நல்வரவு_()_

போன போஸ்ட்டில், கமலாக்காவும், அம்முலுவும் அறிமுகப் படுத்திய பாடல் இது,
கேட்டேன் என்னா ஒரு அழகுப்பாட்டு..
இப்போஸ்ட்டுக்குப் பொருந்துமே எனப் போட்டேன்ன்

Thursday, 17 June 2010

மறை பொருள் ரகசியங்கள்......

நான் ரெடி, நீங்க ரெடியோ?


லைப்பைப் பார்த்ததும் எல்லோரும் யோசிப்பீங்கள், நானும் ஏதோ சொல்ல வெளிக்கிடுகிறேன் என. அப்படியில்லை, இதுவரை காலமும், ஹீலிங் என்றால் என்ன, தியானம் என்றால் என்ன?, வர்ம வைத்தியம் என்றால் என்ன?, என எனக்கு “கடுகளவு” கூடத் தெரியாது.

முதன்முதலில் ஹைஷ் அண்ணன் “அறுசுவை” தளத்துக்கு வந்து, “மறைபொருள் ரகசியம்” எனத் தலைப்பிட்டபோது, சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பது போலதான் பார்த்தேன்... என்னோடு நிறையப்பேர் அப்படித்தான் பார்த்தார்கள்:).

தன்பின்பு, ஒவ்வொரு பகுதியாக புதுப்புது, நல்ல விஷயங்கள், மருத்துவங்கள் என, பல பல கற்றுக்கொண்டோம். தியானம் செய்வதெல்லாம், விரும்பாத ஒன்றாக இருந்த எனக்கு, அனைத்திலும் நிறையவே நம்பிக்கை வந்தது. மூச்சுப்பயிற்சி செய்யக் கற்றுக்கொண்டேன். அதனால் நான் அடைந்த நன்மைகள் பல. இப்படி நிறையவே சொல்லலாம்.... , இத்தோடு நிறுத்துகிறேன். “மறைபொருள் ரகசியம்” பகுதிகளைக் காண விரும்புபவர்கள்... இங்கே வாங்கோ...

பகுதி 1

பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6


னக்கு எப்பவுமே, சின்ன வயதிலிருந்தே, தத்துவங்கள், பொன்மொழிகள், அர்த்தமுள்ள வாக்கியங்கள் மிகவும் பிடிக்கும். அப்படியானவற்றைச் சேகரிப்பதிலேயே, என் பாதிப்பொழுதுகள் முன்பெல்லாம் கழிந்தது. இப்போது நேரம் போதாமல் இருப்பினும், கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி அவற்றைச் சேகரிப்பேன்.


ப்படித்தான்... மறை பொருள் ரகசியங்கள் சொல்கின்றபோது, ஹைஷ் அண்ணன், இடையிடையே அப்பப்ப தத்துவ வரிகளையும் அவர், இணைக்கத் தவறுவதில்லை. அதில் ஓடியோடிப்:) பொறுக்கி சேகரித்ததன் தொகுப்பையே இங்கு தருகிறேன்.

1)முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

2)ஒருவரை வாதத்தில் வெல்வது வெற்றியல்ல, அவரின் மனதை வெல்வதே வெற்றியாகும்.

3)அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி.

4)அறிவை அறிந்தோர் அன்பின் அறமே ஞானம்.

5)நமக்கோ, பிறருக்கோ தற்காலத்திலும், பிற்காலத்திலும் உடலாலும், மனதாலும், சமூகத்தினாலும், ஊறு விளையாத எந்த ஒரு ஆசையும், நியாயமான ஒரு ஆசைதான்.

6)அறிவுக்கு அடிமையாவதே பக்தி,
அறிவை அறிவால் அறியப் பழகுதல் யோகம்.

7)மனத்தை அடக்க நினைத்தால் அலையும்,
மனத்தை அறிய நினைத்தால் அடங்கும்

8)எண்ணம், சொல், செயலால் எவருக்கும்
எப்போதும் நன்மையே விளைவிக்க நாட்டமாயிருங்கள்.

9)அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்
மூன்று வகையிலும் அறிவு வறுமை அடைகிறது.

