நல்வரவு_()_


Friday 9 July 2010

“மியாவ் பெட்டி”

மியாவ் பெட்டி
ஒவ்வொருவரும் அஞ்சறைப்பெட்டி, ரங்குப்பெட்டி, பிய்ந்த பெட்டி.... இப்பூடி எழுதீனமே , நானும் ஏதாவது எழுதலாமே என பலமாக சிந்தித்த இடத்தில் கிடைத்ததே இந்த “மியாவ் பெட்டி” அதுக்குத்தான் கிட்னியை யூஸ் பண்ணோனும் என்று சொல்றது:).


சரி சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்.... கிட்னிக்கு வேலை கொடுத்த இடத்தில், முன்பு நடந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

இங்கே பெரும்பாலான ஷொப்ஸ் எல்லாம் ஒரு செயினாகவே இருக்கும்... அதாவது இவை பிரித்தானியா முளுவதும் இருக்கும்.


BOOTS


இது இங்குள்ள பல பார்மஸிகளில் ஒன்று. இங்கே மருந்துப்பொருட்களோடு, அழகுசாதனப்பொருட்கள், குழந்தைகளின் ஆடையிலிருந்து, தேவையான அத்தனை பொருட்களும், மற்றும் பேர்பியூம், ரொயிலறீஸ், இப்படி பொருட்கள் எல்லாம் வாங்கலாம்.

நாங்கள் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் வீட்டில் நிற்பதில்லை, காலையில் வெளிக்கிட்டால் மாலைதான் வீட்டுக்கு வருவோம், சாப்பாடெல்லாம் வெளியிலேயே வைத்துக்கொள்வோம்.

அப்படித்தான் ஒருநாள் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்பு, ஒரு மோலுக்குப் போனோம். அங்கு சுத்தித்திரிந்தோம், சின்னமகன் பிராமில்(pram) இருந்தார். வாங்கும் பொருட்களையெல்லாம், பிராமின் கீழே இருக்கும் பாதுகாப்பு ஏரியாவில் வைத்தோம்(காவும் வேலை இல்லை:)). இப்படியே இந்த பூட்ஸ் பார்மஸிக்கும் போனோம். அங்கு நான் எனக்குத்தேவைப்பட்ட, கண்ணுக்கு, சொண்டுக்கு, நகத்துக்கு..... இப்படியான பொருட்களையெல்லாம் வாங்கினேன்.... கிட்டத்தட்ட 40 பவுண்டுகள் வந்ததாக ஞாபகம். அவர்களது bag இல் போட்டுத் தந்தார்கள்.

பின்பும் வேறு கடைகளுக்குச் சென்று சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். வீட்டுக்கு வந்தால், உடனே ஆராவது ரீ ஊத்துவோம், குடிப்போம்.... பின்னர் படம் பார்ப்பது/ரெஸ்ட் பண்ணுவதுதான் வேலை, வேறெதுவும் அன்று செய்வதில்லை. அப்படியே அன்றைய பொழுதும் முடிந்துவிட்டது, கணவர்தான் bags எல்லாம் எடுத்துவிட்டு பிராமை மடித்து வைத்தார். நான் வாங்கிய பொருட்கள் எதையும் செக்பண்ணவில்லை. அடுத்த நாள் பின்னேரம்தான் பிரீயாக இருக்கும்போது, கியூரெக்ஸ் வாங்கினேனே, அடிக்கலாமே என நினைத்துத் தேடினேன். அந்த bag ஐக் காணவில்லை.

எல்லா இடமும் தேடினேன் கிடைக்கவில்லை, ஏனைய bags எல்லாம் இருந்தது. அப்போ கணவரைக் கேட்டேன், “பூட்ஸ்” இல் தந்த பாக்கை நீங்களோ பிராமில் வைத்தீங்களென?, நினைவில்லையே என்றார், எனக்கும் நினைவில் இருக்கவில்லை. ஷொப்பிலேயே தவறவிட்டோம் என்ற முடிவுக்கு வந்தாச்சு. எதுவும் புரியவில்லை, கார் பூட்டிலும் இல்லை.

ஓக்கே, அடுத்தமுறை கேட்போம் என விட்டுவிட்டோம். நாங்கள் எப்பவுமே பில்லையோ/ மிகுதிக் காசையோ கவனிப்பதில்லை, வாங்கி அப்படியே பாக்கில்/பொக்கட்டில் போடுவது பின்பு ஸ்ரெட் பண்ணிவிடுவோம். இது உடனே என்பதால், பில்லை எடுத்துக் கவனமாக வைத்துவிட்டேன்.

அடுத்த கிழமை போனோம், அங்கே இதற்கெனப் பொறுப்பாக ஒருவர் இருக்கிறார், அவரிடம் சொன்னோம், பில்லைக் காட்டி, அவர் உடனே, தவறவிட்ட bags க்கு என ஒரு ரூம் இருக்கு, அங்கே போய் செக் பண்ணிவிட்டு வந்து சொன்னார், இங்கு இல்லையே, உங்கள் வீட்டில் நன்கு தேடினீங்களோ என்று. நாங்களும் தேடிவிட்டோம் இல்லை என்றோம். சற்று யோசித்தார், உடனே சொன்னார் ஓக்கே... மீண்டும் தருகிறேன் என.... பில்லைப் பார்த்துப் பார்த்து அத்தனை பொருட்களையும் எடுத்துப் போட்டு தந்தார் புன்னகையோடு. நாங்கள் இப்படி எதிர்பார்க்கவில்லை.... புன்னகையோடு வந்துவிட்டோம்.

இரண்டு நாட்கள் போனபின், நான் வக்கியூம் பண்ணும் போது, ஸ்ரெப்சின்(steps) கீழே, மகனின் சைக்கிளோடு ஒரு பாக் தெரிந்தது, எடுத்துப் பார்த்தேன், காணாமல் போன அதே பூட்ஸ் பாக். எனக்கு உடம்பெல்லாம் என்னவோ போலாகிவிட்டது..... எவ்வளவு தவறாகிவிட்டதே என நினைத்தேன். உடனே கணவருக்கு போன் பண்ணினேன், அவர் சொன்னார், அப்படியே வையுங்கோ, கொண்டுபோய்க் கொடுத்திடலாம் என்று.

