நல்வரவு_()_


Saturday, 29 August 2020

 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களோடு💗 

எங்கட பிளாக்பெரீஸ்🍒🍒

பிறந்தநாள் அன்றே போஸ்ட் ரெடி பண்ணினேன், ஆனால் தவிர்க்க முடியாத நிகழ்வால், போட முடியாமல் போய் விட்டது, அதனால தாமதமாக இன்று போஸ்ட்டைப் போடுகிறேன். 
26.08.20 இல் தனது 80:) ஆவது அகவையில் அடி எடுத்து வைக்கும் அன்பு நண்பி அம்முலு என்கிற பிரியசகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..2009 இல் ஆரம்பித்த நம் நட்பு இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.. இந்த இனிய நட்பு, இனிமேலும் தொடரவும், நீண்ட ஆயுள், சகல செல்வங்களோடும் நீடூழி வாழவும் வாழ்த்துகிறோம்...

ஆவணியில அம்முலுவுக்குப் பிறந்தநாள் வருகிறதென்று, ஆடிச்செவ்வாயிலேயே நான் போட்ட மாவிளக்கு:)), நம்போணும் ஜொள்ளிட்டேன்:))
ওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও
இம்முறை மிகவும் பற்றையாக வளர்ந்துவிட்ட பிளாக்பெரீஸ் ஐ, கொத்துக் கொத்தாக வெட்டி எடுத்து...

காய் புறிம்பாகவும் பழங்கள் புறிம்பாகவும் பிரிச்சு

பழங்களை மட்டும் நிறுத்துப் பார்த்தால் சரியாக 800 கிராம்ஸ்...

கொஞ்சம் பழமாகச் சாப்பிட்டு விட்டு[நல்ல இனிப்பு] மிகுதியில் ஜாம் செய்தேன்...
ஜாம் செய்முறை... ஒரு கப் பழமெனில் முக்கால் கப் சீனி சேர்த்து, ஒரு 50 மில்லி லீட்டர் அளவு தண்ணி சேர்த்துக் காச்சவும், அதனுள் சில துளிகள்.. பழ அளவைப்பொறுத்து தேசிக்காய்/எலுமிச்சை சேர்க்கவும்... பாயாசம் இறுகி வருவதைப்போல தடித்த பதமாக வரும்போது, இறக்கி கொதி அடங்கியதும்.. சூட்டோடு போத்தலில் போடவும், தாமதித்தால் இறுகிவிடும்..

இதில் ஒரு குட்டி ரிப் .. என்னவெனில், ரீச்சர் ஒருவர் சொன்னா, காச்சும்போது அரைக்கரண்டி ஜெலிப்பவுடர் சேர்த்தால் நன்கு இறுக்கமாகும் என... அதிகம் சேர்த்தால் கட்டியாகிவிடும்.. 

         ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதிராவின் கை வண்ணத்தில் ஜாம்.. ஜம்மி ஜம்மி:))

சரி பழத்தைச் சரிப்பண்ணிட்டேன், காய்களை என்ன செய்யலாம் என ஓசிச்சேனா.. உடனே அஞ்சுவின் கலா+அக்கா= கலாக்கா நினைவுக்கு வரவே.. அஞ்சு வீட்டுக்கு ஓடி ரெசிப்பி கேட்டு வந்து, பிளாக்பெரிக் கலாக்கா செய்தேன் ஆக்கும்... இது இன்னும் இருக்குது அப்படியே சூப்பராக.. ரெசிப்பி இங்கே

ஆவ்வ்வ்வ்வ் பொயிண்டுக்கு வந்திட்டேன், என் நெடுநாள் ஆசை... நிறை வேறியதே.. அகர் அகர் அமேசனில் வாங்கி, பால் சேர்த்துச் செய்தேனே.. இம்முறை சூப்பராக வந்தது...

இத்தனையும் யாருக்காக.. யாருக்காகச் செய்தேன்?:)).. அம்முலுவுக்காக எனச் சொன்னால் நம்பவோ போறீங்கள்?:))

ஊசி இணைப்பு:
நாங்க அவ்ளோ நல்லவிங்களாக்கும்..க்கும்..க்கும்:))

ஊசி இணைப்பு:
😍😍😍😍😍😍

109 comments :

  1. பிரியசகிக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ஜாம் செய்த படங்கள் அழகாக இருக்கின்றன...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அண்ணா ஜீ.

      Delete
    2. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ... இந்த வாரம் என்னால எதுவும் பண்ண முடியவில்லை..

      நன்றி..

      ஆஆஆ அம்முலுவும் வந்திட்டா...

      Delete
  2. ஆஹா, எல்லாமே நன்றாக உள்ளன, அம்முலு பெயரைச் சொல்லி நீங்க சாப்பிட்டதுக்கு அம்முலுவுக்கும், உங்களுக்கும் வாழ்த்துகள். ஜாம் நல்லாவே வந்திருக்கு. ஊறுகாயும் நல்லா வந்திருக்கும் என்று நீங்க சொல்வதை நம்பித்தான் ஆகணும். வேறே வழியில்லை. இதுக்காக ஸ்கொட்லான்டா வர முடியும்! :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கீதாக்கா.

      Delete
    2. வாங்கோ கீசாக்கா வாங்கோ...

      //அம்முலு பெயரைச் சொல்லி நீங்க சாப்பிட்டதுக்கு//

      ஹா ஹா ஹா பாருங்கோ கீசாக்கா, அம்முலுவால மீ குண்டாகிடப்போகிறேன்

      //ஊறுகாயும் நல்லா வந்திருக்கும் என்று நீங்க சொல்வதை நம்பித்தான் ஆகணும். வேறே வழியில்லை.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்:)) யாரங்கே கீசாக்காவுக்கு உடனடியாக கொரொனா ரெஸ்ட் பண்ணிய:) ஒரு ஊறுகாய்ப்பார்சல் பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

      Delete
  3. ஊசி இணைப்பு ஹிஹிஹிஹி, ஊசிக்குறிப்பு உண்மையா என யோசிக்கிறேன். எண்ணங்கள் ஒரு காரணம் என்றாலும் இதில் மற்றவர் பங்கும் உண்டே! பெரும்பாலும் அதை ஒட்டியே எண்ணங்களும் அமையும் இல்லையோ? யோசிக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  4. அஞ்சு இன்னமும் வரலையா? மீ த ஃப்ரஷ்ட்ட்ட்ட்ட்ட்டு?

