நல்வரவு_()_


Thursday, 14 December 2017

மீ.. பஸ்ல போய்.. ஊஞ்சல் ஆடினேனே:)

ங்கு எங்களுக்கு பஸ்  இல் ஏறும் வாய்ப்பே கிடைப்பதில்லை, வெளி நாடுகளுக்குப் போனால் மட்டுமே பஸ் இலும் ஏறுவதுண்டு, இங்கு அப்படித்தேவைப் பட்டால் ரக்‌ஷிதான்.

அதனால பஸ் இல் போவதெனில் சரியான விருப்பம் எனக்கு. ஆனா எங்கள் ஊருக்கு வரும் பஸ், காரில் 15 நிமிடத்தில் வந்திடும் தூரத்தை, இது 45 நிமிடங்கள் எடுக்கும் வந்து சேர.. ஊரெல்லாம் சுத்திச் சுத்தி வரும்:)).. அவசரமில்லை எனும் நேரங்களில், பஸ் எனில் ஹப்பியாக எஞ்சோய் பண்ணி வரலாம்.

ங்கள் வீடு இருப்பது முழுக்க முழுக்க வீடுகள் மட்டுமே இருக்கும் ஏரியா என்பதனால, எங்கள் ஊர் பஸ்ஸில் ஆட்கள் இருக்க மாட்டினம், அதிலயும், எப்படி எனில், எங்கள் ஏரியாவில்.. வரும் வாகனங்கள் ஒரு டவுண்ட் அடிச்சு, மீண்டும் வந்த வழியாலேயே திரும்பிப் போகும்...

வீட்டில் வலது பக்க ரோட்டால் பஸ் வந்து பின்பக்க மலை ரோட்டால் இடது பக்கம் போய், அப்படியே ரவுண்ட் அடிச்சு , வீட்டின் முன்பக்கம் வரும், வீட்டின் முன்னாலேயே பஸ் ஹோல்ட் உம் இருக்கு.  எங்கள் கிச்சின் விண்டோவில் நின்று பார்த்தால்,  பின் ரோட்டால்[சில வீடுகள் தாண்டி] பஸ் போவது தெரியும்.. முன்பக்க ஹோல்ட் க்கு சுற்றி வர.. 6,7 நிமிடங்கள் எடுக்கும்... விண்டோவால பார்த்திட்டே ஹோல்ட் க்கு ஓடலாம். ஆனா இங்கு ரைம் என்றால் ரைம் க்கு பஸ் வந்து ஹோல்ட் இல் நிக்கும்...

இங்கு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பஸ் ஃபிரீ:).. அதனால வயதானோர் மட்டுமே பஸ் இல் இருப்பார்கள்.. ஏனையோர் எல்லாம் கார் தானே. சமீபத்தில் ஒருநாள் வேறு வழி இன்றி பஸ் எடுக்க வேண்டி ஏற்பட்டது:).. என் சந்தோசத்துக்கு அளவேயில்லை...

பஸ் இல் போகும்போது ஓவர் உணர்சிவசப்பட்டுப் பல படங்கள் எடுத்தேன்:) அதில் சில...
இது ஒரு 300 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சென் மேரிஸ் சேஜ்..



============================ஒரு குட்டி இடைவேளை:)============================
எல்லோரும் கண்ணை மூடுங்கோ.. அதிரா அன்ன ஊஞ்சல்:) ஆடுறா:)).. ஆடுவது அதிரா.. ஆட்டுவது யாரோ...:).. ஹா ஹா ஹா இது இந்த யூலையில் அக்கா வீட்டில் ஆடியபோது:))
==============================================================================
இவை எங்கள் வீட்டு முற்றத்திலே இருந்து.. பனிமலை தெரியுதெல்லோ.. பெரிதாக ஸ்னோ வரவில்லை.. மலைகளில் மட்டும் விழுந்திருக்கு..

இடது பக்கத்தில் வானவில் தெரியுதோ?.. பாருங்கள் எங்கள் வீட்டில் வெயில் இல்லை, மலையிலே வெயில் கர்ர்ர்ர்ர்:).


ஊசி இணைப்பு:
இது இலைகள் உதிர முன் எடுத்தேன், இரண்டு மரங்களும் இரு நிறங்களில்.. இதில் இந்த பிரவுண் கலர் இலைகள் எப்பவுமே இதே கலரிலதான் இருக்கும், இதனை எப்ப பார்த்தாலும் எனக்கு முதலில் நினைவு வருவது [பிரியசகி] அம்முலுதான்:)). ஏனெனில் முன்பு ஒரு காலத்தில நான் இதேபோல ஒரு படம் போட்டுச் சொன்னேன் இங்குதான், இந்த மரத்தில கண்ணை வைத்துக் கொண்டு திரிகிறேன், இதன் இலைகள் எப்போ மஞ்சளாகும் என என்று... அதுக்கு அம்முலு சொன்ன பதில் “கண்ணை எடுங்கோ அதிரா, அவை மஞ்சளாகாது”:)) ஹா ஹா ஹா:))

ஊசிக்குறிப்பு:
அதிராவின் Diary இலிருந்து:)
==========================================================

நன்னி.. நன்னீஈஈ:)

==========================================================

111 comments :

  1. உங்களுக்காகச் சொல்றேன். Unless we are destined, we dont meet each other in this life. நாம எந்த உயிரையும் சந்திக்க ஒரு காரணம் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன்... முதலாவதா இம்முறை வந்திருக்கிறீங்க..

      நீங்க சொல்வது உண்மைதான், ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் நிட்சயம் இருக்கும், ஆனா பல நேரங்களில் எம்மால் காரணம் கண்டுபிடிக்க முடிவதில்லை.. நான் நினைப்பேன் மனிதர் மட்டுமென்றில்லை.. இப்போ டெய்சி கூட, நம்மோடு நம் குழந்தைபோல ஒட்டி வளர்கிறதே.. ஏதும் முற்பிறப்புக் கனெக்‌ஷனாக இருக்குமோ என்றெல்லாம்.

      Delete
  2. சிறிது பனி விழுந்த மலை, மற்ற படங்கள் (இயற்கைக் காட்சிகள்) நல்லா வந்திருக்கு.

    ReplyDelete
    Replies
    1. என் மொபைலில்தான் யூம் பண்ணி எடுத்தேன்:).. மிக்க நன்றி உடன் வருகைக்கும் கருத்துக்களுக்கும்.

      Delete
  3. அஆவ் !!1 நான் வந்திட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ... அஞ்சுக்கு ஏதாவது குடுக்கோணுமோ?:)).. ஆஅங்ங்ங்ங் ஒரு பஸ் ரிக்கெட் இருக்கூஊஊஊஊஊஉ:)) இந்தாங்கோ அஞ்சு இதைக் காட்டினால் ஃபிரீயா ஏத்துவார்கள்:))

      Delete
  4. பாவம் ஐஸுக்கு குளிராதா ??? :) இவ்ளோ பெரிய ஜன்னலோட குளிர்ல கொட்டுற மழையில் ஆடுறாங்க :))

    ReplyDelete
    Replies
    1. ஓஒ நீங்க “அந்த” ஐஸுவச் சொன்னீங்களோ.. நான் இந்த பனி.. ஸ்னோ ஐஸ் ஐ நினைச்சிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா:)).. குளிரில நடுங்குவது தெரியுதல்ல:)).. இதுக்குத்தான் டயட் பண்ணாமல் ஒயுங்காச் சாப்பிட்டு ஸ்ரெடியா இருக்கோணும்... அதிராவைப்போல:) எனச் சொல்றதாக்கும்:))

      Delete
  5. பஸ்லா போனீங்களா :) நானும் கிட்டத்தட்ட 5 வருஷம் கழிச்சி ரீசண்டா போனேன் :) ஜாலியா இருக்கும் இந்த ஊர் வண்டிங்க
    bendy buses அப்புறம் டபிள் டெக்கர் எனக்கு டபுள் டெக்கர் பிடிக்காது :)
    நீங்க போன பஸ் எம்ப்டியா இருக்கே :)

    ReplyDelete
    Replies
    1. அதுதான் எங்கள் இடம் வரும்போது எப்பவும் ஆரும் இருக்க மாட்டாங்க... பின்னுக்கு ஒராள் இருந்ததா நினைவு. இந்த பஸ் பின் பக்கம் படி படியா ஏறி, சீட் உயரமா இருக்கும்.. அதில ஏறி இருந்து வெளியே பார்க்கும் போது பிளேன் விண்டோ சீட்டில இருக்கும் பீலிங்ஸ் எல்லாம் வரும் தெரியுமோ ஹா ஹா ஹா:)).. அந்நேரம் ஃபோன் பண்ணி ஆரோட எண்டாலும் தனகோணும் எண்டெல்லாம் வருமே:)).. நான் கன்னா பின்னா எனப் போட்டோ எடுத்தேன்:))

      Delete
  6. அந்த பூஸ் உங்க பஸ்ஸில் டிராவல் பண்ணூச்சா :)) இல்லை கூகிள் படமா ?


