நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Sunday, 18 February 2018

நியூயோர்க்கைச் சுத்திப் பார்க்கப் போறோம்...

ரு இடத்துக்குப் போவது.. போய்ப்  படமெடுப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை:).. அதை செட் பண்ணி, தொகுத்து எடுத்து புளொக் இல் போடும் வேலை இருக்கே.. அப்பப்பா.. இதை விட தேம்ஸ் இல் குதிப்பது எவ்ளோ ஈசி தெரியுமோ?:)..

stop stop!!!.. முதலில் இந்த 3D glasses ஐப் போட்டுக் கொண்டு பாருங்கோ:) அப்போதான் அயகா இருக்கும்:)..
சரி சரி இம்முறை நிறையப் படங்கள்.. வீடியோ எல்லாம் எடுத்து வந்திருக்கிறேன் உங்களுக்காக.. அதனால கதைப்பதைக் குறைச்சுப் போட்டுப் படம் பார்ப்பமோ?:)... இதன் ஒரு தொகுதிப் படங்கள் பார்க்க இங்கின போய் வாங்கோ.. பிளீஸ்:)..

இது சிற்றிக்குள் இருக்கும் ஒரு பேமஸ் ஆன ரோட்.. Times Square எனச் சொல்லப்படுகிறது.. இங்கு பகல் இரவு எப்ப போனாலும் தீர்த்தக்கரை போல சனத் திரள்... இப்படங்கள் எடுத்த நேரம் இரவு 10.30-12.30  ..
நாம் தங்கியிருந்த ஹோட்டல் இதுக்கு அருகில் என்றமையால் அடிக்கடி நடந்து போய் வர முடிந்தது..
இதில் ஒரு சிறப்பு என்னவெனில், உயர்ந்த கட்டிடங்களின் சுவர்கள் முழுக்க விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருக்கும், அதனால பளாச் பளாச் என:) ஒரே வெளிச்சம்:)..


இது அங்கு நாங்க எடுத்த வீடியோவை யூ ரியூப் இல் போட்டிருக்கிறேன்..
-------------------------------------------------------------------------------------------

City சுற்றுலா பஸ் இல், சுற்றியபோது எடுத்தவை..இந்தக் கட்டிடத்தைப் பாருங்கோ.. பாதியில் முறிஞ்சிருப்பதுபோல இருக்குதெல்லோ.. எப்படித்தான் கட்டினார்களோ..
இதுவும் நாம் எடுத்த ஒரு வீடியோ


-----------------------------------------------------------------------------------------------------
எங்கள் பிள்ளைகளுக்கு ஃபுட்போல் தான் அதிக ஆர்வம்.. அதிலும் சின்னவருக்கு சரியான விருப்பம், எனவே நியூயோர்க்கில் இருக்கும் பேமஸ் ஆன யங்கி ஸ்ரேடியம், ரெயின் எடுத்துப் போய்ப் பார்த்தோம், உள்ளே போக முடியவில்லை, தாமதமாகி விட்டது, அதனால் வெளியே பார்த்து விட்டு, அருகில் இருந்த ரெஸ்டோரண்ட்டில் சாப்பிட்டு விட்டு வந்தோம்.

இதில் இன்னொன்று சொல்லோணும்.. அந்த சிட்டியில் இருக்கும் ஏரியாக்கள் மட்டுமே அழகும் கட்டிடங்களும், இந்த ஸ்ரேடியம் இருப்பதும் நியூயோர்க்கில் தான், ஆனா அந்த மெயின் இடம்.. மன்ஹற்றன் இலிருந்து 40 நிமிடம் ரெயின் என நினைக்கிறேன், ஸ்ரேடியம் இருக்கும் இடம் பார்த்தால் ஏதோ கிராமப் புறம்போல இருந்துது.. இது நியூயோர்க்கா என எண்ண வைத்தது.


------------------------------------------------------------------------------
குருவே.. இது என்ன ஓவர் சிரிப்பு?:) அதிரா நியூயோர்க் பார்த்தது உங்களுக்கு சிரிப்பு வருதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
------------------------------------------------------------------------------------------------
து என்ன எனப் புரிகிறதோ? இதுதான் அந்த பிளேன் ஆல் இடிக்கப்பட்ட Twin Towers கட்டிடத்தில் ஒன்று...  கொஞ்ச இடைவெளியில் இரு கட்டிடங்களும் இருந்திருக்கின்றன, இப்போ அவை இரண்டையும் தரை மட்டமாக்கி இப்படி பென்னாம் பெரிய நீர் வீழ்ச்சி செய்து விட்டிருக்கிறார்கள்... இதனை சுற்றிவர இருக்கும் சுவரில்... அன்று இறந்தோரின் பெயர்கள் அழகாக பொறிக்கப் பட்டிருக்கு.. அதில் நிறைய இந்திய பெயர்களும் இருந்தன.. சிங்.. ரெட்டி இப்படி.

 இப்போ அதனை ஒரு கட்டிடமாகக் கட்டி விட்டிருக்கிறார்கள்.. உச்சிவரை ஏறிப் பார்த்தோம்.

படங்கள் அதிகமாகி விட்டமையால்:) மிகுதி தொல்லை பின்னர் தொடரும்:)..
வாவ்வ்வ்வ்வ் என்னா அயகு:) என்னா அயகு:) நான் படங்களுக்குச் சொன்னேன்:)

ஊசி இணைப்பு:

நாளைக்கு என்ன மெனுப் போடலாம்?:)
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
சொல்லிவிட்டுச் சிந்திப்பவர்கள்.. மனிதர்கள். சிந்தித்து விட்டுச் சொல்பவர்கள் ஞானிகள்... அதிரா ஞானியாகிட்டேன்ன்ன்ன்ன்ன்:))
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}

98 comments :

 1. Replies
  1. படங்கள் அனைத்தும் ரசிக்க வைத்தன....

   சில படங்கள் தேவகோட்டையை நினைவு படுத்தின...
   தொடர்கிறேன்

   Delete
  2. காணொளிகள் கண்டேன் ஸூப்பர்

   Delete
  3. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ... ஆஅங்ங்ங்ங் கில்லர்ஜி தேன் இம்முறை 1ஸ்ட்டூஊஊஊஊ:) முதலாவதா வருபவருக்கு ஒரு ரிக்கெட் நியூயோர்க் க்கு குடுக்க இருந்தேன் பட் கில்லர்ஜி இருப்பதே நியூயொர்க்கில்தானே பிறகு ரிக்கெட் குடுத்தால் ஏதோ இன்சல்ட் பண்ணுவதுபோலாகிடுமோன்னோ:))...

   //சில படங்கள் தேவகோட்டையை நினைவு படுத்தின...///

   ஹா ஹா ஹா இருக்காதா பின்ன:).. எனக்கொரு டவுட் கில்லர்ஜி.. தேவர்கோட்டையைப் பார்த்து நியூயோர்க் வந்துதோ? இல்ல நியூயோர்க்கைப் பார்த்து தேவர்கோட்டையைக் கட்டினார்களோ:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
  4. அம்மா தாயே.... ஊரின் பெயரில் 'சாதி'யைக் கொண்டுவந்துவிடாதீர்கள். ஏற்கனவே தமிழ்'நாட்டில் 'சாதியினால்' ஏகப்பட்ட பிரச்சனை. இதுல, 'தேவகோட்டையை' 'தேவர் கோட்டை' 'முதலியார் கோட்டை' என்று சொல்ல ஆரம்பித்துவிடாதீர்கள்.

   கில்லர்ஜி ஏன் ஒன்றும் சொல்லலைனு தெரியலை.

   Delete
  5. ///ஊரின் பெயரில் 'சாதி'யைக் கொண்டுவந்துவிடாதீர்கள். ஏற்கனவே தமிழ்'நாட்டில் 'சாதியினால்' ஏகப்பட்ட பிரச்சனை///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்கள் நாட்டில் சாதி உண்டு ஆனா எப்பவும் சாதிச்சண்டை என வந்ததாக நான் அறியவில்லை... சாதி மாறித் திருமணம் முடிச்சால்க்கூட, அப்படியே துலைந்து போ என கையை விட்டிடுவார்களே தவிர.. சண்டைக்கெல்லாம் போனதாக நான் அறியவில்லை.. அதனால அது எனக்குப் புரிவதில்லை:)).. புளொக்கில் ஒருக்கால் ஆரம்பிச்சால் நல்லா இருக்குமே சண்டை:)) எனக்கு முன் கூட்டியே அறிவிச்சிடோணும் மீ ஓடிப்போய் ஒளிச்சிடுவேன் ஹா ஹா ஹா:))..

   அது தேவ + கோட்டை என்பது இடையில் க் போட்டுச் சொல்லோணும் போல இருக்குதே.. அதனாலதான் தேவர்கோட்டையாத்தான் இருக்குமெனக் கண்டு பிடிச்சேன்:)..