10)சிந்தனை, ஒழுக்கம், சீர்திருத்தம், சிக்கனம், சேவை
இவை ஐந்தும், செழிப்பான வாழ்வளிக்கும்

11)உறவிலே கண்ட உண்மை நிலையே, தெளிவு.. துறவு

12)பகைமை வைத்துக் கொண்டு ஒருவரை வாழ்த்த முடியாது,
வாழ்த்தும் போது பகைமை நிற்காது.

13)உண்மைதான் நம்மை மாற்றுமே தவிர,
உண்மையை நாம் ஒரு போதும் மாற்ற முடியாது.

14)எப்போதும் விழிப்போடும், சிந்தனையோடும்
ஆற்றும் செயல்களினால், முன் வினையின் தீமைகள் தடுக்கப்படும்.

15)அன்பு என்பது, எந்த ஒன்றையும் உடலாலோ மனதாலோ,
இணைத்துப்பிடித்துக் கொண்டு இருப்பது.

ஹைஷ் அண்ணன் பணம் செலவழித்துப் படித்தவற்றை, எமக்கு இலவசமாகச் சொல்லித் தந்தமைக்கு(அவர் எங்கே சொல்லித்தந்தார்:), நாங்கள் சண்டைப்பிடித்து, தேங்காய் உரிப்பதுபோலல்லவா கேட்டுக் கேட்குத் தெரிந்து கொண்டோம்.... சரி சரி இது எமக்குள் இருக்கட்டும்:)), பிரதியுபகாரமாக எதையும் செய்ய முடியவில்லை.... “மிக்கநன்றி” என இலகுவாகச் சொல்வதைத்தவிர.
சேகரித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாக இங்கே போட முடியவில்லை, இன்னும் இருக்கு... அடுத்த பகுதியில் தொடரும்..ம்ம்ம்ம்ம்.

பின் இணைப்பு:

நான் எடுத்த படங்கள்..... உங்களால் முடியுமோ:)?..... இதுக்கெல்லாம் தைரியம் வேணுமெல்லோ... பிளேன் லாண்ட் பண்ணப்போகும்போது எடுத்தேன்.....
எங்கள் முற்றத்து பூமரம்... இப்போது பூத்திருப்பவர்......


##########################
பறவையின் சிறகுகள் விரிந்தால்தான்
வானத்தில் அது பறக்கும்...
##########################


38 comments :

 1. ஹை வடை எனக்கே எனக்கு :)))

  ReplyDelete
 2. ஆகா சட்னியும் எனக்கு :)

  ReplyDelete
 3. ஆமாம் இப்போ பிரிதானியாவில் சம்மர்தானே, பின் எப்பூடி, சே... ஹச், ஹச்..... ஒரே தும்மலா இருக்கு. கொஞ்சம் ஹாட் வாட்டர் பிளீஸ்ஸ்ஸ்ஸ்...

  ReplyDelete
 4. ஜூப்பர் அதிராக்கா! நல்ல தொகுப்பு! ஜீனோ இன்னும் அஞானியாகத்தேன் திரிகிறது..தியானம்,மூச்சுப்பயிற்சி இதெல்லாம் செய்ய இன்னும் உடம்பு வளையறதில்லை,பச்சைப்பிள்ளைதானே..இன்னும் கொஞ்சூண்டு வளர்ந்தப்பறம் இதெல்லாம் கத்துக்க ட்ரை பண்ணும்.

  ஹைஷ் அண்ணே,நியூ ஆன்ரி ரிஷூ பேக்டரி துவக்கியிருப்பவர்.உங்களுக்காக ஜீனோ ஸ்பெஷல் ஓர்டர் குடுத்து வாங்கிய 'ராயல் ப்ளூ'ரிஷூ பொக்ஸ் இந்தாங்கோ! BTW, you deserve this Haish Anne! வாழ்க வளமுடன்!!!

  ReplyDelete
 5. ம்ம்..பூஸ் க்ளொக் அயகா இருக்கு..ஜீனோக்கும் வேணும்!! ம்ம்..இப்பவே ஜீனோ ஒரு க்ளொக்கை கவ்விட்டு ஓடிடுச்சி..அதிராக்கா,காலைல வந்து க்ளொக்கை தேடவாணாம்,ஓக்கை?

