நல்வரவு_()_


Friday, 18 December 2020

 தாமதமானாலென்ன “வாழ்த்துக்கள்”👭 

என்றும்  வாழ்த்துக்கள் தானே:))

04.12.2020
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சு
[முகம் காட்ட மாட்டாவாமே:) ஒருவேளை அதிராவுக்கு அக்காவாகத் தெரிஞ்சிடும் என்றோ:)) கர்ர்ர்ர்:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))]

அன்று திகதியோ நான்கு, மாதமோ மார்கழி... என்ன குழந்தையோ இப்படி அட்டகாசம் பண்ணி உதைக்கிறதே:), அநேகமாக ஆண்குழந்தையாகத்தான் இருக்க வேண்டும், அதனாலதான் இப்படித் துடிக்கிறதே என நினைத்தபொழுது, உள்ளே ஒரு குரல்:).. பொறுத்தது போதும் பொங்கி எழு என... குரல் காதில் கேட்ட மாத்திரத்தில்.. அக் குழந்தை அம்மாவின் நீர்த்தடாகத்தில் டைவ் அடிச்சுத் திரும்பி, ஒரே உந்துதலில் வெளியே வந்து குதித்த நாள்..

அக்குழந்தைக்கு இன்று 80 ஆவது அகவை:))... [வரலாறு முக்கியம் எல்லோ:)].

04.12.2020... அன்று பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சுவுக்குத் தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கவிதை ஒன்று ரெடி பண்ணி இருந்தேன் அன்று போட, ஆனால் அன்று போட முடியாத மனநிலை என்பதனால இன்று சோட் அண்ட் சுவீட்டான வாழ்த்தோடு வாழ்த்துகிறேன்.. என்றும் நலமோடும் எல்லா வழமோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.

👭👭👭👭👭👭👭👭👭👭👭
=======================================================
💟💟========================================💟💟
அஞ்சு பிறந்து வளர்ந்து அஞ்சுவின் 40 ஆவது பிறந்தநாள் அன்று நெல்லைத்தமிழனின் திருமணநாள் வந்தது...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் நெல்லைத்தமிழன் & அண்ணி🌺
என்றும் நலமோடு, பல்லாண்டு காலம், மனமொத்த தம்பதியாய் வாழ வாழ்த்துகிறோம்
🌼🌼🌼🌼🌼🌼
========================================
இந்த இரு நிகழ்வுகளுக்கும் பின்புதான் இன்னொரு குழந்தை பிறந்தது:).. அதுதான் கோபு அண்ணன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபு அண்ணன்... பல்லாண்டு காலம், அந்த பக்கோடாப் பக்கட்டுக்கள் சுவீட்களோடு நலமாக நீடூழி வாழ வாழ்த்துகிறோம்..
08.12.2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
================================

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் ஸ்நேகாப் பிரியருக்கு எமது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனிமரம் நேசன்
😅😅😅😅😅😅😅😅😅😅
=======================================
இந்த ஆண்டு முடிவதற்குள் மீ.கூ.ச. தலைவராகப் பொறுப்பேற்று நான்கு இலைச் சின்னத்துடன்🍀,அரசியலில் குதிக்கும், நாளை 19.12.2020 இல் தன் பிறந்தநாளைக் கொண்டாடும்  கில்லர்ஜி அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀


 


💥💥💥💥💥💥💥💥💥💥

111 comments :

  1. ஆஆஆ!!! ஷோட் அன்ட் ஸ்வீட்ட்டாக இருந்தாலும் அட்டகாசம் கலக்கிட்டீங்க :))))))))) இருங்க ஒவ்வொண்ணா வரேன் 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. எதை ஒண்ணொண்ணா எடுத்து வாறீங்க? எனக்குத்தரவிருக்கும் வைர மோதிரம், நெக்லெஸ், ஒட்டியாணம் இவற்றையோ?.. கெதியாக் கொண்டுவாங்கோ ஆட்கள் நித்திரையால எழும்பி வரமுன் நான் கொண்டுபோய் ஒளிச்சிடுறேன்:)..

      Delete


    2. வயதான அனைவருக்கும் இந்த குழந்தையின்(மதுரைத்தமிழனின்) பிறந்த நாள் மற்றும் திருமண நல்வாழ்த்துக்ள்

      Delete
    3. வாங்கோ ட்றுத் வாங்கோ.. உங்கட கொமெண்ட்டைக் கீழே காணவில்லையே எனத் தேடிக் களைச்சிட்டேன்:))..

      //வயதான அனைவருக்கும்///
      ஹா ஹா ஹா நன்றி நன்றி மீக்கு ஜலதோஜம்.. சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே:) ஜந்தோசம் பொயிங்குதே இதைப் பார்த்து ஏனில் இதில அஞ்சுவும் அடக்கமெல்லோ:))

      // இந்த குழந்தையின்(மதுரைத்தமிழனின்) //
      வயசானாலே குழந்தைதானாமே:)).. இதனாலதான் அதிரா மட்டும் சுவீட் 16 ஆக்கும்.. ஹா ஹா ஹா நன்றி ட்றுத்.

      Delete
  2. போஸ்ட் தாமதமானாலும் பரவாயில்லைஎனக்கு  நேசனுக்கு கோபு அண்ணாவுக்கு கில்லர்ஜீக்கு எல்லாருக்கும் பரிசு மறக்காம அனுப்பிடுங்க ,அப்புறம் நெல்லைத்தமிழனுக்கு அனிவேர்சரி கிஃப்ட் அண்ணா அண்ணி க்கு   ரெட் கோல்ட்டில் மோதிரம் அனுப்ப போறேன்னு சொன்னிங்களே அனுப்பிட்டிங்களோ :))) 

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு, போஸ்ட்டை நீங்க போடுங்கோ கிஃப்ட்டை நான் குடுக்கிறேன் என ஒப்பந்தத்தில மை அடையாளம் வச்சீங்களே. நம்பியெல்லோ போஸ்ட் போட்டேன்:))..

      நோ நெ த.. அண்ணாக்கு கோல்ட் அலெர்ஜி ஆம்:)).. அண்ணிக்கு நகை அலங்காரம் எல்லாம் பிடிக்காதாம் என வட்சப்பில மெசேஜ் போட்டவ:)..

