நல்வரவு_()_


Thursday 4 May 2017

நிலா.., ஹனிமூன் போயிருக்காம்:)

ப்பப்ப எனக்கு இப்பூடி விபரீத ஆசைகள்:) உதிப்பதுண்டு, மனதில் தோன்றியவுடன் கல்லெறி விழுந்தாலும் பறவாயில்லை என டக்குப் பக்கென எழுதிடுவேன் என் நோட் புக்கில்:).. சமீபத்தில் காதில் கேட்ட இரு வரிகளை வச்சு இரண்டு கவிதைகளாக்கிட்டேன்.. ஓடிவாங்கோ வந்து படிச்சு.. மகாகவி, கவிஞர் அதிராவை வாழ்த்துங்கோ:)..

ஹையோ எதுக்கு இப்பூடி வந்த வேகத்தில கல்லெடுக்கிறீங்க?:) கீழே போடுங்கோ:) என் ஞாயத்தைக் கேளுங்கோ முதலில்... பெரிய பெரிய கவிஞர்கள்.. இருமினாலும் ரசிக்கிறீங்க.. தும்மினாலும் ரசிக்கிறீங்க:) நான் மட்டும் கவிதை சொன்னா கல்லெடுக்கிறீங்க:).. இது ஞாயமா?:).. சரி சரி வாங்கோ கவிதை படிக்கலாம்:)..

ஸ்ஸ்ஸ்ஸ் அதாரது டிஸ்ரேப்ப் பண்றது, நான் ரொம்ப சீரியசா இருக்கிறேன் இப்போ.. கடவுளே!!! இது வேற சீரியஸ்!!!
_________________________________________________________________________________
கவிதை படிக்க முன்னர் ஒரு சுற்றுலாத் தகவல் படிப்போமா?:)
_____________________________________________________________________________________

மூன்.. ஹனிமூன் போயிருக்காம்!
ண்ணா!! ஆ சொல்லு ராசா!!!
இண்டைக்குப் பிள்ளைக்குப் பிடிச்ச
சிக்கின் பாஸ்ட்டா:)...

வெயிட் பாட்டி... மூன் வரட்டும்!!!
மூனைக் காட்டினால்தானே..
நான் ஆ... சொல்லுவேன்!

ஆண்டவா!! இண்டைக்கு
அமாவாசை ஆச்சே!! மூன் வராதே!!
எப்பூடியப்பன் உனக்குப் புரிய வைப்பேன்!!

ஏன் பாட்டி மூன் வராது?
எங்கே போயிருக்கு இன்று?... அதப்பன்!!!..
சித்தப்பாக்கும் சித்திக்கும் கலியாணமாகி
ஹனிமூன் போயிருக்கினமெல்லோ ..
ஸ்கொட்லாந்துக்கு!!!

அதுபோலவே.. மூனுக்கும்
கல்யாணமாகி ஹனிமூன்
போயிருக்காம் அந்தாட்டிக்காவுக்கு!!!

சோ...(இவ இங்கிலீசுப் பாட்டி:)) இந்த
ரியூப்லைட்டிலயே சாப்பிடலாம்..
ஆ.... காட்டு ராசா!!!

ஓகே பாட்டி... ஆனா
இனி மூன் வந்தால்
வைஃப் உடந்தான் இருக்குமா?..
நம்மிடம் வராதோ?!!!

இல்ல ராசா!! ஹனிமூன் முடிஞ்சதும்
டாண் என புதுப்பொலிவோடு
வரும் .. பிள்ளையைப் பார்க்க...
கவலைப்படாமல் சாப்பிடப்பன்!!!..
                                                       கவிதை ஆக்கம்:மகாகவிஞர், முத்தமிழ் வித்தகர், 
                                                                        தமிழ் முதுகலைப் பட்டம் பெற்ற .. கவிஞர் அதிரா 
==============================இடைவேளை ஹா ஹா ஹா:)=============================
============================================================================================
ரகசியமானவை..!!!!
ரகசியமாய்ப் பார்த்து!!
ரகசியமாய் ரசித்து!!
ரகசியமாய்ச் சிரித்து!!
ரகசியமாய்ப் பேசி!!
ரகசியமாய்க் கவிதை அனுப்பி!!
ரகசியமாய்க் காதலித்து!!
ரகசியமாய் கைப்பிடித்து!!

ரகசியமாய் மாலை மாற்றி!!
ரகசியமாய் மணம்முடித்து!!- அதை 
ரகசியமாய்ப் படம் பிடித்து!!- அவற்றை
ரகசியமாய்ப் பூட்டி  வைத்து!!
ரகசியமாய்க் குடும்பம் நடத்தி!!
ரகசியமாய் ஊர் சுற்றி!!
ரகசியமாய் குழந்தை பெற்று!!
ரகசியமாய் வாழும் வாழ்க்கை!! - ஒருநாள்
ரகசியமாவே முறிந்து மறைந்து போகும்!!!

[சில நிகழ்ச்சிகளைப் பார்த்ததனால் வந்த எபெக்ட், வாழ்க்கையில் சீரியசான விசயங்கள் நடக்கும்போது, ரகசியமாக இருக்கட்டுமே என யாராவது சொன்னால், நீதான் கடவுள்..  நீ வாக்கு மாற மாட்டாய்... என ரகசியமான எந்த முடிவுக்கும் உடன் பட்டு விடாதீங்கோ, எந்த ரகசியத்துக்கும் ஒரு எல்லை உண்டு!!!... ]
ஊசி இணைப்பு:
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS()()()()()()()()()()()()()SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
ஊசி இணைப்பு
ரகசியம் என்பது... அடுத்தவர்களால், நமக்குச் சொல்லப்படுவதல்ல ரகசியம்!!!.. அடுத்தவர் பற்றிய, நமக்குத் தெரிந்த உண்மையே ரகசியம்...
இவ்வரிய தத்துவத்தை உங்களுக்காக இங்கே காவி வந்திருப்பவர்.. உங்கள் பெருமதிப்பிற்கும்.. பேரன்புக்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)!!
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
கடவுளே.. அதிராவோடு என்ன கோபமெனினும்.. ஒரு நிமிசத்துக்கு அக்கோபத்தைத் தூக்கி தேம்ஸ்ல வீசிப்போட்டு:) ஓடி வந்து இந்த லிங்கில போய் வோட் பண்ணிப்போட்டு:).. திரும்ப வேணுமெண்டால், தேடிக் கண்டு பிடிச்சு, எடுத்துப் பொக்கடுக்குள் போட்டுக்கொண்டு போங்கோ.. எனக்கு வேண்டாம்!!!:).நான் கோபத்துக்குச் சொன்னேன்:)

இங்க.. இங்கின தொடுங்கோ...!!:).
================================================================================

112 comments :

 1. மற்றவங்க கல்லை தேடுவாங்க ஆனால் நான் பெரியய பாறாங்கல்லை தேடுறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ...
   நீங்கதான் இங்கின முதலாவதா வந்திருக்கிறீங்க... அச்சச்சோஒ எதுக்கு இப்போ பாறாங்கல்லு?:).. நான் தான் இன்று டக்குப் பக்கென கொமெண்ட்டைப் பப்ளிஸ் பண்ணிட்டனே:).. ஹா ஹா ஹா.. வரவுக்கு மிக்க நன்றி.

