நல்வரவு_()_


Monday, 7 December 2020

 சகுனங்களை நம்பலாமோ??

போஸ்ட் எழுதி கனகாலம் ஆகிவிட்டது, எப்படி எழுதுவதென்றும் தெரியவில்லை, மனமும் ஒரு நிலையில் இல்லை, அடுத்தடுத்த மனம் தாங்காத சம்பவங்களால், புளொக்கே வேண்டாம் எனக்கூட அப்ப அப்ப எண்ணம் வந்து செல்கிறது... இந்த ஆண்டு கடகடவென ஓடி முடிஞ்சு புத்தாண்டு விரைவில் வந்திடோணும் எனப் பயமாக இருக்கிறது.. அப்படிப் பயந்தவண்ணம் இருந்தபோதே, கோமதி அக்காவின் மாமாவின் செய்தி காதுக்கு வந்தது, அதிலிருந்து மீளவே முடியவில்லை:(..
நமக்கே இப்படி எனில், சின்னச் சின்ன விசயங்களுக்கே பயப்படுவா கோமதி அக்கா, எல்லாரும் எப்பவும் நல்லா இருக்கோணும் என்பதற்காகவே எல்லோருக்கும் “வாழ்க வளமுடன்” சொல்லுவா... மனட்சாட்சிக்கும், மற்றவர்களுக்கும், கடவுளுக்கும் பயந்து பயந்து வாழ்வோரைத்தான், ஆண்டவனும் அதிகம் சோதிக்கிறார்.

நான் கடந்த 2,3 வருடங்களாக, ஜனவரி 1ம் திகதிக்கு, வருடம் பிறக்கும்போதே போஸ்ட் போட்டு வந்தேன். எப்பவும் இரவு 12 மணிக்கு இங்கு வான வேடிக்கைகளோடு வருடம் பிறக்கையில், சுவாமிக்கு விளக்கேற்றி வைத்து, அந்நேரம் ரிவியை எல்லோரும் ஒன்றாக இருந்து பார்த்து, எல்லோருக்கும் விஸ் பண்ணி, ஏதும் சுவீட் மற்றும் யூஸ் அல்லது ரீ குடிச்சு, பணமும் பரிமாறிக் கொள்வது வழக்கம்.

இது ஒரு 15-20 நிமிடத்தில் முடிஞ்சுவிடும், அதன் பின்பு அல்லது அதன் இடையில், போஸ்ட்டை ரெடி பண்ணி வைத்து, பப்ளிஸ் பட்டினைத் தட்டி விட்டு விடுவேன்.

ஆனா இம்முறை நினைச்சேன், ஓட்டோ பப்ளிஸ் இல் போட்டுவிடுவோமே, அது எனில் டென்சன் இல்லாமல், மெதுவாக கொம்பியூட்டருக்கு வரலாம் என, அப்படியே நேரம் எல்லாம் போட்டு செட் பண்ணி வைத்துப்போட்டு, நான் வருடப்பிறப்புக் கொண்டாட்டம் எல்லாம் பண்ணி, மெதுவாக கொம்பியூட்டர் வந்து திறக்கிறேன், போஸ்ட் பப்ளிஸ் ஆகவில்லை..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

அப்போ மனம் ஒருமாதிரி ஆகிவிட்டது, சே...சே... வருடம் பிறந்த உடனேயே இப்படி ஏமாற்றம் ஆகிவிட்டதே, இந்த வருடம் எப்படி இருக்கப்போகிறதோ என மனம் கொஞ்சம் கலக்கடிப் பட்டது, ஆனாலும் சகுனங்களை நம்பக்கூடாது, அதை மனதினுள் கொண்டு போகக்கூடாது எனத்தான் நான் எப்பவும் நினைப்பேன், அப்படித்தான் எப்பவும் சகுனம் பார்க்க மாட்டேன், கடவுளைத்தான் கும்பிடுவேன், எது நடந்தாலும் அது ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது, அதுதான் நடந்து கொண்டிருக்கிறது, அதை ஆராலும் தடுக்கவோ மாற்றவோ முடியாது என்பதில்தான் திடமான நம்பிக்கை எனக்கு.

அதனால இந்த போஸ்ட் பப்ளிஸ் ஆகாமல் ஏமாற்றிவிட்டதையும், பெரிதாக எடுக்கக்கூடாது என விட்டு விட்டேன். இருப்பினும் சின்ன வயசிலிருந்தே, அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, உறவுகள், வயதானோரோடு கூடி வாழ்ந்து, அவர்களின் கதைகள் கேட்டு வளர்ந்தமையால, அவர்கள் அப்போ சொல்லியது, சகுனங்கள், கண்ணூறு, பல்லிச் சாத்திரம், காகக் கரையும் பலன் என, மனதில் சில விசயங்கள் பசுமரத்தாணிபோல ஒட்டி இருக்கிறது.. அப்பப்ப தலை காட்டத்தான் செய்யும்... ஆனாலும் சகுனங்களை மட்டும் நான் நம்புவதில்லை.. சரி அது போகட்டும்...

இப்படி முதலாம் திகதியே மனம் கொஞ்சம் சஞ்சலப்பட்டமையால, அதேபோல இவ்வருடம் முளுக்க ஒரு விதமாகவே, பயமும் கவலைகளும் பதட்டமுமாகவே நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.. யூலை மாதத்தின் பின்னர், போஸ்ட் கூட ஒழுங்காகப் போடவில்லை, அடுத்தவர்களின் போஸ்ட்டுக்குப் போய்க் கொமெண்ட்ஸ் போடவோ, கும்மியடிக்கவோ முடியவில்லை, இதனால சிலர் என்னை மறந்திருக்கவும் கூடும்:), சிலர் என் மீது கோபமாகவும் இருக்கக்கூடும்..:).. நான் என்ன பண்ண?.. 
பிபிசியில் சிட்டுவேசன் சோங் போகுது...
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை.. காலம் செய்த கோலம்.. கடவுள் செய்த குற்றம்...

வரும் வருடமாவது நல்ல வருடமாக அமைய இறைவனை வேண்டுகிறேன்...
“ஆடத் தெரியாதவர், மேடை கூடாதென்றாராம்”.. இப்பொன்மொழியையும் நினைக்க  வேண்டி இருக்கிறது இப்போது, ஏனெனில் வருடம் ஓடி முடியோணும் புது வருடம் வந்திடோணும் என எண்ணுகிறேன் நான், ஆனா வருடத்தில் ஒன்றுமில்லை, நம் தலைவிதிப்படியேதானே அனைத்தும் நடக்கும் எனவும் மனம் எண்ணுது.

என்ன எழுதினாலும் என்ன சொன்னாலும், மனதின் ஒரு பக்கத்தில் கோமதி அக்காவின் முகமே வந்து நிற்கிறது எனக்கு, அவவுக்கு என்ன ஆறுதலைச் சொல்வது,  “நாள் செய்வதுபோல், நல்லோர் செய்யார்”.. என்பதுபோல, நாட்கள் ஓடினால்தான் கொஞ்சமாவது மனம் அமைதி பெறும், கோமதி அக்கா பழையபடி புளொக் எழுதோணும், யாருக்கும் பயந்து ஒதுங்கிப்போயிடக்கூடாது, மக்கள் என்ன சொல்வார்கள், அடுத்தவர்கள் என்ன பேசுவார்கள் என்றெல்லாம் சிந்திக்காமல், நீங்கள் இருந்ததுபோலவே இருக்கோணும் கோமதி அக்கா, மாமா எங்கும் போய் விடவில்லை, அவர் உங்களோடுதான் துணையாக என்றும் இருப்பார், உங்களை வழி நடத்துவார், நீங்கள் பழையபடி புளொக்குகளுக்குள் வாங்கோ, அப்பொழுதுதான் உங்களால கொஞ்சமாவது மனதை மாற்றி, நடமாட முடியும்..

கோமதி அக்கா எப்போ புளொக் பக்கம் படிப்பாவோ தெரியவில்லை... எதுவும் நம் கையில் இல்லை கோமதி அக்கா, எல்லாம் விதி வரைந்த பாதை.. மனதை தைரியப்படுத்தும் திடத்தை கடவுள் உங்களுக்குத் தரோணும் என இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்....

ஆண்டவனே எல்லோருக்கும் நல்ல மன தைரியத்தையும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுங்கோ என வேண்டி விடை பெறுகிறேன் விரைவில் மீண்டும் இங்கு இன்னொரு போஸ்ட்டோடு சந்திப்பேன் எனும் நம்பிக்கையுடன்:)..

 “தூக்கம் என்பது மிகச் சிறந்த தியானம் ஆகும்”

ஊசிக்குறிப்பு

ஊசி இணைப்பு
🙏🙏🙏🙏🙏🙏

126 comments :

  1. !!!!  புது போஸ்ட் .வெல்கம் வெல்கம் .இருங்க தலைப்பே அட்டாக் பண்ணுது படிச்சிட்டே கமெண்டறேன் 

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல்..  உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.  

      Delete
    2. ஸ்ரீராம் கேட்க நினைத்தது...

      கேள்வி கேட்க ஆரம்பித்தா... கட கடவென பத்து கேள்விகள் கேட்கறீங்க. கேட்ட பிறகு சில பல மாதங்கள் காணாமல் போயிடறீங்க. எதுனால?

      என்பதாக இருக்குமோ?

      Delete
    3. வாங்கோ வாங்கோ முதல் என்றி அஞ்சு மற்றும் ஶ்ரீராம் நெ தமிழன் எல்லோரும் வாங்கோ.... நான் இப்போ பிரெக்.....ல ரீ குடிக்கிறேனாக்கும்😻....
      எல்லோரையும் இங்கின ஒன்றாகப் பார்த்து எவ்ளோ நாளாச்சு:)...

