நல்வரவு_()_


Wednesday, 6 December 2017

கம்புத் தோசை, கொள்ளுத்தோசை தேம்ஸ்:) ஸ்பெஷல்:)

ளாளுக்கு கண்ட நிண்ட ஸ்பெசல் எனப் பெயர் வைக்கும்போது:) மீ ஏன் தேம்ஸ் ஸ்பெசல் என வைக்கக்கூடாது எனப் பலமா ஓசிச்சே இந்த முடிவுக்கு வந்தேன்:)..

இப்போ உலகமெல்லாம் வாழும் நம்மவர்கள்.. அரிசியை, மா வகையை எல்லாம் குறைத்து, தானிய வகையை அதிகப்படுத்தி வருகின்றனர் ஹெல்த் க்காக, ஆனா அதிராவைப் பொறுத்தவரை, நான் ஹெல்த் க்காக எனப் பெரிசாப் பார்ப்பதில்லை, பிடிச்சதைச் செய்வேன் .. அந்த வகையில் எனக்கு எப்பவும் விதம் விதமாக இலைவகைகள் மற்றும் தானிய வகைகள் ரொம்பவும் பிடிக்கும், எங்கு போனாலும் வித்தியாசமாக என்ன இருக்கு எனத் தேடிப் பார்த்து வாங்கி வந்திடுவேன், ஒத்துக் கொள்ளவில்லை எனில் விட்டிட வேண்டியதுதான்.

என் கிச்சின் ட்றோவெரில் இருக்கும் ஸ்ரொக்:)

சரி... கம்பு, கொள்ளு, வரகு , கோதுமை.. இவை எல்லாம் வாங்குவேன், எப்பவும் கஞ்சி அல்லது சுண்டல்தான் செய்வேன்.. 

எனக்கு இட்லி, தோசை எப்படிக் கஸ்டப்பட்டு வச்சாலும் பொயிங்கவே பொயிங்காது:), இங்கு குளிரும் அதிகம் என்பதனால் அவணை கீட் பண்ணி ஓவ் பண்ணிப்போட்டு வச்சு எடுப்பேன், அபூர்வமாகத்தான் பொயிங்கும்:).. அதனால செய்ய விரும்புவதில்லை...

இதுபற்றி அஞ்சுவுக்கு மெயில் அனுப்பியபோது, நான் தோசை மாக்குழைப்பதில் ஒரு தெக்கினிக்கைப் பாவிப்பேன்:) எனச் சொன்னேன்:).. அதைக் கேட்டு அஞ்சு ஹீல்ஸ் ஐக் கழட்டிப்போட்டு என்னைக் கலைக்கத் தொடங்கிட்டா:)... ஹையோ எதுக்குக் கலைக்கிறீங்க எனக் கேய்ட்டேன்ன்:).. நான் சுடுதண்ணியில்தான் (கொதிநீர் அல்ல வோம் வோட்டர்).. குழைப்பேன் எனச் சொல்லிட்டேனாம்:) ஹா ஹா ஹா:).. விரைவில் புளிக்கட்டுமே என அப்படிச் செய்வேன்:). அது டப்பா?:)..

அதனால இனிமேல் குளிர் தண்ணியிலேயெ கரைச்சு வையுங்கோ  என மிரட்டினா:)

அப்போ இம்முறை தோசை செய்யலாமே என வெளிக்கிட்டேன்:).

முக்கால் கப் முழு உழுந்து, கால் கப் கம்பு சேர்த்து ஒரு மேசைக்கரண்டி வெந்தயம், ஒரு 5,6 மணி நேரம் ஊறவிட்டு, பின்பு நன்கு அரைத்து, 2 கப்பிலும் கொஞ்சம் குறைந்த ரவ்வை சேர்த்துக் குழைச்சு... கவனிக்கவும் குளிர் தண்ணியில்:))... இதில் பாவிக்கும் ரவ்வை எப்பவும் கோர்ஸ் ஆக இருக்கோணும் ஃபைன் ரவ்வை கூடாது.........

உப்பு, சோடா எதுவுமே சேர்க்காமல் குழைத்து வைத்துப், 10 மணி நேரத்தால் பார்த்தேன் பொயிங்கி வந்திருந்துதே.. ஹையோ என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை:)).. அப்போ இவ்ளோ காலமும் பொயிங்காததுக்கு காரணம் என் சுடு தண்ணியாஆஆஆஆ?:)

எதுக்கும் தோசை சாப்பிட முன்னர், இந்தாங்கோ.. இதைக் குடிச்சு கொஞ்சம் தென்பாகுங்கோ:)) ஃபுரூட் யூஸரில் அடிச்செடுத்த... கரட், பீற்றூட், அப்பிள் சேர்ந்த ஊஸ்:).. அருகிலே இருப்பது பிழிந்து கிடைத்த சக்கை.. கொட்ட்டுவதற்கு முன் படமெடுத்தேன்..

இங்கே பாருங்கோ.. என் ஓசை:) என்னா சூப்பரா வந்திருக்குதென:)
 ஆனா கம்புத் தோசை கொஞ்சம் தடிப்பாக வரும்.. சுவை சூப்பர்ர்.. மிகுதி மாவில் இட்லியும் அவித்தேன்.. அதுவும் சூப்பர்.. படம் எடுக்காமல் விட்டிட்டனே:).

தோசை மா, பொயிங்கியதால், ஆசையில் டக்கென திரும்பவும் தோசைக்கு வைக்கலாம் என:).. இம்முறை அரைக்கப் உழுந்து, கால் கப்பிலும் கூடிய கம்பு, மிகுதிக்கு கொள்ளுச் சேர்த்து ஒரு கப்பாக்கினேன்... அதே முறையில், வெந்தயம் மட்டும் சேர்த்து அரைச்சு, 1.45 கப் ரவ்வை சேர்த்தேன்.. வேறு எதுவும் சேர்க்கவில்லை..... பொயிங்கியிருக்குது பாருங்கோ:)..

ஹையோ அது பேப்பர் தோசையேதான்... பாருங்கோ அதிரா சுட்ட ஓசையின் அழகை:)..

 எப்பவும் நல்லெண்ணெய் ஊற்றித்தான் தோசை சுடுவதுண்டு, இது நெல்லைத்தமிழனின் இட்லிப்பொடி அரைத்து வச்சிருக்கிறேன், அதை மேலே தூவி, அதனுள் ஒலிவ் ஒயிலை விட்டு.. வெந்ததும் ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆஆஆ:))
 அப்படியே மடிச்சு, புரட்டிப் பிரட்டிப் போட்டு முறுகலாக்கி எடுத்தேன் என்னா சுவை தெரியுமோ?:)..



இதுக்கு சட்னி கூடத் தேவையில்லை, நல்லெண்ணெய் விட்டுச் சுட்டமையால், சும்மாவே சாப்பிடலாம் தெரியுமோ:)..
எங்கள் சூப்பர்மார்கட்டுக்கு இப்படி விதம் விதமாக பல வண்ணங்கள் பல சைஸ்களில் பூசணிக்காய்கள் வரும், ஆனா எனக்கு வாங்கப் பயம்:)..
இந்த வெங்காயம் எங்காவது கண்டிருக்கிறீங்களோ?:)  இது அதிரா ஊரில் மட்டும்தான் கிடைக்குதூஊ..:) அதனாலதான் மெல்லிசூஊஊஊ அதிராவைப்போலவே:)).. ஏனைய இடங்களில் எல்லாம் குண்டாக்கும்:)..   அ.. வைப்போல:))
ஊசி இணைப்பு:-
என் கீரைவடை பார்த்து, பல நூறு ரசிகர்கள் உடனேயே செய்து, எனக்கு மெயில் அனுப்பினர்:) எல்லாத்தையும் இங்கின போட முடியாதெல்லோ:).. அதனால என் பரம ரசிகை[ஹா ஹா ஹா அம்முலு மன்னிக்கவும்:))] ஃபுறொம் ஜேர்மனி:)).. இதைச் செய்து அனுப்பியிருந்தா..  அம்முலு எனும் பிரியசகி.. அதை அஞ்சுட பேர்த்டேக்கு டெடிகேட்:) பண்ணுறாவாம்:)

இது கீதாக்காவின் ரெசிப்பி பார்த்து, அதிரா செய்த சுவீட் போளி:)
===========================================================================
சுயநலமென்பது குடிசைக்குச் சமனானது, பொது நலமோ அரண்மனைக்குச் சமனானது... இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)
======================================================================
ஆவ்வ்வ்வ் டங்கியூ:))

=======================================================================

156 comments :

  1. ஆவ்வ் !!!நான் தான் First

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆவ்வ்வ் வாங்கோ அஞ்சு வாங்கோ.. நல்லவேளை நான் குல்ட்க்குள் கை காலை எல்லாம் உள்ளே மறைச்ச பின்புதான் வந்திருக்கிறீங்க:).. அதனால மீ சேஃப்ஃப்ஃப்ஃப்:))...

      இருப்பினும் முதலாவதா வந்த உங்களுக்கு ஏதும் தரோணுமே:)... ஆங்ங்ங்ங் நீங்கதான் கீழிருந்து மேலே படிப்பவராச்சே.. ச்ச்சோஓ இனிப்பு போளி டிஷ் உடனே எடுத்துக்கோங்க.....

      Delete
  2. /ஆளாளுக்கு கண்ட நிண்ட ஸ்பெசல் எனப் பெயர் வைக்கும்போது:) மீ ஏன் தேம்ஸ் ஸ்பெசல் என வைக்கக்கூடாது எனப் பலமா ஓசிச்சே இந்த முடிவுக்கு வந்தேன்:)..//

    கர்ர்ர் :) ஆல்வேஸ் லண்டன் தான் க்ரேட் :) தேம்ஸ்ல ஒன்னும் ஸ்பெஷல் இல்லை மே பி நீங்க குதிச்சா தேம்ஸ் உலகபுகழடையும் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா தேம்ஸ் என ஒரு நதி இருப்பதே... பலருக்கு தெரிய வந்தது அதிரா குதிக்கப்போகிறா எனு எதிர்பார்ப்பாலதான்:))..

      ///ஆல்வேஸ் லண்டன் தான் க்ரேட் :)///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது போய்ப் பார்த்திட்டு வரத்தான் கிரேட்ட்ட்ட்:), குடியிருந்து பாருங்கோ வாழ்க்கை வெறுத்திடும்:)).. என்ன இருந்தாலும் அதிராவின் 6 க்கும் மலைக்கும் ஈடாகுமோ?:)) ஹா ஹா ஹா...

      Delete
  3. ஹா ஆஆ :) மக்களே எல்லாரும் பார்த்துக்கோங்க முதல் படம் என்ன சொல்லுதுன்னா :) அதிராவ் குண்டு :)
    அந்த கவலைல எல்லாரையும் குண்டாக்க பிளான் நடக்குது :)
    கடவுள் சில நேரம் மற்றவர்களுக்கு கேக்கிறதை அன்பு மிகுதியால் உங்களுக்கே இரட்டிப்பா கொடுத்திடுவார் :) ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீ அந்த வெங்காயம்போல:))

      Delete
  4. உங்க கிச்சன் drawer இல் இருக்கிறதில் பாதி நாங்க பறவை கோழிக்கு போடுவோம் :)
    ஆமா அந்த மக்காசோளம் எதுக்கு :)
    எங்க கிச்சன் drawer படத்தையும் போடுவோம் விரைவில் :)

    ReplyDelete
    Replies
    1. பறவை கோழி ஆடு மாடு குதிரை இவை உண்பதைத்தானே இப்போ நாங்க ஆரம்பிச்சிருக்கிறோம்ம்ம்:)... சோளம் கண்ணில் கண்டதெல்லாம் வாங்கிடுவேன்ன்.. அது மக்றோவேவில் பொப்கோன் செய்வேன் இடைக்க்கிடை..:)

      Delete
  5. ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பா :))) உலகத்தில் சுடுதண்ணி சேர்த்து தோசைக்கு ரெடி செஞ்ச ஒரே ஜீவன் நீங்களாத்தான் இருக்க முடியும் :)
    எங்கே அந்த பட்டம் :) மாஸ்டர் செஃப் ..கரண்ட் கம்பில மாட்டினா காற்றாடி மாதிரி ஆடிக்கிட்டிருக்கு பாருங்க முதல்ல அத டைட்டா பிடிங்க :)

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      [im]http://www.petcathealth.info/wp-content/uploads/2015/04/cat-485103_640.jpg [/im]

      Delete
  6. /அதனால இனிமேல் குளிர் தண்ணியிலேயெ கரைச்சு வையுங்கோ என மிரட்டினா:)//

    பின்னே உங்களையும் செஃப் னு நினைச்சிட்டிருக்கற அப்பாவிங்களை நான் காப்பாற்ற வேணாமா :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்:)) பொயிங்குதில்லையே:) சுடுதண்ணிக்காவது புளிச்சுப் பொங்கட்டும் எண்டுதான், குளிர்தண்ணி எனில் இன்னும் குளிராகிடுமெல்லோ...

      அதிலயும் முதல் தோசை ஒரு நாளில் பொங்கி எழும்பியிருந்தது, 2 வது தோசை பொயிங்க 2 நாட்கள் எடுத்தது.. பொயிங்கும்வரை பொறுத்திருந்தே சுடுவேனாக்கும்:))

      Delete
  7. ஹை A B C ஜூஸ் :)
    நானும் முந்தி குடிப்பேன் இப்போ ஒன்லி வல்லாரை நெல்லி :)

    அந்த வட்டமான கொள்ளுதோசையை கையில் பிடிச்சி வச்சிருக்கறதா பார்த்தா முதல் மரியாதை ரஞ்சனி ..அந்த நிலவைதான் கையில புடிச்சேன்னு பாடினாங்களே அது நினைவுக்கு வருதே :)
    அது அந்த ஓட்டை வழியா தேம்ஸ் கரை மலை மலையில் நிலா எல்லாம் தெரியுது :)))))))))

    ReplyDelete
    Replies
    1. இப்படி வடிச்சதுபோல் வரும் ஜூஸ் தான் குடிக்கிறார்கள்... கோடியலாக பிளெண்ட் பண்ணினால் நான் மட்டும்தேன் குடிச்சு முடிக்கோணும்:)..