அதேபோல் அடுத்த கிழமை கொண்டு சென்று, காரிலே மறைவாக இருந்துவிட்டது நாங்கள் கவனிக்கவில்லை என ஒரு குட்டிப்பொய் சொல்லி ஒப்படைத்தோம். அவர்கள் எம்மை நம்பி உடனேயே அனைத்துப் பொருட்களையும் திரும்பத் தந்தார்களே.... அந்த நல்லெண்ணம், எப்பவுமே.. ~Boots~ ஐ நினைக்கும்போது வந்துவிடுகிறது. வாழ்க, வளர்க அவர்கள் சேவை.TESCO

இது இங்குள்ள பல சுப்பமார்கட்டுகளில், ஒரு ஷெயின் சுப்பமார்கட் ரெஸ்கோ. இதுவும் பிரித்தானியாவில் எல்லா இடங்களிலும் உண்டு. 90 வீதமானவை 24 மணித்தியாலமும் திறந்தே இருக்கும். பெயர்தான் சுப்பமார்கட், ஆனால் இது ஒரு மோல்போல இருக்கும்... இங்கு உடுப்பிலிருந்து, அலங்காரம், சூஸ் வகைகள். எலக்ரிக், மருந்து, சமையல்...., கார்டின் பொருட்கள் அத்தனையும் கிடைக்கும். கிட்டத்தட்ட அனைத்துமே வாங்கலாம். எங்கள் வீட்டுக்கு கிட்டவும் 2 இருக்கு. ஒன்று 10 நிமிடம் ஓட வேண்டும், இன்னொன்று 15 நிமிடம் ஓடவேண்டும். 24 மணிநேரமும் திறந்திருக்கும்.


ஒருநாள் போனபோது, ஒரு அழகான ஷோட்ஸ்(மகனுக்கு), அதன் விலை £15 பவுண்டுகள், ஆனால் சேல் பிறைஸ் £7.50 பவுண்டுகள் என இருந்தது. சரியென எடுத்துவிட்டேன். வீட்டுக்கு வந்துவிட்டேன்.

எப்பவுமே பில் செக்பண்ணும் பழக்கமில்லாத நான், அன்று, இதன் விலையைப் பார்ப்போமே என செக் பண்ணினேன். £15 பவுண்டுகள் என்றே போடப்பட்டிருந்தது. எனக்கு கோபமாக வந்தது, காசு பெரிசில்லை, ஆனால் சேல் எனப்போட்டு ஏமாற்றிவிட்டார்களே என. சேல் என்பதால்தான் எடுத்தேன், இல்லாவிட்டால் எடுத்திருக்கமாட்டேனே என நினைத்துவிட்டு. அடுத்தநாள் போனேன், கஸ்ரொமர் சேர்விசில் போய் காட்டிக் கதைத்தேன், உடனே அந்த லேடி போய்ச் செக் பண்ணினார், பண்ணிவிட்டு வந்து சொன்னார், இது சேல்தான், ஆனால் கசியர் மெசினுக்கு(Till), சேல் பிறைஸ் வந்திருக்கவில்லை. இது எங்கள் தப்புத்தான் எனக்கூறி, மொத்தப்பணத்தையும் திரும்பத் தந்து, ஷோட்ஸ் ஐயும் இலவசமாகத் தந்தார். இப்படித்தப்பு நடந்தால், அவர்கள் ரூல்ஸ் இதுதானாம். இது அடுத்த இன்ப அதிர்ச்சி எனக்கு.

ஆனால் ரூல்ஸ் இப்படி இருந்தாலும், அங்கு சேவீசில் நிற்பவர்களையும் பொறுத்து இருக்கிறது எல்லாம். சிலர் சுவாமி கொடுத்தாலும் ஐயர் கொடுக்கமாட்டார் என்பதுபோலவும் இருப்பார்கள்.

என்ன இருந்தாலும், இந்த இரண்டு நல்ல விஷயங்களையும் “மியாப் பெட்டி” மூலம் வெளியே தெரியப்படுத்துவதையிட்டு... பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பின் இணைப்பு:
ஸாதிகா அக்கா!!! அதி....ராவைத் தெரியுதோ?


இது எந்த இடம், எவடம்? என்றெல்லாம் கேட்கப்பூடாது, சும்மா ஒரு இடம், கைபோன போக்கில் எடுத்தேன் அவ்ளோதான்:).

எமது நாடுகளில் கிரிக்கெட் மச் போல, இங்கத்தைய நாடுகளில் சொக்கர் மச்சுக்குத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஸ்கூல் எல்லாம் இதே கதைதான். இந்த T-Shirt, மச் ஆரம்பமான அன்றே,எங்கள் மகன் பிளேன் ரீசேட்டுக்கு, தானே எழுதி, கொடியும் கீறி போட்டிருக்கிறார்.ஓகே, நித்திரை வருகிறதே.... குட்நைட்...

65 comments :

 1. ஹை...வட!!வட..வடைஈஈஈஈஈஈஈ!

  ReplyDelete
 2. ஹஹ்..ஹா..ஹிஹ்..ஹீ!!ஆயாஆ..ஆ..ஆ!!

  ReplyDelete
 3. ஜீனோ படிக்காதைக்கு கொமெண்ட் போட்டிருக்கு என்று எண்ணாதைங்கோ ஆரும்!

  முழுவதும் படித்துட்டுதான் இங்கன வந்திருக்கம். அதிராக்கா,வெளிநாடுகள்-ல இது ஒரு நல்ல பயக்கம்..நம்ம ஊர்களில் இப்பூடி காண்பது அரிது.

  ம்ம்..டெஸ்கோ..பூட்ஸ்!!!மலரும் நினைவுகளைக் கிண்டிக்கிளறி விடாதையுங்கோ..என்சொய் செய்யுங்கோ.

  போட்டொஸ் நல்லார்க்கு../அதி....ராவைத் தெரியுதோ?/எப்பூடித் தெரியும்? நீங்கள்தான் கை போனபோக்கிலை படமெடுத்திருக்கீங்களே..அப்புறம் உங்களையே எப்பூடி பாக்கறது? ஹுக்கூம்,நாங்களும் கிட்னிய ஊஸ் பண்ணுவம்ல?பண்ணுவம்ல?பண்ணுவம்ல?

  மருமகப்பிள்ளை நல்லாவே கீறி:) இருக்கார்.(பின்ன??பூஸின் குட்டியல்லோ,"கீற"சொல்லியா தரோணும்?ஹிஹிஹி)
  வரைந்து = கீறி-ஓ அதிராக்கா? ஜீனோ ஊர்ல கீறி=பிராண்டி..காயம் படுத்தி..ஹிஹிஹீ!

  ReplyDelete
 4. ஆ... ஜீனோ.... கொஞ்சம் மெதுவாச் சிரியுங்கோ சாமமெல்லோ:)

  இம்முறை உங்களுக்குத்தான் இருகுரு சந்திர யோகம்... வடை கிடைச்சிருக்கே.... அப்போ ஸ்பெயின் வெல்லுமாக்கும்:)).

  மிக்க நன்றி ஜீனோ சிரிப்புக்கு.

  ReplyDelete
 5. அதுதானே பார்த்தேன் ஜீனோ, ஒயுங்காப் படிச்சிருக்கிறீங்கள்.. அனைத்தையும்.