      Delete
    4. ///

      AngelTuesday, December 08, 2020 8:14:00 am
      ???? Yes ask please///
      அல்லோ மிஸ்டர் அஞ்சு.... ஶ்ரீராம் கேள்விதானே கேய்க்கோணும் என்றார்.... கேட்டுட்டாஆஅர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
    5. நெ த
      ///கேட்ட பிறகு சில பல மாதங்கள் காணாமல் போயிடறீங்க. எதுனால?

      என்பதாக இருக்குமோ?////

      பதில்கள் பார்த்து ... மருந்தடிச்ச பூச்சிமாதிரி மச:) ங்கிப் போயிடுறா போலும் ஹா ஹா நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)

      Delete
    6. அதெல்லாம் தெளிஞ்சாச்சு!

      Delete
    7. அச்சச்சோ ஸ்ரீராம் டபிள் மீனிங்கில் பேசுறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா...

      Delete
    8. ///நெல்லைத் தமிழன்Tuesday, December 08, 2020 10:10:00 am
      ஸ்ரீராம் கேட்க நினைத்தது...

      கேள்வி கேட்க ஆரம்பித்தா... கட கடவென பத்து கேள்விகள் கேட்கறீங்க. கேட்ட பிறகு சில பல மாதங்கள் காணாமல் போயிடறீங்க. எதுனால?

      என்பதாக இருக்குமோ?///

      ஹஹ்ஹா :) அது கொஞ்சம் இடைவெளிவிட்டு கேட்க நினைச்சேன் .எனக்குன்னு பார்த்து என்னிக்கு 15 இல்லன்னா 10 கேள்வி கேட்கிறேனோ அப்போல்லாம் தொடர் பணி எட்டி பார்த்தாலும் பதிலளிகாம போகும் நிலைமை 

      Delete
  2. பிள்ளையாரும் எலியாரும் சீசா விளையாடுவது அழகு .

    ReplyDelete
    Replies
    1. ஆங்ங்ங்ன் அது சா இல்ல ஷோ ஆக்கும்:)).. இப்போதாவது தெரிஞ்சுக்கோங்க அதிராவுக்கு டமில்ல டி தான் என்பதை:)).. இதை எல்லாம் கவனிக்காமல் எப்பூடி காக்கா போயிட்டார் நெல்லைத்தமிழன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  3. இந்த வருடம் மிகவும் பொல்லாத வருடம் தான் எந்த வேளையில் புத்தாண்டு வந்ததோ :( எத்தனையோ பிரச்சினைகள் உலகத்தையே படுகுழியில் தள்ளிவிட்டிருக்கு .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு, இப்படி உலகே அதிரும்படியான பிரச்சனை இதுவரை வந்ததில்லையே...

      Delete
  4. என்னைப்பொறுத்தவரை கோமதி அக்காவையும் அன்பையும் பிரித்து பார்க்க முடியாதொன்று .எப்பவும் வாழ்க வளமுடன் என்ற பாசிட்டிவ் சொற்களை பார்க்கும் போதே மனசு சந்தோஷமாகிடும் .இறைவன் கோமதி அக்காவுக்கு பக்கபலமாயிருப்பார் .பிரார்த்திப்போம் .

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அவருக்கு பக்கபலமாக இருப்பார். அவங்க குடும்பமே 'ஓதுவார்கள்' நிறைந்தது. பக்தி உள்ளவங்க. நிச்சயம் இந்தக் கஷ்டத்திலிருந்து மீண்டு வருவார். நம் ப்ரார்த்தனைகள் வீணாகாது.

      Delete
    2. நாம்..யார் என்ன சொன்னாலும் அனுபவிப்பது கோமதி அக்காதானே.. ஆனாலும் என்ன செய்வது, நம்மால் ஆறுதலை மட்டும்தான் கொடுக்க முடியும்... ஆண்டவன் தான் அவவுக்கு மன ஆறுதலைக் கொடுத்து வெளியே கொண்டு வர வேண்டும்..

      Delete
  5. சரி பாயிண்ட்டுக்கு nono பொயிண்ட்டுக்கு வர்றேன் :) அது சகுனத்தை நம்பறது தப்புதான் ஆனா நடந்ததை நடப்பவற்றை பார்க்கும்போது மனசு கொஞ்சம் தடுமாறி போகுதே .இன்னது என்னது !!!!! ///எல்லோருக்கும் விஸ் பண்ணி, ஏதும் சுவீட் மற்றும் யூஸ் அல்லது ரீ குடிச்சு, பணமும் பரிமாறிக் கொள்வது வழக்கம்.///
    எனக்கு ஒன்னும் வந்து சேரலையே உங்ககிட்டருந்து கர்ர்ர்ர்ர் .ஒழுங்கா இந்த 21 காசும் அப்டியே 1000 பவுண்டை எனக்கு  அனுப்பி விட்ருங்க நானும் ஆயிரம் ரூபாய் முழு நோட்டை இந்திய கரன்சியை தந்துடறேன் 

    ReplyDelete
    Replies
    1. //சரி பாயிண்ட்டுக்கு nono பொயிண்ட்டுக்கு வர்றேன் :) //

      ஹா ஹா ஹா அது:))....

      ஏன் நீங்க கரண்ட் எக்கவுண்டில இருந்து சேவிங்ஸ் க்கும்.. சேவிங்ஸ்ல இருந்து கரண்ட் எக்கவுண்டுக்கும் மாத்தி மாத்தி விளையாடவோ:)).. எனக்கும் பிடிக்கும் இந்த வெலாட்டு:))

      Delete
  6. உங்களோட புத்தாண்டு நாள் அனுபவம் போல் எனக்கும் ஒன்று அமைந்தது .அன்னிக்கு 1 தேதி வேலைக்கு போனேன் .front லைன் வேலையில் கிறிஸ்துமஸ் இல்லை நியூ இயர் இரண்டில் ஒன்றுக்கு மட்டுமே லீவ் எடுக்க அனுமதி .அன்று அன்றைக்கு பார்த்து அவசரத்தில் உணவு கொண்டுபோகல்லை அங்கிருந்த mushroom பேக் சாப்பிட்டு மிகவும் கஷ்டப்பட்டேன் அன்று எனக்கு அமைந்த டீம் லீடர் பொல்லாத மனிதன் என்னை பிரேக் எடுக்கவிடாமல் பேயாட்டம் ஆடியது இன்னமும் கண்முன் நினைவில் இருக்கு ..அலர்ஜி டயர்ட்னு அவ்வளவு கஷ்டப்பட்டேன் அன்று .

    ReplyDelete
    Replies
    1. //டீம் லீடர் பொல்லாத மனிதன்// பாருங்க மனித மனத்தை... எத்தனையோ ஜெம்ஸ் நம் வாழ்க்கையில் குறிக்கிட்டிருப்பாங்க.. ஆனால் மனசு அவங்களையெல்லாம் மறந்துவிட்டு, நம் வாழ்வில் சந்தித்த முற்களை மட்டும் மறப்பதே இல்லை. ஹாஹா

      Delete
    2. இதுக்குத்தான் சொல்றது, அதிராவைப்போல, வேலை நேரத்தில.. சாப்பிடக்கூடாதென கர்ர்ர்ர்:))... சில நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவை ஆகி விடுகிறது தான் அஞ்சு..

      Delete
    3. ///நம் வாழ்வில் சந்தித்த முற்களை மட்டும்//

      ஆஆஆஆஆஆஆஆஆ ஸ்பெல்லிங்கூஊஊஊஊஊஊ மிசுரேக்கூஊஊஊஊஉ அது முட்களை என வரோணுமாக்கும்:)) எங்கிட்டயேவா:)).. விட மாட்டேனெல்லோ:)) ஹா ஹா ஹா.. ஆண்டவா ஒருவேளை முற்கள்தான் சரியோ தெரியேல்லை:)).. அப்பூடி எனில் டிக்சனறியில மாத்தி விடுங்கோ வைரவா முட்கள்தான் சரி என:))..

      அது சில விசயங்கள் நாம் மறக்கவேணும் என நினைச்சாலும் மறக்க முடியாமல் இருக்கும் நெல்லைத்தமிழன்... அதுக்குக் காரணம், அந்நேரம் நம் மனதை அது அவ்ளோ தூரம் பாதித்திருக்கிறது என அர்த்தம்... என்னாலும் இப்படி சில விசயங்களை மறக்க முடியாமல் இருக்கும்.. மறக்கோணும் என நினைச்சாலும்...

