நல்வரவு_()_


Sunday 27 October 2019

பக்தி முத்தினால் என்ன ஆகும்?:)

லைப்புக்கான பதிலைச் சொல்வதாக இல்லை இப்போஸ்ட்:), நான் எப்போ போஸ்ட்டையும் தலைப்பையும் சம்பந்தப்படுத்தியிருக்கிறேன்?:).. சரி இருந்தாலும் பக்தி முத்தினால் பழமாகுமாமே:) அதாவது ஞானப்பழம்:).. சரி அதெல்லாம் இப்போ நமக்கெதுக்கு.. என் முடிக்கப்படாத கதை இன்னும் இருக்கெல்லோ:).. அதைத் தொடரலாம் வாங்கோ.
சே..சே.. ஒரு போஸ்ட் எழுதவே ஒரு மாதமாகிடுதே:))

ங்கின விட்டேன் ஜாமி.. ஆஆ ரிச்மன் ஹில் பிள்ளையாரில விட்டேன் நினைவிருக்கோ.. அப்படியே ஊருக்குள்ள வாங்கோ.. கடகடவெனப் படமெடுத்திட்டேன், இப்போ படத்தை கரெக்ட்டான பெயருடன் தான் சொல்கிறேன் என நினைக்கிறேன், அப்படி இல்லாமல் கோயிலையும் போட்டு பெயரை மாத்திச் சொன்னால்தான் உங்களுக்கு என்ன தெரியவோ போகுது எனும் தெகிறியம் எனக்கு:) ஹா ஹா ஹா. இன்று வரும் கோயில்கள் அனைத்தும் கனடா ரொரண்டோவில் அமைந்திருப்பவை.

======================================================
கீழே இருப்பது மிக மிக அழகிய கோயில், துர்க்கை அம்மன் கோயில், உள்ளே நுழைந்தாலே அப்படியே அனைத்தும் மேலே இருந்து கீழேவரை தகதகவென தங்கம்போல ஜொலிக்கிறது, இப்போ சமீபத்தில்தான் புனரமைச்சு முடிச்சிருக்கிறார்கள், இது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரின் சொந்தக் கோயிலாக இருக்கிறதாம். தனிநபர் கோயில் என்பதால் மிகவும் சட்டதிட்டமாக நடத்தப்படுகிறது, படம் எடுக்கப்படாது என கண்டிப்பான உத்தரவு என்பதனாலும், நாம் போனபோது திருவிழாக்காலம்.. வசந்தமண்டபப் பூஜையாகி சுவாமி உள்வீதி சுத்திய நேரம், படம் எடுக்கவே முடியவில்லை.. இருப்பினும் பின் வீதியில் மட்டும் சிலதை எடுத்தேன்.

இன்னும் கோபுர வேலைகள் முடியவில்லைப்போலும் அதனால மூடப்பட்டிருக்கிறது

இவர் மூலஸ்தானத்தின் இடப்பக்க மூலையில் இருப்பவர்..

உள்வீதி பின்புறம் முழுவதும் இப்படி அழகாக நாயன்மார்களின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கு.. அத்தனையும் தங்கக்கலரில் மின்னுது அதனால படம் எதிரொளியாகி கிளியராக வரவில்லை.. வெயில் வேறு மேல் கண்ணாடியூடாக அடிச்சுக்கொண்டிருந்தது, அதிலும் ஒளிச்சு ஒளிச்செல்லோ படமெடுத்தேன்:)
உள் வீதி மண்டபத்துள்ளேயே அமைந்திருப்பவை..

==================இடைவேளை====================
ஆஆஆஆஆஆஅ நான் கோயில் கோயிலாகப் போய்க் கும்பிட்ட பலன்:), கடவுள் என்னைக் கைவிடவில்லை:), என் டமில்:) டி பற்றி இங்கின பேச்சே அடிபடேல்லையே:)) ஹா ஹா ஹா..
==============😺==============

இது கந்தசாமி கோயில், இதுவும் இப்போ புனரமைக்கப்பட்டு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வசந்தமண்டபப் பூஜை நடைபெறுகிறது..


முருகன் அப்பப்ப அதிராவைக் காப்பாற்ற, இந்த வாகனத்தில் ஏறித்தான் ஸ்பீட்டாக வருவார்:))
================================================

இது அடுத்து வருவது சிவன் கோயில். இது இனித்தான் பெரிதாக்கப் பட இருக்கிறது, இன்னும் கோபுரம் எல்லாம் கட்டப்படவில்லை.. நோட்டீஸ் படிச்சால் புரியும்.

உள்ளே சிலைகள் எல்லாம் அற்புதம், இங்கு படமெடுக்க எந்தத் தடையும் இல்லை[எழுதப்பட்டிருக்கவில்லை, இருப்பவும் எடுக்கவேண்டாம் எனச் சொல்லுவினமோ எனப் பயமாக இருந்தது], கூப்பிட்டுத், தட்டில் குழைசாதம் பப்ப்டம் பொரிச்ச மிளகாய் எல்லாம் தந்தார்கள்.

அங்கு இப்படி தண்ணி வைக்கப் பட்டிருந்தது, எனக்கு மிகமிகப் பிடிச்ச சிவலிங்கத்துக்கு இப்படி நீர் ஊற்றிக் கும்பிடலாம்.. ஆசையாக இருந்தது..
=============================================

இவர் வரசித்திவிநாயகர்... அன்று சின்னவரின் பிறந்ததினம், அவசரமாக வெளிக்கிட்டு ஓடினோம் பூஜை எல்லாம் முடிஞ்சு திரைச் சீலை இழுத்து மூடமுன் போயிட்டோம், அதனால அழகாக அர்ச்சனை பண்ணியவுடன் திரைச்சீலை போட்டார் ஐயா. 

அப்போதான் தேர் தீர்த்தம் நிறைவுற்று, பூங்காவனம்/வைரவர் மடை  என நினைக்கிறேன், அதனால மூலஸ்தான பிள்ளையாரை இப்படி மரக்கறிகள் பழங்களால் அலங்கரிச்சிருந்தார்கள். கொஞ்சம் பிந்தியிருந்தால் பார்த்திருக்க முடியாது திரை போட்டிருப்பார்கள்.. 

