நல்வரவு_()_


Thursday 1 February 2018

தி ம்பம்:)

ச்சூச்ச்மீ:) தலைப்பைச் சேர்த்துப் படிக்கவும்:).. எதையும் பிரிச்சுப் பார்க்க ஆசைப்படப்பிடா:)
குட்டிக் குட்டியா நிறைய விசயங்கள் சேர்ந்திட்டுது, தனித்தனியே போடப் போதாது.. அதனால க......தம்பம் ஆக்கிட்டேன்:)..

முக்கியமா நெல்லைத்தமிழன் ஒரு கிளவி.. ஹையோ டங்கு ஸ்லிப் ஆகத்தொடங்கிட்டுதே.. ஒரு கேள்வி கேட்டார்.. இந்தத் தானியங்களை என்ன பண்ணுவீங்க என.. அதனாலதான் இப்பூடி ஐடியா வந்துது..

இது கொள்ளுச் சுண்டல்...

இது என்ன தெரியுதோ? வரகு அரிசியை அவித்து, அவிக்கும்போதே சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் குட்டியாக அரிந்து போட்டு அவிக்கோணும், விரும்பினால் உள்ளியையும் உரித்து முழுசாகப் போடலாம், உப்பும் சேர்த்து அவிந்ததும்  பால் விட்டு கொதித்ததும் இறக்கி தேசிக்காய் பிளிந்து விடவும். இரண்டாவது படத்தில் இதே முறையில் செய்து, இறக்க முன்பு ஸ்பினாச் கீரை வெட்டிப் போட்டு இறக்கினேன்.. சூப்பராக இருக்கும் குடிக்க.

வரகரிசிக் கஞ்சி
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கஞ்சி குடிச்சிட்டு வரும்வரை, என் கிரேட் குரு.. என்ன பண்றார் எனப் பார்ப்போமே:)
ஹையோ குருவே இது என்ன வேலை?:) வால் அறுந்திடப்போகுதே கர்ர்ர்ர்:))
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இது கோதுமை அரிசி. 2 நாட்கள் ஊற விட்டால் இப்படி முளைக்கும், அதனை ஆவியில் அவித்தெடுத்து, வெங்காயம் செத்தல் மிளகாய் கறிவேப்பிலை போட்டு வதக்கி இதைக் கொட்டிப் பிரட்டுவேன்...
கோதுமைச் சுண்டல்

ஹா ஹா ஹா இது என்ன தெரியுதோ?:) தோசை மாவைப் புளிக்க வச்சிருக்கிறேன்:) கீசாக்காவும் நெல்லைத்தமிழனும் சொன்ன முறையில்:).. என்னிடம் தப்பவே முடியாது.. இது தோசை மாவுக்குச் சொன்னேன்:).. பூஸோ கொக்கோ?:)

ஆங் இதுதான் நான் சரஸ்வதி பூஜை நேரம் வாங்கி வந்தேன் எனச் சொன்ன தானியம்:) 
ஹங்கோ பீஸ் சுண்டல்..

இதை அரைத்து வடையும் சுட்டேனே.. சூப்பரா வந்துது.. கோதுடனேயே அரைத்தமையால் கலர் டார்க் ஆகிட்டுது.
ஹங்கோ பீஸ் வடை

தமிழ்க்கடையில் எனக்கு பிடிச்ச பழங்கள்/காய்கள்.. பிளேட்டில் இருப்பது இலந்தைப் பயமாமே:) எனக்கு இது தெரியாது, குட்டி இலந்தைப்பழம் தான் சாப்பிட்டிருக்கிறேன்.. நெல்லிக்காய், கொய்யாப்பழம், விளாங்காய்கள்.. ஒன்றை மட்டும் இப்படி சாப்பிட்டேன் உப்போடு தொட்டு, ஏனையவை 3,4 நாட்களில் பழுத்து விட்டன.  இதில எனக்கொரு சந்தோசம் என்னவெனில்.. ஆருமே வீட்டில் போட்டிக்கு வரமாட்டினம்:).. இவற்றை தொட்டுக்கூடப் பார்க்க மாட்டினம் ஹா ஹா ஹா:)..

மற்றது பொட்டாடோ வடகம் என இருந்தமையால் அட புதுசா இருக்கே என வாங்கி வந்தால் அது பப்படம் கர்ர்:)).

மற்றது சக்கரை வரட்டி என இருந்துதா, புதியவற்றை முயற்சி செய்வதே எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒன்று... அதனால வாங்கி வந்தேன்.. அச்சச்சோ ஒன்று கூடச் சாப்பிடப் பிடிக்கவில்லை, வாங்கிய பாவத்துக்கு சில நாட்கள் வச்சிருந்தேன், பின்பு வீசி விட்டேன், இது வாழைக்காய்க்கு சக்கரை பூசப்பட்டிருந்துது.. ஒருவித அருவருப்பான சுவையாக இருந்துது.
=======================================================================
 என் ரெசிப்பிகளை:) எல்லோரும் நல்லாத்தானே படிச்சுக்கொண்டு வந்தாங்க.. திடீரென என்ன ஆச்சு:) ஹா ஹா ஹா:), 
ஓகே ஓகே.. இனிக் கல்லை எடுக்கு முன் சப்டரை:) மாத்திட வேண்டியதுதேன்:)
=======================================================================
இது இங்கு வின்ரர் காலம் தொடங்கமுன், ஓட்டம் காலத்தில் இப்படிப் பல, விதம் விதமான காய்கள் காய்க்கும்.. இதுபற்றி ஏற்கனவே சில படங்கள் போட்டிருக்கிறேன், இந்த லிங்கில் போய்ப் பாருங்கோ.. பார்க்காதோருக்கு, இரவு காதில நுளம்பு.. முகாரிராகம் பாடி, நித்திரை ஆக்கும் ஜொள்ளிட்டேன்:)


இது எங்கள் வீட்டு முற்றத்தில் நிற்கும் வைல்ட் பெரி பழ மரம்.... 2 வது படத்தில் குண்டுப் புறாக்கள் வந்து பழம் சாப்பிடுகினம்.. பறந்திடுவினம் என்பதால், மேலே மாடி ஜன்னலால் யூம்:) பண்ணி எடுத்த படம்:)

ஆங்ங்ங் இது என்ன தெரியுதோ? எங்கள் காடினில் நிற்கும் பெயார்[pear tree] மரம்.. இதன் வயசோ பத்து:).. இன்னும் சுவீட் 16 ஆகல்ல:).. ஆனா கடந்த 5 வருடமா நிறையப் பூப்பா.. அப்படியே கொட்டி விடும்.. இந்த போன ஜூலையில்தான் ஒரே ஒரு காய் வந்து.. ஆய்ந்து சாப்பிட்டோம் நல்ல இனிப்பான பயம்:)... ஸ்ஸ்ஸ்ஸ் ஆரும் தொடக்கூடா இது கன்னிப்பயம்ம்ம்ம்:))

ஊசி இணைப்பு:
இதனை சற்று மாத்திப் படிக்கவும்:).. அழகு திரும்பிப் பார்க்க வைக்கும்:) ஆனால் அதிராவின் சமையல் குறிப்போ:).. திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க வைக்கும்:)) எப்பூடி?:)

ஆராவது மொய் வைக்காமல் போயினமோ:) எதுக்கும் ரெடியா இருப்போம்:)
......(\_/) 
......( '_')
..../""""""""""""\======░ ▒▓▓█D
/"""""""""""""""""""\
\_@_@_@_@_@_@_/ 

===============================__()__=================================

150 comments :

 1. Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. மன்னிக்கவும் நைட் போஸ்ட்டை பப்ளிஸ் பண்ணிப்போட்டு நித்திரையாகிட்டேன்:).. ஜிம் க்குப் போனேன் எல்லோ:))

   [im]https://thumb1.shutterstock.com/display_pic_with_logo/167866982/616561058/stock-photo-kitty-gives-rose-watercolor-painting-616561058.jpg [/im]

   Delete
 2. கொள்ளு சுண்டல் வேக வச்ச தண்ணியில் ரசம் செய்வேன் .சுண்டல் வெரைட்டிஸ் விட அதில் குழம்பு செஞ்சாதான் எங்க வீட்ல ஏற்றுக்கொள்ளப்படும் .நீங்க பட்டர்பீன்ஸ் வச்சிருக்கீங்களா மியாவ் அதை ஊறவைச்சி பொரிச்சா செம டேஸ்டியா இருக்குமாம்ம்

  ReplyDelete
  Replies
  1. ஓம் அஞ்சு, நீங்களோ ஆரோ சொன்னதன் பின்பு எனக்கு அத் தண்ணியை வெளியே ஊத்த மனம் வருவதில்லை, ஆனா சரியான கறுப்பாக இருக்கும் அதனால உணவில் சேர்க்க விரும்புவதில்லை.. ஒரு தடவை மட்டும் ரசத்தில சேர்த்தேன் .. பெரிசா பிடிக்கவில்லை.

   என்னில ஒரு பழக்கம் , சத்து வீணாயிடக்கூடாதே என, கொஞ்சமா தண்ணி விட்டு வத்திப்போகுமளவுக்கு அவிப்பேன்.. அப்போ வெளியே கொட்டும் அளவு மிக மிக குறைவாவே வரும்.

   முளை வந்திட்டால், அவிக்க மாட்டேன் ஸ் ரீம் பண்ணிடுவேன்.

   ஓ பட்டர் பீன்ஸ் இப்பவும் இருக்கே.. அதை என்ன பண்ணுவதெனத் தெரியாமல் ஊறப்போட்டு தோல் தானாகவே கழண்டுது.. புளிக்குழம்புபோல செய்தேன் யூப்பரோ யூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆனா அதில் வாய்வு அதிகம் என நினைக்கிறேன், சாப்பிட்டவுடன் வயிறு ஊதுவிடுவதுபோல ஒரு பீலிங்:) அதனால அடிக்கடி செய்வதில்லை..

   ஓ பொரியல்.. ட்றை பண்ணுறேன்.. இப்படி பொரிக்க நினைக்க வில்லை இதுவரை.

   Delete
  2. எனக்கும்தான் இப்போ ரீசண்டாத்தான் தெரிஞ்சது எப்படி தெரியுமா :)
   Mediterranean Platter Roasted and Salted Broad Beans ஒரு ட்ரே வாங்கிட்டு வந்தார் இவர் அதில் இருந்தது
   https://www.sainsburys.co.uk/shop/gb/groceries/sainsburys-antipasti-sharing-platter-268g

   Delete
  3. இதில broad beans எனத்தானே அஞ்சு இருக்குது.. .. இரண்டும் வேறு வேறு தானே.. நான் பட்டர் பீன்ஸ் ஐ நீங்க சொன்னீங்க என ஒரு 2,2.5 மணித்தியாலம் ஊறப்போட்டுப் பொரித்தேன், ம்ஹூம்... கல்லாக வந்துது.. நிறைய நேரம் ஊறவேணுமோ தெரியவில்லை... அத்தோடு கடைகளில் கிடைப்பது.. கொஞ்சம் அவித்து பேக் பண்ணுகிறார்கள்.. தெரியல்ல:)..

   Delete
 3. அய் :)நானும் வரகரிசி இப்படித்தான் செய்வேன் நான் மாங்கா இஞ்சி கறிவேப்பிலை அப்புறம் முருங்கைக்கீரை தாளித்து சேர்ப்பேன் .

  குருவும் சிஷ்யையும் ஜூப்பர் :)

  ReplyDelete
  Replies
  1. அஞ்சு!...

   ஆவ்வ்வ்வ்!... மாங்கா இஞ்சி அங்கின கிடைக்குதோ?..

   சாதா இஞ்சிக்கும் மாங்கா இஞ்சிக்கும் வடிவமும் ருசி மணமும் வித்தியாசம் எல்லோ...
   கைவசம் இருந்தால் ஒரு போட்டோ ப்ளீச்!...
   இங்கே கிடைக்குதோன்னு பார்த்து உடனே வாங்கணும்...:)
   10 வருடங்கள் முன் இந்தியாவுக்கு வந்தப்போ என் அம்மா செஞ்சுதந்த மாங்கா இஞ்சிப் பிரட்டல், பச்சடி இப்ப நினைச்சாலும் வாயூறுது..:)

   இங்கே சாதாரண இஞ்சிதான் கிடைக்கும். அதன் சுவை வேறு.
   அதுக்கும் எப்பவும் என் சமையலில் இடமிருக்கும். சமையலில் இல்லேன்னாலும் ரீயிலாவது சேர்ப்பேன். ரொம்ப விருப்பம் எனக்கு!

