நல்வரவு_()_


Tuesday 13 February 2018

காதலர் தினமும், வெள்ளையர் மனமும்:)

பெப்ரவரி மாதம் வரமுன்பே, எங்கு பார்க்கினும் வலன்ஸ்டைன் டே க்கான பொருட்களே கண்ணைக் கவருது... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கொண்டாட்டம் வைக்கிறார்களே என சிலர் திட்டினாலும், இதுவும் ஒரு விதத்தில் மனதுக்கு மகிழ்ச்சியே.

பெயர்தான்  “காதலர் தினம்” ஏ தவிர, கொண்டாடுவோர் என்னமோ குழந்தையில் இருந்து வயதானோர் வரை எல்லோருமே கொண்டாடுகின்றனர்.

ஆணாதீக்கம் வெளிநாடுகளில் குறைவு/இல்லை எனச் சொன்னாலும் அது வேறு வடிவில் இங்கும் இருக்கிறது. பொதுவாக நம் நாடுகளில்,  ஒரு காதல் எனில் .. அதை ஆண் தான் சொல்ல வேண்டும், ஆண் தான் ஒரு பெண்ணின் பின்னால் போய் கேட்க வேண்டும், மாறி ஒரு பெண் வலியப் போய் தன் அன்பைச் சொல்லி விட்டால் அதை தரக்குறைவாக நினைப்பது, ஏதோ காதலுக்காக அலையும் பெண் என்பது போல பார்ப்பது, இதையும் தாண்டி, ஒரு சின்ன பிரச்சனை வந்திட்டாலே.. நானா உன் பின்னால வந்தேன், நீதானே என்னை விரும்பி வந்தாய் எனக் கூறி மனதை உடைப்பது என பல வகை இருப்பதைப்போல...

இங்கும் ஒரு முறை இருக்கிறதாம், இங்கு காதலுக்கு அல்ல, திருமணம் எனும் பேச்சை முதலில் சொல்ல வேண்டியவர் ஆண் தானாம். காலம் காலமாக ஒன்றாக லிவிங் 2 கெதர் லைஃப் இல் இருப்பார்கள், ஆனால் திருமணம் முடிப்போமா எனும் முடிவை எடுப்பது, சொல்லுவது எப்பவும் ஆண் தானாம். பெண் அதில் தலையிடுவதில்லையாம்.

ஆனா இந்தக் காதலர் தினம் இருக்குது பாருங்கோ, அன்று மட்டும், பெண் கேட்கலாமாம், திருமணம் முடிக்கிறாயா என....

எங்கள் திருமணம் நிட்சயமான பின், என் கணவரும் இப்படி ஒரு கார்ட் எனக்கு அனுப்பினார் ஹா ஹா ஹா:)..

பல நேரங்களில் நம்மவர்கள் வெள்ளைகள் பற்றிப் பேசும்போது, கொஞ்சம் தரக்குறைவாகவே பேசுவது வழக்கம், அதுவும் இந்த குடும்ப உறவு முறைகளில். ஆனா அன்பு பாசம் என வரும்போது, சில சமயங்களில் நம்மவர்களை மிஞ்சும் அளவுக்கு இவர்கள் நடப்பதை பார்க்க, எல்லோரும் மனிதர்கள்தானே, நிறத்தில் என்ன இருக்கு எனத்தான் எண்ணத் தோணும்.

நம்மவர் ஒருவர், தன்னை விட வயதில் கூடிய ஒரு பெண்ணை விரும்பினாராம், நன்றாக இருந்த வேளை, திருமணம் எனும் பேச்சு வரும்போது, 4 பேர் நாலு விதமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள், உடனே அந்த ஆண் வந்து பெண்ணிடம் சொன்னாராம், நீ வயதில் அதிகமாக இருப்பதால், இன்னும் 15,20 வருடங்களில் உனக்கு உறவில் ஈடுபாடு குறைந்து விடுமாமே, அப்போ என் நிலைமை அந்நேரம் எப்படி இருக்கும் எனக்கூறி, இதை விடக் கொடுமை இன்னொன்று சொன்னாராம்... வயதான சிலரை விசாரித்துப் பார், அவர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என, அதன் பின் நாம் திருமணம் முடிக்கலாம் என.  அப்போ இவர் விரும்பியது மனதையா??? நாளைக்கே நாம் இருப்பது உறுதியில்லை எனும்போது, 20 வருடத்தின் பின் யோசித்து மனதை உடைப்பது எவ்வளவு கேவலமானது.

இதை எதுக்கு சொன்னேன் எனில், நம்மவர்களின் கிட்னி இப்படி வேர்க் பண்ணும்போது, இங்கு ஒரு ஸ்கொட்டிஸ் கப்பிள், இந்த தம்பியின் சிந்தனையைப் பாருங்கோ.. இதுதானே மனதை நேசிப்பதென்பது.

இருவருக்கும் 25 வயது, 5,6 வருடங்களாக லிவிங் 2 கெதர் வாழ்கையில் இருந்து வந்த வேளை, திடீரென ஒருநாள் பெண்ணுக்கு வயிற்றுக்குத்தென ஹொஸ்பிட்டல் போய் செக் பண்ணிய இடத்தில், கிட்னி கான்சர்.. வந்து விட்டது, இது விரைவில் பரவி விடும், இன்னும் 6 மாதங்களே இருப்பா என டொக்டர் எடுத்தோம் கவிழ்த்தோம் என பெற்ரோர் எல்லோரையும் அழைத்துச் சொல்லி விட்டார்.

நமக்கு நன்கு தெரிஞ்ச பிள்ளை, இதைக் கேட்டு நான் 2,3 நாட்களாக நித்திரையே கொள்ளாமல் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன், அக்குடும்பத்து நிலைமை எப்படி இருந்திருக்கும்.

பின்னர் டொக்டேர்ஸ் க்குள் பெரிய ஒரு மீட்டிங் வைத்து, ஒரு முடிவுக்கு வந்தார்கள், ஒரு வித ட்றீட்மெண்ட் ஆரம்பிக்கலாம், அதில் ஏதும் நன்மை ஏற்படலாம் என.

அப்படி ஆரம்பிச்சு, முதலில் 3 மாதங்கள், பிள்ளை ஹொஸ்பிட்டலும் வீடுமாக இருந்தா, ஆனா அந்த தம்பியோ அவவை விட்டு விலத்தவே இல்லை. 3 மாதம் முடிந்தபின், அவ கொஞ்சம் ஓகேயானா, திரும்ப வேர்க் பண்ண தொடங்கினா, ஆனா பெற்றோர் வீட்டிலேயே இருந்தா, அத் தம்பியும் வந்து ஒன்றாக நின்றார், இதைப் பார்த்த பெற்றோர் அவர்களுக்கு ஒரு வீடு எடுத்து அருகில் தங்க வைத்தனர். வெள்ளைகளுக்கு வீட்டில் ஒன்றாக வைத்திருப்பது பிடிக்காது.

இப்படியே ஒரு வருடம் ஓடி விட்டது, இருவரும் கிட்டக் கிட்ட சுற்றுலா எல்லாம் போய் வந்தார்கள். ஒரு தடவை ஸ்பெயின் போய், அங்கு அவவை சுவிமிங் பூலில் குளிக்க விட்டு விட்டு, ஹோட்டல் மனேச்சரின் உதவியோடு, தங்கியிருந்த ரூமிலிருந்து Pool வரை பூத்தூவி, அவர் நடந்து வந்து, மோதிரம் போட்டு என்கேஜ்ட் பண்ணினாராம்... அதனாலேயே அப்பிள்ளைக்கு பாதி நோய் குணமானதுபோல உசாராகிட்டா... ஒரே துள்ளலாம், ஏனெனில் வெள்ளையர்களில் நலமோடு இருந்தாலே என்கேஜ்மெண்ட், வெடிங் என்பது குதிரைக் கொம்பு:)..

