நல்வரவு_()_


Monday 22 May 2023

 அப்படி எதுவும் நடக்காது!! நடக்கவும் கூடாது!!!


ப்படி ஆரம்பிப்பேன் எங்கின ஆரம்பிப்பேன் ஒண்ணுமே பிரியல்ல உலகத்திலே:). ஹெட்ல இருந்து ரெயில் நுனி வரைக்கும் சுத்துது, ஆனாலும் விடக்கூடாது எப்படியாவது புளொக்கில் திரும்படியும் வாலெடுத்து சே சே  ... ஆரம்பமே டங்கு ஸ்லிப் ஆகுதே கர்ர்ர்ர்ர்ர்ர்:)... காலெடுத்து வைக்கிறேன்_/\_.

பலபேர் என்னை மறக்கும் நிலையில இருப்பீங்களெனத் தெரிஞ்சுதான், மறப்பதற்குள் ஓடி வந்திட்டேன்..

மறக்க முடியாதே.. மறக்கும் உருவமில்லை அதிரா:)).. ஹா ஹா ஹா என்னென்னமோ எல்லாம் எழுதத்தோணுது  அஅஅடக்கிடுறேன்.

இந்தமுறை பேர்த்டேக்கு லப்டொப் கிடைச்சுதா, அதில இனி புளொக் எழுத ஆரம்பிக்கோணும் என, இவ்ளோ காலமா, தமிழ் பொண்ட் டவுன்லோட் பண்ண நேரம் போதாமலும், பலதை மறந்த காரணத்தாலும் நாட்கள் நகர்ந்து விட்டது.

என்னையும் அஞ்சுவையும் தேடி, கூப்பிட்டு அலுத்துப் போய்க் கை விட்டிருப்பீங்கள், கோமதி அக்கா சமீபத்தில தேடி மெயில் போட்டா, அப்பவே வந்திடலாம் என அஞ்சுவை முன்னால போங்கோ மீ பின்னால வாறேன் எனச் சொன்னேன், அஞ்சுவும் சொன்ன பேச்சுக்கு ஓடினா, ஆனா என்னிடம் தமிழ் பொண்ட் செட் பண்ணாததால், எனக்கு கொப்பி பேஸ்ட் எல்லாம் பிடிக்காத காரணத்தாலும்.. அத்துடன், வந்தால் கொஞ்சம் பேசோணும் எல்லோருடனும் எனும் காரணமாகவும், எல்லாம் செட் பண்ணி வரக் கொஞ்சம் லேட்டாயிடுத்து:) அது டப்பா கீசாக்கா?.   

பொதுவா, கொமெண்ட் இல் தேடுவோருக்குப் பதிலாவது போட்டிடுவேன், விட்டு விட்டு இரு தடவைகள் கில்லர்ஜி தேடினார், பதில் போட முடியாமல் போயிட்டுது, மன்னிச்சுக்கோங்கோ கில்லர்ஜி.

இதுக்கு மேல நான் என்ன பேசுறது எனத் தெரியேல்லை, இது வெள்ளோட்டம்தானே அதனால அப்படி இப்படித்தான் இருக்கும்.. இனிமேல்தான் ஒழுங்கா எல்லாம் செட் பண்ணோணும்.

58 comments :

 1. Welcome miyaaw madam 😸😺😺😺😺

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ வாங்கோ அஞ்சு, முதலாவதாக வந்திருக்கும் உங்களுக்கு(கடசியும் இந்தக் கொமெண்த்தானோ தெரியேல்லை ஹா ஹா ஹா:)) இதோ ஒரு ஆனை:) பரிசாக வழங்கப்படுகிறது, இது றேஸ் போகும் ஆனை:)) இதனை நான் எங்கினவும் களவெடுக்கேல்லை:))

   https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh46B2UenBQB_jg_70OVsSkQIlRHECFb4TysEUiLVvmMwhqULf4d9SS34DDnDl8hclKvhMwziyvTwbX7VufLxYWcpGhKJuav-HhUY8bKWYSHa6-w1P1Qksav5am6-6B8oluo_3fgKOx1orTrr5CogoZ6Z71MSwvEFh0dbuCYDRmfmX0KieedsmTSkJJ1w

