நல்வரவு_()_


Sunday, 24 December 2017

ந்திட்டுதோ கிறிஸ்மஸ்?:)

சன்ரா வந்திட்டாரா? சன்ரா வந்திட்டாரா? கண்ணைத் திறக்கட்டோ?:)

ம்முறை நான் பேசப்போவதில்லை மெளன விரதம்.. அதனால எங்கள் வீட்டு கிரிஸ்மஸ் றீயைப் பார்த்து.. நல்லதா:).. செழிப்பா:).. செந்தளிப்பா:).. கொந்தளிப்பா:).. ஹையோ ஒரு ஃபுளோல வந்திட்டுது.. ஆசையா அருமையா ரெண்டு வசனம் பேசிட்டுப் போங்கோ:)... ஆங்ங்ங்ங் அப்பூடியே கீழே தமனாக்கா வெயிட்டிங்:) டச்சு பண்ண மறந்திடாதீங்கோ பிறகு தெய்வக் குத்தமாகிடும்:))



===========================================================================
கழுதைத் சத்தம்.. நல்ல சகுனம்:).. கிரிஸ்மஸ் காலங்களில் இப்படி சில விலங்குகள் மற்றும் கழுகு போன்ற பறவைகளை மோல்களில் கொண்டு வந்து பார்வைக்கு விட்டு, பணம் சேர்ப்பார்கள்..  இவை குட்டிக் குதிரைகள்.. அதாவது உயரம் குறைவான:).. மொத்த உயரம் 3 கூட வராது
===========================================================================


இந்தப் படம் வீட்டுக்கு வெளியே இருந்து எடுத்தது..

ஸ்பெஷல் இணைப்பு:

ஸ்பெஷல் ஊசிக்குறிப்பு:)
கிரிஸ்மஸ் க்கு, நட்புக்கள், கூட வேர்க் பண்ணுவோர் அனைவருக்கும் கிஃப்ட் குடுப்பது இங்கு வழக்கம் தானே. அதே முறையில் நேற்று இங்கு ஒரு ஸ்கொட்டிஸ் நண்பி, அவவுக்கு கிஃப்ட் எடுத்துப் போனேன் குடுக்க... வீட்டுக்குள் போய் கிஃப்ட் பாக்கை கையிலே கொடுத்தேன், வாங்கி வைத்து விட்டு என்னை இறுக்கிக் ஹக் பண்ணியபடியே சொன்னா... “எனக்கு உன் நட்புக் கிடைச்சதுதான் மிகப் பெரிய கிஃப்ட்... உன்னை விட எனக்கெதுக்கு இந்தக் கிஃப்ட் எல்லாம்” என.... அவவின் கைக்குள்ளேயே நெய்யா உருகிட்டேன்ன்ன்:)).. ஹா ஹா ஹா முறைக்காதீங்க:).
ஊசிக்குறிப்பு:
ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்தை விடக் குறைந்ததல்ல, ஒரு தீக்குச்சியின் மரணம்.
இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)

ஊசி இணைப்பு:
()()()()())()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
தங்கூ.. தங்கூ:)
=================================================
அனைவருக்கும் கிரிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...__()__
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}

106 comments :

  1. படங்கள் அருமை இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ... அமைதியாக இருப்பது நல்லதுதான்:) அதுக்காக இவ்ளோஓஓஓ அமைதி வலையுலகுக்கு நல்லதில்ல ஜொள்ளிட்டேன்ன்:)).. ஹா ஹா ஹா முதல் வருகை.. மிக்க நன்றி.

      Delete
  2. இம்மாதிரி ஊசிக் குறிப்புகளில் நிறையவே சொல்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா..

      இம்முறை 2 வதாக வந்திருக்கும் உங்களுக்கு.. எங்கள் ஆரியபவான் மெயின் செஃப் .. 99 வயசு ஆயாவை அன்புப் பரிசாக அளிக்கிறேன்ன்:)).. ஆயா பத்திரம் ஐயா...

      ஹா ஹா ஹா இம்முறை அனைத்தையும் விட்டுப்போட்டு எல்லோருக்கும் அந்த ஊசிக்குறிப்பே கண்ணில தெரியுது:) ஹா ஹா ஹா.. மிக்க நன்றி.

      Delete
    2. எண்பது வயது இளைஞன் 99 வயசுக் கிழவியை வைத்துக் கொண்டு என்ன செய்வது

      Delete
    3. ஹா ஹா ஹா ஜி எம் பி ஐயா.. உப்பூடிச் சொல்லி எஸ்கேப் ஆகிடாதீங்க.. பாவம் அவ ரொம்ப இருமுறா.. காச்சல் வேறு இருக்கு:).. உங்கள் அம்மா மாதிரி பார்த்துக் கொள்ளுங்கோ.. நம்ம்ம்ம்ம்ம்பி அனுப்பியிருக்கிறேன்ன்:).. ஹா ஹா ஹா.

      Delete
  3. சரி.சரி... ஊசிக்குறிப்பைப் படித்துவிட்டேன். இந்த இடுகை ஆஹா..ஓஹோன்னு இருக்கு. படம்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு. ஸ்காட்டிஷ் நண்பி, கிஃப்டை வாங்கின பிறகுதானே, 'தத்துவம்லாம்' சொல்லியிருக்காங்கன்னு சொல்லமாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      //ஸ்காட்டிஷ் நண்பி, கிஃப்டை வாங்கின பிறகுதானே, 'தத்துவம்லாம்' சொல்லியிருக்காங்கன்னு சொல்லமாட்டேன்.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) எப்பூடியாவது எதையாவது கண்டுபிடிச்சு:) அதிராவின் இமேஜ் ஐ டமேஜ் பண்ணுவதே வேலையாப்போச்ச்ச்:)... சரி இது போகட்டும்,:)..இன்னொரு வடிவத்தில் என்னைப் பற்றிப் புகழாமல் விட்டிடுவேனோ:) ஹா ஹா ஹா:))

      உண்மையில் எனக்கிங்கு கிடைத்திருக்கும் அனைத்து ஸ்கொட்டிஸ் நண்பிகளும் ரொம்ப நல்லவங்க... பயங்கரமா என்னை விரும்புவினம் எங்கு கண்டாலும் ஓடிவந்து இறுக்கி அணைப்பார்கள்..

      ஆனா இந்த நண்பி உண்மையில், எனக்கு கிடைத்த கிஃப்ட் தான் அவ.. நான் அவவிடம் ஒருபோதும் சொன்னதில்லை... ஆனா அவதான் எனக்கு அப்படி பல தடவைகள் சொல்லியிருக்கிறா:)... உள்ளம் உருகுதையா.. சிட்டுவேஷன் சோங் பிபிசில போகுதேஏஏஏஏஏஏ:))..

      மிக்க நன்றி நெ.தமிழன்.. உங்களிடத்தில் கிரிஸ்மஸ் ஹொலிடே இருக்காது என்ன?...

      Delete
    2. ஸ்காட்டிஷ் ஜோக்குகள் எல்லாம் படித்திருக்கிறிர்களா பெரும்பாலோனார் கஞ்சப் பேர்வழிகளாமே

      Delete
    3. நல்ல நண்பர்களைப்போல் வாழ்க்கையை மகிழ்ச்சியூட்டுவர்கள் கிடையாது. உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தது உங்கள் அதிர்ஷ்டம். அவங்கதான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நம் வாழ்க்கையோடு இணைந்து வருபவர்கள்.

      இங்கு கிறிஸ்துமஸ் விடுமுறை கிடையாது. உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள். (கேக் படம் கூடப் போடாமல் வெறும் வாழ்த்து அட்டைகளைக் காண்பித்தே டாட்டா காட்டியவருக்கும் சேர்த்துத்தான் இந்த வாழ்த்து)

      Delete
    4. G.M Balasubramaniam
      ///பெரும்பாலோனார் கஞ்சப் பேர்வழிகளாமே///
      ஹா ஹா ஹா என்னாச்சு ஜி எம் பி ஐயா? வெள்ளையர்களைத் திட்டுறீங்களோ? இல்ல இங்கு வாழும் நம்மவர்களைத் திட்டுறீங்களோ?:)... ஸ்கொட்டிஸ் கஞ்சல்தனமானவர்கள் இல்லை... ஸ்கூலில் எல்லாம் தாராளமாகச் செலவு செய்வார்கள்... சேர்ந்து போகும்போது போட்டி போட்டு வாங்கித் தருவார்கள்..