  ReplyDelete
 6. ஜீனோ களவாண்டது ஒயிட் பூஸ் க்ளொக்,ஜீனோக்கு கருப்பு நிறம் எண்டால் அலர்ஜி! ஹிக்..கிக்..ஹிக்! ஹிஹிஹி!

  ReplyDelete
 7. ஜீனோ செகண்ட் பர்ஸனா வந்து கமெண்ட் போட்டிருக்கு..முதல் பதிவுக்க்கு வடை,ரெண்டாவது ஆளுக்கு..அப்போ,,அப்போ,,அப்போ??!!!

  ஆ..ஆ..அய்!! அதிராக்கா அந்த 16 வயது, அ.கோ.மு. கண்ணு, இதிலை எந்தவித மாற்றமும் இல்லை தானே..ஏ..ஏ? ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி!!

  ReplyDelete
 8. இப்பிடி ரெண்டே பேர் எல்லாத்தையும் சாப்பிட்டா அப்ப எனக்கு ......

  இருங்க படிச்சிட்டு வரேன்.........

  ReplyDelete
 9. இத்தத்துவத்தொகுப்பை வெளியிட்டது அருமை அதிரா.ம.பொ.ர வின் பயனடைந்தவர்களில் நானும் ஒருத்தி.இதன் மூலம் நானும் நன்றி சொல்கிறேன்.(மன்னிக்கவும் அதிரா)
  இது நீண்ண்ண்டகாலக்கடன்.

  உங்க முகப்பு பூசார் ரெம்ப அழகாய் இருக்கிறார்.அதுக்கா உப்பிடி கண்ணடிக்ககூடாது.

  அது.... சூறாவளியாய் வந்திட்டுது.அதுதான் அண்ணாவுக்கு தும்மல் தும்மலா வருது...
  இதற்கு மஞ்சள் போட்டு புகைபிடிக்கோணும்..(திருநெல்வேலிக்கே ....)

  ReplyDelete
 10. சீ...சீ.. மூடே இல்லாமல் போச்சு:) மன்னிக்கவும் நேரமே இல்லாமல் போச்சே பதில்கள் போட.

  ஹை வடை எனக்கே எனக்கு :)))/// ஹைஷ் அண்ணன்... உங்களுக்கேதான் எல்லா வடையும், சுடச்சுட ஆனந்தபவனிலிருந்து இப்பத்தான் வந்திருக்கு, ஆயா சுடவில்லை... காரணம்.. தொடர்ந்து (எல்லாப்பதிலும்)படித்தால் புரியும்:)..

  //ஆமாம் இப்போ பிரிதானியாவில் சம்மர்தானே, பின் எப்பூடி, சே... ஹச், ஹச்..... ஒரே தும்மலா இருக்கு// சே...சே ஆயாவுக்கு சரியான தடிமனும் தும்மலும்(90 வயசெல்லோ அவவுக்கு), அதுதான் உங்களுக்குத் தொத்திவிட்டது:).

  என் புளொக் வழக்கப்படி 2 வது பதிவுக்கு யார் உரிமையாளரோ, அவருக்கே ஆயா. அந்தமுறையில, இம்முறையும் உங்களுக்குத்தான் ஆயா, ஆனால் ஹைஷ் அண்ணன், ஜீனோ உங்கட அருமைத்தம்பிதானே, அவர், ஆயா தனக்குத்தான் வேணும் என ஒற்றைக்காலில நிற்கிறார், அதனால பெரிய மனது பண்ணி விட்டுடுங்கோ. போனமுறை தூக்கின வேகத்தோட ஆயாவைத் திரும்பத் தந்திட்டீங்கள், அதனால, அதே ஆயாதான் விட்டுக்கொடுங்கோ ஜீனோவுக்கு:).

  மிக்க நன்றி ஹைஷ் அண்ணன் வரவுக்கும், ஆயாவை ஜீனோவுக்காக விட்டுக்கொடுப்பதற்கும்.

  ReplyDelete
 11. ஜீனோ வாங்கோ, உங்கள் பதிவுகளுக்கு கீழேயிருந்து மேலாக பதில் தருகிறேனே... அஜீஸ் பண்ணிக்கொள்ளுங்கோ...

