நல்வரவு_()_


Thursday 1 March 2018

Radish/நோக்கிள்/முள்ளங்கி துவையல், இலங்கைப் பக்கோடா..

ன்னதான் ஆயிரம் இருந்தாலும்:) ஆயிரத்தில ஒண்டுதானே பெரிசு:).. அப்பூடித்தான், சமைக்கிறதை இங்கின போட்டுக் காட்டாவிட்டால் பாருங்கோ... ஒரு நிம்மதியான நித்திரையே வரமாட்டேன் என்கிறதே:)..

ரி இன்று நான் சொல்லப்போகும் ரெசிப்பியை நீங்க எல்லோரும் செய்யோணும், மிக ஈசி... ஆனா சுவையோ சுவை.. இது முள்ளங்கியில், என் கன்னி ரெசிப்பி:)
முள்ளங்கி துவையல்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முள்ளங்கி,செத்தல் மிளகாய், வெங்காயம் [படத்திலே மிஸ்ஸ்ஸிங்:), தேங்காய்ப்பூ, பழப்புளி.

முதலில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, செத்தல் மிளகாயை.. சிறிது எண்ணெயில், நன்கு பொன்னிறமாக வதக்கி எடுக்கவும்.

பின்னர், இன்னும் சிறிது எண்ணெயில் வெங்காயம் போட்டு வதக்கி, அதனுள் முள்ளங்கியை நன்கு கரட்/veg கிரேட்டரில் சீவி போடவும்.. தோலுடனும்  கிரேட் பண்ணலாம்... நீண்ட நேரம், நன்கு கலர் மாறி, தண்ணித்தன்மை அடங்கும் வரை வதக்கவும்.

இப்போ தேங்காய்ப்பூ+ புளி போட்டு பிரட்டி இறக்கவும்.

வதக்கிய பருப்புக்கள் மிளகாயை முதலில் நன்கு பவுடராக்கியபின்... மிகுதி அனைத்தையும் போட்டு, சிறிது தண்ணி விட்டு நன்கு அரைத்தெடுக்கவும்.

முள்ளங்கித் துவையல்.. ஸ்ஸ்ஸ்ஸ்..ஆஆஆஆ...
========================================================
()******இடைவேளை******()
இன்றைய பனிப்புயலை வீட்டுக்குள்ளிருந்து ரசிக்கிறோம்:)
========================================================
 கிச்சினில் என்ன ஒட்டி வச்சிருக்கிறேன் எனத் தெரியுதோ?:)
========================================================
இந்தப் பனிக்குளிருக்கு வெளியே போக முடியாமல், கேசரி, முறுக்கு, பக்கோடா எல்லாம் செய்தேனாக்கும்..

இது முறுக்கு:) இதன் ரெசிப்பியை கீசாக்கா விரைவில் போடுவா:)

இலங்கைப் பக்கோடா, இலங்கைத்தமிழ்க் கடைகளில் கிடைக்கும். நீண்ட நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம்.. முதலில் கடலைப் பருப்பை 2-3 மணித்தியாலங்கள் ஊறப்போட்டு, அதனுள் 5,6 பல்லு உள்ளி, ஒரு துண்டு இஞ்சி சேர்த்து , தண்ணி விடாமல் நன்கு அரைக்கவும். ஆகவும் பசுமையாக வேண்டாம் கொஞ்சம் கரகரப்பு இருக்கட்டும்..

அதனுள் கொஞ்சம் பெருஞ்சீரகம்[சோம்பு], கிறெஸ்ட் செத்தல், வெட்டிய செத்தல் மிளகாய், உப்பு, பெருங்காயப் பவுடர் சேர்த்துக் குழைச்சு...

சொல்ல மறந்திட்டேன், இத்தோடு நிறைய கறிவேப்பிலையும் போட்டுக் குழைப்பார்கள்.. என்னிடம் இருக்கவில்லை..

கையால் பிளிந்து அல்லது பிசைந்து விடுவதுபோல எண்ணெயில் சின்னன் சின்னதாக பிசைந்து போட்டுப் பொரித்தெடுக்கவும்...

பக்கோடா ரெடீஈஈஈ:).. இது சின்னவர் ஸ்கூலில் செய்த கண்டில் கோல்டர்...
இன்னும் நிறைய வச்சிருக்கிறேன்:) ஆனா இப்போதைக்கு இது போதும், இதுக்கு மேல போட்டு உங்களுக்கு கார்ட் அட்டாக் குடுக்க நான் விரும்பவில்லை:) பிக்கோஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:)..

இது அஞ்சுவை முறுக்காச் சுட்டேன்:) வெரி சோரி டங்கு ஸ்லிப் ஆச்சு:)) முறுக்கை அஞ்சுவுக்காகச் சுட்டேன்:))[இது புதுசில்லை:)] வடிவம் மாறாமல் சுட்டெடுப்பது எவ்ளோ கஸ்டம் தெரியுமோ?:).. இதெல்லாம் அஞ்சுவுக்கு எங்கே புரியப்போகுது கர்ர்:)

ஊசி இணைப்பு:

பிளீஸ் பிளீஸ் இன்னொரு ஊசி இணைப்பும் போடுறேனே:)
======================__()__===================

156 comments :

 1. Replies
  1. ஆஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ.. அதெப்பூடி இந்த ஸ்னோவிலயும் இவ்ளோ ஸ்பீட்டா ஓடி....:) சரி சரி வழுக்கேல்லைத்தானே?:)..

   Delete
 2. /சமைக்கிறதை இங்கின போட்டுக் காட்டாவிட்டால் பாருங்கோ... ஒரு நிம்மதியான நித்திரையே வரமாட்டேன் என்கிறதே:)..//

  கர்ர்ர் இப்போ என் தூக்கம் போச்சு RADISH =முள்ளங்கி அதில் நூல்கோல் aka நோக்கிள் எங்கே வந்தது :)
  சரி இந்த காய்கறி பஞ்சாயத்தை யாராவது முடிச்சி வைக்கட்டும் :)
  நான் ரெசிப்பிக்கு வரேன் :)

  ReplyDelete
  Replies
  1. //கர்ர்ர் இப்போ என் தூக்கம் போச்சு//
   நித்திரைக் குளிசை வச்சிருக்கிறன் அஞ்சு தரட்டோ?:))..

   ///RADISH =முள்ளங்கி அதில் நூல்கோல் aka நோக்கிள் எங்கே வந்தது :) //
   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதெல்லாம் நெல்லைத்தமிழனின் பிரச்சனை:) அவர் வந்து கிளியர் பண்ணிடுவார்:) ஹா ஹா ஹா .. அதுதான் ஏற்கனவே எங்கள் புளொக்கில பிரிச்சு பேய்ஞ்சாச்சே:) பிறகென்ன புதுசா அ வில இருந்து கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   //நான் ரெசிப்பிக்கு வரேன் :)///
   வெல்கம் வெல்கம் அதிராவின் ரெசிப்பிக் கடலில் குளிக்கவும்:).. வெரி சோரி குதிக்கவும்:))

   Delete
 3. இதுமாதிரிதான் நான் பீர்க்கை தோல் ,மல்லித்தழை எல்லாம் துவையல் செய்வேன்
  முள்ளங்கில சாம்பார் அப்புறம் சப்பாத்தி மட்டும் செஞ்சிருக்கேன் :)
  இது நல்லா இருக்கு :) நாளைக்கே snowboard ல போய் முள்ளங்கி வாங்கி செய்யப்போறேன் :)

  ReplyDelete
  Replies
  1. பீர்க்கங்காய் தோலில் செய்ததில்லை, மல்லி, பாஸ்லி , வல்லாரை இப்படிச் செய்வேன்... முள்ளங்கியில் பால் விட்டு வெள்ளைக்கறிபோல அல்லது கொஞ்சம் தூள் சேர்த்து பிரட்டல் போலவும் செய்திருக்கிறேன்.. எதுவாயினும் முள்ளங்கி வாங்குவது மிகக் குறைவு.. ஒருவருக்கும் பிடிப்பதில்லை..

   ஆனா இம்முறை சூப்பர் அஞ்சு விரும்பிச் சாப்பிட்டார்கள்.

   ///நாளைக்கே snowboard ல போய் முள்ளங்கி வாங்கி செய்யப்போறேன் :)//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பிறகு என்னிடம் இன்சூரன்ஸ் கேட்டு வரப்பிடா ஜொள்ளிட்டேன்:) நானே கதவே திறக்க முடியாமல் உள்ளே இருக்கிறேன்.. நாளைக்கும் பப்ளிக் ஹொலிடே போல எல்லாம் மூடப்படுது... இம்முறை சொல்லி வேலை இல்லை ஸ்னோ...