  மருமகப்பிள்ளை நல்லாவே கீறி:) இருக்கார்.(பின்ன??பூஸின் குட்டியல்லோ,"கீற"சொல்லியா தரோணும்?ஹிஹிஹி)
  வரைந்து = கீறி-ஓ அதிராக்கா? ஜீனோ ஊர்ல கீறி=பிராண்டி..காயம் படுத்தி..ஹிஹிஹீ! /// ஓ ஜீனோ... கி..கிக்...கிக்.... கிட்னி நல்லாவே வேர்க் பண்ணுது உங்களுக்கு.... வரைந்து என்பது... சுத்தத் தமிழ்... கீறி என்பது எமது பேச்சுவழக்கு... நீங்கள் சொன்ன கீறி........யும் பொருந்தும்... மீன் குஞ்சுக்கு... ஓக்கை ஓக்கை..

  மியாவும் நன்றி ஜீனோ, நானும் நல்லாக் கீறுவனே:), கீறிக் காட்டட்டோ?:)))

  ReplyDelete
 6. ஹ்ம்ம்..ஓக்கை,பஸ் நம்பர் 20 ஏறினா அதிராக்கா ஊருக்கு போயிரலாம்.ஜீனோ இஸ் ரெடி வித் இட்ஸ் பேக்-பேக். (back pack,ஓக்கை கய்ஸ்?) ஆரெல்லாம் வரீங்கோ? சீக்கிரமா வாங்கோஓஓ! பஸ் புடிக்கலாம்.

  /அப்போ ஸ்பெயின் வெல்லுமாக்கும்:))./ஓ..அதிராக்கா,நீங்க ஓக்டோபஸ் ஆகிட்டீங்களோ இப்பம்? கிக்..கிக்..கி!

  ReplyDelete
 7. அக்கா கீறினதைதான் ஆல்ரெடி பாத்துட்டமே அதிராக்கா? இனியுமா? தாங்காது..கூகுள் ப்ளொக் இப்பமே சர்வர் ஓவர் லோடாம்..போனாப் போகுது,விட்டிடுங்கோ. கூல் டவுன்!

  ReplyDelete
 8. வேகவேகமா கொமெண்ட் வருகுது போல அதிரா.. நானும் படிச்சிட்டுத் தான் கொமெண்ட் போடுறேன்..

  சில சமயம் நாம் இவ்வாறு காணும் நல்ல மனிதர்கள், நம்மை நெகிழ வைப்பார்கள்..

  மியாவ் பெட்டியில் காரம் கம்மி.. கிக்கீகீ..

  ReplyDelete
 9. //இங்கு உடுப்பிலிருந்து, அலங்காரம், சூஸ் வகைகள். எலக்ரிக், மருந்து, சமையல்...., கார்டின் பொருட்கள் அத்தனையும் கிடைக்கும். கிட்டத்தட்ட அனைத்துமே வாங்கலாம். எங்கள் வீட்டுக்கு கிட்டவும் 2 இருக்கு. ஒன்று 10 நிமிடம் ஓட வேண்டும், இன்னொன்று 15 நிமிடம் ஓடவேண்டும்.//

  அப்போ அங்கு ஓடி ஓடி தான் பொருட்கள் வாங்க வேண்டுமோ?

  இந்தியாவிலும் அதுபோல் இருக்கிறார்கள். ஆனால் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக :)

  ReplyDelete
 10. அருமை அதிரா..உங்கள் மகன் சூப்பராக டிசர்டில் வரைத்து இருக்காங்க.. வாழ்த்துகள்...படங்கள் அருமை...மியாவ் பெட்டி என்றவுடன் நிறைய மியாவ் படங்களை காண்போம் என்று நினைத்தேன்.....

  ReplyDelete
 11. அதீஸ், புல்லரிக்குது. பூட்ஸ் கடைகாரரின் நேர்மை. அதை விட உங்கள் நேர்மை. வெளிநாடுகளில் கஸ்டமர் service பெரும்பாலன கடைகளில் நன்றாகவே இருக்கும்.

  //அப்போ அங்கு ஓடி ஓடி தான் பொருட்கள் வாங்க வேண்டுமோ?//

  நான் கேட்க நினைத்ததை ஹைஷ் அண்ணா கேட்டு விட்டார்.

  பூஸ் பெட்டி நல்லா இருக்கு.

  ReplyDelete
 12. நீங்கள் இவ்வளவு நல்லவரா? ஹி ஹி

  என்னுடன் உயர் தரம் படித்த பெண் ஒருவரும் லண்டனில் இருக்கிறார். இந்த மாதிரி கடைகளுக்குப் போய் உடுப்பு வாங்கிக்கொண்டு வந்து அடுத்த நாள் பார்ட்டிக்குப் போட்டுக்கொண்டு போட்டு, பிறகு பிடிக்கேல்லை என்டு குடுத்துப்போட்டு காசை வாங்கிக்கொண்டு வருவாராம். ஒரு வகையில் சிரிப்புவந்தாலும் கொஞ்சம் கோவமும் வரும். இதுவே பிழைப்பாக இருப்பது சரி இல்லை என்று சொன்னாலும் கேட்கமாட்டார்.

  ReplyDelete
 13. //அந்த நல்லெண்ணம், எப்பவுமே.. ~Boots~ ஐ நினைக்கும்போது வந்துவிடுகிறது.// எனக்கு வேஏ..ற 'பூட்ஸ்' நினைவு வருதேஏ!!! ;)))

  பப்பி, நல்ல ஜொலி மோட்ல இருக்கிறார் போல. ;)

  ReplyDelete
 14. மகன், டீ சேட்டில வடிவாக் கீறி இருக்கிறார் அதிரா. இமா ஆன்டி சொன்னன் எண்டு அவர்ட்டச் சொல்லி விடுங்கோ.

  ReplyDelete
 15. அதீஸ் என் வேண்டு கோளை உடனே நிறை வேற்றியதற்கு நன்றி.பாஸ்போட்,விசா இல்லாமல் பிரித்தானியாவை சுற்றிக்காட்டி விட்டீர்கள்.

  ReplyDelete
 16. உங்கள் ஊர் உங்களைப்போலவே பசுமையாக இருக்கு அதீஸ்.//பின் இணைப்பு:
  ஸாதிகா அக்கா!!! அதி....ராவைத் தெரியுதோ// ஏற்கனவே எனக்குத்தான் அதீஸைத்தெரியுமே.மகன் டீசர்ட்டுக்கு வரைந்தது நன்றாக உள்ளது.அதீஸ் அடிக்கடி மியாவ் பெட்டியை திறப்பீர்கள்தானே?

  ReplyDelete
 17. அப்பாடா அரண்ல சீ..பரண்ல கிடந்த "மியாவ்பெட்டி" தூசி தட்டி எடுத்துப்போட்டீங்கஅதிரா. பெட்டிக்குள்ள இருந்து முதல்ல வந்ததே நல்ல பொருளா இருக்கு.எல்லாத்தையும் தூசி தட்டி போடுங்கோ.பிறகு அரண்ல சீ..பரண்ல வைக்ககூடாது.