      Delete
    5. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்... இருப்பினும் எனக்கு வோட் போடாமல் போயிட்டீங்களே..:) நீங்களே தமனாக்காவை டச்சு பண்ணாட்டில்:)).. ஹா ஹா ஹா..

      //(கேக் படம் கூடப் போடாமல் வெறும் வாழ்த்து அட்டைகளைக் காண்பித்தே டாட்டா காட்டியவருக்கும் சேர்த்துத்தான் இந்த வாழ்த்து)//
      ஹா ஹா ஹா வீட்டுக்குள் போய்ச் சொல்லாமல் வேலிக்கு மேலால சொல்றீங்களோ அவவுக்கு வாழ்த்து:)).. அவட வேலை கிரிஸ்மஸ் வந்தால் கிச்சினைப் பூட்டிப்போட்டு:) விழுந்து விழுந்து கார்ட்ஸ் செய்வது மட்டுமே:).. இம்முறை நாம் கேட்டு விட்டோம் என:).. என்னமோ செய்திருக்கிறாவாம் பார்ப்போம்:))

      Delete
    6. நெல்லைத்தமிழன் நீங்க குழைசாதம் செய்யாவிட்டாலும் பறவாயில்லை:).. இதை நிட்சயம் செய்யுங்கோ.. உங்களுக்குப் பிடிக்கும்...

      http://gokisha.blogspot.com/2016/02/blog-post_19.html

      Delete
    7. https://gokisha.blogspot.com/2016/02/blog-post_19.html?showComment=1514308627471#c5638163334383047657

      நெல்லைத்தமிழன் உங்கள் கொமெண்ட்டுக்குப் பதில் போட்டேன் நிட்சயம் படிக்கோணும் பிளீஸ்ஸ்ஸ்:)

      Delete
  4. ஆஅவ் !! கிறிஸ்துமஸ் வந்திடுச்சு ..ட்ரீ அழகா உங்களைவிட உயரமா உங்களை விட ஒல்லியா இருக்கு :)
    ஜெஸிக்கு மகள் சாண்டா hat போட்டு விட்டா கோபத்தோடு போஸ் குடுத்தா :) டெய்சி கியூட்
    இந்த மினி போனிஸ் இங்கேயும் கொண்டாந்தாங்க கூடவே ரெண்டு reindeer ..சில சாரிட்டிக்கு இந்த போனீஸை காட்டி பணம் சேப்பாங்க .என் பொண்ணுக்கு கோபம் அதை பார்த்துட்டு .

    //அவவின் கைக்குள்ளேயே நெய்யா உருகிட்டேன்ன்ன்:)).. ஹா ஹா ஹா முறைக்காதீங்க:)//
    அந்த நெய்யை கொஞ்சம் பாட்டிலில் போட்டு அனுப்பறீங்களா ..முறுக்கு சுட போறேன் ..நெய் போட்டு பிசையனும் வீட்ல நெய் காலி !!


    அதுக்குள்ளே என அவசரம் புத்தாண்டுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு :) நான் 30/31 தான் விஷ் பண்ணுவேன் ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பி சி ஏஞ்சல்:)).. அதாவது கொஞ்சம் அஜீஸ் பண்ணினா பேசனல் செக்கரெட்டரி எண்டும் வச்சுக்கலாம்:)) எஸ் ஐ சி ஆக்கி:)..

      அதுசரி மீன் எங்கே போச்ச்ச்ச்?:).. ஜெஸிப்பிள்ளை பிரசண்ட்டோடு இருக்கிறா:)..

      ///ஆஅவ் !! கிறிஸ்துமஸ் வந்திடுச்சு ///

      ஹா ஹா ஹா கர்ர்ர்:)) உங்கள் இந்த சவுண்டு பார்த்துத்தான் கீழே ஸ்ரீராம் பயந்திட்டார்:).. நாளைக்குத்தானே கிரிஸ்மஸ் எனக் கேட்டிருக்கிறார்:)..

      தொப்பி எதுவும் ஆசைக்கு போட்டுப் பார்க்க முடியாது அஞ்சு, இது என்னமோ நல்ல மூட் போல விட்டுவிட்டா.. ரெயின் டியர் பாண்ட் போட:).

      Delete
    2. //இந்த மினி போனிஸ் இங்கேயும் கொண்டாந்தாங்க கூடவே ரெண்டு reindeer ..சில சாரிட்டிக்கு இந்த போனீஸை காட்டி பணம் சேப்பாங்க .என் பொண்ணுக்கு கோபம் அதை பார்த்துட்டு .//

      அது பணம் சேர்ப்பது அந்த அனிமல்ஸ் க்காகத்தானே அஞ்சு அத்தோடு ஆராவது ஸ்பொன்ஸர் பண்ணி மந்த்லி பேமண்ட்டும் கொடுக்கலாம்.. ஒரு அட் தானே.. அதில தப்பிருப்பதாக தெரியவில்லையே...

      ///அந்த நெய்யை கொஞ்சம் பாட்டிலில் போட்டு அனுப்பறீங்களா ..முறுக்கு சுட போறேன் ..நெய் போட்டு பிசையனும் வீட்ல நெய் காலி !!///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பூடியாவது அதிராவைப் பிசைந்து உங்கட கோபத்தை தீர்க்கோணும் அப்பூடித்தானே?:)).. அதுதான் நடக்காது:) உருகிய நெய்.. குளிருக்கு கட்டியாச்சூஊஊஉ:)..

      புத்தாண்டுக்கு வாழ்த்துப் போடும் ஐடியா எனக்கில்லை... போடுவதுமில்லை நான்... எல்லோருமே வாழ்த்துச் சொல்லுவினம் அது போதுமென நினைப்பேன். இது கிரிஸ்மஸ் ஒரு குதூகலத்துக்காக. இனி ஜன. முதலாம் திகதிக்கு முன் ரைம் கிடைக்குமோ தெரியவில்லை இன்னொரு போஸ்ட் போட... அதனால கிடைத்தால் ஓகே, கிடைக்காட்டிலும் என இப்பவே நியூ இயர் வாழ்த்தும் சொல்லிட்டேன்..

      Delete
    3. ஜெஸிக்கு மகள் சாண்டா hat போட்டு விட்டா கோபத்தோடு போஸ் குடுத்தா :) // ஏஞ்சல் ஃபோட்டோ எடுத்திருக்கீங்களா? போடுங்க ப்ளீஸ்!!! லவ் டு ஸீ ஹெர்!!
      கீதா

      Delete
  5. உங்க வீட்டு கிறிஸ்துமஸ் ட்ரீ மட்டும் நேரா இருக்கே :) டெய்சி தொட மாட்டாளா ?
    எங்க வீட்டு குட்டி சாத்தான் அதுக்கு கீழதான் குடியிருக்கா :) ரெண்டு ப்ரெசன்ட்ஸை பிரிச்சிட்டா :)

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) டெய்சி .. அவட மம்மியைப்போலவேதான்:) ரொம்ப நல்ல பொண்ணு:).. முதல் நாள் மட்டும் தொட்டு, இழுத்துப் பார்த்தா, பின்பு விட்டு விட்டா:)..

      ஹா ஹா ஹா ஜெஸி குறைமாதக் கொயந்தை:) அவங்க அம்மா போலவேதேன்ன்ன்ன்:) எதுக்கும் அவசரம்:)) ஹா ஹா ஹா.. சரி சரி முறைச்சால்ல்... நோ கிஃப்ட் ஃபோ யூஊஊஊஊ:))

      Delete
    2. ஏஞ்சல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா!! ஐ ரியலி லவ் திஸ்!!! ரொம்ப ரசித்தேன் உங்க குட்டிச்சாத்தானை நினைத்து!! அது ட்ரீ அடியிலேயே குடி இருப்பதை நினைத்து சிரித்துக் கொண்டே இருக்கேன்.....ஏஞ்சல் இந்தச் செல்லங்கள் செய்யும் சேட்டைகள் எல்லாம் ரொம்ப க்யூட்!!

      கீதா

      Delete
    3. பேசாத குழந்தைகள் இவர்கள்... எங்கட அம்மா இங்கிருந்தபோது சொன்னா, டெய்சிக்கு மட்டும் பேசத் தெரிஞ்சுது.. உன் கதி அதோ கதியாகிடும் என ஹா ஹா ஹா:))

      Delete
  6. உங்க ஊசிகுறிப்புக்கு எசப்பாட்டு நிறைய சொல்லலாம் ஆனா இப்போ மீ பிஸி :) ஏஞ்சல் வாழ்க்கை வரலாற்றில் முதன்முறையாக முறுக்கு மிக்ஸர் கோகொனட் ஸ்வீட் செஞ்சேனே .இப்போ அச்சப்பம் செய்ய போறேன் ....இதை மைக்செட் போட்டு சொல்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. மக்களே அடுத்த சில வாரங்களுக்கு ராமசேரி முறுக்கு ,மிக்ஸர்,கோகனெட் ஸ்விட் ரிசிப்பி வரும் என எதிர் பார்க்கலாம்..