  //ஜீனோ செகண்ட் பர்ஸனா வந்து கமெண்ட் போட்டிருக்கு..முதல் பதிவுக்க்கு வடை,ரெண்டாவது ஆளுக்கு..அப்போ,,அப்போ,,அப்போ??!!!// ஜீனோ... 2வது பதிவிலுள்ளவருக்குத்தான் ஆயா:), இருப்பினும் உங்களுக்கு ஆயா வேணும் என ஒற்றைக்காலில்:) நிற்பதால, ஹைஷ் அண்ணனை கெஞ்சிக் கேட்டு சம்மதம் வாங்கிட்டேன்... ஆயா உங்களுக்குத்தான்:), அவசரப்பட்டுத் துள்ளக்கூடாது, முளுவதும் படிக்கோணும், ஆயாவைப் பத்திரமாக ஏசிபோட்ட ரக்சியில கூட்டிப்போங்கோ, கிட்டத்தட்ட உங்களுக்கு அவ பூட்டிமாதிரி, கவனமாகப் பாருங்கோ, உழுந்துவடைக்கு துவாரமிடக்கூட முடியாமல் கைநடுக்கம் அவவுக்கு, அதனால்தான், இப்போ ஆனந்தபவன் வடைக்கு ஓடர். சுவீட் சிக்ரீன் ஆயாவுக்கு சொல்லியிருக்கிறேன் புரோக்கரிடம், இன்னும் வரவில்லையே:).

  //இதிலை எந்தவித மாற்றமும் இல்லை தானே..ஏ..ஏ? ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி!! /// இல்லவே இல்லை ஜீனோ நான் சொன்னால் சொல்லுத்தான், ஆயா உங்களுக்கேதான், இனி மாறமாட்டேன்.... ஆயா பத்திரம் ஜீனோ பார்த்து. மெல்ல..மெதுவா... ஆடாமல் கூட்டிப்போங்கோ. இல்லாவிட்டால் பாதியிலயே மூச்சு நின்றிடும் ஆயாவுக்குத்தான்.. கிக்..கிக்.கிக்.....

  உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா.... முடியல சாமீஈஈஈஈஈஈஈ..... ஒரே சுவெற்றிங்காஆஆஆஆஆஆஆஆஆஆஆ இருக்கெனக்கு:).

  ReplyDelete
 12. ஜீனோ ///பச்சைப்பிள்ளைதானே..இன்னும் கொஞ்சூண்டு வளர்ந்தப்பறம் இதெல்லாம் கத்துக்க ட்ரை பண்ணும். // எனக்கு பெயிண்ட் வந்திடும்போல இருக்கே..:)... டோராவைக் கைப்பிடிக்க மட்டும் வளர்த்தி போதுமோ? சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்பு.

  ஹைஷ் அண்ணே,நியூ ஆன்ரி ரிஷூ பேக்டரி துவக்கியிருப்பவர்.உங்களுக்காக ஜீனோ ஸ்பெஷல் ஓர்டர் குடுத்து வாங்கிய 'ராயல் ப்ளூ'ரிஷூ பொக்ஸ் இந்தாங்கோ/// ஜீனோ... உப்பூடி... எல்லோருக்கும் இலவச விநியோகம் செய்தால், ஆன்ரி விரைவில பக்டரியை மூடவேண்டி வரப்போகுதூஊஊஊஊஊஊஊ, நல்ல மருமகன் என்றால்.... முதலை(தண்ணிக்குள் இருக்கிற முதலை இல்லை, இது வேறை:)), இரட்டிப்பாக்கிக்காட்டோணும் ஓக்கை:).

  ஜீனோக்கும் வேணும்!! ம்ம்..இப்பவே ஜீனோ ஒரு க்ளொக்கை கவ்விட்டு ஓடிடுச்சி..//// ஜீனோ..... இட்ஸ் ஓக்கை.... அக்கா வீடுதானே... எடுத்திட்டுப்போங்கோ..... காதைக் கொண்டுவாங்கோ, கேட்டிடப்போகுது, நான் ஜெய்..லானி வீட்டிலிருந்துதான் குளொக்”ஐடியா” வைத் திருடினேன்.... இது நமக்குள் இருக்கட்டும் ஓக்கை கிக்..கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈஈ.