      Delete
  3. மியாவ் அந்த quilling கார்டு சூப்பரா இருக்கே ஆஆவ் 

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஞ்சு நன்றி.. வெள்ளரிப்பிஞ்சு போன்ற என் இந்தக் கை விரல்களாலதான் செஞ்சேன் என்றால் நம்பவோ போறீங்கள்:))))

      Delete
  4. ///அக்குழந்தைக்கு இன்று 80 ஆவது அகவை:))... [வரலாறு முக்கியம் எல்லோ:)].////


    கர்ர்ர்ர்ர்ர் :) ஹஹ்ஹா 
    அதுசரி கவிதை எங்கே அதை போட்டாத்தான் நம்புவேன் 

    ReplyDelete
    Replies
    1. கவிதையில ஸ்ரீலங்கா கொழும்பெல்லாம் வருது:)) எதுக்கு வம்பென விட்டுவிட்டேன் ஹா ஹா ஹா...

      Delete
  5. இந்த டிசம்பர் மாதம் எப்பவும் ஸ்பெஷல்தான் கோபு அண்ணன் ,நேசன் கில்லர்ஜீ ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் நெல்லைத்தமிழன் தம்பதியருக்கு மணநாள் நல்வாழ்த்துக்கள் 

    ReplyDelete
    Replies
    1. ஓம் அஞ்சு, ஜனவரி பிறந்திடப்போகுதென முட்டி மோதிக்கொண்டு எல்லோரும் பிறந்திருக்கிறீங்கள்.. நெல்லைத்தமிழனும் ஜனவரி வந்தால் ஒரு வயசு கூடிடும் பிறகு அண்ணி மனம் மாறிட்டாலும் என அவசரமாகத் தாலி கட்டிட்டார்:) ஹா ஹா ஹா... மொத்தத்தில எல்லோரும் அவசரக் கொயந்தைகள்:)).. அதிரா மட்டும்தேன்ன் நிதானமாக ஆறுதலாகப் பிறந்த கொயந்தை ஆக்கும்:)) க்கும்..:)) ..க்கும்:)).

      Delete
  6. ஆனா அதிரா கில்லர்ஜீக்கும் நேசனுக்கும் செம பொருத்தமான படங்கள் ஹாஹாஹா .குபீர்னு சிரிச்சிட்டேன் 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வரும் புது வருடத்தில, நேசனுக்கு ஸ்நேகா பச்சைக்கொடி காட்டட்டும்:)).., கில்லர்ஜி அரசியலில்[உகண்டாவில எனினும் ஓகே:)] டமார் எனக் குதிப்பாருக்கும்:)) இருவருக்கும் எமது வோட்டுக்கள் எப்பவும் உண்டு:))

      Delete
    2. ஆமா அஞ்சு அக்கா அழகான சினேஹா படம் அதுவும் அந்த நீலக்கலர் புடவை மிகவும் ரசிக்கலாம்![[என் கைக்கு முன்னர் அப்படம் கிடைத்து இருந்தால் கொஞ்சம் கவிதை எழுதி இருக்கலாம் பிரெஞ்சுக்காதலிக்கு! படத்தை சுட்டாச்சு விரதம் முடிய வலையை தூசு தட்டுவோம் கொர்னா ஓய்வில்.

      Delete
  7. world டூர் செம :) செலவெயிலலாம விசா பாஸ்போர்ட் இல்லாம இந்த கொ மட்டும் உலகையே வலம்  வந்துருச்சு .
    பேசாம கொ வுக்கும் பிறந்த நாள் வாழ்த்து போட்டிருக்கலாம் :) அதுவும் சந்தோஷமா bye சொல்லிட்டு போயிருக்கும் :)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது ஒரேயடியாகவெல்லாம் பாய் சொல்லிடாதாம்.. மெதுவாகத்தான் கப்பலேறும்போல...:)..

      Delete
  8. //ஒருவேளை அதிராவுக்கு அக்காவாகத் தெரிஞ்சிடும் என்றோ:)) கர்ர்ர்ர்:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))]//
    கர்ர்ர்ர்ர் :))))))))))))))))))))))பொன்னியின் செல்வனில் நான் ஹீரோயினா  நடிக்கிறேன்னு சொன்னா நம்பவா போறீங்க :)   

    ReplyDelete
    Replies
    1. என்னாதூஊஊஊஊஊஉ பொன்னியின் செல்வனிலயோ?:)) அப்போ நீங்க கி.மு காலத்து ஆளோ:)) அவ்வ்வ்வ்வ்வ்வ் நெல்லைத்தமிழன் அப்பவே சந்தேகப் பட்டார் அது சரியாத்தான் இருக்குதுபோல:)) ஹா ஹா ஹா..

      Delete
  9. நன்றி அஞ்சு, உங்களுக்காகத்தான் இன்று அவசரமாகப் போஸ்ட்டைப் போட்டேன்ன்.. சனி ஞாயிறு vஅருவது கஸ்டம் என்பதால.

    [im]https://rlv.zcache.com/cute_scottish_fold_noodles_cat_thank_you_postcard-r3990d227e5a94fcf8fe2669dd78f53cc_vgbaq_8byvr_540.jpg[/im]

    ReplyDelete
  10. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அஞ்சு.நல்லாரோகியமாக என்றும் மகிழ்வோடு வாழ வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  11. நெல்லைத்தமிழனுக்கு இனிய மணநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரியசகி அவர்களுக்கு

      Delete
  12. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கோபு அண்ணா!

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தனிமரம் நேசன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பிரியசகி அக்கா.

      Delete
  14. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கில்லர் ஜீ அண்ணா!

    ReplyDelete
  15. ஹாய் அதிரா? கனநாளாகுது. இதற்கு முன்பதிவை இப்போதான் பார்த்தேன். அழகான குவ்லிங். அழகான வாழ்த்து பதிவு. பிறக்கும் புத்தாண்டு ஆவது நல்லவிதமாக பிறக்கவேணும். 2020 மறக்கமுடியாத ஆண்டாக மாறிவிட்டது அனைவருக்கும்..
    என்னது அண்ணாஜீ கட்சி ஆரம்பிச்சிட்டாரா. அப்ப எனி வரும் எலெக்‌ஷ்னில நிக்கிறாரோ? பிரச்சாரம் ஆரம்பம் போல....
    கொரோனா ஜோக் சூப்பர்.ஹா..ஹா..ஹா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. எனக்கு இன்று நேரம் ஒதுக்கிப் பதில்கள் போட முடியவில்லை... வருந்துகிறேன்.. நாளைக்குள் போட்டு முடித்திட வேண்டும் என நினைக்கிறேன்.

