நல்வரவு_()_


Sunday 23 August 2020

வி சது வாழ்த்துக்களோடு🙏, பயற்றம் பணியாரம்

ல்லோரும் நலமே இருக்கிறீங்கள் என்பது தெரியும், மீயும்தேன்:)... எங்களுக்கு இங்கு ஸ்கூல் தொடங்கி விட்டது, அதனால நானும் பழையபடி உழைக்க ஆரம்பித்து விட்டேனாக்கும்:), கொரோனா நேரம் நல்ல ஒய்யாரமாக ரெஸ்ட் எடுத்தமையால, இப்போ ஒரு வேலை செய்தால் இன்னொரு வேலை செய்ய மனம் இடம் கொடுக்க மறுக்குது கர்ர்:)).. அதனால புளொக் பக்கம் வருவது குறையப் பார்க்குது, இருப்பினும் முடிஞ்சவரை வரவே முயற்சிக்கிறேன்.

எனக்குப் பாருங்கோ ஓவரா அலட்டுவது பிடிக்காதென்பது உங்களுக்குத் தெரியுமெல்லோ?:) அதனால ஸ்ரெயிட்டா களம் குதிப்போமா?:))..

எப்படியாவது ஒரு போஸ்ட் போட்டிட வேணும் என்பதாலயே, சமையல் குறிப்பைப் போடுகிறேன்.. இது ஈசி எல்லோ:)), நிறைய எழுத அலுப்பாக இருக்குது:)..

இலங்கைப் பயற்றம் பணியாரம்...
ஆஆஆஆஆ எந்தாப் பெரீஈஈஈசு.. நான் அப்பளத்தைச் சொன்னேன்:)...

இதற்கு தேவையானவை[உங்களுக்குப் பிடித்த ஒரு கப் ஐ எடுத்துக் கொள்ளுங்கோ அளவுக்கு:)]
*வறுத்து அரைச்சு அரித்தெடுத்த பயற்றம் மா - 1 கப்
*வறுத்த அரிசிமா - 2 கப்புக்கு கொஞ்சம் குறைவாக எடுக்கோணும்..
*சக்கரை - முக்கால் கப்
*சீனி[சுகர்]- முக்கால் கப்
*உடனே திருவி, நன்கு வறுத்த தேங்காப்பூ - முக்கால் கப்
*இதனோடு கொஞ்சம் வாசனைக்காகவும், கொஞ்சம் காரத்தன்மைக்காகவும்.. ஒரு முக்கால் தேக்கரண்டு வறுத்து அரைச்ச மிளகு +சீரகம்[சிலருக்கு இவ்வாசம் பிடிக்காதெனில்.. தவிர்க்கலாம்]

இவ்வளவும்தான் முடிஞ்சுபோச்ச்ச்ச்ச்:)).. இத்தனை பொருட்களையும் ரெடி பண்ணுவதுதான் இதில் வேலை.. இனி பெரிசாப் புதுசா ஏதுமில்லை...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இடைவேளை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இடைவேளையில குண்டுப்பிள்ளையாரை [சே சே டங்கு ஸ்லிப்பாகுதே அவருக்குக் கோள்வம்:) வந்திடப்போகுதே வைரவா:))].. குட்டிப் பிள்ளையாரை எனச் சொல்ல வந்தேனாக்கும்:)) வணங்கிக் கொண்டு தொடர்வோமோ?:))

வழமையாக பூங் கொத்து வாங்கி வைத்திருப்போமெல்லோ ஹோலில்.. முன்பு படங்கள் போட்டேனெல்லோ... அது எப்பவும் வாங்குவோம், ஆனா கொரோனா ஆரம்பிச்சதிலிருந்து வாங்குவதில்லை, அதனால சதுர்த்திக்கு பூ இல்லையே எனக் கவலைப்பட்டபடி.. ச்சும்மா வெளியே எட்டிப் பார்த்தேனா, என் ஊசி மல்லிகை பூத்திருந்தது[கொஞ்சமாக], அப்போ தான் நினைச்சேன் நம் கார்டின் மலர்கள் இருக்கக் கவலை எதுக்கு என.. இப்போ பூத்திருக்கும் மலர்களைப் பிடுங்கி வந்து, பிள்ளையாரைக் குளிர்விச்சேனாக்கும்...
இம்முறை நான் கற்கண்டுப் புக்கை, கடலைச் சுண்டல், பருப்புவடைதான் அவருக்குக் கொடுத்தேன், கொழுக்கட்டை வேண்டாம்.. கோமதி அக்காவும் நெல்லைத்தமிழனும் தருவார்கள் எனச் சொல்லிட்டார்:))
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஓகே ஓகே பிள்ளையாரிடம் நேர்த்தி வச்சது போதும்:)).. வாங்கோ கிச்சினுக்குள் தொடர்வோம்:))
மேலே சொன்ன அனைத்தையும் ஒன்றாகக் கொட்டிக் கலக்கவும்...
கொஞ்சம் வென்நீரை மெதுவாக தெளிச்சால் போதும், சகரை, சீனி, தேங்காய்ப்பூ எல்லாம் சேர்ந்து இளகி விடும்... இப்படி குழைத்து எடுத்துக் கொண்டு....

உங்களுக்கு விரும்பிய சைஸ் இல் உருண்டையாக உருட்டவும்.. உருட்டும்போது, ஏனோ தானோ என உருட்டாமல், அதிராவைப்போல நன்கு அழுத்தி, இறுக்கமான உருண்டையாக உருட்டோணுமாக்கும்.. அப்போதான் உடையாமல் வரும்..

உருட்டிய உருண்டைகளை, நீண்ட நேரம் வைத்திருக்காமல் பொரிப்பது நல்லது... அதற்கு பச்சை கோதுமை மாவை, கொஞ்சம் கெட்டியாகக் குழைத்தெடுத்து... அதில் உருண்டையை ஒவ்வொன்றாக தோய்த்து எடுத்து, போண்டா பொரிப்பதைப்போல பொரித்தெடுக்கவும்...

இந்தாங்கோ ஒராளுக்கு ஒன்றுதான் தருவேன்.. பந்திக்கு முந்தோணும்:))

இது ஸ்கொட்டிஸ் குணுக்காக்கும்:)).. நானே செஞ்சது:), அஞ்சு முருங்கை இலை போடவில்லையாக்கும்.. மீ போட்டனே.. என்னா சுசி:) என்னா சுசி:)).. ரெசிப்பி இங்கே

ஊசிக்குறிப்பு 

ஊசி இணைப்பு
💢💢💢💢💢💢💢💢💢💢

86 comments :

 1. ஆஹா படங்களுடன் செய்முறை வரிசைப்படி சொன்னது அருமை... வாழ்த்துகள்.

  பணியாரம், பனியாரம் எது சரி ?

  ReplyDelete
  Replies
  1. //பணியாரம், பனியாரம் எது சரி ?// - இதெல்லாம் ஒரு சந்தேகமா கில்லர்ஜி? நாமே உழைத்து கஷ்டப்பட்டு பணி செய்து இந்த இனிப்பைச் செய்தால் அதன் பெயர் பணியாரம். செய்துமுடித்துவிட்டு அது நல்லா வரலை என்பதை உணர்ந்து பேசாமல் வைத்திருந்து ஆறி அவலாகப் போய் குளிர்ந்த பிறகு சாப்பிட்டால் பனியாரம்.

   அதிரா செய்தது எப்படி இருந்தது என்பதைப் பொருத்து பெயர் மாறும்.

   Delete
  2. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. எனக்கு கொமெண்ட்டுக்கு எப்பூடிப் பதில் போடுவது என்பது, கொரோனா வராமலேயே மறந்து போச்ச்ச்ச்ச்ச்:))..