      அந்தக் கம்புத்தோசையைத்தான் கைல புடிச்சேன்ன்ன்ன்ன்.. அஞ்சுவுக்காக:))..

      எப்பூடி பேப்பர்போல சுட்டிருக்கிறேன் தெரியுமோ? எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள் இது எப்பூடி ஒட்டாமல் எடுத்தீங்க என... :)) இதுக்குத்தான் அதிராவிடம் குக்கரி கிளாஸ் க்குப் போகோணும் என்பது:)

      Delete
  8. அவ்வ்வ் இட்லிப்பொடிக்கு ஆலிவ் எண்ணையா !!! தெய்வமே இது என்ன காம்போ :)
    அந்த குட்டி பூசணியில் சூப் செய்யலாம் மியாவ்
    //ஏனைய இடங்களில் எல்லாம் குண்டாக்கும்:).. அ.. வைப்போல:)) ஆமா அதிராவைப்போல :) ஹாஹீஈஹு

    ReplyDelete
    Replies
    1. நல்லெண்ணெய் விட்டு விட்டுத்தான் தோசை செய்வோம்ம்.. நான் முன்பும் சொல்லியிருக்கிறேன் நினைவிருக்கோ தெரியல்ல உங்களுக்கு.. நல்லெண்ணெய் வீட்டில் இல்லை எனில் தோசை செய்ய மாட்டோம்ம்:)..

      இது அப்படியே மடித்து விடுவதுதானே, அதனால பொடியில் ஒலிவ் விட்டேன், ஏனெனில் ஒலிஃப் ஒயில் அதிகம் சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது..

      சூப்ப்ப்.. சே..சே.. அது இங்கு ஆரும் குடிக்க மாட்டினம்..

      Delete
  9. அந்த ரெண்டு சமையலும் என் பிறந்த நாள் ஸ்பெஷல் அதனால் அவற்றை நான் கிண்டல் பண்ண மாட்டேனே :)
    அதிரா உண்மையில் நாம செஞ்ச ரெசிப்பிசை இன்னொருவர் உடனே செய்து பார்த்து சொல்லும்போது அதில் கிடைக்கும் ஆனந்தமே தனி ..அதனால் உடனே என்னோட தட்டை இட்லியை செஞ்சு போடுங்க இங்கே :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்களுக்காக தட்டை இட்லி ட்ரை பண்ணுவேன் அஞ்சு:)... குட்டியாகச் செய்தாலே சாப்பிட வைப்பது கஸ்டம் வீட்டில்:).. இதில பென்னாம்பெரிய தட்டா செய்து நான் தான் சாப்பிட்டு முடிக்கோணும்:)..

      Delete
  10. /சுயநலமென்பது குடிசைக்குச் சமனானது, பொது நலமோ அரண்மனைக்குச் சமனானது... இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)//
    அப்டியா :) ஓகே பொதுநலம்தானே அரண்மனைக்கு சமம் அப்டீனா உங்க வைர நெக்லஸை எனக்கு அனுப்பி வைங்க :) அரண்மனை அதிரா னு உங்களுக்கு பேரை மாத்திடுவோம் :)

    ReplyDelete
    Replies
    1. ஹலோ எச்சூச்ச்மீஈஈஈ.. உப்பூடிக் கேட்பது சுயநலம்:).. அதிராவே வச்சிருக்கட்டும் என நினைப்பது பொதுநலம்:) ஹையோ ஹையோ:))..

      ஹா ஹா ஹா அரண்மனை அதிரா... இது ஜூப்பரா இருக்கே:) குயின் அம்மம்மாவின் வன் அண்ட் ஒன்லி பேத்தி ஆச்சே.. ச்ச்ச்ச்சோஓ நல்லாப் பொருந்துது பெயர்:) டாங்ஸ் அஞ்சு:)...

      Delete
  11. /ஹையோ அது பேப்பர் தோசையேதான்... பாருங்கோ அதிரா சுட்ட ஓசையின் அழகை:)..//

    ஆமா அது என்ன பேப்பர் டெய்லி மிர்ரர் or ஈவ்னிங் ஸ்டாண்டர்ட் ???

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. “கம்பங்கொள்ளு”ப் பேப்பர்:)).... ஹா ஹா ஹா நான் கையை விட்டாலும், கம்பர் என்னை விடுறாரில்லைப் பாருங்கோ:))

      Delete
  12. எல்லாம் வல்ல இறைவா ..நானா தூங்க போறேன் .எனக்கு அப்புறம் இந்த தோசையை பார்த்து யாருக்கும் மயக்கம் வராம பார்த்துக்கோங்க :)
    யாருக்கும் நெஞ்சுவலி ப்ளட் ப்ரெஷர் வராம பார்த்துக்கோங்க ..எதுக்கு வேண்டிக்கறேன்னா ஏனக்கு பார்வை மங்கலாகிட்டே போகுது அது இப்பதிவை வாசிக்க துவங்கின நேரத்தில் ஆரம்பிச்சது .என்னோட எல்லா நட்புக்களையும் காப்பாற்றவும் :)

    ReplyDelete
    Replies
    1. ஹெல்த் தோசை அஞ்சு ஹெல்த் தோசை இது என்ன இப்படி சொல்லிட்டீங்க ஏற்கனவே கீரை வடைசெய்து தேற்றிவிட்டுட்டாங்க ..................:-)))))) ஸ்ராங்காஆஆ ஆயிட்டோமில்ல

      Delete
    2. என் தோசை சாப்பிட்டமையாலதான், எல்லோரும் ஓடி ஓடிக் கொமெண்ட் போட்ட்டிருக்கினம்:).. அவ்ளோ உஷாராக்கிட்டுது எல்லோரையும்:).. பின்ன எதுக்காக அதிரா கொள்ளுச் சுண்டல் அடிக்கடி சாப்பிடுறேன் தெரியுமோ?:)..

      //.எதுக்கு வேண்டிக்கறேன்னா ஏனக்கு பார்வை மங்கலாகிட்டே போகுது அது இப்பதிவை வாசிக்க துவங்கின நேரத்தில் ஆரம்பிச்சது///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது கீரை வடை எபெக்ட்:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சே:).. அது தட்டை இட்லி எபெக்ட் ஆக இருக்கும்..:)

      Delete
    3. ஆங்ங்ங்ங்ங் பூவிழிபோல நல்ல பிள்ளையா இருக்கக் கத்துக்கணும் எல்ல்லோரும்:))..

      இப்போ இங்கு படு இருட்டு.. பயங்கரக் காத்து.. டொப்பு டப்பு என சத்தத்தோடு மழை கொட்டுது...(இது உண்மை நிலவரம் தான்)..

      ஆனா எனக்கொரு டவுட்டூஊஊஊஉ என் கம்பு ஓசையாலதான் இப்பூடிப் பொயிங்கினமோ இயற்கை எல்லாம்:))..

      Delete
    4. //என் கம்பு ஓசையாலதான் இப்பூடிப் பொயிங்கினமோ இயற்கை எல்லாம்:))//
      in many cases these natural disaster occur for purely natural reasons i.e when someone who never had prior experience in cooking tries a new recipe and so on :))))))))))) for example this bajira dosa :)

      Delete
    5. [im]https://thumbs.gfycat.com/SlimyRespectfulGalapagosalbatross-max-1mb.gif[/im]

      Delete
    6. poovizhi :)

      [im]http://southseascinema.org/Toon%20Images/Cruise%20Cat%20Jerry%20Mouse%20playing%20ukulele%20crop.jpg[/im]

      Delete
    7. [im] https://annameldolesi.files.wordpress.com/2013/01/gatto-vs-topo.jpg?w=1400&h=9999 [/im]

      Delete
  13. ஆஹா கம்பு தோசை வந்துருச்சே!!!! எல்லாமே சூப்பரா இருக்கு அதிரா....நீங்கள் ரவை சேர்த்து செய்யறீங்க இல்லையா..நான் அப்படியும் கம்பு ரவா தோசை என்று செய்வதுண்டு. நார்மலாக இட்லி அரிசி கம்பு, உளுந்து சேர்த்துத்தான் செய்வேன்...

    நீங்கள் எந்த சிறு தானியமா இருந்தாலும் அதையும் உளுந்தும் மட்டுமே போட்டும் கூடச் செய்யலாம்...4:1 + வெந்தயம்....இப்படி ஒரு கப் உளுந்து ஊற வைத்து வெந்தயமும் ஊற வைத்து சேர்த்து அரைத்து, அதனுடன் 4 கப் (எந்தக் கப்பால் உளுந்து அளந்தீங்களோ அந்தக் கப்பால்) கேழ்வரகு மாவைப் போட்டுக் கலந்து உப்பு சேர்த்து பொயிங்கி வர வைத்து இட்லி, தோசை எனச் செய்யலாம்..

    கம்பு 3 கப், இட்லி அரிசி 1 கப், வெந்தயம், அண்ட் ஒரு கப் நல்லா பெரிசா அளந்து உளுந்து இப்படியும் கம்பு இட்லி, தோசை செய்யலாம்...

    கம்பு தோசை கம்பு போல வருமோனு நினைச்சேன் நல்லாவே வந்துருக்கு...ஹா ஹா ஹா ஹா

    ரவை சேர்ப்பது பற்றி சொல்லறேன் இருங்கோ அதுக்குள்ள எ பில தமன்னா கவிதை வந்துருக்கு....நெல்லை மயங்கிடப் போறார் ஸோ அங்க போய்டு வரேன்...

    மீண்டும் வரேன்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆங்ங்ங் வாங்கோ கீதா வாங்கோ.. பூஸோ கொக்கோ:) எல்லோரும் கம்பை மறந்தபின்னரே போஸ்ட் போட்டேன்ன்:)..

      //நீங்கள் ரவை சேர்த்து செய்யறீங்க இல்லையா.//

      எனக்கு ரவ்வை தோசை, இட்லி தான் அதிகம் பிடிக்குது கீதா, அரிசியில் ஓரிரு தடவைகள் செய்தேன், அது மடமட என வரும்.. அத்தோடு சுடச்சுட உள்ளே தள்ளிடோணும் இல்லை எனில்.. காய்ந்து விடும்..

      ஆனா ரவ்வையில் செய்யும்போது அப்படி இல்லை,
      சுட்டு வைத்து விட்டு,
      சுற்றுலாப் போய் வந்தாலும்
      சுடச்சுடச் சுட்டதுபோல
      சொஃப்ட்டா இருக்கும்..

      அய்ய்ய்ய்ய் கவித கவித கவித....:)

      //நார்மலாக இட்லி அரிசி கம்பு, உளுந்து சேர்த்துத்தான் செய்வேன்..///
      நான் ஒரு தோசை ஸ்பெஷலிஸ்ட் என்பது இங்கு என் செக்:) க்கு நன்கு தெரியும் கீதா:).. அதாவது, தோசைக்குப் போடலாமே என ஓசிச்சு விட்டு, கபேர்ட்டை, ட்ரோவெரைத்தை திறந்து பார்ப்பேன்.. அப்போது என் கண்ணில் என்ன எல்லாம் படுதோ அதை எல்லாம் போட்டு தோசை சுடுவேன் சூப்பரா வரும்:).. வீட்டிலும் பயங்கர வர வேற்றுப் கிடைக்கும்:)).. பார்லி அரிசிகூடச் சேர்ப்பேனே நான்:))..

      ஆனா இங்கு , கம்பு குளிர், கொள்ளு சூடு இப்படி என்னமோ கேள்விப்பட்டேன், அத்தோடு கன்னி முயற்சி என்பதனால் எடுத்த எடுப்பில் தனிக் கம்பு, கொள்ளில் செய்யப் பயமாக இருந்தது, இனி முயற்சிப்பேன்ன்...

      Delete
    2. // கேழ்வரகு மாவைப் போட்டுக் கலந்து உப்பு சேர்த்து பொயிங்கி வர வைத்து இட்லி, தோசை எனச் செய்யலாம்..//

      ஓ என்னிடம் மா இல்லை கீதா, ஆனா பல வருடங்களாக கேழ்வரகுக் கஞ்சி அடிக்கடி செய்வேன்ன்.. இப்போ நம்மவர்கள் என்னிடம் ரெசிப்பி கேட்டுக் கஞ்சி செய்கிறார்கள் ஹா ஹா ஹா.. அம்மா கூட அன்று கேட்டா.. நீ எப்படிச் செய்கிறாய் என ஒருக்கால் சொல்லு என:))

      இப்போதான், மா பற்றிய நினைவுக்குள் வருகிறேன், இனி மா வாக அரைத்துச் செய்திடுறேன் மிக்க நன்றி கீதா .. ஐடியாவுக்கு..

      ///கம்பு தோசை கம்பு போல வருமோனு நினைச்சேன் நல்லாவே வந்துருக்கு//

      ஹா ஹா ஹா மீயும் பயந்து வைரவை எல்லாம் வேண்டிக்கொண்டே ஆரம்பிச்சேன்ன்.. நன்கு பொயிங்கியதோடில்லாமல்.. சுவையும் ஒரு வித இனிப்பாக இருந்துது.. இது வாழ்க்கையில் நான் சாப்பிட்ட முதல் கம்பு கலந்த உணவு:)).. கன்னிக் கம்புத் தோசைஈஈஈ:))..

      //அதுக்குள்ள எ பில தமன்னா கவிதை வந்துருக்கு....நெல்லை மயங்கிடப் போறார் ///

      இல்ல அவர் மயங்கிட்டார்ர்:).. இல்லை எனில் என்பக்கம் இப்போ ஓடி ஓடி வந்திருப்பார் தோசைக்கு.... இன்று திரும்படியும் காணவில்லை ஹா ஹா ஹா:))

      Delete
  14. முதலில் பூனையின் பிரார்த்தனைக்கு ஒரு கிர்ர்ர்ர் சொல்லிக்கறேன். என்ன ஒரு நல்லெண்ணம்....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ:)).. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எண்டால்தான் முறைப்பது.. உறுமுவது:).. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எண்டால்ல் தலை சுத்துது என அர்த்தம்:).. ஒருவேளை காலையிலேயே தமனாவைப் பார்த்தமையால இருக்குமோ:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)..

