நல்வரவு_()_


Sunday, 28 May 2023

 ராமர் எப்படி இறந்தார்?:)

ஆண்டவா!!! இண்டைக்காவது எனக்கு இதன் 
உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீ!!!

னக்கொரு டவுட்டூஊஊஊஉ என்னதான் கம்பராமாயணம் படிச்சு, கரைச்சுக் குடிச்சாலும் (என்னைச் சொன்னேன்:)), ராமர் கடசியில எப்படி இறந்தார் என டவுட்டாகவே இருக்கெனக்கு:)..

இந்த டவுட் உங்களில் ஆருக்கும் வந்திருக்காதே:).. ஏனெண்டால் அதிராதான், என்னோட குட்டிக் கிட்னியை வச்சு இப்படி எல்லாம் ஓசிப்பேன்:)), உங்களுக்கு இதுக்கெல்லாம் எங்கின நேரமிருக்கப் போகுது:)).

 சரி சரி முறைக்கக்கூடாது எனக்குப் பதில் வேணும்:), அதுக்காக இப்ப என்ன கம்பரைக் கூப்பிடவா முடியும், நாங்கதான் ஒரு முடிவுக்கு வரோணும்:)) ஹா ஹா ஹா.

பொன்னியிலன் செல்வன் படிச்சிட்டீங்களோ என எல்லோரும் கேய்க்கினம் கர்ர்ர்ர்ர்:)) ஆனா அதைவிட முக்கியம், ராமர் எப்படி இறந்தார் என்பதுதான்:), அதிராவுக்கு நட்பாக இருப்போருக்கு ராமாயணம் ஒழுங்காத் தெரியாதெனில், அதிராக்கு வெய்க்கம் வெய்க்கமா வருமெல்லோ:)).. ஹையோ இப்ப கீழ குனிஞ்சு என்ன தேடுறீங்கள்?... அதெல்லாம் எடுக்க வாணாம்ம்ம் மீ பாவம் இப்போ கம்பர் அங்கிளும் இல்லை [உடனே இப்ப ஒராள் கொடி தூக்குவா:), ஆ அவர் உங்களுக்கு அங்கிளோ, எனக்கு கொள்ளுத்தாத்தா என கர்ர்ர்ர்ர்ர்:)].

 இந்தக்காலத்தில 90 வயசாக்களையும் அன்ரி, அங்கிள் எனக் கூப்பிட்டால்தான் சந்தோசமாகக் கதைக்கினம், இல்லை எனில் முறைக்கினம், அதால நான் எல்லோரையும் அங்கிள் என்றிடுவன், அடுத்தவர்களுக்கு எது சந்தோசத்தைக் கொடுக்குதோ அதைத்தானே நாம் செய்யோணும்.

ஹையோ ரெயின் ட்ரக் மாறிப்போகுதே:).. எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈ... ஆஆ கம்பர் அங்கிள் இருந்தால் விளக்கம் சொல்லுவார், இப்போ ஆரிடம் போய்க் கேய்ப்பேன், எனக்கு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈ:), ராமபிரான் எப்படிக் காலமானார்???.. கவ்? கவ்? கவ்?:)...

அது கொலையா, தற்கொலையா? .. தற்கொலை எனில் அது தப்புத்தானே?, இதை , அதிராவைத்தவிர ஆருமே தட்டிக் கேய்க்க மாட்டீங்களோ?:)).

===========_____இடைவேளை_____===========

யார் யாரெல்லாம் கல்லெடுக்கப் போகினமோ தெரியேல்லையே கோவில்பட்டி முருகா!!!, எதுக்கும் ஒளிச்சிருந்துகொண்டே குரலை மட்டும் குடுப்போம்.. பூஸோ கொக்கோ:).. தண்ணியில் மீன்கள் மாட்டும் ஆனால் பூஸ் மாட்டுமோ ஹா ஹா ஹா

======இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்ச்:)======

சரி இப்போ கதையைச் சொல்றன், முடிவில ஒரு முடிவுக்கு வருவம்:).

ராமபிரானுக்கு ஒரு தம்பி, அதாவது அஞ்சுவுக்கு, நான்(அதிரா) ஒரு தங்கை இருப்பதைப்போல[ ஹா ஹா ஹா கொஞ்ச நேரம் நில்லுங்கோ, சிரிச்சு உருண்டு பிரண்டிட்டு வாறேன்:), இப்படிச் சந்தடி சாக்கில சொல்லிடோணும், இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் அமையுதோ இல்லையோ ஆரு கண்டா:) ஹா ஹா ஹா], லக்ஸுமனன் இருந்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிவதில்லையாம் [ஆரு கண்டா, கம்பர் அங்கிள் சொல்லியிருக்கிறார், சரி இருக்கட்டும்:)]. அப்போ ஒரு முனிவர் ராமரைச் சந்திக்கப்போகிறேன் என அவர்களின் கோட்டைக்கு வந்தாராம், வந்த முனிவர் சொன்னாராம், ராமரிடம், நான் உன்னோடு தனியே பேச வேண்டும், பேசும்போது யாரும் உள்ளே வரவும் கூடாது, பேசுவதை ஒட்டுக் கேட்கவும் கூடாது, அப்படி இதை மீறி ஆராவது செய்தால், அவர்களைக் கொல்ல வேண்டும், என.

இதற்கு ராமர் சம்மதித்து, தன் தம்பி, லட்சுமனனைக் கூப்பிட்டு, இதைச் சொல்லி, இந்தப் பொறுப்பை நீதான் ஏற்க வேண்டும் , யாரும் உள்ளே வராதபடி காவல் காத்துக்கொள் என,  தம்பியும் அதற்குச் சம்மதித்து, அறைக்கு வெளியே காவல் காத்தாராம்.

உள்ளே வந்த முனிவர், கதவைச் சாத்தியதும், தன் வேசத்தைக் கலைத்தாராம், அவர் வேறு யாருமில்லை, எமன் அங்கிளாம்[கடவுளே பேரைச் சொல்லவே பயம்மாக் கிடக்கு], அப்போ அவர் ராமரிடம் சொன்னாராம், நீங்கள் பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்ந்துவிட்டீங்கள்[ இந்தக் காலத்தில 100 வயசைத் தொட்டாலே அவார்ட் எல்லாம் குடுக்கினம் ஹா ஹா ஹா இது பத்தாயிரமாமே], இனி உங்கள் காலம் முடிஞ்சுபோச்சு, நீங்கள் என்னோடு வரவேண்டும் என, இதைக் கேட்ட ராமர் ஷாக்க்க்க்க் ஆகி அமர்ந்திருந்தாராம், ஏனெனில் அவர்தான் ஆட்சியில் இருந்தார், அப்போ மனைவி பிள்ளைகள் காட்டிலாம்....

எனக்குப் பாருங்கோ இந்த இடத்தில கெட்ட கோபம்தான் வருது, மனைவி பிள்ளைகளைக் காட்டில விட்டுப்போட்டு, இவர் தம்பியோடு அரசாழ்வதானால், எதுக்கு காதலிச்சுத் திருமணம் பண்ணினார்ர்?.. இக்காலத்தில எனில் கண்டபடி கிளவி.. சே..சே பயத்தில டங்கு ஸ்லிப்பாகுதே:), அது சரித்திரக் கதைகள் எண்டாலே எனக்கு காண்ட்ஸும் ஓடாது லெக்ஸ்சும் ஆடாது பாருங்கோ:)..  

சரி விட்ட இடத்துக்கு வாறன், கேள்வி கேட்பினம்... இதை எல்லாம் அறியும்போது, அக்காலத்தில நம் கடவுள்கள் பண்ணியதைத்தானே, இப்போ சில மக்கள் பண்ணுகிறார்கள், ஆனா இப்போ தவறு என்கிறோம்.. இது எந்த வகையில் ஞாயம்... எனக்குத் தேவை.. நீதி, நியாயம், கடமை நேர்மை எருமை:)).. ஆவ்வ்வ்வ் ஒரு ப்ளோவில வந்திட்டுத்து பெரிய மனசு பண்ணி விட்டிடுங்கோ:).

அந்த நேரம் பார்த்து இன்னொரு முனிவர்[துருவாச முனிவர்] அங்கு வந்தாராம், வந்தவர், லட்சுமனனிடம், ராமரைச் சந்திக்கோணும் எனச் சொன்னாராம்,  அப்போ லட்சுமணன் எவ்வளவு சொல்லியும் அடம்பிடித்தாராம் முனிவர்,  அவர் மிகவும் கோபக்காரராம், சந்திக்க விடவில்லை எனில் அயோத்தி அழியோணும் எனச் சாபம் விட்டு விடுவேன் என மிரட்டினாராம், அதனால் பயந்துபோன லட்சுமனன், வேறுவழியின்றி,  அண்ணாவைக் கூப்பிடுவமே என, கதவைத்திறந்து உள்ளே போனாராம், விதி விழையாடிவிட்டது... சொன்ன வாக்கை மீறி உள்ளே போய் விட்டதனால்,.