    ReplyDelete
    Replies
    1. இப்போதான்க்கா வந்தேன் :)

      Delete
    2. //யோசிக்க வேண்டிய விஷயம்.//
      உண்மைதான்..

      நீங்க மீ ட பெஸ்ட்டூ இல்லையாக்கும்:).. கில்லர்ஜி முந்திட்டார் அஸ் யூஸுவல்:)) ஹா ஹா ஹா...

      அஞ்சுவும் லாண்டட்.. புளொக் அதிருதெல்லோ:))

      Delete
  5. வணக்கம் அதிரா சகோதரி

    முதலில் உங்கள் அன்பு நண்பி சகோதரி பிரியசகிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் அவர் சிறப்பாக வாழ்வும், உங்கள் இருவரின் நட்பு மென்மேலும் சிறக்கவும் இறைவனை நானும் மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    அதென்ன பிறந்த வயதை குறைத்துக் சொல்லி விட்டீர்கள்... பாக்கியை யார் சொல்வதாம்? ஹா.ஹா. ஆனால், அப்படி நீங்கள் சொன்ன அந்த வயதிலும் ஒரு இனிமையான வாழ்த்து அடங்கி உள்ளது.

    அத்தனை வயதிலும்,அதற்கு மேலும்,அவர் ஆயுள் ஆரோக்கியத்துடன் குழந்தை குடும்பமென வாழ்ந்து பேரன் பேத்திகளுடன் அவர் குடும்பம் முழுவதும் சந்தோஷமாக இருக்க இந்நாளில் அனைவரும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்.

    அவருக்காக நீங்கள் செய்த மாவிளக்குமா பிரார்த்தனை, இனிப்புக்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. அவற்றை நன்றாக ரசிக்க பிறகு மறுபடியும் வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கமலாக்கா.

      Delete
    2. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      //அதென்ன பிறந்த வயதை குறைத்துக் சொல்லி விட்டீர்கள்...//

      ஓ அப்போ எங்கட குயின் அம்மம்மாவின் வயசைச் சொல்லியிருக்கலாமோ:)) ஹா ஹா ஹா

      நன்றி கமலாக்கா... என்னால் எதுக்கும் முடியாமல் இருக்குது.... கொக்டவுனில் நன்கு லைஃப் ஐ என்சோய் பண்ணியதாலோ என்னமோ.. இப்போ எதுக்கும் நேரமே ஒதுக்க முடியாமல் அவதிப்படுறேன்:).. இதுவும் ஒரு சந்தோசமாகவே இருக்குது.

      Delete
  6. ஆஹா அகர் அகர் கேக் பார்க்க அருமை. ருசி எப்படியோ? ஊசிக் குறிப்பில அதிரா கல்யாணம் ஆனவுடன் குண்டானதை பற்றி விளக்கியிருக்கிறார். நன்று. பின்னே கணவர் சமைப்பதை எல்லாம் சாப்பிட முடியுமா?  கஷ்டப்பட்டு சமைத்த மனைவியும் சாப்பிட வேண்டுமே என்று தான் மீதி வைக்கிறார். 

    எண்ணங்களே செயல்கள் ஆகின்றன என்ற பொன்மொழி சிறப்பு. 

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஜேகே ஐயா வாங்கோ வாங்கோ.. நலம்தானே... போன போஸ்ட்டுக்கு உங்களைக் காணவில்லையே என யோசிச்சேன்ன்.. இம்முறை வந்துவிட்டீங்கள்.

      //ஊசிக் குறிப்பில அதிரா கல்யாணம் ஆனவுடன் குண்டானதை பற்றி விளக்கியிருக்கிறார்.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆனாலும் இது உண்மைதான்.. ஆனா அதுக்கு காரணம் நான் சமைச்சதைச் சாப்பிட்டல்ல:)).. என் கணவரில் ஒரு குணம்.. ஒன்று கேட்டால் 3 வாங்கித்தருவார்:)).. அது பொருளாயினும் உணவாயினும் அப்படித்தான்.. அப்போ காசு குடுத்து வாங்கியதை எறிய மனம் வருமோ?:)).. வச்சூஉ வச்சுச் சாப்பிட்டு முடிச்சுக் குண்டாகிட்டேன் ஹா ஹா ஹா... ஆனா அப்போ என் வெயிட் வெறும் 53 கிலோத்தான்:))..

      நன்றி ஜேகே ஐயா..

      Delete
  7. உங்கள் தோழிக்குப் பிறந்தநாள் (belated, though) வாழ்த்துகள்.
    Pink, grey கலர்களில் ஸ்வீட் அபாரமாகத் தெரிகிறது. நாக்குக்கும் அப்படித்தான் தெரிந்ததா!
    நீங்கள் குண்டாக இருப்பதன் காரணம் அறிந்து மனம் லேசாகிவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      Delete
    2. ஆஆஆஆஆஆஆ ஏ அண்ணன் வந்திருக்கிறார் இம்முறை வாங்கோ வாங்கோ... நாக்குக்கு சுவையோ இல்லையோ.. பார்ப்பவருக்கு ஆசையைத்தூண்டுமளவுக்கு செய்திட்டேனெல்லோ:)) ஹா ஹா ஹா..

      //நீங்கள் குண்டாக இருப்பதன் காரணம் அறிந்து மனம் லேசாகிவிட்டது!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் ரெம்ம்ம்ம்ப வயக்கெட்டுப்போயிட்டேன் தெரியுமோ இப்போ:)).. ஹா ஹா ஹா நன்றி ஏ அண்ணன்.

      Delete
  8. ஆஹா ...

    அம்முலுக்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....

    மிக சுவையான பதிவு அதிரா...