      Delete
  15. //ஆனா அதிராவைப் பொறுத்தவரை, நான் ஹெல்த் க்காக எனப் பெரிசாப் பார்ப்பதில்லை, பிடிச்சதைச் செய்வேன் //


    ஆமாமாமாம்... நானும் இதே கட்சிதான். எங்க ஹேமா ஆரோக்ய சமையல்னு என்னென்னவோ போட்டு என்னென்னவோ ருசியா செய்வாங்கதான். ஆனாலும் நான் அவபத்தியமா செய்து தள்ளுவேன்!!

    ReplyDelete
    Replies
    1. ///ஆமாமாமாம்... நானும் இதே கட்சிதான். எங்க ஹேமா ஆரோக்ய சமையல்னு ///

      இப்போ ஒரு மாதமா தொடர்ந்து ஒரு போஸ்ட் இதுபற்றி என் மனதில் ஓடிக்கொண்டே இருக்குது.. விரைவில் எழுதவிருக்கிறேன்ன் ஆரோக்யம் ஆன்ரி:) பற்றி:)) ஹா ஹா ஹா..

      Delete
  16. அஞ்சுவின் தக்கினிக்கி உங்களை விட மேம்பட்டது போலவே... அனுபவங்கள்தான் ஆசான்!

    ReplyDelete
    Replies
    1. பின்ன நீங்க அஞ்சுபற்றி என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறீங்க?:)).. போன தடவையே சொன்னேனெ:).. 66 எனில் அனுபவம் இல்லாமல் இருக்குமோ?:).. என்னை விட நான்கு மடங்கு இருக்குமே:)).. ஹா ஹாஅ ஹா.. ஹையோ மீ கட்டிலுக்குக் கீழே:)

      Delete
  17. கேரட் ஆப்பிள் பீட்ரூட் ஜூஸ் எனக்கு வேணாம்ப்பா... ஜி எம் பி சார் கட்சி நான் இதில்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இல்லை இதை, பிளெண்டரில் அரைச்சுக் குடிச்சால் குடிக்க முடியாது, ஆனா இப்படி யூசரின் அடிச்சுக் குடிச்சால்ல் சூப்பரா இருக்கும் அதிலும் பீற்றூட் சேர்க்கும்போது.. நல்ல இனிப்பாகவும் இருக்கும்...

      நான் பழங்கள் மரக்கறிகளை மாற்றி மாற்றிச் சேர்த்து அடிப்பேன், இஞ்சியும் சேர்ப்பதுண்டு.

      Delete
  18. தோசை அழகா வந்திருக்கு. ஆனா கம்புத்தோசை என்கிறீர்கள்... கம்பைக் காணோமே... அட்லீஸ்ட் ஒரு ஈர்க்குச்சி கூடாக காணோம்!

    ReplyDelete
    Replies
    1. ///அட்லீஸ்ட் ஒரு ஈர்க்குச்சி கூடாக காணோம்!//

      ஹையோ இந்த ஐடியா எனக்கு வராமல் போச்சே:) ஒரு கம்பில் கட்டி வச்சிருப்பேனே:).. ஜஸ்ட்டூ மிஸ்ட்டூஊஊஊஊஊஉ:)..

      Delete
  19. ரவ்வையா? ரவையா?!! பொடிதோசை போல இதில் வெங்காய, காய் தோசை கூடச்செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது அந்த ஆண்டவருக்கே வெளிச்சம், நாங்கள் ரவ்வை என்றே பேசிப் பழகிட்டோம்ம்.. இப்போ இங்கு செமொலினா:))...

      ஓம் நீங்க சொல்வதுபோல நிறையச் செய்யலாம்தான் ஸ்ரீராம், ஆனா அப்படி எல்லாம் சாப்பிட மாட்டினம்.. சட்னி, அல்லது சாம்பாறு அல்லது அசைவக் கறி... மேலே பொடி போட்டதுகூட நான் மட்டும்தான் சாப்பிடுவேன்..

      Delete
  20. வெங்காயமா அது? பார்றா....ஆச்சர்யக்குறி.

    கீதாக்கா ரெசிப்பி ஸ்வீட் போளி நல்ல வந்திருக்கு போலவே... அக்காவை வேற காணோம்.. வெளி ஊருக்குப் போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது வெங்காயம்தான், பார்த்தீங்களோ அதன் வடிவத்தை, அதனாலயே இங்கு போட்டேன்..

      சுவீட் போளி நன்றாகவே வந்தது... கீதாக்கா லாண்டட்:))..

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  21. அம்முலு (பிரியசகி தானே!!!?) வடை நன்றாக இருக்கிறது.....அதிரா ஜீரா போளி நன்றாக இருக்கு...சூப்பர். நான் வருடத்தில் ஒரு முறை கண்டிப்பாகச் செய்வது...அப்புறம் முன்பு கெட்டுகெதர் என்றால் செய்வதுண்டு...சிரோட்டியும் செய்து பாருங்கள் ரொம்ப நல்லாருக்கும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. யெச்ச்ச் அவ பிரியசகியே தேன்ன்ன்ன்:)..

      //அதிரா ஜீரா போளி நன்றாக இருக்கு...சூப்பர்.//

      உண்மையில் மிக அருமையாக வந்துது கீதா, சீனிப்பாகுகூட நன்றாக வந்தது, ஆனா கீதாக்காவின் ரெசிப்பியில், பாகை முதலிலேயே காச்சி வைக்கச் சொன்னா.. ஆனா அது தப்பெனத் தோணுது, ஏனெனில் பூரி பொரிச்சுப் போடும்போது பாகு இறுகத் தொடங்கி விட்டது, பின்பு பாகைச் சூடு பண்ணிப் பண்ணியே பூரிகளைச் சேர்த்தேன்.... ஆனா என் ஜொந்தக் கதை ஜோகக் கதையை கீழே நெல்லைத்தமிழனுக்குக் கொடுக்கிறேன் பதிலாக படிச்சிடுங்கோ கீதா:)..

      //சிரோட்டியும் செய்து பாருங்கள் ரொம்ப நல்லாருக்கும்...//
      இது நம்மூரில் பால்ரொட்டி என்போம் அதுவோ? வெறும் அரிசி மாவில் செய்வது..

      இல்லை கீதா, இனி எந்த இனிப்புப் பலகாரமும் செய்ய மாட்டேன்ன்:)).. ஏற்கனவேயும் சொல்லியிருக்கிறேன்ன், உறைப்பு வகைதான் எல்லோருக்கும் பிடிக்கும்.. இனிப்பு எனில் சொக்கலேட், ஐஸ்கிரீம்ம்.. இப்படித்தான் அடிபடுவினம்.. நான் மட்டும் ரொம்ப நல்ல பொண்ணு ஐஸ்கிரீம்கூடப் பிடிக்காது எனக்கு:)..

      Delete
  22. கம்புத்தோசை ஊத்தப்பம் மாதிரியே தெரியுது நிறம்தான் மஞ்சள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

      //கம்புத்தோசை ஊத்தப்பம் மாதிரியே தெரியுது///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நோஓஓஓஓஒ... கீதா எனக்கு உங்களால ஒரு ஜெல்ப் ஆகோணும்:), கில்லர்ஜியின் அட்ரஸ் தாங்கோ:) நான் ஓட்டோ அனுப்பி கூவத்தில தள்ளி விடப்போறேன்ன்ன்:))... அஞ்சுவின் தட்டை இட்டலியையும் ஊஊஊஊஊஉத்தப்பமாம்ம் என் ஓசையும் ஊஊஊஉத்தப்பமாம் கர்ர்ர்:))... மீ தேம்ஸ்ல குதிக்கிறேஎன்ன்ன்ன்ன் என் ஓசையைப் பார்த்து ஊஊஊத்தை அப்பம்:) எனச் சொன்னமைக்கு:)).. அருகிலே கடிதம்.. கடிதத்திலே என் குதிப்புக்கான:) காரணம் இருக்கும்.. கீழே “இப்படிக்கு மாஸ்டர்செஃப் அதிரா” எனவும் இருக்கும்:))...

      ஹா ஹா ஹா நன்றி கில்லர்ஜி.. பயந்திடாதீங்க:).. குலைக்கிற நாய் கடிக்காது தெரியுமோ?:).

      Delete
    2. அது :) கில்லர்ஜி பின்னூட்டத்தை பார்த்து நீங்க தேம்ஸில் மட்டும் குதிச்சா கட்டாயம் நானே தங்க பிரேஸ்லெட் கொடுப்பேன் பரிசா கில்லர்ஜிக்கு :) உங்களை குதிக்க வச்சதுக்கு அடுத்த பதிவர் விழா சந்திப்பில் அவருக்கு பொன்னாடை பிளாக்கர்ஸ் சார்பா வழங்கப்படும் ..அந்த தோசை துண்டு ஒன்றையும் பொட்டலம் கட்டி அந்த தேம்ஸ் சைட் நோட் பக்கத்தில் வைங்க போலீஸ் அதை பார்த்து கில்லர்ஜிய பாராட்டி விடுவாங்க
      ஆனா மியாவ் நீங்களே சொல்லிட்டிங்க கத்துற மியாவ் பிராண்டாதுன்னு :)

      Delete
    3. ///நீங்க தேம்ஸில் மட்டும் குதிச்சா கட்டாயம் நானே தங்க பிரேஸ்லெட் கொடுப்பேன் பரிசா கில்லர்ஜிக்கு :) ///

      ஹலோ பிஸ்ஸூஊஊ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உந்தக் கனவு மட்டும் எப்பவும் காணாதீங்க... சூரியன்கூட ஒருநாள் மேற்கிலே உதிக்கலாம்:) ஆனா அதிரா தேம்ஸ்சிலே குதிப்பதென்பது.... நடக்கலாம்:).. நடக்காமலும் போயலாம்:)) எனச் சொல்ல வந்தேன்ன் நம்மூர் வானிலை அறிக்கையைப்போல:))..

      அதனால அந்த தங்க பிரேசுலட்டூஊஊ:)).. பொன்னாடை... அதை எல்லாம் எனக்கு கொரியரில அனுப்பிடுங்கோ:))...

      ///ஆனா மியாவ் நீங்களே சொல்லிட்டிங்க கத்துற மியாவ் பிராண்டாதுன்னு :)///

      பிராண்டாது எனத்தானே ஜொன்னேன்ன்:) கூவத்தில தள்ளாது எனச் சொல்லலியே:)) மீ பேச்சு மாற மாட்டேனாக்கும்:)) ஜொன்னாச் ஜொள்ளுத்தேன்:))... ஹா ஹா ஹா ஹையோ இது நமக்குள் இருக்கட்டும் அஞ்சு:)) கதை வெளில வந்தால்ல்ல்ல் ஒரு மாத சலரியைக் கட்டுப் பண்ணிடுவேன்ன் ஜொல்லிட்டேன்ன்ன்ன்ன்:)).. ம்ஹூம்ம்ம்:)

      Delete
  23. அதிரா சுடு தண்ணீ விட்டுக் குழைத்தால் சூடு கூடிவிட்டாலும் சில சமயம் அந்த பொயிங்க வைக்கும் ஈஸ்ட் அடங்கிவிடும். பொயிங்காது..அதான்...நார்மல் வாட்டரே போதும்...ஏஞ்சல் சரியாத்தான் சொல்லிருக்காங்க...ஏஞ்சல் நோட் திஸ் பாயின்ட்....இனி உங்க செக்ரட்டரி சொல்றத ஒயிங்கா கேக்கோணும் சொல்லிப்புட்டேன்....ஹா ஹா ஹா ஹா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //அதிரா சுடு தண்ணீ விட்டுக் குழைத்தால் சூடு கூடிவிட்டாலும் சில சமயம் அந்த பொயிங்க வைக்கும் ஈஸ்ட் அடங்கிவிடும். பொயிங்காது//

      கரீட்டுக் கீதா, இந்த நினைப்பு எனக்கு வரவில்லை, எனக்கு, தோசைக்கு இட்லிக்கு வைக்கும் பாத்திரத்தில் பாதி குழைத்து வைத்திருந்தால், விடிய எழும்பி ஓடிவந்து பார்க்கும்போது அது அப்பூடியே பொயிங்கி எழும்பியிருந்தால் மட்டுமே பிடிக்கும்.. இல்லையெனில் சுட மாட்டேன்ன்..

      இதனால பலதடவைகள்... பொயிங்கட்டும் பொயிங்கட்டும் என 4,5 நாட்கள்கூட அப்பூடியே விட்டிட்டு.. பின்னர் சுட்டால்ல் அது புய்க்கும்ம்ம்ம் கர்ர்:))...

      ///அதான்...நார்மல் வாட்டரே போதும்...ஏஞ்சல் சரியாத்தான் சொல்லிருக்காங்க...ஏஞ்சல் நோட் திஸ் பாயின்ட்....இனி உங்க செக்ரட்டரி சொல்றத ஒயிங்கா கேக்கோணும் சொல்லிப்புட்டேன்..//

      எல்லாம் சரிதேன்ன்ன்:) ஆனா தேம்ஸ்ல குதிங்கோ குதிங்கோ என அடிக்கடி ஜொள்றாவே:) அதையும் கேய்க்கோணுமோ?:)... பாருங்கோ 8 கால் பாய்ச்சலில் வந்திருக்கிறா:) தன்னைப் புகழ்ந்திட்டீங்களாம் ஹையோ ஹையோ.. தட்டை இட்லி என் கண்ணில தெரியுதே:) ஹா ஹா ஹா:))

      Delete
    2. AngelinThursday, December 07, 2017 11:27:00 am
      thanks geetha :)//

      [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQy9VMuIrV-XnE6GsM0I-tcdNgyMZ-BEpxbDu9ofcM1fgrmdXUh [/im]

      Delete
    3. அதிரா இந்த படத்தில் நீங்க அழகோ அழகு கொள்ளை அழகு :)

      Delete
    4. டங்கூ:) டங்கூ:) இப்படியாவது என்னை வாழ்த்த மனசு வந்துதே:)).. கோபத்திலயே கொள்ளை அழகெனில்:) கோபமில்லாத நேரம் எப்பூடி இருப்பேன்ன்ன்ன்:)).. கொஞ்சம் கண்ணை ஒரு சைட்டால:) மேலே நோக்கி:).. பிளாஸ்பக் ல:) கற்பனை பண்ணுவதைப்போல பண்ணிப் பாருங்கோ:)).. ஹா ஹா ஹா:)

      Delete
  24. தோசையும் மிளகாய்ப்பொடியும் சூப்பரா இருக்கு...

