யார் தப்பு??
சத்தியமாக என் “தப்பு” இல்லிங்கோ..., நான் ஒரு அப்பாஆஆஆஆவி...:)
பாடசாலை செல்லும்போது
உன்னை - உன்
கைபற்றி கவனமாக
அழைத்துச் செல்வேன்!!
பாதி வழியிலே
கால் வலிக்கிறதென்பாய்
என் முதுகில் - உன்னை
உப்பு மூட்டையாகச்
சுமந்தே செல்வேன்!!
நாவற்பழம் கேட்பாய்
என் தோழில்
உனைத் தாங்கி
பழம் பறிக்க வைப்பேன்
எனக்கும் தந்து
நீயும் உண்பாய்!!
எனக்கு
பல்கலைக்கழக
அனுமதி கிடைத்தது
கேட்டு - அந்த
அறியாத வயதிலும்
அனைவரைக் காட்டிலும்
அதிகம்
ஆனந்தப்பட்டவள் நீ!!
அந் நாளில், உன் அம்மா
உனது கையை, எனது கையில்
ஒப்படைத்து - கவனம்
என்று கூறி பாடசாலை
அனுப்பி வைப்பார்!!
உனக்கு வேலியாக
இருந்த எனக்கு
இன்று - வேலி
அமைத்துவிட்டனர்
உன் பெற்றோர்!!
நீ என்னுடன்
இருந்தபோது
நான் எதுவுமே
எண்ணியதில்லை
ஆனால் - இன்று
என்மனம் தவியாய்த்
தவிக்கிறது
உனைக் காண!!
நீ வயதிற்கு வந்தது
உன் தப்பா - இல்லை
கடவுளின் தப்பா?
தவிப்புடன் நான்!!
நம்பமாட்டீங்களோ? சாமியைத் தொட்டுச் சொல்கிறேன்....
இது என் கிட்னியிலிருந்து, உருவாகிய கவிதை.....
பூ((பின்)) இணைப்பு:
நான் வளர்க்கும் செவ்வந்திப் பூஊஊஊஊஊ...
|
Tweet |
|
|||
ஐ வட எனக்கே எனக்குதான் :)))
ReplyDeleteஆகா சட்னியும் எனக்குதான் :)))
ReplyDeleteபி.கு: ஆயாவை யாருக்கு வேணும்னாலும் கொடுங்கோ :)))
ஆ.... ஹைஷ் அண்ணன்.... என்னா ஸ்பீட்டு???? வடை இருக்கட்டும்... முதலில் கவிதையைப் படிங்கோஓஓஓஓஓ.... படித்தால்தான் வடை:)
ReplyDeleteஆகா பூஸூ கழுத்திலே, அப்பாவி தங்கமணியை கட்டியாச்சு :))))))
ReplyDeleteஇனி மணி அடிச்சுக்கிட்டேதான் வரும் :)
பி.கு: ஆயாவை யாருக்கு வேணும்னாலும் கொடுங்கோ :))) /// ஹா..ஹா....ஹா... ஹைஷ் அண்ணன்.... பழையப்டி இப்போ ஆரும் ஆயாவைக் கேட்பதில்லை, ஆருக்கும் வாணாமாம்.... ஆயாவும் எப்பவுமே இருமியபடி சாக்குக்கட்டில விட்டு இறங்குவதாய் இல்லை:)
ReplyDeleteகவிதையும் சூப்பரா இருக்கு ஏதோ சாமியை தொட்டு என சொல்றீங்களே, எந்த சாமி ???? :)
ReplyDeleteஹைஷ்126 said...
ReplyDeleteஆகா பூஸூ கழுத்திலே, அப்பாவி தங்கமணியை கட்டியாச்சு :))))))
இனி மணி அடிச்சுக்கிட்டேதான் வரும் :)// சிரித்ததில புரக்கேறிவிட்டதெனக்கு..... அது தங்கம் இல்லை:).
