நல்வரவு_()_


Thursday 4 June 2020

பிஞ்சுத் தோட்டத்திலே ஒரு பிஞ்சின், பிஞ்சுக் கவிதை🌗

ந்தப் போஸ்ட்டில நான் வளர்த்துக் கொண்டிருப்பனவற்றைத்தான் காட்டப்போகிறேன்... மொட்டாகி மலராகி.. பூவாகி இருக்குது... தனிப்பதிவாகப் போடும்போதுதான் நன்றாக இருக்குமென நினைத்தேன்:)...ஆஆஆ சுத்தத் தமிழில் பேசுகிறேனே:))
நல்லா இருங்கோ நல்லா இருங்கோ.. 
என்றைக்கும் என் ஆசீர்வாதம் 
உங்களுக்கு உண்டு- தேம்ஸ்கரை ஆச்சிரமம் வந்தால்:))


சரி சரி வாங்கோ கார்டினுக்குள் போவோம்...

ஆஆ இவ முற்றத்துப் பிங்கி அக்கா.. இதுவும் பிங்கி:))

இதில் பாருங்கோ.. தேனிப்பிள்ளை தேன் குடிக்கும் அழகை.. இப்போதெல்லாம் தேன் பூச்சிக்குக் கிட்டப்போனதும் கீசாகாவின் நினைவு வந்து விடுது... இந்தப் பூக்களைநன்கு உற்றுப் பாருங்கோ.. ஒரு கொடியில் இரு கலர்கள்:)..

ஆஆ பேப்பிள்.. இவை நிலத்தில படருகினமே...

இவவை நீங்கள் பாதியாக, ஏற்கனவே பார்த்திட்டீங்கள்.. இது அவவின் கோ.மு போன்ற முழுத்தோற்றமாக்கும்:))


இவ எங்கள் வீட்டில் பல இடங்களில் வளருறா.. வெட்ட வெட்டப் பெரிசாக வளர்ந்து பூக்கும்...

=====================இடைவேளை===================
ஆஆஆ இப்படி ஒரு வெயிலில், மர நிழலில், ட்ரம்பொலினில் படுத்திருந்து, இளைப்பாறுகையில்:), வானம் பார்க்கும்போது.. கவிதை கவிதையாக் கொட்டுதே:))
======================================================
கார்டினில் புல்லு வெட்டுவது கொஞ்சம் தாமதமானால், இப்படி டெய்சி மலர்களும், பட்டர் கப்ஸ் பூக்களும் கார்டினை அலங்கரிக்கும்:))

இவ பெரிசாக வளர்வா.. வெட்டி வெட்டிக் குட்டியாகவும் வளர்க்கலாம்... நிறைய இடங்களில் இருக்கு எங்களிடம்.. ஆனா இப்போ இதற்கு கிட்டப் போக முடியாது.. அவ்ளோ தேன் பூச்சிகளின் ராட்சியம், அவர்களின் பாடல் ஒலியுடன் அட்டகாசமாக இருக்கு:))

உற்றுப் பார்த்தால் பல தேனி அக்காக்கள் தேன் குடிப்பதைக் காணலாம்..

ஆஆஆ எல்லாமே பிங்கி, இவ நிலத்தில் படர்ந்து பூக்கும் இனம்..

இவை மர அவரை இனம், கொடியாக வராது, மிளகாய்ச்செடிபோல நின்று காய்க்கும்.. ஆனா படம் எடுத்ததனாலதான் தெரியுது, இவற்றிலும் இரு கலர்கள் உண்டென... இவை நிறையப் போட்டிருக்கிறேன்.. பல இடங்களில்.. தேனீக்கள்:)..

 காய்கள் வரப்போகின்றன... நடுவே ஒரு கறுப்பு இன..டக்காளி:))

பெயாரில் பிஞ்சுகள் வந்துவிட்டன..

அஞ்சு, அம்முலு.. நான் புதினா வளர்க்கும் இடத்தைப் பாருங்கோ.. இவ எபூடி விரும்பினாலும் படரட்டுமே:)) பூஸோ கொக்கோ எங்கிட்டயேவா?:)) ஹா ஹா ஹா..
நீங்களே பார்த்துக் கண்டு பிடியுங்கோ.. 
என்னவெல்லாம் இங்கே வளருது என...

இவ கூஸ்பெரி அக்கா, நிறையப் பிஞ்சுகள் வந்திருக்கு, 
பழுக்கட்டும் படம் போடுவேன்..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னை ஆரும் டிசுரேப்புப் பண்ணாதீங்கோ:))

இந்த இரு உருளைச்செடிகளையும் உற்றுப் பாருங்கோ.. வித்தியாசம் தெரியுதெல்லோ.. சிவப்புக் காம்புடன் இருப்பது சிவப்புக் கிழங்கு, மற்றையது நோர்மல் கிழங்கு.. பூவிலும் வித்தியாசம் தெரியும், பூத்ததும் காட்டுறேன்...

இது எங்கள் கிச்சின் வாசல் வெளிப்பக்கம், இப்படியும் வைத்திருக்கிறேன், இதில் கத்தி அவரை, பனி அவரை, மர அவரை ஸ்ரோபெரி அனைத்துமே இருக்குது பாருங்கோ.. எதிரே, வேலிக்கு வெளியே தெரிவது பக்கத்து வீட்டுக் கார்டின்.. இதில் வலது பக்கம் திரும்பி படி இறங்கினால் தான் எங்கள் கார்டின்.. இந்தக் கிச்சின் அமைப்பு முதல் மாடி போல இருக்கும், எதிர்வீட்டு கார்டின், கிழே இருப்பதைப்போல இருக்கும்...

இது பீற்றூட் நட்டது, கடும் வெயில் என்பதால குழை போட்டு மூடியிருக்கிறேன்.. பொசுங்கிப்போயிடுமெல்லோ...
இன்னும் நிறைய இருக்குது வெங்காயமும்  உருளக்கிழங்கும் வளருது, அதை அறுவடையின்போது போடுகிறேன், இப்போ கூடி விட்டது... 
இது வெளியேயும் வச்சு, ஒராளை உள்ளே வச்சேன், உள்ளே இருப்பதுதான் பெரிசாக வளருது.. சக்கரைப்பூசணி... வெளியே இப்போ மீண்டும் குளிருது..

ஆஆஆங் பொயிண்ட்டுக்கு வந்தாச்சு.. இது நிலவு அக்காவாக்கும்.. இதை எடுத்த நேரம் என்ன தெரியுமோ? சரியாக இரவு 10.30 மணி... பாருங்கோ வெளிச்சத்தை, நிலவு உதிக்கும் திசை இப்போ தென்மேற்கு.. இந்நேரம் சூரியன் வடமேற்கில் வந்துவிட்டது.. இங்கு ஒரு மூலையாகத்தான் தெரியும்.. சரியான நடுத்திசையில் தெரிவதில்லை.. இயற்கை மட்டும்தான் தன் நேரத்தை மாற்றாமல் கடமையைச் செய்கிறது, சூரியன் இன்னும் மறையவில்லை, அதனால நான் வர மாட்டேன் வெளியே என நிலவு சொல்வதில்லையாக்கும்:))


நிலவு பார்த்ததும் .......:) ச்சோ ரயேட்டில் எழுதியது, திரும்ப எழுத அலுப்பாக இருந்தமையால அப்படியே விட்டிருக்கிறேன்.. எழுத்துக்கள் வழமையான  அழகாக இல்லை அஜீஸ் பண்ணுங்கோ..

ஊசி இணைப்பு:)

ஹா ஹா ஹா வல்லிம்மாவின் இன்றைய போஸ்ட் பார்த்ததும், இதையும் பகிரலாமே என நினைத்தேன்.. சமீபத்தில் ஒருவரை, அமெரிக்கப் பொலீஸ் ஒருவர் காலால் நசித்துக் கொன்ற சம்பவம் அறிந்திருப்பீங்கள்...
ஹையோ ட்றம்ப் அங்கிள் பாவம்:))

ஊசி க்குறிப்பு
𝍎𝍎𝍎𝍎𝍎𝍎𝍎𝍎𝍎🙏🙏🙏𝍎𝍎𝍎𝍎𝍎𝍎𝍎𝍎𝍎

106 comments :

 1. ஆகா...! வண்ண வண்ண மலர்கள் மனதை கொள்ளை அடித்து விட்டன...!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ.. மிக்க நன்றி உடன் வருகைக்கு.

   Delete
 2. இயற்கை மட்டும்தான் தன் நேரத்தை மாற்றாமல் கடமையைச் செய்கிறது,

  உண்மை
  உண்மை

  ReplyDelete
 3. பாத்துப் பாத்துக் கண்ணெல்லாம் பூத்துப்போச்சு
  கலகலப்பா இருக்குது காயெல்லாம் காச்சு
  அதிராவின் தோட்டத்தில் தேனீக்கும் சாப்பாடு ஆச்சு
  நிலவே உனக்கென்ன நீபாட்டுக்கு ஒளியைப் பாய்ச்சு..

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆ இதென்ன இது என்றுமில்லாமல் இவ்ளோ ஸ்பீட்டாக வந்திருக்கிறார் ஏ அண்ணன்.. வாங்கோ வாங்கோ..

   ஹா ஹா ஹா நீங்களும் கவிதை சொல்லிட்டீங்கள்.. கவித அழகு.. நன்றி நன்றி..