    அந்த ஒல்லி வெங்காயாம் அப்படி இங்குப் பார்த்ததில்லை...

    ஏன் பூஷணிக்காய் வாங்க பயம்? இங்கும் இப்படி அந்த சாம்பல் நிற பூஷணி மற்றும் கொஞ்சம் இளம் சிவப்பு கலந்த பூஷணி அது சிறிய வெரைட்டி..டார்க் பச்சையில் இருப்பதும் ஒரு வெரைட்டி...இங்கு சந்தையிலும் கிடைக்கும். . வெட்டினால் உள்ளே மஞ்சள் கலரில் இருக்கும் சாம்பல் நிறம்...பச்சை நிறம் மற்றும் இளம் சிவப்புனிறம்...கொஞ்சம் மஞ்சள் கூடுதலாக இருக்கும் அவ்வளவே. அது சிறிய வெரைட்டி நாங்கள் பூஷணிக் கொட்டை என்போம். அதனை. நான் வாங்கிச் ச்மைப்பதுண்டு. வீட்டிலும் வளர்க்கலாம். ஈசியாக வளரும். அதுவும் உங்கள் ஊரில் நன்றாகவே வளரும். நீங்கள் வாங்கும் பூஷணியில் முத்திய விதை இருந்தால் அதை எடுத்து சும்மா தோட்டத்தில் அதன் தோல் குப்பையுடனேயே போட்டுவிடுங்கள் ..வளர்ந்துவிடும். இங்கு இப்பூஷணியை தோலுடனேயே சமைப்பதும் உண்டு. பல செஃப்..கல்யாணங்களில் சமைப்பவர்கள் எல்லாம்..... வெங்கடேஷ் பட்டும் அப்படிச் சமைப்பதைப் பார்த்திருக்கேன். அவர் ஸ்க்வாஷ் வெரைட்டி எதிலும் தோல் எடுக்காமல்தான் செய்கிறார்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //ஏன் பூஷணிக்காய் வாங்க பயம்? இங்கும் இப்படி அந்த சாம்பல் நிற பூஷணி மற்றும் கொஞ்சம் இளம் சிவப்பு கலந்த பூஷணி அது சிறிய வெரைட்டி///

      அது கீதா, ஏதும் புது விதமான கய்கள் எனில், அலர்ஜி அல்லது குளிர்க்குணம் இப்படி ஏதும் இருந்திடுமோ எனும் பயத்தில் விசாரிக்காமல் வாங்குவதில்லை..

      நீங்க சொல்லிட்டீங்க இனி வாங்கிச் சமைச்சுப் பார்க்கிறேன்.

      ///வீட்டிலும் வளர்க்கலாம். ஈசியாக வளரும். அதுவும் உங்கள் ஊரில் நன்றாகவே வளரும்//

      நான் பூசணி வீட்டு கிச்சின் ஜன்னலில்தான் வளர்த்தேன் கீதா:))... அந்தப் படம் இங்கு போட்டிருக்கிறேன்.. லிங் தரலாம் எனத் தேடினேன் கிடைக்கவில்லை கர்:))..

      சிவப்பு பட்டர்நட் ஷ்குவாஸ், மற்றும் சக்கரைப்பூசணி இவை இரண்டுக்கும் நாமும் தோல் நீக்குவதில்லை கீதா...

      அனைத்துக்கும் மிக்க மிக்க நன்றிகள் கீதா. துளசி அண்ணனையும் நலம் கேட்டதாகச் சொல்லி விடுங்கோ.

      Delete
  25. "Make my friends fat"- இதைத்தான் நானும் வேண்டிக்கொள்வேன். இப்போதுதான் தெரிந்தது, என்ன முயற்சி செய்தும் எடை குறையாமல் கூடிக்கொண்டே செல்கிறதே என்று யோசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      ///"Make my friends fat"- இதைத்தான் நானும் வேண்டிக்கொள்வேன்.///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் உங்களை கொஞ்சம் மெல்லிய உயரமான ஆளாகத்தான் கற்பனை பண்ணி வச்சிருக்கிறேன்:)).... நீங்க இனிப்புப் பிரியர் ஆச்சே.. முதலில் அதைக் கட் பண்ணுங்கோ:))

      எதுக்கு இப்போ என் செக் உறுமுறா:)) ஹா ஹா ஹா:)

      Delete
    2. உங்க கற்பனைக்கும் 'நிஜத்துக்கும் ரொம்பத் தூரம். 5 1/2 அடிக்கு, கோபு சார் மாதிரி ஒரு உருவத்தைக் கற்பனை பண்ணினால், என்னில் 3/4 அளவு வரலாம்.

      இனிப்பை என்னால் குறைப்பது ரொம்பக் கடினம். நான் நிஜமான இனிப்புப் பிரியன்

      Delete
    3. ஹா ஹா ஹா .. ஏதோ எழுத்தை மட்டும் வச்சுத்தானே ஒவ்வொருவரையும் மனதில் கற்பனை பண்ணி வைக்கிறோம்ம்... ஏகாந்தன் அண்ணனை.. வைரமுத்து அங்கிளின் தோற்றத்தில் இருப்பார் என நினைச்சு வச்சிருந்தேன்:)) ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:))...

      கஸ்டம்தான் ஆனா இனிப்பை விடத் தேவையில்லை... குறைக்க முயற்சிக்கலாம்... வாங்குவதைக் குறைப்பது, வீட்டில் செய்வதைக் குறைப்பது.. இப்படி ஏதும் செய்தாலே பாதி சாப்பிடுவது குறைஞ்சிடும்..

      எனக்கு கண் முழிச்சவுடன் நல்ல ஸ்ரோங் ரீ வேணும்:).. இதை விடச் சொன்னால் விடமாட்டேன்ன்:).. அப்படித்தான்.. சொல்வது சுலபம்.. கடைப்பிடிப்பது கொஞ்சம் கஸ்டம் தான்..

      Delete
  26. ஹப்பா கம்பு தோசை நல்ல காலம் கம்பு போல் வரலை!!! ஹா ஹா ஹா

    ரவை சேர்ப்பது பற்றி..ஒரு முறை சரவணபவன் தோசை எப்படி க்ரிஸ்பாக அந்த நெய் ரோஸ்ட் வருதுனு படித்த நினைவு. அதில் உளுந்தும் அரிசியும் சேர்த்து வழக்கமாக அரைப்பது போல் அரைத்துவிட்டு பொயிங்க விட்டு பின்னர் தோசை செய்வதற்குக் கொஞ்ச நேரம் முன்பு கொஞ்சம் பெரிய ரவை (ஃபைன் ரவை அல்ல) சேர்த்து கொஞ்சம் ஊறியதும் அப்புறம் சுடுவார்களாம். என்னிடம் அளவும் இருக்கிறது...தருகிறேன்.

    ஆனால் பொதுவாக ரவை சேர்க்காமலேயே தோசை மிக மிக் நன்றாக ரோஸ்ட் ஆக வரும்....மெலிதாக...சூப்பரா...அதுவும் இரும்பு தோசைக்கல்லில்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இரும்புத்தோசைக்கல்லு:)... எங்கள் அம்மாதான் இரும்புத் தோசைக்கல்லு வாங்குங்கோ எனச் சொல்லி பல வருடங்கள் முன்பு நிறைய விலைக்கு ஒரு தோசைக்கல்லு.. அது இங்கிலீசு ஸ்டைல் கல்லு:) வாங்கி வச்சிருக்கிறேன்.. தூக்க முடியாது அவ்ளோ பாரம்...

      நான் பாவிப்பதே இல்லை அதை, அம்மா வந்தால்.. அதைத்தான் தேடி எடுத்துச் சுடுவா:)..

      Delete
  27. ரவா இட்லிக்கும் ஃபைன் ரவை நன்றாக இருப்பதில்லை. கொஞ்சம் பெரிய ரவை தான் நன்றாக இருக்கும்...ரவா இட்லி உளுந்து சேர்த்தும் செய்யலாம்...உளுந்து சேர்க்காமல் புளித்த தயிர் சேர்த்து உடனே செய்யலாம்..நல்லெண்ணை நெய் சேர்த்து.நன்றாக வரும்..

    நானும் நல்லெண்ணைதான் சேர்ப்பேன் தோசைக்கு..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. புளித்ததயிர் சேர்ப்பது, உடனேயே ரவ்வையை குழைத்து வைத்துச் சுடுவது.. இப்படி ஸ்டைல் எல்லாம் ட்ரை பண்ணிட்டேன் கீதா... எனக்கு எதுவும் பிடிக்கவில்லை:).. எனக்கு தோசை,இட்லி எனில் பொயிங்கி எழும்பி வழிவதுபோல இருக்கோணும் அப்போதான் என் மனதும் பொயிங்கி வழியும்:)... ஹா ஹா ஹா.. தோசை என்றாலே நல்லெண்ணெய்தான்:)).. ஜோடி.

      Delete
  28. என் கீரைவடை பார்த்து, பல நூறு ரசிகர்கள் உடனேயே செய்து, எனக்கு மெயில் அனுப்பினர்:) எல்லாத்தையும் இங்கின போட முடியாதெல்லோ:).. //

    ஹா ஹா ஹா உடனே அனுப்பினதால் ...சாப்பிட்டப்புறம் என்ன ஆச்சோ...ஹி ஹி ஹிஹ் ஹி..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதா ரங்கன்.. நீங்க சரியா வாசிக்கலை. எப்போதும்போல் அதிரா எழுத்துப்பிழை விட்டுவிட்டார்.

      "எனக்கு மெயிலில் அனுப்பினர்:" - அதாவது கீரை வடை பண்ணினார்கள். நல்லா இல்லை. அதனால், செய்த கீரை வடைகள் முழுவதையும் மெயிலில் அதிராவுக்கே அனுப்பிவிட்டார்கள். இப்போ புரிந்ததா?

      Delete
    2. ///ஹா ஹா ஹா உடனே அனுப்பினதால் ...சாப்பிட்டப்புறம் என்ன ஆச்சோ...ஹி ஹி ஹிஹ் ஹி..///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நெஞ்சு பக்குப் பக்கெண்டு இருந்துது:).. நல்லவேளை பிரியசகி இங்கு மீண்டும் வந்ததைக் கண்டதும் நேக்கு நெஞ்சில யூஸ் வந்ததுபோலாச்சு:).. அப்பாடா கீரை வடை சாப்பிட்ட என் வாசகி சேஏஏஏஏஏஏஃப்:)) ஹா ஹா ஹா..

      Delete
    3. ///அதாவது கீரை வடை பண்ணினார்கள். நல்லா இல்லை. அதனால், செய்த கீரை வடைகள் முழுவதையும் மெயிலில் அதிராவுக்கே அனுப்பிவிட்டார்கள். இப்போ புரிந்ததா?///

      ஆவ்வ்வ்வ் மீ ஜொன்னனே:).. அது எப்பூடித்தான் மணந்து கண்டு பிடிக்கினமோ?:).. அதிராவை ஆரும் அடிக்கினம் எண்டால்ல்ல்... எவ்ளோ பிசியெண்டாலும் பிளேன் பிடிச்சு வந்து சேருவினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா...:)

      Delete
  29. தோசை நல்லா வந்திருக்கு. பாராட்டுக்கள், ஸ்காட்லாந்து சென்று 25 வருடங்களுக்குப் பிறகு தோசை சரியாக ந்துள்ளது.

    ஜூஸுக்குப் பக்கத்தில் "சக்கை" என்று நீங்கள் சொல்லியிருக்கலைனா நான், தோசையை வைத்து ஃப்ரை செய்திருக்கிறீர்கள் என்று நினைத்திருப்பேன். (தோசையை பிய்த்துப் போட்டு, மசாலா, காரம், தேவைனா சில காய்களைச் சேர்த்து வாணலியில் பிரட்டுவது)

    ReplyDelete
    Replies
    1. ///தோசை நல்லா வந்திருக்கு. பாராட்டுக்கள், ///

      ஆவ்வ்வ்வ் அஞ்சு கமோன்ன்ன் ... வந்து இதை, சத்தமாப் படிக்கவும்:)..

      ///ஸ்காட்லாந்து சென்று 25 வருடங்களுக்குப் பிறகு தோசை சரியாக ந்துள்ளது.///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்போ இதை ஆரு கேட்டாஆஆஆஆஆஆ:)).. ஹையோ தெரியாம அஞ்சுவை வேறு கூப்பிட்டு விட்டனே:)).. அஞ்சூஊஊஊஊஉ முதலாவதை மட்டும் படிக்கவும்.. கீழே திருத்த வேலை நடப்பதால் படிக்க இயலாது:))..

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு இப்போதானே சுவீட் 16 நடக்குது:) இதில 25 எங்கிருந்து:).. மீ ரொம்ப உசாராக்கும் இதிலெல்லாம்:)).. போட்டு வாங்கப்பார்க்கிறார் நெல்லைத்தமிழன் ஹா ஹா ஹா:))...

      ///(தோசையை பிய்த்துப் போட்டு, மசாலா, காரம், தேவைனா சில காய்களைச் சேர்த்து வாணலியில் பிரட்டுவது)//

      உண்மையாவா? இப்படியும் செய்வார்களோ? மசாலாத்தோசை செய்திருக்கிறேன்ன்.. இது உப்புமாப்போல இருக்குமோ...

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      Delete
    2. உண்மையாவா? இப்படியும் செய்வார்களோ? - சும்மா சொன்னேன் அதிரா. இட்லி எண்ணெய் இல்லாதது. அதனால் அதில் இந்த மாதிரி செய்யலாம். ஆனால் தோசையில் ஏற்கனவே எண்ணெய் போட்டு வார்த்தது. அதனால் அவ்வளவு நன்றாக இருக்கும்னு தோணலை. ஆனாலும் செய்துபார்க்கலாம்.

      Delete
    3. ஹா ஹா ஹா கர்ர்:) ஒரு அப்பாவியைப் பேய்க்காட்டப் பார்க்கிறீங்க:)).. இட்லியில் உப்புமாபோல செய்வது கேள்விப்பட்டிருக்கிறேன்...