கவிதையும் சூப்பரா இருக்கு ஏதோ சாமியை தொட்டு என சொல்றீங்களே, எந்த சாமி ???? :)/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். வடிவாப்பாருங்கோ... அது மதுரை மீனாட்ஷி அம்மன்.
ReplyDeleteஉடன் பின்னூட்டத்துக்கும், சிரிக்க வைத்தமைக்கும், ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்.
http://www.youtube.com/watch?v=T6q3mkWig7k
ReplyDeleteபி.கு: மணிப்பாட்டு :)
பூசாரின் கிட்னியில் கவிதையெல்லாம் உதிக்கிறதே :).
ReplyDeleteநல்லாயிருக்கு அதீஸ். எனக்கும் ஆயா வேணாம்
சத்தியமா என்னோட தப்பும் இல்லீங்கோ. ஐ ஆம் பாவம்
ReplyDeleteஅதீஸ்! கவித கவித நல்லா எழுதறீங்க.... பை த வே.. கிட்னிக்கு ஓவர் டைம் வேணுமாம்... இவ்வளவு யோசிக்க வைக்கறதுக்கு....
ReplyDeleteஅப்பாடா.. குழல் புட்டு எனக்கு இல்லை.. இன்னும் வருவாங்களே...
மணிப்பாட்டு சூப்பர் ஹைஷ் அண்ணன், ....தங்கம், வெள்ளி, வைரம் எல்லாமே இருக்கூஊஊஊ மிக்க நன்றி.
ReplyDeleteசாமியைத்தொட்டு சத்தியம் பண்ணுகின்றார்ப்போல் தெரியலியே??சாமந்திப்பூ அழகோ அழகு..ஐ..இப்ப கவிதைகூட நல்ல வருதே அதீஸுக்கு..
ReplyDeleteசாமந்திப்பூ அழகா,கவிதை அழகா,அதீஸ் கவிதையில் ஒரு உண்மையை உரக்கச்சொல்லி அசத்திட்டீங்க,தீடீரென்று பழக்கத்தை துண்டிப்பது தவறு என்பதை தான்.
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteபூசாரின் கிட்னியில் கவிதையெல்லாம் உதிக்கிறதே :).///
ReplyDeleteகவிசிவா... போகப் போக இன்னும் என்னவோ எல்லாம் உதிக்கும்... எதுக்கும் தயாரா இருங்கோ...
எதுக்கு ஆயாவைக் கண்டாலே நடுங்கிறீங்க? எல்லோரும்?, பாவம் அவவுக்கு பொக்கை வாய் வேறு:) கடிக்கவெல்லாம் மாட்டா பயப்பூடாதீங்கோ:).
ஆ... உங்கட தப்பும் இல்லையோ?:) மீ எஸ்ஸ்ஸ்...
மிக்க நன்றி, என் கவி படிக்க வந்த கவிக்கு:).
//நீ வயதிற்கு வந்தது
ReplyDeleteஉன் தப்பா - இல்லை
கடவுளின் தப்பா?
தவிப்புடன் நான்!!//
மனதிலா ...
உடலிலா...
அறிவிலா..
தடுமாற்றத்துடன் நான்...
( ஆ..ஒரு வழியா எதிர் கவித போட்டாச்சு )
கவிதை சூப்பர் , பூக்களும் அருமை ..எதுக்கு டாலர் மேல சத்தியம் நாஅப்பாவிக்கு அப்பாவி சந்தேகமே படமாட்டோன்ன்ன்ன்ன்ன்.
ReplyDelete:-))
அதி நீங்க எழுதிய கவிதையா??? நம்பவே முடியல...நல்லா எழுதிருக்கிங்க..
ReplyDeleteஇலா வாங்கோ மிக்க நன்றி.
ReplyDeleteஅது ஒன்றுமில்லை இலா, கிட்னியை யூஸ் பண்ணாவிட்டால் கறள்:) பிடித்துவிடுமாம்.... அதனால்தான் இடைக்கிடை இப்பூடித் தூசு தட்டுவதுண்டு:).