      அது என்ன ராமசேரி முறுக்கு என்கிறீர்களா? அது ரொம்ப சிம்பிள்

      முறுக்கு செய்ய தேவையானதை எல்லாம் எடுத்து ஒரு தட்டில் அந்த முறுக்கை பிழிந்து அதை இட்லிதட்டில் வைத்து அவித்து எடுத்து அதன் பின் அதை அவனில் வைத்து எடுத்து சாப்பிடவும்.....

      Delete
    2. ///உங்க ஊசிகுறிப்புக்கு எசப்பாட்டு நிறைய சொல்லலாம் ஆனா இப்போ மீ பிஸி :) ///

      ஸ்ஸ்ஸ் வைரவருக்கு கொளுத்திய கற்பூரம் வீண் போகவில்லை:)..

      //ஏஞ்சல் வாழ்க்கை வரலாற்றில் முதன்முறையாக முறுக்கு மிக்ஸர் கோகொனட் ஸ்வீட் செஞ்சேனே .இப்போ அச்சப்பம் செய்ய போறேன் ///

      அச்சச்சோஓ அன்று நானும் ட்றுத் உம் தெரியாமல் கேட்டிட்டோம்ம் பலகாரம் ஏதும் செய்யவில்லையா என.. இப்போ அது நமக்கே வம்பாகிட்டுதே:))..

      ஓடுங்கோ ஓடுங்கோ எல்லோரும் நோ பே லீவில எண்டாலும் ஓடிடுங்கோ.. இனி சமையல் ரெசிப்பியா வரப்போகுது:).... என்ன இது 2018 க்கு வந்த ஓதனை:))

      Delete
    3. ட்றுத் ச்சும்ம்மா மசமச என விளக்கம் சொல்லிட்டு இருக்காமல்:) ஓடித்தப்புற வழியைப் பாருங்கோ:) ஆபத்து ஏரோப்பிளேனில வருது:)) ஹையோ இப்ப என்ன பண்ணலாம்... ஜனவரி 1ம் திகதியில் இருந்து எனக்கு காச்சல் வரும் எங்கயும் புளொக்குக்கு போயிட வேணாம் என முச்சந்தி முனியாண்டிச் சாத்திரியார் சொல்லியிருக்கிறார்:).

      Delete
    4. ஏஞ்சலின் அச்சப்பம் செய்முறை படத்தோட எழுதுங்க. எனக்கு அது மிக மிகப் பிடித்தமானது. இங்க வீட்டிலயும் மற்றவர்களும், இனிப்புகள் மீது ஆர்வம் வைக்காதீங்க, சாப்பிடாதீங்கன்னு எனக்கு ஒரே அட்வைஸ் மழை (அதுனால உங்க ரெசிப்பி பார்த்தப்பறமாவது எனக்கு அச்சப்பத்தின்மீது ஆசை போகுதான்னு பார்க்கலாம் :-) )

      Delete
    5. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்:) ///ஏஞ்சலின் அச்சப்பம் செய்முறை படத்தோட எழுதுங்க. எனக்கு அது மிக மிகப் பிடித்தமானது////
      நல்லாத்தானே போகுது.. அடடா மாறிட்டாரே என நினைச்சேன்ன்ன்:) முடிவில கவிட்டுப்போட்டீங்களே ஹா ஹா ஹா:).. அச்சப்பம் தோசைபோல வந்திருக்கும் ஹா ஹா ஹா:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).

      Delete
    6. Garrrrrrrrrr 123456788999814322 times for Nellai thamizhan :)

      Delete
    7. ஏஞ்சலின் - சீக்கிரம் அச்சப்பம் இடுகை போடுங்க. (கடைசி கலாய்த்தல்தான். அதுனால கோபம் வேண்டாம். உண்மையிலேயே எனக்கு அச்சப்பம் மிக விருப்பம்)

      Delete
    8. இதோ வந்திட்டே இருக்கு :) தாமதத்துக்கு காரணம் லேப்டாப் சார்ஜர் உடைஞ்சி ..டேப்லட் சார்ஜர் ஜெசியால் கடிக்கப்பட்டு கொஞ்சூண்டு ஒட்டிக்கிட்டிருக்கு படமெல்லாம் அதில் .நேற்றிலிருந்து desk டாப்பில் வரேன் வலைப்பதிவுகளை பார்க்க ..
      எவ்ளோ சதி கலாய்த்தல்நடந்தாலும் இன்னிக்கு பதிவு வரும்ம்ம்ம்ம்ம்ம் :)

      Delete
    9. ///நெல்லைத் தமிழன்Thursday, December 28, 2017 7:58:00 am
      ஏஞ்சலின் - சீக்கிரம் அச்சப்பம் இடுகை போடுங்க. (கடைசி கலாய்த்தல்தான். அதுனால கோபம் வேண்டாம். உண்மையிலேயே எனக்கு அச்சப்பம் மிக விருப்பம்)///

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் இவ்ளோ பயந்திட்டார்ர்:)).. நான் எமக்கு ஒரு நண்பர் குடும்பம் தந்தார்கள்.. சாப்பிட்டேன் பெரிசா பிடிக்கவில்லை.. ஒருவேளை செய்தது அவ்ளோ சரியில்லையோ என்னமோ.

      Delete
  7. இன்னும் வரலையே கிறிஸ்மஸ்! இன்றிரவுதானே?!

    என்ன பூனைக்குட்டி தூக்கத்திலேயே உடற்பயிற்சி செய்கிறது?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      ஹா ஹா ஹா 24 ம் திகதி இரவு 12 க்கு பின்புதான் கிரிஸ்மஸ். ஆனா இங்கு வீடுகளில் கிரிஸ்மஸ் ட்றீ வைப்பது.. டிசம்பர் 5 இலிருந்து எப்பவும் வைப்பார்கள்.. அதே நேரம் ஜனவரி 5 ம் திகதிக்கு முன் எடுத்து விட வேண்டும். இது ஸ்கொட்டிஸ் கல்ச்சரில்:).. 24 மிட் நைட்டின் பின்னர் பிரசண்ட்ஸ் எல்லாம் உடைச்சுப் பார்க்கலாம்..

      நம்மவர்களைப்போல ஸ்கொட்டிஸ் உம் சில நாள் கோள் பார்க்கும் பழக்க முடையவர்கள். அந்த வகையில், ஜனவரி முதலாம் திகதிக்கு மேலும், கிரிஸ்மஸ் ட்றீ யை எடுக்காமல் வைத்திருந்தால், பாட் லக் வந்திடும் என நம்புவார்கள்.

      இன்னொன்றும் இருக்கு, ஊரிலே கரிக்குருவி என ஒன்றிருக்குதெல்லோ.. சின்ன வயதில் அம்மா ஒரு பாட்டுச் சொல்ல்லுவா..

      வன் ஃபோ சாட்
      2 ஃபோ ஹப்பி
      3 ஃபோ போய்
      4 ஃபோ கேள்....

      இப்படி வரும்... இதே பாட்டு, இங்கு மக் பை என ஒரு பறவை இருக்கு.. அதுக்கும் இவர்கள் பாடுவார்கள்.. அதாவது ஒரு பறவையைக் கண்டால் துக்கம், இரண்டு கண்டால் சந்தோசம் அப்படி... நான் கேள்விப்பட்டதும் அப்பூடியே ஷாக்ட் ஆகிட்டேன்ன்:)..

      Delete
  8. படங்கள் அழகாய் இருக்கிறது. வீட்டுக்கு வெளியே இருந்து எடுத்த படத்தில் ஒரு ஆள் நடப்பதுபோல இருக்கிறது!

    ReplyDelete
  9. //எனக்கு உன் நட்புக் கிடைச்சதுதான் மிகப் பெரிய கிஃப்ட்... உன்னை விட எனக்கெதுக்கு இந்தக் கிஃப்ட் எல்லாம்//

    அப்போ திருப்பி எடுத்துட்டு வந்துட்டீங்களா அந்த கிஃப்டை?!!