===============🙏===============

ஊசிக்குறிப்பு:)

ஊசி இணைப்பு

அதிரா ரெடியாகிட்டேன்ன்ன்ன் நீங்களும் ரெடியாகுங்கோ.. எதுக்கோ?.. ராஜேஸ்வரி அம்மனைப் போய்ப் பார்க்கத்தான்:)... அடுத்த தொடரில்...
😹😺😻😺😹

110 comments :

 1. /இப்போ படத்தை கரெக்ட்டான பெயருடன் தான் சொல்கிறேன் என நினைக்கிறேன்,  // 
  ஆமா சரியா சொல்றீங்க :) ஆனா இதே இடத்துக்கு போன் வேறோர் பதிவர் அவரை யாருக்கும் தெரியாது மை  இங்கிலிஷ் பிளாக் follower சொன்னாங்க உள்ளே படமெடுக்க கூடாதுன்னு .நீங்க எப்படி இப்படி எடுத்து வச்சிருக்கீங்க :) கனடா போலீஸ் ஓடி ஓடோடி கம்ம்ம்ம்ம் :)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா நான்தான் first :) அப்போ எனக்கு ஒரு பரிசு  வேணும் :) இனி அடுத்து 5 பேர் வர  எல்லாருக்கும் ஒரு ஆயாவை பரிசா என் சார்பா அனுப்பிடுங்க 

   Delete
  2. வாங்கோ அஞ்சு வாங்கோ.. முதலாவதா வந்திருக்கும் உங்களுக்கு ஏதாவது தரோணுமே:)). என்ன தரலாம்.... நீங்க அடிக்கடி பபபச்சைக்கல் நெக்லெஸ் கேட்பீங்க:)) ஆனா அதுக்குப் பதிலா.. என் பபபச்சை சுடிதாரை தரலாமென நினைச்சேன் ம்ஹூம்ம் அது சரிவராது:)).. அது உங்களுக்கு கை கூட உள்ளே நுழையாதாக்கும்:))).. வேணுமெண்டால் கொஞ்சம் பெரிய சைஸ்ல வாங்கி அனுப்புறேன் ஹா ஹா ஹா:))...

   ஆவ்வ்வ்வ் இம்முறை ஆயா ஸ்ரீராமுக்கே அஞ்சு.. அவ கந்த சஷ்டிக்கு நல்லபடி சமைச்சுக் குடுப்பா:).

   Delete
 2. உலகில் யாரும் தெய்வீக குணத்துடன் பிறப்பதில்லை //இதை கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன் .
   பக்தி முத்தினால் முக்தியாகும் :)) ஹஹஹாஹ் எப்படி மை கண்டுபிடிப்பு :)

  ReplyDelete
  Replies
  1. கண்டுபிடிப்புக் கரீட்டு அஞ்சு:)

   Delete
 3. ஒரு போஸ்ட் எழுத ஒரு மாதமாகுதா ??? நான் மூணு போஸ்ட் எழுதி எதை போஸ்ட் பண்ரதுன்னு கவலைல இருக்கேன் :) ஒன்றை போஸ்ட் பண்ணினா மற்றது கோபிக்குமே ஹாங் ஹீஈ ஹூ 

  ReplyDelete
  Replies
  1. மூண்டையும் ஒரே நேரத்தில பப்ளிஸ் பண்ணுங்கோ:)) எதுக்கும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிடுங்கோ:) ஏனெண்டால் மீக்கு ட்றம்ப் அங்கிளோட ஒரு மீட்டிங் இருக்காக்கும்:))..

   மனதில பல போஸ்ட் இருக்கஞ்சு, ஆனா என்னமோ போஸ்ட் எழுதும் ஆர்வம் குறைவாகுது என்பதே உண்மை..

   Delete
 4. அஆவ் !! தனி நபர் கோவிலா !!!! ரொம்ப அழகா இருக்கே

  ஹலோ மியாவ் டி மோடிக்கு வராது அது தி னு கீதாக்கா சொன்னாங்க எடப்பாடி கிரண் பேடிக்கு மட்டும் di வரும் 
  ஜிஎஸ்டி ல வரதும்  பெண்டாட்டி ல வரதும் t ட்டி :)
  உங்க தமிழ் மார்க் D மட்டுமே பிரசித்திபெற்ற D :))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்...   ஆமாம்...    நான் சொல்லலாமா என்று பார்த்தேன்...   நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் ஏஞ்சல்...

   Delete
  2. நோஒ மோதி அங்கிள் இல்லை அவர் மோடி அங்கிளாக்கும்.. கர்ர்ர்ர்:)).. நீங்க t வருவதை எல்லாம் டி போட்டுத்தானே எழுதுறீங்க எல்லோரும்.. டேபிள், டீ.. இப்படி, ஆனா அதிராதான் மாத்தி எழுதுவேன்.. இப்போ எதுக்கு டி வராது என்கிறீங்க.. மீ காண்ட் கோர்ட்டுக்கு இப்பவே போகப்போறேன்ன் மீக்கு நீடி வேணும்ம்ம்:))

   Delete
 5. ///பிள்ளையாரை இப்படி மரக்கறிகள் பழங்களால் அலங்கரிச்சிருந்தார்கள். //
  இந்த பழங்களை என்ன செய்வாங்க பூஜை முடிஞ்சதும் ??

  ReplyDelete
  Replies
  1. பழங்களில் பஞ்சாமிர்தம், காய்கறிகளில் கறி, சாம்பாறு எனச் செய்வார்கள் என நினைக்கிறேன் அஞ்சு.. அது அப்படியே மகளுக்கு குடுப்பினம், தீர்த்தம் போலதான்... கடவுளுக்குப் படைச்சது மக்களுக்கு சேரும்..

   Delete
 6. //கூப்பிட்டுத், தட்டில் குழைசாதம் பப்ப்டம் பொரிச்ச மிளகாய் எல்லாம் தந்தார்கள்.//

  எங்கே அங்கே தந்த குழை  சாதபடம் ??எனக்கு தெரியும் அதைப்போட்டா நாங்க உங்க கிரேட்டோ க்ரேட் ரெசிப்பி படத்தை வச்சி கம்பேர் செஞ்சு ஓரராயிரம் வித்யாசம் கண்டுபிடிப்போம்னுதானே போடலை :)))))))))))))

  ReplyDelete
  Replies
  1. நானும் அதற்கான படத்தைத் தேடினேன்.

   Delete
  2. ஹா ஹா ஹா அதை உண்மையில மறந்திட்டேன் எடுக்க.. ரொம்ப ரயேட் ஆகிட்டமா... வீட்டுக்குப் போனால் போதும் என்றாகிவிட்டது.. அவ்ளோ மத்தியான வெயில்.

   Delete
  3. @ஏஞ்சலின்— “ரொம்ப ரயேட் ஆகிட்டேன்” - குழை சாதம் சாப்பிட்டால் உடம்பு ரயர்டு ஆகுமா? ஜொள்ளவே இல்லை !