   Delete
  2. ///குருவும் சிஷ்யையும் ஜூப்பர் :)//

   ஹா ஹா ஹா ஓவரா துள்ளப்பிடாதாம் எனக் குரு ஜொள்ளி இருக்கிறார்:))..

   Delete
  3. இளமதி, அஞ்சு சொல்லித்தான் எனக்கு மாங்காய் இஞ்சி என ஒன்று இருப்பதே தெரிந்தது, தேடினேன் கிடைக்கவில்லை. பின்பு இப்போ தமிழ்க்கடை வந்தபின்பு ஒரு தடவை வந்ததாக சொன்னார்கள் எனக்கு கிடைக்கவில்லை..

   ஆனா மங்கோ ஜிஞ்ஞர் பிக்கிள் கிடைக்குது சூப்பரோ சுப்பர். தமிழ்க்கடைகள் இருப்பின் தேடிப்பாருங்கோ கிடைக்கும்.

   ஓ அதனை ரீயிலும் சேர்க்கலாமோ??..

   Delete
  4. // ஓ அதனை ரீயிலும் சேர்க்கலாமோ??..//..... கர்ர்ர்ர்ர் ....:))

   இல்லை அதிரா நான் சொன்னது மாங்கா இஞ்சியை இல்லை...

   // இங்கே சாதாரண இஞ்சிதான் கிடைக்கும். அதன் சுவை வேறு.
   அதுக்கும் எப்பவும் என் சமையலில் இடமிருக்கும். சமையலில் இல்லேன்னாலும் ரீயிலாவது சேர்ப்பேன். ரொம்ப விருப்பம் எனக்கு!//
   நோர்மல் இஞ்சியைதான் இஞ்சி ரீ குடிப்பமே அதைச் சொன்னன்....
   ஹப்பா.... புரியாமல் போய் மாங்கா இஞ்சியை ரீயில போடாம விட்டீங்களே.. நல்ல காலம்! அது எப்பிடி இருக்குமோ?... :)))

   எனக்கொரு படமெடுத்து ( மாங்கா இஞ்சியைப் படமெடுத்து... விளக்கமா சொல்லணும் வேறேதாலும் படம் எடுக்கிற படத்தைப் போட்டிடப் போறீங்க...:)) ) போடுங்கோ இங்கின. எங்களின் தமிழ்க் கடைகளில இதுவரை இந்த மாங்கா இஞ்சியை காணலை நான்..

   Delete
  5. @@@ miyyaw // அதனை ரீயிலும் சேர்க்கலாமோ??..//

   இளமதி டீயில் சேர்ப்பதா சொன்னது சாதா இஞ்சியை மியாவ்

   Delete
  6. ஸ்ஸ்ஸாஆ !1 அதை சும்மா மெல்லிசா நறுக்கி உப்பு மஞ்சள்தூள் லைம் சேர்த்து குலுக்கி சாப்பிட்டாலும் சுவையோ சுவை இளமதி .ஆக்சுவல்லி இது மஞ்சளில் ஒரு வெரைட்டியாம் :) வெள்ளை மஞ்சள் //மாஇஞ்சி .அம்பா haldi என்று சொல்றாங்க வட இந்தியர்

   Delete
  7. ஓ.. அப்படியோ அஞ்சு!..
   கிடைக்காத எனக்கு இப்பிடி ஸ்ஸ்ஸாஆ... எண்டு உறிஞ்சிக் காட்டுறது ஞாயமோ...:(...:)))

   இங்கே துருக்கியர் கடையில இந்தப் பச்சை மஞ்சள் அதாவது மஞ்சள் கிழங்கு மஞ்சள் தேறு இருக்குது. கண்டிருக்கிறேன். ஒரு நோர்த் இண்டியன் கடையும் இருக்கு. அவையிட்டயும் தேடினேன் காணலை...

   இனிப் போகும் போது நீங்கள் சொன்ன அம்பா ஹல்டின்னு பெயரைச் சொல்லிக் கேட்டுப்பார்போம்.

   Delete
  8. இது வெளிநாட்டில rareஆத்தாள் கிடைக்கும். நான் இங்கு மூன்றுமாத்த்துக்குமுன் வாங்கினேன். அது எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்லமுடியாது. வெறும் இஞ்சியை கட் பண்ணி, தேனில் ஊறவைத்து (குளிர்சாதனப் பெட்டில வைக்கணும்) காலைல ஒரு ஸ்பூன் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

   Delete
  9. இளமதி... ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதுதானே மாங்கா இஞ்சியை ரீயில் போடுவது பற்றி ஆரும் பேசிக் கேட்டதில்லையே என நினைச்சேன்.. இருப்பினும் கிடைச்சால் ரீ யில் போடலாமே என எண்ணினேன்:).

   நல்லவேளை, எங்க வீட்டில் இருக்காததால் நீங்க தப்பிச்சிட்டீங்க:)) மீ தான் எள் ஏன்னுமுன் எண்ணெயா நிற்பேனெல்லோ:)).. பாருங்கோ அஞ்சு சொன்னதும் பட்ட பீன்ஸ் பொரிச்சிட்டேனே:).. ஹா ஹா ஹா .. இல்லை எனில் இளமதிக்கு கைக்கு சங்கிலி வந்திருக்கும் இந்நேரம்:))

   Delete
  10. ///AngelFriday, February 02, 2018 11:51:00 am
   ஸ்ஸ்ஸாஆ !1 அதை சும்மா மெல்லிசா நறுக்கி உப்பு மஞ்சள்தூள் லைம் சேர்த்து குலுக்கி சாப்பிட்டாலும் சுவையோ சுவை///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எனக்கு வாய் ஊருதே:) சே..சே.. ஊறுதே:)... இங்கு பச்சை மாங்காயே ஒழுங்கா கிடைக்குதில்லை.. வெளித்தோல் பச்சையா இருக்கும் வாங்கினால் உள்ளே மஞ்சளாகிடும்.. பிஞ்சாகக் கிடைபது குறைவே.. இதில மாங்கா இஞ்சியாம் உப்பாம் தூளாம் கர்:)..

   Delete
  11. ஹா ஹா ஹா இளமதி நீங்க அம்பாள் அல்டி எனக் கேட்டிடாதீங்கோ.... :) நெல்லைத்தமிழன் கீழ ஆத்தாள் எண்டு வேற எழுதிட்டாரே ஹா ஹா ஹா:)).. இந்த மாங்கா இஞ்சி படும் பாடு:).. இதுக்கெல்லாம் காரணம் அஞ்சு.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆ என அடிக்கடி உறிஞ்சிக் காட்டுவதுதான் கர்ர்ர்:))..

   நெல்லைத்தமிழன் உள்ளியைத்தான் தேனில ஊற வச்சு சாப்பிடுவினம் எனக் கேள்விப்பட்டேன் இதையுமோ.. நீங்க எங்கள்புளொக்கில் சொன்னபோதான் பார்த்தேன், நமக்கு இங்கு ஊர் இஞ்சி கிடைப்பதில்லை.. எவ்ளோ பெரீய துண்டு சேர்த்தாலும் ரீ உறைக்காது, ஆனா ஊரில சின்னத்துண்டு சேர்த்தாலே காரமா இருக்கும்...

   Delete
  12. சகோ நெல்லைத் தமிழன்
   //இது வெளிநாட்டில rareஆத்தாள் கிடைக்கும்.// அட அப்பிடியோ.. அவ்வளவுதான்.. என் ஆசையிலே மண்தான்..:(

   ஆனாலும் எனக்கு இந்த மாங்கா இஞ்சி கிடைக்கும்! என் உற்ற தோழிகள் அதிராவும் அஞ்சுவும் எனக்காக லண்டனிலிருந்து வாங்கி அனுப்புவினம்!...ன்னு நான் நம்புறேன்...:))
   என்ன அதிரா!... அஞ்சுவோட சேர்ந்து எனக்கு 1 கிலோ மாங்கா இஞ்சி வாங்கி அனுப்பிவிடுவீங்கதானே!...:)))

   என் அம்மா ஊரில் இருக்கும்போது சாதாரண இஞ்சியை நீங்கள் சொல்வது போல தேனில் ஊறப்போட்டு வயிற்று வலி, அஜீரணம் ஏற்படும் சமயம் தருவா. சாப்பிட்டிருக்கிறேன் சகோ!

   அதிரா!...//அதுதானே மாங்கா இஞ்சியை ரீயில் போடுவது பற்றி ஆரும் பேசிக் கேட்டதில்லையே என நினைச்சேன்.. // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...:))) எதுக்கெடுத்தாலும் அவசரம்....கூடாதெண்டு இதுக்குத்தான் சொல்லுறது. கேட்டாத்தானே...:)

   //இளமதி நீங்க அம்பாள் அல்டி எனக் கேட்டிடாதீங்கோ.... :) //..... சிரிச்சு முடியுதில்லை அதிரா!...:)))))))))

   அன்பான கருத்துப் பகிர்வுகளுக்கு
   மிக்க மிக்க நன்றி அதிரா, அஞ்சு & நெல்லைத் தமிழன்!

   Delete
  13. ///அதிராவும் அஞ்சுவும் எனக்காக லண்டனிலிருந்து வாங்கி அனுப்புவினம்!...ன்னு நான் நம்புறேன்...:))
   என்ன அதிரா!... அஞ்சுவோட சேர்ந்து எனக்கு 1 கிலோ மாங்கா இஞ்சி வாங்கி அனுப்பிவிடுவீங்கதானே!...:)))///

   ....ஙேஙேஙேஙே.. மீயே அதை இன்னும் கண்ணாலயே பார்க்கேல்லை:) இதில பார்சலோ?:) தேம்ஸ் கரை சிப்பி யோகி:) தான் பார்சலில் அனுப்பலாம் :))..

   அதிலயும் ஒரு கிலோவோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏதும் கடை போடும் பிளானோ?:)).. ஹா ஹா ஹா:)...

   Delete
  14. மாங்காயிஞ்சி பார்க்க மஞ்சள் பாதி,இஞ்சி பாதி கலந்து செய்த கலவை மாதிரி இருக்கும். (எனக்கு பார்க்க அப்படித்தான் இருந்தது.)நானும் சாப்பிட்டிருக்கேனேஏ. ஸ்ஸ்ஸாஆ...ஆ....
   (பின் குறிப்பு...ஊரிலிருந்து அனுப்பினவை)

   Delete
  15. //நானும் சாப்பிட்டிருக்கேனேஏ. ஸ்ஸ்ஸாஆ...ஆ....
   (பின் குறிப்பு...ஊரிலிருந்து அனுப்பினவை)..//
   ஒரு துண்டெண்டாலும் எனக்குத் தந்தியளோ பிரியா?...கர்ர்ர்ர்ர்....:))

   Delete
  16. ///நானும் சாப்பிட்டிருக்கேனேஏ. ஸ்ஸ்ஸாஆ...ஆ....
   (பின் குறிப்பு...ஊரிலிருந்து அனுப்பினவை)//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) இன்னொரு ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஅ வா????:))..

   ///ஒரு துண்டெண்டாலும் எனக்குத் தந்தியளோ பிரியா?//
   இது கொஸ்சன்ன்ன்ன்:) இண்டைக்குத்தான் இளமதிக்கு கிட்னி:) ஒயுங்கா வேர்க் பண்ணி ஒரு கிளவி சே..சே ஹையோ அது கேள்வி கேட்டிருக்கிறா:))..

   அதுதானே பிரியா.. வேறு என்னவெல்லாம் ஊரில இருந்து வந்ததெண்டு ஜொள்ளவே இல்ல நீங்க:))..ஹா ஹா ஹா..
   எனக்குப் பாருங்கோ ஊர் வம்ஸ்ஸ்:) பிடிக்காது ஹா ஹா ஹா:))

   Delete
 4. இன்னாது கோ கோ கோ :) ஹம்ஹூம் வேணாம் அப்படியே அடுத்த கதம்பத்துக்கு தவ்வறேன் :)

  ReplyDelete
  Replies
  1. ///இன்னாது கோ கோ கோ :) ஹம்ஹூம் வேணாம்//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அல்ர்ஜி ஃபிஸ்:))

   Delete
 5. நானும் தோசைமாவுக்கு கம்பளி டிரஸ் போட்டுவிடப்போறேன் :)
  நான் இதுவரைக்கும் gungo peas வாங்கியதில்லை வாங்கி பார்க்கணும் .டேஸ்ட் எப்படி இருக்கும் னு சொன்னிங்கன்னா நாளைக்கு வாங்கலாம்னு இருக்கேன்
  ஆவ் வடையும் பொரிச்சிங்களா :) falafel மாதிரி இருக்கு :)

  ReplyDelete
  Replies
  1. ///AngelThursday, February 01, 2018 10:38:00 pm
   நானும் தோசைமாவுக்கு கம்பளி டிரஸ் போட்டுவிடப்போறேன் :)//

   ஹலோ மிஸ்டர்:)) ச்சும்மா எல்லாம் போடத்தேவையில்லை:).. உங்களிடத்திலதான் நன்கு புளிக்குதெல்லோ?:) பிறகெதுக்கு ட்றெஸ்ஸூஊஊஊ:))..

