நல்வரவு_()_


Sunday 25 February 2018

கடவுள் நேரில் வந்தால்?:)

சமீபத்திலே திருமதி மிஸ்டர் அஞ்சு:) அவர்கள் என்னை ஒரு பேட்டி எடுத்திருந்தா:) பிறந்தநாளில்:), அதில் கேட்ட கேள்வியில் ஒன்றுக்கு பதில் கவிதையாக இருக்கு தருவேன் எனச் சொல்லி இருந்தனா:)).. அதுதான் இப்போ உங்கள் முன். 


மிஸ்டர் அஞ்சு:-  அதிரா! உங்கள் மேலுள்ள அன்பினால் முருகன் தன், இரு மனைவியர் சகிதம், திடீரெனெ உங்கள் முன் தோன்றினால் என்ன செய்வீங்க :) ? 

சுவீட் 16 அதிரா:- ஹா ஹா ஹா குட் குவெஷன்[இந்த இடத்தில அதிரா பலமாகச் சிரிச்சா].. ஹையோ மீ ஒரு அப்பாவி என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க என கால்ல விழுந்திடுவேன்:) அதுக்கும் ஒரு நேர்த்தி வைரவருக்கு வைப்பேன்:)) [இதுபற்றி ஒரு கவிதை:) முன்பு எழுதியிருக்கிறேன்.. தேடி விரைவில் போடுறேன் என் பக்கம்:)]
=============================================================================
ஆஆஆ ஓடாதீங்க ஓடாதீங்க:) காசியில,.. காட்டுப்புலி நிக்குதாம்:) கூவத்தில, ஃபீமேல் முதலைஸ் இருக்காம்:) காவேரியில, மேல் குறொக்கடைல்ஸ் இருக்காமே ஹையோ ஹையோ:)
===========================================================================
 “காவியக் கவிதை”:)
எழுதியவர்.. கவிமாமணி:) அதிராமியாவ் அவர்கள்...:)
:)
காலையில் எழுந்து
தோய்ந்து குளித்துக்
கோலமிட்டு விளக்கேற்றி..
ஆண்டவா உன்னிடம்
நான் நிறையக் கேள்வி
கேட்க வேண்டும்
நிறைய வரங்கள் எனக்கு வேண்டும்..!!

நீதான் எப்பவும்
கல்லாகி இருக்கிறாயே
எப்போதான் பதில்
சொல்லப்போகிறாய்
எனத் திட்டிக்கொண்டு
திருநீற்றைப் பூசிவிட்டு..!!

இரவு நல்ல நித்திரை
சாமத்தில் ஆரோ காலைச்
சுரண்டுவதுபோல்
ஒரு உணர்வு
சே சே குட்டிப்பூஸார் பிராண்டுகிறார்
எனக் கண் விழித்தால்
எதிரே கடவுள்!!!

 “குட்டிப்”
பெண்ணே..:):) 
நான் தான் கடவுள்..
பகலில் திட்டினாயே!
உன் பக்தியை மெச்சி வந்தேன் நேரில்...
இப்போ கேள் என்ன வரம் வேண்டும்?
இப்பவே தருகிறேன்ன்...!!

ஹையோ எனக்கு வரமும் வேண்டாம்
ஒண்டும் வேண்டாம்ம்ம்
இப்பவே போய் விடுங்கள்
எனக்கு லெக்ஸும் ஓடவில்லை
காண்ட்ஸ்சும் ஆடவில்லை..!!

பகலில் வந்திருந்தால் 
நம்பியிருப்பேனே.
ஜாமத்தில வந்து இப்பூடி
மிரட்டுறீங்களே முருகா:)!!

ஆண்டவா இது என்ன சோதனை...
[தன் டடி ஐ அழைக்கிறாராராமாம்:)]
பகலில் அழைக்கிறார்கள்
நேரில் போனால் திட்டிக்
கலைக்கிறார்களே!! 
[இது முருகனின் புலம்பல்:)] 

புலம்பியபடி...
முருகன்:).. மயிலில் ஏறிப் போவதை
ஜன்னலில் வியர்க்க விறுவிறுக்கப்
பார்த்து நின்றேன் நான்:)..

[சிறு ஊசிக் குறிப்பு.. முருகன் வைஃப்ஸ் உடன் வரவில்லை:) தன் குண்டு:) பிரதர் உடன் வந்திருந்தார்:)]
=================================================================================
கீசாக்காவின் பதஞ்சலியும்.. முடி உதிர்தலும் பார்த்த எபெக்ட் இது:)... இது முடி உதிரவில்லை, நானாகத்தான் சுய புத்தியோடும்:) என் + வீட்டு விருப்பத்தோடும் விரும்பி எடுத்த முடிவு:).. அதுக்காக ஒரேயடியாக ஏத்தவில்லை.. கொஞ்சம் கொஞ்சமாய் ஏத்துவேன்.. பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் நீட்டுவேன் அது யொந்த விருப்பம்:).. ஏற்கனவே பார்த்தவர்கள் கண்ணை மூடுங்கோ:) ...

எப்பூடி இருந்த நான் இப்பூடி ஆகிட்டேன்:).. இப்படிக்கு அதிராவின் தலைமயிர்:)


ஊசி இணைப்பு:
சே..சே...  குண்டானால், ஒரு ஆசைக்கு:), சூசைட் பண்ணக்கூட வழியில்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்:)

குட்டி இணைப்பு:
இதை என் செக்:) போடச் சொல்லி மிரட்டினா:))
பீஈஈஈஸ்ஸ் ஆராவது என்னைக் காப்பாத்துங்கோஓஓஒ,..  அந்த கடையில வாங்கின:) ரெசிப்பி இல்லாத:) கீரை வடையைச் சாப்பிடச் சொல்லிக் கீசாக்கா கலைக்கிறாஆஆ:))
================================================================================
லேட்டஸ் குறிப்பு:
நான் பிங் பந்தர்:) ஹையோ லங்கு ஸ்லிப் ஆகுதே:) பிளக் பந்தர் பார்த்திட்டேன்ன்ன்ன்:)) புறுணம் என்னான்னா:) படம் முடியும்வரை மீ நித்திரையே கொள்ளவில்லையே தியேட்டரில்:)) இப்போ கை தட்டுங்கோ தட்டுங்கோ:)..
================================================================================
நண்பன் 1: நேற்று என் மனைவியை திட்டு திட்டெனத் திட்டிட்டேன்.. ஆருகிட்ட? எங்கிட்டயேவா?:)
நண்பன் 2: ஓ அப்படியா? சூப்பர், மனைவியை அப்படித்தான் எப்பவும் அடக்கி வச்சிருக்கோணும்:), அதுசரி, நீ திட்டும்போது அவ திருப்பி திட்டேல்லையோ?:)
நண்பன் 1: அவதான் வீட்டில இருக்கவில்லையே:) சொப்பிங் போயிருந்தா:)
================================================================================

149 comments :

 1. நான் first ஆக இல்லாட்டியும் பரவால்ல செகண்ட் வேணாம் :)
  அநத ஆயாவை என்னால் கண்ட்ரோல் பண்ண முடியாது :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ..

   //செகண்ட் வேணாம் :)
   அநத ஆயாவை என்னால் கண்ட்ரோல் பண்ண முடியாது :)//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்போ எங்கட ஆயா வெரி யங் அண்ட் பிரிட்டி:) என அறிஞ்சு கல்லெறிஞ்சு பார்க்கிறீங்கபோல:) மீ க்கு இப்போதைக்கு இந்த ஆயாவை ஆரிடமும் ஒப்படைக்கும் ஐடியா இல்லையாக்கும்:))..

   நல்லவேளை இல்லை எனில் ட்றுத் க்கு அடிச்சிருக்கும் லக்கூஊஊஊஊ ஹா ஹா ஹா:)).. அவர்தானே இன்று செகண்ட்டூஊஊஊ:)..

   Delete
 2. முடியாது :) என் அழகான ப்ரொபைல் படத்தை காணுமே :) கேள்வி கேட்டவர் இப்போ நிஜம்மா மிஸ்டர்னு நினைக்கபோறாங்க :)

  ReplyDelete
  Replies
  1. உங்க புரொபைல் படம் பூஸ் உடன் இணைக்க முடியல்ல:)..

   //கேள்வி கேட்டவர் இப்போ நிஜம்மா மிஸ்டர்னு நினைக்கபோறாங்க :)//

   ஹா ஹா ஹா இங்கதான் நீங்க குழம்பியிருக்கிறீங்க:).. இப்பூடி நினைப்பதாயின் நெல்லைத்தமிழன் தான் நினைப்பார்:) ஆனா அவரால கிளவி ஹையோ கேள்வி கேட்க முடியல்ல:) ஏனெனில் அவரே ஹஸ்பண்ட் வைஃப் கொயப்பத்தில இருக்கிறார்ர்:)) ஹா ஹா ஹா:).. அப்ப்போ நாம் ஏன் மிஸ் ஐ மிஸிஸ் ஐ மிஸ்டேஎர்ர் ஐப் போட்டுக் குழப்பக்கூடாதூஊஊஊஉ?:)) ஹா ஹா ஹா:)..

   Delete
 3. ஹாஹாஹா :) தூக்கத்தில் காலை பிராண்டியது பூஸ் குட்டியில்லா அது சுண்டெலி :)
  எதுக்கும் வாக்சின் போடுங்க

  ReplyDelete
  Replies
  1. நோஓஓஓஓஓ நான் ஸ்பை கமெராவில:) கண்டு பிடிச்சிட்டேன்ன்:) அது அந்த வள்ளிமலை முருகனேதேன்ன்ன்ன்:))

   Delete
 4. /முருகன்:).. மயிலில் ஏறிப் போவதை
  ஜன்னலில் வியர்க்க விறுவிறுக்கப்
  பார்த்து நின்றேன் நான்:).//

  இதில் சொற்பிழை உள்ளது கோர்ட்டார் அவர்களே :)
  முருகன் ஏறிப்போனார் ஆனால் :) அவரின் chubby பிரதர் எப்படி போனார் ??
  மறுபடியும் தூங்கி கனவு கண்டு கவிதை எழுதவும்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா:) குண்டு பிரதர், நான் கத்திய கத்தில பயந்து ஒரே ஜம்பில ஏறிட்டாரே:) உங்களுக்கு தெரியுமெல்லோ அஞ்சு.. சும்மா நேரத்தில செய்யாத விசயங்களை எல்லாம் பயத்தில பக்கென சிம்பிளா செய்வோம்:)..

   ஒரு தாய் குழந்தையை குளிக்க வார்த்து கிணற்றுக் கட்டில் நிக்க விட்டுப் பிடிச்சுக் கொண்டு துடைச்சிருக்கிறா, குழந்தை வழுக்கி கிணற்றுக்குள் விழுந்து விட்டது... அது மணல் ஆன ஊராம்.. அப்படி ஊர்களில் கிணறு ஆளம் இருக்காது.. மொத்தம் 10, 15 அடி ஆளம்தான் இருக்கும்.. அதில் தண்ணி.. காலநிலையைப் பொறுத்து ஏறி இறங்கும்...