   Delete
  2. பின்ன..... இரண்டு மூன்று வருடங்கள் ஆகிட்டா, தமிழ் எப்படி எழுதறதுன்னு மறந்துவிடும்தான். சிமியான் டீச்சர் இருந்தாலாவது தமிழ்ல எப்படி எழுதறதுன்னு கத்துக்கிட்டிருக்கலாம்னா, ஏஞ்சலின், சிமியான் என்றால் என்ன? குங்குமச் சிமிழான்னு யோசிப்பாங்க

   Delete
  3. நெ த//

   ஹா ஹா ஹா நான் மறந்தாலும் இனிமேல் காலத்தில நீங்கள் மறக்க மாட்டீங்கள் சிமியோன் ரீச்சரை:))... ஏஞ்சலின் இப்போ புளொக் என்றாலே அது எப்படி இருக்கும் எனக் கேய்க்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்:)))

   Delete
  4. //இது றேஸ் போகும் ஆனை:)) இதனை நான் எங்கினவும் களவெடுக்கேல்லை:))//

   ஆனையை காணலே ...

   Delete
  5. ஆனாலும் உங்க ப்லாக் ரொம்பவே பிகு பண்ணுது .என் லாப்டாப்பில் திறக்கவேயில்ல .அப்புறம் கணவரது லாப்டாப்பில் ஒரு வழியா திறந்துச்சி .
   விரைவில் அடுத்த பதிவை எதிர்நோக்கறேன்

   Delete
  6. என்னாது ஆனையைக் காணமா?:) அந்தாப்பெரிய ஆனை எப்பூடிக் காணாமல் போகும், எனக்குக் காட்டுதே...கர்ர்ர்ர்ர்ர்ர்:), பூனை மட்டும்தான் உங்கட கண்ணுக்குத் தெரியும்போல:)..

   எனக்கு இதுவரையில் எந்தப் பிரச்சனையும் வரேல்லை அஞ்சு, போஸ்ட் கூட பட்டினைத்தட்டியதும் பப்ளிஸ் ஆச்சு... உங்கட ஊரில் காத்தோ தெரியேல்லை..

   அடுத்த போஸ்ட்டாஆஆஆ???... எனக்குப் பிரச்சனை இல்லை போட்டிடுவேன், உங்களுக்குத்தான் கொமெண்ட் போட்டுக் களைக்கப் போறீங்கள்:))

   Delete
 2. யாரு இவங்க? புதுசா பிளாக் ஆரம்பிச்சிருக்காங்களா? அல்லது நான் தெரியாமல் ஏதேனும் பதிவுக்கு வந்துவிட்டேனா? யார் அம்பாணி? அம்பாணி கிட்ட இருக்கும் அதிரான்னா அர்த்தம் என்ன?

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆ நெல்லைத்தமிழன் வாங்கோ வாங்கோ... ரண்டாவதாக வந்திருக்கும் உங்களுக்கு.. இதோ இப்பவே சுடச்சுடச் செய்த....

   https://i.ytimg.com/vi/LGnRLfLRZPo/maxresdefault.jpg

   Delete
  2. //யார் அம்பாணி? அம்பாணி கிட்ட இருக்கும் அதிரான்னா அர்த்தம் என்ன?///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இப்பூடி எல்லாம் கிளவி வரும் சே சே டங்கும் அடிக்கடி ஸ்லிப் ஆகுதே:).. கேள்வி வரும் எனத் தெரிஞ்சுதான் டெலிவாப் போட்டேன்ன்.. அம்பாணி ஆகிட்ட அதிரா என.. அதாவது ஊரியூப்பால அம்பாணி ரேஞ்சுக்குப் போய்ட்டுது பாங்க் பலன்ஸ் எனச் சொல்ல வந்தேனாக்கும் ஹா ஹா ஹா..

