நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Sunday, 10 February 2019

அந்நாளை நினைக்கையிலே....

லங்கையிலே கடுமையாக சண்டை நடந்துகொண்டே இருந்தது, அப்போது திடீரென சமாதான ஒப்பந்தமாகி, யுத்த நிறுத்தம் என அறிவிக்கப் பட்டு, தமிழர்களுக்காக இந்தியாவிலிருந்து இந்திய ராணுவம் “அமைதிப்படை” யாக இலங்கைக்கு வருகை தந்தார்கள். அப்பொழுது பெரிதாக கதை அடிபட்டது,, தமிழர்களுக்காகவே இந்திய ராணுவம் வருகின்றது என.

அமைதிப்படை வருகிறது என்றதும், இனி என்ன நமக்கு சுகந்திரமாக இருக்க முடியும், இலங்கை ராணுவத்தின் தொல்லை இருக்காது என ஒரே சந்தோசம், ஊரெல்லாம் மக்கள் கொஞ்சம் பயமின்றி நடமாடினர்.

எங்கள் வீட்டு மெயின் ரோட்டால்தான், அமைதிப்படையினர் வருகை தந்து, அப்படியே சென்று பிரதான இடத்தை அடைவார்கள் என அறிவிக்கப் பட்டது.

அப்போ ஒருநாள் பின்னேரம், நம்மவர்கள் எனவுன்ஸ் பண்ணிக்கொண்டு போனார்கள் “நாளை காலை அமைதிப்படையினர், இவ்வழியே வந்து Town ஐச் சென்றடைந்து அங்கு முகாம் அமைப்பார்கள், அவர்களை வரவேற்க எல்லோரும் தயாராகுங்கள், அவர்களுக்கு உங்கள் விருப்பப்படி குளிர்பானங்கள், உணவுகளைக் கொடுத்து வரவேற்றுக் கொள்ளுங்கள்”.. என அறிவித்துக் கொண்டு போனார்கள்.

அன்று என்ன கிழமை என நினைவில்லை, வீட்டில் நான் மட்டுமே நின்றேன் அப்பா அம்மாவுடன். அடுத்தநாள் வரப்போகிறார்கள், இந்தியா என்றால் தமிழர்கள்[அப்படித்தான் சின்னனில் நினைத்திருந்தேன்:)].. அப்போ நம்மவர்கள்.. நமக்காக வருகிறார்கள் என எனக்கு ஒரே குதூகலம், ஏதோ நம் உறவினர் வரப்போகிறார்கள் என்பதுபோல எனக்குள் ஃபீல் பண்ணினேன்.. அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை[எனக்குத்தான் அரசியல் தெரியாதே:)].

அடுத்த நாள் பொழுது விடிந்தது, அப்பா வேர்க்குப் போக ரெடியானார், நம்மிடம் சொன்னார்,   “நீங்கள் வீட்டில் இருக்காமல் கேற்றில் நில்லுங்கோ, ஏனெனில் வாகனத்தில்தானே வருவார்கள், அப்போ உடனே கடந்து போய் விடுவார்கள், எனவே மிஸ் பண்ணாமல் ரோட்டில் போய் நின்று பாருங்கோ” எனச் சொல்லி விட்டு அப்பா ஒபிஸ் போய் விட்டார்.

அப்போ நான் மெதுவா கேற்றுக்குப் போய் ரோட்டில் எட்டிப் பார்த்தேன், என்ன ஆச்சரியம் காலை 9 மணிக்கே, ரோட்டின் இரு மருங்கிலும் மக்கள் வெள்ளம், அதாவது உள் ரோட்டில் இருப்போரெல்லாம் வந்து விட்டார்கள், பெரும்பாலானோர், கையிலே கொடிகளோடு நின்றார்கள். அக்கொடிகளைப் பார்த்ததும் எனக்கும் ஆசை வந்துவிட்டது.

உடனே நானும் அவசர அவசரமாக ரோட்டை எட்டிப் பார்ப்பதும் செய்வதுமாக, பெரிய கொடி தயார் பண்ணி, ஒரு தடியிலே ஒட்டி, அதில் வெள்ளை எழுத்தால் “.......” எழுதி, ஒட்டி எடுத்துக் கொண்டேன்.... இராணுவத்தை வரவேற்க.

அக்கொடியைக் கையில் பிடித்தபடி கேற்றுக்கு ஓடிப்போய்ப் பார்ப்பதும், வீட்டுக்குள் வருவதுமாக திரிந்தேன்:), அம்மா அவசர அவசரமாக சமையலை முடித்துக் கொண்டிருந்தா.  “வந்து விடப்போகிறார்கள் அம்மா, பின்பு சமைக்கலாம் இப்போ கேற்றுக்கு வாங்கோ” எனக் கரச்சல் படுத்திக் கொண்டே ஓடிக்கொண்டிருந்தேன், எனக்கோ ஒரே டென்ஷன்:).. டக்கெனக் கடந்து போய் விடுவார்களோ என:).

ஒருமாதிரி, மதியம் 1-2 மணியளவில், தூரத்திலே வாகனங்கள் வருவது தெரிந்தது, அதைப் பார்த்ததும் அதிக சந்தோசத்தில், என் மேனி எல்லாம் சிலிர்த்து புல்லச்சரிதுபோலாகி, அம்மாவையும் கூட்டி வந்து நம் கேற்றில் நின்றோம்.

வாகங்கள் தெரிகிறதே தவிர, வருவதாக இல்லை, காரணம், ரோட்டோர மக்களும், கடைக்காரரும், ராணுவத்தினருக்கு இளநி, குளிர்பானங்கள் கொடுத்து கைகுலுக்கி வரவேற்றுக் கொண்டே இருந்தமையால்... வாகனம் ஓடவில்லை, ஊர்ந்த வண்ணம் வந்து கொண்டிருந்தது.

பொறுமை இழந்து தவித்துக் கொண்டிருந்தேன் நான், கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்தின் பின்னரே முதலாவது ட்ரக் நம்மிடம் ஊர்ந்தபடி வந்தது, அப்படியே தொடராக ராணுவ வாகங்கள்.. பின்னாலே ஓபின்னாக இருந்தது ட்ரக், அதிலே ராணுவத்தினர் நின்ற வண்ணம், மக்களுக்கு எட்டி எட்டிக் கை குலுக்கியும், டாட்டா காட்டியும், சிலர் கும்பிட்டபடியும் நின்று கொண்டிருந்தனர்.

இதனால், நடக்கும் வேகத்தை விடக் குறைவாகவே வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. அப்படியே தொடராக வந்த வண்ணமே இருந்தது, சில வாகனத்தில் செம்மறி ஆடுகளும் ஏற்றி வந்தார்கள்.

நானும் கொடியையும் ஆட்டி ஆட்டிக், கையையும் காட்டிக் கொண்டே நின்றேன். இப்படி நகர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு ட்ரக்கிலே இருந்த, ஒரு ராணுவ வீரர், பெரீய உயர்ந்த ட்ரக், அதிலிருந்து தலைகீழாகத் தொங்குவதுபோல, கீழே எட்டி எட்டி ரோட்டோரம் நிற்கும் சிலருக்கு, கை குலுக்கிய வண்ணம் வந்துகொண்டிருந்தார். நம் பக்கத்து வீட்டுக்காரர்களின் கேட்டுக்கு வாகனம் வந்து விட்டது, அங்கு எல்லோரும் ஆண்பிள்ளைகள், அவர்களுக்கும் எட்டிக் கை கொடுத்தார், அடுத்து நம் கேற்றுக்கு வாகனம் நகர்ந்து கொண்டிருக்குது, அவர் அப்படியே தலைகீழாக எட்டி கையை என்னைப்பார்த்து நீட்டியபடி... நம் கேற்றுக்கு வாகனம் வந்து விட்டது.

அம்மா கேற்றுடன் சாய்தபடி நின்றிருந்தா, நான் அம்மாவுக்கு முன்னால்  ஒரு அடி தள்ளி நின்றேன். என்னதான் தமிழர்கள் என மனம் பூரித்தாலும் ஆமி உடையில் பார்க்கும்போது ஒரு பயம்தானே.. அப்போ அந்த ஆமிக்காரர் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே கையை நீட்டிக் கொண்டே இருந்தார், ட்ரக் மெதுவாக நம் கேட்டுக்கு வந்து விட்டது, டாட்டா காட்டுவதென்றால் ஓகே, ஆனா அப்போ , ஊரிலே கை குலுக்குவதென்பது பழக்கமில்லாத ஒன்றுதானே.  நான் என் இரு கைகளையும்  வயிற்றிலே கட்டிக்கொண்டு நிற்கிறேன், நான் குட்டியாக இருந்தமையால், இன்னும் தலைகீழாக கையை நீட்டி எனக்கு கை கொடுக்க எத்தனிக்கிறார், ட்றைவரோ கிட்டத்தட்ட ட்ரக்கை நிறுத்தியதுபோல பிரேக் போட்டு விட்டார்ர், சில்லு உருளவில்லை, நானோ வயிற்றிலே கட்டிய என் கையை எடுக்கவில்லை, சிரித்துக் கொண்டே நின்றேன்.

அம்மா என்னிடம், கையைக் குடு எனச் சொல்லாமல் நிற்க, எனக்கு அம்மா சொல்லாமல் செய்ய மனம் வரவில்லை, மிகவும் சங்கடமான ஒரு கட்டம் அது, மனம் துடித்தது ஆனாலும் ஏதோ ஒன்று தடுத்தது. அம்மாவை ஒரு கணம் திரும்பிப் பார்த்தேன், அம்மா சிரித்துக் கொண்டு நின்றாவே தவிர, கை கொடு எனச் சொல்லவில்லை. கிட்டத்தட்ட ஒரு 30 விநாடிகள் அந்த ஆமிக்காரரும் கையை நீட்டிக் கொண்டிருந்தார், நானோ கை கொடுக்கவில்லை, பின்னர் மெதுவாக ட்ரக் நகர்ந்தது, ஆனா எனக்கோ மிக மிகக் கவலையாகி விட்டது. யாரும் ஏதாவது விரும்பிச் செய்தால், இப்படிப் பேசாமல் இருந்து பழக்கமில்லை எனக்கு, முன்பின் தெரியாதவர் எனினும், சிரிச்சால் சிரிப்பேன், கை காட்டினால் காட்டி விடுவேன்.. இப்படியே அப்போ தொடங்கி இன்றுவரை பழக்கமாகி விட்டேன், அப்படிப்பட்ட எனக்கு, இது அம்மாவின் அனுமதி இல்லாமல் கை கொடுக்க மனம் வரவில்லை, ஆனா நெஞ்சுக்குள் ஏதோ வேதனையாகவே இருந்தது. முடிந்தபின் வருந்தி என்ன பலன்?:).. “நடந்தவை யாவும்.. நடந்தவைதானே”:).

இப்படியே ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக தொடராக வாகனங்கள் போய் முடிந்து விட்டது. வீட்டுக்குள் வந்து விட்டோம், ஆனால், அவ்ளோ தூரம் எட்டி, எனக்கு கை நீட்டினாரே, நான் பதிலுக்கு குலுக்காமல் விட்டு விட்டேனே என மனம் மிகவும் வேதனைப்பட்டது.

ஈவினிங் அப்பா வந்துவிட்டார், அப்பாவிடம் நடந்ததைச் சொன்னேன், அப்பா சொன்னார் “அதனாலென்ன நீயும் கை குடுத்திருக்கலாமே” என. இப்படி அப்பா சொன்னதும், என் மனக்கவலை இன்னும் அதிகமாகிவிட்டது, அன்று நித்திரைகூட ஒழுங்காகக் கொள்ள முடியாமல் மிகவும் கவலைப்பட்டேன்.