   Delete
  2. யெஸ் ஏஞ்சல்....நானும்...அதே போல பங்களூர் கத்தரிக்காய் தோல், அப்புறம் புடலங்காய் கூட...தென் மாதுளையில் இருக்கும் அந்த முத்துக்களை எடுத்தப்புறம் இருக்கும் அந்த தோல் வெளித் தோல் அல்ல..உள்ள இருக்கறது அதுலயும் அரைப்பேன் செமையா இருக்கும்..ஸ்லைட் துவர்ப்புச் சுவையுடன்...ஃப்ளெக்ஸ் சீட் பொடி, வேப்பம்பூ பொடி.....வேப்பம்பூ துவையல்...நல்லாருக்கும்.....

   கீதா

   Delete
  3. ///உள்ள இருக்கறது அதுலயும் அரைப்பேன் செமையா இருக்கும்..ஸ்லைட் துவர்ப்புச் சுவையுடன்...ஃப்ளெக்ஸ் சீட் பொடி, வேப்பம்பூ பொடி.....வேப்பம்பூ துவையல்...நல்லாருக்கும்.....///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்க எங்கயோ இருக்க வேண்டியவர் கீதா:)

   Delete
 4. ஹாஹாஹா :) தெரியுமோ பனிப்புயலிலும் என் மகன் என்னை விசிட் செஞ்சான் :)
  ஜெஸிக்கு விண்டோ வழியா பெர்ட்ஸ் பார்த்து இருப்பு கொள்ளலை :)

  ReplyDelete
  Replies
  1. அந்தக் குண்டருக்கு குளிராது:) ஹா ஹா ஹா.. மல்டியைப் பார்க்காமல் இருக்கேலாது போல ஆளுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   //ஜெஸிக்கு விண்டோ வழியா பெர்ட்ஸ் பார்த்து இருப்பு கொள்ளலை :)///
   ஹா ஹா ஹா...
   அது பேர்ட்ஸ் ஆக்கும்:) இந்த ஸ்னோவிலயும் வந்தவையோ? இங்கு எந்த உயிரினமும் வெளியில காண முடியல்ல.. இன்குளூடிங்.. மனிசர்:)

   Delete
  2. கர்ர்ர் நான் இங்கிலீஷை தமிழில் எழுத கற்றுக்கலையே :)birds birds

   Delete
  3. அதுக்குத்தான் அதிராவிடம் ட்ரெயிங் எடுக்கோணும் எனச் சொன்னால் ஆரு கேட்கிறா:)). முதலில் பீஸ் ஐ அனுப்புங்கோ.. ஹையோ முக்கியமா நெ.த நுக்கு தெரியாமல் அனுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))

   Delete
 5. //கிச்சினில் என்ன ஒட்டி வச்சிருக்கிறேன் எனத் தெரியுதோ?:)//

  ஒஹ்ஹ் தெரியுதே :) கபர்ட்ல இருக்க ரெட் வெல்வெட் கேக்கை யாருக்கும் கொடுக்காம சாப்பிடணும் :) லாலாலா

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எதுக்கு கண்ணாடியை லாச்சியில் பூட்டி வச்சிருக்கிறீங்க:).. ஓடிப்போய் எடுத்துப் போட்டிட்டு வாங்கோ:))

   Delete
 6. /இந்தப் பனிக்குளிருக்கு வெளியே போக முடியாமல், கேசரி, முறுக்கு, பக்கோடா எல்லாம் செய்தேனாக்கும்..//

  கர்ர்ர் :) நானும் ஜோவார் முறுக்கு செஞ்சேன் படம் எடுக்குமுன் காலி :)

  ReplyDelete
  Replies
  1. நோஓஓஓஓஓஓஓஓ இதை நான் நம்பவே மாட்டேன்ன்.. ஆதாரத்தோடு நிரூபிக்கோணும்:)

   Delete
 7. அஆவ் !! முறுக்கு சூப்பரா வந்திருக்கே மியாவ் .
  இருங்க பேப்பர் பென் எடுத்து ஆர்டர் எடுங்க
  எனக்கு 2 கிலோ முறுக்கு ப்ளீச் :)

  ReplyDelete
  Replies
  1. ஓகே ஓகே.. முதல்ல செக்:) ஐ அனுப்புங்கோ[இது வேற செக்:)] நான் மா வாங்கோணும்:))

   Delete
  2. அதிரா.... ஏஞ்சலின் கேட்பது, 2 கிலோ முறுக்கு செய்து, அதனை ப்ளீச் செய்து (bleach) வெண்மையாக் கொடுக்கணும்னு. இதை மறந்துடாதீங்க.

   Delete
  3. ////ப்ளீச்///

   ஹா ஹா ஹா அதுவா இந்த ப்ளீச்:)) இது தெரியாமல் போச்சே நேக்கு:).. இதுக்குத்தான் அதிராவிடம் தமிழில் எழுதிப்பழக வரச் சொன்னேன்:)..

   Delete
  4. ஹாஹாஹா :) ஏதாவது செஞ்சி என்னை காலி பண்ண பாக்கிறாங்க :)
   ஏற்கனவே மச்சம் ,மரு ஒட்டிக்கிட்டு ,குடை பிடிச்சிட்டு ஒளிஞ்சி திரியறேன் :))

   Delete
 8. /இலங்கைப் பக்கோடா,//

  இதை சாப்பிட்டிருக்கேன் ஆனா இத்தினி நாள் நினைச்சேன் கடலை மாவில் செய்றாங்கன்னு .ஆனாலும் மியாவ் திஸ் இஸ் நொட் குட் :) வரவர சமையலில் கலக்கறீங்க :)

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவில கடலை மாவில செய்கிறாங்க.. இலங்கையில் கடலைப்பருப்பில் தான் செய்வார்கள்.

   //ஆனாலும் மியாவ் திஸ் இஸ் நொட் குட் :)//
   ஏன்.. வடைபோல தானே.. இக்குளிருக்கு சூப்பரா இருக்கும். கடலைப் பருப்பு என்பதால் உள்ளி இஞ்சி பெருங்காயம் எல்லாம் சேர்த்திருக்கே...

   ஓ இன்னொன்று சொல்ல மறந்திட்டேன்.. இதில் நிறையக் கறிவேப்பிலை சேர்ப்பார்கள்.. என்னிடம் இருக்கவில்லை.

   Delete
  2. ஆனாலும் மியாவ் திஸ் இஸ் நொட் குட் :)//>>>>வரவர சமையலில் கலக்கறீங்க :)

   Delete
  3. ஹா ஹா ஹா இப்போதானே நேக்குப் பிரிஞ்சுது:))

   Delete
  4. ////tube light :)//

   ஸ்ஸ்ஸ்ஸ் கீதாவை அப்பூடி எல்லாம் ஜொள்ளக்குடா:)

   Delete
  5. ஹா ஹா ஹா ஹா ஹா...ரொம்பவே சிரிச்சுட்டேன் அதிரா!!! ஆமாம் நான் ட்யூப் லைட்டேதான்...லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேனாக்கும் ஹிஹிஹிஹி

   கீதா

   Delete
  6. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது உங்களைச் சொல்லவில்லையாக்கும்:)

   Delete
 9. மகன் செய்த கேண்டில் ஹோல்டர் சூப்பர் .வாழ்த்து சொல்லிடுங்க .
  இதை எங்கள் பிளாக்லயும் பார்த்த நினைவு ??

  ReplyDelete
  Replies
  1. அங்கு போட்டது மூத்தவர் செய்தது அஞ்சு.. அது தட்டையா இருக்கும்.. இது படிப்படியா உயர்ந்து இருக்கு... டாங்ஸ்:)..