பின்னர் 2,3 மாதத்தில், ஒரு கிட்னி போயே விட்டது, ஒபரேசன் பண்ணியே தீரோணும் என பண்ணி, அதிலும் தேறி விட்டா.. இப்போ 2 வருடங்கள் கடந்து விட்டது, அறிந்தேன், வரும் ஜூலை மாதம் வெடிங் செய்வதற்கு எல்லா ஆயத்தங்களும் அந்த Boy செய்கிறாராம், நாள் எல்லாம் குறித்தாயிட்டாம்.... அப்போ இதுதானே உண்மையான அன்பு, மனதை நேசிப்பதென்பது இதுதானே, 20 வருடத்தின் பின் என்னாகும் என யோசிக்கும் நம்மவருக்கு மத்தியில், இன்று மகிழ்ச்சியாக இருப்போம் என நினைத்து வாழும் இந்தக் கப்பிள்ஸ் எனக்கு உண்மையில் சிறந்த ஒரு காதலர்களாக தெரிகின்றனர். இந்த சந்தோசத்தாலயே 6 மாதம் எனச் சொல்லியும் அப்பிள்ளை இன்னும் நலமாக இருக்கிறா.. வேர்க் பண்ணுகிறா.

இதில் இன்னொரு நன்மை, இப்பிள்ளையின் அண்ணா லிவிங் 2 கெதர் லைவ் ல பல வருடங்களாக இருந்தார், ஒரு குழந்தையும் உண்டு, தங்கைக்கு ஏதும் ஆகி விட்டாலும் அதுக்குள் தன் வெடிங் க்கு தங்கை இருக்கோணும் என, அவர் அவசரமாக போன வருடம் தம் வெடிங்கை சிறப்பாக கொண்டாடினார்.


இது விட்ட குறை தொட்ட குறை:-
போன தடவை விடுபட்ட சில வெள்ளையர்களின் பழக்க வழக்கம். முக்கியமான ஒன்றை மறந்திட்டேன். நம் ஊரில் ஒரு ரிப்பெயார் செய்யோணும் எஞ்சினியர் வீட்டுக்கு வரோணும் எனில், அவருக்கு ஒரு ட்றைவர் கார் ஓட, மற்றும் bag தூக்க ஒருவர் என மூவராக வீட்டுக்கு வருவினம், வந்து செய்து போட்டு அப்படியே விட்டு விட்டுப் போயிடுவார்கள்.

ஆனா இங்கெனில், எஞ்சினியர் தானே காரோடி, பெரிய சூட்கேஸ் போன்ற பாக் ஐ முக்கித்தக்கித் தூக்கிக் கொண்டு வந்து, செய்ய வேண்டியதை செய்தபின்னர், நம்மிடம் தும்புத்தடி கேட்டு, நான் விட மாட்டேன் இல்லை விடுங்கோ நான் கிளீன் பண்ணுவேன் என்பேன், இல்லை தாங்கோ நான் செய்கிறேன் என கூட்டித் துப்புரவாக்கிட்டே போவார், தண்ணி வேலை எனில், மொப்பர் வாங்கி மொப் பண்ணிட்டே போவார்கள்.

நம் வீட்டுக்கு அவர்கள் வந்தாலோ, நாம் அவர்கள் வீட்டுக்குப் போனாலோ கேட்டுத்தான் எதுவும் குடுகோணும், ரீ, கொஃபி யூஸ் என்ன வேணும் குடிக்கிறீங்களா என.. தேவை எனில் நேரே சொல்லுவினம் இல்லை எனில் இல்லைதான், ஃபோஸ் பண்ணவும் கூடாது, நம்மையும் பண்ணாயினம். சாப்பாடும் அபடியே.. ஃபுபே போலதான் செய்து வைப்போம் தாமே எடுத்து சாப்பிடுவினம் நாம் போனாலும் அப்படித்தான். ஆனா இந்த சாப்பாட்டு முறை இப்போ நம்மவர்களும் எங்கும் அப்படித்தானே மாறி விட்டது. போட்டுக் குடுப்பது கப்பலேறி விட்டது,.

ஊசி இணைப்பு:
  

இலவச இணைப்பு:
 
*********************************************************************************************
 “அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் இனிய Valentine's day வாழ்த்துக்கள்”
*********************************************************************************************

91 comments :

 1. வாழ்த்துக்களுக்கு நன்னி ஹை

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆவ்வ்வ் வாங்கோ வாங்கோ நெல்லைத்தமிழன் தான் இன்று 1ஸ்DDஊஊஊஊஊ:)

   Delete
 2. படித்தேன். இந்த முறை ஊசி இணைப்பும் இலவச இணைப்பும் நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இலவச இணைப்பு எல்லோருக்குமே இம்முறை பிடிச்சுப் போச்ச்ச்:))

   Delete
 3. நாம இந்தியர்கள், வெள்ளையர்கள் என்று பிரித்துப்பார்க்கத் தேவையில்லை. மனிதர்களின் குணத்தைத்தான் ஒப்பிட்டுப்பார்க்கலாம். அந்த கலாச்சாரம் மோசம்னோ நம்ம கலாச்சாரம்தான் மிக உயர்ந்ததுன்னோ எண்ணிப்பார்க்கவேண்டாம், அதிலும் இப்போ கூட்டுக்குடும்பம் வழக்கொழிந்த காலத்தில், என்னைக்கேட்டால், வெள்ளையர்கள் பொதுவா ஓபன் மைன்டாவும், நம்மவர்கள் ஹிப்போக்ரட்ஸாகவும் இருக்காங்க (பெரும்பாலும்) என்று தோணுது.

  ReplyDelete
  Replies
  1. //மனிதர்களின் குணத்தைத்தான் ஒப்பிட்டுப்பார்க்கலாம்.//
   இது சரியானதேதான் நெல்லைத்தமிழன். நானும் எப்பவும் குணத்துக்கும் மனிதர் என்ற ஒன்றையும்தான் நினைப்பேன்.. மற்றும்படி கறுப்பு வெள்ளை, பாசை, சாதி, மதம் என பிரிச்சு எண்ணுவதில்லை.

   உண்மைதான் வெள்ளைகள் ஓபினாகவே இருப்பினம், நம்மவர்கள் வெளியே பெயர் கெட்டிடக்கூடாது எனவும், ஒளிச்சு மறைச்சு எதுவும் பண்ணலாம் எனவும் நினைப்பர்.. கெளரவம் முக்கியம் நம்மவர்க்கு.

   Delete
 4. சகோதர, சகோதரி பாசம்லாம் எல்லாருக்கும் பொதுவானதுதானே. அதுவும்தவிர அவங்க ஒரே ஜெனெரேஷன்னால சிந்திக்கறது, விரும்பறது எல்லாம் கிட்டத்தட்ட ஒரே அலைவரிசைல இருக்கும்.

  நம்ம ஊர்ல, சிலர் (எனக்குத் தெரிந்து) பெண் ஒல்லியா இருக்கணும்னு விரும்புறாங்க. அதுக்கு அவவின் அம்மாவையும் பார்க்கறாங்க (ஒல்லியா இருக்காங்களான்னு). ஆனா அப்படிப் பார்த்தாலும், திருமணம் ஆனபிறகு குண்டாக மாட்டாங்கன்னு கேரண்டி கிடையாதுல்லயா?

