அதை நம் அதிரா களவாடி வந்து இங்கு நமக்குக் காட்டி நம்மை ஏமாற்றி இருப்பாளோ என ஒரு சின்ன சந்தேகம் வந்துடுச்சு. :)

    ReplyDelete
    Replies
    1. இதைப் படிச்சதும் நான் அப்பூடியே பொயிங்கிப் போயிட்டேன்ன்ன்ன்:)).. உங்களோடு அல்ல அஞ்சுவோடு:)).. பாருங்கோ இதைப் படிச்சதும் ஓடிவந்து, இல்ல கோபு அண்ணன் அது என்னுடையது இல்லை.. அதிராவினுடையதுதான்:)) என ஒரு மருவாதைக்கெண்டாலும்:) சொல்லியிருக்கோணுமெல்லோ:))..

      அப்பூடியே இருக்கட்டும் என காக்கா போயிட்டா:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதனால இனியும் இங்கின இருக்கோணுமோ என, ஓடினேன்ன்ன் ஓடினேன்ன்ன்ன்.. ஏஜென்சி வாசல்வரை ஓடினேன்:)).. காசிக்கு ரிக்கெட் புக் பண்ண:))...

      ஆனா வாசல்ல வச்சே திருப்பிப் போட்டினம்:) ரிக்கெட் முடிஞ்சுதாம்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் ரைம்:) என வாழ்த்து வேற சொன்னார்கள்..:) போனாப் போகுதென் திரும்பி வந்துட்டேன்ன்ன்:))..

      ஊசிக்குறிப்பு:-
      இப்பவும் சந்தேகமாத்தான் இருக்குதோ கோபு அண்ணன்??:)..

      Delete
  4. //பெரியாட்களுக்காக, நல்ல அழகான நொன் ஸ்ரிக் சமையல் பாத்திரங்கள், அழகழகான டிசைன்களில் மின்னும் மின் விளக்குகள்(Table lamps), Flower vase, Perfume, விதம் விதமான வாசனை மெழுகுவர்த்திகள் இப்படியானவற்றை தேடி வாங்கிக் கொடுத்திருக்கிறேன்//

    இதையெல்லாம் எங்களால் நம்ப முடியவில்லை. எங்களுக்கும் ஒருமுறையாவது இதுபோலக் கொடுத்திருந்தால் மட்டுமே நம்புவோமாக்கும். :)

    ReplyDelete
    Replies
    1. இந்தாங்கோ கோபு அண்ணன் உங்களுக்கு ஒன்று:)... இனிமேல் சாமத்தில இருட்டாக இருந்ததால போஸ்ட் பார்க்க முடியேல்லை அதுதான் வருவதற்கு தாமதமாகிட்டுது எண்டெல்லாம் சாட்டுச் சொல்லாமல், லைட்டைப் போட்டிட்டு கொமெண்ட்ஸ் உம் போட்டு:) வோட்டும் போடுங்கோ:).. ஹா ஹா ஹா..
      [இதிலேயே படம் தெரியும்]
      [im]https://s-media-cache-ak0.pinimg.com/236x/13/79/51/137951bcc67afe9f9b58ce48aec64b68.jpg[/im]

      Delete
  5. மின்னும் விளக்குகள் படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்துக்கும் மிக்க மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.

      Delete
  6. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தம்பி மகேஷ் ..
    God bless you

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு.. மிக்க நன்றி, தம்பியைக் காணம்.. கொண்டாடப் போயிட்டார் போல வருவார்...

      Delete
  7. இது உங்க வீட்டு ப்ரிட்ஜ் இல்லை :) ஒரு cat food கூட இல்லியே அது எப்படி >???????

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)
      [im]http://1.bp.blogspot.com/-fJhAmrGmMCk/UKedk-zB9wI/AAAAAAAAASQ/Nmf9DQZlG5g/s1600/cat_and_fish.17570415_std.png[/im]

      Delete
  8. haahaaaaahaa a ///ஒவ்வொரு தட்டிலும் அங்கங்கு பிளிந்து விட்ட//

    அது ழ ழ ழ ..பிழிந்து ..இப்போதான் மனதுக்கு திருப்தியா இருக்கு கண்டுபுடிச்சேன் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை


    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்வ் போச்சு போச்சு போச்சு:) இங்கயும் என் மருவாதையைக் குறைச்சு விட்டிட்டுதே இந்த “ளி”.. ஹையோ எங்க எங்க ரிக்கெட் எங்கேஏஏ??? காசிக்குப் போகத்தான்ன்ன்:))..