குழல்புட்டெனச் சொல்லி என் நினைவைத் தூண்டி விட்டீங்கள். அன்று சொல்ல நினைத்து மறந்திட்டேன்.
எங்கள் பிள்ளைகளின், ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் மீற் வந்ததெனச் சொன்னேனே. மூத்தவரின் வகுப்புக்கு, மூன்றுவித ஓட்டப்போட்டி நடந்தது. அதில் 1வது, 2வதாக வருவோருக்கு மட்டும் ரீ.ஷேட்டில் ஸ்ரிக்கர் ஒட்டுவார்கள். மகனோடு வகுப்பில் படிக்கும் இங்கத்தைய ஒருவர், சரியான குண்டு, வகுப்பிலே அவர்தான் பெரிய ஆள், நல்ல பிள்ளை, எங்கள் வீட்டுக்கும் வந்து விளையாடிப் போவார், அவரால் ஓடவும் முடியாது, ஸ்போர்ட்ஸ், அத்லெட்ரிக்ஸ் எதுவுமே அவருக்கு பிடிக்காது.
அப்போ அன்று நடந்த ஓட்டங்களில் மூன்றிலும் அவர்தான் கடைசியாக, வேண்டா வெறுப்பாக ஓடி முடித்ததைப் பார்த்தோம். பின்பு பார்த்தேன், அவரின் ரீ.ஷேர்ட்டில் 3 ஸ்ரிக்கேர்ஸ் ஒட்டியிருப்பது தெரிந்தது. கேட்டேன், எப்பூடி அவருக்கு 3 ஸ்ரிக்கேர்ஸ் கிடைத்தது என, அதுக்கு மகன் சொன்னார்.... கடைசியாக வந்தமைக்காக “I tried my best” என ஸ்ரிக்கர் ஒட்டிவிட்டார்கள் என்று. எனக்கு உடனேயே, குழல்புட்டும் இலாவும்தான் நினைவுக்கு வந்து சிரித்துவிட்டேன். பார்த்தீங்களோ...
குழல்புட்டுக்கே... மரியாதைதான்:)... அதனால் யாரும் தயங்காமல் வாங்கோ... “I tried my best” ஸ்ரிக்கர் தருவேன்..
ஸாதிகா said...
ReplyDeleteசாமியைத்தொட்டு சத்தியம் பண்ணுகின்றார்ப்போல் தெரியலியே??// ஸாதிகா அக்கா நம்புங்கோ.. அது சத்தியம்தான் செய்கிறேன்:), வேணுமெண்டால் கற்பூரம் கொழுத்தட்டோ???:).
சாமந்திப்பூ அழகோ அழகு/// இதை நாங்கள் செவ்வந்திப்பூ என்றுதான் சொல்வோம், அப்போ சாமந்தியும் செவ்வந்தியும் ஒரே பூக்களோ?. எனக்கு, கேள்விப்பட்டிருக்கிறேன் சாமந்திப்பூ கண்டதில்லையே...
..ஐ..இப்ப கவிதைகூட நல்ல வருதே அதீஸுக்கு..//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பேபியாய் இருக்கும்போதே, நான் சொல்லச் சொல்ல அம்மா எழுதி வச்சவ... அப்போ தொடக்கம் கவிதை வடிப்பதுதான் என் தொழில்... இலங்கையில் வீரகேசரிக்கு எழுதிப்போட்டு, போஸ்ட் பண்ணிய நிமிடம் தொடங்கி, என் கவிதை வருதா வருதா எனப் பார்த்து நொந்து நூடில்ஸ்ஸ்ஸாகி..... எழுதுவதையே நிறுத்தி.. மீண்டும் எழுதி... இப்போதான் தெகிரியம் வந்திருக்கு.. வெளியிட,,, முறைக்காதீங்கோ... பொறுமையைக் கடைப்பிடியுங்கோ... ஏன் எண்டால் இன்னும் வருமெல்லோ???.