   //நான் இதுவரைக்கும் gungo peas வாங்கியதில்லை///
   எனக்கு புதுத்தானியம் எது கண்டாலும் வாங்கிடுவேன், இது நன்றாகவே இருந்தது அஞ்சு.. சுவை பழகிட்டால் ஓகே.. அதிலும் வடை இன்னும் சூப்பர்...

   //falafel மாதிரி இருக்கு :)//
   யேஸ் கைண்ட் ஒஃப்... ஆனா இது சொஃப்ட்..

   Delete
 6. ஹாஹா :) வடகம்னு சொன்னா எல்லாம் இருக்கும் தளிர் வடாம் அரிசி வடாம் மைதா ஜவ்வரிசி வடாம் .
  சர்க்கரை வருட்டி எல்லாம் அப்பவே செஞ்சு பொரிச்சி சாப்பிடறதுதான் ருசி .நீங்க வாங்கினது எக்ஸ்போர்டுக்கு வரத்து நாள்பட்டது டேஸ்ட்டே இருக்காது .எனக்கு நேந்திரம் சிப்ஸ் மட்டும் பிடிக்கும் உற்பத்தி டேட் பார்த்து வாங்குவேன்

  ReplyDelete
  Replies
  1. //ஹாஹா :) வடகம்னு சொன்னா எல்லாம் இருக்கும் தளிர் வடாம் அரிசி வடாம் மைதா ஜவ்வரிசி வடாம் .//

   அதன் சுவையே வேறுதானே அஞ்சு.. இது பப்படம் என்றே போட்டிருக்கலாமெல்லோ கர்ர்:))..

   உண்மைதான் இந்த சக்கரை வரட்டி... சுடச்சுட ஓகேயாக இருக்குமென நினைக்கிறேன்... என் பெட்டர் ஃபுல் எப்பவும் சொல்லும் ஒரு விசயம்:) நமக்கு தெரியாத ரெஸ்டோரண்ட்:) தெரியாத உணவு என எப்போதும் இருக்கக்கூடாது:) ட்ரை பண்ணிடோணும் என:)) ஹா ஹா ஹா அப்படியேதான் மீயும் காசு போனாலும் புதுசா ஏதும் தெரிஞ்சா வாங்கிப் பார்ப்பேன்:)..

   அதுக்காக பாஆஆஆஆஆஆம்பு யூப் குடிச்சீங்களா எண்டெல்லாம் நோ குரொஸ் குவெஷன் பீஸ்ஸ்ஸ்:)).. எங்கட பக்கத்து வீட்டுக்கார சொன்னார்கள்.. ஸ்பெயின் போன இடத்தில நத்தைக் கறி சாப்பிட்டோம் யூப்பர் என ஹையோஓஓஓஓஒ எனக்கு நிண்ட இடத்திலயே சத்தி வரப்பார்த்துது:), ஆனா நான் எப்பவும் அடுத்தவர்களின் விருப்ப உணவை மதிப்பேன்.. அதனாலென்ன அவர்களுக்கு பிடிச்சிருக்கு சாப்பிடுகினம்.. அதுக்காக அய்யய்யே அதை எல்லாம் சாப்பிடுவதா எண்டெல்லாம் சொல்ல மாட்டேன்..

   எனக்கு பொதுவா இனிப்பு பிடிக்காது அஞ்சு.. நேத்திரம் சிப்ஸ் உறைப்பு கிடைக்கவில்லை.. ஆனா அந்த வாழைக்காய் தமிழ்க் கடையில் கிடைக்குது.. அதில நன்கு பழுத்ததைக் கூட கேரளாக்காரங்க வாங்கிப் போகினம் பார்த்தேன்.. பழத்தை என்ன பண்ணுவாங்களோ?... இம்முறை போகும்போது, நேத்திர வாழை வாங்கி, இந்த சிப்ஸ் உறைப்பா செய்யோணும்.. உறைப்பெனில் வீட்டில சுட்ட உடனே முடிஞ்சிடும்:)

   Delete
  2. பழத்தை பாயசம் ப்ரதமன் செய்வாங்க அப்புறம் பழப்பொரி அதாவது மைதாமாவில் முக்கி பஜ்ஜி யாக பொரிப்பாங்க

   Delete
  3. ஓ அதுக்குத்தான் பழம் வாங்குவார்களோ.. நான் ஒரு தடவை ஆரம்பம், ஊர் யானை வாழைப்பழமாகும் என வாங்கி வந்து சாப்பிட்டுப் பார்த்தேன் சுவை இல்லை.. பின்புதான் தெரியும் அது சாப்பிடுவதல்ல என.. கர்:)..

   Delete
 7. இந்த வைல்ட் பெரிஸ்க்கு நிறைய பறவைங்க வருவாங்க :)இங்கும் .எங்கவீட்ல ரெட் கர்ரேன்ட்ஸ் இருக்கு இன்னும் நாளாகும் பழம் வர சீசன் .மார்ச் ஏப்ரில் துவங்கும் .இந்த கன்னி pear ஏற்கனவே போட்ட மாதிரி நினைவு .
  நிறைய பூக்கள் வரணும் pollination நடக்கணும்னா நிறைய wild பூக்கள் விதைகளை மரத்தை சுத்தி தூவுங்க அதுக்கு பம்பில் பீஸ் வரும் பட்டர்ப்லைஸ் வரும் அப்போதான் கனி நிறைய கிடைக்கும் உங்க ஏரியாவில் நிறைய பக்கத்துவீட்லயும் இந்த pears இருக்கானு பாருங்க

  ReplyDelete
  Replies
  1. //இந்த கன்னி pear ஏற்கனவே போட்ட மாதிரி நினைவு //

   அது பூவைப்போட்டேன் அஞ்சு... பூத்துக் கொட்டுறா காய்க்கிறாவே இல்லை எனப் போட்டேன்:)).. இப்போதான் பழம்:)..

   //நிறைய wild பூக்கள் விதைகளை மரத்தை சுத்தி தூவுங்க அதுக்கு பம்பில் பீஸ் வரும் பட்டர்ப்லைஸ் வரும் அப்போதான் கனி நிறைய கிடைக்கும் //

   இதை ஒல்ரெடி சொல்லியிருக்கிறீங்க... இந்த ஏரியாவில் அப்பிள் தான் அதிகம், எதிர் வீட்டில் ஒரு பெயார் மரம், அவர்களும் சொன்னார்கள் பத்து வருடத்தின் பின்பே காய்ச்சது என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 8. ஊசி இணைப்பை நீங்க சொன்னமாதிரி படிச்சேனா ..தலை சுற்றி விழுந்திட்டேன் இருங்க என் அட்வகேட் கேஸ் பைலோட வரார் :)

  ReplyDelete
  Replies
  1. ஹையோ புறுணம் பார்க்காமல் என்னை மளமளவென மேலே ஏத்தி விடுங்கோவன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கால் வேற வழுக்கித்தொலைக்குதே:).. அப்பூடி என்ன நான் டப்பா ஜொள்ளிட்டேன்ன்ன்ன்ன்ன்:))

   [im]http://images1.fanpop.com/images/photos/1300000/Kitty-climbing-a-tree-cats-1327862-600-600.jpg[/im]

   Delete
 9. அடி என்னடி உலகம் பார்த்து ரசிக்கும் பாடல் அடிக்கடி .
  நிஜத்துக்கும் நிழலுக்கும் எவ்ளோ வித்யாசம் .நான் நினைத்தேன் படாபட் நிஜத்திலும் ஒரு fwd character ,நோ கேர் டைப் பொண்ணுன்னு .

  ReplyDelete
  Replies
  1. எனக்கு மிக மிகப் பிடிச்ச பாடல்களில் இதுவும் ஒன்று. காரில எம் பி 3 ல எப்பவும் ரிப்பீட்டில கேட்பதுண்டு:).. ஆனா படமும் பார்த்ததில்லை, இதில் சுஜாதாவை மட்டும்தான் தெரியும்.. ஓ மற்றவ பெயர் படாபட் ஆ.. புயுசா இருக்கே...

   மியாவும் நன்றி அஞ்சு...

   Delete
 10. எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வாங்கோ..
   கர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் கேய்ப்பதை திருப்பிக் கேய்க்கலாமோ?:)) ஹா ஹா ஹா..

   Delete
 11. காங்கோ கடலை மாமிசத்துடன் சேர்த்து சமைத்தால் மிகவும் அருமையான சுவை.

  ReplyDelete
  Replies
  1. ஓ இது புது விதமா இருக்கே... நான் இறைச்சி வகைகளுக்கு மட்டுமே இடைக்கிடை உருளைக்கிழங்கு மட்டும் சேர்ப்பதுண்டு மற்றும் படி எதுக்கும் எப்பவும் சேர்ப்பது பிடிக்காது தனியேதான் சமைப்பேன்.

   சின்னப்பிள்ளையாக இருந்தபோது ஒரு தடவை என் நண்பி வீட்டில் மீன் குழம்பினுள் சக்கரைப் பூசணி பெரிய துண்டாக தோலோடு சேர்த்துக் குழம்பு வைத்திருந்தார்கள்.. சூப்பரா இருந்துது, ஆனா இங்கு தான் நம் வீட்டில் ஏசியன் மரக்கறிகளே பெரிசா பிடிக்காது.. இதில எங்கின மீனோடு சேர்ப்பது கர்ர்ர்ர்ர்:))

   Delete
 12. என்ன பாடல்கள் இப்ப எல்லாம் ரசிக்கும் படி தேர்ந்து எடுக்கின்றீங்கள்! இலங்கை வானொலியில் என்னடி உலகம் பாடல் ஒளிக்காத நாட்கள் இல்லை ஒரு காலத்தில்))) படமும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஓ உங்களுக்கும் பிடிச்சதோ நேசன் மிக்க நன்றி... சூப்பர் வசனங்கள்...

   Delete
 13. கொள்ளுச்சூப் நல்லாக இருக்கும் செய்முறை தனிமரத்தில் இருக்கு )))

  ReplyDelete
  Replies
  1. ஓ தனிமரத்தில சமையல் ரெசிப்பீஸ் உம் இடம் பெற்றிருக்கோ:)..

   Delete
 14. குரங்கு வால் பாவம்! மீ போல)))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஓவரா சுத்தினா இப்பூடித்தான் இழுப்பினம்:))

   Delete
 15. ஊசிக்குறிப்பு அருமை இப்ப புரியுதோ ஏன் சினேஹாவை தனிமரம் விடாது துரத்து என்று)))மொய் வைக்க திரட்டியின் ஓட்டுப்பட்டையைக்காணவில்லை இருங்கோ சுமந்திரனின் வக்கில் நோட்டிஸ் வரட்டும் இரண்டு கோடி பற்றி விசாரித்து)))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்:) இனியும் ஸ்நேகாவைத்துரத்தி ஒண்ணும் ஆவாது:) புதுசா ஏதும் ட்ரை பண்ணுங்கோ:)..

   வோட் போடுவது... மை:)..
   கொமெண்ட் போடுவது ..மொய்:)).. ஹையோ இவ்ளோ காலம் என் புளொக் வந்தும் இந்த பாசை புரியாமல் போச்சே நேசனுக்கு:)...

   Delete
 16. ஓகே ஓகே.. இனிக் கல்லை எடுக்கு முன் சப்டரை:) மாத்திட வேண்டியதுதேன்:)/வாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மகனுக்குப் படிச்சுக் காட்டிக் காட்டி என் புளொக் பாடல்:), உங்களுக்கும் பாடமாச்சுது போல... மிக்க நன்றிகள் நேசன்.

   Delete
 17. வடை புகைப்படம் அழகு
  எடுத்து சாப்பிடத்தான் முடியவில்லை.

  ஊசி இணைப்பு

  ஜூப்பரோ... ஜூப்பர் நான் அயந்துட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

   சுட்டாத்தானே சாப்பிட முடியும் ஹா ஹா ஹா..

   என் பக்கம் படிச்சு, எல்லோரும் அயரோணும்:)) வெரி சோரி டங்கு ஸ்லிப்ட்:) அசரோணும் எனத்தான் மீ நினைக்கிறேன்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கில்லர்ஜி.