    பிளாக்பெரீஸ் ஜாம் வாவ் ..சூப்பரா இருக்கு

    அகர் அகர் அட்டகாசம் ...அதில் அந்த ash கலர் எப்படி வந்தது ...

    ஊசி இணைப்பு -
    நாங்க அவ்ளோ நல்லவிங்களாக்கும்..க்கும்..க்கும்:))....க்கும் க்கும் .....

    ஊசி இணைப்பு அருமை ...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி அனு

      Delete
    2. வாங்கோ அனு வாங்கோ.. அது பச்சைக்கலரைக் கொஞ்சமாக விட்டேன்.. பார்க்க கிரே ஆகிட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்:))

      ஹா ஹா ஹா நாங்க எப்பவும் நல்லவிங்க இல்லியா:)) நன்றி அனு.

      Delete
  9. அகர் அகர் இனிப்பு, அதன் கலர் காம்பினேஷன், பெர்ரி ஜாம் என்று எல்லா புகைப்படங்களும் சூப்பர் அதிரா! கலக்கி விட்டீர்கள்! அசத்தி விட்டீர்கள்!
    பிரிய சகிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு பிரமாதம்!
    அந்த குட்டி பொம்மை! அத்தனை அழகு!! எங்கே வாங்கினீர்கள்? அல்லது கூகிள் வழி வந்ததா?

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி மனோக்கா.

      Delete
    2. வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. லிக்டவுனில் கலக்கினேன்:).. நன்றி நன்றி... இப்போ ஸ்கூல் தொடங்கியதால புட்டவிக்கக்கூட நேரம் கிடைப்பதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      சே..சே.. எல்லாம் கூகிளாரின் மகிமைதான் மனோ அக்கா.

      Delete
  10. 10ந்தேதி திரும்ப துபாய் செல்கிறேன் கணவருடன்! கிளம்புவதற்கு முன் கோவிட் டெஸ்ட் செய்து நெகடிவ் ரிசல்ட்டுடன் விமானமேற வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஓ ரிக்கெட் எல்லாம் வாங்கிவிட்டீங்களோ.. நல்லது.. கிட்டத்தட்ட 6 மாதத்தால் திரும்பப்போகிறீங்கள்... கோவிட் ரெஸ்ட் எடுத்தவுடன் தான் பிளேன் ஏற முடியுமாம்.. அதில் இன்னொன்று, விண்டோ சீட் அல்லது அயல் சீட்டில் இருப்போர் மாஸ்க் மட்டும் போட்டால் போதுமாம்.. நடு சீட்டில் இருப்பவர், முழுக் கவசம் போட்டுக்கொண்டிருக்கோணுமாமே.. அதற்கேற்றபடி சேட் நம்பர் ஐ ஏழியாகவே செலக் பண்ணினால் நல்லதெல்லோ.. நலமே வந்து சேருங்கோ.. நன்றி மனோ அக்கா.

      Delete
  11. பிரியசகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்

    ஆனந்த கண்ணீர் பெருக பிறந்தாள் பாட்டா? கேட்டேன். கொஞ்சம் சோகமாய் இருக்கிறாரே சிவாஜி.


    பிறந்த நாள் வாழ்த்துப் பாட்டு மிக அருமை. நிலவு தாளில் எழுதலாம் அருமை.

    எனக்கும் ஆவணியில் தான் பிறந்த நாள் வியழக்கிழமை முடிந்து விட்டது.

    மாவிளக்கு அருமை, தினை மா மாவிளக்கு தானே! போன பதிவில் சொன்னீர்கள் அதை அம்முக்கு என்று சொல்லி விட்டீர்கள்.





    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு நன்றி அக்கா.

      Delete
    2. உங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா.

      Delete
    3. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      நான் படம் பார்க்கவில்லை ஆனா கே ஆர் விஜயா ஹப்பியாக இருக்கிறாவெல்லோ.. பாட்டில் முடிவில் வாழ்த்துச் சொல்வது அழகாக இருக்குது.

      ஓ கோமதி அக்காவுக்கும் இம்மாதம்தான் பிறந்தநாளோ.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோமதி அக்கா...

      இம்முறை சாமை மாவில் செய்தேன் கோமதி அக்கா.. அன்று சொன்னதுதான்:))

      Delete
    4. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அதிரா

      Delete
  12. பிளாக்பெரீஸ் ஜாம் நன்றாக இருக்கிறது.பிளாக்பெரிக் கலாக்காவும் நன்றாக இருக்கிறது.

    அகர் அகர் பார்க்கவே அருமை.

    ஊசி இணைப்புகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.


    ReplyDelete
    Replies
    1. அனைத்துக்கும் மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்முலு :) 

    ReplyDelete
  14. நம்ம பசி போக சாப்பிடற மிகுதி கிரான்பெரி  க்ரான்பெரி பிற பறவைகள் அணில்களோடது ஹஹஹஹஹஹ :) எங்க வீட்ல நிறைய இருக்கு நாங்க செடிலயே விட்டுட்டோம் அணிலனும் அணிலாவும் சாப்பிடறதை பார்த்தன் :)

    ReplyDelete
    Replies
    1. /// எங்க வீட்ல நிறைய இருக்கு நாங்க செடிலயே விட்டுட்டோம் அணிலனும் அணிலாவும்//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிராவைப்போல அவற்றைப் பிடுங்கி இப்படி வகைவகையாக செய்ய அலுப்பில, பேசாமல் விட்டுப்போட்டு.. இப்போ தான் பெரிய கொடையாளி என்பதைப்போல என்னா ஒரு பில்டப்பூஊஊஊ:))..