மிக்க நன்றி ஸாதிகா அக்கா..
ஆசியா நீங்களும் சாமந்திப்பூ என்கிறீங்களே... எனக்குத் தெரியாதூ.. அப்போ செவ்வந்தி என ஒரு பூ அங்கில்லையோ?.
ReplyDelete//கவிதையில் ஒரு உண்மையை உரக்கச்சொல்லி அசத்திட்டீங்க, தீடீரென்று பழக்கத்தை துண்டிப்பது தவறு என்பதை தான். // அது தவறோ சரியோ எனக்குத் தெரியாது, ஆனால் நிட்சயம் மனதைப் பாதிக்கும்தானே. மெதுமெதுவாக புத்திமதிகூறிக் குறைக்கலாமே. இன்னுமொன்று எல்லோரையுமே சந்தேகக் கண் கொண்டும் பார்க்கக்கூடாது.
நாங்கள் குழந்தையாக இருந்த காலம் தொடங்கி, எங்கள் பக்கத்துவீட்டில்(அப்பாவின் நண்பர் குடும்பம்) இரு அண்ணன்மாரும், மூன்றாவது என் வயதை ஒத்த மகனும் இருந்தார்கள். நாங்கள் இரு குடும்பமும் சகோதரங்கள்போல, ஒட்டிப் பழகினோம், மாமா, மாமி என்றுதான் அழைப்போம். இங்கு சமைப்பது அங்குபோகும், அங்கு சமைப்பது இங்குவரும் அப்படி. ஆனால் இருபகுதி பெற்றோரும் எம்மை கண்டித்தது கிடையாது, இரு பகுதியிலும் எந்தச் சலனமும் வந்ததும் கிடையாது. இப்பவும் அவர்கள் எல்லோரும் திருமணமாகி வெளிநாட்டில்தான் இருக்கிறார்கள், முடிகிறபோது விசிட் பண்ணுவோம், சகோதரங்கள்போலவே ஆசையாக வரவேற்று உபசரிப்பார்கள், எமக்கொன்றென்றால், துடித்துப்பதைத்து போன் பண்ணுவார்கள், நாங்களும் அப்படியேதான்.... இப்படியும் உறவுகள் உண்டுதானே..
மிக்க நன்றி ஆசியா...
ஜெய்லானி said...
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //ஜெய்..லானி.. எதுக்கு அவ்??? உங்களுக்காகத்தானே.. ஹைஷ் அண்ணன் விட்டுத்தந்திருக்கிறார் ஆயாவை:), ஏசிபோட்ட ரக்சில வந்து பத்திரமாகக் கூட்டிப்போங்கோ..... என் வீட்டுக்கு வருபவர்களை(என்பக்கம்) எப்பவுமே நான் வெறுங்கையோடு போகவிட்டதேயில்லை:).... ஆ... அதிராவுக்கு “தங்கமனசெனச்” சொல்வது கேட்குதூஊஊஊஊஊஊஉ தெங்கியூஊஊஊஊஊஊ
மனதிலா ...
ReplyDeleteஉடலிலா...
அறிவிலா..
தடுமாற்றத்துடன் நான்...
( ஆ..ஒரு வழியா எதிர் கவித போட்டாச்சு )/// ஆ... இப்பூடியும் கவித வருமா??... இதை உங்கள் நண்பர்:) பார்த்தால் மூட்டைப்பூச்சி மருந்தைக் குடிச்சிடப்போறார்:)(தற்கொலைமுயற்சியாக:)... ஆர் என்ன பேர் எண்டெல்லாம் ஆரும் கேட்கப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
எதுக்கு டாலர் மேல சத்தியம் நாஅப்பாவிக்கு அப்பாவி சந்தேகமே படமாட்டோன்ன்ன்ன்ன்ன். /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அது டொலர் இல்லை “தங்கமணி” க்கொயின்:)................................ உம் இல்லை, சாஆஆஆஆஆஆஆஆஆஅமீஈஈஈஈஈஈஈஈஈ.... நம்புங்கோவன்.... பாஸ்போட் அனுப்புறதோ?:).