   Delete
 10. /இது அஞ்சுவை முறுக்காச் சுட்டேன்:)//
  தெரியும் ஒவ்வொரு துண்டுக்கும் நறுக்குன்னு கடிக்க தானே இந்த ஐடியா :)
  ஹஹ்ஹா :) ஷேப் அழகா வந்திருக்கு :)நெக்ஸ்ட் டைம் மகிழம்பூ அச்சு வேணாம்
  தேன்குழல் அச்சு வச்சி நேம் செய்யுங்க பிக்காஸ் மீ மெலிஞ்சிட்டேன் :))

  ReplyDelete
  Replies
  1. அப்போ புல்லாங்குழல் அச்சில செய்திடலாம்:)

   Delete
 11. ஹாஹாஹா :) சாப்பிட மறந்தாலும் சார்ஜ் பண்ண மறவோம் :)

  இருங்க இருங்க 5 மினிட்ஸ் கழிச்சி பாருங்க அதுக்குள்ளே நான் ஓடி போறேன்

  ReplyDelete
  Replies
  1. 5 மினிட்ஸ் கழிச்சி பாருங்க// பாடுங்க

   Delete
  2. ///அதுக்குள்ளே நான் ஓடி போறேன்///

   எங்கே தேம்ஸ்க்கோ? வாணாம் அஞ்சு வாணாம்:) இப்போ குதிச்சால் மூச்செடுக்க முடியாதாமே:)

   Delete
  3. நான் பாடப்போறேன்ன்ன்ன்ன்:) ஸ்ராட் மூஊஊஊஊசிக்க்க்:))

   Delete
 12. தானே முளைத்த மரம் - பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். படத்தின் கதை அநியாயமான கதை. இதே படத்தில் எஸ் பி பி - சுசீலா பாடல் ஒன்றும் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி பாடல்களெல்லாம் இதுவரை கேட்டதில்லை. எங்கேயிருந்துதான் இதனையெல்லாம் கேட்டு எடுத்துப் போடுகிறீர்களோ.

   Delete
  2. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...

   ஓ சோகம்தான் என்றலும் என்ன ஒரு கவிதை போன்ற வசனங்கள்... நான் வாழ்க்கையில் 2 நாட்கள் முன்புதானே முதன் முதலா கேட்டேன்.. படம் பார்க்க ஆசையா இருக்கு.... ஆனா சோகமாக இருக்குமே எனப் பயம்ம்ம்மாக்கிடக்கூஊஊஉ:))

   Delete
  3. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் அது நான் எப்பவும் “பூஸ் ரேடியோ” கேட்பேன்:)).. அதில் அரிய பழைய புதிய பாட்டெல்லாம் போடுவார்கள்.. நகைச்சுவை அடிக்கடி போடுவார்கள்...

   அதிலிருந்து பொறுக்கி எடுப்பதே சில இப்படியானவை.. சிலது ரேடியோவில் கேட்கும்போதே எழுதி வச்சிடுவேன்.. ஆனா பின்பு தேடினால் எங்குமே கிடைக்காமல் போவதும் உண்டு.

   Delete
  4. தானே முளைத்த மரம் பாடல் டி எம் எஸ் குரலில் நன்றாயிருக்கும். என் நினைவில் இந்தப்படம் மேஜர் சுந்தர்ராஜனின் சொந்தப்படம் என்று நினைவு. சிறையில் சந்தித்த நண்பன் வீட்டுக்கு சென்றால் சந்தர்ப்ப வசத்தால் அவன் குழந்தை இவனை தன் தந்தை என நினைக்க அதனால் நண்பனின் மனைவிக்கு ஏற்படும் சங்கடங்கள்! எஸ் பி பி பாடல் அம்பிகை நேரில் வந்தாள் அன்பினை அள்ளித் தந்தாள் ங்கிற பாடல். பி சுசீலாவுடன் பாடியது.

   Delete
  5. நெல்லைத்தமிழன்.. எனக்கு பாடல்களில் மிகவும் விருப்பம் உண்டு. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, கர்னாடிக் என்று நிறைய பாட்டு பிடிக்கும். எனவே எனக்கு அதிகமாக அதில் பரிச்சயம் உண்டு.

   Delete
  6. ஸ்ரீராம்.. அது சோகப் படமாக இருக்குமோ எனும் பயத்தில் பேசாமல் இருந்தேன், உங்கள் கொமெண்ட் பார்த்ததும் படம் பார்த்திட்டேன்.. அருமையான படம் ஆனா முடிவைக் கொஞ்சம் மாத்தியிருக்கலாம்.. ..

   Delete
  7. என்ன படம்? பெயர்?

   Delete
  8. மேலே பாடலும் போட்டு படப் பெயரும் போட்டிருக்கிறேன் கீசாக்கா..

   படம் : இதோ எந்தன் தெய்வம்.

   நீங்க பார்த்திருப்பீங்க அநேகமா.

   Delete
 13. முள்ளங்கித் துவையல் செய்ததில்லை நான். சாம்பார், கறி மட்டும் செய்துள்ளோம்.

  ReplyDelete
  Replies
  1. முள்ளங்கி கறி - வாழ்க்கையில் ஒரு முறைதான் சாப்பிட்டிருக்கிறேன். மேட்டூரில், என் நண்பி அவர்கள் வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டு, அன்று முள்ளங்கி கறி போட்டார். பரவாயில்லாமல் இருந்தது. என்னைப் பொறுத்தவரை, முள்ளங்கி சாம்பார் மட்டும்தான்.

   Delete
  2. ஸ்ரீராம் .. முள்ளங்கி பிடிக்காதோருக்கும் இது பிடிக்கும்.. மிக அருமையான சுவை. இதனை கொஞ்சம் தண்ணி கூட விட்டு அரைச்சு.. தாளிச்சுக் கொட்டினால் சட்னிபோலவும் பாவிக்கலாம்.

   Delete
  3. நெ.த//

   முள்ளங்கியை குட்டியாக வெட்டி, கொஞ்சம் வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணி விட்டு அவிச்சு, அவிந்ததும் பால் சேர்த்து இறக்கி கொஞ்சம் தே.புளி விடுங்கள் அதுவும் சூப்பர்...

   இந்த முறையில் செய்து பாருங்கோ இன்னும் சூப்பர்.

   ஆனா சுரக்காய்., நீத்துப்பூசணி போன்று முள்ளங்கியிலும் குளிர்த்தன்மை அதிகமோ?

   Delete


 14. படத்தில் பனிப்புயலின் தாக்கம் தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. அது சொல்லிப் புரிய வைக்க முடியல்ல ஸ்ரீராம்.. மூன்று நாட்களா ஸ்கூல் இல்லை நேற்றிலிருந்து வேர்க்கும் இல்லை.. காரை எடுக்க முடியாது.. எங்கள் ட்றைவ் வேடில 3 அடி உயரத்துக்கு ஸ்னோ.. வாசல் கதவை திறந்தால்.. வாசலை விட ஒரு அடி உயரமாக குவிஞ்சிருக்கு...

   அது கனடா அமெரிக்கா போன்ற சில எபவும் பனி கொட்டும் ஊர்களில் அவர்களுக்கு பழக்கம் கொட்டக் கொட்ட கிளீன் பண்ணிப்போட்டு வேலைக்குப் போவினம்...

   இங்கு இப்படிக் கொட்டுவது குறைவு.. வரும் ஆனா உடனே மழை பெய்து கரைந்து விடும்... இம்முறை மழை இல்லை... அப்படியே குவிந்து கிடக்கு.. மெயின் ரோட்ஸ் மட்டும் கிளீன் பண்ணியிருப்பினம்.. சைட் ரோட்ஸ் அப்படியே விட்டு விட்டார்கள்.. ரோட் எது சைட் எதுவென்றே தெரியல்ல.. இனி சனி ஞாயிறும் வருவதால்.. திங்கள் தான் கிளீன் பண்ணுவார்கள் ரோட்டை.. நம்மிடத்தை நாம் தானே கிளீன் பண்ணோனும்.. ஆனா இன்று ஸ்னோ கொட்டவில்லை சனி ஞாயிறு திரும்ப வருமென இருக்கு...

   வீட்டுக்குள் இருந்து படமெடுத்தமையால் பெரிசா தெரியல்ல.. பல படம் போட நினைச்சேன்.. சரி அடிக்கடி எதுக்கென விட்டேன்..

   உங்களுக்காகவே அடுத்த போஸ்ட்டில் போடுவேன்.. வந்து ஆஹா ஓஹோ என ஜொள்ளோனும்:))

   Delete
  2. இதைப் பாருங்கோ ஸ்ரீராம்...

   https://youtu.be/dsIz3nsh424

   Delete
  3. படத்தில் பனிப்புயலின் தாக்கம் தெரியவில்லை என்று நான் சொல்லியிருப்பது குறைத்து மதிப்பிட்டு அல்ல... நம் கண்களால் காணும் காட்சியை கேமிராக் கண்களால் உணர முடியாது என்பதையே சொன்னேன்!