  மியாவ்(பெட்டி)மரப்பொந்து ல இருந்து பார்க்கிற படம் பொருத்தம்.

  /முளுவதும்=முழுவதும்/

  TESCO "SUPER" MARKET தான்.எங்களுக்கும் ஒரு அனுபவம் நட‌ந்த‌து.

  அதி..ரா தெரியுதோ// அதி(க கா)ரா தெரியுது.

  மகன் நன்றாக கீறி,எழுதி இருக்கார்.
  நீங்கள் ஸ்பெயினோ..கர்ர்ர்ர்ர்ர்

  அந்த நல்லெண்ணம் பூட்ஸ்க்கு இருக்கேக்கை நீங்கள் நல்லதே நினைக்கோணும்.
  தப்புத்தப்பா நினைக்ககூடாது இமா..ஆ.

  ReplyDelete
 18. மியாவ் பெட்டி பொருத்தமான பேர்..ஹி..ஹி..

  ReplyDelete
 19. கடி கம்மிதான்..

  //பின் இணைப்பு:
  ஸாதிகா அக்கா!!! அதி....ராவைத் தெரியுதோ?//

  பூஸுக்கு மெமரி அதிகம் ரெண்டு மாசம் முன்ன சொன்னது இன்னும் நினைவில் இருக்கு . இனி கதைக்க எதுக்கும் உஷாரா இருக்கனும் நான் என்னை சொல்றேன் .மீஎஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

  ReplyDelete
 20. அனுபவமும் படங்களும் கூல்..ஆனா இங்க வெய்யில் 46 டிகிரி.

  ReplyDelete
 21. அரணைப் பற்றி என்ன கதை நடக்குது இங்க? ;)

  ம். இனி நல்லாதாவே நினைக்கிறன். ;) நீங்கள் எப்ப வலைப்பூ ஆரம்பிக்கப் போறீங்கள் என்று கேட்கிறன், கேட்கிறன், க.கா.போறீங்கள். ;(

  ReplyDelete
 22. படங்கள் சூப்பர்ர் அதிரா!!

  ReplyDelete
 23. ஹ்ம்ம்..ஓக்கை,பஸ் நம்பர் 20 ஏறினா அதிராக்கா ஊருக்கு போயிரலாம்/// karrrrrrrr நம்பரைப் பார்த்து ஏறி பிறகு தேம்ஸ் இல் இறங்கி நின்று என்னை மண் அள்ளித் திட்டிடக்கூடாது.

  பிளேனைப் புய்யுங்கோ ஜீனோ.. பஸ் எல்லாம் வாணாம்..

  ///போனாப் போகுது,விட்டிடுங்கோ. கூல் டவுன்!/// எதை விடச் சொல்றீங்க ஜீனோ?:), வர வர நேக்கு ஒண்ணுமே பிரியலே... மிக்க நன்றி ஜீனோ.

  ReplyDelete
 24. வேகவேகமா கொமெண்ட் வருகுது போல அதிரா.. நானும் படிச்சிட்டுத் தான் கொமெண்ட் போடுறேன்.. /// ஓம் சந்து... படிச்சிட்டுத்தான் கொமெண்ட் போடோணும்..

  ஓம் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். பழகும்போது எதுவும் தெரிவதில்லை. பின்பு ஆறுதலாக இருந்து அசைபோடும்போதுதான்.... நல்லது கெட்டது புரியும்.

  மியாவ் பெட்டியில் காரம் கம்மி.. கிக்கீகீ.. // உண்மைதான் எனக்கும் தெரிந்தது, சாமமானதால் பப்ளிஸ் பண்ணினாலே போதும் என்றாகிவிட்டது. அதனால்தான் டக்கென அனுப்பிட்டேன்.

  மிக்க நன்றி சந்து.

  ReplyDelete
 25. அப்போ அங்கு ஓடி ஓடி தான் பொருட்கள் வாங்க வேண்டுமோ?//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நல்லதெதுவுமே கண்ணில படாதாக்கும்.

  நினைச்சேன் எழுதும்போதே நினைத்தேன். ஆராவது...... என்னைப்போலவே யோசிச்சுக் கேள்வி கேட்பினம் என... அது சரியாப்போச்சு:).

  ஹைஷ் அண்ணன் “வட” கிடைக்கவில்லையே என்பதற்காக, எல்லாத்தையும் படிக்காமல் விடக்கூடாது...:):).

  மிக்க நன்றி ஹைஷ் அண்ணன் வரவுக்கு.

  ReplyDelete
 26. கீதாச்சல் மிக்க நன்றி. இது அந்த மியா மியாப் பெட்டி இல்லை:), இது மியாவினுடைய பெட்டி:).

  மகனிடம் வாசித்துக்காட்டிவிட்டேன், புளுக்சில் இருக்கிறார்:).

  ReplyDelete
 27. வாணி... புல்லா.... அரிக்குதோ? உண்மைதான், அவர் அவ்வளவு நேர்மையாக எல்லாவற்றையும் திருப்பித் தந்தமையால், பின்பு அந்த பாக் கண்டெடுத்ததும், ஒருநாள் வைத்திருக்கவே, ஏதோ களவாடிவிட்டபொருள்போல கஸ்டமாக இருந்தது. திரும்பக் கொடுத்தபின்னரே மனதுக்கு நிம்மதியாக இருந்தது.

  ///நான் கேட்க நினைத்ததை ஹைஷ் அண்ணா கேட்டு விட்டார்.
  /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்களுமோ?:).

  உண்மை வாணி, இந் நாடுகளில்... மக்களுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள், கஸ்ரொமேர்ஸ்தான் அவர்களுக்கு முக்கியம். ஆனாலும் சில இடங்களில் பிரச்சினைகளும் நடந்திருக்கு. எல்லாம் அங்கு தொழில் புரிபவர்களைப் பொறுத்தது.

  மிக்க நன்றி வான்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 28. அதீஸ், நான் ஒரு முறை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று பொருட்கள் வாங்கினேன். வாங்கிய பின்னர் ஏன்டா வாங்கினேன் என்று ஏதோ ஒரு யோசனை. திருப்பி குடுக்க போனேன். கடையில் நின்றவர் இரண்டுக்கும் விலை போட்டு (இலவசமாக வாங்கியதற்கும் ) காசை தந்தார். நான் அவரிடம் ஒன்று இலவசமாக வந்தது. எனவே இதற்கு ஏன் காசு தந்தீர்கள் என்று கேட்டேன். அவர் மீண்டும் ஏதோ கணக்கு பார்த்து, அதே அளவு காசை மீண்டும் தந்தார். வேலைக்குப் புதுசோ தெரியவில்லை. நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் பரவாயில்லை போய் வா என்றார். ( எவ்வளவு காசு என்கிறீர்களா? $3 டாலர்கள் )

  ReplyDelete
 29. படங்களும் பதிவும் நன்றாக இருக்கிறது அதிரா!

