நல்வரவு_()_


Thursday, 25 June 2020

மாஷ்மலோ🍣 - மாம்பழ புடிங்🍮

நீண்ட நாட்களாகிறதே போஸ்ட் போட்டு, இப்பூடியே விட்டால், அதிராவா?அதாரது?:) எனக் கேட்டிடப்போகினமே எனும் பயத்தில இன்று ஒரு போஸ்ட் போடோணும் என எழுதுகிறேன்.
ஏன் எல்லோரும் தலைகீழாக நடக்கீனம்?:).. ஒருவேளை கொரோனா எபெக்ட்டோ?:)).. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)) 

 “நாய்க்கு வேலையும் இல்லை, நடக்க நேரமும் இல்லை” என்பதைப்போலாச்சு என் நிலைமை:). கொரோனாக் ஹொலிடேய் களும் முடிஞ்சு, எல்லாம் நோர்மலாகப்போகுதாம் எனவும் பேசுகிறார்கள், ஆனா என் புரோகிராமுகள்தான் இன்னும் முடிஞ்ச பாடில்லை. சரி சரி என் புலம்பல் என்னோடு போகட்டும்..:))

நான் செய்தவைகளை இங்கு போடாதுவிட்டால், எனக்குப் படங்கள் செய்முறைகள் சிலசமயம் காணாமல் போய் விடுது. இப்பூடித்தான் பாருங்கோ, போன முறை வைரஸ் அடிச்சதால என் கொம்பியூட்டரோடு அத்தனை படங்களும் போயிந்தி, ஆனா இந்த புளொக்கில் போட்டவைகள்தான் தப்பின... வயசான காலத்தில பேரப்பிள்ளை, பூட்டப் பிள்ளைகளுக்கு[ஓவர் ஆசையோ?:)] ஒரு ரெசிப்பி செய்வதெனில்:), இப்பூடிப் போட்டு வச்சால் ஈசி எல்லோ:))..

சரி இப்போ மங்கோ புடிங் பார்ப்போமா?:)
ஏதோ இவை எல்லாம் சிதம்பர ரகசியம் என நினைச்சிருந்தேன்.. முன்பு ஒரு டிஷ் செய்வதெனில், ஆட்களிடம் கேட்கோணும், அவர்கள் ஒழுங்காக சொல்லித்தர மாட்டினம், பாதிதான் சொல்லுவினம், ஏனெனில் பின்பு எல்லோரும் செய்ய வெளிக்கிட்டால், தம் மதிப்புக் குறைஞ்சிடும் என.

ஆனா இப்போதைய தலைமுறையினர், அக்குவேறு ஆணி வேறாக, யூ ரியூப்பிலும், தம் தளங்களிலும் சொல்லித் தருவதனால், நமக்கு எல்லாமே கைக்குள் அடக்கம்.. ஆரையும் கெஞ்சிக் கடமைப்பட்டுக் கேட்டுச் செய்யத் தேவையில்லை.

மங்கோ நல்ல சுவையானதாக கிடைச்சால்,வாங்கி, வெட்டி அரைச்செடுக்கலாம், ஆனா நான் ரெடிமேட் பியூறி வாங்கினேன்...

இதற்கு பால் தேவை, சிலர் பசுப்பாலிலும் செய்கின்றனர்,  வெபொரேட்டட் மில்க் இலும் செய்கின்றனர் அல்லது பாதிக்குப் பாதி கொண்டென்ஸ்ட் மில்க்[ரின் மில்க்] உம் சேர்க்கலாம் அது நம் விருப்பம்.

நான் செய்த விதம்..

மாம்பழக் கூழ் - 400 கிராம்
வெபொரேட்டட் மில்க் - 500 மில்லி லீட்டர்
ஜெலற்றீன்  - 2 மே கரண்டி
சுகர் - நம் விருப்பப்படி[நான் போட்டது 4 மே கரண்டிகள்]..

மாம்பழம் புளிப்பானதெனில் சுகரின் அளவைக் கூட்டலாம். இத்துடன், மாம்பழத் துண்டுகள்[விரும்பினால் சேர்க்கலாம்]


ஜெலற்றீன் க்குள் மெல்லிய சுடுநீர் ஒரு 50 மில்லி லீற்றர் விட்டு கரைத்து வைக்கவும்[5 நிமிடங்களாவது].. மில்க் ஐ சுகர் சேர்த்து நன்கு அடிக்கவும், பின்பு மாம்பழக்கூழ், ஜெலற்றீன் அனைத்தையும் சேர்த்து, அதனுள் மாம்பழத் துண்டுகளையும் சேர்த்துக் கலக்கி ஃபிரிஜ்ஜில் வைக்கவும்.. 4,5 மணித்தியாலத்தில் நன்கு இறுகி வரும்.

அளவெடுக்கோணுமெல்லோ:))
ரெடியாகி விட்டது...

இத்தோடு சேர்த்து ஜெலியும் செய்தேன், ஜெலிப்பவுடரை நல்ல கொதிநீரில் கரைத்து, அதனுள் ஸ்ரோபெரியும் மாம்பழத்துண்டுகளும் சேர்த்து இறுக வைத்தேன்...

ஆவ்வ்வ் இந்தாங்கோ இந்தாங்கோ.. 
சுவையான மங்கோ புடிங்கும் ஜெலியும்:))

🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐈இடைவேளை🐈🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀
டெய்சிப்பிள்ளைக்கு எங்காவது உயரத்தில் படுப்பதுதான் விருப்பம், அதனால மகன் இந்த இடத்தை அவவுக்காக செட் பண்ணிக் கொடுத்தார், அன்றிலிருந்து, பகல் இரவெல்லாம் இதில்தான் நித்திரை கொள்ளுவா, கட்டிலுக்கு வந்து கரச்சல் கொடுப்பதில்லை

ஒருநாள் இரவு, நேரத்தைப் பாருங்கோ 10 மணியாகியபின், நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தா, திடீரென ஒரு பூச்சி பறக்கிறதாம்.. டெய்சியின் உறக்கம் கலைஞ்சு போச்ச்ச்ச்ச்ச் ஹா ஹா ஹா..:)) பூச்சியைத் தேடிக்கொண்டிருந்தா பல மணி நேரமாக கர்ர்ர்ர்:))
🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐈🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀🐀

இனி மாஷ்மலோ சாப்பிடலாமா? 
இது சின்ன வயசிலிருந்தே செய்யோணும் என இருந்தேன், ஆனால் முறையான ரெசிப்பி கிடைக்கவில்லை, பெரிய விசயம் என விட்டிருந்தேன்ன்.. ச்ச்சோ சிம்பிள்.. டக் டிக் டோஸ் போலவேதான்...

தேவையானவை இரண்டே இரண்டு மெயின் பொருட்கள் மட்டுமே

சுகர் - 300 கிராம்
ஜெலற்ரின் - 4 மேசைக்கரண்டி[24கிராம்ஸ்]

இத்துடன் தண்ணி 350 மில்லி லீற்றர்.
ஒரு 4,5 துளிகள் எலுமிச்சம் சாறு சேர்த்தால், சீனியின் திகட்டு இல்லாமல் நன்றாக இருக்கும்.

ஜெலற்றினிற்குள் கொஞ்சம் சுடுநீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.[கரையும் அளவு சேர்த்தால் போதும்].

அடுப்பில் சொன்ன அளவு தண்ணி சேர்த்து, அதனுள் சுகர் போட்டு மெல்லிய நெருப்பில் நன்கு காச்சவும்.... பாகு ஓரளவு கம்பிப் பாகை விடவும் கொஞ்சம் அதிகமானதும்... அதாவது, ஒரு தேக்கரண்டி கலவையை எடுத்து, தண்ணியினுள் போட்டால், ஒரு பந்து போல உருளவேண்டும்.. இதுதான் பதம்...

இதுதான் மொத்த செய்முறை...

இப்படிக் காச்சி வந்ததும், அதனுள் ஜெலற்றின் சேர்த்து ஒரு நிமிடம் காச்சி இறக்கி, உடனேயே பீற்றர் ஆல அடிக்கத் தொடங்கவும்...

5 நிமிடத்தில் இப்படி ஆகும்.. தொடர்ந்து அடிக்கவும்...

மேலே கொலாஜ் இல் உள்ள கடசிப் படம்போல நன்கு திரண்டு, கீழே சரித்தால் ஊற்றுப் படாத பக்குவம் வந்ததும்... பாதியை ட்ரேயில் ஊற்றவும்.

மிச்சப் பாதிக்குள் விரும்பிய கலர் சேர்த்து அடிச்சு மேலே ஊற்றவும்.. இப்படி விரும்பிய கலர்கள் சேர்க்கலாம், என்னிடம் சிவப்பு இருக்குது, பிங்கியாக செய்யலாம் என நினைச்சால், மஞ்சள்தான் இருந்தது கர்:))

கலர் சேர்த்தபின், நான் கொஞ்சம் கூடுதலாக அடிச்சுப்போட்டேன்,  அதனால டக்கெனக் கட்டியாகத் தொடங்கி விட்டது, அதனால மேல் பகுதி கொஞ்சம் ஏற்ற இறக்கமாகி விட்டது, மீண்டும் செய்யும்போது இப்பிழைகள் விட மாட்டேன், திரும்பச் செய்ததும் காட்டுகிறேன்.

2 மணி நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்தால் போதும்.. புஸு புஸு என கடையில் வாங்குவதைக் காட்டிலும் சூப்பர் சொஃப்ட் மாஷ்மலோ ரெடியாகிடும்.
இது.., பாதி கீழ்ப்பகுதி, பாதி மேற்பகுதி..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆஆஆ:)) 

ஊசிக்குறிப்பு
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எனக்குக் காய்ச்சல்:))
[ஆராவது அடிக்க வந்தாலும், இப்பூடிச் சொல்லிப்போட்டுப் போர்த்துக் கொண்டு படுப்பதுதான் இப்போதைய நிலைமைக்கு நல்லது:)]

ஊசி இணைப்பு
“கடவுள், நோய் வரும் முன்னரே மருந்தை அனுப்பி விடுவார்”
இப்படிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)..
🌷🌷🌷🌷🌷🌷

131 comments :

  1. Replies
    1. ஆஆஆ வாங்கோ ட்றுத் வாங்கோ... என்னா ஸ்பீட்டூஊஊ... அந்த மங்கோ புடிங் உங்களுக்கே:)... ஜெலியைக் கில்லர்ஜிக்குக் குடுங்கோ:)...
      மிகுதிக்கு நாளைக்கு வாறேன்...