    ReplyDelete
    Replies
    1. இவங்க் ஒரே ஒரு கிப்ட்தான் வாங்குவாங்க அதை கொடுக்கும் போது யார் எல்லாம் இப்படி சொல்லுறாங்களோ அவங்ககிட்ட அந்த கிப்ட்டை கொடுக்காமல் கொண்டு வந்துடுவாங்க ஆனால் அந்த கிப்ட்டை நம்ம கிட்ட கொடுக்காமாட்டாங்க ஏன்னா நாம் அப்படியெல்லாம் சொல்ல மாட்டோமேல.......நம்மகிட்டதான் நல்லவங்க கொடுக்கிற கிப்டை திருப்பி கொடுக்கிற கெட்ட பழக்கம் இல்லை

      Delete
    2. ///அப்போ திருப்பி எடுத்துட்டு வந்துட்டீங்களா அந்த கிஃப்டை?!!///

      ஹா ஹா ஹா கர்ர்ர்:))

      Delete
    3. ///Avargal UnmaigalSunday, December 24, 2017 3:58:00 pm
      இவங்க் ஒரே ஒரு கிப்ட்தான் வாங்குவாங்க அதை கொடுக்கும் போது யார் எல்லாம் இப்படி சொல்லுறாங்களோ அவங்ககிட்ட அந்த கிப்ட்டை கொடுக்காமல் கொண்டு வந்துடுவாங்க///

      ஹா ஹா ஹா ட்றுத் க்கு பொறுக்கவே முடியுதில்லை:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  10. ஊசி இணைப்பு யாரை மனதில் வைத்து போட்டிருக்கிறீர்கள் என்று அறிய விருப்பம்!

    ReplyDelete
    Replies
    1. பெரிய மனுஷன் என்று நினைச்சுகிட்ட யாரோ ஒரு பெரியவரை நினைச்சு போட்ட கருத்தாக இருக்கும் ஸ்ரீராம்... நல்ல வேளை நாம் அந்த பெரிய மனுஷங்க லிஸ்டில் இல்லை ஹீஹீ

      Delete
    2. ///ஸ்ரீராம்.Sunday, December 24, 2017 3:12:00 pm
      ஊசி இணைப்பு யாரை மனதில் வைத்து போட்டிருக்கிறீர்கள் என்று அறிய விருப்பம்!//

      ஹா ஹா ஹா ஸ்ரீராம்.. எதையுமே நினைக்காமல் போட்டேன், இப்போ நீங்க கேட்டதும்தான் நினைவு வந்து சிரிக்கிறேன்ன் ஹா ஹா ஹா:)..

      மிக்க நன்றிகள்.

      Delete
    3. ///Avargal UnmaigalSunday, December 24, 2017 3:55:00 pm
      பெரிய மனுஷன் என்று நினைச்சுகிட்ட யாரோ ஒரு பெரியவரை நினைச்சு போட்ட கருத்தாக இருக்கும் ஸ்ரீராம்...//

      ஹையோ ஹையோ ட்றுத்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் மெளன விரதம்:))

      Delete
  11. //வீட்டுக்குள் போய் கிஃப்ட் பாக்கை கையிலே கொடுத்தேன், வாங்கி வைத்து விட்டு என்னை இறுக்கிக் ஹக் பண்ணியபடியே சொன்னா... “எனக்கு உன் நட்புக் கிடைச்சதுதான் மிகப் பெரிய கிஃப்ட்... உன்னை விட எனக்கெதுக்கு இந்தக் கிஃப்ட் எல்லாம்” என...///

    எங்கடா கிப்ட் கொடுத்தால் இந்த மதுரையும் இப்படி கட்டி பிடிச்சுடுவான்ணோ என்று நினைத்து கிப்ட் எல்லாம் கொடுக்காமல் இருந்திடாதீங்க....நான் யாருக்கும் ஹக் கொடுக்கமாட்டேன் ஏன் கை குலுக்க கூட மாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. என்ன மாயமோ என்ன மந்திரமோ இன்று உங்கள் ஒரு கொமெண்ட் மட்டும் மெயிலுக்கு நேராக வந்துதே:)..

      ஹா ஹா ஹா இன்றைய போஸ்ட்டில் எவ்வளாவோ இருக்கு ஆனா ஆரோ அதிராவைக் ஹக் பண்ணிட்டாவாம் என எல்லோராலும் பொறுக்க முடியாமல் இருக்கு:)) ஹா ஹா ஹா...

      //நான் யாருக்கும் ஹக் கொடுக்கமாட்டேன் ஏன் கை குலுக்க கூட மாட்டேன்//

      நம்மவர்கள் ஹக் பண்ணுவதில்லை பொதுவா நான் எங்கும் கண்டதில்லை(ஆண்கள்) நல்ல வயதானோர் தவிர.

      கை குலுக்குவது ஓரளவுக்கு ஓகே, ஆனா குலுக்குறேன் பேர்வழி எனச் சொல்லி கையை இறுக்கிப் பிடிச்சு ஒரு நிமிடம் விடாமல் வச்சிருப்பதுதான் தப்பு:))..ஹா ஹா ஹா.

      ஆனா என்ன தான் சொன்னாலும்.. இருந்தாலும் வெள்ளையர்கள்(ஆண்கள்) ஒரு முறைக்காக ஹக் பண்ணும்போதும் கை குடுக்கும்போது.. எந்த அசெளகரியமோ அல்லது ஒரு அரியண்டத்தன்மையோ தெரிவதில்லை, ஆனா நம்மவர்கள் எனில் கோபம் தான் வரும், நான் மட்டுமில்லை வேறு சில பெண்களும் சொல்லியிருக்கினம் இப்படி.. அது ஏன் நமக்கு அப்படி ஒரு வித மெட்டாலிட்டியோ தெரியவில்லை... அடிப்படையில் ஊறிவிட்ட பழக்க வழக்கமாகக் கூட இருக்கலாம்.

      Delete
    2. "அடிப்படையில் ஊறிவிட்ட பழக்க வழக்கமாகக்"

      ஆமாம் அதிரா. ஒவ்வொருத்தர் அவங்க அவங்க கல்சர்னால செய்கின்ற விஷயங்கள் நமக்கு வித்தியாசமாகத் தெரியாது. ஆனால் அதை நம்ம ஆட்கள் காப்பி அடித்துச் செய்யும்போது நமக்கே கொஞ்சம் அன்னியமாகத் தெரியும், சௌகரியமாக உணரமாட்டோம். (பெண்களிடம் கை குலுக்கும்-வெறும்ன தொடும் பழக்கம் நம்மிடம் கிடையாது. பொதுவா பெண்களைத் தொடவே மாட்டோம்-எங்க வழக்கத்தில். அந்தப் பழக்கத்தில் இருந்துவிட்டு, இங்கு மேல் நாட்டினர், கையை நீட்டினால், மறுக்காமல் பட்டும் படாமலும் கைகொடுக்கவேண்டியிருக்கும்)

      நான் இங்கு ஒரு கோவன் (Goa) பெண்-ஆபீஸ் செக்ரெடரி, அவளுடைய மகனின் 1 வயது பிறந்த நாளுக்கு என்னைக் கூப்பிட்டிருந்தா. அங்கு போனால், குடிப்பதற்கு ஒரு Bar. எல்லாரும், பெண்கள் உள்பட Sip செய்தார்கள். அப்புறம், அந்த இடத்தில் ஒரு மிக அழகான பெண் ஆட, கூட ஒருவர் அவளுடன் ஆடினார் (ப்ரொஃபஷனல்ஸ் இல்லை. சும்மா நண்பர்கள்தான்). அப்புறம் ஒவ்வொருவராக அவளுடன் ஆடினார்கள். அவள் கணவனும் அங்கிருந்தான். இதெல்லாம் எனக்கு மிக மிக அன்னியமாகத் தெரிந்தது. ஆனால் இதான் சாக்கு என்று, நம்மவர்களும் அந்தப் பெண்ணுடன் ஆடுவது சரியல்ல. அந்த அந்த கல்சரில் இருப்பவர்கள்தான் அதனைச் செய்யமுடியும்.

      Delete
    3. உண்மைதான் நெல்லைத்தமிழன், அதிலும் யாராவது புதிதாக நம்மோடு அறிமுகமாகும் நம்மவர் ஒருவர் கை கொடுத்தால் பறவாயில்லாமல் இருக்கும்.. நன்கு பழகியவர்கள்.. தந்தால் பெரும்பாடாகிடும்:)..