    //இங்கு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பஸ் ஃபிரீ:).. அதனால வயதானோர் மட்டுமே பஸ் இல் இருப்பார்கள்.. ஏனையோர் எல்லாம் கார் தானே. சமீபத்தில் ஒருநாள் வேறு வழி இன்றி பஸ் எடுக்க வேண்டி ஏற்பட்டது:)..//

    அவசரப்பட்டு வயசை சொல்லிட்டீங்களே பூஸ் .அன்னிக்கு பஸ்ஸில் நீங்களும் இருந்திருக்கீங்க :)))))))

    ReplyDelete
    Replies
    1. எங்க அத்தை அதிரா வயசைப்பற்றி கேலி பேசினால் எங்கள் அங்கிள் ட்ரம்பிற்கு கோபம் வந்திடும் சொல்லிப்புட்டேன்

      Delete
    2. //அவசரப்பட்டு வயசை சொல்லிட்டீங்களே பூஸ் .அன்னிக்கு பஸ்ஸில் நீங்களும் இருந்திருக்கீங்க :)))))))//

      ஹா.... ஹா... ஹா...



      Delete
    3. //அந்த பூஸ் உங்க பஸ்ஸில் டிராவல் பண்ணூச்சா :)) இல்லை கூகிள் படமா ?//

      சே..சே.. அது கூகிள் படம் அஞ்சு:).. அப்படிச் சம்பவம் நான் போகும் பஸ்ஸில் நடந்திருந்தால்.. நான் பேசாமல் இருந்திருப்பேனோ?:)) என் கூக்குரல் அந்தாட்டிக்கா வரை கேட்டிருக்குமே:))..

      இன்று இப்போஸ்ட் போடும் எண்ணம் கூட இருக்கவில்லை.. வேறொரு போஸ்ட் படு பிசியா எழுதத் தொடங்கினேன், முடிக்க நேரம் போதவில்லை.. அதனால டக்குப் பக்கென இதை ரெடி பண்ணிப் போட்டேன்.

      ///அவசரப்பட்டு வயசை சொல்லிட்டீங்களே பூஸ் .அன்னிக்கு பஸ்ஸில் நீங்களும் இருந்திருக்கீங்க :)))))))///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் ரிக்கெட் எடுத்தேனாக்கும்:)).. இப்பூடி அநியாயம் நடக்கும் எனத் தெரிஞ்சிருந்தால்ரி:) ரிக்கெட்டை கிழிக்காமல் இங்கு போட்டிருப்பேனே:)).. 2.90 பவுண்ட்ஸ்:))

      Delete
    4. ///ஸ்ரீராம்.Thursday, December 14, 2017 2:40:00 pm
      //அவசரப்பட்டு வயசை சொல்லிட்டீங்களே பூஸ் .அன்னிக்கு பஸ்ஸில் நீங்களும் இருந்திருக்கீங்க :)))))))//

      ஹா.... ஹா... ஹா...///

      விடுங்கோ விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ:) நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா கர்ர்ர்:))

      Delete
    5. ///Avargal UnmaigalThursday, December 14, 2017 2:04:00 pm
      எங்க அத்தை அதிரா வயசைப்பற்றி கேலி பேசினால் எங்கள் அங்கிள் ட்ரம்பிற்கு கோபம் வந்திடும் சொல்லிப்புட்டேன்///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதை மெலனி ஆன்ரி பார்த்தாவோ அவ்ளோதேன்ன்ன்ன்:)).. என் பேசனல் செக்கரெட்டறி வேலைக்கு உலை வைக்கத்தானே இந்த ஜதி:) த் திட்டம் டீட்டியிருக்கிறீங்க என்னை அத்தையாக்கி:)) கர்ர்:))

      Delete
  7. அந்த சில்லவுட் மாதிரி இலையுதிர்ந்த மரங்கள் செம அழகான படம் சன் செட் டைம் எப்பவும் துல்லியமா அழகா இருக்கும் இயற்கை

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அவற்றைப் படமெடுக்கோணும் என ஒவ்வொரு விண்டரிலும் நினைப்பேன் அஞ்சு, காரில போகும்போது சரியா வருவதில்லை.. இது பஸ் உயரம் என்பதால் அழகா வந்திட்டுது...

      Delete
  8. ஹாஹா :) பூஸ் ஊஞ்சலாடுதோ :) இல்லையே அப்படியே ஸ்டில்லா இருக்க மாதிர்தானே இருக்கு :)
    கேலி பண்ணலாம்ணு தான நினைச்சேன் சரி அந்த அப்பாவி முகத்தை பார்த்தா கிண்டலடிக்க மனசு வரல்ல :)
    looking gorgeous ரெட் சாரியில் ..ஒரு விதடகில் கனடாவை நினைச்ச பொறாமையா யிருக்கு எவ்ளோ வெயில் முந்தி அக்கா வீட்டு தோட்டத்தை பார்த்தே ஆச்சர்யப்பட்டு போனேன் .இங்கே இப்படி hammock போட்டா கூடவே கவர் ரெடியா அவைக்கணும் எப்ப மழைவரும்னு சொல்லவே முடியாதே

    ReplyDelete
    Replies
    1. மரத்தில் ஆடுவது பேய்தான் என்று சொல்லக் கேள்விபட்டிருக்கிறேன் அதை இங்கே நேரில் பார்க்க வாய்ப்பு இங்கேதான் கிடைத்தது... ஆமாம் இந்த பேய் என்ன மேக்கப் போட்டு அழகாக காட்சி அளிக்கிறது ஹும்ம்ம்ம்

      Delete
    2. பாவம் அந்த மரம் அதற்கு வலிச்சுருக்குமல்ல ப்ச்

      Delete
    3. அதிரா மீண்டும் வந்து நீங்க புடவை கட்டியிருக்கும் அழகை பார்த்தேன் ..எனக்கும் புடவைக்கும் ரொம்ப தூரம் :)
      எல்லா வருஷமும் புடவையோடு ஒரு சல்வார் கமீசும் ரெடியா வச்சிப்பேன் மிட்நைட் கிறிஸ்துமஸ் சர்வீஸுக்கு :)
      புடவை ட்ரை பண்ணிட்டு சரியா வரலைனா உடனே சல்வாருக்கு மாறுவேன் :)

      Delete
    4. //ஹாஹா :) பூஸ் ஊஞ்சலாடுதோ :) இல்லையே அப்படியே ஸ்டில்லா இருக்க மாதிர்தானே இருக்கு :)// கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆடினால் சாறிப் பிளீட் எல்லாம் கலைஞ்சிடுமெல்லோ:))..

      ///கேலி பண்ணலாம்ணு தான நினைச்சேன் சரி அந்த அப்பாவி முகத்தை பார்த்தா கிண்டலடிக்க மனசு வரல்ல :)//

      ஹா ஹா ஹா அப்போ அப்பாவி என்பது இன்றோடு கொன்ஃபோமாச்சாஆஆஆ?:) இனி ஆரும் அடிச்சு விரட்ட மாட்டினம்தானே?:) அப்போ அடுத்து என் கொள்ளுப் புட்டைப் போடட்டோஓஓஓஒ?:)) காத்துள்ளபோதே தூற்றிடோணும் என அம்மம்மா ஜொல்லித்தந்தவ:)...

      ///looking gorgeous/// டங்கூ டங்கூ.. ரொம்ப ஷையாகுது எனக்கு:)).

      //ஒரு விதடகில் கனடாவை நினைச்ச பொறாமையா யிருக்கு எவ்ளோ வெயில் முந்தி அக்கா வீட்டு தோட்டத்தை பார்த்தே ஆச்சர்யப்பட்டு போனேன் .//

      உண்மைதான் அஞ்சு.. பாருங்கோ பளிச்சென மின்னுது வெய்யில்.. கண்ணே திறக்க முடியாமல் கூசியது அன்று.. இன்னொரு சாறிப்படத்தில, என் கண் கூசுவதைப்போல வந்திருக்கு அங்கெடுத்த படம் ஒன்று:)).. அவர்கள் கடும் பனியால் கஸ்டப்பட்டாலும் 6 மாதம் சொகுசா வெய்யிலை அனுபவிக்கினம்.. நமக்கு இங்கு வருடம் முழுக்க கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தானே கர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    5. ///அதிரா மீண்டும் வந்து நீங்க புடவை கட்டியிருக்கும் அழகை பார்த்தேன் ..எனக்கும் புடவைக்கும் ரொம்ப தூரம் :)///

      உப்பூடிச் சொல்லி என்னை உசுப்பேத்தினால் என் புடவைப்படம் எல்லாத்தையும் இங்கு போட்டிடுவேன்ன் ஜாக்க்க்ர்ர்தை:)) ஹா ஹா ஹா.

      இல்லை அஞ்சு உண்மையில் எனக்கு கண்ணாடி முன்னால நிண்டு அலங்கரிப்பது ரொம்பப் பிடிக்கும். எங்கள் ஃபிசிக்ஸ் மாஸ்டர் ஒருநாள்.. குழிவாடி.. குவிவாடி என வரும் லைட்ஸ் எனும் சப்டரில் சொன்னார்.. “பெண்களின் வாழ்நாளில் 90 சதவிகிதம், ரெஸ்ஸிங் ரேபிள் முன்னாலேயெ கழிகிறது” என:)) ஹா ஹா ஹா.