      ////.இப்போதான் மனதுக்கு திருப்தியா இருக்கு கண்டுபுடிச்சேன் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை
      //// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
  9. //நீங்களும் வாங்குங்கோ அல்லது அட்ரஸ் தாங்கோ அடுத்த கிரிஸ்மஸ் க்கு பிரசண்ட் பண்ணுறேன்:).//\உங்களுக்கு அதுக்கு அதிரா கஷ்டம் நீங்க பணத்தை அனுப்பிடுங்க நாங்களே வாங்கிக்கறோம் ..எனக்கு
    கோபு அண்ணாக்கு அப்புறம் ஸ்ரீராமுக்கு ,கீதாக்கு துளசி அண்ணாக்கு ரெண்டு .
    அப்புறம் அனுராதாக்கு .வேற யாராச்சையும் மறந்திட்டேனா ..இருங்க யோசிச்சிட்டு வரேன் .அவர்கள் ட்ரூத்துக்கு இது வேணாமாம் அவருக்கு சப்பாத்தி மேக்கர் கொடுத்திடுங்க ..




    ReplyDelete
    Replies
    1. ஆஹா என்னா ஒரு பர்ந்த மனசூஊஊஊ.. வழித் தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைச்ச கதையாவெல்லோ இருக்குதூஊஊஊஊஊஊ:))..

      இதில சப்பாத்தி மேக்கர் வேற ஓடர் பண்ணுறா... அதெல்லாம் அவருக்கு வாணாம்ம்ம்... உருட்டுக் கட்டையாலயே உருட்டச் சொல்லுங்கோ.. அப்பத்தானே அவர் ஆத்து மாமிக்கு வசதி இடைக்கிடை தன் கோபத்தைக் காட்ட:))ஹா ஹா ஹா..

      Delete
    2. நா வந்துட்டேன்....thannks அஞ்சு உங்க நல்ல மனசுக்கு.....

      Delete
  10. கர்ர்ர்ர் வாழைத்தண்டை க்ரில் செஞ்சீங்களா ?..ஸ்க்ரீனை தூக்குமுன் அது பனங்கிழங்குன்னு நினைச்சேன்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நீங்க மட்டும்தான் ஸ்கிரீனைத் தூக்கிப் பார்த்திருக்கிறீங்கபோல:)... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்தாப் பெரிசாவா பனங்கிழங்கு இருக்கும்...:).

      Delete
  11. இந்த டைரி அநேகமா 1960 ல எழுதின மாதிரி இருக்கு :))

    ReplyDelete
    Replies
    1. அட இந்த டைரி அவங்க 1960 ல எழுதினது இல்லை யாருகிட்டவோ சுட்டதுங்க...பாருங்க ஒரு எழுத்து பிழை கூட இல்லை அதனால அடிச்சு சத்தியம் பண்ணலாம் இது அதிரா எழுதின டைரி இல்லை என்று

      Delete
    2. ///AngelinFriday, February 10, 2017 3:12:00 pm
      இந்த டைரி அநேகமா 1960 ல எழுதின மாதிரி இருக்கு :))///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
    3. ////பாருங்க ஒரு எழுத்து பிழை கூட இல்லை அதனால அடிச்சு சத்தியம் பண்ணலாம் இது அதிரா எழுதின டைரி இல்லை என்று///

      ஆவ்வ்வ்வ் அஞ்சுக்கு மட்டும்தேன் என் புரொப்ளம் தெரியுமென நினைச்சேனே:)) அமேஏஏஏஏஏஏரிக்காவரை தெரிஞ்சிடுச்சாஆஆஅ?:)..
      =============================================

      ஹா ஹா ஹா வருகைக்கும் ஊசி ஊட்டங்களுக்கும் மியாவும் நன்றி அஞ்சு.

      Delete
  12. டயரி பாத்தவுடன் டாயரியா... ஹா.... ஹா....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ.. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஊசிக்குறிப்பு மட்டும்தான் படிச்சிருக்கிறீங்கபோல:)).

      மிக்க நன்றி அனைத்துக்கும்.

      Delete
  13. வணக்கம் !