   ஐயையோ.. நாளை மெனு அதிரா குழை சாதம்னு நினைச்சுருந்தேனே.. மத்த வேலைகளும் இருக்கே.. சரி.. இன்னொரு லீவு நாளில்தான் முயற்சிக்கணும்

   Delete
  4. @நெ.த
   ////
   ஐயையோ.. நாளை மெனு அதிரா குழை சாதம்னு நினைச்சுருந்தேனே.//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் குழைஜாதம்:)) செய்யாதவரை கெட்ட கெட்ட கனவாவே வரும் நித்திரையில:))

   Delete
 7. எனக்கு ஒரேயொரு பெரிய டவுட் அது என்னனா இவ்ளோ செலவு செஞ்சி கோயில் கட்டி பராமரிக்கிறவங்க மூலாமூலைக்கு சிசிடிவியும் வச்சிருந்தா :) ஓர் ஆள் வசமா செல்போனோட மாட்டியிருக்கும் :) அதை கனடடிவியில் போட்டிருப்பாங்க :))

  ReplyDelete
  Replies
  1. ஹா...  ஹா.. ஹா...    வைக்காமலா இருந்திருப்பாங்க...?!!

   Delete
  2. சிசிடிவிலாம் இருக்கும். அதை செக்யூரிட்டிகளும் பார்த்துக்கிட்டு இருந்திருப்பாங்க. ஆனா அதிரா படம் எடுக்கறதைப் பார்த்து இந்தப் பெண் நாட்டியம் ஆடிக்கிட்டிருக்கு என நினைத்திருப்பார்களோ?

   Delete
  3. //AngelSunday, October 27, 2019 9:17:00 pm
   எனக்கு ஒரேயொரு பெரிய டவுட் அது என்னனா இவ்ளோ செலவு செஞ்சி கோயில் கட்டி பராமரிக்கிறவங்க மூலாமூலைக்கு சிசிடிவியும் வச்சிருந்தா :)//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு கொயந்தையை ஓவரா மிரட்டப்பிடாது:)).. முதல்ல கண்டுபிடிங்கோ எதுக்காக படம் எடுக்கக்கூடாது எனும் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்கிறார்கள் கோயில்களில்? எடுத்தால் என்ன? இந்தியாவில இலங்கையில எனில், நகைகள் திருடுவதற்காக , அதைத் தடுக்க என்கிறார்கள் ஆனா வெளிநாட்டில் எதுக்காக?.. கண்டுபிடிங்கோ ஆராட்சி அம்புஜமே?:)).. அப்போதானே அடுத்ததடவை அதிரா பயப்பிடாமல் படமெடுப்பேன்:))

   Delete
  4. //ஸ்ரீராம்.Monday, October 28, 2019 12:24:00 am
   ஹா... ஹா.. ஹா... வைக்காமலா இருந்திருப்பாங்க...?!!//

   ஆஆஆஆஆஆஆஅ கூட்டுச் சேர்ந்திட்டாங்கையா:)) நேக்கு குரு மாற்றம் சரியில்லைப்போல இருக்கே:)) நேற்றுத்தானே மாறிச்சுது:)).

   //ஆனா அதிரா படம் எடுக்கறதைப் பார்த்து இந்தப் பெண் நாட்டியம் ஆடிக்கிட்டிருக்கு என நினைத்திருப்பார்களோ?//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்... நான் படமெடுப்பது என் அருகில் இருப்பவருக்கே தெரியாதாக்கும்:)).. பிள்ளைக்கு எம்பூட்டு பக்தி:)) ஃபோனைக்கைக்குள் வச்சபடி கும்பிடுதே என நினைச்சு வியப்பினம்:)) ஹா ஹா ஹா.

   Delete
 8. கண்ணுக்கு மையழகு பாட்டு சூப்பர் பாட்டு எனக்கும் பிடிக்கும் 

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஞ்சு.. அதைப் பிடிக்காத நம்பாலார் இருக்க மாட்டினம்:)).. முன்பொரு காலத்திலும் இங்கு போட்டேன் இதை:).

   Delete
 9. ஆமா அந்த செல்வியை கோவிலில் வச்சா எடுத்தீங்க ?? எனக்கு பிடிச்ச பச்சை கலர் சுடிதார் ..பச்சை நிறமே பச்சைநிறமே ஹாஹாஹா 
  சரீ நான் செவ்வாய்கிழமைலருந்து பிசி காணோம்னு தேடாதிங்கா சொல்லிட்டே காணாமப்போகின்றேன் 

  ReplyDelete
  Replies
  1. //ஆமா அந்த செல்வியை கோவிலில் வச்சா எடுத்தீங்க ??//

   இல்ல அஞ்சு வீட்டில வெளிக்கிட்டு ரெடியானபோது.. கோயில் போய்ச் சேர, காரில் ஹை வேயில் கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் எடுத்தது.

   //எனக்கு பிடிச்ச பச்சை கலர் சுடிதார் //
   இதை அண்ணிதான் செலக்ட் பண்ணினவ எனக்கு.

   //சரீ நான் செவ்வாய்கிழமைலருந்து பிசி காணோம்னு தேடாதிங்கா சொல்லிட்டே காணாமப்போகின்றேன்//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்போ வேர்க்கா முக்கியம் புளொக்ஸ் ஆ முக்கியம்?:)) சே..சே.. பாருங்கோ அதிரா மட்டும்தான் வேர்க்குக்கு லீவு போட்டெல்லாம் உழைக்கிறேன் புளொக்குக்காக ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு..

   அதுவும் ஒரு பக்கம் நடக்கட்டும் இதுவும் ஒரு பக்கம் நடக்கட்டும்.

   எங்கட அம்மா படிச்சுக்கொண்டிருந்தபோதுதான் கல்யாணம் பேசத்தொடங்கினார்களாம், அப்போ அம்மாவின் ஒரு அம்மப்பா வந்து சொனனாராம் “பிள்ள கல்யாணம் பேசுகிறோம் என படிப்பை விட்டிடாதே, அதுவும் நடக்கட்டும் இதுவும் பேசுவோம் .. பின்பு முடிவை எடுக்கலாம்” என ஹா ஹா ஹா அப்பூடித்தான்.

   மிக்க நன்றி அஞ்சு.

   எனக்கும் மூட் வரும்போது போஸ்ட் போடுவேன், இல்லை எனில் பேசாமல் இருப்பேன்:).

   Delete
 10. கண்ணுக்கு மை அழகு.. இனிமையான பாடல்.  ஆனால் அதிகம் கேட்கும் லிஸ்ட்டில் இல்லாத பாடல்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

   அது உண்மைதான் நிறையப் பாடல்கள் பிடிக்கும் ஆனா ஒரு சிலதுதான் அப்படியே நெஞ்சுக்குள் என்னமோ பண்ணும்..

