நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Saturday, 6 March 2021

     “அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏

 

பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))

மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை.. அது என்னமோ கொஞ்சக்காலமாக ஒரு வெறுப்பு, புளொக்கே வேண்டாம் என ஒரு எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது, வேலையும் முழுநேரமானதும், எதுவும் வேண்டாம் என மனம் சொல்லியது, அப்படி இருந்தும் விடக்கூடாது என இடைக்கிடை ஃபோஸ் பண்ணி புளொக் வந்தாலும் ஏதோ ஒன்று மனம் வெறுக்க வைத்து, ஓஃப் ஆக்கிக் கொண்டே இருந்தது, அது என் ராசி அப்படித்தான், எப்பவும் எதிலும் நிலையாக இருக்க விடாது:))..

அப்படி இருக்கையில்தான், போன வருட மார்ச் லொக்டவுனில் ஆரம்பித்த யோசனை, ஒரு யூ ரியூப் சனல் திறக்கோணும் என்பது, எங்கள் ஆட்களும் எல்லோரும் அப்பப்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள் ஒரு சனல் திறக்கலாமே என... பொறுத்திருந்தேன், 2021 வந்ததும் டமால் எனக் குதித்து விட்டேன்.

ஆனா இங்கு சொல்ல ஒரே ஷை ஷையா இருந்துதா:)).. அதனால கொஞ்ச நாள் போகட்டும் என இருந்தேன், ஆனா என் செக் அதுக்குள் போஸ்ட் போட்டு விட்டா:)), அதனால எனக்கும் கொஞ்சம் ஷை குறைஞ்சு போச்ச்ச்:)).

உங்கள் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் அஞ்சு மூலம் என் சனல் முகவரி[நன்றி அஞ்சு].. இருப்பினும் நானும் நினைவு படுத்தோணும் எல்லோ:))..

இதுதான் என் சனல்...   athees palace

ஆரம்ப காலம் பலரும் என்னை அதீஸ் எனவே அழைப்பினம், அப்போ அந்தப் பெயரிலேயே ஆரம்பித்தேன், அதிராவாக இல்லையாக்கும்:)).

இதுவரை பார்க்காதோர், subscribe பண்ணாதோர், ஒரு தடவை பண்ண முடிஞ்சால் பண்ணி விடுங்கோ பிளீஸ். அஞ்சு மூலம் அறிந்து, வந்து பண்ணிய அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள்_()_.

என்னில எப்பவும் ஒரு பழக்கம், ஒரு அலுவல் எனில், ஒழுங்காகச் செய்யோணும், இல்லை எனில் செய்யாமலே இருக்கலாம் என எப்பவும் நினைப்பேன்.. அதாவது “செய் அல்லது செத்துப்போ” என.

இது காந்தித்தாத்தா சொன்ன வசனம். நான் குட்டியாக இருந்தபோது, எங்கட அண்ணன், அவர் படிக்கும் மேசை, ஒரு கோனரில் இருந்தது, அந்தக் கோனர் சுவரில பென்சிலால சில வசனங்கள் அழகாக எழுதியிருப்பார். அதில இந்த வசனம் இருந்தது, அப்பவே எழுத்துக் கூட்டிப் படிச்சு மனதில பதிச்சுக் கொண்டேன், விளக்கமே தெரியாமல்:)).. அதனால நிறைய நேரத்தை எடுக்கிறது சனல் இப்போ:))

நான் சமைப்பதை முதல் ஆளாகச் சுவை பார்க்கும் என் “செக்”:), அவவுக்கும் இப்போ பதவி உயர்வு குடுத்திட்டேன்:)..  “செக் + பேசனல் அட்வைஸர்”

ஆனால் சம்பளம் இன்னும் தீர்மானிக்கவில்லையாக்கும்:)). பாருங்கோ மூக்கில கட்ட வேண்டியதைத் தலையில கட்டிக்கொண்டிருக்கிறா கர்ர்ர்ர்:)).

உப்புப் புளி எல்லாம் கரெக்ட்டாக இருக்குதோ எனப் பார்க்கிறேனாக்கும்:))
🙏🙏🙏😻🙏🙏🙏

இது எங்கள் புளொக்குக்காக செய்த என் கை வண்ணம், பெயிண்ட் பண்ணி, தலையணை உறையாகத் தைத்து எடுத்து, தலையணையிலும் போட்டு வச்சிட்டேன், இன்னும் பாவிக்கவில்லை... நாங்க சென்னை போனால் ஸ்ரீராமுக்கு குடுக்கப்போறேன்:))

EB = Engal Blog


முடியும்போது அப்ப அப்ப போஸ்ட் உம் இங்கு போட இருக்கிறேன், அனைவருக்கும் நன்றி.

ஆஆஆஆ ஜொள்ள மறந்திட்டேன், நெல்லைத்தமிழன் 2019 இல் இங்கு சொன்னார், 2021 இல் தங்களுக்கு ஒரு விஷேசம் உண்டு என, அப்போ நினைச்சேன், அதுக்கு இன்னும் எவ்ளோ காலமிருக்குது எண்டு, ஆனா திரும்பிப் பார்க்க முன் வந்திட்டுது, நெல்லைத்தமிழன், விசேசத்துக்கு எங்களை அழைக்காவிட்டாலும் கோபிக்க மாட்டோம், ஆனா சமையல் ஓடர் மட்டும் அதீஸ் பலஸ் லதான் குடுக்கோணும்:)).. இதுபற்றிப் பேச என் “செக்” ஐத் தொடர்பு கொள்ளவும்:)).