   அப்போ குழந்தை விழுந்ததும், அந்தத்தாய் சடாரென தானும் குதிச்சு குழந்தையை தலைக்கு மேலே தூக்கிப் பிடிச்சுக் கொண்டாவாம்.. குழந்தை தப்பி விட்டது ஹா ஹா ஹா:)..

   //மறுபடியும் தூங்கி கனவு கண்டு கவிதை எழுதவும் //
   கர்ர்ர்ர்:))

   Delete
 5. எதிரே கடவுள்!!!

  “குட்டிப்”பெண்ணே..:):)
  நான் தான் கடவுள்..//

  யாரராவது இருக்கீங்களா ..ஒண்ணுமில்ல மயக்கம் வருது கொஞ்சம் தாங்கிப்பிடிங்க என்னை

  ReplyDelete
  Replies
  1. ///யாரராவது இருக்கீங்களா ..ஒண்ணுமில்ல மயக்கம் வருது கொஞ்சம் தாங்கிப்பிடிங்க என்னை//

   ஹா ஹா ஹா அச்சச்சோ ...அஞ்சு சமோசா சாப்பிட்டிட்டா எல்லோரும் ஓடியாங்கோ:)) நல்ல ஐஸ் வோட்டர் எடுத்து வாங்கோ அடிச்சு எழுப்புவோம்ம்:))

   Delete
 6. அஆவ் !! மயில் தோகை நான் ஏற்கனவே பார்த்தது ஆனால் அந்த நெக்லஸ் டிசைன் தெர்ல :) க்ளோசப்பில் போடுங்க :)

  ReplyDelete
  Replies
  1. //க்ளோசப்பில் போடுங்க :)//
   கர்ர்:)) இது பச்சைக்கல்லு அல்ல:) அதுதான் பயத்தில லொக்கரிலேயே இருக்கே:) ஹையோ ஆண்டவா அதை எப்போதான் வெளில எடுக்க முடியுமோ:)

   Delete
 7. ஊசி இணைப்பு :)))))))))
  குட்டி இணைப்பு ரெண்டும் நீங்களா :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஊசி இணைப்பு:) குண்டாகிடுவேனோ எனும் பயத்திலதானே அடிக்கடி கே எஃப் சி சப்பிடாமல் என் பல்லை:) மனசைக்:) கஸ்டப்பட்டுக் கட்டிக்கொண்டிருக்கிறேன்:))

   Delete
 8. லேட்டஸ்ட் குறிப்புக்கு :) நான் பார்த்தாதான் நம்புவேன் அதாவது நீங்க தூங்கலைன்னு சொல்றதை தியேட்டர் செல்வி போடுங்க

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா எனக்கே ஆச்சரியம்:)) நானா நித்திரையே கொள்ளாமல் பார்த்து முடிச்சேன் என.. அதுவும் இது ஆக்‌ஷன் மூவி வேற:).. ஆனா முழுக்க முழுக்க அப்புரிக்காவில:) எடுத்தது.. என்னமோ இன்றஸ்ரிங்கா இருந்துது... அந்த பிளாக்ஸ் உம் ச்ச்சோ கியூட்டா இருந்தார்கள்:)..

   Delete
 9. நண்பன் 1 மனைவி ஜோக் :)) அதெப்படி ஷொப்பிங் போகும்போது திட்ட தைரியம் வந்தது :) அடி போதலையோ :)

  ReplyDelete
  Replies
  1. //அடி போதலையோ :)//

   ஹா ஹா ஹா எதுக்கும் ட்றுத்திடம் தான் கேட்டுப் பார்க்கோணும்:)) மியாவும் நன்றிகள் அஞ்சு... இன்று ரைமே கிடைக்கல்ல மீக்க்கு கர்ர்ர்:).

   Delete
  2. அது மதுரை தானே!!! ஏஞ்சல் அண்ட் அதிரா!!!

   கீதா

   Delete
  3. அவரேதான் கீதா:) இதிலென்ன சந்தேகம்:)) ஹா ஹா ஹா..

   Delete
 10. கழுத்துல மாட்டி இருக்கிற நெக்லஸை பார்த்துட்டேன் இனிமே அங்க உள்ள ஆட்கள் கிட்ட சொல்லி தட்டிகிட்டு வரனும்,,

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ:)).. ஹா ஹா ஹா கர்ர்ர்:) நெக்லெஸ் ஐ பார்த்ததும் உடனடியா லாண்ட் ஆகிட்டீங்க:).. இங்குள்ளோர் எல்லாம் அதிரா கட்சி உறுப்பினர் ஆக்கும்:)..

   Delete
 11. அதிரா எழுதின கவிதையையும் படிச்சுடேன் அவங்க கழுத்தில் இருக்கிற நெக்லஸையும் பார்த்துடேன் போதாக்குறைக்கு அவங்க படத்தை கொஞ்சம் பெரிசு படுத்தியும் பார்த்துடேன் ஹும்ம் இன்னைக்கு சிவராத்திரிதான் தூக்கம் போயு துக்கம் வந்துடும்

  ReplyDelete
  Replies
  1. ///ஹும்ம் இன்னைக்கு சிவராத்திரிதான் தூக்கம் போயு துக்கம் வந்துடும்///

   அவ்ளோ அயகாவோ தெரியுதூஊஊஊஊ:)) ஹா ஹா ஹா சரி சரி முறைக்காதீங்க:) எதுக்கும் பைபிள் படிச்சிட்டுப் படுங்கோ நல்ல கனவா வரட்டும்:)) ஹையோ ஹையோ.. மிக்க நன்றி ட்றுத்.

   Delete
 12. புத்தி சிகாமணி பெற்ற பிள்ளையை விட இனிமையான பாடல்கள் இருவர் உள்ளத்தில் உண்டே...!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...

   என் ஜொந்தக் கதை ஜோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கோ:)..

   இந்தப்பாட்டும் என் மாமியிடம் எடுத்து வந்த சிடியில் இருந்துதா.. பல தடவை கேட்டுச் சிரிச்சதால இன்று போடலாமே என நினைச்சால்... எந்தப் படம் எனவும் தெரியாது ஆரம்ப வரிகளும் தெரியாது....

   ஆராரோ அடி ஆராரோ அட அசட்டுப்பயபிள்ள.. இதுதான் ஆரம்பம் என நினைச்சு வன் அவரா தேடியும் கிடைக்கல்ல்ல.. பின்பு விடா முயற்சி பண்ணி இடை வசனம் எழுதி தேடி.. படப்பெயரை கண்டு பிடிச்சு.. பின்பு ஈசியா பாட்டைக் கண்டு பிடிச்சேன்..

   இது நகைச்சுவை என்பதாலயே போட்டேன்.

   நீங்கதான் சின்னனிலிருந்தே பாட்டுக் கேட்டு வளர்ந்தவர் என்பதால உங்களுக்கே சவாலா சில பாடல்கள் போடோணும் என நினைச்சிருக்கிறேன்:).. என்னிடம் ஒரு சிடி இருந்தது.. ஆனா இப்போ எங்கிருக்கு என தெரியவில்லை தேடி எடுத்து பின்பு அதை இங்கு பொடோணும் பார்ப்போம் ஒரு நாளைக்கு.. அப்பாடல்கள் இண்டநெட்டில் எங்கயுமே இல்லாதவை:).

   Delete
 13. ரொம்ப நாளா ஒரு சந்தேகம்... அல்லது நாந்தான் மறந்துட்டேனா... முருகன் எப்படி வைரவர் ஆனார்? (இதற்கு நெல்லைத்தமிழனே கூட பதில் சொல்லக்கூடும்!)

  ReplyDelete
  Replies
  1. வயிரவன் என்பது பைரவர் என்பதன் திரிபு. சிவனைக் குறிக்கிறது. பேச்சு வழக்கில்,வயிரவர், அல்லது வைரவர். இது நகரத்தார் (நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்) சம்பந்தப்பட்ட கோவில். பொதுவா அவங்க முருகனைக் கும்பிடுவதாலும், சைவத்தை (மதம்) தீவிரமாகப் பின்பற்றுவதாலும் வியாபாரத்திற்காக்க் கடல் கடந்து செல்லும் இடங்களில் முருகன் சம்பந்தமான கோவில் கட்டுவர், அதில் வயிரவர் சன்னிதியும் உண்டு. இலங்கையிலும் அவர்கள் கட்டியிருப்பார்கள். (1மார்க் கேள்விக்கு 10 மார்க் கேள்விக்குள்ள விடையா இருக்கோ?)

   Delete
  2. ///முருகன் எப்படி வைரவர் ஆனார்?///
   அவ்வ்வ்வ்வ்வ் முருகன் எப்போ வைரவர் ஆனார்ர்?:) இவர் வேற அவர் வேற:).. மீ அதிகமாக் கும்பிடுவது வைரவரை... கூப்பிடுவது மற்றும்படி ஸ்கந்தசஷ்டி 6 நாட்கள் விரதமிருப்பது மட்டும் வள்ளீஸ் ஹஸ் க்காக ஹா ஹா ஹா:))

   Delete
  3. ஓ நெல்லைத்தமிழன்.. அது பேசுவழக்கோ என்னவோ தெரியாது நாங்கள் பேசுவது வைரவர் எனத்தான். இலங்கைக் கோயில்களில் ..மூலஸ்தானம் எக்கோயில் ஆயினும்.. உள் வீதி சுத்திக் கும்பிட்டு வரும்போது முடிவிலே ஒரு வைரவர் சிலையோ அல்ல சூலமோ நிட்சயம் இருக்கும்[குட்டி அறையில்].

   ///சைவத்தை (மதம்) தீவிரமாகப் பின்பற்றுவதாலும் ///
   என்னைத்தானே ஜொன்னீங்க:) மீக்கு ஒரே ஷை ஷையா வருதே:)) ஹா ஹா ஹா சரி சரி முறைச்சிடாதீங்கோ மீ பயந்திடுவேனாக்கும்:))

   Delete
  4. ஸ்ரீராம் திருப்பத்தூர், காரைக்குடி அருகே நிறைய பை(வை)ரவருக்கு நேர்ந்து அல்லது பரிகாரக் கோயில்கள், அங்கு நிறைய இருக்கு. பிள்ளையார்ப்பட்டி, வைரவன்ப்ட்டி என்றே இருக்கு. என் தங்கையின் பெண்ணிற்காக நான் அவளுடன் சென்றேன் அத்தனை கோயில்களுக்கும்... நெல்லை சொல்லிவிட்டார். எனவே இங்கு நான் அதை விவரிக்கவில்லை..

   கீதா

   Delete
  5. நான் சென்ற வைரவர் விசேஷமாக உள்ள கோயில்களின் படங்கள் இருக்கு...போடனூம் என்று நினைத்துப் போடவில்லை போடுகிறேன் ஸ்ரீராம்..அண்ட் அதிரா...

   கீதா

   Delete
  6. போடுங்கோ கீதா, இலங்கையிலும் வைரவர் கோயில்கள் அதிகம் உண்டு.

   Delete
 14. கூவத்தில் முதலைகள் இருந்தால் மூச்சுத்திணறியே செத்துவிடும்! வாசனையான இடம்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நானும் கேள்விப்பட்டேன், ஆனா ஒரு காலத்தில அது அழகிய நதியாமே:(..