   Delete
 4. விருந்தாளிகளின் பசியை வாழை இலை போக்குதா? இதுல விருந்தாளிகள் யாரு? ஆடு மாடுகளா?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

   என்ன இது வரும்போதே சூஊஊஊஊஊஊடா வாறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. இதுக்குத்தான் மேலிருந்து கீழே படியுங்கோ எனச் சொன்னால் இதென்ன புதுப்பழக்கம் ஹா ஹா ஹா...

   அதாவது ஏணிப்படிபோல என எடுத்துக்கோங்க:)).. அடுத்தவர்கள் உண்பதற்கு, தான் உதவியாக இருந்துபோட்டு.. குப்பைத்தொட்டிக்குப் போய் விடுகிறதே அந்த பனானா இலை ஹா ஹா ஹா...

   Delete
 5. சமீபத்தில் Cell 211 என்ற ஸ்பேனிஷ் படத்தை ஆங்கில சப் டைட்டில்களோடு பார்த்தேன். அதிலும் ஒரு ஜெயிலர் ரொம்ப முரடாக கைதிகளிடமும் வெளியே தகராறு செய்கிற பப்ளிக்கிடமும் நடந்துகொள்வார். இந்த மாதிரியும் ஆட்கள் உண்டு.

  மேற்கத்தைய நாடுகளில் குற்றவாளிகளிடம் மனிதாபிமானத்தோடு பெரும்பாலும் நடந்துகொள்வார்கள், நடப்பார்கள் என்று படித்திருக்கிறேன். இவர் விதிவிலக்கு போலும்.

  ReplyDelete
  Replies
  1. இந்த லிங்க்கை ட்ரம்ப்புக்கு ஃபார்வேர்ட் செய்திருக்கிறேன்!

   Delete
  2. எப்போதும் தன் கீழ் வேலை பார்ப்பவர்களின் தவறுகளை ஜஸ்டிஃபை பண்ணக்கூடாது. ஜஸ்டிஃபை பண்ணினால்தான் நல்ல தலைவன் என்பது கிடையாது. தவறை ஜஸ்டிஃபை பண்ணினால், மத்தவங்களும் நாம எது செய்தாலும் நம் தலைவர் சப்போர்ட் பண்ணுவாங்கன்னு நினைத்துவிடுவார்கள்.

   உண்மையிலேயே, சரியாக நினைத்து அந்தத் தவறைச் செய்திருந்தாலும், அது தவறு என்று வெளிப்படையாகச் சொல்லிவிடவேண்டும், பிறகு டிபார்ட்மெண்ட் விசாரணை என்று ஊத்தி மூடிவிடவேண்டும், அல்லது போலியான ஒரு தண்டனை கொடுக்கணும். எடுத்த எடுப்பிலேயே முழுவதுமாக ஆதரிக்கக்கூடாது என்பது என் எண்ணம். (நமக்கு சம்பவத்தின் பின்னணி தெரியாது என்றாலும்)

   Delete
  3. //மேற்கத்தைய நாடுகளில் குற்றவாளிகளிடம் மனிதாபிமானத்தோடு பெரும்பாலும் நடந்துகொள்வார்கள், நடப்பார்கள் என்று படித்திருக்கிறேன். இவர் விதிவிலக்கு போலும்.//

   100 வீதம் உண்மை, ஒரு கைதியைப் பிடிக்கும்போதுகூட, மிக மரியாதையாகத்தான் இங்கு பிடிப்பார்கள், ஆனா அமெரிக்க்கா எப்பவும் கொஞ்சம் முரடான இடமாகவே இருக்கும்.. அங்கு சாதாரண மக்களே துவக்குடன் காரில் போவார்களாம்.. அதனால பொலீஸ் காரர்களும் ஒருவித பயத்துடனேயே, தம்மைப் பாதுகாப்பர்.

   ஆனா இந்தச் சம்பவம் மிக மிகக் கொடுமையானது... விதிவிலக்குத்தான்.

   Delete
  4. //ஸ்ரீராம்.Thursday, June 04, 2020 3:10:00 pm
   இந்த லிங்க்கை ட்ரம்ப்புக்கு ஃபார்வேர்ட் செய்திருக்கிறேன்!//

   இதென்ன இது புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்:))

   [im] https://www.ohmagif.com/wp-content/uploads/2011/12/cat-loves-trash-can.gif[/im]

   Delete
  5. // எடுத்த எடுப்பிலேயே முழுவதுமாக ஆதரிக்கக்கூடாது என்பது என் எண்ணம். (நமக்கு சம்பவத்தின் பின்னணி தெரியாது என்றாலும்)//

   ஒரு 46 வயசு கறுப்பு இனத்தவர் ஒருவர், இப்போ கொரோனாவால வேலையையும் இழந்திருக்கிறாராம், சோலி இல்லாத ஒருவராம், நல்லவராம்... அவர் ஒரு 20 டொலர் நோட்டைக் கொண்டு ஒரு கடைக்குப் போயிருக்கிறார் என்னமோ வாங்க.. அப்போ அக்கடையில் அந் நோட்டைச் செக் பண்ணியபோது, அது கள்ள நோட்டாம்..[நம் கைக்கு வந்தால், அதில் நம் தப்பு என்ன இருக்கு? விசாரணைதான் நடத்த வேண்டும்]

   உடனே அக்கடைக்காரர், பொலீஸ் க்குப் போன் பண்ணவும், பொலீஸ் வந்து இவரைப் பிடிச்சு இழுத்து, கையைப் பின்னால் கட்டிப்போட்டு, மற்றப் பொலீஸ், மற்றும் மக்கள் பார்க்க, அவரைக் குப்புறப்படுக்க விட்டு, ஒரு பொலீஸ், இப்படி இதேபோல[மேலே படத்தில் இருப்பது] போல அவரைத்தன் முழங்காலால் கழுத்தில் இறுக்கி அமத்துகிறார்.. அவர் கத்தினார், என்னால் மூச்சுவிட முடியவில்லை என... ஆனால் அப்பொலிஸ் விடவில்லை... கொஞ்ச நேரத்தில் அம்பியூலன்ஸ் வந்து ஹொஸ்பிட்டல் எடுத்துச் சென்றால் ஆள் முடிந்திட்டார்ர்...

   இது எதற்காக இப்படி நடந்ததெனத் தெரியவில்லை, ஏதோ வேண்டுமென்றே செய்ததைப்போலவும் இருக்காம், அந்தப் பொலீஸ் உம் இந்த பிளாக் மானும் எங்கோ ஒரு barபாரில் ஒன்றாக வேர்க் பண்ணினார்களாம்... அப்போ ஏதோ இருந்த கோபம் எனவும் ஒரு கதை.. எதை நம்புவது.. முடிஞ்சது முடிஞ்சு போச்சு.. அந்தப் பொலீஸ் இன் மனைவி, இப்படிப்பட்டவர் தனக்கு வேண்டாம் நான் டிவொஸ் எடுக்கப்போகிறேன் என்றிட்டாவாம்...

   இது நான் அறிஞ்ச நியூஸ், இதில்கூட எவ்வளவு உண்மை, பொய் எனத் தெரியவில்லை... உலகம் எங்கோ போய்க் கொண்டிருக்குது:(..

   Delete
 6. உங்க கையெழுத்து அழகாக இருக்கு. அழகான கையெழுத்து கொண்டவங்க தலையெழுத்தும் அழகாக இருக்கும் என்பார்கள்.

  கவிதைலாம் நல்லா இருக்கு. ஆனா தன்னைத் தானே, 'இன்னொரு பெண் நிலா'ன்னுலாம் தம்பட்டம் அடிச்சுக்கறது டூ டூமச் இல்லையோ? நிலா, மாதத்தில் ஒரு நாளைத் தவிர பெரும்பாலும் காணாமல் போகாது. ஆனா நீங்க சில சமயம் மாதத்துக்கு 4 இடுகைகளும் பல சமயங்களில் மாதத்துக்கு ஒரு இடுகையும் போட்டுட்டு காணாமல் போயிடுவீங்களே

  ReplyDelete
  Replies
  1. அவசர அவசரமாக எழுதி விட்டு வேறு வேலையாகச் சென்று விட்டார் போல!  அதனால் வழக்கமான கவனம் இல்லாமல் கையெழுத்து இப்படி இருக்கிறது.  ஆனாலும் பாருங்க..  என் கையெழுத்தை விட நல்லாதான் இருக்கு!

   Delete
  2. //
   நெல்லைத் தமிழன்Thursday, June 04, 2020 2:49:00 pm
   உங்க கையெழுத்து அழகாக இருக்கு.///

   ஹா ஹா ஹா நன்றி, ஏற்கனவேயும் பார்த்திருக்கிறீங்கள், ஆனால் பாருங்கோ அதை ஸ்ரீராம் மறந்திட்டார்:))).. இப்போ ஜெலஸ் ஆகிட்டார் ஹா ஹா ஹா...

   கை எழுத்துக்கும் தலை எழுத்துக்கும் சம்பந்தம் உண்டெனத்தான் நானும் அறிஞ்சிருக்கிறேன்ன்...

   //கவிதைலாம் நல்லா இருக்கு//

   ஹா ஹா ஹா.. படத்தைப் பெரிசாக்கினால் படிக்க ஈசி என நினைச்சேன், ஆனா பெரிசாக்கினால் இன்னும் குட்டியாகிடுது கர்ர்:))..

