“கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்..
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்:)”
வாறீங்களோ வோக் போகலாம்?:)
அது மேலே கரெக்ட்டா எனக்கு சிட்டுவேஷன் சோங் போகுது பாருங்கோ:))..பிபிசியில கர்ர்ர்ர்:)).. அதூஊஊ உங்களில் பாதிப்பேரை ஆவது ஞானி ஆக்கலாம் எனும் முயற்சியில ஆச்சிரம் ஆரம்பிச்சேன்ன், கொரோவான தற்காலிக சேவை நிறுத்தமாகிப்போச்சு:))..
சரி போனால்போகுது, அதிரா ஞானி மட்டுமில்லை ஒரு “பயங்கர” செஃப்:) ஆக்கும் என்பதைக் காட்டி, உங்களை ஒரு சமையல் வல்லுனராக ஆக்க நினைக்கிறேன்.. அதுக்கு எனக்கு அலர்ஜி, என்னிடம் ஈஸ்ட் இல்லை, கிச்சின் தருகிறார்கள் இல்லை:) எனச் சாட்டுக்கள் வேறு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆனாலும் அம்முலு சமைச்சுக் காட்டிப்போட்டாவாக்கும்:))..
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொரோனா நேரத்தில மாஸ்க்குடன் பேசுவது எவ்ளோ கஸ்டம் தெரியுமோ.. அதனால ஸ்ரெயிட்டா விசயத்துக்கு வந்திடுறேன்.. இது என் சாத வடகப் பூமரமாக்கும் அவ்வ்வ்வ்வ்வ்:))
வடக மலரைப் பார்த்து அதிரா சொன்னதூஊஊஊஊ...
பூவைத் தொடாதீங்கோ:))
இரவே அரிசியைச் சாதமாக்கி எடுத்து வச்சுப்போட்டு, காலையில் அதனுள் உப்பும் பெருங்காயத் தூளும் சேர்த்து கூழாக அரைத்துப்போட்டு, ஒரு பொலித்தீன் பாக்கில் போட்டு, இப்பூடிப் பற்றன் போட்டு எடுத்தேன்..[ஜேகே ஐயா சொன்னார் முறுக்கு வடாமும் செய்யுங்கோ என, அதிலிருந்து பிறந்ததுதான் இந்தப் பற்றன்ஸ் எல்லாம்:))]
இதில் சிவப்பாக இருப்பது, கலருக்கு பீற்றூட் சேர்த்தேன் கலர் போதவில்லை, அதனால கொஞ்சம் மிளகாய்த்தூள் சேர்த்தேன்..
இது யும்மா, பூஸ் உம் மீனும் செய்தேன்
ஆனா காய்ந்ததும் உடைஞ்சு போச்ச்ச்:))
ஆஆஆ கலகல எனக் காய்ஞ்சு காய்ச்சு போச்சு:))
இது பொரிச்சது, வாயில அப்படியே....
சீஸ் போல்ஸ் சிப்ஸ் போல கரையுது...
இது பேப்பிள் அதிரா:)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸இடைவேளை🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இடை வேளையில் அதிராவின் பாசிப்பருப்பு இட்டலி சாப்பிடலாம் வாங்கோ..
ஒரு கப் உளுந்துக்கு மூன்று கப் பாசிப்பருப்பு/பயற்றம்பருப்பு.. இதுதான் அளவு,. ஆனா என்னிடம் பாசிப்பருப்பு இல்லாமையால முளுப்பயறில் 2 1/2 கப் போட்டேன்... என்னா சுவை தெரியுமோ.. வெந்தயம், உப்பு, அரைப்பது ஊறுவது எல்லாமே நோர்மல் இட்டலி மெதேட்தான்.. எனக்கென்னமோ அரிசி சேர்ப்பதெனில் பிடிப்பதில்லை[சோறு சாப்பிடுவதுபோலாகுமே என], அதனாலேயே இப்படி ஏதும் செய்கிறேன்..
இதில் ஒரு விசயம், நாங்கள் இட்டலி, தோசை எனில் நிறைய வெங்காயம் செத்தல் மிளகாய், கறிவேப்பிலை இப்படித் தாளிச்சுக் கொட்டியே செய்வோம்.. தாளிக்காமல் செய்வதில்லை. ஆனா நான் இப்போ தாளிப்பதை மறந்திருந்தேன்.. என் நண்பி, லண்டனில் இருக்கிறா என் பள்ளிக்காத் தோழி எனச் சொல்லியிருக்கிறேன் தானே, நாங்கள் இப்பவும் நல்ல குடும்ப நண்பர்கள்.
அப்போ போன கிழமை, நண்பி கேட்டா, அதிரா ரவ்வைத் தோசை ரெசிப்பி சொல்லுங்கோ, நீண்ட காலம் தோசை சுடவில்லை, அதனால எல்லாம் மறந்துவிட்டேன் என. நான் ரெசிப்பி சொன்னேன், ஆனா இந்த தாளிச்சுக் கொட்டுவதை சொல்ல மறந்துவிட்டேன்.
பின்னர் அவ செய்துபோட்டு, நன்றாக வந்தது, ஆனா எங்கட வீட்டிலும் பெரிதாக ஆருக்கும் பிடிப்பதில்லை தோசை என்றா.. பேசிக்கொண்டிருக்கும்போது, அவவின் கணவர் வந்து டக்கெனப் ஃபோனை வாங்கி, “அதிரா, தோசை எனில் அம்மா ஊரில் சுட்டுத்தந்ததுதான் தோசை தெரியுமோ?”.. என்றார் கர்ர்ர்ர்:)), “ஏன் நண்பி செய்தது நல்லாயில்லையோ?” என்றேன்... “தோசை நன்றாக இருந்தது, ஆனா அம்மா எனில் நிறையத் தாளிச்சுக் கொட்டிச் செய்வா, அதுதான் சுவை, சும்மாவே சாப்பிடலாம் அதை” என்றார்.. ஹா ஹா ஹா அப்போதான் எனக்கும் பொறித்தட்டியது ஆஹா தாளிப்பதைச் சொல்ல மறந்துவிட்டேனே என..:)..
அதனால இன்று தாளிச்சு அசத்தி விட்டேனே:))
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் நானும் வாடினேன்.....
நல்ல வெய்யிலைக் கண்டபோதெல்லாம் வடகம் செய்தேன்:))...
ஹா ஹா ஹா நம்ப மாட்டீங்கள், கொஞ்சம் எல்லாம் எனக்குச் செய்ய வராது, நிறையவே செய்து பெரிய ரின்களில் அடைச்சு வச்சிருக்கிறேன், ஆட்களுக்கு கொடுக்க ஆசை, ஆனா இங்கு வெள்ளைகளுக்கெனில் பொரிச்சுத்தான் கொடுக்கோணும்.. இப்போ கொரோனா என்பதால எதுவும் முடியாது.
ஆங் இது அதிராஸ் பப்படம்:))... உளுந்தை அரைச்சுப் பவுடராக்கி, நன்கு அரித்தெடுத்து, உப்பும் பெருங்காயமும் கொஞ்சம் பேக்கிங் சோடாவும் சேர்த்தேன்... நான் அடிச்சுக் குழைச்சது போதாது, அதனால கடும் சொஃப்ட்டாக வரவில்லை, இருப்பினும் ஹார்ட் ஆகவும் இல்லை. இதுவும் 2 தரமாகச் செய்து எடுத்து வச்சிருக்கிறேன் ஹா ஹா ஹா. இதில் கடசிப்படத்தில் இருப்பது, எண்ணெய் எடுத்து பொரிச்சு, பின்னர் எண்ணெயை கொட்ட வேண்டும், இது மைக்குரோவேவ் இல் வச்சு எடுத்தேன்.. பொயிங்கி இருக்குது பாருங்கோ.
அவசரத்துக்கு பப்படத்தை மை.வேவ் இல் நான் வைப்பேனாக்கும்:))
இது எண்ணெயில் பொரிச்சது...
இடது பக்கம் இருக்கும் பூ பொயிங்கி வந்திருக்குது
இது அடுத்து வர இருப்பது...:)
ஊசிக்குறிப்பு
இம்முறை ஊசிக்குறிப்பு சற்று மாறுதலாக:)
எங்கள் வீட்டின் எதிர்ப்புறமாக, வீடுகளுக்கு நடுவே படிகள் இறங்குகின்றன.. அதால இறங்கி கொஞ்சம் நடந்தால், நேரே ஆற்றங்கரைதான்.. இது படியால இறங்க முன் மேலிருந்து எடுத்த படம்...
இது இறங்கும்போது மலைச் சரிவில பாருங்கோ பூத்திருக்குது அழகாக, இப்படி நிறைய மலர்கள் விதம் விதமாக காட்டுக்குள் இருப்பதைப்போல படர்ந்திருக்கும்..
இப்போதான் எங்களுக்கு எல்லா இடமும் ரோஜா தன் மொட்டை விரிச்சிருக்குது, இவற்றைப் பாருங்கோ ஆற்றங்கரையில எவ்ளோ அழகாக சிவப்பு அண்ட் பிங்கி ரோஜாக்கள்..
அம்முலு பாருங்கோ, இந்த இன ஃபியூசியா இப்படி வளர்வினம்
பென்னாம் பெரிதாக...
ஆஆஆ பாருங்கோ.., மீ ஒரு அப்பாவியை அஞ்சு இடிக்கிறா கர்ர்ர்ர்ர்:)) வீடியோக் கேட்டால் புரியுமாக்கும்:))
இது அதிரா ஓவியமாக்கும்.. சே சே டங்கு ஸ்லிப்பாகுதே.. அஜந்தா ஓவியம்போல டிசைன் பண்ணியிருக்கும் கற்கள் ஆற்றங்கரையில்...
ஊசி இணைப்பு
🌼🌼🌼🌼🌼🌼🙏🌼🌼🌼🌼🌼🌼
|
Tweet |
|
|||
செடி போன்ற வடகம் அழகாக இருக்கிறது திறமையாக செய்து இருக்கிறீர்கள்.
ReplyDeleteபடங்கள் அழகு, காணொளி கண்டேன்.
வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. நீங்கதான் 1ஸ்ட்டூஊஊஊ உங்களுக்கு ஒரு தாராக்குஞ்சு இலவசம்.. ஹா ஹா ஹா நன்றி கில்லர்ஜி.
Deleteஇன்று யாரு பர்ஸ்ட்?
ReplyDeleteவாங்கோ ட்றுத் வாங்கோ.. ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ்வ் ஆரு ஃபெஸ்ட்டூ இருக்கட்டும்.. இன்று ஆயா உங்களுக்கே ஹா ஹா ஹா.. ஹையோ ஆயாவுக்குக் கொரோனா வந்தமாதிரி ஃபீவர் 100 எனக் காட்டுது:)).. கெதியாக் கூட்டிக்கொண்டு போயிடுங்கோ ட்றுத்:)).. இல்லை எனில் நான் வோக் போக முடியாது, 14 நாட்கள் உள்ளே இருக்க வேண்டி வந்திடப்போகுது..