பின்னர் நாட்கள் நகர்ந்தது, ஆனா என் கவலையோ அப்படியே இருந்தது, திடீரென நிலைமை மாறியது, இந்திய இராணுவத்தினர் தமிழருக்கு எதிரானார்கள்,  இலங்கை ராணுவத்தை விடவும் மோசமாக நடந்து கொண்டார்கள். பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகமானது. ஒருநாள் என் வகுப்புத் தோழியின் வீடு இந்திய ராணுவத்தினரால் முற்றிலும் எரிக்கப்பட்டு, உடுத்த உடை தவிர வேறேதும் இல்லா நிலைமை அவவுக்கு வந்தது.

நம் வகுப்பினரும் ஆசிரியர்களும் நம்மாலான உதவிகள் செய்தோம் அவவுக்கு, நோட்ஸ் எல்லாம் எழுதிக் கொடுத்தோம், இப்படி நிலைமை மோசமானதும், எனக்கும் மனதில் வெறுப்பு ஏற்பட்டது, அப்போதுதான் நான், “அன்று கை கொடுக்காமல் விட்டதும் நல்லதே, இன்று இப்படி மாறிவிட்டார்களே” என என் மனதுக்கு சொல்லி, என்னை நானே சமாதானப் படுத்தி, என் கவலையிலிருந்து விடுபட்டேன்:).
=============_()============

ஒரு மாறுதலுக்காக, இம்முறை ஒரு ஸ்பெஷல் இணைப்பு... என்னிடம் இருக்கும் தொகுப்பில் சில....

ஊசிக் குறிப்பு
========================================================
ஒரு ஹப்பி நியூஸ் சொல்லுவேன் எனச் சொன்னேன் எல்லோ:), எங்களுக்கு வன் வீக் ஸ்கூல் ஹொலிடே.. ஸ்பிறிங் பிரேக்:)).. அஞ்சு ஏரியாவில் இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா
========================================================

149 comments :

 1. மிகவும் வருந்துகிறேன் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ.. சே.. சே இதில் வருந்த என்ன இருக்கு... இப்போ நினைக்க்கையில் அதெல்லாம் ஒரு இனிமையான காலங்களே.. எல்லோருக்கும் இப்படி அனுபவங்கள் கிடைக்காதெல்லோ.. என் அண்ணன், அக்கா கூட இப்படி அனுபவிக்கவில்லை..

   அந்நாட்களில் கரண்ட் இல்லாமல் கோயிலுக்குப் போய் ஜெயராஜ் அங்கிளின் பேச்சு பார்த்தது, ஜ்ஜெனரேட்டர் பிடித்து விடிட்ய விடியப் படம் பார்த்தது.. பல மைல்கள் தூரம் சைக்கிளேயே சுற்றியது.. அதெல்லாம் சிலது, நான் மட்டுமே அனுபவிச்ச பொற்காலங்கள்.. பயம் ஒருபக்கம்.. இப்படி சந்தோசங்கள் மறு பக்கம்:)).

   மிக்க நன்றி டிடி.

   Delete
 2. சந்தோஷமாகவும் மகிழ்வுடனும் விடுமுறையைக் கழித்து விட்டு வாருங்கள். உங்கள் சிறுவயதுக் கனவு நனவாகாமல் போனதுக்கு வருந்துகிறேன். :(

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

   ஸ்ஸ்ஸ்ஸ் ஓடாதீங்கோ கொஞ்சம் நில்லுங்கோ.. இப்பூடி எஸ்கேப் ஆகினால் எப்பூடி?:)).. நான் எப்போ கனவு கண்டேன்? அது எப்போ நிறைவேறவில்லை என்றேன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்:)) என் வைரவர் இதைப் படிச்சாரோ அவ்ளோதேன்ன்ன்ன்ன்:)) ஏனெனில் நான் கேட்டு அவர் எதையும் தராமல் விட்டதில்லை ஹா ஹா ஹா:)).. கிடைக்கக்கூடியதைத்தான் மீயும் கேட்பேனாக்கும் ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் கீசாக்கா..

   Delete
  2. ஓடல்லாம் செய்யலை. கருத்துச் சொல்லும்போதே எதிர் வீட்டு மாமா வந்துட்டார். ஆகவே கணினியையே அணைச்சுட்டேன். படத்தில் இருப்பவங்களைப் பற்றிக் கேட்க நினைச்சு மறந்துட்டேன். அப்புறமா கணினியையே திறக்கலை. படத்தில் இருப்பவர்கள் அப்பாவும், அம்மாவுமா?

   Delete
  3. உங்க புத்தகக் கலெக்ஷனில் பிரபலமான பல புத்தகங்கள் இல்லையே? ஊசிக்குறிப்புப் பத்தி நேற்றே சொல்ல நினைச்சு விட்டுப் போய்விட்டது. பலருக்கும் வேண்டும், வேண்டும் என்று சொல்லும்படியும் வாழ்க்கை அமைகிறது. சிலர் வாழ்க்கை இறைவனால் முழுதும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் அமைகிறது. இதை எல்லாம் பார்த்து ஆச்சரியப்படுவேன்.

   Delete
  4. வைரவர் தொடர்ந்து உங்களுக்கு வேண்டியதைத் தரும்படி நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

   Delete
  5. //Geetha SambasivamMonday, February 11, 2019 12:32:00 am
   ஓடல்லாம் செய்யலை. கருத்துச் சொல்லும்போதே எதிர் வீட்டு மாமா வந்துட்டார்.//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 எதிர்வீட்டு மாமா:), அதிராவுக்குக் கொமெண்ட்ஸ் போடும் நேரம் பார்த்தோ அவர் வர வேண்டும் ஹா ஹா ஹா:).

   Delete
  6. ///Geetha SambasivamMonday, February 11, 2019 12:34:00 am
   உங்க புத்தகக் கலெக்ஷனில் பிரபலமான பல புத்தகங்கள் இல்லையே? //

   பிரபலங்கள் எப்பவும் கடசியிலதானே வெளி வருவார்கள்:)...

   //இதை எல்லாம் பார்த்து ஆச்சரியப்படுவேன்.//

   நிஜம்தான், அது போனபிறபியின் பலன் என்கின்றனர் சிலர்...

   ஓம்.. படத்தில், அப்பாவும் அம்மாவும்.

   Delete
  7. //Geetha SambasivamMonday, February 11, 2019 12:35:00 am
   வைரவர் தொடர்ந்து உங்களுக்கு வேண்டியதைத் தரும்படி நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//

   ஆவ்வ்வ்வ் மியாவும் நன்னி கீசாக்கா.._()_

   Delete
 3. ஜேசுதாஸ் பாடிய பூவே செம்பூவே பாடல் மிக இனிமையான மெலடி. சமீபத்தில் இளையராஜா 75 நிகழ்ச்சியில் அந்தப் பாடலை மது பாலகிருஷ்ணன் பாடினாராம். ரசிகர்கள் பயங்கரமாக கைதட்டி பாராட்டு தெரிவிக்க, அவர்களை கைகாட்டி நிறுத்தி, பாடல் முடியும் நேரம் ஒலிக்கும் இசையை ரசிக்கச் சொன்னாராம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...

   ஆஆஆஆ யேஸ்ஸ்ஸ் உண்மையில் மிக அழகிய பாடல், ஆனா கொஞ்சம் சோகமாக இருக்கோ என நினைச்சும் போட்டேன்ன்.. ஆனா உங்கள் எல்லோருக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.

   எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.. ஏனெனில்.. இப்பாடலுக்கு ஒரு பின்னணிக் கதை இருக்கு:) விரைவில் எதிர்பாருங்கள்.. :))

   Delete
  2. மிக அருமையான பாடல் ஸ்ரீராம் பூவே செம்பூவே பாடல் கீரவாணி ராகத்தில்

   அதுவும் முதல் பல்லவி முடித்து அனுபல்லவி தொடங்கும் முன் ஒரு பிட் இன்டெர்லூட் வருமே அப்படியே கீரவாணி எஸன்ஸ்!!!!

   அருமையான பாட்டு அதிரா....

   ஓ போஸ்ட் இருக்கா இந்தப் பாட்டுக்கு போடுங்க போடுங்க

   கீதா

   Delete
 4. அமைதிப்படை என்று ஒரு சத்யராஜ் படம் கூட வந்தது. நீங்கள் எழுதி இருக்கும் சம்பவம் ஒரு சோறு என்று நினைக்கிறேன். நிறைய சொல்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஓம் இப்போதான் நினைவு வருது சத்தியராஜ் அங்கிள் படம்...

   ஹையோ பிரச்சனைக் கதைகள் சொல்வதாயின் ஒரு யுகம் போதாது ஸ்ரீராம், அதிலும் எனக்குத் தெரிஞ்சது கொஞ்சமே.. ஆனா அதைப்பற்றியே நான் இங்கு பேச வரவில்லை, அந்தக் கை குலுக்காத சம்பவத்தின் தாக்கம் தான் இப்போஸ்ட் ஹா ஹா ஹா:).

   Delete
 5. சில அபிப்ராயங்கள் பின்னாளில் மாறும்தான். முன்னர் நாம் செய்யாமல் விட்டோமா என்று வருந்துவது சரியாய்தான் செய்திருக்கிறோம் என்கிற உணர்வு வரும். போட்டோவில் இருப்பது அப்பா, அம்மாவா?

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், ஒரு நேரம் ஒரு விசயத்துக்காக அடம் பிடிச்சு அழுதிருப்போம், பின்னாளில்.. அன்று ஏன் அழுதோமோ என எண்ண வைக்கும் காலம்... அதனால்தான் எது வந்தாலும் ஓவர் ரியாக்‌ஷன் எடுக்காமல் அமைதியாக இருக்கோணும் என்பது எனக்கு ஓரளவு புரியும்:)[மீ ஞானியெல்லோ:)].

   யேஸ் அது எங்கள் அப்பா அம்மா.

   Delete
  2. அம்மாவின் சாடை நீங்கள். அவங்க இப்போ எங்க இருக்காங்க?

   Delete
  3. ஆஆ நெல்லைத்தமிழன் நிங்களும் கோபு அண்ணன் சொன்னதைப்போல அம்மா ஜாடை என்கிறீங்க... அம்மா இப்போ கனடாவிலதான் இருக்கிறா. இலங்கைக்குப் போய்ப் போய் வருகிறா இடைக்கிடை.

   Delete
 6. புத்தக வரிசை பார்த்ததும் என்னென்ன இருக்கிறது என்று பார்த்தேன். அதானே, ரமணி சந்திரன் புத்தகம் படிக்காத பெண்கள் உண்டா என்ன!! அதுசரி, நம் வலை உலகில் ரமணி சந்திரன் யார் என்று தெரியுமோ?

  ReplyDelete
  Replies
  1. இதில் இருப்பவை எனக்குப் பிடிச்சு வாங்கியவை அல்ல ஸ்ரீராம், தானாக வந்து ஒட்டியது, கண்ணதாசனுடையதும் ர சந்திரனுடையதும்தான், மேத்தாவினுடையதும் நான் வாங்கியது.. இது ச்சும்மா ஒரு இடைவேளைக்காகப் போட்டேன்ன்..