   Delete
 18. அச்சச்சோ... இன்னும் இரண்டொரு வாரத்தில் வெள்ளி வீடியோவில் நான் இணைக்க எண்ணியிருந்த பாடல்.. இது அநியாயம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

   ஹா ஹா ஹா எதுக்கு இப்பூடிப் பதறுறார் என நினைச்சேன்:)).. நீங்க ஓசிக்காதீங்க:) இங்கின எல்லோருக்கும் மறதி அதிகம்:) அதனால ஒரு மாதம் கழிச்சு போட்டால் புதுசாக் கேட்போம்:)).. நானும் அஞ்சுவும் இப்பவே மறந்திட்டோம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா:)..

   Delete
 19. இந்த விறகு அரிசி.... அய்யய்யோ... டங்கு ஸ்லிப் ஆவுதே... வரகு அரிசி சீமை அரிசி... அச்சச்சோ... மறுபடி டங்கு சிரிப்பு... ச்சே ஸ்லிப்பு... சாமை அரிசி எல்லாம் ஆரோக்கியம்தான். ஆனால் யாராவது செய்து கொடுத்தால் எப்பவாவது சாப்பிடுவேனாக்கும். நான் வைகோ ஸார் மாதிரி சாப்பாட்டு ரசிகன்! இதற்கெல்லாம் (தொடர்ந்து சாப்பிட) சரிப்படமாட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா என் பக்கம் வந்தாலே டங்கும் ஸ்லிப் ஆகத் தொடங்கிடும்:))... தொடர்ந்து சாப்பிடுவது கஸ்டம்தான் இடைக்கிடை சாப்பிடலாம்..

   //சாப்பாட்டு ரசிகன்! /// ஆவ்வ்வ்வ் இதில பாட்டு.. ம் இருக்கே:))

   Delete
 20. உங்க குரு தன் குட்டியைத் தன் எல்லைக்குள் வைத்திருக்க முயற்சி செய்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நண்டு கொழுத்தா வலையில நிற்காது என்பினம்:)).. இது குருவுக்குத் தெரியேல்லைப்போலும்:))

   Delete
 21. சிறு வயதில் என் அக்கா மகள் விஷமம் என்று மேஜைக்கு காலில் கட்டி வைத்திருப்பார்கள். அந்த நினைவில் என் பையனையும் கட்டிப்போட்டிருக்கேன்! அதுவும் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்:) ஒரு மாமா வாக இருந்தும் இதைப் பார்த்திட்டுப் பேசாமல் போயிருக்கிறீங்க:) அத்தோடு விடாமல் உங்கட மகனையும் கட்டியிருக்கிறீங்க.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) யூ ஆ எ பாட்ட்ட்ட்ட்ட்ட் டாஆஆஆஆஆஆஆட்ட்ட்ட்ட்ட்ட் இன் த வேஏஏஏஏஏஏஏஏஏஏஏல்ட்ட்ட்ட்ட்ட்ட்:))..

   ஹா ஹா ஹா பயந்து ஆடிப்போயிடாதீங்க:)) இது எங்க வீட்டில எங்கட சின்னவர் சொல்லும் வசனம்:)) டாட் டுக்கு இல்ல மம்மிக்கு ஹா ஹா ஹா.. இது பற்றி பின்னர் சொல்கிறேன்ன்:))

   Delete
 22. தோசை மாவைக் கஷ்டப்பட்டு புளிக்கச் செய்வதற்கு அதில் புளியை கலந்து விடலாமுல்லோ.....!!!!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அதுக்காகத்தானே நான் சுடு தண்ணி ஊத்திக் கரைச்சு வச்சேன்:) அதுக்கே அஞ்சு அடிக்க வந்திட்டா கர்ர்ர்:))

   Delete
 23. இலந்தைப்பழம் எனக்கு சிறுவயதில் மிகவும் பிடிக்கும். அதே சமயம் சீமை இலந்தைப் பிடிக்காது. சாமை இலங்கை என்று ஆரோக்கிய இலந்தை இருகா அதுவும் பிடிக்காது! ஹா.... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. அப்போ இயந்தையே பிடிக்காது எண்டு சொல்லுங்கோ:)... இந்த இலந்தை பழம் எனச் சொல்ல முடியாது.. கொய்யாக்காய் போல நொறு நொறு எனத்தான் இருந்துது.. இது முதன் முதலா சாப்பிட்டேன்..

   Delete
 24. தோட்ட மரங்கள் அழகு. மொய்யா? அது எங்க வைக்க?!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மொய் வச்சிட்டீங்களே... இப்போ:).

   மை என்பதுதானே வோட்:) மொய் எண்டால் கொமெண்ட் போடுறதாக்கும்:).. எக்கச்சக்கமா வியூஸ் வருது ஆனா மொய் வைப்போர் கொஞ்சபேர்தானே:))..

   மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 25. ஹை அதிர .....கதம்பம் என்று வாசித்து கதம்பம் அதிருதுனு எடுத்துக்கிட்டேன்!! ஹா ஹா ஹா...நிஜமாவே முதலில் கொள்ளு சுண்டலும், வரகு கஞ்சியும் வரவேறிகுது மணத்தோடு...வீட்டிலும் செய்வதுண்டு...வரது, சாமை, தினை, கம்பு, சோளம், குதிரைவாலி என்று ஆல் தானியங்கள்.

  நவதானியங்கள் புலாவ் கூட சமீபத்தில் எங்கள் வீட்டு பாட்லக்கில் இடம் பெற்றது..!!

  கொள்ளு ரசம்...கொள்ளு குழம்பும் நன்றாக இருக்கும்.

  எல்லாத்துக்கும் முன்னாடி பூஸார் ரொம்ப க்யூட் அந்தப் படம் வரவேற்குது

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ...

   குதிரைவாலி எண்டால் கொள்ளுத்தானே? சோளன் நான் இதுவரை சமையலுக்குப் பயன் படுத்தியதில்லை, ஃபுரோசின் சோளன் மட்டும் ஃபிரைட் ரைஸ், ரைஸ், நூடில்ஸ் இப்படி சேர்ப்பேன்.

   ஓ நவதானியப் புலாவ்.... நல்லா இருக்கும் என நினைக்கிறேன்.

   //எல்லாத்துக்கும் முன்னாடி பூஸார் ரொம்ப க்யூட் அந்தப் படம் வரவேற்குது
   // ஹா ஹா ஹா நன்றி நன்றி..

   எப்பூடி என் பழைய 2 போஸ்ட்டுக்களை மிஸ் பண்ணினனீங்க?:) நோட்டிபிகேசன் காட்டல்லியோ.?..

   Delete
  2. //குதிரைவாலி எண்டால் கொள்ளுத்தானே?// ஹையோ, ஹையோ, குதிரைவாலி அரிசி வேறே, கொள்ளு வேறேனு கூடத் தெரியாமல் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதிலே மாஸ்டர் செஃப் பட்டம் வேறே! பேசாமல் தேம்ஸில் குதிக்காமல் இருந்துடறேன். அதான் நல்லது! ஆண்டவா, இந்த மாஸ்டர் செஃப் அதிரா கிட்டே இருந்து எல்லோரையும் காப்பாத்து! :))))))

   Delete
  3. ///இதிலே மாஸ்டர் செஃப் பட்டம் வேறே! //

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) கீசாக்கா இப்பூடி ஒரு பபுளிக்குப் பிளேசில வச்சு உப்பூடி மானபங்கப் படுத்தப்பட:) என் இமேஜ் டமேஜ் ஆகிடாது பிறகு:)).. சேர்டிபிகேட்டைப் பறிச்சிடப்போகினமே:))..

   கொள்ளு எனில் ஹோர்ஸ் கிராம்.. அப்போ குதிரை வாலி ஓகேதானே என நினைச்சேன்[கிராம் ஐ வாலி என்கிறீங்களாக்கும் என].. ஹா ஹா ஹா

   அப்போ அது பார்லி அரிசியைச் சொன்னீங்களோ..

   //பேசாமல் தேம்ஸில் குதிக்காமல் இருந்துடறேன்///

   கீசாக்கா நீங்க தேம்ஸ்ல குதிக்காமல் இருப்பதுதான் நல்லது.. ஏனெண்டால் தேம்ஸ் ஆட்களிடம் டொல்லி வச்சிருக்கிறேன்ன்.. உயரமா ஒல்லியா ரொம்ப அப்பாவியா[அது நாந்தேன்:)] ஒரு பொண்ணு குதிச்சா மட்டும் டக்கெனக் காப்பாத்திடுங்கோ:).. பிறகு மூக்கில தண்ணி போனால் மீ தாண்டிடுவேன் என:)..
   அதனால நீங்க குதிச்சா விட்டிடுவினம்:) எதுக்கும் நீங்க காவேரிக் காரர்களிடம் ஒரு தடவை ஜொள்ளி வையுங்கோ:)) சரி சரி எதுக்கு முறைப்பு ஜமாதானமாகிடலாம்:0.

   Delete
 26. க்ரேட் குரு நம் எல்லோருக்குமோ?!! இல்லையா அதிரா...அவரைப் பார்த்ததும் சிரித்துவிட்டேன். ரொம்ப அழகா இருக்கார். அவர் குறும்புகள் பல செய்தாலும் ரசிக்கும் படியா இருக்கும். நாங்கள் பர்வதமலை சென்ற போது அவரின் அட்டகாசங்கள் செமையா இருந்துச்சு. கம்பு வைத்துக் கொண்டுதான் நடந்தோம். இன்னும் இருநாளில் அவர் செய்த குறும்புகளுடன் 3வது போஸ்ட் வரும்...

  நாங்கள் அவர் அருகில் இருந்து படம் எடுத்துக் கொண்டோமாக்கும். எங்களில் சிலர் செல்ஃபி கூட எடுத்துக் கொண்டார்கள்!!! ஹா ஹா ஹா ஹா...அந்த ஃபோட்டோ கிடைக்குதானு பார்க்கறேன்....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //க்ரேட் குரு நம் எல்லோருக்குமோ?!!//

   ஹா ஹா ஹா சிலர் விரும்ப மாட்டினமெல்லோ.. விருப்பப்பட்டால் அவரைக் குருவா ஏற்றுக் கொள்ளுங்கோ:)..

   //கம்பு வைத்துக் கொண்டுதான் நடந்தோம். இன்னும் இருநாளில் அவர் செய்த குறும்புகளுடன் 3வது போஸ்ட் வரும்...//

   ஓ போடுங்கோ பார்த்திடுவோம்..

   ///நாங்கள் அவர் அருகில் இருந்து படம் எடுத்துக் கொண்டோமாக்கும்//
   நம் மூதாதையர்கள் ஆச்சே:) இல்லாட்டில் தெய்வக்குத்தமாகிடுமெல்லோ ஹா ஹா ஹா...

   செல்ஃபியா ஹையோ ஹையோ போடுங்கோ அதையும் பார்ப்போம்:)..

   Delete
 27. அதிரா மொய் வைக்காம போனானு மிரட்டறீங்க...ஆனா மொய் வைக்க முடியலையே!! இப்படிச் சும்மா போஸ்ட் போட்டுட்டு தம சரியா இருக்கானு பார்க்காம மிரட்டக் கூடாதாக்கும் நாங்கல்லாம் அப்பாவிகள் பாவமாக்கும் சொல்லிப்புட்டேன்....

  ஹா ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா உங்களுக்கு மறதி அதிகம் ஸ்ரீராமைப்போல:)).. நான் பலதடவை இங்கின முன்பு சொன்னதுண்டு.. மொய் எழுதி மை வையுங்கோ என:)).. மொய் எண்டால் கொமெண்ட் ஆக்கும்:)).. மை வைக்கச் சொன்னால்தான் டமனா சிஸ்டரை:) டச்சூஊஊஊ பண்ணுங்கோ என அர்த்தம்:)...

   இப்போ டமில்மணம் எதையும் காணல்ல.. இனி புதிசா இணையோணுமே தெரியல்ல.. வோட் பொக்ஸ் ஐக் கூடக் காணல்ல ஹா ஹா ஹா ஆனா தானா இணைக்குது:)) டெக்னோலஜி வளர்ந்திட்டே போகுது போல:))

   Delete
 28. ஹை நீங்களும் கோதுமை முளை கட்டவைத்து அவிப்பீங்களா!!!

  நாங்களும்!! கோதுமையை லைட்டாக வறுத்துவிட்டு சாதம் போலும் செய்யலாம். முழு கோதுமையையே....அப்ப்டிச் செய்யும் போது காய்கள் சேர்த்து புலவ் போல...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஓ கோதுமைச் சாதம்.. ஆனா எப்படி அவித்தாலும் இது கரையாதே கீதா? ரபர் மாதிரி எல்லோ வருது அவிக்க அவிக்க.. சாப்பிடும்போது வாய் நோகும்..