      //அப்புறம் ஒவ்வொருவராக அவளுடன் ஆடினார்கள். அவள் கணவனும் அங்கிருந்தான்.//

      வெள்ளையர்களிலும் இது சகஜம்தானே.. ஆனா அவர்கள் லிமிட் வைச்சிருப்பினும். இப்போ நம்மவர்களும் ஏதும் பார்ட்டி எனில் ஆடுகிறார்கள்தானே.. ஆண்கள் கூச்சப் படுவார்கள் பெண்கள்தான் அட்டகாசம்:).. எனக்கு எழும்பி நடக்கவே கூச்சமாக இருக்கும்:).. இவர்கள் எப்படித்தான் ஆடுகிறார்களோ என நினைப்பேன்.

      இப்போ வெளிநாடுகளில்.. பழைய மாணவர்கள் சங்கம் என, ஒன்று கூடல் ஒவ்வொரு வருடமும் நடக்கும் (இலங்கை)... அப்போ இம்முறை கனடா போனபோது அண்ணியின் கொலீஸ் கெட்டுகெதர் நானும் போயிருந்தேன்.. அது லேடீஸ் கொலீச் என்பதால் எல்லாம் பெண்கள்தானே..

      முடிவில் பல பெண்கள் சூப்பரா[சாறியுடன்] ஆடினார்கள்.. ஏனைய ஆண்கள் கணவன்மார் எல்லாம் விசில் அடிச்சு ரசித்துக் கொண்டிருந்தார்கள்.. ஹா ஹா ஹா..

      Delete
    4. அதிரா உங்கள் கருத்துப்படி வெளிநாட்டவர்களுக்கு மட்டும் கை கொடுப்பிங்க ஹக் பண்ணுவீங்க இந்தியர்கள் என்றால் இளக்காரம் அப்படிதானே இந்திய ஆண்கள் சார்பாக உங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துபடும் என்று எச்சரிக்கிறேன்

      Delete
  12. அதிராவிற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. கோபு அண்ணனை மிரட்டிப் பார்த்து விட்டேன்:)), வெருட்டிப் பார்த்து விட்டேன்:), கோபிச்சும் பார்த்து விட்டேன்:)..
    கொமெண்ட்ஸ் ஐ உள்ளே அனுப்பக்கூடாது அப்படி அனுப்பினால் வெளியிட மாட்டேன், நீங்க நேரடியா இங்கு வந்து போடுங்கோ.. அல்லது உங்கள் மெயில் ஐடி + பாஸ்வேர்ட்:) தாங்கோ.. நானே போட்டு விடுகிறேன் என:))...

    பதிலுக்கு அவரும் மிரட்டுறார்.. இல்லை இப்படித்தான் அனுப்புவேன் நீ போடத்தான் வேணும் என:)).. கெஞ்சினால் மிஞ்சுறார்:).. மிஞ்சினால் கெஞ்சுறார்:)) அப்போ கோபு அண்ணனை என்ன பண்ணலாம்?:))...

    இருப்பினும் என்னைப் புகழ்ந்து வேறு எழுதியிருக்கிறார்:)) அப்போ எப்பூடி வெளியிடாமல் இருப்பேன்ன்ன்.. ஹா ஹா ஹா.... சரி இப்படியாவது அவர் வலையுலகில் நம்மோடு இருக்கட்டும் காணாமல் போயிடாமல் என நினைத்து சந்தோசப்படுகிறேன்ன்.. இதோ அவரது பின்னூட்டம்...:

    ////வந்திட்டுதோ கிறிஸ்மஸ்?:)/////

    //நேற்று இங்கு ஒரு ஸ்கொட்டிஸ் நண்பி, அவவுக்கு கிஃப்ட் எடுத்துப் போனேன் குடுக்க... வீட்டுக்குள் போய் கிஃப்ட் பாக்கை கையிலே கொடுத்தேன், வாங்கி வைத்து விட்டு என்னை இறுக்கிக் ஹக் பண்ணியபடியே சொன்னா... “எனக்கு உன் நட்புக் கிடைச்சதுதான் மிகப் பெரிய கிஃப்ட்... உன்னை விட எனக்கெதுக்கு இந்தக் கிஃப்ட் எல்லாம்” என.... அவவின் கைக்குள்ளேயே நெய்யா உருகிட்டேன்ன்ன்:)).. ஹா ஹா ஹா முறைக்காதீங்க:).//

    அவங்க உங்களை ஹக் செய்ததையோ, நீங்க உடனே நெய்யா உருகினதையோ நினைத்து நான் முறைக்கவில்லை. அவங்களுக்கு நீங்க கிஃப்ட் எடுத்துட்டுப் போனதாகச் சொல்வதை மட்டும் என்னால் நம்பவே முடியலை. இருப்பினும் நம்பிட்டேன். :)

    நல்லார் ஒருவர் உண்டென்றால் அவர் பொருட்டு எல்லோருக்கும் மழை பெய்யுமாம்.

    எல்லோரும் உங்களைப் போலவே நல்லவர்களாக இருந்துட்டா ..... போச்சு ..... மழை கொட்டித் தீர்த்து ..... எங்கும் ஒரே வெள்ளமாகி விடும். அது மிகவும் ஆபத்து.

    அதனால் ஊருக்கு மூவர் மட்டும் நல்லவராக இருந்தால் போதும். மாதம் மும்மாறி பொழிந்து விடும்.

    இந்தப்பதிவினைப் படித்ததும் எனக்கோர் கதை நினைவுக்கு வருகிறது. அது தொடரும் >>>>> அதனால் ஜாக்கிரதை :)

    அன்புடன் கோபு அண்ணன் ////

    ReplyDelete
    Replies
    1. மாதம் மும்மாறி பொழிந்து விடும்.// = தவறு
      (எழுத்துப்பிழையாகி விட்டது)

      //மாதம் மும்மாரி பொழிந்து விடும். // = சரி

      தயவுசெய்து இதையும் அந்த முதல் பின்னூட்டத்திற்கு அடியில் கரெக்ட்டாக பப்ளிஷ் செய்து விடவும்.

      ’மாரி’ என்னும் சொல் ’மாறி’ என மாறி விழுந்து விட்டது. அதற்காக வருந்துகிறேன்.

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
    2. கோபு சார் இடுகைகளோ பின்னூட்டமோ எழுத விரும்புவதில்லை. நான் அதை உணர்ந்துகொண்டேன். அதனால் வற்புறுத்தவேண்டாம் என்று தோன்றிவிட்டது.

      மும்மாறி - என்பதைக் கூட பொருள் உள்ளதாக அர்த்தம் கொள்ள முடியும். மழைதான் எந்தவித ஒழுங்கும் இல்லாமல் மாறி மாறிப் பொழிகிறதே.

      ஆனாலும் அதிரா - நீங்கள் ஒரு நாள், கோபு அண்ணன் என்பதற்குப் பதிலாக, எழுத்துப்பிழை விட்டு, கோபி அன்னான் என்று போட்டுவிடப்போகிறீர்கள். அவர் எப்படி தமிழ் இடுகைகளையெல்லாம் படிக்கிறார் என்று நாங்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளப்போகிறோம்.

      Delete
    3. ///கோபி அன்னான்// இப்பெயர் எங்களிடத்திலும் பிரபல்யம்:) இவரைக்கூட நான் கொஃபி அண்ணா எண்டெல்லோ உச்சரிப்பேன்:) ஹா ஹா ஹா:)..

      Delete
  14. /////ஒரு கிராமம். அங்கு ஒரு கோயில். அன்று பலத்த மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. இடியும் மின்னலும் மிக அதிகமாகவே உள்ளது.

    கிராமத்தார் சுமார் நூறு பேர்கள் அந்தக் கோயிலுக்குள் இடி-மின்னல்-பலத்த மழைக்கு பயந்துகொண்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.

    கோயிலின் எதிரே ஓர் மிக உயரமான ஒற்றை மரம் வளர்ந்துள்ளது.

    நூறு பேர்களில் ஒரு முதியவர் சொல்கிறார்:

    ”பொதுவாக இடி விழுந்தால், அந்த கோயிலுக்கு எதிரே உள்ள மரத்தின் மீதுதான் விழும்;

    நல்லார் ஒருவர் இருந்தால் அவர் பொருட்டு எல்லோருக்கும் மழை பொழிவது போல, நம்மில் கெட்டவர் யாராவது இருந்தால் அவர் பொருட்டு இடி இங்கு விழுந்து நாம் எல்லோருமே காலியாகி விடுவதற்கான வாய்ப்புகள் உண்டு;

    அதனால் நம்மில் யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்பதை இப்போது சுலபமாக பரிசோதித்து விட வேண்டும்” எனச் சொல்லுகிறார்.