   Delete
 11. அதென்ன, அங்கு கோவில்கள் புனரமைக்கப்படும் நேரமா?  முதல் இரண்டு கோவில்களுமே புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன?  

  ReplyDelete
  Replies
  1. அப்படி இல்லை ஸ்ரீராம். புனரமைப்பு என்பது என்ன டக்குப் பக்கென முடிகிற விசயமோ.. சில வருடங்கள் எடுக்கும்போல, அதுவும் இந்நாடுகளில் விண்டர் காலங்களில் எதுவும் செய்ய முடியாதே. அப்படித்தான் இதுவும் பல வருடங்களாக ஆரம்பிச்சு இப்போதான் கொஞ்சம் முடிவுக்கு வருகிறது என நினைக்கிறேன், எனக்கு சரியான விபரம் தெரியவில்லை ஸ்ரீராம்.

   Delete
 12. அவர்கள் படம் எடுக்கக் கூடாது என்று சொன்னால் என்ன?   பிரகாரம் சுற்றுவது போல சுற்றி வரும்போது எப்படி நைஸாய் படம் எடுக்க வேண்டும் என்று கீதா அக்கா கற்றுக் கொடுத்திருந்ததை மறந்து விட்டீர்களா?!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அப்படித்தான் நைஸா எடுத்தவைதான் இவை:)), ஆனா முன்பக்கம் எடுக்க முடியவில்லை, பூஜை நடந்துகொண்டிருந்தது ஆட்களாகவும் இருந்தது. கோயிலில் வச்சு ஆராவது ஏதும் சொல்லிப்போட்டால் மனம் மிகவும் கஸ்டப்படும் எனக்கு, அதனால என்னில ஒரு பழக்கம், கோயிலில் என்றில்லை எங்கும் எப்பவும் ஆரும் எனக்கு பேசிடக்கூடாது என்பதில் குறியாக இருந்து.. பேச்சு வாங்கிடாமலே நடக்கப் பார்ப்பேன் ஹா ஹா ஹா.

   Delete
 13. ஏனோ அங்கு கோவில்கள் எல்லாம் சுத்தமாக இருந்தாலும் மிக செயற்கையாக இருப்பது போல என் மனதில் தோன்றுகிறது.  இங்கு பழைய கோவில்களைப் பார்த்துப் பழகி விட்ட காரணத்தினால் இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. உண்மை ஶ்ரீராம். நம்ம மைன்ட்செட்தான். எல்லாக் கோயில்களும் ஒண்ணு என்பது மனதில் எனக்கும் பதிவதில்லை. பாரம்பர்ய புராதான கோவில்களில் அதிக ஈர்ப்பு.

   ஆனா புலம் பெயர்ந்த நாட்டுல எல்லாம் புதுசாத்தானே கட்டணும்

   Delete
  2. உண்மைதான் ..நான் ட்ரிப் போகும்போது சிதம்பரம் தஞ்சை மங்களூர் மருதமலை என  பல இடங்களில் போயிருக்கிறேன் கோவிலின் அழகே அந்த பழைய பாரம்பர்யம்  அந்த நெய் தீபம்  வாசமும் பார்க்கும்போதே ஒரு தெய்வீகத்தன்மையும் இருக்கும் அது இந்த புதிதா கட்டின பளபள இடங்களில் இருக்காதுன்னு தோணுது ..தவறா இருந்த மன்னிச்சிக்கோங்க மக்களே 
   =============================
   //ஆனா புலம் பெயர்ந்த நாட்டுல எல்லாம் புதுசாத்தானே கட்டணும்//
   இதுவும் உண்மைதான் 

   Delete
  3. //ஏனோ அங்கு கோவில்கள் எல்லாம் சுத்தமாக இருந்தாலும் மிக செயற்கையாக இருப்பது போல என் மனதில் தோன்றுகிறது.//
   என்ன இப்படிச் சொல்லிட்டீங்க ஸ்ரீராம், இங்குள்ள ரொயிலட்டுகளிலேயே கீழே இருந்து கதை எழுதலாம்.. அவ்ளோ கிளீனாக பார்க்க அழகாக இருக்கும், அப்படி இருக்கையில் கோயிலை மட்டும் சுத்தம் இல்லாமல் வச்சிருக்க முடியுமோ.

   //இங்கு பழைய கோவில்களைப் பார்த்துப் பழகி விட்ட காரணத்தினால் இருக்கும்!//

   அது உண்மைதான், இதில இன்னொன்றை யோசிக்கோணும், இப்போ நமக்கு பழைய கோயிலாகத் தெரிவது, முன்பொருகாலத்தில் புதிசாகத்தானே இருந்திருக்கும். அப்படித்தான் இதுவும் இன்னும் பல வருடங்களில் புராதனக் கோயில் எனப் பேசப்படும் நம் கொள்ளுப்பேரப் பிள்ளைகளால் ஹா ஹா ஹா.

   Delete
  4. நம் நாட்டில் கோயில் கட்டுவதற்கும் இங்கு கட்டுவதற்கும் எவ்வளவு மனத்தைரியம் வேணும். அதாவது எல்லோரும் புதுசாக குடியேறி இருக்கிறோம், வெள்ளைகள் ஆட்சி, அவர்களின் பூமி, அவர்களில் மதம் இல்லாதோர், கடவுள் நம்பிக்கை இல்லாதோர்தான் அதிகம், சரி அக்டவுள் நம்பிக்கை இருப்போர் எனில் அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பினம், அப்போ அவர்களிடம் சென்று பெர்மிஷன் வாங்கி, பின்பு அதற்குரிய ஒரு இடம் தேர்வு செய்து.. நம் நாடுகள் எனில் மரத்தடியில் ஆரம்பிக்கலாம், இங்கு குளிர் என்பதால, பெரிய பெரிய ஸ்ரோர்கள் அல்லது கராஜ் களை எடுத்து, அங்கு பின்பு வெளிநாட்டில் இருந்து சிலைகளை வாங்கி, கப்பலில் வரவச்சு, அதனை வைப்பதற்காக இந்தியா இலங்கை மலேசியா சிங்கப்பூரிலிருந்து ஐயராட்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விசா எடுத்துக் குடுத்து, இங்கு இருப்பிட வசதி செய்து குடுத்து, இப்படி ஆரம்பித்து, பின்னர் மக்களின் நன்கொடை உதவிகளோடு அதனை கொஞ்சம் கொஞ்சமாக பெருப்பித்து இப்படி கோபுரம் கட்டிக் கோயிலாக்குவதென்பது எவ்ளோ பெரிய விசயம், வெளிநாட்டில் ஒரு வீடு வாங்குவதே எலோராலும் முடியாத வேலையாக இருக்கும்போது, இப்படி பெரிய பெரிய கோயில் கட்டி எழுப்புவதென்பது அதுவும் ஒரு தெய்வச் செயல்தானே.. ஏதோ கடவுளின் அனுக்கிரகம் இருப்பதாலதானே இப்படி முடிகிறது.