      இங்கு பழங்கள் நிறைய தொங்குது, ஆனா பறவையோ அணிலோ சாப்பிட்டு நான் காணவில்லை.. ஒருவேளை அவர்களுக்கு இங்கு இவை ஓவராகக் கிடைப்பதால் அலுத்துப் போச்சோ என்னமோ:))

      Delete
  15. ஜாம் சூப்பரா இருக்கு அதுவும் வீட்டு தயாரிப்பு நிச்சயம் அருமையா இருக்கும் .ஹெல்தி எந்த  செயற்கை சேர்ப்பானும் இல்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்காதது 

    ReplyDelete
    Replies
    1. உண்மை அஞ்சு.. சும்மாவே சுவீட்போல சாப்பிடலாம்:)

      Delete
  16. நீங்க சொன்ன மாதிரியே பாராட்டிட்டேன் மியாவ் கமெண்டை பப்லிஷ் பண்ணுங்க ஏதாச்சும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கானு பார்த்து 

    ReplyDelete
    Replies
    1. ///நீங்க சொன்ன மாதிரியே பாராட்டிட்டேன் மியாவ்//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நில்லுங்கோ அடுத்த தடவை உங்களுக்கு கோவிட் ரெஸ்ட்டின்போது மூக்கில இடிக்கச் சொல்லிச் சொல்லிக் குடுக்கிறேன்:)) ஹா ஹா ஹா

      Delete
  17. அம்முலு பிறந்த நாள் பார்ட்டிக்கு வாங்கின டிரஸ் அண்ட் மலர் கிரீடமோ :))) ஹஹஹஹ 

    ReplyDelete
    Replies
    1. மலர்கிரீடத்தையும்,டிரஸையும் பார்த்த மயக்கத்தில இங்கன நன்றியைபோட்டிட்டன் ஆவ்வ்வ்

      Delete
    2. அமுலுவின் பார்ட்டிக்காக ரெடி பண்ணினேன், ஆனா அன்று கொண்டாட முடியாமல் போச்ச்ச்ச்:(..

      Delete
  18. மாவிளக்கில் அந்த தீ சுடர் நல்லா கவனிங்க மிக அழகா வந்திருக்கு சூப்பர் 

    ReplyDelete
    Replies
    1. //மாவிளக்கில் அந்த தீ சுடர்/

      ஹா ஹா ஹா மீ இப்போ ரெம்ம்ம்ப உசாராகிட்டேன்:)).. முதல் படத்தோடு நிறுத்திட்டேன்ன்:)).. முடிவின்போதுதானே சொக்கப்பனை எரிச்சு முடிப்பது:))

      Delete
  19. ஊசி இணைப்பு புரியவில்லை தெளிவா விளக்கவும் 

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எதை விரும்புறீங்களோ.. எதை அதிகம் நினைக்கிறீங்களோ.. அப்பூடியே ஆவீங்களாம்ம்:))

      Delete
  20. கலாக்கா ஊறுகாய்க்கு பப்லிக்குட்டி கொடுத்ததற்கு நன்றீஸ் .உங்களால் எனக்கு orders நிறைய வந்திருக்கு ..:)) என்ன செய்யப்போறேன்னு தெர்ல கொஞ்சம் கை குடுங்க சேர்ந்து பிசினஸ் செய்வோம் 

    ReplyDelete
    Replies
    1. நோஓஓஓஓஓஓ நான் கூட்டுச் சேர மாட்டேன்ன்.. எனக்கு இங்கின ஸ்கொட்டீஸ் ஓடர்.. சில்லிப்பவுடர் குறைச்சு செய்து தரட்டாம்ம்ம்:)) நீங்க எனக்கு கொஞ்சம் கலா அககவை மட்டும் அனுப்பி வைக்கவும்:))

      Delete
  21. ஹாஹ்ஹாஹ்ஹா அகர் அகர் :))))))))) எத்தனை வருஷ effort ..நல்லா வந்திருக்கு :) ஆனாலும் அந்த ஜெல்லி பேஸ்ட் தான் கண்ணுமுன்னே வருது நீங்க அகர் அகார்னு சொல்லும்போதெல்லாம் 

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிம்பிள் அகர் அகர்.. சரியானது கையில கிடைக்காமையால என்னைப் பாடாய்ப்படுத்தியது பாருங்கோ..

      Delete
  22. ஊசி இணைப்பு :)))) ஓஹோ ஒஹாஹா :)) சரி இப்போ புரியுது 

    ReplyDelete
    Replies
    1. இப்போதான் கண்ணாடியைத்தேடி எடுத்துப் போட்டுப் படிச்சீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நன்றி அஞ்சு.. அனைத்துக்கும்.

      Delete
  23. தங்களின் தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்கு.

      Delete
    2. வாங்கோ கரந்தை அண்ணன்.. நன்றி.

      Delete
  24. ஆ.. இது செல்லாது செல்லாது. அன்றே வாழ்த்தியிருகோனும். தாமதமான வாழ்த்து ஏற்றுக்கொள்ளப்படாது.....
    சரி சரி..அப்பாவியா இருக்கிறீங்க. பிழைச்சுபோங்கோ. இம்முறை பனிஷ்மெண்ட் இல்லாமல் விட்டாச்சு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      ஹா ஹா ஹா உண்மைதான் ஆனா வேறு என்ன காரணம் என்றாலும் நான் வந்திருப்பேன்.. இது மனசுக்கு முடியாமல் போச்சு.. மெயில் பார்க்கவும்.. நன்றி அம்முலு..

      Delete
  25. சகோதரி பிரியசகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    படங்களே தித்திக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி டிடி அண்ணா.

      Delete
    2. வாங்கோ டிடி வாங்கோ நன்றி.

      Delete
  26. மிக்க நன்றிகள்,நன்றிகள்,நன்றீகள் அப்பாவி அதிரா..

    //இத்தனையும் யாருக்காக.. யாருக்காகச் செய்தேன்?:)).. அம்முலுவுக்காக எனச் சொன்னால் நம்பவோ போறீங்கள்?:))///
    இவ்வளவும் (அதுவும் ஆடியில ஒன்று,ஆவணியில் ஒன்றுமா) நீங்களா செய்தீங்க.அதுவும் எனக்கே எனக்காஆஆ..நம்பவாமுடியும்.

    ஆடிசெவ்வாயில செய்த மாவிளக்கு சூப்பரா இருக்கு.