  ஜீனோக்கு கருப்பு நிறம் எண்டால் அலர்ஜி! ஹிக்..கிக்..ஹிக்! ஹிஹிஹி! //// ஹக்..ஹக்..ஹா.... கிக்...கிக்..கீஈஈஈஈஈஈஈஈ குக் குக் கூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ.

  மிக்க நன்றி ஜீனோ வரவுக்கும், ஆயாவைப் பத்திரமாக கூட்டிப்போவதற்கும்.

  ReplyDelete
 13. ஜெய்..லானி வாங்கோ..... எனக்கு வர வரச் சந்தேகமாகவே இருக்கு:). முன்பெல்லாம் லீவென்றால் ஒயுங்கா வீட்டிலிருப்பீங்கள், இப்போ வீட்டிலிருப்பது குறைந்துவிட்டதே:), சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்பு:) ஜெய்..லானி வீட்டின் கீழே நெருப்புப்பிடிச்சிட்டுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ... அதைக் கழுகு பார்க்குது.... பயம்மாஆஆஆக் கிடக்கெனக்கு....

  கவலைப்படாதையுங்கோ, சுவீட் சிக்ரீன் ஆயா விரைவில் வந்திடுவா, அவவுக்கு வடை எல்லாம் செய்யத் தெரியாதாம், பற்றீஸ், ரோல்ஸ்ஸ், கட்லட்(உருண்டை மீனில), பேகர் ... இப்பூடி லேட்டஸ் ஃபூட்டாத்தான் செய்வாவாம்...... அதுக்காகத்தான் நானும் வெயிட்டிங்....

  ///இருங்க படிச்சிட்டு வரேன்......... //// படிச்சு முடிச்சிட்டு வாங்கோ... எக்‌ஷாம் எப்போ?:):):):). மிக்க நன்றி ஜெய்..லானி.

  ReplyDelete
 14. அம்முலு வாங்கோ.
  //அதிரா.ம.பொ.ர வின் பயனடைந்தவர்களில் நானும் ஒருத்தி// உண்மையை ஒளிக்காமல் சொல்லிவிட்டீங்கள் நன்றி.

  //இது நீண்ண்ண்டகாலக்கடன்// எனக்கு நீஈஈஈண்ட நாள் ஆசை, இத்தொகுப்பையும் எப்படியாவது வெளியிட வேணுமென.

  ///அதுக்கா உப்பிடி கண்ணடிக்ககூடாது.// அம்முலு... எதையாவது காட்டித்தானே... உங்களையெல்லாம் அழைக்கவேண்டியிருக்கு:), இல்லாவிட்டால் உள்ளே வரமாட்டீங்களெல்லோ:).

  //அது.... சூறாவளியாய் வந்திட்டுது.அதுதான் அண்ணாவுக்கு தும்மல் தும்மலா வருது/// எது?? எது?? எது?? ஓஓஓஓஓஓஓஓ லைலாவைச் சொல்றீங்களாக்கும்..... சே...சே... லைலாவால அவரை ஒண்ணும் பண்ண முடியாதூஊ... அவருக்குத்தான் ஆயுள் 250 வயசாச்சே......:).

  ..(திருநெல்வேலிக்கே ....) /// ஓம்... வைத்தியருக்கே வைத்தியம் சொல்லவேண்டிக்கிடக்கு:)... மிக்க நன்றி அம்முலு...

  ReplyDelete
 15. மேனகா வாங்கோ, அதுசரி, எதைச் சுப்பர் என்கிறீங்கள்??:) சொன்னால்தானே தெரியும். நன்றி மேனகா.

  ReplyDelete
 16. கால் வச்ச வனீஈஈஈஈஈஈ வாங்கோ...இன்று ரொம்ப அமைதியாக வந்திருப்பதைப் பார்க்க நேக்குப் பயம்மாக் கிடக்கூஊஊஊஊ:):)..

  Athees, super flowers & plane/// பூக்கள் எங்கட, பிளேன் ஹைஷ் அண்ணனுடையது:) படமெடுத்தது மீ...யா..யா.., மிக்க நன்றி வாணி.

  ReplyDelete
 17. அதீஸ்.. இதென்ன இக்கால திருக்குறள்களையெல்லாம் தொகுத்துத் தந்திருக்கீங்கோ? :))

  ஆ.. அதை இன்னமும் பழகாமல் இருக்கனே... லிங்கிற்கு நன்றி..