மிக்க நன்றி ஜெய்..லானி வரவுக்கு.
Mrs.Menagasathia said...
ReplyDeleteஅதி நீங்க எழுதிய கவிதையா??? நம்பவே முடியல...நல்லா எழுதிருக்கிங்க..///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்பவுமே அதிராவைச் சந்தேகப்படுவதே தொழிலாப்போச்சு எல்லாருக்கும்:)))).
மிக்க நன்றி மேனகா.
கவிதை ரொம்பவும் நன்றாக இருக்கிறது அதிரா! புகைப்படங்களும் அழகு!!
ReplyDeleteகவிதை, கவிதையாக இருக்கு அதீஸ்.
ReplyDeleteநிறைய எழுதுங்கோ.
//ஆகா பூஸூ கழுத்திலே, அப்பாவி தங்கமணியை கட்டியாச்சு :))))))
இனி மணி அடிச்சுக்கிட்டேதான் வரும் :) //
;)))
அழகான( கை) கவிதை.நன்றாக இருக்கிறது.
ReplyDelete"பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்" பெஸ்ட் ஆ இருக்கு.
செவ்வந்தி எனக்கும் பிடிக்கும்.ஆனால் இங்கு வைத்தால் நத்தை வரும் . வைக்கவில்லை.
"மணி "ப் பூனை .அழகு.
அதிரா அருமையாக கவிதை எழுதி இருக்கிங்க...சூப்பர்ப்....அருமை...வாழ்த்துகள்....
ReplyDeleteநான் தேடும் செவ்வந்திபூவிது..
ReplyDeleteஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது..
பூவோயிது வாசம்.. போவோமினி காதல் தேசம்..
அதீஸ்.. கவிதை அருமை.. நல்ல உணர்வுள்ள கவிதைய வடிச்சிருக்கீங்க.. என்னக் கேட்டா, அப்பிடியே மனசுல காதல் வந்தாலும் தப்பில்ல :))..
//தோழில்//
விடமாட்டோம்ல :))))))))))))))
அப்புறம்.. அந்த நகங்களும், பொருத்தமான நகப்பூச்சும் அழகு :)
//அந்த நகங்களும், பொருத்தமான நகப்பூச்சும் அழகு :)// யாரது! நான் சொல்ல நினைத்து மறந்ததைச் சொன்னது!!
ReplyDeleteஅதீஸ் அந்த நகங்களும், பொருத்தமான நகப்பூச்சும் அழகு :)
மனோ அக்கா!! நீங்களே சொல்லிவிட்டீங்கள், இனி என்ன, நான் பயப்படாமல் கவிதைகள் எழுதுவேன்.... மிக்க நன்றி.
ReplyDeleteஇமா said...
ReplyDeleteஇமா!!! //கவிதை, கவிதையாக இருக்கு அதீஸ்.
நிறைய எழுதுங்கோ./// சொல்லிட்டீங்க இல்ல.... இனிப்பாருங்கோஓஓ... கவிஞர் அதிராதான்...:)
மிக்க நன்றி இமா.
//ஆகா பூஸூ கழுத்திலே, அப்பாவி தங்கமணியை கட்டியாச்சு :))))))
இனி மணி அடிச்சுக்கிட்டேதான் வரும் :) //
;)))/////////// நீங்களுமோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் மணியையெல்லாம் அடிக்கமாட்டேன்... ஒன்லி சவுண்டு...தேன்... மியாவ்... மியாவ்.....
அம்முலூஊஊஊஉ ///அழகான( கை) கவிதை.நன்றாக இருக்கிறது/// “கொஞ்ச லாம்பெண்ணை தாருங்கள்” என்பதுபோல, எப்பவுமே இருபொருள் வாக்கியம் அமைத்துக் கலக்குறீங்க:), மிக்க நன்றி..