   Delete
  2. வாங்க ட்ரூத் அந்த வெண்ணை பாறைக்கிட்ட கொண்டுபோய் தள்ளிவிட்ருவோம் :)

   Delete
  3. அச்சச்சோஓ அஞ்சூஊஊஊஊ எதுக்கு இப்போ ட்றுத்தை தள்ளப்போறீங்க.... அவரை விட்டிடுங்கோ ஏனெனில் வோட் போட்டிருக்கிறார்:)... நீங்க உப்பூடி தள்ளினா அடுத்தமுறை எனக்கு மகுடம் கிடைக்காதெல்லோ கர்ர்ர்ர்ர்:)....

   எங்கிட்டயேவா? தள்ள வருவோரைத் தள்ளிவிட்டிட்டு மீ ஓடிடுவேன்:) 1500 மீட்டர்ல 2 ண்ட்டா வந்தேனாக்கும் க்கும் க்கும்.. இது எக்கோ:)

   Delete
  4. 1500 மீட்டர்ல செகண்டா வந்தீங்களா? இது புதுசால்ல இருக்கு. நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே நடந்துபோலயா? பாதில நடக்கமுடியாம பிந்திட்டீங்களா?

   Delete
  5. ஹா ஹா ஹா.. மேடம் கடைசி ல ரெண்டாவது வந்த கதை தெரியுமா ஹா ஹா

   Delete
  6. அஞ்சுவின் “அயகான” நடையையும்:).. அதிராவின் “ஸ்பீட்டான” ஓட்டத்தையும்:) .. ஒரு 50 ஆயிரம் பேர், வந்து பார்த்து படித்துப் பின்னூட்டமும் இடும், மகுடமும் சூட்டப்பட்டிருக்கும் மாபெரும் சபையில் வைத்து[[(என் புளொக்கைச் சொன்னேனாக்கும்:) சொல்லாட்டில் அது எங்கின இருக்கு என கேள்வி கேட்பினம் கர்:))]] பப்புளிக்கில் ... இப்பூடி மானபங்கப் படுத்திய நெல்லைத் தமிழனை:)... உடனடியாக, விளக்கத்துக்காக, பக்கிங்காம் பலஸ் இன் ரூம் நம்பர் 16 க்கு வரும்படி:).. அதிராவின் அன்பு அம்மம்மாவும் பிரித்தானிய இளவரசியுமான குயின் அவர்கள் அழைப்பு விட்டிருக்கிறா:)..

   Delete
  7. //AngelinFriday, May 05, 2017 4:08:00 pm
   ஹா ஹா ஹா.. மேடம் கடைசி ல ரெண்டாவது வந்த கதை தெரியுமா ஹா ஹா//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னா ஒரு சந்தோசம்:) நில்லுங்க ஒரு நாளைக்கு அதைப்பற்றிய போஸ்ட் போடுவேன்ன்.. அப்பத்தான் எல்ல்லோரும் மூக்கில விரலை வச்சு சொக்கிப் போவீங்க:)..

   Delete
  8. //அஞ்சுவின் “அயகான” //

   வெயிட்....“அயகான அஞ்சுவின் “ என வரனும் ஹா ஹா

   Delete
  9. ///வெயிட்....“அயகான அஞ்சுவின் “ என வரனும் ஹா ஹா///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரெம்ம்ம்ம்ம்ப முக்கியம் உது இப்போ:)..

   Delete
  10. அயையோ கதை இப்படியா போகுது??!!!அதிரா அப்ப ரெண்டாவதாதான் வந்தீங்களா....இம்புட்டு நாள் முதல்னு சொன்னாப்புல இருந்துச்சே!!!! அதிராக்குப் பேசாம இருக்க முடியாதே முதலாவதா வந்த ஆள பின்னாடித் தள்ள கதைச்சிட்டே வந்திருப்பீங்க அப்படித்தானே!!? ஹிஹிஹி

   கீதா

   Delete
 2. அது சரி நான் தேவகோட்டையில.. கல் எடுத்தது லண்டனிலிருந்து எப்படி பார்த்தீங்க ?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...
   ஹா ஹா ஹா நீங்க கள் எடுத்தது:) .. வெரி சோரி (ஹையோ இது பகவான் ஜி யின் கொப்பி வலது.. சண்டைக்கு வந்திடப்போறார்:)] டங்கு ஸ்லிப் ஆச்சு:) ..கல் எடுத்தது எதுக்கென எனக்குத் தெரியுமே ஹா ஹா ஹா..

   மிக்க நன்றி, முதல் வருகைக்கும் வோட்டுக்கும்.

   Delete
 3. கவிதைகள் மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும்
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி...
   மிக்க மிக்க நன்றிகள்.

   Delete
 4. இரண்டாம் நம்பர் வோட் என்னோடது. கவிதைகள் அனைத்தும் அருமை. கவிதைகளைவிட சுற்றுலாத் தகவல் இன்னும் அருமை. இடைவேளியில் மூவ் தடவிக்கிட்டேன். ஊசி இணைப்பு 1 + 2 ஜோர் ஜோர். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ.. உங்கள் கொமெண்ட் பார்க்கமுன் வோட் போட்டதை பார்த்திட்டேன்..

   அப்போ கவிதைகள் நன்றாக இருக்கோ... ஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றி.

   Delete
 5. நிலா.., ஹனிமூன் போயிருக்காம்:) என்ற இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும்
  ’யங் மூன் - இளைய நிலா’ போன்ற ஏதேதோ பழைய நினைவுகள் கண்முன் தோன்றி மறைந்தன.

  உங்களின் இந்தக் கவிதைப் பதிவினால், ஒரு மிகச்சிறந்த கவிதாயினியை நினைவு படுத்தி மனதை அங்கலாய்க்க வைத்துவிட்டீர்கள். அந்த சுகானுபவம் மீளக்கிட்டிடாதோ???

  ReplyDelete
 6. உயிரை எடுக்கத்தான் தெரியும்,உயிர்த்தெழவுமா தெரியும் அவர் மனைவிக்கு :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ..
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) என் கவிதையைப் படிக்காமல்... எதுக்கு அந்த அப்பாவிப் பெண்ணைத் திட்டுறீங்க?:)

   வரவுக்கும் அனைத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 7. ஹல்லோ மியாவ் வெயிட் கன்னா பின்னான்னு ஏறினாலும் கண்ணாடி முகத்தில் நிக்காது :)
  காலை வச்சவுடனே இப்படி சிரிப்பு காட்டக்கூடாது சொல்லிட்டேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ... " அதிரா நீங்க ரொம்ப அழகு" என என்னோட வேர்க் பண்ணும் றீச்சர் என்னைப்பார்த்துச் சொல்லிட்டா எண்டதைக் கேட்டதிலிருந்து, நடந்து கொண்டிருந்த அஞ்சு, இப்போ ட்றக் சூட்டுடன் ஓடுவதாக பிபிசில சொல்லிச்சினமே:)... பூஸார் எவ்ளோ குண்டா.. வெரி சோரி:) டங்கு ஸ்லிப் ஆகுதே... எவ்ளோ ஸ்லிம்மா இருக்கிறார் பாருங்கோ:)...