    “அதற்கு நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என அனைவரும் மிகுந்த ஆவலுடன் அந்த முதியவரிடம் ஆலோசனை கேட்கின்றனர்.

    ”நம்மில் ஒவ்வொருவராக அந்த எதிரில் உள்ள மரத்தைப் பிடித்து ’ஹக்’ செய்து விட்டு வர வேண்டும். அவர் கெட்டவராக இருந்தால் உடனே இடி விழுந்து அந்த மரமும், அவரும் காலியாகி விடுவார். மீதிப்பேர்களாகிய நாம் தப்பித்து விடலாம் என்கிறார்.

    அனைவரும் இதற்கு ஒத்துக்கொண்டு ஒவ்வொருவராகப் போய் அந்த மரத்தை ‘ஹக்’ செய்து கட்டிப் பிடித்துவிட்டு, கோயிலுக்குள் திரும்ப ஓடி வந்து ஒரு பக்கமாக தனியே நின்று விடுகின்றனர். இதுபோல 99 பேர்கள் போய் மரத்தைக் கட்டிப்பிடித்து விட்டு வந்து விடுகின்றனர். அதுவரை எந்தவொரு ஆபத்தும் நிகழவில்லை.

    இப்போது அந்த மீதியுள்ள 100-வது ஆசாமியின் முறை வந்துவிட்டது. அவருக்கு மிகுந்த பயம் ஏற்படுகிறது. மனதில் ஏதேதோ, தேவையில்லாத எண்ணங்கள் ஏற்பட்டு மிகவும் கவலையுடன் உள்ளார். மரத்தின் அருகே போய் வர அஞ்சி நடுங்குகிறார். மற்றவர்கள் சும்மா இருப்பார்களா? அவரை வற்புருத்தி கோயிலிலிருந்து வெளியேற்றி மரத்தின் அருகே போய்வர அனுப்பி வைக்கின்றனர்.

    ’நம்மாளு’ மிகவும் நடுங்கியபடியே மரத்தைப் போய்த் தொட்டாரோ இல்லையோ ...... அதி பயங்கரமான இடி ஓசையுடன், பலத்த இடி ஒன்று விழுந்தே விட்டது.

    - கோபு அண்ணன் >>>>> தொடரும் >>>>>
    /////

    ReplyDelete
    Replies
    1. கதையின் தொடர்ச்சி (பகுதி-2)

      பலத்த அந்த இடி விழுந்தது மரத்தின் மீதோ அந்த 100-வது நபர் மீதோ அல்ல.

      பலத்த இடி விழுந்தது அந்தக் கோயிலின் மீது மட்டுமே. கோயிலில் இருந்த அனைவரும் (99 பேர்களும்) ஒட்டு மொத்தமாகக் காலியாகி விட்டனர்.

      மரத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரேயொரு நல்லவர் மட்டும் உயிருடன் தப்பித்து விட்டார்.

      -oOo-

      இது எப்படி இருக்குது?

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
    2. கோபு சார் கதை நல்லா இருக்கு. இருந்தாலும், கோவிலில் இடி விழுந்தது என்று சொல்லி முடித்தது நன்றாக இல்லை.

      'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு' என்பதுபோல, கோவிலில் சான்னித்தியம் இருப்பதால், அதில் இடி விழ முடியுமா?

      இன்னொன்று, கோபு சார்.. எழுத்துப் பிழை இருக்கக்கூடாது என்று மிக மிக கவனமாக இருப்பார். தவறி இருந்துவிட்டால், யார் சுட்டிக்காட்டினாலும், உடனே சரி செய்வது மட்டுமல்ல, சுட்டிக்காட்டி எழுதிய இடுகையை வெளியிட்டுவிட்டு, 'ஆமாம் தவறுதான். இப்போது சரி செய்துவிட்டேன்' என்று சொல்லுவார். இது ஒரு நல்ல குவாலிட்டி அவரிடம்.

      Delete
    3. இது நெல்லைத்தமிழன் சின்னனில் எனக்கு அப்பா சொன்ன கதை இது. அதைக் கோபு அண்ணன் கொஞ்சம் மாற்றி விட்டார் என் போஸ்ட்டுக்கு ஏற்றதுபோல கர்:))... அப்பா சொன்னார்.. ஒரு கட்டிடம் எனவும்... தூர இருக்கும் ஒரு மரத்தைத்தொட்டு விட்டு வரோணும் எனவும்:).. கோபு அண்ணன் அதைக் ஹக் பண்ணி வரோணும் என மாற்றி விட்டார் கர்:)).. அது கோயில் அல்ல ஒரு கட்டிடம்:)..

      Delete
    4. //'ஆமாம் தவறுதான். இப்போது சரி செய்துவிட்டேன்' என்று சொல்லுவார். இது ஒரு நல்ல குவாலிட்டி அவரிடம்.//

      இது உண்மைதான்..

      நான் என் போஸ்ட்டில் விடும் எழுத்துப் பிழைகளை, ஆரும் சுட்டிக் காட்டினால்.. கவனத்தில் எடுப்பேன் போஸ்ட்டில் மாற்றுவதில்லை.. ஏனெனில், பின்னொருநாளில் ஆராவது போஸ்ட்டையும், அச் சுட்டிக்காட்டிய கொமெண்ட்டையும் படித்தால்.. சரியாத்தானே இருக்கு எதுக்கு சுட்டிக் காட்டுகிறார்கள் என நினைச்சாலும் என்று:))

      Delete
    5. இவ்ளோ கஸ்டப்பட்டு ரைப் பண்ணிக் கதை அனுப்பிய கோபு அண்ணனுக்கு நன்றி சொல்ல மறந்திட்டேன்ன்.. மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.. உங்கள் மெயில் ஐடியையும் பாஸ்வேர்ட்டையும் எப்போ தரப்போறீங்க?:)

      Delete
  15. ஊசிக்குறிப்பை எங்கேருந்து தேர்வு செய்யறீங்களோ! அருமை! தத்துப்பித்துவம் எல்லாமும் நல்லா இருக்கு. படங்கள் வழக்கம் போல் தேர்ந்த ஃபோட்டோகிராஃபரால் (அதிரா இல்லை) ஹிஹிஹி, எடுக்கப்பட்டிருக்கின்றன. அது சரி, கிறிஸ்துமஸ் பலகாரங்கள் படமே இல்லை? கடையிலே வாங்கி மணையிலே வைச்சுட்டீங்களா? என்ன போங்க! கேக் இருக்குமோனு ஆசையோடு ஓடி வந்தேன்! ஏமாத்திட்டீங்களே!:)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதாக்கா வாங்கோ...

      //படங்கள் வழக்கம் போல் தேர்ந்த ஃபோட்டோகிராஃபரால் (அதிரா இல்லை) ஹிஹிஹி, எடுக்கப்பட்டிருக்கின்றன///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

      கிரிஸ்மஸ் க்கு பலகாரம் எல்லாம் செய்வதில்லை கீதாக்கா ஸ்பெஷல் மீல் தான்:)).. பெரும்பாலும் ஃபிரெண்ட்ஸ் கூப்பிட்டு விடுவார்கள். நான் கேக் மட்டும் செய்வேன். இன்றும் பட்டர் கேக் செய்தேன். ஆனா அதிகம் செய்வது இந்த எக்லெஸ் கேக் தான்.. இம்முறை பொருட்கள் வாங்கினேன் ஆனா இன்னும் இது செய்யவில்லை.. முடிஞ்சால் செய்து பாருங்கோ..

      http://gokisha.blogspot.com/2016/02/blog-post_19.html

      நியூ இயருக்கு நண்பர்கள் குடும்பம் கட்டாயம் கேக் அடிச்சு அப்படியே கட் பண்ணாமல் தருவினம்:).. அதனால ஏதும் உறைப்புப் பலகாரம் செய்ய நினைக்கிறேன் பார்ப்போம்.. இம்முறை எல்லோருக்கும் உடல்நிலை நலமில்லை.. ஒரு ஃபீவர் உலாவுது.

      மிக்க நன்றி கீதாக்கா.

      Delete
  16. அன்பின் இனிய கிறிஸ்துமள் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  17. கிறிஸ்துமஸ் ட்ரீ ரொம்ப அழகு. பூசார் கண்ணைத் திறக்காத இருந்த மாதிரி நானும் இருந்து இப்ப தான் கண்ணைத் திறந்தேன்!

    அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட்... ஹா ஹா ஹா உங்களுக்கும் அங்கு ஹொலிடே தானே அதனால லேட்டாக் கண்ணைத் திறக்கலாம்..

      மிக்க நன்றி.