   ஓ வலை உலகின் ரமணிச் சந்திரனோ??.. எனக்கு தெரிஞ்சு பானுமதி அக்கா??:)

   Delete
  2. ஸ்ரீராம் அப்படி எல்லா பெண்களும் அவங்களுக்கு இரசிகைன்னு சொல்ல முடியாதது :)
   fb யில் ஒரு பொண்ணு தான் எத்த்னை கலெக்ஷன் வச்சிருக்கேன்னு சந்தோஷமா சொன்னப்போ ..நான் அமைதியா இருந்தேன் :) பிக்கோஸ் நான் ஒன்றிண்டு கதை மட்டும் படிச்சேன் .பெரிசா இம்ப்ரெஸ் பண்ணலை :)

   Delete
  3. அது யாரு வலை உலகின் ரமணி சந்திரன்? ரேவதி? ரமணி சந்திரன் எழுதுவது/எழுதியது அனைத்தும் தேவதைக்கதைகள் போலத் தான். தமிழின் மில்ஸ் அன்ட் பூன் என நாங்க சொல்லுவோம்.

   Delete
  4. //அது யாரு வலை உலகின் ரமணி சந்திரன்? //

   அப்பாவி! புவனா கோவிந்த்!

   Delete
  5. அப்பாவி இன்னும் நல்லா எழுதுவாங்களே! :) இப்படித் தான் ரிஷபன் கவிதையை வைரமுத்துவோடு ஒருத்தர் ஒப்பிட்டிருந்தார். வைரமுத்து எழுதுவதை நான் கவிதைனே சொல்ல மாட்டேன். :))) ரிஷபன் எங்கே! வைரமுத்து எங்கே! :))))

   Delete
  6. அப்பாவி நல்லாவே எழுதுவாங்க... உங்களுக்கு ஒரு நியூஸ்.. ரமணி சந்திரன் ரமணி சந்திரன்னு உருகி உருகி படிப்பாங்கன்னு பார்த்திருக்கேன். ஆனால் நான் ஒன்று கூட படித்ததில்லை.

   Delete
  7. வைரமுத்து மாதிரி என்று சொன்னால் புகழ்ச்சி என்று நினைத்துவிட்டார் போல.. நானும் பார்த்தேன். பதில் ஏதாவது சொல்லலாமான்னு பார்த்துட்டு விட்டுட்டேன். அவருக்கு ப்ரெண்டா இருப்பார்.. நமக்கெதுக்கு வம்பு!

   Delete
  8. ///ஸ்ரீராம்.Monday, February 11, 2019 8:03:00 am
   //அது யாரு வலை உலகின் ரமணி சந்திரன்? //

   அப்பாவி! புவனா கோவிந்த்!///

   எனக்கு தெரியாத பெயரைக் கேட்டிருக்கிறீங்க.. எனக்கு இவரின் புளொக் தெரியாது, பெயர்கூட இப்போதான் அறிகிறேன்ன்..

   இந்த கீசாக்கா சுத்த மோசம்:).. அப்பாவி என மட்டும் போட்டு என்னைக் கொன்ஃபியூஸ் ஆக்கிட்டா கர்ர்ர்ர்ர்:)) பிக்கோஸ் மீயும் அப்பவி எல்லோ ஸ்ரீராம்:)) ஹா ஹா ஹா:)..

   என்ன புத்தகம் வாங்கலாம் நல்லது.. இப்படிக் கேட்டால் கடைக்காரர்கள்.. ரமணிச்சந்திரனின் வாங்குங்கோ.. இப்படித்தான் சொல்வார்கள், அதனாலேயே வாங்கினேன் மற்றும்படி எனக்கு, கண்ணதாசன் அங்கிள் தவிர்த்து, இந்நாருடைய கதைதான் படிக்கோணும் என்றில்லை.. நல்ல கதை எனில் மனதில் பதிந்திடும்...

   ஆரோ தெரியாது.. “மேகப் பாறைகள்” என ஒரு புத்தகம்.. இப்பவும் மனதில் நிற்குது அக்கதை.. இப்படி எப்பவும் மனதில் ஆளமாகப் பதியும் கதைகள் எனில் விரும்பிப் படிப்பேன்.

   Delete
  9. //வைரமுத்து எழுதுவதை நான் கவிதைனே சொல்ல மாட்டேன். :)))//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீசாக்கா உங்களுக்கு எதுக்கு இவ்ளோ பொறாமை அவரில்?:).. எனக்கு பா விஜய் மற்றும் வைரமுத்து அங்கிள் கவிதை, ஏன் அவர் பேசுவதே கவிதைபோலத்தானே இருக்கும். உண்மையில் அனைத்தும் பிடிக்கும், ஆனா வை அங்கிள் கொஞ்சம் ஓவரா தற்புகழ்ச்சி பண்ணுவார் அதுதான் பிடிக்காது.

   முன்பு அவரின் “தண்ணீர் தேசம்” மொபைலில் ஃபிரீ அப் ஆக கிடைச்சு , டவுன்லோட் பண்ணிப் படிச்சுக் கொண்டிருந்தேன்.

   எப்பவுமே கவிதை என வரும்போது, பெருங் கவிதை ஆயின், மொத்தமும் நமக்குப் பிடிப்பதில்லை, அதில் சில பந்திகள் மட்டுமே மனதில் ஆளமாக பதியும்.. அதனாலேயே அக்கவிதை பிடித்தது போல இருக்கும்.

   கீசாக்கா எப்பவும் கவிதையை ரசிச்சதை மீ பார்த்ததில்லை.. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:).

   Delete
  10. புவனா கோவிந்த் தான் அப்பாவி தங்கமணி ..

   Delete
  11. ஆஆஆஆஆஅ அப்பாவித் தங்கமணியோ அவ்வ்வ்வ்வ்வ்வ் இப்பூடி எனக்குப் புரியும் பாசையில சொன்னால்தானே புரியும் கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஸ்ரீராம் புரியாத பாசையில சொல்லிட்டார்ர் ஒரு அப்பாவிபுளொக் பற்றி இன்னொரு அப்பாவிக்கு ஹா ஹா ஹா சரி சரி முறைக்காதீங்கோ:)).. என் செக்குக்கு இன்கிறீமெண்ட் கொன்ஃபோம்ட்:))

   Delete
  12. ஸ்ரீராம் அண்ட் ஏஞ்சல் எனக்கு ரமணி சந்திரன் இம்ப்ரெஸ் செய்ததில்லை. கல்லூரியில் இருந்தப்ப என் ஃப்ரென்ட்ஸ் எல்லாம் விழுந்து விழுந்து படிப்பாங்க...எங்க வீட்டுலதான் கதை புக்ஸ் எதுவும் வாங்க மாட்டாங்க பேப்பர் கூட வாங்க மாட்டாங்க...ஸோ என் ஃப்ரென்ட்ஸ் சொல்லுவாங்க மில்ஸ் அண்ட் பூன்ஸ் மாதிரி எழுதுவாங்க தமிழ் மில்ஸ் அண்ட் பூன்ஸ் ர ச தான் என்று.

   என்னை ஒரு புக் வாசிக்கச் சொன்னாங்க என் கஸின் கூட அவளுக்கும் ரொம்பப் பிடிக்கும்...பெரிய ரசிகை ஆனால் எனக்கு அந்த ஒரு புக்கே அவ்வளவா பிடிக்காததுனால வேண்டாம்னு சொல்லிட்டேன்...ஸோ அவங்க கதைகள் பத்தி என் ஃப்ரென்ட்ஸ் பேசிட்டுருப்பாங்க அப்ப மட்டும் நான் அங்கு மூனாவது மனுஷி!!!! ஹா ஹா ஹா

   ஓ அப்பாவி தங்கமணி ர ச மாதிரி எழுதுவாங்களா?!!!!!

   கீதா

   Delete
 7. மு. மேத்தாவின் கனவுக்குதிரைகள் வைத்திருக்கிறீர்கள். கண்ணீர்ப்பூக்கள் படித்திருக்கிறீர்களோ?

  "விழிகள்
  நட்சத்திரங்களை வருடினாலும்
  விரல்கள் என்னவோ
  ஜன்னல் கம்பிகளோடுதான்"

  இன்னமும் மனதில் நிற்கும் அவர் கவிதைகளிலொன்று!

  ReplyDelete
  Replies
  1. ///கண்ணீர்ப்பூக்கள் படித்திருக்கிறீர்களோ? //

   ஆவ்வ்வ்வ்வ் படித்தேன் ஸ்ரீராம் படித்தேன், என்னிடம் இருந்ததாக நினைவு, ஒருவேளை அது இரவல் வாங்கிப் படித்து விட்டு கொடுத்து விட்டேனோ என்னமோ...

   இந்த விழிகள்.. கவிதை, என் கவிதைக் கொப்பியில் அப்போ தொடக்கம் எழுதி வைத்திருக்கிறேனே... அதனை படமெடுத்துப் பின்பு போடுறேன்ன்.. எவ்ளோ ஆழமான சிந்தனை..

   Delete
  2. கண்ணீர்ப்பூக்களில் நினைவுக்கு வரும் இன்னொரு கவிதை

   "வாசிக்கத்தெரிந்த கரங்களுக்குத்தான்..

   Delete
  3. கண்ணீர்ப்புக்கள் படிச்சிருக்கேன் என்றாலும் ஸ்ரீராம் மாதிரி மனப்பாடமெல்லாம் பண்ணலை. இது மனப்பாடப் பகுதிக்கு உண்டுனும் தெரியாது! :))))

   Delete
  4. ஹிஹிஹி... மனப்பாடம்லாம் செய்யவில்லை. மனதில் நின்று விட்டது!

   Delete
  5. எனக்கென்னமோ கண்ணீர்ப் பூக்கள் என்னிடம் இருப்பதைப்போலவே ஒரு ஞாபகமா இருக்குது தேடிப் பார்க்கோணும்.

   ப்ரியமானவளே..
   உனது பார்வை இப்போதெல்லாம்
   என் விழிகளைச் சந்திக்க மறுக்கிறதே
   காரணமென்ன...

   மறந்துவிட்டேன்
   என்று ம்டலிடாமல்
   சொல்கிறாயா?....

   இப்படி வரும் கவிதையும் கண்ணீர்ப்பூக்கள் தான் என நினைக்கிறேன்.

   Delete
 8. இளையராஜா இசையில் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறார். கண்ணில் என்ன கார்காலம் கூட அவர் எழுதியதுதானோ? அந்தப் படத்தில் அவர் ஒருபாடல் எழுதி இருக்கிறார்! பூவே செம்பூவே கூட அவர் எழுதியதாய் இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. இவை எல்லாம் சூப்பர் பாட்டுக்கள்தான்.. கேட்க கேட்க இனிமை.

   Delete
 9. ஊசிக்குறிப்பை ரசித்தேன்.

  ReplyDelete
 10. ஸ்கூல் ஒரு வாரம் லீவா.... என்ஜாய்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அதனால்தான் புளொக்கில் அடிக்கடி போஸ்ட் போடுவதாக திருச்செந்தூர் முருகனுக்கு நேர்த்தி வச்சிருக்கிறேன்ன்:).. என்னை வாழ்த்தி ஆஜீர்வாதம் பண்ணுங்கோ:) ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
  2. ஹிஹிஹி, ஶ்ரீராம் உங்களை விட ரொம்பப் பெரியவரா? ஜொள்ளவே இள்ளையே! :)

   Delete
  3. கீதாக்கா... அவங்க முருகன் கிட்ட ஆசீர்வாதம் கேட்கறாங்க...

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கீசாக்கா...