      Delete
    4. மிக்க நன்றீஸ் நெல்லைத்தமிழன் .நீங்க சொன்னது உரைத்தது . எதுக்கு எப்பவோ நடந்ததை அழுக்கு குப்பையை தூக்கி சுமக்கணும் .ஓடிப்போய் ஓரிடத்தில் வெளிப்படுத்திய அதாவது அவசரக்குடுக்கையாய் வெளிப்படுத்திய ஆதங்கத்தை அழிச்சிட்டேன் :) .அப்புறம் அந்த டீம் லீடர் வேலையிடம் மாற்றப்பட்டதன் பின்னணி சுமார் 15 பேர் போட்ட பெட்டிஷன் :) அதில் நான் இல்லை பிறகுதான் கேள்விப்பட்டேன் 

      Delete
    5. ஷ்ஷ்ஹ் @நெல்லைத்தமிழன் நீங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டுட்டீங்க//முட்கள் ...முட்கள்  ஆனா பாருங்க தமிழில் டீ போட்டு ஆற்றி குடித்தவருக்கு confusion  எல்லா புகழும் அந்த சிமியோன் ரீச்சருக்கே :))

      Delete
    6. at @ anbulla athiraaaa
      பல் ..பற்கள் முள் ...முட்கள் கல் ...கற்கள் சொல் ...சொற்கள்  ..இது மியாவுக்கு சிமியோன் ரீச்சர் ஆவி வந்து வாட்ஸப்பில் சொன்னாங்க :))))))))))) கூடவே உங்கள்தலையில் நங்குன்னு குட்டவும் சொன்னாங்க  

      Delete
    7. //அப்புறம் அந்த டீம் லீடர் வேலையிடம் மாற்றப்பட்டதன் பின்னணி// - என் அனுபவத்தை பிறகு ஒரு சமயம் எழுதறேன். ஒரு பஹ்ரைனி பாஸ் என்னைப் பாடாய்ப் படுத்தியது, அதன் காரணம் எல்லாம்.

      Delete
    8. உதெல்லாம் இருக்கட்டும்.. அந்த முட்கள் பற்றி வாயே திறக்க மாட்டாராமே நெல்லைத்தமிழன் கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ..

      //ஒரு பஹ்ரைனி பாஸ் என்னைப் பாடாய்ப் படுத்தியது, அதன் காரணம் எல்லாம்.//
      இதில சில பார்ட்ஸ்..:) ஏற்கனவே கொஞ்சம் சொல்லியிருக்கிறீங்களென நினைக்கிறேன்...

      Delete
  7. நானும் சகுனத்தைலாம் நம்பவில்லை ஆனா பாருங்க வருட துவக்கத்தில் எப்பவும் சைவ உணவு ஒரு முட்டை கூட சமைக்காமல் தான் ஜெபத்துடன் புத்தாண்டை துவங்குவோம் .எனது எய்ம் நம்மால் சிறு துன்பம் எவ்வுயிர்க்கும் ஏற்படக்கூடாதுன்னு .
    ஷ்ஹ்ஹ்ஹ அடக்கி வாசிக்கிறேன் பிக்கோஸ் நெல்லை தமிழன் பல் தேச்சிங்களேன்னு  அது தப்பில்லையா னு கேட்டாலும் கேட்பார் அவ்வ் ..
    எதுக்குசொல்றேன்னா அவ்ளோ கவனமா துவங்குவோம் புத்தாண்டை ஆனா இந்த ஜனவரி ஒன்று நான் இனி வேலைக்கு போகணுமான்னு அழ வைத்த ஆண்டு .
    பிறகு அந்த டீம் லீடருடன் வேலை செய்யும் வாய்ப்பு அமையவில்லை .காரணம் அவர் எங்கள் ப்ராஞ்சில் இருந்து வேறொரு இடத்துக்கு ட்ரான்ஸ்பர் !!

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடத் தொடக்கத்தில் நாங்கள் புதுமனைப் புகுந்தோம்.   எங்களுக்கு வரும் படுத்தல்கள் எனக்கு அல்ல, என் பாஸுக்கு மனச்சோர்வை உண்டாக்குகின்றன.

      Delete
    2. ஸ்ரீராம்... அப்படியெல்லாம் ரிலேட் பண்ணாதீங்க.... எவ்வளவு மோசமாக ஆகியிருக்கணும்? கடவுள் அருளால், தலைப்பாகையோடு போச்சு...அவ்வளவுதானே... மனசில் பயம் இருப்பதால் (எனக்கும்தான்) சின்னச் சின்ன உடல் பிரச்சனைகளும் 'இது அதனாலா' என்றெல்லாம் சந்தேகம் வரும்....

      An external problem coming to family will always strengthen the bond among family members.

      மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும் ... பாடல் வரிகள் நினைவில் இருக்கா?

      Delete
    3. எனக்குத் தெரிகிறது. பாஸுக்குச் எடுத்துச் சொல்லி அழுத்தம் மோகிறது. அவருக்கு after corona effects ஜாஸ்தியாய் இருக்கிறது. இன்னும் தீர்ந்தபாடில்லை.

      Delete
    4. இந்த வருடம் வெள்ளிக்கிழமை பிறக்கிறது .. அதிரா சுத்த சைவமாக்கும்:))..

      பல் தேய்க்கிறது இருக்கட்டும்.. மரக்கறிகளுக்குக்கூட எவ்ளோ பூச்சி மருந்தடிச்சு.. பூச்சிகளைக் கொன்றுதானாமே விற்பனைக்கு வருகிறது... நீஇங்கள் உயிர்களைக் காப்பாற்ற நினைச்சால், காட்டுக்குள் போயிருந்து இயற்கையாக கிடைக்கும் காய் கனிகள் இலைகளைச் சாப்பிட்டால் மட்டுமே மீ நம்புவேனாக்கும்.. ச்சும்மா எல்லாம் பேச்சில வீரங்காட்ட விடமாட்டேனாக்கும்:)).. நான் சில நாள் சாப்பிட்டாலும் சில நாட்கள் உபவாசம் இருந்து பாபக் கணக்கைப் போக்கிடுவேனாக்கும்:)) ஐ மீன் கே எஃப் சி கணக்கை:))..

      ஊசிக்குறிப்பு:))..
      நான் நவராத்திரி தொடங்கியதிலிருந்து இன்னமும் கே எஃப் சி , மக்.டொ.. பக்கம் போகவே இல்லை என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்:))

      Delete
    5. அது ஸ்ரீராம், அருண்டவர் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப்போல, நாம் ஒரு விசயத்தில் அனுபவப்பட்டிட்டால் கொஞ்சக்காலத்துக்கு அந்தப் பயம் மனதை விட்டகலாதுதான். இப்போ ஒரு ரோட்டில் போனபோது களவு போயிட்டால் நம் பொருள், பின்னர் எத்தனை வருடமானாலும் அவ்விடத்தால் போகும்போது மனம் டிக் டிக் என அடிப்பதைத் தவிர்க்க முடியாது...

      Delete
  8. சரி எனக்கொரு டவுட் பூனை குறுக்கே போனான்னு ஒரு சகுனம் இருக்கே அப்போ உங்க வீட்ல நீங்க போகும்போதும் வரும்போதும் என்னா செய்வாங்கா :))))))))))))  ஹஆஹாஆஆஆ சகுனம்னு இல்லை எந்த எதிர்மறை நெகட்டிவையும் நம்பக்கூடாது என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ளணும் .

    ReplyDelete
    Replies
    1. [im] https://c1.staticflickr.com/3/2928/14126038353_7deffea261_n.jpg [/im]

      Delete
    2. சயன்ஸ் படிச்சவங்களுக்கு மேத்ஸ் மறந்துபோவது இயற்கைதான்.

      அவங்க வீட்டுல நீங்க சொல்பவரையும் சேர்த்து இரண்டு பூனைகள் இருக்கல்லோ. இரண்டு மைனஸ் சேர்ந்தால் ப்ளஸ் ஆகிடாதா?

      Delete
    3. ஹா ஹா ஹா எங்கட வீட்டு றூல்ஸ், பூஸ் ல முழிச்சால்தான் அது நல்ல சகுனம்.. நாங்கள் வெளியில போகும்போது டெய்சியைக் கூப்பிட்டு பாய் டெய்சி எனச் சொல்லிக்கொண்டே வெளியே இறங்குவோம்... “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”.. ஆங்ங்ங்ங்ங்ங்:))

      Delete
  9. /னா வருடத்தில் ஒன்றுமில்லை, நம் தலைவிதிப்படியேதானே அனைத்தும் நடக்கும் எனவும் மனம் எண்ணுது.//100 கு நூறு உண்மை .பொதுவான மனித குணம் இழப்புகள் தோல்விகள் துக்கம் இதெல்லாம் ஏற்படும்போது எது கண் முன் தெரிகிறதோ அதை குற்றம் சொல்லும் .அப்படி நம் அனைவரிடமும் மாட்டியது 2020 .

    ReplyDelete
    Replies
    1. அதுதான் அஞ்சு, நம் விதி நல்லதாக இருந்தால் சரியாக இருக்கும்.. இல்லை எனில் என்ன பண்ண முடியும்..

      Delete
    2. இன்று ஒருத்தரோட ஜோசியம் படித்தேன். டிசம்பர் 20லிருந்து இன்னும் கொடிய செய்தி வரும், மார்ச் வரை நல்ல காலம் இல்லைனு போட்டிருக்கு...

      Delete
    3. ///நெல்லைத்தமிழன்Wednesday, December 09, 2020 5:10:00 am
      இன்று ஒருத்தரோட ஜோசியம் படித்தேன். டிசம்பர் 20லிருந்து இன்னும் கொடிய செய்தி வரும், மார்ச் வரை நல்ல காலம் இல்லைனு போட்டிருக்கு...//

      ஆஆஆ !!! நான்  என்னபண்ணுவேன் front லைன் ஹாஸ்பிடல் சோஷியல் ஒர்க்கெர்ஸ்லாம் கோவிட வாக்சின் முதலில் போடணும்னு சொல்லிட்டாங்க .இப்போ என்ன பண்ணறதுன்னு புரியலை .எங்க குடும்பத்தில் பொல்லா  மக்கள் :) நான்  வாக்சின் போட்டுட்டு எனக்கென்னாகுன்னு பார்த்துட்டு  பிறகு 3 மாசம் கழிச்சி குத்திக்கலாம்னு ஐடியா வச்சிருக்குக்காங்க :) 

      Delete
    4. வாக்சின்லாம் கடவுள்ட ப்ரே பண்ணிக்கிட்டு போட்டுக்கோங்க. I am not going to admit until almost all nearby admits. இப்போ சிலருக்கு முக அலர்ஜி வந்தது, பாராலிஸிஸ் வந்ததுன்னு நிறைய செய்தி வருது (அதாவது டெஸ்ட் டோஸ் போட்டுக்கிட்டவங்க)

      இரண்டு டோஸ் இருக்காம், 45 நாட்கள் இடைவெளில.