   //ஆனா தன்னைத் தானே, 'இன்னொரு பெண் நிலா'ன்னுலாம் தம்பட்டம் அடிச்சுக்கறது டூ டூமச் இல்லையோ?//

   இதுக்கு.. இதுக்குத்தானே நான் சொல்றனான்:))..” இந்தக் காலத்தில பாருங்கோ நம்மள நாமளேதான் புகழோணும்:)), அடுத்தவர்கள் வந்து புகழுவினம் என வெயிட் பண்ணுவது தப்பூஊஊஊ:)” ஹா ஹா ஹா...

   இதேபோல ஒரு பாட்டும் இருக்கே.. அதைப்போட நினைச்சு அது இன்னும் 6 மச்:) ஆகிடும் என்பதால விட்டு விட்டேன்:)) ஹா ஹா ஹா..

   “இரவில் பார்த்தேன் இரண்டு நிலவு..
   வானில் ஒன்று.. நேரில் ஒன்று”

   ஹா ஹா ஹா இதுதான் அப்பாட்டு.. என் கவிதைக்கு சூப்பராகப் பொருந்துதே ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:))

   //ஆனா நீங்க சில சமயம் மாதத்துக்கு 4 இடுகைகளும் பல சமயங்களில் மாதத்துக்கு ஒரு இடுகையும் போட்டுட்டு காணாமல் போயிடுவீங்களே//

   ஹா ஹா ஹா அதனாலதான், இப்போ எப்படியும் திங்களும் வெள்ளிக்குமிடையில் இரண்டு போடோணும் எனக் கங்கணம் கட்டிக் களமிறங்கியிருக்கிறேன்ன்.. அஞ்சுவையும் மிரட்டியிருப்பதால் அவவும் ஒழுங்காப் போடுறா:)..

   இம்முறை ஹொலிடே ட்ரிப் இல்லாததால், பெரிய இடைவெளியில் காணாமல் போகும் வாய்ப்புக் குறைவே..

   Delete
  3. //ஆனாலும் பாருங்க.. என் கையெழுத்தை விட நல்லாதான் இருக்கு!///

   ஹா ஹா ஹா கர்ர் ஸ்ரீராம்:).. உங்கள் கை எழுத்தைக்கூட காட்டியதில்லையே நீங்கள்:)..ஆனாலும் உங்கள் குரல்தான் தெரியுமே:)) ஹா ஹா ஹா.. [நன்றி துளசி அண்ணன்:))].

   Delete
  4. //என் கையெழுத்தை விட நல்லாதான் இருக்கு!// - நிறைய சிந்திப்பவர்கள், அறிவுஜீவிகள், அவர்களது மனம் வெகு வேகமாக சிந்திப்பதால், அந்த வேகத்துக்கு அவர்களால் எழுதமுடியாது. அதனால் கையெழுத்து கொஞ்சம் சுமாரா இருக்கும்.

   அதற்காக, அழகான கையெழுத்து உள்ளவர்கள், சிந்திக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம்னு எழுதிடறாங்கன்னு அர்த்தம் இல்லை. எனக்கு எதற்கு கொ..னா காலத்தில் வம்பு?

   Delete
  5. ///அந்த வேகத்துக்கு அவர்களால் எழுதமுடியாது. அதனால் கையெழுத்து கொஞ்சம் சுமாரா இருக்கும்.////

   ஆஆஆ என்னா ஒரு ஆராட்சி:).. அப்போ உங்கட கை எழுத்து எப்பூடி இருக்கும் நெ தமிழன் ஹா ஹா ஹா:)


   ///அதற்காக, அழகான கையெழுத்து உள்ளவர்கள், சிந்திக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம்னு எழுதிடறாங்கன்னு அர்த்தம் இல்லை. எனக்கு எதற்கு கொ..னா காலத்தில் வம்பு?////
   ஹா ஹா ஹா சொல்றதையும் சொல்லிப்போட்டு, வடிவேல் அங்கிளைப்போல டக்குப்பக்கென சரண்டராவதில் உங்களை மிஞ்ச ஆளில்லையாக்கும் ஹா ஹா ஹா:)

   Delete
 7. சர்க்கரைப் பூசணி வந்திருக்கா? இல்லை இலைக்காக வளர்க்கறீங்களா? வெண் பூசனி கொடி வளர்ப்பதில்லையா? எனக்கு வெண் பூசணி வளர்க்கணும், அதுல பூசனி வருவதைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை, ஆனால் வாய்ப்புதான் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. இப்போதான் நெல்லைத்தமிழன், வளரத் தொடங்கி இருக்குது, நான் என்ன பூசணிக்காய் வேண்டாம் என்றோ சொல்கிறேன்:), அது பூத்துப் பிஞ்சு பிடிப்பதற்குள் குளிர் வந்திடும்.. அதனாலதான் இலையாவது வரட்டும் என வளர்க்கிறேன்..

   //எனக்கு வெண் பூசணி வளர்க்கணும், அதுல பூசனி வருவதைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்க எப்பவும் இருப்பதைப் பார்க்காமல் பறப்பதற்கு ஆசைப்படுறீங்கள்:)) இப்போ எதுக்கு வெள்ளைப்பூசணி?, மஞ்சளைப் பாருங்கோ.. இரண்டும் கொடி ஒன்றுபோலத்தான் இருக்கும்:))...

   // ஆனால் வாய்ப்புதான் இல்லை.//
   ஏன் உங்கள் வீட்டில் பல்கனி இருக்குதுதானே, அதில் ஒரு பெரிய சாடியில் நட்டு விடுங்கோ, நிட்சயம் அங்கு எனில் காய்க்கும்... இங்கு என்ன கூத்துப் போட்டாலும் ஓகஸ்ட் 15 உடன் குளிர் ஆரம்பமாகிடும்...

   Delete
 8. பீட்ரூட்லாம் வளருமா? இல்லை கடைல வாங்கின பீட்ரூட் படங்களைப் போட்டுவிட்டு, இது எங்க கார்டன்ல வளர்ந்ததுன்னு சொல்லிடுவீங்களா?

  ReplyDelete
  Replies
  1. //இல்லை கடைல வாங்கின பீட்ரூட் படங்களைப் போட்டுவிட்டு//

   நான் என்ன கீசாக்காவோ எல்லாத்துக்கும் வாயாலயே வடை சுட:))... ஹையோ ஆண்டவா என் வாய்தேன் நேக்கு எடிரி:)) ஹா ஹா ஹா..

   நம்பமாட்டீங்கள் என்றுதானே ஆதாரத்தோடு போட்டிருக்கிறேனாக்கும்:))..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   இங்கு மலைநாட்டுப் பயிர்கள் மட்டும் நன்கு வளரும் நெ தமிழன்.. கரட், பீற்றூட், கபேஜ் வகை, உருளை, வெங்காயம்.. இவைகள்.

   ஆனால் இந்த பீற்றூட் ஓவர் இனிப்பு என்பதால[இலைகளும்] பூச்சிகள் புழுக்கள் தொல்லை அதிகம், அதனால கவனமாகப் பேண வேண்டும்... வளரட்டும்.. முடிவில் அறுவடைப் படங்களும் போடுவேன்:)) நல்லபடி வரட்டும்...

   Delete
  2. //நான் என்ன கீசாக்காவோ எல்லாத்துக்கும் வாயாலயே வடை சுட:))... ஹையோ ஆண்டவா என் வாய்தேன் நேக்கு எடிரி:)) ஹா ஹா ஹா../// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
  3. ஹா ஹா ஹா ஹையோ கீசாக்கா கலைக்கிறா:))

   Delete
 9. பூக்கள் படங்கள் ரொம்ப அழகா இருக்கு. உங்க தோட்டமும் நன்றாக இருக்கு.

  அங்கல்லாம் நீங்க கண்டிப்பா கார்டனை பராமரிக்கணுமா (புல்லெல்லாம் வெட்டி). காடாக விட்டா பிரச்சனையா?

  பாம்புகள் வருமோ? இதே சந்தேகம் முன்பே கேட்டிருக்கேனோ?

  ReplyDelete
  Replies
  1. //அங்கல்லாம் நீங்க கண்டிப்பா கார்டனை பராமரிக்கணுமா (புல்லெல்லாம் வெட்டி). காடாக விட்டா பிரச்சனையா?//

   அப்படி ஏதும் சட்டம் ஏதுமில்லை, நம் தோட்டம் நம் விருப்பம், ஆனால் ஒரு ஒபிஸில பக்கத்து மேசையில் இருப்பவர், குப்பையாக வச்சிருந்தால் நாம் என்ன நினைப்போம்? குப்பைக்கூட்டம் என நினைப்போமெல்லோ?:)) ஹா ஹா ஹா அப்படித்தான் இதுவும்...

   இதில் இன்னொன்று, இந்த ஏரியாவிலேயே முன்ன முன்னம் வேலி போட்டு அழக்காக கார்டினை உருவாக்கியது நாங்கள்தான், பின்னர்தான் எல்லோரும் வேலி போட்டார்கள்.. இங்கு வேலி போடுவதை பெரிசாக விரும்புவதில்லை... ஆனா இப்போ கட்டப்படும் புது வீடுகளுக்கெல்லாம் ஒழுங்காக வேலி போட்டுக் குடுக்கின்றனர்.

   //பாம்புகள் வருமோ? இதே சந்தேகம் முன்பே கேட்டிருக்கேனோ?//

   ஹா ஹா ஹா கேட்டு நானும் தெளிவாகப் பதில் சொல்லிட்டேன்:)).. பாம்புகள் விசப்பூச்சிகள்.. தேள் போன்றவை இங்கு இதுவரையில் இல்லை..