      ஆனா எனக்கு ஒரு பொருளை அப்படி அப்படியே சாப்பிடத்தான் பிடிக்கும்..

      Delete

  30. இந்த ஜூஸை எல்லாம் எப்படிதான் குடிக்கிறீங்களோ இதுக்கு பதிலா சரக்கை குடிச்சிட்டு போகலாம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ...

      நீங்க இன்னும் எங்கள் புளொக் - புதன் பதிவிலிருந்து மீளவில்லை என நினைக்கிறேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  31. ஏஞ்சல் அவங்க பிறந்த நாளை ஸ்வீட்ட் கொடுத்து கொண்டாடுவாங்க என்று நினைத்து காத்து இருந்தேன் ஆனால் எல்லோருக்கும் அல்வா கொடுத்துட்டாங்க அதனால் அன்று இரவு பொறுக்க முடியாமல் திரட்டி பால் பண்ணினேன்

    ReplyDelete
    Replies
    1. செஞ்சா மட்டும் போதாது உடனே பார்சல் அனுப்புங்க :)

      Delete
    2. ஸ்ஸ்ஸ்ஸ் ட்றுத் நீங்க பேச்சை எடுத்தமையால சொல்றேன் வெளியே ஆருக்கும் ஜொள்ளிடாதீங்கோ:).. அஞ்சு எனக்கு மட்டின் பிர்ர்ராஆஆஆணி செய்து அனுப்பி விட்டா.. கேக்கூஊஊஉ உடன்:)...

      ///திரட்டி பால் பண்ணினேன்//

      எதைத் திரட்டிப்?.. பால் பண்ணினீங்க?:) ஹையோ வீட்டில் அனைவரும் நலம்தானே... அந்த நீங்க 50 தடவை ஐ லஃப் யூ சொல்லும் உங்க செல்லம் நலம்தானே?:))... ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்.

      Delete
    3. //AngelinThursday, December 07, 2017 2:15:00 pm
      செஞ்சா மட்டும் போதாது உடனே பார்சல் அனுப்புங்க :)//

      இது..இது.. கொஸ்சன்ன்ன்ன்:))

      Delete
  32. அதிரா கம்பு தோசையும் நல்ல மெலிதாக வரும்...உளுந்து கொஞ்சம் தூக்கல்னு நினைக்கிறேன் உங்க ரெசிப்பில அதான் தடியா இருக்கு ஆனாலும் சுவை நல்லாத்தான் இருக்கும்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது கீதா தோசை தோசை சுட்ட அதிராவ மாதிரியே குண்டூஸ் :)

      Delete
    2. உளுந்து முக்கால் கப் கீதா... ரவ்வை 2 கப் போட்டேன்ன்ன்.. ஆனா காதைக் கொண்டுவாங்கோ சொல்றேன்ன்ன்:)).. நான் சொன்னனே நான் எப்பவும் சற்று மாறுபட்ட ரசம்.. வெரி சோரி ரகம்:).. எனக்கு உப்பூடி மொத்தமாகவும் சொஃப்ட்டாகவும் இருக்கும் ஓசைதான் பிடிக்கும்:))) ஹா ஹா ஹா:))

      Delete
    3. ///AngelinThursday, December 07, 2017 11:29:00 am
      அது கீதா தோசை தோசை சுட்ட அதிராவ மாதிரியே குண்டூஸ் :)///

      இண்டைக்கு பாபகியூ போடாமல் விடமாட்டேன்ன்ன்ன்:)

      [im]https://us.123rf.com/450wm/Isselee/Isselee1711/Isselee171101234/90388159-side-view-of-a-british-longhair-sitting-looking-with-envy-at-a-fish-jumping-out-of-its-bowl-isolated.jpg?ver=6[/im]

      Delete
  33. காலைச் சாப்பாடு கச்சிதம்..
    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. நோ :) அண்ணா நான் உண்ணும் விரதம் இருப்பேன் அதுவும் சமோசா உண்ணும் விரதம் :)
      எனக்கு சொன்ன மாதிரியே தோசையை வாழ விடுங்கள்ன்னு சொல்லணும் :)
      சொல்லிட்டேன்

      Delete
    2. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ ..
      மூன்று சொல்லோடு எஸ்கேப் ஆகிட்டீங்களே....:).. மிக்க நன்றி..

      Delete
    3. ///அதுவும் சமோசா உண்ணும் விரதம் :)///

      கர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லிட்டு உண்ணுங்க:) மீ செவ்வாய்க்கிரகத்தில 2 பரப்புக் காணி வாங்கி விட்டிருக்கிறேன்.. தண்ணி அங்கு இல்லாட்டிலும் பறவாயில்லை.. வோட்டர் பொட்டில் வாங்கிக்கொண்டு போயிடுறேன்ன்ன்:).

      ///எனக்கு சொன்ன மாதிரியே தோசையை வாழ விடுங்கள்ன்னு சொல்லணும் :)///

      ஹா ஹா ஹா கர்:)) அவர் பொய் சொல்ல மாட்டார் தெரியுமோ?:))

      Delete
  34. கம்பு ஊன்றி நடக்கிற வயசுல கம்பு தோசை சாப்பிடுறீங்களா பார்த்து இந்த வயசுல இப்படி சாப்பிட்டு ஜீரணம் ஆகாமல் கஷடப்படப் போறீங்க அதெல்லாம் எங்களை மாதிரி உடல் உழைப்பு உள்ளவங்க சாப்பிட வேண்டியது

    ReplyDelete
    Replies
    1. ///கம்பு ஊன்றி நடக்கிற வயசுல கம்பு தோசை சாப்பிடுறீங்களா///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கம்பு ஊன்றும் காலத்தில கம்பு ஊன்றாமல் நடக்கவென்றே இப்போ கம்புத்தோசை சாப்பிடுறோம்ம்:)).. நாங்க ஆரூஊஉ வருமுன் காப்போனாக்கும்:)) பின்ன 100 வயசு வரை வாழோணும் எனில் சும்மாவோ?:)[இது பற்றி ஒரு பதிவு வரும் விரைவில்:)] இப்பூடி கடினமா உளைக்கோணுமாக்கும்:))...

      ///எங்களை மாதிரி உடல் உழைப்பு உள்ளவங்க//

      ஓஓஓஒ யூ மீன்ன்ன்ன்ன்(இது வேற மீன்:)) அமேரிக்காவில போய் தோட்டம் கொத்தி.. வயல் உழுது?:)).. ஹா ஹா ஹா ஹையோ முடியல்ல ஜேசுவே:))...

      Delete
  35. ஓ பெயர் மாற்றம் செய்யாதவரை இப்படி போட்டு தாக்கலாம் என்று பிளான் பண்ணயாச்சு போலவே முதலில் உங்க விசுவாசமான பூஸாருக்கு எம்புட்டு நல்ல எண்ணம்
    அடுத்து என் கிச்சன் டிராவில் சாமான்கள் எந்தவருஷம் வாங்கியது என்று பார்த்துட்டு சமைங்க ஹீ ஹீ ஒரு அன்புதான்
    உங்க டெக்கினிக் டப்பா............... போன போகட்டும் பிழையிருந்தால் கொஞ்சுண்டு குறைச்சிகிட்டு பொயிங்கி இருக்கலாமில்ல:-))))) இப்படித்தான் திருவிளையாடல் தருமி மாதிரி சொல்லலாம்னு நினைக்கிறேன் ஆனாலும் நோ ...................ரொம்ப டப்பா
    உங்களுக்கு ஆனாலும் இவ்வளவு நல்லமனசு நாம சமைத்ததை பார்த்து பயப்பட வேண்டாம் இயற்கை காய் பழம் வைத்து ஒரு ஜூஸ் கொடுத்திடுவோம் முதலிலேயே என்று வாழ்க வளமுடன்
    ஓ தோசை ஊற்றும் பொது வந்த ஓசையையே உணர்ச்சிவசப்பட்டு எழுதிட்டீங்களா என்ன ஒரு சின்சியர் :-))
    ம்ம்ம் தோசை ஏமாற்றவில்லை கடவுளுக்கு ஓரவஞ்சனை அதிரா பக்கம் தான் நிற்பேன் என்று அடம்
    இப்ப சொல்லுங்கோ ஆலிவ் ஆயிலா? நல்லெண்ணெயா ஊற்றியது :-)))
    வெங்காயம் சூப்பர் மேல, கீழே ஒல்லியா இருந்தாலும் நடுவுல உப்பிகிட்டுதான் இருக்காகும்...... (அஞ்சு கேட்டீங்களா ஹா ஹா )
    கீரை வடைக்கு வந்த வாழ்வை பாருங்க ஹெல்த்துனு செய்து பார்த்திருப்பாங்கலோ ஆனா அஞ்சுக்கு அனுப்பிட்டாங்க அம்புட்டு பாசம்
    பூஸானந்தா மார்க் எடுத்துட்டாரு , டச்சு வாங்கிட்டாரு திரும்ப வரேன் எங்க வீட்டு தோசை செய்துவிட்டு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பூவிழி வாங்கோ...

      //ஓ பெயர் மாற்றம் செய்யாதவரை//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சிறு திருத்தம்:).. அடுத்த பட்டம் கிடைக்கும் வரை என வரோணும்:))..

      //அடுத்து என் கிச்சன் டிராவில் சாமான்கள் எந்தவருஷம் வாங்கியது என்று பார்த்துட்டு சமைங்க ஹீ ஹீ ஒரு அன்புதான் //

      அதை ஏன் கேட்கிறீங்க பூவிழி.. என்னில் உள்ள ஒரு குறைபாடு.. எப்பவும் நிறைய அள்ளிப்போட்டுத்தான் செய்ய வரும் எனக்கு... இதனால மிஞ்சி விடும்.. பின்னர் மிஞ்சியதை கொட்ட மனம் வராது... பிரிஜ்ஜில் வச்சு.. பின்பு கொட்டுவேன்ன்:)).. இப்போ சில மாதங்களாகத்தான் என் ஸ்டைலையே மாத்தி.. அளவாக செய்யத் தொடங்கியிருக்கிறேன்ன்..

      //உங்களுக்கு ஆனாலும் இவ்வளவு நல்லமனசு நாம சமைத்ததை பார்த்து பயப்பட வேண்டாம் இயற்கை காய் பழம் வைத்து ஒரு ஜூஸ் கொடுத்திடுவோம் முதலிலேயே என்று //

      ஹா ஹா ஹா சேஃப்ரி 1ஸ்ட் எல்லோ?:).

      //இப்ப சொல்லுங்கோ ஆலிவ் ஆயிலா? நல்லெண்ணெயா ஊற்றியது :-)))//

      உங்களுக்கும் டவுட்டோ கர்:)).. தோசை சுட்டது நல்லெண்ணெயில்.. அந்த பொடிக்கு மேலே மட்டும் ஊற்றியது ஒலிஃப் ஒயில்:)..

      ///வெங்காயம் சூப்பர் மேல, கீழே ஒல்லியா இருந்தாலும் நடுவுல உப்பிகிட்டுதான் இருக்காகும்...... (அஞ்சு கேட்டீங்களா ஹா ஹா )//
      கர்ர்ர்ர்ர்ர்* 3246:))...
      ..

      ஹா ஹா ஹா வாங்கோ மீண்டும்.

      Delete
  36. அதிரா முதலில் வந்தது உங்களுக்கு இப்ப வருவது உங்க தோசைக்கு அழகா வந்திருக்கு தோசையோ தோசைகள் கல்லைவிட்டும் வந்துவிட்டது போலவே....:-)) வாழ்த்துக்கள் :-))ஹெல்த் தோசை அருமை ....
    ஐடியா சொல்லட்டுமா
    1-மாவு புளித்து வர நீங்க உளுந்தை கிரையின்ட்டரில் அரையுங்கள் அரிசியை மற்ற பொருட்களை மிக்சியில் அரையுங்கள் நைசாக மாவு தானாகவே சூடாக்கி புளிக்க வாய்ப்புள்ளது உங்கள் இருப்பிடத்திற்கு வசதி
    2-மாவை கைகளினால் கரைத்து வையுங்க கடைசியில் உப்பு சேர்த்து
    3-முதலில் அரைத்த மாவை சிறிது சின்ன கப்பில் எடுத்துவைத்து கொள்ளுங்கள் புளிக்க வைத்து பிரிட்ஜில் பின்னர் புது மாவு அரைத்தவுடன் அதனுடன் இந்த கப்பில் உள்ளதை கலந்து வையுங்கள் புளிக்கும் அடுத்த தடவைக்கும் கொஞ்சம் மாவை சேவ் செய்து கொள்ளுங்க இதே போல்
    தெரிந்தது இவ்வளவுதான் :-DDD சமையல் எக்ஸ்பர்ட்டுங்க வந்து சொல்லுவாங்க எப்படி பொயிங்க வைப்பது என்று

    ReplyDelete
    Replies
    1. ///தோசையோ தோசைகள் கல்லைவிட்டும் வந்துவிட்டது போலவே....:-)) //

      நொன் - ஸ்ரிக் இல் சுடுவதனால் ஒட்டாது எனக்கு.

      1. என்னிடம் கிரையிண்டர் இல்லை.. வாங்கவும் விருப்பமில்லை ஏனெனில் எங்கள் வீட்டில் தோசை இட்லி பெரிதாகப் பிடிக்காது அதனால இடைக்கிடைதான் செய்வேன்... மாதத்தில் 2 தடவைகள் அப்படி மட்டுமே.

      2. நானும் கையால்தான் குழைப்பேன்.. உப்பு சேர்த்தால் புளிக்காதாமே.. அதனால சுடப்போகு முன் தான் உப்பு சேர்ப்பேன்.

      3. இது நல்ல ஐடியாத்தான், இப்படித்தான் ஊரில் அம்மா தயிர் செய்வதற்குப் பாவிக்கும் தெக்கினிக்கு:).. ஆனா நான் தான் சொன்னேனே அடிக்கடி செய்வதில்லை என அப்போ எப்படி எடுத்து வைப்பது?:))..

      மிக்க நன்றி பூவிழி பொறுமையான விளக்கத்துக்கு.. இப்போ குளிர் நீரில் குழைப்பதே எனக்குப் புளித்துப் பொயிங்குது எனும் குசியில் இருக்கிறேன்ன்.. இது பிழைச்சால் பார்ப்போம் இனி... மிக்க நன்றி.