ராமர், முனிவராக வந்த எமதர்மருக்கு கொடுத்த வாக்கின்படி, தம்பியைக் கொல்ல வேணுமெல்லோ, இப்போ என்ன பண்ணுவது எப்படி அப்படிச் செய்ய முடியும், அதனால மனமுடைந்த ராமர், தம் ராஜ்ஜியத்தில் இருக்கும் முனிவரிடம் ஓடிச் சென்று ஆலோசனை கேட்ட இடத்தில, அவர் சொன்னாராம், உன்னை விட்டு விலகிச் செல்லச் சொல் லட்சுமனனிடம்.. அதுவே ஒருவித மரண தண்டனைதான் என...

ராமனும் வேறு வழியின்றி, தம்பியிடம் சென்று, இனிமேல் என் முகத்தில் முழிக்காதே, என்னை விட்டு விலகிச் சென்றுவிடு எனக் கூறினாராம், ஒரு கணமேனும் ராமனைப் பிரியாத லட்சுமணன், இந்த வார்த்தையைக் கேட்டதும், ஓடிப்போய் அயோத்தியில் இருக்கும் "சரயு நதியில்" குதிச்சு, மறைந்திட்டாராம்.

இதை அறிஞ்ச ராமர், உடனே தன் மகன்களை அயோத்திக்கு அழைத்து,


அவர்களுக்குப் பட்டாபிசேகம் நடத்தி, நாட்டை ஒப்படைத்துவிட்டு, தானும் போய் அந்த நதியில் மூழ்கி, மறைஞ்சிட்டாராம்... இதுதான் நடந்த சம்பவம்..

ஆனா, இது தற்கொலைக்குச் சமனாகிடும் என்பதால, கம்பன் அங்கிள் இதை நம்மிடம் மறைத்து, கதையை முன்கூட்டியே முடிச்சுப் போட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இப்போ சொல்லுங்கோ, இந்த மரணத்தை எப்பூடி அழைப்பது?..

இன்னொரு விசயம் பாருங்கோ, சீதாப்பிராட்டி மறைஞ்சபோதுகூட, அசையாத ராமர், தன் தம்பியின் பிரிவு தாங்காமல் , தன்னை மாய்த்திட்டார்... எவ்ளோ விசயம் இந்த ராமாயணத்தில மறைஞ்சிருக்குது, இதெல்லாம் அதிரா கண்ணுக்குத்தான் தெரியுமாக்கும்:)... 

நேக்கு.. நீதி வேணும், நியாயம் வேணும்..  நெஞ்சு பொறுக்குதில்லையே... ஆஆஆ ரெம்ம்ம்ப ஹொட்டா இருக்கு, ஒரு கப் ஐஸ் இல்லாத மோர் தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்.. அந்தர ஆபத்துக்கு இங்கின என் செக்:) ஐயும் காணம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)..

கொண்டை ஊசிக்குறிப்பு:
நீங்கள் யாராவது சரயு நதி பார்த்ததுண்டோ?.. எனக்கு இப்போ பார்க்கும் ஆவல் அதிகமாகிவிட்டது

**************************************************

ஊசிக்குறிப்பு:

எய்தவர் இருக்க அம்பை நோகப்பிடாதாம்:)), அதனால என் எழுத்தில என்ன தப்பிருந்தாலும் என்னோடு சண்டைக்கு வரக்கூடாதாக்கும் ஜொள்ளிட்டேன், ஏனெனில் என்னை இப்போஸ்ட் எழுதத் தூண்டியதே, கீழே இருக்கும் இந்த மீம்ஸ் தான்:)))


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

121 comments :

 1. நானே முதல் பின்னூட்டம் ,
  ஆஆஆஆ தலைப்பே என் கண்ணை கட்டுதே சாமி :)

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ, முதலாவதாக வந்தமையால், சராயு நதியில் குளிச்சு நீச்சல் அடிப்பதற்கு, ஒரு ரிக்கெட் உங்களுக்கு, கம்பவாரிசு அதிராவால் வழங்கப்படுகிறது:))

   Delete
  2. சராயு நதியில்//// சாராய நதியில் எண்டு படிச்சுப்புட்டேன் ஹூம்ம்ம்

   Delete
  3. அது சரயு நதி.. சராயு இல்லை :)

   Delete
  4. ///Avargal UnmaigalSunday, May 28, 2023 9:32:00 pm
   சராயு நதியில்//// சாராய நதியில் எண்டு படிச்சுப்புட்டேன் ஹூம்ம்ம்///

   வாங்கோ ட்றுத் வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இன்னும் அதைக் கை விடேல்லையோ:).. ட்றம்ப் அங்கிள் மாறினபின்பு நீங்களும் இதை எல்லாம் மறந்திருப்பீங்கள் என நினைச்சமே:))

   Delete
  5. ///AngelSunday, May 28, 2023 10:59:00 pm
   அது சரயு நதி.. சராயு இல்லை :)//

   ஆஆஆஆஆஅ என் செக்:) க்கும் இதெல்லாம் தெரிஞ்சிருக்குதே.. ஆவ்வ்வ்வ் மாற்றி விடுறேன்..

   Delete
 2. எனக்கு இப்படிலாம் சந்தேகம் வந்ததேயில்ல .ஹொவ் ஹொவ் ஹொவ் ??? வொய் வொய் ? உங்களுக்கு மட்டும் இப்டிலாம் தோணுது 

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு சந்தேகம் எல்லாம் சமைக்கிறதுலதானே வரும்

   Delete

  2. ஆசிரியர் பிள்ளை மக்குன்னு சொலுவது போல கம்பனின் வாரிசான நீங்களும் ஹீஹீ அதுக்கு மேல் நான் பேசக் கூடாது

   Delete
  3. அதிராவும் ஏஞ்சலும் சேர்ந்து வந்துருக்காக கடவுலே அவர்கள் சமையல் குறிப்புகள் மட்டும் போடதபடிக்கும் நீங்கள்தான் எங்களை காப்பாற்றனும்

   Delete
  4. ///AngelSunday, May 28, 2023 8:11:00 pm
   எனக்கு இப்படிலாம் சந்தேகம் வந்ததேயில்ல//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜந்தேகம் வரணும்:)) அப்போதானே சரித்திரத்தை மாத்தி எழுத முடியும்:))

   Delete
  5. ///Avargal UnmaigalSunday, May 28, 2023 9:46:00 pm
   உங்களுக்கு சந்தேகம் எல்லாம் சமைக்கிறதுலதானே வரும்//

   ட்றுத் புரியாமல் தெரியாமல் பேசப்புடா:)), இதை அஞ்சுவிடம் கேட்டு என்ன பலன்?:), அங்கு சமைக்கிற ஆட்களிடமெல்லோ இதைச் சொல்லோணும் ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப்:))

   Delete
  6. ட்றுத்///

   கம்பவாரிசு என்பதாலதான், திரும்படியும் கம்பராமாயணத்தைக் கையிலெடுத்திருக்கிறேனாக்கும் ஹா ஹா ஹா..

   அதெப்பூடி எங்கட சமையல் குறிப்பில் இருந்து நீங்கள் தப்ப முடியும்:))..

   நன்றி ட்றுத்.. அம்பேரிக்காவில இருந்து உடன் வருகை தந்தமைக்கு..

   Delete
  7. ஓஹோ அவ்ளோ ஆனந்தமோ :) அப்டிலாம் 4 பேரு சந்தோஷமா இருக்க விட்டுருவோமா நாங்க :) வரேன் சுட்ட தக்காளி ரசத்துடன் விரைவில் :)

   Delete
  8. ///வரேன் சுட்ட தக்காளி ரசத்துடன் விரைவில் :)/// அதானே புறப்படுங்கோ அஞ்சு கிச்சினைத் தூசு தட்ட.. அதுசரி டக்காளி ரசமோ அப்பூடின்னா?:)) ஹா ஹா ஹா... நானும் போடப்போறேன் கொவ்வைக்காய்க் குர்மா:)))

   Delete
 3. ஹலோ ரெண்டு குரங்குகளும் இன்னும் உசிரோடத்தான் இருக்கிறதா

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க ஆரைப் பார்த்துக் கேட்கிறீங்க?:)).. அங்கின பக்கத்தில ஆரும் இருக்கினமோ:)).. மைண்ட் வொயிஸ் சத்தமாக் கேய்க்குது ட்றுத்:)).. வயசானாலே அது சகஜம்தானே:)) ஹா ஹா ஹா

   Delete
  2. பார்த்திங்களா அதீஸ் நம்ம அண்ணனுக்கு இன்னும் பழைய பாசம் அன்பு எதுவும் குறையல்ல :) இன்னும் செல்லமா தங்கச்சிங்களை குரங்குன்னு கூப்பிடறார் :)))

   Delete
  3. அது அஞ்சு அவருக்கு சரயு நதியே வேறுமாதிரித் தெரியுதாம்:)), அப்போ ரெண்டு கால் எல்லாம் நாலு காலாகத் தெரிவது சகஜம்தானே ஹா ஹா ஹா:)