   //கில்லர்ஜி ஏன் ஒன்றும் சொல்லலைனு தெரியலை.//

   அதுவோ:) அது கில்லர்ஜி க்கு அதிரா எண்டாலே பயம்:).. ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சு பாலைவன மண்ணில புதைச்சிடுங்கோ:) அல்லது ஒட்டகத்தை சாப்பிடப் பண்ணிடுங்கோ பிளீஸ்ஸ்:)..

   Delete
 2. அந்தப் பாடல் கேட்டதில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் இது புதுப்படம் இன்னும் வரலைனு நினைக்கிறேன் திவியதர்ஷினி கதாநாயகியாக வரும் படம்...கௌதம் வாசுதேவின் படம்...இது வெளிவர இருக்கிறது....கௌதம் எங்கள் ஃப்ளாட்டின் தொட்டடுத்து உள்ளார். அவர் ஊரில் இருந்தால் பார்க்கலாம்...குழந்தைகள், மனைவி தினமும் பார்க்கலாம்...வே வி படத்தில் கமலின் வீடாக வருவது அவர் வீடுதான். அதில் ஒரு இடத்தில் கமல் அட்ரஸ் சொல்லுவார் அதுவும் எங்கள் தெரு அட்ரஸ்...இங்கு பல ஸீன்கள் எடுத்தார்கள். அப்போ மகனும் இங்கு இருந்ததால் நாங்கள் பார்த்தோம்..

   கீதா

   Delete
  2. ஸ்ரீராம் பாடல் வீடியோ பார்த்தீங்கதானே!! பார்த்ததுமே சொல்லாமல் சொல்லிடலாம் இது டிப்பிக்கல் கௌதம் மேனனின் படம் என்று ...இப்படியான லைட்டிங்க், இப்படியான ஸீன் ஒரு பாடல் இல்லாத அவர் படம் ஒன்றும் இல்லை....எல்லாப் படங்களிலும் உண்டு...இத்தனைக்கும் அவரது படங்கள் வே வி தவிர எதுவும் பார்த்ததில்லை. அதுவும் அப்போது மகன் இருந்ததால் போன படம்...

   கீதா

   Delete
  3. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. கீதா விளக்கமா சொல்லியிருக்கிறா.. இது பாட்டு மட்டும்தான் வெளிவந்திருக்குது போல.. டிடி க்காகவே இப்பாடலைப் போட்டேன்.. கொஞ்சம் சினிமா என்பதை விட ட்ராமா பார்ப்பதைப்போல இருக்கு நல்லா இருக்குதெல்லோ.

   Delete
  4. //கௌதம் எங்கள் ஃப்ளாட்டின் தொட்டடுத்து உள்ளார்//

   ஓ கீதா அப்படியோ? அப்போ நீங்க ஒரு சான்ஸ் கேட்டுப் பார்க்கலாமே படத்தில?:) அப்பூடியே அதிராவுக்கும் ஒரு ஹீரோயின் பிளேஸ் போட்டுத்தரச் சொல்லுங்கோ.. ஹீரோ இப்போதைய ஆட்களா போட டொல்லுங்கோ:) ஹா ஹா ஹா:)..

   எனக்கு இடம் தெரியவில்லை கீதா, மனோ சிங்கர் அவரின் வீட்டு ரோட்டில்தானாம் அம்மாக்கள் போனபோது வீடு எடுத்து தங்கியிருந்தார்கள்.

   Delete
 3. எல்லோருக்கும் ஒரு 3d க்ளாஸ் இலவசமாக அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஹையோ 3டி போட்டுப் பார்க்கச் சொன்னது தப்பாயிடுச்சே:) இதுதான் ஜாட்ட்ட்ட்டென:) படம் பார்க்காமல் பொயிடப் போறாரே ஸ்ரீராம்:)..

   Delete
 4. சிற்றி என்றால் சிட்டி தானே? கண்டுபிடித்துவிட்டேன்! மதுரை டவுன்ஹால் ரோட், சென்னை ரெங்கநாதன் தெரு போல இருக்கு! (கூட்டம் மட்டும்)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஸ்ரீராம் சிற்றி எனக்கு உடனே புரிந்துவிட்டதே!!! மன்ஹாட்டன் - மன்ஹாற்றன்....ட வரும் இடம் எல்லாம் ரீ றீ யாக மாரும்...டீ - றீ...டீச்சர் - ரீச்சர்...அதிராவின் டிக்ஷனரி இப்போ நேக்கு அத்துப்படியாக்கும்!!! ஹா ஹா ஹா ஹா

   கீதா

   Delete
  2. ///
   ஸ்ரீராம்.Monday, February 19, 2018 12:29:00 am
   சிற்றி என்றால் சிட்டி தானே? கண்டுபிடித்துவிட்டேன்!//

   ஆவ்வ்வ்வ்வ்வ் எங்கே என் செக்:)) அந்தப் பபபபபபச்சைப் ... பாம்பல்ல:) கர்:) பொன்னாடையை எடுத்துக் கொண்டு ஓடிவாங்கோ:)) ஸ்ரீராம் கண்டு பிடிச்சுட்டார்ர்ர்ர் ஹா ஹா ஹா:)..

   //மதுரை டவுன்ஹால் ரோட், சென்னை ரெங்கநாதன் தெரு போல இருக்கு! (கூட்டம் மட்டும்)//

   ஓ கேள்விப்பட்டதுண்டு யூ ரியூப்பில் அப்பப்ப பார்த்ததுண்டு..

   Delete
  3. //அதிராவின் டிக்ஷனரி இப்போ நேக்கு அத்துப்படியாக்கும்!!! ஹா ஹா ஹா ஹா

   கீதா//

   ஹா ஹா ஹா கீதா... டீச்சர் என்பதை நாம் ரீச்சர் எனத்தான் சொல்லுவோம்.. ஆனா நான் இமாவை செல்லமா றீச்சர் என்பேன் ஹா ஹா ஹா:).

   Delete
 5. காணொளியில் கட்டிடங்களைவிட, மனிதர்களின் முகபாவங்களை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. படங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. அது இதில் இருக்கும் எல்லோருமே கிட்டத்தட்ட சுற்றுலாப் பயணிகளாகத்தான் இருக்கும்.. அதிகமாக சைனீஸ் உம் இந்திய சிறீலங்கா முகங்களையுமே பார்க்க முடிஞ்சுது:)..

   Delete
 6. ஊசி இணைப்பு உண்மையைச் சொல்கிறது! மெனு முடிவு செய்தாச்சா?!!

  ReplyDelete
  Replies
  1. //மெனு முடிவு செய்தாச்சா?!!//

   ஹா ஹா ஹா அது முடிவில ஃபிஸ் ஐப் போட்டு பிரட்டிப் பிரட்டி பாபகியூ பண்ணிடுவேன்:)) ஹா ஹா ஹா என் செக்:) ஐச் சொல்லல்லே:) இப்ப பாருங்கோ எனக்கு ஊஸ்:) அடிச்சு எடுத்து வருவா:))

   ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. எப்போப் போனீங்க நியூயார்க்? ஜொள்ளவே இல்லை? அங்கே மிசிசிபியில் குதிக்க நேரம் பார்த்தாச்சா? ஆனா நியூயார்க்கில் அது ஓடலையே! ஹட்சன் தானே அங்கே? அதிலேயே குதிச்சுடுங்க! நல்லாவே இருக்கும்னு சொன்னாங்க! :)))))

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

   ஹா ஹா ஹா..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் உரிமை இல்லாத இடத்தில குதிப்பனோ:).. குயின் அம்மம்மாட தேம்ஸ்ல மட்டும்தேன் குதிப்பனாக்கும்:)[அங்கு மட்டும்தானே சொல்லி வச்சிருக்கிறேன் உடனே பாய்ஞ்சு காப்பாத்திடோணும் என:)]..

   கீசாக்கா இண்டைக்குக் குதிச்சதைப்போல அப்பப்ப எங்கள்புளொக்கில்தான் ஜம்ப் ஆவேன் பீ கெயார்ஃபுல்:).. ஹையோ இது எனக்கு ஜொன்னேன்:)..

   அதிராவை எங்காவது குதிக்கப் பண்ணினாத்தான், தான் எ.புளொக் ல 1ஸ்ட்டா வர முடியும் என:) நினைச்சே குதிக்கச் சொல்லுறாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

   Delete
 8. காணொளியை எல்லாம் மத்தியானமா வந்து பார்த்துக்கறேன். படங்கள் எல்லாம் யார் எடுத்தது? நீங்க இல்லை போல! அதான் நல்லா வந்திருக்கு!