   Delete
 15. முருகன்
  நள்ளிரவில்
  வந்து மிரட்டிய
  கவிதையைப்
  படித்து
  மெய்ஸிலிர்த்துப்
  போனேன்.
  அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மீயும் தான் மெய் சிலிர்த்திட்டேன்:)).. ஏனெனில் கடவுள் எப்பவும் கல்லாக, பேசாமல் இருப்பதை பார்த்தே பழகிட்டோம்ம் திடீரெனப் பேசினால் நமக்கு ஹார்ட் அட்டாக் வந்திடுமே.. கனக்க வாணாம்.. திடீரென எங்கட டெய்சி... என்னைப் பார்த்து.. மம்மி ஐ ஆம் ஹங்றி:) எண்டால்ல்.. என் கதை என்ன ஆவுறது?:).. ஹையோ அதுக்குப் பிறகு வீட்டில வச்சிருக்க முடியுமோ?:)).. அதது அப்படி அப்படி இருப்பின் மட்டுமே நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது:)) ஹா ஹா ஹா.

   Delete
 16. //எப்படி இருந்த நான்....? // படம் பார்த்ததும் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. நேற்று மாலை இல்ல விசேஷத்துக்கு சென்றிருந்தேன். அங்கு இந்தத் தலைமுடி பற்றிக் கேள்விப்பட்ட ஒரு விஷயம் அதிர்ச்சியாய் இருந்தது. வியாழன் ஒன்றில் பகிர்கிறேனே...

  ReplyDelete
  Replies
  1. ஹையோ அப்பூடி என்ன அதிர்ச்சி தகவல் சொல்லப்போறீங்க.. ஆச்ச்ர்யக்குறி!!! ஹா ஹா ஹா..

   Delete
  2. ஸ்ரீராம் அந்த அதிர்ச்சி செய்தி இதுவா...கட் செய்யப்படும் முடிகள் சேகரிக்கப்பட்டு அதில் இருந்து ப்ரோட்டின் எடுத்து சாக்கலேட்டில் கலக்கிறார்கள் என்பதா??!!!! அதன் தலைப்பு இங்கிருந்து முடிகள் சேகரிக்கப்பட்டு ஃப்ரான்ஸிற்கு (குறிப்பாகப் பாண்டிச்சேரி கடலூர் பக்கங்களில் இருந்து) சாக்கலேட் தயாரிப்பிற்கு அனுப்பப்படுகிறது என்று பல வருடங்களுக்கு முன் குமுதத்தில் (அப்படித்தான் நினைக்கிறேன்) வாசித்த நினைவு...அந்த அதிர்ச்சி செய்தியா??!!! ஸ்ரீராம்....

   கீதா

   Delete
  3. ஆவ்வ்வ்வ்வ்வ் அப்படியா கீதா? நான் இன்னொன்று அறிஞ்சேன், பப்பி பூஸ்களின் குறூம் பண்ணும் கெயாரை எடுத்து தொப்பிக்கு ஜக்கெட்டுக்கு பஞ்போல இருக்க கொலர்களுக்கு வைக்கிறார்களாம்.. அது துணி என நாம் நம்பி மூக்கில எல்லாம் போட்டு உரஞ்சுகிறோம் ஹா ஹா ஹா.. இத்தொப்பியின் உச்சியில் இருப்பதைத்தான் சொல்கிறேன்.

   இருப்பினும் ஸ்ரீராமின் சீக்ரெட்டை இப்பூடி உடைச்சிட்டீங்களே:) அல்லது அவரிடம் இருப்பது வேறயோ தெரியல்ல வெயிட் அன்ட் சீ:))

   [im]http://cdn2.next.co.uk/common/Items/Default/Default/Publications/G22/shotview-315x472/520/175-328s.jpg [/im]

   Delete
 17. ஹா... ஹா... ஹா... ஊசி இணைப்புப் பார்த்ததும் சிரித்து விட்டேன். ச்சீச்சீ... சிரிக்கக்கூடாது. ஒருவருடைய உடல்நிலைக் குறைகள் பற்றி ஜோக் வந்தால் சிரிக்கக்கூடாது என்று எங்கள் பாட்டி சொல்லி இருக்கார்.

  ReplyDelete
  Replies
  1. எங்கட குயின் அம்மம்மாவும் அப்பூடித்தான் அடிக்கடி சொல்லுவா:).

   சில விசயங்களை ரசிச்சுப்போட்டு மனதோடு விட்டுவிடவேண்டும்:) கிட்னிக்கு எடுத்துப் போய்ச் சிந்திக்கக்கூடாது:)).. நகைச்சுவையாக விட்டிடோணும். அடுத்தவர் மனம் நோகக் கூடாது மற்றும்படி ஆகலும் பேஃபெக்ட்டா இருக்கோணும் என நினைச்சு வாழக்கூடாது என்பதே என் கருத்து... கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ... எனும் வசனத்தில் நான் அடிக்கடி நினைப்பது... கோடு போட்டு வாழலாம் ஆனா தேவை ஏற்படின் கொஞ்சம் அக்கோட்டை வளைச்சு நெழிச்சும் வாழத் தெரியோணும் என:).. ஹையோ ஓவரா அலட்டிட்டேன் போல:))

   Delete
 18. கீரை வடையைப் பார்த்து அப்படி எல்லாம் ஓடப்பிடாது... எப்படியுமே நல்லா இருக்குமாக்கும்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அது உண்மைதான் ஆனா கீசாக்காவுடன் தனக நினைச்சோம்:).. அவ இந்நேரம் பார்த்து உர் சுத்தப் போயிட்டா கர்ர்ர்:))

   Delete
 19. ப்ளாக் பந்தர் என்றொரு படமா? கேள்விப்பட்டதில்லையே... நண்பனின் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. அது இப்போதான் வெளிவந்து தியேட்டர்களில் ஓடுது ஸ்ரீராம், பிங் பந்தர் என ஒரு கார்ட்டூன் இருக்கு.. ஆனா இது கார்ட்டூன் அல்ல கொஞ்சம் ரீன் ஏஜ் பிள்ளைகளுக்கானது... முழுக்க முழுக்க கறுப்பு மக்களை வைத்தே எடுக்கப்பட்டிருக்கு...

   https://www.hollywoodreporter.com/amp/heat-vision/black-panther-how-disney-created-a-phenomenon-1086820

   https://www.youtube.com/watch?time_continue=76&v=fsT5SyBLlIg

   மிக்க நன்றிகள்.

   Delete
 20. கவிதையை இரசித்தேன் இருப்பினும் வந்த கடவுளுக்கு கண் சரியாக தெரியாது என்று நினைக்கிறேன்.

  காரணம்...
  "குட்டிப்பெண்ணே"
  என்று சொல்லி இருக்கிறாரே...

  மற்ற துணுக்குகளும் ஸூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

   //இருப்பினும் வந்த கடவுளுக்கு கண் சரியாக தெரியாது என்று நினைக்கிறேன்.

   காரணம்...
   "குட்டிப்பெண்ணே"
   என்று சொல்லி இருக்கிறாரே...//

   ஹா ஹா ஹா கர்:) இருட்டில அப்பூடித் தெரிஞ்சுதோ என்னமோ:) இருப்பினும் கடவுளே அப்பூடிச் சொல்லிட்டாரே என உங்களுக்குப் பொறாமை:))..

   மிக்க நன்றி.

   Delete
 21. காலையில் எழுந்து
  தோய்ந்து குளித்துக்
  கோலமிட்டு விளக்கேற்றி.//

  என் அம்மா சொல்லுவது போல் குளிக்கும் முன் துவைத்து குளித்தா?
  அல்லது மனம் லயித்து குளித்து (தோய்ந்த ) என்று அர்த்தமா?

  ஆண்டவா இது என்ன சோதனை...
  [தன் டடி ஐ அழைக்கிறாராராமாம்:)]
  பகலில் அழைக்கிறார்கள்
  நேரில் போனால் திட்டிக்
  கலைக்கிறார்களே!!
  [இது முருகனின் புலம்பல்:)]

  புலம்பியபடி...
  முருகன்:).. மயிலில் ஏறிப் போவதை
  ஜன்னலில் வியர்க்க விறுவிறுக்கப்
  பார்த்து நின்றேன் நான்:)..//

  அதானே! இப்படி புலம்ப விட்டு விட்டீர்களே!

  ஊசி இணைப்பு நகைச்சுவை என்றாலும் வேண்டவே வேண்டாம்.


  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

   //என் அம்மா சொல்லுவது போல் குளிக்கும் முன் துவைத்து குளித்தா?
   அல்லது மனம் லயித்து குளித்து (தோய்ந்த ) என்று அர்த்தமா?//

   ஹா ஹா ஹா இல்ல கோமதி அக்கா, தலையில் தண்ணி ஊத்திக் குளிப்பதை “தோய்தல்” என்போம், நாம் குளிக்கப் போகிறேன் என்றால் அதன் அர்த்தம்.. தோளில் மட்டும் தண்ணி ஊத்திக் குளித்தல். தோய்வது என்றால்... சும்மா சம்போ போட்டுத் தலை கழுவித் தோய்தல். முழுகுதல் என்றால்... எண்ணெய் வைத்து ஊறவிட்டு பின்பு ஏதாவது பிரட்டி முழுகுதல்.

   மற்றது தோய்த்தல்.. என்றால்தான் உடைகள் கழுவுதல்:)) ஹா ஹா ஹா ஒரு எழுத்து வித்தியாசம்தான் ஆனா வெவ்வேறு அர்த்தம்.

   //ஊசி இணைப்பு நகைச்சுவை என்றாலும் வேண்டவே வேண்டாம்.//

   அது உண்மைதான், இது சும்மா சிரிப்பதற்காகவே.. மற்றும்படி சா என்றாலே பயம்தானே:)..

   Delete
 22. நண்பர்கள் பேசியது கேட்டு சிரித்தேன்.

  ReplyDelete
 23. பாடல் பகிர்வு நன்றாக இருக்கிறது. இருவர் உள்ளம் படம்.

  ReplyDelete
  Replies
  1. ஓ மிக்க நன்றி.. அதுதான் அது இருவர் உள்ளம் படப்பாடல் எனக் கண்டுபிடிக்கவே எவ்ளோ நேரமாச்சே எனக்கு:) மேலே ஸ்ரீராமுக்கு விளக்கமா சொல்லியிருக்கிறேன் படிச்சுப் பாருங்கோ கோமதி அக்கா.

   Delete
 24. காசி ராமேஸ்வரம் போனலும் பந்த பாசம், ஆசை விடுமோ!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அதேதான்... செவ்வாய்க் கிரகத்துக்குப் போனாலும் ஆசை போகாது:)..

   Delete
 25. காவியக்கவிதை கேட்டு சகோதர்கள் மயிலில் வந்து காட்சி கொடுத்தது மெய்சிலிர்க்க வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அப்போ மீ கவிமாமணிதானே?:) மிக்க நன்றி கோமதி அக்கா.