   Delete
  2. அந்த teacher எங்கள் கைக்கு மாட்டினா அவ்லொதான்

   Delete
  3. ///AngelinFriday, May 05, 2017 4:06:00 pm
   அந்த teacher எங்கள் கைக்கு மாட்டினா அவ்லொதான்///
   ஐயா சாமீஈஈஈ இதென்ன புது வம்பாக்கிடக்கூஊஊஊ:)...
   [im]https://lh3.googleusercontent.com/proxy/C-RCuI71TEAJZL_ltnwRWKgQNDmhIfvbC4zBPK9oCWQir9QytUE-JvgRsWXeYXm7s2b_cwd6M0QL2Jfc6oEI=w426-h320-n[/im]

   Delete
  4. பூசார் இப்படிப் பாயுதே! ஏஞ்சல் விடுங்க ஜூட்!!! ஏஞ்சல் அப்படி அந்த டீச்சர் சொன்னாத்தன் தப்பிக்க முடியும் இல்லைனா இப்படித்தான் ஹிஹீஹி..

   கீதா

   Delete
 8. என் வோட் 5 ஆம் வோட் :) ஹாஹா

  ReplyDelete
  Replies
  1. நமக்கு கடமை முக்கியம் எனக் காட்டிட்டீங்க பாருங்கோ... அங்க நிக்கிறீங்க மிக்க நன்றி அஞ்சு... 🌹❤️

   Delete
 9. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா ஊசி குத்துது :) ரகசியம் பற்றி சொல்லி கம்பளி பூச்சியா ஓடுது :/)

  ReplyDelete
 10. ஹையோ பூஸ் //எந்த ரகசியத்துக்கும் ஒரு எல்லை உண்டு!!!... //

  நம்மகிட்ட ரகசியம்னு சொன்ன பார்ட்டி ரகசியத்தை வச்சிக்கமா எத்தினி பேர்கிட்ட கொட்டிருப்பங்களோ :)அதனால் 98 %ரகசியத்துக்கு மட்டும் நோ எல்லை .மீதி 2 பெர்சன்ட் மட்டும் நியாயமா இருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்குத்தான் அடிச்சு அடிச்சுச் சொன்னேன்:) ரிவேர்ஸ் ஓடர்ல வராதீங்க என:) இப்ப பார்த்தீங்களோ தலையும் புரியல்ல.. காலும் புரியல்ல உங்களுக்கு:)..

   Delete
 11. அடடா இந்த ரகசியத்துக்கு காரணம் கவிதையா ..கர்ர்ர் ரிவர்ஸ் ஆர்டார்ல வந்ததில் புரியல ..ஆமாம் அதிரா ..வாழ்க்கையில் ரகசியமா இருப்பவை நிலைக்காது ..உண்மைதான் இப்படிப்பட்ட ரகசியத்துக்கு எக்காலத்திலும் உடன்படக்கூடாது ..
  ஹை ர வரிசை கவிதை ..நீங்க அ வரிசையிலும் எழுதலாமே :)

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அஞ்சு.. நேர்மையாக இருக்க விரும்பினால் எதுக்கு ரகசியம்?..

   என்னாது அ.. வரிசையிலோ? கவிதையோ?:).. எழுத நான் ரெடி:), ஆனா எதுக்கும் இங்குள்ள எல்லோரிடமும் முதலில் வெள்ளைப்பேப்பரில கை எழுத்து வாங்கித்தாங்கோ:).. இல்லையெனில்.. இனி ஸ்கொட்லாந்துக்கு குண்டு போட்டாலும் போடுவினம் ஜாமீஈஈஈஈஈஈ:)..

   சமையல் எழுதினாலும் அடிக்கிறாய்ங்க:)... கதை எழுதினாலும் அடிக்கிறாய்ங்க.. கவிதை எழுதினாலும் அடிக்கிறாய்ங்க:).. நானும் கிட்னியை ஊஸ் பண்ணி புதுசு புதுசா எழுதுறேன்.. ஆனாலும் அடிக்கினமே கர்ர்ர்ர்ர்:).. இனி நான் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதப்போறேன்ன்ன்..:) இதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க எனக் கேய்க்கவே மாட்டேன்ன்ன்:).. ஏனெண்டால்..”என் வழீஈஈஈஈஈஈஈஈ தனீஈஈஈஈஈ வழீஈஈஈஈஈஈஈஈஈஈஈ”:). ஹக் ஹக் ஹாஆஆஆஆ:)

   Delete
  2. ஏஞ்சல் நான் கருத்திடும் போது இப்போது ரிவர்ஸ் ஆர்டரில் வருவதில்லை...ஏன்னா சில கமெனடுகள் தொடர்ந்து வரும்போது முன்னதன் தொடர்பு விட்டுப் போகிறது...முன்னாடி எல்லாம் பின்னருந்துதான் வருவேன்...இப்ப முதலில் இருந்து...

   கீதா

   Delete
 12. மூவ் //கர்ர்ர்ர்ர்ர்
  மூவ் தடவினா லவ் காலிதான் ஹாஹாஆ

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இல்ல லவ் காலியானபின்னர்தான் மூவ் தடவிக்கொண்டே மூவ் பண்ணட்டாம்ம்ம் அடுத்த லவ் க்கு:) ஹா ஹா ஹா:)[என் மனக்கண்ணில் நிறையப்பேர் வந்து போறாங்க:) வாணாம் ஜாமீஈஈஈ.. நான் வாயே திறக்க மாட்டேன்ன்ன்.. எனக்கு அட்டமத்துச் சனி நடக்குதாமெல்லோ:).. அம்மமா சொல்லிட்டா.. வாயைத் திறந்திடாதே என:).

   Delete
 13. //கவிதை ஆக்கம்:மகாகவிஞர், முத்தமிழ் வித்தகர்,
  தமிழ் முதுகலைப் பட்டம் பெற்ற .. கவிஞர் அதிரா
  ==============================இடைவேளை ஹா ஹா //

  ஹலோ நட்புக்களே சக பதிவர்களே நீங்க எல்லாருமே இதுக்கு சாட்சி எனக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வருகின்றன கால் கை அசையமுடியவில்லை voice typing மூலமாக எழுதுகிறேன் ..எனக்கு எதோ நடக்கிறது இந்த மேலே மேற்கோள் காட்டிய வரிகளே இப்போ நான் A அன்ட் E செல்ல காரண ......ப்ளீஸ் இந்த செய்தியை பரப்பவும்

  ReplyDelete
  Replies
  1. ஐயா சாமீ.. இம்முறை ஏமாத்தவே மாட்டேன்ன்.. வள்ளிக்கு வைர மூக்குத்தி கன்ஃபோம்ம்ம்:). இங்கு நடக்க இருக்கும் சூய்:)சயிட்டை:).. நிறுத்திடப்பா:)..

   [im]http://ponpoko8hrl.cocolog-nifty.com/blog/images/2013/06/19/6.jpg[/im]

   Delete
  2. இங்க பாருங்க பூசார் தலையை பானைக்குள்ள விட்டிருச்சு!! இனி பானை முகம்தானோ??!!