      சின்ன வயதிலேயே, அம்மாவின் சாறியைக் கட்டிக் கட்டிக் கழட்டி வைப்பேன்.. அப்படியே பழகியதுதான், ஆனா நாம் சாறி உடுப்பது குறைவு ஊரில் இருப்பினும் நன்றாகக் கட்டுவேன்... ஒரு தடவை எனக்கு ஒரு 16,17 வயதிருக்கும்:)).. [இப்போ சுவீட் 16 ஆக்கும்:)].. பக்கத்து வீட்டு அக்காவை திடீரெனப் பொம்பிளை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என, நான் தான் போய் சாறி கட்டி விட்டேன்.. அவவுக்கு அப்போ 24, 25 வயதிருக்கலாம்... ஆனா கையை மேலே தூக்கிக் கொண்டு நிண்டா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பிளீட்டை செருகக்கூட அவவுக்கு தெரியவில்லை:).

      பிறக்டீஸ் இல்லாமல் எதுவும் வராது:)..

      Delete
    6. Avargal Unmaigal
      //ஆமாம் இந்த பேய் என்ன மேக்கப் போட்டு அழகாக காட்சி அளிக்கிறது ஹும்ம்ம்ம்///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு பேயைப் பார்த்துக்கூடப் பெருமூச்சு விடுபவரை இன்றுதான் பார்க்கிறேன் ஹையோ ஹையோ ஹா ஹா ஹா:))..

      ///Avargal UnmaigalThursday, December 14, 2017 1:59:00 pm
      பாவம் அந்த மரம் அதற்கு வலிச்சுருக்குமல்ல ப்ச்///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ரொம்ப முக்கியமாக்கும்:)).. இப்போ ஒராள் வருவா பாருங்கோ இதைப் பார்த்த ஆனந்தத்தில:) வரட்டும் வரட்டும் ஸ்ரெயிட்டா தேம்ஸ் தேன்ன்ன்:)) ஹா ஹா ஹா...

      Delete
    7. [im]https://s.financesonline.com/uploads/hublot1.jpg[/im]

      நம்மால முடியாத ஒன்னை இன்னொருத்தர் செய்யும்போது அதுக்கு பாராட்டி பரிசு தர எங்கிருந்தாலும் வருவேனே :)
      இந்தாங்க ட்ரூத் இந்த ரோலக்ஸ் வாட்ச் உங்களுக்குத்தான்

      Delete
    8. ஆஹா பார்த்திட்டா ஐயா பார்த்திட்டா:)) எப்பூடித்தான் .. அந்தக் கண்:) பிரச்சனைக்குள்ளும் இதெல்லாம் கண்ணில படுதோ?:)).. இனி இவவுக்கு தேம்ஸ் எல்லாம் சரி வராது... கனடா காட்டுறேன் வாங்கோ என பிளேனில விண்டோ சீட் புக் பண்ணிக் கூட்டிப் போய் நயகரா வைக் காட்டிட வேண்டியதுதான்..:)) ரோலக்ஸ் ஆம் ரோலக்ஸ்ஸ்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      இப்போ அங்கு Fossils வோச் தான் அதிகம் விரும்பி வாங்கிறார்கள்.. பெரும்பாலும்.

      Delete
    9. ///கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு பேயைப் பார்த்துக்கூடப் பெருமூச்சு விடுபவரை இன்றுதான் பார்க்கிறேன் ஹையோ ஹையோ ஹா ஹா ஹா:))///

      ஹலோ படத்தை பார்த்து பயந்து மூச்சுவிடகூட முடியாமல் நின்று இருந்தேன் அப்ப பார்த்து பூரிக்கட்டை தலையில் வந்து விழுந்ததால் நின்ற மூச்சு மீண்டும் வந்துவிட்டது அதனால் விட்ட பெருமுச்சாக்கும் அது

      Delete
    10. ///இந்தாங்க ட்ரூத் இந்த ரோலக்ஸ் வாட்ச் உங்களுக்குத்தான்///

      என்னங்க இவ்வளவு சீப்பான வாட்சை பரிசாக தரீங்க எனக்கு காஸ்ட்லியான ஹெஸ்.எம்,டி வாட்சு வாங்கி கொடுங்க

      Delete
    11. குழிவாடி, குவிவாடி - அஅடக்க கடவுளே. இந்த இடுகையில் நிச்சயமாக கலாய்க்கக்கூடாதுன்னு நினைச்சேன். எங்க விதி விடுகுது. ஆடி- கண்ணாடி குழி ஆடி, குவி ஆடி. பெண்கள் வகுப்பில் வாடி என்றெல்லாம் சொல்லலாமோ? இதுல வேறு, நான் டமில் டி ஆக்கும்னு பெருமை.

      Delete
    12. ///Avargal UnmaigalFriday,

      என்னங்க இவ்வளவு சீப்பான வாட்சை பரிசாக தரீங்க எனக்கு காஸ்ட்லியான ஹெஸ்.எம்,டி வாட்சு வாங்கி கொடுங்க//

      ஏன் பூரிக்கட்டை பட்டு.. அதுவும் உடைஞ்சு போவதற்கோ?:))

      Delete
    13. ///இந்த இடுகையில் நிச்சயமாக கலாய்க்கக்கூடாதுன்னு நினைச்சேன். எங்க விதி விடுகுது///

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்:) சிரிச்சு முடியுதில்லை:)... நானும் இம்முறை ஆருமே நம்மைக் கலாய்க்கிறாங்களே இல்லையே:).. அதாவது திருமணத்துக்கு முதல்நாள், பெண்ணை எந்த வேலையும் செய்ய விடமாட்டினம் எல்லோ.. நாங்களாகப் போய் செய்ய வெளிக்கிட்டாலும்.. சே..சே.. நீ போய் ரெஸ்ட் எடு என்பார்கள்:).. அப்படி இருக்கே இது என நினைச்சேன்ன்ன்:)) ஹா ஹா ஹா:))..

      அது குவு + ஆடி குவிவாடி அப்பூடி நினைச்சு எழுதினேனே?:)).. ஏனெனில் நான் தான் வகுப்பில இணைத்தெழுதுதல்:) பிரித்தெழுதுதல்:) இரண்டிலும் ஃபுல் மார்க்ஸ் எடுப்பேனாக்க்கும்:)).. தட்ஸ் வை:) மீக்கு டி கிடைச்சுது:))..

      ///பெண்கள் வகுப்பில் வாடி என்றெல்லாம் சொல்லலாமோ?//
      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஜொல்லக்குடா ஜொல்லக்குடா:)).. அப்போ எனக்கு குவிவு + ஆடி யை இணைச்சுச் சொல்லுங்கோ:)) ஹா ஹா ஹா:))

      Delete
    14. //திருமணத்துக்கு முதல்நாள், பெண்ணை எந்த வேலையும் செய்ய விடமாட்டினம் எல்லோ..// - ஓஹோ.... அடுத்து ஆர்யபவன் இடுகை வருதா? கலாய்க்க ரெடியாயிட்டோம். 'நாளைக்குக் கிடைக்கும் பலாப்பழத்தை நினைத்து இன்னைக்கு உள்ள களாக்காயை விடலாமா'? அதனால் இங்கயும் வாய்ப்பிருந்தால் கலாய்த்துவிடவேண்டியதுதான்.

      CONVEX - குழியாடி CONCAVE - குவியாடி. இப்போ உங்களுக்கு அறிவியல் டீச்சராகவும் ஆகிட்டேன். கண்+ஆடி - கண்ணாடி - இதை MIRRORக்கும் Specsக்கும் உபயோகப்படுத்துகிறார்கள்.

      Delete
    15. ஹா ஹா ஹா ஓஒ அது “யா” வரோணுமோ?:) நான் ஒரு ஆசையில “வா” போட்டிட்டேன் ஹா ஹா ஹா:)) மிக்க நன்றி நெல்லைத்தமிழன்..

      //ஓஹோ.... அடுத்து ஆர்யபவன் இடுகை வருதா? ///

      ஹா ஹா ஹா:))

      Delete
  9. வானவில் எங்கே ??
    மலையோரப்படங்கள் அழகு ..
    இந்த மரங்களை autumn காட்சிகள் கிட்டத்தட்ட 15 இருந்தது அப்டியே தகதகன்னு ஜொலிக்கும் எல்லாம் fb ல போட்டது அங்கேயே மாட்டிகிடுச்சி :(
    எப்பவும் fall season அழகா ரம்யமா இருக்கும் :) ஹாஹா அதையே பார்த்திட்டிருந்தா அது மாறுவது தெரியாதே அம்முலு சரியாதான் சொல்லியிருக்காங்க :)
    அது பூஸ் வழக்கம் எதையாச்சு உத்து பார்த்திட்டே இருக்கும் பூஸ்கள் ஜெஸியும் அப்படிதான் :)

    ReplyDelete
    Replies
    1. //வானவில் எங்கே ?? //
      இடது பக்கம் குட்டித் துண்டு தெரியுது அஞ்சு... கீதா பார்த்ததாக சொல்கிறா கீழே..