   ஆனால் புல்லு ஓவராக வளர்ந்தால், குட்டி எலிகள் ஒன்றிரண்டு வந்துவிடும்.. டெய்சிப்பிள்ளைக்குக் கொண்டாட்டமாகிடும் ஹா ஹா ஹா..

   Delete
 10. உங்க கார்டன்ல, ஆப்பிள் மரம் நல்லா வளர்ந்து ஆப்பிள் பழங்கள் குலை குலையா தொங்கணும். அப்படி நல்லா வளரும்போது படங்கள் போடுங்க.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா உங்களுக்கு அப்பிளில்தான் ஒரு கண் போலும்.. அடுத்து வெள்ளைப்பூசணி:))..ஆனால் பாருங்கோ எங்களிடம், சிவப்புப் பூசணியும் பெயாரும்தான் வளருது ஹா ஹா ஹா..

   நன்றி நன்றி, வளரும் அடுத்த வருடமாவது... வரட்டும் படம் போடுவேன்.. வெதர் நன்றாக தொடர்ந்து ஒரு மாதமாவது இருந்தால், இவை நன்றாக வளர்ந்திடும்..

   ஆனால் இங்கு ஒவ்வொரு கிழமையும் மாறுது.. இன்று சரியான குளிர்.. ஹீட்டர் போடும் நிலைமை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அப்போ பயிர்கள் எப்படி வளரும்.

   Delete
 11. நீங்க பிஞ்சு கமக்காரனா? கமக்காரி (விவசாயியின் பெண்பால்) என்றல்லவா போட்டிருக்கணும்?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஒரு டமில்ப் புரொபிஸரையே தடுமாற வச்சிட்டனே:)).. நான் சொல்லியிருப்பது பொதுமை:)) ஹா ஹா ஹா அழகான, அன்பான, இப்படி... கமக்கார...:))

   மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்...

   Delete
 12. ஆனந்தக்கும்மி...    தோல்வி பெற்ற படம்.  ஆனால் இசை ராஜாங்கம்.  மதுரை திருமங்கலத்தில் இந்தப் படத்திப் பார்த்து நொந்தாலும், இதன் பாடல்களை கேட்டுக்கொண்டே இருப்பேன். 

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஓ படம் பற்றி எல்லாம் சொல்றீங்கள்.. நான் பார்க்கவில்லை என நினைக்கிறேன்.. நிலவுபற்றி பலப்பல பாடல்கள்.. எதைத்தெரிவு செய்வதெனத் தெரியாமல், வீடியோ இல்லாப் பாட்டாக இது இருந்தமையால இதைப் போட்டேன்ன்..
   அப்போ உங்களுக்குப் பிடிச்ச பாட்டுத்தான் போலும்.. நன்றி.

   மிகுதிப் பதில்கள் நாளைக்குத்தருவேன்.. அதுவரை எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்...

   Delete
 13. தோட்டத்தை படமெடுத்து அதகளப்படுத்தி விட்டீர்கள்.  இப்படிப் பராமரிக்க நிறைய பொறுமை வேண்டும் -என்னைப்பொறுத்த வரை!  கிச்சன் வாசல் செடிகளை முன்னரே காட்டி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. இங்கு நல்ல வெயில் எறிச்சால்ல்.. மிக மிக உசாராக இருக்கும்.. வீட்டுக்குள் ஆரும் இருப்பதில்லை, குளிர் எனில்தான் போர்த்துக்கொண்டு படுக்கத் தோணும்.

   பொறுமையும், பயிர்ச்செய்கையில் விருப்பமும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ஸ்ரீராம். டெய்லி போய் அவற்றைத்தடவி, பூச்சி ஏதும் வந்திருக்கோ எனப் பார்த்து, சுற்றி வருவதில் ஒரு ஆனந்தம்.

   ஆனா ஒரு கவலி, கனடாவில் எனில், எல்லார் வீட்டிலும் நம் ஊர் வெண்டி, கத்தரி, புடோல், பாவல், மிளகாய்.. விதம் விதமான கீரை வளருது கர்ர்ர்ர்ர்:)).. எங்களுக்கு அவை எல்லாம் வராது..

   நான் அவர்களிடம்.. உருளைக்கிழங்கு வளர்க்கிறேன் என்றால்.. எதுக்கு உருளை வளர்க்கிறாய் எனச் சிரிக்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   //கிச்சன் வாசல் செடிகளை முன்னரே காட்டி இருக்கிறீர்கள்.//
   ஆஆஆஆஆஆஆ ஸ்ரீராமுக்கு என்னா ஒரு ஞாபக சக்தியாக்கும்.. ஹா ஹா ஹா ஒவ்வொரு வருடமும் படங்கள் போடுகிறேன்தானே ஸ்ரீராம்.. ஆனா இப்போஸ்ட்டில் இருப்பவை அனைத்தும் கடந்த ஒரு கிழமையில் எடுத்தவை.

   Delete
 14. பெரும்பாலும் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் விளைந்தவற்றையே சமைக்க முடியும் என்று நம்புகிறேன்.  வெளியில் வாங்கவேண்டியதெவை கம்மியாகவே இருக்கும் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. வருடம் முழுவதும் இபடி வெதர் எனில், வெளியில் வாங்கவே தேவை இல்லை ஸ்ரீராம், ஆனா இது எல்லாம் ஓகஸ்ட் வரைதானே.. அதன் பின்பு பூவோடு பிஞ்சோடு கருகிவிடும் குளிரில்.

   ஆனா, ஒரு மாதத்துக்கு தாராளமாக உருளைக்கிழங்கு வெங்காயம் கபேஜ் இலைகள் சமைக்க கிடைக்கும்.

   நான் பக்கத்து வீட்டுக்காரர் முன் வீட்டுக்கெல்லாம் கொடுத்திருக்கிறேன்.

   இப்போ கடந்த 2 வருடமாக கோடையில் தொடர்ந்து ஹொலிடே போகும் நிலைமை வந்ததால, அந்நேரம் பெரிசாக செய்ய முடியவில்லை.

   Delete
 15. கொரோனாவுக்கு பயந்து வாட்ஸாப் குரூப்பை விட்டு வெளியே போயிட்டாராமா?!!   வடிவேலு இன்னமும் உயிர்ப்புடனே இருக்கிறார், மீம்ஸுக்கு உதவுகிறார்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா உண்மைதான், அதிலிருக்கும் எழுத்தின் நகைச்சுவைகளைவிட, வடிவேல் அங்கிளின் ரியாக்ஸன் பார்த்தேதான் அதிகம் சிரிப்பு வருகிறது..

   இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில், ஸ்கைப் மூலம் போலும்.. அவரிடம் கேட்டபோது, தனக்கு பெருமையாக மகிழ்ச்சியாக இருகுது என்றார்... அவர் பேட்டிகளின்போதும் கொமெடியாகப் பேசப் பார்க்கிறார், ஆனால் அதிலெல்லாம் வராத சிரிப்பு, சினிமாவில் அவரைப் பார்க்கும்போதுதான் வருது..

   நன்றி ஸ்ரீராம்...

   Delete
 16. //ஆஆ பேப்பிள்.. இவை நிலத்தில படருகினமே...//

  பிஞ்சு அது ப்ளூ பெல்ஸ் தானே அது தானா காடுமாதிரி வளரும் .எனக்கு மஞ்சள் பட்டர்கப் தான் மிகவும் பிடிச்சிருக்கு .எல்லா மலர்களும் அழகுதான் ஆனாலும் மஞ்சளில் தனி ஆசை எனக்கு :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. இப்பவெல்லாம் நீங்க அடிக்கடி காணாமல் போயிடுறீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   அது நீல பெல் இல்லை அஞ்சு:).. இவை கொடியாக நிலத்தில் படரும், பூ மட்டுமே இப்படி மேல் நோக்கி நிற்குது... பழைய மதில்களில் சில இடங்களில் படர்ந்து பூத்திருக்குது, பார்க்க அழகு.

   //ஆனாலும் மஞ்சளில் தனி ஆசை எனக்கு :)//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
   எங்களிடமும் ஒரு மஞ்சள்ப்பூமரம் இருக்குதே.. அதன் சிசன் இனித்தான் வரும், இப்போதான் மொட்டு வருது, பூக்கட்டும் போடுகிறேன்..

   அது பெரிசாக நின்றது, வேலி போடுவோர் வெட்டி விட்டனர் ஒட்ட கர்ர்:)).. அதனால மீண்டும் முளைச்சு வருகுது, தண்டு முத்தினால்தான் நிறையப் பூக்கள் பூக்கும்.

   Delete
 17. ஹலோ கவிதைல்லாம் நல்ல இருக்கு ஆனா பேன் நிலா பென் நிலாலாம் கொஞ்சம் ஓவர் :)

  ReplyDelete
  Replies
  1. https://media1.giphy.com/media/1OKL53hwjivFS/giphy.gif?cid=ecf05e47265d09a1bceda40e9f75013dc66a30beee07ea66&rid=giphy.gif

   Delete
 18. தேனீக்கள் இங்கேயும் கூட்டமாய் வருது :) விஸ்ஸ்ஸ்ஸ் ஒலியுடன் மீண்டும் ஆட்டிக்கில் கூடு காட்டுவார்களோன்னு பயமா இருக்கு :)

  ReplyDelete
  Replies
  1. அதேதான் அஞ்சு, நிறைய வந்து தேன் எடுக்கின்றன, ஆனால் இங்கு அடிக்கடி மழை வரும், அப்போ ஓடிடுவினம்.