   Delete
 4. இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் அவாள் எல்லாம் வந்து கோவிச்சுன்டுற போறாள் இதுல போறாதற்கு தமிழிசை சொன்னதயும் கடைசியில இணைச்சு வச்சுட்டுடேள் இனிமேல் நீங்கள் சங்கிகளின் சாபத்திற்கு ஆளாக போகிறேள்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹாட்றுத் சத்தியமாக தமிழிசை எனில் தமிழ்நாட்டில் வெளிவரும் ஒரு பேப்பராக்கும்.. அப்படித்தான் நினைச்சிருந்தேன் ஹா ஹா ஹா , நீங்க சொன்னபின் தான் தேடிப்பார்த்தேன் அவ்வ்வ்வ்வ்:)).. எனக்கும் இதுக்கும் ஜம்பந்தமில்லை, இது ட்றுத் வச்சிருக்கும் காரிட முன்பக்க ஸ்கிறீன் வைப்பர் மேல ஜத்தியம்ம்ம் ஹா ஹா ஹா:))

   Delete
  2. /// தமிழிசை // magazine omg . you escaped .its because of your wide extensive knowledge about tn /indian politics :)))))

   Delete
  3. எனக்கு இலங்கை, பிரித்தானியாப் பொலிரிக்ஸ் ஏ தெரியாது பிடிக்காது, இலங்கை நியூஸ் அம்மாதான் சொல்லுவா, ஆஅ நான் பார்க்கவில்லை எனச் சொன்னால் ஏசுவா .. ஏன் நீ இதை எல்லாம் பார்க்கவில்லை என கர்ர்ர்:)) நான் ஊ ரியூப் ஓனர் என்றது அம்மாவுக்குத்தான் மறந்திருக்கலாம் அஞ்சுவுக்குமோ கர்ர்ர்ர்ர்:))...
   உங்களுக்குத்தான் தெரியுமே அஞ்சு நான் அர்ச்சுனன் மாதிரி... ஒரு இடத்தை மட்டும்தான் பார்ப்பேன் அங்கால இங்கால எல்லாம் பார்ப்பதில்லையாக்கும்:))

   Delete
 5. அதிரா டிரெம்பை கைவிட்டுவிட்டு கிங் சார்லஸ் பின்னால் சுற்றுவதாக செய்திகள் உலா வருவது உண்மையா?

  ReplyDelete
  Replies
  1. அதிராவுக்கு கொஞ்சம் வயசாச்சு, மருத்துவர் பணி புரியப்போகும் மகன் இருக்கிறார் என்பதெல்லாம் உண்மைதான். அதுக்காக மனசாட்சியே இல்லாமல் வயசாசாசாசான காலத்துல மன்னராகியிருப்பவரோடு கோர்த்துவிடலாமா? ஒரு நியாயம் வேண்டாமா?

   Delete
  2. நெல்லை...அங்க ராணியின் பேரனை பாத்துக்கற பாட்டின்னு எப்பவோ சொன்ன நினைவு அப்ப இன்னும் வயசாகியிருக்கும் இல்லையோ!!!?

   கீதா

   Delete
  3. Avargal UnmaigalSunday, May 28, 2023 9:40:00 pm
   அதிரா டிரெம்பை கைவிட்டுவிட்டு கிங் சார்லஸ் பின்னால் சுற்றுவதாக செய்திகள் உலா வருவது உண்மையா?////

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) குயின் அம்மம்மா போன பின் எனக்கு பக்கிங்காம் பலஸே வெறுத்துப்போச்ச்ச்ச்ச்.. சாள்ஸ் ஐ எப்பவும் பிடிக்காது...மோடி அங்கிளைச் சொல்லியிருந்தால்கூட ஓகே.. ஹா ஹா ஹா ட்றுத் ஓடாதீங்கோ நில்லுங்கோ:)))

   Delete
  4. ///நெல்லைத்தமிழன்Monday, May 29, 2023 12:45:00 am
   அதிராவுக்கு கொஞ்சம் வயசாச்சு,//

   உதெல்லாம் இருக்கட்டும்.. நான் நெல்லைத்தமிழனைப் பார்த்திட்டேன்ன்.. நான் நெல்லைத்தமிழனைப் பார்த்திட்டேன்ன்ன்... யானைப்பாகனோ என டவுட்டாகிச் சொல்லப்பயந்து பின்பு என் செக்:) உடன் கூட்டு மகாநாடு வச்சுக் கன்போம் பண்ணிக் கண்டுபிடிச்சிட்டோம்ம்ம்ம் ஆவ்வ்வ்வ்வ்வ்:) அதெப்பூடி:)? அஞ்சு அதிரா இல்லைத்தானே என்பதால தெகிறியம் வந்திட்டுதோ படம் போட ஹா ஹா ஹா...
   நெல்லைத்தமிழன் ஓடாதீங்கோ.. இன்னும் பல போஸ்களில் எதிர்பார்க்கிறோம் :)

   Delete
  5. அவ்வ்வ்வ்வ் :))))))))))))) யானைப்பாகனா :))))))))))))))) பாவம் நெல்லை தமிழன் 

   Delete
  6. வாங்கோ கீத்ஸ்.. அது குயின் எனக்கு அம்மம்மாவாக்கும்:).. வில்லியம் எனக்குப் பெரியண்ணாவாக்கும் ஹா ஹா ஹா நில்லுங்கோ கொஞ்சம் சிரிச்சிட்டு வாறேன்ன்:))..

   Delete
  7. //AngelMonday, May 29, 2023 10:03:00 am
   அவ்வ்வ்வ்வ் :))))))))))))) யானைப்பாகனா :))))))))))))))) பாவம் நெல்லை தமிழன்//

   அஞ்சூஊஊஊஉ அது கீழ டெலிவாக் கப்ஸன் போட்டிருந்தாரெனில் எனக்கேன் அந்த டவுட்டூ வருது:)).. கப்ஸன் போடாததாலதானே அப்பூடி நெனச்சேன்ன் அது டப்போ நெல்லைத்தமிழன் ஹா ஹா ஹா..

   இருந்தாலும் நான் வேறமாதிரித்தான் கற்பனை பண்ணியிருந்தேன்:)) ஹா ஹா ஹா...

   Delete
 6. ///இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் அமையுதோ இல்லையோ ஆரு கண்டா:) //


  வாய்ப்பில்லை (ராஜா)/ ராணி

  :))))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.theatlantic.com%2Fscience%2Farchive%2F2017%2F06%2Fcat-domination%2F530685%2F&psig=AOvVaw2XofIfns82Ns2tRkXLF38I&ust=1685432456427000&source=images&cd=vfe&ved=0CBAQjRxqFwoTCNDX6KiDmv8CFQAAAAAdAAAAABAR

   Delete
 7. நல்லவேளை கம்பவாரிசு அதிரான்னு போட்டுக்கிட்டீங்க. மறந்துபோய் கம்பவாரிதி அதிரான்னு போட்டுக்கிட்டிருந்தால், ஆகஸ்ட் மாதம் ஶ்ரீலங்கா செல்லும் உங்களுக்கு என்னாகுமோ, யார் தாக்குவாங்களோன்னு நான் பயந்துக்கிட்டு இருக்கணும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ... ஏற்கனவே பங்கர் படமெடுங்கோ என என்னை உசுப்பேத்தி நடுங்க வைக்கிறீங்க:), இப்போ இதுவுமோ கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது கம்பவாரிதி ஜெயராஜ் அங்கிள்தான் எனக்குள் இருந்த கம்பராமாயண வெறிக்கு மெருகூட்டியவர்... அது ஒரு அழகிய பொற்காலம், கோயில் வீதியில இரவு 11,12 மணிவரை நிலவு வெளிச்சத்தில போயிருந்து அவரின் கமபாமாயணச் சொற்பொழிவைக் கேட்டதெல்லாம் ஒரு காலம்... எங்களுக்கு ஸ்கூல் சிலபஸ் ல இருந்தது கம்பராமாயணம், பாரதச் சுருக்கம் எல்லாம், ஆனா இப்போ எடுத்துவிட்டார்கள் என அறிஞ்சேன்...

   ஒரு வசனத்தைப் போட்டு, இது யாரால், யாருக்கு, எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது எனக் கிளவி.. சே..சே டங்கு ஸ்லிப்பாகத் தொடங்குதே கேள்வி வரும்...கர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 8. சரயு ந்தியைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அங்கு குளித்துமிருக்கிறேன்.

  முதன் முதலில் அயோத்தி சென்றபோது (2008), சரயு ந்தி மட்டுமல்ல, எந்தப் புண்ணிய தீர்த்தத்திலும் சோப் உபயோகிக்கக்கூடாதுன்னு சொன்னதும் நினைவில் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ் எனக்கு அனைத்து நதிகளையும் அருகில் போய்ப் பார்க்கோணும் எனும் ஆசை, ஏனோ தெரியவில்லை நதிகளுக்கும் எனக்கும் அப்படி ஒரு பாசப்பிணைப்பிருக்கு.. அதுக்கெல்லாம் காரணம் சின்ன வயசிலேயே இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும், நதிகள் பற்றிய பாடல்கள்தான்..

   கங்கை நதி ஓரம் ராமன் நடந்தார்...

   ஹரித்வார் போய்க் குளிச்சாச்சு ஆசை தீரக் கங்கையில்.. ஜமுனை நதியை தாஜ் மஹாலில் பார்த்திட்டேன்.. அப்போவெல்லாம் எனக்கிருந்த மனமகிழ்ச்சியை இங்கு வார்த்தையில் அளவிடவே முடியாது...