      என்னுடையதும் பல படங்கள் பேஸ் புக்கில் இருக்குது அஞ்சு.. ஒரு தடவை உள்ளே நுழைஞ்சு வெளியே வரோணும்:))...

      //ஹாஹா அதையே பார்த்திட்டிருந்தா அது மாறுவது தெரியாதே அம்முலு சரியாதான் சொல்லியிருக்காங்க :)//

      இல்ல அஞ்சு.. அவற்றின் இலைகள்.. குருத்திலிருந்து பழுத்து விழும்வரை கலர் மாறாது.. பிறவுணாகவே இருக்கும்:))

      //அது பூஸ் வழக்கம் எதையாச்சு உத்து பார்த்திட்டே இருக்கும் பூஸ்கள் ஜெஸியும் அப்படிதான் :)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
  10. உங்க டைரிக்குறிப்பு அருமை ..உண்மை ஏழையாகவே இருக்கட்டும் நல்லது

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது உண்மைதான்.. பொய் தான் அதிகமாக பணக்காரர்போல தெரியும்:)).. மிக்க நன்றி அஞ்சு.

      அதுசரி இம்முறை “அப்பாவியின் முகம்”:) தெரிஞ்சமையாலதான் யாருமே என்னை முறைக்காமல்.. வம்புச் சண்டை செய்யாமல் போயிட்டினமோ?:) இது புதுசா இருக்கெனக்கு ஹா ஹா ஹா:))

      Delete
  11. அப்பாடா! ஒரு வழியாத் திறந்தது. அதென்ன ஜன்னல் வழியா எட்டிப் பார்த்துட்டே போறீங்க? அட, உங்களுக்குப் பேருந்துப் பயணம் இலவசமா? ஹெஹெஹெஹெ! சரி தான்! ஊஞ்சலில் ஆடும் அந்த தேவதை அழகோ அழகு!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதாக்கா வாங்கோ.. இம்முறை சுடச்சுடவே வந்திட்டீங்க:)).. நான் அங்கும் போட்டேன்ன், இனி ஒபரா பிரெளசர் பாவியுங்கோ.

      //அட, உங்களுக்குப் பேருந்துப் பயணம் இலவசமா? ஹெஹெஹெஹெ//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உப்பூடிச் சிரிச்சால் இன்னொரு ரெசிப்பி டக்கெனப் போடுவேன் அல்லது இனொரு சீதை ரா மன்னிச்ச கதை எழுதுவேன்:) ஹா ஹா ஹா:))..

      ///ஊஞ்சலில் ஆடும் அந்த தேவதை அழகோ அழகு!///
      ஹா ஹா ஹா இதைத்தான் எதிர்பார்த்தேன்ன்:)) ஹா ஹா ஹா இன்னும் சத்தமாச் சொல்லுங்கோ கீதாக்கா .. மியாவும் நன்னி:)..

      Delete
  12. வானவில் இருக்குனு சொன்னீங்க, ஒண்ணையும் காணோம். படங்கள் எல்லாம் தேர்ந்த ஃபோட்டோகிராஃபரால் எடுக்கப்பட்டிருக்குனு புரியுது!:)

    ReplyDelete
    Replies
    1. படம் பார்க்கும்போது உங்கள் இடது பக்கம் பாருங்கோ மலையோடு குட்டியா தெரியுது... சிலநேரம் டபிள் வானவில் கூட வரும்.. இனியும் வராமலா போயிடும் எடுத்துப் போடுறேன் பொறுங்கோ.

      ///படங்கள் எல்லாம் தேர்ந்த ஃபோட்டோகிராஃபரால் எடுக்கப்பட்டிருக்குனு புரியுது!:)// ஹையோ அத்தனையும் என் மொபைலாக நான் எடுத்ததே:)).. மிக்க நன்றி கீதாக்கா.

      Delete
  13. அதிரா படங்கள் அத்தனையும் அழகோ அழகு!!!! அப்படி ஒரு அழகு!! ரொம்ப ரசித்தேன்.....

    ஊஞ்சல் அழகு என்றால் அதில் இருப்பவரும் தேவதையாய் அழகு!!!!

    நாங்கள் எல்லாம் பஸ்ஸிலேயே ஊஞ்சல் ஆடுவோமே...ஹா ஹா ஹா ஹா....

    உங்க ஊர் பஸ்ஸுக்கே சொல்றீங்களே எங்க ஊர்ல பஸ்ல போய் வருவது என்றால் ஹோ அத்தனை டயர்ட் ஆகிடும்...கூட்டம்...பிஸி அவர்ல....அப்புறம் சில இடங்களில் ரொம்ப தூரம் நடக்கனூம் டைரக்ட் பஸ் இருக்காது சில இடங்களுக்கு மாறி மாறிப்போகணும் அதுவும் சம்மர் டேய்ஸ் என்றால் கேட்கவே வேண்டாம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ..

      //ஊஞ்சல் அழகு என்றால் அதில் இருப்பவரும் தேவதையாய் அழகு!!!! ///
      ஷையில முகமெல்லாம் சிவக்குது:))..

      //நாங்கள் எல்லாம் பஸ்ஸிலேயே ஊஞ்சல் ஆடுவோமே//
      ஹா ஹா ஹா ஊரில் சில பஸ்கள் அப்படித்தான் இருக்கும்:). இங்கு ஸ்கொட்லாந்தில் சனத்தொகை குறைவு, நிலப்பரப்பு அதிகம் கீதா...

      Delete
    2. கீதா நீங்க கரெக்ட்டா சொன்னீங்க அதிரா பார்க்க அழகாக இருக்காங்கதான்.. வயசானலே பெண்கள் மிக அழகாக ஆகிவிடுவாங்க ....கிராமத்து சைட்ல் பஸ்ல போகும் போது பார்க்கலாம் பல பாட்டிகள் மரத்தடியில் உட்கார்ந்து வெத்திலை போட்டுகிட்டு அப்படியே சிரிப்பாங்க பாருங்க அது மிக அழகுதான்... என்ன இந்த பாட்டி மேலைநாட்டில் வசிப்பதினால் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுறாங்க.. கொஞ்சம் இருங்க போன் அடிக்குது இந்த இவாங்கா ஒட ரொம்ப தொந்தராவா இருக்குது நேரம் காலம் தெரியாம்ல எப்பா பார்த்தாலும் போன் பண்ணுது

      Delete
    3. Avargal UnmaigalFriday,


      [im]http://www.joy-of-cartoon-pictures.com/images/cat-chasing-dog.jpg[/im]

      Delete
  14. இங்கு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பஸ் ஃபிரீ:).. அதனால வயதானோர் மட்டுமே பஸ் இல் இருப்பார்கள்.//

    உங்களுக்கும் ஃப்ரீ தானே ஹா ஹா ஹா ஹா ஹா நீங்க மட்டும் தான் போனீங்களோ...ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //உங்களுக்கும் ஃப்ரீ தானே ஹா ஹா ஹா ஹா ஹா///

      தெரியாம ஒரு வசனத்தை இணைச்சு:))) எல்லோருக்கும் குஷியாகிட்டுது இன்று கர்ர்:)) எனக்கு ஃபிரீ ரிக்கெட் கிடைக்க இன்னும் 44 வருசம் இருக்குதூஊஊஊஊஉ:)).. எங்கள் வீட்டை நெருங்கும்போது மீயும் ட்றைவரும் மட்டுமே:))

      Delete
    2. ஓ இன்னுமொன்று சொல்ல மறந்திட்டேன் போஸ்ட்டில் கீதா.. அதாவது இங்கு ட்ரைவர் கண்டக்டர் எல்லாமே ட்றைவர் மட்டும்தான்... இறங்கும்போது பெரும்பாலும் எல்லோரும் ட்றைவரைப் பார்த்து தங்கியூ சொல்லிப்போட்டுத்தான் இறங்குவது வழக்கம்..

      இம்முறை நான் தங்கியூ எனச் சொல்ல.. த.... என வாய் திறக்க முன்பே.. ட்றைவர் என்னைப் பார்த்து தங்கியூ தங்கியூ என்கிறார்ர்.. இங்குள்ளவர்கள் உண்மையில் மிக நல்ல சனம்... நான் விடவில்லை எங்கிட்டயேவா?:) திரும்ப தங்கியூ சொல்லிக்கொண்டே இறங்கினேன்:)..

      Delete
    3. அதிரா- இப்படி யோசிச்சுப் பாருங்க. உங்களை மாதிரி ஒருவரும் பஸ்ல பிரயாணம் செய்யலைனா, டிரைவருக்கு வேலை போயிடாதா? அதுனால ஒருவேளை உங்களுக்கு முதலில் நன்றி சொன்னாரா?