   ஸ்ரீராம் - வயசில தெரியல்ல:)) அனுபவத்தில பெரியவர்:).

   Delete
 11. இன்னைக்குத்தான் எனக்குப் பிடித்த பாடலைப் போட்டிருக்கீங்க. (பூவே செம்பூவே). அதற்கே பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

   ஆவ்வ்வ்வ் அப்போ நீங்க ஓரக்கண்ணால பாட்டையும் கவனிச்சுத்தான் வாறீங்க:), எப்பவும் நீங்க பாட்டுப் பற்றிப் பேசாமையால், கேட்பதில்லை பாடலை என நினைச்சுக் கொண்டிருந்தேன்.. அதிலயும் .. இலகுவில் பாடல் பிடிக்காத உங்களுக்குப் பிடிச்சதில் மகிழ்ச்சி. நன்றி_()_.

   பாட்டில் ஒரு குட்டிக் கதை இருக்கு அதனாலதான் மறக்க முடியாத பாடல், விரைவில் போஸ்ட்டாகப் போடுகிறேன்..
   “உனைப்போல நானும்.. ஒரு பிள்ளைதானே, பலர் வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளைதானே”.. இதுதான் அதில கிளைமாக்ஸ்:)) ஹா ஹா ஹா

   Delete
 12. எனக்கு சாம்பார் சாதம் சிறு வயதிலிருந்தே பிடிக்கும். அது சமீப காலமாகப் பிடிக்காமல் போனதற்கு 'வாழ்க்கை' காரணமா இல்லை 'குழை சாதம்' போட்ட அதிரா காரணமா?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது பாரைன் ஐ விட்டு வந்ததுதான் காரணம்:))

   கோடைக்கானலில இடி இடிக்க, கடலூரில மழை கொட்டிய கதை” யாவெல்லோ இருக்கூஊஊஉ இக்கதை:).

   Delete
 13. அதானே பார்த்தேன்... எப்படி அதிராவுக்கு தமிழ் புத்தகங்கள்லாம் படிக்க வரும்னு யோசித்தேன். அதான் அகராதி வேறு வாங்கிவச்சிருக்கீங்க.

  இவ்வளவுதானா உங்கள் கலெக்‌ஷன்? உங்களுக்கு சில அருமையான புத்தகங்கள் சிபாரிசு செய்யவா?

  ReplyDelete
  Replies
  1. //அதான் அகராதி வேறு வாங்கிவச்சிருக்கீங்க.//

   ஹா ஹா ஹா அதுதான் சிலது தானா வந்து ஒட்டியது என்றேனே:).. இங்கிருந்த இலங்கை டொக்டேர்ஸ் இருவர், ஒஸ்ரேலியா மாற்றலாகிப் போனார்கள், போகும்போது இதைக் கொண்டுபோக முடியாது ஓவர் வெயிட் என என்னிடம் தந்தார்கள்:)) உண்மையில் மிக அருமையான புத்தகம், ஆனா நான் தான் திறந்து ஆராட்சி பண்ணுவதில்லையே:)..

   Delete
  2. //இவ்வளவுதானா உங்கள் கலெக்‌ஷன்? உங்களுக்கு சில அருமையான புத்தகங்கள் சிபாரிசு செய்யவா?//

   நெல்லைத்தமிழன், இங்கு தமிழ் லைபிரரி இல்லாததால் எனகு இரவலாகப் படிக்கும் வசதி இல்லை, இன்னொன்று எனக்கு சொந்தமாகப் புத்தகம் வாங்கிப் படிப்பதே பிடிக்கும், ஏனெனில் அதில் பிடித்த வரிகளைக் கோடிட்டு, நானும் ஏதாவது முன் அட்டையில் பின்னட்டையில் எழுதி.. இப்படி எல்லாம் செய்து வாசிக்கவே விருப்பம், அதனால நன்கு பிடிச்ச புத்தகங்களை வாங்குவேன். ஆனா முக்கியமாக கண்ணதாசன் அங்கிளின் புத்தகங்கள் தேடுவேன்.. வெளி நாடுகளில் கிடைப்பது குறைவு.

   நிறையப் புத்தகங்கள் இல்லை, இதில் போட்டிருப்பவை ச்ச்சும்மா புத்தகங்கள், மனதுக்குப் பிடிச்சவை இன்னும் கொஞ்சம் இருக்கு போடுகிறேன் இன்னொரு சந்தர்ப்பத்தில்.

   நீங்கள் நல்ல கதைகள் இருந்தால் சொல்லுங்கோ, ஹொலிடே போகும்போது தமிழ்க் கடையில் தேடி வாங்குகிறேன்....ஆனா அரச கதைகள், சண்டைக்கதைகள், துப்பறியும் கதைகள்.... இப்படியானவை வேண்டாம்.. எனக்குப் பிடிப்பதில்லை ஹா ஹா ஹா.

   Delete
 14. ரொம்ப துரதிருஷ்டமான சம்பவம் அதிரா.... எதுக்கோ போய், எதையோ செய்ததைப்போல ஆகிவிட்டது. பாஷை தெரியாத ஊரில் யார் எதிரி யார் நண்பன் என்றுகூட புரியாத நிலை ஆகிவிட்டது. தமிழ் பட்டாலியன்களை அனுப்பினால் சொன்னதைச் செய்வார்களா என்ற சந்தேகமும் இதற்குக் காரணமாயிருந்திருக்கலாம். அந்தச் சம்பவம் எல்லோருக்கும் மனக் கஷ்டத்தைக் கொடுத்த ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. அதில் தமிழர்களும் இருந்தார்கள், ஆனா அவர்கள் மட்டும் பல சமயம் நம்மவர்களைக் காப்பாற்றி விட்டதாகவும் அறிந்தேன்.. தலைமைப் பொறுப்பில் தமிழ் ஆள் இருந்திருந்திருக்கோணும் போல...

   ஒரு தடவை ஸ்கூல் பஸ் ஆல் இறங்கி வெயிலில் காய வைத்து விட்டனர், எங்கோ கண்ணி வெடி நிகழ்ந்துவிட்டதென, ரோட்டில் அத்தனை வாகனங்களையும் மறிச்சு வைத்திருந்தனர். அப்போ நாம் வெயிலுக்காக பஸ் ஆல இறங்கி ஒரு இந்திய ராணுவ ரக்கின் நிழலில் நின்று பேசிக்கொண்டிருந்தோம்.

   அப்போ உயரமான ட்ரக்தானே, யாருமில்லை எனும் நினைப்பில், நமக்குள் பேசிக்கொண்டிருந்தோம், இவர்களின்[இந்திய ராணுவத்தின்] பாசையும் புரியுதில்லை, என்னமோ எல்லாம் சொல்கிறார்கள் என.... உடனே ட்ரக்கிலிருந்து ஒருவர் கீழே நம்மை எட்டிப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னார்ர்.. “எனக்குத் தமிழ் தெரியும்” என... ஹா ஹா ஹா திடுக்கிட்டு விட்டோம்ம், ஆனா ஹப்பியாகவும் இருந்துது தமிழராச்சே என நினைச்சு... பயத்தில, கதை குடுக்காமல் நழுவி விட்டோம்:).

   Delete
 15. ஸ்கூல் ஹாலிடே பிரேக் நல்லதுதான். எங்காவது பயணம் போகப்போகிறீர்களா?

  (உடனே ஏஞ்சலின், 'நல்லவேளை நாங்க தப்பித்தோம்' என்று நினைத்துத்தானே இந்தக் கேள்வி கேட்டீங்கன்னு சொல்லி நம்ம ரெண்டுபேருக்கும் சண்டை மூட்டிவிடுவாங்க. பார்த்துக்கோங்க).

  நான் கேட்டது, பயணம் போகலைனா, நிறைய செய்முறைகள்லாம் இந்தத் தளத்தில போடுவீங்களோன்னு ஆசையோடு (பொய்மையும் வாய்மை இடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில்) நினைத்துத்தான் கேட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ்ஸ் அமைதி அமைதி :)

   Delete
  2. //ஸ்கூல் ஹாலிடே பிரேக் நல்லதுதான். எங்காவது பயணம் போகப்போகிறீர்களா?//

   இல்ல, யூனி[மூத்தவருக்கு] க்கு ஹொலிடே இல்லை. புளொக்கைத்தான் ஒரு கை பார்க்கப்போறேன்ன்:)) .

   //உடனே ஏஞ்சலின், 'நல்லவேளை நாங்க தப்பித்தோம்' என்று நினைத்துத்தானே இந்தக் கேள்வி கேட்டீங்கன்னு சொல்லி நம்ம ரெண்டுபேருக்கும் சண்டை மூட்டிவிடுவாங்க///

   ஹா ஹா ஹா இல்ல இப்ப அவ பேசாமல் அமைதியாகவெல்லோ விசயத்தை முடிக்கிறா:) கீழேகூட பாருங்கோ. அமைதி அமைதி எண்டுதான் சொல்லியிருக்கிறா:).

   //நான் கேட்டது, பயணம் போகலைனா, நிறைய செய்முறைகள்லாம் இந்தத் தளத்தில போடுவீங்களோன்னு ஆசையோடு ///

   நீங்க இவ்ளோ ஆவலோடு எதிர்பார்த்தால் மீ போடாமல் விடுவேனோ:)) ஹா ஹா ஹா:)..

   என்னாது.. என் திருக்குறள் புத்தகம் பார்த்ததும் உங்களுக்கும் திருக்குறள் வருதே:))

   Delete
  3. /அமைதி அமைதி/ - அதிரா.... இதை நம்பாதீங்க. 'ஆளு மாட்டிக்கிட்டாங்க' என்றுதான் இதற்கு அர்த்தம். செய்முறை போட்டீங்கன்னா, கன்னா பின்னான்னு காலை வாருவதற்கு ஏஞ்சலினும் அவருடைய நண்பரும் (வேற யாரு.. நாந்தான்) இருக்கிறார்கள். மாட்டிக்கிட்டீங்க....

   Delete
  4. ////அமைதி அமைதி/ - அதிரா.... இதை நம்பாதீங்க.///

   ஆஆஆஆஆ நெல்லைத்தமிழன் இப்போ அதிராவுக்குச் சப்போர்ட் பண்றார்ர்:).. நில்லுங்கோ மிச்சத்தையும் வாசிப்போம்ம்:)..

   //கன்னா பின்னான்னு காலை வாருவதற்கு ஏஞ்சலினும் அவருடைய நண்பரும் (வேற யாரு.. நாந்தான்) இருக்கிறார்கள். மாட்டிக்கிட்டீங்க....///

   ஆவ்வ்வ்வ்வ்வ் கடசில கவிட்டுப்போட்டாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

   ஆனா பாருங்கோ நெ.தமிழன், எனக்கு சமையல் குறிப்பு போடுவது விருப்பமில்லை பெரிசா.. ஆனாலும் செய்யும்போது படமெடுக்காமல் இருக்க முடிவதில்லை... ஆனா கடந்த சில என் போஸ்ட்டுக்களில் அதிக வியூஸ் கிடைத்திருப்பது மோர் மிளகாய்க்குத்தான்.. அப்போ மக்கள் எதை விரும்புகிறார்கள் பாருங்கோ.. இதனால்தான் சாப்பாட்டுக் கடை போட்டோர் யாரும் நொடிந்து போனதே இல்லை, எப்பவும் பிஸ்னஸ் இருக்கும்...