   அடுத்து விரைவில் சரஸ்வதியையும் பார்த்திடுவோம்ம்... பொன்னி நதி பாகிஸ்தானிலயோ ஓடுது?.. அதை எப்படிப் பார்ப்பதாம்?? கர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  2. அட ஆண்டவா... பொன்னி நதி என்பது காவிரியின் பெயர் (தஞ்சையில்). தஞ்சாவூர் பக்கம் போனீங்கன்னா, காவிரில நல்லாக் குளிங்க (ஆனால் தண்ணீர் வரத்து நிச்சயம் இருக்கும் மழைக்காலங்களில் வரணும்). சரஸ்வதி நதி பூமிக்குள் போய்விடுகிறது, நேரடியாகப் பார்க்க இயலாது. இருந்தாலும் அலஹாபாத்தில் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் கங்கையும் யமுனையும் (சரஸ்வதி நதி பூமியிலிருந்தும்) சேர்கிறது என்கிறார்கள். கங்கை யமுனை சேரும் அந்த திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் நிறத்தில் வித்தியாசம் தெரியும். நான் மூன்று முறை அங்கு குளித்திருக்கிறேன் (மூன்று வெவ்வேறு யாத்திரைகளின்போது)

   Delete
  3. ஆஆஆ அப்போ போனி நதி என ஒன்று தனியாக இல்லையோ.. அதிராவுக்கு எங்கே தெரியப்போகிறது என ஆரோ அடிச்சு விட்டார்கள் அது பாகிஸ்தானில் ஓடுது எப்படிப் பார்ப்பதென கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   திருவேணி சங்கமம் போகத்தான் ஆசை.. ஓ கலர் வித்தியாசமும் இருக்கோ? நல்ல தகவல், தெரிஞ்சுகொண்டு போனால்தான் பார்க்கலாம்... பார்த்தால் இங்கு வந்து பெருமை பேசுவேன் தானே ஹா ஹா ஹா..

   நன்றி நெ.த.

   Delete
 9. அயோத்தியில் பட்டாபிஷேகம் முடித்து பல்லாண்டுகள் ஆனபிறகு, இராமனிடம், நீ இறைவன், உன் வந்த வேலை முடிந்தது கிளம்பலாம் என்ற செய்தி, தான் யார் என்பதை உணரவைத்தது. ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, தன் சகோதர்ர்களுடன், சரயு ந்திக்குச் சென்று நதியில் இறங்க ஆரம்பித்தான்...கொஞ்சம் கொஞ்சமாக நீர் உயர்ந்து, அவர்கள் எல்லோரையும் உள்வாங்கிக்கொண்டது.

  இறைவன் அவதாரம் என்பதால் இதனை, தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினார் என்று குறிப்பிடுவர்.

  கரையில் நின்ற அயோத்திவாசிகள் அனைவரும், இராமன் மறைந்ததும் ஆகாயத்தில், சீதை, லக்ஷ்மண பரத சத்ருக்கனர்களோடு இறைவனாக்க் காட்சிகொடுத்து, தான் இறைவனின் அவதாரம் எனக் காட்டிக்கொடுத்தாராம்.

  இராமர் சரயு ந்தியில் இறங்கிய இடம் குப்தார் gகாட் என அழைக்கப்படுகிறது. அங்கும் சென்றிருக்கிறேன், படங்கள் (அந்த இடத்தை) எடுத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ///ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, தன் சகோதர்ர்களுடன், சரயு ந்திக்குச் சென்று நதியில் இறங்க ஆரம்பித்தான்...///
   இங்கினதானே எனக்கு டவுட்டே வருது? எதற்காக இறங்க ஆரம்பித்தார்? தன் உயிரை மாய்க்கத்தானே? அப்போ அது தற்கொலை முயற்சி இல்லையோ?:).. ஹையோ ஆண்டவா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:)..

   எனக்கு இவ்ளோ காலமும் சீதை எப்படி மறைந்தா என்பது தெரியும், ஆனா ராமர் எப்படி மறைந்தார் எனத் தெரியாது, அதுபற்றி யோசிக்கவுமில்லை, இந்த மீம்ஸ் பார்த்ததும் என் சிந்தனை தூண்டப்பட்டு விட்டது...

   இப்படி அலசுவதால் எந்தத் தப்புமில்லைத்தானே, எனக்கிது நல்ல முசுப்பாத்தியாக்கிடக்கூஊஊஉ ஹா ஹா ஹா...

   //இராமர் சரயு ந்தியில் இறங்கிய இடம் குப்தார் gகாட் என அழைக்கப்படுகிறது. அங்கும் சென்றிருக்கிறேன், படங்கள் (அந்த இடத்தை) எடுத்திருக்கிறேன்.// ஆஆ படங்கள் போட்டிருக்கிறீங்களோ இதுவரை? இல்லை எனில் இனிமேல் எதிர்பார்க்கிறேன்.

   Delete
 10. நீங்கள் எழுதியிருப்பதை எங்கோ படித்திருக்கிறேன், ஆனால் வால்மீகி இராமாயணத்தில் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ஓ அதுதானே நாங்களும் படித்ததெல்லாம் வால்மீகிதான்... கீரைக் கடைக்கும் எதிர்க்கடைபோல, பஞ்சாங்கத்திலும் இரு வேறுபாடு, அர்த்தமுள்ள இந்துமதத்துக்கும்.. அர்த்தமற்ற இந்துமதம் என ஒருபுக்... இப்போ இதுவுமோ.... அப்போ அதிராவுக்கு நிறைய விசயம் இருக்குது அலசி ஆராய ஹா ஹா ஹா..

   Delete
 11. கோவில்பட்டில கடலைமிட்டாய் ஃபேக்டரிகள் நிறைய இருக்குது.

  முருகன் கோவில் இருக்கான்னு தெரியலையே. அதுசரி.. வைரவேல் காணிக்கை கொடுத்தாச்சா?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அது வந்து முருகன் அப்பப்ப இடம் மாறுவாராக்கும்.. எனக்கும் தெரியல்லியே கோவில்பட்டி ஹா ஹா ஹா..

   அது வைரவேல் குடுக்க மாட்டேன் என்றா ஜொள்றேன்:).. தேம்ஸ்கரை ஆச்சிரமத்தில வச்ச உண்டியல் நிரம்பட்டும் குடுத்திடுவேன்:))

   Delete
 12. பொன்னியிலன் செல்வன் .... இந்தப் புத்தகம் யார் எழுதியது? கேள்விப்பட்டதே இல்லையே?

  கம்பராமாயணம் கரைச்சுக் குடிப்பதுனா என்ன? புத்தகம் படித்தபின் மனதில் தங்க, வெந்நீரில் புத்தகத்தைக் கரைத்து, ருசிக்கு ஜீனி சேர்த்து அப்படியே குடிக்கணுமா?

  ReplyDelete
  Replies
  1. //பொன்னியிலன் செல்வன் .... இந்தப் புத்தகம் யார் எழுதியது? கேள்விப்பட்டதே இல்லையே?///

   இதென்ன இது புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊ:))

   https://media.gettyimages.com/id/975467808/photo/a-cat-running.jpg?s=612x612&w=gi&k=20&c=0u5enTA_tOLHsSuljsb1mJtb-fFU0Pyt9LxGCyRT7g8=

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கம்பவாரிசைப் பார்த்து இப்பூடி ஒரு கிளவி.. ஹையோ மறுபடியும் டங்கு ஸ்லிப்பாகுதே...:) கேய்ள்வி:) கேய்க்க எப்பூடித் தைரியம் வந்துது உங்களுக்கு, படிக்காமல் விடமாட்டேன்ன்ன் ஆனா என்னமோ மனதில நிற்குதில்லை அது, 2 பக்கம் வாசித்தபின் முதல் பக்கப் பெயர்கள் குழம்பிப்போயிடுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா..

   மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 13. நல்ல சந்தேகம் உங்களுக்கு... சில சந்தேகங்கள் தேவையற்றது.

  சரயு நதி...... சராயு அல்ல. சரயு நதி அயோத்யா நகரில் இருக்கிறது. நானும் அந்த நதியையும் அயோத்யா நகரையும் பார்த்து இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

   ஹா ஹா ஹா அது சந்தேகம் எல்லாம் இல்லை, சந்தேகப்பட்டால்கூட சரித்திரம் மாறிடுமோ:).. இப்படி எல்லாம் யோசிப்பதும் நல்ல முசுப்பாத்தியாக இருக்கு அவ்ளோதான்..

   ஓ நீங்களும் பார்த்திட்டீங்கள்... நானும் எப்படியாவது பார்க்கோணும் பார்ப்போம்.