Deleteநன்றி ட்றுத்... போஸ்ட் படிச்சதன் அடையாளமாக ஒரு கொமெண்ட் போட்டமைக்கு.
பாடல் அப்போது ரசித்துக் கொண்டிருந்த பாடல். கேட்டு நாட்களாகி விட்டன. மீண்டும் ரசித்தேன்.
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. நன்றி.
Deleteவடகமலர் அழகிய கற்பனை. சில கல்யாணங்களுக்குப் போகும்போது அந்தக் கலயாணத்துக்குப் பொறுப்பான சமையல் விற்பன்னர்கள் காய், கனிகளை நறுக்கி விதம் விதமாக வைத்திருப்பார்கள்.
ReplyDeleteஓம் அது கொஞ்சக்காலம் ஒரு ஃபஷனாக இருந்தது பின்னர் நின்றுவிட்டது..
Deleteஅரிசி கலக்காத இட்லி செய்து பார்க்க முயற்சி செய்யச் சொல்லி பாஸ் கிட்ட மறக்காம சொல்லணும்! நாங்கள் கரைத்த தோசையில் மட்டும் தாளிப்போம். ரவா, கோதுமை தோசை இது போல...
ReplyDeleteரவ்வை இட்டலி/தோசை மற்றும் இப்படி பருப்பு வகைகள்.. கொள்ளு, கம்பு வரகு அனைத்திலும் செய்யலாம்... குரக்கன் தோசையும் சூப்பராக வருகிறதாம்... உளுந்து + குரக்கன் மா... என அம்மா சொன்னா, நான் இதுவரை செய்து பார்க்கவில்லை.
Deleteகுரக்கன் மா = கேழ்வரகு மா //finger millet flour
Delete//AngelMonday, June 08, 2020 10:21:00 pm
Deleteகுரக்கன் மா = கேழ்வரகு மா //finger millet flour//
ஹா ஹா ஹா ஸ்ரீராமுக்கு டவுட் வரவில்லையே அஞ்சு:))
காணொளி / காணொலி ரசித்தேன். ஊசி இணைப்பு 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' டைப்!
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.
Deleteஆகா, நிறைய வத்தல், வடகங்கள், செய்வதைப் பார்த்தால் ஆசையாத் தான் இருக்கு. அதிலும் அந்த உளுந்து அப்பளம், ஆஹா, ஓஹோ, பேஷ், பேஷ் தான். கொரோனா விடுமுறையைப் பயனுள்ளதாய்க் கழிக்கிறீங்க. வாழ்த்துகள். இந்தப் பயத்தம்பருப்பு இட்லி நீரிழிவுக்காரங்களுக்கு நல்லது என நானும் நம்மவருக்குச் செய்து கொடுத்தேன். அவர் பிடிக்கலைனுட்டார். இத்தனைக்கும் அதுக்கு மேல் அலங்காரம் நிறைய! கருகப்பிலை, கொத்துமல்லை, பச்சைமிளகாய். இஞ்சி சேர்த்துக் காரட் துருவிப் போட்டு, தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறிப்போட்டுத் தாளிதம் எல்லாம் பண்ணிப் பண்ணிக் கொடுத்தேன்.. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உப்புமா மாதிரி இருக்குனு சொல்லிட்டார். :)))))))))
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ, நிறைய செய்திட்டேன், இனியும் செய்து என்ன பண்ணுவது என நினைச்சே ஸ்ரொப் பண்ணியிருக்கிறேன் இப்போ மோர் மிளகாய் போட்டிருக்கிறேன், கேரளத்து பெரிய மிளகாய் வாங்கி.
Delete//கொரோனா விடுமுறையைப் பயனுள்ளதாய்க் கழிக்கிறீங்க.//
உண்மை கீசாக்கா, ஆனா விடுமுறை கிடைச்சால் நிறைய தையல், மற்றும் பூப்போடும் வேலைகள் முடிக்கோணும், வீட்டுக்குள் நிறைய கழிக்கோணும் என்றெல்லாம் எண்ணியிருந்தேன், ஆனா இப்போ இப்படி புதுப்புது வேலை+சமையலில் நேரம் முடிஞ்சிடுது ஹா ஹா ஹா..
இந்தப் பயத்தம்பருப்பு ரெசிப்பி சமீபத்திலதான் ஆன்ரி ஒருவர் சொன்னார், செய்யுங்கோ நன்றாக வருகிறது என, நான் அடிக்கடி பயறு அவிப்பேன், வறுத்தும் சாப்பிடுவேன், அப்போ இதுவும் நல்லதுதானே என செய்தேன்.. புஸு புஸு என சொஃப்ட்டாக வந்தது, வாய்க்கு ஒருவித இனிமையாகவும் இருந்தது, கம்பில் செய்வதைப்போல.
//எல்லாம் பண்ணிப் பண்ணிக் கொடுத்தேன்.. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உப்புமா மாதிரி இருக்குனு சொல்லிட்டார்.//
ஹா ஹா ஹா ஓவரான பொருட்கள் போட்டதால உப்புமாப்போல தோணிவிட்டது போலும்:))
கீசா மேடம்... எப்போதுமே ஒரு பொருளை அளவுக்கு அதிகமாக அலங்காரம் செய்துகொடுத்தால் எங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துடும். பொருள் நல்லதா இருந்தால் இவ்வளவு அலங்காரம் தேவையில்லையே...இவங்க ஏதேனும் நம்ம தலைல கட்டறதுக்காக அலங்காரம் செய்யறாங்களோன்னு. ஹா ஹா
Deleteஉண்மைதானே அதிரா?
////உண்மைதானே அதிரா?///
Deleteம்ஹூம்ம்ம்ம் சொல்றதையும் சொல்லிப்போட்டு, அடி விழுந்தால் அதிரா வாங்கட்டும் என என்னையும் கோத்துவிட்டிருக்கிறாராம் கர்ர்ர்:)... எனக்கு காதடைச்சிருக்குதூஊஊ எனக்கு எதுவும் கேட்கல்ல:)...
கீசாக்கா எனக்கும் இதுக்கும் எந்த ஜம்பந்தமும் இல்லை என வெள்ளைப்பேப்பரில கை எழுத்துப் போட்டுத் தாறேன்ன்ன்ன்ன்ன்:)
எங்கே, உங்க "செக்"கைக் கொஞ்ச நாட்களாகக் காணோமே? வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்களா?
ReplyDeleteஅவ எங்கின போயிடப்போறா பிரித்தானியாவை விட்டு..:)).. வேலைக்குத் தொடங்கிட்டா கீசாக்கா...
Deleteமிக்க நன்றிகள்.
நல்ல சிட்டுவேஷன் சோங் தான். இங்குதான் வெயிலை நம்பி செய்யமுடியாதே. நானும் வடகம் அடுத்து செய்வோம் என நினைச்சால் மழை 1கிழமைக்கு என சொல்றாங்க.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அப்ப எப்படி உங்க சமையல் எல்லாம் பார்த்து சமைப்பதாம். அதான் கேக் ஐ செய்வோம் எனச்செய்தேன்.
ReplyDeleteஆஆ...மறந்திட்டேன்/உங்களிடைய வெற்றிகரமாக 350வது பதிவுக்கு என வாழ்த்துக்கள். இன்னும் பல பதிவுகள் நிறைய எழுதி, எங்களை எல்லாம் சமையல் குக் ஆகவும், ஞானியாகவும் மாத்த ஆயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாங்கோ அம்முலு வாங்கோ..
Deleteமழையும் வெயிலும் மாறி மாறி வருகுது.. தொடர்ந்து வந்தால் கஸ்டம்தான், இப்படி மாறி மாறி வருவதால் பயிர்கள் நன்கு வளருது, ஆனா கடந்த 2,3 நாட்கள் குளிர் அதிகமாக சில செடிகளின் இலைகள் கறுத்து விட்டது கர்:))
//ஆஆ...மறந்திட்டேன்/உங்களிடைய வெற்றிகரமாக 350வது பதிவுக்கு என வாழ்த்துக்கள்//
ஆஆ அப்பூடியோ, நான் எப்பவும் இதைக் கவனிப்பதில்லை, ஆனா நீங்கள்தான் ஒவ்வொரு முறையும் கவனிச்சுச் சொல்லுவீங்கள்.. நன்றி அம்முலு. 12 வருடத்தில் 350 பதிவுகள் ஹா ஹா ஹா.
நன்றி நன்றி.
///12 வருடத்தில் 350 பதிவுகள் ஹா ஹா ஹா.//
Deleteபிஞ்சு !! எத்தனை பதிவு போட்டீங்கங்கிறது முக்கியமில்லை போட்ட பதிவுகள் வரலாற்றுப்புகழ் பெற்றவையாக கல்லில் எழுதப்பட்டவையாக கூகிளில் உங்க குறிப்பு பெயரை போட்டாலே முதலில் வந்து முகம் காட்டுபவையாக இருக்கணும் அதுதானே முக்கியம்ம்ம்ம்ம்ம் :) இன்னிக்கு அகர் அகர் னு போட்டா உங்க பூஸ் அகர் அகர் தான் முன்னாடி முகம் காட்டுது :)
///இன்னிக்கு அகர் அகர் னு போட்டா உங்க பூஸ் அகர் அகர் தான் முன்னாடி முகம் காட்டுது :)//
Deleteஹா ஹா ஹா அதுதானே..
“எத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை:), எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்”.. என ஒரு ஞானி சொல்லியிருக்கிறார் ஹா ஹா ஹா...
இரண்டு வடக பூவும் ஒன்றுதான். பெயரை மட்டும் பேப்பிள் கலரில எழுதி, பேப்பிள் அதிரா என எழுதினால் நாங்க ஏமாந்து போகமாட்டமேஏஏஏ...
ReplyDeleteடிசைன் எல்லாம் கன்னாபின்னா என இருக்கு. பீற்றூட்டும் கலந்து, மிளக்காய்தூளும் போட்டீங்களோ.
பூஸை வடிவா செய்துபோட்டு, வேணுமெண்டு பிஷ் ஐ வடிவில்லாமல் செய்திருக்கிறீங்க. இது மீனுக்கு செய்த சதி. நான் கூப்பிடுறன் இப்ப.. அஞ்சூஊஊஊஊ..