      Delete
    4. ஹா ஹா ஹா கர்ர்:) இல்லை நெல்லைத்தமிழன், ஸ்கொட்டிஸ் உண்மையில் ரொம்ப நல்லவர்கள்.. குப்பைப் பழக்கங்கள்.. ஆகவும் மோசமாக உடை அணிவது இப்படியானவை மிக மிக குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம்.. எப்பவும் சிரிச்சுக்கொண்டும், குட் மோங்... ஹலோ சொல்லுக் கொண்டும் போவார்கள்.. லெவல் காட்ட மாட்டார்கள். ஆனா இப்போதைய ஜெனரேசன் மெல்ல மெல்ல மாறி வருகிறார்கள்.

      Delete
    5. இங்க ஏற்கனவே எழுதியிருக்கிறேன்னு நினைக்கறேன். லண்டன் பஸ்ல நான் 'வரிசையா' நின்னவங்களைக் கவனிக்காமல், சட்டுனு ஏறினேன். டிரைவர் என்னைப் பார்த்து முறைத்தார். எதற்கு என்று புரியவில்லை (இரவு நேரமாகிவிட்டதால் அவசர அவசரமாக ஏறினேன்). அப்புறம்தான் கூட வந்த நண்பர், இங்கு எல்லா இடங்களிலும் 'வரிசையை' கடைபிடிக்கணும்னு சொன்னார். இங்கிலாந்து/பிரிடிஷ்- நாங்க எப்போதும் கொஞ்சம் சந்தேகத்தோடே அணுகுவோம். (அவங்க கொஞ்சம் பாலிடீஷியன்ஸ்னு எனக்கு எப்போவுமே தோணும்). அவங்கள்லயும் நிறைய நல்லவர்களைச் சந்தித்திருக்கிறேன். (அவங்க உறவு முறைகளெல்லாம் சொல்லும்போது எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாவும் இருக்கும். My first wife's son. Now I am married to another etc. )

      Delete
    6. ஹா ஹா ஹா உண்மையேதான், எதுக்கும் கியூத்தான்.. அதுவும் இடிக்காமல் தூர தூரமா நிற்பார்கள். இதுபற்றி ஒரு போஸ்ட் ரெடி பண்ணுறேன்ன்.. இனி அடுத்த வருடம்தான்:)).

      ஆனா நெல்லைத்தமிழன்.. ஸ்கொட்லாந்தில் இருக்கும் ஒரு நன்மை என்ன எனில், கலப்பின மக்கள் மிகக் குறைவு... இங்கத்தைய ஸ்கொட்டிஸ் ஏ இருக்கின்றனர்.. அதனால பழக்க வழக்கம் எல்லாம் நன்றாக இருக்கும். ஆனா லண்டன் எனில், முழுக்க முழுக்க கலப்பு மக்கள்.. அதனால அங்கு யாரும் யாருக்கும் ஹலோ சொல்லவோ குட் மோனிங் சொல்லவோ விரும்புவதில்லை. முறைப்பதுதான் அதிகம்.. அதுக்குக் காரணம் வெளி நாட்டிலிருந்து வரும் மக்கள் அங்கு செய்யும் அட்டூழியம்தான் அதிகம்.

      ஒரு தடவை லண்டனில் ஒருவரிடம் அட்ரஸ் ஒன்றைக் காட்டி .. இது எங்கே இருக்கு என நம்மவர் ஒருவர் கேட்டதுக்கு அந்த வெள்ளையர் முறைச்சுப் பார்த்தாராம்.. ஏனெனில் இப்படிக் கேட்டு நெருக்கமாகப் போய் விட்டு ஃபோனை அடிச்சிட்டு ஓடி விடும் நிகழ்வுகள் நடந்திருப்பதனால்.

      Delete
  15. பஸ்ஸில் பூஸார் சூப்பரா இருக்காரே அழகா எட்டிப் பாக்குறார்...

    டைரிக் குறிப்பு ரொம்ப ரசித்தேன்..சந்திப்பும் பிரிதலும் ஆம்.....உண்மை ஏழைதான் பரவாயில்லை...அது நல்லதே...

    அதிரா உங்கள் படங்கள் எதில் எடுக்கறீங்க...டேப்? மொபைல்? ஆர் கேமரா?
    ரொம்ப அழகா இருக்கு அதான் கேக்கறேன்... செம க்வாலிட்டி!! அப்படியே ப்ரொஃப்ஷனல் எடுப்பது போல....கலர் அண்ட் ஷேட்ஸ் எல்லாம் செமையா இருக்கு....கண்ணுக்கு விருந்து...நானாக இருந்தாலும் இப்படித்தான் எடுத்துத் தள்ளிடுவேன்...

    சர்ச் ரொம்ப அழகா இருக்கு...அதிரா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதேதான் கீதா.. சில பூஸ்களும் பப்பி போல இவற்றை ரசிக்கிறார்கள், ஆனா எங்கட டெய்சியை காரில் கூட கொண்டு போக முடியாது.. ஜம்ப் பண்ணி ஓட வெளிக்கிடுவா பயம்:))

      //டைரிக் குறிப்பு ரொம்ப ரசித்தேன்//
      தங்கூஊஊ:)

      //அதிரா உங்கள் படங்கள் எதில் எடுக்கறீங்க...டேப்? மொபைல்? ஆர் கேமரா? //
      என்னிடம் இருக்கும் ஐபோன் 6 எஸ் பிளஸ் மொபைலில் கீதா[வாங்கி 2 வருடமாகுது].. படங்களும் சூப்பரா வருது.. அதில் படம் பார்க்கவும் சூப்பர் குவாலிட்டி.

      அந்த சேர்ஜ் க்கு இங்கத்தைய நண்பியோடு நானும் பல தடவை போனதுண்டு, இதை விடப் பல சேஜ் க்களுக்கும் போயிருக்கிறோம், வெளியே பழமை மாறாமல் இருக்க, பெயிண்ட் ஏதும் பண்ண மாட்டினம்.. உள்ளே புத்தம் புதுசா வச்சிருப்பினம்... மேல் கோபுர உச்சிவரை எடுக்க முடியவில்லை...

      இங்கு வரும் உல்லாசப் பயணிகள்.. முகியமா கப்பலில் வருவோர்ர்.. கூட்டம் கூட்டமாக ரோட்டால சுத்திப் பார்ப்பினம் அப்போ கவனிச்சிருக்கிறேன் அவர்கள் அதிகம் படமெடுப்பது இப்படியான பழமை வாய்ந்த பில்டிங்களைத்தான்.

      Delete
  16. வானவில் கொஞ்சமா தெரியுதே அதிரா !!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது நான் பார்க்கும்போது அழிந்துவிட்டதுபோலும் மிகுதி.. அடிக்கடி வெயிலும் மழையும் சந்திக்கும்போது இப்படி வானவில் மிக அழகாக தோன்றும்.. இனி வரும்போது டக்கெனப் பிடிச்சிடுறேன்... அனைத்துக்கும் மிக்க நன்றி கீதா.

      Delete
  17. இதென்ன அதிசயம் இங்கே கிராமங்களுக்கு செல்லும் பேருந்தில் போனால் தானாக ஊஞ்சலாடும் (ரோடு அப்படி அமைப்பு ஹி.. ஹி... ஹி)

    படங்கள் அருமை இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி... ஹா ஹா ஹா உண்மைதான்.. அத்தோடு எங்கள் நாட்டில் சில நேரங்களில் மேலேயோ கீழேயோ எதையும் பிடிச்சுக் கொண்டு நிக்கத் தேவையில்லை... அவ்ளோ நெரிசலாக இருக்கும்.. பிடிக்காமல் நிண்டாலும் விழ மாட்டோம்ம் ஹா ஹா ஹா:))

      மிக்க நன்றி.

      Delete
  18. ///இங்கு எங்களுக்கு பஸ் இல் ஏறும் வாய்ப்பே கிடைப்பதில்லை,//

    ஏன் உங்கள் ஊரில் பஸ்ஸில் வீல் சேரில் வருபவர்களுக்கு ஏறும் வசதி செய்து கொடுக்கவில்லையோ....அய்யோ பாவம் நீங்கள் அப்ப எப்படி பஸ்ஸில் நீங்கள் போவீங்களாம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ:)))..
      ஹா ஹா ஹா எங்கேயோ வசமா வாங்கிக் கட்டிக்கொண்டு, அதே வேகத்தில் இங்கு வந்து என் மீது அதைக் கொட்டுவதுபோல இருக்கே:)).. ஹா ஹா ஹா பூரிக்கட்டை இன்று ஓவரா பறக்குதோ?:) நீங்க வீட்டில் சரியாகச் ஸ்னோ வழிச்சு விடவில்லைப்போல தெரியுது:))

      Delete
  19. ///எங்கள் வீடு இருப்பது முழுக்க முழுக்க வீடுகள் மட்டுமே இருக்கும் ஏரியா என்பதனால, எங்கள் ஊர் பஸ்ஸில் ஆட்கள் இருக்க மாட்டினம்////


    ஆட்கள் இருக்க மாட்டினம் என்றால் அங்கு வசிப்பது பேய்களா? ச்சே ச்சே உங்களை போய் பேய் என்று சொல்லுவேனா நிச்சய்ம சொல்லமாட்டேன் ஏனென்றால் பேய்கிட்டே போய் பேய் என்றால் அது நம்மை பிடிச்சு கொள்ளுமாம்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ உங்களுக்குப் பேய்ப்பயம் இருக்கூஊஊஊ:) இது ஒன்று போதுமே:))) அடுத்து ஒரு பேய்க்கதை எழுதிட வேண்டியதுதான்:))

      Delete
  20. ///இங்கு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பஸ் ஃபிரீ:///

    உங்க ஊரில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பஸ் ஃபிரீ என்றால் அந்த பஸ்ஸை அவர்கள் எப்படி ஒட்டுவார்கள் எங்கே நிறுத்துவார்கள் ஹலோ உங்களுக்கு இரண்டு பஸ் இலவசமாக கிடைத்திருக்குமே அதில் ஒன்றை இங்கே அனுப்புங்களேன் . நான் பஸ் ஒட்டி கொஞ்சம சம்பாதிகலாம் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாடு மக்களுக்கு இப்படி எவ்ளோ நல்ல விசயம் பண்ணுது.. அதைப் பார்த்து பாராட்டத் தெரியாது.. உங்களுக்குப் பொறாமை ட்றம்ப் அங்கிள் எதுக்கும் விடுறாரில்லை என:))..