      Delete
    5. //நெல்லைத்தமிழன்Wednesday, December 09, 2020 5:10:00 am
      இன்று ஒருத்தரோட ஜோசியம் படித்தேன். டிசம்பர் 20லிருந்து இன்னும் கொடிய செய்தி வரும், மார்ச் வரை நல்ல காலம் இல்லைனு போட்டிருக்கு...//

      இல்லையே, அதிராவைப்போல நல்ல விசயங்கள் சொல்லும் சாத்திரத்தை மட்டுமே முழுசாக் கேட்கோணும், ஆரம்பமே ஏதும் ஏடாகூடமாக ஆரம்பிச்சால்.. இவர் ஆள் சரியில்லை என நிறுத்திடுவேன் கேட்பதை ஹா ஹா ஹா..

      உங்கட ராசிக்கு ஒரு நைட்ல லட்சாதிபதியாகுவீங்களாமே:)).. அதிலயும் குருமாற்றம் ஆஹா ஓஹோ தானாமே ஹா ஹா ஹா..

      Delete
  10. ///யூலை மாதத்தின் பின்னர், போஸ்ட் கூட ஒழுங்காகப் போடவில்லை, அடுத்தவர்களின் போஸ்ட்டுக்குப் போய்க் கொமெண்ட்ஸ் போடவோ, கும்மியடிக்கவோ முடியவில்லை,//மியாவ் நான் நிறைய ரெசிப்பீஸ் செஞ்சு படம் எடுத்து வச்சேன் இப்போ படத்தை பார்த்தா எப்படி செஞ்சேன்னு நினைவிலில்லை ஹாஆஆ ஹாங் எப்பிடி ரெசிபி போடறதுன்னே புரியலை அவ்வ்வ்வ் 

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆஆஆ நான் கும்பிட்ட வைரவர் என்னைக் கைவிடவில்லையாக்கும்:)) தப்பிச்சேன் ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈ:))... காதைக் கிட்டக் கொண்டு வாங்கோ அஞ்சு.. இதே கதை 2 வருடப் படங்கள்கூட இருக்குது, ஆனா அளவுகள் மறந்து போச்ச்ச்:))

      Delete
  11. /ஆண்டவனே எல்லோருக்கும் நல்ல மன தைரியத்தையும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுங்கோ   ///வெரி குட் ..பின்னே இனி வரப்போகும் உங்க ரெசிப்பீஸ் கேக் லாம் பார்க்கா மேலே சொன்ன மூன்றுமே எங்களுக்கு தேவையாச்சே 

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

      Delete
  12. ஊசி இணைப்பு நல்லா இருக்கு .அந்த திறமையை எதால செதுக்கறது மியாவ் ??:))))))))))

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் கிச்சினில் இருக்கும் குக்கரை வச்சுத்தான் :)) ஹா ஹா ஹா

      Delete
  13. சரி மியாவ் இந்த வருஷம்எங்காச்சும் ஒரு சில  சில நல்லதும் நடந்திருக்கும்  அதையும் நினைவிற்கொண்டு பத்திரமா 2020 வழியனுப்புவோம் .எல்லா நாளும் நன்னாளேன்னு நினைப்போம் 

    ReplyDelete
    Replies
    1. நான் வழமைக்கு மாறாக 2020 அங்கிளே வருக என அழைச்சிருந்தேன்:)) அதுதான் வேலையைக் காட்டிவிட்டார்.

      இல்ல அஞ்சு, கோமதி அக்காவை நினைச்சுத்தான் மனம் கலங்குது....

      Delete
    2. ஏஞ்சலின்... இப்படீல்லாம் அதிரா இந்த வருடம் ரொம்ப குறைவாக இடுகை போட்டதையெல்லாம் "நல்லது" கணக்குல எழுதறது தப்பல்லோ... உங்க பின்னூட்டம் படிச்சு அடுத்த இடுகை போட ஒரு மாதம் எடுத்துக்கப் போறாங்க "அன்பில்லாத அதிரா" ஹாஹா

      Delete
    3. /////அன்பில்லாத அதிரா" ////
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... பல மாதத்துக்குப் பிறகு போஸ்ட் போட்ட ஒரு சுவீட் 16 பிள்ளையை(என்னைச் சொன்னேன்:))... நீங்க அன்பானவர் பண்பானவர் அஞ்சுவைவிட அழகானவர்... வெயிட்டிலும் குறைவானவர் எண்டெல்லாம் சொல்லி வாழ்த்துவதை விட்டுப்போட்டுக் கர்ர்ர்ர்ர்ர்:)... ஹா ஹா ஹா

      Delete
  14. தெய்வமே நல்லவேளை இப்போதான் மேலே பார்த்தா சிவாஜி அங்கிள் பாட்டு .ஹீஹீ நான் பார்களை கேட்கலை 

    ReplyDelete
    Replies
    1. அது எவ்ளோ தத்துவம் நிறைந்த பாடல்.... மனம் அமைதி அடையோணும் என்பதற்காகப் போட்டேன்..

      அனைத்துக்கும் மிக்க நன்றி அஞ்சு.

      Delete

  15. //மனமும் ஒரு நிலையில் இல்லை, அடுத்தடுத்த மனம் தாங்காத சம்பவங்களால், புளொக்கே வேண்டாம் ///

    ட்ரெம்ப் தோத்து போனதுக்கெல்லாம் இப்படி மனம் உடைந்து போகலாமா?

    ReplyDelete
    Replies
    1. //ட்ரெம்ப் தோத்து போனதுக்கெல்லாம்// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இன்னமுமே அவர் தோல்வியை ஒத்துக்கலை... அதுக்குள்ள..

      Delete
    2. வாங்கோ ட்றுத் வாங்கோ...

      ஹா ஹா ஹா அதுதானே நெ தமிழன் சொல்லிட்டாரே.. ட்றம்ப் அங்கிள் தோல்வியை ஏற்றால்தானே தோற்றதாக அர்த்தம்:))

      Delete
  16. என்னை பொருத்தவரையில் முந்தைய ஆண்டுகள் சந்தோஷமான ஆண்டுகளாக இருந்தன. இந்த ஆண்டை மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாகவே கருதுகிறேன்...காரணம் கொரோனாவில் விழ்ந்து நானும் என் மனைவியும் 2 மாதம் கஷ்டப்பட்டு அதில் இருந்து தப்பித்தோம் காராஜ்டோர் மேலே விழுவதில் இருந்து நானும் என் நாய்குட்டிடியும் அடிபடாமல் தப்பித்தோம்.. அதன் பின் மாடியில் இருந்து விழுந்து Rib எலும்பு ஃப்ராக்சர் ஆகி எளிதில் குணமாகினேன்.. அதுமட்டுமல்ல வேளா வேளைக்கு சாப்பிட உணவும் விரும்பிய உணவை சாப்பிடவும் உடல் இடம் கொடுக்கிறது இப்படி நினைத்து பார்த்தால் இந்த ஆண்டு அதிர்ஷ்டமான ஆண்டே

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லோணும் ட்றுத் நீங்க..
      சிலருக்கு இன்பமாக இருப்பது சிலருக்கு துன்பமாகவும் இருக்கும் ட்றுத்... அது நம் பலன்படிதானே நடக்கிறது.. ஆனால் உலகையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்ட ஆண்டெல்லோ இவ்வாண்டு...

      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  17. அன்பு அதிரா,
    சில சமயம் இது போல நடக்கலாம். சகுனம் ஒன்றும் இல்லாமல் நாங்கள் சந்தித்த இழப்புகள் அதிகம்.
    இனி எல்லாம் சரியாகட்டும் என்றே வேண்டிக்கொள்கிறேன்.

    அன்பு கோமதியுடன் பேச முடியாதபடி இன்னோரு சமாசாரம் நடந்தது.
    சாமிகடவுளே காப்பாத்துன்னு தான் தினம் கண்விழிக்கிறேன்.

    கலவரம் இல்லாமல் இருங்கள்.
    கோமதிதங்கச்சியுடன் பேசுங்கள்.
    நாமெல்லாரும் தான் ஆதரவா இருக்கணும்.
    இன்னும் சில நாட்கள் இருந்தாலும் இப்போதே புது வருடத்துக்கான இனிய வாழ்த்துகளைச்
    சொல்கிறேன் இன்றே!!!!!!!
    நலமுடன், வளமுடனும் இருங்கோ. அன்பு ஏஞ்சலுக்கும் சேர்த்து வாழ்த்து.
    உங்கள் அனைத்துச் செல்லங்களுக்கும்

    அன்பு அணைப்புகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வல்லிம்மா வாங்கோ...

      நேற்றும்போல் இன்று இல்லை, இன்றுபோல் நாளை இருக்காது... நல்லதே நடக்கோணும் எனத்தான் எல்லோரும் நினைக்கிறோம் ஆனா அப்ப அப்ப தவறாகியும் போய் விடுகிறது..
      உண்மைதான் வரும் காலமாவது மனதுக்கு அமைதியானதாக அமையட்டும்.