   Delete
 29. ஹங்கோ பீஸ் புதுசா இருக்கு...பார்த்ததில்லை அங்கு கிடைப்பது போலத் தெரியுது...சூப்பரா இருக்கே!!!! வடையும் ஆஹா!!! அப்படியே இங்கு பார்சல் புதுசா அனுப்புங்கோ அதிரா...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இது கீதா, கேரளா இருந்து வருவதாக நினைச்சேன்.. அந்த கொங்கோ கீரைபோல..

   வடை சூப்பர் கீதா.. பார்சலை என் செக் அனுப்பி வைப்பா:) நீங்க மறக்காமல் செக்:) ல, இது வேற செக்:) என் பெயர் போட்டு அவவுக்கே அனுப்பிடுங்கோ:)..

   Delete
 30. இங்கும் இலந்தைப்பழம் கிடைக்கிறது..பழுத்து சிவப்பிலும், பச்சையிலும் என்று பச்சையுமே ரொம்ப நல்லாருக்கும்....வீட்டில் வாங்குகிறோம்...சலாடும் செய்து சாப்பிட்டோம்...பேல் பூரியிலும்....போட்டோம்...

  சர்க்கரை வரட்டி கேரளத்தில் செய்வது. வாழைக்காயில்....ஆனால் நன்றாக இருக்கும். பார்த்து வாங்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் வாங்கியது சரியாகச் செய்யப்படலையோ என்று தோன்றுகிறது.

  எனக்கும் புதியதைச் சுவைக்கவும், வீட்டில் செய்யவும் ரொம்பப் பிடிக்கும். நாமாகவே முயற்சி செய்வதும் புதியதாய் செய்து பார்க்கவும் பிடிக்கும்....அது நம்மை எப்போதும் ஃப்ரெஷ்ஷாக ஒரு புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்பது என் அனுபவம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஓ பச்சை இலந்தை பச்சையாவே தான் இருக்குமோ? பழுக்காதோ? நொறு நொறு என இருந்துது, உப்புத்தண்ணிக்குள் போட்டு வச்சு சாப்பிட்டேன்.. அடிக்கடி கிடைக்காது ஒரு தடவை கிடைச்சது.

   சிவப்பா குட்டியா ஊரில மரம் இருக்கு சாப்பிட்டிருக்கிறேன் ஆனா அதில் புழுக்கள் இருக்கும் என மிரட்டுவினம் அதனால பயம்.

   தெரியல்ல கீதா இருக்கலாம், இந்த ச.வரட்டி புதுசு எனக்கு... இளகலாக இருந்துது மொறு மொறு என இல்லை, அத்தோடு சுவையும் ஒரு மாதிரி இருந்துது..

   உண்மைதான் இதனால்தான் மிக்ஸர்கூட நானே செய்வேன் சில சமயம்.

   Delete
 31. விளாங்காய் பழுக்கவில்லை போல இருக்கே...காயாக இருப்பது போல் இருக்கு. இன்னும் கொஞ்சம் பழுத்திருந்தால் கூட அதை ஸ்கூப் பண்ணி எடுத்து வெல்லம் கலந்து கொஞ்சம் தேனும் கலந்து வைத்துச் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். இங்கு விளாம்பழம் சரியாகக் கிடைத்தால் செய்வோம்...ஆனால் விளாம்பழம் வாங்குவது பார்த்து வாங்க வேண்டும். அதில் தக்னிக் உண்டு...அதைக் கீழே போட்டால் (நீங்கள் தேம்ஸில் குதிப்பது போல அல்லா ஹா ஹா ஹா... தொப் என்று அல்ல...மெதுவாகக் கீழே போட்டால் அது கொஞ்சமேனும் உருள வேண்டும். அப்படியெ நின்றால் பழுக்கவில்லை என்று அர்த்தம்.என்று சொல்வார்கள்..ஆனால் சில சமயம் அதுவும் ஏமாற்றிவிடும். ஆனால் நல்ல பழம் என்றால் நல்ல பழுத்த வாசனை வரும்...விளாம்பழப் பச்சடியும் செய்யலாம். இனிப்பு உப்பு என்று...காயாக இருந்தால் உப்புப் பச்சடி செய்துவிடலாம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எனக்கு கயராக இருப்பதுவும் பிடிக்கும், அதனால காயாக இருக்கு என தெரிஞ்சேதான் வாங்கினேன். காய்க்கும் சீனி தொட்டுச் சாப்பிட நன்றாகவே இருந்துது, ஆனா தொண்டையில் அடைக்கத் தொடங்கிட்டுது:).. இந்தச் சின்ன வயதிலயே பரலோகம் போயிடுவேனோ:).. தேம்ஸ் கூட என்னைக் காப்பாற்றுது, போயும் போயும் ஒரு விழாங்காய் அனுப்பிடப்போகுதே எனப் பயந்திட்டேன் ஹா ஹா ஹா.. அவ்ளோ கயர்:)...

   யேஸ், சீனி/தேன் விட்டுக் குழைத்து சாப்பிடுவோம்.

   //(நீங்கள் தேம்ஸில் குதிப்பது போல அல்லா ஹா ஹா ஹா//
   ஹா ஹா ஹா இது வேற தெக்கினிக்கி கீதா:)).. ஓம் விழாம்பழம் வாசம் வரும், இன்னொன்று குலுக்கிப் பார்த்தால் நல்ல பழம் எனில் உள்ளே டக் டக் என ஆடி சத்தம் கேட்கும், கனமாக இருக்கும்.. பழுதானதெனில் கனமிருக்காது:)..

   Delete
 32. பாப்பா செம அழகு!! க்யூட்!!

  படங்களும் அழகு..உங்க வீட்டு...பியர் ட்ரீ ஸ்வீட் டீன் ஆகப் போகுது போல!!!! வயதுக்கு வரும் போலத் தெரியுதே...இதுவரை கொட்டிய பூக்கள் இப்ப ஒரு காய் விட்டிருக்கே...திருஷ்டி சுத்திப் போடுங்க...ஹா ஹா ஹா அப்புறம் ஸ்வீட் டீன் ஆகப் போகுது கொண்டாடுங்க அதிரா!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அவ வயசுக்கு வந்து 4,5 வருசமாச்சு கீதா:).. ஆனா தனக்கு கலியாணம் வேண்டாம் எனத்தான் அடம் பிடிச்சுக் கொண்டே இருந்தா:).. இம்முறை என்னமோ மனம் மாறி ஒரு குட்டி மட்ட்டும் போட்டிருக்கிறா:)இச்சமருக்கு என்ன பண்ண போறா எனப் பார்ப்போம்...

   குட்டிகள் போட்டால் சொல்லி அனுப்புறேன், உறைப்புப் பண்டம் வாங்கிக் கொண்டு:) பார்க்க வாங்கோ:)...

   Delete
 33. ஊசி இணைப்பு செம ...படத்தில் உள்ளது!! ஆம்!! உண்மைதான்!

  உங்கள் மாற்றிப் போட்டதும் நல்லாத்தான் இருக்கு ஹா ஹா ஹா...இப்படி சைக்கிள் காப்பில் விட்டால்தானே உண்டு இல்லையா அதிரா....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பின்ன என் அருமை பெருமைகளை நான் தானே புகழோணும்:) அடுத்தவையோ வந்து என்னைப் புகழப்போயினம் ஹா ஹா ஹா:)..

   Delete
 34. ஹாங்க் ஒன்னு விட்டுப் போச்சு...விளாம்பழமாக இருந்தால் மாங்காய் பச்சடி, பைனாப்பிள் பச்சடி செய்வது போலவும் செய்யலாம் அதிரா..நல்லாருக்கும்...குறிப்பு உங்களுக்குத் தெரிந்திருக்கும்னு நினைக்கிறேன்...இல்லைனா சொல்லுங்க இங்கு தரேன்...கொஞ்சம் அப்புறமா வரேன்...கண்ணி வெயிட்டிங்க்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பச்சடி காயிலதானே கீதா செய்யலாம்? பழத்திலயோ?.. எதுக்கும் சொல்லுங்கோ அல்லது லிங் இருப்பின் தாங்கோ... மாங்காய் பச்சடி நான் முன்பு இங்கு குறிப்பு போட்டிருக்கிறேனெல்லோ நினைவிருக்கோ?..

   அனைத்துக்கும் மிக்க நன்றிகள் கீதா.

   Delete
  2. விளாம்பழப் பச்சடி ரொம்ப சுலபம். காயிலே செய்யக் கூடாது. முடியாது. நெஞ்சை அடைக்கும். விளாம்பழம் உடம்புக்கு ரொம்ப நல்லது!

   Delete
 35. கொள்ளுச் சுண்டல் நிறையச் செய்திருக்கோம். இப்போல்லாம் ஒத்துக்கறதில்லை. வரகரிசிக் கஞ்சியும் கூட! கஞ்சியாப் போடாமல் வரகரியைக் கொஞ்சம் வறுத்துக் கொண்டு எல்லாக் காய்களையும் போட்டுக் கூடவே கீரையையும் சேர்த்து, வெங்காயம் வதக்கிப் போட்டு கிச்சடி மாதிரியும் செய்து சாப்பிட்டிருக்கோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

   ஏன் கொள்ளு ஒத்துக் கொள்ளாது? அதிகம் சூடு என்கிறார்கள் அது உண்மையோ?.. நெடுகவும் சாப்பிடுவதில்லை.. மாதம் 2,3 தடவை அப்படித்தானே சாப்பிட முடியும்.

   ஓ வரகரிசியில கிச்சடி... இனி ட்றை பண்ணுறேன்.

   Delete
  2. கொள்ளு சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் வந்துடுது! அதே போல் பூண்டுக்கும்! :( கொள்ளை வறுத்து உடைத்துப் பூண்டு சேர்த்துக் கஞ்சி வைச்சுச் சாப்பிட்டுட்டு இருந்தோம். ஒத்துக்கலை! :(

   Delete
  3. கீதாக்கா அப்படி எனில் வெறும் வயிற்றில் இவற்றைச் சாப்பிடாதீங்கோ.. காலையில் ஏதும் சாப்பிட்ட பின்பு இவற்றை சாப்பிடலாம்.. ஹாஸ்ரிக் பிரச்சனை வயிற்ரில் இருப்போருக்கு இப்படி ஆகும்... விரதம் இருப்பதை விட்டிடுங்கோ:)..

   Delete
 36. ஹங்கோ பீஸ்??? சிவப்புக் காராமணி? ஊற வைச்சு அரைச்சு (தோலோடு தான்) வடையும் செய்யலாம். சின்ன வெங்காயம் போட்டுச் சுண்டலும் செய்யலாம்.

  ReplyDelete
  Replies
  1. இல்ல கீதாக்கா காராமணி கொஞ்சம் நீளப்போக்கெல்லோ? கெளைபியைத்தானே காராமணி என்பீங்க... இது உருண்டையாக இருந்துது.. பயறுபோல, ஆனா பயறை விடப் பெரிசு.

   Delete
 37. பெயார் மரம்? இது ஊட்டியில் எங்க குடியிருப்பில் இருந்தது! ஆனால் காய்க்க ஆரம்பிக்கலை! :) அதுக்குள்ளே மாற்றல் ஆகி வந்துட்டோம்; பீச் பழங்களும் நிறைய உண்டு. அது சாப்பிட்டிருக்கோம்.

  ReplyDelete
  Replies
  1. ஓ குளிர் இடங்களில்தான் இவை வளரும்..

   மிக்க நன்றி கீசாக்கா...

   Delete
 38. Replies
  1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ.. மிக்க நன்றி.

   Delete
 39. ஆஹா அருமையான சமையல் குறிப்பு...

  படிக்கும் போதே சாப்பிடவும் ...செய்யவும் மனம் பரபரக்கிறது....


  அதன் நிறமும்....பதமும் ஆஹா...ஓஹோ,....  இப்படியெல்லாம் சொல்ல ஆசை தான்...பட் மீ பொய் சொல்ல மாட்டேன்...


  ஹி ..ஹி..எல்லாம் அருமை....


  ஊசிக்குறிப்பு மிக மிக அருமை...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ...

   //ஆஹா அருமையான சமையல் குறிப்பு...
   படிக்கும் போதே சாப்பிடவும் ...செய்யவும் மனம் பரபரக்கிறது....
   அதன் நிறமும்....பதமும் ஆஹா...ஓஹோ,....////

   ஆவ்வ்வ்வ்வ் மீ ஃபெயிண்ட் ஆகிறேன்ன்ன்ன்:) ஹையோ இது வேற ஃபெயிண்ட் ஆக்கும்:)).. புல்லா அரிச்சிட்டேன்ன்ன்ன்ன்:)) இருங்கோ இதை இப்பவே நோட்டீஸ் அடிச்சு தேம்ஸ் கரை எல்லாம் ஒட்டிப்போட்டு வாறேன்:))..