   Delete
  5. //
   நெல்லைத்தமிழன்Monday, October 28, 2019 6:48:00 am
   உண்மை ஶ்ரீராம். நம்ம மைன்ட்செட்தான். எல்லாக் கோயில்களும் ஒண்ணு என்பது மனதில் எனக்கும் பதிவதில்லை. பாரம்பர்ய புராதான கோவில்களில் அதிக ஈர்ப்பு.//

   உண்மைதான் நெல்லைத்தமிழன், அனைத்துக்கும் மனம்தான் காரணம், கடவுள் இல்லை எனச் சொல்வோர்போலதான் இதுவும்:)).

   ஆனா புதுசு பழசென்றில்லை, அங்கு நமக்குக் கிடைக்கும் பொசிடிவ் வைபிரேசனைத்தானே கவனிக்கோணும். நமக்கு எங்கும் கிடைக்காத ஒரு மகிழ்ச்சி மன உற்சாகம், கோயிலுக்குள் போனதும் வந்து விடுகிறதே, அதுக்கு காரணம் அங்கு சொல்லப்படும் மந்திரங்கள்தான் எனச் சொல்லுகின்றனர், அதில் உண்மை இல்லாமல் இல்லைத்தானே. ஒவ்வொரு சிலைகளையும் வைக்கும்பொது சும்மாவோ வைக்கின்றனர்.. எவ்வளவோ மந்திரங்கள் சொல்லி, ஐயராட்களும் விரதங்கள் இருந்து பயபக்தியோடுதானே ஆரம்பிக்கின்றனர்.. அப்போ அதிலிருந்து வரும் அதிர்வுகள் நம்மை எப்பவும் புத்துணர்வு அடையச் செய்யும், இதில் நம் கண்ணுக்குத்தெரியும் புதுசு பழசுக்கெல்லாம் காரணம் நம் மனம்தானோ என நினைக்கிறேன்...:).

   நாம் கோயில் மட்டுமென்றில்லை சேர்ச் களிலும் இப்படித்தானே அஞ்சு, அதனாலதானே ஆர் அங்கு போனாலும் மன அமைதி கிடைக்கிறது.. நமது சமயம் பார்த்தா கடவுள் நமக்கு நிம்மதியைத் தருகிறார் இல்லையே....

   Delete
  6. இங்கெல்லாம் கோயில் ஆகமமுறைப்படி கட்டியவை என்பதால் இங்கே உள்ள சாந்நித்தியம் வெளிநாட்டுக்கோயில்களில் இருக்காது. மஹாபெரியவரிடம் வெளிநாடுகளில் ஆகமமுறைப்படி கோயில்கள் கட்ட்டலாமா எனக் கேட்டதற்குக் கூடாது என்று சொல்லிவிட்டார் என்று கேள்வி. ஆகமம் முற்றிலும் அறிந்தவர்கள் இல்லை என்பது முதல்காரணம் என்பதோடு தென்னாட்டைத் தவிர மற்ற இடங்களில் ஆகமக் கோயில்கள் கட்டக் கூடாது என்பதும் அவர் சொன்னதாகச் சொல்லுவார்கள்.

   Delete
  7. உண்மைதான். மிக சரியாக சொல்லியிருக்கிறீங்க அதிரா..

   Delete
  8. கீசாக்கா, கடவுள், கோயில் விசயங்களில் அதிகம் எனக்கு கதைக்க விருப்பமில்லை... எல்லாம் கடவுள் மயம்.

   நன்றி அம்ம்முலு.

   Delete
 14. கடைசிப் படத்தில் இருப்பது நீங்களா?   அப்படித் தெரியவில்லையே...  ஊசிக்குறிப்பையும், ஊசி இணைப்பையும் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. //அப்படித் தெரியவில்லையே... //
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்கள் டவுட்டுக்குக் காரணம் என்னவோ? அது ராஜேஸ்வரி அம்மன் கோயில் ரொஜெஸ்டர்- நியூயோர்க் போக வெளிக்கிட்டபோது எடுத்ததாக்கும்...

   மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
  2. ம்ம்ம்ம்ம், நீங்களா அது? நம்பமுடியவில்லை, ம்ப முடியவில்லை, ப முடியவில்லை, முடியவில்லை, டியவில்லை, யவில்லை, வில்லை, ல்லை, லை, ஐஈஈஈஈஈஈஈஈஈஇ (எதிரொலி) நீங்க உங்க அக்கா பெண்ணையோ அல்லது வேறே யாரையுமோ ஃபோட்டோ எடுத்து நீங்க தான்னு போட்டுட்டீங்க! :)))))))

   Delete
  3. //நீங்க உங்க அக்கா பெண்ணையோ அல்லது வேறே யாரையுமோ ஃபோட்டோ எடுத்து நீங்க தான்னு போட்டுட்டீங்க! :))))///

   ஆவ்வ்வ்வ்வ் ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊ ஓடிக்கமோன்:) இதெல்லாம் அஞ்சுவுக்கு கண்ணு தெரியாதே கர்ர்ர்:))..

   கீசாக்கா அக்காவின் மகளைச் சொல்லுவினம் என்னுடைய இன்னொரு ஃபோட்டோக் கொப்பி என... ஹா ஹா ஹா.

   Delete
 15. கோவில் அழகாக உள்ளது...
  குறிப்பு + இணைப்பு அசத்தல்...

  ReplyDelete
 16. படங்கள் எல்லாம் அருமை. குறிப்புகளும் ஸூப்பர்...

  ReplyDelete
 17. பழங்களால் அலங்காரம் வெகு அழகு.

  படங்கள் பார்க்கப் பிடித்தன.

  விடுபட்ட பதிவுகள் அனைத்தும் இன்று தான் படிக்க முடிந்தது.

  தொடரட்டும் பதிவுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ... ஹா ஹா ஹா விடுபட்ட போஸ்ட் எல்லாம் படிச்சு முடிக்கிறீங்க பார்த்தேன்.. அனைத்துக்கும் நன்றி.