ஊசி இணைப்பு:
இது ஆருடைய வெயிட்டாக இருக்கும்...?:))

ஊசிக் குறிப்பு:
 “முன்னே செல்பவரை விட்டு விடுங்கள், பின்னால் வருபவரிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள், அவரால்தான் உங்களை முந்த முடியும்”

 “மீண்டும் ஒருமுறை முகம் பார்த்துப் பேச வேண்டியிருக்கும் என்ற ஒரு காரணத்துக்காகவே, நமது பல கோபங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன”

இவ்வரிய தத்துவங்களை உங்களுக்காக இங்கு கஸ்டப்பட்டுக் காவி வந்திருப்பவர்:- உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய.. “புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்”
🌹🌹🌹🌻🌻🌻🐱🐱🐱🌻🌻🌻🌹🌹🌹

73 comments :

 1. வாங்க மியாவ் வாங்க :) முதல் பின்னூட்டம் ஸ்ரீராம்னு நினைக்கிறேன் :)எனிவே நானா இப்போ தூங்கிட்டு நாளைக்கு வரேன் .ஊசி effect :) ஹேண்ட்  upper arm வலிக்குது 

  ReplyDelete
  Replies
  1. அப்பர் ஆர்ம் வலிக்குதாமே.... அதிராவுக்கு போட்டி சேனல் ஆரம்பிக்க முதல் முறையா திருநெவேலி அல்வா கிண்டியிருப்பாரோ,?

   Delete
  2. நானா போட்டியா அவ்வ்வ்வ் :) எனக்கு ஒழுங்கா ஒரு  படம் எடுக்கவே வராது இதில் சேனலா ஹஹஹஹா :)அது ஒண்ணுமில்லை நெல்லைத்தமிழன் செகண்ட் வாக்சின் போட்டாச்சு :) அதில் pain 

   Delete
  3. நேட்டிவ் ஸ்பிரஷலில் ஆர்டர் கொடுத்தா 5 ஆம் நாள் வீட்டுக்கு வருதே :) விலை அதிகம்தான் ஆனா கருப்பட்டி மைசூர்பா ஏன்னா சுவை தெரியுமோ :)) ஒரு குட்டி துண்டு சாப்பிட்டேன் நல்லா இருக்கு 

   Delete
  4. வாங்கோ அஞ்சு வாங்கோ... எனக்கு புளொக்கில எப்பூடி எழுதுவது என்பதே மறந்து போச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா... இல்ல ஸ்ரீராம் அங்கயிருந்து ஓடி வருவதற்குள், நீங்க பக்கத்தில இருந்து உருண்டு வந்திட்டீங்க:))

   Delete
  5. vஆங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

   //நெல்லைத்தமிழன்Sunday, March 07, 2021 12:52:00 am
   அப்பர் ஆர்ம் வலிக்குதாமே.... அதிராவுக்கு போட்டி சேனல் ஆரம்பிக்க//

   சே..சே.. அதிராவுக்குக் கிட்னி பெரிசெல்லோ:)) அதனாலதான் அஞ்சுவை ஊரியூப்பிலும் செக் ஆக்கிட்டேன்:)).. செக் வேலையை ரிசைன் பண்ணிட்டெல்லோ சனல் தொடங்கோணும்:)).. அதனால அவ சனல் திறக்க மாட்டா ஹா ஹா ஹா:))

   Delete
  6. //AngelSunday, March 07, 2021 12:38:00 pm
   நானா போட்டியா அவ்வ்வ்வ் :) எனக்கு ஒழுங்கா ஒரு படம் எடுக்கவே வராது//

   கர்ர்ர்ர்ர்ர்ர் சாட்டு வேறு:)), சனல் தொடங்கினால், குல்ட்டுக்குள் பொர்த்துக்கொண்டு படுப்பது கஸ்டம் என்பதால கள்ளம் உங்களுக்கு:))... ஆனாலும் எனக்கென்னமோ ஆப்பியாகத்தான் இருக்குது யூரியூப்.

   Delete
 2. யு டியூப் சேனல் தொடங்கியுள்ளதற்கு பாராட்டுகள்.  ஆனால் பாருங்க... என்னதான் சப்ஸ்க்ரைப் செய்தும், பெல் ஐகான் அமுக்கியும் நோட்டிபிகேஷன் மட்டும் வருவதில்லை..  எந்த யு டியூப் சேனலுக்கும்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

   //ஆனால் பாருங்க... என்னதான் சப்ஸ்க்ரைப் செய்தும், பெல் ஐகான் அமுக்கியும் நோட்டிபிகேஷன் மட்டும் வருவதில்லை.. //

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒருவேளை ஏதோ ஃபோன் செட்டிங்கில், நோட்டிபிகேசனை எல்லாம் ஓஃப் ஆக்கி விட்டிருப்பீங்களோ.. எதுக்கும் அதையும் ஒருதடவை செக் பண்ணுங்கோ.

   Delete
 3. ஆஹா..  சென்னை வரும் திட்டம் இருக்கிறதா?  வாருங்கள்..  வாருங்கள்...  தரப்போகும், கொண்டு வரும் எல்லாப் பரிசுகளுக்கும்  அட்வான்ஸ் நன்றி!  

  ReplyDelete
  Replies
  1. //ஆஹா.. சென்னை வரும் திட்டம் இருக்கிறதா? //

   அது வந்து ஸ்ரீராம், தேம்ஸ்ல குதிக்கும் திட்டம் இருப்பதைப்போலவே:)) இதுவும் ஒரு திட்டம்தேன்ன்ன் ஹா ஹா ஹா:).

   //தரப்போகும், கொண்டு வரும் எல்லாப் பரிசுகளுக்கும் அட்வான்ஸ் நன்றி! //

   ரொம்ம்ம்ம்ம்ம்பத் தெளிவாத்தான் இருக்கிறீங்கள்.. வரும்போது எல்லோருக்கும் ஒரு குட்டிப்போத்தலில் தேம்ஸ் நதித் தீர்த்தம் எடுத்து வரும் யோசனை இருக்கு:))

   Delete
 4. என்னதான் யு டியூப் பக்கம் போனாலும் பிளாக் மறந்து விடாதீர்கள்.  இது நம் தாய் வீடு!