    என்னடா வலைப்பக்கம் யாருமே இல்லை என்று நாமளும் கடையை சாத்திட்டு போனால் எல்லோரும் திறந்திட்டு ஓகோன்னு வியாபாரம் நடத்துறாங்க நடக்கட்டும் நடக்கட்டும் நல்ல பரிசு அடுத்த முறை எல்லோருக்கும் கொடுங்க வாழ்த்துகள் !

    நீங்க ஊசிக்குறிப்பு போடல்ல அதனால நான் ஒரு கடப்பாறையை சொருகிட்டு போறேன்


    ஈரிலக்கம் என்றாலும் இடம்மா றிட்டால்
    ....எதுவயது என்றறியார் தன்னுள் தேங்கும்
    மாரிமழை போலாசை மறைத்தும் நட்பால்
    ....மனமகிழப் பேசிடுவார் இருந்தும் ! கோதை
    பேரிளமை கொண்டாளோ என்றே நாளும்
    ....பித்துமனம் கலங்குபவர் உண்மை சொன்னால்
    யாரிவளோ நானறியேன் என்றே செல்வார்
    ....நாட்டினிலே இதுபுதுமை என்னே செய்வோம் !

    என்னடா இவன் சம்பந்தமே இல்லாம கவிதை போட்டிருக்கிறான் என்று நினைக்காதீங்க அது இதுக்குத்தான் ஹா ஹா ஹா

    [ஆனா மீ சுவீட் 16 என்பதனை இங்கே நினைவுகூர விரும்புறேன்[ஸ்ஸ்ஸ் இதை இங்கின கரெக்ட்டாச் சொல்லாட்டில்... 61 தான் என ஸ்ராம்ப் ஒட்டிடுவாங்க கர்ர்ர்ர்ர்ர்:))].

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜர் சீராளன் வாங்கோ...

      அடடா தேடிக் கண்டுபிடிச்சு வந்திட்டீங்க மிக்க சந்தோசம்.. பழையவர்கள் மீண்டும் வந்து தொடர்ந்து எழுத மாட்டார்களோ எனத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்ன்.. உங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சி.. இனி புளொக் எழுத தொடங்குங்கோ.

      Delete
    2. என்னாது கடற்பாறைக் கவிதையா கர்ர்ர்ர்ர்ர்ர்:) வந்ததுதான் வந்தீங்க.. நீண்ட இடைவெளிக்குப் பின்பு அதிரா திரும்படியும் எழுதத் தொடங்கிட்டாவே, வாழ்த்தி ஊக்கம் கொடுப்போம் என... சூப்பரா இருக்கு, ஆஹான்னு இருக்கு ஓஹோன்னு இருக்கு:)) எண்டெல்லாம் கவிதை எழுதுவதை விட்டுப் போட்டு:) இப்பூடி புரியாத பாசையில:) கவி சொல்லிட்டீங்களே:)..

      அஞ்சூஊஊஉ கொஞ்சம் இக்கடச்சூடு:)) நேக்குப் புரியுதில்ல விளக்கம் பிளீச்ச்ச்ச்:))...

      ஹா ஹா ஹா பார்த்ததும் தேடி வந்து, சுடச் சுட கவிதை சொன்னமைக்கும் மிக்க மிக்க நன்றிகள் சீராளன்.

      Delete
  14. கிரில் வாங்கத்தான் ஆசை ஆனால் தனிமரத்துக்கு ஏன் இந்த கருவி எல்லாம்)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ... நீங்கதான் இப்போ தோப்பாகிட்டீங்களே?:) இனியும் என்ன தனிமரம் கர்ர்ர்ர்ர்:)).. ஒன்று வாங்குங்கோ.

      Delete
  15. டயரி எழுதும் பழக்கம் எல்லாம் எப்போதோ விட்டாச்சு.

    ReplyDelete
    Replies
    1. இங்கு நான் டயறி எனச் சொன்னது, தினக்குறிப்பல்ல நேசன்:).. என் பொன்மொழிகள், தத்துவங்கள் எழுதும் நோட் புக்கைச் சொன்னேன்:).. இப்பவும் காதில் கேட்கும், கண்ணால் படிக்கும் எனக்குப் பிடிச்ச வாக்கியங்களை எழுதிக் கொண்டுதானிருக்கிறேன், அதில எனக்கொரு சந்தோசம்.. பொழுதுபோக்கும்:).