   //பணியாரம், பனியாரம் எது சரி ?//
   கொமெண்ட் பப்ளிஸ் பண்ணும்போதே இதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது, ஏன் தெரியுமோ?:).. நான் போஸ்ட் போட்ட உடனேயே... டமில்ப் புறொபிஸருக்கு வேலை ஆரம்பமாகிவிட்டதே:)).. அவர் வந்து பதில் சொல்லிடுவார் என நினைச்சு ஹா ஹா ஹா...

   ஆனா நெல்லைத்தமிழன் சொன்ன கருத்து எப்பூடிப் பொருந்தும்?:)).. பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராணியையும் தான் கஸ்டப்பட்டுச் செய்கிறோம்:).. இன்று செய்தேனே:)),, நானே கஸ்டப்பட்டு இஸ்டப்பட்டுச் செய்தேனாக்கும்:)).. ஆனா இதுக்கு மட்டும் ஏன் பணி... ஆரம் எனப் பெயர் சூட்டுறோம்:))

   //அதிரா செய்தது எப்படி இருந்தது என்பதைப் பொருத்து பெயர் மாறும்.//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஸ்கொட்டிஸ் நண்பர்கள் கூட.. நைஸ் சுவீட் எனச் சொல்லிச் சொல்லிச் சாப்பிட்டார்கள் தெரியுமோ?:).. அவ்ளோ சூப்பர் என ஜொள்ள வந்தேன்... நம்மள நாமளேதான் புகழோணுமாக்கும்:))

   Delete
 2. கீழிருந்து மேல் நான்காவது படம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி.. அது நான் செய்த பயற்றம் பணியாரமெல்லோ...

   Delete
 3. நீண்ட நாட்கள் கழிச்சு வந்து கலக்கி இருக்கீங்க போல! உருண்டையை நெய்விட்டு உருட்டி அப்படியே சாப்பிட்டால்? நல்லா இருக்காதோ? வீணாக எண்ணெயை வைச்சு எதுக்குப் பொரிச்சு எடுக்கணுமாம்? ஜும்மா ஒரு ஆஜைக்குக் கேட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. அதுதான் கை எங்கின வைப்பது கால் எங்கின வைப்பதென்றே தெரியவில்லை, எதையும் மினக்கெட்டுப் பார்க்கக்கூட நேரமில்லை, அதனால இப்போதைக்கு பழைய புளொக்கரிலேயே இருக்கச் சொல்லிட்டேன்:))..

   பாருங்கோ இன்றுகூட, பகல்லிலேயே கொமெண்ட்ஸ் போட்டு முடிச்சிடலாம் என எவ்வளவோ ட்ரை பண்ணியும் முடியல்ல... ஸ்கூல் தொடங்கி விட்டமையால எனக்கு நேரமே போதவில்லை.. ஆனா இதுவும் நல்லாவே இருக்குது.. படு பிஸியாக நேரம் ஓடுவதும் சில நேரங்களில் நல்லதாக இருக்கும்:)).. வயசு ஏறாட்டில் சரிதான்:)..

   //உருண்டையை நெய்விட்டு உருட்டி அப்படியே சாப்பிட்டால்? நல்லா இருக்காதோ? //
   அது நீண்ட நாட்கள் இருக்காதோ? இது ஒரு மாதத்துக்கு மேலும் இருக்கும்... ஆனா சாப்பிட்டு முடிச்சிடுவோம்.. மிக நன்றாக இருக்கும் சுவை.. நாளாக ஆக சுவை கூடும் கீசாக்கா... அத்தோடு இப்போ பூரி என்றால் எண்ணெயில் பொரிக்கோணும் சப்பாத்தி என்றால், சும்மா வாட்டி எடுப்பது என்பதுபோல... பயற்றம் பணியாரம் என்றால் இப்படித்தான் இருக்கோணும்..

   //ஜும்மா ஒரு ஆஜைக்குக் கேட்டேன்///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஏதோ இண்டைக்கே உருட்டி மாமாவுக்குக் குடுத்து நல்ல பெயர் வாங்கிடவாக்கும் என நினைச்சேன்:))

   Delete
 4. ஊசிக்குறிப்பு நெல்லைத்தமிழருக்கு நல்லாப் பொருந்துதே! அவர் தான் எங்கே போனாலும் பிரசாதம் இல்லையானு பார்ப்பார். ஊசி இணைப்பில் சொல்லி இருப்பது புத்தர் காலத்தில் வேணா நடந்திருக்கலாம். இப்போல்லாம் அடுத்தவரைத் துன்புறுத்தியவங்க தான் நல்லா வாழ்கிறார்கள். :(

  ReplyDelete
  Replies
  1. //எங்கே போனாலும் பிரசாதம் இல்லையானு// - உண்மையா அப்படி இல்லை. பிரசாத ஸ்டால் இருக்கா, அங்க என்ன என்ன விக்கறாங்க என்பதைப் பார்ப்பேன். பணம் கொடுத்து கோவிலின் பிரசாதம் கிடைக்கும் என்றாலும் அதற்கு முயற்சி செய்வேன். பொதுவா இலவசமா எதையும் வாங்க என் மனது விரும்புவதில்லை (மனசுல, கடன் படறோம் என்ற எண்ணம் தோன்றிவிடும். அப்புறம் அதை அடைக்க மீண்டும் பிறப்பெடுக்கணும் என்ற நினைப்பும் வரும்). நாங்க போகும் நேரத்தில், ருசியான பிரசாதம் விநியோகித்தார்கள் என்றால் மனது மகிழ்வுறும்.

   Delete
  2. //அடுத்தவரைத் துன்புறுத்தியவங்க தான் நல்லா வாழ்கிறார்கள். // NEVER. அப்படி தவறிக்கூட நினைக்காதீங்க. ஏதிலிகளையோ அல்லது அப்பாவிகளையோ துன்புறுத்தினால், அவர்களுக்கு உடனேயே பனிஷ்மெண்ட் கிடைத்துவிடும். மற்றபடி பாவங்கள் செய்பவர்கள் வாழ்ந்து அனுபவிக்கத்தான் செய்வார்கள்.

   Delete
  3. ஹா ஹா ஹா அது ஒருவித பழக்கமாகி விட்டது கீசாக்கா.. கோயில் என்றால் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டால்தான் ஒரு நிறைவு.. அது வெறும் சோறாயினும் சந்தோசமாக இருக்கும்... ஆனா நெல்லைத்தமிழனோ.. வாங்கிச் சாப்பிடுவதோடு விடாமல்..:)).. இது சரியில்லை, நெய் போதாது, புளி கூடிப்போச்சு என்பாரெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நன்றி கீசாக்கா.

   Delete
  4. //மனசுல, கடன் படறோம் என்ற எண்ணம் தோன்றிவிடும்//
   கோயில் பிரசாதம் கூட கடன் லிஸ்ட்டில் சேருமோ அவ்வ்வ்வ்வ்.. எப்படியும் உண்டியலில் காசு போடுவோம் தானே..

   //ஏதிலிகளையோ அல்லது அப்பாவிகளையோ துன்புறுத்தினால், அவர்களுக்கு உடனேயே பனிஷ்மெண்ட் கிடைத்துவிடும்.//

   இல்ல நெல்லைத்தமிழன், சிலருக்கு கிடைக்குது, பலர் சாகும்வரை நன்றாகவே வாழ்ந்து, அவர்கள் துன்புறுத்தியதும் சரிதானோ என நினைக்க வைத்து விடுகிறார்கள்.. அது முன்வினைப் பயனாக இருக்கலாம் எனவும் எண்ணத் தோணும்.. ஆனா ஒன்று அவர்கள் தப்பி விடுவார்கள், அத்தண்டனை நிட்சயம் அவர்கள் சந்ததியைத் தாக்கும்... ஆனா அதை யார் நினைக்கிறார்கள்.