   Delete
 26. குண்டுப் பெண் பற்றிய நகைச்சுவை நல்லா இல்லை. அதுவும் சூசைடு கான்செப்ட் நல்லால்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. அதுசரி பெயரை சோட் ஆக்கிட்டீங்களே:) இனி நெதர்லாண்ட் எனவும் சொல்லலாம்:)..

   அதெப்பூடி இவ்வளவும் இருக்க, வந்த வேகத்தில் குண்டுப் பெண் தான் உங்கட கண்ணில பட்டிருக்கு:)) ஹா ஹா ஹா உண்மைதான் அது சிரிக்க மட்டுமே.. சும்மா சிரிச்சிட்டுப் போயிடலாம்:)..

   Delete
 27. பேன்ட் ஷர்டோடு விபூதி பூசிய கே.பி.சுந்தராம்பாள் மாதிரியே அதிரா படம் வந்திருக்கு, பாருங்க என்று இந்த ஏர்போர்டில் எடுத்த மூணாவது படத்தைப் பார்க்கத்தான் ஏஞ்சலின் எனக்கு மெயில் அனுப்பியிருந்தாங்களா?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹாஹா :) அந்த பழம் நீயப்பா பாட்டு லிங்க் அதையும் சொல்லுங்க

   Delete
  2. ///பேன்ட் ஷர்டோடு விபூதி பூசிய கே.பி.சுந்தராம்பாள் மாதிரியே//

   ஆவ்வ்வ்வ் அஞ்சுவோ சொன்னா:) நீங்க நம்பேல்லைத்தானே?:)).. நான் நேற்று ஈவினிங் அவவை தேம்ஸ் கரையில பார்த்தபோதே அவட பார்வையே சரியில்லை:) ஏதோ கள்ளம் செய்துபோட்டு திருதிரு என முழிப்பதைப்போலவே இருந்தா:)) அப்பவே நினைச்சேன்:) ஏதோ அஜம்பாவிதம் நடந்திருக்கு என கர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   ஆனா எனக்கென்னமோ இந்த புகை ஃபுரொ பாலைவனம் போலவே இருக்கே:)) சரி சரி எனக்கெதுகு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயெர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

   Delete
  3. ///ஹாஹாஹாஹா :) அந்த பழம் நீயப்பா பாட்டு லிங்க் அதையும் சொல்லுங்க//

   ஆஹா.. எடுத்து எடுத்துக் குடுக்கிறாவாமாம்ம்ம்ம்:) இதை அவருக்கு வட்ஸ்சப் ல அனுப்பியிருக்கலாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

   Delete
 28. கவிதை நல்லாத்தான் இருக்கு. கடவுளைக் கும்பிடும்போது நேர்ல வந்தா நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

  Art of Living courseல ஒரு பகுதியா randomஆ course participantsஐ இரண்டிரண்டாகப் பிரித்து கண்ணை மூடிக்கொண்டு ஒருவர் முன்னால் ஒருவரை அமரச்சொல்வார்கள். பிறகு "கடவுள் எதிரில் உள்ள உருவத்தில் வந்திருக்கிறார்" என்று அவருடைய கண்களையே உற்றுப்பார்க்கச் சொல்லுவார்கள். கடவுள் என்பது எங்கும் இருப்பவர், அவரை மற்ற எல்லோரிடத்திலும் காணமுடியும் என்பது concept. இது நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. //கடவுளைக் கும்பிடும்போது நேர்ல வந்தா நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.//

   அது உண்மைதானே நான் பலதடவை நினைப்பதுண்டு நாமும் ஒரு விதத்தில் லஞ்சம்போலவேதானே எதிர்பார்க்கிறோம் என:) ஹா ஹா ஹா அதாவது சும்மா ஒரு உதாரணத்துக்கு... கடவுளே எனக்கு இந்த ஜொப் கிடைக்கோணும் என வேண்டினால்.. அது கடவுள் இன்விசிபிளாக நம்மோடு இருந்து பெற்றுத்தரோணும் எனத்தானே எதிர்பார்க்கிறோம்.

   பிள்ளையார் தும்பிக்கையோடு வந்து நம் வீட்டு டோரைத் தட்டி என்னோடு வா வேலை வாங்கித் தருகிறேன் என்றால்.. நாங்க ஏற்றுக் கொள்வோமோ ஹா ஹா ஹா..

   //Art of Living courseல// ஓ இது கைண்ட் ஒஃப் மெடிரேசனோ?.. நீங்க இதில் நிறைய கோர்ஸ் போயிருக்கிறீங்களோ?.. இங்கும் மெடிரேசன் வகுப்புக்கள் நடக்கின்றன எனக்கும் ஒரு தடவை போய் அதென்ன அது எனப் பார்க்கோணும் என ஆசை:))

   Delete
 29. கடவுள் வந்து காலைச் சுரண்டினார் என்று எழுதியிருக்கீங்களே. கடவுளா அல்லது பெருச்சாளி, எலியா?

  ReplyDelete
  Replies
  1. haahhahaaaaaaaaaa :) அது பிள்ளையார் அவரது வெஹிக்கிளை அனுப்பி எழுப்ப விட சொல்லியிருப்பார் :)

   Delete
  2. //கடவுள் வந்து காலைச் சுரண்டினார் என்று எழுதியிருக்கீங்களே. கடவுளா அல்லது பெருச்சாளி, எலியா?//

   ஹா ஹா ஹா கர்:)) பெருச்சாளி வந்தா எங்கட டெய்சி அலோ பண்ண மாட்டாவே:).. நான் முருகனை நேரில பார்த்தனே:))..

   //haahhahaaaaaaaaaa :) அது பிள்ளையார் அவரது வெஹிக்கிளை அனுப்பி எழுப்ப விட சொல்லியிருப்பார் :)//

   மிக்க நன்றி நெ.த.
   -----
   இல்ல அஞ்சு அவர் முருகனின் வெகிக்கிளில்தானே வந்திருந்தார்:) பறந்து வருவது இசி எல்லோ:)) ஹா ஹா ஹா..

   Delete
  3. நெல்லைத்தமிழன் உங்களுக்கு ஒன்று சொல்ல நினைச்சு மறந்திட்டேன்... கடந்த ரெண்டு கிழமையாக உங்கள் நெல்லிக்காய் குறிப்பு வெளிவரும் என நிறைய நெல்லிக்காய்கள் வாங்கி வச்சு ஏமாந்து:) இன்றோடு எல்லாம் முடிஞ்சு போச்ச்ச்:)).. இனி தமிழ்க்கடைக்குப் போகும்போது.. அங்கு இருந்தால்தான் வாங்கலாம்.

   Delete
 30. முடி அழகு முக்கால் அழகு என்பார்கள்.எப்படித்தான் மனது வருகிறதோ வெட்ட !
  வசதிகள் கருதி இப்போது முடி வெட்டப் படுகிறது. முடியை கவனிப்பது பெரிய வேலையாக குளிர். வெயில் சமயம் கவனிப்பது கடினம் என்று இல்லையா?
  அழகான அதிரா நீண்ட முடியோடு , முன்பு பார்த்து இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நம் ஊரில்தான் கஸ்டப்பட்டாலும் முடி தேவை கோமதி அக்கா. இங்கு பராமரிப்பது.. நினைத்த நினைத்த உடன் வெளிக்கிட்டு ஓட முடியாது.. இனொன்று வின்ரர் காலத்தில் ஜக்கெட்,மஃப்ளர் கட்டிப் போகும்போது இவ்ளோ பெரிய மயிரை வைத்து என்ன பண்ண முடியும்.. குளிர் காலத்தில் தலையில் தோய்ந்தால் உடனே காயாது.. ஹெயார் ட்றையர் எனினும் எப்படி அவ்ளோ மயிருக்கும் பிடிப்பது..

   அடுத்து இப்படி பெரிசு எனில் பின்னித்தான் விடோணும்.. இங்கு பின்னி விட்டால் பட்டிக்காடு போல இருக்கும்.. கோவணம் கட்டும் ஊரில் வேட்டி கட்டுபவர் பைத்தியக்காரர் என்பது போலாகிடும்:)....

   பிள்ளைகள் கூட இப்போ தோளுக்கு மேலே வளர விடுகினம் இல்லையே..

   அதிலும் இங்கு ஸ்கொட்டிஸ் இல் ஒரு பழக்கம் இருக்கு... குழந்தைகளுக்கு நல்ல நீட்டாக வளர்ப்பார்கள்.. ஹை ஸ்கூல் வந்ததும் எல்லோரும் இடுப்போடு அல்லது அதுக்கு மேலே வெட்டி விடுவார்கள்... பேரன்ஸ் சோல்ட்டரோடு வெட்டி யிருப்பினம்.... வயதானோர்ர் அதாவது கிரான்மதேர்ஸ்.. boys cut போல வெட்டி இருப்பார்கள்.. ஹா ஹா ஹா.

   Delete
 31. [இந்த இடத்தில அதிரா பலமாகச் சிரிச்சா]..
  அதனலோ எங்க ஊர்ள பூமியாடதிர்ச்சி வன்த

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ தம்பி மொகமட் வாங்கோ..

   //அதனலோ எங்க ஊர்ள பூமியாடதிர்ச்சி வன்த//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கோல் ஃபேஸ்ல தள்ளிப் போடுவேன்ன்:)... நான் சிரிச்சால் அருகில் இருப்பவர்களுக்கே கேட்குதில்லையாம் ஹா ஹா ஹா:) மிக்க நன்றி வருகைக்கு.

   Delete
 32. நல்லவேளை... முருகன் தனியா வந்தார்!..

  வீட்டுக்கார அம்மணிகளை அழைத்து வந்திருந்தால் -

  இவங்களோட கொஞ்ச நேரம் கதைச்சிட்டு வாரோம்...நீங்க போய்ட்டு அப்புறமா வாருங்கோ!.. - ன்டு சொல்லியிருப்பாவளே...

  முருகன் பாடு திண்டாட்டமா போயிருக்கும்...

  இருந்தாலும், முருகனையும் புலம்ப விட்ட ஆள் நீங்களாத் தான் இருக்கும்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ..

   //வீட்டுக்கார அம்மணிகளை அழைத்து வந்திருந்தால் -

   இவங்களோட கொஞ்ச நேரம் கதைச்சிட்டு வாரோம்...நீங்க போய்ட்டு அப்புறமா வாருங்கோ!.. - ன்டு சொல்லியிருப்பாவளே...//

   ஹா ஹா ஹா ஹையோ என்னா ஒரு கொலை வெறிக் கற்பனை:)) இல்ல நான் எப்பூடியாவது ஐசூஊஊஊ வச்சு அவர்களின் கழுத்தில காதில கையில இருப்பதை வாங்கியிருப்பனே:))

   //இருந்தாலும், முருகனையும் புலம்ப விட்ட ஆள் நீங்களாத் தான் இருக்கும்!.//
   ஹா ஹா ஹா அது உண்மைதான்.. மிக்க நன்றி துரை அண்ணன்.

   Delete
 33. கவிமாமணி அதிராவுக்கு வணக்கம்!