//அதிரா என எழுதினால் நாங்க ஏமாந்து போகமாட்டமேஏஏஏ..//
Deleteஒரு சிறிய வித்தியாசம் இருக்குது, படம் எடுத்த விதத்தில...:)
//பூஸை வடிவா செய்துபோட்டு, வேணுமெண்டு பிஷ் ஐ வடிவில்லாமல் செய்திருக்கிறீங்க//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ச்சும்மா இருக்கிற சங்கை ஊதிவிடுவதே வேலையாப் போச்ச்ச்ச்:))..
//இது மீனுக்கு செய்த சதி. நான் கூப்பிடுறன் இப்ப.. அஞ்சூஊஊஊஊ..//
கடவுள் எப்பவும் அதிரா பக்கம்தேன்:).. அவவுக்கு மாஸ்க் அலர்ஜியாம்:)) ஆச்சூம் பண்ணிக்கொண்டிருக்கிறாவாம்:)).. அதனால மீ சேஃப்ஃப்ஃப்ஃப்ஃப்:))
[im]https://image.shutterstock.com/image-illustration/orange-fish-wearing-mask-260nw-1695070135.jpg[/im]
Deleteதாங்க்ஸ் பிரியா :)
///https://image.shutterstock.com/image-illustration/orange-fish-wearing-mask-260nw-1695070135.jpg//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..
பாசிப்பருப்பு இட்டலியாஆஆ.. இட்லி என்றால் நல்ல புசுபுசுவென இருக்கோனும். நான் தோசை ப்ளெயின் ஆ வார்ப்பேன். வெங்காயம் சேர்பதெனில் அது ஊத்தப்பம்தான். இட்லி எல்லாம் நோர்மல்தான். ஆனா சாம்பார்,சட்னி,என வேணும். இப்படி இட்லி,தோசை வெரைட்டியா செய்தாலும் ஒரிஜனல் தான் கூட விரும்புவினம்..
ReplyDeleteஉண்மையை சொல்லுங்கோ நீங்க வேணுமெண்டுதானே தாளிச்சு கொட்டுவதை உங்க ப்ரண்ட் கிட்ட சொல்லேல்லை. பாவம் உங்க நண்பி.
புஸூபுஸூஊஊஊ எனத்தான் இருக்குது அம்முலு பனானாக் கேக் போல, நன்றாகவே இருக்குது, இனி தமிழ்க்கடை போனால் பாசிப்பருப்பு கிடைக்கும் வாங்கி வந்து செய்யப்போறேன்.
Delete//வெங்காயம் சேர்பதெனில் அது ஊத்தப்பம்தான்.//
அது பச்சையாகச் சேர்ப்பது. நாங்கள் தாளிச்சுப் போடாமல் இட்லி தோசை ஊரில் செய்வதில்லை, அம்மா இங்கிருந்தாலும் தாளிச்சுப் போடுவா.. நான் அதை மறந்திருந்தேன்..
கொஞ்சம் மேலே போய் மாமி என்ன பண்ணுவா, கொஞ்சம் ஊறவிட்ட கடலைப்பருப்பு அல்லது பொட்டுக்கடலையும் சேர்த்துத் தாளிச்சுப் போடுவா இட்டலிக்கு மட்டும்.. தோசைக்கு தனியே வெ,செ.மிள, கறிவே..லை மட்டுமே.
//உண்மையை சொல்லுங்கோ நீங்க வேணுமெண்டுதானே தாளிச்சு கொட்டுவதை உங்க ப்ரண்ட் கிட்ட சொல்லேல்லை.//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).. இப்போ என் வடகம் பார்த்து ஒஸ்ரேலியாவில இருந்து மெசேஜ் வந்திருக்குது, அந்த அரிசி கூழ் வடாம் ரெசிப்பி அனுப்பச் சொல்லி ஹா ஹா ஹா..
இதில அதிராஸ் பப்படம்தான் நல்லாயிருக்கு. நானும் அவசர்த்துக்கு இப்படி மைக்குரோவேவ் ல் வைத்து எடுப்பதுண்டு. ஆனா இங்கு வீட்டில் மைக்குரோவேவ் அடிக்கடி பாவிக்க விரும்புறதில்லை..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஇந்த உளுந்து அப்பளம் கொஞ்சம் அனுப்பிவுடுங்கோ. நிறைய டின்களில் வடகம்,அப்பளம்,வற்றல் என அடுக்கிவைத்திருக்கிறீங்கபோல. கொரோனாவால எல்லாம் நட்க்குது.
அந்த பூ என்ன பூரி மாதிரி பொயிங்கி வந்திருக்கு. நல்லாயிருக்கு. அடுத்து வர இருப்பது என்னால ஊகிக்க முடியுது....
//இதில அதிராஸ் பப்படம்தான் நல்லாயிருக்கு.//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ பூப்பப்படம் வடகம் பிடிக்கேல்லையோ:)).. கடையில் வாங்கும் கிரிஸ்ப் போல நல்லா இருக்குது.
ஹா ஹா ஹா கிட்ட எனில் தந்திடுவேன், எனக்குச் செய்வதைக் காட்டிலும் எல்லோருக்கும் குடுப்பதிலதான் சந்தோசம் அதிகம். இம்முறை கனடா போக இருந்தோம், அப்படிப் போக முடிஞ்சால் கொண்டுபோய்க் கொடுத்து என் அருமை பெருமைகளைப் பறைசாற்றலாம் என இருந்தேன் அதுவும் முடியல்ல கர்:)) ஹா ஹா அஹ:))..
அடுத்து வர இருப்பது.. ஊகிச்சிட்டீங்களோ?:)) அதேதான் ஹா ஹா ஹா..
கர்ர்ர்ர்ர்ர்..... எங்க அஞ்சு உங்களை இடிக்கிறா. சும்மா சும்மா பழி போடக்கூடாது. அழகான ஆறு. வீடியோ அழகா இருக்கு. உங்க குரலோட. ஊசிகுறிப்பு சற்று மாறுதலானாலும் அழகா இருக்கு. அந்த படியில் நின்று எடுத்த படம் சூப்பரா இருக்கு.
ReplyDeleteமரமா வளர்கிற ஃபியூசியா இனம் போல. டிசைன் கற்கள் அழகா இருக்கு. நமக்கானது விட்டுபோகாதுதான்.
//கர்ர்ர்ர்ர்ர்..... எங்க அஞ்சு உங்களை இடிக்கிறா.//
Deleteஹையோ வைரவா ச்சும்மா ச்சும்மா எல்லாம் உப்பூடிச் சப்போர்ட் பண்ணக்கூடாது, இடிச்ச இடியில என் தோள் வலி இன்னும் போகல்ல:)).. வீடியோவின் கடசிப்பகுதியை நன்கு பாருங்கோ.. மீ அப்பாவியாக முன்னால போறேன்ன்.. பின்னால ஓடி வந்து என் தோள்ள கொத்திட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இது அடுத்த பிறவிச் சமாச்சாரம்:)) ஹா ஹா ஹா எனக்குத் தெரியும் அஞ்சுவுக்கும் எனக்கும் அடுத்த பிறவி பூனை அல்லது வாத்துத்தான் ஹா ஹா ஹா..:))..
அது வெட்டி வெட்டி வளர்த்தால் குட்டியாகவே நிற்கும், அப்படித்தான் நாங்களும் வெட்டி விடுறோம்.
மிக்க நன்றி அம்முலு ...
// எனக்குத் தெரியும் அஞ்சுவுக்கும் எனக்கும் அடுத்த பிறவி பூனை அல்லது வாத்துத்தான் ஹா ஹா ஹா..:))..//
Delete[im]https://pics.me.me/sometimes-we-find-the-most-bestest-of-friends-doga-crae-24107210.png[/im]
//https://pics.me.me/sometimes-we-find-the-most-bestest-of-friends-doga-crae-24107210.png///
Deleteஹா ஹா ஹா இந்தப் படம் மொன்னொரு காலம் என் பக்கத்தில் போட்டிருக்கிறேன் அஞ்சு போஸ்ட்டில்...
மண்ணை தொட்டு பாடல் கேட்டேன்.
ReplyDelete//“கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்..
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்:)”//
இதற்கு இந்த புலம்பல் நல்லாதானே வற்றல் வடகம், அப்பளம் எல்லாம் போடு பொரித்து சாப்பிட்டாச்சு.
//வடக மலரைப் பார்த்து அதிரா சொன்னதூஊஊஊஊ...
பூவைத் தொடாதீங்கோ:))//
பூவை தொடாமல் பறிச்சு சாப்பிடுங்கோ ! சுவையான வற்றல் பூ.
புதிதாக வற்றல் ஆராய்ச்சி எல்லாம் செய்து டாக்டர் பட்டம் வாங்க போகிறார் அதிரா.
தோசை மாவு மாதிரி அரிசியை அரைத்து மறு நாள் கூழ் காய்ச்சி செய்யுங்கள் இது போன்ற வற்றலை. என் அம்மா சாதத்தை அரைக்க கூடாது என்பார்கள் அது விஷமாக மாறி விடும் என்பார்கள். ஆப்பத்தில் சாதம் போட்டு அரைக்கிரார்கள் அது பஞ்சு போல இருக்கும் என்று அப்படி பஞ்சு போல இருக்க அவல் நனைத்து அரைத்து போடலாம்.
மீந்த சாதத்தில் வற்றல் போட கூட கைகளால் நொறுக்கி பிசைந்து காரம், போட்டு செய்வார்கள் அரைக்க கூடாது என்பார்கள். அதையே கொஞ்சம் வெந்நீர் விட்டு அழௌத்தி பிசைந்து அச்சில் பிழியலாம்.
விரத காலங்களில் இந்த வற்றலை பயன்படுத்த மாட்டார்கள்.
காய்ச்சலில் சாதம் சாப்பிட முடியாதவர்களுக்கு அரிசியை வறுத்து உடைத்து கஞ்சி காய்ச்சி அந்த தண்ணீரை மட்டும் இறுத்து கொடுப்பார்கள் அதற்கு அன்னத் தண்ணீர் என்பார்கள். போன உயிரைகூட மீட்டு கொண்டு வருமாம். அதனால் உயிர் தண்ணீர் என்று கூட சொல்வார்கள்.
குழந்தைகளுக்கும் மிக்ஸியில் அடித்து கொடுக்கிறார்கள் அப்படி கொடுக்க கூடாது குழைவாய் வேக வைத்து பருப்பு ரசம், நெய் போட்டு கொடுக்க வேண்டும்.
உளுந்து அப்பளம் உரலில் போட்டு இடிக்க வேண்டும் எவ்வளவு இடி வாங்குகிறதோ அவ்வளவு நன்றாக இருக்கும்.
பப்படம் போல் அழகாய் அப்பளம் பொரிந்து வந்து இருக்கிறது. முயற்சிக்கு வாழ்த்துக்கள் அதிரா.
வற்றல்
தர்பூசணி தொட்டியில் உள்ள செடியில் மலர்ந்த வ்ற்றல் பூக்கள் மிக அழகு.