   Delete
 5. எல்லாப் படங்களும் அருமை. சிய்யம்/சுகியன்/சீயம் பண்ண மாவு கரைக்கிறாப்போல் கரைத்துக் கொண்டு போட்டுப் பார்க்கணும், ஆனால் அளவு குறைச்சுடணும். சும்மாவே நான் எது பண்ணினாலும் நிறையா ஆயிடுதேனு ரங்க்ஸ் (மாமா) கோவிக்கிறார். நானும் பருப்புப் பாயசம், சாதம், பருப்பு மட்டும் கொடுத்தேன் பிள்ளையாருக்கு! போதும்னு சொல்லிட்டார்.

  ReplyDelete
  Replies
  1. இந்த அளவில், நான் கொஞ்சம் பெரிய உருண்டைகளே உருட்டினேன்.. எனக்கு 35-40 வந்ததாக நினைவு கீசாக்கா.. நீங்க இதில் பாதி எடுங்கோ... என் கையும் அபடித்தான் அள்ளிப்போட்டுச் செய்து பிரிஜ்ஜில் வைத்து பின்பு கொட்டி.. இப்படி ஆகிடும், ஆனா இப்போ கொஞ்சம் செயப் பழகி வருகிறேன்.

   //போதும்னு சொல்லிட்டார்.//

   ஹா ஹா ஹா ஓ சொல்ல மறந்திட்டேன், நான் கடசி ஆடிச்செவ்வாய்க்கு மாவிளக்குப் போட்டனே:))

   மிக்க நன்றிகள் கீசாக்கா.

   Delete
 6. பாடல் பகிர்வு நன்றாக இருக்கிறது.
  மாவு தயார் செய்து இருப்பது பொரிவிளங்கா மாவு போல் இருக்கு.

  //இறுக்கமான உருண்டையாக உருட்டோணுமாக்கும்.. அப்போதான் உடையாமல் வரும்..//

  சர்க்கரை பாகு கம்பி பதத்தில் எடுத்து கட்டியாக உருட்டினால் உடையாது.

  நீங்கள் செய்து இருப்பது பார்க்க "முந்திரி கொத்து" என்று எங்க ஊர் பக்கம் செய்வார்கள் அது போல இருக்கிறது.

  இரண்டு மூன்று உருண்டைகளை சேர்த்து எண்ணெயில் போடுவார்கள்.

  உள்ளே பாசிப்பருப்பு மாவு வெளியே அரிசிமாவில் முக்கி போடுவார்கள் ஆட்டி பார்த்தால் உள்ளே கல கல என்று சத்தம் போடும் வெகு நாட்கள் வைத்து சாப்பிடுவார்கள் தீபாவளிக்கு செய்து.

  மிளகு , சீரகம் எதற்கு இனிப்பு பணியாரத்தில் சுக்கு போடுவார்கள்.

  நீங்கள் சொன்ன முறையில் செய்து பார்க்க வேண்டும்.
  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  இன்று சர்க்கரை பொங்கல் செய்து கும்பிட்டேன் பிள்ளையாருக்கும், சூரியனுக்கும்.
  பிள்ளையார் என்னைப்பற்றி சொன்னது மகிழ்ச்சியாக இருக்கிறது.
  உங்கள் பணியாரம் அவருக்கு மிகவும் பிடித்து இருக்கும் குட்டி பிள்ளையாருக்கு இல்லையா?

  இந்த பணியாரம் சாப்பிட எளிதாக இருக்குமா? அல்லது கடினமாக இருக்குமா?

  முந்திரி கொத்து பல் நல்ல வலுவாக இருந்தால்தான் சாப்பிடலாம் அதனால் கேட்டேன் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம் அதிரா.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கோமதிக்கா நம் நாகர்கோயில் ஸ்பெஷல் கிறிஸ்துமஸுக்கு கட்டாயம் செய்வாங்க முந்திரி கொத்துதான் நம் ஊர் பெயர் 

   Delete
  2. இது தான் முந்திரிக்கொத்து என்பதா? கேள்விப் பட்டிருக்கேன். செய்தோ, சாப்பிட்டோ பார்த்தது இல்லை. ஒரு முறை பார்க்கணும்.

   Delete
  3. கீசா மேடம்.. நாம தேங்காய் சீயன் இல்லைனா பருப்பு சீயன் செய்வோம் இல்லையா? பூரணம், பயத்தம் பருப்பில் செய்திருந்தால் (வறுத்து பொடி செய்து) எப்படி ஒரு அருமையான வாசனை வரும். அதுபோலத்தான் முந்திரிக்கொத்து இருக்கும். ருசியாக இருக்கும். (அதுக்காக, வெண்பொங்கல் ரெசிப்பி போல, ஜீரகம், மிளகு என்று அதிரா சொல்லியிருப்பது, தட்டச்சுப் பிழைன்னு நினைத்து விட்டுடுங்க. ஹாஹா)

   Delete
  4. வாங்கோ கோமதி அககா வாங்கோ..
   பாட்டுக் கேட்டிருக்கிறீங்கள் நன்றி.. நன்றி..

   //சர்க்கரை பாகு கம்பி பதத்தில் எடுத்து கட்டியாக உருட்டினால் உடையாது.//

   எனக்கு பாகு காச்சிச் செய்யும் உணவுகள் செய்யப் பிடிப்பதில்லை கோமதி அக்கா, ஏனெனில் அது பதம் பிழைச்சால் எல்லாமே பிழைச்சுப்போயிடும் எனும் பயம்.

   இது பிரச்சனை இல்லை, இறுக்கமால குழைச்சால், நன்கு உருண்டை பிடிச்சிடலாம்.

   ஓ முந்திரிக்கொத்து என கேள்விப்பட்ட பெயராக இருக்கு.. அது முந்திரிப்பருப்பில் செய்வதாக்கும் என நினைச்சேன்... அதேதான் கோமதி அக்கா, எண்ணெய் கொஞ்சம் அதிகம் ஊற்றி, ஒன்றுடன் ஒன்று ஒட்டிடாமல் போடோணும்..

   //மிளகு , சீரகம் எதற்கு இனிப்பு பணியாரத்தில் சுக்கு போடுவார்கள்.//
   இது ஒரு வாசத்திற்காக போடுவார்கள் கோமதி அக்கா.. வறுத்து அரைச்சு கொஞ்சம் சேர்த்துக் குழைச்சால், வீடு முழுவதும் வாசம் வரும்... வாய்க்கு இதமாக இருக்கும்... நிறையச் சேர்த்திடக்கூடாது, கொஞ்சமாக போடுவார்கள்..

   Delete
  5. ///பிள்ளையார் என்னைப்பற்றி சொன்னது மகிழ்ச்சியாக இருக்கிறது.//
   ஹா ஹா ஹா பின்ன நீங்கள் சாணப்பிள்ளையாரும் வச்சிருக்கிறீங்கள்.. மஞ்சளிலும் செய்திருக்கிறீங்கள் எல்லோ..:))

   //இந்த பணியாரம் சாப்பிட எளிதாக இருக்குமா? அல்லது கடினமாக இருக்குமா? முந்திரி கொத்து பல் நல்ல வலுவாக இருந்தால்தான் சாப்பிடலாம் அதனால் கேட்டேன் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம் அதிரா.//

   சே சே சே என்ன இது.. நான் எப்போ எதைத் தப்பாக நினைத்திருக்கிறேன், புரியாதுவிட்டால், கேட்பேன்..
   இல்லை இது நல்ல சொவ்ட்டாக இருக்கும் கோமதி அக்கா, வெளித்தோல்தான் கடிக்கோணும்.. உள்ளே அப்படியே வாயில கரைஞ்சுகொண்டு போகும்... பல் இல்லாத பாட்டியும் சாப்பிடலாம்:)...
   ரவ்வை லட்டுத்தான் எங்களூர் லட்டு கொஞ்சம் கடிக்க கடினம்...