  என்னைக் கேட்டால், அடுத்த ஓரிரு வருடங்களையே நம்மால் கணிக்கமுடியாதபோது 10+ வருஷத்துக்கு மேல் என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்? இந்தப் பையனுக்கே விபத்து நடந்து கொஞ்சம் பாதிக்கப்பட்டால்? 20+ வருடங்களைப் பற்றிச் சிந்திப்பது டூ டூ மச். அனேகமா, கழட்டி விடறதுக்காகத்தான் இப்படிக் கேட்டிருப்பானாயிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ///நம்ம ஊர்ல, சிலர் (எனக்குத் தெரிந்து) பெண் ஒல்லியா இருக்கணும்னு விரும்புறாங்க//

   ஹா ஹா ஹா இது பொதுவா எல்லா boys உம் எதிர்பார்ப்பதுதான்:).. எனக்கு தெரிந்த ஒருவருக்கு திருமணம் பேசினார் அவரின் அண்ணா, அதுக்கு இந்த boy சொன்ன விடயம்... எனக்கு எதுவும் வேண்டாம் ஆனா பெண் சிம்ரனைப்போல இருக்கோணும்... அதுக்கு அண்ணா சொன்னாராம் அடேய் சிம்ரன் ஆள்தான் மெல்லிசு வடிவாம் ஆனா குணம் நல்லாயில்லையாமே:).. அதுக்கு இவர்... எனக்கு குணம் பற்றிப் பிரச்சனை இல்லை ஆனா சிம்ரன் போல தேடிப் பேசு:)..

   முடிவில் சிம்ரன் போலவே ஒரு பெண் கிடைச்சா:).. டெளரி எதிர்பார்க்காவிடில் ஓரளவு விருப்பப்படி பெண் கிடைக்கலாம்... அவ குணமும் நல்லம் எனக் கேள்விப்பட்டேன் ஹா ஹா ஹா.

   //அதுக்கு அவவின் அம்மாவையும் பார்க்கறாங்க (ஒல்லியா இருக்காங்களான்னு). //

   இது நான் கேள்விப்படவில்லை:).. மகளோடு சேர்ந்து அம்மாவும் பட்டினி எல்லோ கிடக்கோணும் ஹா ஹா ஹா... திருமணத்துக்குப் பின் என்னவும் நடக்கலாம்.. ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட் போதுமே வாழ்க்கையையே பிரட்டிப்போட... அதனால பயந்து வாழப் பழகோணும்.. முடிந்தவரை அடுத்தவரைக் குறை சொல்லாமலும் அடுத்தவருக்கும் மனம் இருக்கு என நினைச்சு மதிச்சாலே போதும்.

   ///என்னைக் கேட்டால், அடுத்த ஓரிரு வருடங்களையே நம்மால் கணிக்கமுடியாதபோது //
   நீங்கள் சொன்னதத்தனையும் உண்மை... ஆனா ஒருவரைக் கழட்டிவிட நினைச்சால் நேரடியாவே சொல்லி விடுவது உயர்ந்த பண்பு.. இப்படிக் கேவலப்படுத்திக் கழட்டி விடுவது இழிய செயல்தானே... இந்த இழிய செயல் வெள்ளைகளில் இல்லை... பிடிக்கவில்லையாயின் பிடிக்கவில்லை என சொல்லிடுவார்கள்... அதுவும் மனம் உடையும்தான் ஆனா அது ஒருவகையில் ஓகே. மிக்க நன்றி நெல்லைத்தமிழன். நீங்க பிஸியாக இருப்பினும் கொமெண்ட்ஸ் போட்டிருக்கிறீங்க.

   Delete
  2. இன்னொன்று, பல வருடங்கள் முன்பு டொக்கியூமெண்டரி ஒன்று பார்த்தோம், அதில் ஒரு நாட்டில், பெயர் மறந்துபோச்சு... பெண்கள் குண்டாக இருந்தால் மட்டும் தான் துருமணம் முடித்துக் குடுக்க முடியுமாம்:) அதனால குழந்தையில் இருந்தே நிறையக் கிழங்கு வகைகள் குடுத்து வளர்ப்பார்களாம் ஹா ஹா ஹா.. குடுத்து வச்சவர்கள்:) கண்ணை மூடிட்டுச் சாப்பிடலாமே:).. அனைத்தையும்.

   Delete
 5. இலவச இணைப்பு ஸூப்பர்.
  வாழ்த்துகள்
  த.ம.24

  ReplyDelete
 6. அருமை
  ஊசி இணைப்பும் இலவச இணைப்பும் அருமை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கரந்தை அண்ணன் மிக்க நன்றி.

   Delete
 7. அஆவ் !!! கர்ர்ர்ர் :) நான் பிசியா இருக்கும்போது பதிவு போட்டதுக்கு கண்டனங்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ... ஆஆஆஆஆஆ நீங்க பிசியாவா இருந்தீங்க:) ஜொள்ளவே இல்லை:)).. இம்முறை நெல்லைத்தமிழன் முந்திட்டார் ஹா ஹா ஹா..

   Delete
 8. லிவிங் டுகெதர் காலத்தை முடிக்க பெண்கள் விரும்புவதில்லை என்கிற தகவல் ஆச்சரியமளிக்கிறது. அவர்கள்தானே பாதுகாப்பான வாழ்வைத் தேடுவார்கள் / நாடுவார்கள்?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

   இது என்ன ப்யுக்கதை ஜொள்ளுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நித்திரைத்தூக்கத்தில வந்து போஸ்ட் படிச்சிருக்கிறீங்க:)) நான் எங்கு அப்படிச் சொன்னேன்:)...

   இங்கு திருமணம் என்றாலே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள்.. நமக்கு ஆச்சரியமா இருக்கும் எதுக்கு இப்படித்துள்ளுகிறார்கள் என.. மணமக்கள் மட்டுமில்லை அவர்களின் பெற்றோரும் தான்.. ஏனெனில் இவர்கள் வாழ்க்கையில் திருமணம் என்பது கிடைத்தற்கரிய ஒன்றாகியிருக்கு.

   அத்தோடு திருமணத்தை தீர்மானிப்பது மற்றும் பிளான் பண்ணுவது செலவு செய்வது எல்லாமே பெண்ணும் மணமகனும் மட்டுமே.. பெற்றோர் வசதியானவர்கள் எனில்.. விரும்பினால் உதவுவார்கள்.. மற்றும்படி பெற்றோரும் விசிடேர்ஸ்போலதான்...

   Delete
 9. கிட்னி கேன்சர் பெண்ணின் கதை மனதைத் தொட்டது. அது மாதிரி இளைஞர்களும் இருக்கிறார்களே என்று மனம் நேர்கிஸ்கிறது. இது போன்ற வீடியோ ஒன்று சமீபத்தில் பார்த்தேன். கேன்சரில் உயிர் துறக்க இருந்த பெண்ணை கடைசி நிமிடத்தில் அவள் காதலன் திருமணம் செய்து கொள்கிறான்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், இப்படியான பல கதைகள் வெள்ளையர்களிடம் நிறைய இருக்கு, ஏனெனில் அவர்கள் நீண்ட தூரம் யோசிப்பதில்லை, இன்று எது ஹப்பியோ அதைச் செய்கின்றனர்.

   Delete
 10. ரிப்பேர் வேலைக்கு வரும் பணியாளர்கள் செய்வது வியப்பாய் இருக்கிறது. ஊசி இணைப்பு ரசிக்க வைத்தது. இலவச இணைப்பு சிரிக்க வைத்தது.