   கீதா

   Delete
 14. ஹாஹா :) ஹனியைத்தேடிப்போன மூன் :) நல்லாருக்கே ..நான் மகளுக்கு OMA நிலாவில் (பிரென்ச் FRY ..)pommes frites சுடறார்னு சொல்லி சாப்பாடு ஊட்டுவேன் ..

  ReplyDelete
  Replies
  1. ஓ அப்படியா?.. நான் நிலவைக் காட்டித் தீத்தியதாக இல்லை..

   Delete
 15. அவ்வ்வ் :)) ஹா ஹா சுற்றுலா தகவல் ஹா .. உண்மைல அந்த கணவன் ரொம்ப பாவம் எவ்ளோ அவதிப்பட்டாரோ

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. நான் இது, அப்போ பேஸ்புக்கில் போட்டனே அஞ்சு.. நீங்க கவனிக்கவில்லையோ.. மறந்திட்டீங்களோ தெரியல்ல...

   Delete
 16. //அப்பப்ப எனக்கு இப்பூடி விபரீத ஆசைகள்:) உதிப்பதுண்டு, மனதில் தோன்றியவுடன் கல்லெறி விழுந்தாலும் பறவாயில்லை எ//
  ஆஅங்கய்யங் ஹஆயான் :(((( ஹையோ ஜீசஸ் சேவ் மீ

  ReplyDelete
  Replies
  1. எதுக்கு இப்போ எரிசலேம் ல இருப்பவரைக் கூப்பிடுறீங்க?:) ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் அஞ்சு.

   Delete
 17. ஜெருசலம் கதை இப்ப எல்லாவழியுலும் சமூகதளங்களில் சுற்றி கடையில் இங்கேயும் கண்டேன்[[[

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வாங்கோ... யேஸ் அது நான் கிட்டத்தட்ட 2 வருசத்துக்கு முன்பு என நினைக்கிறேன்.. என் பேஸ் புக்கில் போட்டிருந்தேன்...

   Delete
 18. மூவ் இங்கு தேவையாக இருக்கு முழங்காலில் வலி[[ முழுநேரம் வேலையில் நிற்பதால் அச்சோ அது சினேஹாவுக்கு முன்னர் தட ஆசைப்பட்ட கிரீம் என்று கவிதை எழுதலாம் இனி [[[

  ReplyDelete
  Replies
  1. என்னாதூஊஊஊஊ ஸ்னேகாவுக்கு மூவ் தடவப்போறீங்களோ?:) ஹையோ முருகா.. நேசனுக்கு கைக்குச் சங்கிலி வரப்போகுதே... நேசன் ஓடிப்போய் லாசபேல் அம்மன் கோயில்ல பிரதட்டை பண்ணி:).. சொன்ன பாவத்தைப் போக்கிடுங்கோ:). ஹா ஹா ஹா...

   Delete
 19. நிலா என்றவுடன் நானும் நம் தோழி குழந்தை நிலா மீண்டும் வந்துவிட்டாவோ என்று நினைத்தேன்[[ ஆனாலும் அந்த நிலாவும் விரைவில் வரட்டும் கவிதை வித்தகி அதிராவுக்கு அடிகொடுத்து அந்த தேம்ஸில் தள்ளிவிட[[ஆவலுடன் அம்மவாசை[[

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேசன் நீங்களுமோ?:) என்னைத் தள்ளிவிடத் துடிக்கிறீங்க.. பிறகு உங்கள் கவிதையின் ரசிகையையில் ஒருவரை இழந்திடப்போறீங்க:).. ஹா ஹா ஹா..

   யேஸ் ஹேமாவை எல்லோரும் தேடுறாங்க.. ஹேமா தலைமறைவு...
   மிக்க நன்றி நேசன்.. அடுத்ததடவையும் இதேபோல ஓடியாந்து வோட்டுப்ம் போட்டிடுங்கோ:)..

   Delete
 20. கண்ணாடியைக் கழற்றும் பூனை சூப்பர்!

  நிலா என்றதும் எனக்கு ஸ்விஸ் ஹேமா (பதிவர்) நினைவுக்கு வந்து விட்டார்!

  சுற்றுலாத் தகவல் பழசுதான். ஆனாலும் உங்களுக்காக புன்னகைத்து வைத்தேன்.

  "கவிதை"யை ரசித்தேன்.

  ரகசிய வாழ்க்கை சதி லீலாவதி படத்தில் கமல் பேசும் வசனத்தை நினைவு படுத்தியது.

  காதல் தோல்விக்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்வதை வன்மையாகக்.....

  தம வா போ...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
   ஓ உங்களுக்கும் எங்கட ஹேமாவைத் தெரியுமோ?...

   அடு ஜெருசலேம் பழசுதான்.. இருப்பினும் அஞ்சுவைப்போல:) முன்பு நான் பேஸ்புக்கில் போட்டதை மறந்தோரும் இருக்கலாம்... ரசிப்பார்கள் எனப் போட்டேன்.. ஹா ஹா ஹா படிச்சதும் கிழிச்சிடுங்கோ ஸ்ரீராம்:).. சும்மாவே கலைக்கிறா அஞ்சு என்னை.. இதில வேறு அயகான அஞ்சு எனவும் சேர்த்துச் சொல்லட்டாம்ம்ம்ம்ம்:) எங்கினபோய் முடியுமோ ஜாமீஈஈஈஈ:).

   ///"கவிதை"யை ரசித்தேன்.///
   ஹா ஹா ஹா இல்ல நீங்க இன்வேட்டட் கொமா போட்டதே ஏதோ சூட்சுமம் வச்சுத்தான் சொல்லியிருக்கிறீங்க:) இப்போ எனக்கு உண்மை தெரிஞ்சாகோணும்:) இல்லை எனில் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிப்பேன்ன்ன்:)..

   ஓ சதிலீலாவதி.. படம்.. நான் பார்க்கவில்லை.. எனக்கு பெரிசா கமல் படம் பிடிப்பதில்லை... ஆசையா விரும்பி ரசிச்சு தியேட்டரில் பார்த்த படம்.. பாபநாசம்.

   இதையும் பார்த்திடுறேன் விரைவில்.

   Delete
  2. //காதல் தோல்விக்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்வதை வன்மையாகக்.....//
   ஹா ஹா ஹா.. இப்போ கொஞ்ச நாளாவே ஸ்ரீராம் க்கு.. வசனமெல்லாம் வந்து வாய் நுனியிலயே நிண்டிடுதே... முழுவதையும் சொல்றார் இல்லை கர்:) அஞ்சு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கோ :)..

   ஹா ஹா ஹா நா.. இந்த ஆட்டத்துக்கே வள்ள:).. அதை எழுதியிருப்பதும் ஒரு ஆண் தான்:).. மீ ஒரு அப்பாவி:) வெற்றிகரமாகக் களவாடி எடுத்து வந்து போட்டது மட்டும்தேன் என் வேலை:)..

   மிக்க மிக்க நன்றிகள். நான் தமிழ்மணத்தில் மகுடம் சூடிட்டேன்ன்ன்ன்ன்ன் தெரியுமோன்னோ?:)..