  ReplyDelete
 30. வானதி.. அடுத்த வாட்டி, அத யூஸ் பண்ணி உடைச்சிட்டு திருப்பித் தந்து பாருங்கோ.. அதயும் கூட, வாங்கினாலும் வாங்கிக்குவாங்கோ..

  ReplyDelete
 31. அதீஸ்!!! பூட்ஸ் தெரியாது.. டெஸ்கோ தெரியும்...ஆனால் மதனி அங்க ப்ரோகிராமராக வேலைசெய்தார்கள்...
  எனக்கும் இங்க உள்ள கஸ்டமர் சர்வீஸ் பிடிக்கும்... பிடிக்காத இடங்களும் உண்டு...

  டபுள் டெக்கர் பஸ்... அய்... ஜாலி!!!
  பொந்தில் இருப்பது ஆராணும்??? வெறி கியூட்...

  ReplyDelete
 32. //9 July 2010 02:03
  அனாமிகா துவாரகன் said...
  நீங்கள் இவ்வளவு நல்லவரா? ஹி ஹி// உண்மைதான் பூஸ் இவ்வ்வ்ளோ நல்லவரா? பாலுக்கு காவல் இருப்பாரா?????

  ReplyDelete
 33. சந்து,
  //வானதி.. அடுத்த வாட்டி, அத யூஸ் பண்ணி உடைச்சிட்டு திருப்பித் தந்து பாருங்கோ.. அதயும் கூட, வாங்கினாலும் வாங்கிக்குவாங்கோ..//
  என்னை வம்பில் மாட்டி விடப்பார்க்கிற வேலை வாண்டாம். என் கணவருடன் நான் பிறகு குடும்பம் நடத்திய மாதிரி தான். அவர் எப்போதும் அரிச்சந்திரனின் கஸின் போல அவ்வளவு நேர்மை.

  ReplyDelete
 34. /அப்போ ஸ்பெயின் வெல்லுமாக்கும்:))./ஓ..அதிராக்கா,நீங்க ஓக்டோபஸ் ஆகிட்டீங்களோ இப்பம்? கிக்..கிக்..கி! ///
  ஜீனோ.... ஒக்ரபஸ் சொன்னதெதுவும் பிழையாகவில்லையாமே... அப்பூடித்தான் அக்கா சொல்வதும் கிக்..கிக்..கிக்....., ஒக்ரபஸ் அக்காவுக்குத்தான் சப்போட் என நினைக்கிறேன் பார்ப்போம்.

  ReplyDelete
 35. நீங்கள் இவ்வளவு நல்லவரா? ஹி ஹி/// அநாமிகா வாங்கோ..... நீங்களெல்லாம் சொல்லுவீங்களெனப் பார்த்தேன்(நான் நல்லவ என:)), இது நான் எல்லோ சொல்லவேண்டியிருக்கு... என்னைப்பற்றி..கிக்..கிக்..கீஈஈஈ.

  உண்மைதான் அநாமிகா. இங்கே முக்கால்வாசிக்கும் மேற்பட்ட வெள்ளை மக்கள் களவு, பொய் சொல்லமாட்டார்கள். அதனால் கடைக்காரர்களும் நம்புவார்கள். அதை சாட்டாக வைத்து எம்மவருக்கு “கள்ளமூளை” ப்பகுதி கொஞ்சம் பெரிசுதானே:), இப்படியான வேலைகள் செய்கிறார்கள்.

  அதிலும் Marks & Spencer என ஒரு பெரிய ஷொப் இருக்கு, விலையும் அதிகம், தரமானது. அவர்களுடைய ரூல்ஸ்.. குறிப்பிட்ட நாட்களுக்கும், லேபல் அறுந்தாலென்ன, பில் தொலைந்தாலும் திரும்ப வாங்கிவிட்டு, பணத்தை திருப்பிக் கொடுப்பார்கள். பெரும்பாலான கடைகள், திரும்ப வாங்குவார்கள் ஆனால் பணம் கிடைக்காது, மாற்றுப்பொருள்தான் வாங்கலாம்.

  இந்த M&S பணத்தை திருப்பிக் கொடுப்பதால் எம்மவர்கள் நிறையப்பேர், கோட் சூட் வாங்கி இன்ரவியூவுக்குப் போட்டுவிட்டு, திருப்பிக் கொடுத்திடுவார்கள். என்னைப் பொறுத்தவரை களவெடுத்துப் போடுவதற்கும், இதற்கும் என்ன வித்தியாசம் என்றுதான் நினைப்பேன்.

  இப்படியான செய்கைகளால், விரைவில் இக்கடைக்கும் ஏதும் மாற்றம் கொண்டுவந்திடுவார்கள் என்றே நம்புகிறேன். எம்மவருக்கு இது ஒரு வி”ளை”யாட்டாகத்தான் இருக்கு.

  மிக்க நன்றி அநாமிகா.

  ReplyDelete
 36. உங்களிடத்தில் பூட்ஸ் இல்லையெனில், வேறு பூட்ஸ் தானே இமா நினைவுக்கு வரும்...கிக்..கிக்..கீஈஈஈஈ.

  பப்பி எப்பவும் நல்ல மூட்லதானே இருக்கிறவர். டோராவிடம் கலைபட்டால் மட்டுமே, மாமரத்துக்கு கீழ இருந்து புலம்புவார்(பாடுவார்:)).

  மகனைக் கூப்பிட்டுப் பக்கத்தில் வைத்து வாசித்துக் காட்டினேன் இமா.... அப்படியே அவரதுமுகம் அன்றலர்ந்த செந்தாமரைபோல மலர்ந்தது தெரிந்தது.... அவ்வளவு புளுக்ஸ். என்னிடம் கேட்டார், சொக்கர் மச் பற்றியோ எழுதியிருக்கிறீங்கள் புளொக்கில் என?. என் மியாப்பெட்டியை எப்பூடி அவருக்குப் புரியவைப்பது?:).

  மியாவும் நன்றி இமா.

  ReplyDelete
 37. பாஸ்போட்,விசா இல்லாமல் பிரித்தானியாவை சுற்றிக்காட்டி விட்டீர்கள். /// சே.. சே... சே... ஸாதிகா அக்கா.... இதுவல்ல பிரித்தானியா... சிற்றியில்கூட எடுக்கவில்லை, சும்மா வெளிப்பகுதியில் எடுத்த படங்களே.

  உங்களுக்காக பிரித்தானியா பற்றி எழுதலாம் என நினைக்கிறேன், ஆனால் எழுதுவதை நினைக்கவே களைப்பாக இருக்கு:). பார்ப்போம். 200, 300 வருடங்களுக்கு முன், இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் இரு தனி நாடுகள். இலங்கை சிங்கள தமிழ் பிரச்சனைமாதிரி வாழ்ச்:) சண்டையாம்... பின்னரே ஒன்றாகி பிரித்தானியாவாகியது. இது இங்கிருக்கும் எம்மவர்கள் நிறையப்பேருக்கே தெரியாது.