  ReplyDelete
  Replies
  1. ///படங்கள் எல்லாம் யார் எடுத்தது? நீங்க இல்லை போல! அதான் நல்லா வந்திருக்கு!//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது குளோஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்:) இல்ல கீசாக்கா:)) எனக்கு கீரை வடைதான் கண்ணுக்குள் நிக்குது:) ஹா ஹா ஹா:).

   Delete
 9. ஊசி இணைப்பு நல்லா இருக்கு! அவ்வப்போது கொஞ்சம் நல்லாவும் ஜிந்திக்கிறீங்க! :)

  ReplyDelete
  Replies
  1. ///அவ்வப்போது கொஞ்சம் நல்லாவும் ஜிந்திக்கிறீங்க! :)//

   ஹா ஹா ஹா முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈ:) இன்று எங்கள் புளொக்கை கோட்டை விட்டதன் தாக்கம் தெரியுதூஊஊஊஊஊ:) ஹையோ ஹையோ:).. கீசாக்கா 4 மணிக்கு எலாம் வச்சு:) 5 மணிக்கே கஞ்சி காஞ்சிப்போட்டு ரெடியாகுங்கோ:) இல்லை எனில் ஈசியா தினைப் பாயாசம் குடிச்சு முழிப்பிருந்தே முந்திடுவார் துரை அண்ணன்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி கீசாக்கா.

   Delete
 10. படங்கள் அதிகமாக இருந்தாலும், அலுப்பு தட்டாமல் ரசிக்க வைத்தன.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி. இன்னும் போட நினைச்சு பின்பு நிறுத்திட்டேன்.. ஒரேயடியாகப் போட்டு முடிச்சிடலாம் என நினைச்சேன் முடியல்ல:).

   Delete
 11. இன்றைய ஊசி நறுக் என்றிருக்கின்றது..

  மற்றபடிக்கு படங்களும் பதிவும் அழகு .. அருமை..
  மகா குருவின் படத்தைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ...

   ஹா ஹா ஹா என் கிரேட் குருவைப் பார்த்து நீங்களும் மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி... மிக்க நன்றி.

   Delete
 12. ஏங்கலையும் படத்தின் உடாக நியூயோர்க் அலைத்து சென்றமை நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மொகமட் வாங்கோ நலம்தானெ.. நல்ல நித்திரைத் தூக்கத்தோடு வந்து விடாமல் கொமெண்ட் போட்டிருக்கிறீங்க என்பது எழுத்து மிஸ்ரேக்ஸ் பார்க்க தெரியுது:).. மிக்க நன்றி.

   Delete
  2. தம்பி மொகமட் உங்கள் பக்கம் ஒரு கொமெண்ட் போட்டேன் கொஞ்சம் பார்க்கவும்.

   Delete
 13. முதல்ல இருக்கும் பாடல் லேட்டஸ்ட் பாடல். இந்த ஆல்பம் பற்றி டிவியில் சொன்னபோதே எனக்கு ஆர்வம் பார்க்கவேண்டும் என.நான் பல தடவை பார்த்தும்,கேட்டாச்சு. நல்லாயிருக்கு இப்பாடல்.
  நன்றி அதிரா. நாங்களும் நியூயோர்க் செல்லவேண்டுமென இருந்தோம். செலவில்லாமல் சுத்திகாட்டீட்டிங்க. அழகாயிருக்கு சிட்டி. ஊசி இணைப்பு அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ.. எனக்கு டிடி யை ரொம்பப் பிடிக்கும்... அதனாலயே இப்படம் பார்க்கோணும் என இருக்கிறேன் பார்ப்போம் கதை எப்படியோ தெரியாதே..

   //நாங்களும் நியூயோர்க் செல்லவேண்டுமென இருந்தோம். செலவில்லாமல் சுத்திகாட்டீட்டிங்க. ///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நிட்சயம் போய்ப் பாருங்கோ.. ஒவ்வொரு சிற்றியும் ஒவ்வொரு அழகு என்பதைப்போல அங்கும் கட்டிடங்கள் ஒரு பிரமாண்ட அழகு.

   Delete
 14. அட..சிறப்பா சுத்தி காட்றீங்க..

  உண்மை தான் அதிரா ..சுற்றுலா சென்று ஆசையாய் படம் எடுத்து ...இங்க ப்ளாக் போடுறது கொஞ்சம் பெரிய வேலை தான்......

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ.. பெரிசிலும் பெரிய வேலை... நிறைய ரைம் எடுக்குது.. அதிலும் மனமும் நல்ல உற்சாகமாக இருக்கும்போதுதான் படங்களை தேடி செலக்ட் பண்ண முடியும்..

   மிக்க நன்றி.

   Delete
 15. உங்கள் புண்ணியத்தால் நியூயோர்க்கை சுற்றிவர முடிந்தது. போட்டோக்கள் அழகாக உள்ளன.

  அப்புறம் Trump ஐ சந்திச்சது பற்றி ஒண்ணுமே எழுதலியே? ஏன்? :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ வாங்கோ..

   ட்றம்ப் அங்கிள் வருவார் விரைவில்.. மிக்க நன்றி.

   Delete
 16. துளசி: படங்கள் எல்லாம் அழகா இருக்கு அதிரா. காணொளி வழியா போக முடியாத ந்யூயார்க்குக்கு கூட்டிட்டுப் போய் என்னையும் சுத்திப் பாக்க வைச்சதுக்கு மிக்க நன்றி. கேட்டிருக்கிறேன் நியூயார்க்கில் மக்கள் கூட்டம் அதிகம் அதுவும் அங்கு இந்தியர்களின் ஏரியாவே இருக்காமே....

  அது சரி மதுரைத் தமிழன் அங்குதான் இருக்கிறார். பாத்தீங்களா?

  கீதா: ஒரு இடத்துக்குப் போவது.. போய்ப் படமெடுப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை:).. அதை செட் பண்ணி, தொகுத்து எடுத்து புளொக் இல் போடும் வேலை இருக்கே.. அப்பப்பா.. இதை விட தேம்ஸ் இல் குதிப்பது எவ்ளோ ஈசி தெரியுமோ?:)..//

  அப்படிச் சொல்லுங்க அதிரா....படங்களை செட் செய்து அப்லோட் பண்ணுவதற்குள் ஹையோ என்றாகிடுது....அதுவும் எங்கள் வீட்டு நெட் பாருங்கோ கொஞ்ச நேரம் வந்ததும் அதிராவின் பதிவு கண்ணில் படவும் ஓடி வந்து கமென்ட் போடும் போது நெட் கட்டாகி விட்டது. நீங்க நியூயார்க்கைச் சுத்திக் காட்டினாலும் இந்த இணையம் சுத்த விடமாட்டேங்குதே!!! ஹா ஹா ஹா ஹா...துளசி அவரது மொபைலில்...பிள்ளையார் இருந்த இடத்திலேயே அம்மை அப்பனைச் சுத்தினது போல சுத்தி வந்துட்டார் ஹா ஹா ஹா ஹா...

  துளசியும் கேட்டார்...நானும் கேட்கிறேன் 3 டி கண்ணாடி இல்லாம எப்படிப் பார்க்கறது?!! ஹா ஹா ஹா அதிரா இப்பல்லாம் ஒரு கண்ணை மூடினால் 3 டி போலத் தெரியும் படங்கள் எல்லாம் வருதே வாட்சப்பில் அது போல போடுவது கடினமோ...நான் முயற்சி செய்து பார்க்கப் போறேன்...வாட்சப்பில் வந்ததும் எனக்கு நம் ப்ளாகில் போடணும்னு ஆசை பார்க்கணும்...
  னெட் வ்னததும் தான் இந்தக் கமென்டே போகும் அப்புறம் தான் அடுத்த கமென்ட் போடணும்....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..

   நியூயோர்க் க்குள்ளே எங்கு பார்க்கினும் blacks தான் வேர்க் பண்ணுகிறார்கள் 90 வீதமும் அங்கு அவர்கள்தான் கடைகளில்.. மோல்களில் காண முடிஞ்சுது... மற்றும்படி ரோட்டில் பஸ் இல் எங்கும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளே.. நாம் போனது யூலையில் என்பதால் வக்கேசன் ரைம் தானே..

   //அது சரி மதுரைத் தமிழன் அங்குதான் இருக்கிறார். பாத்தீங்களா? ///
   ஹா ஹா ஹா பஸ் இல் போகும்போது நடுவிலே ஒருவர்:) சுற்றிவர 4,5 பேர்:) நிற்கக் கண்டோம்:) அது அநேகமாக அவராகத்தான் இருந்திருக்கோணும்:)).. அந்த 4,5 பேரும் ஆரெனக் கேட்டிடாதீங்கோ:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி துளசி அண்ணன்.

   Delete
  2. வாங்கோ கீதா வாங்கோ..