   Delete
  2. வணக்கம் அதிராசகோதரி

   "முசுப்பாத்தி" என்றால்..? இந்த வயலில் எல்லாம் ஆற்று நீர், வாய்கால் நீரரெல்லாம் பாத்தி வைத்து கட்டுவார்களே..!! அதுபோல் நதியில் வரும் நீரை வைத்து கட்டுவதா? :))) வேறு ஒன்றுமில்லை. தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. ஹா ஹா ஹா வாங்கோ கமலாக்கா வாங்கோ, எனக்கும் அடிக்கடி வாயில வரும் சொல் "முசுப்பாத்தி", அது எங்கள் ஊர்ச் சொல் வழக்கு, பாத்திக்கும் முசுப்பாத்திக்கும் ..ஜஜஜஜம்பந்தமே இல்லையாக்கும்...
   இது முசுப்பாத்தி எனில் ஒரு கிளுகிளுப்பான ஜாலியான நல்ல நகைச்சுவையான... இப்படி சந்தர்ப்பத்துக்கேற்ப பேசுவோம்.

   "இன்று காலை எங்கட வீட்டில ஒரு முசுப்பாத்தி நடந்தது தெரியுமோ?..---- இப்படிச் சொன்னால்... எல்லோரும் ஆவலாக ஆஆஆஆஆ அதென்னது எனக் கேட்போம், ஏனெனில் அது ஒரு நல்ல விசயமாக, நகைச்சுவையான.. இப்படி பயப்படத்தேவையில்லாத ஒரு சம்பவத்துக்கு சொல்லுவோம்...

   இப்போ இதுக்கு , அதென்னது எனக் கேட்டதுக்குப் பதில்----- கண்ணாடியைத் தலையில வைத்துக் கொண்டு வீடெல்லாம் தேடி முடிவிலதான் கண்டு பிடிச்சேன்.... இப்படியான விசயங்களாக இருக்கும்....

   ஹா ஹா ஹா புரிஞ்சுதோ குழம்பிட்டுதோ:)

   Delete
 14. சரயு நதியை நானும் கண்டிருக்கிறேன். படமெடுத்து பதிவும் போட்டிருக்கிறேன். வெங்கட் பலமுறை பார்த்திருக்கிறார். கீதா அக்கா உட்பட இன்னும் நெல்லை, பானு அக்கா எல்லோருமே பார்த்திருப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... ஓ பலபேர் இங்கு பார்த்திருக்கிறீங்கள், அயோத்தி காசிக்கு கிட்டத்தானே இருக்கிறதாம்... எப்படியும் பார்த்திடுவேன் நானும்.

   Delete
 15. கம்பரை வம்பர் ஆக்கி விட்டீர்களே.. எனக்கொரு டவுட்டு.. கம்பர் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று சொல்லி இருக்கிறார்கள். கம்பர் பாடிய கவிதைகளை படித்திருக்கிறோம். அந்தக் கட்டுத்தறி பாடிய கவிதையை ஏன் யாருமே படிக்கவில்லை? கம்பர் பொறாமையில் வெளியிடவில்லையா? அல்லது அம்பிகாபதி லாவிக்கொண்டுபோய் அமராவதியிடம் கொடுத்து விட்டாரா?

  ReplyDelete
  Replies
  1. கட்டுத்தறி கவி பாடத்தானே செய்யும். எழுதித் தரும்னா சொல்லியிருக்காங்க? அப்படிப் பாடும்போது வேற யாரும் எழுதியிருக்க மாட்டாங்க, அல்லது யாரும் இல்லாதபோது கவிதை பாடிப்பார்க்கும் போலிருக்கு கம்பன் வீட்டு அந்தக் கட்டுத்தறி.

   Delete
  2. ///ஸ்ரீராம்.Monday, May 29, 2023 1:06:00 am
   கம்பரை வம்பர் ஆக்கி விட்டீர்களே.. எனக்கொரு டவுட்டு..///
   அடக் கடவுளே ஹா ஹா ஹா தும்மல் இருமல் மாதிரி இதுவும் ஒரு தொத்து வியாதியாக இருக்குமோ?:).. டவுட்டைச் சொன்னேன்:))..

   இன்னும் ஆருக்கெல்லாம் டவுட்டு வரப்போகுதோ ஹா ஹா ஹா.. அதுசரி கட்டுத்தறி என்கிறீங்க.. கைத்தறி இல்லையா???? இரண்டும் வெவ்வேறோ? நான் கம்பன் வீட்டுக் கைத்தறியும் எனத்தானே நினைச்சிருந்தேன்.. ஓ மை கடவுளே:)).. சரி அது போகட்டும் கம்பந் கட்டுத்தறி ஓகே, அதென்ன அம்பிகாவதி யை சம்பந்தப்படுத்துறீங்கள்???? நிறையப் புதையல்கள் இருக்குது போலும்:))...

   ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால், அவரும் சராயு நதியிலே இறங்கிடலாமோ இங்கிருப்பதைவிட என யோசிப்பாரென நினைக்கிறேன்:))

   Delete
 16. அடுத்து என்ன பதிவு கிருஷ்ண பரமாத்மா கொலை வழக்கா? இதுவரை யார் அவரைக் கொலை செய்தது என்று யாருமே சரியாகச் சொல்லவில்லை. அவருக்கு என்ன தண்டனை என்றும் சொல்லவில்லை என்று ஒரு பதிவு வருமோ?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா சே..சே..சே மீ ரொம்ப பயந்த பொண்ணாக்கும்:)).. துப்பறியும் வேலைக்கெல்லாம் போக மாட்டேன்:)).. நான் எப்போ, என்ன எழுதுவேன் என எனக்கே தெரியாதே:))

   Delete
 17. பரவாயில்லை முன்னர் பதிவிட்ட பாணி மாறாமல் பதிவிட்டிருக்கிறீர்கள். உண்மையைச் சொல்லுங்கள்.. பழைய பதிவுகளை சென்று படித்து வந்தீர்கள்தானே?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நன்றி ஸ்ரீராம் நன்றி... கரெக்டாக் கண்டு பிடிச்சீங்கள், பழைய ப்போஸ்ட் ஒன்றை எடுத்துப் பார்த்தேன், எனக்கு போஸ்ட் போட்டதில் எல்லாம் நினைவிலிருந்தது, ஆனால் அந்த இடைவேளையை மட்டும் மறந்துவிட்டிருந்தேன், அதை உடனே இணைத்தேன். மிக்க நன்றிகள்.

   Delete
 18. எங்கே பிடித்தீர்கள் இந்தப் புதுக்கரடியை? பா ஜ உள்ள வரை ராமர் உயிருடன் இருப்பார். சந்தேகம் வேண்டாம்.

  கூடிய சீக்கிரம் உயிருடன் ஸ்ரீ கிருஷ்ணனும் வரப்போகிறார். .
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ ஜே கே ஐயா வாங்கோ வாங்கோ நலம்தானே, மறக்காமல் வந்திருக்கிறீங்கள் நன்றி.

   ஹா ஹா ஹா கரடி சிங்கம் புலி எல்லாம் அப்பப்ப எட்டிப்பார்க்கும் என்னுள்ளே, எழுத ஏதும் மனதில் தோன்றினால், உடனே எழுதுவேன்.. எல்லாம் ஒரு ஜாலிக்காகத்தான், இருக்கும்வரை சிரித்துப் பேசி மகிழ்வாக இருப்போமே எனத்தான் நினைப்பேன்.
   மிக்க நன்றி.

   Delete
 19. நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியைப் பார்த்துதான் கண்ணதாசன் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே என்று பாடி இருக்கிறாரோ...

  ஓய் கம்பனுக்கும் தெரியலே கன்னி உந்தன் கூந்தலில் அம்பிகையை அளக்கலை அம்பிகாபதி நானில்லேன்னு ஒரு பாடல் வரும் அது என்ன பாடல் என்று தெரியுயுமா?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா, பூ என்றால் எப்பவும் மென்மையாகத்தான் இருக்குமென்றில்லையாமே:).. "பூவும் புயலை எதிர்த்து நிற்கும்" எனவும் வருது தெரியுமோ:))

   நீங்கள் சொன்ன பாடல் தெரியவில்லை ஸ்ரீராம், யூரியூப்பில் தேடினேன், அது கன்னியை மட்டும் எடுத்து, அச்சொல் உள்ள பாடல்களைக் காட்டுது:)..

   Delete
 20. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. ராமாயணத்தை கைகளில் எடுத்து நன்கு அலசி (சராயு நதியில்) விட்டீர்கள்.

  /ஆனா, இது தற்கொலைக்குச் சமனாகிடும் என்பதால, கம்பன் அங்கிள் இதை நம்மிடம் மறைத்து, கதையை முன்கூட்டியே முடிச்சுப் போட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இப்போ சொல்லுங்கோ, இந்த மரணத்தை எப்பூடி அழைப்பது/

  ஹா ஹா ஹா. இப்படி ஒரு நியாமான கிளவி (கேள்வி.) (ஆகா.... உங்கள் பதிவை படித்ததும் எனக்கும் எழுதும் போது தற்செயலாக வார்த்தைப் பிழைகள் வந்து விட்டது. மன்னிக்கவும். ஹா ஹா ஹா ) கேட்பது முறைதான்.

  கதையை மிக சுவாரஸ்யமாக கலகலப்புடன் எழுதி இருக்கிறீர்கள். இன்னமும் இரண்டு (அதற்கும் மேலே) தடவைகள் படித்து விட்டு பிறகு வருகிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா, சந்தேகம் வந்திட்டால் கேட்டுத் தெளிவடைஞ்சிடோணும் என எங்கட அம்மம்மா சொல்லித் தந்திருக்கிறாவாக்கும்:).