      நீங்கள் சொல்வதுபோல வல்லிம்மா, நாமும்தான் கோமதி அக்காவுக்கு ஆறுதலாக இருக்கோணும்... என்ன பண்ண முடியும், தூர இருந்து ஆறுதலைச் சொல்ல மட்டும்தான் முடியும், துன்பத்தை அனுபவித்து.. முடிஞ்சவரை மீண்டு வருவது கோமதி அக்காதானே..

      இப்பதிவுகூட கோமதி அக்காவை நினைச்சே போட்டேன்..

      எனக்கு மனம் கலங்கியவண்ணமே இருக்குது, அதனாலதான் இம்முறை அஞ்சுவின் பிறந்ததினம், நெல்லைத்தமிழனின் திருமணநாள்[இரண்டும் ஒரு நாளில் வரும்]... மற்றும் கோபு அண்ணனின் பி தினம் என எதற்குமே எதுவும் பண்ணும் மனநிலை வரவில்லை... காலம் ஓடட்டும் பார்ப்போம் என விட்டு விட்டேன்..

      மிக்க நன்றி வல்லிம்மா... நான் தொடர்ந்து உங்கள் பக்கமெல்லாம் வருவதில்லை எனக் குறை நினைச்சிடாதையுங்கோ.. அப்பப்ப வருவேன்..

      Delete
  18. மிக அருமையாக எழுதி இருக்கீங்க. மனதைத் தொட்ட பதிவு.எல்லோருக்குமே சில,பல நிகழ்வுகள் இந்த வருடம் தொடர்ந்து. அவ்வகையில் எங்களுக்கும் சில கஷ்டங்கள், பிரச்னைகள், வேதனைகள். இந்த வருடம் பலரைக் காவு வாங்கி விட்டது. அதில் கோமதியின் கணவரும் ஒருவராக ஆகிவிட்டதில் மீளா வேதனையே. தினம் தினம் நினைப்பு வந்து விடும். இந்தத் துன்பத்தில் இருந்து கோமதி மீண்டு வரச் சில காலம் ஆகும். விரைவில் பேரன்கள், பேத்தியைப் பார்த்து மனம் ஆறுதல் கொள்ள வேண்டும். கோமதிக்காகப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா. நன்றி நன்றி.. உண்மைதான், அடுத்த குடும்பத்தில்தானே பிரச்சனை, நமக்கு ஓகேதானே என நினைக்க முடியாதபடி எல்லோரையும் .. எப்போ கொரோனா வருமோ.. எப்போ என்ன செய்தி வருமோ.... சாமத்தில் ஏதும் கைமாறி மிஸ் கோல் வந்திட்டால், யாருக்கு என்னாச்சோ ஏதாச்சோ எனக் ஹார்ட் பீட் 200 இல் அடிக்க வைத்த வருடம்.. இப்படி ஒட்டுமொத்த மக்களையும் கலங்கடித்த வருடமாகி விட்டது.
      கோமதி அக்கா மீண்டு வரவேண்டும், சொல்வது எழிதுதான், ஆனாலும் காலம்தான் பதில் சொல்லி, அவவை வெளியே அழைத்து வரப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  19. //நான் நிறைய ரெசிப்பீஸ் செஞ்சு படம் எடுத்து வச்சேன் இப்போ படத்தை பார்த்தா எப்படி செஞ்சேன்னு நினைவிலில்லை ஹாஆஆ ஹாங் எப்பிடி ரெசிபி போடறதுன்னே புரியலை அவ்வ்வ்வ் // me too

    ReplyDelete
    Replies
    1. //இப்போ படத்தை பார்த்தா எப்படி செஞ்சேன்னு நினைவிலில்லை// - ஓ... இதுதான் காரணமா... செய்முறை இடுகை போடாததற்கும், Final product படங்கள் வராததற்கும் (ரீசண்டா..இனிப்பு தோசை, உப்பு தோசை படங்கள் போடலை சிலர்).

      எப்போதும் பண்ணும்போது, ரெசிப்பியை ஃபாலோ பண்ணி செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் செய்யும் எதுவும் சரியா வரும். அப்போதான் அந்தப் படங்களைப் பார்த்தால் என்ன செய்தோம் என்பதெல்லாம் நினைவுக்கு வரும். ஹாஹா

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீசாக்கா இந்த மீ ரூ,.. மீ த்றீ எல்லாம் உங்களுக்குப் பொருந்தாதாக்கும்:) நீங்கதான் ஒரே இடத்தில இருந்து ஒம்பேது படமெடுத்துப் போடுபவராச்சே:)).. இல்லை எனில்.. நன்றி கூகிள் எனப்போட்டுப் போட்டே ஒரு போஸ்ட்டைப் போட்டு எங்களைப் பேய்க்காட்டிப்போடுவீங்க:)) ஹா ஹா ஹா..

      Delete
    3. ///எப்போதும் பண்ணும்போது, ரெசிப்பியை ஃபாலோ பண்ணி செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் செய்யும் எதுவும் சரியா வரும்.//

      ஹா ஹா ஹா 100 வீதம் கரீட்டு நெ தமிழன்... ஆனா ஒரு பிரச்சனை என்ன தெரியுமோ.. முதல் தடவை செய்யும்பொது கரெட்டா அளவுகள், ரெசிப்பி படிச்சு செய்வேன் அப்போ ஒழுங்கா வரும், பின்பு எனக்குத்தான் நல்லா வந்துதே என, ரெசிப்பி பாராமல் எனக்கெல்லாம் தெரியுமெனச் செய்யும்போது பிழைச்சுப் போயிடுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      இப்போ சமீபத்தில் இப்படிப் பிழைச்ச ரெசிப்பி..
      1. பனானா கேக்:)
      2. நான் இங்கு முன்பு செய்துபோட்ட தொதல்:)).. இல்ல இங்கில்லை எங்கள் புளொக்கில் போட்டது.

      Delete
  20. வரும் புத்தாண்டு அனைவருக்கும் நன்மையையே கொண்டு வரப் பிரார்த்திப்போம். எனக்கு சகுனங்களில் ஓரளவு நம்பிக்கை உண்டு. அவை பலித்திருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. எந்த ஒரு விசயத்திலும் நம்பிக்கை வைத்தால் அவை தம் வேலையைக் காட்டும், நம்பவில்லை எனில் எதுவும் பண்ணாதாம் ஹா ஹா ஹா...

      மிக்க நன்றிகள் கீசாக்கா.

      Delete
  21. இந்த வருடம் ஆரம்ப சகுனம் எல்லோருக்கும் பொருந்தாதே...   சகுனங்கள் முன்மொழிகின்றனவா என்று தெரியவில்லை.  ஆனால் நிறைய இழந்துவிட்டோம்.  வரும் வருடம் நன்றாயிருக்கப் பிரார்த்திப்போம்.  பிரார்தித்தல் நம் கடமை.  இறைவன் நமக்களிப்பது எதுவோ அதுதான் வந்து சேரும்.  ம்ம்ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. உண்மைதான்..

      “விதி தவறாக இருக்குமேயானால், தெய்வம் கண்களை மூடிக் கொள்ளுமாம், அதற்காக நாம் அழுதாலும் பலனில்லையாம்”.. சொன்னவர் கண்ணதாசன் அங்கிள்.

      Delete
  22. மறுபடியும் பிளாக் பக்கம் வந்திருப்பது மகிழ்ச்சி.  உங்கள் வேலைகள், மற்றும் ரென்சன் குறைந்திருக்கும் என்று நம்புகிறேன்/றோம்!  தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. //தொடர்ந்து எழுதுங்கள்.//

      என் விருப்பமும் இதுதான்.. பார்ப்போம் நாம் ஒன்று நினைக்க தெய்வம் இன்னொன்றை நினைக்காமல் இருந்தால் சரி:))..

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  23. //இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை,// - ஆண்டுகளாய் இல்லை..மாதங்களாய்.... எப்படியோ இடுகை போட ஆரம்பிச்சுட்டீங்க. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ நெ தமிழன் வாங்கோ.. உங்களுடைய உற்சாகமும்தான் நம்மை ஒதுங்கிப் போயிட விடாமல் எழுதத் தூண்டுகிறது.. அதற்கு நன்றி..

      வாழ்த்துச் சொன்னால் பத்தாது:), வள்ளிக்கு வைர மூக்குத்தி போடுவேன்.. அதிராவைத்தொடர்ந்து எழுதப்பண்ணுங்கோ முருகா என பழனிமலை முருகனுக்கு நேர்த்தி வையுங்கோ:))

      Delete
  24. நாட்கள்தான் கோமதி அரசு மேடத்தின் மனக்கஷ்டத்தை ஆற்ற முடியும். நம் கையில் இல்லாதவற்றை, நாம தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். அவர் மீண்டும் பதிவுகள் எழுத ஆரம்பிப்பார் என்றே நான் நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. // அவர் மீண்டும் பதிவுகள் எழுத ஆரம்பிப்பார் என்றே நான் நம்புகிறேன் //

      + விரும்புகிறோம்.

      Delete
    2. அதேதான், ஆனா கோமதி அக்கா ஊர் உலகத்துக்குப் பயப்பிடுவா, அப்படிப் பயந்தே ஒதுங்கிப்போக நினைப்பா என நினைச்சே நான் பயப்படுகிறேன்... யாருக்கும் பயந்து நாம் ஒதுங்கிடக்கூடாது, யாரும் எதுவும் சொல்லட்டும் ஆனா, சொல்ல மட்டும்தான் மற்றவர்களால் முடியும், நம் துன்பத்தை நாம் தான் சுமக்க வேண்டும் என நினைச்சாவது வெளியே வரோணும் கோமதி அக்கா.. யாருக்கும் பயந்திடக்கூடாது.