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..
Deleteஅது சிட்டுவேஷன் சோங் வந்து.. இங்கின ஆரும் என் பேச்சைக்கேட்டுச் சமைக்கினம் இல்லை கோமதி அக்கா ஹா ஹா ஹா..
//புதிதாக வற்றல் ஆராய்ச்சி எல்லாம் செய்து டாக்டர் பட்டம் வாங்க போகிறார் அதிரா//
ஹா ஹா ஹா என் குறிக்கோளே “செய் அல்லது செத்துப்போ”.. என்பதுதான்.. எதுவாயினும் மனம் வச்சு உடல் பொருள் ஆவி எல்லாம் அர்ப்பணிச்சு செய்வேன்.. இல்லை எனில் செய்ய மாட்டேனாக்கும்:))..
//தோசை மாவு மாதிரி அரிசியை அரைத்து மறு நாள் கூழ் காய்ச்சி செய்யுங்கள் இது போன்ற வற்றலை//
இது நான் செய்துவிட்டேன் கோமதி அக்கா.. போன தடவை இங்கு போஸ்ட் போட்டேனென்ல்லோ.. அது அப்படித்தான் செய்தேன், சவ்வரிசியும் சேர்த்து.. அதனாலேயே இது சாதமாக்கிச் செய்தேன்... முறுக்காகப் பிழிவதற்காக.
//என் அம்மா சாதத்தை அரைக்க கூடாது என்பார்கள் அது விஷமாக மாறி விடும் என்பார்கள். ஆப்பத்தில் சாதம் போட்டு அரைக்கிரார்கள் அது பஞ்சு போல இருக்கும் என்று அப்படி பஞ்சு போல இருக்க அவல் நனைத்து அரைத்து போடலாம்.//
ஓ இது புதுத்தகவல் கோமதி அக்கா, நாங்கள் தோசைக்கும் கொஞ்சமாக சாதம் சேர்ப்பதுண்டு, சிலர் அரிசியை ஒரு கொதிவரும்வரை அவியவிட்டு, எடுத்து அரைத்து தோசைக்குச் சேர்ப்பார்கள்.
ஓ அவல்.. நோட் பண்ணி வைக்கிறேன், செய்து பார்க்கிறேன் இனி.
//அதையே கொஞ்சம் வெந்நீர் விட்டு அழௌத்தி பிசைந்து அச்சில் பிழியலாம்.//
Deleteஓ.. இப்படி முயற்சி பண்ணினேன் கோமதி அக்கா, ஆனா அது சோறு சோறாகவே வந்ததால் விட்டுவிட்டேன்..
//விரத காலங்களில் இந்த வற்றலை பயன்படுத்த மாட்டார்கள்.//
ஓ உண்மை சில விரதங்களுக்கு அரிசி/அரிசிப்பதார்த்தம் எதுவும் சேராமல் சாப்பிடுவினம் ஊரிலும் சிலர், அதனாலதான் இந்த வற்றலும் எடுப்பதில்லைப்போலும்.
//காய்ச்சலில் சாதம் சாப்பிட முடியாதவர்களுக்கு அரிசியை வறுத்து உடைத்து கஞ்சி காய்ச்சி அந்த தண்ணீரை மட்டும் இறுத்து கொடுப்பார்கள்//
ஓ கேள்விப்பட்டிருக்கிறேன்.. செய்ததில்லை... நாங்கள் காச்சல் எனில், தவிட்டரிசியை நன்கு கரைய கஞ்சிபோல காச்சி, வெறும் மிளகாயும் புளியும் அரைச்சு தொட்டுச் சாப்பிடத்தருவா சின்னனில் அம்மா..
//உளுந்து அப்பளம் உரலில் போட்டு இடிக்க வேண்டும் எவ்வளவு இடி வாங்குகிறதோ அவ்வளவு நன்றாக இருக்கும்.//
ஆஆஆ அப்படித்தான் நானும் வீடியோக்கள் பார்த்தேன் கோமதி அக்கா, இது பிளேட்டில் போட்டு சப்பாத்திக் கட்டையால.. ட்றுத்திட மாமி அடிப்பதைப்போல:)) ஹா ஹா ஹா அடிஅடி என அட்ச்சு எடுத்தேன்.. ஆனாலும் அடி போதவில்லை:))..
யேஸ், பப்படம் நன்றாக இருக்கிறது கோமதி அக்கா.. சுவையில் குறை இல்லை, கடும் சொஃப்ட்டாக இல்லை அவ்வளவே..
ஆனா அரிசிப் பப்படம் செய்கிறார்கள்.. அது கொஞ்சம் மினக்கெட்ட வேலை, ஆனால் முடிவு நன்றாக வருது, பார்ப்போம் முடிஞ்சால், பின்பொருநாள் முயற்சிக்கிறேன்.
மிக்க நன்றி, பூ வடகம் பார்த்ததும் ஐடியா எழுந்தது.
அப்பள பூக்களும் அழகு.
ReplyDeleteவீடுகளும், வானமு ஆற்றம்கரையும் அழகு. காடு போல் இருக்கும் செடிகளில் மலர்ந்த மலர்களும் அழகு.
காணொளியும் உங்கள் பேச்சும் அழகு. அதிரா, அஞ்சு குடும்பம் ஆற்றில் பயணம் அழகு.
பொழுதுகள் நன்றாக போகிறது அதிராவிற்கு.
உருண்டை கற்களில் ஓவிய மலர்கள் அழகு.
ஊசி இணைப்பு மிக சரி.
என் கணவர் அடிக்கடி சொல்வது.
பதிவு அருமை.
கோடை காலத்தில் எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள கார்டினே போதும் கோமதி அக்கா பொழுதைப்போக்க, நடைப்பயிற்சிக்காக ஆற்றங்கரை... கோடை எனில் இங்கு எல்லாமே அழகுதான்.. ஒரே பூக்களும் பச்சைப்பசேலும் என சொர்க்கம் போல இருக்கும்.
Deleteஆனா விண்டர் வந்திட்டால், வாசல்படியைத்தாண்ட மாட்டோம்ம் படிதாண்டாப்பத்தினியாகிடுவோம் எல்லோரும் ஹா ஹா ஹா.. வாசல்..கார் வீடு.. இப்படித்தான் பொழுது கழியும், கிச்சின் வெளி டோர் திறக்கவே மாட்டோம்ம்.. கோடையில் மூடவே மாட்டோம் ஹா ஹா ஹா.
மிக்க நன்றிகள் கோமதி அக்கா, அனைத்தையும் ரசித்திருக்கிறீங்கள்.
design design -ஆ வடகம் போட்டு இருக்கீங்களே! பாராட்டுகள்.
ReplyDeleteசமையல் குறிப்புகள் அனைத்தும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் முயற்சிகள்.
வாங்கோ வெங்கட் வாங்கோ..
Deleteமிக்க நன்றிகள்.. கொரோனாப் பொழுது நன்றாகவே கழிகிறது.
சாத வடகப் பூமரமாக்கும், பாசிப்பருப்பு இட்டலியும், பப்படமும் அருமை...
ReplyDeleteகாணொளி, வீடு அமைந்திருக்கும் இடம் ஆகா...!
வாங்கோ டிடி வாங்கோ..
Deleteஹா ஹா ஹா திருக்குறள்போல சொல்லிட்டீங்க மிக்க நன்றிகள்.
வடகம் டிசைன்கள் ரொம்ப நல்லா இருக்கு. வடகத்தை செடி மாதிரி செய்து போட்டோ எடுத்திருப்பதை ரசித்தேன்.
ReplyDeleteஅப்பளம் சரியா வரலை.
நான் பிறகு வருகிறேன்.
வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...
Delete//வடகத்தை செடி மாதிரி செய்து போட்டோ எடுத்திருப்பதை ரசித்தேன்.//
நன்றி நன்றி, அஞ்சுவுக்கு இப்படிச் செய்யத் தெரியாதாக்கும்:)) ஹா ஹா ஹா..
//அப்பளம் சரியா வரலை.//
ஆஆஆஆஆஆஆஆ நீங்கதான் வெளி அழகில் மயங்குபவராச்சே:)).. இந்த அழகில மட்டும் எப்பூடி மயங்காமல் ஸ்ரெடியா நின்று கரெக்ட்டாப் பிடிச்சிட்டீங்க?:)) ஹா ஹா ஹா...
சரி சரி நேரம் கிடைக்கும்போது வாங்கோ.. ரெயின் இங்குதான் நிற்கும். நன்றி நன்றி.
பச்சை பயிறு இட்லி, தோசை நன்றாக இருக்கிறது.அரிசி இல்லாமல் இடலி, தோசை உடனே அரைத்து உடனே செய்யலாம் தானே?
ReplyDeleteஊறப்போடுவதுதான் கோமதி அக்கா 6,7 மணிநேரம் போட வேண்டும், அரைத்துச் செய்வது உடனேயே செய்யலாமாம், ஆனா எனக்குப் பொயிங்கினால்தான்:) பிடிக்கும் அதனால ஓவர் நைட் பொயிங்க வச்சுச் செய்தேன் ஹா ஹா ஹா நன்றி கோமதி அக்கா.
Deleteஒரே செடியில் விதவித நிறத்தில் பூக்கள் :) பிஞ்சு வீட்டில் மட்டுமே சாத்தியம் ::))))பிஞ்சு அந்த வடாம் மலரை அப்படியே சாப்பிட்டு காட்டுங்க வித் தி ப்ளூ ஸ்டோன்ஸ் :)))
ReplyDeleteவாங்கோ அஞ்சு வாங்கோ..
Delete//பிஞ்சு வீட்டில் மட்டுமே சாத்தியம் ::))//
அதே அதே ஹா ஹா ஹா...
//அந்த வடாம் மலரை அப்படியே சாப்பிட்டு காட்டுங்க வித் தி ப்ளூ ஸ்டோன்ஸ் :)))//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதுதான் சொல்லிட்டேனில்ல:)).. பூகளைத் தொடப்பிடாதென:)) அது எனக்கும் சேர்த்துத்தான்:)) ஹா ஹா ஹா..
மியாவ் பிஞ்சு நானும் அப்பளம் எல்லாம் செஞ்சேன் இன்னிக்கு என்னால் பின்னூட்ட ஜோதியில் இறங்க முடியலை non ஸ்டாப் தும்மல் பிறகு வரேன்
ReplyDeleteபுரியுது புரியுது, நீங்க மெதுவா வாங்கோ.. வீடியோ எல்லாம் பார்க்கோணுமெல்லோ:))..