   //நன்கு அலசி (சராயு நதியில்) விட்டீர்கள்.//
   ஹா ஹா ஹா இதுபற்றிப் பேச வெளிக்கிட்டமையாலதான் எனக்கு சராயு என்றொரு நதி இருப்பதும் தெரிய வந்திருக்குது, அதேநேரம், அயோத்திக்குப் போய் அந்நதியைத்தொட்டுப் பார்க்கோணும் எனும் ஆவலும் புயலாக வீசுது எனக்குள்...:).

   உங்களுக்கும் அதிரா பக்கம் வந்ததும் டங்கு ஸ்லிப்பாகுதே:))..

   மிக்க நன்றிகள் கமலாக்கா..

   Delete
 21. நீங்கள் உங்கள் ஊரிலேயே (ஸ்கொட்லாந்து) புகார் கொடுக்கலாமே... அதிரா

  உடனே கண்டு பிடித்து ஜொள்"ளு விடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

   ஹா ஹா ஹா ஒரு டவுட்டுக் கேட்கப் போனதுக்காக புகார் குடுத்து என்னக் கம்பி எண்ண வைக்கப்பார்க்கிறீங்களே இது நீதியோ?:) நியாயமோ?:)), அந்த ஊரணி அம்மனுக்கே பொறுக்குமோ:)).

   மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 22. Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ..

   ஹா ஹா ஹா நான் சொன்னது "கதை" தான்:).
   மிக்க நன்றி.

   Delete
 23. பாடல் பகிர்வு அருமை, கேட்டேன். சரத்பாபுவின் சிரிப்பைபற்றிதான் அவர் இறந்த பின் எல்லோரும் பேசி கொண்டு இருக்கிறார்கள். இதில் அவர் சிரிப்பை பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ, பாட்டை இணைத்தபின்னர்தான் பார்த்தேன் சரத்பாபு அங்கிளும் இருக்கிறார், எனக்கு மிகமிகப் பிடிச்சவர்களில் அவரும் ஒருவர், அவர் இல்லாமல் போனதை அறிஞ்சு கவலைப்பட்டேன்.. அவர் சிரிப்பது பேசுவது எல்லாமே சூப்பர், மொத்தத்தில் அவர் ஒரு ஹார்ஸ் இல்லாத மென்மையான நடிகர் எனத்தான் நான் நினைப்பேன்...

   முள்ளும் மலரும் படத்தில் அவர் ஜீப் ஓட்டும்போது ஒரு பாட்டு வருமே..
   "செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா..", அப்பாடலை ஆயிரம் தடவைகளுக்கு மேல் கேட்டிருப்பேன், இன்றும் , பூஸ்:) ரேடியோவில் போய்ச்சுது அப்பாடல்..

   Delete
  2. சரத்பாபுவின் இறப்பு அஞ்சலி பதிவுகளில் அவர் நடித்த முள்ளும் மலரும் ஜீப் பாடல் பற்றிதான் பேச்சு.
   குடும்பத்தினரை பாதுகாத்து இருக்கார். அனைவருக்கும் உதவி கொண்டு.
   நல்ல மனிதர் தான்.

   Delete
  3. உண்மைதான் கோமதி அக்கா. எனக்கு மனம் பொறுக்காமல், முன்பு ஒருதடவை பார்த்த படத்தை மீண்டும் நேற்றுப் பார்த்தேன்.."நிழல் நிஜமாகிறது"...

   Delete
  4. நான் போன வாரம் 'நம்மவர்' படமும், நேற்று 'இந்திரன் சந்திரனு'ம் பார்த்தேன்!

   Delete
  5. ஓ இவற்றிலும் சரத்பாபு அங்கிள் நடிக்கிறாரோ.. இல்லை பழைய படங்கள் என்பதால பார்த்தீங்களோ தெரியவில்லை,, இவை இரண்டும் இதுவரை பார்த்ததில்லை., நானும் பார்க்கப்போகிறேன் இவற்றை.. எனக்கு புதுப்படங்கள் பார்ப்பதைவிட, பழசுகள் தேடிப் பார்ப்பதுதான் பிடிக்கிறது... போனவாரம் அழகன் பார்த்து முடிச்சேன், சூப்பராக இருந்தது, ரிவியூ எழுதலாமோ என நினைச்சு.. அடிப்பினம் எல்லோரும் என விட்டிட்டேன் ஹா ஹா ஹா.. பிரபுதேவாவின் சில படங்களும் முன்பு பார்க்காதது தேடிப்பார்த்தேன் நன்றாக இருந்தது.

   Delete
 24. கம்ப வாரிசு என்று பேர் வைத்து கொண்டு இப்படி எல்லாம் இராமாயண கேள்விகள் கேட்கலாமா?
  இப்போது வெங்கட், நெல்லைத் தமிழன், ஸ்ரீராம் எல்லாம் சரயு நதி பார்த்து வந்தார்கள். நெல்லை நீராடி வந்தார்.

  ReplyDelete
  Replies
  1. நானும் நீராடினேன் கோமதி அக்கா...

   Delete
  2. ஓ, சரி சரி ஸ்ரீராம். நல்லது யாரோ நீராடவில்லை என்று படித்தேன்.

   Delete
  3. அது கோமதி அக்கா, கம்பவாரிசாக இருந்து கேட்டால்தான் ஆரும் அடிக்க வரமாட்டினம்:), வெளி ஆளாக இருந்து கேட்டால் அடிக்கக் கலைப்பினம் தெரியுமோஒ.. இதெல்லாம் ஒரு தெக்கினிக்கி ஹா ஹா ஹா:)..

   மேலே எல்லோரும் சொல்லியிருக்கினம் கோமதி அக்கா, அந்த லிஸ்டில விரைவில் நானும் தொட்டிட்டாவது வரப்போறேன் சரயுவை:))

   Delete
 25. ஊசிக்குறிப்பு படித்தேன். உங்களை எழுத தூண்டியது தமிழிசை மீம்ஸா?
  சரி சரி.

  ReplyDelete
  Replies
  1. அந்த மீம்ஸ் பார்த்தவுடன்தான் இப்போஸ்ட்டை ஒரு கொமெடியாக எழுதலாமே எனும் எண்ணம் வந்தது கோமதி அக்கா... மிக்க நன்றி.

   Delete
  2. நீங்கள் பகிர்ந்த கதை நிறைய பத்திரிக்கை செய்திகளில் ஆன்மீக கேள்வி பதில்களில் வருகிறது. புராண்ங்களை ஆராய்ந்தால் நிறைய கேள்விகள் வரும் மனதில். நல்லதை மட்டும் எடுத்து கொண்டு வணங்கி விட்டு போக வேண்டும். இப்போது எதையாவது எடுத்து கொண்டு வாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

   Delete
  3. எனக்கு வாதம் செய்வதெல்லாம் பிடிக்காது கோமதி அக்கா, இது சும்மா ஒரு வித்தியாசமாக அமளிப்படத்தான் ஆசை:))

   Delete
 26. வணக்கம் அதிரா சகோதரி

  சிறிது இடைவெளிக்குப் பின் வந்த தங்கள் பதிவுதான் அருமையென்றால், முகப்பு பாடல் எப்போதும் அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  பாட்டின் முதல் வரியை
  "கம்பன் ஏன் மாய்ந்தான்" என்றுதான் நான் விளையாட்டாய் முதலில் மாற்றி பாடுவேன். :))) இப்போது தங்களின் அடுத்த ஆராய்ச்சிக்கு காத்திருக்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பாடலில், பெண்களை நன்றாக வாரியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். அதன் அர்த்தங்களையும் தெரியாமல், அதிரா, பெண் குலத்துக்கான பாராட்டு என்று நினைத்துக்கொண்டு இங்க பகிர்ந்திருக்கிறார். கமலா ஹரிஹரன் மேடத்திற்கும் அப்போது, அந்தப் பாடலின் அர்த்தம் தெரிந்திருந்ததா?

   Delete
  2. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

   ஹா ஹா ஹா
   /இந்தப் பாடலில், பெண்களை நன்றாக வாரியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்./

   தெரியும். புரியும்
   "ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே.. ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்.... "
   என்ற வரிகள் கூட ஆணாதிக்க வரிகள்தானே..! அந்த நேரத்தில் (பாட்டு எழுதும் அந்த நேரத்தில்) கவிஞருக்கு என்ன காழ்ப்புணர்ச்சியோ கவிஞருக்கு. அந்த பாட்டு முழுக்க இரு பொருள்பட்ட வரிகள்தான்.

   நான் அப்போது ரசித்தது எஸ்பிபி யின் குரல் வளம். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. பிழை திருத்தம்..

   "கவிஞருக்கு என்ன காழ்ப்புணர்ச்சியோ பெண்களின் மேல் "என வந்திருக்க வேண்டும்.

   Delete
  4. அந்த படத்திற்கு ஏற்றார் போல பாடல் எழுதி தரச்சொல்லி பாலசந்தர் கேட்டு இருப்பார் கண்ணதாசன் எழுதி கொடுத்து இருப்பார்.
   நாயகன், நாயகி குணத்திற்கு ஏற்றார் போல பாடல் அது.