   Delete
 19. ஆ...   டக்குபக்கென்று என் கடிதங்களை பிரசுரித்து விட்டீர்களே...!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அவை கடிதங்களோ ஸ்ரீராம்.. மொத்த வரிகளைக் கூட்டினாலும் ஒரு பக்கம் வராது:)).. நான் எல்லாம் கடிதம் எழுதினால்:) குறைஞ்சது ரெண்டுபக்கமாவது நிரம்பும். ஹா ஹா ஹா மிக்க நன்றி....

   அது நெல்லைத்தமிழன் ஏசிப்போட்டார், உடனுக்குடன் பப்ளிஸ் பண்ணோனும் இல்லை எனில் திறந்து விடோணும் என:))

   Delete
  2. இரண்டு வரி எழுதினாலும், இருநூறு வரிகள் எழுதினாலும் கடிதம் கடிதம்தானே!

   Delete
  3. கரீட்டு ஸ்ரீராம் கரீட்டூ.. இப்போ நீங்கள் எழுதியிருப்பது கடிதம் அல்ல... கவிதை... ஹா ஹா ஹா..

   Delete
 20. வெட்டவெட்ட வளரும் பூ மரம் fuchsia தானே ..பாலே ஆடும் பெண் போன்ற தோற்றம் .

  ReplyDelete
  Replies
  1. அதேதான் அஞ்சு, அதில் இந்த வகைப் பூக்கள் மட்டும் நன்கு வளரும் இங்கு காடுமேடெல்லாம்.. ஒரு தடி ஊன்றினால் போதும். ஆனா இதில விதம் விதமாக இருக்குதெல்லோ.. அவை வளர்த்தெடுப்பது கொஞ்சம் கஸ்டம்... அவை ஹைபினேட் பண்ணியவை போலும்... என் சாடியில் ஒரு பிங் இருகுதெல்லோ.. போன வருடமும் படம் போட்டதால் இம்முறை இன்னும் போடவில்லை, அத்தோடு இப்போ மொட்டுக்கள்தான், ஜூன் முடியும்போதுதான் பூப்பினம் அழகாக.

   Delete
 21. நீங்கள் வளர்ப்பவை உருளை கடுகு பீட்ரூட் அவரை வெங்காயம் சரியா :))

  ReplyDelete
  Replies
  1. கடுகு இல்லை அஞ்சு, விதைக்கவில்லை, கீரை போட்டேன் வளர்வதாக தெரியவில்லை, அத்தோடு ட்றடிஷ் கன்றுகளும் இருக்குது.. அவரையிலும் இரு வகை .. கொடி ஒன்று, செடி ஒன்று...

   Delete
 22. ஆத்தீ .நான்லாம் அடுப்பில் தாளிக்கும்  நேரம்  ஓடிப்போய் பறிச்சியிட்டு ஓடிவருவேன் மின்ட் லீவ்ஸை .:) நீங்க வச்ச மூலைக்கு போயிட்டு வரதுக்குள்ள சமையல் தீஞ்சுடுமே .கிச்சன் கிட்ட ஒரு தொட்டியில் வைங்க ஈஸியா இருக்கும் .ஸ்ஸ்ஸ் நான் கொண்டைக்கடலை விவசாயத்தில் இறங்கிட்டேன் :)))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. ///கிச்சன் கிட்ட ஒரு தொட்டியில் வைங்க ஈஸியா இருக்கும்//

   ஹா ஹா ஹா இருக்கே, அதுவும் அழகா அடர்த்தியா வருது... படமெடுத்தேன் அதையும் ஆனா இம்முறை படங்கள்..ஓவராகிட்டுது என விட்டுவிட்டேன்..

   //நான் கொண்டைக்கடலை விவசாயத்தில் இறங்கிட்டேன் :))///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது பூப்பதற்குள் குளிர் வந்துவிடும்:))

   Delete
 23. ///ஹையோ ட்றம்ப் அங்கிள் பாவம்:))//

  இருங்க ஊரே கூடி மொத்த போகுது உங்களை  .

  ReplyDelete
  Replies
  1. நீங்களா இப்பூடிச் சொல்றீங்க அஞ்சு?:)).. ட்றம்ப் அங்கிளை ஒருவர் நசிக்கிறார் அப்போ நாம் காப்பாற்ற வேண்டாமோ கர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

   மிக்க நன்றிகள் அஞ்சு.

   Delete
 24. நான் ஆஜர். இது இப்ப சும்மா...அப்புறம் நாளை மதியம் வருகிறேன். தூக்கம் தூக்கம்..

  இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்...

  பூ எல்லாம் செமையா இருக்கு உங்க கார்டன் அழகு. ஸோ கிட்டத்தட்ட எல்லா காயும் வீட்டிலேயே கிடைச்சுடும்...

  அந்த பொக்கே போல அழகான பிங்கி ஃப்ளவர் ஹையோ அழகு...

  இப்ப போகிறேன். நாளை வாரேன்..

  போறதுக்கு முன்ன பெயார் எப்பவுமே நான் பேயார்னு டக்குனு வாசிக்கறதால "பேயாரின் பிஞ்சு" நு வாசித்து ஹையோ ஹையோ சிரிச்சேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா வாங்கோ..

   ஆஆஆ இம்முறை எஞ்சின் சீட்டில ஏறாமல் விட்டிட்டீங்களே... லேடீஸ் ஆரும் வராமையால சீட் வெறுமையாக இருகுது, நான் டெய்சிப்பிள்ளையை ஏத்தி வச்ச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா.

   //இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்...//
   ஆஆஆ நன்றி நன்றி.

   //ஸோ கிட்டத்தட்ட எல்லா காயும் வீட்டிலேயே கிடைச்சுடும்...//
   ஹா ஹா ஹா கொஞ்சம் கிடைச்சாலும், இதில் கிடைக்கும் இன்பமே தனி கீதா.

   //அந்த பொக்கே போல அழகான பிங்கி ஃப்ளவர் ஹையோ அழகு//
   அதேதான் கீதா, இப்படி முன் வீட்டில் சிவப்பிலும் பக்கத்து வீட்டில் பிங்கிலும் வளர்க்கிறார்கள்.. அழகோ அழகு.

   //"பேயாரின் பிஞ்சு" நு வாசித்து ஹையோ ஹையோ///

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நன்றி கீதா, முடிஞ்சால் மீண்டும் வாங்கோ..

   Delete
  2. வந்துவிட்டேன் மீண்டும் அதிரா.....அது எப்பூடி ஃபுல்லும் சொல்லாம போய்டுவோமா லேட்டா வந்தாலும் ஜொல்லிட்டுத்தான் போவோமாக்கும்...

   கீதா

   Delete
  3. அந்த பிங்கி பூ வித விதமான கலரில் இருக்குதோ...இங்கு அந்தி மந்தாரைன்னு சொல்லுவோமே அது கலர் கலரா அழகா இருக்கும் எல்லாம் பூத்ததுனா அத்தனை அழகா இருக்கும். இங்கு சில வீடுகளில் இருக்கு...

   கீதா

   Delete
  4. //ஃபுல்லும் சொல்லாம போய்டுவோமா //

   ஹா ஹா ஹா ஓ இது அந்த ஃபுல்லோ கீதா?:) நான் கார்டின் போஸ்ட் என்பதால கீழே முளைக்கிற புல்லைச் சொல்றீங்க என குழம்பிட்டேன் ஹா ஹா ஹா..

   பூக்களில் எத்தனை கோடி வகை இருக்குது கீதா.. எல்லாமே அழகுதான்...

   Delete
 25. அழகான படங்கள், அதற்கான அறிமுகமும் அழகு!
  தாங்கள் இயற்கை அழகை விரும்பும் ஒருவராக
  தங்கள் பதிவு எமக்கு உரைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ யாழ் அண்ணன் வாங்கோ..

   //தாங்கள் இயற்கை அழகை விரும்பும் ஒருவராக//

   ஹா ஹா ஹா நன்றி நன்றி... அழகெனில் எல்லாமே பிடிக்கும்தான்...

   Delete
 26. ஒரு பூவை தேனீபிள்ளை தேன் குடிக்கிறா. இன்னொன்றை தேனீ அக்கா மொய்கிறா. உற்று பார்க்காமலே தேனீ அக்கா தெரியுறா. முதல் பிங்க் பூ அழகா இருக்கு.
  fuchsia மரமா வளருதோஓஓஓ.. அதுவும் வெட்ட வெட்ட வளருதோஓஓ.. இங்கு இப்படி வளராதாம். ஆனா நான் சாடியில் வைத்திருக்கிறேன். அதை விண்டரில் பராமரித்தால் அப்படியே இருக்கும். பின் வளரும். நான் அப்படிதான் செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ.. இம்முறை நான் தான் லேட்ட்டூஊஊ:)..

   ஆஆஆஆஆ வந்த வேகத்தில தேனி அக்காவைக் கண்டிட்டீங்கள்.. ஃபியூஸியாவில் பல வகை உண்டெல்ல்லோ.. இது மரமாக வளரும் வகை, வெட்ட வெட்டப் பெரிசாகும்... நல்லா நிறையப் பூக்கும்...