   Delete

  3. //மிக்க மிக்க நன்றிகள். நான் தமிழ்மணத்தில் மகுடம் சூடிட்டேன்ன்ன்ன்ன்ன் தெரியுமோன்னோ?:)..//

   இதில் என்ன ஆச்சர்யம்? சூடாவிட்டால்தான் ஆச்சர்யம்!

   Delete
  4. //ஓ உங்களுக்கும் எங்கட ஹேமாவைத் தெரியுமோ?...//

   என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? பிரபலப் பதிவர், சிறந்த கவிதாயினி.. இப்போது அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவர் கேட்டு அவர் தளத்தில்தான் முதலில் எனது "கவிதை" முயற்சி (என்டர் தட்டி, என்டர் தட்டி மடக்கி மடக்கிப் போட்டு எழுதும் வசன வரிகள்தான்!!) தொடங்கியது!

   Delete
  5. ///இதில் என்ன ஆச்சர்யம்? சூடாவிட்டால்தான் ஆச்சர்யம்!///
   ஆவ்வ்வ்வ்வ் என்ன இது பொசுக்கென இப்பூடிச் சொல்லிட்டீங்க:).. நீங்க ரெம்ம்ம்ம்ம ந்ல்லவர் எனச் சொல்லிட்டால்ல் அதை மெயிண்டைன் பண்ண என்ன பாடெல்லாம் படவேண்டி இருக்குமோ:).. அதைவிட ஓவராப் பாடுபடவேண்டியிருக்கே இதுக்காக:)...

   ஹா ஹா ஹா நெடுகவும் காத்து ஒரு பக்கமே அடிக்காது:)..

   Delete
  6. ///அவர் கேட்டு அவர் தளத்தில்தான் முதலில் எனது "கவிதை" முயற்சி (என்டர் தட்டி, என்டர் தட்டி மடக்கி மடக்கிப் போட்டு எழுதும் வசன வரிகள்தான்!!) தொடங்கியது!///

   ஹா ஹா ஹா ஸ்ரீராம் நீங்க ரெம்ம்ம்ம்ம்ப நல்லவர்.. இப்பூடிப் பட்டென உண்மையைப் பப்புளிக்கில் சொல்லிட்டீங்களே?:))).. நான் சத்தியமா நினைத்தது + அறிஞ்சது.... உங்கள் அப்பா வழியில் வந்த,... நீங்க நல்ல ஒரு கவிஞர் என்றெல்லோ:) ஹா ஹா ஹா .

   இருந்தாலும் நீங்க நல்லாவே கவிதை எழுதுறீங்க.

   Delete
  7. தமிழ்மணத்தில் மகுடம் சூட்டினைய்ங்களா....ஓ சூப்பர்...

   எங்களுக்கெல்லாம் ஓட்டு விழுவதெ அபூர்வம்...ஹஹஹஹ்

   கீதா

   Delete
  8. யேஸ்ஸ் கீதா இது 2ம் தடவையாக நடந்த அதிசயம்:)

   Delete
 21. ஹாஹா.... கவிதையையும் விடவில்லையா. :) நல்லா தான் இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. ஹா ஹா ஹா விரைவில சகலகலாவல்லபை:) பட்டம் பெறலாம் என்றுதான் இந்தப்பாடு படுறேன்ன்:)..

   அச்சச்சோ அபச்சாரம் அபச்சாரம்.. இது எனக்குச் சொன்னேன்.. வோட் போட்டமைக்கும் மிக்க நன்றி.

   மிக்க நன்றி வெங்கட் வரவுக்கு.

   Delete
 22. கவிதைகள் அனைத்தும் அருமை. சுற்றுலாத் தகவல் அருமை நன்றி

  ReplyDelete
 23. ஆகா
  ரசித்தேன்
  ரசித்தேன்

  ReplyDelete
 24. இந்த கவிதையை இந்தியாவில் உள்ள மத்திய அரசு பார்த்து இருந்தால் வைரமுத்துவிற்கு அவார்ட் கொடுப்பதற்கு பதிலாக உங்களுக்கு தந்திருப்பார்கள் டூ லேட்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மீள் வருகைக்கு நன்றி ட்றுத்.. என்னாது 2 லேட்டா?:) அப்போ இனி எனக்குக் கிடைக்காதோ?:)... அடுத்த அவோட் எப்ப்போ எனக் கொஞ்சம் விசாரிச்சுச் சொல்லுங்கோ ட்றுத்... இன்னொரு கவிதை டக்குப்பக்கென ரெடியாக்கிடுறேன்ன்:). ஹா ஹா ஹா.. கடவுளே அஞ்சுவுக்குச் சொல்லிடாதீங்க:) சூனியம் வச்சிடுவா கர்ர்ர்:).. அவோக்குப் பொறாமை.. நான் நல்லாக் கவிதை எழுதுறேன் எண்டு:).. ஹா ஹா ஹா முடியல்ல சாமீஈஈஈஈ:).

   Delete
 25. அழுமுஞ்சி அதிராவிற்காக பத்தாவது வோட்டாக என் வோட்டை போட்டுவிட்டேன் அட இப்பவாது அழுகையை நிப்பாட்டிவிட்டு தேம்ஸ் நதியில் குதிக்கலாமே?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நீங்களும் மனம் வச்சுப் போட்டமையாலேயே ஒரு வாக்கு கிடைத்து நான் மகுடம் சூடிட்டேன்ன்:) அதுக்கு மிக்க நன்றி ட்றுத்.. உங்கள் சேவை என் புளொக்குக்கு எப்பவும் தேவை:) சரி சரி முறைக்காதீங்கோ:)..

   மகுடம் சூட்டியபின் ஆரும் தேம்ஸ்ல குதிப்பினமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கொண்டாட வேண்டாம்ம்?:) எல்லோருக்கும் ஆசைதான்.. தேம்ஸ்ல குதிக்க விட்டு வேடிக்கை பார்க்க:) அது இந்த ஜென்மத்தில நடக்காதக்கும்.. ஹையோ இது என் மைண்ட் வொயிஸ்:) கொஞ்சம் சத்தமா பேசிட்டமோ?:)..

   Delete
 26. Replies
  1. வாங்கோ வாங்கோ... பைபாஸ் கவிதையோடு ஹொஸ்பிட்டல் கவிதை நின்றுவிட்டதே:) என்னாச்சு பிறகு?:) இப்போ பறவையைப் பார்க்கிறீங்கபோல றெஸ்ட்டில் இருந்து:).

   மிக்க மிக்க நன்றி.

   Delete
 27. தேம்ஸ் ரிவரு எங்கப்பா போச்சுது.??? பயப்படாண்டா... அதிராவைத் தள்ளிவிட இல்ல...(அவங்களே குதிச்சுபோடுவாங்க)... நானு போயி குதிச்சுபோடலாம்னு எருக்கேனுங்க...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஆல் இஸ் வெல்... நீங்க ஆர் எனச் சொலவே இல்லையே?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

   என்னாது தேம்ஸ்ல நீங்க குதிக்கப்போறீங்களா?:)... எதுக்கு? ஏதும் அப்படி இருக்குமோ?:) சே சே அப்படி இருக்காது:)..
   எதுக்கும் இன்னொருக்கால் ஓசிச்சுப்போட்டுக் குதிங்கோ:).. ஹா ஹா ஹா வரவுக்கு மிக்க நன்றி.. கையில மையைக் காணமே:).