   ///இப்படியெல்லாம் சொல்ல ஆசை தான்...பட் மீ பொய் சொல்ல மாட்டேன்...///

   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. விடுங்கோ விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ:) மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்:).

   ஹா ஹா ஹா மிக்க நன்றி அனு.

   Delete
 40. ஆகா...
  இன்றைக்கு சுவையோ.. சுவை!...
  எல்லாம் அருமை..

  வாழ்க வளமுடன்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ..

   ஆஹா இண்டைக்கு துரை அண்ணன் என்னைப் புகழ்ந்திட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி..

   Delete
 41. pear என்றால் பேரிக்காய் ஆனால் படத்தில் கொய்யா மாதிரி தெரிகிறதே உங்கள் பொஅதிவுகளிப் படிக்க நிறையவே ட்ரெயினிங் எடுக்க வேண்டும் அதுரெயினிங் என்று இருக்க வேண்டுமா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ.. ஓ இதன் தமிழ்ப்பெயர் பேரிக்காயா?.. பேதி எண்டால் தப்பாகிடப்போகுதே:)..

   இதில் பச்சை, மஞ்சள் ஏன் சிவப்பிலும் இருக்கு.. சிவப்பில் மிக அருமையாக கிடைக்கும் எப்பவாவது. அத்தோடு வடிவங்களும் கொஞ்சம் கொஞ்சம் மாறுபடும், சிலது கொய்யாக்காய் போலவே இருக்கும், சிலது நல்ல நீளமா இருக்கும்.. கொய்யாவின் வடிவங்களும் அப்படித்தானே..

   ///உங்கள் பொஅதிவுகளிப் படிக்க நிறையவே ட்ரெயினிங் எடுக்க வேண்டும் அதுரெயினிங் என்று இருக்க வேண்டுமா//

   ஹா ஹா ஹா நீங்களும் என் ஸ்டைலுக்கு மாறிகொண்டு வாறீங்க:) ஆனா ஒன்று.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சொல்வதுதான் இன்னும் பழகுறீங்க இல்ல:).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

   Delete
 42. நீங்க வாக்கியத்தை முடிக்காததுனால நான் முடிக்கவேண்டியிருக்கு.

  அதிராவின் சமையல் குறிப்போ:).. திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க வைக்கும் - நமக்கு பிறர் செய்த கெடுதல்களை வாழ்'நாள் முழுக்க மறக்காமல் இருப்பதுபோல :-)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முதல்ல அடிச்சு நொருக்கி.. வீக் ஆக்கிப்போட்டு உள்ளே களமிறங்கினால்தான் நல்லதென[உங்களுக்கு சேஃப் என:)] முடிவெடுத்திருக்கிறீங்க:)).. ஆனா நான் தான் மண்ணுண்ணி ஆச்சே:)).. நீங்க கடசிக் கொமெண்ட் போடுவதுக்குள் எழும்பி ஊரத் தொடங்கிடுவேன் ஹா ஹா ஹா..:).

   Delete
 43. அரைத்து வடையும் சுட்டேனே.. - இதுல்லாம் கையெறி குண்டுகள் மாதிரின்னா இருக்கு. பிரிட்டிஷ் ஆர்மிக்கு நீங்கதான் சப்ளை பண்ணறீங்களா?

  நீங்க உண்மையைச் சொல்லமாட்டீங்க. ஏஞ்சலின் சொன்னாத்தான் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. //இதுல்லாம் கையெறி குண்டுகள் மாதிரின்னா இருக்கு. பிரிட்டிஷ் ஆர்மிக்கு நீங்கதான் சப்ளை பண்ணறீங்களா?//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) இதில இருந்து புரிஞ்சுக்கோங்க:) எதிராளிக்கு எறியும் குண்டைக்கூட, அதிரா மிக சொஃப்ட்டாவே செய்வேன் என:)) ஹையோ மீக்கு 1000 பட்டபிளைஸ் பறக்குதே இப்போ:) ஹா ஹா ஹா..

   // ஏஞ்சலின் சொன்னாத்தான் உண்டு.//
   அவவை மிரட்டி விட்டிருக்கிறேன்:) இப்போ காலம் கூடாது சந்திர கிரகணம் வேற வந்திருக்கு கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிக்கோணும் என:)) ஹா ஹா ஹா இல்லாட்டில் மீ இப்பூடித் துள்ளித் திரிய முடியுமோ?:)

   Delete
 44. எனக்கு பழ மரங்களைக் கண்டால் ரொம்பப் பிடிக்கும். உங்கள் பியர் மரம் பார்த்தது மகிழ்ச்சி. அதிலும் ஒரே ஒரு பியர் பழம்தானா? அது காய்க்க நிரம்ப வருஷங்களாகுமா? நீங்க ஏன் ஆப்பிள் மரங்கள்லாம் வளர்க்கறதில்லை?

  இதைத்தானே சின்னனா இருக்கும்போதே பாட்டிலில் நுழைத்து வளர்ப்பார்கள்? பின்பு எடுத்து அதில் ஹாட் டிரிங்க்ஸ் ஃபில் அப் பண்ண?

  ReplyDelete
  Replies
  1. பழ மரங்கள் பார்க்க அழகுதானே.. அதிலும் மரத்தில் இருந்து பிடுங்கிச் சாப்பிடும் சந்தோசமே பெரிசுதான். இது காய்க்க ரைம் எடுக்குது, அப்பிளும் நட்டோம் பட்டு விட்டது, இப்போ திரும்ப ஒன்று நட்டிருக்கிறோம்...

   அது எங்கள் பக்கம் ஆற்றங் காற்று அதிகம் என்பதாலோ என்னமோ அதிலும் எப்பவும் மழை பெய்யும்.. அதனால வளர கஸ்டப்படுது வளர்ந்திட்டால் ஓகே.

   //இதைத்தானே சின்னனா இருக்கும்போதே பாட்டிலில் நுழைத்து வளர்ப்பார்கள்? பின்பு எடுத்து அதில் ஹாட் டிரிங்க்ஸ் ஃபில் அப் பண்ண?//

   இது எனக்கு புரியவில்லையே.. இது பெரீய மாமர சைஸ் க்கு வளரும்..

   இங்கு அழகுக்காக குட்டி ஜாடியில் சில ஒரேஞ் வளர்த்து விற்பார்கள்.. அப்படிச் சொல்றீங்களோ?

   Delete
 45. உங்க கார்டன்ல செர்ரி, ஸ்டிராபெர்ரிலாம் வளர்க்கறதில்லையா? ஒருவேளை மலை மாதிரி தாழ்வா இருக்கறதுனால வளர்க்கமுடியாதா அல்லது அரசாங்க ரெஸ்டிரிக்ஷன்ஸ் உண்டா?

  ReplyDelete
  Replies
  1. மர வளர்ப்புக்கு எந்தச் சட்டமோ தடையோ இல்லை. கட்டிடம் கட்ட அல்லது பெருப்பிக்க மட்டும்தான் பெர்மிசன் வாங்கோணும்.

   ஸ்ரோபெரி பெரும்பாலும் சாடிகளில் அல்லது மேடை போல போட்டுத்தான் வளர்ப்பார்கள் அது சின்னச் செடிபோலதானே இருக்கும், நான் வளர்க்க விரும்புவதில்லை, இனிப்பு பழம் என்பதால் , நிலத்தில ஸ்லக் எல்லாம் சாப்பிட்டு விடுவினம்.

   கூஸ்பெரீஸ் இருக்கு.. அதுதான் முழுநெல்லிக்காய்போல இருக்கும் படம் போட்டேனே இங்கு..

   செரி, அது எங்களிடம் இல்லை, கிரான்பெரி மரம் இருக்கு, கொத்துக் கொத்தா காய்க்கும் ... ஆனா அதில் புழு வந்திடும் என்பதால் காய்த்துக் கொட்டும் மற்றும் புறாக்கள், [bees] பீஸ் வந்து சாப்பிடுவினம்..

   நீங்க இந்த லிங் போய் படங்கள் கட்டாயம் பாருங்கோ எங்கட வீட்டு கிரான்பெரீஸ் போட்டிருக்கிறேன்..

   http://gokisha.blogspot.co.uk/2012/11/blog-post_16.html

   Delete
 46. இதில எனக்கொரு சந்தோசம் என்னவெனில்.. ஆருமே வீட்டில் போட்டிக்கு வரமாட்டினம்: - நாம் ஒன்று செய்த் மற்றவர்கள் சாப்பிட்டு விமர்சனம் பண்ணலைனா உங்களுக்கு 'தன்னிரக்கமா' இருக்காதா? எது செய்தாலும் எல்லோரும் சாப்பிட்டால்தானே மகிழ்ச்சி?

  ReplyDelete
  Replies
  1. ///ஆருமே வீட்டில் போட்டிக்கு வரமாட்டினம்: - நாம் ஒன்று செய்த் மற்றவர்கள் சாப்பிட்டு விமர்சனம் பண்ணலைனா உங்களுக்கு 'தன்னிரக்கமா' இருக்காதா?//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் சொன்னதை நீங்க ஒழுங்கா கவனிக்கவில்லை:).. நான் சொல்லியிருப்பது தமிழ்க்கடையில் வாங்கிய அந்தப் பழங்களுக்கு.. இப்படி புளிப்பு கயர்ப்பான பழங்கள் எனக்கு மட்டுமேதான் பிடிக்கும்... பப்பாளிப் பழம்கூட பிடிக்குதில்லை, அது எனக்கும் பெரிசா பிடிக்காது..

   //எது செய்தாலும் எல்லோரும் சாப்பிட்டால்தானே மகிழ்ச்சி?//
   அது 100 வீதம் கரீட்டு:) அதிலும் செய்த உடனே முடிஞ்சிட்டால் இன்னும் மகிழ்ச்சி, ஆனா கஞ்சி வகை ஆருக்குமே பிடிக்காது அதனால அடிகடி செய்ய மாட்டேன் எப்பவாவது எனக்கு மட்டும் செய்வேன் அவ்ளோதேன்ன்:)...

   நாங்க சின்னதாக இருந்தபோது, சமைத்தவுடன் எல்லோரும் சாப்பிட்டு முடிச்சிட்டால், அம்மா பெரிய சந்தோசப்படுவா.. சொல்லிக்கொண்டு திரிவா எல்லோரும் நல்லா சாப்பிட்டு முடிச்சிட்டினம் மிச்சம் இல்லாமல் என்பா.. அப்போ எனக்கு புரியாது.. எதுக்கு இதுக்குப் போய் இவ்ளோ ஹப்பி ஆகுறா அம்மா என நினைப்பேன்ன்..

   ஆனா இப்போ எனக்கும் அதே ஃபீலிங் வருது:).. இதுதான் தாய்மை என நினைக்கிறேன்..:)

   Delete
 47. எங்களுக்கு குதிரைக் குளம்புதான் தெரியும். நுளம்பு என்பது கொசு என்று தெரியாதவர்களுக்கு எப்படிப் புரியும்?

  ReplyDelete
  Replies
  1. //குதிரைக் குளம்புதான் தெரியும்.//
   ஹையோ மீ ஒரு கணம் அப்பூடியே ஆஆஆஆஆடிப்போயிட்டேன்:).. பிறகுதான் நேக்கு டமில்ல டி ஆச்சே:) பக்கெனக் கண்டு பிடிச்சிட்டேன்.. அது குழம்பு:).. ஹா ஹா ஹா.. இது குதிரையின் காலில் இருப்பது குளம்பு:).

   நுளம்பு ... கொசு என்பது உங்களுக்கு எப்பூடித் தெரியும்?:).. இலங்கைப் பாசை கிளாஸ் க்குப் போயிருக்கிறீங்கபோல:)..

   நீங்க அனைத்தையுமே கொசு என சொல்லுவீங்கபோல.. நாங்க கொசு என்பது.. மிகவும் குட்டிக் குட்டியாக, அப்படியே கொத்தாக பறப்பதைத்தான்.. இவை பழங்களில் அல்லது கயிறு போன்றவற்ரில் அப்படியே கூட்டமா இருப்பினம் வந்து.. கடிக்க மாட்டினம்.. அவற்றை கொசு என்போம்.

   நுளம்பு என்பது காதில் பாட்டுப்பாடி.. கடிப்பது.. இரவில் மட்டுமே விசிட் பண்ணுவது.

   இன்னொன்று இருக்கு, குட்டிச் செட்டையோடு... கிணுகிணு வென பறக்கும்.. சாப்பாட்டில கண்டபடி இருக்கும்.. பிடிக்க முடியாது ஸ்பீட்டாப் பறக்கும்.. கோபம் வர வைக்கும் சில சமயம்:).. அதை இலையான் என்போம்:).