   //அப்படிச் சொல்லுங்க அதிரா....படங்களை செட் செய்து அப்லோட் பண்ணுவதற்குள் ஹையோ என்றாகிடுது....அதுவும் எங்கள் வீட்டு நெட் பாருங்கோ கொஞ்ச நேரம் வந்ததும் அதிராவின் பதிவு கண்ணில் படவும் ஓடி வந்து கமென்ட் போடும் போது நெட் கட்டாகி விட்டது. //

   ஹா ஹா ஹா எனக்கு தெரியும் கீதா, இலங்கையில் இருந்தபோது இந்த நெட் ஆல் நாமும் கஸ்டப்பட்டோம்.. சரியான எரிச்சலாக இருக்கும்..கோபம்தான் வரும்.. ஆனா நீங்க இவ்ளோ பொறுமையா எல்லோருக்கும் கொமெண்ட் போடுறீங்க.

   இங்கு எங்களுக்கெல்லாம் சரியான ஃபாஸ்ட் நெட் .. பக் பக்கென பாயும்.. அதனால இது பழகி விட்டது.. கஸ்டம் புரிவதில்லை.

   //துளசியும் கேட்டார்...நானும் கேட்கிறேன் 3 டி கண்ணாடி இல்லாம எப்படிப் பார்க்கறது?!! ஹா ஹா ஹா //
   அது கேட்டது ஸ்ரீராம் கீதா:).. தெரியாமல் ஒரு வசனம் சொல்லிட்டேன்:) இப்போ வாபஸ் வாங்க முடியல்ல:) கண்ணாடி இல்லாமல் படம் பார்க்காமல் நழுவப் பார்க்கினமே எல்லோரும் கர்ர்:))

   இப்போ எங்கட கொம்பியூட்டரிலும் 3டி செட்டிங் என வந்திருக்குது கீதா, நான் அதிகமா அதில் மினக்கெடவில்லை.. செய்து பார்க்கோணும்..

   Delete
 17. ஊசி இணைப்பு யதார்த்தம். அது சரி என்ன மெனு?
  பூஸார் கூல்
  அந்த ட்வின் டவரில் உச்சி வரை ஏறியுமா மதுரைத் தமிழன் கண்ணுக்குப் ப்டலை?!!! ஹா ஹா ஹா ஹா..
  மன்ஹாட்டன் நம்மூர் மக்கள் இருக்கும் பகுதி என்றும் கேட்டிருக்கேன்..…கதைகளில் வரும் பகுதியும் கூட.
  நியூயார்க் என்றாலே பில்டிங்க் தான்……மக்கள் கூட்டமும். அது போல பே ஏரியாவில் சான்ஃபரான்ஸிஸ்கோ மக்கள் அதிகம் இருக்கும் ஏரியா. மிக மிக அழகான ஊர். சிறிய ஊர் சுற்றிலும் கடல்…ரோட் எல்லாம் பயங்கர ஸ்டீப்பாக ஏறி இறங்கும்…..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ////ஊசி இணைப்பு யதார்த்தம். அது சரி என்ன மெனு?
   பூஸார் கூல்///

   ஹா ஹா ஹா ஃபிஸ் ஐப்போட்டு பிரட்டீஈஈஈஈஈஈப் பிரட்டி பாபகியூ தேன்ன்ன்ன்:)) ஹையோ நான் கீழே தெரியும் கோல்ட் ஃபிஸ் ஐச் சொல்லல்லே:)..

   ///அந்த ட்வின் டவரில் உச்சி வரை ஏறியுமா மதுரைத் தமிழன் கண்ணுக்குப் ப்டலை?!!//
   ஹா ஹா ஹா எப்படியோ மிஸ் ஆகிட்டார்:)..
   மன்ஹற்றன் தானே மெயின் பிளேஸ் கீதா.. அங்கு இண்டியன் ரெஸ்டோரன்ஸ் உம் இருந்துது..

   நீங்க சுத்திப் பார்த்திருப்பீங்கதானே.. மிக்க நன்றி கீதா.

   Delete
  2. கீதா அதிரா நீயூயார்க் வந்த போது நான் வேற நாட்டிற்கு போயிட்டேன் காரணம் நம்ம ஏஞ்சல்தான் சொன்னாங்க மதுர அவங்களை நேரில் மட்டும் பார்த்துடாதீங்க அவங்க உங்களை ஹட்சன் நதியில் தூக்கி போட்டுடுவாங்க எத்றகும் ஜாக்கிரதை என்றதால் நான் நாட்டை விட்டே ஒடிட்டேன்

   Delete
  3. வாங்கோ ட்றுத் வாங்கோ..

   ///கீதா அதிரா நீயூயார்க் வந்த போது நான் வேற நாட்டிற்கு போயிட்டேன் ///
   ஹா ஹா ஹா ஸ்கொட்லாந்துக்கு அம்பேரிக்கா:) பயப்புடுதே:)) ஆஆஆஆஆ வெற்றி வெற்றீஈஈஈஈஈஈ:)..

   Delete
 18. என்னது நியூயோர்க்கில் அதிராவா நல்லவிசயம்
  இரவுக்கு வந்து பார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மேஜரே வாங்கோ... ஹா ஹா ஹா வந்து பாருங்கோ.. மிக்க நன்றி சீராளன்..

   Delete
 19. ஹலோவ் மியாவ் :) எங்களுக்கு இந்த வாரம் ஸ்கூல் லீவ் :) ஜாலி ஜாலி ஜாலியா ஜாலி :)

  // அதை செட் பண்ணி, தொகுத்து எடுத்து புளொக் இல் போடும் வேலை இருக்கே.. அப்பப்பா.. இதை விட தேம்ஸ் இல் குதிப்பது எவ்ளோ ஈசி தெரியுமோ?:)..//

  கிகிகிஈ உண்மைத்தேன் :) என் ஐ பெடில் எக்கசக்க படங்கள் 2 வருஷம் முன்னாடி எடுத்ததே இன்னுமிருக்கு

  ஸ்ஸ்ஸ் இருங்க பதிவுக்குள் வரேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ...

   //ஹலோவ் மியாவ் :) எங்களுக்கு இந்த வாரம் ஸ்கூல் லீவ் :) ஜாலி ஜாலி ஜாலியா ஜாலி :)///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 34762859872341:)..

   நான் மெனு ரெடி பண்ணிட்டேன்ன்ன்ன்ன்:)..

   Delete
 20. / சிறப்பு என்னவெனில், உயர்ந்த கட்டிடங்களின் சுவர்கள் முழுக்க விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருக்கும், அதனால பளாச் பளாச் என:) ஒரே வெளிச்சம்:)..//
  அந்த தெரு அப்டியே எங்க ரங்கநாதன் தெரு மாதிரி இருக்கு :)
  ஆல்சோ விளம்பரங்கள் நான் முந்தி கல் ஹோ நா ஹோ படத்தில் பார்த்தேன் ஷாருக்கும் ப்ரீதியும் நடக்கும்போது அழகா இருக்கும் :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஓ அதைத்தான் ஸ்ரீராமும் சொல்லியிருக்கிறார்.

   Delete
 21. / மன்ஹற்றன் இலிருந்து 40 நிமிடம் ரெயின் என நினைக்கிறேன், ஸ்ரேடியம் இருக்கும் இடம் பார்த்தால் ஏதோ கிராமப் புறம்போல இருந்துது.//
  ஆமாம் மியாவ் சில இடங்கள் கன்ட்ரி சைட் இப்படித்தான் இருக்கும் நகரத்துக்கு அரை மணி தூர தொலைவில் லண்டன் பக்கம் கூட இருக்காம்

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம்... நடிவில மட்டும் சொல்ல முடியாத பில்டிங்ஸ்.. தூரப் போனால் கொஞ்சம் கிராமப் புறம்போலவும்.. ஊத்தையாகவும் இருந்துது. அந்த ஏரியா கொஞ்சம் கள்ளர் பயம் எனவும் சொன்னார்கள்.. கொஞ்சம் பயந்து கொண்டே கவனமாப் போய் வந்தோம்.

   அதேபோல நியூயோர்க் ரெயினும் ஹையோ.. எங்கட ஊர் ரெயினும் ஸ்டேசனும் எவ்ளோ அழகு தெரியுமோ.. இது ஆஆஆஆஆஆஆதி காலத்து ஸ்ரேசனும் ரெயினும்:)..

   Delete
 22. படங்கள் நல்லா இருக்கு. ஆனா எல்லா மெட்'ரோவிலும் இரவு இதுமாதிரிதான் இருக்கும். அடுத்த முறை நியூயார்க் அல்லது வேறெங்கும் போவது வரை இடுகை போடும்படியாக படங்களாக எடுத்துக் குவித்திருப்பீர்கள்.