   என்னிடமும் கொஞ்சம் பெரிய குண்டான பிங்கிப் ஃபியூசியா சாடியில் நிக்கிறாவெல்லோ. போன வருடம் படம் போட்டேனே..

   விண்டரில் இலைகூடக் கொண்டாது இவற்றுக்கு இங்கு, அப்படியே தாக்குப் பிடிக்கினம் அம்முலு.. இவை குளிர்நாட்டு மரங்கள்.

   Delete
 27. எங்களுக்கு 1 கிழமையா தெளிந்த நீலவானம். அவ்வளவு வெயில். இன்று மழை.
  புல்லு வெட்டாமல் விட்டால் களை மாதிரி மஞ்சள் பூவோடு வளரும். வெள்லை பூ எங்கள் கார்டனிலும் இருக்கு. வெயிலால் நாங்கள் புல் வெட்டவில்லை. அப்போது புல் வெட்டக்கூடாதாம். பின் புல் காய்ஞ்சுபோகும் என்பதால் வெட்டவில்லை. இனி அடுத்த கிழமைதான்.
  எங்கலுக்கும் குட்டியா வந்துவிட்டது பெயார். ஆனா அப்பிளை காணவில்லை.கர்ர்ர்ர்ர். வைத்திருக்கும் செடி,கொடிகள் எல்லாம் சூப்பரா வளரட்டும். காய்க்கட்டும். மறக்காமல் அவைகளையும் படம் எடுங்கோ. கொரோனாவால் வீட்டில நிற்கிறபடியால் டைம் இருக்கு போல. இம்முறை நிறைய இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. //இன்று மழை//
   எங்களுக்கும் நேற்றையோடு நிலைமை மாறிவிட்டது, பெரிய மழை இல்லை, வெயிலும் வருது ஆனால் காத்து... குளிரோ குளிர்.. ஹீட்டர் போட்டிருக்கிறோம்.. இந்தக் குளிரில் செடிகள் என்னாகுமோ எனக் கவலையாக இருக்குது.. வெயிலைக் கண்டால், பீன்ஸ் எல்லாம் ஒரு முழ நீளம் டக்கென நீளுது, ஆனா குளிர் வந்தால் அப்படியே பிரேக் போட்டுவிடுது கர்ர்:))

   ஓ இம்முறை உங்களுக்கும் அப்பிள் வரவில்லையோ.. ஆனா இங்கு பக்கத்து வீட்டில் பூத்துக் குலுங்குது, படமெடுக்க முடியாமல் இருக்குது அதை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 28. இங்குதான் நிலாவௌம்,சூரியனும் ஒன்றா பார்க்கமுடியும். அழகா இருக்கு.
  கவிதை,கவிதை ம்..நல்லா இருக்கு. எனக்கு நிலவே நீ சாட்சி பாட்டுதான் ஞாபகம் வந்தது.எனக்கு என்னவோ படம் கலங்கலா இருக்கு.
  ட்ரம்ப் அங்கிள் மீம்ஸ் உலாவருது. ஊசி இணைப்பு,ஊசிகுறிப்பு நன்றாக இருக்கு வழமைபோல..

  ReplyDelete
  Replies
  1. அதேதான் அம்முலு.. ஒருபக்கம் சூரியனும் ஒரு பக்கம் நிலவும் தெரியும் அழகோ அழகுதான்..

   மிக்க நன்றிகள் அம்முலு.

   Delete
 29. அன்பு அதிராவின் தோட்டம் அத்தனையும் செழுமை. வண்ண வண்ணப் பூக்கள் உலா வரும் இடம். அடேங்கப்பா எத்தனை வெரைட்டி.
  மனம் நிறை வாழ்த்துகள் அதிராமா.
  உங்கள் வெள்ளை மனம் போலவே செடிகளும் கொடிகளும் பலன்தரும்.

  நெல்லைத்தமிழன் வீடியோ பார்க்கவில்லை என்றார்.'நீங்கள் இங்கே நடந்த சம்பவத்தைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி விட்டீர்கள். நன்றி.
  வாத்து அவர்களின் மீம் நன்றாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வல்லிம்மா வாங்கோ..
   ஹா ஹா ஹா நன்றி நன்றி.. வருடம் முழுக்க இப்படி வெதர் எனில், நான் தோட்டத்தை விவசாய நிலமாகவும் பூங்காவாகவும் மாத்திவிடுவேன்:)...

   //நீங்கள் இங்கே நடந்த சம்பவத்தைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி விட்டீர்கள்.// அதேதான் வல்லிம்மா, எனக்குத் தெரிஞ்ச விபரத்தைச் சொன்னேன்.. நன்றி. நன்றி வல்லிம்மா.

   Delete
 30. படங்கள் அனைத்தும் அழகு.

  அதென்ன மலராகி.. பூவாகி ?

  தேனியில் அக்காக்கள் இரூக்கிறார்களா ? ஓ..... ஓ.பன்னீர்செல்வம் ஊருதானே ?

  நகைச்சுவை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

   //அதென்ன மலராகி.. பூவாகி ?//
   ஹா ஹா ஹா ஆரும் கவனிக்க மாட்டினம் என நினைச்சேன்.. கண்டுபிடிச்சிட்டீங்கள்:)..

   //தேனியில் அக்காக்கள் இரூக்கிறார்களா ? ஓ..... ஓ.பன்னீர்செல்வம் ஊருதானே ?//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்கள் என்னைச் “சின்னம்மா”விடம் மாட்டிவிடப் பார்க்கிறீங்கபோல:).. இது வேற தேனியாக்கும் ஹா ஹா ஹா நன்றி கில்லர்ஜி.

   Delete
 31. இனிமையான பாடலுடன் நல்லதொரு துவக்கம்.

  அழகான தோட்டம் - எத்தனை எத்தனை வண்ணங்களில் பூக்கள். ரொம்பவே அழகா இருக்கு. பாராட்டுகள்.

  கடைசி ஊசிக்குறிப்பு - மிகவும் சரி!

  தொடரட்டும் பதிவுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

   ரசித்திருக்கிறீங்கள்.. மிக்க நன்றி வெங்கட்.

   Delete
 32. நல்ல அழகான பெரிய தோட்டம். தோட்டம் இருந்தாலே அங்கே ஒரு ஊஞ்சல் போட்டுக் கொண்டு உட்கார்ந்து காற்று வாங்கலாம். வண்ணவண்ணப் பூக்களைப் பார்த்து ரசிக்கலாம். தேனீக்கள் மிக அதிகமாக இருக்கின்றன உங்க தோட்டத்தில். ரொம்பவே கவனமா இருக்கணும். பெரியனவாக வேறே தெரிகின்றன.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

   உண்மைதான் கீசாக்கா முன்பு பெரிய மரம் இருந்தது அதில் ஊஞ்சல் கட்டியிருந்தோம்.. அது இப்போ பட்டுவிட்டது.. ஒரு கதிரைபோல ஊஞ்சல் வாங்க நினைச்சால்.. இப்போ கொரோனாவால கஸ்டமாக இருக்குது... முன்பு வாங்கி இருக்கலாம், ஆனா கோடையில் எங்காவது போய் விடுவதால் வாங்கும் எண்ணம் இருக்கவில்லை. இம்முறை வீட்டிலேயே இருப்பதால், வாங்கினால் நல்லதெனத் தோணுது.

   தெனீக்கள் தன் பாட்டில் இருக்கும் கீசாக்கா.. இதுவரை நம்மோடு சேட்டை செய்ததில்லை... மரத்துக்குக் கிட்டப் போய்ப் புல்லு வெட்டுவோம்.. அவர்கள் தன் பாட்டில் தேன் குடிப்பார்கள்.. ஆனாலும் குத்தும்தானாம்... இங்குள்ளோர் சொல்லியிருக்கினம்.

   Delete
 33. ஊசிக்குறிப்பு மிகவும் அருமை. உங்க எழுத்தா அது? என் தலையெழுத்துப் போல் இருக்கே! :)))))) அது என்ன பிஞ்சு "கமக்கார" அதிரா? தோட்டத்தை அங்கெல்லாம் பராமரிக்க வேண்டாமா? இதுவே அம்பேரிக்கா எனில் நோட்டிஸ் கொடுத்துடுவாங்க. எங்க பையருக்கு அப்ப்படி 2 முறை நோட்டீஸ் வந்தது. இரு முறையும் மரங்களை நட்டு வளர்க்க முயன்றும் அவை சரியாக வரலை! காய்கறித்தோட்டம் போட்டுப் பராமரிக்க அவங்களால் முடியலை. புல் வெட்ட ஒரு வாரம் கடந்தாலும் உடனே நோட்டீஸ் அனுப்பிடுவாங்க! அநேகமாகப் பத்து நாட்களுக்கு ஒரு தரம் புல் வெட்டிச் சுத்தம் செய்திடுவாங்க.

  ReplyDelete
  Replies
  1. //உங்க எழுத்தா அது? என் தலையெழுத்துப் போல் இருக்கே! :)))))) //

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதை எப்பூடி நான் எடுத்துக் கொள்வது? ஹா ஹா ஹா...

   கமம் செய்யும் அதிரா = கமக்கார அதிரா:).

   //இதுவே அம்பேரிக்கா எனில் நோட்டிஸ் கொடுத்துடுவாங்க. எங்க பையருக்கு அப்ப்படி 2 முறை நோட்டீஸ் வந்தது//
   ஆஆ இங்கு அப்படிச் சட்டம் ஏதும் இருப்பதாக நான் அறியவில்லை கீசாக்கா ஸ்கொட்லாண்டில் மட்டுமல்ல, பிரித்தானியா முழுவதிலும் இப்படி ஏதும் சட்டம் இருப்பதாக அறியவில்லை.