  அடடா... உங்கள் கற்பனைத் திறனை எப்படி வாழ்த்துவதென திகைத்துப் போய் நிற்கின்றேன்...
  கவிதை அசத்தல் + அருமை! ஆயினும் வந்த கடவுளைத் திரும்பி ஓடவைச்சிட்டீங்க என்றுதான் கவலையாக இருக்கு...:)

  கடவுள் நேரில் வந்தால்.... எத்தனை விடயங்கள் கேட்டிருக்கலாம்...
  ச்சா.... இப்படி வந்த வேகத்தில் திரும்பிட வைச்சிட்டீங்களே...கர்ர்ர்ர்ர்ர்..:))
  நல்லா முருகனைக் கும்பிடுறீங்கதானே பிறகேன் கனவில் கண்டவுடனே இப்படிப் பதறி நம்பமாட்டன் எண்டு சொன்னீங்க..
  உங்களுக்கில்லாட்டியும் எனக்காகவாவது ஏதாச்சும் வரம் கேட்டிருக்கலாம்...:))
  புதுக் கவிதை எனக்குப் பிடிச்சிருக்கு!

  நெஞ்சைக் கவரும் நிலையில் கவிபடைத்தாய்!
  கொஞ்சும் தமிழைக் குழைத்து!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இளமதி வாங்கோ..

   /கவிமாமணி அதிராவுக்கு வணக்கம்!//
   ஹா ஹா ஹா ஒரு கவிஞருக்குத்தானே புரியுது என் அருமை:)) பாருங்கோ அஞ்சு என்னை கவியரசு என ஜொள்ளவே இல்லை:))..

   //வந்த கடவுளைத் திரும்பி ஓடவைச்சிட்டீங்க என்றுதான் கவலையாக இருக்கு...:)//
   ஹா ஹா ஹா பின்ன ஒரு சுவீட் 16 பிள்ளைக்குப் பயம் வராது?:) நான் கூப்பிடும்போது வந்திருக்கலாமெல்லோ:) மாவிளக்கு போட்டபோதுகூட வரல்லியே ஹா ஹா ஹா:)..

   //உங்களுக்கில்லாட்டியும் எனக்காகவாவது ஏதாச்சும் வரம் கேட்டிருக்கலாம்...:))//
   அடுத்தமுறை வருவாருக்கும்:) உங்கட அட்றஸ் ஐக் கையில குடுத்து அனுப்பி வைக்கிறேன்:)) ஹா ஹா ஹா:).

   /புதுக் கவிதை எனக்குப் பிடிச்சிருக்கு!//
   அவ்வ்வ்வ் மிக்க நன்றி.

   Delete
 34. அதிரா.....

  உன்வடிவம் காட்டினாய்! ஊரே திரளுதடி!
  என்சொல்வேன் நானும் இனி!

  செந்தமிழ்த் தேன் மொழியாள்
  நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்.... பாடலில் வரும்

  பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
  பேரழகெல்லாம் படைத்தவளோ! எனும் வரிகளே உங்கள் படங்களைப் பார்க்கையில் என் நினைவிற்கு வருகிறது அதிரா!...😃

  உங்கள் கார்முகில் வண்ணக் கருங்கூந்தலும் அழகோ அழகுதான்.
  வளர்வதும் தேய்வதும் வானில் நிலவு மட்டுமல்ல உங்களின் கூந்தலும்தான் என்று புரிந்துகொண்டேன்..
  இங்கே வாழும் பெரும்பாலானவர்க்கு இங்கத்தைக் கால நிலைகளால் சும்மாவே முடிகொட்டி வெட்டாமலே இப்பத்தைப் படத்தில் நீங்கள் இருக்கிற நிலைதான்...☺️

  தியேட்டரில் நீங்கள் தூங்கிவிடுவதுபோல நானும் வீட்டில் ரிவியில் என் பிள்ளைகள் தமிழ்ப்படங்கள் போடுவார்கள். அப்போது என்னையும் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்திப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே படங்களில் சண்டைக் காட்சிகள், பாட்டுக் காட்சிகள் தொடங்க நான் இருந்த இடத்திலேயே நல்ல கொர்ர்ர்ர்தான்....😂

  ஊசி இணைப்புக்கு வேறு போட்டிருக்கலாமே என நானும் நினைத்தேன்... ஆயினும்
  இல்லையில்லை இது இப்படியே இருக்கட்டும் என்று இப்போ நினைக்கிறேன். காரணம், உங்கள் படங்களுக்கு ஒரு திருஷ்டிப் பரிகாரமாய் இது இருக்கட்டுமே!..

  நகைச்சுவைப் பதிவு! மிகவும் ரசித்தேன் அதிரா!
  நன் நலமோடும் வளமோடும் சிறந்து வாழ என்றும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ///செந்தமிழ்த் தேன் மொழியாள்
   நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்.... பாடலில் வரும்

   பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
   பேரழகெல்லாம் படைத்தவளோ! எனும் வரிகளே உங்கள் படங்களைப் பார்க்கையில் என் நினைவிற்கு வருகிறது அதிரா!..///
   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹையோ ஓடுங்கோ ஓடுங்கோ ஓடிப்போய்க் கட்டிலுக்கு கீழ ஒளியுங்கோ.. கடவுளே பெரிய பெரிய கல்லா எறியப்போகினமே:)).. சுந்தராம்பாள் எண்டு வேற கற்பனை பண்ணி வச்சிருந்திருக்கினம் சிலர் ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா அது எனக்கும் பிடிச்ச பாட்டு இளமதி மிக்க நன்றி.

   //பார்த்துக்கொண்டிருக்கும்போதே படங்களில் சண்டைக் காட்சிகள், பாட்டுக் காட்சிகள் தொடங்க நான் இருந்த இடத்திலேயே நல்ல கொர்ர்ர்ர்தான்....//

   அதேதான் அதுவும் தமிழ்ப்படங்கள் ஓடி முடியாது.. இது ஆங்கிலப்படங்கள் 1.5/ 2 மணித்தியாலத்தில் முடிந்துவிடும்.. எனக்கு முக்கியமா தியேட்டரில் அந்த பொங்.. பொங் எனும் பெரிய சத்தமும் மற்றும் படங்களில் பளாச் பளாச் என லைட் வெளிச்சமாகவும் வரும்போது தலை இடிச்சு நித்திரை வந்திடும்:)).

   //உங்கள் படங்களுக்கு ஒரு திருஷ்டிப் பரிகாரமாய் இது இருக்கட்டுமே!..///

   ஹா ஹா ஹா மிக்க நன்றி இளமதி.

   இன்னும் யூ ஏ ஈ கவிஞரைக் காணவில்லை:).

   Delete
 35. [im]https://www.swagshirts99.com/wp-content/uploads/2016/11/queens-are-born-in-december-blue-girls-hoodie-350x435.jpg[/im]
  Hello miyav :) inge parunga

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது ஃபேக்க்க்க்க்க்க்க்க்க்க்:)) அதுதான் நிஜம்ம்ம்ம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா...

   Delete
 36. வந்த‌ கடவுளிட்ட‌ அட்லீஸ்ட் திடீர் திடீரென்று ப்ரேக் பிடிக்கிற‌ சிட்டுவேஷன் ட்ரைவிங் நேரம் அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கலாம். மிஸ் பண்ணிட்டீங்கள்.

  உங்கட‌ வயசுக்கு நினைச்ச‌ உடனே வளர்க்க‌ ஆரம்பிக்கலாம். எனக்கு இப்ப‌ வசதியை நினைச்சு வெட்ட‌ விருப்பமாக் கிடக்கு. வளராமல் அப்பிடியே நின்றுருமோ என்று பயமாக் கிடக்கு. என் முகத்துக்கு, சாறிக்கு கட்டை முடி பொருத்தமாக‌ இராது என்று எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ றீச்சர் வந்திருக்கிறாக வாங்கோ றீச்சர் வாங்கோ...

   //வந்த‌ கடவுளிட்ட‌ அட்லீஸ்ட் திடீர் திடீரென்று ப்ரேக் பிடிக்கிற‌ சிட்டுவேஷன் ட்ரைவிங் நேரம் அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கலாம்//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) நெம்ம்ம்ம்பி கூட வருவோருக்கு கழுத்துப் பிடிப்பு உண்டாக்கவோ?:)..

   ///எனக்கு இப்ப‌ வசதியை நினைச்சு வெட்ட‌ விருப்பமாக் கிடக்கு. வளராமல் அப்பிடியே நின்றுருமோ என்று பயமாக் கிடக்கு.//

   அப்படி எல்லாம் ஒன்றும் ஆகாது, அடர்த்தி குறைவாக இருப்போருக்கு கூட, இப்படி சோட் ஆக்கினால் நல்ல அடர்த்தியாக இருக்கும்.

   //என் முகத்துக்கு, சாறிக்கு கட்டை முடி பொருத்தமாக‌ இராது என்று எண்ணம்.///

   அதெல்லாம் முதல் வன் வீக்குக்கு தான் இமா ஒரு மாதிரி இருக்கும் பின்பு பழகிடும்... ஒரேயடியாக வெட்டாமல்.. முதலில் ஷோல்டருடன் ட்றை பண்ணுங்கோ:)..

   ஹா ஹா ஹா அதிராவால இன்னும் எத்தனை பேர் குடும்பத்தில குழப்பம் உருவாகப்போகுதோ:))..

   ஹா ஹா ஹா என்னைப் பார்த்து இங்கொரு சென்னை நண்பி வெட்டினா.. அதுக்கு அவரின் கணவர் சொன்னார் அதெல்லாம் அதிராவுக்குத்தான் பொருந்துது உன்னை ஆரு வெட்டச் சொன்னா:) உனக்கு சூட் ஆகவில்லை என ஹையோ ஹையோ.. பாவம் அவ.. ஆனா அழகாத்தான் இருந்துது என் கண்ணுக்கு.

   மிக்க நன்றி இமா.. திடீர்த்திடீரென வாறீங்க.. எனிவே காணாமல் மட்டும் போயிடாதீங்க அப்பப்ப எட்டிப் பாருங்கோ.

   Delete
 37. ஒரு கமென்ட் போடலாம்னு வந்தா இப்டியா ???!!! ஸ்குரோல்ல்ல்ல்ல் பண்ணி முடியலப்பா :-) போஸ்ட் படிச்சு நிறைய ரசித்தேன் சிரித்தேன்.

  அவ்ளோ முடியை கட் பண்ண எப்படி மனசு வருதோ ...!! ஆனாலும் இந்த ஸ்டைல் செம !!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கெளசல்யா வாங்கோ.. முதன்முதலா வந்திருக்கிறீங்க வலது காலை எடுத்து வச்சு வாங்கோ.. மிக்க சந்தோசம் நல்வரவு.

   ///ஸ்குரோல்ல்ல்ல்ல் பண்ணி முடியலப்பா :-).//
   ஹா ஹா ஹா இதுக்குத்தான் பந்திக்கு முந்தோணும் என்பதோ?:)..

   //ஆனாலும் இந்த ஸ்டைல் செம !!!//
   ஹா ஹா ஹா நன்றி நன்றி.. இதுக்காகவே கட் பண்ணலாம் தானே?:)..