  ஒவ்வொன்றாக போடுங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ.. அந்த வானளவு உயர பில்டிங்கில்.. பெரிய பெரிய அட்கள் பளாச் பளாச் எனப் போவது ஒரு வித்தியாசமான அழகா இருந்துது.

   //அடுத்த முறை நியூயார்க் அல்லது வேறெங்கும் போவது வரை இடுகை போடும்படியாக படங்களாக எடுத்துக் குவித்திருப்பீர்கள்.//

   ஹா ஹா ஹா ஃபிரான்ஸ், ஸ்பெயின் படங்களே போட்டு முடிக்கவில்லை:) விட்டு விட்டேன்:).. ஆனா உண்மையில் இங்கு போட்டு வச்சமையால் பல படங்கள் சேஃப் ஆ இருக்கு.

   ///ஒவ்வொன்றாக போடுங்க.//
   ஒரேயடியாக ஒரே மூச்சில் போட்டு முடிச்சிடோணும் எனப் போடுகிறேன் முடியுதில்ல:)).. நிறைய இடங்கள் இருக்கே:))

   Delete
 23. 3D கண்ணாடியைப் போட்டுக்கிட்டுத்தான் பார்த்தேன். அது அளவுக்கு அதிகமாக அதிரா செய்த கீரை வடையைச் சாப்பிட்டு வயிறு வீங்கின பூனை மாதிரிதான் என் கண்ணுக்குத் தெரியுது.

  ReplyDelete
  Replies
  1. ///அதிரா செய்த கீரை வடையைச் சாப்பிட்டு வயிறு வீங்கின பூனை மாதிரிதான்///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது சமீபத்தில் நீங்க பார்த்த கீசாக்காவின் கீரை வடையை நினைச்சுச் சொல்லுறீங்க:))..

   ஹையோ தெரியாமல் ஜொள்ளிட்டேன்:) கண்ணாடியைக் கழட்டிப் போட்டுப் பார்க்கவும் பீஸ்ஸ்ஸ்ஸ்:)).. ஹா ஹா ஹா.. இப்போ எதுக்கு ரொம்பவும் பிஸியாகிட்டீங்க போல இருக்கு.. இயர் எண்ட் என்பதாலா? [Tax].

   மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 24. ஆவ் உலவிரவு ஜீவிஎம் :) ரீசண்டா வெளியியிட்ட்ட பாட்டு தானே .செம கலக்கல் .இதில் டிடி ikea கப்பில் டீ குடிக்கிறார் :)
  சில இடங்களில் டிடியை போட்டு ஓல்ட் அப்டின்னலாம் கமெண்ட் போட்டிருக்குங்குங்க என்னமோ இதுங்களுக்கு வயசே ஆகாத மாதிரி .ஷி லுக்ஸ் கோர்ஜியஸ் :)

  ReplyDelete
  Replies
  1. டிடி நல்ல வடிவுதானே.. உண்மையில் நடிகைகளை விட டிடி அழகுதான்.. ஆனா அவ மரி பண்ண முன்னமே படம் நடிக்க கூப்பிட்டவையாம் அப்போ இவ நான் நடிக்க வரவே மாட்டேன் என்றிட்டா.. அப்போ போயிருந்தால் நிட்சயம் நல்ல இடம் கிடைச்சிருக்கலாம், ஆனா இது மரி பண்ணை.. இப்போ நடிப்பது பார்க்க கொஞ்சம் கஸ்டமாக இருக்குதுபோல.

   இன்னொன்று இதில் டிடி யை பார்க்க ஒரு ஹீரோயினாக தெரியவில்லை.. அதாவது மேடையில் எப்படி டிடி ஒருவரை ஹக் பண்ணுவாவோ, சிரிப்பாவோ அப்படியே இதில் செய்கிறா... ஒரு எமோசனலான ஹக் ஓ சிரிப்போ இல்லை... ஹீரோயின் என வந்திட்டால் கொஞ்சம் கூடுதலாக ஃபீலிங்ஸ் ஐக் காட்டி நடிக்கோணும். அதுக்கு அவ திருமணம் முடிச்சு பின்பு நடிக்க வந்தமையால் கொஞ்சம் கூச்சம் இருக்கலாமோ என எண்ண வைக்குது..

   யேஸ் இதில் சாறியில் சூப்பரா இருக்கிறா..

   Delete
 25. வீடியோவில் ஒரு குரல் மியவ்னு கேட்ட மாதிரி இருந்தது எனக்கு மட்டுமா ??

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ் கேட்டுதா கேட்டுதா?:) அது ட்றுத்தான் எங்காவது அங்கு ஒளிச்சிருந்து குரல் குடுத்திருபார்:) ஹா ஹா ஹா.

   Delete
 26. அந்த டைம்ஸ்கொயரில் நான் காணாம போய்டுவேனோனு பயமாருக்கு :)
  மிட்டாய் பிங்க் கலர் சட்டை போட்டு போனா கண்டுபிடிக்கலாம் :))
  படங்கள் எல்லாம் அழகு மியாவ் அது சரி உங்க குருவை காட்டி எதுக்கு எங்களை மிரட்டறீங்க :)

  ஊசிக்கும் ஞானிக்கும் கொஞ்சம் நேரத்தில் வரேன் :)

  ReplyDelete
  Replies
  1. //அந்த டைம்ஸ்கொயரில் நான் காணாம போய்டுவேனோனு பயமாருக்கு :)
   மிட்டாய் பிங்க் கலர் சட்டை போட்டு போனா கண்டுபிடிக்கலாம் :))//

   ஹா ஹா ஹா உண்மைதான்.. சன நெரிசல்.. கந்தசாமி கோயில் தேர்த்திருவிளாபோலவே இருந்துது.. அந்த நெரிசலுக்குள்ளும் நான் கே எஃப் சி தான் வேணும் என அடம்பிடிச்சு.. தேடிப்போய்ச் சாப்பிட்ட கதை பின்னர் டொல்லுவேன் ஹா ஹா ஹா:)..

   //அது சரி உங்க குருவை காட்டி எதுக்கு எங்களை மிரட்டறீங்க :)//
   அவர் சிரிக்கிறாரெல்லோ அதைப் பார்க்கப் பயமாவா இருக்குதூஊஊஊ:)..

   //ஊசிக்கும் ஞானிக்கும் கொஞ்சம் நேரத்தில் வரேன் :)//
   ஹா ஹா ஹா மீ ஞானியாகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).

   Delete
 27. இன்னொரு விஷயம் உங்க கேமரா ஸ்கொட்லாந்து கனடா ரொம்ப அழகா ஆனா அமெரிக்காவை கொஞ்சம் அழகு குறைவா காட்னாப்ல இருக்கு எனக்கு .மே பி ஒன்லி பில்டிங்ஸ் என்பதாலோ

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கரெக்ட்டாப் பிடிச்சிட்டீங்க அஞ்சு... அது என் ஜொந்தக் கதை:) யோகக் கதை சொன்னேனெல்லோ:).. கொம்பியூட்டர் கார்ட் டிஸ்க் போனதால பல படங்கள் போயே போச்ச்ச்ச்:).. இது நம் எல்லொரிடமுமங்கங்கு இருந்தவைகளைக் கலக்ட் பண்ணி எடுத்தேன்.. அவை அழகா தெலிவா இருக்கு.

   ஆனா சிலதை.. சொந்த பந்தத்துக்கு அனுப்பியிருந்தோம்.. அவற்றை திரும்ப எடுத்துப் போட்டது எல்லாமே கலங்கி இருக்கு ஏனோ தெரியல்ல...:(.. இப்போ திரும்ப செக் பண்ணுங்கோ.. சிலது நல்ல தெளிவு சிலது கலங்கல்:). மிக்க நன்றி அஞ்சு.

   Delete

 28. fish or chicken :) உங்களுக்கு ரெண்டுமே இல்லை இதோ இதுதான் எப்பவும் :)
  [im]https://2.bp.blogspot.com/-sv5Gz_aU9es/WorwNFY8aXI/AAAAAAAAMOU/mql6zGFVn1ETRKLOGMfYE7EbOIq7tBMRgCLcBGAs/s320/12243283_503714043130479_5047856342495255082_n.jpg[/im]

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே:) இன்னும் ஊஸ் வரல்லியே என நினைச்ச்சேன்..:)) ஹா ஹா ஹா:).. பத்திரமா வச்சிருந்து எடுத்து வந்திருக்கிறீங்க.