   Delete
 28. கல்லு மட்டுமா?! உருட்டுக்கட்டை, பூரிக்கட்டை, உலக்கைலாம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ராஜி வாங்கோ... ஹா ஹா ஹா எதுக்கு இவ்ளோ எல்லாம்ம்ம்:).. ஊதி விட்டாலே உருண்டுவிழும் சைஸ் ல நான் இருக்கிறேன்ன்:) எனக்குப் போய் இவ்ளோ ஆயுதம் எடுக்கலாமோ?:) கீழே போட்டிட்டு முதல்ல கையைக் காட்டுங்கோ.. கர்ர்ர்ர் மை இல்லே?:).. நான் சொன்னனே பெண்களுக்குப் பெண்களேதான் எடிரி:).. ஹா ஹாஅ ஹா ஹையோ என் வாய் சொல்லுக் கேட்காதாமே...
   மிக்க நன்றி ரா.. ஜி... என்பக்கத்தில் எத்தனை ஜி இப்போ:).

   Delete
 29. எனக்குத் தெரிந்து பால் சாதம், மோர் சாதம் ஊட்டிவிடத்தான் 'நிலாவைக் காட்டுவார்கள். அதனை 'சிக்கன் பாஸ்தாவுக்கும் உபயோகப்படுத்தி கலாச்சாரத்தை மாற்றிய அதிராவைக் கண்டிக்கவேண்டியதுதான்.

  ஹனிமூன் ஸ்காட்லாந்துக்குப்போய், கனகாலம் (40+ வருடங்கள்) ஆயிடுச்சு போலிருக்கே.

  'சாப்பிடப்பன்' - எனக்கு சில வருடங்களுக்கு முன் பார்த்த (இல்லைனா நான் 1930ல் பிறந்தவன் என்று பின்னூட்டம் வரும்) சபாபதி படம் ஞாபகத்துக்கு வந்தது. அதில்தான் இந்தமாதிரி சபாபதியின் தமிழாசிரியர் சபாபதியிடம் பேசுவார்.

  'மகாகவி', 'கவிஞர்', 'கவிப்பேரரசு' இதெல்லாம் குறிப்பிட்ட கவிஞர்களையல்லவா ஞாபகப்படுத்தும் (பாரதி, கண்ணதாசன், வையிரமுத்து). நீங்கள் புதிய டைட்டில் வைத்துக்கொள்ளக்கூடாதா? சரி.. நானே கொடுத்துவிடுகிறேன். கவிப்பேரரசி ன்னு வச்சிக்குங்க. காசா பணமா. (த ம 11)

  ReplyDelete
  Replies
  1. //கவிப்பேரரசி ன்னு வச்சிக்குங்க//


   இது கொஞ்சம் அதிகமா படல்லியா உங்களுக்கு

   குழந்தை நிலா ஹேமா எங்கிருந்தாலும் சபைக்கு வரவும்

   Delete
  2. @angel ஓ மை கடவுளேஏஏஏ கடவுள் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டாராம்ம்ம்ம் அந்தக் கதையாவெல்லோ இருக்குதூஉ... நான் சொன்னனே எனக்கு எடிரி;) வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்ன்:).

   Delete
  3. வாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ..
   // அதனை 'சிக்கன் பாஸ்தாவுக்கும் உபயோகப்படுத்தி கலாச்சாரத்தை மாற்றிய அதிராவைக் கண்டிக்கவேண்டியதுதான்.//
   ஹா ஹா ஹா மீ இதிலெல்லாம் ரொம்ப உசாராக்கும்:).. அதனாலதான் அவ இங்கிலீசுப் பாட்டி:) எனப் போட்டிட்டனே...:)..

   இது சுவீட் 16 அதிராக் காலம் ஆக்கும்:).. இப்போ எந்தப் பிள்ளை சாப்பிடுது பால்சோறு ஹா ஹா ஹா:)..

   ///ஹனிமூன் ஸ்காட்லாந்துக்குப்போய், கனகாலம் (40+ வருடங்கள்) ஆயிடுச்சு போலிருக்கே//
   ஹா ஹா ஹா கோபு அண்ணன் மாதிரி நீங்களும் ஆரம்பிச்சிருக்கிறீங்கபோல ஆராச்சிபண்ணிக் கண்டு பிடிச்சிடலாம் என:)... ஹா ஹா ஹா மீக்கு சுவீட் 16 இப்போ நடக்குது:).. கிட்டடியிலதானே கேக் கட் பண்ணினேன்:).

   Delete
  4. ///'சாப்பிடப்பன்' - எனக்கு சில வருடங்களுக்கு முன் பார்த்த (இல்லைனா நான் 1930ல் பிறந்தவன் என்று பின்னூட்டம் வரும்) ///
   ஹாஹ்ஹ்ஹ்ஹ் ஹா ஹாஅ ஹா இப்போ என் பக்கம் வருவோர் எல்லோரும் ரொம்பவும் அலேட்டாவே இருக்கினம்:).. அதிரா எண்டாலே நடுங்குதுபோல ஹா ஹா ஹா:)..

   இந்த அப்பன் எனும் சொல்.. பொதுவாக இலங்கையில் ஆம்பிளைப் பிள்ளைகளை அப்படி அழைப்போம்... இப்பவும் எங்கள் வீட்டில் இப்படித்தான். வாங்கோ அப்பன்.. என்னப்பன்... வேண்டாமப்பன்... இப்படி.

   முன்பு நான் சின்னனாக இருந்தபோது ஒரு மாமா மாமி என அழைப்போர்(நண்பர்கள் குடும்பம்) அருகில் இருந்தார்கள்.. இப்பவும் அவர்களும் பிள்ளைகளும் எல்லோரும் சகோதரங்கள் போல பழகுவோம்.. எல்லோரும் கனடாவில் இருக்கினம்.

   அந்த மாமி மட்டும் அந்த மாமாவை.. இஞ்சரப்பன்.. என்னப்பன் என அழைப்பா. ஏனையோர் எங்கள் அம்மா உட்பட.. இஞ்சருங்கோ.., கேட்டியளே.. இப்படி அழைப்பினம்.. இப்போ அதுவும் மருவி... என்னப்பா.. வாங்கோப்பா.. இருங்கோப்பா.. என வந்து .. நாங்கள் எல்லாம் பெயர் சொல்லித்தான் அழைப்போம்.. இடைக்கிடை அப்பாவும் போடுவோம்:)... ஹா ஹா ஹா..

   /// நீங்கள் புதிய டைட்டில் வைத்துக்கொள்ளக்கூடாதா? சரி.. நானே கொடுத்துவிடுகிறேன். கவிப்பேரரசி ன்னு வச்சிக்குங்க. காசா பணமா. (த ம 11)///
   ஹா ஹா ஹா இன்னொரு தபா:) சத்தமாச் சொல்லுங்கோ..:) ஹையோ ஊரெல்லாம் புகைப் புகையாப் போகப்போகுதே:).. ஹா ஹா ஹா மியாவும் நன்றி:)..