      Delete
  25. ஊசிக்குறிப்பு, இந்த இடுகைக்கான பாடல், ஊசிக்குறிப்பு..... இதையெல்லாம் படித்தபிறகு, அதிரா வயசு 16ஆ இல்லை 81 ஆ என்ற சந்தேகம் வந்துவிட்டது.

    உடனே ஏஞ்சலினிடம் வாட்சப்பில் கேட்டேன்... அவர்தான், இன்னும் எத்தனை வருடங்கள் அதிரா 81ல் இருப்பார்... இப்போ 84 நடக்குது என்றார்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. போஸ்ட் போட்டது முழுக்க முழுக்க கோமதி அக்காவை மனதில நினைச்சு, ஆனா காட்டிக் கொடுக்காமல் பொதுவானதுபோல எழுதினேனாக்கும் கர்ர்ர்:))

      //இல்லை 81 ஆ என்ற சந்தேகம் வந்துவிட்டது.//
      எதுக்கு இப்போ கோபு அண்ணனின் வயசை எல்லாம் இங்கின பப்புளிக்கில் ஜொள்றீங்க கர்ர்ர்:))...

      ///உடனே ஏஞ்சலினிடம் வாட்சப்பில் கேட்டேன்...///
      ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ இந்த அபச்சாரம் எப்போ நடந்துது:)) நான் இப்பவே போகிறேன் பிரித்தானியா காண்ட் கோர்ட்டுக்கு:) எனக்கு நீடி வேணும்:)) நியாயம் வேணும்:)).. எனக்குத் தேவை கடமை நேர்மை எருமை:))..

      //இப்போ 84 நடக்குது என்றார்//
      ஆமா ஆமா இப்போதானே 5 நாட்களுக்கு முன் அவவுக்குப் பி தினம் வந்துது:)).. அதை நினைச்சுக்கொண்டே இருந்ததால தன் வயசைக் கேய்க்கிறீங்களாக்கும் என நினைச்சுப்புட்டா:))

      ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் நெ தமிழன்...

      Delete
  26. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலையில் சந்திப்பதில் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கரந்தை அண்ணன்.. எனக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      Delete
  27. சகுனம் ...ம்ம்ம் ரொம்ப யோசிச்சா நிறைய தோணும் அதுனால அதை பத்தி யோசிக்கிறது இல்ல அதிரா ...

    எல்லாம் நன்மைக்கே என்ற ஒரே வாசகம் தான் மனதில் ...அட இப்படி ஒரு கஷ்டம் ன்னு நினைக்கும் எண்ணத்தை விட இதை விட அதிக படியா இல்லாம போச்சேன்னு யோசிச்சு மனதை சமப்படுத்திக்கிறது ...


    கோமதி அம்மா பத்தி நினைக்காத நாள் இல்லை ...அவங்ககிட்ட பேசி இருக்கேன் ..WHATSUP வழி தகவல் பரிமாறலும் உண்டு ..ஆனாலும் ஐயா வின் செய்தி அறிந்ததில் இருந்து எப்படி பேசுவது என யோசித்தே இன்னும் ஏதும் பேச வில்லை ...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      //ரொம்ப யோசிச்சா நிறைய தோணும் அதுனால அதை பத்தி யோசிக்கிறது இல்ல அதிரா ..//
      இதுவும் நல்ல விசயம்தான் அனு.. நானும் இப்படித்தான் ஆனா, ஒரு சம்பவம் நிகழ்ந்தபின், அசைபோட்டுப் பார்க்கையில் நடந்த சகுனம் எல்லாம் சரிதான் போலும் என சில சமயம் மனம் எண்ணுது:))..

      ///அட இப்படி ஒரு கஷ்டம் ன்னு நினைக்கும் எண்ணத்தை விட இதை விட அதிக படியா இல்லாம போச்சேன்னு யோசிச்சு மனதை சமப்படுத்திக்கிறது ...//
      உண்மை அனு, ஆனா சிறிய விசயங்கள் எனில் ஓகே, பெரிய இடி வந்தால் என்ன பண்ணுவது, கஸ்டப்பட்டுத்தான் கடந்து போக வேணும்:(...

      எங்களுக்கும் எப்படி தொடர்பு கொள்வது எனத் தெரியாமல், நீண்ட நாட்கள் தாமதிச்சே தொடர்புக்குப் போனேன்.. கோமதி அக்காவுடன் மட்டும் நாம் பழகியிருந்தாலும், மாமாவின் கை வண்ணங்கள், படங்கள் எனப் பார்த்துப் பார்த்து நம்மில் ஒருவராக எண்ணி விட்டோம் அவரையும், அதனால மனம் ஏற்றுக் கொள்ளக் கஸ்டப்படுகிறது:(..

      மிக்க நன்றி அனு.

      Delete
  28. Mr. ARASU (GOMATHI MADAM'S HUSBAND) WAS A VERY GOOD ARTIST. I FEEL VERY MUCH FOR HIS SUDDEN DEATH.
    :(

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி Blogல இடுகை போடணும். அப்படி போடாததுனால, தமிழ்கூட கோபு சாருக்கு மறந்துவிட்டது. ஆங்கிலத்திலேயே பொளந்து கட்டுகிறார் இந்த திருச்சி தமிழர்.

      Delete
    2. I use only my Desk Top Computer with Big Key Board & Screen for giving Comments & not using my mobile. In my Computer the 'NHM Tamil Writer' is not at all functioning for the past one week. I have to call some Computer Specialist Doctor to rectify it. What to do Swaamee? This is My Very Bad Time. :(

      Delete
    3. வாங்கோ கோபு அண்ணன்... நீங்களும் மனம் தாங்க முடியாமல் கொமெண்ட் போட்டிட்டீங்கள் நன்றி..

      Delete
    4. ////தமிழ்கூட கோபு சாருக்கு மறந்துவிட்டது. ஆங்கிலத்திலேயே பொளந்து கட்டுகிறார் இந்த திருச்சி தமிழர்.///
      ஹா ஹா ஹா அது நெல்லைத் தமிழன், அதிராவுக்கு மட்டும்தான் பேர்த்டே வரவர வயசு குறையும்:)... ஆனா ஏனையோர் அப்படி இல்லையெல்லோ:)... அதனால கோபு அண்ணனுக்கும் வயசு ஏற ஏற :)... தமிழ் எது இங்கிலிசூஉ எதுவெனப் புரியுதில்லையாமே:)... திருச்சி வானொலியில் சொன்னார்கள்...
      தமிழில் தானே எழுதுகிறேன் என நினைச்சே ஆங்கிலத்தில் எழுதுகிறார்:)... ஹா ஹா ஹா எனக்கும் என்னமோ ஆச்சு:)...
      புது வருடம் பிறக்கமுன் திருத்திப்போடுங்கோ கோபு அண்ணன்...

      Delete
    5. ஓ... இந்த அன்புள்ள அதிராவுக்கு பிறந்தநாளே வருவதில்லையா? Only பேர்த்டேவா? ஈழ மொழியை மறந்துட்டாங்களே இவங்க.....

      Delete
    6. நெ.த//
      நீங்க எனக்குத் தமிழ் படிப்பிக்க வெளிக்கிட்டு:)).. இப்போ எனக்கு எந்த நாட்டுப் பாசையில எழுதுகிறேன் என்றே தெரியுதில்லை ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  29. வணக்கம் அதிரா சகோதரி

    பதிவு நன்றாக எழுதியுள்ளீர்கள். நீண்ட நாட்கள் கழித்து பதிவுலகில் உங்களை சந்திப்பது மகிழ்வை தருகிறது. ஆனால் பதிவில் நிறைந்திருக்கும் அழுத்தங்கள் மனதை வருத்தாத நாளில்லை. சகோதரி போல் பழகியதால் கோமதி அவர்களின் துயரம் தினமும் வந்து மனதை வாட்டுகிறது. என்ன செய்வது? நான் மனதில் எழுத நினைத்தையெல்லாம் நீங்கள் எழுதி விட்டீர்கள்.

    நானும் சகுனங்கள் ஒரளவு பார்ப்பேன். ஆனால் எதுவுமே நடந்து முடிந்த பின் அது ஒருவேளை சரியாக பார்க்காததலினால்தான் இவ்வளவு கஸ்டமான சூழ்நிலைகளோ என மனது கிடந்து தவிக்கும். ஆனால் உள்ளிருக்கும் மற்றொரு மனது (இரண்டு மனங்கள்தான் நாம் பிறந்ததிலிருந்தே நம்முடன் ஒட்டிக் கொண்டுள்ளதே ..!) கீதையின் சாராம்சம் சொல்லி மனதை சற்று அமைதியாக்கும்.

    நீங்கள் சொல்வது போல் எப்போதுமே நல்லவர்களை தெய்வம் நிறைய சோதித்து விளையாடுவார். அவனுக்கு இது ஒரு பொழுது போக்கு போலும்..! அதே ஆண்டவனைதான் நாம் தினமும் சரணடைகிறோம்.("சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன காலில் விழலாம்" என்ற பழமொழி உண்டே..! அது போல.. )

    இந்த வருடம் அனைவரையுமே புரட்டிப் போட்டு மனகாயங்களை உண்டாக்கி விட்டது. அடுத்த வருடம் நல்லபடியாக பிறந்து வந்து அனைவருக்கும் மருந்தாக, இதமான ஆறுதல்களை தர வேண்டுமாய் நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    ஊசி குறிப்பும், இணைப்பும் நல்ல வாசகங்கள். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. நான்தான் கடைசி கமென்ட். என்னசெய்வது? இதுவும் விதிப்பயன்தான்...