   Delete
  6. //AngelSunday, August 23, 2020 11:16:00 am
   ஆமாம் கோமதிக்கா நம் நாகர்கோயில் ஸ்பெஷல் கிறிஸ்துமஸுக்கு கட்டாயம் செய்வாங்க முந்திரி கொத்துதான் நம் ஊர் பெயர் //
   அஞ்சு நீங்க இந்தக் கிரிஸ்மஸ் க்குச் செய்கிறீங்க ஓகே..:))

   Delete
  7. //Geetha SambasivamSunday, August 23, 2020 11:20:00 am
   இது தான் முந்திரிக்கொத்து என்பதா?///

   ஆஆஆஆஆஆஆஆஆ நான் பெயிண்ட்டாகிறேன்ன்ன்ன் எனக்காராவது சுட்டாறின தண்ணி அடிச்சு எழுப்புங்கோ நான் மிகுதிக் கொமெண்ட்ஸ் போடோணும்:)).. ஹையோ உலக வரலாற்றில் முதன் முறையாக கீசாக்காவுக்குத் தெரியாத ஒரு ரெசிப்பி:)) ஹா ஹா ஹா...

   Delete
  8. @நெ தமிழன்
   //(அதுக்காக, வெண்பொங்கல் ரெசிப்பி போல, ஜீரகம், மிளகு என்று அதிரா சொல்லியிருப்பது, தட்டச்சுப் பிழைன்னு நினைத்து விட்டுடுங்க. ஹாஹா)//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... சிலதுக்கு ஒரு ஸ்பூன் நெய் சேர்கோணும், ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கோணும் என்பினமெல்லோ.. அப்படித்தான் இதுவும்.. ஒரு வித வாசனையாகவும், இனிப்பின் தித்திப்பைக் குறைத்து நாக்கிற்கு இதமாகவும் இருக்கும்... இது இலங்கையில் ஆரைக் கேட்டாலும் சொல்வார்கள்.. மிளகு சீரகம் சேர்ப்போம் என... ஆனா எனக்கு சின்னனில் பிடிப்பதில்லை, மிளகு,சீரக வாசமே பிடிக்காது.. இப்போ ரொம்பப் பிடிச்சுப்போச்ச்ச்ச்ச்ச்:))ஹா ஹா ஹா... ஏலக்காயும் சிலர் சேர்ப்பதுண்டு, ஆனா எனக்கது பிடிக்காதாக்கும்... முழுசாகப் போடுவேன் கறிகளுக்கு.., பவுடராக்கிப் போடப் பிடிப்பதில்லை..

   Delete
  9. [im]https://1.bp.blogspot.com/-cjhLAG9xpVs/X0QiyGwzpAI/AAAAAAAAVmo/k-fRUJMYTbgWPqwnlrzNDjjIexhwqop9QCLcBGAsYHQ/s640/mk.jpg[/im]

   நாங்க எப்பவோ செஞ்சுட்டம் :)

   Delete
 7. ஸ்கொட்டிஸ் குணுக் நன்றாக இருக்கிறது. ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. //ஸ்கொட்டிஸ் குணுக் நன்றாக இருக்கிறது.//
   நன்றி கோமதி அக்கா நன்றி.. அது அதிராவின் கைபட்டாலே அப்படித்தான் ஹா ஹா ஹா..

   மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

   Delete
 8. ஆஆஆஆ !!! பிள்ளையார் பூனையை அழைச்சிட்டு வந்துட்டார் :)))))))))))

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ வாங்கோ அஞ்சு வாங்கோ...

   பிள்ளையாருக்கு முன்பு.. எலி ஒண்டு ஒரே ஆட்டம் போட்டு .. அதைப் பிடிக்கவே பிள்ளையார் அனுப்பி வச்சார்:).. இனி ஜாக்க்க்க்க்க்க்ர்ர்ர்தையாக இருங்கோ ஜொள்ளிட்டேன்ன்:)..

   Delete
 9. ///எல்லோரும் நலமே இருக்கிறீங்கள் என்பது தெரியும்,//
  இந்நாள் வரைக்கும் நன்னாளாக இருந்தது இனிமேதான் தெர்ல :)

  ReplyDelete
  Replies
  1. இனிப் பெரிசாக எதுவும் வராது என்றே நம்புவோம்ம்...

   Delete
 10. பிள்ளையாருக்கு //கோள்வம் // நிச்சயம் இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்த்து வரும்ம்ம் 

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவர் கோபிக்க மாட்டார்.. ஏனெண்டால் நான் கற்கண்டுப்புக்கை செய்து குடுத்தேனே.. கொழுக்கட்டை செய்தால் கூடிவிடும், இன்னொருநாள் செய்து குடுக்கலாம் என விட்டிருக்கிறேன்:))

   Delete
 11. நாங்க இந்த முந்திரிக்கொத்தை வெல்லம் சேர்த்து செய்வோம் .அதோட மிளகு சீரகம் சேர்ப்பதில்லை ஆனா ஏலக்காய் தட்டி போடுவோம் அதோட நாங்க சுக்குப்பொடி சேர்ப்போம் ..மாவு மைதா ப்ளஸ் அரிசி மிக்சிங்கில் முக்கி பொரிப்போம் .நீங்க சிவப்பரிசி ல செஞ்சிருக்கீங்கன்னு நினைக்கிறன் மற்றபடி சேம் மெத்தட்தான் 

  ReplyDelete
  Replies
  1. சிலர் அரிசிமாவிலும் தோய்த்துப் பொரிப்பார்கள் என நினைக்கிறேன் அஞ்சு, ஆனா எனக்கு இது ஈசியாக இருந்தது... பச்சை அரிசிமா என்னிடம் இருப்பதில்லை.

   இது வறுத்த சிவபு அரிசிமா அஞ்சு.. இடியப்பம் அவிச்சால் பிங் கலரில வருது, ஆனாலும் எனக்கொரு சந்தேகம், இதற்கு ஏதும் பிங்கலர் சேர்க்கினமோ என..

   Delete
 12. பிள்ளையார் கலர் கோ ஆர்டினேட்டடா உடுத்தி நகையெல்லாம் போட்டு ஜொலிக்கிறார் :)//இம்முறை நான் கற்கண்டுப் புக்கை, கடலைச் சுண்டல், பருப்புவடைதான் அவருக்குக் கொடுத்தேன், கொழுக்கட்டை வேண்டாம்.. கோமதி அக்காவும் நெல்லைத்தமிழனும் தருவார்கள் எனச் சொல்லிட்டார்:))//
  அது ஒண்ணுமில்லை முந்தி செஞ்ச வடைகளை பார்த்து ஷாக் ஆகியிருக்கு பேபி பிள்ளையார் அதான் வேணாம்னுட்டார் 

  ReplyDelete
  Replies
  1. //பிள்ளையார் கலர் கோ ஆர்டினேட்டடா உடுத்தி நகையெல்லாம் போட்டு ஜொலிக்கிறார்//
   யேஸ் பிங்கிப் பிள்ளையார் ஹா ஹா ஹா...