   Delete
  2. பத்து வருஷம் பிளாக் உலகத்தில இருந்தும் முதன்முதலா உங்க பக்கம் வந்திருக்கிறேன் அப்டின்றது எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கே, எவ்ளோ சோம்பேறி இல்ல நானு :-)

   வலதுகால் வைத்தே வந்தேன்.

   எல்லோரும் டைம் செலவு பண்ணி பெரிய பெரிய கமெண்ட்ஸ்!! எவ்ளோ அழகா நட்புகளை அரவணைக்கிரீங்க சந்தோசமா இருக்கு. உங்களை போலவே உங்கள் அன்பும் ரொம்பவே அழகு !

   வாழ்த்துக்கள்

   Delete
  3. ///பத்து வருஷம் பிளாக் உலகத்தில இருந்தும் முதன்முதலா உங்க பக்கம் வந்திருக்கிறேன் அப்டின்றது எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கே, எவ்ளோ சோம்பேறி இல்ல நானு :-)///

   இல்ல கெளசல்யா நானும் இதுவரை உங்கள் புளொக்கை பார்த்ததுகூட இல்ல, ஆனா பசுமை விடியலுக்குப் பலதடவை வந்திருக்கிறேன்... இப்போகூட நம் வட்டத்துக்குள் மட்டும்தானே சுற்றிக் கொண்டிருக்கிறோம்.. தெரியாத இடங்களுக்குப் போக கொஞ்சம் தயக்கம்,,, அதனால்தான்..

   மிக்க நன்றி.

   Delete
 38. உங்க போஸ்ட் அசத்தல் ரகம் என்றால் கமெண்ட்ஸ் எல்லாம் அட்டகாசம்...!!!

  எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அதேதான் கெளசல்யா.. நான் எட்டடி பாய்ஞ்சால் எனக்கு கொமெண்ட்ஸ் போடுவோர் 21 அடி பாய்வார்கள்:).. அதுக்கு ஈடு கொடுத்துப் பதில் போட்டே மீ 2 கிலோ குறைஞ்சிட்டேன் ரெண்டு நாளில்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி .. உங்களை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி.

   Delete
  2. ஓ வெயிட் குறைக்க இப்டி ஒரு வழி இருக்கா ?!! இனி நான் 'மனதோடு மட்டும்' பிளாக்கை தூசி தட்டுறேன்...ஆனா கமெண்ட்ஸ் இப்டிலாம் வரும்னு சொல்லமுடியாதே , நான் எழுதுற சப்ஜெக்ட் அப்டி ஹா ஹா :-)

   மகிழ்ச்சி

   Delete
  3. //இனி நான் 'மனதோடு மட்டும்' பிளாக்கை தூசி தட்டுறேன்//

   தட்டுங்கோ தட்டுங்கோ.. நாங்களும் வாறோம்.

   ///ஆனா கமெண்ட்ஸ் இப்டிலாம் வரும்னு சொல்லமுடியாதே , நான் எழுதுற சப்ஜெக்ட் அப்டி ஹா ஹா :-)//

   பயப்படும்படியான சப்ஜக்ட் எனில் நான் ஓடிப்போய் முருங்கில இருந்திடுவேனே:)).. ஹா ஹா ஹா மீள் வருகைக்கு மிக்க நன்றி கெளசல்யா.

   Delete
 39. ரொம்ப சுவாரஸ்யம் ....அதிரா...

  பிள்ளையார் போற ride சூப்பர்...
  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ.. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
 40. கர்கர்கர்... வந்த கடவுளிடம் ஒரு வரமும் கேட்காமல் அனுப்பியமைக்கு....
  இனிமேல் நாங்க கூப்பிட்டாலும் வரமாட்டார். அப்படி புலம்பி தள்ளிக்கொண்டு போறார் முருகன்.
  //இல்ல நான் எப்பூடியாவது ஐசூஊஊஊ வச்சு அவர்களின் கழுத்தில காதில கையில இருப்பதை வாங்கியிருப்பனே:)//
  என்னாது ஐஸ் வைச்சாவது வாங்கியிருப்பீங்களோ.. ஏற்கனவே வள்ளி செம கடுப்பில. அதை பார்த்தே தெய்வானயும் வராமல் விட்டா. ஒருவேளை வழித்தேங்காயை எடுத்து தெருபிள்ளையாருக்கு அடிக்க நினைச்சீங்களோஓஒ..
  மைனஸ் 12 ல வேர்த்து விறுவிறுத்த ஆள் நீங்கதான்...ஹா..ஹா...

  தோய்வது,முழுகுதல் சூப்பர் விளக்கம். உண்மைதான். நாங்க சொல்வதிலே விளங்கிவிடும் மற்றவர்களுக்கு. ஆனாலும் எண்ணெய் வைத்து முழுகுவது என்றா முன்னும்,பின்னும் பெரிய வேலையா இருக்கும் வீட்டில.
  ரெம்ப சுவாரஸ்யமான கவிதை,பதிவு. கவிமாமணி அதிரா அவர்களே..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ..

   //இனிமேல் நாங்க கூப்பிட்டாலும் வரமாட்டார். அப்படி புலம்பி தள்ளிக்கொண்டு போறார் முருகன்//
   ஹா ஹா ஹா அந்த மனிசன் புலம்பியது உங்கட காதிலும் விழுந்துதோ ஹையோ ஹையோ.. ரொம்பத்தான் நொந்திட்டார் போலும்:)) சே..சே.. பாவம் அவர்:)) ஹா ஹா ஹா..

   //என்னாது ஐஸ் வைச்சாவது வாங்கியிருப்பீங்களோ.. ஏற்கனவே வள்ளி செம கடுப்பில. அதை பார்த்தே தெய்வானயும் வராமல் விட்டா.////
   ஹா ஹா ஹா அப்பூடியா சொல்றீங்க:) ஹையோ இது தெரியாதே நேக்கு:)).. யூ நோ அம்முலு மீ ஒரு அப்பாஆஆவீஈஈஈஈஈஈ:))..

   //மைனஸ் 12 ல வேர்த்து விறுவிறுத்த ஆள் நீங்கதான்...ஹா..ஹா.//
   ஹா ஹா ஹா இண்டைக்கு இரவைக்கு உங்கட காலை முருகன் வந்து சுரண்டினால் தெரியும் அதன் அருமை:)) ஹா ஹா ஹா:)).

   //தோய்வது,முழுகுதல் சூப்பர் விளக்கம்.//
   ஹா ஹா ஹா மீக்கு டமில்ல டி ஆக்கும்:)

   //கவிமாமணி அதிரா அவர்களே..//
   இப்பவும் வியர்க்குதே:)) வைரமுத்து அங்கிள் காதுக்குப் போயிடுமோ இது என நினைச்சு:)..

   ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு.

   Delete
 41. உங்கள் காவிய கவிதை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன். உங்களுக்கு ஏன் இன்னும் பத்மபூஷன் விருது தரல..? :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ வாங்கோ..

   //உங்கள் காவிய கவிதை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்//
   அவ்ளோ கொமெடியாவாஆஆ இருக்கு:) ஹா ஹா ஹா.

   //உங்களுக்கு ஏன் இன்னும் பத்மபூஷன் விருது தரல..? :)//

   அப்போ கவிமாமணியை விட பத்மபூஷனா பெரிசு? இது தெரியாமல் போச்சே.. உண்ணாவிரதம் இருந்தே பெற்றிடலாம்:)..

   மிக்க நன்றிகள் சகோ வருகைக்கு.

   Delete
 42. ஜோக்கும், ஜோக்கான கவிதையும் சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ..
   மிக்க நன்றி மிக்க நன்றி.

   Delete
 43. @ஏன்ஜெல், அரசிகள் ஜூலை மாதத்தில்தான் பிறப்பார்களாமே...?

  ReplyDelete
  Replies
  1. கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க:).. அதிரா.. ஆசைக்கு ஒரு விசயம் பேச விடமாய்ட்டாங்க:)) ...ஹா ஹா ஹா பானுமதி அக்கா அப்போ யூலை மாதம் .... கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்:))

   Delete
  2. ஹாஹாஹா :) யெஸ் அரசிகள் ஜூலை இளவரசிகள் டிஸம்பர் :) இப்போ மியாவ் என்ன பண்ணுவாங்க :) மியாவ் மியாவ் ஓடிப்போ ங்க

   Delete
  3. karrrrrrrrrrrrrrrrrrrr:))

   https://img00.deviantart.net/445f/i/2008/005/7/b/fish_and_cat_by_nafee.jpg

   Delete
  4. ஏஞ்சல் டிஸம்பர்!!! மிகவும் கரீக்டுதான்...ஏஞ்சல் நீங்க சஜிட்டேரியஸ் இல்லையா? என் பையனும் சஜி தான்..

   அதிரா பாருங்க நாம சொல்ல வேண்டியது எந்த மாசத்துல பிறந்தாலும் நாம இளவரசிகள் அப்படினுதான்...அதுவும் எப்பவுமே இளவரசிகள் அப்படினு .பூஸாரே சரிதானே!!!

   கீதா

   Delete
  5. ஆஆஆஆங் அப்பூடிச் சொல்லுங்கோ கீதா.. நாம 12 மாதமும் இளவரசிகளாக்கும்..க்கும்..க்கும்ம்:))

   Delete
 44. அதிரா உங்கள் பதிவு எங்கள் ஸ்பாமுக்குப் போயிருந்தது. அத்னால் விடுபட்டுவிட்டது. அப்படி வேறொரு பதிவும் அதாவது ஒரு இரண்டு பதிவுகளுக்கு முன்னானது ஸ்பாமிலும் அப்புறம் ப்ரமோஷனிலும் போகுறது....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ... அதேன் அப்படி ஆகுது.. அப்போ இனி வேறு ஏதும் முறையைக் கையாளுங்கோ...

   ஜாமத்தில வந்திருக்கிறீங்க நீங்களும் முருகன் வந்ததைப்போல:).. ஓ இப்போ அம்பேரிக்காவில ஈவினிங்தானே ஹா ஹா ஹா:) உங்கட நெட் ரைம் ஐச் சொன்னேன்..:)

   Delete
 45. முருகர் பாவம் அதிரா....ரொம்பவே பாவம்...மீ முருகனுக்காக ரொம்ப ஃபீல் பண்ணுறேன்..ஹா ஹா ஹா...அவரை நீங்க பகலில் மிரட்ட...அவர் இரவு வந்து உங்களை மிரட்டிட்டுப் போயிட்டார் பாருங்கோ...

  சரி சரி உங்கள் கவிதையை சாகித்ய அகாடமி விருது ஒன்னு ஸ்பெஷலா உருவாக்கிக் கொடுக்க பேச்சு நடக்குதாம்....எல்லாம் அந்த என்னப்பன் முருகனின் செயல்.. .எதுக்கும் வைரவருக்கு ஒரு வேண்டுதல் போட்டுருவோம்...ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ///சரி சரி உங்கள் கவிதையை சாகித்ய அகாடமி விருது ஒன்னு ஸ்பெஷலா உருவாக்கிக் கொடுக்க பேச்சு நடக்குதாம்//

   ஹா ஹா ஹா விருது எப்போ தருவினம் என 2,3 நாட்களுக்கு முன்பே சொல்லிடுங்கோ கீதா:) அப்போதானே மீ பியூட்டி பலர் போய் ரெடியாகுவேன்:)....