   அதானே காசா பணமா.. எட்டி ஒரு தட்டுத் தட்டக்கூட பெரிய நடப்புக் காட்டீனம்:) இங்கு வந்த எல்லோரும் போட்டிருந்தால் இப்போ அதிராவுக்கு டபிள் மகுடம் கிடைச்சிருக்கும்:).. சே..சே.. எனக்கு ஓவர் ஆசை எப்பவும் இல்லை... சத்தியமா.. இருப்பதை விட்டிட்டுப் பறப்பதுக்கு என்றைக்கும் ஆசைப்பட்டதில்லை.. படவும் மாட்டேன்ன்.. மியாவும் நன்றி நெல்லைத்தமிழன்:).

   Delete
 30. Moov - ரசித்தேன். சுட்டிப்பையன் சொன்னதில் ஒரு மாற்றம் வேண்டும். 'பெண்கள் அதிகமாய் பணத்தைக் காதலிக்கிறார்கள்' ஆண்கள் அதிகபேரை காதலிக்கிறார்கள். எல்லோரிடமும் அன்பு செலுத்துகிற ஆண்களைக் குறைசொல்லலாமா?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மூவ் க்கு நன்றி.

   ///எல்லோரிடமும் அன்பு செலுத்துகிற ஆண்களைக் குறைசொல்லலாமா?///
   ஹா ஹா ஹா என்னா ஒரு கண்டுபிடிப்பூஊஊஊஊ:) கொஞ்சம் உங்கட ஹஸ்பண்டின் ஃபோன் நம்பரைத் தர முடியுமோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:) பயப்பூடாதீங்கோ.. உங்களிடம் இருக்கும் இந்த நல்ல எண்ணத்தை:) உங்கட ஹஸ்பண்டும் அறியட்டுமே:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி நெ.த.

   Delete
 31. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் நான் மகுடம் சூடிட்டேன்ன்ன்ன்ன்ன் மகுடம் சூடிட்டேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன் தேம்ஸ் ஸ்ஸ்ஸ் எங்கேஏஏஏஏஏ... ஹையோ நானே குதிச்சிடுவேன் போல இருக்கெ வைரவாஆஆஆஆ....
  https://www.youtube.com/watch?v=3dT99bwT8io&feature=share

  ReplyDelete
 32. Moov தத்துவம் படிச்சு, சிரிச்சதுல வயிறு வலிச்சு, இப்ப எனக்கு Moov தேவைப்படுது ��

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெண்ணிறப்புரவி வாங்கோ... வரவர என்பக்கம் வருவோரின் பெயரைப் பார்க்கவே எனக்கு நடுங்குது...:).. சரி பறவாயில்லை:)..

   அது சிரிச்சதால இல்ல:).. புரவி எங்காவது மேடுபள்ளத்தில் விழுந்து எழும்பியிருக்கும் அதனாலதான் உங்களுக்கு மூவ் தேவைப்படுதுபோல:) ஹா ஹா ஹா..

   Delete
  2. என்பக்கம் வருவோரின் பெயரைப் பார்க்கவே எனக்கு நடுங்குது...:) //

   அடடா... என் பெயரில் அப்படி என்ன இருக்கிறது? நான் வேண்டுமானால் வெண்ணிற புரவிக்குப் பதிலாக ‘Audi A8 இல் வந்தவன்’ என்று மாத்தவா?

   Delete
  3. சரி சரி விடுங்கோ.. ஒண்ணும் மாத்திட வேண்டாம், அது அவரவர் விருப்பம்.

   Delete
 33. ஆமா கவிதை எழுதினேன்னு சொன்னீங்களே.. அது எங்கே..? என் கண்ணுக்கு எதுவும் தெரியல ����

  ReplyDelete
  Replies
  1. என்னது கவிதையைக் காணமா?:) கர்ர்ர்ர்:) புதுசா வந்தவர்பொல இருக்கு ஆனா வந்தவேகத்தில ஏதோ பல வருசங்கள் பழகியதுபோல பேசுவதைப் பார்க்க நேக்குப் பயம்மாக் கிடக்கு.. மிக்க நன்றி வெ.புரவி.

   Delete
  2. பல வருசங்கள் பழகியதுபோல பேசுவதைப் பார்க்க நேக்குப் பயம்மாக் கிடக்கு..//

   அது நான் கொஞ்சம் கலகல டைப்.. பயப்பிடமால் பேசிவிடுவேன்.. அதான்..

   ஏதும் தவறுதலாக எழுதி இருந்தால் மறந்து மன்னித்து விடுங்கள் :) :)

   Delete
  3. இதிலென்ன தவறிருக்கு.. மீள் வருகைக்கு மிக்க நன்றி.

   Delete
 34. தேம்சுலே பூனை விழுந்தா காப்பாற்ற ஆள் ஓடிவரும்(அஞ்சு பிளாக்கிலே பார்த்து இருப்பீங்களே),பூஜார் விழுந்தால் வேடிக்கை பார்க்க கூட்டம் சேரும் ,ஜாக்கிரதையா இருங்கோ :)

  ReplyDelete
  Replies
  1. இந்த அதிரா பூஸார் விழுந்தா பார்பேக்யூ பார்ட்டி தேம்ஸ் கரையோரம் எல்லாருக்கும் நான் ஸ்பான்சர் செய்வேன் :))

   Delete
  2. Bagawanjee KAFriday, May 05, 2017 10:13:00 am
   ,பூஜார் விழுந்தால் வேடிக்கை பார்க்க கூட்டம் சேரும் ,ஜாக்கிரதையா இருங்கோ :)////
   ஹா ஹா ஹா தேம்ஸ்ல குதிப்பேன் எண்டதும் எல்லோரும் மீள்வருகை தந்து உற்சாகப்படுத்தீனமே முருகாஆஆஆஆஆஆ:)..

   ஹா ஹா ஹா பகவான் ஜீ... எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்வது என்னவெனில்:).. எங்காவது தேம்ஸ்ல குதித்ததாகவோ அல்லது தவறி விழுந்ததாகவோ:) அல்லது ஆரும் எனமீஸ்(நான் அஞ்சுவைச் சொல்லல்லே:)) தள்ளி விழுத்தியதாவோ பிபிசில பெரீய எழுத்தில நியூஸ் வந்தால்ல்ல்.. முதேல் வேலையா வீடியோவும் கையுமா ஓடிவருவதை விட்டுப்போட்டு.. பயஃபிரிகேட்டருக்கு அடிக்கோணும் சொல்லிப்போட்டன்:).. 5 செக்கன் கூட என்னால தண்ணிக்குள் மூச்சடக்க முடியாதாக்கும்:).. ஹையோ ஆண்டவா இனி தேம்ஸ்பக்கம் போகும்போது... நிலத்தில ஒட்டுற மாதிரி ஏதும் சூஸ்தான் செய்து போட்டுப் போகோணும்போல:) இருக்கே:)..