      Delete
  2. உங்கள் ரிசிப்புகளுக்கு தேவையான பொருட்கள் என்று போட்டு அதில் முக்கியமான ஒன்றை மட்டும் போடாமல் விட்டுடீங்க... நீங்க இன்று போட்ட ரிசிப்பிகளுக்கு எல்லாம் முக்கியமாக ப்ரிஜ் தேவை அது இல்லாமல் இந்த ரிசிப்பி எல்லாம் செய்ய முடியாதுங்கோ

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நீங்க அதிராவைக், கரெக்ட்டாத்... தப்பாகவே புரிஞ்சிட்டீங்க ட்றுத்:)) இதுக்கு ஃபிரிஜ் தேவையே இல்லை. வெளியில் வைக்கலாம், கொஞ்சம் நேரம் அதிகமாகும் அவ்வளவே....

      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  3. ருசியோ இல்லையோ... படங்கள் ஆசையைத் தூண்டுகிறது.
    பார்சல் அனுப்பி வைத்தால் ருசி பார்த்து சொல்லப்படும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

      என்ன இப்பூடி ஜந்தேகப் படுறீங்கள் கர்ர்:)) நல்ல சுசியாகவும் இருந்தது தெரியுமோ:)..

      அட்ரஸ் குடுங்கோ அனுப்பி வைக்கிறேன் மோடி அங்கிளிடம் குடுத்து:).. மிக்க நன்றி கில்லர்ஜி.

      Delete
  4. [im]https://thumbs.gfycat.com/YellowishPlumpAcornweevil-size_restricted.gif[/im]

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. ஹா ஹா ஹா சமாதானக்கொடியுடன் வந்தமையால விட்டிடுறேன் எதுவும் பண்ணாமல்:)

      Delete
  5. எல்லா நட்பூக்களுக்கும் பணிவானவனாக்கம்ஸ் :) எல்லாரையும் பார்த்து நாளாச்சு இன்னிக்கில்லாட்டி நாளைக்கு எங்கள் பிளாக் போய் அட்டெண்டென்ஸ் வைக்க நினைச்சேன் :)வேலை பிசி அதனால் எங்கியும்  வர முடில :) 

    ReplyDelete
    Replies
    1. அட ஏஞ்சல்..   நல்லாயிருக்கீங்களா?  வாங்க.. வாங்க...

      Delete
    2. ஏஞ்சல் உங்களைக் காணவில்லையே என்று நலம் விசாரிக்க நினைத்தேன் நீங்களே சொல்லிட்டீங்க பிஸின்னு...

      மற்றபடி நலம்தானே...

      நேரம் கிடைக்கறப்ப வாங்க. டேக் கேர் ஏஞ்சல்!...

      கீதா

      Delete
    3. ஏஞ்சலினா? அது யாரு? இரண்டு மூணு பிளாக்குக்கு ஓனரா இருந்துக்கிட்டு, பெரிய பூட்டைப் போட்டு இழுத்து மூடிவிட்டு காணாமல் போகிறவங்களா?

      Delete

    4. @ கீதா ரெங்கன் ..நன்றி

       @ நெல்லைத்தமிழன் 

      ஹஹ்ஹா :) அப்படியில்லை நிறைய ரெசிப்பீஸ் எழுத இருக்கு ஆனா சமீப கலாமா வேலை பிசி இந்த வாரம்தான் இன்னிக்கு free .அதோட கொஞ்சம் உலக நாட்டு நடப்புக்களை பார்த்து  வேறே மைண்ட் அப்செட் அதனால் அமேதியா :)  இருந்துட்டேன் எல்லாத்துக்கும் மேலே இங்கே pollen அலெர்ஜியும் சேர்ந்து ppe மாஸ்க் வேறு  பாடாய்படுத்துவதால் தற்காலிக விடுப்பு :)

      Delete
    5. @ sriram

      நலமே ஸ்ரீராம் .கொஞ்சம் வேலை பிசி .இப்போல்லாம் ஹாஸ்பிடலுக்குள்ள போகும்போது f 1 ட்ரைவர் ,ஸ்பேஸுக்கு போறவங்க மாதிரில்ல போறோம் அதுவே கடுப்பேற்றுது .நொடிக்கொருதரம் கைகழுவி க்ளவுஸ் போட்டு நாங்க தொட்ட இடத்தை நான்களே க்ளீன் செஞ்சு visor மாஸ்க் இல்லன்னா goggles போட்டு இப்படி வெறுப்புடன் காலம் போகுது 

      Delete
    6. பெரிய பெரிய ஆட்களுக்கும் கொரோனா அவர்களுடைய டிரைவர் மூலமாகத்தான் பரவியிருக்கு. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கவேண்டிய தருணங்கள்.

      Delete
    7. ஆஆஆஆஆஆஆ நம்பாதீங்க நம்பாதீங்கோ.. ஹையோ நான் இல்லாத நேரம் பார்த்து எல்லோரையும் நம்ப வச்சிட்டு ஓடிட்டா அஞ்சு கர்ர்ர்:)).. நான் அஞ்சுவின் றூமில் சிசி ரிவி கமெரா பூட்டிட்டேன்ன்.. விரைவில ரிலீஸ் பண்ணுறேன்:) அப்போ பாருங்கோ.. குல்ட்க்குள்ள என்ன அழகாப் போர்த்திட்டுத் தூங்கிறா என்பதை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒரு சுவீட் 16 [என்னைச் சொன்னேன்:))] பிள்ளையே கஸ்டப்பட்டுப் போஸ்ட் எல்லாம் போடுறேனாம்ம்:)) அவ மூன்று புளொக்கையும் இழுத்து மூடிட்டு இருக்கிறாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா...

      ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா இப்போத்தான் நேக்கு கொஞ்சம் நிம்மதியாவே இருக்குது:)).. ஆரையாவது போட்டுக் குடுத்தால்தான் மனதில நிமதியே வருது:)) ஹா ஹா ஹா:))

      Delete
  6. ஆவ் ஓ பேபி ... ஸாம் கியூட்டி படத்தை பார்த்தேன் மியாவ் நீங்க சொல்லித்தான் பார்த்தேன் .அந்த கேரக்டரை இளமையாவே அந்த ஹீரோவுடன் சேர்த்து  விட்டிருக்கலாம்னு துக்கமா போச்சு என்டில் :) 

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் எல்லோ அஞ்சு? எனக்குப் பொதுவா சமந்தாவைப் பெரிசாப் பிடிப்பதில்லை ஆனா இப்படத்தில் மெரிசலாகிட்டேன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா...

      //அந்த கேரக்டரை இளமையாவே அந்த ஹீரோவுடன் சேர்த்து விட்டிருக்கலாம்னு துக்கமா போச்சு என்டில் :) //
      ஆஆஆ இதையேதான் நானும் நினைச்சேன், ஆனா அப்படி எனில் மகன் குடும்பம் பாவம்.. இவ எங்கே போயிட்டா என தேடிக்கொண்டே இருப்பினமெல்லோ..

      Delete

  7. ///ஏன் எல்லோரும் தலைகீழாக நடக்கீனம்?:).. ஒருவேளை கொரோனா எபெக்ட்டோ?:)).. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)) ///


    ஆமா மியாவ் நீங்க கூட நண்டு மாதிரி சைடா நடக்கறீங்க ஹாஹாஆ :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எங்கட ஊர் நண்டு ரிவேர்ஸ்ல எல்லோ நடக்குது:))

      Delete
    2. //நண்டு ரிவேர்ஸ்ல எல்லோ நடக்குது://

      அடடே...    இது நல்லாயிருக்கே.....

      Delete
    3. ஹா ஹா ஹா நன்றி ஸ்ரீராம்.

      Delete
  8. //நான் செய்தவைகளை இங்கு போடாதுவிட்டால், எனக்குப் படங்கள் செய்முறைகள் சிலசமயம் காணாமல் போய் விடுது.//முழுசா கம்ப்ளீட் பண்ணலை :) என்கிட்டே சொன்னீங்க செஞ்சது மறக்காம இருக்க இங்கே போஸ்ட் னு :))))))))

    ReplyDelete
    Replies
    1. //என்கிட்டே சொன்னீங்க செஞ்சது மறக்காம இருக்க இங்கே போஸ்ட் னு :))))))))//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. உண்மைதான் அஞ்சு, கை நோட், டயறில எழுதினாலும் காணாமல் போயிடும், பின்பு அளவுகளுக்கு எங்கே போவது.. நான் சில ரெசிப்பிகள் இங்கு பார்த்தேதான் மீண்டும் செய்கிறேன், எனக்கென ஒன்று தனியா செய்து ஒளிச்சு வைத்திருக்க விருப்பம்:) ஆனா எதுக்கும் நேரம் போதாமலும் அலுப்பாகவும் இருக்குது...

      Delete
  9. //அவர்கள் ஒழுங்காக சொல்லித்தர மாட்டினம், பாதிதான் சொல்லுவினம், ஏனெனில் பின்பு எல்லோரும் செய்ய வெளிக்கிட்டால், தம் மதிப்புக் குறைஞ்சிடும் என.//

    ஆமா மியாவ் நட்பு ஒருவர் சொன்னார் அவரது இரண்டாம் அண்ணி முதல் அண்ணிக்கு ரெசிப்பி எதுவும் சொல்லித்தரவேணாம் னு :) இவர் மட்டும் நட்புக்கிட்டருந்து நிறைய கற்றுக்கொண்டார் ! அது மட்டுமில்லாம நட்புக்கு தப்பான ரெசிபி செய்முறையும் கற்று கொடுத்திருக்கிறார் :) யார்னு தெரியுதுதானே :))))))))))

    ReplyDelete
    Replies
    1. ///யார்னு தெரியுதுதானே :)))//

      ஹா ஹா ஹா தெரியுது தெரியுது:))...

      உண்மைதானே அஞ்சு, முன்பெல்லாம் ஒரு பொருள் செய்வதெனில் ஆரிடமாவது கேட்கோணும், இப்போ எவ்வளவு ஈசியாக இருக்குது... அதிலும் இந்த லொக்டவுனில எவ்ளோ ரெசிப்பிகள் வந்திருக்கு விதம் விதமாக...