      Delete
  16. இனி தேசிக்காய் வாசம் வரும் அறிய கண்டுபிடிப்புக்கு காப்புரிமை எல்லாம் கோரக்கூடாது))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இல்ல நேசன் தேசிக்காய் வாசம் வராது, எந்த வாசமும் இருக்காது:))...

      ஓஒ யோசிக்காமல் இருந்த என்னை சீண்டி விட்டிட்டீங்க:).. என் சமையல் ரிப்ஸ் படிச்ச எல்லோரும் இப்போ நேக்கு பீஸ் தரோணும் சொல்லிட்டேன்ன்...
      ஹா ஹா ஹா... மிக்க நன்றி நேசன்.

      Delete

  17. அய்யோ உங்கள் நண்பர்களுக்கு கேன்சரை அல்லவா கிப்ட்டாக கொடுத்திருக்கீங்க...... நான் ஸ்டிக் பாத்திரங்கள் உபயோகித்தால் கேன்சர் வர வாய்ப்புக்கள் அதிகம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்ருத் வாங்கோ... எப்பவும் “ஸ்பாம்” ல போய் நிற்கிறீங்களே ஏன்ன்?:)).. கண்டுபிடிக்க முடியுதில்ல என்னால:(.

      // உங்கள் நண்பர்களுக்கு கேன்சரை அல்லவா கிப்ட்டாக கொடுத்திருக்கீங்க...... நான் ஸ்டிக் பாத்திரங்கள் உபயோகித்தால் கேன்சர் வர வாய்ப்புக்கள் அதிகம்//

      இந்த சமருக்கு நாங்க அமெரிக்கா வாறோம் “ட்ருத்” வீட்டுக்கு... , அழகான ஒரு பார்சல் நல்லா மினுமினெண்டு பக் பண்ணிக்கொண்டு வந்து தாறம், தந்திட்டு உங்காத்து மாமி சமையலை ஒரு பிடி பிடிச்சிட்டு நாங்க திரும்பிடுறோம்:).

      நாங்க போன பின்பு, மாமி ஆசையா பார்சலைப் பிரிக்கிறா, பிரித்தானியால இருந்து ட்ருத் ட நண்பர்கள் கொண்டு வந்தது என...:).

      உள்ளே நாலு மண்சட்டி இருக்குதா:))... அதைப் பார்த்த உடனேயே, கையிலிருந்த உருட்டுக் கட்டையைத் தூர வீசிப்போட்டு:), உங்களைப் பிடிச்சு... நாக்கைப் புடுங்குற மாதிரி 4 கேள்வி:)).. ”இப்பூடி மண்சட்டி கொடுக்கும் நட்பெல்லாம் உங்களுக்குத் தேவையா?:).. எனக்கேட்டபடி உங்களை “நயகரா”வில தள்ள மாட்டா என்பதற்கு என்ன உத்தரவாதம்ம்ம்?:))... ஹையோ எழுதும்போதே எனக்கு கை கால் நடுங்குதே... நயகராவை நினைச்சு:)

      இப்போ புரியுதா? நொன் ஸ்ரிக் பிறசண்ட் பண்ணிப்போட்டு:) மண்சட்டியும் அதன் நன்மைகளும் என பதிவு போட்டு பிரச்சாரம் பண்ணுவோமே:)) ஹா ஹா ஹா...

      ஸ்ஸ்ஸ்ஸ் ரொம்ப ரயேட் ஆகிட்டேன்ன்ன்... ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சூஊஊஊஊஊ கூலா ஒரு ஸ்ரோங் ரீ பிளீஸ்ஸ்:))

      Delete
    2. ஹா ஹா ஹா நீங்க சொல்வது முற்றிலும் உண்மைதான் ஆனா என்ன பண்ணுவது, இப்போ எல்லாம் எது ஈசியோ அதத்தான் மக்கள் நாடுகிறார்கள், ஆனாலும் நான் மண்சட்டியையே அதிகம் விரும்புறேன், இப்போ புல் அண்ட் புல் மண்சட்டி சமையல்தான் நடக்குது:)