   //அது ஒண்ணுமில்லை முந்தி செஞ்ச வடைகளை பார்த்து ஷாக் ஆகியிருக்கு பேபி பிள்ளையார் அதான் வேணாம்னுட்டார் //

   பார்த்தீங்களோ பிள்ளையாருக்கே பொறுக்காமல், கொழுக்கட்டையை வடை என எழுதப் பண்ணிட்டார் ஹா ஹா ஹா..

   Delete
 13. / வாங்கோ கிச்சினுக்குள் தொடர்வோம்:))
  மேலே சொன்ன அனைத்தையும் ஒன்றாகக் கொட்டிக் கலக்கவும்...//
  ஊர்ல வீடுகட்டும்போது இப்படித்தான் கலப்பாங்க :)))))))))))))))))))))))

  ///கொஞ்சம் வென்நீரை மெதுவாக தெளிச்சால் போதும், சகரை, சீனி, தேங்காய்ப்பூ எல்லாம் சேர்ந்து இளகி விடும்... இப்படி குழைத்து எடுத்துக் கொண்டு....//
  ஆமா சிமியோன் டீச்சர் எங்கிருந்தாலும் வரவும்:))))))
  அந்த உருண்டைகள் கண்ணன் வாய்க்குள்ள பார்த்த உலக உருண்டை மாதிரியே இருக்கு :)

  ReplyDelete
  Replies
  1. //ஊர்ல வீடுகட்டும்போது இப்படித்தான் கலப்பாங்க :)//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் பயற்றம்பணியாரத்தைப் பார்த்துத்தான் பழகிச்சினமோ என்னமோ:).. ஆஆஆஆஅ அது குளைப்பதா? :))

   உருண்டைகள் சிலர் ஆகவும் குட்டியாக உருட்டுவார்கள் அஞ்சு, எனக்கு கொஞ்சம் பெரிசாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பேன்.. கட்லட் கூட நான் கொஞ்சம் பெரிசாகவே உருட்டுவது வழக்கம்..

   Delete
 14. /நானே செஞ்சது:), அஞ்சு முருங்கை இலை போடவில்லையாக்கும்.. மீ போட்டனே.. என்னா சுசி:) என்னா சுசி:)).. ரெசிப்பி இங்கே//
  கர்ர்ர்ர்ர் :) பார்க்க அருமையா இருக்கு 

  ReplyDelete
 15. ///ந்தாங்கோ ஒராளுக்கு ஒன்றுதான் தருவேன்.. பந்திக்கு முந்தோணும்:))//

  அப்போ இங்கி பிங்கி பொன்கி போட்டு என் ஷேரை ஸ்ரீராம் நெல்லைத்தமிழன் ரெண்டுபேர்ல ஒருத்தருக்கு கொடுங்க :)

  பிக்கோஸ் மற்றவங்க யாரும் கஷ்டப்படக்கூடாது ஹாஆஆ 

  ReplyDelete
  Replies
  1. தட்டச்சை சரி பண்ணுங்க.

   //பிக்கோஸ் மற்றவங்க யாரும் கஷ்டப்படக்கூடாது ஹாஆஆ // - பிக்கோஸ்.. எனக்கு அந்த கஷ்டம் வேண்டாம் ஹாஆஆ

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு உருண்டை சாப்பிட்டால் இன்னொன்று கேட்பீங்களாக்கும்:)).. நெல்லைத்தமிழனுக்கு பயற்றம் பணியாரம் கான்சல்ட்:)).. உங்களுக்குக் என் குழைஜாதம் தான் சரி:)))))))))))

   Delete
 16. //என் ஊசி மல்லிகை பூத்திருந்தது[கொஞ்சமாக], அப்போ தான் நினைச்சேன் நம் கார்டின் மலர்கள் இருக்கக் கவலை எதுக்கு என.. இப்போ பூத்திருக்கும் மலர்களைப் பிடுங்கி வந்து, பிள்ளையாரைக் குளிர்விச்சேனாக்கும்...//

  இதைவிட மகிழ்ச்சி என்ன வேண்டும்!
  நம் வீட்டில் பூத்த மலர்கள் இறைவனுக்கு அளித்தால் அவர் மனம் குளிரும், நம் மனமும் குளிரும்.
  //அன்று பூத்தமலரால் உன்னை அர்ச்சிப்பேன் வருவாய் அப்பா
  அன்பான மனதால் உன்னை அர்ச்சிப்பேன் வருவாய் அப்பா//
  என்ற பாட்டு கேட்டு இருப்பீர்கள் தானே?

  ReplyDelete
  Replies
  1. அதேதான் கோமதி அக்கா... இங்கு அறுகம்புல்லும் இருக்குது, ஆனா கோரைக்கும் அறுகுக்கும் சரியான அடையாளம் என்னால கண்டு பிடிக்க முடியவில்லை..

   இம்முறை பூ ஏதும் வைக்காமல் கொண்டாடப்போகிறோமே எனக் கவலையாக இருந்தது, பின்புதான் யோசித்தேன், பால் வடியும் பூக்கள் மட்டும் தானே கடவுளுக்கு வைக்கக்கூடாது, ஏனையவை வைக்கலாம் தானே என.. அதனால வீட்டு மலர்கள் வைத்தேன்.. மனதும் குளிர்ந்தது...

   நன்றி கோமதி அக்கா.

   Delete
  2. எருக்கம் பூ வைப்போம் பிள்ளையாருக்கு அதை பறிக்கும் போது பால் வடியும் அதிரா

   Delete
  3. ஓ கோமதி அக்கா.. இதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.... சில பூக்கள் ஆகாது என்பினம், அதில பால் வடியும் பூக்கள் எனச் சொல்வார்கள்.. அலரிவகையாக இருக்குமோ.. நன்றி கோமதி அக்கா

   Delete
 17. ஊசி இணைப்பு ..சிலநேரம் கஷ்டமா இருக்கு ..சிலவிஷயங்கள் கேள்விப்படுமோது .ஒருசிலர் ஆடாத ஆட்டமில்லை பேசாத பேச்சுமில்லை  எல்லாம் அவரவர் வாய்தான் காரணம் .ஆனால் சிலர் செய்யும் தவறுகள் அவர்கள் வாரிசுகளை பாதிக்குது பாவம் 

  ReplyDelete
  Replies
  1. உண்மை அஞ்சு, இதைத்தான் மேலே நெ தமிழனுக்கும் சொன்னேன்.. கண்ணதாசன் அங்கிள் அப்பவே சொல்லிட்டாரே...

   பெற்றவர்கள் பட்டகடன்.. பிள்ளைகளைச் சேருமடி.. வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள்...

   Delete
 18. ஸ்ஸ்ஸ்ஸ்யப்பாஆஆ போன வாரம் முழுக்க வேலை இன்னிக்கும் லேட் ஷிஃப்ட் .அனைவரையும் திங்களில் இருந்து சந்திக்கிறேன் 

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் திங்கள் ஃபிறீயாக, நான் திங்கள் என் எஞ்சினை ஸ்ராட் பண்ணி வெள்ளி உங்களிடம் ஒப்படைக்கிறேன் ஹா ஹா ஹா:)

   மிக்க நன்றிகள் அஞ்சு..

   Delete


 19. இனிப்பு பலகாரத்தில் மிள்கு சீரகமா? இங்கே தப்பு ஏதோ நடந்திருக்குது

  ReplyDelete
  Replies
  1. Haaaaaahaaa 😺😺😺😺😺😺😺
   Truth I think cat got confused with dry ginger sukku with cumin and pepper

   Delete
  2. நானும் நினைத்தேன். ஆனால் அதிரா சொன்னால் சரின்னு விட்டேன்.
   நல்லா இருக்குப்பா.
   ரொம்ப அருமையா செய்து பிள்ளையாருக்கு கொடுத்திருக்கிறீர்கள்.