    சீ..இந்த பழம் புளிக்கும். எனக்கு இது அவ்வளவா பிடிக்காது. ப்ளூபெர்ரி, ஸ்ரோபெரிதான் பிடிக்கும். ஆனாலும் நல்ல சூப்பரா வந்திருக்கு ஜாம். ஆ..கலாக்காவா. கொஞ்சநேரம் ஆயிற்று பிடிபட. இப்ப தெரியும். மற்ற ரெசிப்பிஸ்ம் செய்தீங்க எண்டா அஞ்சு சந்தோஷப்படுவா எல்லோ.

    ReplyDelete
    Replies
    1. //அப்பாவி அதிரா..//
      தங்கூ தங்கூ.. உண்மையைச் சொன்னமைக்கு:))..

      //நம்பவாமுடியும்.//
      நம்போணும் இல்லையெனில் ஆடிச்செய்வ்வாய்.. செல்வச்சந்நிதி முருகனிடம் போட்டுக் குடுத்திடுவேன் ஜாக்க்க்ர்ர்ர்ர்ர்தை:))

      //மற்ற ரெசிப்பிஸ்ம் செய்தீங்க எண்டா அஞ்சு சந்தோஷப்படுவா எல்லோ.///
      இங்கின நான் ஒருபடம் போட்டிருப்பதைப்போல கற்பனை செய்யவும்:)).. அதாவது அதிராவின் பின்னங்கால் பிடரியில் அடிக்க.. ஓடுகிறேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

      Delete
  27. அகர் அகர் நல்லா இருக்கு. அது என்ன மற்றைய கலர். எப்படி? நல்லாயிருக்கு. நான் ஒருத்தரம் திரும்ப செய்தேன். ஆனா இங்கன ஏற்கனவே சொன்ன மாதிரி ஸ்வீட் அவ்வளவா பிடிக்காது.
    லேட்டா வாழ்த்து சொன்னாலும் நல்ல அருமையான ரெசிப்பிகள் தந்து வாழ்த்தியிருக்கிறீங்க அதிரா. மீண்டும் என்னுடைய நன்றிகள் அப்பாவீஈஈ அதிரா.
    பி.கு>> 2009 இல்லை. 2007

    ReplyDelete
  28. //அது என்ன மற்றைய கலர்//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கஸ்டப்பட்டு ஒரு சாப்பாட்டைச் செய்து தந்தால்.. கையில எடுத்தமா.. தங்கூ சொன்னமா அத்தோடு நிறுத்திப்போட்டு லபக்கென விழுங்கிடோணும்:)) குறொஸ் கொஸ்ஸன்ஸ் எல்லாம் கேய்க்கப்பிடாது:)).. ஒரு தடவை செய்யும் கலர் போல திரும்ப வராது கலர்:)).. அதனால போன தடவை செய்த கேக் கலர்தான் வேணும் எனவும் அடம் புய்க்கக்கூடாது:)).. ஏனெனில் ரெண்டுக்கும் ஒரே கலரே சேர்த்தேன்.. ஆனா பாலுடன் சேரும்போது ஒருகலராகவும், பட்டரோடு இன்னொரு கலராகவும் மாறுதே கர்ர்ர்ர்:))
    ஹா ஹா ஹா..

    //பி.கு>> 2009 இல்லை. 2007//

    சே..சே.. 2007 இல் முதன்முதலில் எனக்கு நட்பானவர்... இப்பவும் நான் விட்டாலும் என்னை விடாமல் நலம் விசாரிக்கும் என் அன்புத்தம்பி யூஜின்:)).. பின்பு 2008 இல் தான் நான் அங்கு வந்து குதிச்சேன்:)).. அப்போ 2008 இல் இருந்தே பழகியிருப்போம் என நினைக்கிறேன்...

    மிக்க நன்றிகள் அம்முலு...

    ReplyDelete
  29. ப்ளாக்பெர்ரி மிக அழகு. ஜாம் நன்றாக வந்திருக்கு. வருடா வருடம் ஜாம் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பாராட்டுகள்.

    காயை செடியிலேயே விட்டுவைத்தால் பழமாகுமே. எதற்கு மெனெக்கெட்டு பறித்தீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. நலம்தானே..
      பழம் கிடைத்தால் ஜாம் செய்யும் ஆசை வந்திடுது:)

      அது கராச்சுக்குப் பின்னால் பெரிய பற்றையாகி விட்டது, அதனால வெட்டி துப்புரவாக்கியதால இப்படி காயும் பழமும்...
      ஆற்றங்கரைப் பக்கமாகப் போனால் பழங்கள் பிடிங்கலாம்... இப்போ எதுக்கும் நேரமில்லை... நான் உழைக்கிறேனெல்லோ:).. ஹா ஹா ஹா

      Delete
  30. //கணவனின் உழைப்பைப் பெரிதாக எண்ணி// - ஹாஹா. உண்மைதான். ஏதேனும் ரெசிப்பி படித்துவிட்டு செய்து பார்த்து, உங்க வீட்டுல போணியாகலைனா ஃப்ரிட்ஜில் வைத்து வைத்து நீங்க சாப்பிடுவீங்க என்று எழுதியிருக்கீங்களே. எதுக்கு அப்படிச் சாப்பிடுவானேன், நாள் முழுதும் ஜிம்மில் ஓடுவானேன். ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இதிலிருந்து ஒரு பொஸிடிவ் விசயம் புரிஞ்சுகொள்ளுங்கோ:).. அதிரா சோம்பேறி இல்லையாக்கும்:)... எனக்கு எதையாவது பண்ணிக்கொண்டிருக்கோ ணும்... சும்மா இருக்க மாட்டேன் ஆனா ஏதும் தலையிடி, வயிற்றுவலி என்றால் மட்டும் இறுக்கிக் கண்ணை மூடிக்கொண்டு படுத்திடுவேனாக்கும்:)...

      Delete
  31. மா விளக்கு மிக அழகு. முடிந்த பிறகு படம் எடுத்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் (கருகிவிட்டதோ?)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:).. கருகவில்லை ஆனா ஏனோ சாமையில் செய்ததாலோ என்னமோ சுவை பெரிதாக எனக்குப் பிடிக்கவில்லை...