      Delete
  10. //அக்குவேறு ஆணி வேறாக, யூ ரியூப்பிலும், தம் தளங்களிலும் சொல்லித் தருவதனால்,//ஹையோ ஹா அந்த வீடியோஸ் பார்க்கவும் சிலருக்கு பொறுமையில்லை ..ஆனா நான் நிறைய கற்றது இப்படி காணொளிகளால் தான் 

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் எங்கட மூத்தவருக்கும் சசையல், மற்றும் உணவு சம்பந்தமான எந்த ஒரு வீடியோவுமே அலுக்காமல் பார்ப்போம்.. அவர் சின்னனிலிருந்தே என்னுடன் சேர்ந்து பார்ப்பார்.. அவர்தான், ஒபாமா அங்கிள் ஆட்சிக்கு வந்தவுடன் சொன்னார், நான் மெயின் செஃப் ஆகி, ஒபாமாவுக்குச் சமைச்சுக் குடுக்கப்போறேன் என ஹா ஹா ஹா..

      Delete
  11. ம்ம் ரெண்டு ரெசிப்பிலையையம் !!!! ஜெலட்டின் நான் சேர்ப்பதில்லை இதுக்குப்பதில் அகர் அகர் சேர்க்கலாமா ?

    ReplyDelete
    Replies
    1. யெஸ் ஏஞ்சல் நானும் அதைத்தான் சொல்லிருக்கேன்.

      அகர் அகர் தான் நான் சேர்ப்பது. வெஜ் ஜெலாட்டின் கிரிஸ்டல்ஸ் அல்லது பௌடர் கிடைத்தால் அது சேர்ப்பது உண்டு இல்லேனா அகர் அகர் தான். அகர் அகர் சேர்த்துச் செய்தால் நன்றாகவே வருது ஏஞ்சல்...

      கீதா

      Delete
    2. அகர் அகரா? மறுபடியும் முதல்லேர்ந்தா? யாரோ அகர் அகர் செய்ய வெளிக்கிட்டு, கடைசி வரை அதைச் செய்யத் தெரியாமல் பாயசம் செய்தார்களாமே

      Delete
    3. thanks geethaa ,shall try with agaragar

      Delete
    4. ///அகர் அகரா? மறுபடியும் முதல்லேர்ந்தா? யாரோ அகர் அகர் செய்ய வெளிக்கிட்டு, கடைசி வரை அதைச் செய்யத் தெரியாமல் பாயசம் செய்தார்களாமே//

      haaahaaa :)))))))

      Delete
    5. நான் வாங்கியதும் வெஜ் ஜெலட்டீன் தான் ஆனா குளூட்டன் ஃபிறீ இல்லை என நினைக்கிறேன்.

      அகர் அகரில் மங்கோ புடிங் செய்யலாம் எனத் தெரியும் அஞ்சு, ஆனா மாஷ்மலோ செய்யலாமோ தெரியவில்லை.. கீதா இரண்டும் செய்யலாம் எனச் சொல்கிறாவோ?... செய்து பார்க்கலாம்..

      Delete
    6. ////நெல்லைத் தமிழன்Friday, June 26, 2020 2:42:00 pm
      அகர் அகரா? மறுபடியும் முதல்லேர்ந்தா?///

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன், நான் விடுவதாய் இல்லை, இங்கு வாங்க முடியவில்லை, அதனால அமேசனில் ஓடர் பண்ணி அகரகர் பவுடர் வாங்கிவிட்டேன்.. இம்முறை பிழை விடாமல் செய்து இங்கு போடுவேன் அப்போ நீங்கள் எல்லோரும் கண் மூக்கு எல்லாம் வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்து கொமெண்ட்ஸ் போடப்போறீங்கள்:))..

      அடுத்தடுத்து இனிப்புச் செய்ய வேண்டாமே என இடைவெளி விட்டு வெயிட் பண்ணுகிறேனாக்கும்:))

      Delete
  12. ஆஆஆ marshmallow  இவ்ளோ ஈஸியா !! இதுக்கும் அகர் அகர் பவுடர் யூஸ் பண்ணலாமோ இரண்டு ரெசிப்பியும் பார்க்க வண்ணமயமா இருக்கு 

    ReplyDelete
    Replies
    1. யெஸ் ஏஞ்சல். அகர் அகர் போட்டுச் செய்யலாம். நல்லா வரும்.

      எனக்கு சென்னையில் வெஜ் ஜெலாட்டின் பௌடர்.க்ரிஸ்டல்ஸ் கிடைத்தது. க்ரீன் டாட் போட்டது. அதனால மார்ஷ்மலோ செய்திருக்கேன் ஈசிதான் ஏஞ்சல். இங்கதான் செய்யறதில்லை ஃப்ரிட்ஜ் வேண்டுமே.

      கீதா

      Delete
    2. பாருங்கோ அஞ்சு எவ்வளவு ஈசி என...நான் படிக்கும் காலம் தொடங்கி செய்ய நினைச்சு, கஸ்டம் என விட்டிருந்தேன்:))..

      ஆஆஆஆ கீதா அப்போ மாஷ்மலோவும் செய்யலாமோ அகர் அகரில்.. கட்டியில்லாமல் இப்படி சொஃப்ட்டா இழுபடுமோ?..

      Delete
  13. டெய்சி :)) ஹாஹா எங்க பொண்ணுங்க எங்க கூடத்தான் படுப்பாங்க .பூச்சிலாம் பார்த்தா ஓட்டம் ஆட்டம்தான் மிட்நைட்டிலும் 

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆ பூச்சி ஸ்பைடர் எல்லாம் இவர்களுக்கு எதிரி:)).. அதாவது எதுவும் மூஃப் ஆகிடக்கூடாது:)) மூஃப் ஆனால் உடனே பாய்ந்து பிடிக்கோணும் ஹா ஹா ஹா..

      டெய்சிப்பிள்ளை எப்பவும் தன் பெட்டிலதான் நைட் படுப்பா, ஆனா முன்பு ஏழி மோனிங் எழும்பி வந்து நம் குல்ட்டுக்குள் நுழைவா.. இப்போ அப்படி இல்லை, வெளியே விடச் சொல்லிக் கேட்க மடும் வந்து தட்டுறா.. ஒருவேளை கோடைகாலம் என்பதனாலோ தெரியவில்லை, குளிர் எனில் ஓடி வருவா நம்மோடு படுக்க.

      Delete
  14. ஊசி இணைப்பு நிறையபேர் அறியவேண்டியது ..இதை  ஒரு சிலருக்கு  வலியுறுத்தி சொன்னதால் ( சொந்த விஷயங்களை ஊரெல்லாம் தண்டோரா ) போடவேண்டாம்னு சொன்னதால் சிலருடன் பிரிவும் ஏற்பட்டது ..
    ///
    “கடவுள், நோய் வரும் முன்னரே மருந்தை அனுப்பி விடுவார்”//

    கர்ர்ர்ர் அப்போ கொ கொ கோ :) ராணாவுக்கு  மெடிசினை எதுக்கு இன்னும் அனுப்பலை 

    ReplyDelete
    Replies
    1. அது அஞ்சு கொரோனாவைக் கடவுள் அனுப்பவில்லையாக்கும்:)).. வூகான் சிங்கான்யங்:) எல்லோ கொரோனாவைத் தயார் செய்தவராம் ஹா ஹா ஹா:))

      Delete
  15. ஓகே குட்நைட் :) பல்லி ட்ரீம்ஸ் சேசே ஜெலி ட்ரீம்ஸ் 

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஜெலி என்றது என் காதில எலி எண்டெல்லோ கேட்ட்டுது:)) அதனால ஒரே எலிக் கனவுகளாஅ வந்துபோச்சுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நன்றி அஞ்சு நன்றி.. உங்கள் அடுத்த சமையலுக்காக நாங்கள் வெயிட்டிங்:)) எப்போ டெலிவரி?:)).. பின்ன அடிச்சுக் கன நாளாகுதே உங்களை:))

      Delete
  16. பிஞ்சு ஞான ஜெல்லி :)))))))))))))))  ஹை இது நல்லாருக்கே 

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா ஹையோ ஹஒயோ ஏஞ்சல் அப்போ அத்தனை குயப்பமா இருப்பாரா புலாலியூர் பூசார்!!!! ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    2. //AngelThursday, June 25, 2020 11:38:00 pm
      பிஞ்சு ஞான ஜெல்லி :)///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் குரு கோபமாகிடப்போறார்:)) ஒரு பிஞ்சு ஞான.. அல்லி... சே சே டங்கு ச்லிப்பாகுதே...வல்லியைப் பார்த்து இப்பூடிச் சொல்ல:))..

      ஹா ஹா ஹா கீதா இப்போ நீங்க கொயப்பமாகிடப்போறீங்க:)) கொயம்பிடாமல் என் ஆச்சிரமம் வாங்கோ தெளிவு பண்ணி விடுவேன்:)

      Delete
  17. பாட்டு என்ன பாட்டுன்னு அப்புறமாதான் கேட்கணும்.  "நாய்க்கு வேலை இல்லை, நிற்க நேரம் இல்லை" என்றுதான் சொல்வார்கள்.  வேலையே இல்லா விட்டாலும் ஒரு இடத்தில நிற்காமல் அலைந்து கொண்டே இருக்கும் என்று சொல்லவேண்டி.... 

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...
      ஓ பாட்டு அது ஓபேபி படத்திலிருந்து சமந்தாப் பாட்டு, ஆனா தேடத்தேட தமிழில் கிடைக்கவில்லை, இது தெலுங்கு.. பாட்டை விட வீடியோவை ரசிக்கலாம் சமந்தா அழகோ அழகு இதில்...

      ஓ அது நிற்க நேரமில்லை என வருமோ?:)) ஹா ஹா ஹா நான் தான் பயமொயியை மாத்திட்டேன் போலும்:)) நன்றி ஸ்ரீராம், இனிக் கரெக்ட்டா எழுதுவேன்.. ஏனெனில் இது அடிக்கடி எனக்கு உபயோகமாகுது:))

      Delete
  18. இரண்டு நாட்களுக்கு முன் வாட்ஸாப்பில் ஒரு காணொளி வந்தது.  நம் எல்லோர் அலுவலகங்களிலும் இப்படி ஒரு வேலைக்காரர் இருப்பார் என்று சொல்லி...    வேலை செய்பவர் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வேலை செய்வது போல போக்கு காட்டி டயர்ட் ஆவார் ஒருவர்!