ReplyDelete///"பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்" பெஸ்ட் ஆ இருக்கு./// மிக்க நன்றி.. பூனைக்கு எதிரி இல்லை எலியும் பெஸ்ட் ஃபிரெண்ட்தான்:).
///செவ்வந்தி எனக்கும் பிடிக்கும்.ஆனால் இங்கு வைத்தால் நத்தை வரும் . வைக்கவில்லை./// அதே அதே... இங்கும் நத்தையைவிட அருவருப்பான ஒன்று உலாவரும் “ஸ்லாக்”, குறுக்க தறித்து விழுத்திப்போடும், அதுதான் இம்முறை கொஞ்சம் சாடியிலும் மீதி நிலத்திலுமாக வைத்தேன்.... “அவர்களை”க் காணவில்லை:).
//"மணி "ப் பூனை .அழகு./// ரொம்ப தாங்ஸ்ஸ், இரண்டுமே என் பெயர்கள்தான்... ஆரும் விளக்கம் கேட்கப்பிடாதூஊஊஊஉ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
மிக்க நன்றி கீதாச்சல்... உங்கள் புளொக்கைென் முகப்பில் இணைத்தபின்னரே, எனக்குத் தெரிகிறது, உங்கள் புதுப் பதிவுகள்.
ReplyDeleteசந்து!! ///பூவோயிது வாசம்.. போவோமினி காதல் தேசம்..// இல்லையில்லை... பூங்கதி தேஅமெல்லோ:).
ReplyDeleteஇளையராஜா அவர்கள் பாடிய பாட்டுத்தானே... முன்பு என் சிடியில் போட்டு போட்டு... ரிப்பீட்டில விட்டு... தேய்ந்துவிட்டது இப்பாட்டு, இப்பத்தான் கொஞ்சக்காலமாக மறந்திருந்தேன்.. ஞாபகப் படுத்திவிட்டீங்கள்... எனக்கு அவரின் குரலென்றால் ஏனோ தெரியாது..... மிகவும் லவ்ஸ்ஸ்ஸ்ஸ்... தேடி தேடிக் கேட்பதுண்டு.. ஆனால் கிடைப்பது குறைவு... அட.. வீட்டுக்கு வாசல்படி வேணும்.... இதுவும் அவரதுதானே....
///என்னக் கேட்டா, அப்பிடியே மனசுல காதல் வந்தாலும் தப்பில்ல :)).. ///நல்ல மனசு சந்து உங்களுக்கு!!!, நிட்சயம் காதல் வரும் என்றும் இல்லை, கொன்றோல் பண்ணி, அடக்கி வைத்தால்தான் காதலாக மாறும்.
//அப்புறம்.. அந்த நகங்களும், பொருத்தமான நகப்பூச்சும் அழகு :)// சே..சே... வெட்கம் வெட்கமாக வருதூஊஊஊஊஊ.. மிக்க நன்றி சந்து அனைத்துக்கும்.
//தோழில்//
ReplyDeleteவிடமாட்டோம்ல :))))))))))))))/// இதுக்குத் தனிப்பதிவு போட்டால்தான் சரி. மிக்க நன்றி சந்து சுட்டிக்காட்டியமைக்கு. ஆனாலும் இப்பூடிச் சொன்னால் அதிராவுக்கு என்ன சொல்றீங்கள் என்றே புரியாது:).
எனக்கு அம்முலு மெயில் பண்ணியிருந்தார், அதிரா தோ”ழி”ல்.. ளி தான் வரும் என. அப்போதுதான் எனக்குத் தெரியும். மிக்க நன்றி அம்முலு.
அதனாலேயே சந்துவின் பதிவை இலகுவாக, என்ன சொல்றீங்கள் எனக் கண்டுபிடித்தேன்... அதுக்காக அதிரா ரியூப்லைட் எனச் சொல்லப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இல்லாதுவிட்டால், நான் நினைத்திருப்பேன்... தோழில் என்பது தப்பாக்கும், முதுகில் எனப்போட்டிருக்க வேண்டுமோ என்றெல்லாம்..