   வீட்டுப் பூவே உகந்தது. இங்கேயும் அதே கார்டீனியா,மம்ஸ், டெய்சி
   என்று கொடுத்தாச்சு.

   Delete
  3. வாங்கோ ட்றுத் வாங்கோ.. பல காலத்துக்குப் பின் உங்களைப்பார்ப்பது போல ஒரு ஃபீலிங்காக இருக்குது...

   //இங்கே தப்பு ஏதோ நடந்திருக்குது//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இல்ல ட்றுத்.. பயற்றம் பணியாரம் எனில் இப்படித்தான் செய்வது..

   இல்ல அஞ்சு.. இதற்கு சுக்கெல்லாம் யாரும் போடுவதில்லை, ஏலக்காய் சேர்ப்பினம் சிலர்.

   Delete
  4. வாங்கோ வல்லிம்மா வாங்கோ... நலம்தானே.. உங்களையும் சந்திச்சு நீண்ட காலம் ஆகிவிட்டதுபோல இருக்குது.

   இந்தப் பலகாரத்துக்கு மிளகு சீரகம் கொஞ்சமாக வாசனைக்குச் சேர்ப்போம் வல்லிம்மா, ஆனா அளவு கூடினாலும் உறைக்கும்.. கவனமாக கொஞ்சமாக சேர்க்கோணும்.

   //வீட்டுப் பூவே உகந்தது. இங்கேயும் அதே கார்டீனியா,மம்ஸ், டெய்சி
   என்று கொடுத்தாச்சு.//

   ஓ அப்படியோ வல்லிம்மா அப்போ ஓகே, எனக்கு மனதில ஒரு வருடல் இருந்தது, இப்பூக்கள் வைக்கலாமோ தெரியாதே என...

   மிக்க நன்றிகள் வல்லிம்மா,.

   Delete
 20. வாருங்கள் அதிரா! ரொம்ப நாளைக்குப்பிறகு திரும்ப வந்திருக்கிறீர்கள்1
  பிள்ளையார் ரொம்பவும் அழகு! அவருடைய ஆபரணங்களும் ஆடையும் ஏக ஜோர்!
  இனிப்புடன் வந்து அசத்திவிட்டீர்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ..

   உண்மைதான் கொஞ்சக்காலம் புளொக் என ஒன்றிருப்பதே தெரியாததுபோல இருந்தேன், எட்டியே பார்க்கவில்லை, ஏனோ மனம் விரும்பவில்லை...

   உண்மைதான் எனக்கும் இந்தக் குட்டிப் பிள்ளையாரை ரொம்பப் பிடிச்சுப் போச்சு மனோ அக்கா.

   மிக்க நன்றிகள்.. நலமாக இருங்கோ.

   Delete
 21. வித்தியாசமாக செய்து உள்ளீர்கள்... படங்களுடன் விளக்கம் அருமை... செய்து பார்ப்போம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ..
   மிக்க நன்றி.

   Delete
 22. சுவையான குறிப்புடன் சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. நன்று அதிரா.

  இணைத்திருக்கும் பாடலும் நன்று.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

   நன்றி நன்றி.. ஆஆ இம்முறை பாட்டும் கேட்டு விட்டீங்கள் நன்றி. எனக்கு எங்கும் ஒழுங்காக முந்தினதுபோல போக முடியவில்லை.. ஸ்கூல் தொடங்கி விட்டது.. ஆனாலும் பழையபடி கலக்கோணும் என முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

   நன்றி வெங்கட்.

   Delete
 23. பயத்தம் பணியாரம் மிக அழகு. செய்முறையில் சிறிது வித்தியாசம் இருக்கு.

  நாகர்கோவில் பகுதிகளில் இதற்கு முந்திரிக் கொத்து என்று பெயர் (ஏன் என்று எனக்குத் தெரியாது). என்னுடன் வேலை பார்த்த நண்பர், எப்போது ஊருக்குச் சென்றாலும் அங்கிருந்து அவர்கள் வீட்டில் செய்து எனக்குக் கொண்டுவருவார். ரொம்ப ருசியாக இருக்கும்.

  நீங்களும் ரொம்ப நல்லா செய்திருக்கிற மாதிரி தெரியுது. ஆனால் செய்முறைல ஏதோ கட் அண்ட் பேஸ்ட் போட்டு ஜீரகம், மிளகு என்றெல்லாம் வரும்படிப் போட்டுட்டீங்களே.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

   // செய்முறையில் சிறிது வித்தியாசம் இருக்கு///
   ஹா ஹா ஹா அது ஊருக்கு ஊர், மாவட்டத்துக்கு மாவட்டமே வித்தியாசம் இருக்கும்போது.. நாட்டுக்கு நாடு எவ்ளோ இருக்கும்:))..

   முந்திரி என திராட்சையைச் சொல்கின்றனர் போலும், குட்டித் திராட்சைப்பழங்கள்போல கொத்தாக இருப்பதால என இப்போதான் நினைக்கிறேன், முந்திரி என்றதும், கஜூ வில் செய்வார்கள் போலும் என நினைச்சேன்.

   ஹையோ குட்டிப் பிள்ளையாரே.. இம்முறை இந்தச் சீரகம் மிளகு என்னைப் பாடாய்ப் படுத்தி விட்டதே ஹா ஹா ஹா... நீங்கள் ஒரு தடவை இதேபோல செய்து பாருங்கோ.. உண்மையில் நன்றாக இருக்கும்.. இனிப்பில் சுவை.. அருவருப்பில்லாமல்.. நன்றாக இருக்கும்.. இல்லை எனில் இப்போ வெறும் சக்கரைப் புக்கை சாப்பிட்டால், முடிச்சபின் வாய் ஒருமாதிரி ஏதும் உறைப்பு இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தேடுமெல்லோ.. அந்த திகட்டு இருக்காது. ஆனா மிகவும் கொஞ்சமாகவே சேர்க்கோணும்.

   அம்மா இதில் எக்ஸ்பேர்ட்:)).. அம்மாவைக் கேட்டுக் கேட்டே செய்தேன்...

   Delete
 24. நீங்க கடுமையா ஜிம் ஒர்க் செய்து ரொம்பவே இளைத்துவிட்டீர்கள், வீட்டு கதவைத் திறக்க அவசியமில்லாமல், சிறிய இடைவெளியிலேயே புகுந்து நுழைந்துவிடுவீர்கள் என்று ஏஞ்சலின் சொன்னார். அப்போ கையுமா ரொம்ப இளைக்கும்? படத்துல பூக்கள் ரொம்பப் பெரிதாகத் தெரிவதால் இந்த டவுட்.

  ReplyDelete
  Replies
  1. ///நீங்க கடுமையா ஜிம் ஒர்க் செய்து ரொம்பவே இளைத்துவிட்டீர்கள்,//

   ஹா ஹா ஹா இளைத்தது உண்மைதான், ஆனா ஜிம், யோகா அனைத்தையும் தாண்டி, எனக்குக் கை கொடுத்தது டயட்தான்:))... ஒழுங்காக 3 வேளையும் சாப்பிட்டுக் கொண்டு எப்படி ஜிம் செய்தாலும் குறைப்பது கஸ்டமாகவே இருந்துது.. சாப்பாட்டை விட்டதும்... அது தானா குறைகிறது:)).. இனி தொடர்ந்து 40 நாட்களுக்குக் கிட்ட விரதம் வருமெல்லோ நவராத்திரியோடு.. கந்தசஸ்டி பால் பழம் இருந்தேனெல்லோ போன வருடம்.. அதனால இம்முறை விரதம் முடிஞ்சதும், அஞ்சு ஊதினாலே நான் விழுந்திடுவேனாக்கும் ஹா ஹா ஹா..