      Delete
  18. ///அட்ரஸ் தாங்கோ அடுத்த கிரிஸ்மஸ் க்கு பிரசண்ட் பண்ணுறேன்:).//

    நாங்க அட் ரஸ் அனுப்பி அங்க நீங்கள் கஷ்டப்பட்டு பரிசு அனுப்புகிறதுக்கு பதிலாக நீங்க ஒரு வீடு வாங்கி அதன் விலாசத்தை எங்களுக்கு அனுப்பி அந்த வீட்டையே எங்களுக்கு கிப்ட்டாக தாங்களேன் இதில் கஷ்டமே உங்களுக்கு இல்லை

    ReplyDelete
    Replies
    1. ///அந்த வீட்டையே எங்களுக்கு கிப்ட்டாக தாங்களேன்///
      ஹா ஹா ஹா ... “ட்ரம்ப்” - “ட்ருத்”..:)
      பெயர்ப்பொருத்தம்கூட சூப்பராத்தான் இருக்குது:). ட்ரம்ப் அங்கிள் தலைவரானதும், நீங்களும் தலைவன் எவ்வழி, நானும் அவ்வழி எனப் பின்பற்றுறீங்கபோல.. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொண்டு வச்சிருக்கும் ஐடியாவோ?:).. ஹா ஹா ஹா ஹையோ ஐ மீன் வீட்டைச் சொன்னேனாக்கும்...

      மிக்க மிக்க நன்றி ட்ருத்..:).

      Delete
  19. பரிசுகளை பொருட்களாக வாங்கி கொடுப்பதைக் குறைத்துக்கொண்டு விட்டேன். நாம் வாங்கி கொடுக்கும் பொருள் போலவே 15 பொருட்கள் அவர்களுக்கு வந்து சேரும். பணமாகக் கொடுத்துவிட்டால் எப்போதுமே உபயோகம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ..
      நீங்க சொல்வது முற்றிலும் உண்மையே... இங்கும் பணம்தான் கொடுப்போம்.. ஆனா இதெல்லாம் பெரிய கொண்டாட்டங்கள், பேர்த்டே பார்ட்டிகளுக்கு..

      நான் சொல்வது, சும்மா வீடுகளுக்கு விசிட் பண்ணும்போது, இங்கு யாராவது உங்க வீட்டுக்கு நாளைக்கு வருகிறோம் என்றாலோ, இல்ல நாம் அங்கு வருகிறோம் என்றாலோ சும்மா பேசிட்டு அனுப்புவதில்லை, அதை ஒரு குட்டிப் பார்ட்டிபோலவே ஆக்கிடுவோம். அதை விட சும்மா சும்மா ஹெட்டுகெதர் வைப்போம்.. இவற்றைத்தான் சொன்னேன்.

      பதில் இம்முறை தாமதமாகிவிட்டமைக்கு மன்னிக்கவும்.

      Delete
  20. க்ரில் எல்லாம் நாங்கள் உபயோகித்தது இல்லை. முன்பொரு சமயம் ஏதோ ஒரு பொருள் வாங்கியதற்கு இலவச இணைப்பாக இடுக்கி போன்ற ஒரு சாண்விட்ச் மேக்கர் தந்தார்கள். கொஞ்ச காலம் அதில் பிரெட்டை வைத்து அதகளம் செய்து கொண்டிருந்தோம். ஒரு நல்லநாள் காலையில் அது உடைந்து விட்டது. அதோடு போச் எங்கள் ரகளை!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா... உண்மையில் சின்ன சான்விச் மேக்கர் அல்லது இப்படி கிரில் இருப்பது, ஒரு அந்தர ஆபத்தான வேளையில் பசிக்குமே.. அதுக்கு ஹெல்ப் பண்ணும், யாரையும் கெஞ்ச வேண்டியதில்லை:), நமக்கு நாமே டக்கு டிக்கென செய்து ஒரு ஸ்ரோங் ரீ உடன் சாப்பிட்டு விடலாம்.

      Delete
  21. தேசிக்காய் என்றால் என்ன?

    டயரிக்குறிப்புக்கு பொருத்தமான சினிமா பாடல் வரி "சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை... விலை ஏதும் இல்லை..

    தம +1

    ReplyDelete
    Replies
    1. //தேசிக்காய் என்றால் என்ன?///
      ஆவ்வ்வ்வ் கீதா ஹாவ் சிறிலங்கன் ஆச்சே...:) பதில் சொல்லிட்டா. நானும் இங்கே வலையுலகில் கால் வச்ச காலத்தில் இருந்து இன்றுவரை இக்கேள்விக்கு நிறையப் பேருக்குப் பதில் சொல்லிட்டேன்.