      //அழகான குவ்லிங்.//
      ஆமா...ஆமா ரெம்ம்ம்ப அழகாயில்ல?:)) ஆரு பெத்த பிள்ளை செய்ததோ:)) அந்த வைரவருக்கே வெளிச்சம்:))...

      கில்லர்ஜி நான்கு இலைக் கட்சியில இணைஞ்சிட்டார்:)).. மீசை வைத்தோருக்கே அக்கட்சியில் முன்னுரிமையாம்:)) நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

      அனைவரையும் தனித்தனியே வாழ்த்தியமைக்கும், போஸ்ட் பார்த்தவுடன் வந்தமைக்கும் நன்றி அம்முலு. போனமுறைப் போஸ்ட் ஏனோ பலருக்கு டாஸ்போர்ட்டில் தெரியவில்லை என நினைக்கிறேன் நன்றி .

      Delete
  16. வருடம் முடிவதற்குள் வாழ்த்துகள் போட்டதற்கு நன்றி.

    இந்த வருடமே நாம் மறைவது வரை நினைவில் இருக்கும்படியாகச் செய்துவிட்டது. கமலஹாசன் ஒரு படத்தில் சொல்வதைப்போல, யாரைப் பார்த்தாலும் மாஸ்க் இருக்கா என செக் பண்ணுவது, கொஞ்சம் இருமுவதுபோலத் தெரிந்தாலும் அலர்ட் ஆவது, வெளி ஆட்கள் ரிப்பேர் வேலைக்கு வந்தாலே பசங்க அவங்க ரூமை விட்டு வெளியே வராதது, என பல்வேறு கலவர நிகழ்ச்சிகள் இந்த வருடம்.

    வருகின்ற வருடமாவது சிறப்பாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      //வருடம் முடிவதற்குள் வாழ்த்துகள் போட்டதற்கு நன்றி.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உண்மையில ஜனவரியிலேயே வாழ்த்துக்களையும் போட்டு போஸ்ட் போடலாம் என இருந்தேன், பின்பு ஏதோ மனதில் ஒரு உந்துதலால் போட்டு விட்டேன்.

      அதிலயும் கடந்த இரு வருடமாக நான் மறந்து போய் அஞ்சுவினுடையதை மட்டும் போட, நீங்கள்தான் உங்கள் திருமணநாளை நினைவுபடுத்திப் பின்பு இணைத்திருந்தேன், ஆனா இம்முறை உங்களுடையதும் நினைவாக வைத்துப் போஸ் போட இருந்தேன் ஆனாப் பாருங்கோ நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்குமாமே:))..

      ஹா ஹா ஹா ஆனா இங்கு எங்களிடத்தில் பெரிய பதட்டம் அலேர்ட் என எதுவுமில்லை, கூட்டத்துக்குள், பொது வாகனம், மற்றும் சொப்ஸ், மோல்ஸ் இவற்றுக்குள் மட்டும்தான் மாஸ்க், காரில் எல்லாம் தேவையில்லை, வீட்டுக்கு வேலைக்கு வருவோரும் போடுவதுமில்லை, நமக்கும் பழகிவிட்டதைப்போல ஒரு உணர்வு. விதியிலே என்ன நடக்கோணும் என இருக்கோ அது நடந்துதான் தீரும், இல்லை எனில் இல்லை.. பகவத்கீதை:))..

      உண்மைதான் 2019 பறவாயில்லை, 20 தான் கலங்கடித்துவிட்டது.. இனிவரும் வருடங்கள் எல்லாம் நன்றாக இருக்கட்டும்... யூனிவசிட்டிப் பிள்ளைகள்தான் பாவம், எஞோய் பண்ணும் நேரம், வீட்டில் இருந்தெல்லோ படிக்கினம்... ஆனா நண்பர்களோடு சுற்றுகிறார்கள்.

      Delete
  17. க்வில்லிங் கார்ட் ரொம்ப நல்லா செய்திருக்கீங்க. பாராட்டுகள்.

    ஆனா, வாழ்த்துகள் இடுகைல உங்க கையால செய்த கேக்குகள் போடலையே... கலாய்ப்போம் என நினைக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. //க்வில்லிங் கார்ட் ரொம்ப நல்லா செய்திருக்கீங்க. பாராட்டுகள்.///
      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் உப்பூடி எல்லாம் அவசரப்பட்டிடக்கூடாது:)). கார்ட்டுகே மேலே அதிரா செய்ததெனச் சொல்லியிருந்தால் பாராட்டியிருப்பீங்களோ எனச் சந்தேகம் ஹா ஹா ஹா:))....

      உங்கள் பாராட்டுக்கள் அந்த கூகிளில் செய்து போட்ட பிள்ளைக்குப் போய்ச் சேரட்டும்.... சரி சரி எனக்குச் சொனனலும் நான் ஒண்ணும் வாணாம் ஜொள்ள மாட்டேன்:))..

      என்னாது கேக்கோ:)).. ஹா ஹா ஹா இம்முறை நிறைய நினைச்சிருந்தேன் ஆனா எதுவும் முடியாமல் போச்சு... நான் எப்போ கலாய்ப்புக்கெல்லாம் பயப்பிட்டு இருக்கிறேன்:)).. இது எந்தச் சலசலப்ப்புக்கும் அஞ்சாத புலிக்காட்டுப் பூஸாக்கும்:)) ஹா ஹா ஹா... ரெசிப்பிகள் விரைவில வரும் ரெடியாக இருங்கோ.. இம்முறை இங்கு கிறிஸ்மஸ் உடன் பழையபடி ஏப்ரல் போல லொக்டவுன் வரப்போகிறதாம், அதனால ஸ்கூல்களும் ஆரம்பமாக லேட் ஆகும்போல இருக்கு... அதுக்குள் என் கை வண்ணத்தைக் காட்டிடுவேனாக்கும்:))..

      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்..

      Delete
  18. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஏஞ்சல்.  வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  19. இனிய திருமண நாள் வாழ்த்துகள் நெல்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. என் மனைவியின் பிறந்தநாளையும் என் திருமண நாளையும், நினைவில் வச்சுக்கறதுக்கு நான் படற பாடு இருக்கே....ஹாஹா.