  ReplyDelete
 11. நண்பர்கள் அனைவருக்கும் வாலன்டைன்ஸ் நாள் வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 12. ஹை :) ஆமாம் இங்கே எல்லா கடைலையும் பெரிய பெரிய சைஸ் கார்ட்ஸ் பரிசுப்பொருட்கள் எல்லாம் குமிஞ்சிருக்கு :)
  இங்கே பிரைமரி ஸ்கூலில் க்ராப்ட்ஸ் கார்ட்ஸ் செய்வாங்க .செகண்டரி ஸ்கூலில் சீக்ரெட் மலர்கள் அதாவது வேறொருவர் மூலமா கொடுப்பார்களாம் பேரை மலர்க்கொத்தில் எழுதாமல் :) இதெல்லாம் பொண்ணு சொன்ன விபரம் :)

  ReplyDelete
  Replies
  1. ஓ அங்கு ஹை ஸ்கூலில் அப்படியா..
   பிரைமறி ஸ்கூலில் பிள்ளைகள் படிச்சபோது.. மம்மிக்கு, டாடிக்கு என கார்ட் செய்து எடுத்து வருவார்கள்.. ஹை ஸ்கூலில் ஏதும் நடப்பதாக தெரியவில்லை இங்கு.

   Delete
 13. கிக்கிக்கீ :) இந்த வாலன்டைன்ஸ் டே கார்ட் இதெல்லாம் நினைச்சா சிரிப்பா வரும் :)
  இவரும் ஒரு கார்ட் ரொம்ப பயந்து பயந்து ரெண்டு பேப்பரில் சுற்றி என்வலப்பில் போட்டு அனுப்பினார் :) யாராச்சும் பிரிச்சிருவாங்களோன்னு .போஸ்ட் மேன் எங்க வீட்டு குட்டிஸ் கைல கொடுத்திட்டு போனார் குட்டீஸ்ல்லாம் அப்போ நெளிஞ்சி நெளிஞ்சி சிரிச்சதுங்க :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. இதெல்லாம் எல்லோருக்கும் பசுமையான நினைவுகள்தானே... முக்கியமா இவற்ரை அதிகம் என் சோய் பண்ணுபவர்கள் பெண்கள் எனத்தான் நினைக்கிறேன் அஞ்சு.. இப்போ கேட்டுப் பாருங்கோ .. அப்படியா? நான் அனுப்பினேனா எனக் கேட்டாலும் கேட்கலாம் ஹா ஹா ஹா..

   Delete
 14. பொதுவாகவே நம் நாட்டில் foreigners என்றால் கொஞ்சம் இளக்காரம் தான் அதை மறுக்கவே முடியாது .ஆனால் அவர்களுக்கு இருக்கும் மனித நேயம் நல்ல குணங்கள் இவற்றை நம் மக்கள் பார்ப்பதில்லை .
  மஹாபலிபுரம் அருகில் ஒரு டீக்கடைக்காரரின் மகளை ஜெர்மன்காரர் அங்கே சென்றப்போ திருமணம் செய்தார் .அப்பெண்ணை அழைத்து ஜெர்மனி வந்து நன்கு ஜேர்மனிய மொழி எல்லாம் கற்றுக்கொடுத்து பெரியாளாக்கினார் அதைவிட முக்கியம் வருடா வருடம் அப்பெண்ணின் பெற்றோர் வீட்டுக்கு குடும்பமாக போவார் அந்த குட்டி ஒட்டு வீட்லதான் தங்குவார் .இதை நம்மூர் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் செய்வார்களா ? மாப்பிளைனாலே முறுக்குவாங்களே :)
  எல்லாருக்கும் வெள்ளைக்காரர் அணிகிற உடை பார்த்து ஒரு கிண்டல் அது உண்மையில் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் .அவங்க மனசில் கல்மிஷமில்லை நம்ம மக்கள்தான் காலங்காலமா அழுக்கை மட்டும் உள்ளத்தில் மூட்டைகட்டி சுமந்து திரியறாங்க

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க அஞ்சு.. நம் மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் க்கு லெவல் அதிகம்:)) ஹா ஹா ஹா.

   நம்மவர்கள் அனைத்தையும் ரகசியமாகச் செய்து போட்டு, பப்ளிக்கா செய்வோரைப் பார்த்து கேலி செய்வது:)..

   Delete
  2. மேலே ரொஓல் செய்யும் ஏஞ்சல் உங்கலின் இந்தக் கமென்ட் கண்ணில் பட்டது...அடஏ நான் சொல்ல வந்த கருத்து என்றதும் இங்கேயே உங்களை டிட்டோ செய்யலாம்னு வந்துட்டேன்..

   ஆமாம் ரொம்ப ரொம்ப சரி ஏஞ்சல்....அதிராவின் பதிலும் ரொம்பச் சரி...

   கீதா

   Delete
 15. // நம்மவர் ஒருவர், தன்னை விட வயதில் கூடிய ஒரு பெண்ணை விரும்பினாராம், நன்றாக இருந்த வேளை, திருமணம் எனும் பேச்சு வரும்போது, 4 பேர் நாலு விதமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள், //

  விரும்பும்போது எங்கே போனாங்க அந்த நாலு பேர் ??? அப்போ வயது வித்யாசம் தெரிலையாமா ?
  அடுத்தவர் கருத்தை கேட்டு வாழ்க்கையை துவங்குவது அதுவும் விரும்பிய பெண்ணை பற்றி நாலாமவர் கிட்ட அபிப்ராயம் கேட்பதே அசிங்கம் .


  // நீ வயதில் அதிகமாக இருப்பதால், இன்னும் 15,20 வருடங்களில் உனக்கு உறவில் ஈடுபாடு குறைந்து விடுமாமே,//


  இந்த மாதிரி மனதுக்குள் நினைப்பவரை மனுஷ ஜென்மமாகக்கூட மதிக்கக்கூடாது . இப்படிபட்டோரை திட்டுவதற்கு கூட தகுதியற்றவர்கள் .

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அஞ்சு.. சிலர் காதல் என்றால் என்ன என்றே தெரியாமல் காதலிக்கிறார்கள்.. பின்னர்தான் உசாராகிறார்கள்.. இப்படியானோரை நம்பிக் காதலிக்கும் பெண்/ஆண் உடைய நிலைமைதான் கவலைக்கிடமாகிறது.

   Delete
 16. அந்த ஸ்கொட்டிஷ் பெண்ணும் அவள் திருமணம் செய்யபோறவரும் நல்லா இருக்கணும் இறைவான்னு வேண்டிக்கறேன் .இறைவன் அவளுக்கு எல்லா உடல்நலத்தையும் கொடுக்கட்டும் தங்க மனசுகொண்ட நல்லவர்களுக்கு ஒரு குறையும் வரக்கூடாது

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு ஆரம்பம் முதலே இதுபற்றி நான் சொல்லி நீங்க ஃபிரே பண்ணுவது எனக்கு தெரியும்... மிக்க நன்றி அஞ்சு.. எனக்கும் அதேதான் .. வயதான காலத்தில் வருத்தம் வந்தாலே .. பயப்படுவோம்.. இது வாழ வேண்டிய பிள்ளை.. நல்லா இருக்கட்டும்.. மிக்க நன்றி.

   Delete
 17. உண்மையான அன்பு வலியிலும் சிரிக்கும். கண்ணீரிலும் புன்னகைக்கும். அதை நீங்கள் அழகாக எழுதி தெளிவு படுத்தியிருக்கிறீர்கள் அதிரா!

  ஊசிக்குறிப்பும் அழகு! வாழ்த்து சொல்லும் அந்தப்பாப்பா ரொம்பவும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா..

   உண்மைதான் உண்மை அன்பு எதையும் யோசிக்காது எதையும் எதிர்பார்க்காது..

   மிக்க நன்றி.

   Delete
 18. விட்டக்குறை தொட்டகுறை // இங்கே வெளிநாட்டுக்கறாங்க எல்லாரும் ஒரேபோலத்தான் .எதுனாலும் நாம் வுட் யூ லைக் டு ஹாவ் னு கேட்டு தெரிஞ்சபின்னரே செய்யணும் .

  ReplyDelete
  Replies
  1. அதே அதே.. இங்கு என் வீட்டுக்கு வரும் ஒரு நண்பி.. சிலசமயம் வேண்டாம் என்பா.. பின்பு வன் அவரால சொல்லுவா இப்போ எனக்கொரு ரீ வேணும் என:)..