  ReplyDelete
 18. கெனத்த தைரியந்தான் போங்கோ.. ப்ளேனுக்கு நேர் கீழே நின்று படமெடுத்திருக்கீங்க.. மேலேயிருந்து பாம் போட்டால் என்னாவது?

  பூ அழகு..

  ReplyDelete
 19. இத எப்படி பார்க்காம விட்டேன்? பூஸ் கடிகாரம் ரொம்ப க்யூட் அதீஸ்..

  ReplyDelete
 20. அதீஸ்.. இதென்ன இக்கால திருக்குறள்களையெல்லாம் தொகுத்துத் தந்திருக்கீங்கோ? :))ஆ.. அதை இன்னமும் பழகாமல் இருக்கனே... /// சந்து, ஆரம்ப மபொர ரெயினை, நீங்களும் நானுமாகத்தானே ஓட்டினோம்?? இப்போ இப்படிக் கேட்டால்.... அதிராவுக்கு தண்ணியில்லாத, பஞ்சு நிறைந்த கிணத்தில குதித்து தற்கொலை பண்ணும் எண்ணம் வருதூஊஊஊஊஊஊ??:):)

  கெனத்த தைரியந்தான் போங்கோ.. ப்ளேனுக்கு நேர் கீழே நின்று படமெடுத்திருக்கீங்க.. மேலேயிருந்து பாம் போட்டால் என்னாவது?/// அந்தப் பைலட்டில:) நிறைய நம்பிக்கை இருக்கு, அதனால்தான் பயப்பூடாமல் நின்றேன்:)

  பூவுக்கு நன்றி.

  இத எப்படி பார்க்காம விட்டேன்? பூஸ் கடிகாரம் ரொம்ப க்யூட் அதீஸ்.. // மிக்க நன்றி சந்து, பூஸ் கடிகாரம் சூப்பர் என மெயில்களும் வந்திருக்கு.... எனக்கும் ரொம்பப் புய்த்திருக்கு.... ஜீனோ ஒன்றைக் கொண்டு போனார் இன்னும் பட்டரி போடவில்லைப்போலும்:).

  மிக்க நன்றி சந்து, வரவுக்கும் வாழ்த்துக்கும்.

  ReplyDelete
 21. படங்கள் அருமை

  ReplyDelete
 22. எல்கே வாங்கோ, மிக்க நன்றி. தத்துவங்கள் பிடிக்காதோ?:).

  ReplyDelete
 23. கண்டு கொண்டேன் அதிரா

  ReplyDelete
 24. அதிரா படங்கள் அருமை,மறை பொருள் நிறை பொருளாய் காட்சியளிக்கிறது.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 25. Jaleela Kamal said...
  கண்டு கொண்டேன் அதிரா//ஜலீலாக்கா? எங்க இருக்கிறீங்க? என்னத்தைக் கண்டிட்டீங்க?.... கொயப்புறீங்களே என்னை:). மிக்க நன்றி ஜல்..அக்கா.

  ReplyDelete
 26. ஆசியா, மறைபொருள் நிறைவடையமுன், அவர் குளோஸ் பண்ணிட்டார்:)(கடவுளே... இது வேற குளோஸ்ஸ்ஸ்).

  வரவுக்கு நன்றி ஆசியா.

  ReplyDelete
 27. பகுதிகளைக் காண விரும்புபவர்கள்... இங்கே வாங்கோ...////


  நான் தற்கொலை பண்ணிக்கமாட்டேன்

  ReplyDelete
 28. மங்குனி அமைச்சர் said...
  நான் தற்கொலை பண்ணிக்கமாட்டேன் // பயப்பூடாதீங்க, நீங்க எதுக்கு தற்கொலை பண்ணோனும்?, நாங்களெல்லாம் இருக்கும்போது:) உங்களை தற்கொலை பண்ண விட்டுவிடுவோமா? நோ சான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

  ஊசிக்குறிப்பு:
  தற்கொலைக்கு அவசியமே இல்லை, ஏனெண்டால், நாங்க, கொலை செய்வதில் கெட்டிக்காரருங்கோஓஓஓஓ:), நம்பி வாங்கோ.

  வரவுக்கு நன்றி எம்பி.