  ReplyDelete
  Replies
  1. அது உண்மைதான், வீடியோ மட்டும் தானே அங்கு, மற்றும்படி ஜொந்தக்கதை யோகக்கதை:)) வில்லுப்பாட்டு, குத்துச்சண்டை கும்மி எல்லாம் புளொக்கில்தான், இங்கும் எழுதோணும், ஆனா எனக்கு வேர்க் உடன் அனைத்தையும் பார்ப்பது ஓவ லோட்டாகிடுது, அதனாலதான், ஹொலிடேஸ் ல புளொக் எழுதோணும் என நினைச்சிருக்கிறேன், பார்ப்போம்.

   Delete
 5. ஊசிக்குறிப்பு இரண்டுமே ரசிக்க வைத்து சிந்திக்க வைக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸ்ரீராம். திடீரென ஒரு மன உந்துதலில், இன்றைக்கு எப்படியும் போஸ்ட் போட்டிடோணும் என நினைச்சுக் கடகட என எழுதினேன், அந்தரத்துக்கு நல்ல குறிப்புக்கள் எதுவும் அகப்படவில்லை, அதனால கிடைச்சதை போட்டு விட்டேன்..

   Delete
 6. எப்போதும் பிளாக்கை மறக்காதீர்கள்.

  பாருங்க... சில மாத இடைவெளி விட்டதுல எப்படி எழுதறது என்பதே உங்களுக்கு மறந்துபோச்சு.

  ஊசிக்குறிப்பு, நகைச்சுவை ஒண்ணுத்தயும் காணோம். கண்ணதாசன் தம்பியு (உங்களுக்குச் சொன்னேன்) மறந்துட்டீங்க

  ReplyDelete
  Replies
  1. புளொக்கை மறக்க மாட்டேன் நெல்லைத்தமிழன், என்னால எழுத முடியாவிட்டாலும் எல்லா வீட்டுக்கும் முடியும்போது வந்து போவேன்.

   சத்தியமாக எனக்கு மறந்ததுபோலவே இருக்குது, அத்துடன் முன்பெனில் புளொக்குக்கென்றே துணுக்குகள் சேர்ப்பேன், இப்போதெல்லாம் வீடியோ[பழைய] நினைப்புத்தான் பேராண்டி வீடியோ[பழைய] நினைப்புத்தான்... பாட்டுத்தான் நினைவுக்கு வருது ஹா ஹா ஹா:)..

   //கண்ணதாசன் தம்பியு (உங்களுக்குச் சொன்னேன்) //

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கொஞ்சநாள் நான் இடைவெளி விட்டதும் கண்ணதாசன் அங்கிள் அதிராவுக்கு என்ன முறை என்பது உங்களுக்கு மறந்து போச்ச்ச்ச்:))..

   Delete
 7. யூ டியூப் சேனலில் நிறைய காணொளி போட்டு பிரபலமாவதற்கு வாழ்த்துகள்.

  இதுலயும் சீராளன் இன்னும் வரவில்லை போலிருக்கு

  ReplyDelete
  Replies
  1. நன்றி நெல்லைத்தமிழன், எனக்கு இன்னொரு சந்தோசம், என் உறவுகளுக்கு பெரிசா என்னைப்பற்றித் தெரியாது, இப்போ யூரியூப் மூலம் அவர்கள் எல்லாம் பார்த்து சந்தோசம் + ஆச்சரியப்படும்போது எனக்கும் மிக மகிழ்ச்சியாக இருக்குது.

   முக்கியமாக அம்மாவுக்குப் பயங்கர ஹப்பி, இப்போ தான் என் சனல் தவிர வேறேதும் பார்ப்பதில்லை என்கிறா... அப்பா இருக்கும்போது திறந்திருந்தால் இன்னும் பெரிசாக மகிழ்ச்சிப்பட்டிருப்பார்.

   எங்கட சின்னவர் 2011 அ 12 இலயே ஒரு கேம் சனல் ஓபின் பண்ணி 2,3 வீடியோஸ் போட்டார், ஆனா நாங்கள் அப்போ பெரிதாக அதை விரும்பவில்லை, அதனால அப்படியே விட்டிட்டார்... ஆனா அந்நேரம் எனக்கு இப்படி ஐடியா வரவில்லை, நான் புளொக்கில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்ததால வேறெதுவும் கண்ணுக்குப் படவில்லை.

   சீராளன் பார்த்திருந்தால் இபோஸ்ட்டுக்கு, கவிதை உடன் ஓடி வந்திருப்பார், இன்னும் பார்க்கவில்லை என நினைக்கிறேன்.

   Delete
 8. //பின்னால் வருபவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்//- ஏஞ்சலினும் யூடியூப் சேனல் ஆரம்பிக்கறாங்களா? அவங்களுக்காக இந்தக் குறிப்பா?

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹஹா ...எனக்கு பிளாக் போதும் :) யூ டியூப்பெல்லாம் எங்க தலைவி மாதிரி லெஜெண்ட்ஸ் உலாவர இடம் :) 

   Delete
  2. ///ஏஞ்சலினும் யூடியூப் சேனல் ஆரம்பிக்கறாங்களா? அவங்களுக்காக இந்தக் குறிப்பா?///

   ஹா ஹா ஹா இது ஒரு விதட்த்ஹில உண்மை.. அதாவது யூரியூப்பில் அல்ல, நடையில அதிராவுக்குப் பின்னாலதானே அஞ்சு வருவா:)) அவ படுகுண்டெல்லோ:)) ஹா ஹா ஹா ஹையோ மீ எஸ்ஸுகேப்ப்ப்ப்:))

   Delete
  3. யூ டியூப்பெல்லாம் எங்க தலைவி மாதிரி லெஜெண்ட்ஸ் உலாவர இடம் :) ... ////

   இதை யூரியூப் ஏற்கனவே ஆரம்பிச்சோர் பார்த்தால், என்னைத் தேம்ஸ்ல தள்ளிவிடப் போகினமே:))

   [im]http://4.bp.blogspot.com/-94cTfDVOSfc/UEXP7pZ6CcI/AAAAAAAABJs/KP9oUU8_uYg/s320/RunningCat.jpg[/im]

   Delete
 9. பிளாக் எழுதுவது போல இல்லை யூ டியூப். அதற்கு ரொம்ப மெனெக்கிடணும். காட்சியை நன்கு எடிட் செய்யணும்.