   Delete
  2. அது ஒண்ணுமில்லை மியாவ் :) காலைல லாப்டாப்பில் கமெண்ட்ஸ் போட்டு அப்புறமா டெஸ்க் டாப் போயி அங்கே பத்திரமா ஸேவ் செஞ்சி வச்சிருந்ததை எடுத்து வந்தேன் :)..எஸ் பத்திரமா வச்சிருக்கேன் உங்களுக்காகவே :)

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதை எல்லாம் பத்திரப் படுத்துங்க:) ஆனா அதிராவை ஆராவது புகழ்ந்தா மட்டும் அடுத்த செக்கண்ட் ஏ மறந்திடுறீங்க:))

   Delete
 29. அப்புறம் அந்த சாஞ்சு வச்ச டொமினோஸ் பில்டிங் தான் இப்போ எல்லா இடத்திலும் கட்றாங்க .எங்க டவுனில் ஸ்டூடன்ட் அக்கோமடேஷன் ஒன்னு இதே டிசைனில் இருக்கு .நானா அந்த பில்டிங் பக்கம் கூட க்ராஸ் செய்யமாட்டேன் :)

  ReplyDelete
  Replies
  1. //நானா அந்த பில்டிங் பக்கம் கூட க்ராஸ் செய்யமாட்டேன் :)//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹலோ மிஸ்டர்:).. எமன் அங்கிள் பாசக்கயிற்றோடு வந்து கமோன் ஃபிஸ் :) எண்டால் போகத்தானே வேணும்:)).. நோ அங்கிள் மீ வரமாட்டேன் எனச் சொல்ல முடியுமோ?:) அதனால பயப்புடாதீங்க:) பிளீஸ் நாளைக்கு ஒருக்கால் அதன் அருகில் நிண்டு செல்வி:) எடுத்து அனுப்பவும்:)) ஹா ஹா ஹா..

   Delete

 30. வணக்கம் !

  அத்தம் ஒளிரும் அரும்பொழு தாகும்
  அவனியில் நடந்தால் அதிரா - அவள்
  நித்தம் ஒளிரும் நியுயோர்க் நகரில்
  நிலவாய் நடந்தாள் புதிரா !

  சொல்லும் செயலும் சுடர்ந்திட வைக்கும்
  சோதரி தன்னின் சுயங்கள் - அங்கே
  அல்லும் பகலும் அறிந்தவை காட்டும்
  அழகுறும் படத்தின் நயங்கள் !

  சித்தம் இனிக்கச் சிந்தனை தருவாள்
  சிற்றம் பலமே ஆட - தினம்
  புத்தம் புதிதாய்ப் புன்னகை தருவாள்
  பூவாய் எடுத்துச் சூட !

  வாசிப் போரின் மனத்தை வெல்வாள்
  வரிகள் தமிழின் பாகு ! - நல்
  ஊசிக் குறிப்பால் உண்மைகள் சொல்வாள்
  உணர்ந்தே மனிதன் ஆகு !  ///சொல்லிவிட்டுச் சிந்திப்பவர்கள்.. மனிதர்கள். சிந்தித்து விட்டுச் சொல்பவர்கள் ஞானிகள்... அதிரா ஞானியாகிட்டேன்ன்ன்ன்ன்ன்:))//

  அவ்வ்வ்வவ் நான் ஆவியாகிட்டேன் ...

  என்னடா இந்தக் கிறுக்கன் காதலர்தினப் பதிவில் எதையும் கிறுக்கலையே என்று எண்ணவேண்டாம் ...அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையே ஹா ஹா ஹா

  அத்தனையும் அருமை வாழ்த்துகள் மியாவ் இதை எழுதத் தொடங்கும் முன்னே பாடலைப் ப்ளே பண்ணினேன் இன்னமும் சுற்றிட்டே இருக்கு அதை லேட்டா பார்க்கிறேன் இப்போதைக்கு இம்புட்டுத்தான் ..........

  ஆமா பூனைக்குக் கண்ணாடி போட்டது யார் ,? இனிப் பூனை கண்ணை மூடிட்டுப் பால்குடிக்கத் தேவையில்லை போல ! இல்லையா ?

  ஆமா இந்தத் தமனா சிறுக்கி எங்கே போட்டாள் ? காணலியே வெகு நாளா
  கண்டவர்கள் பஞ்சாயத்துக்குத் தெரியப்படுத்தவும்

  ReplyDelete
  Replies
  1. பாடல் ரொம்ப நல்லா, எப்போதும்போல் வந்திருக்கு. இங்கு 'அத்தம்' என்பது 'அஸ்தமனம்','ஒளியில்லா இருள்' என்ற அர்த்தத்தில் வருகிறது என்று நினைக்கிறேன்.

   நல்ல ஓசை நயம். சர்வ சாதாரணமா வார்த்தைகள் வந்து விழுந்திருக்கு.

   பாடல் அதிராவுக்காக எழுதியிருப்பதால்,
   சிற்றம் பலமே ஆட - ஆமாம்.. அவர்கள் கொஞ்சம் வெயிட் போட்டவர்கள் என்று ஏஞ்சலின் சொல்லிக்கொண்டே இருப்பார்களே. அதனால் சிற்றம்பலம் ஆடத்தான் செய்யும்.

   வரிகள் தமிழின் பாகு ! - இது அதிராவின் எழுத்தைச் சொல்கிறீர்கள். டூ டூ மச்.. ஆனா இந்த உண்மையை வெளிப்படையாச் சொல்லமுடியுமா? அதனால் நீங்கள் சொல்வதையே நான் ஏற்றுக்கொள்கிறேன்.

   Delete
  2. ஆஆஆஆவ்வ்வ் கவித கவித அதுவும் அதிராவைப் புகழ்ந்து அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) நன்றி மேஜரே:).. இக்கவிதை பார்த்து பாலைவனத்திலகூட புகை வருதே ஹா ஹா ஹா:)).

   //அவ்வ்வ்வவ் நான் ஆவியாகிட்டேன் ...
   //
   ஹா ஹா ஹா சிரிச்சு முடியல்ல:))..

   //என்னடா இந்தக் கிறுக்கன் காதலர்தினப் பதிவில் எதையும் கிறுக்கலையே என்று எண்ணவேண்டாம் ...அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையே ஹா ஹா ஹா///

   காதல் கவிதை எண்டால் உங்களுக்கு சோகமாகத்தானே எழுத வரும் சீராளன் கர்ர்ர்:))

   //ஆமா பூனைக்குக் கண்ணாடி போட்டது யார் ,? இனிப் பூனை கண்ணை மூடிட்டுப் பால்குடிக்கத் தேவையில்லை போல ! இல்லையா ?///

   ஹா ஹா ஹா பிறகு பால் கறுப்பா தெரியும்:) பாலில ஆரோ விசம் வச்சிட்டினம் என கத்திக் கேக்கும் ஹையோ ஹையோ:)..

   ///ஆமா இந்தத் தமனா சிறுக்கி எங்கே போட்டாள் ?//

   அச்சச்சச்சோஓ:) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:)) உங்கள் தமிழ்ப்பாவின் ரசிகர்:) தமனாவின் தீஈஈஈஈஈஈஈஈவிர ரசிகர் தெரியுமோ:)) ஹா ஹா ஹா:).. ஓ நீங்க நம்மட தமனாக்காவைச் சொன்னீகளோ?:)).. மீ என்னமோ நினைச்சுட்டேன்:).. அவ இனி வருவாவோ வரமாட்டாவோ அந்தப் முச்சந்தி முனீஸ்வரருக்கே வெளிச்சம்... எல்லோரும் பாஸ்வேர்ட் மறந்திடப்போகினம்:))..

   மிக்க நன்றி சீராளன்.. சொன்னபடி திரும்ப வந்திட்டீங்க கவிதையோடு.

   Delete
  3. ///இங்கு 'அத்தம்' என்பது 'அஸ்தமனம்','ஒளியில்லா இருள்' என்ற அர்த்தத்தில் வருகிறது என்று நினைக்கிறேன்.///

   அது நெல்லைத்தமிழன் சித்திரைக்கு முதல் வரும் ...பெளர்ணமி நிலவு:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சு:))... அத்த நட்சத்திரமாக்கும்:)..

   //பாடல் அதிராவுக்காக எழுதியிருப்பதால்,
   சிற்றம் பலமே ஆட - ஆமாம்.. அவர்கள் கொஞ்சம் வெயிட் போட்டவர்கள் என்று ஏஞ்சலின் சொல்லிக்கொண்டே இருப்பார்களே. அதனால் சிற்றம்பலம் ஆடத்தான் செய்யும்.///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விடுங்கோ விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ.. இப்பவே ஓடுகிறேன் தேம்ஸ்க்கு:).. ஆஹா இண்டைக்காவது அதிரா குதிக்கப்போறா எனத்தானே எதிர் பார்க்கிறீங்க:) அதுதான் இல்லை:)) அஞ்சுவைத் தள்ளி விடப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).

   ///வரிகள் தமிழின் பாகு ! - இது அதிராவின் எழுத்தைச் சொல்கிறீர்கள். டூ டூ மச்.///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் ஜொன்னனே:) அதிராவை ஆரும் புகழ்ந்திடக்கூடாதே:))....