      இங்கு இன்னொன்றும் இருக்கு.. 16 வயசுக்கு கீழ்ப்பட்டோருக்கு லோக்கல் ரெயின் ஃபிரீ... [ இதில் அதிராவும் அடக்கம் என்பதனை மிகவும் ஷையுடன் ஜொல்லிக்கொள்கிறேன்ன்:))]..

      மிக்க நன்றி ட்றுத்... மேலே என் செக்:) உங்களுக்கு ஏதோ தருகிறாவாம்ம்ம்:)).. குஷியில்:)).. வழித்தேங்காய் எடுத்து தெருப்பிள்ளையாருக்கு உடைக்கிறாவாம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா.

      Delete
  21. Replies
    1. வாங்கோ வாங்கோ பெரிய இடைவேளையின் பின் வந்திருக்கிறீங்க .. நலம்தானே.. மிக்க நன்றி.

      Delete
  22. தங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே... உங்கள் சின்சியரிட்டி:) பார்த்து மீ புல்லரிச்சுப்போனேன்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி சீராளன்.

      Delete
  23. பதிவின் மேலே இணைக்கப்பட்டுள்ள அந்தப் பாடல் நான் கேட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ... குரு பட டிவிடி வாங்கி வந்திருந்தோம் ஆனா பார்க்கவில்லை:)).. அப்பாடல் 2013 டிசம்பர் வரை நானும் கேட்டதில்லை. டிசம்பரில் கனடா போயிருந்தபோது “மிஸ் தமிழ் ரொரண்டோ”.. நிகழ்ச்சி நடந்தது.

      அதுக்கு நாங்களும் ரிக்கெட் எடுத்துப் போயிருந்தோம்.. மிக அருமையாக இருந்துது புரோகிராம்.. கீழே இருக்கும் லிங்கில் ஒரு சிறு பகுதி கிடைச்சிருக்கு பாருங்கோ..

      அதில் பங்குபற்றிய அனைவரும் நம் தமிழ்ப் பிள்ளைகள்.. அவர்களின் தமிழ் அறிவை சோதிக்க, தமிழில் பேசச் சொல்லி எல்லாம் கேட்டார்கள்.. அதில் ஒன்று, ஏதாவது கலை... பாட்டு, வீணை, டான்ஸ் இப்படி ஏதும் செய்ய வேண்டும்.. என.

      அதில் ஒரு பிள்ளை இந்த நன்னாரே.. நன்னாரே பாடலுக்கு டான்ஸ் ஆடினா.. நான் அப்படியே உண்மையில் மெய் சிலிர்த்திட்டேன்ன்ன் என்னா ஸ்பீட்டில் என்னா சூப்பரா இருந்துது.. அப்போ தொடக்கம் எனக்கு அப்பாடல் பிடித்து விட்டது.

      இந்த லிங்கில் பாருங்கோ... இதில் ஒவ்வொருவருக்கும் சேர்டிபிகேட் கொடுத்து போட்டோக்கு சிரிச்சுக் கொண்டு போஸ் குடுப்பவ நீல சுடிதார்... கனடாவின் முதலாவது [சரியாகத்தான் சொல்கிறேன் என நினைக்கிறேன்] பெண் எம் பி. இவ இலங்கைப் பெண்.

      அப்பாடல் தேடினேன் கிடைக்கவில்லை..

      https://www.youtube.com/watch?v=FzSnZ27Cgmc

      Delete
    2. அந்தப் பாடல் நடனக் காட்சியோ என்று பார்த்தேன். இல்லை!

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதுதான் .. பாடல் கிடைக்கவில்லை என மேலே எழுதியிருக்கிறேனெல்லோ:)... இங்கு என் டமில் எல்லோருக்கும் புரியாமல் இருப்பதால், இனி நான் சைனீஸ் பாசையில் பேசப்போறேன்:)) ஹா ஹா ஹா..

      பொங் சியா வஹூம் ஸ்ரீராம்:)) ஹா ஹா ஹா.

      Delete
  24. ரக்ஷி? அப்படி என்றால்? பஸ் பயணம் அவ்வளவு அரிதா? படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. அது டாக்ஸி என்பதை பூஸ் மொழியில் சொல்லியிருக்கா.....

      Delete
    2. ஹா ஹா ஹா அம்முலு தமிழில் அழகா எழுதிட்டா.. அது Taxi:).

      பொதுவாக வெளிநாடுகளில் சிட்டிக்குள்ளே இருப்போருக்குத்தான் கார் ஓடுவது கஸ்டம் நேரம் எடுக்கும் என்பதால் இப்படிப் பொதுப் போக்குவரத்தில் போய் வருவினம்.. மற்றும்படி யாரும் பஸ் ரெயின் என அமளிப்படுவதில்லை... ஸ்கூல் பிள்ளைகள்.. தான் அதிகம் பாவிப்பார்கள். ஆனா இங்கு ஸ்கூல் பஸ் இருக்கு.

      எல்லோருமே கார்தான்.. அதனால்தான் பஸ் ரெயின் எனில்.. ஒரு ஆசை..

      Delete
    3. ஓகே ஓகே.

      பஸ்ஸிலிருந்து படம் எடுத்துக் போட்டீர்களே... அந்த பஸ்ஸை வெளியிலிருந்து ஒரு படம் எடுத்துக் போட்டீர்களா? இல்லையே!

      Delete
    4. //ஸ்ரீராம்.Friday, December 15, 2017 2:02:00 am
      //
      ஹா ஹா ஹா நல்ல கேள்விதான், அப்போ நான் இங்கு போடலாம் என நினைச்சுப் படங்கள் எடுக்கவில்லை.. ஒரு குஷியில் எடுத்தேன்.. பின்புதான் திடீரெனப் போஸ்ட் டாகப் போடலாமே எனும் எண்ணம் வந்துது.. மிக்க நன்றி ஸ்ரீராம்..

      Delete
  25. டைரி வார்த்தைகள் 'அறிந்த ஆச்சர்யம்'!

    ஊஞ்சல் ஆடுவது நீங்களா? அட...

    ReplyDelete
    Replies
    1. //டைரி வார்த்தைகள் 'அறிந்த ஆச்சர்யம்'!//

      ஹா ஹா ஹா மறந்திருந்தாலும் என தூசு தட்டி விட்டிருக்கிறேன்:)..

      ///ஊஞ்சல் ஆடுவது நீங்களா? //////அட...////

      அஞ்சூஊஊஊஊஊஉ ஓடிக் கமோன்ன்ன்:) இந்த “அட” க்கு என்ன அர்த்தம்:))... ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
    2. எங்கள் தளத்துக்கு அனுப்பி வைத்த படம் வேறுமாதிரி இருந்ததே... எது உண்மையான படம் என்று யோசித்தேன்!

      Delete
    3. அடடா 6 வித்தியாசங்கள் இருக்கின்றனவோ? ஹா ஹா ஹா:))

      Delete
  26. அழகோ அழகு!..:)
    உங்கள் பஸ் பயணப் பதிவு கண்டு ரொம்பவே மகிழ்ந்தேன் அதிரா!
    பஸ் பயணத்தில் பிரமித்துக் குதூகலித்ததை எழுதியிருக்கும்
    விதத்தில் துள்ளிக்குதிக்கும் ஒரு சின்னஞ் சிறுமியாக உங்களை
    மனக்கண்களில் கண்டு சிரித்துவிட்டேன்!..
    அட்டகாசம் தான்..:))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இளமதி வாங்கோ.. அடடா தொடர் வருகை உண்மையில் மிக்க மகிழ்ச்சி அளிக்குதூஊஊஊ:)).. 2018 ஜனவரி 1ம் திகதி வாழ்த்துப்பா உடன் உங்கள் புளொக் திறக்கப்பட வேண்டும்:)).. இல்லை எனில் புளொக்கைத்தூக்கி தேம்ஸ் இல் வீசுவேன்ன்ன்ன்:)).. இது அம்முலு வுக்கும்தான்ன்:))) ஹா ஹா ஹா...