  ரேவதி சண்முகம் அவர்களுடைய ரெசிப்பி ஒண்ணுல, செய்முறை சொல்லிக்கிட்டே வருவார். ஆனால் திடுமென்று அவரது உடை (புடவை) வேறாக இருக்கும். பாதி செய்துகொண்டு இருக்கும்போது, வெளியில் செல்வதற்காக ரெடி ஆகி மீதியைச் செய்து முடித்தார் என நினைத்துக்கொள்வேன்.

  மாரத்தான் இன்டெர்வியூ என போடுபவர்கள், இடைஇடையே நிறைய ரிபீட் ஆவதைக் கவனிப்பதில்லை.

  எடிட் செய்ய, அழகுபடுத்த என நிறைய நேரத்தை யூடியூப் விழுங்கும்.

  வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. //பிளாக் எழுதுவது போல இல்லை யூ டியூப். அதற்கு ரொம்ப மெனெக்கிடணும். ///

   நஸ்டம் நயம் எங்கும் உண்டு நெ தமிழன்.. அதாவது புளொக் எனில், போஸ்ட் எழுதோணும், கொமெண்ட்ஸ்க்குப் பதில் போடோணும்... அடுத்து நம்மிடம் வருவோரின் போஸ்ட்டுக்கெல்லாம் போய்க் கொமெண்ட்ஸ் போடோணும், இல்லை எனில் புளொக் நடத்த முடியாது... அத்துடன், நம்மிடம் வருவோர் எதிர்பார்ப்பினம்தானே நம் கொமெண்ட்ஸ் ஐ அப்போ எப்படியும் போகத்தான் வேண்டும்[என்னையும் சேர்த்தே சொல்கிறேன்]..
   சில நாட்களில் என்னால புளொக் எதுவும் எழுத முடியாவிட்டாலும், பயங்கர கண்குத்து தலையிடியோடு, ஒரு கண்ணை மூடிக்கொண்டுகூட, வந்திருக்கும் ஏனையோரின் போஸ்ட்களுக்குப் போய்க் கொமெண்ட் போட்டிருக்கிறேன்... புதுப் போஸ்ட் போட்டால் போகோணும் தானே, போகாவிட்டால் மனச்டாச்சிப்படி எனக்கு தப்பு எனப்படும்...

   ஆனால் யூ ரியூப்பில் அந்தக் கஸ்டம் இல்லை, வீடியோ எடுத்தமா, போட்டமா எனப் போய்க் கொண்டே இருக்கலாம்..

   //காட்சியை நன்கு எடிட் செய்யணும். //
   இது உண்மைதான், எடிட்டிங்தான் நிறைய நேரம் எடுக்குது, ஆனா சின்ன வயசிலிருந்து என்னில ஒரு பழக்கம், எனக்கு ஆரும் உடுப்பு போட்டுவிடுவது, தலை பின்னுவது/இழுப்பது, எதுவும் பிடிக்காது, நானே தான் செய்வேன்.. அதுபோல எனக்கு ஆரும் நோட்ஸ் எழுதித்தந்தாலும் அது எனக்குப் படிக்க வராது, என் கையால எழுதினால்தான் திருப்தியாகப் படிப்பேன்...

   அப்படித்தான் இதுவும், நானே எடிட் பண்ணுவதுதான் எனக்குப் பிடிக்குது, ஹெல்ப் தேவைப்படும்போது செய்துவிட்டால் போதும். அத்துடன் என்னைப்போல மினக்கெட்டு எடிட் பண்ண இங்கு ஒருவருக்கும் நேரமும் இல்லை.

   எனக்கு இது பிடிச்ச வேலை, பிடிக்காத வேலையை கஸ்டப்பட்டுச் செய்ய மாட்டேன், இது விரும்பிச் செய்கிறேன், மனதுக்கு மகிழ்ச்சியைக் குடுக்கிறது... யூரியூப்.. இழுத்து மூடாமல் இருக்கும் காலம் வரை என் “விலைமதிப்பற்ற”[ஓடிடாதையுங்கோ பிளீஸ்ஸ்:))] சமையல்:)), மற்றும் வீடியோக்கள் உலா வருமெல்லோ ஊரெல்லாம்:).. ஹா ஹா ஹா.

   Delete
  2. //ஆனால் திடுமென்று அவரது உடை (புடவை) வேறாக இருக்கும். பாதி செய்துகொண்டு இருக்கும்போது, வெளியில் செல்வதற்காக ரெடி ஆகி மீதியைச் செய்து முடித்தார் என நினைத்துக்கொள்வேன்.//

   ஹா ஹா ஹா அது சிலசமய்ம், செய்து வரும்போது, முடிவில் சமையல் சொதப்பி இருக்கலாம், கவனக் குறைவால தீஞ்சிருக்கலாம்:)).. அப்படி எனில், இன்னொருநாள் முடிவை மட்டும் திரும்ப எடுத்து அட் பண்ணியிருக்கலாம், இப்படி நிறைய வசதி இருக்குதுதானே... அவ, அதே சாறியைக் கட்டியிருந்தால் விளங்கியிருக்காது ஹா ஹா ஹா..