   Delete
  5. கமலாக்கா, பதிவு பாடல் அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றி. நான் எப்பவும் பாட்டுத் தேடிப்போடுவேன், ஆனா இம்முறை கம்பராமாயணப் போஸ்ட் எழுதப்போகிறேன் என்றதும் இப்பாடல் மனதில் தோன்றி விட்டது, எனக்கும் மிகவும் பிடிக்கும் அதனால போட்டேன்..

   ///"கம்பன் ஏன் மாய்ந்தான்///
   ஆஆஆஆஆ இது நல்லாயிருக்குதே.. மிக்க நன்றி.

   Delete
  6. நெல்லைத்தமிழன்..//
   கண்ணதாசன் அங்கிளின் படுபயங்கர:) தீவிர ரசிகை நான், அவர் என்ன எழுதினாலும் ரசிப்பேன் ஹா ஹா ஹா... இது பெண்களை மறைமுகமாகப் பாராட்டியிருக்கிறார் தெரியுமோ:))..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா எப்பூடியெல்லாம் கண்ணதாசன் அங்கிளைக் காப்பாற்ற வேண்டிக்கிடக்கே:))

   Delete
 27. ஹாஹாஹா அதிரா ஹைஃபைவ்! எனக்கும் இந்த டவுட்டு எல்லாம் வந்ததுண்டு! ஆனால் பாருங்கோ புராணங்களில் கேள்விகள் கேட்கக் கூடாதாக்கும்! அதில் மறைமுகமாகச் சொல்லப்படும் சில நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை அப்படித் தள்ளி வைத்துவிட வேண்டும்!!!!!

  இந்தக் கதை கேட்டிருக்கிறேன் ஆனா இடையில கொஞ்சம் புச்சா இருக்கே...ரெண்டு மூன்று கலந்துகட்டி அடிச்ச கதை போல இருக்கு!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ..

   எனக்கு முன்பெல்லாம் இந்த டவுட் இல்லை, ஏனெனில் ராமர் மறையவில்லை என்பதைப்போலத்தான் என் மனதில் இருந்தது, ஆனா இந்த மீம்ஸ் பார்த்ததும் தான் ஆராட்சி ஆரம்பித்தேன்:))...

   அது உண்மைதான் கீதா, புராண இதிகாசங்கள் விரும்புவோர், ஆர்வமுள்ளோர் படிக்கவேண்டியதுதான், ஆனா இப்படி டவுட் கேட்பதும் ஒரு ஜாலிதானே, கேள்வி கேட்பதால் சரித்திரம் மாறிடுமோ என்ன?:).. அதனால எனக்கு இனிமேலும் கிளவிகள் சே சே கேள்விகள் வரலாம்.. ஆனா அது எதுக்கு எப்போ எண்டெல்லாம் எனக்கே தெரியாது ஹா ஹா ஹா..

   ஒரு விசயத்தைப் பத்துப்பேர் சொல்லும்போது, பத்துவிதமாகத்தானே கதை வரும்.. ஒவ்வொருவரின் பிரசங்கங்கள் கேட்கும்போதும் எனக்கு இப்படித் தோன்றும்:)

   Delete
 28. பூசார் படம் மன்னிப்பு கேக்குது போல இருக்கே....ஹையோ தெரியாம இப்படி ஒருகேள்விய இங்கின கேட்டுவிட்டேனே...இனி புராணங்கள்ல டவுட் வந்தா கூட கப்சிப்புனு இருப்பேண்....ப்ராமிஸ்! என்னை மன்னிச்சுடுங்கோ ராமா என்று!!!!!!!!!!!!!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ம்ஹூம் இன்னும் லிஸ்ட் பெரிசா கையினுள் வச்சிருக்கு பூஸ் .சாமீ அடுத்தது ஐம்பெரும் காப்பியமா இல்லை ஐஞ்சிறு காப்பியமான்னு தெரில அலெர்ட்டா இருங்க மக்களே 

   Delete
  2. ஆவ்வ்வ்வ் கீதா, என்னை உங்களுக்கு இன்னும் சரியாத் தெரியேல்லை:))).. நான் இன்னும் கரைச்சுக் குடிக்க நிறைய இருக்குதாக்கும் அதனால அஞ்சு சொன்னதைப்போல லிஸ்ட்டுகள் இன்னும் நீளும், ஆனா ஆராவது அடிக்க வந்தால்தான், கால்ல விழுந்து புரண்டு தப்பி ஓடிடுவேன் ஹா ஹா ஹா...

   ஆஆ அஞ்சு எடுத்துத் தந்திட்டீங்க, அடுத்து அம்பெரும் காப்பியைக் கையில எடுத்திட வேண்டியதுதான், தீட்டத்தீட்டத்தான் தங்கம் மிளிரும் என்பதைப்போல, டவுட்டுக்கள்,கேள்விகள் கேட்கக் கேட்கத்தான் இன்னுமெவ்ளோ விசயங்கள் தெரியாதனவெல்லாம் தெரிய வருதே...

   Delete
  3. ஹாஹாஹாஹா ஏஞ்சல்!!!!!!

   கேள்விகள் கேளுங்க பூஸாரே ஆனா ஜாக்கிரதையா கேளுங்க!

   கீதா

   Delete
  4. //கேள்விகள் கேளுங்க பூஸாரே ஆனா ஜாக்கிரதையா கேளுங்க!
   //

   ஹா ஹா ஹா கீதா, நான் குல்ட்க்குள் ஒளிச்சிருந்துதான் கேட்பேன்:))

   Delete
 29. ராமாயணமே படிச்சிட்டில்லை இதுல பொன்னியின் செல்வனும் படிச்சிட்டீங்களோன்னு கேட்கணுமா...

  சீரியஸ்லி, அதிரா புராணங்கள்ல வாசிச்சு இப்படி எல்லாம் டவுட் வரலாமோ...ஏனென்றால் அதுஒவ்வொரு காலகட்டத்திலும் பலரும் பல interpretations கொடுத்து தங்கள் இஷ்டத்துக்குக் கதை விட்டிருப்பாங்க...

  23 ஆம் புலிகேசியில் ஒரு டயலாக் வரும் நினைவிருக்கா...வடிவேலு தான் வீரமான மன்னன் என்பது போல் வரையச் சொல்லும் போது அமைச்சர்
  கேட்பார் மன்னா ஏன் இப்படி என்று
  வடிவேலு சொல்வார்....வரலாறு முக்கியம் அமைச்சரே....பல வருஷங்களுக்குப் பிறகு இதனை பார்க்கப் போறவங்களுக்கு யாருக்குத் தெரியப் போகுது?!!!! இதுதானே பலதுக்கும் பொருந்தும். இப்படி மருவி மருவி வருவதுதான்.

  கம்பன் ஏமாந்தான் பாட்டு ரொம்பப் பிடித்த பாட்டு. இசைக்காக...ஓ கம்பனின் வாரிசு நீங்க இந்த டவுட் வந்து ஏமாந்திட்டீங்களோ!!!!

  பை த வே சராயு அல்ல சரயு! - நம்ம வெங்கட்ஜி, நெல்லை, ஸ்ரீராம், கீதாக்கா, துளசிக்கா எல்லாரும் பாத்திருக்காங்க.

  சரி நீங்க அவ்வளவு தூரம் இந்தியா வந்திட்டு இதைப் பார்க்காம போயிட்டீங்களா..கங்கையும் பார்க்கலையோ?!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அது உண்மைதான் கீதா, கதைகள் எப்பவும் புதுசுபுதுசா ஒவ்வொருவரும் தமக்குத் தெரிஞ்ச பாணியில் எடுத்துவிடுகிறார்கள், ஆனா அதனால எழும் டவுட்டைக் கேட்காமல் இருக்கலாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..

   ஓ உங்களுக்கும் ப்பிடித்த பாடலோ மகிழ்ச்சி...

   ஓமோம் நதியின் பெயரை மேலேயும் எல்லோரும் சொல்லியிருக்கினம், நான் தான் இன்னமும் மாற்றவில்லை.

   கீதா நாங்க ஹரித்வார் போய்க் கங்கையில 9 தடவை முக்கி மூழ்கி எழும்பி.. பாதி ஞானியாகிட்டேன்:), ஜமுனையையும் பார்த்திட்டேன், அடுத்து சரஸ்வது பார்க்கோணும் பின்பு சராயு பார்க்கோணும்... பார்த்திடுவேன் எப்படியும்...

   மிக்க நன்றிகள் கீதா.

   Delete
  2. அதான் நீங்க கங்கைக்கும் போனதாக அறிந்தேனே....யுட்யூபில்? எப்படியோ தெரிந்ததே.....அப்ப யமுனா பாத்திருப்பீங்க...சரஸ்வதி சிறிய தூரம் பாய்ந்து பூமிக்கடியில் மறைந்து பின்னர் சங்கமத்தில்தான் என்று. வீடியோக்கல் யுட்யூபில் இருக்கு, கங்கைக்குப் போனீங்களே அங்க மூன்று நதியும் சங்கமிக்கும் இடம் உண்டு. நம்ம வெங்கஜி, நெல்லை, ஸ்ரீராம் கீதாக்கா எல்லாரும் போயிருக்காங்க.