   Delete
  4. அது உண்மைதான், கண்ணால் பார்த்து வியந்து படமெடுத்திட்டுப் பார்த்தால்.. படத்தில ஜு ஜூ பி:)) ஹா ஹா ஹா அதில இன்னொன்று இம்முறை வந்த ஸ்னோ எப்படி எனில் கடற்கரை மணலை அள்ளி வந்து கொட்டியதுபோல இருக்கு... அதனால்தான் மரங்களில் ஸ்னோ படியவில்லை... அப்படியே மணல் கும்பங்கள்போல குமிஞ்சு குமிஞ்சு....ஹா ஹா ஹா...

   Delete
 15. நாளை பத்தியம். இன்று ஒரு கட்டுக்கட்டுவோம்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மணிக்கூடு சொல்லும் கதை:) அதே தான்:).. கீழே ஒட்டியிருப்பது என்ன?:) உங்களுக்கு மறதி ஆச்சே:) மறந்திருப்பீங்க ஹா ஹா ஹா:)..

   Delete
 16. ஒரே நாளில் இரண்டு ரெசிப்பிக்கள்? வெ'றி' பேட்!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இதை உங்களுக்கே அனுப்ப நினைச்சேன் ஆனா நீங்க இப்போ சமையல் குறிப்புக்கள் பெறுவதில் பெரிசா ஆர்வம் காட்டாததுபோல ஒரு உணர்வு[நிறைய ஸ்ரொக் இருக்கும்போல:)].. அதனாலேயே இங்கு போட்டு விட்டேன்:)..

   Delete
  2. ஆர்வம் காட்டாமல் இருப்பது போல் எல்லாம் இல்லை. எவ்வளவு அனுப்பினாலும் ஓகே தான். காத்திருக்க உங்களுக்குத்தான் பொறுமை வேண்டும்!

   :)))

   Delete
  3. ஹா ஹா ஹா அப்படியில்லையாக்கும்... ஆஆஆஆஆஅ சமையல் குறிப்பாஆஆஆஆஆ? நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்... நன்றி நன்றி ... இப்பூடிச் சொல்லோணும்:)) என ஜொள்ள மாட்டேன் ஹையோ ஹையோ..:))

   Delete
 17. மொபைல் சார்ஜிங் - ஹா... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா உண்மைதானே.. பெட் இல் படுத்தபின், தண்ணி குடிக்க எழும்பக்கூட அலுப்பா இருக்கும், ஆனா ஃபோன் சார்ஜ் முடிகிறதே எனில் ஜம்ப் பண்ணி எழும்புவினம் எல்லோரும்:)..

   Delete
 18. இன்னொரு ஊசி இணைப்பு - அது அவரவர்கள் பாடுவதை பொறுத்தது. கீதா ரெங்கன் போலப் பாடினால் இப்படி எல்லாம் தோன்றாது.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கீதாவின் குரல் கேட்டிருக்கிறேன் அது சூப்பர்... ஏன் ஸ்ரீராமின் வொயிஸ் உம் கேட்டமே ஹா ஹா ஹா...

   மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. //ஸ்ரீராமின் வொயிஸ் உம் கேட்டமே ஹா ஹா ஹா...//

   இது என்ன புதுக்கதை!

   Delete
  3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) அஞ்சூஊஊஊஊஊஊ ஓடிக் கமோன்ன்:) அந்த வீடியோவின் முடிவில தெளிவாக் கேட்டமே:) இப்போ புயுக் கதையாமே கர்:)) .. இது பனிப்புயலை விடக் கொயப்பமா இருக்கு:)) நம்மை ஆரும் பேய்க்காட்ட முடியாது:)

   ட்றுத் தன் டூப்பைத்தான் கீதா பார்த்தா எனும் கதைபோலவேதேன்ன்ன்ன்:))

   Delete
  4. ஓ... அந்தக் குறும்படம்! ஓகே ஓகே!!!

   Delete
 19. படங்கள் அழகு டேஸ்ட்தான் பார்க்க முடியலை ஹூம்.....

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி... அடுத்தமுறை மார்கட் போகும்போது மறக்காமல் வாங்கி வந்து விட்டில் குடுத்து.. என் ரெசிப்பியை பிரிண்ட் பண்ணிக் கையில குடுங்கோ:))...

   ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
 20. முள்ளங்கி சப்பாத்தி செய்து பாருங்கள் ரசிப்பீர்கள் ஒரு பதிவும் தேறும்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ..

   சப்பாத்தி எங்கள் வீட்டில் ஆருக்குமே பிடிக்காதே:) அப்போ பதிவுக்கு இப்போ என்ன பண்ணட்டும்?:)).. ஹா ஹா ஹா..

   மிக்க நன்றி.

   Delete
 21. //சமைக்கிறதை இங்கின போட்டுக் காட்டாவிட்டால் பாருங்கோ... ஒரு நிம்மதியான நித்திரையே வரமாட்டேன் என்கிறதே:///

  ஆமாம் இங்கின போடாமல் வயிற்றில் போட்டால் நிம்மதியா நித்திரை பண்ண முடியாதுங்கற உண்மையை இப்படி நாசுக்காக சொல்லுறீங்களே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ...

   பாரதி என்ன ஜொன்னார்ர்ர்ர்?:) என்ன ஜொன்னார்ர்?:).. பகிர்ந்துண் எனச் சொன்னாரெல்லோ:)).. அதைத்தான் மீ ஃபலோ பண்றேன்:) அது டப்பா? ட்றுத்ட்?:))..

   Delete
 22. என்னது உங்க ஊர்ல பனியா...... இங்கன ஒரு நாள் வெயில் ஒரு நாள் மழை இன்னொரு நாள் கடும் குளிர்

  ReplyDelete
  Replies
  1. இப்போ எந்த ஊரில எல்லாம் சொன்னது சொன்னபடி நடக்குது?:) எப்ப என்ன நடக்குதென்றே தெரியாமல் இருக்கே...

   Delete
 23. ஹலோ இங்க யாரோ பருப்புவடையை செய்துவிட்டு அது சரியாக வட்ட வடிவில் வராததால் நாலு பேர் கேலி பண்ணுவாங்க என்பதால் பக்கோடான்னு தலைப்பை மாற்றி வைச்சால் எங்களால் கண்டு பிடிக்க முடியாதா என்ன?

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ்வ் ட்றுத் கண்டு பிடிச்சிட்டாரே:)).. பக்கோடா சுட்டு மிகுதியில் கொஞ்சம் வடையும் சுட்டேனே..

   வடை எனில் வெங்காயம் போடுவோம்... அத்தோடு வடைபோல சுட்டால் நீண்ட நாள் இருக்காதே.. இது மொறு மொறு என இருக்கும் ஒரு மாதத்துக்குக்கூட..

   மிக்க நன்றி ட்றுத்.

   Delete
 24. Replies
  1. ஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ் மஞ்சள் பூ.. மஞ்சள் பூ..... வாங்கோ மகி நலம்தானே... இங்கே பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.. முடியும்போது வாங்கோ இடைக்கிடையாவது.

   மிக்க நன்றி மகி.

   Delete
 25. அருமையோ அருமை

  ReplyDelete
 26. முள்ளங்கியில் துவையல் செய்து பார்க்கலாம். இது சாதம்,தோசைக்கு நல்லா இருக்கும் போல.
  சாம்பார், குழம்பு செய்தது.
  பகோடா,முறுக்கு பார்க்க சூப்பரா இருக்கு. இப்படிதான் பகோடா நான் செய்வேன். ஆனா உள்ளி போடுவதில்லை. ஒருதரம் போட்டு செய்துபார்க்கோனும். இந்த குளிருக்கு நல்லா இருக்கும் டீ யோட சாப்பிட.. ஸ்,,ஸ்..ஆ
  பாட்டு சரியான சோகம்.. ம்.இடைக்கிடை இப்படியான பாட்டு கேட்கவேணும்தான்.
  சார்ஜ்..இப்ப போன் இல்லாமல் யாருமே இருக்கினம் இல்லையே. வீட்டுக்கு வாறவை உடனே வைபை பாஸ்வேர்ட் கேட்கினம் நலம் விசாரிக்காமல்.
  ஹண்டில் ஹோல்டர் ஐ மகன் அழகா செய்திருக்கார். அஞ்சு முறுக்கு அழகு
  பனிபுயலா கொஞ்சநாள் முன்பு நாங்களும் அனுபவித்தோம். இங்கு குளிர் வாட்டி எடுக்குது.
  அப்ப சிங்(கர்)கம் ஒன்னு புறப்படுதே.....ஏஏஏஏஎ

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ..
   நல்லா இருக்கு அம்முலு செய்து பாருங்கோ..