      Delete
  37. கிச்சன் டிராயரில், முழு கோதுமையும், மக்காச்சோளமும் எதுக்கு வச்சிருக்கீங்க? என்ன பண்ணுவீங்க இதை வைத்து?

    படத்தில் காண்பித்திருப்பது ஷாலட் என்னும் வகை வெங்காயம் (சமீபத்தில் மாஸ்டர் செஃபில் காண்பித்தார்கள்) அது சிறிது இனிப்பு அதிகமானது என்று சொன்னார்கள்.

    //சும்மாவே சாப்பிடலாம் தெரியுமோ:)..// - இப்படிப் போட்டுட்டு, தட்டு நிறைய சட்னி வச்சிருக்கீங்க. அட்வைஸ் மத்தவங்களுக்குத்தானா?

    //நெல்லைத்தமிழனின் இட்லிப்பொடி// - அதெல்லாம் சரிதான். பார்க்க, 'சாக்லேட் பொடி'போன்ற கலரில் தெரிவதுதான் அந்த மிளகாய்ப்பொடியா?

    ஜீரா போளி, அவ்வளவு சரியாக வரவில்லைபோல் தோன்றுகிறது. நீங்க, பாலை சுண்டக்காய்ச்சி (இல்லைனா பாலை நன்கு சுட வைத்து அதோட மில்க் மெய்டும் சேர்க்கலாம்), அதில் எஸென்ஸ், கேசரி பவுடர் போட்டு கலக்கி, அதில் இந்த போளியைப் போட்டீங்கன்னா, சாப்பிட மெத்துன்னு நல்லா இருக்கும். ரொம்ப இனிப்பாகவும் தெரியாது.

    ஏற்கனவே நீங்க, 'நான் இது மாதிரி செய்வதை வேறு யாரும் சாப்பிடமாட்டார்கள், நான் மட்டும்தான் சாப்பிடுவேன்' என்று எழுதியிருக்கீங்க. உங்களுக்கு மட்டுமா அந்த 45 ச்வீவீவீட் போளி? தாங்குமா (உங்க உடம்பைச் சொல்லலை. உங்க பில்டிங்கைச் சொன்னேன் :-) )

    ReplyDelete
    Replies
    1. ///கிச்சன் டிராயரில், முழு கோதுமையும், மக்காச்சோளமும் எதுக்கு வச்சிருக்கீங்க? //

      முழுக்கோதுமை.. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. அதைத்தேடித்தேடி.. கனடாவில் சில கடையில் மட்டுமே கண்டு பிடிச்சு வாங்கி வருவோம் முன்பு... இப்போ எங்கள் தமிழ்க் கடையில் கிடைக்குதே..

      அதை நன்கு ஊறவிட்டு 2,3 நாட்கள் சில சமயம் முளைக்கட்டியும் விடும், பின்பு அவித்து.. சுண்டல் போல பண்ணி ஈவினிங் ஸ்நாக் போல சாப்பிட சூப்பரா இருக்கும்.. கொஞ்சம் சப்புவது கடினம் போல தெரியும் ஆனாலும் நல்லா இருக்கும்.. சோளனின் சுவைபோல இருக்கும்.

      மக்கா சோளன்.. அது கண்டதும் காதலாகி வாங்கி வந்தேன்ன் ஹா ஹா ஹா.. எண்ணெய் பிரட்டி மைக்குரோவேஃப் ல வச்சால் பொப்கோன்:)).

      //படத்தில் காண்பித்திருப்பது ஷாலட் என்னும் வகை வெங்காயம்//

      அதேதான்.. காரமில்லை. ஓ நீங்களும் மாஸ்டர் செஃப் பார்ப்பீங்களோ? நாங்களும்தான் :).

      //இப்படிப் போட்டுட்டு, தட்டு நிறைய சட்னி வச்சிருக்கீங்க. அட்வைஸ் மத்தவங்களுக்குத்தானா?//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் செய்ததை எல்லாம் காட்ட வாணாமோ?:) ஆதாரத்தோடு நிரூபிச்சால்தானே .. நம்புவீங்க ஹா ஹா ஹா...

      Delete
    2. ///அதெல்லாம் சரிதான். பார்க்க, 'சாக்லேட் பொடி'போன்ற கலரில் தெரிவதுதான் அந்த மிளகாய்ப்பொடியா?///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது உங்கள் இட்லிப்பொடி:) கலரைக் கரெக்ட்டா நீங்க மட்டும்தான் கவனிச்சிருக்கிறீங்க:).. கறுத்ததன் ரகசியம்.. அது இன்னொரு நாளில்.. இன்னொரு பொழுதில் இன்னொரு இடத்தில் வெளிவரும் அப்போ விளக்குறேன்ன் ஹா ஹா ஹா:))..

      ///ஜீரா போளி, அவ்வளவு சரியாக வரவில்லைபோல் தோன்றுகிறது.//
      இல்ல நல்ல சொஃப்ட்டா எக்க்குறையும் இல்லாமல் நன்றாகவே வந்தது...

      ///ஏற்கனவே நீங்க, 'நான் இது மாதிரி செய்வதை வேறு யாரும் சாப்பிடமாட்டார்கள்//

      ஹா ஹா ஹா இதுக்குத்தான் பதில் சொல்றேன் என கீதாவுக்கும் சொன்னேன் மேலே.

      எங்கள் வீட்டில் பலகார வகையில் சுவீட் ஆருக்குமே பிடிக்காது... உறைப்பெனில் உடனே முடிஞ்சிடும்... கேசரி, கேக் இப்படியானது செய்தலும் மெதுவா மெதுவா எண்டாலும் முடியும்.

      இது ஒரு குட்டிப் பீஸ் எடுத்து ரேஸ்ட் பார்த்திட்டு ரூஊஊஉ சுவீட் எனச் சொல்லிட்டினம் எல்லோரும்... செய்திட்டேனே என நான் மட்டும் ஒரு கப் பிளேன் ரீயை ஊத்தி அதனோடு ஒரே ஒரு போளி சாப்பிட்டேன்ன்.. அவ்ளோதான்.. :(..

      //உங்களுக்கு மட்டுமா அந்த 45 ச்வீவீவீட் போளி? தாங்குமா//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சைக்கிள் ஹப் ல பிளேன் ஓட்டப் பார்க்கிறார்ர் ஹா ஹா ஹா.. எனக்குத்தான் இனிப்பே பிடிக்காது.. ஏதும் புடிங் ஐட்டம் அல்லது சேமியா பாயாசம் இவை இரண்டும் கொஞ்சம் பிடிக்கும்.

      Delete
    3. அதிரா- அப்போ செய்துவைத்திருக்கிற 10 பூரிகள், இட்டு வச்சிருக்கிற 15 பூரி, படத்துல காண்பிக்காத 20 பூரிலாம் என்ன செஞ்சீங்க?

      அதிரா பதில் - ஸ்ஸ்ஸ்ஸ் தாங்கமுடீல. இதுக்குத்தான் ஒரு பதிவு போட்டுட்டு உடனே இன்னோண்ணும் போட்டிடணும். இல்லைனா படத்தை உத்து உத்து பாத்து எல்லாத்தையும் கண்டுபிடிச்சு கேள்வி கேட்பினம். பதிலுக்கு நான் எங்கன போறது... வைரவா... உனக்கு வைரவேல் வாங்கித்தராத்துனால இப்படியெல்லாம் சோதிக்கறயே....

      Delete
    4. ///நெல்லைத் தமிழன்Friday, December 08, 2017 9:51:00 am
      அதிரா- அப்போ செய்துவைத்திருக்கிற 10 பூரிகள், இட்டு வச்சிருக்கிற 15 பூரி, படத்துல காண்பிக்காத 20 பூரிலாம் என்ன செஞ்சீங்க?///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உண்மை சொல்ல மாட்டேன்:) அதனால மெளனமாப் போகிறேன்ன்:).. ஆனா உடனே இருந்த ரேஸ்ட்டை விட அடுத்தநாள் இன்னும் நல்லா இருந்தது.

      ஹா ஹா ஹா நல்லாத்தான் என் மைண்ட்டை ரீட் பண்ணுறீங்க:).. இதுவரை வள்ளிக்குத்தான் விதம் விதமா நேர்த்தி வைப்பேன்:).. வைரவரைக் கூவி அழைப்பதோடு சரி:).. இப்போ ஐடியாத் தந்திட்டீங்க இல்ல:).. இனி வைர வேல்:)) நேர்த்தி வச்சிட வேண்டியதுதான்:)..

      Delete
  38. தேம்ஸ் ஸ்பெஷல் சூப்பர் அதிரா. அவ்வ்வ்வ்... இந்த கூத்து எங்கின நடக்கும் சுடுதண்ணியில மாவை சேர்ப்பது. இது உங்களால மட்டுமே.... நல்ல காலம் அஞ்சு ஹீல்ஸ் ஐ கழட்டினா வேறு எதுவும் எடுத்திருந்தா......

    என் கிச்சின் ட்றோவெரில் இருக்கும் ஸ்ரொக்:)// சேம்....வழமையாக பாவிப்பது என்றால் போத்திலில் போட்டுவைத்திருப்பேன். இடைக்கிடை எடுக்கும் பொருட்கள் உங்களை மாதிரிதான் வைத்திருக்கேன்.!!!
    எனக்கு தோசை மட்டும் பிரச்சனையில்லை நன்ராக வரும்,பொங்கும்.ஆனா இட்லிதான் சொதப்பல்.பின் அது தோசையாகிவிடும். நீங்க அஞ்சுவின் ரெசிபி கோதுமை தோசை செய்துபார்க்கேலையோ... எங்க வீட்டு பேவரிட்டே அதுதான். ட் ரை பன்னுங்கோ(செய்யாட்டில்)

    ஏன் ரவை சேர்க்கிறீங்க? க்ரிஸ்பா வரவா....

    பொடி தூவின தோசை நல்ல டேஸ்டா இருக்கும். நானும் செய்வது. மொறுமொறு தோசை,சாப்ட் தோசை அருமை.

    ஊரை மறந்தேன் பாட்டு சூப்பர் .ப்ர்ஸ்ட் டைம் கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..
      //தேம்ஸ் ஸ்பெஷல் சூப்பர் அதிரா.//

      தங்கூ தங்கூ இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்கோ.. தேம்ஸின் அந்தப் பக்கமும் கேக்கட்டும்:)...

      ///நல்ல காலம் அஞ்சு ஹீல்ஸ் ஐ கழட்டினா வேறு எதுவும் ......///
      அதானே வைரத்தோட்டை, காப்பைக் கழட்டி வீசியிருந்தா.. போனாப்போகுதென எடுத்து வந்திருப்பேன்ன் வெய்க்கம் ரோசம் மானம் எல்லாம் பார்க்காமல்:)) ஹா ஹா ஹா..

      ///எனக்கு தோசை மட்டும் பிரச்சனையில்லை நன்ராக வரும்,பொங்கும்.ஆனா இட்லிதான் சொதப்பல்//

      நாங்க எப்பவும் தோசைக்கு புறிம்பாகவும் இட்லிக்குப் புறிம்பாகவும்தானே அரைத்துக் குழைப்போம்.. ஆனா இப்போ நான் கண்டு பிடிச்ச முறை.. கொஞ்சம் இட்லிப் பதமாகவே மாவைக் குழைச்சு வச்சால்ல்.. தோசையும் ஆச்சு அடுத்த நாள் இட்லியும் ஆச்ச்சு:)).. கம்பில் இட்லியும் சூப்பரா வந்துது.

      //கோதுமை தோசை செய்துபார்க்கேலையோ.//
      எனக்கு நினைவில்லாமல் இருக்கு பார்க்கிறேன்... ரவ்வை போடாமல் உளுந்து அரிசி அரைச்சு... கோதுமை மாவை அவிச்சுக் குழைச்சும் வைப்பேன் தோசைக்கு அதுவும் நல்லா இருக்கும் ஆனா முறுகலாக வராது.

      //ஏன் ரவை சேர்க்கிறீங்க? க்ரிஸ்பா வரவா....//
      எங்களுக்கு அரிசித்தோசை பிடிக்காது, அத்தோடு அது சாப்பிட்டால் ஹெவியா இருக்கும் ரவ்வையில் எனில்.. சாப்பிட்டவுடன் செமித்ததுபோல ஈசியா இருக்கும் உடம்பு.

      நானும் 1ஸ்ட் ரைம்தான் கேட்டிட்டு இங்கு போட்டேன்ன் மிக்க நன்றி அம்முலு.

      Delete
  39. அதிரா... பெரிய பாத்திரத்தில் (உயரம் அதிகமான) மாவை வைத்துவிட்டு, மூடி போட்டபின்பு, பாத்திரத்தைச் சுற்றி பழைய கம்பளிபோன்றதை சுத்திவிட்டால், மாவு ரொம்பவும் குளிர்ந்துபோகாது, நல்லா பொங்கி வரும். சின்னப் பாத்திரத்தை உபயோகப்படுத்தினால், பொங்கி வழியும்போது, சுற்றியிருக்கும் கம்பளி கெட்டுப்போகும்.

    ReplyDelete
    Replies
    1. ///அதிரா... பெரிய பாத்திரத்தில் (உயரம் அதிகமான) மாவை வைத்துவிட்டு, மூடி போட்டபின்பு//

      வழமையா பெரிய பாத்திரம்தான் பாவிப்பேன்.. இப்போ கண்டு பிடிச்சிருப்பது பிரெசர் குக்கரில் ஊத்தி வைக்கிறேன்.. அது பெரிசுதானே.