   இங்கு நாம் தோட்டட்த்ஹைப் பராமரிக்காமல் விட்டு, அதனால அயலவர்களுக்கு ஏதும் பிரச்சனை எனில்தான் முறையிடுவார்கள், மற்றும்படி கட்டாயம் ஏதுமில்லை.

   என் சின்ன வயசு நண்பி லண்டனில் இருக்கிறாதானே, அவவின் வீட்டுக்குப் போய்த் தங்கி வருவோம்... அவங்கட பக்கத்து வீட்டுக்காரர் ஏதோ ஒரு நாட்டவர்கள்.. றூமேனியா அந்தப் பக்கம், அவர்கள் படு குப்பைகளாம்.. கார்டினைக் கவனிப்பதே இல்லை.. நண்பி சொன்னா, வேலி யால எட்டிப்பாருங்கோ என, பார்த்தேன், புல்லு பூண்டுடன், சாப்பிடும் சிப்ஸ் பாக் பக்கட்டுக்கள் பேப்பர் போத்தல் இப்படி குப்பையோ குப்பை... ஆரும் எதுவும் சொல்வதில்லை..

   இங்கும் மாதம் இருமுறை புல்லு வெட்ட்டுவோம் எல்லோரும், ஆனால் தொடர் மழை பெய்யும் அப்போ அப்படியே விட்டு விடுவார்கள் மாதக் கணக்கானாலும் ஒன்றும் பண்ண முடியாதே..

   Delete
 34. நிலாவையும் சூரியனையும் ஒன்றாக எடுத்த படம் முன்னர் போட்டிருக்கீங்களோ? பார்த்த நினைவு. எனக்கும் அப்படிப் பார்க்க ஆசையா இருக்கு. எங்கே! அங்கே வந்தால் தானே பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. //நிலாவையும் சூரியனையும் ஒன்றாக எடுத்த படம் முன்னர் போட்டிருக்கீங்களோ?//

   இல்லை கீசாக்கா அப்படி பார்க்கத்தான் முடியும்... படமெடுப்பது கஸ்டம்.. இருவரும் எதிரெதிரே இருப்பார்கள்.. முடிஞ்சால் வீடியோ எடுக்கிறேன். ஆனா நாளையுடன் நிலவு மறையத்தொடங்கும்.. இங்கோ மழை ஆரம்பித்து விட்டதே..

   இரவு 10 மணிக்கு சூரியன் தெரிவது, ஊரெல்லாம் பகல்போல இருப்பதுதான் கீசாக்கா ஆசையாக இருக்கும்.

   மிக்க நன்றி கீசாக்கா.

   Delete
 35. //நிலவு உதிக்கும் திசை இப்போ தென்மேற்கு.//
  நிலவு கிழக்கில் தான் உதிக்கும் மேற்கில் தான் சாயும். இது பருவங்களைப் பொருத்து  தென்கிழக்கு அல்லது வடகிழக்கு என்றாகலாம். இப்படித் தான் நாங்கள் பள்ளியில் படித்தது. ஒருவேளை அதிராவுக்காக ஸ்பெஷல் உதயம் தோன்றியதோ? உங்கள் முகம் நிலவு போன்றது என்றால் அமாவாசை அன்று கருப்பாகவும் பவுர்ணமி அன்று வெளுப்பாகவும் இருக்குமோ? 

  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ...

   //நிலவு கிழக்கில் தான் உதிக்கும் மேற்கில் தான் சாயும்.//
   இங்கு ஒரு ஃபனி[funny]சிஸ்டமாகவே இருக்கும்.. மாலை 4,5 மணிக்கு கிழக்கில் நிலவு வந்து.. அவசர அவசரமாக நடு உச்சிக்கு வராமல் தென்கரையால சுற்றி, மேற்குப் பக்கம் 9-10 மணிக்கெல்லாம் வந்துவிடுகிறது.. பின்னர் காலை வரை அங்கிருக்கும்.. ஆனா இப்படி இருப்பது இந்த கோடை காலத்தில், விண்டர் காலத்தில், ஒழுங்கா உச்சம் தலைமேலே கடக்கும்.. அதுவும் மெது மெதுவா.. இரவு 12 க்கே உச்சிக்கு வரும்... அது என்ன சிஸ்டமோ நிலவு அக்காவைத்தான் கேட்க வேணும் ஹா ஹா ஹா.

   //ஒருவேளை அதிராவுக்காக ஸ்பெஷல் உதயம் தோன்றியதோ?//

   அதே அதே:)) இங்கின எல்லாமே டிபரெண்ட்டாகவே இருக்குது ஜேகே ஐயா... ஹா ஹா ஹா..

   //அமாவாசை அன்று கருப்பாகவும் பவுர்ணமி அன்று வெளுப்பாகவும் இருக்குமோ? //
   சே..சே... உங்களுக்கு இன்னும் புரியவில்லை:)).. இது எப்பவுமே ஒரு முழூஊஊஊஊஉ நிலவு:)) “தேயாஆஆஆஆத நிலவு”.. “மேயாத மான்”[படம் வந்ததெல்லோ] போல ..ஹா ஹா ஹா...

   நன்றி ஜேகே ஐயா..

   Delete
 36. உங்கள் தோட்டம் அழகான பூக்களுடன் மிக அழகாக இருக்கிறது அதிரா!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ... மிக்க நன்றி.

   Delete
 37. பாடல் முதல் தடவையாக கேட்கிறேன்.
  ஆசீர்வாதம் செய்யும் பூஸார் சூப்பர்.

  படங்கள் எல்லாம் அழகு.
  தோட்டம் அழகு. தேனிக்கள் , வண்டுகள் சத்தம் கேட்க இனிமைதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

   ஓ பாட்டு இப்போதான் கேட்கிறீங்களோ.. நிலவுபற்றிப் பலப்பல பாட்டுக்கள் உள்ளதே கோமதி அக்கா... அனைத்தும் சூப்பர்.

   மிக்க நன்றி..

   Delete
 38. இ//ந்தப் பூக்களைநன்கு உற்றுப் பாருங்கோ.. ஒரு கொடியில் இரு கலர்கள்:)..//

  இரு கலர்கள் தெரிகிறது.

  டெய்சி பிள்ளை கவிதைகளை பகிரவில்லையே வானம் பார்த்து எழுதிய கவிதை நன்றாக இருக்குமே!

  மர அவரை பூக்கள் அழகு. கறுப்பு ட்க்காளி பூக்கள் அழகு.
  அழகு நிலாவைப் பார்த்து அழகிய பெண்நிலா எழுதியகவிதைக்கு நிலாவே சாட்சியா?

  ReplyDelete
  Replies
  1. //இரு கலர்கள் தெரிகிறது.//
   அதேதான்.. மரம் முழுவதும் மல்லிகைப்பூப்போல இருக்கும்.. அழகோ அழகு.

   //டெய்சி பிள்ளை கவிதைகளை பகிரவில்லையே வானம் பார்த்து எழுதிய கவிதை நன்றாக இருக்குமே!//
   ஹா ஹா ஹா அது வானம் பார்த்து முகில்கள் பார்த்து சொக்கிப்போய்ப் படுத்திருக்கிறோமாக்கும்...:)

   //கறுப்பு ட்க்காளி பூக்கள் அழகு//
   ஹா ஹா ஹா கறுப்புப் பழங்கள் வரும் கோமதி அக்கா.. ஆனா எனக்கு இங்கு காய்க்குமோ தெரியவில்லை.

   //அழகு நிலாவைப் பார்த்து அழகிய பெண்நிலா எழுதியகவிதைக்கு நிலாவே சாட்சியா?//

   ஹா ஹா ஹா நேக்கு ஷை ஷையா வருதூஊஊஊ:))

   Delete
 39. ஊசி இணைப்பு நல்லா சிரிக்க வைக்கிறது,ஊசிக்குறிப்பு நன்றாக இல்லை அதிரா. நல்லவர்களை கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டுவிடுவார்கள் என்று படித்து இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. //நல்லவர்களை கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டு// - இதைத்தான் நானும் குறிப்பிடணும்னு நினைத்திருந்தேன். (ஆனா பாருங்க கோமதி மேடம்... நான் கருவேப்பிலையை சாப்பிட்டுவிடுவேன். மிளகாய் ஒன்றைத்தான் தூக்கி எறிவேன்). அதனால் எப்பவாவது வாஷ்பேசினில் கருவேப்பிலை இருந்தால், மனைவி என்னைக் கேட்க மாட்டார். பசங்களைத்தான் கேட்பார். ஹா ஹா

   Delete
  2. //ஊசிக்குறிப்பு நன்றாக இல்லை அதிரா.// நல்லவர்களை கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டுவிடுவார்கள் என்று படித்து இருக்கிறேன்.//

   அதைத்தான் கோமதி அக்கா சொல்லியிருக்கினம் அதில....

   மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

   Delete
 40. முதல் படம் இருக்குதே அதுதானே புலாலியூர் பூஸாந்தா??!!!!!!

  டெய்சிப்பிள்ளைய வாழ்த்தினாரோ? அவவவுக்கு இப்போ வெட்டிங்க் ரிங்க் வேற போட்டுருக்கீங்க...