  இப்பவும் ஸ்கொட்டிஸ் மக்களுக்கு இங்கிலாந்து மக்களைப்பிடிக்காது, அதேபோல்தான் அவர்களுக்கும்... சமீபத்தில் ஃபைபா சொக்கர் மச்சில் இங்கிலாந்து அணி விளையாடியபோது, ஸ்கொட்டிஸ் ஒருவர், ரெடியோவில் பேட்டி கொடுத்தார், அப்போ வெளிப்படையாகவே சொன்னார், நாங்கள் இங்கிலண்ட்டுக்கு சப்போட் பண்ணமாட்டோம்தானே என. இதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.... இவ்வளவு கோபம் இருக்கோ என்று.

  இப்படி நிறைய விஷயங்கள் சொல்லலாம், தனிப்பதிவாகப் போடுகிறேன்..விரைவில அல்ல:).

  மியாப் பெட்டியைத் திறப்பேன்... அடிக்கடி???

  மிக்க நன்றி ஸாதிகா அக்கா.

  ReplyDelete
 38. ஆ.... அம்முலு, நீங்கள் தமிழில் புரொபிசரோ எனச் சந்தேகம் வந்திட்டுதெனக்கு:)... இருபொருள்.... அடுக்குமொழிகள் எல்லாம் தாண்டவமாடுது...:).

  நான் மட்டுமில்லை, என் கணவரையும்.. தூசு தட்டிக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் ஏதும் சம்பவங்கள் நினைவுக்கு வந்தால் சொல்லுங்கோ என, ஒன்று நான் மறந்திட்டேன், அவர் ஞாபகப்படுத்தினார்... அடுத்த மியாப்பெட்டியில் வறு:)ம்.

  மியாவ்(பெட்டி)மரப்பொந்து ல இருந்து பார்க்கிற படம் பொருத்தம்.//// மியாவும் நன்றி. அதுக்காகாத்தான் “அவரை” அவசரமாக வரவழைத்தேன்...... நான் பூஸாரைச் சொன்னேன்.

  ///முளுவதும்=முழுவதும்//// ஓ.... இது “அங்கு” ஒருவரின் முளு:)ப்பெயர் சொல்லப்போய் மாட்டுப்பட்டேன், இப்போ எதுசரியெனத் தெரியாமல் குழம்பியபடிதான் எழுதினேன் மியாவும் நன்றி..... இனி மு”ளு”சாக திருந்திடுவேன் கிக்..கிக்....கீஈஈஈஈஈஈஈஈ.

  மகன் நன்றாக கீறி,எழுதி இருக்கார்.
  நீங்கள் ஸ்பெயினோ..கர்ர்ர்ர்ர்ர்///// தன்பாட்டில் என்னவோ எல்லாம் கீறுவார்கள், செய்வார்கள். பாராட்டினால் துள்ளிக்குதிப்பார்கள்.... பூஸாரைப்போல:).

  ஸ்பெயின் தோத்தால் கர்ர்ர்ர்ர்ர் சொல்லப்பூடாது ஓக்கை..... அதுக்காகத்தான் புத்தியா, கிட்னியை யூஸ் பண்ணி, நானும் இலாவும் கட்டிலுக்குக் கீழ இருக்கிறனாங்கள்..... கல்லிக்கில்லேதும் வராதெல்லோ:).

  //தப்புத்தப்பா நினைக்ககூடாது இமா..ஆ. /// உப்பூடிச் சொல்லுங்கோ அம்முலூ...... அதிராபோல அன்னம்போல இருக்கோணும் என்ன??? (காற்றுள்ளபோதே.... சொல்லிடோணும் நம்மைப்பற்றியும்:)..... இல்லாவிட்டால் ஆரும் சொல்லாயினம்....)).

  மியாவும் நன்றி அம்முலு.

  ReplyDelete
 39. மியாவ் பெட்டி பொருத்தமான பேர்..ஹி..ஹி.. /// மியாவும் நன்றி ஜெய்..லானி... இதுக்குத்தான் கிட்னியை யூஸ் பண்ணோனும் என்பது:).

  //கடி கம்மிதான்..// அது உண்மைதான், டென்ரிஸ்ட் சொல்லிட்டார், 4 நாட்களுக்கு வாய் தொறக்கப்பூடாதென்று:).... அதாலதான்...:).

  பூஸுக்கு மெமரி அதிகம் ரெண்டு மாசம் முன்ன சொன்னது இன்னும் நினைவில் இருக்கு/// சே..சே... ஜெய்..லானி, பயப்பூடாதீங்க, நான் கஜினிக்குத் தங்கை...:).

  //அனுபவமும் படங்களும் கூல்..ஆனா இங்க வெய்யில் 46 டிகிரி. /// ஆ... 46 ஆ??? இங்கே எப்பவாவது (ஜூலையில்)அருமையாக 23,24 க்குப் போகும் அதுக்கே வெக்கையெனச் சொல்லித் துடிப்பார்கள்..

  ஸ்கொட்லாந்து எப்பவுமே கூல்தான்.... பூஸாரைப்போல:).... ஆ... உப்பூடி முறைக்கவாணாம்...

  மியாவும் நன்றி ஜெய்..லானி.

  ReplyDelete
 40. ///கேட்கிறன், கேட்கிறன், க.கா.போறீங்கள். ;( /// ஆ.... இமா.. பப்ளிக்கில அம்முலுவைப் பார்த்து உப்பூடியெல்லாம் கேய்க்கப்பூடாது:))))))), ஆங் என்னால முடியயேல்லை....

  ஆ.... அம்முலூ உங்கட தமிழை வைத்தே ஒரு வலைப்பூ ஆரம்பிக்கலாமே.....

  ReplyDelete
 41. மேனகா மியாவும் நன்றி. பூட்ஸ் படம் தவிர, ஏனைய அனைத்தும் நான் எடுத்ததே.

  ReplyDelete
 42. வாணி ///வேலைக்குப் புதுசோ தெரியவில்லை. நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் பரவாயில்லை போய் வா என்றார். /// இதுதான் கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்குமாமே.

  இன்னொரு சிஸ்டமும் இருக்கு வாணி, திரும்பக்குடுக்கும் போது, பை வன் கெட் வன் பிறீ இல்லாமல் இருந்தால், மெசினில் காட்டாது, அவர்கள் பிரசெண்ட் நிலைமையைத்தான் கவனத்தில் எடுப்பார்கள்(சில இடங்களில்).

  கனடா, வோல் மாட்டில் ஒரு சூஸ் 18 டொலருக்கு வாங்கினேன், சில நாட்களின் பின்பு மாற்றக்கொண்டுபோனேன், அன்றைய விலை 12 டொலர்ஸ் ஆகிவிட்டது சூஸ், எனக்கு 12 டொலர்ஸ்க்குத்தான் மாற்றித்தந்தார்கள். சரியாக நினைவில்லை, பில்லைத் தொலைத்திருந்தேனோ தெரியாது.