   இலங்கைக் கடையில் வாங்கும் ப்க்கோடாவில் சிலதில் உள்ளிச்செட்டை யும் இருக்கும்.

   பாட்டைப் பார்த்து நானும் அப்படித்தான் நினைச்சேன் அம்முலு ஆனா படம் பார்த்தேன் பார்க்கும்போது அது பெரிய சோகமாக இல்லை..

   //வீட்டுக்கு வாறவை உடனே வைபை பாஸ்வேர்ட் கேட்கினம் நலம் விசாரிக்காமல்.//

   ஹா ஹா ஹா சின்னப் பிள்ளைகள் வரும்போது இதே நினைவோடயே வருவினம்.

   //அப்ப சிங்(கர்)கம் ஒன்னு புறப்படுதே.....ஏஏஏஏஎ//
   ஹா ஹா ஹா..

   மிக்க நன்றி அம்முலு.

   Delete
 27. முள்ளங்கித் தொகையலும் நூல்கோல் தொகையலும் நன்றாகத்தான் இருக்கும். பெருங்காயம் கட்டியை அடுப்பில் பொரித்துப் போட்டு அரைத்தால் இன்னும் வாசனையாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..
   முள்ளங்கி - நோக்கிள் இரண்டும் ஒன்றுதானே?:)..

   பெருங்காயம் ஓ.. இனி செய்யும்போது அப்படிச் செய்கிறேன் .. என்னிடம் கட்டிப் பெருங்காயமும் இருக்கு.

   Delete
  2. அது தொகையல் இல்லை நெல்லைத்தமிழன் துவையல்..

   Delete
  3. ஹயோ ஹயோ உங்களுக்கு செக் என்ன பன்றாங்க?!!! அவங்க இதைஉங்களுக்குச் சொல்லிக் கொடுக்காம....டூ பேட்!!! ஏஞ்சல் அதிராக்கு முள்ளங்கி நூக்கோல் படம் போட்டு வித்தியாசம் சொல்லிக் கொடுங்க!!! ஹா ஹா ஹாஹா

   கீதா

   Delete
  4. அம்மா... தாயே - எங்களை குழப்பாதீர்கள். நூல்கோல் என்பது பீட்'ரூட் மாதிரி ஆனால் லைட் பச்சையாக இருக்கும். முள்ளங்கி வெண்மை (மற்ற நிறமும் உண்டு) நீளமாக இருக்கும். இரண்டும் கிழங்கு வகை என்பதால் நூல்கோலும் முள்ளங்கியும் ஒன்றாகுமா? நூல் கோலை கூட்டு செய்வார்கள். முள்ளங்கியை பெரும்பாலும் சாம்பாரில் போடுவார்கள்.

   Delete
  5. ஹா ஹா ஹா கீதா நான் நல்ல தெளிவாத்தான் இருந்தேன் ஆனா என்னை என் குழைசாதத்தில போட்டுக் கொயபி விட்டிட்டினம்:))

   Delete
  6. @ நெ.த
   ///நூல்கோல் என்பது பீட்'ரூட் மாதிரி ஆனால் லைட் பச்சையாக இருக்கும். முள்ளங்கி வெண்மை (மற்ற நிறமும் உண்டு) நீளமாக இருக்கும். இரண்டும் கிழங்கு வகை என்பதால் நூல்கோலும் முள்ளங்கியும் ஒன்றாகுமா?//

   ஹா ஹா ஹா நெ.த.. இலங்கையில் இரண்டையும் நோக்கிள் என்றே அழைப்போம் என்றுதான் நான் நினைக்கிறேன்.. ஏனெனில் முள்ளங்கி என்ற பெயர்.. இந்தியர்களோடு சேர்ந்துதான் அறிஞ்சேன்:).. ஒருவேளை எனக்குத்தெரியாமல் இருந்திருக்குமோ?

   இன்னுமொன்று நோக்கிள்/நூல்கோல் என்பது தமிழ்ப்பெயர் இல்லையே... நான் நினைச்சது நோக்கிளுக்கு தமிழில் முள்ளங்கி என ஹா ஹா ஹா:))..

   ஹையொ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:))

   Delete
 28. பாடுவதைப் பற்றிய உங்கள் ஊசிக்குறிப்பு - ஆஷா போஸ்லே அதிராவா எங்களிடம் உண்மையைப் பேசியிருப்பது? மிக்க மகிழ்ச்சி. இப்போவாவது உண்மையை எங்களிடம் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியதே.

  ReplyDelete
  Replies
  1. ///ஆஷா போஸ்லே அதிராவா எங்களிடம் உண்மையைப் பேசியிருப்பது? மிக்க மகிழ்ச்சி.//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது ஜொன்னது மீ இல்லே:) அஞ்சுவாக்கும்:))..

   ஹையோ எப்பூடி எல்லாம் ஜமாளிக்க வேண்டிக்கிடக்கு:)..

   Delete
 29. முள்ளு முறுக்கு நல்லா வந்திருக்கு.

  பக்கோடா, சிறு பருப்பு வடைகள்போல்தான் இருக்கிறது. மொறு மொறுவென்று இருந்ததா?

  ReplyDelete
  Replies
  1. ///முள்ளு முறுக்கு நல்லா வந்திருக்கு.//
   அவ்வ்வ்வ் முள்ளுத் தெரியுதோ? எனக்கு முள்ளில்லாத முறுக்குத்தான் விருப்பம், ஆனா அந்த அச்சு இருக்கவில்லை.

   பருப்பு வடைகள் செய்யும்போது பெரும்பாலும் நன்கு அரைக்க மாட்டோம் நெ.த, பாதியை இருவல் நருவலாகவும் பாதி பருப்பையும் சேர்த்துச் செய்வோம்ம்..

   இது நன்கு அரைத்தே செய்வது...

   சூடு ஆறியவுடன் ஒரு ரின் இல் போட்டு மூடிட வேண்டும். இன்னும் இருக்கு.. அப்படியே மொறுமொறு எண்டே இருக்கு... பொரிக்கும்போது மொத்தமாகப் போட்டிடக்கூடாது...

   Delete
 30. கேசரியை துண்டம் துண்டமாகத்தானே செய்தீர்கள்? (அது அதிரா ஸ்பெஷலாச்சே. அதன் படம் எங்கே?)

  ReplyDelete
  Replies
  1. அதே.. அதே.. ஹா ஹா ஹா ஒரு கிழமைக்கும் 2 நாள் செய்திட்டேன்.. எனக்கு கேசரி சரியான ஈசி வேலை, அத்தோடு வீட்டில் எப்பவுமே அப்பொருட்கள் ஸ்ரொக் குறையாமல் இருக்கும் என்னிடம்... துண்டுதான் போட்டேன்.. படமெடுக்க நினைக்கவில்லை ஹா ஹா ஹா..

   உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லோணும்...

   சென்னை நண்பி ஒருவரும் கேசரி செய்வா.. அவவும் உங்களைப்போல தண்ணிபோல செய்து டிஸ் இல் போட்டு சாப்பிடுவினமாம்.. நான் ஒருநாள் எங்கள் வீட்டுக்கு கூப்பிட்டு அளவு சொல்லி செய்து காட்டி.. துண்டு வெட்டிக் கொடுத்தேன் ஒரு பார்ட்டிக்கு..

   அவ வந்து சொன்னா அங்கே எல்லோரும் புகழ்ந்தார்களாம் துண்டு துண்டாக இருப்பது சூப்பரா இருக்கு என.. தான் சொன்னாவாம் இதன் கிரடிட் அதிராவுக்கே என:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எனக்குப் பாருங்கோ தற்பெருமை பேசுவது புய்க்காது:)).. ஹா ஹா ஹா..

   Delete
 31. மெழுகுவர்த்தி ஸ்டேன்ட் நல்லா வந்திருக்கு. அங்கெல்லாம் பள்ளிகளிலேயே சிறு சிறு வேலைகளை (மரம், பிளம்பிங்க் போன்று) சொல்லிக்கொடுத்துவிடுவதால், எல்லாவற்றிர்க்கும் மற்ற தொழிலாளர்களை எதிர்பார்க்கும் தேவை இருப்பதில்லை. இது நல்ல செயல். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், மரவேலை ... ஒட்டும் வேலை , சமையல் ,தையல் எல்லாமே சொல்லிக் கொடுப்பார்கள் முதல் இரு வருடங்கள் கட்டாய படங்கள் இவை.