   ///அப்போ கையுமா ரொம்ப இளைக்கும்? படத்துல பூக்கள் ரொம்பப் பெரிதாகத் தெரிவதால் இந்த டவுட்.///

   ஹா ஹா ஹா ஒவ்வொருவரின் உடம்பும் ஒவ்வொரு நிலை எல்லோ.. சிலருக்கு டயட் என்றாலே முகம் மெலிஞ்சு குட்டியாகிடும், உடம்பு குறையாது, எனக்கு மாறி, உடம்பு இறங்கினாலும் முகம் மெலியாது, கை விரல்கள் மெலிஞ்சு மோதிரம் எல்லாம் கழண்டு விழும்..விழுது ஹா ஹா ஹா..

   Delete
 25. //இம்முறை நான் கற்கண்டுப் புக்கை, கடலைச் சுண்டல், பருப்புவடைதான் அவருக்குக் கொடுத்தேன், கொழுக்கட்டை வேண்டாம்.. கோமதி அக்காவும் நெல்லைத்தமிழனும் தருவார்கள் எனச் சொல்லிட்டார்:))// - நியாயம்தானே. அவர் இதற்கு முன் நீங்க செய்திருந்த கொழுக்கட்டைகளைச் சாப்பிட்டு என்ன பாடு பட்டாரோ. அவருக்குத்தானே தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) இதையேதான் அஞ்சுவும் சொலியிருக்கிறா:)) ஆனா நான் பிள்ளையாரை விடுவதாக இல்லை:)).. இன்னொருநாள் செய்து தருவேன் எனச் சொல்லி இருக்கிறேன்...

   மாவிளக்குப் போட்டனானெல்லோ:)) படம் விரைவில வருமாக்கும்:))

   Delete
 26. //ஸ்கொட்டிஸ் குணுக்காக்கும்:)).. நானே செஞ்சது:), // - சொக்கா...உம்பாட்டை என் பாட்டு என்று சபையில் சொல்லி, அடி வாங்கும் நிலைமைக்குப் போய்விட்டேனே.. இனி நான் பாட்டு எழுதிக்கொண்டு போனால், 'இது உம்ம பாட்டுத்தானா இல்லை மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்து இங்க கொண்டுவருகிறீரா?' என்று எல்லோரும் கேட்பார்களே - திருவிளையாடல் வசனம் நினைவுக்கு வருது.

  ReplyDelete
  Replies
  1. ///திருவிளையாடல் வசனம் நினைவுக்கு வருது.///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))) ஹா ஹா ஹா.. உண்மையைச் சொல்றது டப்பா நெல்லைத்தமிழன்:))

   Delete
 27. ஊசிக்குறிப்பு படித்த உடன், 'வருஷத்துக்கு ஒரு தடவை கொழுக்கட்டை சாப்பிட்டுவிட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவிட்டு வருவோம் என்றுதான் ஒவ்வொரு வீட்டிற்குப் போகிறோம். அங்கயும், கொழுக்கட்டை கிடையாது, கற்கண்டு புக்கைதான் இல்லை பாயசம்தான் என்று சொன்னால், அப்புறம் எதற்கு அங்கு போவது - என்று பிள்ளையார் நினைத்திருப்பாரோ?

  ReplyDelete
  Replies
  1. //பாயசம்தான் என்று சொன்னால்//

   நீங்க கீசாக்காவைச் சொல்லலியே:))...

   நான் தான் சொன்னனே அதிரா எபவுமே டிபரெண்ட் என:)).. எல்லோரும் கொழுக்கட்டை குடுக்கும் நாளில் நான் குடுக்க மாட்டேனாக்கும்:)) ஸ்பெசலா தனியா ஒருநாளைக்குக் குடுப்பேன்.. அப்போதான் குண்டரும் ஸ்பெசலாக் கவனிப்பார் ஹா ஹா ஹா...

   Delete
 28. //அடுத்தவரை துன்புறுத்தியவர்// - தப்பித்தேன். கலாய்த்து பின்னூட்டம் போட்டவர் என்று புத்தர் சொல்லியிருந்தால், நான் என்ன செய்வது?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா... சே.சே.. கலாய்த்தல் என்பது.. துன்புறுத்தல் அல்லவே.. அது ஒருவித மகிழ்ச்சியை .. உற்சாகத்தைக் கொடுப்பதுதானே.. அதனால புத்தர் அப்படிச் சொல்ல மாட்டாராக்கும்:)..

   மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்...

   Delete
 29. படங்கள் அருமை
  பள்ளி திறந்துவிட்டதா
  கவனம்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ.. ஓம் பள்ளி திறந்து ஒன்றரைக் கிழமையாகி விட்டது, கொரோனாவுக்கு முன் எப்படி நடந்ததோ அப்படியே இருக்குது.. ஆனா கை கழுவுதல், டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணுகிறார்கள் அவ்வளவே.. அதுக்கு மேல ஸ்கூலைக் கொன்றோல் பண்ண முடியாது.. கஸ்டம் சரியான.

   Delete
 30. //கொஞ்சம் வென்நீரை மெதுவாக தெளிச்சால் போதும், சகரை, சீனி, தேங்காய்ப்பூ எல்லாம் சேர்ந்து இளகி விடும்... இப்படி குழைத்து எடுத்துக் கொண்டு....//

  மாலை நேரம் பள்ளிவிட்டு வந்தால் பொரிஅரிசி மாவில் வறுத்து அரைத்து வைத்து இருக்கும் மாவில் தேங்காய் சீனீ, போட்டு சூடான பாலை விட்டு உருட்டி கொடுப்பார்கள். பசிக்கு ருசியாக இருக்கும். வெல்லபாகு போட்டும் உருட்டி கொடுப்பார்கள்.

  உடலுக்கு சத்து. இது சத்துமா என்றும் சொல்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஓம் கோமதி அக்கா, நான் முந்தி திரிபோசா என இங்கு போஸ்ட்டில் படம் போட்டு உருண்டைகளும் போட்டேனே... நாங்களும் அப்படிச் சாப்பிடுவதுண்டு..

   திரும்பத் திரும்ப ஓடி வந்திருக்கிறீங்க, நன்றி கோமதி அக்கா.

   Delete
 31. வணக்கம் அதிரா சகோதரி

  பதிவு அருமை. வாழ்த்துச்சொல்லும் மியாவ் படம் கண்ணை கவர்கிறது.உங்களுக்கும் என்னுடைய தாமதமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

  பிள்ளையார் அழகோ அழகு. அவரை பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கிறது. அவருக்கு பிரசாதமாக செய்திருக்கும் இனிப்பு நன்றாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கொழுக்கட்டைகளாக சாப்பிட்டு அலுத்திருக்கும் அவருக்கும் இது மிகவு‌ம் பிடித்திருக்கும்.நானும் ஒன்று எடுத்து சுவைத்தேன். கூடவே கார குணுக்கையும். அத்தனையும் அருமையாக இருந்தது.

  மலர்களின் நிறங்கள் கண்களை பறிக்கின்றன. நம் வீட்டில் மலர்ந்த மலர்களை இறைவனுக்கு படைப்பதில் ஒரு அலாதியான மகிழ்ச்சிதானே..!

  ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு இரண்டுமே தங்கள் பாணியில் அருமை. ரசித்தேன்.

  நான்தான் கடைசி பெட்டி.. இருப்பினும் எனக்காக காத்திருந்தமைக்கு நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா வாங்கோ.. வாழ்த்துக்கு நன்றி நன்றி.