      //ஒரு சின்னஞ் சிறுமியாக//

      ஹா ஹா ஹா உங்களுக்குப் புரியுது:)) இங்கே யாரும் சுவீட் 16 எண்டால் அடிக்க வருகினம்:)).. நீங்களாவது நம்பிட்டீங்களே எனும் திருப்தியுடன் ஸ்லீப் பண்ணப்போகிறேன்ன்ன்..

      தூக்கம் என் கண்களைத் தழுவுகிறது:)).. மிகுதி பதில்கள் நாளைக்கு .. அதுவரை அல்லோரும் மன்னிச்சுப் பொறுத்தருள்க:))

      Delete
  27. அதிரா!..
    உங்கள் வீட்டுச் சூழலைப் பார்க்கும்போது
    ”காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்”
    என்ற பாரதியாரின் பாடல் வரிகளே நினைவிற்கு வருகிறது.
    ஆற்றங்கரையும் அதனருகில் வீடுகளும் மலையும் காடும்
    மனதிற்கு ரொம்ப அமைதியைத் தரக்கூடிய சூழல்... அப்பப்பா!..
    எல்லா இடமும் அழகு அள்ளிக்கொட்டிக்கிறது.
    நலம் பெருக்கும் இயற்கைச் சூழல் அற்புதம்.
    கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கக்கூடிய காட்சிகள்.
    எனக்கும் வாழ்வதற்கு உங்களருகாமையில் இந்தச் சூழலில் ஏதாயினும்
    வீடு இருந்தால் சொல்லுங்கள். ஜேர்மனியை விட்டு அங்கேயே வந்துவிடுகிறேன்..:))

    இங்கு நாமிருக்கும் இடத்தில் பஸ்ஸும் உண்டு. இருப்பினும் நிலத்தடிக்கீழ் ஓடும்
    (சிறிய 2 பெட்டிகள் மட்டுமுள்ள) ட்ரெயின் போன்ற ’ட்ராம்’ எனப்படும் வண்டியே
    எமக்குப் போக்குவரத்திற்கு உதவுகின்றன. பஸ்ஸை விட மிக விரைவான ஓட்டம்.
    நிலத்தடிக் கீழ் என்றால் நில மட்டத்திலிருந்து 2 தட்டுக்கள் கீழே!
    அங்கு இயற்கை எல்லாம் மேலிருக்கும். நிலத்தைக் குடைந்து இதற்கான ஓடு பாதை.
    எதுவுமே வெளியே தெரியாது.

    இயற்கைச் சூழலின் வசீகரிக்கும் அழகிய படங்களையும்,
    எங்கள் அனைவரின் உள்ளத்தில் என்றும் வீற்றிருந்து கயிற்றூஞ்சலில் ஆடும்
    அன்பு அதிராவின் அழகுத் தோற்றத்தினையும் காட்சியாகக் கண்டதில்
    பெரும் மகிழ்ச்சிதான்.!!..:)

    ஆரம்பம் முதல், கடைசி ஊசிக்குறிப்புவரை அனைத்தும் சிறப்பு.
    இனிய பதிவும் பகிர்வும்!
    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் அதிரா!

    ReplyDelete
    Replies
    1. ///அதிரா!..
      உங்கள் வீட்டுச் சூழலைப் பார்க்கும்போது
      ”காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்”
      என்ற பாரதியாரின் பாடல் வரிகளே நினைவிற்கு வருகிறது.
      ஆற்றங்கரையும் அதனருகில் வீடுகளும் மலையும் காடும்
      மனதிற்கு ரொம்ப அமைதியைத் தரக்கூடிய சூழல்... அப்பப்பா!..//

      அத்தனையும் உண்மை இளமதி, அத்தோடு காத்தும் தூய்மையான காற்று. என்ன குளிர்தான் ஒரு பிரச்சனை.. இங்கு வீசும் காற்றில் ஈரப்பதன் அதிகம் அதனால, வெளியே இறங்கினால் ஊசியால் உடம்பில் குத்துவதுபோல இருக்கும் குளிர்... சில நேரங்களில் அவசரமாக ஓடிப்போய்க் காரில் ஏறி ஓடினார்.. கார் சூடாகும் வரை.. உடம்பின் உள் பார்ட் எல்லாம் தூக்கித்தூக்கி உதறி அடிக்கும் உண்மையில்:)).. குளிர் மட்டும் இல்லை எனில் சொர்க்கம்தான்...

      ///எனக்கும் வாழ்வதற்கு உங்களருகாமையில் இந்தச் சூழலில் ஏதாயினும்
      வீடு இருந்தால் சொல்லுங்கள். ஜேர்மனியை விட்டு அங்கேயே வந்துவிடுகிறேன்..:))///

      ஹா ஹா ஹா உங்களுக்கில்லாததோ.. வாங்கோ வாங்கோ..

      Delete
    2. ///இருப்பினும் நிலத்தடிக்கீழ் ஓடும்
      (சிறிய 2 பெட்டிகள் மட்டுமுள்ள) ட்ரெயின் போன்ற ’ட்ராம்’ எனப்படும் வண்டியே
      எமக்குப் போக்குவரத்திற்கு உதவுகின்றன//

      ஓ அங்கு நிலத்தின் கீழே ஓடுவதை ட்ராம் என்பார்களோ.. இங்கும் ட்ராம் இருக்கு ஆனா ரோட்டால்தான் ட்ரக் இல் ஓடும்.. நிலத்தின் கீழ் ஓடுவதை ரியூப் என்போம்... அது ரெயின் போல இருக்கும்.

      மியாவும் நன்றி இளமதி.

      Delete
  28. ஆஹா...அதிரா ரெட் சாரியில் கலக்கலா இருக்கீங்க. சூப்பர்..! எங்க வீட்ல (ஊர்ல) ஊஞ்சல் இருக்கே. அது இருந்தாலும் மாமரம்,அல்லது வேப்பரத்தில் கயிறு கட்டி ஆடுவது போல் வராது. அப்படி கட்டி ஆடிய ஞாபகங்கள் வருகின்றன.

    அந்த மரம் பார்த்தாலே உங்க ஞாபகம்தான் அதிரா எனக்கு... எங்க வீட்டிலே நிக்கிறது.

    நான் ஸ்னோ அனுப்பிவைக்கட்டோ. இங்கன முழங்கால் அளவு கொட்டி தீர்த்துவிட்டிருக்கு.இப்பவே இப்படியென்றா இன்னமும் இருக்கு கொட்டுவதற்கு வரும் நாட்களில்.....

    அழகான படங்கள்..
    இங்கு பஸ்ஸில் காலையில் பள்ளிக்கூடபிள்ளைகள் வருவினம். இடையில் போற பஸ்ஸில் தான் சிலநேரம் நானும் driver ம் மட்டும் இருப்போம். நாங்க இருக்கும் இடத்துக்கு ஸ்கூல் பஸ்தான் வரும். இடையில் மட்டுமே ஆட்கள் ஏறுவதற்கான பஸ் வரும். சிலநேரம் வராது. டாக்ஸி பஸ் போன் செய்து வரச்சொல்லி போவோம்.அதற்கு பஸ்ஸுக்கு கொடுக்கும் காசுதான் கொடுப்பது. (2.50யூரோ ) ஊர் உலகம் சுற்றினாலும் வெளி உலகம் பார்த்துச்செல்ல அலுக்காது.

    டைரிகுறிப்பு மிகவும் அருமை.
    மொபைல் போன் படங்கள் என்றாலும் மிக அழகாக இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. மாஸ்டர் செப் போயி கம்பபாரதி வந்தாச்சு டும்..டும்.டும்ம்....
      கம்ப பாரதி என இரண்டு பெரிய கவிஞர்களின் பெயரையும் சேர்த்து பட்டமா வைத்துக்கொண்டு கவிதை எழுதி போடாமல் விட்டமைக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்....

      Delete
    2. வாங்கோ அம்முலு வாங்கோ...
      ///அதிரா ரெட் சாரியில் கலக்கலா இருக்கீங்க///
      இரவல் சாறியாம்.. அதில் நல்ல கொய்யகமாம்:)).. ஹா ஹா ஹா அது அக்காவின் சாறி:)..

      உண்மைதான் நாங்களும் சின்ன வயசில் வேப்பமரத்தில் கட்டி ஆகாயம் தொடும்வரை உன்னி உன்னி ஆடுயிருக்கிறோம்ம்.. பின்பு மாமரத்தில் கட்டி.. ச்சும்மா அசைந்து அசைந்து ஆடியிருக்கிறோம்ம்...

      உண்மையில் நான் சின்ன வயதில் அனுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவித்திருக்கிறேன் என்பதில் எனக்கொரு சந்தோசம்:))..என் ஆத்மா சாந்தியடையும்... ஹா ஹா ஹா:)..