    ReplyDelete
    Replies
    1. ஓ .. நான் அப்படிப் பார்க்கவில்லை.. வரவில்லை.

      Delete
  19. நீங்கள் சொல்வது சரி...    யு டியூப் சேவை பெரிதுதான்...  என் இளையவனே இந்த லாக் டவுன் காலத்தில் நிறைய ஸைட் டிஷ் யு டியூப் பார்த்து வகைவ வகையாய் செய்து அசத்தி விட்டான்!  

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ உங்கள் சின்னவருக்கும் சமையலில் ஆர்வமோ.. உண்மை ஸ்ரீராம், இப்போ குழந்தைகள் முதல் வயதானோர் வரை யூரியூப் பார்த்தே சமையலும், மற்றும் சரி பிழை கூட நேர்ப்படுத்த முடியுது..

      Delete
  20. மாம்பழம் பற்றிய ரெசிப்பி பார்த்துக்கொண்டேன்.  இரண்டு முறை மாம்பழம் முயற்சித்து இரண்டு முறையும் வயிற்றுப்போக்கு ஏற்பட, மாம்பழ ஆசையை நிறுத்தி விட்டேன்! "இந்த நேரத்தில்" அனாவசியமாக பீதி அடைய வேண்டாம் பாருங்கள்....

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லைத்தான் ஸ்ரீராம், அதிலயும் இது மாம்பழமும் பாலும் சேரும்போது இன்னும் பயம்... உண்மைதான் இந்நேரம் ஒத்துகொள்ளாததை சாப்பிட முயற்சிக்கக்கூடாது..

      Delete
  21. டெய்சி தூங்காமல் பூச்சி பிடிப்பதில் அங்கிருந்து தாவி நித்திரையில் இருக்கும் உங்களை திடுக்கிட வைக்காமல் இருந்ததே...!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பெட் எல்லாம் ஹெட்போர்ட் எல்லாம் ஜம்ப் பண்ணினா, ஆனா இப்போ வெயிலால நாங்க நித்திரைகொள்ள லேட் ஆகும். அதனால தான் படமெடுக்க முடிஞ்சது.

      Delete
  22. ஊசிக்குறிப்பு ரசித்தேன்.  

    ஊசி இணைப்பு : அல்ரெடி நான் அதை பாலோ செய்கிறேனே!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நல்ல விசயம் தானே ஸ்ரீராம்... நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).. மிக்க நன்றிகள்.

      Delete
  23. பாடல் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது.

    //போன முறை வைரஸ் அடிச்சதால என் கொம்பியூட்டரோடு அத்தனை படங்களும் போயிந்தி, //
    அக்காவும் படத்தை காணோம் என்று புலம்பி இருக்கிறேன். கணினி மருத்துவர் வைரஸ் சரி செய்து மீட்டுக் கொடுத்தார், இப்போது சில படங்கள் போய்விட்டது என்று தேடும் போதுதான் தெரிந்தது.

    அதிரா நான் பதிவு போடும் போது நீங்களும் போடுகிறீர்கள் .
    பதிவு அருமையாக இனிமையாக இருக்கிறது மதியம் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. பாட்டு நல்லா இருக்கெல்லோ நன்றி.. படமும் பாருங்கோ கோமதி அக்கா நன்றாக இருக்கும் “ஓ பேபி”.

      //அதிரா நான் பதிவு போடும் போது நீங்களும் போடுகிறீர்கள் .//
      ஹா ஹா ஹா அதேதான் கோமதி அக்கா, என்னா ஒரு பொருத்தம் பாருங்கோ, நீங்களும் நீண்ட இடைவெளிக்குப் பின் நேற்று, நான் வரும் திங்கள்தான் போட இருந்தேன், ஆனா ஏதோ ஒரு உந்துதலில் எழுதி முடிச்சிட்டேன்.

      ஆனா நான் போஸ்ட் எழுதும்போதே உங்கள் போஸ்ட் வந்திருக்குது, எனக்கு தெரியவில்லை. என்னில் ஒரு கெட்ட பழக்கம், காலையில் எழுந்தவுடன் தான் என்ன என்ன நியூ போஸ்ட் என செக் பண்ணுவேன், பின்பு பழையதையே ரீ-ஃபிரெஸ் பண்ணிப் பார்ப்பனே தவிர, புதுசு வந்திருக்கோ ஏதும் எனச் செக் பண்ண மறந்திடுறேன்:)..

      வாங்கோ வாங்கோ நன்றி.

      Delete
  24. அட! அதிரா கூடச் சமையலறையில் வேலை மும்முரம்? நீங்கதான் செய்தீங்களா இரண்டும்?இஃகி,இஃகி,இஃகி, நல்லா இருக்கு இரண்டுமே. இரண்டாவது நான் செய்ததில்லை. மாம்பழ புட்டிங் முன்னெல்லாம் நினைச்சால் பண்ணிக் கொண்டிருந்தேன். மாம்பழக் குல்ஃபியும் அடிக்கடி செய்திருக்கேன். இப்போ மாம்பழமே வாங்குவதில்லை. :)))))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      இந்த லொக் டவுன் காலத்தை நான் சமையலறையிலும் கார்டினிலும் தான் அதிகம் செலவழிக்கிறேன்..
      //நீங்கதான் செய்தீங்களா இரண்டும்?//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மீ இப்போ பெரீஈஈஈஈஈய செஃப் ஆகிட்டேன்ன்:)) வயசால அல்ல:) அனுபவத்தாலயாக்கும்:))..

      இவை எல்லாம் இனிப்புத்தானே கீசாக்கா.. ஆனா எனக்கு இரண்டுமே பிடிக்கும், கடையில் வாங்க விரும்புவதில்லை.. அதிக இனிப்பு என..

      Delete
  25. நீங்க பதிவு போட்டதும் எங்கேனு ஓடி வந்துடறாங்க உங்க செக்! ஒருவேளை நீங்க இரண்டு பேரும் முந்திய ஜென்மத்தில் கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாருமா இருந்தீங்களோ? இஃகி,இஃகி,இஃகி,இஃகி!

    ReplyDelete
    Replies
    1. எனெக்கென்னவோ, பதிவு போடறதுக்கு முன்னாடி, அதிரா, ஏஞ்சலினை மிரட்டி விரட்டி இடுகைக்கு கூட்டிக்கிட்டு வந்துடறாங்கன்னே தோணுது

      Delete
    2. ஹாஆஹா கீதாக்கா :) நானும் ஞானஜெல்லியும் tom அண்ட் ஜெரி மாதிரி இதில் நாந்தேன் ஜெரி மவுஸ் அதான் எப்போ பூனை வாலை இழுக்கலாம்னுதான் பார்ப்பேன்  எனக்குன்னே சான்ஸ் அமையுது :)

      Delete
    3. //Geetha SambasivamFriday, June 26, 2020 2:09:00 am
      நீங்க பதிவு போட்டதும் எங்கேனு ஓடி வந்துடறாங்க உங்க செக்! //

      ஹா ஹா ஹா... அது ஒருவர் போஸ்ட் போட்டால்தான், மற்றவருக்கும் போடும் எண்ணம் வருது:) அதனாலதான் இடையிடை இப்படி ஒருவர் மாறி ஒருவர் நம்மை நாமே ஃபோஸ் பண்ணிப் போட்டு இழுப்பது:))

      //இரண்டு பேரும் முந்திய ஜென்மத்தில்//
      முந்தைய ஜென்மத்திலும் எலியும் பூஸ் உம் தான் கீசாக்கா:)) ஹா ஹா ஹா ஒற்றுமை எல்லாம் கிடையாது:)).. எப்பவும் அடிப்பதும் கலைப்பதும் தான்:))

      ஆஆஆஆ இதையேதான் அஞ்சுவும் சொல்லிட்டா பாருங்கோ.. ஹையோ ரைப் பண்ணியபின் தான் அஞ்சு சொன்னதைப் படிக்கிறேன்... பாருங்கோ இதிலும் என்னா ஒரு ஒற்றுமை இருவருக்கும்:)) ஹா ஹா ஹா..

      Delete
    4. //
      நெல்லைத் தமிழன்Friday, June 26, 2020 2:39:00 pm
      எனெக்கென்னவோ, பதிவு போடறதுக்கு முன்னாடி, அதிரா, ஏஞ்சலினை மிரட்டி விரட்டி இடுகைக்கு கூட்டிக்கிட்டு வந்துடறாங்கன்னே தோணுது//

      நெல்லைத்தமிழன்.. “போஸ்ட் போடுவேன் இன்று அல்லது நாளை” இப்படித்தான் பேசிக் கொள்வோம், அதை வச்சே ரெடியாக இருந்து ஓடி வருவொம்... மற்றும்படி எப்போதாவதுதான் சொல்லி வச்சுப் போடுவது..

      ஆனா நீங்க சொன்னதைப்போல, இப்படிக் காணாமல் போயிருந்தால், மிரட்டிக் கூட்டி வருவதுதான்.. அது இருவரும் செய்வோம்... வெளியே கூட்டி வரோணும் என்பதற்காக ஹா ஹா ஹா..

      Delete
  26. ஊசிக்குறிப்பில் சொல்லி இருப்பது உண்மைதானே! நீங்க தான் இழுத்துப் போர்த்துக்கொண்டு படுக்கிறவங்கள் ஆச்சே! :))))) ஊசி இணைப்பு அதைவிட உண்மை! உண்மையோ உண்மை! அனுபவ உண்மை! இதிலே தான் உங்க வயசு எத்தனைனு வெளிப்பட்டு விட்டது. உங்களைப் போன்ற அனுபவசாலியான தொண்டு கிழங்கள் சொல்லுவது சரியாகவே இருக்கும். இஃகி,இஃகி,இஃகி!

    கடவுள் கொரோனாவை அனுப்பி வைக்கையில் மருந்தை அனுப்பி வைக்க மறந்துட்டாரோ? :(((((((((

    ReplyDelete
    Replies
    1. //இதிலே தான் உங்க வயசு எத்தனைனு வெளிப்பட்டு விட்டது.//

      ஆஆஆஆஆஆஅ சுவிட் 16 என்பது உண்மை எனச் சொல்றீங்க? அப்பூடித்தானே கீசாக்கா?:) ஹா ஹா ஹா.. நான் தான் சொல்லிட்டனே. மீ ஒரு பிஞ்சு ஆஆஆஆஆஆனீஈஈஈஈஈஈஈஈஈஈ:)) ஹா ஹா ஹா..