நான் தமிழில் பெரிய மேதை என நினைப்பதுண்டு:), ஆனால் இந்த “ழி”, ”ளி”, எப்பவுமே என்னைப்பிடிச்சுக் கொடுக்கிறதே... இப்பூடித் திருத்திவிட்டால் இனிமேல் மறக்கமாட்டேன்...
வி”ழை”யாட்டையும் முன்பு இஷானி... பின் தொடர்ந்து ஜீனோ, இமா.. திருத்திவிட்டமையால் இப்போ பாடம் வந்திட்டுது... இப்போ வி”ழை”யாடுறேன்:).
தக்காளி... ஆ... கரெக்ட்டா எழுதிட்டேன்... இமாதான் திருத்தினார்...
ஒ”ழி”த்து(ளி) இருத்தல்.. இது ஹைஷ் அண்ணன் திருத்தினார்.... இனிமேல் இவற்றை எல்லாம் மறக்க மாட்டேன், ஆனால் புதுஷா எழுதுவோமில்ல:)....
எழுத்துப்பிழை திருத்தி.. என்னை நேராக்கிவிட்ட(ஏன் இவ்வளவு நாளும் சொத்தியோ எனக் கேட்கப்பூடாது கர்ர்ர்ர்.)... அனைவருக்கும் நண்டி... நண்டி.. நண்டி... வால்க:), வலர்க:)...
யாரது! நான் சொல்ல நினைத்து மறந்ததைச் சொன்னது!!//// ஓ... இமா.. “இது சொல்ல மறந்த கதை” ஓ?? சேரனின் படம் பார்த்தனீங்களே? பார்க்காவிட்டால் பாருங்கோ.. நல்ல சோகப்படம்...
ReplyDeleteஅதீஸ் அந்த நகங்களும், பொருத்தமான நகப்பூச்சும் அழகு :)/// மியாவும் நண்டி.... சே.. பூனைப்பாஷையே வருதூஊஊஊஊஊஊ மிகவும் நன்றி...
கவிதையையும் விடுவதாயில்லையா? பொறாமையா இருக்கு!! ஆனாலும் வாழ்த்துகள் - கவிதை, படங்கள், பூக்கள் எல்லாவற்றிற்கும்!!
ReplyDeleteகவிதையையும் விடுவதாயில்லையா?// கர்ர்ர்ர்ர்ர்ர்ர் கவிதைதான் என்னை விடுவதாயில்லை:).
ReplyDeleteபொறாமையா இருக்கு!! // டிஷ்யூ வாணுமோ?:)
மிக்க நன்றி ஹூசைனம்மா.
அது எனக்கு விருப்பமான படம்.
ReplyDelete//ஆனால் புதுஷா எழுதுவோமில்ல:)....// ;))
இமா said...
ReplyDeleteஅது எனக்கு விருப்பமான படம்.// அப்போ பார்த்திட்டீங்கள்... அந்த கண்ணும் சிகப்புச் சொண்டும் போட்ட ஆயாக் கப்பலைத்தானே சொல்றீங்கள்:)))))
//ஆனால் புதுஷா எழுதுவோமில்ல:)....// ;))/// தேடித் தேடிப்புடிக்கிறாங்கப்பா... கிக்..கிக்..கீஈஈஈஈஈ
//################
ReplyDeleteஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html
அன்புடன் .> ஜெய்லானி <
################
கவிதையும் எழுதுவீங்களா? சூப்பருங்க... ரொம்ப நல்லா இருக்கு...!!!!
ReplyDeleteகவிக்கா... said... 45
ReplyDeleteகவிதையும் எழுதுவீங்களா? சூப்பருங்க... ரொம்ப நல்லா இருக்கு...!!!!
/// ஆ... எப்பவும் சந்தேகமாகவே எல்லாரும் என் கவிதை படிக்கிறாங்கப்பா...
மிக்க நன்றி கவிக்கா..