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..
      உண்மைதான் எனக்கும் புளொக்கை நினைச்சாலே கோமதி அக்காவின் நினைவுதான் வருகிறது.

      ஆஆ நீங்களும் சகுனம் பார்ப்பீங்களோ... அதை மனதில் போட்டு வைத்தால் பின்பு நிறைய விசயங்களுக்கு அது தடையாகிவிடுமோ எனப் பயமாக இருக்கும்.

      ஒவ்வொருவருடம் பிறக்கும்போதும்... வள்ளி வரப்போறா... அள்ளித் தரப் போறா... என்பதைப்போலவே எதிர்பார்க்கிறோம் :).. ஆனா சிலசமயம் ஏமாற்றிவிடுகிறது... இனிமேல் எல்லாம் நல்லதே நடக்குமென நம்புவோம்...

      மிக்க நன்றி கமலாக்கா.

      Delete
  30. கோமதி அம்மா விரைவில் மீண்டு வர வேண்டும்... வருவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி... நன்றி. வருவா கோமதி அக்கா.

      Delete
  31. சகுனம் பார்ப்பேன்... விடியற்காலையில் வேலைக்குப் புறப்படும் போது முதல் பத்தடி தூரத்துக்கு கண்டிப்பாக கவனிப்பேன்... சில ஆட்கள் எண்ணத்தால் சரியில்லாதவர்கள் இருக்கின்றார்கள்.. அவர்கள் எதிர்ப்பட்டால் அறைக்குத் திரும்பி விட்டு மீண்டும் புறப்படுவேன்... துவைத்து மடிப்பு ஏற்றிய பழைய சட்டையைப் போட்டுக் கொண்டு நடந்தால் புது சட்டையா என்று கேட்டு வைப்பார்கள்... அடுத்த சில மணி நேரத்தில் ஏதாவது சங்கடம் வந்து நிற்கும்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ...
      ஆஆஅஆ நீங்கள் ஆகவும் கடுமையாக சகுனம் பார்ப்பவர்போல தெரிகிறதே... சகுனம் பார்த்தால் எல்லாவற்றிற்கும் பார்க்கச் சொல்லியே மனம் சொல்லும்..
      ஒரு தடவை எங்கட அப்பா அம்மா, ஒரு சித்தப்பாவின் மகன் பிறந்து, தொட்டிலில் முதன்முதலில் படுக்க வைக்கும் வைபவத்துக்காக வெளிக்கிட்டு, மோட்டபைக்கில் ஏறி ஸ்ரார்ட் எடுத்ததும்... நாம் வளர்க்கும் நம் செல்லப் பூஸார், ஒருவித வித்தியாசமாக, மோ பைக் முன் சில்லாம் ஜம்ப் பண்ணிக் குறுக்கே ஓடினார், அம்மா உடனே ஒரு கணம் திடுக்கிட்டா... அதுக்கு அப்பா ஏசினார்... நம் பூனைதானே இதை எல்லாம் பார்க்கக் கூடாது என... போய் விட்டனர்...

      அங்கு பூசைகள் முடிஞ்சு குழந்தையை தொட்டிலில் போட்டவுடன், சாப்பிடக்கூட இல்லை, அப்பாவின் அக்காவின் மகன் ஹார்ட் அட்டாக்கில் காலமாகி, அப்பாவுக்கு செய்தி சொல்லாமல் காரில் கூட்டி வந்தார்கள்.... இப்படி சில சகுனம் உண்மையாகியும் விடுகிறது...

      Delete
  32. இப்போதெல்லாம் உக்ரமான தெய்வங்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே அறையிலிருந்து வெளியே வருகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஏதோ ஒரு நம்பிக்கையுடன் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்...

      Delete
  33. திருமதி கோமதிஅரசு அவர்கள் மனம் தேறி வலையுலகத்துக்கு வருவார்கள் என்றே நம்புகிறேன்...

    ReplyDelete
  34. நான்லாம் சகுனங்களை ரொம்பவே நம்புவேன். நான் வெளில கிளம்பும்போது, 'எங்க போறீங்க'ன்னு வீட்டில் யாரும் கேட்கமாட்டாங்க (நான் கோபப்படுவேன் என்று). அதுபோல எனக்கு என் இடது பக்கத்தில் தடுக்கினாலோ இல்லை யாரேனும் தட்டினாலோ ரொம்பவே கோபம் வரும் (இடது பக்கத்தில் அடி பட்டுக்கொள்வது, தடுக்கிக்கொள்வது எனக்கு சகுனத் தடை). நான் கல்லூரியில் படித்தபோது எக்ஸாம் எழுதச் சென்றிருந்தபோது என் கிளாஸ்மேட் 'என்ன மாப்ளே எப்படிப் படிச்சிருக்க' என்று கேஷுவலாகக் கேட்டு என் இடது தோளைத் தட்டினான்.... கோபத்தில் கன்னா பின்னாவெனத் திட்டிவிட்டேன்.

    இயற்கையாகவே, எனக்கு கெடுதல் வரப்போகுது என்றாலோ இல்லை போகும் செயல் வெற்றிபெறாது என்றாலோ இடதுகண் துடிக்கும். (சொன்னா நம்பவே மாட்டீங்க. கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஆரம்பித்த உடனேயே இடது கண் துடித்தால் நான் ஆதரிக்கும் டீம் தோல்வியடையும்.. நான் பேசாம டீவியை ஆஃப் பண்ணிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுடுவேன். ஆனா இதனை என் பசங்க கிண்டல் பண்ணுவாங்க. )

    சகுனம் பார்க ஆரம்பித்துவிட்டாலோ இல்லை நம்ப ஆரம்பித்துவிட்டாலோ அதற்கு முடிவே கிடையாது நாம கவலைப்பட ஆரம்பித்துவிடுவோம்.

    என் தம்பி, அவன் எக்ஸாமுக்கு கிளம்புவதற்கு முன், என் அம்மா, வீட்டைவிட்டு வெளியில் வந்து எதிரில் ஏதாவது சகுனத்தடை வருதா என்று பார்ப்பார்கள் (நான் அந்த அளவுக்குச் செல்வதில்லை ஹாஹா)

    ReplyDelete
    Replies
    1. //அதுபோல எனக்கு என் இடது பக்கத்தில் தடுக்கினாலோ இல்லை யாரேனும் தட்டினாலோ ரொம்பவே கோபம் வரும் //

      ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா என்ன கொடுமை இது:)).. நல்லவேளை பப்ளிக்கில் சொல்லியிருக்கிறீங்க அதனால புளொக் நண்பர்கள் சந்திக்க நேர்ந்தால் தப்பித்தவறியும் உங்கட இடது பக்கக் கதிரையில வந்து இருக்க மாட்டினம் ஹையோ ஆண்டவா... நீங்கள் ஓவராக சகுனம் பார்க்கிறீங்க...

      கண் துடிக்கும் பலன் உண்மை என்பார்கள் ஆனா எனக்கும் துடிக்கும், இதுவரை அப்படி துடித்ததனால நன்மையோ தீமையோ வந்ததாக இல்லை.

      //சகுனம் பார்க ஆரம்பித்துவிட்டாலோ இல்லை நம்ப ஆரம்பித்துவிட்டாலோ அதற்கு முடிவே கிடையாது நாம கவலைப்பட ஆரம்பித்துவிடுவோம்.//
      இதுதான் 100 வீதம் உண்மை, நாம் அதற்கு அடிமையாகி விட்டால் பின்பு தொட்டதற்கெல்லாம் மனம் கிடந்து பயப்படும்... நான் இப்போ எது வந்தாலும் நம் விதி என நினைக்கப் பழகி வருகிறேன்..

      முக்கியமாக மனிதர்களை வைத்துச் சகுனம் பார்ப்பது எனக்குப் பிடிப்பதில்லை.... நம்மை எத்தனைபேர் சகுனம் சரியில்லாதவர் என ஒதுக்குகினமோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.. ஆனா எங்கட மாமா சொல்லுவார், வெளியே போகும்போது சிலரில முழிக்க நேர்ந்தால் தனக்கு அன்று நாள் நல்லதாக அமையுமென, ஆனா மாமா சொல்லும் அந்த சிலரைப் பார்த்து.. ஊரிலிருப்போர், சகுனம் சரியில்லாதவர் எனத் திட்டுவினம்.... அப்போ இதை என்ன என்று சொல்வது.. ஒருவருக்கு நல்லதாக தெரியும் ஒன்று, இன்னொருவருக்கு கூடாததாக அமைஞ்சு விடுகிறது:))..

      உண்மைதான் ஊரில் ஒருவர் தூரப்பயணம் போகிறார் எனில், முதலாவதாக ரோட்டுவரை எட்டிப்பார்த்து எல்லாம் ஓகே என்றபின்னரே கையசைப்பினம், அதன் பின்னரே பிரயாணி வெளியே வருவார் ஹா ஹா ஹா... அதெல்லாம் ஒரு காலம்..

      நான் எல்லாம் இப்போ..,
      எங்கே போறீங்க? அதுவும் இந்த நேரத்தில.. இப்படி எல்லாம் கேட்பேன் நம் குடும்பத்தவரை ஹா ஹா ஹா.. குடும்பம் மீன்ஸ்.. அக்கா குடும்பம் அண்ணா குடும்பம் எல்லோரையும்தான்.. இது நமக்கு இங்கு பழகிவிட்டது..

      நன்றி நெல்லைத்தமிழன்.