      மேலே அஞ்சுவுக்குச் சொல்லிட்டேன் , கொரோனாவை அனுப்பினது கடவுள் இல்லையாக்கும்:)) அது வூகான் இல் இருக்கும் சிங்யான்கன்:)) ஹா ஹா ஹா நன்றி கீசாக்கா.

      Delete
  27. ஆஹா.... பார்க்கவே சிறப்பாக இருக்கிறது. பார்சல் தான் வருவதே இல்லை! அதனால் இனிமேல் கேட்கப் போவதில்லை :)

    கடைசி பொன்மொழி சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

      பார்சல் வரும்.. இப்பூடி அவசரப்பட்டு விற்றோ பண்ணிடக்கூடாது:) கொரோனா முடிய..ஸ்பெஷல் பிளேனில மோடி அங்கிள் உங்களுக்குக் கொண்டு வந்து தருவார்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  28. இரண்டிலும் சுகர்... ஆகா...!

    செய்முறை அழகு...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ..

      ஹா ஹா ஹா ஓம் இது சுவீட் ஆட்களுக்கான சுவீட்:) அல்ல:)).. நன்றி டிடி.

      Delete
  29. அதிரா இந்தப் பாட்டு கேட்டதே இல்லை!! நல்லாருக்கு

    அது சரி பேர் என்ன ஞானவல்லின்னே இருக்கு மாற்றலியோ...பிஞ்சு புட்டிங்க்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ.. இது புதுப்படம் ஓ பேபி.. தமிழ்ல்லயும் இருக்குது பாருங்கோ கீதா நல்லா இருக்கு.

      அது அது அது வந்து கீதா.. ஞானி ஆனதான மாத்த விருப்பமில்லாமல் இருக்குது ஞானவில்லி.. சே..சே வல்லி.. வில்லியை:)) ஹா ஹா ஹா

      Delete
  30. ஒரு வாரம் போடாததற்கே இப்பூடியா..,...மீ எல்லாம் மாசக் கணக்கிலே இருந்திருக்கேனே ஆனா ஆரும் மறக்கலியாக்கும்!!! ஹா ஹா ஹா

    புட்டிங்க் செமையா இருக்கு. பி ஏ படிக்கும் போது கேனிங்க் அண்ட் ஃபுட் ப்ரிசர்வேஷன் கோர்ஸ் ஒரு வாரம் எங்கள் கல்லூரியில் நடத்தினாங்க அப்ப நான் என் ஆர்வம் மிகுதியால் க்ளாஸ் கட் அடித்துப் போட்டு இந்த கோர்ஸ் சென்றேன். எங்க வகுப்பிலிருந்து நாங்க ஒரு மூன்று பேர் போயிருப்போம் என்று நினைக்கிறேன். ஜாம், ஃப்ரூட் ஜெல்லி, ஊறுகாய்,, டாஃபி, ஜூஸ், ஸ்க்வாஷ் அப்புறம் கூடுதலாக புட்டிங்க், கேக் எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க.

    அப்ப இந்த புட்டிங்க், ஜாக்ஃப்ரூட் புட்டிங்க் எல்லாம் செய்யக் கற்றுக் கொண்டேன்.

    ஆனான் வீட்டில் வெஜிட்டேரியன் என்பதால் ஜெலாட்டின் க்ரீன் டாட் போட்டது கிடைப்பது அபூர்வம் என்பதால் நான் அகர் அகர் பயன்படுத்துவேன். ஜெலாட்டின் இப்ப வெஜ்ஜும் அதாவது க்ரீன் டாட் போட்டதும் கிடைக்குது. சில இடங்களில் மட்டுமே.

    ரொம்ப நல்லா வந்துருக்கு அதிரா பாராட்டுகள்

    கீதா


    ReplyDelete
    Replies
    1. ///மீ எல்லாம் மாசக் கணக்கிலே இருந்திருக்கேனே ஆனா ஆரும் மறக்கலியாக்கும்!!! ஹா ஹா ஹா//

      உங்களை ஆரும் மறக்க மாட்டினம் கீதா.. ஆனா அதிரா கொயந்தைப்பிள்ளை எல்லோ:)) அதனால மறந்திடுவினம் ஹா ஹா ஹா:)).. குழந்தைகளை அடையாளம் தெரியாமல் போவது நோர்மல் எல்லோ:))..

      ஒ நீங்க படிக்கும்போதே பழகிட்டீங்க கீதா...

      ஓ எனக்குத் தெரியவில்லை, தேடி வாங்கவில்லை ஆனா ஜெலட்டீன் ல வெஜ் என இருந்துது.. ஞானி என்பதால தானாக அமைஞ்சிருக்காக்கும்:)) சரி சரி முறைக்கக்கூடா:))..

      ஓ இனி அகர் அகர் சேர்த்துச் செய்கிறேன்.. நன்றி கீதா நன்றி.. சுவையும் நன்றாகவே இருந்தது.

      Delete
  31. நான் வீட்டிலேயே பாலை குறுக்கி கண்டென்ஸ்ட் மில்க் போலச் செய்தும் செய்திருக்கேன் அல்லது கண்டென்ஸ்ட் மில்க் போட்டும் செய்திருக்கேன். இங்கு இவாப்பொரேட்டட் மில்க் கிடைப்பதில்லை. இப்போது செய்வதும் இல்லை. ஏனென்றால் ஃபிட்ஜ் இல்லை என்பதால். சென்னையில் இருந்தவரை செய்ததுண்டு.

    பார்க்கவே ரொம்ப நல்லா வந்திருக்கு யும்மி!!! ரொம்ப அழகா செஞ்சுருக்கீங்க அதிரா...ஜூப்பர்!!! ஒரு பொக்கே!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓம் கீதா, என் கசின் ஒருவர் சொன்னா, தான் பசுப்பாலைக் காச்சி செய்தேன் நன்றாக வந்தது என, அதனாலதான் துணிஞ்சு இறங்கினேன்..

      கனடாவில் நின்றபோது பலரும் செய்து தந்தார்கள்.. ரெசிப்பி கேட்க முடியாத இடங்கள் அவை:)) அப்போ ஆசையாக இருந்தது செய்யோணும் என.

      என் கணவரின் ஆன்ரி. கேற்றறிங் ரீச்சர்.. அவவும் செய்து தந்தா ஒரு 4 வருடங்கள் முன்பு, அவவிடம் ரெசிப்பி கேட்டேன், அவ அழகாக எழுதி தந்தா, ஆனா அந்த செய்முறை கொஞ்சம் கஸ்டமாக இருந்ததால அதையும் விட்டு விட்டேன்..

      அது கீதா, முந்தின கேக் செய்யும் முறைகூட கஸ்டம்தானே.. காலையில் தொடங்கினால் ஈவினிங் வரை மாஜரினையும் சுகரையும் அடியோ அடியென அடிப்போம்... ஆனா இப்போ டக்கு டிக்கு டோஸ் என்றதும் கேக் வருது:))... ஹா ஹா ஹா இக்காலத்தில் எல்லாம் ஈசியாகி விட்டது..

      பொக்கே பிங் கலர்தானே கீதா?:)) நன்றி நன்றி..

      Delete
    2. னடாவில் நின்றபோது பலரும் செய்து தந்தார்கள்.. ரெசிப்பி கேட்க முடியாத இடங்கள் அவை:)) அப்போ ஆசையாக இருந்தது செய்யோணும் என.//

      ஆமாம் அதிரா எனக்கும் அப்படி ஆவதுண்டு. ரெசிப்பி கேட்க முடியாமல்...

      //அது கீதா, முந்தின கேக் செய்யும் முறைகூட கஸ்டம்தானே.. காலையில் தொடங்கினால் ஈவினிங் வரை மாஜரினையும் சுகரையும் அடியோ அடியென அடிப்போம்... ஆனா இப்போ டக்கு டிக்கு டோஸ் என்றதும் கேக் வருது:))... ஹா ஹா ஹா இக்காலத்தில் எல்லாம் ஈசியாகி விட்டது..//

      அதே அதே அதே....

      பிங்க் கலரேதான் பொக்கே....இனி எழுத்தில் அல்லாமல் தந்துவிடுகிறேன் ஹா ஹா ஹா ஹா

      உங்களுக்குப் பிங்க் பிடிக்கும் என்று தெரியுமே!!

      கீதா

      Delete
  32. ஜெல்லி சூப்பரா இருக்கு அதிரா! இதுக்கும் ஒரு பூங்கொத்து!

    என் மகன் இங்கு இருந்திருந்தால் கண்டிப்பா ஸ்டராபெர்ரி போட்டுச் செய்தா ரொம்பப் பிடிக்கும். மாங்கோ ஜெல்லி ரவுண்டாக அப்பளம் போல் பரத்திச் செய்திருக்கிறேன். வெஜ் ஜெல்லி கிரிஸ்டல்ஸ் கிடைக்கிறது. இங்கும்.

    முக்கனி ஜெல்லி செய்து பாருங்க அதுவும் ரொம்ப நல்லா இருக்கும் அதிரா. ஆனா உங்களுக்கு பலாப்பழம் அங்கு கிடைக்குமோ?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அது உண்மையில் கீதா ஜெலி இரு கலர் போட்டேன் மாஷ்மலோ போல, ஆனா இரண்டும் ஒரே கலர் என்பதால வித்தியாசம் தெரியாமல் போச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. வீட்டில் ஜெலி விரும்பிச் சாப்பிடுவினம் வயிற்றுக்கும் நல்லதெல்லோ.. சூட்டைக் குறைக்குமாம்.. அதனால அடிக்கடி செய்வதுண்டு. காச்சல் ஏதும் வந்தால் ஜெலி சாப்பிடுவது நல்லது. ஹொஸ்பிட்டலில் வோட் பேசண்ட்டுக்கு ஜெலி கட்டாயம் குடுப்பார்கள்.

      உண்மைதான் கீதா, ஜெலியும் அகர் அகர் போல விதம் விதமாகச் செய்யலாம்.

      பலாப்பழம் சீசனில் கிடைக்கும் கீதா, இப்போ சீசந்தானே ஆனா தெரியவில்லை இம்முறை கடைக்கு வருமோ என.