      முன்பெல்லாம் என் நண்பன் பிறந்தநாள் மட்டும் நான் சரியா நினைவில் வச்சுப்பேன். அதற்கு ஒரு வாரம் முன்னால் வரும் மனைவியின் பிறந்த நாளை மறந்துடுவேன்.

      Delete
    2. மனைவியைப்பற்றிய விசயங்களை மறப்பதிலும் கணவன்மாருக்கு ஒரு பெருமை:)) கர்ர்ர்ர்:)) ஆனா ஒரு கிழமை மனைவி இல்லை எனில் மட்டும் எப்போ போனவ, எப்போ வருவா என்பதெல்லாம் கரெக்ட்டா நினைவில இருக்குமாக்கும்:)) ஹா ஹா ஹா...

      ஃபோனில எலாம் போட்டு வையுங்கோ நெ தமிழன்:))

      Delete
    3. இது பிரபலமாக எல்லோரும் சொல்வது என்பதால் என் பாஸின் பிறந்தநாளை நான் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்.  நவம்பர் ஆறு.  அனுஷ் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக (கமலையும் சொல்லலாம், போனாப்போகுது!) பிறந்திருக்கிறார்.

      Delete
    4. ஆஆஆஆஆஆ நானும் பாடமாக்கிக் கொள்கிறேன்...

      //அனுஷ் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது ரெம்ம்ம்ம்ம்ப ஓவரூஊஊஊஊ ஜொள்ளிட்டேன்ன்:))

      Delete
  20. கோபு ஸாருக்கு நமஸ்காரங்களுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நேசன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிகள் சிரிராம் சார்.

      Delete
  22. அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள் கில்லர் ஜி.

    ReplyDelete
  23. எங்கம்மா அப்பவே சொன்னுச்சு ஜோக்கை ரசித்தேன்.  சிரித்தேன்!  இந்த ஜானரில் இன்னொரு ஜோக் உண்டு, கேள்விப்பட்டிருப்பீர்கள்.  "நானும் எங்கப்பாவைப் போலவே டாக்ட்டராகணும்னு ஆசைப்பப்பட்டேன்"  "உங்கப்பா டாக்டரா?"  "ஊஹூம்..   அவரும் டாக்டராகணும்னு ஆசைப்பட்டார்"  இன்னொன்றும்! (2)  "என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?"  "அப்பாவுக்குத் துணையா இருக்கேன்"  "அவர் என்ன வேலை செய்கிறார்?"  "சும்மாதான் இருக்கார்"

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... ஹா ஹா ஹா உங்கள் முதல் ஜோக் தெரியும் 2 வது இப்போதான் பார்க்கிறேன் சிரிக்கிறேன்.

      இன்னொன்றும் இதேபோல ஒன்று இருக்குது..

      * நீங்க எங்க அப்பாவைப்போலவே பாடுறீங்க சேர்

      + ஓ உங்கட அப்பா அவ்ளோ நல்லாப் பாடுவாரோ?

      * இல்ல சேர், அப்பாவுக்குப் பாடவே தெரியாது:))..

      Delete
  24. கொரோனா ஜோக்...   வேதனையுடன், வெறுப்புடன், கோபத்துடன் சிரித்தேன்!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பாவம் ஒரு அப்பாவி வாயில்லாப் பிள்ளப்பூச்சியை ஏன் வெறுப்புடன், கோபத்துடன் பார்க்கிறீங்க ஸ்ரீராம்?:) ஹா ஹா ஹா...

      Delete
    2. என் பிரியத்துக்குரிய மாமாவை அதனால் இழந்தேன்.

      Delete
    3. பாஸ், மற்றும் மகனுடன் நானும் அவஸ்தைப்பப்பட்டேன்.

      Delete
    4. தெரியும் ஸ்ரீராம், அதனாலதான் கொரோனா அங்கிளைத் திட்டப் பயமாக இருக்குது:))... மானே தேனே என வஞ்சகப்புகழ்ச்சி செய்யோணும்:) இல்லை எனில் அதன் காதுக்குக் கேட்டிடுமொ எனப் பயமாக இருக்குது ஹா ஹா ஹா.

      Delete
  25. கொரோனாவுக்கு பிறந்த நாள் வந்துடும் போலிருக்கா?  ஆல்ரெடி ஒரு வருஷம் ஆயாச்சே....   வூஹானில் அது ஜனித்து இன்றோடு ஒரு வருடம் இரண்டு மாதங்களாகிறதே...

    ReplyDelete
    Replies
    1. டிசம்பரிலதானே சைனாவில் ஆரம்பமானது??? இப்பூடி கரெக்ட்டா மாசம் திகதி எல்லாம் நினைவில வச்சிருக்கிறீங்களே.. டக்கெனச் சொல்லுங்கோ பார்ப்போம் அண்ணியின் பிறந்தநாளை.. சத்தமாகச் சொல்லுங்கோ:)) ஹா ஹா ஹா..

      Delete
  26. வடிவேலு ஜோக் டூமச்!  

    நான் ரோபோ இல்லை, நான் ரோபோ இல்லைன்னு கதறிக்கதறி ஒவ்வொரு கமெண்ட்டும் போட்டிருக்கேன்.  

    ReplyDelete
    Replies
    1. //நான் ரோபோ இல்லை, நான் ரோபோ இல்லைன்னு கதறிக்கதறி//

      ஓ அப்படியோ? என்பக்கத்திலும் அதைக் கேட்கிறதோ? செட்டிங்கில் ஏதோ தட்டிவிட்டேனோ? நேசன் பக்கத்தில மட்டும்தான் அப்படிப் பிரச்சனை வரும் எனக்கு இங்கிருப்பது தெரியாதே.. செக் பண்ணுகிறேன் உள்ளே போய்..

      நன்றி ஸ்ரீராம்.

      அனைவரையும் கதறிக் கதறி ஹா ஹா ஹா[ரோபோ இல்லை என:)] தனித்தனியே வாழ்த்தியமைக்கு மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
    2. உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.  எல்லா தளங்களிலும் வருகிறது இந்த கேப்ச்சா தொல்லை.  நமக்கு நம் பிளாக்கில் நாமே கமெண்ட் இடும்போது மட்டும் வராது! 

      Delete
    3. ஓ அப்படியோ? ஆனா எனக்கு இன்னும் எந்த புளொக்கிலும் அப்படி வரவில்லையே ஸ்ரீராம், நேசன் புளொக் தவிர்த்து. நன்றி மீண்டும் வந்து சொன்னமைக்கு.