  ReplyDelete
 29. வடை.. சட்னி.. ஆயா என்று ஒன்னு விடாமா நீங்களே அஸ்கினா என்ன ஆகறது...

  நம்மட அருசுவை மூலம் எல்லாருக்கும் கிடைத்த ஏணி/தோணி/நார்தங்காய்/வாத்தியார் ==>> ஹைஷ் அங்கிள்...

  விளக்கம்:
  ஏணி ‍ ‍ = மேல் மாடிக்கு போக‌
  தோணி = ஆற்றை கடக்க‌
  நார்தங்காய் ‍ = எப்படியான வாய் கசப்பிலும் சாப்பாட்டை உள்ள தள்ளிடும்
  வாத்தியார் = பாவம் அவரும் தான் ரொம்பவே முயற்சி செய்வார்... எல்லாரையும் ஒரு வகுப்பில் இருந்து இன்னுமொன்றுக்கு கரையேத்த‌....

  அதிரா! நல்ல பதிவு.. ரீரன்னுக்கு/ரீடெலிகாஸ்டுக்கு நன்றி..

  ReplyDelete
 30. மேகம்கூட புகைப்படத்தில் சட்டென்று பார்க்கும்போது உங்களுக்குப் பிடித்த பூனைக்குட்டியாகத்தான் இருக்கிறது அதிரா! கவனித்தீர்களா?

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. வடை.. சட்னி.. ஆயா என்று ஒன்னு விடாமா நீங்களே அஸ்கினா என்ன ஆகறது...
  /// இலா, உதுக்குத்தான் சொல்றது பந்திக்கு முந்தோணும்ம்ம்ம்ம்:).

  நம்மட அருசுவை மூலம் எல்லாருக்கும் கிடைத்த ஏணி/தோணி/நார்தங்காய்/வாத்தியார் ==>> ஹைஷ் அங்கிள்... // உங்களைப்போல, சொல்ல எல்லோருக்கும் மனசு வராது இலா.

  மபொர ரெயினை... முடிவுவரை ஓட்டியவர்களில் நீங்களும் ஒருவராச்சே... மறக்கமுடியுமோ? அனுவசறியும் வந்திட்டுது...:).

  மிக்க நன்றி இலா வரவுக்கு.

  ReplyDelete
 33. மனோ அக்கா, நீங்க சொன்னதன் பின்புதான் பார்த்தேன், முதலாவது படத்திலே, பூனைக்குட்டியொன்று பாய்வதுபோல இருக்கு, மேலே தலை, கீழே பெரீஈஈய வால், இரு முன்னங்கைகள் நீண்டிருக்கு...... எனக்கு சந்தோசத்துக்கு அளவே இல்லை, கண்ணை வெட்ட முடியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

  மிக்க நன்றி மனோஅக்கா வரவுக்கு.

  ReplyDelete
 34. //மனத்தை அடக்க நினைத்தால் அலையும்,
  மனத்தை அறிய நினைத்தால் அடங்கும்//

  நல்லா இருக்குங்க..

  அப்புறம் அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி அ...ஆ....ஆஆ...

  ReplyDelete
 35. கலாநேசன் said...
  //மனத்தை அடக்க நினைத்தால் அலையும்,
  மனத்தை அறிய நினைத்தால் அடங்கும்//

  நல்லா இருக்குங்க..
  /// வாங்கோ நல்வரவு.

  இப்போதான், உங்கள் புளொக்தேடிப்பார்த்தேன். கவியரசு வைரமுத்து பிறந்தது 13ம் திகதி என, வாழ்த்தும் சொல்லியிருக்கிறீங்க, அவர் 4ம் எண்காரரோ... என் சந்தோசத்துக்கு அளவே இல்லை.

  எனக்கு பிடித்த கண்ணதாசன், கல்யாணசுந்தரம்.. அவர்கள் வரிசையில் இவரையும் நிறையாஆஆஆஆஆப் பிடிக்கும். அவரின், கவிவரிகள், பேட்டிகள் எதையுமே நான் தவறவிடாமல்(கிடைத்தால்) பார்ப்பதுண்டு. இப்போ ரீவியில் எமக்கு அவர் நிகழ்ச்சி ஏதும் பார்க்கக் கிடைப்பதில்லை இங்கு:(.

  மிக்க நன்றி வரவுக்கு.

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.