      Delete
    2. ஆமாம் சூட்டைக் குறைக்கும்னு சொல்லுவதுண்டு. இப்ப நானோ ஸ்வீட்டோ ஸ்வீட்டு. ஸோ அடிக்கடி செய்வதில்லை...

      பலாப்பழம் கிடைக்குமானால் செய்து பாருங்க அது ஒரு சுவையா இருக்கும்

      கீதா

      Delete
  33. டெய்சிப்பிள்ளை சோஊஊஊஊஊஊஸ்வீட்.....நம்ம கண்ணழகியும் இப்படித்தான் பூச்சி ஏதேனும் கண்டுவிட்டால் அம்புட்டுத்தான் அதைப் பிடிப்பதிலேயே போயிவிடுவாள். பல சமயங்களில் காமெடியாக இருக்கும். அவள் செயது. கீழே எந்த சாமானும் இருக்கக் கூடாது பூச்சி பிடிக்கும் ஆரவாரட்த்தில் எல்லாம் தட்டி புரட்டிவிடுவாள்!! ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதேதான் கீதா.... பறந்தால்... ஓடினால் விடமாட்டினம்...

      Delete
  34. ஹையோ அதிரா இன்று எனக்கு என் சென்னை நினைவுகளை அப்படியே கொண்டுவந்திட்டீய்ங்க. அடுத்து மாஷ்மெலோ. வெஜ் ஜெலாட்டின் பௌடர் யூஸ் செய்து செய்வேன் பேக்கிங்கிற்கும் அல்லாமலும். இதெல்லாம் சென்னையில் இருந்தப்போ...

    இதுவும் மிக மிக நன்றாக வந்திருக்கிறது. பரவாயில்லை அதிரா மேடு போல் அந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா நன்றி.. அது சூட்டுடன் போட வேண்டும், ஆறினாலும் கட்டியாகிடுது..

      Delete
  35. அதிரா ஆல்டன் ப்ரௌன் அவரின் ரெசிப்பியும் நன்றாக இருக்கும் மார்ஷ்மெலோவிற்கு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓ... இப்போ ரெசிப்பிகள் கொட்டிக் கிடக்குது கீதா.. நான் 10-15 பார்த்து ஒரு ஐடியா எடுத்தபின், என் ஐடியாவில் செய்வேனாக்கும் ஹா ஹா ஹா..

      Delete
    2. அதிரா நானும் கூட அப்படித்தான் அப்படியே எல்லாம் செய்வதில்லை..கொஞ்சம் நம் வேலைகளையும் உள்ளே போட்டுத்தான் செய்வேனாக்கும்!!!!

      கீதா

      Delete
  36. ஊகு ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஅ...

    உஇ நல்ல வாசகம் இரண்டையும் ரசித்தேன் அதிரா

    கீதா

    ReplyDelete
  37. மங்கோ புடிங் செய்முறையும் படங்களும் அழகு.ஸ்ரோபெரியும் மாம்பழத்துண்டுகளும் சேர்த்து இறுக வைதத ஜெலியும் அருமை.சூப்பர் சொஃப்ட் மாஷ்மலோவும் அருமை.
    இதெல்லாம் குழந்தைகள், பேரக்குழந்தைகள் வரும் போது செய்யலாம். இப்போது அதிராவின் போஸ்டில் மட்டும் பார்த்து ரசித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான் கோமதி அக்கா... செய்வதில் ஒன்றும் பிரச்சனை இல்லை, விரும்பிச் சாப்பிடுவோர் இருக்கோணும்..

      Delete
  38. //ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எனக்குக் காய்ச்சல்:))
    [ஆராவது அடிக்க வந்தாலும், இப்பூடிச் சொல்லிப்போட்டுப் போர்த்துக் கொண்டு படுப்பதுதான் இப்போதைய நிலைமைக்கு நல்லது:)]//

    விளையாட்டுக்கு கூட வேண்டாம் அதிரா காய்ச்சல்.
    பூனை படம் அழகு.
    ஊசி இணைப்பு நன்றாக இருக்கிறது.
    கடைசியில் சொன்னது போல் மருந்தை நோய் வந்தவர்களுக்கு எல்லோருக்கும் கிடைக்கும் படி அனுப்பி விட்டால் நல்லது பூஸானந்தா.

    ReplyDelete
    Replies
    1. //விளையாட்டுக்கு கூட வேண்டாம் அதிரா காய்ச்சல்.//
      ஓம் கோமதி அக்கா, சொல்லும்போது முசுப்பாத்தியாக இருக்கும் ஆனா, கொஞ்சம் மேல் சுடுவதுபோல இருந்தாலே முழி எல்லாம் பிதுங்கிடுது ஹா ஹா ஹா... கொரோனா நொயால் இறப்போரை விட, வந்திட்டுதே எனப் பயந்து சாவோர்தான் அதிகமாம் ஹா ஹா ஹா...

      எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காகவே நடக்கிறது கோமதி அக்கா.. அப்படித்தான் கொரோனாவும்.. ஏதோ இதன்மூலம் நமக்குச் சொல்ல வந்திருக்கிறது... மக்கள் ஒழுங்கு விதிகளை இப்போ அதிகம் கடைப்பிடிக்கின்றனர்..

      மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  39. ஆ..மாம்பழ புடிங். நீங்க மாம்பழம் படம் போட்டப்பவே நினைச்சேன். கேக் வராது. இப்படி ஏதாச்சுமா இருக்குமென நினைத்தேன். சரி தான். ஆனா நல்லா இருக்கு பார்க்க வடிவா இருக்கு. நல்ல டேஸ்ட் ஆ இருக்குமென நினைக்கிரேன். எனக்கு மாம்பழ ஸ்மெல் பிடிக்கும். வேகான் ஜெலட்டீன் கிடைக்கும் இங்க. ப்ரெஷ் மாம்பழம் என்னிடம் இருக்கே. அப்போ செய்து பார்க்கலாம். எப்ப என தெரியல.அடிக்கிற வெயிலுக்கு புடிங்,மாஸ்மலோ சாப்பிட நல்லாதானிருக்கும்.
    மாஸ்மலோ நல்ல கலரா இருக்கு. ஜெல்லி சூப்பரா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      ஹா ஹா ஹா மாம்பழம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புடிங்தானே.. கேக்கும் செய்கின்றனர், ஆனா எனக்கு கேக் செய்து பார்க்க விருப்பமில்லை. மங்கோ புடிங் நல்ல சுவை அம்முலு, கனடாவில் சாப்பிட்டு ஆசையிலதான், எப்படியாவது செய்யோணும் என நினைச்சிருந்தேன்.. நன்றி அம்முலு.

      Delete
  40. இப்பதான் எல்லா விடயங்களுக்கும் தீர்வு இணையத்தில் இருக்கே. யூடியூப் பார்த்து பயன் பெற்றவை பல. யாரையும் கேட்கவேண்டாம்.
    டெய்சிக்கும் இர்வில நித்திரை இல்லை போலும்.அவாவுக்கும் பிரைவசிதெவைபடுதுபோல. தனிய படுக்கபழகீட்டா.
    கோமதி அக்கா சொன்னமாதிரி விளையாட்டுக்கு கூட சொல்லகூடாது இப்போ இருக்கும் நிலைமையில்.
    ஊசி இணைப்பு உண்மைதான். அருமையான கருத்து.

    ReplyDelete
    Replies
    1. அதேதான், ஆனாலும் எனக்கொரு டவுட்டூஊஊஊஉ.. என் பக்கமும் சில யூ ரியூப் ஆட்கள் வந்து பார்த்துப் போவதைபோல ஒரு ஃபீலிங்சாகவே இருக்கு... நாம் அவர்களைப் பார்க்கிறோம், அவர்கள் நம்மை பார்த்துச் செய்கின்றனர்.. இதில் தப்பென்ன இருக்கு ஹா ஹா ஹா..

      டெய்சி கொஞ்சம் வித்தியாசமான வெரைட்டி.. அவவுக்கு எதுவும் முட்டுப்படக்கூடாது, தட்டுப்படக்கூடாது.. அதனால எப்பவும் நைட்டில் தன் பெட்டிலதான் படுப்பா.. நம்முடன் வந்து படுப்பா ஆனா, நம் கை கால் பட்டால் உடனே ஜம்ப் ஆகி ஓடிப்போய் தன் பெட்டில் படுப்பா.. காலையில் குல்ட்டுக்குள் வந்து நம் தலையணையில் தலை வச்சுப் படுத்தால் , பாவமே என நாம் ஆடாமல் அசையாமல் படுக்கோணும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      மடியில் வந்து இருப்பா.. என் மடியில மட்டும்... ஆனா நான் கால் விறைத்தாலும் ஆட்டிடக்கூடாது இப்படி பல பிரச்சனைகள்:))..

      உண்மை அம்முலு காலநேரம் அறிஞ்சுதான் பேச வேண்டும்.. ஆனா நான் நினைப்பது, விதியில என்ன எழுதியிருக்கோ அதுதானே நடக்கும்.. நெருப்பு என்றால் வாய் வெந்திடுமோ என..

      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
  41. நான் எலிமெண்டரி ஸ்கூலில் படிக்கும்போது (1954-1957) ஸ்கூல் வாசலில் இந்த ஜெலட்டின் ஜெல்லி கடல் பாசி என்ற பெயரிலும் மாஸ் மெலோ லபர் மிட்டாய் என்ற பெயரிலும் கண்டிருக்கிறேன் உண்டிருக்கிறேன், சொல்ல வந்தது என்னவென்றால் இவற்றை தயாரிக்க பிரிட்ஜ் தேவை யில்லை, ஐஸ் போதும்

    // உன்னைப்பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்//
    .அதுதான் உங்கள் உண்மையான பெயரை வெளிப்படுத்துவதில் தயக்கமா?

     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..

      உண்மைதான் ஃபிரிஜ் தேவையில்லை, வெளியே வைத்தால் இறுகிவிடும், ஜெலற்றீன் அதுக்காகத்தான் சேர்க்கிறோம், ஆனா ஃபிரிஜ் எனில் 2 மணி நேரம் போதும், வெளியே எனில் 5,6 மணி நேரங்கள் எடுக்கும் என நினைக்கிறேன்.