      Delete
  27. அடடே எனது பிறந்தநாளை உலகறிய வைத்த அதிராம்பட்டணம், அதிரடி அதிராவுக்கு அஞ்சு கிலோ அதிரசமாவுடன் நன்றி.

    இங்கு என்னை வாழ்த்திய ஏஞ்சல் மற்றும் பிரியசகி அவர்களுக்கும் நன்றிகள் கோடி

    ReplyDelete
    Replies
    1. //அஞ்சு கிலோ அதிரசமாவுடன் நன்றி.// - ஒண்ணு அதிரசம் கொடுங்க. இல்லை கேக் கொடுங்க. அவங்ககிட்ட அதிரசமாவைக் கொடுத்தா என்ன பண்ணுவாங்க?

      எப்படித்தான் அதிராவை கொடுமைப்படுத்தணும் அவங்களுக்கு கஷ்டம் (இல்லை இல்லை.. அவங்க வீட்டில் உள்ளவர்களுக்கு) கொடுக்கணும்னு நினைக்கத் தோணுதோ இந்த கில்லர்ஜிக்கு

      Delete
    2. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. இம்முறை பிறந்தநாளைப் பேத்தியுடன் கொண்டாடியிருப்பீங்கள், ஆனா போக முடியாமல் இருந்திருக்கலாம்.. பிறந்தநாளை இப்படிக் கொண்டாடியதால் உங்களுக்கு இம்முறை முதலமைச்சர் பதவி கிடைச்சிடும் கில்லர்ஜி:)).. பதவிக்கு வந்தால் எங்களையும் கவனிக்கோணுமாக்கும்:))..

      //அஞ்சு கிலோ அதிரசமாவுடன் நன்றி//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு முறுக்குமா, பக்கோடா மா, வடை மா எனில்கூட ஓகே இது இனிப்பாக இருக்கே அதை இனிப்புப் பிரியர் நெ தமிழனுக்கே குடுங்கோ:))

      நன்றி கில்லர்ஜி.

      Delete
    3. @நெ த
      //ஒண்ணு அதிரசம் கொடுங்க. இல்லை கேக் கொடுங்க. அவங்ககிட்ட அதிரசமாவைக் கொடுத்தா என்ன பண்ணுவாங்க?//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் இம்முறை செய்த தொதலும் பனானா கேக்கும் அதுவும் நிறைய வோல்நட்ஸ் போட்டுச் செய்தேனாக்கும்.. அப்படியே ஃபிரிஜ்ஜில் இருக்குது:))) அதில அதிரச மாவை என்ன பண்ணுவேன்...?:))..ஹா ஹா ஹா..

      Delete
    4. //அப்படியே ஃபிரிஜ்ஜில் இருக்குது:// - அடடா...இந்த முறையும் சரியா வரலையா? அப்படி விட்டுடாதீங்க. மீண்டும் மீண்டும் டிரை பண்ணுங்க. எங்களோட அடுத்த திருமண நாளுக்குள்ள உங்களுக்கு சரியா வந்துடும். முயற்சி திருவினையாக்கும். ஹாஹா

      Delete
  28. அக்குழந்தைக்கு இன்று 80 ஆவது அகவை:))... [வரலாறு முக்கியம் எல்லோ:)].அஞ்சு பிறந்து வளர்ந்து

    அஞ்சுவின் 40 ஆவது பிறந்தநாள் 04.12.2020... இப்படி கன்பூசியஸ் செய்யலாமா?

     சரி அஞ்சுவோட நிஜ வயது (80+40)/2=60  என்று வைத்துக்கொள்கிறேன். சரிதானே?

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

      //என்று வைத்துக்கொள்கிறேன். சரிதானே?//
      நீங்கள் எப்பூடி வேணுமெண்டாலும் வச்சுக்கொள்ளுங்கோ:)) நான் ஒண்ணும் வாணாம் ஜொள்ளமாட்டேனாக்கும்:))..

      ஜந்தோசம் பொயிங்குதே ஜந்தோசம் பொயிங்குதே ஜந்தோசம் நெஞ்சில பொயிங்குதே:)) ஆனா ஜே கே ஐயா அதிராட வயசு சுவீட் 16 ஆக்கும் மறந்திடாதையுங்கோ ஹா ஹா ஹா ..

      நன்றி நன்றி.

      Delete
  29. வணக்கம் அதிரா சகோதரி

    அட்டகாசமான பதிவாக போட்டிருக்கிறீர்கள். இப்படி கலகலப்பூட்டும் பதிவுகளை உங்கள் ஒருவரால்தான் எழுத முடியும். முதலில் அதற்கு வாழ்த்துக்கள்.

    சகோதரி ஏஞ்சல் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் சிறப்பாக வாழ்ந்திட (அதாவது, அவர் இந்த அகவையிலேயே இருக்கட்டும். நாம் அனைவரும் அதையும் கடந்து சென்று கொண்டிருக்கும் போது, நம் வயதுடன் போட்டி போட்டுக் கொண்டு நம்முடன் சேர்ந்து வரும் அவரை நாம் அனைத்து வருடங்கள்தோறும் வாழ்த்திக் கொண்டிருக்கும் வருடங்களும் வரட்டும்.. ஹா. ஹா.) எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    சகோதரர் நெல்லை தமிழருக்கும், அவர் மனைவிக்கும் அன்பான திருமணநாள் வாழ்த்துக்கள்.

    சகோதரர் கோபு அவர்களுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    சகோதரர் தனிமரம் நேசன் அவர்களுக்கும் என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    சகோதரர் கில்லர்ஜி அவர்களுக்கும் என் அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ஆக நீங்கள் என் பதிவில் வந்து சொன்னதை போலவே ஆயிற்று. அருகிலிருப்பவர்களின் பிறந்த நாளை நினைவு கூர முடியவில்லை. ஆனால், நீங்கள் அனைவரையும் நினைவு வைத்து வாழ்த்தியமைக்கும், எங்களுடன் அதை பகிர்ந்தமைக்கும் என் அன்பான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. vஆங்கோ கமலாக்கா வாங்கோ...

      //அட்டகாசமான பதிவாக போட்டிருக்கிறீர்கள். இப்படி கலகலப்பூட்டும் பதிவுகளை உங்கள் ஒருவரால்தான் எழுத முடியும். //
      அப்பூடியா ஜொள்றீங்கள் ஹாஹாஹா:)) நன்றி நன்றி..