   முதல்ல அம்பாணி அதிரா எனப் போட நினைச்சு:), இது எப்போ தொடக்கமாக்கும் எனக் கேட்டிடப்போறீங்க என நினைச்சூஊஊ.. ஆகிட்ட என மாத்தினேன் ஹா ஹா ஹா மீ எவ்ளோ சார்ப்பூஊஊஊஊ இது அஞ்சுவுக்கெல்லாம் தெரியாதாக்கும் ஹையோ ஹையோ:))

   Delete
  3. மினி ஜாங்கிரி சூப்பரா இருக்கு. யாராவது இப்போ கொடுத்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன்.

   Delete
  4. உங்களுக்கு ஒன்று சொல்லியே ஆகோணும் நெ தமிழன்... என்ன தெரியுமோ, நான் தேன்குழல் எனச் சொல்லும் இன்னொரு இனிப்பு மட்டுமே சாப்பிட்டதுண்டு, இந்த ஜாங்கிரி பற்றித் தெரியாது, பெயர் தெரியும் ஆனா இதுவும் தேன் குழல்போலத்தானே இருக்கும் என நினைத்து அக்கறைப்பட்டதில்லை, ஏனெனில் எனக்கு தேன்குழல் பெரிசாப் பிடிப்பதில்லை, ஆனா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த ஜாங்கிரி, பக்கெட்டில் ரெடிமேட்டாக கிடைச்சது ஹல்டிராம்ஸ் பிராண்ட், சாப்பிட்டேன்ன் என்னா சுவை தெரியுமோ, இனிப்பென்றாலும் எனக்குப் பிடிச்சுப் போச்சு ஹா ஹா ஹா. உங்களுக்கெனில் நினைச்சதும் வாங்கிச் சாப்பிடலாம்.. இங்கு தமிழ்க்கடைக்கு சிலசமயம் வருது.. நன்றி..

   Delete
  5. திருநெல்வேலியில் ஸ்பெஷலாக சீனி மிட்டார், கருப்பட்டி மிட்டாய் என்று வைத்திருப்பார்கள். அவை அரிசி மாவு நிறைய உபயோகப்படுத்திச் செய்வார்கள். ஆனால் மெட்ராஸ் ஜிலேபின்னு சொல்ற ஜாங்கிரி உளுந்தில் செய்வது. இதில் நார்மல் சைஸ், நல்லா டிசைனா ருசியா இருக்கும். அங்கதான் சரவணபவன்/சங்கீதாலாம் இருக்கும்ல. வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டுப்பாருங்கள். மினி ஜாங்கிரி ரொம்பவே நல்லாருக்கும்.

   Delete
 3. ஒரு பதிவை எப்படி எழுதணும், என்ன என்ன தலைப்பு இருக்கணும், கடைசியில் எப்போதும் எழுதுவதுபோல ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு...என்றும் ஒன்றுமே இல்லாமல், போஸ்ட் கார்டில் எழுதும் கடிதம் போல ஒரு பதிவு..... இதெல்லாம் யூடியூபில் ஏகப்பட்ட பணம் வந்து குமிந்துவிட்டதால் வந்த மறதின்னு எடுத்துக்கறதா?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அம்பாணி ஆகிட்டாலே, பலது சிலது மறந்திடும்:) உண்மையில் நீங்கள் சொல்லித்தான் என் ஊசிக்குறிப்பு நினைவுக்கு வருது, இல்ல அடுத்த போஸ்ட் சரியாகப் போட்டிடுவேன், இது ச்ச்ச்சும்மா போட்டது, அத்துடன் உண்மையில் மறந்திட்டேன், இப்போ யூ ரியூப் தவிர எதுவும் பாப்பதில்லை, கடசியாக எப்போ எங்கு கொமெண்ட் போட்டேனோ, அதன் பின்பு இன்றுதான் புளொக் பக்கம் பார்க்கிறேன், இடையில் ஒரு தடவை கோமதி அக்கா தன் ஒரு லிங் அனுப்பியிருந்தா, அதில்போய் அவவுடையதை மட்டும் படிச்சேன், கொமெண்ட் போட முடியவில்லை, சரி லப்ரொப் ஐ ரெடி ஆக்கி வருவோம் என விட்டிட்டேன்.