   Delete
 18. அயல் நட்டினர் இந்தியா வந்தால் கல்விக்கூடங்கள் அமைப்பார்கள் இந்தியர்கள் அயல் நாட்டுக்குப்போனால் கோவில்கள் கட்டுவார்க்சள் எங்கோ படித்தது

  ReplyDelete
  Replies
  1. கோயிலில்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்பது மூதுரை.

   அயல்நாட்டினர் கல்விக்கூடங்கள் அமைத்த காரணம் ஜி எம் பி சாருக்குத் தெரிந்தாலும் தெரியாத மாதிரி எழுதுவார். ஹா ஹா

   Delete
  2. அயல்நாட்டினர் வருவதற்கு முன்னர் நம்மவர்கள் தற்குறியாய் இருந்ததால் தான் எண்ணற்ற கோயில்களையும், அரண்மனைகளையும் கட்டினார்கள் போல! அதிலும் பிரபலமான காஞ்சி பல்கலைக்கழகம், நாளந்தா பல்கலைக்கழகம் இதெல்லாம் அயல்நாட்டினர் வந்து ஏற்படுத்தினாங்க போல!

   Delete
  3. வாங்கோ ஜி எம் பி ஐயா... கோயில்கள் இல்லாத காரணத்தால் அமைக்கிறார்கள், இந்தியாவில் பள்ளிக்கூடம் கட்டியது பற்றி எனக்குத் தெரியாதே.. நெ.தமிழனும் கீசாக்காவும் பொயிங்குகிறார்கள் பாருங்கோ ஹா ஹா ஹா.

   மிக்க நன்றி.

   Delete
 19. இதுதானே வேண்டாங்கிறது. பக்தி முற்றி அவரைக்காய் வற்றல் ஆனாலும் கடவுள் இல்லை என்று சொன்னவரை கடவுள்களுக்கு நடுவில் போட்டுவிட்டீர்களே. இது நியாயமா? 
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ..கடவுள் இல்லை எனச் சொன்னவர்ரோ? அதாரது? ஓஷோவையா சொல்றீங்க? ஆவ்வ்வ்வ்வ் எனக்கது தெரியாதே.. சரி சரி அதை விடுவோம் அவர் சொன்ன பொன்மொழியை எடுப்போம் ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   பக்திக்கும் முக்திக்கும் அவரைக்காய்க்கும் முடிச்சுப் போட்டுவிட்ட்டீங்களே கர்ர்ர்:))) ஹா ஹா ஹா .

   Delete
  2. ஹா ஹா ஹா ஒரு சிறு திருத்தம் அவர் தந்தை பெரியார்ர்.. ஏதோ நினைப்பில் ஓஷோ என்றிட்டேன்ன்:)) இதுக்கு இப்போ பலர் பொல்லுகள் தடிகளோடு ஓடி வந்தாலும் வருவினம், அதனால மீயே விளக்கம் தந்திட்டேன் ஹா ஹா ஹா பூஸோ கொக்கோ:))

   Delete
 20. பச்சைக் கலர் உடையில் இருப்பதா ராஜேஸ்வரி அம்மன்?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ... ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அம்மன் குற்றமாகிடப்போகுதே வைரவா:))..

   Delete
 21. ஒழுக்கம் பற்றிய விளக்கம் அருமை. பெரியாரின் விளக்கம் சரியானது

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், எனக்கும் வாக்குக் குடுத்துவிட்டு மீறுவது பிடிக்காது.

   Delete
  2. குழை சாதம் செய்து பார்க்கிறேன் என்று வாக்குத்தான் கொடுத்தேன். இன்றே செய்துபார்க்கிறேன் என்று சொன்ன மாதிரி நினைவில்லை. ஹா ஹா

   அதிரசம் எப்போ இடுகைல பார்க்கலாம்?

   Delete
 22. கோவில் படங்கள் (திருட்டு மாங்காய் மாதிரி... தி-ட்-ப் படங்கள் ) அருமை.

  மொபைலில் படிப்பதால் பெரிதுபடுத்திப் பார்க்க முடியலை.

  பிறகுதான் பார்க்கணும் அந்தச் சிலைகள் நாயன்மார்களா இல்லை பரிவார தேவதைகளான்னு.. ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எல்லோரும் மிரட்டி மிரட்டி இப்போ நான் பயந்துபோய் இருக்கிறேன்:)).. இனி, ஊர் பேர் சொல்ல மாட்டேனாக்கும் ஹையோ ஆண்டவா:)) ஹா ஹா ஹா.

   //பிறகுதான் பார்க்கணும் அந்தச் சிலைகள் நாயன்மார்களா இல்லை பரிவார தேவதைகளான்னு..//
   என்ன இது புதுசு புதுசா அறிமுகப் படுத்துறீங்க கர்ர்ர்:)) அவர்கள் நாயன்மார்கள்தான் ஆனா நான் பெயர் படிக்கவில்லையாக்கும்:)).. ஹா ஹா ஹா.

   Delete
 23. சின்னவர் பிறந்த நாளுக்கு கோவிலுக்கு சரியான நேரத்தில் போனது நெகிழ்ச்சி.

  சில நாட்கள் முன்பு பெண்ணின் நட்சத்திர பிறந்தநாளை மனைவி மறந்துவிட்டதில் பெண் அப்சட் (எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு எல்லோருக்கும் தெரியும் என்பதால் மீ எஸ்கேப்). சில நாட்களில் பிறந்த தினம் காலையில் நான் கோவிலுக்குக் கூட்டுச் செல்கிறேன்னு சொல்லியிருக்கேன்

  ReplyDelete
  Replies
  1. //பெண்ணின் நட்சத்திர பிறந்தநாளை மனைவி மறந்துவிட்டதில் பெண் அப்சட் (எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு எல்லோருக்கும் தெரியும் என்பதால் மீ எஸ்கேப்).//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்படியான விசயங்களுக்கெல்லாம் பெண்களைச் சாட்டிப்போட்டு எஸ்கேப் ஆகிடுவீங்க எல்லோரும்:)).. திகதி எனில் நினைவு இருக்கும், நட்சத்திரம் எனில் டெய்லி புழக்கத்தில் இல்லாததால் நினைவு வருவது கஸ்டம்தான்..

   //சில நாட்களில் பிறந்த தினம் காலையில் நான் கோவிலுக்குக் கூட்டுச் செல்கிறேன்னு சொல்லியிருக்கேன்//

   நீங்களும் மறந்திடாதீங்கோ..

   மகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

   உங்களுக்கும் அட்வான்ஸ் பிறந்ததின வாழ்த்துக்கள் நெல்லைத்தமிழன்....