Deleteரெயின் இங்கினதானே நிற்கும் 2,3 நாட்களுக்கு..:)
நான் ஸ்டாப் தும்மலுக்குக் காரணம், எடிரி ஒருவர் உங்களைவிட வடகம்/பப்படம் அழகாச் செய்யணும், எல்லாத்தையும் இடுகைல போட்டு, ஏஞ்சலினைவிட அதிரா சூப்பரா செஞ்சிருக்காங்கன்னு சொல்லணும்னு தொடர்ந்து நினைத்துக்கொண்டே இருப்பதால இருக்குமோ?
Deleteகர்ர்ர்ர்ர்ர்:) அதிரா யூப்பராச் செய்தாலும்... ஆரும் சொல்ல மாட்டினமாமே:)....
Deleteதும்மலுக்கும் வடகத்துக்கும் முடிச்சுப் போடுறாராம்ம் கர்ர்ர்ர்ர்ர்:)
@ நெல்லைத்தமிழன் ஆமா இப்போதான் டவுட் வருது :) இருக்கலாம் .நேத்து ஸ்கொட்லாந்திலிருந்து ஒரு லெட்டர் வந்து அதை ஓபன் பண்ணினதில் இருந்து தும்மலா இருக்கே !!!
Delete@ அஞ்சு
Deletehttps://i.ytimg.com/vi/eU1TUJD7nyQ/hqdefault.jpg
ஓஹோ இப்போதான் புரியுது என்னை தண்ணில தள்ளி விட்டதால்தான் இப்போ கோல்ட் பிடிச்சிருக்கு எனக்கு இருக்கு போலீசுக்கு சொல்றேன்
ReplyDeleteஹையோ அது இந்த ஜென்மம் இல்ல அஞ்சு:) அடுத்த ஜென்மக் கதை:))).. நான் ஞானி ஆகிட்டதால என் சானக் கண்ணுக்கு சே சே ஞானக்கண்ணுக்கு அடுத்த பிறவி எல்லாம் தெரியுதூஊஊஊஊ ஹா ஹா ஹா:)).... ஆஆஆஆஆ எண்டாலும் ஊ எண்டாலும் போலீசைக் கூப்பிடுறேன் எனப் பூச்சாண்டி காட்டிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
Deleteஆனால் பாருங்கோ.. எங்கட ஆத்தங்கரையில ஒரு மீன்குஞ்சுகூடக் காணம் கர்ர்:)) ஹா ஹா ஹா நன்றி அஞ்சு.
டிசைன் வட்டம் பப்படம் எல்லாம் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவீடு,ஆற்றங்கரை மரம் செடிகள் பூக்கள் அனைத்தும் அழகு.
வாங்கோ மாதேவி வாங்கோ.. நீங்கள் வடகம் ஏதும் செய்யவில்லையோ..
Deleteமிக்க நன்றி.
ஏஞ்சலினைப் பார்த்தால் வாத்து, அணில் எல்லாம் கிட்டக்க வருது. உங்களைப் பார்த்தால் தூரக்க ஓடுதே.... என்ன காரணம்?
ReplyDeleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) அது போன ஜென்மப் பகையாக இருக்குமோ என்னுடன்:)
Deleteஹ்ஹஹ்ஹா :) ஒருமுறை மான்கள் கூட்டமா ஜெர்மனியில் என்கிட்ட வந்தன ஆனால் என் சிஸ்டரின்லா, கணவர் பக்கம் மறந்தும் போகலை
Deleteஆற்றங்கரை ஆற்றங்கரை என்று சொல்றீங்களே.... நம்ம ஊரு மாதிரி, அங்க போய் குளிப்பது, நீச்சலிப்பது இதெல்லாம் செய்யமுடியும்? என்ன இருந்தாலும் நம்ம ஊர் சுதந்திரம் வராதில்லையா?
ReplyDeleteஎங்கட ஊரில குளத்திலகூட குதிச்சு நீந்துவினமெல்லோ... இங்கு அப்படி இல்லை, அதற்கான இடங்களில் மட்டும்தான் குளிப்பார்கள்....
Deleteஇன்னொன்று தண்ணி குளிரும்...
மற்றும்படி தண்ணி பளிங்குபோல இருக்கும்...
மைக்ரோவேவ்ல பொரிச்செடுத்த அப்பளம், ரொம்ப பரிதாபமா சரியா பொரியலை போலிருக்கே (கோபு சார் எழுதிய உப்புச்சீடை கதையில் வருவது போல இருக்கு). என்ன காரணம்? (உங்க மனசுக்குள்ள, அந்தப் படத்தைப் போட்டிருக்கவேண்டாம். பப்படத்தை எண்ணெயில் பொரிச்சா நல்லா வரலைனு இந்த மைக்ரோவேவ் அவனில் பொரிச்சா, அதுவுமே நல்லா வரலையே என்று தோணுது இல்லையா?)
ReplyDeleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர் அப்படி இல்லை, முதல் தடவை செய்ததை மக்குறோவேவ் பண்ணிப்பார்த்தேன்...
Delete2 ம் தடவை எண்ணெயில பொரிச்சேன்....
ஆனா நெல்லைத் தமிழன் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே வந்திருக்கு... கொஞ்சம் கடையில் வாங்கும் சொவ்ட் வரவில்லை.
இன்னொன்று, கடையிலும் சில பிராண்ட் சொவ்ட் இருக்காது... ஆஆ இன்னுமொன்று, பேக்கிங் சோடா கூடுதலாகப் போடுகிறார்கள், நான் மிகவும் கொஞ்சமாகவே போட்டேன்.. அதுவும் ஒரு காரணம்...
அந்த தட்டுல (A ன்னு போட்டிருக்கே அது) எது இட்லி, எது தோசை, எது சட்னி என்று ஒன்றுமே தெரியலை. அப்படி எல்லாமே யூனிஃபார் கலர்ல இருக்கற மாதிரி இருக்கு.
ReplyDeleteபக்கத்துல, நீங்க தாளிச்ச மாவுன்னு சொல்றீங்க. எனக்கு பார்த்தபோது கொஞ்சமா கொத்தமல்லி தழை போட்டு அரைத்த தேங்காய் சட்னியில் தாளிதம் மாதிரி தெரிந்தது.
இது என் கண் பிரச்சனையா இல்லை எல்லாருக்குமே அப்படித்தான் தெரிந்ததா?
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) இன்று ஆர் மேலோ உள்ள கோபத்தை எல்லாம், இங்கு கொமெண்ட் போட்டுக் குறைக்கிறீங்க போல இருக்கே:)...
Deleteகண் பிரச்சனையேதாஆஆஆஆஅண் உங்களுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
நல்ல அல்ஃபோன்ஸா, பங்கனப்பள்ளி, நீலன், மல்கோவா போன்ற மாம்பழங்களைக் கொடுத்தாலே டிஷ் எப்படிச் செய்வாங்கன்னு தெரியாது.
ReplyDeleteஇதுல கென்யன் மாம்பழத்தைப் போட்டிருக்காங்களே... இதை வச்சி என்ன செஞ்சிருப்பாங்க? அனேகமா மாவிளக்கு வைத்துவிட்டு, பக்கத்துல இந்த மாம்பழத்தை வச்சிருப்பாங்களோ?
///இதுல கென்யன் மாம்பழத்தைப் போட்டிருக்காங்களே///
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் என்ன வச்சுக்கொண்டோ வஞ்சகம் செய்கிறேன்:)... இதுதான் கிடைக்குது ஆனா சும்மா சொல்லக்கூடாது நெ தமிழன் நல்ல சுவீட்டாக இருக்குது தெரியுமோ...
ஆனாலும் என் மாம்பழ ரெசிப்பி பார்த்து நீங்கள் கொரோனா வராமலே மயங்கி விழப்போறீங்க:) ஹா ஹா ஹா:)...
சுளகு (அதுக்கு நீங்க என்ன பேர் சொல்லுவீங்க?) ல நீங்க வற்றல் போட்டு வச்சிருக்கீங்க. அழகா இருக்கு. ஊர்லேர்ந்து கொண்டு போனதா?
ReplyDeleteசுளகேதான் முன்பும் சொல்லி ப் படம் போட்டிருக்கிறேன் இங்கு...
Deleteஇது இந்தியாச் சுளகு நெ தமிழன், சின்னனாகவும் மெழுகியும் இருக்கு.
இலங்கைச் சுளகு பெரிசாகவும், மெழுகாமல் அப்படியே ஓலைப் பளபளப்போடு இருக்கும்.
அக்காக்களின் இந்திய நண்பர்கள் இதை அனுப்பினதில்( பல சுளகுகள்)... அக்கா எனக்கு வேணுமானதை எடுத்துக் கொண்டுபோகச் சொன்னா.
மிக்க நன்றிகள் நெல்லைத் தமிழன்.
சாத வடகப் பூமரமாக்கும் ...அடடா அழகு
ReplyDeleteபூஸ் உம் மீனும் செய்தேன் ...சூப்பர்
ஒரு கப் உளுந்துக்கு மூன்று கப் பாசிப்பருப்பு/பயற்றம்பருப்பு.....அட அரிசி இல்லாம தோசை யா ...அதில் பாதிக்கு பாதி அரிசியும் , பச்சை பயறும் சேர்த்து அரைத்து தோசை செய்தா அது பெசரெட்டை ன்னு சொல்லுவாங்க ...நல்லா இருக்கும்
அதிராஸ் பப்படம்...வித்தியாசம் ...
ஆற்றங்கரை காட்சிகள் அழகு ..
ஊசிகுறிப்பு ..உண்மை யோ உண்மை
வாங்கோ அனு வாங்கோ...
Deleteஹா ஹா ஹா அனைத்தையும் ரசிச்சிருக்கிறீங்க மிக்க நன்றி அனு.