   Delete
 16. இந்தக் தொகுப்புலகூட 'பொன்னியின் செல்வன்' காணலையே... ரசனையான புத்தகங்கள் வேறு என்ன என்ன இருக்கு? (தெரியும்... அலங்காரத்துக்குத்தான் நீங்க புத்தகங்கள் வாங்கியிருக்கீங்கன்னு ஹாஹா)

  ReplyDelete
  Replies
  1. பொன்னியின் செல்வன் தனியாத்தான் போடோணும்.. பெரிய பெரிய 5 புத்தகங்கள் எல்லோ இருக்குது:) அதை எப்படிப் படிச்சு முடிப்பேன்:)) ஹா ஹா ஹா ஆனா எனக்கு நெட்டில் கதை படிப்பது கொஞ்ஞ்ஞ்சம்கூட விருப்பமில்லை... புத்தகத்தில படிக்கவே விருப்பம்.

   //தெரியும்... அலங்காரத்துக்குத்தான் நீங்க புத்தகங்கள் வாங்கியிருக்கீங்கன்னு ஹாஹா)//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அலங்காரம் என்பதை விட, எனக்கு சரியான ஆசை என்னிடம் தமிழ்ப்புத்தகங்கள் இருக்கோணும் என..., தேடித்தான் வாங்குவேன், திரும்ப திரும்ப படிப்பேன், இன்னொன்று புளொக் இருப்பதால் .. கிடைக்கும் நேரம் இதில் போயிடுது, இதை விட்டால் யூ ரியுப் புரோகிராமில் போயிடுது நேரம்.

   மிக்க நன்றி நெல்லைத்தமிழன்:)).. ஹாய்யா ஹொலிடே போயிடுவா அதிரா, நாங்க தப்பிச்சோம் என எண்ணினீங்க:)) அது மாறி நடக்கப்போகுதூஊஊ:)).. சமையல் குறிப்பு வருது ரெடியாகுங்கோ:)) சமைக்க.

   Delete
  2. இப்போதான் புரிந்தது. நீங்க நெட்ல உள்ள பொன்னியின் செல்வனைச் சொல்றீங்க. நெட்ல படிச்சா நல்லா இருக்காது, நம்மால கதைல ஒன்ற முடியாது (ஒரு விதிவிலக்கு, அமானுஷ்யன்). ஆனா ஊர்ல வாங்கினா வெயிட் ஜாஸ்தி. உங்களுக்காகத்தான் முன்னொருகாலத்தில் தமிழ் நேசன்னு ஒரு (இலங்கைத்தமிழர்)வர் கதைகளை செராக்ஸ் செய்து போட்டுக்கொண்டிருந்தார்.

   இமயகுருவின் இதய சீடன் (ஒரு யோகியின் சுயசரிதை), சுவாமி ராமாவின் அனுபவங்கள்.. இரண்டு புத்தகங்களையும் வாங்கிப் படிங்க. நல்லா இருக்கும்.

   Delete
  3. ///பொன்னியின் செல்வன் தனியாத்தான் போடோணும்.. பெரிய பெரிய 5 புத்தகங்கள் எல்லோ இருக்குது:) ///
   --------------இது அதிராவின் கொமெண்ட்.. டமில்ல தானே ஜொள்ளியிருக்கிறேன்ன்:))..

   ///இப்போதான் புரிந்தது. நீங்க நெட்ல உள்ள பொன்னியின் செல்வனைச் சொல்றீங்க. நெட்ல படிச்சா நல்லா இருக்காது,///
   ---------------இது நெல்லைத்தமிழனின் கொமெண்ட்:) இப்போ நான் தேம்ஸ்ல குதிக்கிறதோ வாணாமோஓஓஓ.. இண்டைக்கு வேற திங்கட்கிழமையாம்.. நாள் கூடாதாம்:) இல்லை எனில் இப்பவே குதிச்சிருப்பேனே எனக்கென்ன பயமோ குதிக்க?:)..

   எனக்கு கொம்பியூட்டரில் இருந்து கதை படிக்கவே பிடிக்காது, நம்மவர்கள் புளொக்கில் போடுகிறார்கள் என்பதற்காகவே புளொக் கதைகள் படிக்கிறேன்ன், மற்றும்படி நெட்டில் படிக்க பிடிக்கவே பிடிக்காது,..

   //இமயகுருவின் இதய சீடன் (ஒரு யோகியின் சுயசரிதை), சுவாமி ராமாவின் அனுபவங்கள்..//
   ஓ வித்தியாசமாக இருக்கே... தமிழ்க்கடைப்பக்கம் சமரில் போவோம்.. அப்ப்போ தேடிப் பார்க்கிறேன், கண்டால் விடமாட்டேன், வாங்கி வருவேன். மிக்க நன்றிகள்.

   Delete
 17. அஆவ் மீ சைன் வச்சிடறேன் :) நான் சண்டேசில் இல்லாத நேரமாபார்த்து பூஸ் பூஸ்ட் ஹாஹாஹா போஸ்ட் போட்ருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ..

   மீ ரொம்பக் கோபமா இருக்கிறேன்ன்:)) என் போஸ்ட்டை விட சண்டேயில உங்களுக்கு அப்படி என்ன பெரிய முக்கியமான வேலை:)) ஹா ஹா ஹா சரி சரி முறைக்காதீங்க சமாதானமாகிப் போயிடுவோம்:)). வன் வீக்குக்கு டெய்லி போஸ்ட் போடப்போறேன் தெரியுமோ:).

   Delete
  2. //வன் வீக்குக்கு டெய்லி போஸ்ட் போடப்போறேன் தெரியுமோ:).// - இது என்ன.. ஆமி குண்டு போட்டதைவிட மோசமான செய்தியாச்சே....

   Delete
  3. ///ஆமி குண்டு போட்டதை///

   ஆஆஆஆஆஆஆ அஞ்சு ஓடிக் கமோன்ன்ன்ன்.. நீங்க சொன்னீங்க பாருங்க:)).. இப்போ நெல்லைத்தமிழனும் இலங்கைப் பாஷையில் பேசுறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா அஞ்சு சொன்னா “ஆர்மி” எனத்தான் நாம் எழுதுவோம் என:) ஹா ஹா ஹா.

   //ஆமி குண்டு போட்டதைவிட மோசமான செய்தியாச்சே....//
   ச்சும்மா குண்டல்ல நியூகிளியர்க்க்க்க்க் குண்டூஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா விடமாட்டேன் இந்தக் கிழமை முழுக்க அதிரா ஆட்சிதேன்ன்ன்ன்:))

   Delete
 18. வணக்கம் அதிரா சகோதரி

  நல்ல நினைவலைகள். பரபரப்புடன் அந்த உலா நிகழ்வுக்காக தாங்கள் காத்திருந்தது பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள். ஆமி உடையில் யாரைப் பார்த்தாலும் கொஞ்சம் பயந்தான்.அந்த நொடிப் பொழுதில் செய்யத் தவறிய செய்கை நம் மனத்தை நீண்ட நாட்களுக்கு உறுத்திக் கொண்டேதான் இருக்கும். அம்மாவின் அனுமதியில்லாமல் செய்து விட்டால் அப்புறம் கோபிப்பார்களோ என்ற உள்பயம் வேறு. பின்னாளில் அந்த செயல் செய்யாதது நன்மைக்கே என்ற பொழுது ஒரு நிம்மதி வருமே..அதை அளவிட முடியாது. அப்போது அம்மா மேல் பாசம் இன்னமும் கூடிப்போகும். அந்த உணர்வுகளை நன்றாக விவரித்து எழுதியுள்ளீர்கள். நன்றி. அந்த இலங்கை பிரச்சனை இன்று வரை பயத்தைதான் உண்டாக்குகிறது.

  தங்கள் தாய் தந்தை புகைப்படம் அழகாக உள்ளது.

  தங்களுடைய புத்தகத் தொகுப்புகள் நன்கு உள்ளது. அறிந்த எழுத்தாளர்களின் நிறைய புத்தகங்கள் நூலகத்திலிருந்து கொண்டு வந்து படித்துள்ளேன். எனக்கு என்ன குறை என்றால், என்ன கதைகள் என்பது மறந்து விடும். மீண்டும் என்றாவது அதையே படிக்க நேர்ந்தால், நினைவு வரும்.

  ஊசிக்குறிப்பு அருமை. ரசித்தேன்.

  பள்ளி விடுமுறையை நன்றாக ஜாலியாக கழித்து விட்டு வர என்னுடைய வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

   //ஆமி உடையில் யாரைப் பார்த்தாலும் கொஞ்சம் பயந்தான்.//

   உண்மைதான் நம் நாடுகளில்தான் இந்தப் பயம், வெளிநாட்டுக்கு வந்து, அவர்களும் நம்மோடு கியூவில நின்று பொருட்கள் வாங்குவதைப் பார்த்ததிலிருந்து பயம் எவ்வளவோ குறைந்து விட்டது.

   //அம்மாவின் அனுமதியில்லாமல் செய்து விட்டால் அப்புறம் கோபிப்பார்களோ என்ற உள்பயம் வேறு.///

   அவ்ளோ தூரம் யோசிக்கவில்லை நான், கோபிப்பா என்பதை விட, அம்மா சொல்லியே எதுவும் செய்து பழக்கப்பட்டு வளர்ந்துவிட்டேன், அல்லது ஒரு விசயம் நடந்தால், அதை உடனே ஓடிப்போய் அம்மாவிடம் ஒப்புவிச்சால்தான் நெஞ்சுக்கு நிம்மதி கிடைக்கும் அப்போதெல்லாம்.

   //தங்கள் தாய் தந்தை புகைப்படம் அழகாக உள்ளது. //
   நன்றி.

   //தங்களுடைய புத்தகத் தொகுப்புகள் நன்கு உள்ளது//
   ஹா ஹா ஹா சே சே இதிலென்ன தொகுப்பு இருக்கு, இது கொஞ்சம் கதையைத்தாண்டி வித்தியாசமாக இருப்பதைப் போட்டேன்.. இன்னும் கொஞ்சம் இருக்கு.

   //எனக்கு என்ன குறை என்றால், என்ன கதைகள் என்பது மறந்து விடும். மீண்டும் என்றாவது அதையே படிக்க நேர்ந்தால், நினைவு வரும். //
   இது பொதுவா எல்லோருக்கும் இருப்பதுதான், புத்தகம் என்றில்லை, சினிமாப் படங்களும்கூட:).

   இம்முறை விடுமுறையை உங்கள் எல்லோருடனும்தான் ஜாலியாகக் கழிக்கப்போகிறேன்:)) அதனால யாரும் எஸ்கேப் ஆகிட விடமாட்டேன்ன்:))..

   காலைச் சுத்தின பாம்பு கடிக்காமல் விடாதாமே:)) .. என்னைச் சொனேன் ஹா ஹா ஹா.

   மிக்க நன்றிகள் கமலாக்கா.

   Delete
 19. //“அன்று கை கொடுக்காமல் விட்டதும் நல்லதே, இன்று இப்படி மாறிவிட்டார்களே”//

  ஹாஹா இப்போ ஞானி என்ற பெயர் உங்களுக்கு மிக பொருத்தம் அமைஞ்சி :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இப்போ ஞானி ஆவதற்கு, அப்பவே அடிக்கல் நாட்டி விட்டேன்:))

   Delete
  2. ஏஞ்சல், நானும் அப்படியே நினைத்தேன் நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள் என் கருத்தை பகிர்ந்து கொண்ட பின் தான் உங்கள் கருத்தை படித்தேன்.