   Delete
  2. நன்றி அதிரா. (என் மனைவி எல்லார் நட்சத்திரப் பிறந்த நாளையும் நினைவில் வச்சுப்பா. பெரும்பாலும் பெண்கள் இந்த விஷயத்தில் ஆண்களைவிட மேல்- இது அந்த மேல் இல்லை ஹா ஹா)

   Delete
 24. மயில் வாகனம் ரொம்ப அழகா இருக்கு.

  மயில்வாகனம்.. மலருடன் மன மோகனம் பாட்டு கேட்டிருக்கீங்களா?

  ReplyDelete
  Replies
  1. மனமே முருகனின் மயில் வாகனம்
   என் மாந்தளிர் மேனியே குகனாலயம்
   தான் கேள்வி பட்டு இருக்கிறேன்.

   Delete
  2. ஓ வாகனம் செப்பில் செய்யப்பட்டிருக்குது போலும்.

   பக்திப் பாடல்கள் ஊரில் தன் பாட்டில் கோயில் ஸ்பீக்கர்களில்/ரேடியோவில் இருந்து காதில் வாங்கியதோடு சரி, மற்றும்படி கேட்பதில்லை இப்போ... நினைவில்லை. கோமதி அக்காவும் இன்னொரு பாட்டுச் சொல்லியிருக்கிறாவே.

   Delete
  3. கோமதி அரசு மேடம் குறிப்பிட்டிருக்கும் பாட்டு ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

   ....குகனாலயம்
   என் குரலே செந்தூரின் கோயில் மணி
   அது குஹனே ஷண்முகனே என்று ஒலி கூறி நீ(?) அப்படீன்னு வரும்.

   நான் எழுதினது சஷ்டி விரம் படத்தில் (தேவர் பிலிம்ஸ்) பி.சுசீலா பாடினதுன்னு நினைக்கறேன்.

   கேட்டுப்பாருங்கள் (குவில்ட்ல தூங்கறதுக்குப் பதிலா ஹா ஹா)

   Delete
  4. //கேட்டுப்பாருங்கள் (குவில்ட்ல தூங்கறதுக்குப் பதிலா ஹா ஹா)//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இந்தக் குளிருக்கு குல்ட்டுக்குள் இருக்கும் சுகமே தனி.. கேட்கிறேன்.. நன்றி.

   Delete
 25. //உலகில் யாரும் தெய்வீகக் குணங்களோடு பிறப்பதில்லை// - இது தவறு. முன் வினைப் பயனாக, சிலர் ரொம்ப நல்லவங்களாகவும், சிலர் இயல்பாகவே பொறாமை பிடித்தவர்களாகவும், சிலர் தங்களைப் பற்றி ரொம்ப உயர்வாக நினைப்பவர்களாகவும், சிலர் கோபக் காரர்களாகவும், குணம் கெட்டவர்களாகவும் இருப்பதைக் கண்டிருப்பீர்களே.

  தங்கள் முயற்சியால் கெட்ட குணம் ரொம்பவும் வெளிப்படாமல் இருக்கச் செய்யலாமே தவிர, கட்டையோடு பிறந்தது குணம் (பிறக்கும்போதே பிறந்தது). நல்ல குணத்தோடு இருக்கறவங்க தன் மனதை இன்னும் நல்ல வழில செலுத்தி இன்னும் மேன்மை பெறலாம்.

  அதுனால, புலாலியூர் பூசானந்தா சொல்வதைத் தவிர மத்தவங்க சொல்றதெல்லாம் இங்க போடாதீங்க.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றது உண்மைதான் நெல்லைத்தமிழன், சிலரின் குணாதிசயங்களுக்குச் சொல்லுவினம், அது பிறவிக்குணம் திருத்தவே முடியாது என.

   ஆனா நாத்திகராக இருந்தவர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக மாறிய வரலாறும் உண்டெல்லோ... நம் கண்ணதாசன் அங்கிளும் அதில் ஒருவர்தானே.

   //அதுனால, புலாலியூர் பூசானந்தா சொல்வதைத் தவிர மத்தவங்க சொல்றதெல்லாம் இங்க போடாதீங்க//

   ஹா ஹா ஹா இதுவும் சரிதான், இப்போ கண்டபடி எழுதிவிடுகிறார்கள்.. நகைச்சுவை எனில் ஓகே, மற்றும்படி நம்பமுடியாது. யூ ரியூப்பிலும் அப்படியே கண்டநிண்ட மருந்துகள் சொல்கிறார்கள் கர்ர்:))

   மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.. மொபைல் வழியே கொமெண்ட்ஸ் போட்டிருக்கிறீங்க... நானும் பல சமயம் இப்படித்தான்..

   Delete
  2. //நாத்திகராக இருந்தவர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக மாறிய வரலாறும் உண்டெல்லோ.// - இது பிறவிக் குணம் கிடையாது அதிரா. இது சூழ்நிலையைப் பார்த்து வரும் குணம். இப்போ பாருங்க.. நீங்க சன்னிதி வச்சு, விளக்கேத்தி, அப்போ அப்போ கும்பிடுவதைப் பார்த்து, உங்க பசங்களும், உங்க அளவுக்கு இல்லைனாலும், இதெல்லாம் கொஞ்சம் ஃபாலோ பண்ணப் பார்ப்பாங்க. குறைந்த பட்சம், 'கடவுள் இல்லை.. இதெல்லாம் எதுக்கு' என்றெல்லாம் பொதுவா அவங்களாகவே பேச மாட்டாங்க.

   நீங்க சாமி கும்பிடுவதே கிடையாது, அந்த மாதிரி வழக்கமே வீட்டில் கிடையாது என்று இருந்தால், வளரும் பசங்களுக்கும் சாமியைப் பற்றி ஒரு எண்ணம் இல்லாமல் வளர்வாங்க. ஒருவேளை அவங்க நண்பர்கள் வீட்டுல சாமிலாம் பார்த்து, ஒரு சமயத்துல அவங்களும் பக்திமானாகலாம்.

   குணம் என்பது, கோபம், நல்ல மனசு, முன்கோபி, தடித்த வார்த்தைகள்ல பேசறது, ரொம்ப தன்மையா பேசறது போன்றவை. அவைகள் மாறுவது கடினம்.

   Delete
  3. உண்மைதான் நெ தமிழன். விளக்கமாக, விம் போட்டு விளக்கியிருக்கிறீங்க ஹா ஹா ஹா நன்றி நன்றி..!