   இதனாலேயே பல வேலைகளை தாமே செய்கின்றனர் இங்குள்ளவர்கள். அதைவிட சில இடங்களில் பெரியவர்களுக்கான ஃபிரீ கோர்ஸ் உம் நடக்கும்.. சுவருக்கு பேப்பர் ஒட்டுவது எப்படி? நிலத்துக்கு வூட் போடுவது எப்படி.. எனும் கோர்ஸ் கள்..

   Delete
 32. ஆயிரத்தைவிட ஆயிரத்து ஒன்று பெரிது என்று சொன்னது எனக்கு ஒன்றை ஞாபகப்படுத்திவிட்டது.

  சமீபத்தில் இலங்கை கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் மேடைப் பேச்சைக் கேட்டேன். அவர், இறைவன் எல்லாவற்றையும்விடப் பெரியவர். அறிவியல், எண்களின் ஆதி அந்தம் இவைகளைக் கண்டறியாதது போலவே, ஆதியும் அந்தமும் இல்லாதவர் இறைவன். -1000 விட -1001 சிறியது. 1000 விட, 1001 என்ற எண் இருப்பதுபோல, இறைவனும் அளவிடற்கரிய infinity என்ற பொருள்பட பேசியிருந்தார். உங்களுக்கும் லிங்க் கொடுத்திருந்தேனே.

  ReplyDelete
  Replies
  1. ஓ அந்த லிங், முழுவதும் கேட்கவில்லை.. ஆனா கடவுள் அனைத்திலும் இருக்கிறார் என்பதற்கான விளக்கம் சொல்வதும் கேட்டேன்... அவரின் ஸ்பீச் கேட்டுக் கொண்டே இருக்கலாம்..

   மிக்க நன்றி நெ.த.

   Delete
 33. முள்ளங்கி துகையல் - புதிதாக இருக்கிறது. இங்கே இப்போது சீசன். செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. நிட்சயம் செய்து பாருங்கோ.. சட்னிபோலவும் செய்யலாம் கொஞ்சம் தண்ணி சேர்த்து.. ஆனா அப்படிச் செய்தால் தாளிச்சுப் போடுங்கோ நல்லா இருக்கும். மிக்க நன்றி.

   Delete
 34. முள்ளங்கித் துவையல் மாதிரி முட்டைக்கோஸிலும் பண்ணலாம். அது சரி, நூல்கோல் தலைப்பிலே வருது பதிவிலே வரலை!

  முறுக்கு ரெசிபி எல்லாம் போடப் போறதில்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :) நீங்களே போடுங்க.
  அஞ்சுவைச் சுட்டு எடுத்திட்டீங்களே! பாவம் அஞ்சு! :)

  ஊசிக்குறிப்பு இரண்டுமே அருமையோ அருமை! அதிலும் முதல் ஊ.கு.வை விட இரண்டாவது சூப்பர்! அநேகமா அது உங்க சொந்த அனுபவமா இருக்கும்! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

   ஓ முட்டைக்கோஸ்[கோவா] விலும் செய்யலாமோ...

   முள்ளங்கிதான் ட்றடிஷ்.. அதுதான் நோக்கிள் எனவும் கேஎள்விப்பட்டேனே:) அதனாலதான் மூன்று பெயரையும் போட்டு வச்சேன்:))..

   //முறுக்கு ரெசிபி எல்லாம் போடப் போறதில்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

   ஹா ஹா ஹா கீரை வடையும் போடமாட்டீங்க:)) ஹா ஹா ஹா..

   //அஞ்சுவைச் சுட்டு எடுத்திட்டீங்களே! பாவம் அஞ்சு! :)
   //
   சுடச் சுடத்தானே தங்கம் துலங்கும்:))

   Delete
  2. ///அதிலும் முதல் ஊ.கு.வை விட இரண்டாவது சூப்பர்! அநேகமா அது உங்க சொந்த அனுபவமா இருக்கும்! :)//

   ஹா ஹா ஹா கர்ர்:) ஒரு ஆஷாபோஸ்லே யைப் பார்த்து இப்பூடிச் சொல்லலாமோ :))

   மிக்க நன்றி கீசாக்கா.

   Delete
  3. //அது சரி, நூல்கோல் தலைப்பிலே வருது பதிவிலே வரலை! //

   ஹலோவ் மியாவ் அக்கா கேக்கிறாங்க பதில் சொல்லுங்க

   Delete
  4. [im] http://www.petcathealth.info/wp-content/uploads/2015/04/cat-485103_640.jpg[/im]

   Delete
 35. பாடல் வந்த படம் பார்த்து இருக்கிறேன். மேஜர் சுந்திரராஜன் நாடகமாய் போட்ட போதும் (தேனியில் ) பார்த்து இருக்கிறேன்.

  முள்ளங்கித் துவையல் செய்து இருக்கிறேன்.
  பக்கோடாவும் செய்து இருக்கிறேன். குளிருக்கு (பனிபொழிவுக்கு) சுவையாக இருக்கும்.
  அஞ்சுவை கஷ்டபட்டு செய்து பொரித்து எடுத்து விட்டீர்கள்.(வடிவம் மாறாமல் சுட்டு எடுப்பது திறமைதான்)

  ஊசிகுறிப்புகள் நன்றாக இருக்கிறது.
  பனிபுயலால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.
  வாழ்க வளமுடன்.


  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. மீயும் நேற்றுப் படம் பார்த்தனே:)..

   ஓ நீங்களும் எல்லாம் செய்திருக்கிறீங்க.

   //(வடிவம் மாறாமல் சுட்டு எடுப்பது திறமைதான்)
   // சரியான கஸ்டம் கோமதி அக்கா.. எண்ணெயில் போட்டவுடன் அது தானாக சேப் மாறித்திரும்ப வெளிக்கிடும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சில எழுத்து திரும்ப திரும்ப செய்ய வேண்டியதாப் போச்ச்ச்:))..

   //பனிபுயலால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.///

   வீட்டில் இருப்போர் சேஃப் தான்.. சில இடங்களில் சிலர் உயிரிழந்ததாகவும் அறிஞ்சோம்ம்..

   ரோட்டில் [வெளியே] போகக்கூடாது என 2 நாட்கள் ஊரடங்குபோல உத்தரவு விட்டார்கள்.. ஏனெனில் ஏதும் ஆபத்து எனில் அம்பியூலன்ஸ் வர முடியாது.. அடுத்து முகத்தில காற்றோடு அடிக்க தொடங்கிட்டுது ஸ்னோ.. 2 நாட்கள் கதவுகூடத் திறக்க முடியவில்லை..

   ஆனா வீட்டில் இருந்து நல்லா என் சொய்ய்ய்ய் பண்ணியாச்சு..

   என்னில ஒரு பழக்கம் எப்பவும் நிறைய சாமான்கள் வாங்கி வாங்கி கிச்சினில் ஸ்ரொக் வச்சிருப்பேன்ன்.. அது இமுறை நல்ல உதவியாப் போச்ச்:))..

   மிக்க நன்றி கோமதி அக்கா.

   Delete
 36. பக்கோடாவில் கொஞ்சம் அதிகமாவே பார்ஷல் அனுப்பிவையுங்கோ குளிருக்கு வாய் அரைக்க இதமாக இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வாங்கோ..

   இடையில எங்கு காணாமல் போயிருந்தீங்க? ஸ்நேகாவிடமும் போக முடியவில்லையே எனும் கவலையோ?:)..

   பக்கோடா உங்களுக்குத்தான் பக்கெட் பக்கெட்டாக் கிடைக்குமே அங்கு.. நிஷாந்தன்/நிஷா கடைப்பக்கோடா தான் சுவையாக இருந்ததாக நினைவு உங்களிடத்தில்..

   Delete
 37. முள்ளங்கி நாங்களும் செய்வதுண்டு!

  ReplyDelete
  Replies
  1. ஓ இதே முறையிலோ? நல்லது.. முள்ளங்கியில் அதிகம் சத்திருக்காம்.

   Delete
 38. ஊசி இணைப்பு என்றும் போல அருமை!

  ReplyDelete
 39. பனி இங்கும் அதிகம் தான் இவ்வாண்டு.