   அது ஒரு கவிஞருக்குத்தானே புரியும் :) இன்னொரு கவிஞரின்{இது நாந் தேன்ன்ன்ன்ன்:).. சொல்லாட்டில் புரியாதே கர்:))} அழகு தமிழ்:)) ஹையோ மீ ஓடிப்போய் முருங்கியில ஏறி இருந்திடப் போறேன்ன்ன்:))

   Delete
  4. வணக்கம் நெல்லைத்தமிழன் ஐயா !

   //நல்ல ஓசை நயம். சர்வ சாதாரணமா வார்த்தைகள் வந்து விழுந்திருக்கு.//

   அன்புக்கு நன்றி இவை எல்லாம் ஒரு ஓசையைத் தழுவி எழுதுவதால் வார்த்தைகள் தானாக வருகின்றன மீண்டும் நன்றிகள் !

   ///வரிகள் தமிழின் பாகு ! - இது அதிராவின் எழுத்தைச் சொல்கிறீர்கள். டூ டூ மச்.///

   ஹா ஹா ஹா உண்மைதான் டூ மச் தான் இருந்தும் எவரது மனதும் புண்படாத வார்த்தைகள் எல்லாமே தேன் பாகுதான் அதனால்தான் அப்படிச் சொன்னேன் நாகரிகமான வார்த்தைகளால் ஒருவரைத் திட்டுவதிலும் பார்க்க சாதாரணமான வார்த்தைகளால் ஒருவரைப் புகழ்வது மேலானது இல்லையா ?

   //பாடல் அதிராவுக்காக எழுதியிருப்பதால்,
   சிற்றம் பலமே ஆட - ஆமாம்.. அவர்கள் கொஞ்சம் வெயிட் போட்டவர்கள் என்று ஏஞ்சலின் சொல்லிக்கொண்டே இருப்பார்களே. அதனால் சிற்றம்பலம் ஆடத்தான் செய்யும்.//

   சத்தியமா எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை ஐயா ஹா ஹா ஹா

   பாடல் ரொம்ப நல்லா, எப்போதும்போல் வந்திருக்கு. இங்கு 'அத்தம்' என்பது //'அஸ்தமனம்','ஒளியில்லா இருள்' என்ற அர்த்தத்தில் வருகிறது என்று நினைக்கிறேன்.//

   அத்தம் என்பது அஸ்தம் என்னும் நட்சத்திரத்தைக் குறிக்கும் அது மிகவும் ஒழி பொருந்திய நட்சத்திரம் என்பதைத் தாங்களும் அறிவீர்கள் !

   முடிந்தவரை தவறுகள் இன்றி எழுத முயல்கிறேன் ஐயா தவறுகள் இருப்பின் பொறுத்தருள்க என்னோட எல்லாக் கவிதைகளையும் பட்டை தீட்டும் தங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் நன்றி !

   Delete
  5. வணக்கம் மியாவ் !

   /////இங்கு 'அத்தம்' என்பது 'அஸ்தமனம்','ஒளியில்லா இருள்' என்ற அர்த்தத்தில் வருகிறது என்று நினைக்கிறேன்.///

   அது நெல்லைத்தமிழன் சித்திரைக்கு முதல் வரும் ...பெளர்ணமி நிலவு:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சு:))... அத்த நட்சத்திரமாக்கும்:)..//

   ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை எவ்வளவோ கற்றிந்த மனிதர் நெல்லைத்தமிழன் அவரின் தமிழ் அறிவுக்கு முன்னால் நான் எல்லாம் சாதாரணம் அப்படி இருக்கு அவருக்குத் தோணாத விதத்தில் அத்தம் என்பது நட்சத்திரம்தான் என்று எப்படிச் சரியாக் கண்டுபிடித்தீங்க ஐம் ஆடிப்போயிட்டேன் அதிரா வர வர உங்கள் இரசனையும் புரிதலும் என்னை
   இன்னும் சிந்திக்க வைக்கிறது வாழ்த்துகள் வாழ்க நலம் !

   ஒருவரை வாழ்த்தி எழுதும் போது அமங்கலச் சொற்கள் வரக்கூடாது என்பது என் குருநாதரின் கட்டளை அதனால்தான் அஸ்தமனம் என்னும் பொருள் அதில்
   சேராவண்ணம் அத்தம் என்ற நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு மட்டும் எழுதினேன்

   //மிக்க நன்றி சீராளன்.. சொன்னபடி திரும்ப வந்திட்டீங்க கவிதையோடு.//

   நேரம் இருப்பின் நிழலாய்த் தொடர்வேன்

   நன்றி வாழ்க நலம் !

   Delete
  6. //அத்தம் என்பது அஸ்தம் என்னும் நட்சத்திரத்தைக் குறிக்கும் அது மிகவும் ஒழி பொருந்திய நட்சத்திரம் என்பதைத் தாங்களும் அறிவீர்கள் !

   மன்னிக்கவும் ஒழி அல்ல ஒளி !

   Delete
  7. ஆஹா... அஸ்தம் என்று எனக்குத் தோன்றாமல் போய்விட்டதே. நல்லா இருக்கு.

   அதிராவுக்கும் நிறைந்த தமிழறிவு உண்டு. அதை முன்பெல்லாம் வெளிக்காட்டுவார்கள் (மூதுரை போன்றவற்றிலிருந்து வரிகளைக் கோடிகாண்பித்து).She is very talented, but jovial.

   வாழ்த்துகள் சீராளன்

   Delete
  8. @சீராளன்//
   /////வரிகள் தமிழின் பாகு ! - இது அதிராவின் எழுத்தைச் சொல்கிறீர்கள். டூ டூ மச்.///

   ஹா ஹா ஹா உண்மைதான் டூ மச் தான்///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்:)) விடுங்கோ விடுங்கோ மீ காசிக்குப் போவது உறுதீஈஈஈஈஈ:))

   Delete
  9. @சீராளன்
   //அவருக்குத் தோணாத விதத்தில் அத்தம் என்பது நட்சத்திரம்தான் என்று எப்படிச் சரியாக் கண்டுபிடித்தீங்க ஐம் ஆடிப்போயிட்டேன் அதிரா வர வர உங்கள் இரசனையும் புரிதலும் என்னை
   இன்னும் சிந்திக்க வைக்கிறது //

   ஹா ஹா ஹா அது அந்த .. பிறப்பில் கணிக்கும் நட்சத்திரங்கள் எல்லாம் நேக்குத் தெரியுமாக்கும்:) அதனால ஜொன்னேன்:)).. ஆனா முழுநிலவா இளிரும் என்றெல்லாம் ச்ச்ச்சும்மாதான் எடுத்து விட்டேன்ன்.. அட பொருந்திட்டுதே ஹா ஹா ஹா:))..

   மிக்க நன்றி.

   Delete
  10. @நெ.தமிழன்
   ///அதிராவுக்கும் நிறைந்த தமிழறிவு உண்டு. அதை முன்பெல்லாம் வெளிக்காட்டுவார்கள் (மூதுரை போன்றவற்றிலிருந்து வரிகளைக் கோடிகாண்பித்து).She is very talented, but jovial.///

   ஹா ஹா ஹா மியாவும் நன்றி:)..

   //அதை முன்பெல்லாம் வெளிக்காட்டுவார்கள் (மூதுரை போன்றவற்றிலிருந்து வரிகளைக் கோடிகாண்பித்து).///
   இருப்பினும்.. இந்த வசனம் எங்கினமோ இடிக்குதே கர்:)) அப்போ இப்போ வெளிக்காட்டுவதில்லையோஓஓஓஓ விடுங்கோ திரும்பவும் மீ காசிக்குத்தான் போகப்போறேன்..:)..

   உண்மையில் நெல்லைத்தமிழன் உங்கள் இந்தக் கொமெண்ட்டை மொபைலில் பார்த்தவுடன்.. என் வாய் நுனியில் டக்கென வந்த பாடல் வசனம்..

   “பத்தினியை நம்ப வைக்கப் பல காலம் பாடுபட்டேன்ன்ன்ன்.. சத்தியமே புரியவில்லை அவருக்கு”...

   ஹா ஹா ஹா .. மீக்கும் டமில் தெரியும் எனப் புரிய வைக்க எவ்ளோ கஸ்டப்படவேண்டிக் கிடக்கூஊஊஊஊ:)).. நேக்கு டமில்ல டி ஆக்கும்:)).. ஹா ஹா ஹா.

   Delete
 31. வணக்கம் அதிரா!..

  வெள்ளை மனத்தாள் அதிராவின் பதிவு
  வெள்ளி நிலவாய் ஒளிர்கிறது!
  கொள்ளை அழகாய்க் காட்சிகளும் கண்கள்
  கொள்ளாக் கனவை வளர்க்கிறது!