      //அதாவது, அவர் இந்த அகவையிலேயே இருக்கட்டும்//

      சே..சே.. அது அதிராவுக்கு மட்டும்தான் அப்பூடியாக்கும்:)) அஞ்சுவுக்கு அடுத்தவருடம் 81 ஆகிடும்:)).. எனக்குத் தேவை நீதி நியாயம் கடமை நேர்மை எருமை:))..

      அனைவரையும் வாழ்த்தியமைக்கு மிக்க மிக்க நன்றிகள்..

      Delete
    2. வாழ்த்துக்கு நன்றிகள் கமலா அக்கா.

      Delete
  30. //அஞ்சு பிறந்து வளர்ந்து அஞ்சுவின் 40 ஆவது பிறந்தநாள் அன்று நெல்லைத்தமிழனின் திருமணநாள் வந்தது...// - இப்போதான் பார்க்கிறேன்..... சின்னப் பையனை இப்படி கலாய்க்கிறீங்களே அக்கா..... இது நியாயமா?

    ReplyDelete
    Replies
    1. ///சின்னப் பையனை இப்படி கலாய்க்கிறீங்களே அக்கா..... இது நியாயமா?///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா இது கீதா ரெங்கன் பக்கம் இலையாக்கும்:)) இது சுவீட் 16 அதிராட வீட்டுப்பக்கமாக்கும்:)) ஹையோ ஹையோ எல்லோருக்கும் சின்னனாக இருக்கவே விருப்பமாக்கிடக்குதாக்கும்:)) ஹா ஹா ஹா

      Delete
  31. கோபு சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவர் ஒரு திருமண விழாவுக்குப் போய்.... திருமணத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தவர்ட்ட, இந்தா பிடிங்க நோட்டு... எவ்வளவு மொய்னு எழுதுங்க என்று சொன்னபோது, அடடா மாட்டிக்கிட்டோமே என்று சிரிக்கும்போது எடுத்த போட்டோவோ இது? அவர்ட்டதான் கேட்கணும்.

    அந்தக் காலத்துல பரிசுப் போட்டிலாம் வச்சு விசிறி மாதிரி பணத்தை அழகுபடுத்தி பிறருக்கு பரிசளித்தார். அப்புறம் நம்மைப் போல ஆட்கள் வந்த பிறகு, எங்கடா நிறையபேர் ஜெயிச்சு, அவங்களுக்கெல்லாம் விசிறி மடிப்புல நிறைய பணம் கொடுக்கவேண்டுமோ என்று நினைத்துக்கொண்டு அவர் தளத்திலும் எழுதுவதை நிறுத்திவிட்டு இணையத்துக்கே வருவதில்லையோ?

    ReplyDelete
    Replies
    1. ///எவ்வளவு மொய்னு எழுதுங்க என்று சொன்னபோது, அடடா மாட்டிக்கிட்டோமே என்று சிரிக்கும்போது எடுத்த போட்டோவோ இது? அவர்ட்டதான் கேட்கணும்.///

      மாட்டிக்கிட்டோமே எனச் சிரிப்பதுபோலத் தெரியவில்லை:)), மொய் எழுதினால் முழு மொய்யும் தனக்குத்தான் வருமாக்கும் என நினைச்சுச் சிரிப்பதுபோல இருக்குது ஹா ஹா ஹா:)).. அவரது போஸ்ட்டுக்களில் புகுந்து தேடினேன், எந்தப்படமும் சரிவரவில்லை, அதனால இதை எடுத்து வந்திட்டேன்:)..

      //இணையத்துக்கே வருவதில்லையோ?//
      இணையப்பக்கம் வந்தால் கொரோனா வந்திடும் என, ஆரும் வெருட்டிப்போட்டினமோ என்னமோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)) மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்.. 6 வயசில இருந்தே:)). ஹா ஹா ஹா ..

      Delete
  32. பிறந்த நாள்/திருமண நாள் கொண்டாடிய, கொண்டாடப் போகும் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள்.

      Delete
  33. ஆஹா, வருங்கால முதல்வர் ரஜினியுடன் டிஸம்பரில், உலகத்தார் அனைவராலும், ஒட்டுமொத்தமாகக் கொண்டாடப்படும், எங்களது மிகச் சிறப்பு வாய்ந்த பிறந்த நாட்கள் + அருமை நண்பர் நெல்லைத்தமிழன் ஸ்வாமீயும்  + அவாத்து மாமீயும் இணைந்த நாள் என அனைத்தையும், புதுமையாகப்  புட்டுப்புட்டு வைத்துள்ள 'அதிரடி அதிரா மாமி'க்கு எனது மனமார்ந்த இனிய நன்றிகளை முதற்கண் தெரிவித்துக்கொண்டு எனது பேச்சினைத் தொடர்கிறேன்...... 

    [இந்த இடைவேளையில் நம் அதிரடி/அந்தர்பல்டி/அட்டகாச/அல்டாப்/அழும்பு  'அதிரா மாமி'யால்  எனக்கு சோடா உடைத்துக் கொடுக்கப்படுகிறது. :) ]       

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... என்னாது ரஜனி அங்கிள் வருங்கால முதல்வரோ? நான் கில்லர்ஜியை நினைச்சிருந்தேனே ஹா ஹா ஹா:))..

      //வாத்து மாமீயும்//
      ஆஆஆஆஆஆஆஆ அபச்சாரம் அபச்சாரம்... :)) ஹா ஹா ஹா:))...

      /// 'அதிரடி அதிரா மாமி//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆனாலும் எனக்கும் மாமியாராக ஆசையாகத்தான் இருக்குது ஆனா இன்னும் மருமகள் வரல்லியே ஹா ஹா ஹா:))...

      // 'அதிரா மாமி'யால் எனக்கு சோடா உடைத்துக் கொடுக்கப்படுகிறது. :) ] //

      ம்ஹூம்ம்ம் சோடாவைக்குடிச்சிட்டு உங்களால அடிக்கடி ரொயிலட்டுக்கெல்லாம் ஓட முடியாது[ஹா ஹா ஹா] என்பதால சுடுதண்ணி தாறேன் குடிச்சுப்போட்டுப் படுத்து நித்திரை கொள்ளுங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  34. இதுவரை இங்கு வந்து வாழ்த்திய + இனிவந்து வாழ்த்தப்போகிற அஞ்சு முதல் பஞ்சு/மஞ்சு/குஞ்சு/நஞ்சு வரை அனைவருக்கும் என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு .......................