  ReplyDelete
  Replies
  1. இங்கும் அதிகம் போட்டு போட்டு உடனே கரைந்திருந்தது முன்பு.. ஆனா இம்ம்முறை வித்தியாசம் நேசன்.. பனிப்புயல் இம்முறை... சில இடங்களில் காற்றோடு சேர்ந்து மலைபோல குவிஞ்சிருக்கு.. எங்கள் வீட்டு வாசலில் வழமையாக ஸ்னோ விழுவது குறைவு.. ஏனெனில் எதிர்ப்பக்கம் அடுட்த்ஹ வீடு இருப்பதால்...

   ஆனா இம்முறை அவ்விடத்தில் வாசலில் இருந்து ஒரு அடி உயரத்துக்கு ஏதோ லொறியில் ஏற்றி வந்து கொட்டியதுபோல குமிஞ்சிருக்கு.

   சும்மா சும்மா எல்லாம் மழை வரும் இப்போ வருகுதே இல்லை கர்:) ஒரு மழை கொட்டினால் போதும் எல்லாம் கரைஞ்சிடும்..

   மிக்க நன்றி நேசன்.

   Delete
 40. நான் கிச்சின் சுவரில் என்ன பிரிண்ட் பண்ணி ஒட்டியிருக்கிறேன் என்பதை.. ஆரும் கண்டுபிடிக்கவில்லை:).. ஸ்ரீராமும் மறந்திட்டார்:).. அது எங்கள் புளொக்கில் வெளியான என் “கம்பங்-கொள்ளு” ப் புட்டூஊஊஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. /என் “கம்பங்-கொள்ளு” ப் புட்டூஊஊஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா. //

   பன்னாட்டு உளவுப்படை உங்களை தேடுதாம் :)
   பின்னே இந்த புட்டை செஞ்சி பலபேர் சேதுவா மாறிட்டாங்க :)
   அதனால்தான் நாங்க தெரியாதஹ்மாதிரி போய்ட்டோம்

   Delete
  2. ///பன்னாட்டு உளவுப்படை உங்களை தேடுதாம் :)//

   அம்மாடி இதென்ன புயு வம்பில மாட்டிட்டமோ?:) கம்பரோட கொள்லை இணைச்சது டப்பாப்போச்சோ?:)

   https://53744bf91d44b81762e0-fbbc959d4e21c00b07dbe9c75f9c0b63.ssl.cf3.rackcdn.com/media/50/50DD6BAB-173B-4648-BB40-EA2278A0FA1E/Presentation.Large/Jungle-cat-jumping-off-fallen-tree-trunk.jpg

   Delete
 41. ஹப்பா மணிக்கனக்கா உங்க வீட்டு வாசல்ல வெயிட் செஞ்சு இப்போதான் கதவு திறந்துச்சு...பனியினால இறுகிப் போச்சு போல ஆஆ பக்கோடா, துவையல் எல்லாம் பனியில இறுகி உறைஞ்சு போயிருக்கும் தோண்டித்தான் எடுக்கணும் போல...ஹா ஹா ஹா ஹா....

  இதோ இன்னும் பல படங்கள் கண்ணுல தெரியல.....பாட்டும் வரலை எரர் சொல்லுது....வரேன் வரேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ...

   ஹா ஹா ஹா பொன்னார் மேனியனே.. தேவாரம் பாடியிருந்தால் திறந்திருக்கும் கீதா...

   Delete
 42. அதிரா டயட் ஸ்டார்ட் ஆகிடுச்சா??!!! அது நீங்க சமீபத்துல போட்ட புட்டு படம் தானே!!!!!???? அந்த கிச்சன்ல இருக்கறது...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ கீதா உண்மையில சுயமாக் கண்டு பிடிச்சீங்களோ?:) அதே அதே என் சரித்திரப் புகழ்பெற்ற கம்பன்கொள்ளுப் புட்டு:).. டயட் அது “நாளைக்குத்தானே” கீதா:)) ஹா ஹா ஹா..

   Delete
 43. முள்ளங்கி துவையல் சூப்பர்....செய்ய்யறதுண்டு..அதிரா..எங்க மாமியாருக்குன்னா...வெங்காயம் போடாம பெருங்காயம் பொரித்துப் போட்டு செய்வேன்...

  திருநெல்வேலி, கேரளா, கன்னியாகுமாரி இலங்கை எல்லோரும் பொதுவா சின்ன வெங்காயம் தான் அதிகம் யூஸ் செய்யறாங்க....நானும் தான்...அதன் சுவை தனிதான்!!! இல்லையா அதிரா...

  பக்கோடா வாவ்!!! உங்க ரெசிப்பியும் நோட் செய்திட்டேன்....நானும்.. அரைத்துச் செய்வதுண்டு என்றாலும்...என் பாட்டி வெங்காயம் சோம்பு சேர்த்து செய்ய மாட்டாங்க..இல்லையா....பாட்டியும் இலங்கையில் இருந்தப்ப கத்துக்கிட்டு செஞ்சதுதான்...அப்ப்டித்தான் நானும் தெரிஞ்சுக்கிட்டேன்...நான் செய்துட்டு சொல்லறேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் சின்ன வெங்காயம் உரிப்பதுதான் கஸ்டம் மற்றும்படி சுவைதான். இலங்கையில் அதிகம் சின்ன வெங்காயம்தான் அதிலும் அசைவக் கறிகளுக்கு சின்ன வெங்காயம்தான் தேடி வாங்குவார்கள்.

   நமக்கு இங்கு கிடைக்காது.. நம் தமிழ்க்கடையில் மட்டும் இப்போ கிடைக்குது. பல வருடங்களாக அழுது கொண்டிருந்தேன் சின்ன வெங்காயம் கிடைக்குதில்லையே என.

   பக்கோடா, பல நாட்கள் வைத்திருப்பது என்பதால், வெங்காயம் சேர்ப்பதில்லை கீதா.

   Delete
 44. முறுக்கில் ஏஞ்சல் மிளிர்கிறார்!!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அது எண்ணெயில் போட்டு எடுத்தமையால்:)

   Delete
 45. அது சரி நாளை எப்ப வரும்....டயட்டுக்கு !!!! ஹா ஹா ஹா ஹாஹா....

  கீதா

  ReplyDelete
 46. ஹலோ நாங்க கண்டு பிடிச்சிட்டோமே!!!!!!! ஹா ஹா ஹா

  ஸ்ரீராம்கிட்ட சொல்லியாச்சு...அவர்மறந்திட்டார் என்று.உங்க கம்ப்ளெயின்ட் என்று போட்டுக் கொடுத்தாச்ச்ஹூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ....ஹா ஹா ஹா..அதுவும் உலகப் புகழ் இந்த ரெசிப்பிய எபில வந்ததை மறக்கலாமோ!! ஜொள்ளுங்கோ!!!!!
  கேய்வி கேட்டாச்சு...அவரிடம்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அதுதானே எப்பூடி மறக்கலாம்???:))..

   அவர் இன்னொன்றையும் மறந்திட்டார்.. பதிலும் இல்லை ஆளையும் காணம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 47. கடலைப் பருப்பை இப்படி அரைத்து ஊற வைத்த பருப்பும் சேர்த்து கொர கொர என்று அரைத்து மசால் வடை என்று செய்வார்கள் இல்லையா...அதையே என் பாட்டி கொஞ்சம் எல்லா பருப்பையும் சேர்த்து கொர கொர என்று நைஸாக இல்லாமல் நீங்க சொல்லிருப்பது போல் சின்ன சின்னதாகக் கிள்ளி குனுக்கு என்று சொல்லிச் செய்வாங்க..நிறைய கறிவேப்பிலை போடுவாங்க பக்கோடாவும் அதிலேயே செய்வாங்க....கடலைமாவு கைவசம் இல்லைனா...இப்படி...

  உள்ளி எல்லாம் சேர்க்க மாட்டாங்க இஞ்சி மட்டும்...நான் சேர்ப்பேன்....நான் சின்ன வெங்காயமும் பொடியாக அறிந்து போட்டு இப்படிச் செய்திருக்கேன்...உங்கள் ரெசிப்பி இன்று செய்திடலாம்னு இருக்கேன் பார்ப்போம்...கறிவேப்பிலையும் இருக்கு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா ரங்கன் - கொர கொரன்னு மசால் வடை வருவதில்லை. கொஞ்சம் சாஃப்டா போயிடுது. கடைகள்ல கொர கொரன்னு இருக்கு. ஒருவேளை கொஞ்சம் பருப்பை ஊறவைக்காம நேரடியா மசால்வடை செய்யும்முன் கலந்துடறாங்களோ?

   Delete
  2. செய்து பாருங்கோ கீதா, இலங்கைப் பக்கோடாவில் உள்ளியை செட்டையோடு சேர்த்திருப்பார்கள்.