   Delete
 19. பார்த்ததில் பிடித்தது ..100 % உண்மைதனே கேட்ட வார்த்தைகளை ரிப்பீட் செய்யாரங்க குழந்தைகள் .இதுக்குதான் நல்லதை மட்டும் பேசணும் குழந்தைங்க முன்னாடி .
  நல்லவற்றை மட்டும் பார்க்க வைக்கணும் .எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்த ஆங்கிலோ இந்தியர் மூச்சுக்கு முன்னூறுதரம் ஒரு வார்த்தையை யூஸ் பண்ணுவார் அதை அடிக்கடி கேட்டு வளர்ந்த உறவினர் மகனும் அதை 2 வயதில் சொன்னப்போ அவனோட அப்பா அடிச்சிட்டார் .அப்புறம் கவனமுடன் வளர்த்தாங்க .இன்னொருவர் பிள்ளை இங்கே வீட்டில் கவுண்டமணி செந்தில் ஜோக்ஸை அடிக்கடி மகனுடன் பார்ப்பார் மகன் 4 வயதில் அப்பாவை போடா வாடா மச்சான் என்று அழைக்க கடைசியில் படம் பார்ப்பதை நிறுத்தினார் :)
  எங்க வீட்டில் வளர்த்த கிளியே கூண்டில் இருந்தவாறு எங்கப்பா அம்மா என்னை எப்படி கூப்பிடுவார்களோ அப்படி கூப்பிடும் :) ஒரு கிளியே இவ்ளோ அபசர்வ் செய்துனா குழந்தைகள் !!!

  ReplyDelete
  Replies
  1. //எங்கப்பா அம்மா என்னை எப்படி கூப்பிடுவார்களோ அப்படி கூப்பிடும் :)//

   அது எப்பூடி எனச் சொல்லவே இல்லை:).. ஹா ஹா ஹா.
   ... கேட்பதைப் பேசுவினம் என்றதும் நினைவுக்கு வந்த கதை..
   எங்கள் ஒரு மாமா அடிக்கடி ட்ரான்சர் ஆகி ஒவ்வொரு இடமாக போவார் குடும்பத்தோடுதான் போவார்... அப்போ ஒரு தடவை அவ்ர்கல் இருந்த இடம், சுற்றவர இஸ்லாமியர்கள்... அப்போ அவர்களின் மகள் 3 வயசுக் குழந்தை.. அவவை எப்பவும் அந்த இஸ்லாமி வீட்டினர் தூக்கிச் செல்லுவார்களாம்...

   அப்போ அதிகமாக அவர்களோடு பழகியதால, இக்குழந்தை எப்பவும்.. தொட்டதுக்கெல்லாம் “அல்லாவே.. அல்லாவே” எனச் சொல்லுவா.. கேட்க சுவீட்டா இருக்கும்.. மாமா மாமியும் எதுவும் சொல்வதில்லை.. பின்பு மறந்திருப்பா என நினைக்கிறேன்.

   Delete
 20. ஊசி இணைப்பு அருமை இலவச இணைப்பு ஹாஹா :)
  வெலன்டைன்ஸ் வாழ்த்து சொல்ற பட்டு கியூட்டிக்கு உம்மா அனுப்பறேன் .உங்க பேத்தி செம்ம அழகு அதிரா சுத்திப்போடுங்க பிள்ளைக்கு

  ReplyDelete
  Replies
  1. ///உங்க பேத்தி செம்ம அழகு அதிரா///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது பேபி அதிராவாக்கும்:)).. சொல்லமலே கண்டு பிடிப்பீங்க என போடாமல் விட்டேன்.... பேத்தி ஆக்கிட்டீங்க கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   //சுத்திப்போடுங்க பிள்ளைக்கு///
   யேஸ்ஸ்ஸ் இப்பவே சுத்திப் போடுறேன் மீக்கு:)..

   Delete
 21. வாவ் !! காணொளியில் சிம்சா ?? ஒரு காலத்தில் கனவுக்கன்னி தானே அவர். கியூட் எக்ஸ்ப்ரெஷ்க்ஷன்ஸ் தருவார் :)

  ReplyDelete
  Replies
  1. //சிம்சா///
   அவ்வ்வ்வ்வ் யூ மீன் பெட் நேம்?:) ஹா ஹா ஹா கர்ர்ர்:)) மிக்க நன்றி அஞ்சு.

   Delete
 22. நீண்ட நாட்களாகிவிட்டது இப்பாட்டு கேட்டு. நல்ல பாட்டு.
  இதே கதைதான். ஒவ்வொரு கொண்டாட்டத்துக்கு 1,2 மாதத்துக்கு முன்னமே களைகட்டத்தொடங்கும். இப்பவே ஈஸ்டருக்கு கூட பொருட்கள்,சொக்லெட்ஸ் எல்லாம் வந்துவிட்டது.
  இங்குள்ள யதார்த்த நிலமையை அழகா சொல்லியிருக்கீங்க அதிரா. எனக்கு இதிலொரு விடயம் கவலையா இருக்கும். சில பேர் பெரியதாக (அதை ஒரு கொண்டாட்டமாக) தங்களை காதலை, அல்லது மணமுடிக்க விரும்புவதை சொல்வாங்க. கொஞ்சநாளில்,மாதத்தில் பிரிந்து விடுகிறாங்க.
  எங்கட ஆட்கள் எதைதான் விட்டுவைத்தாங்க குறை சொல்வதில்.. இவர்களிடம் குடும்ப அமைப்பே இல்லை என கூறுவாங்க. தாறுமாறா இருக்கு எனவும் சொல்வாங்க. ஆனா அப்படி எல்லாரையும் சொல்லிடமுடியாது. அவங்களிடமும் அக்கா,அம்மா,தங்கை,அண்ணா பாசம் இருக்கு. எங்க அயலவர்களில் பெரும்பான்மையினர் திருமணம் முடித்து நீண்டகாலமா ஒன்றாக இருப்பவர்கள். எங்கட ஆட்கள் சில விடயங்களில் நிறையவே திருந்தவேண்டும் இவர்களைப்பார்த்து.
  ஸ்கொட்டிஷ் கேர்ள் கொடுத்து வைச்சவர்தான். நலம் பெற்று நன்றாக இருக்கவேண்டும்.
  விட்டகுறை தொட்டகுறை மிக உண்மையே. எங்கட ப்ளையர் க்ளீன் பண்ண வருபவரும் இப்படித்தான். நாங்க வேடிக்கை பார்க்கவேண்டிய்துதான்.
  ஊசி இணைப்பு, இலவச இணைப்பு வாசித்து ரசித்தேன்.அருமை. அழகு குட்டி பாப்பா.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ..
   ஓம் ஈஸ்ட்டருக்கு முதல் மதேர்ஸ் டே வருதே ஹா ஹா ஹா அதை எப்பூடி மறந்தீங்க?:)..

   ///அல்லது மணமுடிக்க விரும்புவதை சொல்வாங்க. கொஞ்சநாளில்,மாதத்தில் பிரிந்து விடுகிறாங்க. //

   ம்ம்ம் இதுவும் நடக்கிறதுதான், இதனாலதான் இங்கு 18 வயசுக்கு மேல் பெற்றோர் எதிலும் தலையிடுவதில்லைப்போலும்.