      Delete
  32. உங்கள் நண்பிக்கு வாழ்த்துகள். அதே வயதில் இருக்கும் உங்கள் பிறந்த நாளைத் தெரிவித்தால் நாங்களும் அன்று மறக்காமல் வாழ்த்துவோம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      Delete
    2. ///அதே வயதில் இருக்கும் உங்கள் பிறந்த நாளைத் தெரிவித்தால் ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பின்னாலிருக்கும் முட்டையைத் தூக்கி வீசிப்போட்டு:) முன்னால் இருக்கும் எண்ணை ரெண்டால பெருக்கினால் வருவதுதான் அதிராவின் வயசூஊஊஊஊ:)..... சுவீஈஈஈஈஈட் சிக்ஸ் ரீன்:)

      Delete
  33. அகர் அகரில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் பார்க்க அழகாகச் செய்திருக்கீங்க.

    இதைப் பார்க்கும்போது நீங்க படம் போட்டிருந்த கேக் மாதிரி கட் பண்ணிய கேசரிதான் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. அகர் அகர் பாலில் மட்டும் செய்தேன்... இனிப்பென்பதால் , அடுத்தடுத்து செய்யவில்லை, இளனியிலும் மாம்பழத்திலும் செய்யோணும்...
      நன்றாகவே வந்துது நெ தமிழன்.... இது என் பல வருட ஆசையாச்சே....

      Delete
  34. இங்க சீராளன் என்று ஒருவர் வருவாரே... அவருக்கு என்ன ஆச்சு? அவர் நலமா? திருமணம் ஆகிவிட்டதா? (அதனால் பிஸியாகிவிட்டாரா என்பதற்காகச் சொன்னேன்)

    ReplyDelete
    Replies
    1. ஆளைக் காணம்... தனிப்பட்ட தொடர்பில்லை எனக்கு... கல்யாணம் ... இருக்கலாம்... நல்லசேதி எனில் சொல்லுவார்தானே.... பார்ப்போம்...
      சீராளன் மேஜரே:).... இதைப் படிச்சால் ஒரு ஹாய் சொல்லக்கூடாதோ:)...

      நன்றி நெல்லைத் தமிழன்...
      நாளைக்கு ராகு கேது மாற்றம்:)...... உங்களுக்கு ராஜ யோகமாமே ஹா ஹா ஹா

      Delete
  35. ப்ரியசகி அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    அவரைச் சாக்கிட்டு நீங்கள் செய்த அனைத்தும் நன்று! பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    ஜிவாஜி தான் பயமுறுத்துவார்னா கே.ஆர்.விஜயா இன்னும் அதிகமாக பயமுறுத்துகிறார்! :) பாடல் முதல் காட்சி பார்த்ததும் கீழே படிக்க ஆரம்பித்து விட்டேன்! பாடலைக் கேட்டபடியே!

    தொடரட்டும் பதிவுகளும் அரட்டையும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

      ஆஹா பாட்டும் கேட்டீங்களோ நன்றி நன்றி...
      கே ஆர் விஜயாவைப் பிடிக்காதோ ஹா ஹா ஹா.
      மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  36. காலம் தாழ்த்திய வாழ்த்துக்கள் உங்கள் அன்புத்தோழிக்கு![[[

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன்... மிக்க நன்றி.

      Delete
  37. புத்தர் சிலை அழகாய் இருக்கு திருடிக்கொள்கின்றேன் மேடம்![[

    ReplyDelete
    Replies
    1. அதாரைக் கூப்பிடுறீங்க நேசன் ... மேட ராசியைச் சொல்லி கர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா...
      தாமதமான என் பதிலுக்கு மன்னிக்கவும். நன்றி நேசன்... உங்கள் ஊரில் தானே திரும்பவும் கொரொனா கூடியிருக்குது கவனமாக இருங்கோ.

      Delete
  38. மாவிளக்கு சரியா வரலையா? அந்தக் கொண்டாட்டத்துக்கு அப்புறம் ஆளைக் காணோமே. அல்லது ப்ளாக்பெர்ரி ஜாம் செய்த சதியா?

    எங்க வீட்டில் இன்று புரட்டாசி சனிக்கிழமை மா விளக்கு. அப்போதுதான் உங்கள் இடுகை நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ நெ தமிழன்... அந்த சனிபகவான் தான் நினைவூட்டியிருக்கிறார் போலும்:)...
      நல்லவேளை இப்போ என்குழைசாதத்தை மறந்து மாவிளக்கை ஞாபகம் வச்சிருக்கிறீங்கள் ஹா ஹா ஹா...
      நான் புரட்டாசிச் சனிக்கு காகத்துக்கு சோறு வைத்தேன் ஆனா மக்பைஸ் தான் வந்து சாப்பிட்டிச்சினம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)...
      இப்போ கொஞ்சக்காலம் முழு நாளும் வேலைக்குப் போகவேண்டி வந்திருக்கு அதனால முடியல்ல... வேலையால வந்தால் சுருட்டிவிட்ட சுண்டங்காயாகிடுறேன்:)... அப்போ எங்கும் எட்டிப் பார்க்க முடியவில்லை... வாற மாதத்தோடு வேலை நாட்கள் குறையலாம்.. அப்படி எனில்தான் மீண்டும் கும்மியடிக்க முடியும் என நினைச்சுக் கொண்டிருக்கிறேன்...
      நன்றி நெ தமிழன்... நினைவு வந்ததும், வந்து கொமெண்ட் போட்டிட்டீங்கள்.

      Delete
  39. காலம் தாழ்த்திய வாழ்த்துக்கள் உங்கள் அன்புத்தோழிக்கு ................!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி மொகமட் மிக்க நன்றிகள்.

      Delete
  40. ரொம்ப நாள் ஆகிவிட்டது வந்து அதிரா நலமா. ஆனால் இந்தப் போஸ்டை பார்த்த நினைவும் இருக்கு...குறிப்பாக ஜாம், அந்த ஸ்வீட், உங்கள் மாவிளக்கு எல்லாம். ஆனால் கமென்ட் போட முடியவில்லை அப்போது என்று நினைக்கிறேன். பல வேலைகள். இப்போதும் அவ்வப்போதுதான் வர இயலும் அதிரா. கொஞ்சம் பிஸிதான்.