   இருப்பினும் ஜாக்ர்தையா இருங்கோ என.. அக்கறையாச் சொன்ன பகவான் ஜீக்கு சுடசுட ஒரு கப் பன்னீர் ஜோடா குடுங்கோ பிளீஸ்ஸ்ச்:)... ஹா ஹா ஹா மிக்க நன்றி ப.ஜீ:).

   Delete
  3. ///AngelinFriday, May 05, 2017 10:41:00 am
   இந்த அதிரா பூஸார் விழுந்தா பார்பேக்யூ பார்ட்டி தேம்ஸ் கரையோரம் எல்லாருக்கும் நான் ஸ்பான்சர் செய்வேன் :))//
   ஹா ஹா ஹா பாருங்கோவன் நான் சொன்னனே:).. பகவான் ஜீ இன் கொமெண்ட் பார்த்ததும்.. பின்னங்கால் பிடரியில... அடிக்க அடிக்க அவ்ளோ ஸ்பீட்டா ஓடிவந்திருக்கிறா தகவல் சொல்ல:)..

   ஹலோ கோல்ட்டூ ஃபிஸ்ஸூ... வரவர இங்கின ச்வெயில் அதிகமாகுது:) போகிறபோக்கைப் பார்த்தால் விரைவில தேம்ஸ் வத்தினாலும் வத்தும்:).. அப்போ பாருங்கோ.. அதிரா ஓடிப்போய் ஸ்பின் பண்ணி ஜம்ப் பண்ணிக் காட்டுவன் தேம்ஸ்ல...

   ஊசிக்குறிப்பு:
   அந்த பாபகியூல எனக்கும் தருவீங்கதானே?:).. ஹையோ நான் இப்போ சைவம்..:) சைவ பாபகியூவாப் போடுங்கோ:).. ஹா ஹா ஹா:).

   Delete
  4. தேம்சில் அதிரா குதித்தால்....குதித்தால்.... த்ண்ணீர் மேலெழும்புமல்லோ...ஏஞ்சல் அப்போ தேம்ஸ் நதிக்கரையோரம் வாக்கிங்க் போகாதீங்க சுனாமி போல வந்து உங்களையும் இழுத்துரும் தண்ணி...ஹிஹிஹி

   கீதா

   Delete
  5. பகவான் ஜி அப்படிப் போடுங்க!!! அதானே!!! அதிரா நோட் திஸ்!!!

   கீதா

   Delete
  6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் இப்போ ரொம்ப வயக்கெட்டிட்டேன் கீதா:).. துரும்பா இளைச்சிட்டேன்:)

   Delete
 35. இப்படி ஒரேமூச்சில் கவிதைகள் எழுதினால் எப்படி இரண்டு மூன்றுபதிவாவத்து தேற்ற வேண்டாமா படித்ததில் ரசித்ததுஊசி இணைப்பு
  ரகசியம் என்பது... அடுத்தவர்களால், நமக்குச் சொல்லப்படுவதல்ல ரகசியம்!!!.. அடுத்தவர் பற்றிய, நமக்குத் தெரிந்த உண்மையே ரகசியம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஐயா வாங்கோ... ஆஹா என் ரகசியத்தை ரசித்தமைக்கு மிக்க நன்றி. இம்முறை நீங்கதான் தனியே ஹார்ட் பெட்டியில் ஏறிட்டீங்க:).. பயந்திடாதீங்க.. பயம் வந்தால் செயினைப் பிடிச்சு இழுங்கோ ரெயின் நிக்கும்... ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

   Delete
 36. அதிரா கவிதாயினி அவதாரம் எடுத்துவிட்டீர்கள் போலருக்கே!! சூப்பர்! முயற்சிக்கு வாழ்த்துகள்!!!

  ஜோக் ஏற்கனவே வாசித்தது தான் இருந்தாலும் சிரித்தோம்.

  ரகசியமாய் ....நல்லாருந்துச்சு

  அது சரி காதல் வலி நா மூவ் தேய்க்க மண்டைய பொளக்கனூமே மனசு மூளைக்குள்ளதானே இருக்கு!!! ஹஹஹ்ஹ்..ஹிஹிஹி..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ... தாமதமாக வந்தாலும் ஹார்ட் பெட்டியைப் பிடிச்சிட்டீங்க.. ஜி எம் பி ஐயா தனியா இருக்கிறாரே எனக் கவலைப்பட்டேன்:) நல்லவேளை நீங்களும் ஏறிட்டீங்க உதவிக்கு:).

   நான் எப்பவோ கவிஞை:) ஆகிட்டேனாக்கும்:).. ஹா ஹா ஹா:).. நோஓஓஒ மனசி இருப்பது “கிட்னியில்”:).

   Delete
 37. ஊசிக் குறிப்பு சூப்பர்!!

  ReplyDelete
 38. ஆண்கள் மட்டுமா ஏமாற்றுகிறார்கள்??!! பெண்களும் காதலில் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்களல்லோ?!! ஐயோ அதிரா கேக்குறாங்க நீங்களும் பெண்ணாக இருந்து கொண்டு இப்படிக் கதைக்கலாமானு!!! அடிக்க வராங்கோ....ஏஞ்சல் ப்ளீஸ் ஹெல்ப் மீ..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இல்ல கீதா ஏமாற்றுவதும் ஏமாறுவதும் சரி சமனாகவே நடக்குது.. இதில் நம்பால் எதிர்ப்பால் என பிரித்துக் கூற முடியாது... ஆனா அது ஜோக் படிக்க நல்லாயிருக்கெல்லோ:).. ஆனாலும் உண்மையில் அதிகமாக அன்பு செலுத்துவோர் பெண்களாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்:)..

   Delete
 39. கண்ணாடி மாட்டும் பூனை ரொம்ப அழகு!!! ஐயோ அப்படியே தூக்கிக் கொஞ்சனும் போல இருக்கு....ஐயோ அதிரா பூசாரை அல்ல...அதிரா புசாரைக் கொஞ்சலாம் ஆனால் தூக்கி எல்லாம் என்னால கொஞ்ச முடியாதப்பா ஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. கீதா மெதுவாப் பேசுங்கோ.. தேம்ஸ் கரை எல்லாம் புகையப்போகுதே:).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி கீதா.

   மிக்க நன்றி துளசி அண்ணன்.

   இன்னொரு முக்கிய விடயம்... கீதாவுக்காகவே இந்த தமிழ்மண லிங் இணைப்பைக் கண்டு பிடிச்சேன்ன்.. ஏனெனில் நீங்கதான் அதிகமா வோட் பொக்ஸ் தெரியுதில்ல என எல்லா இடமும் சொல்லுவீங்க.. அதனால லிங் போட்டபின்பும் வோட் போடாமல் போகலாமோ?:)).. சரி சரி.. :).. இனியும் வோட் போடாவிட்டால்ல்ல்ல்ல்ல்ல்ல்.......... ஒண்ணும் பண்ண மாட்டேன் எனச் சொல்ல வந்தேன்ன்:). ஹா ஹா ஹா.

   Delete
 40. கவிதைகள் - கலக்குறீங்கள். :-)

  ReplyDelete
 41. சுற்றுலா தகவல் சிரித்தேன். அதிராகவிஞ்ர் கவிதை ரசித்தேன்.
  பெட்டி செய்தி அருமை.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.