   //மாரத்தான் இன்டெர்வியூ என போடுபவர்கள், இடைஇடையே நிறைய ரிபீட் ஆவதைக் கவனிப்பதில்லை.///
   கவனிப்பதில்லை எனவும் சொல்ல முடியாது, வீடியோ லெந் ஆக இருக்கட்டுமே எனவும் சிலர் அப்படிச் செய்யலாம்...

   //எடிட் செய்ய, அழகுபடுத்த என நிறைய நேரத்தை யூடியூப் விழுங்கும்.//
   உண்மை.. சமைப்பதற்கு ஒரு மணி நேரம் எனில், அதை எடிட் செய்து வீடியோவாக்கிப்போட 3-4 மணி நேரம் எடுக்குது, அதிலயும், நான் ஊசிக் குறிப்பும் இணைப்பதால எனக்கு எக்ஸ்ராவா ரைம் எடுக்குது:))..

   மிக்க நன்றிகள் நெ தமிழன்.. அதுசரி, அங்கு விபரமாகப் பேச முடியாது ஆனா இங்கு நீங்கள் சொல்லவில்லையே என் வீடியோவில் இருக்கும் குறை நிறைகள் பற்றி... நான் இதைப் போஸ்ட்டில கேட்டிருக்கோணும் விட்டு விட்டேன்.

   Delete
  3. யூ டியூபில் காணொளிகள், தங்கள் காலத்திற்குப் பின்னும் முகம் தெரியும், பலருக்கும் பரிச்சயமாகும் என்பதும் உண்மைதான். அதில் டிஸ்அட்வான்டேஜுகளும் இருக்கின்றன.

   இதில் வெற்றிபெற தொடர்ந்து காணொளிகள் வெளியிடுங்க. ஒரு நேரத்தில் பார்வையாளர்கள் பலமடங்கு அதிகரிக்க ஆரம்பிக்கும் எனப் படித்திருக்கிறேன்.(அது வரை உங்களுக்குப் பொறுமை இருக்கணும். ஒரு ஸ்டேஜுக்கு அப்புறம் மற்ற யூடியூபினரின் செய்முறை நம்மை இன்ஃப்ளூயன்ஸ் செய்து, அதுபோல நம் மெதடில் செய்து வெளியிட ஆரம்பிப்போம். பின்ன.. அத்தனை ஐட்டங்களுக்கு எங்க போறது?).

   ஃபார்மட் நல்லாருக்கு. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

   Delete
  4. நான் சமையல் மட்டும் என நினைத்து ஆரம்பிக்கவில்லை நெ தமிழன், என் புளொக் போல, முடிஞ்சவரை அனைத்தையும் கலந்து போடோணும் என நினைக்கிறேன், ஆனா இப்போதைக்கு கொஞ்சம் பழகும்வரை சமையல் போடுவதுதான் ஈசியாக இருக்குது, குளிர் குறைஞ்சால், ஸ்கொட்லாந்தின் அழகை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் போட்டிடும் யோசனை இருக்குது பார்ப்போம்.

   வெற்றி பெறுவதென்பது, பணம் சம்பாதிப்பதையோ சொல்றீங்கள்? அது சாத்தியம் குறைவே:)), அது காலை கண் முழிப்பதில் இருந்து, இரவு உறங்கும் வரை காட்டுவோருக்கே வியூஸ் அள்ளும்:)) ஹா ஹா ஹா .. இப்படி வீடியோவுக்கு வராது:))
   அதிலும் இப்போ தடக்கி விழுந்தாலே யூரியூப் சனல் எல்லோருக்கும் இருக்கு... அடுத்து அதையும் தாண்டி வந்தாலும், பெரிதாக வராது, ஏனெனில் எங்கட காசு பெறுமதி அதிகம் என்பதால...
   இப்போ நம் நாடுகள் எனில் 5 பவுண்டுகள் வந்தாலே எவ்ளோ பெரிசுதானே, இங்கு நாம் என்ன பண்ணுவது, ஒரு தடவை சூப்பர்மார்கட் போனால் 70-100 பவுண்டுகள் வரை குடுக்காமல் வந்த நாள் இல்லை.. அதிலும் இப்போ கொரோனா ஆரம்பிச்ச பின்.. இப்படித்தான் செலவாகிறது.. இப்படி இருகையில்.. காசு பற்றி சிந்திக்கவில்லை.. ஒருவேளை கூரையைப் பிரிச்சுக் கொண்டு லட்சக்கணக்கில கொட்டினால் கொட்டட்டும் ஹா ஹா ஹா.. எங்கட ராசிக்கு ஓவ நைட்டில மில்லியனெயார் ஆகும் பலனாம்:)) ஹா ஹா ஹா.

   ஆனா எனக்கிது மிக மகிழ்ச்சியைத் தருது.. அதனாலேயே சனலில் வீடியோப் போடுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்குது.. அதிலும் எங்கட அப்பா, அம்மா, என் கணவர் வழிப்பரம்பரையிலேயே மீதான் இப்படி ஆரம்பிச்சிருக்கிறேன்.. அப்போ மீக்குக் ஆப்பியோ ஆப்பி:)) ஹா ஹா ஹா

   நன்றி நெல்லைத்தமிழன்...

   Delete
 10. என்னமோ இந்த பிளாகில் உப்பு காரம் இல்லாமல் இருக்கிறது. Blog is bland. ஊசிகுறிப்பும் அவ்வளவாக ஈர்க்கவில்லை. முன்னால் போகின்றவரை  விட்டுவிட்டால் அப்புறம் எப்படி முதலிடம் பெறுவது? கோபம் ஒருபோதும் தற்கொலை செய்துகொள்வதில்லை. அது மற்றவர்களால் அணைக்கப்படுகின்றது. அவ்வப்போது பிளாக் பக்கமும் எட்டிப்பாருங்கள். 