    ஜாம் அகர் அகர் ஸ்வீட் எல்லாம் யும்மி. ப்ளாக் பெர்ரி ஆஹா போட வைக்குது.

    இப்ப நாங்க மாறியிருக்கும் வீட்டில் கொஞ்சம் மண் பூமி இருக்கு. அதில் கறிவேப்பிலை மரம் இருக்கு ஏற்கனவே. இன்சுலின் செடியும், மல்லிச் செடியும் இருக்கிறது. நான் இந்த வீட்டிற்கு வந்ததும் பாலக் போட்டு பாலக் அறுவடை செய்தாச்சு. பாலக் கீரை பூவிட்டு விதை விட்டிருக்கிறது. தக்காளி, மிளகாய், சுண்டைக்காய், புதினா, துளசி, ஓமவல்லி எல்லாம் வளர்கிறது. சுண்டை பூ பூத்திருக்கிறது.

    அல்லி ராணியாகிவிட்டீங்க....அடுத்து தில்லி ராணியா!!! ஆஹா மோதி அங்கிளுக்குப் போட்டியா!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இரண்டு பேருக்கு ஒரு வேளைக்கு கீரை பறிச்சதுக்கே, ஏதோ 5 கூடை கீரையை அறுவடை செய்து பல பேருக்கு டிஸ்ட்ரிபியூட் பண்ணின மாதிரி இந்த கீதா ரங்கன் சொல்றாரே. அடுத்து 4 கத்தரி பறிச்சு ஒரு நாள் சாம்பார் வச்சதை, எங்க தோட்டத்துல கத்தரியும் அறுவடை செய்தேன் என்று சொல்லுவாங்க போலிருக்கே.

      Delete
    2. வாங்கோ கீதா வாங்கோ.. நீங்கள் தாமதமில்லை.. அடியேந்தான் ரெம்ம்ம்ம்ப ரெம்ம்ம்ம்ம்ப டாமடம்:)) மன்னிக்கவும்...:(.

      ஆஹா கீதாவும் இப்போ விவசாயி ஆகிட்டா... டொட் ட டொயிங்...:)).. என் கார்டின் அறுவடை இன்னும் படங்கள் இங்கு போடாமல் இருக்கிறேனே:).. எப்போதான் அவற்றை எல்லாம் போட நேரம் வரப்போகுதோ அந்த வெள்ளை வைரவருக்கே வெளிச்சம்.. நன்றி கீதா.

      Delete
    3. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. அது அப்படியில்லை... ஒளவைப்பாட்டி என்ன ஜொன்னா?:)).. வரப்புயர.. எனச் சொல்லிவிட்டு அமர்ந்தவவெல்லோ ஆச்சி:)).. அப்பூடித்தான் கீதா சொன்னதையும் மிகுதியை நீங்கள் போட்டு வசனம் அமைக்கோணுமாக்கும்:)).. கீதா அடக்கொடுக்கமாகச் சொல்லியிருக்கிறா:)..

      Delete
  41. எங்கள் வீட்டு கொலுவை நேரம் கிடைக்கும் போது பார்க்க வாங்க அதிரா.
    அடுத்த பதிவு போடாமல் உங்களுக்கு வெயிட் செய்து கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அக்கா.. அவற்றிற்கு வந்தேன்.. பின்னர் வர முடியவில்லை.. இப்போ வருகிறேன்.

      Delete
  42. புத்த பகவானின் கருத்து அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சி.பாரதி.. மிக்க நன்றி.

      Delete
  43. அன்பின் இனிய
    தீபாவளி நல்வாழ்த்துகளுடன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன்.. மிக்க நன்றி, உங்களுக்கும் அல்லிராணியின் தாமதமான தீபாவளி வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி. தாமதப் பதிலுக்கு மன்னிக்கவும்.

      Delete
  44. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. ஆஹா ட்றுத்தா.. எழுதியது?:).. இதை ட்றுத்தா எழுதியதூஊஊஊஊ:) ஹா ஹா ஹா நான் அப்பூடியே சொக்ட் ஆகிட்டேனாக்கும்.. என்னா அடக்கொடுக்கம்:))..

      மிக்க நன்றி ட்றுத்... என் தாமதப் பதிலுக்கு மன்னிக்கவும்.

      Delete
  45. இரண்டு மாதங்கள் ஆகிவிட்டதே... எப்படி பிளாக் ஓபன் பண்ணுவது, என்ன பாஸ்வர்ட், எப்படி இடுகை போடுவது எல்லாமே மறந்துவிட்டதா? செக் கிட்ட செக் பண்ணிக்கோங்க.

    உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். உங்கள் கணவர், குழந்தைகளுக்கும், அதிரா புது புது டிஷ் பண்ணறேன்னு எதுவும் டிரை பண்ணக்கூடாது, என்று அவர்கள் சார்பாவும் வேண்டிக்கறேன்.

    இதை மட்டும் கன்ஃபர்ம் பண்ணுங்க. இடுகை போடுவதற்காக முயற்சித்த இரண்டு இனிப்புகளும் சரியா வரலையாமே. ஒன்று கருகிவிட்டதாம். இன்னொரு இனிப்பு கடாயிலிருந்தே வெளில வரலையாமே..அதனால்தான் தீபாவளிக்கு இடுகை போடலயாம் நீங்க. லண்டன்லேர்ந்து செய்தி வந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன்... ஆவ்வ்வ்வ்வ்வ் அல்லிராணியின் பக்கத்தை நீங்கள் எல்லாம் மறந்திருப்பீங்கள் என நினைச்சேன்.. மறக்கல்ல:))..

      //செக் கிட்ட செக் பண்ணிக்கோங்க//
      ஹையோ அந்தக் கொடுமையை ஏன் கேய்க்கிறீங்க:)).. என் செக்கை:)) ஒரு கிழமையாகக் காணம்:)).. ஸ்கொட்லாண்ட் யாட் பொலீஸ் க்கு தந்தி அடிச்சிருக்கிறேன்.. கண்ணு பிடிச்சுக் காப்புப் போடாமல் கூட்டி வரச்சொல்லி:))..