அஆவ் !!! இப்போ தான் ரிலாக்ஸ்டா வரமுடிஞ்சது பிஞ்ச(வா )கோனவல்லி :)))))) என்கிட்டேயேவா
ReplyDeleteவெயிட் எ மினிட் :) நிறைய அருஞ்சொற்பொருள் இருக்கு அதை க்ளியரா சொல்லிட்டு வரென்
[im] http://s3.amazonaws.com/assets.prod.vetstreet.com/5c/1d/29740f154636858af697dbc3a217/cat-hiding-thinkstock-147061125-225sm121813.jpg[/im]
Delete///து யும்மா, பூஸ் உம் மீனும் செய்தேன்
ReplyDeleteஆனா காய்ந்ததும் உடைஞ்சு போச்ச்ச்:))//
அவ்வ்வ்வ் டைனோசர் மீன் மனுஷக்கலவையா இருக்கே நீங்க டிசைன் பண்ணின மீன் evolution படிச்சிட்டே மீன் வடாம் போட்ட மாதிரி இருக்கு :)அந்த ஷேப்
அதூஊஊஊஊஊஊஊ என்னில உள்ள கெட்ட பழக்கம் அஞ்சு, கொஞ்சமாகச் செய்யாமல் நிறையச் செய்வது... கொஞ்சம் என நினைச்சு ஆரம்பிச்சால், அரைச்சதும் நிறைய வந்திட்டுது, ரயேட்டாகிட்டேன்.. அதனால கையில் வருவதுபோல போட்டு முடிச்சேன்:)
Delete///நண்பி கேட்டா, அதிரா ரவ்வைத் தோசை//
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ் உங்க நண்பியும் ரவ்வைன்னு தான் விளிப்பாங்களா பிஞ்சு
// “அதிரா, தோசை எனில் அம்மா ஊரில் சுட்டுத்தந்ததுதான் தோசை தெரியுமோ?”.. என்றார் கர்ர்ர்ர்:)),//எந்தளவுக்கு நொந்துபோயிருப்பார் எப்பவோ சாப்பிட்ட அம்மா கைப்பக்குவதை இப்போ நினைக்கிறார்னா :))நீங்க தாளிப்பெல்லாம் மறக்க மாட்டிங்களே :) ஒருவேளை அம்முலு சொன்னாப்ல வேணும்னே செஞ்சீங்களா :)
//நீங்க தாளிப்பெல்லாம் மறக்க மாட்டிங்களே :) ஒருவேளை அம்முலு சொன்னாப்ல வேணும்னே செஞ்சீங்களா :)//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவுமே ஒரு அப்பாவியை ஜந்தேகப்படுவதே தொழிலாப்போச்ச்ச்ச்:))
//இது பொரிச்சது, வாயில அப்படியே....
ReplyDeleteசீஸ் போல்ஸ் சிப்ஸ் போல கரையுது...//cheese balls chips
ஹா ஹா ஹா அப்பப்ப என் செக் என்பதை நினைவூட்டிடுறீங்க:)) டாங்ஸ்:))
Deleteஆற்றங்கரை காட்சி அழகு .எங்களுக்கு வெயில் போயிடுச்சி .இன்னும் 2 வீக்ஸ்க்கு மழையும் கர்ர்ர்
ReplyDeleteஎங்களுக்கும் நேற்றிலிருந்து மழை ஆரம்பம்.. அதுவும் நல்லதுதான், நமகும் ஓய்வு தேவை ஹா ஹா ஹா வெயில் எனில் சும்மா இருக்கவே மனம் வருகுதில்லை... நான் இன்னும் கூழ் வடாம் செய்யப்போறேன்:))
Deleteஅப்பளம் டிசைன் வடம்லாம் நானும் போட்டேன் .அநேகமா அவங்க சொல்ற அளவு சோடா நாம் போடல்லை அதான் உப்பி வரல ..இதை அப்பளக்குழம்புக்கு யூஸ் பண்ணிடுங்க நல்லா வரும்
ReplyDeleteநல்ல ஐடியா ஏஞ்சல் அப்பளக் குழம்பு!!
Deleteநான் கூட ஏபி திங்கவில் ரெசிப்பி போட்ட நினைவு!!
கீதா
ஓம் அஞ்சு, நீங்க சொல்லி நான் எப்போ எதை?:)) செய்யாமல் விட்டிருக்கிறேன் ஜொள்ளுங்கோ:)).. இதையும் செய்கிறேன்.. ஹா ஹா ஹா
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு அப்பாவியை, ராக்னி.. டாக்கினி:)) வாங்க வைக்கப் பார்த்தீங்களே கர்ர்ர்:)).. நான் கொஞ்சம் உசாரானதால தப்பிட்டேனாக்கும்:))..
கீதா நான் விரைவில அப்பளக்குழம்பு செய்யப்போறேன்ன்.. முன்பு செய்தேன் ஆனா அது பெரிசாக வீட்டில் விருப்பமில்லை, இருந்தாலும் என் அப்பளத்தில் செய்து சாப்பிட வைக்கப்போறேன்ன்:))
ஹை சின்ன சித்தப்பா பாட்டு கேட்டதுமில்லை படம் கேள்விப்பட்டதுமில்லை .ஆனா நல்லா இருக்கே
ReplyDeleteஎன்னாதூஊஊஊஊஊ சின்ன சித்தப்பாவா?:)) கர்:)).. ஓ சித்தியின் ஆஸ்பண்ட்டாச்சே:)) அதனாலயோ ஹா ஹா ஹா:))
Deleteஊசி இணைப்பு //நமக்கானது //உண்மைன்னா உங்க நெக்லெஸ் எங்களுக்கு :)
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் தேர் யு ஆர்!!!!!!!
Deleteகீதா
அது பாருங்கோ.. நான் அனுப்ப மாட்டேன் என்றா சொன்னேன்:)).. அனுப்ப ஓசிச்ச அடுத்த நாளே கொரோனா லொக்டவுன் எனக் குயின் அம்மம்மா அறிவிச்சுப்போட்டா:)) இதில இருந்து என்னா தெரியுதூஊஊஊஊஊஉ?:) அது அதிராவுக்கானதூஊஊஊ அதனாலதான் அதிராவை விட்டுப் போகுதில்லையாக்கும்:))
Deleteவணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. மலர் செடி போன்று செய்த வடக மலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. உங்கள் ரசனையே தனி விதம். அதன் நடுவில் பிரகாசிக்கும் நீல கற்கள் (அது என்ன?) அதன் அழகை மேம்படுத்துகிறது.
அப்பளம், பப்படம், விதவிதமான டிப்ஸ்கள் என நீங்கள் அமர்க்களபடுத்துவதை பார்த்தால், கொரானா "நம்மை விரட்ட மருந்து, மாயம் எதுவும் வேண்டாம், இவர்கள் (மக்கள்) நம் வருகையை கொஞ்சமும் கண்டுக்காமல் இப்படி கொண்டாடி ஜாலியாக இருக்கிறார்களே..!" என்ற கடுப்பில், சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஹா.ஹா.ஹா.
சாதத்தை அரைத்து பயன்படுத்த கூடாது அது விஷமாகி விடும் என்றுதான் நானும் சகோதரி கோமதி அரசு அவர்கள் சொல்வது போல் சொல்வேன். அந்த காலத்தில் எங்கள் அம்மாவும் அப்படித்தான் சொல்லி இருக்கிறார்கள். இப்போதுதான் இந்த மாதிரி மிச்சமிருக்கும் அரிசி சாதத்தை வைத்து வடகங்கள் செய்வது பரவாயில்லையென வந்திருக்கிறது. அரிசி மாவு கரைத்து கூழ் செய்து மட்டுந்தான் அந்த காலத்தில் செய்வார்கள். ஆனாலும் நீங்கள் செய்த எல்லா வடகங்களும் பொறுமையாக செய்த பூ டிசைன் வடகங்கள் எல்லாம் நன்றாக உள்ளன. பாராட்டுக்கள்.
அவணில் வைத்து அப்பளம், வடாம் என பொரிக்கிறீர்களே..! உடம்புக்கு நல்லதா? எண்ணெயும் கெடுதல்தான். இது (அவண்) ஒன்றும் செய்யாதா ? எங்கள் வீட்டில் "அவனை" இது வரை வாங்கவில்லை. அதனால்தான் இந்த கேக் செய்வது, பிஸ்கெட்கள் செய்வது என இதிலெல்லாம் எனக்கு பழக்கமில்லை. இன்னமும் ஹைதர் அலி காலத்திலேயே வாழ்ந்து வருகிறேன். ஹா. ஹா. ஹா.
பீட்ரூட் வடகம், குட்டி குட்டியாய் பப்படம் என எல்லாமே நன்றாக வந்துள்ளது. அரிசி இல்லா இட்லி (வெறும் பருப்பு இட்லி) இதுவும் எனக்கு வித்தியாசமான செய்முறை தான். ஒரு நாள் வீட்டில் செய்ய வேண்டும். வீட்டில் எல்லோருக்கும் பிடிக்குமா என்றுதான் தெரியவில்லை.உங்களின் பல விதமான வித்தியாசமான முயற்சிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அரிசி பயன்பாடு உங்களுக்கு அதிகமாக இல்லையோ? ஏதோ ஒரு பதிவில் "அரிசி வாரத்திற்கு இரண்டு மூன்று தடவைதான் பயன்படுத்துவேன்" என நீங்கள் கூறியிருந்த ஞாபகம்.. அதனால்தான் கேட்கிறேன். இங்கு மதியம் லஞ்சுக்கு அரிசி சாதமில்லாமல், ஒருவரும் சாப்பிடவே விரும்ப மாட்டோம். அரிசி பழக்கம் எங்களுள் அவ்வளவு ஊறி விட்டது. (வயிறெனும் உலையில் அரிசி இடாத நாட்களே இல்லையெனலாம்.ஹா ஹா.) மிகுதிக்கு பிறகு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வாங்கோ கமலாக்கா வாங்கோ..
Delete//அதன் நடுவில் பிரகாசிக்கும் நீல கற்கள் (அது என்ன?) அதன் அழகை மேம்படுத்துகிறது.//
ஹா ஹா ஹா அது அழகுக்காக சாடிகளுக்குள், கண்ணாடிக்குள் போடும் கற்கள்..
//என்ற கடுப்பில், சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடும் என்றுதான் நான் நினைக்கிறேன்.//
ஹா ஹா ஹா அது என்னமோ உண்மைதான், ஏதும் தப்பு நடந்த இடங்கள் தவிர, ஏனைய எல்லோரும் கொரோனாக் ஹொலிடேயை நன்கு கொண்டாடுகின்றனர்..
//சாதத்தை அரைத்து பயன்படுத்த கூடாது அது விஷமாகி விடும் என்றுதான் நானும் சகோதரி கோமதி அரசு அவர்கள் சொல்வது போல் சொல்வேன்.//
ஓ ஆனா எல்லோரும் இப்படிச் செய்கிறார்கள் என்றுதான் நானும் செய்தேன்.. ஆனா அனைட்த்ஹு வடகங்களிலும் முதலிடம் பெறுவது, அரிசியை அரைச்சுக் கஞ்சி காச்சிச் செய்யும் கூழ் வடாம்.. அடுத்துத்தான் இந்த சாத வடாம்.. என்னைப்பொறுத்து..இனிமேல் நானும் கவனத்தில் கொள்கிறேன்..
அடுத்து வெயில் வரட்டும், இன்னும் கூழ் வடாம் செய்யும் ஆசை இருக்குது:)
//அவணில் வைத்து அப்பளம், வடாம் என பொரிக்கிறீர்களே..! உடம்புக்கு நல்லதா? எண்ணெயும் கெடுதல்தான்.//
Deleteஇல்ல கமலாக்கா, பப்படம் மட்டும் அதுவும் ஒருவருக்கு மட்டும் அவசரம் எனில் மைக்குரோவேவ் பாவிப்பேன்.. எண்ணெயில் பொரிக்கும் சுவை அதில் வராது.. வடகம் எண்ணெயில்தான் பொரிக்கோணும்... எண்ணெய் பாவிப்பதை முடிஞ்சவரை குறைப்பது வழக்கம், அதனால வெள்ளிக்கிழமையில் மட்டும் எண்ணெயில் பொரிப்பேன், சைவச் சாப்பாட்டுக்கு ஏதும் அப்பளம் வடகம் இருந்தால் நன்றாக இருக்குமெல்லோ..