  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

   உண்மைதான் இம்முறை எனக்கே பிடிக்கவில்லை போஸ்ட், ஆனா இதன் மெயின் விசயம், யூரியூப் சனல் தொடங்கியதை நான் சொல்லவில்லையெல்லோ, அதைச் சொல்லவே இப்போஸ்ட்..

   //முன்னால் போகின்றவரை விட்டுவிட்டால் அப்புறம் எப்படி முதலிடம் பெறுவது?//
   அது ஆகவும் தூரப் போயிட்டார் முன்னால் போவபர் எனில், அவரைக் கலைப்பதை விட்டுப்போட்டு, பின்னால் வருபவர் முந்திடாமலாவது ஓடப் பழகோணும் எனச் சொல்ல வருகிறார் பு.பூஸானந்தா அவர்கள்:)) ஹா ஹா ஹா..

   அதுசரி ஜேகே ஐயா நீங்கள் சப்ஸ்கிரைப் பண்ணிட்டீங்களோ? சொன்னால்தான் எனக்குத் தெரியும்.. அங்கு கண்டுபிடிப்பது கஸ்டம். தமிழ்மண வோட் போல எனில் கண்டுபிடிச்சிடலாம் எல்லோ:))

   எல்லோர் புளொக் பக்கமும் வந்து கொண்டுதான் இருக்கிறேன், போஸ்ட் தான் போடவில்லை 2 மாதமாக..

   மிக்க நன்றி

   Delete
 11. சமையல் குறிப்பும், ஊசிக்குறிப்பும் அருமை.
  எண்ணம் அழகானால் எல்லாம் அழகுதான்.
  வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. மிக்க நன்றி.

   Delete
 12. “செக் + பேசனல் அட்வைஸர்க்கு வாழ்த்துக்கள். (பதிவி உயர்வுக்கு)

  எங்கள் புளொக்குக்காக செய்த என் கை வண்ணம் அழகு, பாராட்டுக்கள்.

  தத்துவ முத்துக்களும் அருமை.
  அடிக்கடி வாங்கோ அதிரா வலைப்பக்கம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோமதி அக்கா.. வருவேன் வருவேன் கோமதி அக்கா... மிக்க நன்றி.

   Delete
 13. முதலில் சேனல் ஆரம்பித்தமைக்கு வாழ்த்துகள்! தொடர்கிறேன்.

  ஸ்ரீராம் சொல்லி இருப்பது போல, என்னதான் சேனல் தொடங்கினாலும் Blog-ஐ மறந்து விட வேண்டாம். இது போல வேறு எதுவும் வராது!

  ஊசிக் குறிப்புகள் - நன்று.

  தொடரட்டும் பதிவுகளும் காணொளிகளும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

   உண்மைதான், புளொக் பக்கம் இடையிடையாவது போஸ்ட் போடோணும். மிக்க நன்றி வெங்கட்.

   Delete
 14. யூடிப் சேனல் தொடங்கியமைக்கு வாழ்த்துகள் சுட்டிக்கு செல்கிறேன் மஸ்ரூம் பக்கோடா எனக்கும் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

   மகிழ்ச்சி.. மிக்க நன்றி.

   Delete
 15. யு-டியூப் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ
   மிக்க நன்றி.

   Delete
 16. யூ ட்யூப் சானல் ஆரம்பித்ததிற்கும் தொடர்ந்து அதில் சமையல் குறிப்புக்கள் சொல்லுவதற்கும்/வீடியோவில் போடுவதற்கும் வாழ்த்துகள். சிறப்பாக அமையவும் பிரார்த்தனைகள். உங்கள் செக் நல்ல சுறுசுறுப்பு. உங்கள் சானலுக்கு உடனே விளம்பரம் கொடுத்துட்டாங்க! அவ்வப்போது ப்ளாக் பக்கமும் வாங்க. ஊசிக்குறிப்புக்கள்/ஊசி இணைப்புக்கள் வழக்கம் போல் நல்லா இருக்கு. தொடர்ந்து காணொளிகளைப் போடுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

   //உங்கள் செக் நல்ல சுறுசுறுப்பு//
   அதனாலதானே சனலுக்கும் செக் ஆக்கினேன்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி கீசாக்கா,.

   Delete
  2. அதிரா சமைக்க ஆரம்பித்தால், மத்தவங்கள்லாம் ப்ரார்த்தனை பண்ணினாத்தான் சிறப்பா வரும்னு கீசா மேடம் சொல்வதுபோல எனக்குப் புரியுது.

   பெரியவங்க சொன்னா அது பெருமாளே சொன்ன மாதிரி

   Delete
  3. ம்ஹூம்:)) இப்போ யூரியூப் வீடியோவுக்குச் சமைப்பதால, ஸ்னக், கேக் ஐட்டங்கள் எல்லாம் ஸ்கூலுக்கு எடுத்துப் போகிறேன், அவர்களுக்கும் ஹப்பி. பாசை புரியாவிட்டாலும், எனக்காக சப்ஸ்கிரைப்பும் பண்ணினார்கள்.. இன்றும் ஒரு கேக் கொடுத்தேன்... பிளீஸ் ஸ்கூலை விட்டு நின்றிடாதையுங்கோ, உங்கள் சாப்பாடு எங்களுக்கு வேணும் என ஒரு ரீச்சர் சொன்னா ஹா ஹா ஹா.