      வாழ்த்துக்களுக்கு மியாவும் நன்னி... உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தாமதமான வாழ்த்துக்கள்.. தாமதத்துக்கு மன்னிக்கவும்_()_.

      //அதிரா புது புது டிஷ் பண்ணறேன்னு எதுவும் டிரை பண்ணக்கூடாது, என்று அவர்கள் சார்பாவும் வேண்டிக்கறேன்///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் இம்முறை 2ம் வருடமாகப் பாலும் பழமும் எல்லோ.. போனமுறை அட்டகாசப் பண்ணினேன்.. இம்முறையும் வெற்றிகரமாக முடித்து.. இன்று பாரணையும் முடிச்சுப்போட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)).. இனித்தான் விதம் விதமாகச் சமையல் ஆரம்பம்ம்ம்ம்ம்ம்:)).. தொல்லைகள் தொடரும்ம்ம்ம்ம்:))..

      லண்டன் செய்திகளை நீங்க அப்பாவி என்பதால நம்புறீங்க:)).. ஸ்கொட்டிஸ் ஆருமே லண்டன் செய்திகளை நம்புவதில்லை:)).. பச்சைப்புழுகு புழுகுவார்கள்:)) இதை எங்கட சின்னவரிடம் கேட்டாலே ஜொள்ளுவார்:)) ஹா ஹா ஹா:))...

      சூனியக் கிழவியை ஆரோ அனுப்பிப் போட்டினம்:) அதாலதான் நேரமே கிடைக்குதில்லை:)).. இல்லை அப்படிச் சொல்லமாட்டேன்ன்ன்.. நேரம் கிடைக்குது, மனம் வருகுதே இல்லை.. இதுதான் உண்மை:).. மனத்தை போஸ் பண்ணிக் கூட்டி வந்து புதிய போஸ்ட் போட முயற்சிக்கிறேன்....

      நீங்கள் தேடியதாகவும் சீராளனுக்கு தகவல் சொன்னேன்... தோஓஓஓ கீழே வந்துவிட்டார் பா.. உடன்.. நீங்கள் பார்க்காமல் இருக்கிறீங்கள் ....

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.. அனைத்துக்கும்... விரைவில் வருகிறேன் அதிரடியாக:))

      Delete
  46. சொல்லிடா வார்த்தைக ளாயிரங் கொண்டும் - சில
    சொற்பதம் பொங்கிய எண்ணங்க ளுண்டும் !
    அல்லிரா ணிக்கொரு அன்பான நன்றி -அதை
    அளித்துவிட் டேகிறேன் அட்டபா லொன்றி !

    நேரங்க ளில்லையே நித்தியம் பாட- எந்த
    நீட்சியு மில்லையென் சிந்தனை யோட
    காரங்க ளுண்டவன் நாக்கினைப் போல -சில
    காட்சிக ளேங்குது கற்பனை தேட !

    ஆரல்ஒ ளித்தெறிப் பன்னவே சூழ்ந்தும் -சில
    அன்றாட வேலைதன் ஆக்கினை நீண்டும்
    சாரல்ம ழைதரும் சந்தமாய்த் தானும் - பல
    சங்கதி பாடவே எண்ணினேன் நானும் !

    காலச்சி றையொரு நாள்திறக் கும் -அன்று
    கட்டுக்க ரும்பாகப் பாபறக் கும்
    சாலச்சி றந்தவர் கொண்டிருக் கும் - அந்தச்
    சான்றோர்ச பைமனம் தொட்டிருக் கும் !

    தேடிவந்து என்னை எழுதத் தூண்டிய தங்கள் அன்புக்கு நன்றிகள் கோடி பூஸாரே ! வாழ்த்துக்கள் வாழ்க நலம் !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ.... உங்களைத்தான் கொரோனாவோடு காணவில்லையே எனத் தேடினோம்... ஆனா இப்போ உங்களை விட அதிகமாக நான்(ம்) காணாமல்ப் போய்க்கொண்டிருக்கிறோம் ஹா ஹா ஹா நம் கையில் என்ன இருக்கிறது... எல்லாம் விதி வரைந்த பாதை...
      கொமெண்ட்ஸ்க்கு பதில் போடவே மனம் இடம் கொடுக்காமல் திண்டாடுகிறேன் நான்:)..
      நீண்ட இடைவெளியின் பின்பு வந்தாலும் மினக்கெட்டு பா எழுதிக் கொமெண்ட் போட்டமைக்கு மிக்க மிக்க நன்றிகள் சீராளன்.. இடைக்கிடையாவது தலையை காட்டுங்கோ என்னைப்போல:)...
      நெல்லைத் தமிழன் வந்து படித்திருப்பார்... அவரும் “ஒரு வேலையில்” பிசியாக இருக்கிறார் என நினைக்கிறேன்:)..

      Delete
    2. இன்று படித்துவிட்டேன். கில்லர்ஜி இடுகையில் சீராளனைப் பார்த்தேன். அப்போது தோன்றவில்லை இங்கும் வந்து பின்னூட்டம் எழுதியிருப்பார் என்று.

      கவிதை எழுதுபவர்கள், நிறையப் படிக்க வேண்டும். பிறகு எழுதும் சந்தர்ப்பம் வரும்போது நிறைய சிந்திக்கணும். படித்த புத்தகங்களை எளிமைப்படுத்தி எழுதிடலாம். இதற்கெல்லாம் நிறைய நேரம் இருக்கணும். உலகியல் பிரச்சனைகளிலேயே நேரம் போனால், இதற்கு எங்கு நேரம் கிடைக்கும்.

      நிறைய நேரம் கிடைத்து, இப்போது உள்ளதைவிட உயர் நிலைக்கு சீராளன் செல்லணும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

      Delete
    3. மிக்க நன்றி நெல்லைத்தமிழன் தங்களின் அன்பான கருத்துக்கும் வேண்டுதல்களும் பல கோடி நன்றிகள் வாழ்க நலம்
      முயற்சி செய்கிறேன் முடிந்தவரை !

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.