   இன்று பழையபடி எல்லோரையும் பார்க்க மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்குது. இனி ஒழுங்காக ரெடி பண்ணோணும் போஸ்ட்டை.

   மிக்க நன்றி பார்த்தவுடன் வந்திட்டமைக்கு நெ தமிழன்.

   Delete
 4. அமர்க்களமாக மீள்வருகை புரிந்த அதிராவுக்கு அளவிறந்த நன்றிகள்.

  தூங்கிவழியும் பதிவுலகம் இனி புத்துணர்ச்சி பெறும் என்பது உறுதி.

  வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ... அறிவுப்பசிஜி வாங்கோ வாங்கோ... "அளவிறந்த".. ஆவ்வ்வ் இது புதுத் தமிழ்ச் சொல் எனக்கு...

   தூங்கிவழியும் பதிவுலகம்... ஹா ஹா ஹா ஹையோ மெதுவாப் பேசுங்கோ, ரஷ்யாவை விட மோசமான தாக்குதல் நடந்திடப்போகுதே:)... முச்சந்தி வைரவா நீங்கதான் எல்லோரையும் காப்பாத்துங்கோ.

   எனக்கும் தொடர்ந்து புளொக்கில் எழுத எப்பவும் ஆசைதான், இடையில் உற்சாகம் குறைந்திடுது, இனிப் பார்ப்போம் தொடர்கிறேன்.. மிக்க நன்றி அ.ஜி.

   Delete
  2. எனக்கு விஷயம் கிடைச்சாச்சு :) இருங்க கொளுத்தி போடறேன் :) யார் பக்கம் போய் கொளுத்தி போடலாம்னு யோசிச்சிட்டிருக்கேன் 

   Delete
  3. //யார் பக்கம் போய் கொளுத்தி போடலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்
   ///
   ஆ அந்தாட்டிக்கா வைரவா!!!.. அஞ்சுவுக்கு இப்போ அடிக்கடி மறதி வருதாம், அந்த லிஸ்ட்டில இதையும் சேர்த்திடுங்கோ வைரவா... (யாருகிட்ட ம்ஹூம்ம்.. கொளுத்திப் போடப்போறாவாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நான் ஓடிப்போய் அந்த றேஸ் ஆனைக்கு கீழ ஒளிச்சிடப்போறேன்ன்ன்:))

   Delete
 5. வணக்கம் அதிரா சகோதரி.

  வாங்க.. வாங்க.. நல்வரவு சகோதரி. தங்கள் வருகைக்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன். இப்போதுதான் உங்களை சகோதரி கோமதி அரசு அவர்களின் பதிவில் பார்த்தேன். சரி.. அங்கேயே தங்களுக்கு ஒரு நல்வரவை கூறலாம் என நினைத்து யதேச்சையாக என் வலைப் பக்கம் வந்தால் என் நண்பர்கள் பக்கம் நீங்களே வந்து நிற்கிறீர்கள். பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். உங்களைப் பார்த்து எவ்வளவு மாதங்கள்/வருடங்கள் ஆகி விட்டது. மீண்டும் உங்களுக்கு நல்வரவு கூறி வரவேற்கிறேன். 🙏. நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆ வாங்கோ கமலாக்கா வாங்கோ... யாருமே மறந்திடாமல் பார்த்தவுடன் ஓடி வருவதைப் பார்க்க, தொடர்ந்து வந்திடோணும் எனும் எண்ணமே வருது... மெதுமெதுவா எல்லோர் பக்கமும் வருகிறேன், மிக்க நன்றி..

   Delete
 6. அதிரா நல்வரவு.
  கோமதி அக்கா அழைத்து வந்து இருப்பது மகிழ்ச்சி.புது மடிகணினி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி. பூனை பதிவு சுட்டி உங்களை அழைத்து வரும் என்று நினைத்தேன், ஏஞ்சல் வந்தார். பின்னாலே வர ஒரு மாத காலம் ஆகி விட்டது.
  விடுமுறை காலம் மட்டுமல்லாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

  யூடியூபில் போடுவதை இங்கு போடலாம். இயற்கை காட்சிகள் மினி காணொளிகள் அருமையாக இருக்கிறது.