      Delete
    2. சகுனம் பற்றி இதோ ஒரு கதை :-

      http://gopu1949.blogspot.com/2014/08/vgk-32.html

      மேற்படி கதைக்கான பரிசுபெற்ற விமர்சனங்கள்:-

      http://gopu1949.blogspot.com/2014/09/vgk-32-01-03-first-prize-winners.html

      http://gopu1949.blogspot.com/2014/09/vgk-32-02-03-second-prize-winners.html

      http://gopu1949.blogspot.com/2014/09/vgk-32-03-03-third-prize-winner.html 

      Delete
    3. ஆஆஆ கோபு அண்ணனின் கொமெண்ட்ஸ் பார்த்து நெல்லைத்தமிழன் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிட்டார்ர் ஹா ஹா ஹா.. நெல்லைத்தமிழன் வெளியில வாங்கோ.. இதில ஒவ்வொரு லிங்கையும் போய்ப் படிச்சுக் கொமெண்ட்ஸ் போடோணும் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:)..

      நன்றி கோபு அண்ணன்..

      Delete
    4. பிரதிலிபி போட்டிக்கு அடியேன் அனுப்பிய 11 கதைகளில்,  எதற்குமே பின்னூட்டமிடாமல் கடுக்காய் கொடுத்துவிட்டார் உங்கள் நெல்லைத் தமிழன் ஸ்வாமீ, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

      அஞ்சுவும், ஜெயந்தி ஜெயாவும், ஆச்சியும் சமத்தாக 11 க்கு 11 மார்க் வாங்கி முன்னிலையில் உள்ளனர். 

      அதிராவுக்கு 11 க்கு 8 மார்க் மட்டுமே. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))))  :(((           

      Delete
  35. வருக, வ்ருக அதிரா! மீண்டும் வலையுலகிற்கு நல்வரவேற்பு!
    உங்கள் எழுத்தைப்பார்த்ததும் உற்சாகம் பிறக்கிறது! உற்சாகப்படுத்துவதற்கென்று ஒருத்தர் வேண்டாமா வலையுலகிற்கு?
    உங்களின் மனம் சோர்ந்து போன எழுத்துக்கள் படித்து வருத்தமாக இருந்தது. சாதாரணமாகவே வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள் என்றாலும் இந்த வருடம் கொரோனாவால் நிறைய பேருக்கு தாங்க முடியாத பிரச்சினைகளும் துயரமுமாய் ஆகி விட்டது வாழ்க்கை! ஏதோ இந்த மட்டிலுமாவது நன்றாக இருக்கிறோமே என்று சில சமயங்களாவது நினைத்து ஆறுதல் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. பிரச்சினைகளால் தளர்ந்து போய் விடாதீர்கள். தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் எழுந்து உட்காருங்கள். கண்னதாச‌னின்
    'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்,
    வாசல் தோறும் வேதனை இருக்கும்,
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை!
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி,
    நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு'
    என்ற வரிகளை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.
    திருமதி. கோமதி அரசுவின் துக்கம் அவ்வளவு சீக்கிரத்தில் தீர முடியாத துயரம். அவர்களுக்காக நானும் மனதில் அழுகிறேன். துணையைப்பிரிந்திருக்கும் தனிமையை அவ்வளவு சீக்கிரம் ஜீரணித்துக்கொள்ள முடியுமா! அவர்களின் கடவுள்பக்தி இந்த துயரிலிருந்து மீட்டெடுக்க உதவும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. உங்களை எல்லாம் பார்க்கையில் மனதில் மகிழ்ச்சி பிறக்கிறது...

      //உங்கள் எழுத்தைப்பார்த்ததும் உற்சாகம் பிறக்கிறது! உற்சாகப்படுத்துவதற்கென்று ஒருத்தர் வேண்டாமா வலையுலகிற்கு?///
      ஆஆஆ ஹா ஹா ஹா நன்றி நன்றி...

      நான் போஸ்ட் போடவில்லையே தவிர, ஏனையோரின் போஸ்ட்டுகளுக்கு இடைக்கிடையாவது வந்து வந்து போகிறேன் மனோ அக்கா, இல்லை எனில் “காணாமல் போனோர்”:) எனும் பட்டியலில் என்னையும் இணைச்சுத் தேடிக் கொண்டிருப்பார்கள்...

      முழு நாட்களும் இப்போ வேர்க் பண்ணுவதால், புளொக் பக்கம் வந்து போவது கஸ்டமாக இருக்குது, மற்றும்படி நலமாக இருக்கிறோம் மனோ அக்கா.

      கோமதி அக்காவுக்காக நானும் ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன், மன
      தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும்படி...

      மிக்க நன்றிகள் மனோ அக்கா.

      Delete
  36. போஸ்ட் எழுத கனகாலம் என்றால் போஸ்ட் திறக்க கனகாலம் பிடிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா.. நலம்தானே...

      //போஸ்ட் திறக்க கனகாலம் பிடிக்கிறது//
      ஆஆஆஆஆஆஆ திரும்பவுமா? அ நாவிலிருந்தோ? ஹா ஹா ஹா... என்னவோ தெரியவில்லையே..
      மிக்க நன்றி வருகை தந்து கொமெண்ட் பொட்டமைக்கு.

      Delete
  37. வாங்க அதிரா! நான் பானுமதி நினைவு இருக்கிறதா? இது உங்கள் பதிவா? ஏஞ்சல் பதிவா? என்று சந்தேகம் வந்து விட்டது. வழக்கம்போல் பொன்மொழி சிறப்பு!. தொடர்ந்து வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ...

      ஹா ஹா ஹா உங்களை எப்படி மறக்க முடியும் பானுமதி அக்கா.. சோட் அண்ட் சுவீட் க்கு சொந்தக்காரர் எல்லோ நீங்கள்...

      போஸ்ட் தான் போடுவது குறைந்துவிட்டது மற்றும்படி, அப்பப்ப போஸ்ட்டுகளை எட்டிப்பார்த்துக் கொமெண்ட்ஸ் உம் போடுவேன், கும்மி, கோலாட்டம் தான் இல்லாமல் போய் விட்டது:)).. இனிக் கிரிஸ்மஸ் உடன் ஸ்கூல் ஹொலிடெ வரும் பார்க்கலாம்...

      மிக்க நன்றி பானு அக்கா.

      Delete
  38. வருக அதிரா பதிவுலகம் வரவேற்கிறது.
    ஊசி(ப்போன)க் குறிப்பு அருமை.

    தங்களது கும்மியடி பதிவுகள் தொடரட்டும்.

    இப்பதிவு எனது டேஷ்போர்டில் வரவே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. இப்போ எல்லோரும் அதிராவை வரவேற்கும் நிலைமை ஆச்சு ஹா ஹா ஹா:)..

      என்னாது ஊசிப்போனதோ கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      பதிவு போட்டதும் உடனே காட்டும் ஆனா இம்முறைதானாக்கும் நான் புதிய வடிவமைப்பின் மூலம் முதல் பதிவு போட்டேன் அதனால ஒரு மணி நேரம் கழிச்சே டாஸ் போர்ட்டுக்கு வந்துது... அதனால உங்களுக்கு தெரிஞ்சிருக்க லேட்டாகியிருக்கும்..

      நன்றி கில்லர்ஜி.

      Delete
  39. பதிவுகள் எழுதுவதில் சுணக்கம் - இங்கேயும் அப்படியே.

    கோமதி அக்காவிற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு தாங்க முடியாத ஒன்றே. காலம் தான் அவருக்கு மன ஆறுதல் தரவேண்டும்.

    இந்த வருடத்தின் பிரச்சனைகள் விலக வேண்டும். வரும் வருடம் நல்லதாகவே அமைய பிரார்த்தனைகள் - என் சார்பிலும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ... உண்மைதான் காலம்தான் ஆறுதலை அளிக்கும்.. புதுவருடம் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ பொறுத்திருந்து பார்ப்போம்... நன்றி வெங்கட்.

      Delete
  40. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்ற பாடல் போல தான் பதிவுகளும் எழுத ஆயிரம் சோலி![[ அடுத்த ஆண்டு சரி நல்ல மனநிலையில் நல்ல பதிவுகள் எழுத என்னவளே சினேஹா வரம் தரட்டும்![[

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தனிமரம் நேசன் வாங்கோ...

      //நல்ல பதிவுகள் எழுத என்னவளே சினேஹா வரம் தரட்டும்![[//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  41. கோமதி அக்கா துயரத்தில் இருந்து மீண்டுவர பிரார்த்திக்கின்றேன் என் ஐய்யப்பனிடம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நேசன்.. இம்முறை உங்களை ஐயப்பன் சுவாமியிடம் போக விடாமல் தடுத்து விட்டதே கொரோனா.. ஜனவரிக்குப் போவது கஸ்டம்தானே...

      Delete
  42. முன்கூட்டிய இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நேசன்... புதிய போஸ்ட் ஒன்று வருது வந்து பாருங்கோ..:) மிக்க நன்றிகள்.

      Delete
    2. வாழ்த்துக்கு நன்றிகள்.

      Delete
  43. நீங்க பதிவு போட்டதே தெரியாது. அஞ்சு பி.நாள் போஸ்ட் பார்த்துதான் அதுவும் தற்செயலா உங்க பக்கம் ஓபன் செய்துதால் தெரிந்தது.
    கோமதி அக்காவுக்கு மனதைரியத்தை கடவுள் தரவேண்டும்.
    இவ்வாண்டு மறக்கமுடியாததாகி போய்விட்டது. கஷ்டங்கள் துன்பங்க அதிகமான ஆண்டாக விட்டது.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.