   ///எதுக்கும் வைரவருக்கு ஒரு வேண்டுதல் போட்டுருவோம்./// விருது கிடைச்சால் வைரவருக்கு வைர வால்:) பதிச்ச பப்பி குடுத்திடலாம்:))

   Delete
 46. புலியே காட்டுலதான் இருக்கும்....அதுக்கு தனியா காட்டுப்புலினு வேற பேரா ?!!!!! செக் என்ன பண்றாங்க...இதைக் கவனிக்காம... ஹா ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இல்லயே என் செக்:) போன சரணாலயத்திலயும் புலி இருக்காமே:)) ஹா ஹா ஹா.. எப்பூடி எல்லாம் ஜொல்லித் தப்ப வேண்டிக் கிடக்கு:)..

   Delete
 47. கூவத்துல க்ராக்கடைலா...ஹா ஹா ஹா ஹா ஹா.....கூவத்துல ஒரு உயிரினம் கூட வாழ முடியாது.. ..அத்தனைக்கு அதில் நச்சும் கலந்துருக்கு...மூச்சு திணறும்..ஆனா பாருங்க கொசு மட்டும் கூவத்துல நிறைய வாழுது அத்தனை இம்யூனிட்டி!!! கொசுவுக்கு ..எத்தனை மருந்து அடிச்சாலும் சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் நு உயிர்த்தெழுந்து சென்னை மக்களின் காதில் ரீங்கார இசை இசைக்குது!!!!! ரத்தக் காட்டேறிகளாய் சுத்துது....ஹா ஹா ஹா...

  அதிரா ஒன்னு கேட்டிருப்பீங்க...யாரையாவது அட்டாக் பண்ணனும்னா கூட்டம் சொல்லும் ஹேய் அவன் கொசுடா சும்மா ஒரு அடி அடிச்சா போதும்னு...ஆனா பாருங்க கொசுதான் இனப்பெருக்கம் செஞ்சு என்ன போட்டாலும் அழியாம வாழுது இங்க...

  க்ராக்கடைல் பாவம் அதிரா..கூவத்துல இருந்து.அதைப் பிடிச்சு காவேரில கொண்டு விட்டுருவோம்... ஹா ஹா ஹா...அப்ப காவேரில குதிக்க ஒருத்தங்க யோசிப்பாங்க...ஹிஹிஹி
  ஆனா கர்நாடகாவுல காவேரில ஒரு இடத்துல முதலைகள் உண்டுனு வாசிச்சிருக்கேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானே கீதா, கொசு சிம்பிள் இல்லை.. ஏதோ அறிஞ்சேன் யானையின் தும்பிக்கையுள் கொசு பூந்திட்டால்.. யானை ஓடி.. மரத்தில அடிச்சே இறந்திடுமோ என்னமோ என...

   அதுதான் காவேரியில மேல்:) குரொக்கடைல்ஸ் இருக்காம் கீதா:) இனியும் கீதாக்கா ஜம்புவா?:)) ஹா ஹா ஹா..

   Delete
 48. ஹை! அதிராவும் என் ஸ்டைலுக்கு மாறிட்டாங்கோ!!!!என்னனு குழம்புறீங்களா....ஹிஹிஹி முடியைத்தான் சொன்னேன்!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. யேஸ்ஸ் கீதாவை மீ பார்த்திருக்கிறேனே:).. எவ்ளோ ஈசி என்ன கீதா மெயிண்டைன் பண்ண:)

   Delete
 49. அதிரா உங்கள் முடி நீளமும் சரி குட்டையும் சரி நல்லாருக்கு ஷார்ட் ஹேர் ஸ்டைல் நல்லாருக்கு....அப்படிச் சொல்லிப்போம்ல ஏன்னா நானும் ஷார்ட் ஹேர் அல்லோ?!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. ஒரு வசனம் நினைவுக்கு வருது கீதா..

   “அழகானவற்றை நாம் விரும்புவதில்லை, நாம் விரும்புபவை அழகாக இருக்கிறது”:).

   Delete
 50. அதிரா கடவுள் எல்லோர் மனதுக்குள்ளும் இருக்கார். அதனால்தான் நாம் யாரையும் மனம் நோகும்படிச் சொல்லக் கூடாது என்று சொல்லுவது. அப்படிச் சொன்னால் நாம் கடவுளுக்குச் சொல்வது போல்...

  எல்லோருள்ளும் கடவுள் இருக்கார். அதாவது அதைப் பாசிட்டிவ் என்றும் எடுத்துக்கொள்ளலம...சைத்தானும் இருக்கான் அதாவது நெகட்டிவ்...ஸோ நாம எதை நோக்கி நம்மைச் செலுத்துகிறோமோ அப்படி ஆவோம்...அதனால்தான் கடவுளை நெருங்க நெருங்க அதாவது நம்மை நாம் பண்படுத்திச் செல்ல செல்ல மனிதனும் இறைவனின் நிலையை அடையலாம் என்பது...ஒரு திரைப்படப் பாடலும் உண்டு...சரியாக வார்த்தைகள் நினைவுக்கு வரலை...கண்ணதாசன் மாமாவோ இல்லை வாலி மாமாவோ எழுதியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்...ஸ்ரீராமைக் கேட்டால் சொல்லிவிடுவார்...இல்லை உங்களுக்கே கூடத் தெரிந்திருக்கும் இல்லை ஏஞ்சல்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ///அதிரா கடவுள் எல்லோர் மனதுக்குள்ளும் இருக்கார். அதனால்தான் நாம் யாரையும் மனம் நோகும்படிச் சொல்லக் கூடாது என்று சொல்லுவது. அப்படிச் சொன்னால் நாம் கடவுளுக்குச் சொல்வது போல்...///

   ஹா ஹா ஹா உண்மைதான் கீதா, ஆனா இதில நான் பாதிதான் நம்புவேன், ஏனெனில் மனிசரை மனிசர் பகைச்சுக் கொள்ளக்கூடாது ஒற்றுமையா அன்பாக இருக்கோணும் என்பதற்காகவே கடவுளை அதில் புகுத்தி இருக்கினம்.. ஏனெனில் சும்மா ஒரு செயலை செய்யாதே அது கூடாது என்றால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டினம், ஆனா கடவுளின் பெயர் சொல்லிச் சொல்லும்போது மனம் ஏற்றுக் கொள்கிறது:).

   //அதாவது அதைப் பாசிட்டிவ் என்றும் எடுத்துக்கொள்ளலம...சைத்தானும் இருக்கான் அதாவது நெகட்டிவ்...ஸோ நாம எதை நோக்கி நம்மைச் செலுத்துகிறோமோ அப்படி ஆவோம்...அதனால்தான் கடவுளை நெருங்க நெருங்க அதாவது நம்மை நாம் பண்படுத்திச் செல்ல செல்ல மனிதனும் இறைவனின் நிலையை அடையலாம் என்பது.//

   இது உண்மைதான் கீதா.. ஒருவருக்குள்ளிருக்கும் பொறாமை, இயலாமை தானே.. அடுத்தவர்மேல் வெறுப்பு கோபமாக மாறுது.. கடவுள் சிந்தனை வரும்போது இந்த இயலாமை பொறாமை நமை விட்டு தூரப் போயிடுது.. அப்போ வெறுப்பு கோபம் இல்லாமலே போய் விடுகிறது... கோபிச்சு என்னத்தைக் காணப்போகிறோம்.. நாளைக்கு எழும்புவோமா என்பதே சந்தேகமாக இருக்குதே என எண்ணியே சமாதானமாயிட முடியுது.. மீ ஞானியாகிட்டேன் எல்லோ கீதா தெரியுமோ?:) ஹா ஹா ஹா...

   Delete
 51. அதிரா அந்தக் குண்டுபெண் நகைச்சுவை வேண்டாமோ...

  கீதா

  ReplyDelete
 52. தோய்த்துக் குளித்தா இல்லை முருகன் அருளை நினைத்து நினைத்து அதில் தோய்ந்து குளித்தா!!!
  ???
  கீதா

  ReplyDelete
  Replies
  1. //முருகன் அருளை நினைத்து//
   ஹா ஹா ஹா ஹையோ கீதா.. முருகனைத் தெரியும்:) அதாரது புதுசா அருள்:)) ஹா ஹா ஹா:))

   Delete
 53. ஏர்போர்ட்டில் உங்க படம் சூப்பர்!!எனக்கு அது ரொம்பப் பிடித்திருந்தது எல்லாம் பிடித்திருந்தது

  செக் சொல்லி போட்ட படம் க்யூட்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ரசிக்கிறீங்க.. மிக்க நன்றி கீதா..

   Delete
 54. ஏஞ்சல் அண்ட் அதிரா எப்படி பதில் கொடுக்கும் போது படம் இணைக்கிறீர்கள் முன்னாடி ஒரு த்டவை கேட்டிருந்தேன்..ஆனால் மீண்டும் வந்து இங்கு பார்க்க முடியைலை உங்கள் பதிலை...

  கூகுளில் தேடினால் ப்ளாகர் சொல்லுவது குழம்புது...ஏஞ்சல் அல்லது அதிரா அது எப்படி என்று மெயிலுக்குக் கொஞ்சம் அனுப்ப இயலுமா?

  தாங்க்யூபா...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இதில் பெரிசா புதுசா எதுவுமே இல்லை கீதா... கூகிளில் இமேஜ் தேடி எடுத்து, அதில் கேர்சரை வச்சு ரைட் கிளிக் பண்ணி.. கொப்பி இமேஜ் URL என இருப்பதை கொப்பி பண்ணி எடுத்து வாங்கோ..

   இங்கு வந்து கொமெண்ட் பொக்ஸ் இல்.. [im] இப்படி ரைப் பண்ணிவிட்டு உடனே அந்த லிங்கை பேஸ்ட் பண்ணி முடிவில் திரும்ப [/im] இப்படி போட வேணும் அவ்ளோதான்.. ஒரு தடவை முயற்சி செய்தால் பிடிச்சிடுவீங்க.. எங்கே ஒரு முருகன் படம் போடுங்கோ பார்ப்போம்:)..

   அனைத்துக்கும் மிக்க நன்றி கீதா...

   Delete
 55. இலங்கை ஜெயராஜ் அவர்களின் கீழ்கண்ட பேச்சில் 1:07 முதல் 1:11 வரை கேளுங்கள். உங்கள் இடுகைக்குப் பொருத்தமானது.

  https://www.youtube.com/watch?v=OY8bJIFqIoE

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கடவுள் கேக் சாப்பிட வந்து கதவைத்தட்டிய கதை சூப்பரோ சூப்பர்ர்... எப்பூடி கரெக்ட்டாக் கண்டெடுத்தீங்க இதை... பொறுமையாக முழுவதும் கேட்கோணும். மிக்க நன்றி.

   Delete
 56. வணக்கம் பூஸ் !

  வண்ணமே ஒளிரும் வாழ்வில்
  ....வந்ததோர் கனவை எண்ணி !
  எண்ணமே இனிக்கும் வண்ணம்
  ....ஏந்திழை கவியாய்த் தந்தாள்

  வந்தனை செய்யும் நெஞ்சில்
  ....வளர்ந்திடும் அன்பின் வேதம்
  கந்தனைக் காணும் போதில்
  ....காணலை ஏனோ பேதம் !