      //பாத்திரத்தைச் சுற்றி பழைய கம்பளிபோன்றதை சுத்திவிட்டால், மாவு ரொம்பவும் குளிர்ந்துபோகாது//
      ஓ இனி இதை முயற்சிக்கிறேன்.. எங்களுக்கு ஹீட்டர் இருக்கும்தானே எப்பவும் அதன் அருகில் வைத்து விடுவேன்.. அப்படியும் பொயிங்காதே:)).. ஆனா அனைத்துக்கும் காரணம் என் சுடுதண்ணிக் குழைப்புத்தான்:) இனி இவற்றைக் கடைப்பிடிக்கிறேன்ன் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      Delete
  40. பார்ரா பூஸு க்கு பூசணியை பார்த்து பயமாமே..ஏன்...
    எனக்கு பூசணி மரவள்ளிக்கிழங்கோடு சமைக்கவே விருப்பம். இங்கு மஞ்சள் பூசணி மட்டுமே வாங்குவது.
    //இது அதிரா ஊரில் மட்டும்தான் கிடைக்குதூஊ..:) // karrrrrr.. உந்த வெங்காயம் இங்கினயும் கிடைக்கும். நினைப்புதான் பொழைப்பை கெடுக்குமாம்...
    red onion நீளமா கூட இருக்கு. பக்கத்தில இருக்குற தக்காளியும் கூட இருக்கு..ஹி..ஹி..

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை பென்னாம்பெரிய பூசணி வாங்கி வந்து அது சுவையே இல்லை அதனால எறிஞ்சிட்டேன் அம்முலு. அதன் பின் வாங்கப் பயம்.. இது உள்ளே எப்படி இருக்குமோ என. தமிழ்க் கடைகள் எனில் இது நம்பி வாங்கலாம்...

      எங்களுக்கும் மரவள்ளிக்கிழங்கோடு சேர்த்து வெள்ளைக்கறிதான் விருப்பம். பெரிய துண்டுகளாக வெட்டி வதக்கி வச்சாலும் ரேஸ்ட்தான்.

      //karrrrrr.. உந்த வெங்காயம் இங்கினயும் கிடைக்கும். //
      ஹா ஹா ஹா யூரோப் ல கிடைக்கும் என நினைச்சேன்ன்.. ஏனெனில் இது இங்கத்தைய உற்பத்தி இல்லை:)...

      தக்காளி அது செரி ரொமாட்டோ.. நினைவிருக்கோ இங்கு ஆத்தங்கரையில் முளைச்சு நான்.. மணத்தக்காழி எனக் கூக்குரல் எழுப்பினேன்ன்:))

      Delete
  41. தாங்க்யூ..தாங்க்யூ. என்னோட படம் பதிவிற்கு. அது நான் தைச்சதாக்கும்.க்கும்...வடிவாயிருக்கோ..
    //அதனால என் பரம ரசிகை[ஹா ஹா ஹா அம்முலு மன்னிக்கவும்:)// Krrrrrr..........இதை எத்தனை தரம் சொல்லியாச்சு...
    பருப்பு போளி செய்திருக்கேன். சுவீட் போளி செய்துபார்ப்போம்..
    அரண்மனை வீட்டையே வைச்சிருப்போம்..நல்ல தத்துவம் புபூ.

    ReplyDelete
    Replies
    1. ஹாய் நீங்க தான் அம்முலுவா சூப்பர் நீங்க தைத்ததா அதுவும் சூப்பர்

      Delete
    2. ஆமா நான் தான் பூவிழி. மிக்க நன்றிகள்.

      Delete
    3. நீங்க தைத்தது நேர்த்தியா வந்திருக்கு அம்முலு, வடையும் சூப்பராக இருக்கு. நானும் குரொஸ் ஸ்ரிச் பொருட்கள் வாங்கி வைத்திருக்கிறேன்.. பல வருசமாக:) இன்னும் ஆரம்பிக்கவே இல்லை:)..

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
    4. //பூ விழிThursday, December 07, 2017 9:22:00 am
      ஹாய் நீங்க தான் அம்முலுவா///

      //
      priyasakiThursday, December 07, 2017 7:02:00 pm
      ஆமா நான் தான்///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்பூடியோ அறிமுகம் செய்வது உங்களை:).. உங்களின் படம், உகவரி, பேர்த் சேர்டிபிகேட், பாங் பலன்ஸ் இவை எல்லாம் போட்டு ஆதாரத்தோடு நிரூபிக்கோணுமாக்கும் :) அதை விட்டுப்போட்டு ஆமா.. அது நான் தான் எண்டால்.. இப்போ எனக்கே டவுட்டூ வருதே:)) ஹா ஹா ஹா.

      Delete
  42. கம்பிலே தோசை, இட்லி, அடை எல்லாமும் செய்திருக்கேன். ஆனால் இப்படி இல்லை! ரவை எல்லாம் எதுக்குச் சேர்க்கிறீங்க? அப்புறம் அது ரவை தோசை தானே! கம்பு தோசைனு பேரு எப்பூடி வைக்கலாம்? நான் உடனே இதை எதிர்த்துக் காவிரியில் குதிக்கப் போறேனே! :))))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதாக்கா வாங்கோ...

      இல்ல இந்த கம்பு , கொள்ளு புதுசெனக்கு.. அதனாலேயெ நிறையச் சேர்க்கப் பயந்தேன்...

      எங்கள் வீட்டில்... ஆ சொல்லுங்கோ எனச் சொல்லியே வாயில வைப்பேன் எல்லோருக்கும்.. கண்ணை மூடிக்கொண்டு ஆ சொல்லுவினம்.[அவ்ளோ நம்பிக்கை என்னில்:)]. ஆனா சின்னன் மட்டும் வாய் திறக்காது.. வட் இஸ் தட்.. வட் இஸ் தட் எனக் கேட்டு பார்த்த பின்பே வாய் திறப்பார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எங்கும் குறிப்பு தேடிப் பார்க்கவில்லை.. பார்த்திருந்தா செய்திருப்பேன்ன்...
      இதனால என்னை நம்பி இருப்போருக்கு எப்பூடி எடுத்த எடுப்பில் புதுப்பொருளை இறம்பச் சேர்ப்பது எனும் பயத்திலேயே கொஞ்சமாக சாம்பிளுக்கு சேர்த்தேன்ன்ன்..

      //நான் உடனே இதை எதிர்த்துக் காவிரியில் குதிக்கப் போறேனே! :))))////

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க காவிரில குதிச்ச்சதால நேற்று டெல்லியில் ஏர்த் குவேக் ஆமே:)) பார்த்தீங்களோ இதுக்குத்தான், எழும்பினோமா சமைச்சோமா சாப்பிட்டோமா.. அதிராவுக்கு கொமெண்ட்ஸ் போட்டோமா என இருக்கோணும்:))

      ஹா ஹா ஹா:))..

      Delete
  43. http://sivamgss.blogspot.in/2015/09/blog-post_27.html இந்தச் சுட்டியில் வரகு தோசைக்குக் கொடுத்திருக்காப்போல் கம்பிலேயும் செய்யலாம், மற்றும் சாமை, தினை, குதிரைவாலி, சோளம் போன்றவற்றிலும் செய்யலாம். குழிப்பணியாரம் கூடச் செய்யலாம் இம்முறையில்! மாவு பொங்குவதற்கு நெ.த. சொல்லி இருக்கிறாப்போல் கம்பளி சுத்தி வைக்கலாம். அல்லது நாளைக்கு தோசை, இட்லி வேணும்னா 2 நாட்கள் முன்னாடியே அரைச்சு அவனில் வைச்சுப் பாருங்க. நான் ராஜஸ்தானில் இருக்கையில் ஜீரோ டிகிரிக்குக் குளிர் போகும்போது அப்படித் தான் செய்திருக்கேன். மாவு பொங்கி வந்திருக்கு!

    ReplyDelete
    Replies
    1. போய்ப் பார்க்கிறேன் கீதாக்கா வரகுத்தோசையை. நானும் அவனை சூடாக்கி ஓஃப் பண்ணிட்டுத்தான் வச்சு எடுப்பேன்... வெளிநாட்டில் வாழ்கையில் ஒரே ஒரு நாள் .. கோடைகாலத்தில்.. விடிய எழும்பி வந்து பார்க்கிறேன்.. என் ஓசை பொயிங்கி வழிந்து பிளேட் எல்லாம் ஓசை மா:)).. அப்பூடியே பூரித்துப்பொய் சொக்ட் ஆகிட்டேன்ன்:)..

      அதன் பின்பு நஹி:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி கீதாக்கா.

      Delete
  44. தெம்பாக இருந்திடத் தானியங்கள் உண்கவெனத்
    தெரிந்தோர்கள் அன்றுரைத்தார்! - அதை
    அன்பான அதிராவும் அழகாகச் சமைத்திட்டே
    அறியுங்கள் என்றுதந்தார்!

    கம்போசெங் கரும்போநாம் களித்துண்ட அக்காலம்
    கண்களிலே காட்சியாகுதே! - இன்று
    நம்பிக்கை நாம்கொள்ள நளபாகப் பதிவிட்ட
    நண்பிக்கு நன்றிபலவே!

    அருமையான ஆரோக்கியமான விடயம் பதிவாகத் தந்திருக்கின்றீர்கள் அதிரா!
    கம்பு தானியத்தை இங்கு இப்படி இன்னும் நான் சமைத்துப் பார்க்கவில்லை.
    உங்கள் கைப்பக்குவமும் படங்களும் கண்டதும் செய்திடத்தோன்றுகிறது.
    நம் வீட்டிலும் விதவிதமான தோசை எனில் விரும்பி உண்பார்கள்.

    அதிரா!.. இன்னுமொன்று சொல்லவேண்டும்!
    கம்பு, கொள்ளுன்னு இப்படிச் சிறுதானியங்களோ சத்துக்கள் மிகுந்த பானங்களோ மட்டுமன்றி உங்கள் பதிவுகளையும் தொடரும் பின்னூட்டங்களையும்
    படித்துச் சிரித்திட்டாலும் ஆரோக்கியம் மேலும் அதிகரிக்குமே..:)
    வாய்விட்டுச் சிரித்திட்டால் நோய்விட்டுப் போகுமன்றோ...:))
    பதிவுவோடு படமும் பகிர்ந்த ஏனைய பதார்த்தங்களும் மிகச்சிறப்பு!

    ”நளபாக நங்கை அதிராவுக்கு”
    என் அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்!

    பிரியாவின் கீரைவடை படம் பார்க்கவே செய்திடச் சொல்கிறது.
    கைவேலையும் சிறப்பு! பிரியாவுக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இளமதி.

      Delete
    2. வாங்கோ இளமதி வாங்கோ.... ஆஹா உங்கள் தொடர் வரவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறதே... இனி தொடர்ந்து வாங்கோ.. உங்கள் புளொக்கையும் தூசு தட்டுங்கோ...

      அழகிய தமிழ்க் கவிதைக்கு மிக்க நன்றி...

      //மட்டுமன்றி உங்கள் பதிவுகளையும் தொடரும் பின்னூட்டங்களையும்
      படித்துச் சிரித்திட்டாலும் ஆரோக்கியம் மேலும் அதிகரிக்குமே..:)///

      நன்றி நன்றி... என்னத்தைக் காணப்போகிறோம்ம்.. எல்லோருடனும் சிரித்து மகிழ்ச்சியாக இருப்போமே...

      ///”நளபாக நங்கை அதிராவுக்கு” ///

      ஆவ்வ்வ்வ்வ் இது நல்லா இருக்கேஏஏஏஏஎ.. எங்கே என் செக்:).. இந்நேரம் பார்த்து ஊர் சுத்தப் போயிருப்பா கர்:)).. டயறியில் எழுதி வையுங்கோ அஞ்சு:).. பட்டம் சூட்ட ஈசி எல்லோ:)) சரி சரி முறைக்காதீங்க:)..

      பிரியாவின் வடை பார்த்து எனக்கும் இன்னொருக்கால் சுடோணும் என ஆசை வந்துது.. விரைவில் சுடுவேன்.

      மிக்க நன்றி இளமதி.

      Delete
  45. @ இளமதி Thursday, December 07, 2017 9:32:00 am

    அன்பின் இளமதி அவர்களுக்கு நல்வரவு..
    தங்கள் நலமறிய ஆவல்.. இறையருள் உடன் இருப்பதாக!..

    ReplyDelete
    Replies
    1. இளமதி பார்ப்பா இதை.. நன்று துரை அண்ணன்.

      Delete
    2. ////நான் நலமாயுள்ளேன் துரை அண்ணா!. எனது கணனி சரி செய்தபின் உங்கள் வலைத்தளத்திற்கும் வருவேன்.
      மிக்க நன்றி!

      அன்புடன் இளமதி/////

      Delete
  46. Congrats miyaav :

    [im]https://cdn.d23.com/cdn2015/wp-content/uploads/2016/08/780x463-080316_the-crowns-of-princess-diaries_7.jpg[/im]

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் தங்கூ தங்கூ வோட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி.. அறிவுப்பசிஜி க்கும் நன்றி.. அவர் இதைப் பார்ப்பாரோ தெரியல்ல...

      Delete
  47. மோடியை நினைச்சுகிட்டே மாவை கரையுங்க மாவு நல்லா பொங்கும் நன் அப்படிதான்போங்க வைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சிவனே எனத் தன்பாட்டில இருக்கும் மோடி அங்கிளை, ஏன்- மாவைக் கரைக்கும்போதெல்லாம் நினைச்சு டிசுரேப்பு பண்றீங்க ட்றுத் கர்ர்ர்:))...

      ///அப்படிதான்போங்க வைக்கிறேன்///

      நல்லாத்தான் போங்குது:)) ஹா ஹா ஹா:)

      Delete
  48. Replies
    1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.

      Delete
  49. நல்ல குறிப்பு. செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  50. Replies
    1. வாங்கோ புலவர் ஐயா.. மிக்க நன்றி.

      Delete
  51. மாற்றங்கள் ஒன்றே மாறாதது அதிர அப்பாவியாகி , கவிப்புயலாக மாறி இப்போது மாஸ்டர் செஃப் ஆகி யிருக்கிறார் இன்னும் என்னென்ன்ன மாற்றங்களோ

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா.. உங்கள் கொமெண்ட்டை எங்கோ மிஸ் பண்ணிட்டேன் போலும்.. இப்போதான் கண்டேன்... மிக்க நன்றி..
      விரைவில் பல மாற்றங்களை எதிர்கொள்ளுவீங்க:)..

      Delete
  52. அழகான தோசைகள் செய்முறையை பின் செய்து பார்க்கின்றேன்!))) சோதாரத்துக்கு நீங்கள் பொறுப்பு)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ...