  முடிந்த போது வாங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. உங்கள் போஸ்ட்டுக்கு வருகிறேன் என வாக்குக் கொடுத்திட்டேன், அத்தோடு, நான் பின்னால் வருகிறேன் நீங்க முன்னால போங்கோ எனச் சொல்லி அஞ்சுவும் வந்திட்டா, அதனால சொன்ன வாக்கை எப்படியும் காப்பாத்தோணும் அத்துடன் புளொக்கைத் தொடரோணும் எனும் ஆசையும் இருப்பதால களம் இறங்கிட்டேன், யூரியூப்பையும் இதனையும் சமாளிக்க முடியுமோ தெரியவில்லை...

   உண்மைதான் அங்கு போடுவதையும் இங்கு போடலாம், ஆனால் புளொக் எனில் எழுத்தில் பரிமாற்றம் செய்யும்போதுதானே அதிகம் மகிழ்ச்சி...
   நன்றி கோ அக்கா.

   Delete
 7. முடிந்த போது வாங்க என்றதும் அப்படி இல்லாமல் அடிக்கடி வாங்க பழைய மாதிரி படங்கள், பாடல்கள், என்று அசத்தல் பதிவு போடுங்க.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா போடுறேன் கோமதி அக்கா போடுறேன், உண்மையில் எப்படிப் போஸ்ட் எழுதுவதென்றே மறந்திட்டேன், மேலே வீடியோவில் பாட்டுப் போடுறனானெல்லோ, இன்று மாத்த பார்த்தால், எப்படி மாத்துவதென்பது தெரியேல்லை ஹா ஹா ஹா கொஞ்சம் மினக்கெட்டுத் தேடோணும் என்பதால விட்டிட்டேன், அடுத்த போஸ்ட்டில் பார்ப்போம்.

   Delete
 8. மறக்க முடியாது அதிரா, ஏஞ்சல், பிரியசகி மூவரையும். பிரிய சகியை முகநூலில் பார்த்து கொண்டு இருக்கிறேன், உங்களை உங்களில் சேனலில்.ஏஞ்சலைதான் பார்க்கமுடியவில்லை. நீங்கள் மூவரும் எழுத வேண்டும் வலைத்தளத்தில்.ஏஞ்சல்
  அம்முவிடம் சொல்லவும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் கோமதி அக்கா, சந்திக்காமல் பேசாமல் இருந்தால் நீறுபூத்த நெருப்புப்போல இருக்குமே தவிர, மறக்க முடியாது யாரையும், பழையப்பேர் நிறையப் பேர் காணாமல் ஒருவேளை முகநூலோடு சங்கமமாகிட்டினம் என நினைக்கிறேன், அம்முலுவோடு கொஞ்சக்காலம் தொடர்பில்லை, இப்போஸ்ட் பார்த்தால் நிட்சயம் வந்திடுவா... அஞ்சுவும் இனி வருவா, வராட்டில் விட்டிடுவேனோ, தேம்ஸ்ல தள்ளிட மாட்டேன் ஹா ஹா ஹா...

   நீங்களும் பேரனோடும் பறவைகளோடும் ஹப்பியாக இருங்கோ கோமதி அக்கா, மிக்க நன்றி.

   Delete
  2. நன்றி கோமதி அக்கா .நானும் எழுத நினைக்கிறேன் நேரம்தான் நில்லாம ஓடுது 

   Delete
  3. நேரம் எடுத்து வாங்க ஏஞ்சல், துளி துளியாக எழுதி சேர்த்து பதிவு போடுங்க ஒரு நாள்.