  கயல்விழி உன்னைக் கண்டால்
  ....கலங்குவாள் வள்ளி என்றே
  அயல்விழி அறியா வண்ணம்
  ....அண்ணனைக் கூட்டி வந்தார் !

  வந்தவர் சுரண்டிக் காலை
  ....வரமெது என்று கேட்க
  நொந்தவர் ஆக்கி விட்டீர்
  ....நுடங்கியே சென்றி ருப்பார் !

  கட்டிய கவலை எல்லாம்
  ....கலைத்திட வந்த வேலன்
  திட்டிய திட்டால் இன்னோர்
  ....தினம்வர எண்ணு வாரோ ?

  புல்லென நினைத்து டாதே
  ....புகுபுனல் தடுக்கும் அஃதாய்க்
  கல்லென நினைத்து டாதே
  ....கடவுளெங் கெங்கும் வாழ்வார் !

  வில்லிலும் சுழற்சி உண்டு
  ....விட்டவன் வேகம் போலே !
  சொல்லிலும் சுழற்சி உண்டு
  ....சுடுவலி காட்டிப் போகும் !

  இன்னுமோர் நாளை வந்தால்
  ....எழும்பியே கேட்டுக் கொள்வீர்
  மன்னுமோர் மகிழ்வைக் காணும்
  ....வரமெலாம் தருக வென்றே !


  காலம் தாழ்த்தியமைக்கு வருந்துகிறேன் இப்போதும் இவ்வளவுதான் நேரம் கிடைத்தது மீண்டும் நாளை வருகிறேன் கவிதைக்குப் பதில் எழுதிட்டேன் இனி உங்களுக்குத்தான் கவிதை எழுதணும் நாளைக்கு வருகிறேன் வாழ்க நலம் !

  ஆமா அந்தக் குண்டக்கா எதுக்கு மின்விசிறி ல தூக்கு போடுது சும்மா தரையில் விழுந்தாலே சங்குதானே ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. அடடா வாங்கோ மேஜரே வாங்கோ ரெயின் புறப்படமுன்:) கார்ட் பெட்டியில வந்து ஏறிட்டீங்க.. மிக்க மகிழ்ச்சி..

   //கயல்விழி உன்னைக் கண்டால்
   ....கலங்குவாள் வள்ளி என்றே
   அயல்விழி அறியா வண்ணம்
   ....அண்ணனைக் கூட்டி வந்தார் !///

   ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னா அழகிய வரிகள்.. ஹா ஹா ஹா இங்கு எங்களுக்கு பனிப்புகார் அதிகமாகி 2 நாட்கள் ஸ்கூல் எல்லாம் மூடியிருக்கு:) இப்போ இக்கவிதை படிச்சு கிழக்கால வடக்கால எல்லாம் புகைப் புகையா வரப்போகுதே மீ என்ன பண்ணுவேன்:))

   இதிலே அயல்விழி என்பது அவள்விழி என வந்திருக்கோணுமோ?:).. அதாவது வள்ளியின் விழி:) என..

   //புல்லென நினைத்து டாதே
   ....புகுபுனல் தடுக்கும் அஃதாய்க்
   கல்லென நினைத்து டாதே
   ....கடவுளெங் கெங்கும் வாழ்வார் !//

   ஹா ஹா ஹா அருமை.. இதைத்தான் எல்லோரும் சொல்கின்றனர்.. மேலே நெல்லைத்தமிழன் குடுத்திருக்கும் லிங்கிலும் ஜெயராஜ் அங்கிள்கூட இப்பூடித்தான் ஜொல்றார்:))

   Delete
  2. //இன்னுமோர் நாளை வந்தால்
   ....எழும்பியே கேட்டுக் கொள்வீர்//

   கேட்டிட்ட்டாப் போச்சு இப்போ மீ ரெடியாகிட்டேன் ஆனா நாங்க ரெடியாயிருக்கும்போது கடவுள் வரமாட்டாராமே:).

   //காலம் தாழ்த்தியமைக்கு வருந்துகிறேன் இப்போதும் இவ்வளவுதான் நேரம் கிடைத்தது //

   சே.சே.. அதனாலென்ன... ஆனாலும் பழக்கிப்போட்டீங்க ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் கவிதை தந்து.. அதனால எங்கே இன்னும் காணல்லியே கவிஞரை என எண்ணுகிறோம்.

   //ஆமா அந்தக் குண்டக்கா எதுக்கு மின்விசிறி ல தூக்கு போடுது சும்மா தரையில் விழுந்தாலே சங்குதானே ஹா ஹா ஹா ///

   ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா சிரிங்கோ அடிக்கப் போகினம்:).. கொமெண்ட் பார்த்த உடனேயே விழுந்து புரண்டு சிரிச்சிட்டேன்.. ஹா ஹா ஹா மிக்க நன்றி சீராளன்... கிடைக்கும் நேரத்தில “ஒரு காவியக் கவிஞருக்கு”:).. மின்னல் கவி தந்தமைக்கு _()_.

   Delete
  3. அதிரா நீங்கள் இங்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறீர்கள், அதனை நான் படிக்கவில்லை என்று நினைவூட்டியதால் இங்கு வந்து பார்த்தேன்.

   சீராளன்... உங்களை வாழ்த்துகிறேன். என்ன வகையான திறமை. இதனை எழுத எவ்வளவு நேரம் உங்களுக்கு எடுத்தது என்று பகிர்ந்துகொள்ள முடியுமா? உங்கள் வம்சத்தில், தமிழ் அறிஞர்கள் இருந்திருக்கிறார்களா (அப்பா, தாத்தா போன்று). சரளமான வார்த்தைகள், அருமையான உவமைகள். அடடா....

   காணலை ஏனோ பேதம் - சரியாத்தான் இருக்கு. இருந்தாலும் பொதுவா 'காணலை' என்ற வார்த்தையைப் பார்த்ததில்லை. 'மறைந்திடும் மனதின் பேதம்' என்பது, 'வளர்ந்திடும் அன்பின் வேதம்' என்ற வரிகளுக்கு இன்னும் பொருத்தமாக இருக்குமா?

   'அயல்விழி அறியா வண்ணம்' - மிக மிக அருமை. யாரும் பார்க்கா வண்ணம் என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

   திட்டிய திட்டால் இன்னோர்
   ....தினம்வர எண்ணு வாரோ ? - நகைப்பு வரும்படி பாடலில் கொண்டுவந்திருக்கிறீர்கள். அருமை.

   //புல்லென நினைத்து டாதே ....புகுபுனல் தடுக்கும்// - மிகவும் ரசித்தேன். நீரை எதிர்க்காமல் தலை தாழ்த்தும் நாணலை நினைக்க வைத்துவிட்டீர்கள்.

   //சொல்லிலும் சுழற்சி உண்டு ....சுடுவலி காட்டிப் போகும் !// - நாவினால் சுட்ட வடு. மிக நன்றாக இருக்கிறது வரிகள்.

   //மன்னுமோர் மகிழ்வைக் காணும் ...வரமெலாம் தருக வென்றே// - ஆஹா.

   அருமையான கவிதையைப் படிக்கும் வாய்ப்பு கண்டு உள்ளம் மகிழ்கிறது. மேலும் மேலும் வளர்க.

   Delete
  4. இப்போ மீ ரெடியாகிட்டேன் - அதிரா... தூங்கும்போது கடவுள் வருவார், அப்போ எழும்பிக் கேளுங்கள் என்று சொன்னால் பட்டப் பகலில் சென்ட் அடித்துக்கொண்டு 'கடவுள் வரப்போகிறார்' என்று உட்கார்ந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே.

   //அயல்விழி என்பது அவள்விழி என வந்திருக்கோணுமோ?:).. அதாவது வள்ளியின் விழி:) // - அதிரா... உங்களுக்கு ஏன் அடுத்த குடும்பத்தில் பிரச்சனை செய்யும் வேலை? முருகனுக்கு வள்ளி தெய்வானை இருவரும் சரிசமம்தானே. 'அயல்விழி' என்பதை வேண்டுமானால், 'வள்ளி, தெய்வானை இருவருக்கும் தெரியாமல்' என்று எடுத்துக்கொள்ளுங்களேன். (அட... ஆமாம் சீராளனும், தெய்வானையை அம்போவென விட்டுவிட்டாரே முதலிரண்டு வரிகளில். நீங்கள் சொல்லியதில் பெரிய தவறு இல்லை)

   Delete
 57. இல்லாத மனைவியைத் திட்டல்..வித்தியாசமான ரசனை.

  ReplyDelete
 58. //சே..சே... குண்டானால், ஒரு ஆசைக்கு:), சூசைட் பண்ணக்கூட வழியில்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்:)//ஹெஹெஹெஹெஹெ, அது சரி, என்ன நான் இல்லைனதும் தைரியமா என்னைத் திட்டி இருக்கீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கீரை வடை ரெசிபி போடலாமானு யோசிச்சேன். நோ!!!!!!!!!!!!!!!!!!!!!! போடப் போவதில்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. புதன்கிழமை வந்திடுவேன் என சவுண்ட் விட்டாவே இன்னும் காணல்லியே என ஓசிச்சேன்ன்:))..

   //கீரை வடை ரெசிபி போடலாமானு யோசிச்சேன். நோ!!!!!!!!!!!!!!!!!!!!!! போடப் போவதில்லை///
   ஹா ஹா ஹா நிங்க போடும்வரை எங்கட போராட்டம் டொடரும்:)..

   Delete
 59. //எப்பூடி இருந்த நான் இப்பூடி ஆகிட்டேன்:).. இப்படிக்கு அதிராவின் தலைமயிர்:)// தலை மயிரோடு அழகாத் தான் இருந்திருக்கீங்க! இப்போ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதான் 80 வயசுனு நெ.த. சொல்லி இருக்காரா? சரி, சரி.

  ReplyDelete
  Replies
  1. ///இப்போ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதான் 80 வயசுனு நெ.த. சொல்லி இருக்காரா? சரி, சரி.///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பாலைவனத்தில் ஆரம்பிச்ச புகை:) ஸ்ரீரங்கம்[ஐ கரீட்டு:)] வரை பரவிட்டுதே:)).. எய்தவர் இருக்க அம்பை நோக மாட்டேன்:) இருங்கோ வைக்கிறேன் வெடி:))

   Delete
 60. ஏஞ்சலின் சொன்னதாலே வந்தேன். இரண்டுநாள்வரலைனா ஆளையே மறந்துடறீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்குத்தான் கொமெண்ட் போட்டு ஜொன்னனே:) பயணம் போகமுதல் என் போஸ்ட்டைப் படியுங்கோ கொமெண்ட் போட அவசரம் இல்லை என:)) அதைப் படிக்காமல் இங்கு வந்து குய்யோ முறையோ.. மறந்திட்டாய் எண்டால்ல்ல்ல்:))...இதுக்கு மீதான் தேம்ஸ்ல குதிக்கோணும்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி கீதாக்கா.

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.