   //நம் வீட்டில் மலர்ந்த மலர்களை இறைவனுக்கு படைப்பதில் ஒரு அலாதியான மகிழ்ச்சிதானே..!//
   உண்மைதான் கடவுளுக்கும் அதுதான் பிடிக்குமாம் அத்தோடு கேட்ட வரமும் கிடைக்குமாம்:) அதனால இம்முறை அதிராவுக்குத்தான் கேட்டதெல்லாம் கிடைக்கப்போகுதூஊஊஊஊஊஉ ஹா ஹா ஹா.

   நீங்கள் கடசிப்பெட்டிக்கு முதல் பெட்டி:)).. ரெயின் வெளிக்கிட இன்னும் நாளாகும் அதனால பிரச்சனை இல்லை..

   மிக்க நன்றி கமலாக்கா.

   Delete
 32. ஆ....எங்கேயோ கேட்ட(பார்த்த எழுத்து)குரல் மாதிரி இருக்கே..அவ்வ் பூஸார் வந்தாச்சு..வாங்கோ. கனநாளாச்சு உங்க பதிவு பார்த்து. வித்தியாசம் தெரியுது. பழைய உசார் வர கொன்சநாள் ஆகும் போல..
  ஸ்கூல் ஆரம்பம்..//பாதுகாப்பா,பத்ரமா ஸ்கூல் போய் வாங்கோ.
  என்னோட பேவரிட் பலகாரம் இது. நான் செய்துபார்த்தேன். ஆனா தோய்க்கும் மா நான் அரிசியை ஊற வைச்சு நல்லா மைய அரைச்சு தோய்த்து போட்டேன். நல்லாயிருந்தது. எனக்கு கோதுமை மா சரியாக ஒட்டுதில்லை.
  மிளகு சீரகம்தான் இதன் ஹைலைட்டே. சாப்பிடும் போது சின்னதா அந்த மிளகின் உறைப்பு இனிப்புடன் சேர்ந்து சாப்பிட ஆஹா...சூப்பரா இருக்கும். நானும் செய்யோனும்.
  பாட்டு நல்லாயிருக்கு. அதிகம் ரேடியோவில போடுவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ..

   //ஆ....எங்கேயோ கேட்ட(பார்த்த எழுத்து)குரல்//

   ஹா ஹா ஹா மூலஸ்தானத்தில் இருந்து ஒலிப்பதைப்போல இருக்கோ:)..

   //பழைய உசார் வர கொன்சநாள் ஆகும் போல..//
   ஸ்கூல் நாட்கள் இப்போ கூட நாட்கள் போகிறேன் அம்முலு, அதனால நேரம் ஒதுக்க முடியவில்லை.. ரயேட் ஆக வருது..

   ஸ்கூல் ஓகேயாத்தான் இதுவரை போகிறது.. பார்ப்போம்..

   //என்னோட பேவரிட் பலகாரம் இது//
   ஓ.. எனக்கு முன்பு பிடிக்காது, அத்துடன் சிலபேருக்கு சுவையாக செய்ய தெரியாது, பலபேர் தேங்காய்ப்பூச் சேர்ப்பதில்லை.. அது ருசியே இல்லை.. அதனால நாங்கள் வீட்டில் செய்தால் மட்டுமே எனக்குப் பிடிக்கும்... இம்முறை நல்ல சூப்பர் ரேஸ்ட்டாக வந்துது.. எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டு முடிச்சுப் போட்டினம்.

   கோதுமை மாவுக்கு கொஞ்சம் மஞ்சள் சேர்த்துத், திக்காக கரைச்சு செய்தேன் அம்முலு..

   //அதிகம் ரேடியோவில போடுவதில்லை.//

   ஓம் ரேடியோவில் நானும் கேட்டதாக நினைவில்லைத்தான் அம்முலு... நன்றி.

   Delete
 33. நான் உந்த சிவப்பு அரிசிமா வாங்குவதில்லை. கலர் சேர்க்கினம் என சொன்னதால் ருசி பிராண்ட் மா தான் வாங்குவேன். இடியப்பம்,புட்டு எல்லாம் ஒருவித பிங்க் கலரா வரும். இப்ப வெள்ளை பச்சரிமா (வறுத்த) வாங்கி செய்துபார்த்தேன் நல்லாயிருக்கு. உந்த மா போட்டதால்தான் ஒருகலரா இருக்கு போல.
  ஆ.சர்க்கரையும் போட்டு ,சீனியும் போட்டீங்களா.?? இனிப்பு கூடிவிடாதோ? நான் செய்தபோது 1க்கு 1.25 போட்டேன்.இங்கன இனிப்பு பலகாரம் அவ்வளவா எடுபடாது ஆனா இது விரும்பி சாப்பிடுவினம்.
  உருண்டைகளை அழகா உருட்டி இருக்கிறீங்க. சூப்பர்.

  ஒருவழியா குணுக்கு செய்தாச்சு..

  அழகான பூஸார், பிள்லையாரும் சூப்பரா இருக்கிறார். ஆனா அவரை விட கிரீடம் பெரிசா இருக்கு.ஹா..ஹா..ஹா
  நானும் வீட்டில் செம்பருத்தி பூத்திருந்தது. எங்க வீட்டு பூ வைக்கும்போது வரும் மகிழ்ச்சி வாங்கி வைப்பதில் வராது. ஊசி மல்லிகையாஆஆ....
  கோவிலுக்கு போனால் பிரசாதம்,அன்னதானம்தான் இருக்கோ எனதான் பார்ப்பினம்..ஹா.ஹா..ஹா

  அதென்ன வி.சது வாழ்த்துக்கள்.முழுசா எழுதாமல் என்னா ஒரு கஞ்சதனம். விநாயகர் எல்லா நற்பலன்களை தரட்டும் உங்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. //நான் உந்த சிவப்பு அரிசிமா வாங்குவதில்லை//
   இங்கு எங்கள் தமிழ்க்கடையில் இதுதான் கிடைக்குது.. சொய்ஸ் இல்லை. வெள்ளை அரிசிமா நான் வாங்குவதில்லை. ஆனா இந்த மாவில் இடியப்பம் புட்டு அவிச்சால் சூப்பராக இருக்கு அம்முலு.

   //ஆ.சர்க்கரையும் போட்டு ,சீனியும் போட்டீங்களா.?? இனிப்பு கூடிவிடாதோ?//
   இல்ல அம்முலு இதுதான் பேஃபெக்ட் ஆக இருந்தது, நான் பிரவுண் சுகர் சேர்த்திருப்பதாலதான் இப்படி நல்ல கலர் வந்தது என நினைக்கிறேன்.

   //ஒருவழியா குணுக்கு செய்தாச்சு..//
   அது லொக்டவுண் லயே செய்திட்டேன்:))..

   இந்த ஊசி மல்லி, லண்டனில் இருக்கும் என் நண்பி வீட்டில் நிறையக் கன்றுகள் படர்ந்திருந்தது, அதைக் கொண்டு வந்து வைத்தேன்.. இப்போ பூக்குது.

   //அதென்ன வி.சது வாழ்த்துக்கள்//
   ஹா ஹா ஹா ஆரம்பம் வி ச வாழ்த்துக்கள் எண்டுதான் போட்டேன்.. பின்பு அதுதப்பாக இருக்கே என வி சது என மாத்தினேன் எப்பூடி?:))..

   //என்னா ஒரு கஞ்சதனம்.//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அம்முலு.

   Delete
 34. பழைய பயத்தம் பணியாரம் சரி கிடைக்குமா மேடம்![[ நாங்களும் பிசியானதால் வலைப்பக்கம் உலாவுவது குறைவு![[

  ReplyDelete
 35. ஊசிக்குறிப்பு அருமை பொங்கல் கிடைக்காத தருசனம் என்பது சினேஹா இல்லாத பாடல் போல![[

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.