      ///நான் ஸ்னோ அனுப்பிவைக்கட்டோ.//
      அச்சச்சோ வேண்டவே வேண்டாம்..வரும் புதனோடு ஸ்கூல் ஹொலிடே.. அதன் பின்பு வேணுமெண்டால் அனுப்புங்கோ.. இங்கு ஏத்த இறக்கம் என்பதால், ஸ்னோ எனில் சரியான பயம்.. அப்படியே சறுக்கீஸ்தான்ன் ஹா ஹா ஹா:)).

      உங்களூர் ரக்‌ஷி பறவாயில்லையே.. பஸ் போல இருக்கே.. இங்கு இந்த 2.90
      கொடுத்த பஸ் தூரத்தை ரக்‌ஷியில் செல்வதாயின் 10-12 பவுண்ட்ஸ் வரும்.. மீட்டர் படி காசு குடுக்கோணும்.. ரஃபிக் லைட்டில் நிற்பதெல்லாம் கணக்கில் எடுக்கும்.. அத்தோடு ஆரம்பமே 2.50 இல் தான் ரக்‌ஷி காசு ஆரம்பிக்கும்.

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
    3. ஹா ஹா ஹா.. அது கம்பராமாயணக் கதை எழுதினனானெல்லோ:) அதனால கிடைச்ச பட்டம்:)... யூ மீன்?:) [[இது வேற மீன்:)]].. கவிதை?:) எழுதிட்டால் போச்சு:)) ஹா ஹா ஹா:))..

      Delete
  29. Congrats Miyav :)
    [im]https://i.pinimg.com/564x/8f/05/2a/8f052af712d26ed738a07277ac83460d--cat-s-kitty-cats.jpg[/im]

    ReplyDelete
  30. வணக்கம் !

    வழமைபோல பதிவு தில் ஆக இருக்கிறது அதிலும் படங்கள் இயற்கை அழகு
    ஒவ்வொரு பதிவுக்கும் பாடல் போடுவீங்க ஆனால் நான் பார்ப்பதில்லை இன்று பாடல் கேட்டுவிட்டுத்தான் பதிவு வாசித்தேன் அடடா பதிவுக்கும் பாடலுக்கும் செம பொருத்தம் ( ஆனந்தக் களிப்பு ) எல்லாவற்றையும் விட ஊசிக்குறிப்பு உள்ளம் தொட்டது ( ஊஞ்சல் பற்றி ம்ம்ம் என்னத்த சொல்ல .................)

    மீண்டும் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சீராளன் வாங்கோ.. உடன் வரவு மகிழ்ச்சி அளிக்குது... பாடல் கேட்டு ரசித்தமைக்கு மிக்க நன்றி.. அழகான பாடல்.

      //ஊஞ்சல் பற்றி ம்ம்ம் என்னத்த சொல்ல ..............///

      ஹா ஹா ஹா நல்லவேளை சொல்லாமல் விட்டிட்டீங்க... மிக்க நன்றி மேஜரே... மீண்டும் வருக.

      Delete
  31. அழகான படங்களுடன் இனிய பதிவு...

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.. மகிழ்ச்சி.
      மிக்க நன்றி துரை அண்ணன்.

      Delete
  32. (ரொம்ப தூரம் நடந்து கீழே வண்டேன்.அதனாலே அப்பரம் வரேன்)
    படங்கள் அத்தனையும் அழகு ரசித்தேன்.....
    அருமை

    ReplyDelete
    Replies
    1. ஏன்டா கீழே வாரத்துக்கு பஸ் இல்லையம்

      Delete
    2. வாங்கோ மொகமெட் வாங்கோ..
      //
      (ரொம்ப தூரம் நடந்து கீழே வண்டேன்.அதனாலே அப்பரம் வரேன்) //

      ஆஆஆஆ.. இருங்கோ ஒரு மங்கோ லஷி குடிச்சிட்டு பின்னூட்ட மழையில் குதியுங்கோ:)..

      Delete
    3. //ஏன்டா கீழே வாரத்துக்கு பஸ் இல்லையம்//
      ஹா ஹா ஹா கர்:)) லிஃப்ட் ஐ யூஸ் பண்ணாமல் படி படியாக இறங்கி வந்திட்டு.. இப்போ பஸ் பற்றிக் கதைக்கிறீங்க கர்:) இருப்பினும் இறங்கி வந்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
  33. படங்களில் வந்திருக்கும் காட்சிகள் வெகு அழகு. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  34. படங்கள் அழகு!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ புலவர் ஐயா.. மிக்க நன்றி.. அனைத்துக்கும்.

      Delete
  35. என் பஸ் போஸ்ட் பார்த்ததும், கோபு அண்ணனுக்கு நினைவு வந்த ஒரு நகைச்சுவைக் கதையை, எல்லோரும் ரசிப்பதற்காக இங்கே அனுப்பியிருக்கிறார்...
    ///
    பஸ் பயணம் என்றதும் நான் கேட்ட ஒரு சின்ன கதை நினைவுக்கு வந்தது.
    பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்:

    ஒரு பஸ்ஸில் சில மணி நேரங்கள் மட்டும் பயணம் செய்ய இரு பெண்மணிகள் ஏறி அருகருகே அமர்ந்து கொண்டனர். அது இருவர் மட்டும் அமரும் இருக்கைகள்.

    அதில் ஒரு பெண்மணி கண்டக்டரைக் கூப்பிட்டு ஜன்னல் கதவினை திறக்கச் சொன்னாள். கண்டக்டரும் திறந்து விட்டார்.

    பக்கத்தில் இருந்த பெண்மணி கண்டக்டரை அழைத்து அதே ஜன்னலை மூடச்சொன்னாள். கண்டக்டரும் அதனை மூடிவிட்டார்.

    மீண்டும் முதல் பெண்மணி கண்டக்டரைக்கூப்பிட்டு ஜன்னலைத் திறக்கச் சொன்னாள். இல்லாவிட்டால் தான் காற்று இல்லாமல் மூச்சுத்திணறி இறந்துபோக நேரிடும் என்றாள்.

    அவள் அருகே இருந்த இன்னொருத்தி ஜன்னல் கதவைத் திறந்தால் குளிர் காற்று ஒத்துக்கொள்ளாமல் தான் இறந்து விடுவது உறுதி எனச் சொல்லிப் புலம்பினாள்.

    கண்டக்டருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை .... மிகவும் குழப்பமாகி விட்டது.

    அதே பஸ்ஸில் கடைசியில் ஒரு பயணி சட்டை ஏதும் அணியாமல், பீடியைப் பிடித்துக்கொண்டு, புகையை விட்டபடி, நின்றுகொண்டு கண்டக்டரை அழைத்தார். என்ன அங்கு பிரச்சனை என விசாரித்தார். கண்டக்டர் விஷயத்தை விளக்கிச் சொன்னார்.

    பீடி ஆசாமி மீண்டும் பீடியை நன்கு இழுத்து புகையைவிட்டபடி, “இங்கு நான் ஒருத்தன் இருக்கிறேனே .... என்னிடம் நீ கேட்டால் இதற்கு ஏதேனும் சுலபமான + சுமுகமான வழி சொல்லியிருப்பேனே” என்றான்.

    “நீ என்னய்யா புதுசா சொல்லப்போகிறாய்?” என்றார் அந்தக் கண்டக்டர்.

    ”முதலில் ஜன்னல் கதவை திறந்து வை. ஒருத்தி செத்துப்போகட்டும். அடுத்து ஜன்னல் கதவை மூடி விடு. மற்றொருத்தியும் செத்துப்போகட்டும். நாம் நிம்மதியாகத் தொடர்ந்து, பஸ்ஸில் பயணம் செய்வோம்” என்றான் பீடிக்காரன்.

    உடனே அந்தக் கண்டக்டர் கடுப்புடன் சொன்னார், “நீ ஏதாவது இதுபோலச் சொல்லி விட்டுப் போய் விடுவாய். ஓடும் பஸ்ஸில் அவர்கள் இருவரும் இறந்துவிட்டால் அவர்களின் கணவன்மார்களுக்கு யாருய்யா பதில் சொல்வது?” என்று விசாரத்துடன் கேட்டார்.

    ”அந்த பொம்பளைங்க இரண்டு பேருக்குமே நான் தான் கணவன். அவர்கள் இருவரும் என் சம்சாரங்கள்தான். அதனால் அது பற்றியக் கவலையே உனக்கு வேண்டாம். நான் சொன்னபடி உடனே நீ செய்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் பீடியை இழுத்து புகையை விட்டுக்கொண்டிருந்தான், அந்த ஆளு.

    இது எப்படி இருக்கு?

    அன்புடன் கோபு அண்ணன்///

    நன்றி கோபு அண்ணன்... நல்ல நகைச்சுவை:).

    ReplyDelete
    Replies
    1. பீடிக்காரன் பக்கத்தில் இருந்த அவனுடைய மூன்றாவது புது மனைவியைப் பற்றி கோபுசார் ஒண்ணும் எழுதலயே?

      Delete
    2. ஹா ஹா ஹா:).. நீங்க 16 அடி பாயுறீங்க நெ.தமிழன்:).

      Delete
  36. வண்ண வண்ண படங்கள் ..ஆஹா ..ஓஹோ...

    அதிரா அன்ன ஊஞ்சலும் ..சூப்பர்

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.