      //அதுதான் உங்கள் உண்மையான பெயரை வெளிப்படுத்துவதில் தயக்கமா?//
      ஹா ஹா ஹா நல்லாத்தான் போட்டு வாங்குறீங்க...:).. ஜேகே ஐயா போட்டிருக்கும் ஃபுரொபைல் பிக்ஸர் உண்மையில்லை எனத் தேம்ஸ் ஆச்சிரமத்தில பேசிக்கொண்டார்கள்:)).. நான் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் என விட்டு விட்டேன் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி ஜேகே ஐயா.

      Delete
  42. அதிக இனிப்பு உடம்புக்கு ஆஹாது என்று சினேஹா ஒரு பேட்டியில் சொன்னாதாக ஞாபகம்![[ இது எல்லாம் செய்து பார்க்க ஆசைதான் ஓய்வு இல்லை![[

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ..

      ஆஆஆஆ இந்த ஸ்நேகா மட்டும் என் கையில் மாட்டினா..... மாட்டினா... உடனே நேசனில் கையில ஒப்படைப்பேன் எனச் சொல்ல வந்தேன் ஹா ஹா ஹா..

      ஏன் உங்களுக்கு முழு நேர வேலை ஆரம்பித்துவிட்டதோ நேசன்... கொரோனா அங்கின போயிந்தியோ?:))

      Delete
  43. பூசாருக்கு நல்ல இடம் ![[

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அவவுக்குப் பிடிச்ச இடம்...

      Delete
  44. நித்திரைகொள்ள முதலாளி விடமாட்டார்!.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வேலையில் முதலாளி விட மாட்டார்.. வீடில் குழந்தைகள் விடமாட்டினம் என நினைக்கிறேன்ன்.. நீங்க போக்குவரத்திலதான் நித்திரை கொள்ளோணும் நேசன் ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  45. வணக்கம் அதிரா சகோதரி

    பதிவு நன்றாக உள்ளது. நீங்கள் அடிக்கடி போஸ்ட் போடாவிட்டாலும், நாங்கள் உங்களை மறக்க மாட்டோம். இதை யார் தலையில் அடித்து கூறினால் நீங்கள் நம்புவீர்கள் எனத் தேடும் போது,"எங்கே தன் தலையில் அடித்து விடுவார்களோ என அச்சம் கொண்ட பூசார் ஏன் எல்லோரும் தலைகீழாக நடக்கிறார்கள்? என கேட்டபடி தலை திருப்பி படுத்து விட்டார்." ஹா ஹா. கெட்டிக்காரப் பூனையார் அழகாகவும் இருக்கிறார்.

    இந்த தடவையும், புது விதமான டிஷ்கள் செய்து அசத்தியிருக்கிறீர்கள். மாங்கோ புடிங், மாஷ் மலோ எல்லாமே நன்றாக அழகான படங்களுடன், செய்முறைகள் அருமையாக உள்ளது. பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுகிறது. என்ன! இது போல் யாராவது பொறுமையாக செய்து கொடுத்தால் சாப்பிடலாம். மாம்பழம் பாயாசம், இல்லை, வெறும் மில்க் ஷேக் செய்து சாப்பிட்டுள்ளோம். அதுவே கொஞ்சம் கூடுதலாக சாப்பிட்டு விட்டால், வாயு பகவான் "நிறைய சாப்பிடாதே" என ஆஞ்கையிட்டு தடுத்து நிறுத்தி விட்டு தன் தொந்தரவுகளையும் கொஞ்சம் காட்டி விட்டுத்தான் அகலுவார்.

    உங்கள் டெய்சி பிள்ளை பாவம்..! உறங்காமல், பூச்சியை தேடி அலையும் போது. நீங்கள் அதை கண்டுபிடித்து அகற்றி விட்டு அதனை நிம்மதியாக உறங்கப் பண்ண கூடாதா? ஆமாம்..! பூசார் எல்லாம் இரவு முழுக்க நம்மைப் போல் உறங்குமா ? இல்லை, வீட்டிற்குள்ளேயே அங்கும் இங்கும் அலைந்தபடிதான் இருக்குமா?

    ஊசி குறிப்பு, இணைப்பு அனைத்தும் அருமையாக உள்ளது.

    மருந்து கண்டுபிடித்த பின்தான் இறைவன் வைரஸையும், சுவாதீனமாக கொஞ்ச நாள் உலகில் உலாவ விட்டிருப்பார். இது வைரஸின் இஸ்டமான வேண்டுகோளாகவும் இருக்கலாம். இதுவும் பூஸானந்தா அறிந்ததே..! அவர் கருத்துக்கள் உண்மையானதே..! ஹா ஹா. அனைத்தையும் ரசித்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      //இதை யார் தலையில் அடித்து கூறினால் நீங்கள் நம்புவீர்கள் எனத் தேடும் போது,//
      ஹா ஹா ஹா ...

      //இந்த தடவையும், புது விதமான டிஷ்கள் செய்து அசத்தியிருக்கிறீர்கள்//
      இன்னும் இருக்குதெல்லோ:))..

      ஓ மாம்பழத்தில் வாயு இருக்குதோ? ப்பிரசர் அதிகமுள்ளோர் சாப்பிட்டால் இன்னும் கூடும் என்பார்கள்.. வாயுபற்றி இப்போதான் அறிகிறேன்.

      //நீங்கள் அதை கண்டுபிடித்து அகற்றி விட்டு அதனை நிம்மதியாக உறங்கப் பண்ண கூடாதா?//
      ஹா ஹா ஹா பூச்சி வீட்டுக்குள் வந்திட்டால், அதை வெளியே கலைக்கும்வரை, நம்மாலும் நித்திரை கொள்ள முடியாது.. முக்கியமாக பிள்ளைகளின் றூமில் ஒரு குட்டி சிலந்தி தெரிஞ்சாலே அலறி அடிச்சுக் கூப்பிடுவார்கள்... அதனை அகற்றி, அல்லது சில சமயம் அது ஒளிச்சுவிடும், மிகக் குட்டியானதாக இருக்கும், ஆனாலும் ச்சும்மா ரிஷூ பேப்பரை வைத்துப் பிடிப்பதைப்போல பொத்திப் பிடிச்சு டஸ்ட் பின்னில் போட்டு.. எறிஞ்சாச்சு எனச் சொல்லி.. இப்படி நடிச்சால் மட்டுமே நித்திரை கொள்ளுவார்கள்.. கோடையில் ஜன்னல்கள் திறப்பதால இப்பிரச்சனை உண்டு...

      Delete
    2. //ஆமாம்..! பூசார் எல்லாம் இரவு முழுக்க நம்மைப் போல் உறங்குமா ?//
      இதேதான் கமலாக்கா.. நைட் படுத்தால் அப்படியே படுப்பா... சிலசமயம், நாம் படுக்க லேட்டாகி சத்தம் போட்டால், தானும் எழும்பி வந்து அவட சீரியலில் கொஞ்சம் சாப்பிடுவா, மற்றும்படி லைட் ஓஃப் பண்ணினால் நித்திரையானால் விடியத்தான் எழும்புவா.. கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப்போல.

      அதிலும், இரவில் கொஞ்சம் ஏழியாக நித்திரை ஆகிட்டா எனில், விடிய 6-7 மணிக்கு வந்து முகத்தில தட்டி அல்லது, மேலே ஏறிக் குறுக்க நடப்பா டோரை திறக்க சொல்லி.. அதனால நம்ப மாட்டீங்கள்.. நான் இரவு 10 மணிவரை, அவவி தட்டித்தட்டி எழுப்பி, ஆழ்ந்த உறக்கம் போகவிடாமல் சேட்டை பண்ணி, லேட்டாக நித்திரை ஆக விட்டால்... விடிய 8 மணிக்குத்தான் எழும்புவா ஹா ஹா ஹா...எந்தப் பிரச்சனையுமில்லை...

      ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கமலாக்கா.

      Delete
  46. //வயசான காலத்தில பேரப்பிள்ளை, பூட்டப் பிள்ளைகளுக்கு[ஓவர் ஆசையோ?:)] ஒரு ரெசிப்பி செய்வதெனில்:), இப்பூடிப் போட்டு வச்சால் ஈசி எல்லோ:))..// - இப்போ செய்யாததையா பிற்காலத்தில் செய்யப்போறீங்க?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெ தமிழன் வாங்கோ..

      //இப்போ செய்யாததையா பிற்காலத்தில் செய்யப்போறீங்க?//
      என் பெருமையைப் பேரப் பிள்ளைகளும் அறியோணுமெல்லோ:))) ஹா ஹா ஹா..

      Delete
  47. மாம்பழ புட்டிங் - பார்க்க நல்லாவே இருக்கு.

    ஜெல்லியும் நன்றாகச் செய்திருக்கிறீர்கள்.

    நான் ஜெல்லியை ஃபலூடா சாப்பிடும்போதுதான் சுவைத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஓம் ஃபலூடாவுக்குள் ஜெலியும் ஐஸ்கிரீமும் போடுவினம்... ஜெலி உடம்புக்கு நல்லது... அம்மை போன்ற வருத்தங்கள் வந்தால்.. ஜெலி கொடுக்கச் சொல்லுவினம்.. காச்சலுக்கும் நல்லது.. இங்கு ஹொஸ்பிட்டல் வோட் எனில் ஜெலி கட்டாயம் உண்டு உணவுடன்.

      ஜெலற்றீனில் இருக்கும் ஏதோ ஒன்று நம் தலைமயிரை நன்கு வளரச் செய்யுமாம்...

      Delete
  48. இவ்வளவு இனிப்புலாம் பசங்க சாப்பிடுவாங்களா இல்லை நீங்க மட்டும்தானா?

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் இதைவிடக் கேக் தான் அதிகம் விரும்புவார்கள்.. இவை இரண்டும் எனக்கு ரொம்ம்ம்ம்பப் பிடிக்கும்:).. என் மாமிக்கு[m in l] மாஸ்மலோ தான் விருப்பம்.. நாங்கள் இங்கிருந்து போகும்போதும், அவவுக்கு மாஸ்மலோ வாங்கிப் போவோம்.. தன் றூமில் எப்பவும் மாஸ்மலோ பாக் பாக்காக ஸ்ரொக் வச்சிருப்பா.. இப்போ தன் தங்கையிடம் சொல்லிச் செய்து வாங்கி நிறைய.. ஒளிச்சு வச்சுச் சாப்பிடுவா ஹா ஹா ஹா..