   ///இவர்களிடம் குடும்ப அமைப்பே இல்லை என கூறுவாங்க. தாறுமாறா இருக்கு எனவும் சொல்வாங்க.//

   ஹா ஹா ஹா நம்மவர்கள் சிலசமயம் பொறாமையில் சொல்கிறார்களோ என எண்ணத் தோணும்.. முன்பு பேஸ் புக்கில் ஒருவர் சொன்னார்.. வெள்ளைகள் கொடுத்து வச்சவர்கள் 2,3 என வைத்திருப்பார்கள் நாம் அப்படியா என கர்:)).. ஆனா உண்மையில் நம்மவர்கள்தான் ஒளிச்சு மறைச்சு இப்படி வைத்திருந்தாலும் இருக்கலாமே தவிர, வெள்ளைகள் ஒன்றை விட்டுத்தான் அடுத்தது.. இதுபற்றி போன போஸ்ட்டில் பேசி விட்டோம்:)..

   மிக்க நன்றி அம்முலு.

   Delete
  2. உங்களுக்குதான் மார்ச் 11 வருது மதர்ஸ் டே. எங்களுக்கு மே 13 ல்தான் வருகிறது. எங்களுக்கு முதல்ல ஈஸ்டர்தான். ஹா..ஹா...

   Delete
  3. ஹா ஹா ஹா ஓம் என்ன ..அதை மீ மறந்துட்டேன்ன்ன்:))..

   Delete
 23. >>> 20 வருடத்தின் பின் என்னாகும் என யோசிக்கும் ஆட்களுக்கு மத்தியில்,
  இன்று மகிழ்ச்சியாக இருப்போம் என நினைத்து வாழும் ஜோடிகள்!...<<<

  உண்மையான அன்பு ..உயிர் காக்கும் அன்பு!..

  வாழ்க நலம்...

  ReplyDelete
 24. என்னம்மா வலன்ஸ்டைன் டேக்கு எல்லோருக்கும் கிப்ட் வாங்கி அனுப்புவீங்க என்று பார்த்தால் இப்படி ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பதிவு போட்டு அல்வா கொடுத்தீட்டீங்களே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ..

   அஞ்சூஊஊஊஊஊ அண்டைக்கு அந்த தேம்ஸ் கரையில் பிடிச்ச பபபபச்சை நிற... பாஆஆஆஆஆஆஆஆஆஅ.. பைப் பார்சல் பண்ணி ட்றுத்துக்கு கிஃப்ட் ஆக் குடுத்திடுவோமா?:)... ரொம்ப ஆசைப்படுறார்.. தீபாவளிக்கு மொய் கேட்டும் குடுக்கவில்லை நாம்:).

   Delete

 25. உங்க செகரட்டரி எனக்கு உங்கள் ஒரிஜல் போட்டோவை வாட்ஸப் மூலம் அனுப்பி இருக்கிறார். எனக்கு கிப்ட் வரலைன்னா அதை கூடிய சிக்கிரம் வெளியிடப்போகிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஹையோ.. நா நினைச்சேன் அன்று தேம்ஸ் கரையில் அவவை விட்டுக் கலைச்சுக் கொண்டு ஓடும்போது டக்கெனத் திரும்பிப் படமெடுத்த இடத்திலதான் விழுந்து காயம் அவோக்கு:)).. அந்தப் படமாத்தான் இருக்கும்:))..

   சே..சே.. வாணாம் ட்றுத் அதைப் போட்டிடாதீங்க:).. உங்களுக்கு கிஃப்ட் வருது:).. ஓபின் பண்ணாமல் கையை வச்சு எடுக்கோணும் ஹா ஹா ஹா மிக்க நன்றி வருகைக்கு.

   Delete
 26. ஊசி இணைப்பும் இலவச இணைப்பும் அருமை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மொகமட் வாங்கோ.. மிக்க நன்றி.

   Delete

 27. அன்பர்கள் தின வாழ்த்துக்கள் அதிரா...

  இப்போ நாங்க நண்பர்களுக்குள் இப்படி தான் சொல்லுவது...


  அந்த ஸ்கொட்டிஷ் பெண்ணும் அவள் கணவரும் மன நிறைவோடு வாழ இறைவன் அருள் புரியட்டும்....

  படித்ததில் படித்தது...

  மிக சரி ..கேட்ட வார்த்தைகள் மட்டுமே பேசுகிறார்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ..

   ஓ அன்பர்கள் என்றால் அன்பானவர்கள் என அர்த்தமோ?..

   மிக்க நன்றி.

   Delete
 28. நல்ல பகிர்வு.

  நம்மவர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இருக்கும் வித்தியாசங்களைச் சொன்னது சிறப்பு.

  பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ...

   இது பகுதி இரண்டுபோல வருகிறது, விளக்கமான பதிவு முன்பு போட்டு விட்டேன் அப்போ நீங்கள் இங்கிருக்கவில்லைப்போலும்.

   மிக்க நன்றி.

   Delete
 29. ஊசி இணைப்பு இலவச இணைப்புகள் ரசிக்க வைக்கின்றன. எல்லா மக்களிடமும் காணும் குணங்களைப் பொதுப்படுத்த முடியுமா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ.. பொதுப்படுத்த முடியாது.. வேறுபாடுபற்றிப் பேசுகிறோம்.

   மிக்க நன்றி.

   Delete
 30. அதிரா ஆ பதிவு நான் லேட்டா..... வரேன்...நெட் வந்த பிறகு..இது மொபைலில் இருந்து...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ... ஹா ஹா ஹா பி எஸ் என் மனேஜ்ஜர் வீட்டுக்கு வந்தும் நெட் பிரசனை தீரல்லயோ... சனி மாற்றமாக இருக்குமோ:)..

   தெரியும் கீதா பிரச்சனை இல்லை.

   Delete
 31. ஹாப்பி வேலன்டைன்ஸ் டே..அன்பர்கள் தினம்..உங்க வாழ்த்துகளுக்கும்ம்..நன்றி

  கீதா

  ReplyDelete
 32. ஊசி இணைப்பு அருமை எனில் இலவச இணைப்புப் பிரமாதம். அருமையான படச் சேர்க்கை!

  மனிதர்கள் எங்கேயும் மனிதர்கள் தான். இதை நான் யு.எஸ்ஸிலும் கண்டிருக்கிறேன். பாசம் எல்லா மனித மனங்களுக்கும் பொதுவானது தானே! மெம்பிஸில் எங்க பொண்ணு இருந்த குடியிருப்பு வளாகத்தில் அவளோட குடியிருப்புக்கு நேர் எதிரில் இருந்த குடியிருப்பில் ஒரு தாத்தா, பாட்டி! அவங்களுக்குத் திருமணம் ஆகி அப்போ 50 வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. பையர், மருமகள் தனியாக வேறே ஒரு வீட்டில், பேரன் தனியாக இன்னொரு குடியிருப்பில். ஆனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டுசமயங்களில் எல்லோரும் இங்கே தாத்தா, பாட்டி வீட்டுக்கு வந்துடுவாங்க! ஒன்றாக சந்தோஷமாகக் கொண்டாடுவாங்க! பார்க்கவே நல்லா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாண்டோ.. உண்மைதான் பாசம் எங்கும் பொதுவானது ஆனா நம்மவர்கள் சிலர், ஏதோ நமக்குத்தான் பாசம் பிணைப்பு ஒழுக்கம் எல்லாம் அதிகம் என்பதுபோலவும், வெள்ளைகளுக்கு இதெல்லாம் இல்லை என்பது போலவும் பேசும்போதுதான் இப்படி உதாரணங்கள் சொல்ல வேண்டி வருது கீதாக்கா..