   Delete
 20. நிறைய எழுதணும் அப்புறம் வரேன் .. ஒரு குட்டி சின்னப்பெண்ணின் பார்வையில் மிக அழகா எழுதியிருக்கீங்க ..நானே அந்த நேம் போர்ட் பிடிச்சிட்டு நிற்கிற உணர்வு ..ம்ம் இன்னொன்னு சொல்லணும் .நானும் அப்படிதான் மனசில் தோணுச்சுன்னா இல்ல அம்மா சொல்லலைன்னா கை கொடுக்கவே மாட்டேன் .ஆனா என் பொண்ணு நமக்கு ஆப்போஸிட் நல்லவர் யார் கெட்டவர் யார்னு கடவுள் தான் டிசைட் பண்ணனும் அவர் பாத்துப்பர்னு வியாக்கியானம் பேசும்

  ReplyDelete
  Replies
  1. ///.நானே அந்த நேம் போர்ட் பிடிச்சிட்டு நிற்கிற உணர்வு //

   ஹா ஹா ஹா இதேபோல இன்னொரு நாள் ஸ்கூல் வாசலில் யூனிஃபோமுடன், ஸ்கூல் பிள்ளகளெல்லோரும் உண்னாவிரதம் என இருந்த இடத்தில், கையில் கொடியோடு, படமெடுத்துப் பேப்பரில் போட்டு விட்டார்கள் ஹா ஹா ஹா:))..

   //ஆனா என் பொண்ணு நமக்கு ஆப்போஸிட்//
   ஹா ஹா ஹா இப்போதைய பிள்ளைகள் சுயமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள், நமக்கு அப்போ அந்த கொன்ஃபிடண்ட் இருக்கவில்லை.. அப்பா அம்மாவைச் சார்ந்து பின்பு கணவர் எனப் பழகி விட்டோம்... இனிவரும் காலம் அப்படி இருக்காது.

   Delete
 21. //அஞ்சு ஏரியாவில் இல்லையாக்கும்:)) ஹா ஹா ஹா//

  ஹலோவ் :) உங்களுக்கு நாளை வாரம் எங்களுக்கு அதற்கடுத்த வாரம் :)

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதிலயும் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ ஹா ஹா ஹா:))

   Delete
 22. எங்கள் அனைவருக்குமே தீராத மன வருத்தத்தை கொடுத்த சம்பவம் அது. அப்போ நான் பையில் சட்டை பொம்மையெல்லாம் சேர்த்து வச்சி அங்கிருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க நினைச்சேன் .நான் மட்டுமில்லை எங்க ஸ்கூல் பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து லன்ச் டைம் இதுபதி பேசுவோம் எங்க இந்திய ஆர்மி ஹீரோக்கள் போல் அங்குள்ளவர்களை காப்பாற்றுவாங்க அப்படின்னு :(

  ReplyDelete
  Replies
  1. எங்களைப்பற்றி அந்நேரம் அமெரிக்காவில ஒரு யூனிவசிட்டியில படிச்ச ஒராளும்[அமெரிக்கன்] அடிக்கடி கதைப்பாராம்ம்.. ஹையோ இது எப்படித்தெரியும் எனக் கேட்கிறீங்களோ? ஹா ஹா ஹா எனக்கு அப்போ அவர் பென் ஃபிரெண்ட் ஆக்கும்:)) ஹா ஹா ஹா அவரின் படம் இப்பவும் இருக்குது போடுறேன்ன்ன்:)) போஸ்ட்டில்.

   Delete
 23. /அப்பா சொன்னார் “அதனாலென்ன நீயும் கை குடுத்திருக்கலாமே” என.//

  ஹாஹாஹா உண்மையில் இந்த அப்பாக்கள் எல்லாருமே இப்படித்தான் அதிரா .அம்மா தெளிவா இருந்தாலும் உங்களை குழப்பி விட்டிருக்கார் :) எங்கப்பாவும் அப்படிதான் .
  கணவரும் அப்படிதான் மகள்கிட்ட பரவாயில்லை செய்யலாம்னு சொல்லிடுவார் .

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா உண்மைதான் அஞ்சு, ஆனா அம்மா எப்பவும் வெருட்டி விட்டிடுவா:), அப்பா தைரியம் தந்து முன்னே போகச் சொல்வார்ர்... இரண்டும் நல்ல விசயம்தான்..... சந்தர்ப்பங்களைப் பொறுத்தது.

   Delete
 24. ஹஹ்ஹா அந்த தமிழ் அகராதி உங்க சிமியோன் ரீச்சர் கொடுத்ததா ??

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 5ம் வகுப்போடு சிமியோன் றீச்சரை விட்டு விலகிட்டேனாக்கும்:)).. மேலே நெ.தமிழனுக்கு சொல்லியிருக்கிறேன் பாருங்கோ..

   Delete
 25. அப்பா அம்மா படம் கொள்ளை அழகு .குட்டிப்பூனையும்தான்:)
  அந்த காலத்தில் எடுத்த படங்கள்தான் எவ்ளோ நீட் க்ளியர் .இதையும் அங்கே பார்த்த நினைவு :)

  ReplyDelete
  Replies
  1. இதை “அங்கு” போட்டமையாலதான் இப்போ கைக்கு கிடைச்சுது ஹா ஹா ஹா.. இல்லை எனில் இப்படம் என்னிடம் இல்லை, கனடாவிலதான் கேட்டு வாங்கோணும்.

   Delete
 26. உங்க கலெக்க்ஷனில் கிருபானந்த வாரியார் தாத்தா புக் இருக்கே !! அவர் புத்தகம் எழுதியதே எனக்கு தெரியாம போச்சி
  தாயுமானவன் படிச்சிருக்கேன் தொலைக்காட்சியில் சீரியலாக வந்ததது .சந்திரசேகர் ஹீரோவா நடிச்சார் . கண்ணதாசன் அங்கிள் எதுக்கு ஞானம் ஆன்டியை தேடிப்போறார்னு கதையை படிச்சிட்டு சொல்லுங்க

  ReplyDelete
  Replies
  1. ///உங்க கலெக்க்ஷனில் கிருபானந்த வாரியார் தாத்தா புக் இருக்கே !! அவர் புத்தகம் எழுதியதே எனக்கு தெரியாம போச்சி //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவரின் ஸ்பீச் எனக்கு கேட்கப் பிடிக்கும்... இது புத்தகம் அப்பா வைத்திருந்து, என் கைக்கு வந்துது.

   //தாயுமானவன் படிச்சிருக்கேன் தொலைக்காட்சியில் சீரியலாக வந்ததது//

   ஓ இப்போ கொஞ்சக்காலம் ஓடிச்சுதே அதுவா? நான் பார்க்கவில்லை, ஆனா யூ ரியுப்பில் வந்து தொல்லை கொடுக்குதே..

   //கண்ணதாசன் அங்கிள் எதுக்கு ஞானம் ஆன்டியை தேடிப்போறார்னு கதையை படிச்சிட்டு சொல்லுங்க//
   ஹா ஹா ஹா கர்ர்:)) அதுதான் அர்த்தமுள்ள இந்துமத தொகுப்பின் 9 வது பாகம், இதை மருவித்தான் நான் ஒரு கதை போட்டேனே இங்கு... தலைப்பு இப்போ நினைவு வருகுதில்லையே:).. ,

   Delete
 27. ஊசிகுறிப்பு !!! அவ்வ்வ் நானே ஒரு உதாரணம் .
  சப்பாத்தி பிஸ்கட் மட்டுமே வாழ்க்கை உணவு என்றிருந்த என்னை அதுபக்கமே போக விடாம பண்ணிருச்சே வாழ்க்கை

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அப்படித்தான் பேஸ்புக்கும்:))

   Delete
 28. இந்த பாட்டு வரும் படம் சொல்ல துடிக்குது மனசு .இதை ஸ்கூல் படிக்கும்போது ஞாயிறு டிவியில் போட்டாங்க ..நல்ல இன்டெரெஸ்ட்டா போகும்போது முடிவில் கிளைமேக்சில் கரண்ட் போச்சு :( யாரும் தியேட்டர்ல பார்க்காததால் ஸ்டோரி என்னானு யாருக்குமே தெரில .அப்பறம் பல வருஷம் கழிச்சி திருமணமாகி வந்தா கணவர் கபேர்டில் இந்த படத்தின் வீடியோ :) ஒரு படத்தின் முடிவை பார்க்க எனக்கு9/ 10 வருஷம் ஆச்சு :)))))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   //ஒரு படத்தின் முடிவை பார்க்க எனக்கு9/ 10 வருஷம் ஆச்சு :)))))))))))))))))))))//

   உங்கட ஆர்வம் பார்த்து மீ வியக்கேன்ன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா.. மிக்க நன்றி அஞ்சு.

   Delete
 29. என்னை நேரில்பார்த்தால் ராணுவ வீரனை போல கைகுலுக்க கை நீட்ட வேண்டாம்... என் பொண்டாட்டி அனுமதி கொடுத்தான் கை கொடுக்க முடியும்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. நலமாக இருக்கிறீங்க எனத் தெரியுது, இருந்தாலும் ஓவராத்தான் பூரிக்கட்டையை நினைச்சுப் பயப்படுறீங்க.

   //என்னை நேரில்பார்த்தால் ராணுவ வீரனை போல கைகுலுக்க கை நீட்ட வேண்டாம்.//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஓவர் எதிர்பார்ப்பு உடம்புக்கு ஆகாது:)).

   //என் பொண்டாட்டி அனுமதி கொடுத்தான் கை கொடுக்க முடியும்///

   ஹா ஹா ஹா இது இக்காலத்தில் அனைத்து கணவன்மாருக்கும் உள்ள பிரச்சனைதானே:)).. அதனால உங்களுக்கு மட்டுமில்லை இப்பிரச்சனை என நினைச்சு ஆறுதல் பட்டுக் கொள்ளுங்கோ:).

   மிக்க நன்றி ட்றுத்.

   Delete
 30. நிகழ்ந்த சம்பவங்களை விறுவிறுப்பாகவும், அடுத்து என்ன ... அடுத்து என்ன .... என ஆவலுடனும் + ஒருவித எதிர்பார்ப்புடன் படிக்கும் படி அழகாக எழுதியுள்ளீர்கள். சிலவற்றை கேட்க மனதுக்குக் கஷ்டமாகத்தான் உள்ளது.

  நீங்க உங்க அம்மா ஜாடையாகவே உள்ளீர்கள். :)

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆ கோபு அண்ணன் வாங்கோ வாங்கோ.. தொடர் வருகை தந்து அதிர்ச்சி அடையச் செய்கிறீங்க:)..

   //அடுத்து என்ன ... அடுத்து என்ன .... என ஆவலுடனும் + ஒருவித எதிர்பார்ப்புடன் படிக்கும் படி அழகாக எழுதியுள்ளீர்கள்//

   ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   //சிலவற்றை கேட்க மனதுக்குக் கஷ்டமாகத்தான் உள்ளது.//
   அது என்னமோ உண்மைதான்.

   //நீங்க உங்க அம்மா ஜாடையாகவே உள்ளீர்கள். :)//
   ஓஒ நன்றி நன்றி, ஆனா நேரில் பார்ப்போர் அப்பா ஜாடை என்பார்கள்.

   மிக்க நன்றி கோபு அண்ணன்.

   Delete
 31. வருந்துகிறேன் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ..

   ஹா ஹா ஹா நீங்க டிடியின் கொமெண்ட்டைப் பார்த்திருக்கிறீங்க ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
 32. அனுபவப்பதிவானது, அந்நாளைய அரசியல் சூழலை அருமையாக வெளிப்படுத்தியுள்ளது. மனதில் பாரம் ஏறி இறங்கியதுபோன்ற ஓர் உணர்வு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ... சின்ன வயதில் பதியும் நினைவுகள் என்றும் பசுமையாக இருக்கும். மிக்க நன்றி.