      Delete
  18. அதிரா அக்காவிற்கும் அவர்களின் குடும்பத்திற்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்
    -நன்றி-

    ReplyDelete
  19. இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் . ஊசிக் குறிப்புகள் நச்.கண் கவர் படங்கள் அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ முரளிதரன் வாங்கோ.. முதன்முதலா வந்திருக்கிறீங்க... நல்வரவு மிக்க மகிழ்ச்சி..

      மிக்க மிக்க நன்றிகள்.

      உங்கள் கொமெண்ட், வெயிட்டிங் மொடரேஷனில் போய் நின்றது.. அதனால் எனக்கு தெரியவில்லை.. இப்போதான் பார்த்தேன்.

      Delete
  20. வணக்கம் அதிரா!

    உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி!
    வலையுலக நட்புகள் எல்லோருக்கும் எனது அன்பான இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    படங்கள் நன்றாக இருக்கின்றன. அதிலும் டெய்ஸி அழகு. இதுவெல்லாம் கழுத்தில் மாட்ட விட்டிட்டாவே..:)
    நல்ல பிள்ளைதான்..:) டெய்ஸிக்கு மீராவின் வாழ்த்துக்கள் சொல்லச் சொன்னா!

    ஊசிக் குறிப்புகள் மற்றும் ஊசி இணைப்பும் சிறப்பு!

    வாழ்த்துக்கள் அதிரா!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இளமதி வாங்கோ.. டெய்ஷி எதை மாட்டினாலும் தன்னை ஆரோ பிடிக்கப்போகினம் என ஜம்ப் பண்ணி துள்ளிப் பாய்ந்து ஓடுவா.. இது அவவுக்கு தெரியாது போட்டிருப்பது.. நித்திரையால எழும்பி வந்திருந்தா:))..

      மீரா எப்படி இருக்கிறா? அவவின் படங்கள் எடுத்துப் போடுங்கோவன்..

      மிக்க நன்றிகள் இளமதி.

      Delete
  21. அதிரா பயணத்தில் இருந்ததால் கொஞ்சம் லேட்டூஊஊஊஉ!!

    அதிரா முதலில் மெரி கிறித்துமஸ்!!! கிறித்துமஸ் வாழ்த்துகள்!

    நல்ல நட்புகள் கிடைப்பது என்பது மிக மிக நல்ல விஷயம்...இரண்டாவது நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் நமக்குக் கிடைக்கும். அதற்கு மிகச் சரியானது உங்களின் ஊசிக்குறிப்பு!! ஆம் அனைத்தையும் ரசிக்கத் தெரிந்தால் வாழ்க்கையையே ரசிக்கலாம்...யெஸ் மீ டூ!!! எனக்குக் கிடைத்திருக்கும் நட்புகள் அனைத்தும் நல்ல நட்புகள்....நல்ல உள்ளங்கள்...என் கஸின்ஸ் எல்லோரும்!!!

    கிறித்துமஸ் ட்ரீ சூப்பர்! அழகு!! படங்கள் எல்லாமே நல்லாருக்கு அதிரா..

    கீதா..

    துளசி உங்களுக்கு வாழ்த்துகள் சொல்லச் சொன்னார்....அவர் கிறித்துமஸ் லீவில் வீட்டில் இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ...

      நினைச்சேன் பயணம் போய் விட்டீங்கள் என. உண்மைதான் நல்ல நட்பு கிடைப்பதும் கஸ்டம், அப்படிக் கிடைத்துவிட்ட நட்பை கைவிட்டுப் போயிடாமல் பாதுகாக்கவும் தெரிஞ்சிருக்கோணும்...

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கீதா.. துளசி அண்ணனுக்கும் நன்றி சொல்லிடுங்கோ. ஏன் துளசி அண்ணன் வீட்டில் இருந்து நெட் பாவிப்பதில்லையோ?..

      Delete
  22. எங்கள் தெருவில் ஸான்டா வந்தார்!! ப்ளெஸ்ஸிங்க் கொடுத்தார்!!

    டெய்ஸி ரொம்ப க்யூட்!!!!! ஜெஸி போலவே இருக்கா!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓம் ஊரில் ரோட்டு ரோட்டா வீடு வீடாகப் போவர்கள் என்ன? மறந்திருந்தேன் அதை... சந்தோசம்..

      //ஜெஸி போலவே இருக்கா!!! /// ஹா ஹா ஹா இப்பூடிச் சொல்லாட்டில் கல்லெறி வந்திடும் எனப் பயம்போல:))

      Delete
  23. அதிரா அண்ட் ஏஞ்சல் ப்ளம் கேக் பேக் செய்தேன்!!! அஃப்கோர்ஸ் வித்தவுட் ரம் அண்ட் எக்!!! ஃபோட்டோ எடுக்காம விட்டுட்டேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓ கீதா.. பிளம் கேக் நான் செய்ததில்லை... எக்லெஸ் +டேட்ஸ் கேக் செய்வேன் அடிக்கடி.. மேலே கீதாக்காவுக்கு லிங் குடுத்திருக்கிறேன் பாருங்கோ..

      எதுக்கு ஃபோட்டோ எடுக்கவில்லை கர்ர்:). மிக்க நன்றிகள் கீதா.

      Delete
  24. எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இளங்கோ அண்ணன் வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி...

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      Delete
  25. அதிரா லேட் நான் தான் கடைசி ஒட்டு என்னுதாதான் இருக்கும் ஹா ஹா ரொம்ப பிஸியாகும் :-) நெய்யா உருகிட்டீங்களா............... பனியில் நல்லகாலம் அவங்க அவங்க வீட்டு சமையலுக்கு எடுத்துக்கலைனு தெரியுது உங்க பதிவில் இருந்து திரும்பிட்டீங்கனு (கர்ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் ர் அப்பா எவ்வ்ளவு மொக்கைனு நீங்க சொல்லமாட்டிங்க ஏன்னா நம்மாளுக்குத்தான் பழகமாச்சே கர் ர் ர் ர் ர் ர் ர் திரும்பவும் செய்ய போறீங்க)ஹா ஹா ஹா
    ஊசி குறிப்பும் ஊசி இணைப்பும் செம
    உங்களுக்கும் இங்கு வருகை புரியும் அனைத்து தோழமைகளுக்கு கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூவிழி வாங்கோ... ஹொலிடே நாட்களில் எல்லோரும் பிஸிதானே அதனால குறை ஒன்றுமில்லை.. தாமதமானாலும் வந்து கொமெண்ட் + வோட் போட்டது மிக்க மகிழ்ச்சி. நான் இப்போதெல்லாம் அடிக்கடி நெய்யா உருகிறேன்:)..

      Delete
  26. வணக்கம் !

    அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துகள் !

    அலட்டல் இல்லாத பதிவு கூட அழகுதான் படங்கள் அத்தனையும் அருமை ஊசிக்குறிப்பு செம ஊசி இணைப்பு தத்துவம் நம்பர் வன் எல்லாம் அருமை ஆமா அடிக்கடி தேம்ஸ்ல ஜம் பண்ணுவேன் என்று சொல்வீங்களே அந்த ஜன்னல் ஊடாகத் தெரிவதுதான் தேம்ஸ் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அழகான சூழல்

    காலையில் கண் திறந்ததே தமனா ல தான்

    படத்துக்கு மட்டும் கவிதை தேவை இல்லைத்தானே பூசாரே !

    வாழ்க நலம் !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ..

      //அலட்டல் இல்லாத பதிவு கூட அழகுதான்///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ இவ்ளோ காலமும் என் பதிவில் அலட்டுகிறேன் எனச் சொல்லுறீங்களோ?:) விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்:)).. கிரிஸ்மஸ் என்றாலும் பறவாயில்லை.. முன்னே வச்ச காலைப் பின்னே வைக்க மாட்டேன்ன்ன்ன்:))..

      ///அடிக்கடி தேம்ஸ்ல ஜம் பண்ணுவேன் என்று சொல்வீங்களே அந்த ஜன்னல் ஊடாகத் தெரிவதுதான் தேம்ஸ் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ///

      ஹா ஹா ஹா மீ இதிலெல்லாம் ரொம்ப விபரமாக்கும்:).. இதில் தெரிவது ஸ்கொட்லாண்ட் ஆறு:) பெயர் இருக்கு சொல்ல மாட்டனே:)).. தேம்ஸ் இருப்பது லண்டனில்:)...