    [மீண்டும் சோடா பீடா ஏதும் வராததால் .. கர்ர்ர்ர்ர்ர்ர் ]
    ..........
    ..................
    .....................
    .........................
    ..............................
    ..................................



    வடை ஸாரி விடை பெற்றுக்கொள்கிறேன்.  வணக்கம். 

    அன்புடன் கோபு         

    ReplyDelete
    Replies
    1. //[மீண்டும் சோடா பீடா ஏதும் வராததால் .. கர்ர்ர்ர்ர்ர்ர் ]//
      ம்ஹூம்ம்ம்ம்:)) மிளகு ரசம் குடிச்சுச் செமிபாடடையச் செய்யும் வயசில சோடாவும் பீடாவும் கேய்க்குதாம்:)).. அஞ்சூஊஊஊஊ உடனடியாக ஒரு திப்பிலி ரசம் செய்து கோபு அண்ணனுக்குக் குடுங்கோ.. மொய் எழுதிக் களைச்சிட்டார்ர்:))...

      //வடை ஸாரி விடை//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இம்முறை கன்னா பின்னாவெனத்தான் டங்கு ஸ்லிப்பாகுதுபோல :))

      போஸ்ட் பார்த்ததும் ஓடிவந்து கொமெண்ட்ஸ் போட்டு, கூச்சப்படாமல் சோடாவும் கேட்டு வாங்கிக் குடிச்சு மகிழ்ந்து நம்மையும் மகிழ்விச்சமைக்கு மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.. மீண்டும் வாங்கோ.

      Delete
  35. பிறந்த நாள் கொண்டாடிய/கொண்டாடப் போகும் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள். அஞ்சுவுக்குப் பிறந்த நாள் இப்போத் தான் வந்தாப்போல் நினைவு! அந்தப் படம், வாழ்த்து மடல்! அழகோ அழகு! கு.பூ. பக்கத்திலே மெ.எ. ஹாஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ... அஞ்சுவின் பிறந்த நாளோடுதானே கொரோனாவும் பிறந்துது:)) கர்ர்ர்ர்ர்:))..

      //வாழ்த்து மடல்!///
      ஹா ஹா ஹா என்னில எவ்ளோ நம்பிக்கை உங்கள் எல்லோருக்கும்:)).. அது நான் செய்ததா?:)) ஹா ஹா ஹா.. வர வர கீசாக்கா கோட்வேட்டில கதைக்கத் தொடங்கிட்டா:))...

      நன்றி கீசாக்கா.

      Delete
  36. சற்றே தாமதமான இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வைகோ ஸார். நமஸ்காரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் மறதி இருக்கலாம்தான் ஆனாலும் இவ்ளோ இருக்கப்பிடாதாக்கும்:)

      மேலே முதல் கொமெண்ட்டிலயே சொல்லிட்டீங்களே இதை ஹா ஹா ஹா...

      Delete
  37. நேசன், கோபு சார், நெல்லைத்தமிழர் ஆகியோருக்கும் பிறந்த நாள், மண நாள் வாழ்த்துகள். கில்லர்ஜி தேர்தலில் நிற்கப் போற விஷயத்தை அறிவித்தமைக்கும் நன்றி. எல்லோரையும் நினைவு வைத்துக் கொண்டு வாழ்த்தியமைக்கு நன்றி. வடிவேலு நகைச்சுவை கொஞ்சம் ஓவராத் தெரியுது. கொரோனா வண்டியை ப்ரேக் டவுன் பண்ணி வைக்கணும். ஊசிக்குறிப்பு, இணைப்பு இல்லாமைக்குக் கொடுத்திருக்கும் கொரோனாப் பேருந்தும் கொரோனாத் தடுப்பு மருந்துக் கொண்டாட்டமும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நல்லா அனைத்தையும் ரசித்திருக்கிறீங்க நன்றி கீசாக்கா நன்றி.

      Delete
    2. வாழ்த்தியமைக்கு நன்றிகள்.

      Delete
  38. உங்கள் மூலம் தான் ஐயாவை (வலையுலக வைகோ) கண்டேன்.... அதற்கு முதலில் நன்றி... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ..

      ஹா ஹா ஹா அவர் வலையுலகில் இருக்கிறார் ஆனால் இல்லையாக்கும் :))..

      நன்றி டிடி.

      Delete
  39. அனைவருக்கும் என் அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன்.. மிக்க நன்றிகள்.

      Delete
  40. ஏஞ்சல், நேசன், கில்லர்ஜி அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் மிகவும் மரியாதைக்குரிய நெல்லைத்தமிழர் மற்றும் அவரது மனைவியாருக்கு மண நாள் வாழ்த்துகள்.

    ஹும்ம் பிறந்த நாள் மற்றும் மணநாள் கொண்டாடும் யாரும் ட்ரீட் தரலை இருந்தாலும் பரவாயில்லை நான் அவர்களுக்கு இன்று மாலை எனதுவிட்டில்ல் வைத்து ட்ரீட் தர முடிவு செய்துள்ளேன் சூடான் மிளகாய் பஜ்ஜிமற்று சரக்குடன் ட்ரீட் ஆரம்பம் அனைவரும் வந்து கலந்து கொள்ளவும் இல்லயென்றால் உங்களுக்கான சரக்கை நானே குடிக்க வேண்டி இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ ட்றுத் இந்தக் கொமெண்ட் நேற்று வெளியே வராமல் ஒளிச்சிருந்திருக்குது... ஊரைச் சாட்டிச்சாட்டியே மாமியை ஏமாத்தி:), வீட்டில மிளகாய் பஜ்ஜியும் “ச”வும் அடிங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      நன்றி ட்றுத்.

      Delete
    2. மிளகாய் பஜ்ஜி....வாவ்....இந்த ஊர்ல எப்போதும் இருக்கும் குளிருக்கு, மிளகாய் பஜ்ஜி எவ்வளவு நல்லாருக்கும். ஆனாலும் கடைகள்ல கிடைப்பதுபோல வீட்டுல வருவதில்லை. தோலும், மேல் மாவும் நல்லா ஒட்டுவதில்லை, அப்போ மிளகாயின் தோல் சாப்பிட ருசியா இருப்பதில்லை.

      Delete
    3. அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் துரைக்கு மிக்க நன்றி.