   அதில கொஞ்சம் பெரிய சைஸ் இருக்கு, குட்டி வண்டு சைஸ்.. அதனை மாட்டு இலையான் என்போம்... பெரும்பாலும் மாட்டுச் சாணத்தில்தான் இருக்கும்.

   ஏனையவை விதம் விதமான வண்டுகள்:)..

   Delete
 48. நெல்லிக்காய்ல அருமையான ரெசிப்பி எழுதி எங்கள் பிளாக்குக்கு வரும் வாரம் அனுப்பறேன். எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நீங்கள் கண்டிப்பா செய்துபாருங்கள்.

  சர்க்கர வரட்டி என்பது, நேந்திரம் காயில் (வாழைக்காயில் ஒரு வகை, கேரளாவில் விளைவது, அவங்களோட நேட்டிவ் உணவு) மேலே வெல்லப்பாகை வைத்து உருட்டிச் செய்வது. உங்களுக்கு நேந்திரம் வாசனை பிடிக்கலைனா இதுலாம் பிடிக்காது.

  அதே சமயம் பலாப்பழச் சுளையில் செய்வத் சக்க வரட்டி (சக்க-பலா)

  ReplyDelete
  Replies
  1. ஓ வெளிவரட்டும் செய்து சொல்கிறேன், பலாச் சுளையில் சிப்ஸ் இருந்து வாங்கினேன் சூப்பரா இருந்தது.

   Delete
 49. ஓணம் பண்டிகையின்போது மதிய சாப்பாட்டில் (ஓணம் சத்யா sadhya) அதில் சக்கர வரட்டி, நேர்ந்திரம் வருவல் போன்றவை கண்டிப்பா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஓ ஓணம் பண்டிகையும் நேத்திரம் சிப்ஸ் உம் கேரளாவுக்குச் சொந்தமானதுதானே.. மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 50. வணக்கம் அதிரா!..

  ஆஹா.. வாசனை தூக்குதே!..
  வந்து பாரென ஈர்க்குதே!..:))

  படிக்கும் பொழுதே பசியெடுக்கும்!
   படைத்த சமையல் எமையீர்க்கும்!
  வடிக்கும் வண்ணம் அழகாகும்!
   வலைப்பூ அதிரா வசமாகும்!
  நொடிக்குள் பெருக்கும் சிரிப்பலைகள்!
   நோவே இல்லாச் சிறுகுறிப்பு!
  நடிப்பே இல்லா நண்பியுனை
   நானும் வாழ்த்தி மகிழ்ந்தேனே!

  ஆரோக்கியம் பெருக அருமையான சிறுதானியச் சமையல்!
  குறிப்புகள் + படங்கள் எல்லாமே!
  உங்களின் எண்ணம் போலே எல்லாமே அழகு!...:)

  ReplyDelete
  Replies
  1. பாடல் simple ஆனா நல்ல ஓசை நயம் பொருந்தியது.

   'நொடிக்குள் பெருக்கும் சிரிப்பலைகள்' - 'நொடிக்குள் பெருகும் சிரிப்பலைகள்' என்றாலும் சரியாகத்தானே இருக்கும்?

   வாழ்த்துகள்.

   Delete
  2. ஆமாம் இரண்டும் சரியாகத்தான் இருக்கும் சகோ.

   வாழ்த்திற்கு மிக்க நன்றி!

   Delete
  3. வாங்கோ இளமதி வாண்டோ:)..

   வாசனை தூக்குதோ?:) அதனால்தான் உடனேயே கஞ்சி செய்து போட்டீங்கள்.. மியாவும் நன்றி.

   ஆஹா என்ன ஒரு அழகான எட்டு வரித் திருவெம்பாவை:).. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு, இப்படி நீங்களெல்லாம் வந்து என்பக்கம் பா எழுதுவதும்.. அதை நெல்லைத்தமிழன் ரசிப்பதோடு நிறுத்தாமல் உக்குவிப்பதும் மிக்க மகிழ்ச்சி.

   பெருகும்= இது நிறைய உருவாவது...அதாவது ஒன்று பத்தாக மாறுவது..

   பெருக்கும்= இது பெரிசாக மாறுவது.. உருவத்தில்... சத்தத்தில்..

   எப்பூடி என் வியக்கம்?:)) ஹா ஹா ஹா..

   Delete
 51. அறியாத அறிந்திட விரும்பிய வரகரிசிக் கஞ்சிக் குறிப்புக்கண்டு சந்தோஷப்பட்டேன் அதிரா!.. இந்த வரகரிசியை வாங்கி 6 மாதமாக வைத்திருக்கிறேன். என்ன செய்யலாம் என்று யோசிச்சுக்கொண்டு. இங்க பார்த்தாச்சு, இதோ இண்டைக்கே கஞ்சி செய்திடுவேன்...:))
  வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா பழைய சினிமாப்பாடல் நினைவில் வருகுது..:)))

  கோதுமை ஊறவைச்சூ.. ஆவியில் அவிச்சுப் பிரட்டினேன் எண்டீங்கள்... ஒரு டவிட்டூ... இரண்டு நாள் ஊறவைச்சீங்கள் எண்டீங்களேஏ.. இரண்டு நாளும் தண்ணீக்கையே இருக்க விடோணுமோ.. இல்லை வடிச்சுவிட முளைவருமோ?... பயறுபோல.
  கொஞ்சம் புரிய வையுங்கோ ப்ளீஈச்ச்ச்ச்...:)

  ReplyDelete
  Replies
  1. இந்த வரகின் பெருமையை எல்லா இடத்திலும் பரப்புவதில் எனக்கு பெருமை உண்டு... அம்மா, அண்ணி எல்லோருக்கும் நான் தான் ரெசிப்பி குடுத்தேன்:).. அவர்களும் இப்படித்தான் சொன்னார்கள்.. பார்த்தவுடன் வாங்கியாச்சு ஆனா எப்படி செய்வதெனத் தெரியவில்லை என...

   கோதுமையை முதலில் ஊறவிடோணும் குறைந்தது ஒரு நாள், பின்பு நன்கு தண்ணியை வடிச்சுப்போட்டு, அந்த ஈர்லிப்போடு மூடி வைத்திடோணும்... இறுக்கி அடைத்து மூடக்கூடாது.. காத்துப் போய் வரோணும்..

   புரிய வச்செட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)..

   Delete
 52. //கொக்கு பார்த்துக் கற்றுக் கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை..
  கொத்தும்போது கொத்திக் கொண்டே போக வேண்டும் நல்லதை:)//
  படா பட்...:)) அருமையான வரிகள்!
  என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று!

  ஊசி இணைப்பு திருப்பியதும் திருப்பாததும் அர்த்தமுள்ளவை!
  மொய் வைக்கப் பையைக் காணோமே..:( ....:)

  மனதை லேசாக்க உங்க பதிவொன்றே போதும்!..:)

  அனைத்திற்கும் உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் அதிரா!

  ReplyDelete
  Replies
  1. உண்மை அந்தப் பாட்டு இங்கு போடும்போதுதான் முதல் தடவையாக வீடியோவாக பார்த்தேன்.. மற்றும்படி பலநூறு தடவைகள் கேட்டிருப்பேன்..

   அத்தனையும் அருமையான வரிகள்.. செக்கு மீது ஏறிக் கொண்டால் சிங்கப்பூரு போகுமா?:)..

   கோடு போட்டு நிக்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே... சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை குளோஸ் ஹா ஹா ஹா....

   எல்லாமே நான் ரசிக்கும் தத்துவ வரிகள்..

   மிக்க நன்றி இளமதி அனைத்துக்கும்.

   Delete
 53. (:பார்க்காதோருக்கு, இரவு காதில நுளம்பு.. முகாரிராகம் பாடி, நித்திரை ஆக்கும் ஜொள்ளிட்டேன்:)
  நாங்க கொய்ல் பத்தவைப்போம்ல

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மொகமட் வாங்கோ...

   //நாங்க கொய்ல் பத்தவைப்போம்ல//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ரொம்ப விபரமாத்தான் இருக்கிறீங்க... மிக்க நன்றி.

   Delete
 54. சமையல் குறிப்புகள் நன்றாக இருக்கிறது.
  ஊசிஇணைப்பு மிக அருமை.
  படங்கள் அழகு.
  பாடல் பகிர்வு அருமை.
  முன்பு அடிக்கடி வானொலியில் கேட்கும் பாடல்.
  அந்த படத்தில் அடிக்கடி படாபட் என்று சொல்வதால் படாபட் ஜெயலட்சுமி என்று கூப்பிட்டார்கள்.
  திறமையான நடிகை தற்கொலை செய்து கொண்டார்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

   //அந்த படத்தில் அடிக்கடி படாபட் என்று சொல்வதால் படாபட் ஜெயலட்சுமி என்று கூப்பிட்டார்கள்.//
   எனக்கு இது எதுவும் தெரியாது.. விபரமாக சொன்னமைக்கு மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

   Delete
 55. ஆஹா இம்முறை சமையலா..நீங்க செய்த எந்த சுண்டலும்,கஞ்சியும்,வடையும் செய்ததில்லை. இனி கொஞ்சம் தைரியமா செய்யலாம் என நினைக்கிறேன். நீங்க செய்து நல்லாயிருக்கு என்று போஸ்ட் போட்டதைரியம்தான்....ஹா..ஹா.. பாட்டு நல்ல பாட்டு. நானும் பல தடவை கேட்டிருக்கேன். படாபட் ஜெயலஷ்மி நடிகை.
  ஆ.. அது இலந்தைப்பழமா.. நம்பவே முடியல. நான் சின்னதா ஓரெஞ் கலர்ல சாப்பிட்டிருக்கேன். இங்கும் விற்கிறார்கள். ஆனால் வாங்கியதில்லை.கயர்ப்பு விளாங்காயை எப்படி சாப்பிட்டீங்களோ தெரியாது. எனக்கு நல்ல அனுபவம் சாப்பிட்டு.

  பழ மர படங்கள் எல்லாமே அழகு. எங்கட வீட்டில அப்பிள் காய்த்தபோது இப்படி ஒன்றுதான். இப்ப நிறைய பூக்கள் ஆனா காய்கள் குறைவு. இனிமேலதான் காய்பினம் என சொன்னார்கள். ஊசி இணைப்பு 👍
  கடைசில வந்து மொய் வைச்சாச்சூஊஊ.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ..

   //நீங்க செய்த எந்த சுண்டலும்,கஞ்சியும்,வடையும் செய்ததில்லை. இனி கொஞ்சம் தைரியமா செய்யலாம் என நினைக்கிறேன்.///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதை சுவைபார்த்த ஒரு லாப் எலி உயிரோடதானே திரியுது எனும் தெகிறியத்தில களமிறங்கப் போறீங்க போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

   ஓம் அம்முலு எனக்கும் இது புதுசு இப்பூடிக் காணவே இல்லை முன்பு.. இது கேரளாவில் இருந்து வந்ததெனச் சொன்னார்.

   எனக்கு கயர்ப்புத்தான் ரொம்பப் பிடிக்கும்.. தொண்டையில் சிக்கத் தொடங்கிட்டுது.. விழுங்கிட்டேன் ஹா ஹா ஹா.. உப்பை விட சீனி சேர்த்து சாப்பிட நல்லா இருந்துது.

   மிக்க நன்றி அம்முலு.

   Delete
 56. வணக்கம் !

  வரகரிசிக் கஞ்சி வழங்கிவரும் வஞ்சி
  கரமிரண்டும் காணக் கரண்டியறும் பஞ்சி !  கேதுதன் தோகை காணக்
  ....கிளர்ந்தெழும் எண்ணம் போலே
  கோதுமைச் சுண்டல் நாவில்
  ....குடைந்திட ஊரின் வாசம்
  ஏதுநான் எழுதிப் போவேன்
  ....ஏழிசை மறந்தேன் ! இல்லச்
  சாதுகை மாந்தர்க் கெல்லாம்
  ....சரித்திரம் தேவை அன்றோ !


  பதிவுடன் படங்கள் காட்டும்
  ....பவித்திரம் கண்டால் வாழ்வின்
  விதியுடன் வாங்கிக் கொண்ட
  ....விலங்கறும் ! வேட்கை தீரும் !
  மதியுடன் மலர்ந்து நிற்கும்
  ....மங்கையாம் அதிரா வென்னும்
  பதியறத் தாளின் மேன்மை
  ....படரவே வேண்டு கின்றேன் !


  அத்தனையும் வழக்கம் போல அருமைதான் பூசாரே கைபேசியில் அன்றே பதிவைப் படித்தேன் ஆனால் கருத்திட முடியல்ல ( என்ன அங்கே கறுமுறு சத்தம் ஓஓஓஓஓஓ பல்லுக் கடிக்கினம் ) இப்போதான் வந்தேன் கால தாமதத்துக்குப் பொறுத்தருள்க மியாவ்

  வாழ்க நலம் !