   Delete
 9. இது முன்னோட்டமா ?
  அடியாத்தி இப்பவே கண்ணைக் கட்டுதே... மகமாயி நீதான் காப்பாத்ணும் என்னையும்... சம்போ மகாதேவா!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. நேற்று உங்களுக்கு இங்கு பெரீஇய கொமெண்ட் போட்டிருந்தேனே.. ஆரு கண்ணு பட்டுதோ:) இப்போ காணம் கொமெண்ட்டை கர்ர்ர்ர்ர்ர்:))..

   வெள்ளோட்டத்துக்கே கண்ணைக் கட்டினால் எப்பூடி?:).. இனித்தானே தேரோடப்போகுது ஹா ஹா ஹா.
   சிறீ சிவசம்போ அங்கிள்,... எப்போ மகாதேவா ஆனார்ர்ர்ர்ர்ர்?:)), சே சே கொஞ்ச நாள் காணாமல் போயிட்டாலே என்னென்னமோ எல்லாம் நடந்திடுது:).. இதுக்குத்தான் ஒயுங்கா புயக் எழுதோணும் என்கிறது ஹா ஹா ஹா மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 10. ///ஒண்ணுமே பிரியல்ல உலகத்திலே:). ஹெட்ல இருந்து ரெயில் நுனி வரைக்கும் சுத்துது, ஆனாலும் விடக்கூடாது எப்படியாவது புளொக்கில் திரும்படியும் வாலெடுத்து சே சே ///
  எல்லாம் ஒரே நேரம் சுற்றுதா :) ஒருவேளை டைம் ட்ராவல் செயிரிங்களோ :)
  வால் சுத்தினா என்ன லெக் சுத்தினா என்ன நீங்க ஸ்டெடியா நில்லுங்க :) போஸ்ட் போட வசதியா இருக்கும் 

  ReplyDelete
  Replies
  1. வந்திட்டாய்யா வந்திட்டா:)), ஒரு ஆசை பாசையெண்டு ஒரு வசனம் பேச முடியுதா இங்கின:).. சுனாக் அங்கிளிடம் சொல்லி தேம்ஸ்ல தள்ளிடுவேன்...
   ஜாஅக்க்க்க்க்க்க்க்க்க்ர்தை[ஹையோ இது எனக்குச் சொன்னேன்:))]

   Delete
 11. ஆமா அதென்ன அம்பாணி :) அது சரி எப்போ மூவி ரிவியூஸ் போட போறீங்க ?? பொன்னியின் செல்வன் பாத்திங்களா 1 அண்ட் 2.
  modern லவ் சென்னைன்னு ஒரு படம் வந்திருக்காம் அதை பார்த்து ரிவ்யூ போடுங்க :)

  ReplyDelete
  Replies
  1. ஆ! ஏஞ்சல் பூஸார்கிட்டயா பொ செ பாத்தாங்களான்னு! அவங்க பொசெ புஸ்தகம் வாசிச்சு முடிச்சிட்டாங்களா!!??!!!!!!!!!!

   கீதா

   Delete
  2. முதல் பாகத்தில் 12வது பக்கத்தில் இருப்பதாக ஓரிரு வருடங்களுக்கு முன்பு சொல்லியிருந்தார். இப்போ எழுத்துக்கூட்டிப் படித்து 18 வது பக்கத்திற்கு வந்திருப்பதாக எல்லோரும் சொல்லிக்கொள்கிறார்கள்

   Delete
  3. ஆஆஆஆஆஆஆஅ ஆத்தாடி ஆத்தாஆஆஆஆ ஆரம்பிச்சிட்டாங்கையா.. திரும்படியும் முதல இருந்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)... கொஞ்சம் முன்னேறியிருக்கிறேன் அதாவது, வீடு மாறும்போது பெட்டியில் இருந்த பொ செ பாகம் ஒன்றை, இப்போ கொஞ்சக்காலமாக எடுத்து வந்து ரிவி செல் ல கண்ணுக்குத் தெரியும்படி வச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா.. ஆரம்பிக்கோணும் படிக்க:)...