   Delete
 33. இந்த நினைவுகள் எங்க வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. இவர்கள் வந்தபோது நாங்க கோவிலில் தஞ்சமடைந்திருந்தோம்.. எத்தனை விதமான கதைகள் இவர்களை பற்றி வந்து இருந்தபயத்தையும் கூட்டி விட்டது. அதுபோல் பின்னர் நடந்ததும், என்னுடன் படித்தவர்கள்,தெரிந்தவர்கள் நிறையபேர் பாதிக்கப்ப்ட்டு ஈடுசெய்யமுடியாத இழ்ப்புகளும் ஏற்பட்டு... மறக்கவேமுடியாத நினைவுகள்.
  கை குலுக்கவில்லையே என நினைத்து கவலைப்பட்ட ஆள் நீங்க ஓருவராதான் இருக்கமுடியும். அம்மாமார் எப்பவுமே ஜாக்கிரதையாத, கண்டிப்பு பேர்வழிகள்.
  எனக்கு மிகமிக பிடித்த பாடல். அப்பா,அம்மா படம் ஏற்கனவே பார்த்ததே.
  அருமையான தத்துவம் . நீங்க வைத்திருக்கும் புத்தகங்களில் க்ரியாவின் தமிழ் ஊக்கி,திருக்குறள் என்னிடமும் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ, பயணக் களைப்பில் வராமல் விட்டு விட்டீங்கள், அல்லது எதுக்கு நெடுகவும் போகோணுமோ என ஏதும் கோபமோ என்றெல்லாம் நினைச்சுட்டேன் சே..சே.. நீங்க அப்படியில்லை:)).. திரும்படியும் புளொக்கை தூசு தட்டுங்கோவன் அம்முலு... இளமதியையும் எங்கேயும் காணம்... கமலா சிஸ்டரின் எழுத்தைப் பார்த்து, பலசமயம் இளமதி போலவே எழுதுறாவே என நினைவுபடுத்திக் கொள்கிறேன்...

   //இவர்கள் வந்தபோது நாங்க கோவிலில் தஞ்சமடைந்திருந்தோம்.//
   யேஸ் நீங்கள் அப்போ யாழில் இருந்தமையால:).

   ///என்னுடன் படித்தவர்கள்,தெரிந்தவர்கள் நிறையபேர் பாதிக்கப்ப்ட்டு ஈடுசெய்யமுடியாத இழ்ப்புகளும் ஏற்பட்டு//

   யாழ்ப்பாணத்தில் நடந்தது அந்நேரம் மிகக் கொடுமை... அப்பாவின் ஊரில் அப்பாவின் ஒன்றுவிட்ட பெரியம்மா, சின்னம்மா, அத்தை என கிட்டத்தட்ட 5 பேரின் கணவன்மார்களை ஒரே நாளில் சுட்டு விட்டார்கள்.. அவர்கள் கோயிலில் தஞ்சம் புகுந்திருந்தபோது, கணவன்மார்கள் ஒன்றாக சேர்ந்து, வீடு பார்க்கப் போன சமயம் இப்படிப் பண்ணி விட்டார்கள்.. இப்படி சொல்ல முடியாத கதைகள் எத்தனை எத்தனை...:(.

   //கை குலுக்கவில்லையே என நினைத்து கவலைப்பட்ட ஆள் நீங்க ஓருவராதான் இருக்கமுடியும்.//
   ஹையோ மீ கொயந்தை:) எனக்கு அரசியல் எதுவும் தெரியாது.. இப்பவும் என்னைப் பார்த்து சிரிப்போர் எல்லாம் நல்லோர், முறைப்போர் எல்லாரும் கெட்டவர்கள் இப்படித்தான் என் கணிப்பு:)) ஹா ஹா ஹா.

   //எனக்கு மிகமிக பிடித்த பாடல்//
   ஆவ்வ்வ் நன்றி நன்றி.

   //நீங்க வைத்திருக்கும் புத்தகங்களில் க்ரியாவின் தமிழ் ஊக்கி,திருக்குறள் என்னிடமும் இருக்கு.//
   ஓ இதுவும் அப்பாவிடமிருந்து என் கைக்கு வந்தது, பிள்ளைகளுக்குச் சொல்லிக் குடுக்கச் சொல்லித் தந்தார்.

   மிக்க நன்றி அம்முலு.

   Delete
 34. //அப்போதுதான் நான், “அன்று கை கொடுக்காமல் விட்டதும் நல்லதே, இன்று இப்படி மாறிவிட்டார்களே” என என் மனதுக்கு சொல்லி, என்னை நானே சமாதானப் படுத்தி, என் கவலையிலிருந்து விடுபட்டேன்:).//

  அதிரா ஞானி அல்லவா? அதனால் தான் அப்போது கைகுலுக்கவில்லை.ஞானி அம்மாவும் ஞானிதான் அது தான் கை குலுக்க சொல்லவில்லை.
  நடப்பது எல்லாம் நன்மைக்கே!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

   ///அதிரா ஞானி அல்லவா? //

   ஹா ஹா ஹா ..
   //நடப்பது எல்லாம் நன்மைக்கே!//
   உண்மைதான் கோமதி அக்கா, எல்லாம் அவன் செயல், நம்மிடம் என்ன இருக்கு..

   Delete
 35. அம்மா, அப்பா படமு, அதற்கு கீழ் நீங்கள் பகிர்ந்த வாசகமும் அருமை.

  என் அக்கா, அத்தான் எடுத்துக் கொண்ட படம் போல் இருக்கிறது. 1970 ல் இப்படித்தான் போட்டோ எடுப்பார்கள் போலும். என் அக்கா இப்படி இரட்டை சடையுடன் சோபாவில் உட்கார்ந்து இருப்பார். என் அத்தான் அவர்கள் இப்படி சோபாவின் கைபிடியில் உட்கார்ந்து இருப்பார்கள்.

  1950 ல் என் பெரிய மாமா எடுத்துக் கொண்ட படத்தில் மாமா முறுக்கிய மீசையுடன் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பார், அத்தை மிகவும் பவ்வியமாய் புடவை தலைப்பை கொஞ்சம் போர்த்தினார் போல் பக்கத்தில் நின்று இருப்பார்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இதேபோல நானும் என் ஹஸ் உம் எடுத்தோம், அது நான் ஒரு உயரமான ஸ்ரூலில், மெதுவா சரிந்திருப்பதைப்போல இருக்க, கணவர் தோளில் கை போட்டுக்கொண்டு நிற்பதைப்போல:)..

   எடுக்கும்போது எதுக்கு இப்படி எல்லாம் போஸ் குடுக்கோணும் என இருக்கும், ஆனா பின்னாளில் புரட்டிப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.

   Delete
 36. இரண்டு நாளாக வலை பக்கம் வர முடியவில்லை.
  அக்கா மிகவும் பிஸி.
  பசுமை நடையுடன் நேற்று முழுவதும் போச்சு. அவர்களின் 100 வது நடை விழா.
  இன்று காலை இரண்டு நாள் வீட்டு வேலைகள் தேங்கி இருந்தவற்றை முடிக்க பொழுது போய் விட்டது.
  இப்போது தான் நேரம் கிடைத்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் சமையல் வேலை ஆரம்பித்து விடும். மீண்டும் வருகிறேன்.

  விடுமுறையை எங்களுடன் கழிக்க போகிறீர்களா?
  எங்கும் போகவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. ஓ கோமதி அக்கா நானும் யோசித்தேன், ஒருவேளை திருமணநாளுக்கு முடிக்காத கோயில் தரிசங்களை முடிக்கப் போயிருக்கிறீங்க என நினைச்சேன்..

   நீங்க பசுமை நடையுடன் போனீங்களோ.. முன்பு போட்ட போஸ்ட் நினைவுக்கு வருது. வாங்கோ வாங்கோ.

   //விடுமுறையை எங்களுடன் கழிக்க போகிறீர்களா?
   எங்கும் போகவில்லையா?//
   இது குட்டி விடுமுறைதானே, அதனால வீட்டில் இருந்து றிலாக்ஸ் பண்ணுவதுதான் அதிக மகிழ்ச்சி, சின்னவருக்கும் வெளியே போவது பெரிசா பிடிக்குதில்லை, குட்டி குட்டி இடங்கள் ஓகே...

   Delete
 37. ஊசிக்குறிப்பு சொல்லும் வாழ்க்கை தத்துவம் உண்மை.

  ReplyDelete
  Replies
  1. ஓம் கோமதி அக்கா, வாழ்கையில் ஏதோ ஒரு வகையில் இதனை நாம் உணர்வோம்.

   Delete
 38. நீங்கள் பகிர்ந்து இருக்கும் புத்தகங்களில் பாலகுமரன் தாயுமானவன், தெனாலி ராமன் கதைகள், திருக்குறள் மட்டுமே படித்து இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஏன் கோமதி அக்கா நீங்க கண்ணதாசன் அங்கிளின் அர்த்தமுள்ள இந்துமதம் படித்ததில்லையோ?.. ஆஆஆஆ லைபிரரியில் கிடைக்கும் எடுத்து வாசியுங்கோ.. அவரின் எழுத்தின் ஒவ்வொரு வரியும் தத்துவம்போலவே இருக்கும்.

   Delete
 39. பாடல் பிடித்த பாடல்.
  மீண்டும் கேட்டு ரசித்தேன்.கார்த்திக் பட பாடல் நான் அவர் தான் பாடுவார் என்று நினைத்து இருந்தேன் படம் பாக்கும் வரை.
  அப்புறம் தான் தெரிந்தது ராதாரவி பாடும் பாடல் என்று.
  ராதாரவி தயாரித்த படம் போல்.

  ReplyDelete
  Replies
  1. ஓ படத்தில ராதாரவியோ பாடுறார்ர்.. நானும் கார்த்திக் பாடுவார் என்றெல்லோ நினைச்சிருந்தேன் அவ்வ்வ்வ்வ்:)..

   மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

   Delete
 40. தலைப்பைப் பாராட்ட மறந்து விட்டேன்...

  அந்நாளை நினைக்கையிலே என்வயது மாறுதடா...

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ்வ் என் வயசு எனவோ வரும்.. நான் என் மனசு தவிக்குதடா.. என்று வரும் என நினைச்சிருந்தேன் ஹா ஹா ஹா:).

   Delete
 41. பாலகுமாரன் புத்தகங்கள் நான் நிறைய வைத்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. உங்களிடம்தான் நிறையப் புத்தகங்கள் இருக்கிறதே ஸ்ரீராம்.. என்னிடம் இருப்பது உங்கள் பானை சோற்றில் ஒன்றுதான் ஹா ஹா ஹா. ஒருநாளைக்கு அங்கு வந்து கொஞ்சத்தை அள்ளி வரப்போகிறேன்ன்:)) உங்கள் சுமையைக் குறைக்க ஹா ஹா ஹா..

   மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
  2. அதிரா... அந்த மாதிரிலாம் நினைக்காதீங்க. புத்தகம் வச்சிருக்கறவங்கள்லாம் அடுத்தவங்களுக்குக் கொடுக்க மாட்டாங்க.. கொடுத்தாலும் பேப்பர்ல கையெழுத்து வாங்கிக்கிட்டுத்தான் கொடுப்பாங்க. நான் ஸ்ரீராமைச் சொ ல் ல லை.. ஹா ஹா

   Delete
  3. ///புத்தகம் வச்சிருக்கறவங்கள்லாம் அடுத்தவங்களுக்குக் கொடுக்க மாட்டாங்க.. //

   ஹா ஹா ஹா இதை முன்பே ஸ்ரீராம் சொல்லியிருக்கிறார், தனக்கு யாருக்கும் குடுக்க மனமில்லை என:)).. இனி ஆராவது.. “நான் கர்ணன் பரம்பரை” எனக் கதைக்கட்டும் பார்ப்போம்ம்ம் ஹா ஹா ஹா:)..

   Delete
  4. நான் புத்தகம் எல்லோருக்கும் கொடுக்கப்போகிறேன் என்றே சொல்லவில்லையே! அது என்னவோ என் மனசு இதில் இப்படி கஞ்சப்பிசினாறியாக இருக்கிறது... என்ன செய்ய!

   ஆனால் கொடுக்காமலும் இல்லை, கொடுத்துமிருக்கிறேன்!!!

   Delete
  5. அதெப்படி ஸ்ரீராம், நம்மிடம் இருக்கும் புத்தகங்கள் என்பது நம்முடைய கலெக்‌ஷன்ஸ் எல்லோ.. நாம் கஸ்டப்பட்டுத்தேடி வாங்கி, எவ்ளோ கஸ்டப்பட்டுப் பாதுகாப்போம் அதைக் கொடுக்க யாருக்குமே மனம் வராது.
   நீங்க சொன்னீங்களே, ஒரு புத்தகம் தேடிக் கொண்டிருந்தீங்க பின்பு உங்கள் மூத்தமகன் வாங்கித் தந்தார் என்று.. அப்போ இப்படி தேடி வாங்கி வைத்திருப்பதை எப்படிக் குடுப்போம்....குடுக்க மனம் வராதுதானே.

   Delete
  6. ஸ்ரீராம்... நான் இதுவரை கொடுத்த புத்தகங்கள் திரும்ப வந்ததில்லை. வடமொழி பழமொழி - புத்தகமும் பெண்ணும் பிறருக்குக் கொடுத்தால் திரும்ப வராது.

   Delete
  7. ///புத்தகமும் பெண்ணும் பிறருக்குக் கொடுத்தால் திரும்ப வராது.//

   நெல்லைத்தமிழன் வெளியில வாங்கோ.. நேக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்:), நீதி கிடைக்கும்வரை தேம்ஸ்கரையில் உண்ணாவிரதம் ஆரம்பம்.. அதிரா யூஸ் மட்டும் குடிப்பேன்ன், அஞ்சு பச்ச்ச்ச்சைத்தண்ணிகூடக் குடிக்க மாட்டா:))... எங்களுக்கு நீதி வேணும்....

   ஏதோ ஆண் மட்டும் திரும்பக் கிடைச்சிடுவாரோ?:), பெண் மட்டும்தான் கிடைக்க மாட்டாவாம் திரும்ப கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இப்போ எத்தனை ஆண்கள் கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் பெற்றோருடன் இருக்கிறார்கள்?:).. அவர்களையும் குடுத்தால் குடுத்ததுதான்:)).. ச்ச்ச்ச்சும்மா பழைய கதையை வச்சே ஆண்கள் குடும்பத்தோடயே பெற்றோருடன் இருப்பாங்க என காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கினம் இருபதாம் நூற்றாண்டிலும்:).

   ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பாஆஆஆஆ இப்பூடி வேர்க்குதே:) டக்குப்பக்கெனப் புதுப் போஸ்ட்டை போட்டிட வேண்டியதுதேன்:).

   Delete
  8. அதிரா அப்படிப் போடுங்க....அதானே அதென்ன பெண் திரும்பவரமாட்டா...நானும் வரேன் உங்க கூட ஜூஸ் மட்டும் குடிக்கலாமல்லோ மீக்கு சுகர் உண்டல்லோ...ஜூஸ் மட்டும் போதும் பச்சைத்தண்ணீ எல்லாம் வேண்டாம்....

   கீதா

   Delete
  9. ஹா ஹா ஹா வாங்கோ கீதா உங்களுக்கு ஃபிரெஸ்ஸ்ஸ்ஸ் சா இது வேற பிரெஷா பிளிஞ்சு தரலாம் யூஸ்:).

   Delete
 42. வித்தியாசமான பகிர்வு அதிரா ...

  காலத்தில் எதுவும் எப்படியும் மாறும் அல்ல வா ...நல்லவை கள் தீமைகள் ஆகவும் ...

  புத்தக அலமாரியும் அருமை ...அந்த rc அம்மா புக் என்னிடமும் உள்ளது ..


  ஊசி குறிப்பு ..உண்மையான வரிகள் ..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ..

   உண்மைதான் கால ஓட்டத்தில் நம் மன எண்ணங்கள், விருப்பங்கள்கூட தலைகீழாக மாறுகிறது.

   மிக்க நன்றி அனு.

   Delete
 43. இலங்கை அனுபவம் வருத்தம் தந்தது. பல விஷயங்களை அரசியல் தீர்மானிக்கிறது. நல்லது என நினைத்தது கேட்டதாக மாறியது....

  ஊசிக் குறிப்பு சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ .. மிக்க நன்றி.

   Delete
 44. நினைவலைகள் துயரத்தையும் மகிழ்ச்சியையும் தருகின்றது . இந்திய அமைதிப்படைகளின் வருகை கூட தேவையற்ற அரசியல்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வாங்கோ.. நீஈஈஈஈஈண்ட இடைவெளி எடுத்திட்டீங்களே இம்முறை, சபரிமலை தரிசனம் போனனீங்களோ?.. இருப்பினும் நீங்கள் புளொக்கை மறக்காமல் வந்து போவதற்குப் பாராட்டோணும்.

   Delete
 45. ஊசிக்குறிப்பு வழமை போல அருமை. படத்தில் இருப்பது தாய்தந்தை போல?

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நேசன், அப்பா அம்மாதான்ன், லிங்கம் கூல்பார் ல பார்த்திருப்பீங்க:)

   Delete
  2. நல்லூர், லிங்கம் கூல்பார் வீதி - எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே....

   Delete
  3. ஹா ஹா ஹா உங்களுக்கும் தெரியுமோ நெ.தமிழன்.. லிங்கம் கூல்பார் என்றாலே எல்லோருக்கும் தெரியும்.. இப்போ லிங்கம் கூல்பார் என கனடா ரொரண்டோவிலும் இருக்கு, போனதடவை போனபோது அண்ணன் அடிக்கடி கூட்டிப் போய் வாங்கித் தந்தார் எங்களுக்கு..

   Delete
 46. விடுமுறையை நல்லபடியாக கொண்டாடுங்கள்.)))

  ReplyDelete
 47. போலீசைப் போல ராணுவத்தினரும் சற்று அச்சமூட்டுபவர்கள்தான்

  ReplyDelete
 48. வாங்கோ முரளிதரன் வாங்கோ... முன்பும் வந்திருக்கிறீங்களோ எனவும் நினைவா இருக்கு.. எதுவாயினும் நல்வரவு மிக்க மகிழ்ச்சி.

  இலங்கையில் பொலிஸ் க்கு பயமில்லை நமக்கு, ஏனெனில் பொலிஸ் எனில் அந்தந்த ஏரியா ஆட்கள்தானே வேலை செய்வார்கள்.. அப்போ தமிழ் ஏரியாவில் தமிழ்ப் பொலிஸ்தான் இருப்பார்கள் எனவே பயம் இல்லை, ஆனா பிரச்சனை ஆரம்பித்த பின்பு பொலீஸ் என்றாலே அங்கு மரியாதை இல்லை, யாரும் பயப்படுவதில்லை, எனவே அனைத்தும் ஆமிக் கட்டுப்பாட்டில் இருந்தது... அப்படித்தான் நினைக்கிறேன்..

  ReplyDelete
 49. அதிரா உங்க அம்மா அப்பா அழகு...நீங்க பெருமபலும் அம்மா ஜாடையில்தான் இருக்கீங்க கொஞ்சம் அப்பா ஜாடை தெரியுது...

  கை கொடுக்கலைன்னாலும் ஃபீல் வேண்டாம்...இந்தியராணுவம் பற்றி நிறைய நெகட்டிவ் கதைகள் உண்டு...வேண்டாம் விட்டுவிடுவோம்...உங்கள் போஸ்டின் அர்த்தம் புரியுது...

  ஊசிக்குறிப்பு அருமை...

  உங்க புத்தகங்களில் க்ரியாவின் தற்கால.......என்னிடமும் இருக்கே!!! மற்றவற்றில் சில என் மாமனாரிடம் இருந்தது. இப்போது அவை யாரிடம் இருக்கு என்று தெரியலை....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ..

   //க்ரியாவின் தற்கால.......என்னிடமும் இருக்கே//
   ஓ அம்முலுவிடமும் இருக்காம்...

   மிக்க நன்றிகள் கீதா.

   Delete
 50. ஹாப்பி ஹாலிடேஸ்! அதிரா...

  கீதா

  ReplyDelete
 51. அதிரா தங்களின் பெற்றோரின் படம்தானே அது?

  இந்திய அமைதிப்படை அப்போது தினமும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். பல கதைகள்.

  நீங்கள் கை கொடுக்க நினைத்தது எல்லமே அந்த வயதில் பலருக்கும் தோன்றும் எண்ணம் தான் இல்லையா. அதுவும் நாம் சின்னப்பிள்ளையாக இருக்கும் போது அது ஒரு பரவசம் ஆக இருக்கும். ஆனால் பின்னாளில் அதை நினைத்துப் பார்க்கும் போது அப்போது மனம் பக்குவப்பட்டுப் போயிருக்கும் எனவே இதற்கா நாம் அப்படி பரவசப்பட்டோம் என்று தோன்றும்.

  ஊசிக் குறிப்பு சிறப்பு.

  உங்கள் விடுமுறை நாட்கள் இனிதாக அமைந்திடட்டும்.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..

   ஓம் அப்பா அம்மா..

   உண்மைதான் மனம் பக்குவப்படும்போதுதான் எதுக்காக அப்போ வருந்தினோம் என எண்ணத் தோன்றும்.

   மிக்க நன்றிகள் துளசி அண்ணன்.

   Delete
 52. அதிரா உங்கள் பதிவு பார்த்ததும் அதுவும் நீங்கள் சொல்லியிருக்கும் பகுதி பற்றி எல்லாம் சொன்னதும் எனக்கு இலங்கை சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. என்னவோ தெரியவில்லை எனக்கு சிறுவயது நினைவுகள்....இலங்கை என்றால் தனி நேசம்...கடலும் கடல் சார்ந்த இடம் வடகிழக்கு பகுதிக்கு தாத்தாவுடன் வந்த பசுமையான நினைவுகள்...கண்டி சென்ற நினைவுகள், திரிகோணமலைக்கு அப்பா அழைத்துச் செல்ல நினைத்திருந்த நேரம் நாங்கள் இந்தியா திரும்பிவிட்டோம்...பிரச்சனைகள் தொடங்கியதால்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஓ.. உண்மைதான் கீதா, சின்ன வயது நினைவுகளை அழிக்கவே முடியாதுதானே. இப்போ போய் வரலாம் கீதா.. நன்றாகத்தான் இருக்கிறது நாடு.. களவு கொள்ளைதான் கொஞ்சம் கூடியிருப்பதாக அறிகிறோம்.

   மிக்க நன்றிகள் கீதா.

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.