  ReplyDelete
 43. மிக்க நன்றி மனோ அக்கா.

  ReplyDelete
 44. வானதி.. அடுத்த வாட்டி, அத யூஸ் பண்ணி உடைச்சிட்டு திருப்பித் தந்து பாருங்கோ.. அதயும் கூட, வாங்கினாலும் வாங்கிக்குவாங்கோ.. /// சந்தூஊஊ இது ரொம்ப ஓவர். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 45. எனக்கும் இங்க உள்ள கஸ்டமர் சர்வீஸ் பிடிக்கும்... பிடிக்காத இடங்களும் உண்டு...
  /// கரீட்டு இலா கரீட்டு...

  ///டபுள் டெக்கர் பஸ்... அய்... ஜாலி!!!
  பொந்தில் இருப்பது ஆராணும்??? வெறி கியூட்... // ஓம், பிரித்தானியாவில் டபிள் டெக்கர் அதிகம்தான்.

  வடிவாப்பாருங்கோவன்.... பால்வடியும் முகத்தைப்பார்க்கத் தெரியுதெல்லோ அது... பிரித்தானியப் பூஊஊஊஊஉஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...:)

  உஸ் அப்பா முடியல:).

  மியாவும் நன்றி இலா.

  ReplyDelete
 46. ///ஹைஷ்126 said...
  //9 July 2010 02:03
  அனாமிகா துவாரகன் said...
  நீங்கள் இவ்வளவு நல்லவரா? ஹி ஹி// உண்மைதான் பூஸ் இவ்வ்வ்ளோ நல்லவரா? பாலுக்கு காவல் இருப்பாரா?????///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), கண்ணைமூடிக்கொண்டு, வெளிப்படையாகப் பாலைக்குடிக்கும் பூஸ்ஸ்ஸ்ஸ் எவ்ளோ பெட்டர்... :))).

  இலா கெதியா அரக்கியிருங்கோவன்.... ஆபத்து கொரியரில வருதுபோலதெரியுது..... பயம்மாக்கிடக்கூஊஊஊஊஊஊ:).

  இதுக்குத்தன் காடியோலஜிஸ்ட்:) எனக்கு அப்பவே சொன்னார், பல்லைக்கடிக்காதே... வம்பாகிடப்போகுதென... இருப்பினும் விடுவேனோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

  ReplyDelete
 47. சந்து... நல்ல ஐடியா..:). உண்மைதான்,பில் இருந்தால், இங்கு சில இடங்களில் திரும்ப எடுத்தாலும் எடுப்பார்கள், ஆச்சரியப்படுவதுக்கில்லை, அவ்ளோ நல்லவர்களும் உண்டு.

  // ஒருநாளைக்கு அவர் எப்போதும் அரிச்சந்திரனின் கஸின் போல அவ்வளவு நேர்மை/// அப்போ பூஸின் கட்சி எண்டு சொல்லுங்கோ வாணி...

  வாணி ஆரும் என்னவும் செய்யட்டும், கோபிக்கட்டும், பொறாமைப்படட்டும், களவெடுக்கட்டும், அது அவரவர் பிஸ்னஸ்... நாம் எப்பவுமே நல்லதாக நடக்கவேணும்.. மனமறிந்து தவறு செய்திடாமல், முடிந்தவரை இருப்போம். அதிகம் பேசிவிட்டேனோஒ... எல்லாம் கண்ணதாசன் படுத்தும் பாடுதான்...

  ReplyDelete
 48. பூஸ்குட்டி.... ம். ம். ;)
  சரீ... எனக்கெதுக்கு ஊர்வம்ப்ஸ். ;) கிக் கிக் மியாவ்வ்வ்வ் ;)

  ReplyDelete
 49. இமா said...
  பூஸ்குட்டி.... ம். ம். ;)
  சரீ... எனக்கெதுக்கு ஊர்வம்ப்ஸ். ;) கிக் கிக் மியாவ்வ்வ்வ் ;)
  /// miiyaaaaaaaaav மீயாஆஆஆஆவ் மீயாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .... இதென்ன இது பூனைக்கு சவுண்டே மாறிப்போச்சே....:), ஓ... இமாவைக் கண்ட எபெக்ட்:):).... அது ஒன்றுமில்லை சந்தோசச் சிரிப்பூஊஊஊஊஊஊ.

  இமா அடிக்கடி வாங்கோ... ஓக்கை, முறைக்க வாணாம்... :).

  ReplyDelete
 50. மியாவ் பொட்டிக்குள்ளார எலி இருக்குமோன்னு பயந்துகிட்டே வந்தேன். நல்ல வேளை நல்ல விஷயமா போட்டு புல்லரிக்க வச்சுட்டீங்க :).

  ReplyDelete
 51. ஜெய்லானி said...