      ரொம்ப அரசியல் பதிவுகள்லாம் எழுதி உங்களுக்கு பி.பி. அதிகமாயிடப்போகுது. நல்லவேளை அதை நகைச்சுவையா எழுதறீங்க.

      Delete
    4. இப்போது விரதம் என்பதால் யார் வீட்டிலும் பஜ்ஜி சாப்பிடமுடியாது அடுத்த வருடம் பஜ்ஜி நிறைய சாப்பிடுவோம்![[நன்றி வாழ்த்துக்கு மதுரைத்தமிழன் சார்!

      Delete
  41. வணக்கம் அதிரா சகோதரி

    நீங்களே வடிவமைத்த வாழ்த்து அட்டை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். அம்மா சொன்னதை கேட்காத குழந்தைதான் எவ்வளவு அழகு. கண்பட்டு விடும்.
    சினேகா படமும் அவ்வளவு அழகு.

    சிவாஜி கணேசன் அவர்கள் உங்களுக்கெனவே எப்படி வசனம் அமைத்து பேசியிருக்கிறார்.? ரசித்தேன். நகைச்சுவைகள் நன்றாக உள்ளது. கொரானா தன் பிறந்த நாளை ஆர்ப்பாட்டமில்லாமல், நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத விதமாய் அன்றே கொண்டாடி விட்டது. (வாட்சப்பில் அதன் முதல் வருட வாழ்த்துக்கள் சுற்றி வந்தன.அதனால் அறிந்து கொண்டேன்.) அனைத்துமே கோர்வையாக நன்றாக தொகுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அமெரிக்க கமலா ஹரிஸ் அக்கா மீண்டும் வாங்கோ ஹா ஹா ஹா..

      //நீங்களே வடிவமைத்த வாழ்த்து அட்டை நன்றாக உள்ளது.//
      ஹா ஹா ஹா நீங்களாகவே உப்பூடி முடிவெடுக்கப்பிடாதாக்கும்:)).. அது ஆரு பெத்த பிள்ளை செய்ததோ:)).. வாழ்த்தெல்லாம் எனக்குக் கிடைக்குது:)) ஹா ஹா ஹா.

      //சிவாஜி கணேசன் அவர்கள் உங்களுக்கெனவே எப்படி வசனம் அமைத்து பேசியிருக்கிறார்.? //
      நான் மெயில் அனுப்பிக் கேட்டு வாங்கினேனாக்கும்:))..

      மிக்க நன்றிகள் கமலாக்கா... இது கார்ட் பெட்டியாக்கும்.. ரெயின் கொஞ்சம் ஆடப்பார்க்கும், மெதுவாகக் கோனர் சீட்டில இருங்கோ வெளியில மழை பெய்வதன் அழகை ரசிக்கலாம்:)..

      Delete
  42. போஸ்ட் பார்த்ததும் ஓடிவந்து அன்பாக அனைவரையும் வாழ்த்தி மகிழ்வித்த அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள்.


    [im]https://rlv.zcache.com/cute_scottish_fold_noodles_cat_thank_you_postcard-r3990d227e5a94fcf8fe2669dd78f53cc_vgbaq_8byvr_540.jpg[/im]

    ReplyDelete
  43. காலம் தாழ்த்திய வாழ்த்துகள் அஞ்சு அக்காவுக்கு.

    ReplyDelete
  44. நெல்லைத்தமிழன் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நேசன். அதிராவின் வாழ்த்துகள் பலரையும் நினைக்கத் தூண்டுகிறது. நலம்தானே

      Delete
  45. அன்பு நண்பர் கில்லர்ஜீக்கும் வைகோ ஐயாவுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. அகவைநாளில் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  47. நீளமா ஒரு லிஸ்ட் போட்டு வாழ்த்தியிருக்கிறீங்கள் அதீஸ். அதிராவினால் வாழ்த்தப்பெற்ற அனைவருக்கும் என்னிடமிருந்தும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  48. திரும்பவும் ஹைபர்னேஷனுக்குப் போயாச்சா? இல்லை நீங்க பண்ணின கேக் சாப்பிட்டு உங்களுக்கு முடியவில்லையா? புத்தாண்டு வாழ்த்தைக் காணோமே

    ReplyDelete
    Replies
    1. ஜனவரி கேட்டீங்க:)), மார்ச் லதான் வந்திருக்கிறேன்:)) இனியும் எப்ப வருவேனோ:) ஹா ஹா ஹா.. நன்றி நெ தமிழன் தேடியமைக்கு.

      Delete
  49. அதிரா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    நலம்தானே அக்கா.
    கடைசியாக  உங்கலை ப்லாக் பக்கம் பார்த்து பல நாட்கள் ஆச்சு.
    அங்கு கோவிட் நிலவரம் எப்படி இருக்கு.
    இங்கு எல்லாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியாச்சு....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மகேஸ், நன்றி வாழ்த்துக்கு, உங்களுக்கும் என் தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

      நான் யூ ரியூப் சனல் ஒன்று திறந்திருப்பதால், அதிலேயே நேரம் முடிஞ்சு போயிடுது:)..

      இங்கு இன்னும் லொக்டவுனில்தான் இருக்கிறோம், சூப்பர்மார்கட்டும், சாப்பாட்டுக் கடைகளும் தவிர, அனைத்தும் மூடப்பட்டிருக்குது கிறிஸ்மஸ் இல் இருந்து.. விரைவில் நிலைமை சரியாகிடும் என்கிறார்கள்.. வக்சீன் போட்டுக்கொண்டு வருகிறார்கள் கடகடவென...

      மிக்க நன்றி தம்பி மகேஸ், நீங்களும் நலமாக இருங்கோ.

      Delete
  50. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அதிரா! வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நேசன்.. இம்முறை என் பிறந்தநாளுக்கு போஸ்ட் எதுவும் போட்டிடக்கூடாது என மிரட்டி விட்டிருந்தேன்:), இருப்பினும் நீங்கள் நினைவு வைத்திருந்திருக்கிறீங்கள். மிக்க நன்றி... என் புதுப் போஸ்ட் வருகிறது.. அங்கு வாங்கோ நேசன்.

      Delete
  51. புது போஸ்ட் போட்டு விட்டேன் அதிரா.
    நீங்களும் போஸ்ட் போடுங்கள். உங்களை நேரில் பார்த்து உரையாடுவது போல் இருக்கும்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.