   சரயுவும் பார்த்துவிடலாம்...

   கங்கையில் முங்கி ஞானியாகிட்டீங்க அப்ப இனி கங்கையதிராநந்தாவா, கங்கைபூஸாநந்தாவா!!!!??

   கீதா

   Delete
  3. கங்கையில் ஒம்பேதூஊஉ தடவை மூழ்கி, மூச்சடைச்சு மண் எல்லாம் தலைக்குள் போய் எழும்பி ஹா ஹா ஹா.. உண்மையாத்தான்.. ஆனா பாதி ஞானியாகிட்டேன்ன்.. இனிக் காசிக்குப் போனால் முழு ஞானியாகிடுவேன்... ஆனா காசிக்குப் போகும்போது அஞ்சுவையும் கூட்டிப் போகோணும்ம்:))
   ஊ.கு: நமக்குப் பிடிச்ச ஒன்றை அங்கு விட்டுப்போட்டு வரோணுமாமே ஹா ஹா ஹா...

   Delete
 30. கம்பன் ஏமாந்தான் எனக்கும் பிடிச்ச பாட்டு :) என்னருந்தாலும் கமல் அங்கிள் கமல் அங்கிள்தான் 

  ReplyDelete
  Replies
  1. இதில சரத்பாபு அங்கிளும் வாறார் அஞ்சு..

   Delete
 31. எனக்கு கம்ப ராமாயணம் தெரியாது .இவ்ளோ ஏன் பைபிளில்  கூட முழுதா தெரியாது.அதனால் உங்க கிளவிக்கு ஆன்றோர் சான்றோர் பதில் தரட்டும் :) யாம் எறும்பினும் சிறியோள் .ஆனாலும் சில நீ குழாய்  சானல்களை இந்த போஸ்ட் கிடைச்சா அவ்ளோதான் :) எதுக்கும் உஷாரா இருங்க :) 

  ReplyDelete
  Replies
  1. ///எனக்கு கம்ப ராமாயணம் தெரியாது///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னிடம் கேட்டிருந்தால் கிளாஸ் எடுத்திருப்பேனெல்லோ:))..

   அல்லோ நான் சொன்னனே எனக்கு எடிரி வீட்டுக்குள்ளேயேதான்:)..

   //ஆனாலும் சில நீ குழாய் சானல்களை இந்த போஸ்ட் கிடைச்சா அவ்ளோதான் :) எதுக்கும் உஷாரா இருங்க :) ///

   ஏன் இன்னமும், ஆரும் அதிராவுடன் சண்டைக்கு வரவில்லை எனத்தானே கவலையாக இருக்கு உங்களுக்கு:)), ... இதோஓ வாறேன்ன்ன் இண்டைக்குத் தேம்ஸ்ல தள்ளாமல் நித்திரைக்குப் போக மாட்டேன்.. இது அந்த றோஸ்.. சே..சே... கர்ர் டங்கு ஸ்லிப்பாகுதே:).. றேஸ் ஆனை மீது ஜத்தியம்ம்ம்ம்ம்ம்:))

   Delete
 32. சீதாப்பிராட்டி மறைஞ்சபோதுகூட, அசையாத ராமர், தன் தம்பியின் பிரிவு தாங்காமல் , தன்னை மாய்த்திட்டார்.//

  பாவம் சீதா பிராட்டி நம்மைப்போல் ஒரு ப்ரண்டு தோழியா இருந்திருந்தா நல்லது கெட்டது  சொல்லி கொடுத்திருப்பாங்க :) அதெப்படி தம்பிக்காக குதிக்கலாம் னு பிரளயமே நடந்திருக்கும் .அந்தக்காலத்தில் எவ்ளோ இன்னொசெண்டா இருந்திருக்காங்க லேடிஸ் .வியப்பா இருக்கு 

  ReplyDelete
  Replies
  1. ///பாவம் சீதா பிராட்டி நம்மைப்போல் ஒரு ப்ரண்டு தோழியா இருந்திருந்தா நல்லது கெட்டது சொல்லி கொடுத்திருப்பாங்க :)/// ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) காலை வாரியும் விட்டிருப்பாங்க:)..

   //அதெப்படி தம்பிக்காக குதிக்கலாம் னு பிரளயமே நடந்திருக்கும் ///

   இல்ல அஞ்சு, ராமர் இருக்கும்போதே அவ மறைஞ்சிட்டா, தன்னில சந்தேகப்பட்டிட்டார் அதனால இனி அவரோடு வாழ்வதில்லை எனக் காட்டில இருந்து மறைந்துவிட்டதாகத்தான் படித்தேன்.

   ஆனா அப்போதெல்லாம் பெண்ணடக்குமுறை ஓங்கி இருந்தகாலம்தானே.

   Delete
 33. ///எனக்குப் பாருங்கோ இந்த இடத்தில கெட்ட கோபம்தான் வருது, மனைவி பிள்ளைகளைக் காட்டில விட்டுப்போட்டு, இவர் தம்பியோடு அரசாழ்வதானால், எதுக்கு காதலிச்சுத் திருமணம் பண்ணினார்ர்?..///

  சுயம்வரத்தில் தானே அவங்க சந்திச்சது . இப்போ எனக்கிருக்கும் அரைகுறை அறிவும் எக்கசக்க டவுட்ஸ் வரவைக்குது உங்களால்  

  ReplyDelete
  Replies
  1. ஓம் அஞ்சு, நீங்க படிச்சதில்லையோ ராமாயணம்? பலபல சொற்பொழிவுகள் இருக்கு, ச்சும்மா கேட்டுப்பாருங்கோ நன்றாக இருக்கும்...

   Delete
  2. ஏஞ்சல் நீங்க வேற!!!! பூஸாரை ரொம்பவே கன்ஃப்யூஸ் பண்ணிட்டீங்க! ஹாஹாஹா ....அவங்க கம்பரின் வாரிசுன்னு சும்மாவா போட்டுக்கிட்டாங்க..

   அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" இதை வைச்சு அவங்க அப்பூடி நினைச்சுக்கிட்டு சொல்றாங்க!!!!!

   கீதா

   Delete
  3. ///அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" இதை வைச்சு அவங்க அப்பூடி நினைச்சுக்கிட்டு சொல்றாங்க!!!!!//

   ஹா ஹா ஹா கரெக்ட்டாக் கண்டுபிடிச்சிட்டீங்க கீதா, இதை வச்சுத்தான் , அது லவ் மரீஜ் என நான் நினைப்பதுண்டு.. கற்பனை பண்ணிப்பார்ப்பேன், ராமன் ரோட்டால வந்தாராம் சுயம்வரத்துக்காக, அப்போ ஆர் இந்த அழகன் என சீதை மேல்மாடி பல்கனியில் நின்று பார்த்தாவாம்... சூப்பர் காட்சி ஒன்று கண்ணில விரியுதெல்லோ.... ஹா ஹா ஹா

   Delete
 34. நீங்க கலக்குங்க பூஸார் :) சந்தேகம் வந்தா கேட்டு தெளிவாக்கிக்கணும் .அதுதான் நல்லது .அடுத்து என்னென்ன சந்தேகமோ தயங்காம கேளுங்க :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஏஞ்சல் சகோதரி.
   நலமாக இருக்கிறீர்களா? நீங்களும், சகோதரி அதிரா அவர்களும் வலைதளம் வந்ததும், தளத்திறகே புதுப் பொலிவு வந்தது போல அமர்க்களமாக இருக்கிறது. மனதிற்கு உற்சாகம் தரும் அதே கலாய்ப்புக்கள். அதே சிரிப்பு வெடிகள். தொடர்ந்து வாருங்கள். நன்றி. சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு..

   நன்றி கமலாக்கா.

   Delete
  3. மிக்க நன்றி கமலா அக்கா :) நீங்க எப்பவும் எங்க இருவரையும் மறக்காம சேர்த்து பாராட்டுறீங்க .நிச்சயம் பூசாரின் வாலை அடிக்கடி இழுத்து உங்களை சந்தோஷப்படுத்துவேன் :)

   Delete
  4. நீங்க கலக்குங்க பூஸார் :) சந்தேகம் வந்தா கேட்டு தெளிவாக்கிக்கணும் .அதுதான் நல்லது .அடுத்து என்னென்ன சந்தேகமோ தயங்காம கேளுங்க :)//

   ஹாஹாஹா அதானே ஏஞ்சல், நீங்க இருக்கறப்ப பூஸாரின் வால்....உங்க கையிலதான்

   கீதா

   Delete
  5. என் செக்:) எப்பவும் என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி அடி வாங்க வச்சிடுவா கீதா:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆனா அப்பப்ப கை கொடுத்துத் தூக்கி விடுறதும் அவதான், அதனாலதான் இன்னும் தேம்ஸ்ல தள்ளாமல் விட்டிருக்கிறேனாக்கும்.. ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு, கீதா.. மீள் வருகைகளுக்கு..

   Delete
 35. வித்தியாசமான நடையில் அருமையான விளக்கம். ரசித்துப் படித்தேன். நன்றி

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.