      //சோதாரத்துக்கு நீங்கள் பொறுப்பு)))///
      ஹா ஹா ஹா பலரும் இங்கு எழுதும்போது எழுத்துப் பிழை விடுவது.. நான் தப்பிக்கொள்ள வசதியாக இருக்கு:).. இதில் சேதாரம் வராது பயப்பிடாமல் ஸ்ராட் மூசிக்:)..

      Delete
  53. இந்த பூசணிக்காய்கள் நம்பி வாங்கலாம் நல்ல விதம் விதமான சுவையாக இருக்கும் அதிரா!

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆ நீங்களும் சொல்லிட்டீங்க.. அப்போ இனி வாங்கிடுவேன்ன்..அதன் டிசைன் பார்க்க வாங்க ஆசையாய் இருக்கும்.. இருப்பினும் பயத்தில வங்குவதில்லை.

      Delete
  54. இந்த சின்ன வெங்காயம் இங்கேயும் இருக்கு.விலை கொஞ்சம் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. ஓம் நேசன், யூரோப்புக்குள்தான் இருக்குது போல வேறு இடத்தில் இல்லை, இது சலாட்டுடன் கலந்து சாப்பிட நல்லது.

      மிக்க நன்றி நேசன்.

      Delete
  55. வணக்கம் பூஸாரே !

    எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது சாப்பிட முடியாதே ( பக்கத்தில் இருந்தால் ஆப்பிடலாம் படமா இருக்கே அவ்வவ் ) என்னதான் கிளாஸு எடுத்து(அஞ்சுவிடம் ) தோசை சுடப்பழகினாலும் கைப்பக்குவம் என்று ஒரு விஷயம் இருக்கல்லோ அது இல்லையேல்
    சுவை இருக்காது ஆனால் படங்களைப் பார்க்கும்போதே நல்ல சுவையா இருக்கும் என்று ஆத்துமா அடிச்சு சொல்லுது ம்ம்ம் ...( என்னதான் தோசையைப் புகழ்ந்தாலும் பிடித்தது என்னவோ அம்முலு வடைதான் என்பது நம்ம ஆஸ்த்துமா க்கு நோ நோ ஆத்மாவுக்குத்தான் தெரியும் )

    தோசை தோசை தோசை
    அதிரா சுட்ட தோசை
    ஆசை ஆசை ஆசை
    அள்ளித் தின்ன ஆசை !

    அதிரா சுட்ட அழகுத் தோசையில்
    ஆன்மா லயிக்கிறதே - கை
    இதுபோல் என்றும் எடுத்து உண்ணலை
    ஏனோ கிடைக்கலையே !

    ஊசிக் குறிப்பும் உணவு முறைகளும்
    உலவும் உம்வலைதான் - நாம்
    பேசிப் பழகியே பிரியம் வளர்த்திடும்
    பிரம்மன் தன்கலைதான் !

    அம்மு அதிரா இளமதி ஏஞ்சல்
    அன்புக் கலசங்கள் - நாம்
    சும்மா இருந்தும் சுகந்தம் ஊட்டிச்
    சுடரும் திலகங்கள் !

    என்றும் நன்றாய் இருப்பீர் வாழ்வீர்
    இதயம் வாழ்த்துகிறேன் - தினம்
    பொன்னும் புகழும் பூப்பீர் காப்பீர்
    பொறைகள் போர்த்துகிறேன் !

    அப்படி எல்லாம் கல்லால அடிச்சு விரட்டக் கூடாது நான் அன்றைக்கே வந்திட்டேன் ...........தமன்னாவ கேட்டுப் பாருங்க ம்ம்ம் ரன்ன கொஞ்சம் லேட் ஆச்சு இங்கே எழுத அவ்வளவுதான் ஆமால்ல ??????????????????????????????????

    நன்றி நன்றி உறவுகளா !






    ReplyDelete
    Replies
    1. I was about to write today, why சீராளனைக் காணுவதில்லை என்று and saw your comment now.

      பொன்னும் புகழும் பூப்பீர் காப்பீர்
      பொறைகள் போர்த்துகிறேன் !

      அர்த்தம் விளங்கவில்லை. பொறை-பொறுமை அல்லது காய்ந்த ரொட்டி. பூப்பீர்-என்ன அர்த்தம் பொன்னும் புகழும் என்பதில்?

      பிரம்மன் தன்கலைதான் !-இதுவும்தான் புரியலை.

      ஆனால், உங்கள் பாடல், அழ.வள்ளியப்பாவின் குழந்தைகளுக்கான பாடலின் சந்தத்தை நினைவுபடுத்தியது.

      Delete
    2. வணக்கம் ! நெல்லைத்தமிழன் !

      தங்கள் வரவுக்கும் என்கவிதையை வாசித்தமைக்கும் நன்றிகள்

      //பொன்னும் புகழும் பூப்பீர் காப்பீர்
      பொறைகள் போர்த்துகிறேன் !

      பொன்னிலும் புகழிலும் பூத்து (மலர்ந்து) அதைக் காத்தும் நிற்பீர்கள் அதற்கான வலிமையை உங்கள் மேல் போர்த்துகிறேன் ! என்னும் பொருள்படத்தான் எழுதினேன் இங்கே பூப்பீர் என்பது முன்னிலைப் பன்மையாக வந்துள்ளது (பூத்தல்/மலர்தல் )
      மேலும் பொறை என்பது ஒருசொல் பன்மொழி அதற்கு மலை பொறுமை வலிமை பூமி இப்படிப் பல பொருள்படும் (இடத்துக்கு ஏற்ப ) இங்கே வலிமையைப் பொருளாய் எடுத்திருக்கிறேன் !

      பிரம்மன் தன்கலைதான் !-இதுவும்தான் புரியலை

      பிரம்மனின் படைப்புக்(மனித) கலைக்கு ஈடாக எந்தக் கலையும் இல்லை அதுபோலத்தான் அதிராவின் எழுத்துக் கலையும்(கதை, கவிதை ,கட்டுரை ) நாம் பேசவும் பழகவும் அன்பை வளர்க்கவும் உதவுகின்றன என்பதே என் கவிதையில் உள்ள பொருள்
      அத்தோடு கவிதைக்கு இயைபு அழகு இல்லையா அதனால்தான் சிலைதான் கலைதான் என்று வரும்படி எழுதினேன் !

      ///ஆனால், உங்கள் பாடல், அழ.வள்ளியப்பாவின் குழந்தைகளுக்கான பாடலின் சந்தத்தை நினைவுபடுத்தியது.//

      ஆஹா அழ. வள்ளியப்பா குழந்தைக் கவிஞர் என்றுதானே அழைக்கப்பட்டார்

      அவர் ..............

      எண்ணையும் எழுத்தையும் இயம்பிடும் முறைதனை
      எழிலுறப் படித்தவர்தான் - இந்த
      மண்ணையும் மனத்தையும் வளர்த்திடும் நிறங்களை
      வகைபட வடித்தவர்தான் !

      மழலைகள் மொழிதனை மனத்திடை நிரப்பியே
      மகிழ்நிறை வடைந்தவர்தான் - பிள்ளை
      பழகிடும் முறையெனப் பகுத்தறி வெனப்பல
      படிப்பினைக் கடைந்தவர்தான் !

      அவரைப்பற்றி எழுத இந்தப் பிறப்புப் போதாது நன்றி !

      அதிரா வலையில் என்னை சிந்திக்க வைப்பதும் சிந்தித்து எழுதியதை மீண்டும் சிந்திக்க வைப்பதும் தாங்கள் ஒருவரே அதற்காக என் கோடி வந்தனங்கள் நெல்லைத் தமிழன் ( நம்மளே ஒரு காதல் கிறுக்கன் நமது கவிதைக்கும் விமர்சனம் வருகுதே என்று நம்ம மைண்டு வாய்ஸ் அடிக்கடி திணுக்கிடும் )

      தவறுகள் இல்லாத கவிதை எழுத என்னிடம் திறன் இல்லை அவ்வப்போது என் கிறுக்கல்களில் தவறு இருந்தால் ( இருக்கும் ) சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன் மீண்டும் நன்றிகள் நெல்லைத்தமிழன் வாழ்க நலம் !

      Delete
    3. வாங்கோ மேஜரே வாங்கோ.. பதில் போட தாமதமாகிவிட்டது மன்னிச்சுக்கோங்ங்ங்ங்:))..

      //ஆனால் படங்களைப் பார்க்கும்போதே நல்ல சுவையா இருக்கும் என்று ஆத்துமா அடிச்சு சொல்லுது ம்ம்ம் //

      ஆஅங்ங்ங்ங்ங் ஆத்மா சொன்னா.. அப்பூடியே நம்பிடோணும்:) ஆராச்சி எல்லாம் பண்ணப்பிடா :))

      ///என்னதான் தோசையைப் புகழ்ந்தாலும் பிடித்தது என்னவோ அம்முலு வடைதான் என்பது நம்ம ஆஸ்த்துமா க்கு நோ நோ ஆத்மாவுக்குத்தான் தெரியும் ) //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதுவும் என் ரெசிப்பி பார்த்துச் செய்ததாக்கும்:) இதுக்காகத்தான் .. மேலே படத்தின் மேலே லிங் போட்டிருக்கிறேனாக்கும்:).. பூதம் கிணறு வெட்ட , அணில் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டு ஊரெல்லாம் ஜொன்னதாம் மீதான் கிணறு வெட்டினேன் என:).. அக்கதையாவெல்லோ முடிஞ்சிடப்போகுது கர்:)).. ஹாஅ ஹ்ஹா ஹா..

      //அப்படி எல்லாம் கல்லால அடிச்சு விரட்டக் கூடாது நான் அன்றைக்கே வந்திட்டேன் ...........தமன்னாவ கேட்டுப் பாருங்க //

      நான் வோட் விழுந்த உடனேயே கண்டு பிடிச்சிட்டனே:).. தாமதமானாலும் வருகைக்கு மகிழ்ச்சியே.. அதுவும்.. இம்முறை கொஞ்சம்.. புரியும்ப்அடியான தமிழ்க் கவிதையோடு...:).. அழகிய கவிதைக்கும் நன்றி சீராளன்.

      Delete
    4. //நெல்லைத் தமிழன்Sunday, December 10, 2017 8:00:00 am
      I was about to write today, why சீராளனைக் காணுவதில்லை என்று and saw your comment now.///

      ஆவ்வ்வ்வ் சீராளனின் அழகு தமிழ்க் கவி பார்த்து, நெல்லைத்தமிழனுக்கு தமிழ் போயிந்தி போல:)) ஹா ஹா ஹா:))

      நீங்கள் ஆர்வமாய் ரசிப்பதால்தான் சீராளனுக்கும் தொடர்ந்து கவிதை எழுதத் தோணுது போல:).. போன போஸ்ட்டுக்கும் வந்து கவிதை போட்டிருக்கிறார் நெல்லைத்தமிழன்.. நீங்கள் பிசியாக இருந்தீங்க என நினைக்கிறேன் அப்போ.. மிக்க நன்றி.

      Delete
    5. ///பிரம்மனின் படைப்புக்(மனித) கலைக்கு ஈடாக எந்தக் கலையும் இல்லை அதுபோலத்தான் அதிராவின் எழுத்துக் கலையும்(கதை, கவிதை ,கட்டுரை ) நாம் பேசவும் பழகவும் அன்பை வளர்க்கவும் உதவுகின்றன என்பதே என் கவிதையில் உள்ள பொருள் ///

      ஆவ்வ்வ்வ்வ் இதனாலதானோ நேற்று முழுக்க எனக்கு கண்ணே திறக்க முடியேல்லை:) ஊரெல்லாம் ஒரே புகை மூட்டம்ம்ம்ம்ம்:))).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      /// நம்மளே ஒரு காதல் கிறுக்கன் //
      இனி காதலோடு... கல்யாண பந்தத்துள் நுழைந்து, கல்யாணக் கிறுக்கனாக மாற
      பிரார்த்தித்து வாழ்த்துகிறேன் சீராளன்.

      Delete
  56. ஆஹா கம்பு தோசை...சூப்பர் ...சூப்பர்...

    ஆன தோசை மாவு எல்லாத்திலேயும் ரவை சேர்ப்பீங்களா...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ.... இல்ல, அரிசி சேர்த்தால் ரவை சேர்ப்பதில்லை. மிக்க நன்றி அனு.

      Delete
  57. ரொம்ப நாளாச்சு பூஸாருடன் கதைத்து , தினம் நினைவுகள் அறுசுவையுடன் வந்து போவது தான், ஆனால் பூஸாராவது இந்த ஜலீலாக்காவ நினைவு வைத்து இருக்கலாம்.

    ஒஒகே நம்ம இரட்டையர்கள் இப்ப நல்ல வளர்ந்து இருப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் ஜல் அக்கா வாங்கோ வாங்கோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் உங்களுக்கு கொமெண்ட் போட்டேன்ன் மெயில் போட்டேன்ன்ன்ன்.. எதுக்கும் நீங்க திரும்பிப் பார்க்கல்ல.. சரி ஏதோ பிசிபோல என விட்டு விட்டேன்ன்.. இது நடந்து ஒரு வருடமாகப்போகுது:)).. ஹா ஹா ஹா அவர்கள் ஆறு அடியைத் தொட்டு விட்டார்கள்:).. நம்பவே முடியவில்லை.. காலம் எப்படி உருண்டு ஓடுகிறது...

      பழையபடி புளொக்ஸ் க்குள்ளும் வாங்கோ.. பழைய உலகை உருவாக்குவோம்ம்..

      பேஸ் புக்கே கதி என இருக்க வேண்டாம் கர்:))...

      Delete
  58. தோசை, போளி அருமை.

    தோசை இட்லி செய்து பார்க்கல்லானு நான் ஊரிலிருந்து மிக்ஸ் ஆ பொடித்து வாங்கி வந்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. பொடியை விட, ஊறவிட்டுச் செய்வது சுவை அதிகம் என நினைக்கிறேன்.

      மிக்க நன்றி ஜல் அக்கா.. இனி அடுத்த டிசம்பருக்குத்தான் உங்களைக் காணலாமோ?:)... அடிக்கடி வாங்கோ.

      Delete
  59. ஆஹா ! கம்பபாரதியா? கம்பு பாரதியா ? ரெசிப்பி அடிச்சி தூள் கிளப்பிட்டீங்க.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.