   உங்களிருவருக்கும் ஒன்று சொல்லியே ஆகோணும்..... புத்தகம் படிக்காமல் படம் பார்ப்பதில்லை எனக் கங்கணம் கட்டியிருக்கிறேனாக்கும்:)), படம் பார்த்திட்டால் புத்தகம் படிக்கும் ஆசை போயிடும் எனும் நல்லெண்ணம் தேன்ன்ன்:)).. பார்த்தீங்களோ அதிரா எவ்ளோ நல்ல பொண்ணு:))

   Delete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. //அம்பாணியாகிட்ட அதிரா:)Monday, May 22, 2023 11:13:00 am
   ஆஆஆஆ நெல்லைத்தமிழன் வாங்கோ வாங்கோ... ரண்டாவதாக வந்திருக்கும் உங்களுக்கு.. இதோ இப்பவே சுடச்சுடச் செய்த....

   https://i.ytimg.com/vi/LGnRLfLRZPo/maxresdefault.jpg//

   நெல்லைத்தமிழன் யார் கொடுத்தாலும் வாங்கிக்கறதா :) இந்த பூனை எங்கிருந்து சுட்டுனதோ . எனக்கென்னவோ எலிகிட்டருந்து பூனை சுட்டாப்ல இருக்கு :) ஜீசஸ் சேவ்ட் மீ

   Delete
  2. ///AngelMonday, May 22, 2023 10:32:00 pm
   This comment has been removed by the author.///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு இப்பவே இந்தக் கொமெண்ட் வேணும்ம்ம்ம்ம்ம்ம்:))... இன்று நல்ல வெயில், இருப்பினும் பறவாயில்லை தேம்ஸ் கரையில ஒற்றைக் காலில உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறேன்ன்ன்ன்ன்:)

   Delete
 13. அம்பானியா அம்பாணியா ?   போகட்டும்..  மீண்டும் வருவது என்று நல்ல முடிவு எடுத்திருக்கிறீர்கள்.  உங்கள் யு டியூப் பக்கம் எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்!  வாங்க..  வாங்க..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... பதில் போட்டுக்கொண்டு வரும்போது, கோ.அ வீட்டுச் செய்தி கிடைத்தது, மனம் கனமாகியதால் அப்படியே எழுந்து போய் விட்டேன்... என்ன பண்ணுவது விதியைத்தான் நோக முடியும்.

   Delete
  2. ///அம்பானியா அம்பாணியா ?//

   நில்லுங்கோ முதல்ல அஞ்சுவைத் தேம்ஸ்ல தள்ளிப்போட்டு வந்தால்தான் எனக்கு மனம் ஆறும்.. அவ நேற்றே சொல்லியிருக்கலாமெல்லோ எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் அது ணி எனத்தான் நினைச்சுக் கொண்டிருந்தேன் இதுவரை .. சரி போகட்டும் இதுவும் ஒருவகையில நல்லதுதேன்:))

   Delete
  3. ///உங்கள் யு டியூப் பக்கம் எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்! //

   ஓ நினைக்கிறனான் ஸ்ரீராம் நீங்கள் நெ தமிழன் எல்லோரும் பார்ப்பீங்கள் என, அங்கு கொமெண்ட் பற்றிப் பிரச்சனை இல்லை, பார்க்கும்போது ஒரு லைக் மட்டும் போட்டு விடுங்கோ அதுவே பெரிய சந்தோசம்... மிக்க நன்றி.

   Delete
 14. உங்களுக்கு பழக்கமில்லாத விஷயம் ஒன்று நடக்கும்.  அடிக்கடி கமெண்ட்ஸ் காணாமல் போகும்.  ஸ்பாமில் தேடி மறுபடி இஸ்த்துக்கினு வந்து இங்கே போடோணும்!