   Delete
  3. நெல்லைத்தமிழன் பருப்பு வடை உண்மையில் நாம் செய்வது மிக சுவை தெரியுமோ? எப்படி எனில்... ஊர் எனில் உரலிலே போட்டு மெதுவாக உடைத்து எடுக்கோணும்.. இடிக்கக்கூடாது.. இங்கு கை உரலில் இடித்தும் எடுப்பேன் சில சமயம்.. அது கொஞ்சம் கஸ்டம்.

   ஆனா மிக்ஸி யில் எனில்... நடுக்கப்பில் போட்டு பாதிப் பருப்பை மட்டும் அரைத்து எடுக்கோணும்.. மீதிப் பருப்பை அப்படியே சேர்க்கோணும்.. அப்போதான் நல்ல மொறு மொறு வடை வரும்.. அத்தோடு பருப்பை கொஞ்சம் அதிக நேரம் ஊற விட வேண்டும்.

   பலருக்கு பருப்பு வடை செய்யவே தெரியாது.. உழுந்து வடைபோல அரைத்து எடுத்துச் சுடுகின்றனர் அது சக்கு சக்கென சுவையே இல்லை.

   ஏன் உழுந்து வடைக்குக்கூட எங்கட அம்மா நல்ல மையாக அரைக்க மாட்டா.. ரவ்வைப் பதம்போல அரைச்சு சுடுவா சூப்பரா இருக்கும்.

   Delete
  4. நெ.த. மசால் வடைக்கு மட்டுமில்லை. ஆமவடை என்றாலும் மூன்று பருப்புக்களும் போட்டுச் செய்தால் நன்றாகக் கரகரவென வரும். எங்க வீடுகளில் துவரம்பருப்பு அதிகம் போடுவோம். ஒரு கிண்ணம் துவரம்பருப்பு எனில் அரைக்கிண்ணம் கடலைப்பருப்பு, ஒரு கைப்பிடி உளுந்து சேர்ப்போம். இதை முப்பருப்பு வடை என்போம். எல்லாப் பண்டிகைகளுக்கும் முப்பருப்பு வடை தான் எங்க ஊர்ப்பக்கங்களில் விசேஷம். பருப்புக்களை நன்கு ஊற வைப்போம். உப்புக்காரம் சேர்த்து அரைத்ததும் மசால் வடை எனில் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கொஞ்சம் போல் பாசிப்பருப்பை நன்கு கழுவிக் களைந்து வடைமாவுடன் கலந்து விட்டுச் சிறிது நேரம் வைத்திருந்த பின்னர் வடை தட்டி எடுத்தால் நல்ல கரகரப்பாக இருக்கும். ஒரு சிலர் மசால்வடைக்கு சோம்பு, இஞ்சி அரைக்கும்போதே சேர்ப்பார்கள். பிடிக்குமெனில் அப்படியும் செய்யலாம். நாங்க சோம்பு சேர்க்காமலேயே மசால்வடை வெங்காயம் மட்டும் சேர்த்துச் செய்வோம். ஆமவடை எனில் வெங்காயம் சேர்க்காமல் பாசிப்பருப்பைக் களைந்து கல்லரித்துச் சேர்த்து ஒரு ப.மி. இஞ்சி ஒரு துண்டு நறுக்கிச் சேர்த்துக் கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வடை தட்டினால் ஆறினாலும் கரகர!

   Delete
 48. முறுக்கு, பக்கோடா துவையல் எல்லாம் நல்லா வந்துருக்கு

  ரீசார்ஜ் ஹா ஹா ஹா ஹா பின்ன அது இல்லாம ஹேன்ட்ஸும் ஊடாது...லெக்ஸும் ஆடாது...ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வயதானோரில் இருந்து குழந்தைகள் வரை ஒற்றுமையான விசயம் ஒன்று உள்ளதெனில் அது இதுதான்...:)..

   Delete
 49. பாட்டு கமென்ட் யா!!! உண்மைதான்....நான் பாடிவிட்டு ..."கீதா இதுக்கு உன் ப்ராப்ளமே பரவாயில்லை.....இப்படி உன்னையே உன்னை வருத்திக்கணுமானு" என் மனசே எங்கிட்ட கேக்கும்...உண்மையாகவே!!...ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்கட வொயிஸ் நான் கேட்டிருக்கிறேனே... மிக அழகிய குரல்... பாடலும் கேட்டேன்.. பேசுவதும் கேட்டிருக்கிறேனே:) இது உங்களுக்குத் தெரியுமோ?:)..

   Delete
 50. ஏஞ்சல்!!! அதிராவின் ஓட்டலுக்கு எல்லாம் நீங்க பதிலாக நல்லா அவரை ஓட்டுவதால்...அவரால் ஓட்ட முடியாமல் இப்படி தேங்குழலில் உங்களைச் சுட்டுத் தள்ளிட்டாரோ!!! ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நான் எண்ணெயில போட, அவ ஸ்னோ ல போட்டு புரட்டிட்டாவாம் கர்ர்:)) ஹா ஹா ஹா..

   Delete
 51. ரெண்டாவது ஊசிக் குறிப்பு...ஹா ஹா ஹா ஆஷா போன்ஸ்லே இப்பூடி சொல்லலாமா!!??? உங்க வாய்ஸ் உலக வானொலி வழியாக எல்லார் காதிலும் இன்பத் தேனாக வந்து பாயுதே!!! அப்படியிருக்க இப்பூடிச் சொல்லலாமோ...உண்மையாக...இது கலாய்ப்பு இல்லை அதிரா...சீரியஸ்லி.

  என்னைப் பொருத்தவரை எல்லோரது குரலும் தேன்...அதில் அன்பு என்பது இருந்துவிட்டால்!!! நல்ல வார்த்தைகள் வந்தால் இனிய வார்த்தைகள் வந்தால்...உள்ளத்தில் நலல்து இருந்தால் அதுதானே வார்த்தைகளில் வரும் இல்லையா... அக்குரல் தேன் தான்...அப்படித்தான் உங்களையும் சொல்லுகிறேன்...அதிரா...ஸோ இது கலாய்ப்பு இல்லை!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //அப்படியிருக்க இப்பூடிச் சொல்லலாமோ...உண்மையாக...இது கலாய்ப்பு இல்லை அதிரா...சீரியஸ்லி.///

   ஹா ஹா ஹா நான் நல்லா தேவாரம் பாடுவனே கீதா..

   //.அதில் அன்பு என்பது இருந்துவிட்டால்!!! நல்ல வார்த்தைகள் வந்தால் இனிய வார்த்தைகள் வந்தால்...உள்ளத்தில் நலல்து இருந்தால் அதுதானே வார்த்தைகளில் வரும் இல்லையா... அக்குரல் தேன் தான்//

   உண்மை கீதா, குரல் சரி அழகு சரி அன்பு இல்லை எனில் அசிங்கமாகிடும்.. அன்பு இருந்தால் எல்லாமே அழகுதான். மிக்க நன்றி.. என்னிடமும் அன்பு இருக்கு என ஒத்துக் கொண்டமைக்கு:) ஆனா இதை என் செக்:) ஒத்துக்கொள்றாவோ தெரியேலையே:)..

   Delete
 52. சின்னவரின் மெழுகுவர்த்தி ஸ்டான்ட் மிகவும் நறாக வந்துள்ளது!!! ரொம்ப அழகா செய்திருக்காங்க...பள்ளியில் இது போன்று எல்லாம் சொல்லிக் கொடுத்து பயிற்ச்சி உண்டு என்று நீங்கள் முன்னாடி சொன்னது நினைவு இருக்கு....ரசித்தேன் ஸ்டாண்டை!! சின்னவருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் சொல்லிடுங்க!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அதேதான் கீதா கிளே மற்றும் கிளாஸ் ஐ உருக்கி எல்லாம் குட்டிக் குட்டிப் பொருட்கள் செய்திருக்கிறார்கள். அனைத்தையும் தொகுத்து ஒருநாளைக்கு போட வேணும் என நினைபேன்ன்.. எங்கே நினைப்பதெல்லாம் நடக்குது.. எத்தனையோ போஸ்ட்டுகள் போட மனதில ரெடியா இருக்கு.. ஆனா ஒவ்வொரு முறையும் ஒன்று புதிசா மனதில உதிச்சிடுது. அப்போ புதிசைப் போட்டு விடும்படி ஆகி விடுது:).

   மிக்க நன்றி கீதா அனைத்துக்கும்.

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.