இது மைக்க்குரோவேவ் என்பது தனியாகவும் வாங்கலாம், அவண் சேர்ந்தும் வாங்கலாம். தனியாக எனில் சாப்பாடு சூடாக்க இங்கு எல்லோரும் இதைப் பாவிப்பார்கள்.. டக்கெனக் குளிர்ந்துவிடுமெல்லோ சமைத்து முடிக்கும்போதே...
//இது (அவண்) ஒன்றும் செய்யாதா ?//
அவண் கெடுதி இல்லை கமலாக்கா.. இது நெருப்பில் அல்லது கரண்டில் வேக வைப்பது. ஆனா இந்த மைக்குறோவேவ்தான், கதிர்கள் மூலம் சூடாக்கும்.. இது ஓவராகப் பாவித்தால் உடம்புக்குக் கெடுதிதான், ஆனா வெளிநாட்டைப்பொறுத்தவரை, நாம் ஊரில் கேற்றிலுக்கு எவ்வளவு முக்கியம் கொடுப்போமோ.. அவ்ளவு முக்கிய இடத்தில் மைக்குறோவேவ் இருக்குது ...
//அரிசி பயன்பாடு உங்களுக்கு அதிகமாக இல்லையோ? //
Deleteமுடிஞ்சவரை குறைப்பேன் கமலாக்கா.. பிள்ளைகளுக்கு மட்டும் லஞ் க்கு கொடுக்க வேண்டி வரும், அதைக்கூட வாரம் 2,3 நாட்கள் வேறு ஏதும் செய்து மாத்துவேன். அவர்களுக்கும் சோறு கறி எனில் பெரிய விருப்ப்பம் இல்லை...
இரவில் சோறு, சாத வகை சாப்பிட மாட்டோம்.. அது நாங்கள் சின்னனிலிருந்தே அப்படித்தான்... இப்போ அரிசி உடம்பு வெயிட்டையும் கூட்டும் என்பதால, அரோகரா ஆக்க்கியாச்சு:)) ஹா ஹா ஹா..
மிக்க நன்றிகள் கமலாக்கா.
வணக்கம் சகோதரி
Deleteஉங்களின் அழகான பதிவுக்கு முன் தங்களின் தாமத பதில் ஒரு பொருட்டேயில்லை. நீங்கள் எப்போது பதில் தந்தாலும் சந்தோஷமே.. நாங்களும் (அதிலும் நான்) தாமதமாகத்தான் வந்து கருத்துக்கள் தருகி(றேன்)றோம்.
நீலக்கலரில் வடாம் பூவுக்கு நடுவே கல் மாதிரி தெரிந்தாலும், நீங்கள் ஏதாவது வடாகத்திலேயே வித்தைகள் செய்து கலராக்கி காட்டுகிறீர்களோ என நினைத்தேன். அதனால்தான் அது என்னவென்று கேட்டேன். விளக்கத்துக்கு மிக்க நன்றிகள்.
ஊசிக்குறிப்பாக அந்த ஆற்றங்கரை அழகு ரசித்துக் கொண்டேயிருக்கலாம் போல இருக்கிறது. பசுமை, எங்கும் பசுமை, எதிலும் பசுமை எதையும் கவனித்து ஆச்சரியப்படாதே..! என்னை மட்டும் ஆழ்ந்து கவனித்து ஆனந்தபடு என்கிறது.
நீரின் அழகோடு வாத்து ஜோடிகளும், அதன் வாரிசுகளும், அழகான பயணம். அலைகளோடு செல்லும் அதனை வெளிப்படுத்தும் நேரலை வர்ணிப்பாளரின் குரலும் சேர்ந்து ஆற்றின் அழகோடு போட்டியிட்டு கொஞ்சம் மயங்கவே வைக்கிறது.
"ஆற்றங்கரை மரமே அரச மர நிழலே" என ஒரு பக்கம் பாட வைக்கும் ஆற்றங்கரையில் வரிசையாக இருக்கும் அஜந்தா ஓவியங்களும் "கல்லிலே கலை வண்ணம் கண்டார்" எனப் பாட வைக்கின்றன. அருமை.
ஊசி இணைப்பும் அருமையான வாக்கியங்கள். அனைத்தையும் ரசித்தேன். தாமதமான கருத்துக்களுக்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா மறுபடியும் கமலாக்கா.. வாங்கோ வாங்கோ..
Deleteஅது உண்மைதான் ஸ்கொட்லாந்து பசுமை மிக்க நாடு, இயற்கை வளம் அதிகமுள்ள நாடு.. அதனாலதான் இன்றுவரை மக்களை இங்கு அனுமதிப்பதில்லை, தொழில் சார்ந்து வரும் மக்களையே எடுக்கின்றனர், பழமை பேணுகின்றனர்... நாட்டின் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் மக்கள் தொகை ஒரு சின்னிவிரல் நகத்தளவுதான் இங்குள்ளனர் எனலாம் ஹா ஹா ஹா..
//நேரலை வர்ணிப்பாளரின்//
ஹா ஹா ஹா....
மிக்க நன்றி, நன்றாக ரசித்துக் கொமெண்ட் போட்டிருக்கிறீங்கள்.
அப்பளங்கள் அதை டிசைன் செய்த விதம் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஉங்கள் வீட்டருகே ஆறும், மலையும் வெகு அழகாக இருக்கின்றது நல்ல இயற்கைச் சூழல்
வீடியோ நன்றாக இருக்கிறது
கடைசி வாசகம் அருமை உண்மை
துளசிதரன்
வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. நீங்களும் தவறாமல் கொமெண்ட் போடுறீங்கள்.. மிக்க நன்றிகள்.
Delete“கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்..
ReplyDeleteகாற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்:)”//
இது எதற்கோ?!!!! ஓ வெயில் போகும் சமயம் வற்றல் போட்டேன்னு சொல்லப் போறீஈங்களோன்னு நினைச்சேன் ஆனா நீங்கள்தான் வற்றல் அப்பளம் எல்லாம் போட்டது ஊருக்கே தெரியுமே!!! ஹா ஹா ஹா ஹா
பாட்டு இப்பத்தான் கேட்கிறேன் அதிரா ஆனால் ஓகே பாட்டு..
கீதா
வாங்கோ கீதா வாங்கோ...
Deleteஅது என்னால ஆரையும் ஆச்சிரமத்துக்குக் கூப்பிட்டு ஞானி ஆக்க முடியவில்லையே எனும் கவலையில போன சிட்டுவேசன் சோங் கீதா ஹா ஹ ஹா..
ஓ பாட்டு... நல்ல பாட்டுத்தான் கீதா.. நன்றி.
டிசைன் எல்லாம் ரொம்ப அழகா வைச்சு எடுத்துருக்கீங்க. எல்லா வற்றல் வ்டாமும் நல்லா வந்திருக்கு அதிரா!! பொக்கே!!!
ReplyDeleteநானும் சாதம் வ்டாம் போட்டேன். படம் தான் எடுக்கவில்லை. கேரட் போட்டு, தக்காளி ஜூஸ் போட்டு, கொத்தமல்லி, புதினா போட்டு ஓமம் போட்டு என்று ஜவ்வரிசி, அரிசிக் கூழ் எல்லாம் போட்டேன். இலை வடாமும்.
அப்புறம் வாழைக்காய் வற்றல் போட்டேன்.
கீதா
ஓ நீங்களும் அப்போ வடகம் எல்லாம் போட்டுக் கலக்குறீங்கள்... வாழைக்காய் வற்றலுமோ?.... இங்கு மரக்கறி வகைகள் கிட்டத்தட்ட வருடம் முழுவதும் ஒரே விலையிலதான் கிடைக்குது, மலிவதும் இல்லை, அதிகரிப்பதும் இல்லை.. உருளை வெங்காயம், கரட்.. இவைதான் அப்பப்ப மலிவாகும்... அதனால எனக்கு மரக்கறி வத்தல் போடும் நினைப்பு வரவில்லைக் கீதா.
Deleteசாதம் வடாம் நல்ல கரையும் வாயில் போட்டால் செமையா இருக்கும்..
ReplyDeleteபாசிப்பருப்பு இட்லி டயபெட்டிக் காரர்களுக்கு அரிசி இல்லாமல்தான் சொல்லுவாங்க. நானும் அரிசி சேர்க்காமல் செய்வேன். அது போல பாசிப்பருப்புக்குப் பதில் தோலுடன் உள்ள முழு பயறுதான். ரொம்ப நல்லா வரும் டேஸ்டும் செமையா இருக்கும் ஆனால் என்னால் ஒன்றிற்கு மேல் சாப்பிட முடியாது வயிறு உடனே நிரம்பி விடும்.
அதுவும் பாசிப்பருப்பு உளுந்து இரண்டுமே ப்ரோட்டின் அல்லோ....டயபட்டிக்காரர்களுக்கு இது பரிந்துரைக்கப்படும் ஏன்னா இது சாப்பிடும் போது டக்குனு சுகர் லோ ஆகாம நிறைய னேரம் தாக்குப் பிடிக்க முடியுமாக்கும்! அதான் முழு பயறு நல்ல நார்சத்து என்பதாலும் இவங்களுக்கு நல்லது. ஆவியில் அவிப்பதாலும். எண்ணை இல்லாமல்
இதை தோசையாகவும் செய்யலாம் அதிரா அதுவும் ரொம்ப நல்லாருக்கும்
கீதா
எங்களுக்கு இந்த சுவை பிடிச்சுப் போனது கீதா நல்ல சொஃப்ட்டாகவும் வந்தது.. அதில் தோசையும் செய்தேன் கீதா, படத்தில இருக்கு, ஆனா தண்ணி விடாமல், அப்படியே இட்டலி மாவையே தோசையாக வார்த்தேன்..
Deleteநான் இப்போ அனைத்து வகைகளுக்கும் பெருங்காயம் சேர்த்தே செய்கிறேன், அதனால வயிறு ஊதல் குறைவாக இருக்குது.. எனக்கு பயறு ஓகே, கொண்டைக்கடலை மற்றும் உளுந்து இரண்டுமே வயிறை ஊதப்பண்ணுது கர்ர்ர்ர்:))
இதே இட்லியில் கொஞ்சம் இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி காரத்திற்கு ப மிளகாய், பெருங்காயம் அல்லது சின்ன வெங்காயம் சின்னதா கட் செய்து எல்லாம் மாவில் தாளித்துக் கொட்டிச் செய்தாலும் ரொம்ப சூப்பரா இருக்கும் இஞ்சி கொஞ்சம் டைஜஷ்னுக்கும் உதவும். தோசையிலும் அப்படியே.