   Delete
 17. //அது என்னமோ கொஞ்சக்காலமாக ஒரு வெறுப்பு, புளொக்கே வேண்டாம் என ஒரு எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது, வேலையும் முழுநேரமானதும், எதுவும் வேண்டாம் என மனம் சொல்லியது, //
  கர்ர்ர்ர்ர்ர் :) ஆனா ஒன்று சொல்லியாகணும் இப்போ நான் முன்னை விட அதிக பிசி :) ஷிப்டை மாத்திட்டேன் அதிக நேரமும் hours செய்றேன் ஆனாலும் இப்போதான் நிறைய சுறுசுறுப்பு ஆனாற்போல் உணர்வு இன்னிக்கும் போஸ்ட் வரும்  அவ்ளோ எனர்ஜடிக்கா இருக்கே மீக்கு .எனது எனர்ஜிக்கு ரீஸன் நீங்களோன்னு தோணுது ஹஆஹாஆஆஆ 

  ReplyDelete
  Replies
  1. //எனது எனர்ஜிக்கு ரீஸன் நீங்களோன்னு தோணுது ஹஆஹாஆஆஆ //

   ஹா ஹா ஹா பூவோடு சேர்ந்த நார் மாதிரி... ஒருவரைப்பார்த்து ஒருவர் உசாராகிறோம், நல்ல விசயம்தானே நன்றி... ஆனா உங்களை எப்படியாவது ஒரு சனல் திறக்க வைக்கோணும்:))

   Delete
 18. // நான் குட்டியாக இருந்தபோது, எங்கட அண்ணன், அவர் படிக்கும் மேசை, ஒரு கோனரில் இருந்தது,//
  ஸ்ஸ்ஸ்ஸ் குட்டின்னு பொத்தாம்பொதுவா சொல்லப்படாது பூனைக்குட்டியா நாய்க்குட்டியா இல்லை குரங்குக்குட்டியான்னு டெலிவா சொல்லுங்க :)))))))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதுக்குப் பதில் சொல்ல ட்றுத்தைத்தான் கூட்டி வரோணும்:)) ஆனா வெள்ளி சனியிலதான் அவர் வருவாராக்கும்:))

   Delete
 19. பெர்சனல் அட்வைசர் சரி ஆனா இன்னும் பேமண்ட் வந்து சேரலை  :)))))))))))))))) ஒழுங்கா அக்கவுண்டில் பணம் போடாட்டி உங்க சேனல் படங்களை எடுத்து உங்களுக்கே போட்டி சானல் திறப்பேன் அது அந்த தேங்காய் அகப்பை மீதும் உங்க வீட்டு ப்ரீத்தி மிக்சி மீதும் சத்தியம் 

  ReplyDelete
  Replies
  1. //பெர்சனல் அட்வைசர் சரி ஆனா இன்னும் பேமண்ட் வந்து சேரலை //

   பேமண்ட்டை ட்ரான்ஃபர் பண்ணுவதற்காக பட்டினை அமத்த வந்த வேளை, உங்கட கொமெண்ட் கண்ணில பட்டுதா:)) நிறுத்திட்டேன், ஏனெனில் நீங்கதான் எனக்கு பீஸ் தரோணும்:)).. என்னால நீங்க ஆப்பியானதைப்போல சுறுசுறுப்பானதைப்போல ஃபீல் பண்ணுவதா சொன்னீங்களே:))... ஹா ஹா ஹா இருப்பினும் நன்றி.

   //உங்க சேனல் படங்களை எடுத்து உங்களுக்கே போட்டி சானல் திறப்பேன் அது அந்த தேங்காய் அகப்பை மீதும் உங்க வீட்டு ப்ரீத்தி மிக்சி மீதும் சத்தியம் //

   ஹா ஹா ஹா முதல் போஸ்ட்டோடயே யூரியூப் ரீம், உங்கட சனலை இழுத்து மூடிடுமாக்கும்:))

   Delete
 20. ///ஆனால் சம்பளம் இன்னும் தீர்மானிக்கவில்லையாக்கும்:)). பாருங்கோ மூக்கில கட்ட வேண்டியதைத் தலையில கட்டிக்கொண்டிருக்கிறா கர்ர்ர்ர்:)).//

  கர்ர்ர் அது scarf :)) வேணாம் அப்புறம் ஒன்னு சொல்லிடுவேன் ஹாஆஆ

  ReplyDelete
  Replies
  1. ///வேணாம் அப்புறம் ஒன்னு சொல்லிடுவேன் ஹாஆஆ///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்ன சொல்ல வாறீங்களெனத் தெரியுதே:))).. அது உத்துப்பாருங்கோ.. வரி வரியா அழகிய சட்டை:))

   Delete
 21. குஷன் கவர் அழகா இருக்கு :) எனக்கு மிஷினில் கொஞ்சம் பயம் அதனால் எம்ப்ராய்டரி கொஞ்சம் அழகா வராது .ஹேண்ட் எம்ப்ராய்டரி செய்வேன் .

  ReplyDelete
  Replies
  1. இது ஃபப்றிக் பெயிண்டிங் எல்லோ போட்டிருக்கிறேன்.

   Delete
  2. இல்லை அந்த குஷன்ல கார்னர் ஹீம் எம்ப்ராய்டரி நீங்க போட்டதுதனே 

   Delete
 22. ஊசிகுறிப்பு நல்லா இருக்கு :))) ஏன்னா எனக்கு புரியலையே ஹீ ஹே .எல்லாரும் சொல்லிட்டாங்க நானும் சொல்லிடறேன் அது ஒருகாலமும் பிளாக்கை கைவிடாதீங்க .அதில்தான் நாம் துவங்கினோம் பயணத்தை வாரம் ஒரு பதிவு போடுங்க .இங்கே உரையாடுவது உங்கள் மெண்டல் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் .அனுபவபூர்வமா சொல்றேன் 

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அஞ்சு, விடக்கூடாதுதான்.. விடமாட்டேன் ஆனா ரைம் கிடைச்சால் வீடியோ எடுக்கலாமே எனத்தான் மனம் சொல்லுது.. லீவிலதானே விடியோவும் எடுக்கலாம்.. ஆனா நேற்றும் இன்றும் ரெஸ்ட் எடுக்கிறேன் அதனாலதான் புளொக் எழுத முடிஞ்சது.. மிக்க நன்றிகள் அஞ்சு.. நித்திரை வருது விடிய எழும்போணும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 23. வணக்கம் சகோதரி

  தங்கள் செய்தி கண்டு மகிழ்வடைந்தேன். புது யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ளமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இப்போதுதான் பதிவை படித்தவுடன் முதலில் தங்கள் யூடியூப் சேனல் வருகையை பிரகடனப்படுத்தி பதிவிட்ட சகோதரி ஏஞ்சல் அவர்கள் வலைப்பக்கம் சென்று அங்கும் விபரங்கள் படித்து வாழ்த்துகள் தெரிவித்து விட்டு வருகிறேன். மீண்டும் இங்கும் வாழ்த்துகள்.