      அதிலயும் எனக்கு யாரும் கேள்வி கேட்டால் மனதில் இருப்பது டக்கென மறந்திடும் ஹா ஹா ஹா... நீங்க கேள்வி கேட்டதும்... நன்கு தெரிந்த எலுமிச்சை எனும் பெயரை நினைக்கிறேன்ன் நினைக்கிறேன்ன் மனதில் வருகுதே இல்லை:))..

      நன்றி கீதா.

      மிக்க நன்றிகள் அனைத்துக்கும் ஸ்ரீராம்.

      Delete
  22. அதிரா சொரி!!!! நேற்றே வாசித்து விட்டோம். கமென்ட் போட இயலலை...கிரில் பழக்கம் எல்லாம் இல்லை...கேரளத்தில் எங்கள் பகுதியில் எல்லாம் மக்கள் இன்னும் பழைய மெத்தேடில்தான் சமையல்....ரசித்தோம் அதிரா....

    கீதா: ஓ அதிரா க்ரில்!!வாவ்!! எனக்கு ஒரு கிஃப்ட் பார்சல்!!!ஹிஹீஹிஹிஹி...ஆனால் பாருங்கோ அதிரா...இந்த டெஃப்லான் நான் ஸ்டிக் வெரைட்டிஸ் வேண்டாமே. அது உடலுக்கு நல்லதல்ல. அது போல நான் அனோடைஸ்ட் என்று குக்கர்கள் பாத்திரங்கள் வருது இப்போ. அதையும் பார்த்துத்தான் வாங்க வேண்டும்.ஏனென்றால் அதிலும் நான் ஸ்டிக்ட் என்று வருது. என்னுடைய தனிப்பட்டக் கருத்து என்னவென்றால், புதியதாக ஏதேனும் வருது என்றால் அதை ஆராய்ந்து நல்லதா என்று வாங்க வேண்டும் இல்லை என்றால் நம் பெரியோர் பயன்படுத்திய பாத்திரங்கள் பெஸ்ட்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ...
      உண்மையில் நான் தான் சொறி சொல்லோணும் தாமதமான பதிலுக்கு, சனி ஞாயிறு நட்புக்கள் வருகையால் பிஸியாகிட்டேன், வேர்க்கிலும் பிஸியாக இருக்கும்போது எல்லா இடமும் எட்டிப் பார்ப்பது கஸ்டமாக இருக்கு.

      இங்கு ஒரு உண்மை சொல்லியாகோணும்:)... நான் மட்டும் தேன்ன்ன்ன் இங்கின சொறி என்பேன்ன்ன்.. எல்லோரும் சாரி என்பார்கள்... இப்போ உங்கள் சொரி பார்த்ததும் என் கட்சியில் ஒருவர் இணைஞ்சிட்டார்ர் என சந்தோசம் பொயிங்குதே:).

      நீங்க சொல்வது உண்மைதான், இங்கே இப்படி நிறைய ரகம் கிடைக்குது, நாம்தான் பாவிப்பதில்லை. நான் எல்லாம் கப்கேக் மேக்கரில் இட்லி அவிப்பேனாக்கும்...:)

      http://gokisha.blogspot.com/2014/12/blog-post.html

      Delete
  23. டயரிக் குறிப்பு அருமை!!!!

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் கருத்துக்களுக்கும் மியாவும் நன்றி கீதா, துளசி அண்ணன்.

      Delete
    2. @ Geetha ...ஹையோ அதிரா பாவம் கீதா ..அவங்களுக்கு உங்க சமையல் லிங்க் தந்துட்டீங்களா :) டேக் கேர் கீதா :)

      Delete
  24. தங்களது முந்தைய பதிவுக்கு முந்தைய பதிவின் ஊசி குறிப்பை வாசிக்கவும் :)
    do not speak about eating bread in front of a poor soul who cant eat bread ..awwwww

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அட்ரஸ் தந்தால் தோஓஓஓஓஓ இப்பவே வாங்கி அனுப்ப நான் ரெடீஈஈஈஈஈ:))

      Delete
  25. எல்லா gift டும் சூப்பர்..லக்கி friends...

    ம்ம் என்ஜாய்..

    ReplyDelete
  26. பேச்சு பெரியதுதான் எனினும்
    மௌனம் அதைவிடப் பெரியது''
    அருமையான கருத்து

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.