  ReplyDelete
  Replies
  1. ஓ.. நீங்க இதைச் சொன்னதும் ஓடிப்போய்ச் செக் பண்ணினேன் 61 கொமெண்ட்ஸ் ஸ்பாமில இருக்குது ஹா ஹா ஹா ஆனா எல்லாம் பழையது.. 2017 ல இருந்து இருக்குது, அதில பாதி, நான் போட்ட பதில்கள்.. அதெப்படி என்னுடையதே ஸ்பாமுக்குப் போகுது கர்ர்:)).. நான் யாருக்கும் பதில் போடாமல் விடுவதில்லை, ஆனா இப்படி ஸ்பாமுக்குப் போனதால பலர் நினைச்சிருப்பினம் அதிரா பதில் போடவில்லை என:(..

   Delete
 15. தோழி மறுபடி பிளாக்கை திறந்த உடன் முதல் ஆளாக வந்திருப்பது நம்ம ஏஞ்சலா?  அடடே...  வாங்க வாங்க..  எப்படி இருக்கீங்க...!  நீங்க எப்போ உங்கள் தளத்தை ஓபன் பண்ணப்போறீங்க?

  ReplyDelete
  Replies
  1. அஞ்சுவுக்கு இப்போ வயசாகிட்டதால [ ஹா ஹா ஹா படிச்சதும் கிழிச்சிடுங்கோ] இந்தக் கொமெண்ட்டை அவ கவனிக்கவில்லைப்போலும்:)).. அது எந்த ஒரு விசயமானாலும் தொடர்ந்திருக்கும்போதுதான் உற்சாகம் வருது ஸ்ரீராம், விட்டால் பின்பு மனம் விரும்புவது குறைவு..

   ஸ்ரீராமைக் காணல்லியே.. அனுக்காவைப்பற்றிப் பல நியூஸ்கள் பரவுது, அந்தக் கவலையில இருக்கிறாராக்கும் என நினைச்சேன் நேற்று ஹா ஹா ஹா...
   மிக்க நன்றி ஸ்ரீராம்.

   மிக்க நன்றி

   Delete
 16. ஓஹோ ப்ளாக் திறந்தாச்சா!! ஓ அம்பானியாகிட்ட மகிழ்ச்சியில குதிச்சிட்டிங்களோ!! வாங்க வாங்க...பூஸாரை நாங்க மறப்பமா என்ன?
  நேற்று எங்க பக்கம் எல்லாம் வந்தப்பவே யோசிச்சிருக்கணும்...ஹூம் இப்பதான் பார்த்தன்.

  வெல்கம்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீத்ஸ் வாங்கோ... அதுதானே எப்படி மறப்பது ஹா ஹா ஹா... அம்பாணியானதாலதான் ஓடிவந்து புளொக்கை தூசு தட்டினேன்:). மிக்க நன்றி வெல்கம் பண்ணுவதற்கு... விட்டுவிட்டுப் போன இடத்திலேயே எல்லோரும் அப்படியே இருப்பதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்குது.

   Delete
 17. அதிரா எனக்கும் தொடர்ந்து எழுத ஆசை இருந்தாலும் இடையில் உற்சாகம் குறைந்திடுது. நிறைய வைச்சிருக்கவும் செய்யறேன் ஆனால்...எழுத முடியலை

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அதேதான் கீதா, இப்போ வெளியில் பொழுதுபோக்கு அதிகமாகிட்டுது, அதனாலகூட இங்கு நேரம் செலவிடுவது கஸ்டமாக இருக்குது.
   மிக்க நன்றி கீதா.

   Delete
 18. அவொகாடோ சான்விச் அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி அக்கா, அது போன வருடம் போட்டதோடு இருக்குது, மாற்ற முடியாமல் இருந்துது விட்டிட்டேன்:)

   Delete
 19. அவொகாடோ சான்விச் செய்முறை, கண்ணை கவர்கிறது, பார்க்கவே அழகுதான்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோமதி அக்கா, மீள் வருகைக்கும்.

   Delete
 20. Replies
  1. ஹா ஹா ஹா வாங்கோ டிடி வாங்கோ... ரைட்டு லெவ்ட்டு எல்லாம் போகப்போகத்தான் தெரியுமாக்கும்:) .. அடிக்கடி காணாமல் போவது இப்போ பழக்கமாகிவிட்டது ஹா ஹா ஹா மிக்க நன்றி டிடி.

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.