  தொற்றித் தொடரும் காணொளிகள்! உள்ளம்
  தொட்டிட மகிழ்வும் முகிழ்க்கிறது!
  முற்றிய ஞானியின் குறிப்பதுவோ எம்மை
  முக்தி நிலைக்கே அழைக்கிறது!

  குட்டிச் சிறுவன் கோலமுடன் சீராளன்
  கெட்டிக் காரப் பாவலனே!
  இட்டமொடு நானும் வாழ்த்துகிறேன்! விரைந்து
  எட்டுகவே சிகரத்தை எளிதினிலே!

  அழகிய நியூயோர்க் நகரச் சுற்றுலாக் காட்சிப் பதிவுகள்!
  அத்தனையும் சிறப்பாக இருக்கு. உங்கள் பதிவால் ரிக்கற் காசு மிச்சம் அதிரா...:))
  இப்படியே இன்னும் பல ஊர்க் காட்சிகளையும் போடுங்கோ. பார்த்திடுவோம்..:)

  டி டியின் பாடல் காட்சியும் நன்றாக இருக்கிறது. இப்படி வந்திருக்கிறது எனப் பிள்ளைகள் சொன்னார்கள்.
  இங்குதான் பார்த்தேன்.

  பதிவுடன் படங்களும் ஊ..சி இணைப்பும் மிக அருமை!
  பகிர்விற்கு நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் அதிரா!

  அருமையான வாழ்த்துக் கவிதைப் படைப்பு சீராளன்!
  உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இளமதி வாங்கோ.....

   ////வெள்ளை மனத்தாள் அதிராவின் பதிவு///
   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஹையோ நாளைக்கும் நெல்லைத்தமிழனின் நிம்மதி போச்சே:)) ஹா ஹா ஹா:)).. இதில வெள்ளை மனம் எண்டால்... அழகிய, தூய, பால்போல, மென்மையான, கியூட்டான, அன்பான, பண்பான எனப் பொருள் படுமாக்கும்:)) ஹையோ இப்பூடி வியக்கம்:) குடுக்காட்டில் நெல்லைத்தமிழன் வந்து ஏதும் ஏடாகூடமாக ஜொள்ளிடுவார்ர்:)) பின்பு அதிராவின் இமேஜ் என்ன ஆவுறதாம்?:)) ஹா ஹா ஹா:)..

   அழகிய கவிதையில் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி இளமதி.

   //இப்படியே இன்னும் பல ஊர்க் காட்சிகளையும் போடுங்கோ. பார்த்திடுவோம்..:)
   //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா..

   மிக்க நன்றி இளமதி.. பிஸியாக இருப்பினும் கவிதையுடன் வந்தமைக்கு.

   Delete
  2. வணக்கம் இளமதி அக்கா !

   நல்லாத்தானே போய்ட்டு இருக்கு அதில எதுக்கு என்னையும் புகழ்ந்து எழுதுறீங்க ஹா ஹா ஹா முதல் இரண்டு பாடல்களும் சும்மு அள்ளுது நெஞ்சை ஆனால் மூணாவது பாடலில் என்னையும் வாழ்த்தி எழுதுகையில் வண்ணக் குழிப்பு நெகிழ்ந்து கொஞ்சம் இனிமை குறைகிறது வை திஸ் கொலைவெறி கா !

   பாவலன் என்னைப் பாடினாய் அன்பால்
   பைந்தமிழ் இனித்திடவே - தமிழ்
   காவலன் ஆசான் கம்பனின் தாசன்
   கண்களும் பனித்திடவே !

   மிக்க நன்றி கா மீண்டும் மீண்டும் எழுதிட வேண்டுகிறேன் அனைவரின் சார்பிலும் வாழ்க நலம் !

   Delete
  3. முதலிரண்டு கவிதைகள் ரொம்ப நல்லா வந்திருக்கு இளமதி.

   குட்டிச் சிறுவன் கோலமுடன் சீராளன்
   கெட்டிக் காரப் பாவலனே! - இது மட்டும் என்னவோ தட்டறமாதிரியே இருக்கு. Easy flowவாக இல்லை. என் அனுமானம் தவறாகவும் இருக்கலாம்.

   ஏதோ... தேங்காய்ப் பால் விட்டு செய்யும் கஞ்சி செய்முறையை அனுப்பினால், உடனே 'வெள்ளை உள்ளம்' என்று எழுதுகிறீர்கள். நான் நினைக்கறேன்... ஒருவேளை, புளித் தண்ணீரை உபயோகப்படுத்தி ஏதேனும் செய்முறை சொல்லியிருந்தால், வெள்ளை உள்ளம், மாநிற உள்ளமாயிருக்குமா? (இது அதிராவைக் கலாய்க்க)

   சீராளன் பதில் கவிதை... அபாரம். வேறு வார்த்தைகள் இல்லை. சீராளன் தமிழ்ப் பரம்பரையைச் சேர்ந்தவரோ? 35 வயதுக்கும் குறைவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். என்ன திறமை, சொல்லாடல். வாழ்க வளர்க.

   Delete
  4. ///
   ஏதோ... தேங்காய்ப் பால் விட்டு செய்யும் கஞ்சி செய்முறையை அனுப்பினால், உடனே 'வெள்ளை உள்ளம்' என்று எழுதுகிறீர்கள். நான் நினைக்கறேன்... ஒருவேளை, புளித் தண்ணீரை உபயோகப்படுத்தி ஏதேனும் செய்முறை சொல்லியிருந்தால், வெள்ளை உள்ளம், மாநிற உள்ளமாயிருக்குமா? (இது அதிராவைக் கலாய்க்க)///

   ஹா ஹா ஹா கர்ர்ர்:)) இனிமேல் எப்பவும் வெள்ளை நிறக் குறிப்புக்களே என் பக்கம் வெளிவரும் என்பதனை இந்த தேம்ஸ் நதிப் பபபபபபச்சைப் பாசி மீது அடித்துச் சத்தியம் பண்றேன்ன்:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ எப்பூடியெல்லாம் ஓசிக்கிறாங்க:))..

   Delete
 32. ஹ்லோ நான் நெட் பக்கம் வராத சமயத்தி பிறந்த நாள் கொண்டாடுவது சரியில்லை அது சரி நானும் இரண்டு தளத்தில் அதிராவிற்கு வாழ்த்து சொல்லிட்டேன் ஆனால் யாரும் எனக்கு பிறந்த நாள் கேக்கை ஷேர் பண்ணல.....இணையத்திற்கு வரலைன்னா எல்லோரும் மறந்துவிடுகிறார்கள் ஹும்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ:)

   உங்களை எப்பூடி மறக்க முடியும் .. ஏனெனில் பூரிக்கட்டையைப் பார்க்கும்போதெல்லாம் நியாபகம் வந்து தொலைச்சிடுதே:) ஹா ஹா ஹா பூரிக்கட்டை இல்லாத வீடுண்டோ?:)..

   Delete
 33. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கேக் அனுப்பி வைப்பீங்கதானே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மிக்க நன்றி.... கேக் ஐ அன்றே என் செக்:) இடம் குடுத்து விட்டேனே:) இன்னுமா வந்து சேரல்ல:)..?.

   Delete
 34. அதிரா உங்கள் நியூயார்க் படங்கள் பார்த்தவுடன் நாங்கள் சென்று வந்த நினைவுகள் வந்தன. இந்த பதிவு நான் மாயவரம் போன போது போட்டது போல். நான் இப்போது தான் பார்க்கிறேன்.

  //அன்று இறந்தோரின் பெயர்கள் அழகாக பொறிக்கப் பட்டிருக்கு.. அதில் நிறைய இந்திய பெயர்களும் இருந்தன.. சிங்.. ரெட்டி இப்படி.//

  நாங்களும் பார்த்தோம் அப்போது மனது மிகவும் வருத்தப்பட்டது பகையால் எத்தனை உயிர் இழப்புகள் .


  ஊசி இணைப்பு அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா.. தாமதமாகிட்டாலும் வந்திட்டீங்க மிக்க மகிழ்ச்சியே...

   உண்மைதான்.. நினைவுச்சின்னங்களே அதிகமா மிஞ்சிக்கிடக்கு.. மிக்க நன்றி கோமதி அக்கா.

   Delete
 35. நிறைய்ச் சனமாக் கிடக்கு.

  தொகுத்து போஸ்ட் பண்ணுறது பெரிய‌ கஷ்டம்தான். நாளைக்கு நாளைக்கு என்று விட்டால் பலது மறந்துவிடும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இமா வாங்கோ..
   சிட்டியின் நடுப்பகுதி இரவு பகலில்லாமல் சன வெள்ளம் தான்.
   இப்போ உங்களுக்கு சம ஹொலிடேய்ஸ் ஆ?.. மிக்க நன்றி.

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.