  படங்கள். தலையணை உறை தயாரிப்பு வேலைகள் எல்லாம் நன்றாக உள்ளது. ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு வாசகங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. மற்றபடி எல்லோரும் சொல்வது போல் உங்களுக்கு ஒரு விண்ணப்பம். எங்களையெல்லாம் மறந்து விடாமல். அடிக்கடி இங்கும் வருகை தந்தபடி இருங்கள். உங்களுடன் வலையில் பேசுவதே ஒரு சந்தோஷம் எனக்கு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

   மிக்க நன்றி மிக்க நன்றி.. வாழ்த்துக்களோடு, யூரியூப் போய் சப்ஸ்கிரைப்பும் பண்ணிடுங்கோ ஹா ஹா ஹா...

   //எங்களையெல்லாம் மறந்து விடாமல். அடிக்கடி இங்கும் வருகை தந்தபடி இருங்கள். உங்களுடன் வலையில் பேசுவதே ஒரு சந்தோஷம் எனக்கு.//

   சே..சே.. நான் போஸ்ட் போடாவிட்டாலும், முடிஞ்சவரை விட்டுவிட்டாவது எல்லோர் பக்கமும் எட்டிப் பார்க்கிறேன், பார்ப்பேன்ன்.. மிக்க நன்றி கமலாக்கா.

   Delete
 24. அன்பு அதீஸ்,
  சில பல காரணங்களால் எழுத முடியாமல் போவது சகஜம் தான். இந்த வீட்டடைப்பு நேரம் எல்லோரையும் பதம் பாஅர்க்கிறது.
  நம் கமலா, கீதா எல்லோரும் அவர்களுடைய இயல்பான நல்ல முணத்தினால்
  எல்லோரையும் போற்றி அரவணைத்துச் செல்கிறார்கள்.
  உங்கள் யூடியூப் சானலுக்கு
  வாழ்த்துகள்.
  மேலும் மேலும் வளரவேண்டும்.

  நீங்கள் கொடுத்திருக்கும் அவக்காடோ இங்கே தினமும் உண்டு.
  மகள் வித விதமாக யோசித்து செய்வாள்.
  பிள்ளைகளுக்கு நாக்கு முழ நீளம்.:)

  அறிமுகம் செய்த அன்பு ஏஞ்சல் நல்லதொரு பக்கத்துணை.
  இருவரும் என்றும் நலமாக இருக்க வாழ்த்துகள் மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வல்லிம்மா வாங்கோ.. உண்மைதான், ஒரு உற்சாகம் பிறந்தால்தான் எழுத முடியும்..

   மிக்க நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கு.

   Delete
 25. யூப்டிப் வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.ஊசிக்குறிப்பு அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வாங்கோ... மிக்க நன்றி, நீங்கள் சப்ஸ்கிரைப்பண்ணியதைக் காட்டியது சனல்:)., நன்றி.

   Delete
 26. பல நேரத்தில் இந்த வெறுமை உணர்வுதான் வலைப்பக்கம் போகக்கூடாது/எழுத்த்க்கூடாது என்று சோம்பேறித்தனம் எட்டிப்பார்க்குது![[

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நேசன், இங்கத்தைய காலநிலை மாற்றமும் ஒரு காரணம். மிக்க நன்றி.

   Delete
 27. யு டியூப் சேனல் தொடங்கியுள்ளதற்கு பாராட்டுகள். சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ தம்பி மொகமெட், கன நாட்களாகக் காணவில்லை உங்களை... ஓ காட்டியது எனக்கு, மிக்க நன்றி. நீங்களும் வைத்திருக்கிறீங்கள் சனல், நானும் வந்து சப்ஸ்கிரைப் பண்ணி பெல் ஐயும் அமுக்கி விட்டேன்:)).. உங்கள் சனல் பிரியோசனமாக இருக்கும் நமக்கு , கொஞ்சக் காலமாக எதுவும் போடாததுபோல இருக்கே..

   மிக்க நன்றி.

   Delete
 28. புதிய யூ டியூப் சேனல் தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துகள்!உங்கள் சேனலை பார்த்தேன், அதீஸ் முகத்தை காட்டாதது ஏனோ? கண் பட்டு விடும் என்ற பயமா? வழக்கம்போல் ஊசிக்க  குறிப்புகள் பிரமாதம். அதில் ஒரு டவுட், நான் உங்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமா? ஏனென்றால் நீங்கதானே எனக்குப் பின்னால் யூ டியூப் தொடங்கியுள்ளீர்கள்??  ஹாஹா!  

  ReplyDelete
 29. சப்ஸ்கிரைப் பண்ணியாச்சு

  ReplyDelete
 30. சிறப்பு. உங்கள் சமையலை நானும் பின் தொடர்கிறேன். வலைத்தளத்தை விட்டு விடாதீர்கள்.

  ReplyDelete
 31. அவகேடோ குறிப்பு அருமை. வாழ்த்துகள். அன்புடன்

  ReplyDelete
 32. நானும் வந்து உங்கள் யூடியூப் பார்த்தேன் வாழ்த்துகள் அன்புடன்

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.