   Delete
 33. அந்தப் புற்று நோய்ப் பெண்ணைப் பற்றி நீங்க சொன்ன மாதிரி எங்க உறவினரிலும் ஒரு பெண் சைன்டிஸ்டாக இருந்தார். அவருக்குத் திருமணம் நிச்சயம் ஆனதும் திடீரெனக் குடலில் புற்று நோய். ஆனால் நிச்சயம் செய்த மாப்பிள்ளை அவரையே திருமணம் செய்து கொண்டு இருவரும் சுமார் பத்து வருடங்களுக்கும் மேல் வாழ்ந்தார்கள். எங்க வீட்டுத் திருமணங்களுக்கு எல்லாம் அந்தத் தம்பதிகள் வருவார்கள். கீமோதெரபி செய்து கொண்டும் தலையில் துணியைக் கட்டிக் கொண்டு அலுவலகம் செல்வார். பின்னர் புற்று நோய் கடுமையாகப் பரவவும் இறந்து போனார். கணவர் அவரை விட்டு அலகாமல கவனித்தும் வந்தார்.

  ReplyDelete
  Replies
  1. என்ன ஒரு கமிட்மென்ட். அப்படி இருக்கறவங்க வாழ்க்கைல உயரத்தான் செய்வாங்க.

   Delete
  2. //ஆனால் நிச்சயம் செய்த மாப்பிள்ளை அவரையே திருமணம் செய்து கொண்டு இருவரும் சுமார் பத்து வருடங்களுக்கும் மேல் வாழ்ந்தார்கள்.//

   இது உண்மையிலேயே போற்றப்பட வேண்டிய விடயம்.. காதலிக்கக்கூட இல்லை.. நிட்சயம்தானே செய்தார்கள்.

   ஆனா நம் ஊரில் இப்படித்தான் பேசி நிட்சயித்தார்கள்.. பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொண்டிருக்க ஆரம்பித்த பின், திடிரென ஆணுக்கு காலில் கட்டி.. செக் பண்ணினால் இதேதான்:(... ஆனா அவர் உடனேயே அவவோடு பேசுவதை நிறுத்தி விட்டார்.. ஒதுங்கி விட்டார்.. எனக்கு தெரிஞ்ச அண்ணதான்... மிக நல்லவ்ர், ரொம்ப அமைதியானவர்...

   3,4 வருடத்திலேயெ கடுமையாகி போய் விட்டார்... நான் அனைத்துக்கும் போய்ப் பார்த்தேன் அவரை..

   Delete
 34. அப்புறமா இந்த வாலன்டைன்ஸ் தினம்! அம்பேரிக்காவில் எல்லாம் பள்ளிக் குழந்தைகள் தங்கள் வகுப்பு ஆசிரியர், ஆசிரியைகளுக்குக் கூட வாலன்டைன்ஸ் தினத்துக்காகப் பரிசுகள், கார்டுகள், வண்ண அட்டைகள் கொடுப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை இது அன்பைப் பரிமாறிக்கொள்ளும் ஓர் தினம். நம்மூர் போல்க் காதலர் தினம் இல்லை! :)))) இங்கே ஆனாலும் கொஞ்சம் இல்லை நிறையவே ஓவர்.

  ReplyDelete
  Replies
  1. //அவர்களைப் பொறுத்தவரை இது அன்பைப் பரிமாறிக்கொள்ளும் ஓர் தினம்//

   உண்மைதான் கீசாக்கா... அனைவருமே கொண்டாடுவினம்.. லவ்வேர்ஸ் மட்டும் கொஞ்சம் ஓவரா கொண்டாடுவினம்..

   //நம்மூர் போல்க் காதலர் தினம் இல்லை! :)))) இங்கே ஆனாலும் கொஞ்சம் இல்லை நிறையவே ஓவர்.//

   ஹா ஹா ஹா மிக்க நன்றி கீசாக்கா.

   Delete
 35. http://sivamgss.blogspot.in/2011/02/blog-post_5083.html// இது சில வருடங்கள் முன்னர் வாலன்டைன்ஸ் தினத்துக்காக நான் எழுதின பதிவு.

  ReplyDelete
  Replies
  1. ஓ படிச்சதும் கொமெண்ட் தாறேன் மியாவும் நன்றி.

   Delete
 36. துளசி: அதிரா அந்தக் குழந்தை உங்கள் மகளா? ரொம்ப அழகு!!! சுற்றிப் போடுங்கள். மனிதர்கள் என்று இருந்துவிட்டால் எல்லா ஊரிலும் கிட்டத்தட்ட ஒரே போன்றுதானோ என்று தோன்றுகிறது. அந்தக் கான்செர் பெண் பாவம் அவள் வுட்பி வாவ்!!! அப்படியும் அன்பான மனிதர்கள் இருக்கிறார்கள் தான்.

  ஊசி...நல்ல கருத்து.. மற்றும் இலவச இணைப்பு ...ஹா ஹா ஹா...நல்ல ஆப்பு இல்லையா!!!

  கீதா: அதிரா நெட் போவதற்குள் உங்களுக்கு, எபிக்கு, ஏஞ்சலுக்கு மாற்றி மாற்றிக் கமென்ட் போட்டு ஓடோணும்..ஹா ஹா ஹா ஹா

  முதல்ல அது எனக்கும் அந்த டவுட் வந்தது உங்கள் பெண்ணோ?!! ரொம்ப அழகா இருக்கா? உங்களைப் போலவே சிரிப்பது போலுள்ளது.

  ஊ கு வை ரசித்தேன் என்றால் இ இ யை வாசித்துச் சிரித்துவிட்டேன்...

  இப்படியும் தெய்வீகக் காதல் இருக்கத்தான் செய்யுது...லிவிங்க் டுகெதர் என்றாலும்...அப்பெண்ணின் நோய் தெரிந்தும் செர்ந்து வாழ நினைப்பது அருமை. அவர்களை வாழ்த்துவோம் நாம் இல்லையா.....அப்பெண்ணைக் கண்டால் நம் எல்லோரது வாழ்த்தையும் சொல்லிடுங்கோ...

  இதோ அடுத்து வரேன்...எபி க்கு போய் ஒரு கமென்ட் போட்டு வாரேன்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..

   // அதிரா அந்தக் குழந்தை உங்கள் மகளா? ரொம்ப அழகு!!! சுற்றிப் போடுங்கள்///

   ஹா ஹா ஹா அது மகள் இல்லை பேபி அதிராவாக்கும்:) ஹையோ இது என் செக்:) ட கண்ணில பட்டிடக்கூடாது...

   மிக்க நன்றி துளசி அண்ணன்.

   Delete
  2. //கீதா: அதிரா நெட் போவதற்குள் உங்களுக்கு, எபிக்கு, ஏஞ்சலுக்கு மாற்றி மாற்றிக் கமென்ட் போட்டு ஓடோணும்..ஹா ஹா ஹா ஹா//

   ஹா ஹா ஹா கீதா நீங்கதான் அமெரிக்க ரைம் க்கு நெட் கனெக்‌ஷன் கிடைப்பவராச்சே:)..

   //முதல்ல அது எனக்கும் அந்த டவுட் வந்தது உங்கள் பெண்ணோ?!! ரொம்ப அழகா இருக்கா? உங்களைப் போலவே சிரிப்பது போலுள்ளது. //
   ஹையோ ஹையோ:)..

   ஓம் அப்பெண் நல்லா இருக்கட்டும்.. ஆவ்வ்வ்வ் எபிக்கு ஓடிப்போய் கீசாக்காவை முந்திட்டு வாங்கோ:))..

   Delete
 37. அந்த ஸ்காட்டிஷ் பெண்ணிற்கும் அவளைக் கட்டிக்கப் போகும் அந்தப் பையனுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்...நன்றாக வாழணும் இறைவனிடம் சொல்லுவொம்..

  அதிரா மனுஷங்க புத்தி நாடு, மண் என்ன மாறினாலும் பேஸிக் சைக்காலஜி ஒரே போலத்தான்னு தோனுது. என்ன கொஞ்சம் கொஞ்சம் அந்தக் கல்சர்னு சொல்றது க்கு மாறுபடுமா இருக்கலாம்.