  உங்க கார்டன்ல இங்கி பிங்கி பாங்கி போட்டேனே!!! அப்படிப் போட்டதுல கடைசில டச்சு பண்ணினது அந்த தேனீயார் இருக்கும் படம். என்ன அழகுப்பா.
  என்னாது ஒரு கொடியில் இருமலர்களா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் பல மலர்கள்...!!!!!

  ப்ட்டர் கப்ஸ் ஆஹா அது யெல்லோவா அழகா இருக்கும் அதுவும் நிறைய வளரும் போது...டெய்சியா அது? காமன் டெய்சி வெள்ளை...அதுவும் அழகுதாந் நிறைய வளர்ந்தால் என்ன அழகு...அதுவும் அந்த பெர்ப்பிளும் அழகாதான் இருக்கா. ஒவ்வொரு பூவும் அழகுதான் கலர்ஃபுல் கார்டன்...பார்க்கவே மனது இதமாகிடும் அதிரா. எனக்கும் கார்டன் ரொம்பப் பிடிக்கும் ஆனால் இங்கு அதற்கான வாய்ப்பே இல்லை.

  கர்ர்ர்ர்ர்ர்ர் தேனீ அக்காக்களா!!!!!! பிஞ்சு அவை!!! பேதை!!!!!!!!!!!!!!!! நிறைய தெரியுது...ர்ர்ர்ர்ர் என்ற சத்தம் கேட்குமோ?!

  செடி அவரையிலும் தேனிக்கள் ஆஹா அப்ப நல்ல பொலினேஷன் இருக்குமே.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அது ஒரு கொடியில் இரு கலர்கள் கீதா ஹா ஹா ஹா..

   இங்கு டெய்சி மலரும் பட்டர்கப்ஸ் உம் பூண்டுபோல சும்மா வளர்ந்து பூக்கும் கீதா, மற்றும் டண்டலயனும்... கண்ட இடமெல்லாம் முளைச்சு தொல்லை தருமாக்கும்:)

   பூ மரங்களுக்கு அருகில் போனாலே தேனீக்களின் ரீங்காரம்தான் கீதா, ஆனா மழை எனில் ஓடிடுவினம்...

   ஓம் கீதா அவரைப்பூவிலும் தேன் குடிக்கினமே...

   Delete
 41. அது சரி கவித கவித எங்க எங்க?!!!

  கூஸ்பெரி அக்காவா கர்ர்ர்ர்ர்ர்ர் பெதும்பைன்னு சொல்லிப் போட்டு எல்லோரையும் இப்படி அக்கானு ஹா ஹா ஹா ஹா ஹா கூஸ்பெரி பக்கத்துல டெய்சிபிள்ளையின் பகுதி தெரிகிறா....

  ஓ பூக்கள் எல்லாம் சரியா இருக்கான்னு கவுண்டிங்கா டெய்சிபிள்ளை

  கிச்சன் இறங்கும் இடத்தில் வெஜ்ஜியா...பக்கத்து வீட்டு கார்டன் தெரியுதே இரண்டு சேர் கூட இருக்குது.

  சக்கரை பூஷணி கொடி போல வளர்ந்து காய் பெரிதா இருக்குமே அதிரா தரையில் விடுவதுதானே நல்லது...

  உங்கள் ஊரில் இச்சமயம் ராத்திரியும் வெளிச்சம் இருக்கும் தெரியும். ஹையோ அது ஒரு விதத்தில் சுகம் மற்றொரு விதத்தில் டைமே தெரியாது...காலை சீக்கிரம் வெளுக்கும்...

  அதெல்லாம் நிலவு சொல்லாது இங்கு காலையில் சூரியன் வந்த பிறகும் நிலவு தெரியும் 7 மணி போலக் கூடத் தெரியுது ...இப்போ தெரியும் சீசன்..

  உங்கள் கையெழுத்து வரிகள் பிடிபடவில்லை அதிரா... நிலவே நீ சாட்சி நு எழுதியது மட்டும் தெரியுது உடனே அந்தப் பாடலும் வருது மனதில் ஹா ஹா ஹாஹ் அ

  உஇ ஹா ஹா ஹா ஹா ஊகு சூப்பர் வரிகள்...

  மற்ற படம் பார்க்க முடியலை அதிரா...மனம் நொந்துவிடுகிறது

  கீதா  ReplyDelete
  Replies
  1. //ஹையோ அது ஒரு விதத்தில் சுகம் மற்றொரு விதத்தில் டைமே தெரியாது.// - எந்த விதத்தில் சுகம்? பசங்க இரவு 11 மணிக்கு டின்னர் சாப்பிட்டுவிட்டு, 3 மணிக்கே காலைச் சூரியன் வர ஆரம்பித்தால், 5 மணிக்கு ப்ரேக்ஃபாஸ்டுக்கு தட்டைப் போட்டுடப்போறாங்க.

   Delete
  2. ஹா ஹா ஹா கீதா, நான் எங்கு நிற்கிறேனோ என் பின்னாலேயே சுத்திக்கொண்டிருப்பா டெய்சி, ஒரு பப்பியைப்போலவே... அதனால பலசமயம் படமெடுக்க குறுக்க குறுக்கே வருவா:)

   அந்தச் செயாரிலதான் வெயில் காய்வார்கள்.. வெளியேயும் ஒரு பூசணி நட்டிருக்கு கீதா, இது உள்ளே எனில் காய்க்காட்டிலும் நிறைய இலைகள் கிடைக்கும்.

   எங்களுக்கு நேரமாற்றம் எப்பவும் கஸ்டம் தருவதில்லை கீதா., அதற்கேற்ப பழக்கப்பட்டு விட்டோம்.. திக் கேட்டின் போட்டால் எதுவும் தெரியாது.

   ஓ என் கவிதை, அது எழுத்துக்கள் ஒழுங்காகத் தெரியவில்லை இங்கு கீதா, படமெடுத்ததில் ஏதோ குழப்பம்...
   மிக்க நன்றிகள் கீதா, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

   Delete
  3. ///lies

   நெல்லைத் தமிழன்Saturday, June 06, ///
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)
   டின்னர் ரைமில் மாற்றமில்லை நெ தமிழன்... விண்டரில் 7 மணிக்குள் முடியும்.. இப்போ 9 க்குள் முடிகிறது.
   ஆனால் ஸ்கூல் இல்லாமையால் காலைச்சாப்பாடு சாப்பிடுகினம் இல்லை, எழும்பி ரீ குடித்துவிட்டு பின்பு ஸ்ரெயிட்டா லஞ்:)... பாருங்கோ கொரோனாவால் அதிராக்குத்தான் வேலை மிச்சம் ஹா ஹா ஹா
   நன்றி நெ தமிழன்.

   Delete
 42. வணக்கம் அதிரா சகோதரி

  பதிவு நன்றாக உள்ளது. இந்த தடவை எனக்கு மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது. (என் கைப்பேசியில் படங்கள் தெரியவில்லை ஒரு சின்ன பிரச்சனை. படங்கள் தெரியாமல் எப்படி கமெண்ட் எழுதுவது? இப்போது சரியாகி விட்டது. எனக்காக தங்கள் ரயில் நிற்குமென்ற நம்பிக்கையில் ஓடி வந்து ஏறி விட்டேன். ஹா.ஹா)

  தங்கள் தோட்டம் மிகவும் நன்றாக உள்ளது. மலர்கள் செடிகள் என ஒவ்வொரு படங்களிலும் தங்களின் பராமரிப்பு துல்லியமாக தெரிகிறது. வாழ்த்துகள்.

  நிலவு படம் அழகெனில், தங்கள் கையெழுத்து அதை விட அழகு.கவிதை பேரழகு.

  ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு அனைத்துமே ரசித்தேன். (ஊசி இணைப்பில் உள்ளது மாதிரி என்னைக் காணாது உங்களுக்கும் ஒரு டவுட் வந்திருக்கலாம் ஹா ஹா)

  போலீஸ் அடி பார்க்கவே பயங்கரம்.
  மலர்களின் கலர்கள் பார்வைக்கு இதம்.இதனுடன் இதை சேர்த்திருக்க வேண்டாம். பகிர்வத்தனைக்கும் மிக்க நன்றி. தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

   ஆஆஆஆஆ அப்போ இப்போதான் வாறிங்களோ.. நல்லவேளை நீங்கள் எப்படியும் வந்திடுவீங்கள் என்றுதான் நான் பச்சைக்கொடி இன்னும் காட்டவில்லையாக்கும்:).

   சே சே வரமுடியாட்டில் என்ன நான் ஒன்றும் குறையாக எடுக்க மாட்டேன், நீங்கள் முடியும்போது வந்தால் சந்தோசமே.

   //நிலவு படம் அழகெனில், தங்கள் கையெழுத்து அதை விட அழகு.கவிதை பேரழகு.//
   ஹா ஹா ஹா நன்றி நன்றி...

   போஸ்ட்டை ரசிச்சுப் படிச்சமைக்கு நன்றி கமலாக்கா.

   Delete
 43. பூத்து குலுங்கும் மலர்தோட்டம், காய்கறிதோட்டம் இரண்டும் அழகு .காய்கறி கள் பலன்கொடுக்க வாழ்த்துகள். வீட்டு காய்கறி அது ஒரு தனி சுவை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மாதேவி வாங்கோ.... மிக்க நன்றிகள்.

   Delete
 44. சிரிக்கும் பூக்கள் அனைத்தும் அழகு ....அதிரா

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.