  @@@இமா--//கண்கலங்க வச்சுட்டீங்க மருமகனே!
  ட்..ட்..டிஷ்..யூ ப்ளீஸ். ;) //

  அப்ப டிஷ்யூ கம்பனி வேலையை விட்டுடீங்கலா...அதிஸ் எங்கிருந்தாலும் வரவும்..
  ~~~~~~~~

  அதிரா,உங்களுக்கு என்னை நினைவிருக்கும்னு நினைக்கிறேன். என் ப்ளாகில் ஒருவர் உங்களைத் தேடுகிறார்.வாங்க! :)

  அவ்வப்பொழுது உங்க ப்ளாகினை எட்டிப்பார்ப்பேன்..ஆனால் கமெண்ட் போடுவது இதுவே முதல்முறை.

  /எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. மிக்க நன்றி./ எழுதவெல்லாமில்லை,கீபோர்டில் தட்டுகிறோம்! கொஞ்சம் கைவலிக்கும்,ஆனால் உங்க நகைச்சுவைப்பதிவுகளைப் பார்க்கைல வலி காணாமப்போயிடுது!

  ReplyDelete
 52. கவி சிவா/// மியாவ் பொட்டிக்குள்ளார எலி இருக்குமோன்னு பயந்துகிட்டே வந்தேன்/// மியாப் பெட்டியினுள் எலி இருந்தாலும், உயிரோடயோ இருக்கும்:))). இனிமேல் பயப்பூடமல் வரோணும் ஓக்கை?:).

  மிக்க நன்றி கவிசிவா.

  ReplyDelete
 53. மகி வாங்கோ, நல்வரவு.
  //அப்ப டிஷ்யூ கம்பனி வேலையை விட்டுடீங்கலா...அதிஸ் எங்கிருந்தாலும் வரவும்../// ங்ங்ங்ங்ங்ங்ங்க? ங்ங்க? ஆள் எங்க?:))).

  அதிரா,உங்களுக்கு என்னை நினைவிருக்கும்னு நினைக்கிறேன். /// ம்ம்ம்ம் இருக்கு:).

  என் ப்ளாகில் ஒருவர் உங்களைத் தேடுகிறார்.வாங்க! :)//// என்னையும் ஒருவர் தேடுகிறாரோ?:), வந்து பார்க்கிறேன்..

  அவ்வப்பொழுது உங்க ப்ளாகினை எட்டிப்பார்ப்பேன்..ஆனால் கமெண்ட் போடுவது இதுவே முதல்முறை./// பறவாயில்லை, பார்ப்பேன் எனச் சொன்னதே சந்தோசம். மிக்க நன்றி.

  ///எழுதவெல்லாமில்லை,கீபோர்டில் தட்டுகிறோம்! கொஞ்சம் கைவலிக்கும்,ஆனால் உங்க நகைச்சுவைப்பதிவுகளைப் பார்க்கைல வலி காணாமப்போயிடுது! /// சந்திரிக்கா தைலம் பூசினாலும் வலி போயிடுமாம், இமாவின் மறு...மகன், ஜீனோ சொன்னவர்:).

  மிக்க நன்றி மகி வரவுக்கு. உங்களை இமாவின் உலகில் கண்டுதான் தெரியும். அதுக்குமுன் உங்களோடு கதைத்ததாக நினைவிலில்லை:(.

  ReplyDelete
 54. இமா said...
  ;)/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)(இது பூஸின் புன்னகைச் சவுண்டூஊஊஊஊஊ), டிஷ்யூ வேணுமே இமா?:).

  ReplyDelete
 55. //தைலம் பூசினாலும் வலி போயிடுமாம், இமாவின் மறு...மகன், ஜீனோ சொன்னவர்:)//

  Note this point well Mahi.

  ReplyDelete
 56. அதீஸ் பாட்டி, உங்களுக்கு வர வர ஞாபக மறதி அதிகமாகி கொண்டே போகுது. மகி தான் உங்கள் செல்லங்கள் இழையை தாங்கிப் பிடித்த தூண்களில் ஒருவர்.

  ReplyDelete
 57. ஞாபகப்படுத்திவிட்டதுக்கு நன்றி வானதி! /உங்கள் செல்லங்கள் இழையை தாங்கிப் பிடித்த தூண்களில் ஒருவர்./இது கொஞ்சம் ஓஓஓவரா இருக்கு!:)எனிவேஸ்,பேசி பலநாட்களானதால் மறந்திருப்பீங்க அதிரா! இட்ஸ் ஓகே!

  /சந்திரிக்கா தைலம் பூசினாலும் வலி போயிடுமாம்,/எனக்குத் தெரிந்து சந்திரி'க்'கா சோப்புதான் உண்டு.இந்தத் தைலம் எங்கு கிடைக்கும்?வாங்கி அனுப்பினீங்கன்னா,இன்னும் கொஞ்சம் எழுதுவோமில்ல,உங்க கமெண்ட்பாக்ஸ்-ல?? ;)

  /Note this point well Mahi. / ஓகே இமா,80பேஜ் நோட் போதுமா,இல்ல மூணுகுயர்நோட்டு வாங்கட்டுமா?:))))))

  ReplyDelete
 58. ;)
  அது என்ன //மூணுகுயர்நோட்டு//? மொனிட்டர்ஸ் கொப்பியா?

  ReplyDelete
 59. ஆஆஆஆஆ... துவக்கோடயே திரியிறாங்கப்பா...:), அதிராவை எங்கே சூட் பண்ணலாம் என்று.
  வாஆஆஆஆஆஅணீஈஈஈஈஈஈஈ வாணீஈஈஈஈ கேட்குதோ? வயசான காலத்தில கூப்பிட்டாலும் ஆருக்கும் கேட்காது.... நான் நன்றி சொல்லக் கூப்பிட்டேன்:).

  ReplyDelete
 60. வாங்கி அனுப்பினீங்கன்னா,இன்னும் கொஞ்சம் எழுதுவோமில்ல,உங்க கமெண்ட்பாக்ஸ்-ல?? ;)/// அப்பூடியோ சங்கதி? இது முன்னமே எனக்குத் தெரியாமல் போச்சே:), சந்திரிக்கா தைலம் குடுத்துக் குடுத்துத் தானோ, சிலர் 200,300 கொமெண்ட்ஸ் சேர்க்கினம்:)))).

  இதுக்குத்தான் சொல்றது மகிபோல பெரியவங்களையெல்லாம், கூப்பிட்டு புளொக்கிலயே பூட்டி வச்சிருக்கோணும் என்று:).

  தம்பி, மச்ல வின் பண்ணின களைப்பில இருக்கிறார், பிறீஈஈஈஈஈ டெலிவரி பண்ணுற அண்ணனுக்கும், ஏதோ உப்புத் தூக்கிக் களைப்பாம், 2 நாளில எப்பூடியும் தைலம் வந்திடும், அதுவரைக்கும் சுடுதண்ணி பூசிப்பூசிக் கொமெண்ட்டைப் போடுங்கோஒவன் பிளீஸ்ஸ்ஸ்.

  ///ஓகே இமா,80பேஜ் நோட் போதுமா,இல்ல மூணுகுயர்நோட்டு வாங்கட்டுமா?:)))))) //// ஆஆஆஆஆ உப்பூடித்தான் உப்பூடித்தான்... சந்தேகத்தை மனதில் வச்சிருக்காமல், உடனே கேட்கிற பிள்ளைதான் முன்னேஏஏஏஏஏஏஏஏறும்:).

  அதுசரி மகி, உந்த வாணியாமே.... ஆரது?:)))))))))))) பூ..... எ.... ஸ்ஸ்ஸ்ஸ்.

  ReplyDelete
 61. ஆராவது பண்டிதர்கள் இருந்தால், தயவுசெய்து, சிரமம் பாராமல் இங்கு வந்து, ரீச்சரின் சந்தேகத்தைத் தீர்த்துவிடும்படி, மியாவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாங்களெல்லாம் மாணவர்கள்:).

  //இமா said...
  ;)
  அது என்ன //மூணுகுயர்நோட்டு//? மொனிட்டர்ஸ் கொப்பியா?///

  ReplyDelete
 62. இம்ஸ், கிட்டத்தட்ட அது போல தான்.

  அதீஸ், நித்திரையில் இருந்த மனுசரை கூப்பிட்டு போட்டு... இது என்ன பழக்கம்?. எனிவே தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி நன்றி சொன்னமைக்கு நன்றி.

  ReplyDelete
 63. வாணீஈஈஈஈஈ வாணீஈஈஈஈஈஈஈஈஈ.... ஆ.... நீங்க நித்திரையோ?:), ஒன்றுமில்லை நன்றி ஒன்று சொல்லலாமே எனக் கூப்பிட்டேன்... ஓக்கை நீங்க நித்திரை கொள்ளுங்கோ, நான் குழப்பேல்லை:))))).

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.