      பக்கத்து ஆறில் குதிப்பேன் என்றால்.. இப்பவே குதி எனத் தள்ளி விட்டாலும் விட்டிடுவினம் எல்லோ:)).. அதனால இதில மீ ரொம்ப உஷார்ராகி தூர இருக்கும் தேம்ஸ் ஐத்தான் சொல்லுவேனாக்கும்:)) ஹா ஹா ஹா:)..

      //காலையில் கண் திறந்ததே தமனா ல தான் // ஹா ஹா ஹா நன்றி நன்றி பார்த்தேன்.. எல்லோராலும் எனக்கு மகுடம் கிடைச்சு விட்டதே:)..

      இல்லை இம்முறை கவிதை வேண்டாம் ரெஸ்ட் எடுங்கோ:)).. சில போஸ்ட் பார்த்தவுடன் கவிதை வரும்.. அப்போ எழுதிடுங்கோ... மிக்க நன்றிகள்.

      Delete
  27. கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் அதிரா....

    குட்டி குதிரையும்....அலங்கா ரங்களும்... வெகு அழகு....

    ReplyDelete
  28. படங்கள் அழகு
    இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம=1

    ReplyDelete
  29. கொத்தாகப் பூக்கள் கொடுக்குன்றேன் அதிரா
    நத்தார்நல் வாழ்த்துக்காய் நானும் - தமிழ்
    முத்தாகப் பாக்கள் மொழிகின்றேன் சோலை
    முகைதன்னில் வழிந்தோடும் தேனும் !

    வித்தாக அன்பை விதைக்கின்ற அதிரா
    வியந்தோங்க வாழ்த்திங்கு சொல்வோம் - இன்பம்
    சொத்தாக வாழ்வில் சுடர்ந்தோங்கப் பாசம்
    சொரிந்திங்கு நட்பெல்லாம் வெல்வோம் !

    ஏதோ எழுதாத குறைபோல உள்ளத்தில் வெறுமை அதுதான் இந்த கிறுக்கல் கைப்பேசியில் இருந்து
    ங்ஙே.......,,,,,,

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஆஹா கவிதையோடு மீள் வருகை தந்திருக்கும் மேஜருக்கு மிக்க நன்றிகள்... உண்மைதான் சிலநேரம்.. நாம் செய்ய நினைத்ததைச் செய்யவில்லையாயின் மனதில் ஏதோ குறை இருப்பதைப்போல தோணும்:)..

      ////வித்தாக அன்பை விதைக்கின்ற அதிரா///
      ஹா ஹா ஹா இந்த வரி மட்டும் நல்லாப் புரிஞ்சுடுச்சூஊஊஊ:)).. ஆனா மெதுவாப் பேசுங்கோ இங்கின பலபேர் என்னை அடிச்சுக் கலைப்பினம்... :) .. அடிதடி:) அதிராவெல்லோ:) இதில எங்க இருக்கு அம்பு சொறி அன்பு என:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி _()_.

      Delete
    2. சீராளன் - நீங்கள் தவறு விட்டிருந்தாலும் அதிலும் அர்த்தப் பிழை வரவில்லை.

      "கொத்தாகப் பூக்கள் கொடுக்குன்றேன் அதிரா" - கொடுக்கின்றேன் என்றுதான் நீங்கள் எழுத நினைத்தது எனத் தோன்றுகிறது. ஆனாலும், 'கொடுக்குன்றேன்' என்பது "கொடுக்கும் தேன்" என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது பூக்கள் கொத்தைக் கொடுக்கும் தேன்போன்ற இனிவர் அதிரா என்றும் பொருள் கொள்ளலாம் (உண்மையில்லாவிட்டாலும் :-) )

      கிறிஸ்துமஸ் பண்டிகையை நத்தார் பண்டிகை என்றா சொல்லுவீர்கள்?

      Delete
    3. நானும் கவனிச்சேன் நெல்லைத்தமிழன், ஆனா அது மொபைலில் எழுதுகிறேன் எனப் போட்டார், அதனால எழுத்துப்பிழை என விட்டேன்.

      ///அதாவது பூக்கள் கொத்தைக் கொடுக்கும் தேன்போன்ற இனிவர் அதிரா என்றும் பொருள் கொள்ளலாம் (உண்மையில்லாவிட்டாலும் :-) )///
      அச்சச்சோஓஓஓஓஒ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதைத்தட்டிக் கேய்க்க இங்கின ஆருமே இல்லயோ?:))... தானும் புகழாயினம்:) புகழ்வோரையும் விடாயினமாமே:))... எனக்கு இப்போ எந்தப் பயமொயியும் இங்கின நினைவுக்கு வரவில்லை:) ஹா ஹா ஹா:).

      யேஸ் நெல்லைத்தமிழன், எனக்கு ஊர் நினைவு வருது.. ஊரில் நத்தார் பண்டிகை எனத்தான் தமிழில் சொல்வோம்:))

      Delete
    4. அதிரா - உங்களுக்கு நினைவு வராத பழமொழி

      "நாய் பெற்ற தெங்கம் பழம்"

      நாய், தேங்காயை உருட்டி விளையாடும். அது தானும் சாப்பிடாது. யாரையும் தொட விடாது. சிலர், தானும் புகழமாட்டார்கள், புகழ்வாரிடத்திலும் குற்றம் கண்டுபிடிப்பார்கள், புகழ விடமாட்டார்கள்.

      Delete
    5. மன்னிக்கவும் நெல்லைத்தமிழன் மற்றும் அதிரா

      கொடுக்கின்றேன் என்பதுதான் சரி தட்டச்சுப் பிழைதான் பொறுத்தருள்க இந்த உ வும் இ யும் விசைப்பபலகையில் பக்கத்தில் பக்கத்தில் இருந்து
      காலை வாரிவிடுகிறது சில நேரங்களில்

      Delete
    6. //நெல்லைத் தமிழன்Wednesday, December 27, 2017 9:46:00 am
      அதிரா - உங்களுக்கு நினைவு வராத பழமொழி

      "நாய் பெற்ற தெங்கம் பழம்"//

      இல்ல இது எனக்குப் புதுசு:).. நான் சொன்னது வைக்கோலுடன் சம்பந்தப்படுத்தி வரும்:).. வேணுமெண்டால் வேறு எங்காவது சொல்கிறேன் உங்களுக்காக:)... ஹா ஹா ஹா.

      ஹையோ சீராளன் இதுக்கு மன்னிப்பெல்லாம் எதுக்கு... எழுத்துப்பிழை வருவது நோர்மல் தானே.. நாங்கள் கவிதையை பின்னிப் பிரிச்சு மேஞ்சோம் அவ்வளவே ஹா ஹா ஹா:).

      Delete
  30. கிறிஸ்மஸ் மரத்தை அழகாக டெகரேட் செய்திருக்கீங்க. (1வது படம் மிக அழகு) படங்கள் அழகாக இருக்கு. வா.வ் டெய்சி அழகா இருக்கா. ஊசி இணைப்பு எல்லாமே மிக அருமை..
    உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள் (தாமதமான)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. எங்கடா அம்முலுவைக் காணல்லியே.. எங்கயோ போயிட்டாபோல எனத்தான் நினைச்சேன்ன்ன்.. துருக்கி போனீங்களோ.. அப்போ போட்டோக்கள் போடுங்கோ விரைவில்.

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
  31. //குட்டிக் குதிரைகள்// மட்டக் குதிரைகள்! இப்பிடி ஒண்டில‌ தானே மரியாளை ஏற்றிக் கொண்டு சூசை ஏடரோதுட்ட‌ இருந்து இரவிரவா எஸ்கேப் ஆகினவர்!! இதைத்தான் கோவேறு கழுதை எண்டுறதோ!! யாராவது தெரிஞ்சால் சொல்லுங்கோ.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் றீஈஈஈஈஈச்சர் வாங்கோஓஓஓஒ...
      ஓ அப்படி ஒரு கதை இருக்கோ?.. இருப்பினும் என் குதிரைக் குட்டீஸ் ஐ:) கோவேறு கழுதை எண்டமைகு என் வன்மையான கண்டனங்கள் றீச்சர்ர்:))

      Delete
  32. Replies
    1. ஹை யாலீஈஈஈஈஈ:) ஹா ஹா ஹா மிக்க நன்றி இமா. அதுசரி எதுக்கு இவ்ளோ நீட்டி விட்டீங்க பெயரை:).. காணாமல் போயிடக்கூடாது எண்டோ?:)..

      Delete
  33. அதிரா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் உற்றார் உறவினர் நட்பூக்கள் அனைவருக்கும் எங்கள் இருவரின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    துளசிதரன், கீதா

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.