      Delete
  49. பூனைக்காக இடம் தயார் செய்த செய்கை வியக்க வைக்கிறது. பாராட்டுகள்.

    ஏஞ்சலின், அவங்க படுக்கையிலேயே பூனையும் தூங்கும் என்று சொன்ன பின்னூட்டத்தையும் படித்தேன். அசைந்து படுக்கும்போது பூனையை நசுக்கிவிட மாட்டோமா?

    ReplyDelete
    Replies
    1. @நெல்லைத்தமிழன் எங்க கூட கால் கிட்ட இல்லன்னா  duvet  ..மேலேதான் படுப்பாங்க அந்த ரெண்டு பேரும் போட்டிபோட்டு அவங்க அக்கா கூட கொஞ்சம் மிட்நைட் வரைக்கும் .அங்கே பூச்சி பிடிக்கிற விளையாட்டு விளையாடி அக்கா தூக்கத்தை கெடுத்துட்டு  மெதுவா எங்க ரூம் கதவை மனுஷ பிள்ளைங்க திறக்கற மாதிரியே தள்ளி திறந்து வருவாங்க :)  அவங்க வந்ததை எங்க காது நெற்றி எல்லாம் ஹிஸ்சிட்டு அனவுன்ஸ் செஞ்சிட்டுதான் காலுக்கு போவாங்க பிறகு மெதுவா  இடம் தேடுவாங்க அதில் ஜெசி குட்டி பாதத்தால் தொட்டு பார்க்கும் பிறகு படுப்பாங்க ..நாங்க இவங்க படுத்து தெரிஞ்சதும் கவனமா இருப்போம் தள்ளிடக்கூடாதுன்னு .ஊரில் எங்க வீட்டில் பகல் நேரம் fan போட்டு குப்புற அல்லது சைட் வேஸில் தூங்குவேன் திடீர்னு எதோ ஹெவியா இருக்கும் இடுப்பு அல்லது பின்முதுகு மேல் பார்த்தா சேவல் இருக்கும்  கோழி எல்லாம்  தரையில் இருப்பாங்க :) . எனக்கு பழகிடுச்சி 

      Delete
    2. ஹா ஹா ஹா பூனைகள் பலவிதம் நெல்லைத்தமிழன்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்... அதுவும் இங்கு வெரைட்டி வெரைட்டியாக கேட்டு வாங்கலாம். சில இனப் பூனைகளுக்கு எப்பவும் தூக்கித் திரியோணும், நம்மோடுதான் படுப்பார்கள்.

      ஆனா அஞ்சு வீட்டுக் குட்டீஸ் ஒரு விதம்.. எங்கட டெய்ஷி.. அவ ஒரு வித ஸ்டைல்காரி... நம்மோடு வந்து படுப்பா.. ஆனா நாம் ஆடக்கூடாது, குல்ட் மூவாகக்கூடாது இப்படி.. தூக்குவது பிடிக்காது.. தான் விரும்பினால் மட்டும் என் மடியில வந்து படுப்பா.. அதுவும் முக்கியமாக நாம் எங்காவது வெளியே போய் வந்தால் நம்மை மிஸ் பண்ணியிருப்பாதானே, அந்நேரம் ஓடி வந்து மடியிலே படுப்பா, மற்றும்படி நாமாக படுக்கச் சொன்னால் படுக்க மாட்டா.


      ஆனா அஞ்சு சொன்னதைப்போல, ஊரில் நாங்கள் வளர்த்த பூனைகள், நான் காலைப்போட்டாலும் அப்படியே நசிஞ்சு படுக்கும்... ஒருநாள் நான் கனவு, எனக்கு காலில் வாதம்போல வந்துவிட்டது, என் காலை என்னால மூவ் பண்ண முடியவில்லை என, திடுக்கிட்டு முழிக்கிறேன், என் காலுக்கு மேலே எங்கட பூஸ் பிள்ளை ஏறிப்படுத்து நல்ல நித்திரை கர்ர்ர்:)).. இப்படி ஒரு பூஸ் போலத்தான் அடுத்ததும் இருக்கும் எனச் சொல்லவே முடியாது...

      இங்கு சின்னவர்தான் விரும்பி வாங்கினார்.. அடிக்கடி ஓடி வந்து, டெய்சி ஸ்லீப் பண்ணுறாவோ எனக் கேட்டு தடவிப்போட்டுப் போவார் ஹா ஹா ஹா..

      Delete
    3. ///திடீர்னு எதோ ஹெவியா இருக்கும் இடுப்பு அல்லது பின்முதுகு மேல் பார்த்தா சேவல் இருக்கும் கோழி எல்லாம் தரையில் இருப்பாங்க :) . எனக்கு பழகிடுச்சி ///

      ஹா ஹா ஹா உண்மையாகவோ அஞ்சு... எனக்கு பூனை நாய் இப்படிச் செய்ததுண்டு ஆனா கோழி இப்படி இல்லை, நான் தான் கோழியைத் தூக்கி வச்சு, கையில சாப்பிட வச்சு, மடியில வச்சுத்தடவுவேன் நித்திரை கொள்ளும்...

      Delete
  50. //இதில்தான் நித்திரை கொள்ளுவா, கட்டிலுக்கு வந்து கரச்சல் கொடுப்பதில்லை// - அட.. நான் நினைத்த மாதிரியே எழுதியிருக்கீங்களே... அது என்ன கரைச்சல் கொடுக்கும்?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஆ :) அவங்களுக்கு நட்டநடு ராத்திரி பூச்சி எலி நினைவு வரும் அப்போ வெளில விட சொல்லி காது கால் விரல் கைவிரல் எல்லாம் கடிப்பாங்க இல்லைன்னா சரியாய் னெஞ்சுக்கு மேலேறி நடப்பாங்க என் தலைமுடியை இழுப்பாங்க குட்டி தலையால் இடிப்பாகணவர் மூக்கை கடிப்பா ,..இதெல்லாம் எங்க வீட்டில்  ஜெசி செய்வா மல்ட்டி நல்லபிள்ளை கிட்டவந்து கண்ணைமட்டும் உத்து பாக்கும் திறந்திருக்கா இல்லையான்னு .அப்புறம் தன்னை வெளில விட சொல்லும்போது நாம் கண்டுக்கலைன்னா ஷெல்ப் உச்சிக்கு ஏறி  எதையாச்சும் தள்ளும் :) 

      Delete
    2. https://www.huffingtonpost.co.uk/entry/twitter-worlds-worst-cat_n_5dc3982fe4b0055138828946?ri18n=true&guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly9jb25zZW50LnlhaG9vLmNvbS8&guce_referrer_sig=AQAAAExNig1AqWA1yovzrR1xBO1LOIMqS2FxcFBhO541f--trsw5jrIpPTn_afN8hEXr7SvNuuZgXsXpRiSVB-w8guF2QIhJS3PItZf19bGiMBHnhZTgDnhQ4B_Ao0zUDLxBc-OGz0m5J-riZUuxSilTPth5aGgLFp6L_p6Pq20kZ48R

      Delete
    3. டைமிருந்தா இந்த மேலுள்ள லிங்க் பாருங்க :) hilarious worst cats னு ஒனர்ஸ் ட்விட்டரில் போட்டிருந்த கலாட்டா காணொளிகள் 

      Delete
    4. ஹா ஹா ஹா டெய்சியின் கரச்சல் எனில் நெல்லைத்தமிழன், நாம் லைட் ஓஃப் பண்ணி நித்திரை ஆகும்வரை, நம் குல்ட்டின் மேல், தலையணைமேல் வந்து இடிச்சு இடிச்சு படுப்பா.. தட்டுப்பட்டால் எழும்பி ஓடி, மீண்டும் வந்து இடிச்சு இடிச்சு இடம் தேடுவா..

      இதேபோல விடிய 4-5 மணிக்கெல்லாம் எழும்பி ஓடி வந்து குல்ட்டைத்திறக்கச் சொல்லி முகத்தால இடிப்பா, குல்டைத் திறந்தால், உள்ளே புகுந்து அழகாக ரேன் பண்ணி, தலையை நம் தலையணையில் வச்சுப் படுப்பா.. ஆனா நாம் ஆடக்கூடாது..

      இதில பிரச்சனை என்னவெனில், எனக்கு காலையில் முழிப்பு வந்தால் பின்பு நித்திரை வராது, நானாக கண் முழிக்கோணும், இப்படி தட்டி எழுப்பினால் பின்பு என்னால நித்திரை கொள்ள முடியாது, பகலெல்லாம் தூங்கிக்கொண்டிருப்பதுபோல எரிச்சலாகும்...

      இப்பிரச்சனைகள்தான் இப்போ இல்லை என்றேன்... இப்போ ஸ்ரெயிட்டா ஏறித் தன் பெட்டில் படுக்கிறா, விடிய லேட்டாத்தான் எழும்பி வந்து டோரை திறக்கச் சொல்லிக் கேட்கிறா... ஆனா இதெல்லாம் குளிர் தொடங்கும்வரைதான் என நினைக்கிறேன், குளிருக்கு எங்கட குல்ட் அவவுக்கு தேவை ஹா ஹா ஹா..

      Delete
    5. ஹா ஹா ஹா ஆனா அஞ்சு, உங்கட வீட்டுக் குளப்படிபோல டெய்ஷியில் இல்லை, நைட்டில் படுத்தால் எந்தக் கஸ்டமும் தர மாட்டா, நல்லா டீப் ஸ்லீப் பண்ணுவா.. குட்டியில் இருந்தே அப்படித்தான்... அவட மம்மியைப்போலவேதான் குட் கேள்:)).. எங்கட பிள்ளைகளும் அப்படியே நைட்டில் கஸ்டம் தந்தது இல்லை...

      ஜெஸி.. அவட மம்மியைப்போலத்தான் போலும்.. ஹா ஹா ஹா:))

      Delete
  51. Replies
    1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.

      Delete

  52. வாவ் அருமையான குறிப்புகள் அதிரா ...

    இதில் எதையுமே நான் செய்தது இல்லை ..

    சரி இந்த மாம்பழ புட்டிங் செய்யலாம் ன்னு பார்த்தா என்க வீட்டில் மாம்பழம் வாங்கினால் அப்படியே சாப்பிடவே பத்த மாட்டேங்குது ...இதில புட்டிங்க் எங்க எடுக்க ..

    மாஷ்மலோ ரொம்ப ஈசி யா இருக்கே ...

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.