  ReplyDelete
  Replies
  1. சீராளன்....

   கேது - இங்கு பஞ்சவர்ணக் கிளி என்ற பதத்தில் உபயோகப்படுத்தியிருக்கிறீர்களா? அப்போதான், அதனுடைய சிறகு-தோகை என்ற பொருள் சரியா இருக்கும்னு நினைக்கறேன்.

   சாதுகை மாந்தர் - 'நற்குணம் பொருந்தியவர்கள்.
   பவித்திரம் - தூய்மை
   பதி அறத்தாள் - இப்படித்தான் பொருள் கொள்ளணுமா?

   சீராளன்... ரொம்ப அருமையா இலக்கியத்துக்குரிய வார்த்தைகளைப் போட்டு கவிதை புனையறீங்க. மிகுந்த திறமை. இதனை காவியம் எதுக்காவது உபயோகப்படுத்தக்கூடாதா?

   என்ன மாதிரி உங்களுக்கு உவமைலாம் வருது. அது இந்த மாதிரி வெறும் கவிதைகளோட போய்விடலாமா?

   கவிதை வரிகளை இடுகையின் மேற்பகுதியில் பார்த்தவுடன் படிப்பதற்காக வந்தேன். வாழ்த்துகள்.

   Delete
  2. வாங்கோ மேஜரே வாங்கோ..

   முதல் வரியில் வஞ்சி என்றதும் எனக்கு பழைய பாடல்தான் நினைவுக்கு வந்தது.. ஆனா வஞ்சி என்பதன் பொருள் தெரியவில்லை.

   எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று...

   https://www.youtube.com/watch?v=LcUz4ZPS69E

   ஓ அழகிய பா வில் பதில்.. இப்போ நெல்லைத்தமிழனுக்குப் பின்னர், நானும் கொஞ்சம் ஊன்றிக் கவனிச்சுப் படிப்பதால் ஈசியா புரியுது..

   ///என்ன அங்கே கறுமுறு சத்தம் ஓஓஓஓஓஓ பல்லுக் கடிக்கினம் )///

   ஹா ஹா ஹா..

   // இப்போதான் வந்தேன் கால தாமதத்துக்குப் பொறுத்தருள்க மியாவ் //

   ஹையோ இம்முறை தாமதமான பதிலுக்கு நான் தான் மன்னிப்புக் கேட்கோணும்... இம்முறை சற்று அதிக தாமதமாகிவிட்டது..

   மிக்க நன்றி சீராளன்.

   Delete
 57. வணக்கம் நெல்லைத்தமிழன் !

  தாங்கள் பொருள் கொண்டவிதம் சரியே
  பதி அறத்தாள் தான் மற்றவை எல்லாவற்றிற்கும் தங்கள் பொருள் கொண்டதன்படி......,

  அன்பிற்கு நன்றிகள் கோடி

  காவியமா. ஹாஹாஹா

  மூழ்கிடாச் சருகுக் கெல்லாம்
  ........,முற்றிலும் வலிமை என்று
  பாழ்மனம் சொல்லும் ! இந்தப்
  ..........பாவியும் அஃதாம் ! வாழ்வைச்
  சூழ்வலி கொள்ளச் சாபம்
  .........சுற்றியே கேள்வி கேட்டால்
  ஆழ்கிணற் றவளை யுந்தான்
  ........அறிவினுக் கேது செய்யும் !
  ReplyDelete
  Replies
  1. கவிதை மனத்தை என்னவோ செய்கிறது. எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்... திறமை உள்ளவர்களை காலம் அப்படியே விட்டுவிடுவதில்லை. அட்டைகளெல்லாம் கட்-அவுட்டாகி நிற்கின்ற காலத்தில், திறமை உள்ள நீங்கள் நிச்சயம் மேலெழுந்து வருவீர்கள். உங்களுக்குரிய காலம் வரவேண்டும். அவ்வளவுதான்.

   கம்பனுக்கும் ஒரு புரவலன் இருந்தால். இல்லாவிட்டால் 'கம்ப ராமாயணம்'ஏது? காலம் நிச்சயம் வரும். நம்பிக்கையோடு இருங்கள். அதுவரை தமிழோடு உறவாடிக்கொண்டிருங்கள், முடிந்தபோது நிறைய இலக்கியங்கள், காவியங்கள் படிங்க. படிப்பதை நிறுத்தாதீங்க. (இலக்கிய, காவிய, மரபுக் கவிதைகள் சம்பந்தப்பட்டது). எனக்கு வாய்ப்பிருந்தால் கம்ப ராமாயணம் புத்தகம் வாங்கிக்கொடுப்பேன். என்றைக்குனாலும் ஒரு நாள் நீங்க பெரிய ஆளாவீங்க. அப்போ ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் திறமைகளை அறிந்த பலர் இணையத்தில் இருந்தார்கள் என்று.

   Delete
  2. @சீராளன்..
   ///மூழ்கிடாச் சருகுக் கெல்லாம்
   ........,முற்றிலும் வலிமை என்று
   பாழ்மனம் சொல்லும் //

   ஆஹா ஆஹா இது தத்துவம்... நாவடக்கம்..
   .........................

   @நெல்லைத்தமிழன்
   //இல்லாவிட்டால் 'கம்ப ராமாயணம்'ஏது?//
   அது அதிர-பதம் ஆக்கியிருப்பேன்ன் ஜஸ்ட்டு மிஸ்ட்டூஊஊஊஊ:)) ஹையோ எதுக்கு உந்த முறைப்பூ அப்பூடி என்ன ஜொள்ளிட்டேன்ன்:))..

   ///என்றைக்குனாலும் ஒரு நாள் நீங்க பெரிய ஆளாவீங்க. அப்போ ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் திறமைகளை அறிந்த பலர் இணையத்தில் இருந்தார்கள் என்று.///

   இதில இன்னொரு வரியையும் சேர்க்கோணும்:)) அதிராவுக்கு டமில்ல டி:) என்பதால:) அவவும் கவிதைகளை ஈசியா புரிஞ்சு ரசிச்சா என:))..

   ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கவிஞருக்கும்.. ரசிகருக்கும்:)..

   Delete
  3. வணக்கம் சீராளன்!

   அதிராவுக்கு எழுதிய விருத்தப்பாக்கள் உங்களின் திறமையைப் பறை சாற்றுகின்றன. திறமையைக் கண்டு மிக்க மகிழ்வடைகின்றேன். அதிலும் இலக்கிய நயமிகும் சீர்களுடன் மரபில் விருத்தம் பாடியுள்ளீர்களே!…
   இலக்கியச் சொற்களில் எழுதுவதென்பது எல்லோருக்கும் முடிந்த காரியம் இல்லை. அதற்கு ஆழமான கருத்துச் செறிவுமிக்க பதங்களில் பரிச்சயம் வேண்டும்! மிகுந்த ஞானம் வேண்டும்! மிக மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் சீராளன்!
   உங்கள் தன்னடக்கம் மூழ்கிடாச் சருகுக் கெல்லாம்… விருத்தத்தில் தெரிகிறது…:)
   உங்களை எப்படிப் பாராட்டுவது என எனக்குத் தெரியவில்லை....
   பாக்கள் அற்புதமாக இருக்கிறது. உளமார்ந்த வாழ்த்துக்கள்!
   உங்கள் திறமை வெளிப்பட மேலும் மேலும் எழுதுங்கள்!
   உங்களின் வலைத் தளத்திலும் வெளியிடுங்கள்!

   நானும் கவிதை என்று ஏதோ… எழுதுகிறேன்….:))
   சுட்டுப் போட்டாலும் இலக்கியத்தில் எழுத எனக்கு வரவே வராது! முடியாது..:)
   சில இலகியச் சீருள்ள கவிதைகளை அகராதி தேடித்தான் பொருள் புரிந்து கொள்வதுண்டு.

   சகோ நெல்லைத் தமிழன்.. நானும் உங்கள் கருத்தினை வழிமொழிகிறேன்! கவிதைத் துறையில் நிச்சயம் சீராளன் மிகப் பெரீய பெயர் பெறுவார்! எனக்கும் அதில் அசையா நம்பிக்கை உண்டு!

   Delete
 58. கதம்பம் உண்மையில் மணம் வீசுகிறது அதிரா! இங்கே துபாய் வரை வாசம் வருகிறது! சமையல் குறிப்புகள் அமர்க்களமாக இருக்கின்றன! அதுவும் அந்த கோதுமை சுண்டல் பார்க்க மிகவும் அழகு!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ...

   ஹா ஹா ஹா கதம்பம் என்றாலே சற்று அமர்க்களம்தானே:)..

   மிக்க நன்றி மனோ அக்கா.. கோதுமைச் சுண்டலின் சுவை நன்கு முத்திய சோளனின் சுவைபோல இருக்கும் சாப்பிட.

   Delete
 59. [co="dark green"] ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:) நான் கொஞ்சம் சுயநலவாதியா மாறோணும் என நினைக்கிறேன்:) ஆனா முடியுதில்ல:).. என் பக்க கொமெண்ட்ஸ் க்கு ரிப்ளை போட்ட பின்பே, ஏனை இடங்களுக்குப் போகோணும் என நினைச்சு கொம்பியூட்டரை ஓபின் பண்ணுவேன்:)).. ஆனா இதை விட்டுப் போட்டு எல்லோர் வீட்டுக்கும் போய் வர நேரம் போய் விடுது:))... சரி அதுவும் நல்லதுதானே, தாமதமான என் பதிலுக்கு மன்னிச்சுக்கோங்க எல்லோரும்:).. விரைவில் பதில் போட்டிடுவேன்.. அதுவரை கீழே புஃபே இருக்கு.. வடிவாச் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கோ.. பில்லை நான் பே பண்னிடுறேன்ன்:)) நம்புங்கோ:) [/co]

  [im]https://media-cdn.tripadvisor.com/media/photo-s/06/4d/12/25/bombay-sweets-vegetrn.jpg[/im]

  ReplyDelete
  Replies
  1. உங்க வீட்டுக்கு வருபவர்களுக்கும் இதுபோல் ஏதேனும் படத்தைக் கொடுத்துவிட்டு அனுப்பிவிடுவீர்களோ? காபி, தே'நீருக்கும் தனித்தனியாக படங்கள் ரெடியா வச்சிருக்கீங்க போலிருக்கு.

   Delete
  2. am
   கர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் அப்பூடி நான் செய்வேனோ:), படம் எதுக்கு... நான் பேசினாலே ரீ குடிச்சமாதிரி ஆகிட்டுது என்பினம்:)... ஹையோ முறைக்காதீங்க அதனால முதல்ல ரீ யைக் குடுத்து விட்டே பின்பு பேசுவேனாக்கும்:)...

   இன்னொன்று இதை நான் சொல்லியே ஆகோணும்:) பிளீஸ் எங்காவது கதிரையில் இருந்து அல்லது பக்கத்தில ஏதும் வேலி இருந்தா இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு படிக்கவும்:) மயங்கி விழுந்தால் மீ பொறுப்பல்ல ஜொள்ளிட்டேன்ன்ன்:)... ஹா ஹா ஹா என்னான்னா....

   சமீபத்தில எங்கட வீட்டு வந்து போன குடும்ப நண்பர்கள்.. அடிக்கடி வந்து போவோர்தான்... போகும்போது சொல்லிச்சினம் அதிரா நீங்களும் டொக்டராக வந்திருக்க வேண்டியவர்:) ஏதோ மிஸ்சாகிட்டுதுபோல என ஹா ஹா ஹா அவர்கள் இருவருமே டொக்டேர்ஸ்:)... இப்போ நேக்கு சை சையா வருது பின்பு வாறேன் ஹா ஹா ஹா:)..

   Delete
 60. 150. :‍) லேட்டா வாறதே இப்ப‌ எனக்கு பழக்கமாகப் போச்சுது. :‍)

  கொள்ளு சுண்டல்... செய்து பார்த்துபோட்டு எப்பிடி இருந்ததென்று சொல்லுறன். ஒரு ஆர்வத்தில‌ வாங்கி வைச்சது இருக்கு. கோதுமை ஒரு காலமும் சமைச்சது இல்லை. உங்கட‌ சுண்டலைப் பார்க்க‌ ஆசையாக‌ இருக்கு.

  அந்த கங்கோ பீஸ் இங்க‌ அவுஸ்த்திரேலியன் பயறு என்று பார்த்திருக்கிறேன். பச்சைப் பயற்றுக்குப் பக்கத்தில் வைச்சிருப்பாங்கள்.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.