  ஆமாம் அதிரா ரிப்பேர் வேலைக்கு வருபவர்கள் வெளிநாட்டில் எல்லாம் பெர்ஃபெக்டாகச்செய்து போவார்கள். நாம் சொல்லவே தேவையில்லை. என்ன பிரச்சனை என்று மட்டும் சொன்னால் போதும். சுத்தமாக வைத்து விட்டுப் போவார்கள். ஆனால் இங்கெல்லாம் அப்படி இல்லை நாம் சொல்லிக் கொண்டே இருக்கணும் அது இப்படி வேலை செய்யலை...அப்படி வேலை செய்யலை...எட்ஸ்ற்றா எட்ஸ்றா....அப்புறம் அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். நமக்கு அதை விட இரட்டை வேலை இருக்கும்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நீங்க எழுதியது அத்தனையும் உண்மை கீதா.. நான் நினைச்சுப் பார்ப்பேன் நம் நாட்டில் ஒரு வேலைக்கு மூவர் மினக்கெட்டால்... அவர்களின் சம்பளம் நேரம் இதெல்லாம் எப்படி கட்டுபடியாகும்... இங்கு அனைத்தையும் ஒருவரே பார்ப்பதால் எல்லாம் மிச்சம் தானே.. அதாவது ரைவிங்.. கிளீனிங்.. திருத்துதல்...

   Delete
 38. // நம்மவர் ஒருவர், தன்னை விட வயதில் கூடிய ஒரு பெண்ணை விரும்பினாராம், நன்றாக இருந்த வேளை, திருமணம் எனும் பேச்சு வரும்போது, 4 பேர் நாலு விதமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள், // இதெல்லாம் காதலிக்கும் போது அல்லது பிடிக்கிறது என்று பேசும் போது தெரியாதோ? அதே போலத்தான் மதம் வேறு வேறாக இருப்பவர், சாதி வேறு வேறாக இருப்பவர் காதலிப்பதில் தவறே இல்லை...ஆனால் பெற்றோர் சம்த்திக்க மாட்டார்கள் பிரச்சனை வரும் என்றால் பயம் என்றால் காதலிக்கும் முன் அதைக் கட் செய்யத் தெரிய வேண்டும் அல்லது பெற்றோரிடம் தைரியமாகச் சொல்லிவிட்டுத் தங்கள் முடிவைக் கேரி ஆன் செய்யத் தெரியனும் அது இல்லாம நன்றாக ஊர் சுற்றுவிட்டு கல்யாணம் வரும் போது பிரிவது என்பது ஏற்க முடியாத ஒன்று....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இதுக்குத்தான் கீதா, எங்கட கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்..
   “காதலிப்பதற்கு அழகு தேவை இல்லை..
   படிப்பு.. பதவி.. அந்தஸ்து... இதுவும் தேவை இல்லை...
   தைரியம் வேண்டும்... கடசிவரை உறுதியோடு நின்று போராடி வெல்லும் தைரியம் இருந்தால் மட்டுமே காதலில் இறங்குங்கோ என”.. அது உண்மைதானே... அந்த தைரியம் இருவருக்குமே வேண்டும்.

   Delete
 39. பெண் பார்க்கும் போது மிகவும் ஒல்லியாக இருக்கும் பெண் திருமணம் ஆனதும் குழந்தை பிறந்ததும் ரொம்பக் குண்டாவது நடக்கிறதே அப்படி இருக்கும் போது கண்டிஷன் எல்லாம் ரொம்பக் கஷ்டம் இல்லையோ..குணம்தான் எப்போதும் தங்கும் இல்லையா...
  ஆமாம் வெளிநாட்டவரிடம் எதுவும் கேட்காமல் கொடுக்க முடியாது...இது போல நிறைய விஹயங்கள் இருக்கு....நம்மிடமும் அவர்கள் அப்படித்தான் ருப்பாங்க...ஆனால் நல்ல மனதுடன் உதவுபவர்களும் இருக்கிறார்கள்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானே கீதா.. அழகு அழகு எனத் தேடி தேடி செய்கிறார்கள்.. அதுகூட ஒரு நொடியில் அழிந்து போகலாமெல்லோ...எதுவுமே நிரந்தரமில்லை.. எப்பவும் அன்பு பாசம் தான் ஜெயிக்கும்...

   மிக்க நன்றிகள் கீதா அண்ட் துளசி அண்ணன்.

   Delete
 40. ஊசி இணைப்புகள் ஓஹோ..

  அன்பும், பாசமும் ஒரு காலத்தில் தான் ஜொலித்தன. எதையும் எதிர்பாராமல் செய்யும் காலம் அது.

  இப்பொழுதெல்லாம் சுவற்றில் அடித்த பந்து மாதிரி திரும்பி வரவில்லை என்றால் அவையும் அஸ்தமனம் ஆகி விடுகின்றன.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி.

   //இப்பொழுதெல்லாம் சுவற்றில் அடித்த பந்து மாதிரி திரும்பி வரவில்லை என்றால் அவையும் அஸ்தமனம் ஆகி விடுகின்றன.
   ///
   ஹா ஹா ஹா இது என்னமோ 100 வீதம் உண்மைதான்.. இப்போ பந்த பாசம் கூட பிஸ்னஸ் என்றாகிக்கொண்டு வருகிறது. மிக்க நன்றி.

   Delete
 41. பிந்திய காதலர் தின வாழ்த்துக்கள். நான் காதலர் தினத்துக்கு கோயிலுக்குப் போய் கும்பிட்டு அன்னதானம் சாப்பிட்டு பஜனை பாடி விட்டு வந்தேன்.

  ஆண்டவனைக் காதலிப்பதால் :) :)

  ReplyDelete
 42. நோய் இருப்பதை அறிந்தும் தன் காதலை தொடர்ந்த வாலிபன் மனதை தொடுகிறான்.
  அன்பு வாழ்க! அன்பு நெஞ்சங்கள் வெகு காலம் அன்பாய் வாழ வேண்டும்.

  பின்னால் வயது ஆனால் தன்னைப் பார்த்துக் கொள்ள முடியாது என்பதாலேயேதான் அந்த காலத்தில் 10, 15 வயது குறைந்த வயதுடைய பெண்ணை மணந்தார்கள்.

  ஆனால் வயது அதிகம் என்று தெரிந்தும் காதலித்து விட்டு பின் மற்றவர் பேச்சை கேட்டு தட்டி கழிப்பது எவ்வளவு நயவஞ்சகம். இது போன்ற மனிதன் மண்ம முடிக்கவில்லை என்று கவலை படுவதே வேஸ்ட்.
  மற்ற அனைத்தும் அருமை.
  வாழ்த்துக்கள் அருமையான பதிவுக்கு.


  ReplyDelete
 43. கலப்புக் குடும்பம் என்கிற‌ அனுபவத்தில், நிறைய‌ இடங்களை வாசிக்கேக்க‌, என்னையறியாமல் தலை, 'இல்லை' என்று ஆடுறதைத் தவிர்க்க‌ முடியேல்ல‌ அதிரா. :-) எனக்கு எல்லார்லயும் எல்லா நல்லது கெட்டதும் இருக்கிறதாகத்தான் தெரியுது. கன‌ விஷயம் தனிப்பட‌, மனிதருக்கு மனிதர் வித்தியாசம்.

  //பெயர்தான் “காதலர் தினம்”// அது தமிழர் வைச்ச‌ பேர். அது உண்மையில் காதலர் தினம் இல்லை. புனிதர் ஒருவரைக் கொண்டாடும் தினம். நீங்கள் யாரையெல்லாம் நேசிக்கிறீங்களோ அவங்களெல்லாம். உங்கட‌ வலன்டைன்ஸ் தான்.
  https://en.wikipedia.org/wiki/Valentine%27s_Day

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.