ReplyDeleteகேரட்டும் சேர்த்து செய்யலாம். அது ஒரு வித டேஸ்ட்
ஓ அட கீழே வந்தால் நீங்களும் செய்திருக்கீங்க போல!!! உனள் இட்லி தோகை சட்னி எல்லாம் நன்ராக இருக்கிறது. ரவா தோசை என்றால் தாளிக்காமல் செய்ய மாட்டோமே இங்கும்
கீதா
நன்றி கீதா, கரட்டும் போடுகிறார்கள் ஆனா அதெல்லாம் ரேஸ்ட்டை மாத்திவிடுமோ எனப் பயமெனக்கு, சும்மாவே தோசை இட்டலி விரும்ப மாட்டினம்... தோசைக்கு வெங்காயம் மிளகாய் நன்கு தாளிச்சுக் கொட்டி, நிறைய நல்லெண்ணெய் ஊத்திச் செய்தால் .. அதுதான் ஒரிஜினல் தோசை ரேஸ்ட் கிடைக்குது...
Deleteஆஹா நீங்களும் என்னைப் போலவா நானும் செஞ்சால் நிறைய செய்து எல்லாருக்கும் கொடுப்பேன். ஹைஃபைவ் அதிரா...
ReplyDeleteஇம்முறை தொற்று வந்து போச்சு கொடுக்க முடியலை. மகனுக்கும் அனுப்ப முடியலை.
உளுந்து அப்பளம் நம் வீட்டில் ஊரில் நாங்கள் நன்றாகப் பிசைந்து உரலில் போட்டு இரும்பு உலக்கையால் இடிப்போம். போட்டால் 500 1000 என்றுதான் தேய்ப்போம். பாட்டி உட்கார அவர்களைச் சுற்றி நான், என் அம்மா , என் மாமிகள் எல்லாரும் உட்கார்ந்து நாள் ஃபுல்லும் தேய்ப்போம் இதில் இரட்டை அப்பளம் என்றும் தேய்ப்போம். பிரண்டைச் சாறு சேர்த்துப் பிசைவோம்.
நீங்கள் சொல்லுவது போல் இது பிசைவதில்தான் இருக்கு.
சாஃப்டாகப் பிசைந்தால் ஓரம் எல்லாம் வெடிக்காமல் வரும். உளுந்து அப்பளம் நிறைய வேலை வாங்கும். என் பாட்டி அதைத் தொழிலாகவும் செய்தாங்க. நாங்கள் எல்லாம் படித்ததில் அப்படியான வருமானத்தில்தான். நிறைய இப்படி
கீதா
ஓ உங்கள் பாட்டி அப்போ பப்பட எக்ஸ்பேர்ட் எனச் சொல்லுங்கோ.. எல்லாமும் கைப்பக்குவம்தானே கீதா... செய்யச் செய்யத்தான் ஒவ்வொன்றும் பழகும், ஆனா உளுந்தில் பப்படம் செய்வது கொஞ்சம் கஸ்டமான வேலைதான்... இங்கு இடிக்கும் வசதி இல்லை அதனாலதான் மாவை சொஃப்ட்டாக்க முடியவில்லை..
Deleteஎல்லாமும் அழகா கொலாஜ் செய்து ரொம்ப நல்லா போட்டுருக்கீங்க
ReplyDeleteஉங்கள் வீட்டையும் அஆற்றையும் அருகில் மலையையும் எப்பவுமே நான் மிகவும் ரசிப்பேன் இப்போதும் ரசித்தேன்..
வீடியோ ஹா ஹா ஹா ஏஞ்சல் குடும்பம் உங்கள் குடும்பமா !! ஹா ஹா ஹா ஹா...உங்கள் குரல் நல்லாருக்கு இதுல க்ளியராவும் இருக்கு...வாத்துகள் போட்டி போல!! ஏஞ்சல் விடாதீங்க நீச்சலில் செகண்டுன்னு சொல்லறவங்களை வின் செய்யுங்க!!!! ஹா ஹா ஹா
கீதா
ஹா ஹா ஹா ரசிப்புக்கு நன்றி கீதா.
Deleteவீடியோ நல்லாருக்கு ரசித்தேன் என்ன அழகான இயற்கை!!! ஆற்றங்கரை ஓரம் அந்த பால்ஸ் அழகா அடுக்கி இருக்கு
ReplyDeleteஊசி இணைப்பு வெங்கட்ஜி யும் வாசகமா சொன்ன நினைவு. நல்ல வாசகம்...
எல்லாம் ரசித்தேன் அதிரா
கீதா
அனைத்துக்கும் மிக்க நன்றிகள் கீதா, நான் பதில்தரத்தான் ரொம்ப லேட்டாகிட்டேன் மன்னிச்சுக் கொள்ளுங்கோ.
Deleteஇவ்வளவு ஆர்வமா விதவிதமா வடகம் போட்டிருக்கீங்களே... அவ்வளவு செலவாகுமா? எண்ணெயில் பொரிப்பீங்களா இல்லை மைக்ரோவ் அவனிலா?
ReplyDeleteஉங்க ஊர் குளிருக்கு ரசம் சாதம், வடகம் நல்ல காம்பினேஷனா இருக்கும். இல்லை, வெறும்னகூட சாப்பிடலாம், டீக்கு முன்பு.
சும்மா கலாய்ச்சுப் பின்னூட்டம் போட்டிருந்தாலும், எல்லாமே அழகா இருக்கு. வாழ்த்துகள்
//சும்மா கலாய்ச்சுப் பின்னூட்டம் போட்டிருந்தாலும், எல்லாமே அழகா இருக்கு. வாழ்த்துகள்//
Deleteஆஆஆஆஆஆஅ இன்று நெல்லைத்தமிழன் கூலாகிட்டார்போல:)) ஹா ஹா ஹா இனி ஆறு சூடா இருக்கோ குளிராக இருக்கோ எனச் செக் பண்ணிப்போட்டுத்தான் போஸ்ட் போடுவேனாக்கும்:)) ஹா ஹா ஹா..
ஆனாலும் பாருங்கோ இதுக்கெல்லாம் காரணம் அஞ்சுதான் கர்ர்ர்ர்:)).. அவவும் என்னோடு ஒரு போஸ்ட் போட்டிருந்தால், முழு அடியும் அவவுக்கு விழுந்திருக்கும்:)), பின்பு என்பக்கம் வந்து புகழ்ந்திருப்பீங்கள்:)).. அவ போஸ்ட் போடாமையால மீ மாட்டிவிட்டேனாக்கும் ஹா ஹா ஹா.. இருங்கோ இப்பவே ஓடிப்போய் ஆளைத் தேம்ஸ்ல தள்ளிப்போட்டுத்தான் சமைக்கப்போகிறேன்ன்.. இப்பவெல்லாம் எங்கள் வீட்டின் லஞ் ரைம் 4 மணி என அறிவித்திருக்கிறேனாக்கும் ஹா ஹா ஹா:))..
மிகுதிக்குப் பின்பு பதில் தருகிறேன்:)
//இவ்வளவு ஆர்வமா விதவிதமா வடகம் போட்டிருக்கீங்களே... அவ்வளவு செலவாகுமா?//
Deleteசெலவு என்பதைவிட, இவை இங்கெல்லாம் கடையில் வாங்க முடியாது நெல்லைத்தமிழன், பப்படம் மட்ட்டும்தான் வாங்கலாம்..
ஆனா எனக்கு இப்படிச் செய்வது மிகவும் பிடிச்சிருக்குது, சரியான பயங்கர ஆர்வமாகவும் மனம் விரும்பியும் செய்தேன், அத்துடன் பயங்கர உற்சாகமாகவும் இருக்கும், காய்வதைப்பார்க்க ஹா ஹா ஹா...
//எண்ணெயில் பொரிப்பீங்களா இல்லை மைக்ரோவ் அவனிலா?//
எண்ணெயில்தான் பொரிப்பேன். சின்னவர்தான் ஏதும் பொழுது போகாவிட்டால் மைக்குரோவேவில் வச்சு எடுப்பார், அல்லது அவசரமாக தேவைப்பட்டால் பப்படத்தை வைத்து எடுப்பேன்... 30 செக்கண்டில் ரெடியாகிடும் ஹா ஹா ஹா..
மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன், மீள் வருகை தந்து பின்னூட்டங்கள் போடுவதற்கு.
இம்முறை வழமையை விட என் பதில்கள் தாமதமாவதற்கு வருந்துகிறேன், மன்னிச்சுக் கொள்ளுங்கோ விரைவில் பதில் தருவேன்...
ReplyDeleteமண்ணைத்தொட்டு கும்பிட்டாச்சு![[ பாடல் நீண்ட நாட்களின் பின் கேட்கின்றேன்.
ReplyDeleteவாங்கோ நேசன் வாங்கோ.. என் தாமதப் பதிலுக்கு மன்னிக்கவும்...
Deleteஉப்புவிக்க போனால் கொர்னா என்று துரத்தும் காலம் இது வடகம் எல்லாம் வேண்டாம்![[ அந்த ஆற்றங்கரையில் ஒரு வீடு வாங்கித்தந்தால் போதும்![[
ReplyDeleteநேசன்..கேட்கறதுதான் கேட்கறீங்க (இந்த கஞ்சாம்பட்டி அதிரா கிட்ட), கொஞ்சம் பெருசா கேட்கப்படாதா? பேசாம ஆற்றையே வாங்கித் தரச் சொல்லிடுங்களேன்.
Delete//(இந்த கஞ்சாம்பட்டி அதிரா கிட்ட)//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் என்ன வச்சுக்கொண்டோ வஞ்சகம் செய்கிறேன்:))..கொஞ்சம் பொறுங்கோ.. குயின் அம்மம்மாவின் காலம் முடியட்டும்:)), சொத்தெல்லாம் அதிரா பெயருக்கு வந்திடும்:)) அதுக்குப் பிறகு, என் ஆச்சிரமத்தில் மெம்பராக இருப்போருக்கு, கொஞ்சம் கொஞ்சமாக சொத்தில பிரிச்சுக் கொடுப்பேனாக்கும்:)).. அதனால இப்பவே ஆச்சிரமத்தில மெம்பராகிடுங்கோ:))
ஊசிக்குறிப்பு அருமை!
ReplyDeleteமிக்க நன்றிகள் நேசன்..
Deleteஎனக்கு ஒரு பக்கட் நட்சத்திர வடகம் ப்ளீஸ்.
ReplyDelete