   Delete
 26. வெளிநாட்டுக்கோயில்கள் அருமையாகவும் சுத்தமாகவும் இருக்கின்றன. இந்தியாவில் தமிழ்நாட்டில் திருச்சியில் ஸ்ரீரங்கம் கோயிலும் சுத்தமான கோயில் எனப் பெயர் பெற்றுள்ளது.

  நம்மாளு பழ அலங்காரத்தில் அருமையாக உட்கார்ந்திருக்கார். இப்போவானும் ஒழுங்கா நாயன்மார்கள் தான் அவர்கள் எல்லாம் என்று தெரிந்து கொண்டு தானே சொன்னீர்கள்? ஆனால் உங்க அக்கா கூட வந்திருப்பதால் அவங்க சொல்லிக் கொடுத்திருப்பாங்க! அதான்! இல்லைனா குழை ஜாதம் நினைப்பிலேயே கோட்டை விட்டிருப்பீங்க! :P:P:P:P

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. அங்கு உங்களுக்கு கிட்ட கோயில் இருக்கோ? தீபாவளிக்குப் போனனீங்களோ?.

   ஸ்ரீரங்கம் கோயில்தானே கீதா போடும் படங்கள்.. அது மிக அழகாக இருக்கு சுத்தமாகவும்.

   //நாயன்மார்கள் தான் அவர்கள் எல்லாம் என்று தெரிந்து கொண்டு தானே சொன்னீர்கள்?//

   ஹா ஹா ஹா கர்:)) நிறையப்பேர் இருப்பதனால அவர்கள் நாயன்மார்களாகத்தான் இருக்கும்:)).

   இல்ல அங்கு பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கு.. நான் படிச்சதா நினைவு வரேல்லை:)) ஹா ஹா ஹா.

   Delete
 27. பக்தி முத்துதுனு தலைப்பைப் பார்த்ததும் கந்த சஷ்டி விரதம் பத்தினு நினைச்சேன்.

  ReplyDelete
  Replies
  1. //பக்தி முத்துதுனு //

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நன்றி கீசாக்கா.

   Delete
 28. முதலில் இந்த் பாட்டுக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தேன், அப்புறம் கடைசியில்தான் தெரிந்தது உங்கள் மையிட்ட கண்கள் படத்தால்.
  பாடல் இனிமை.
  படம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

   //அப்புறம் கடைசியில்தான் தெரிந்தது உங்கள் மையிட்ட கண்கள் படத்தால்.//
   ஹா ஹா ஹா ஹையோ அப்படி நினைச்சு நான் போடவில்லை:)) இப்படியும் ஒரு பொருள் இருக்கோ:)) அது ரேடியோவில் நீண்ட காலத்தின் பின்னர் போச்சுது அதனால போட்டேன்:). நன்றி.

   Delete
 29. //இப்போ படத்தை கரெக்ட்டான பெயருடன் தான் சொல்கிறேன் என நினைக்கிறேன், அப்படி இல்லாமல் கோயிலையும் போட்டு பெயரை மாத்திச் சொன்னால்தான் உங்களுக்கு என்ன தெரியவோ போகுது எனும் தெகிறியம் எனக்கு:) ஹா ஹா ஹா. இன்று வரும் கோயில்கள் அனைத்தும் கனடா ரொரண்டோவில் அமைந்திருப்பவை.//

  நீங்கள் இப்படி சொல்லலாமா? எல்லோரும் கூகுளில் தேடி நீங்கள் சொல்லி இருப்பது சரியா தப்பா என்று பார்த்து விடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஹையோ கோமதி அக்கா, இனிமேல் பெயர் விபரம் சொல்லாமல்தான் படம் போடுவதென முடிவெடுத்து வச்சிருக்கிறேன் பூஸோ கொக்கோ:)) ம்ஹூம்:)) ஹா ஹா ஹா.

   Delete
 30. கோவில் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  பழம், காய்கறி அலங்காரம் மிக அருமையாக இருக்கிறது.
  63 நாயன்மார்களுக்கு தனி தனி சிறு மண்டபம் பார்க்க அழகு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி அக்கா, அது அந்த நாயன்மார்கள் அமைக்கப்பட்டிருக்கும் கோயில் ஒரு தனி அழகு... அப்படியே மண்டபத்தில் இருந்து மேலே அமைக்கப்பட்டிருக்கும் அழகையும் விக்கிரகங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

   Delete
 31. சின்னவர் பிறந்த நாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் பிள்ளையார் காட்சி கொடுத்து விட்டார் கொடுத்து வைத்தவர் சின்னவர். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், எங்களுக்காகவே திறந்து வச்சதுபோலவே இருந்தது, மகனுக்கு அர்ச்சனை பண்ணிமுடிச்சு விபூதி சந்தனம் குடுத்ததும் திரையைப் போட்டு விட்டார்..

   Delete
 32. //முருகன் அப்பப்ப அதிராவைக் காப்பாற்ற, இந்த வாகனத்தில் ஏறித்தான் ஸ்பீட்டாக வருவார்:))//

  அப்படியே எங்கள் எல்லோரையும் காப்பாற்ற சொல்லி சிபாரிசு செய்யுங்கள் அதிரா.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா சிபார்சு செய்வதொன்றும் பெரிய விசயம் இல்லை கோமதி அக்கா:)), அவர் எனக்கு ஃபிரெண்டூ மாதிரி:)).. ஆனா கொஞ்சம் செலவாகும் அது ஓகேயோ?:)).. பெரிசா ஒன்றுமில்லை வள்ளிக்கு ஒரு வைர ஒட்டியாணம் கொடுக்கோணும்:)) ஹா ஹா ஹா...

   Delete
 33. //அங்கு இப்படி தண்ணி வைக்கப் பட்டிருந்தது, எனக்கு மிகமிகப் பிடிச்ச சிவலிங்கத்துக்கு இப்படி நீர் ஊற்றிக் கும்பிடலாம்.. ஆசையாக இருந்தது..//
  வட நாட்டில் இப்படி சிவலிங்கத்திற்கு நாமே தண்ணீர் ஊற்றி கும்பிடலாம் இப்படி நிறைய கோவில் வழி எங்கும் இருக்கும்.

  காசியில் விஸ்வநாதருக்கு நாமே கங்கை போய் நீர் எடுத்து வந்து ஊற்றலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஓ அப்படியோ... நாம் இப்படி தண்ணி ஊத்துவதெனில் மகிழ்ச்சி எல்லோ. காசியிலுமோ.. ஸ்ரீராம் செய்யவில்லைப்போலும் கர்:) செய்திருந்தால் சொல்லியிருப்பார்:))..

   Delete
 34. எருமை மாட்டு தோல் இல்லாமல், சிறிது தண்ணீர் பட்டாலும் சிலிர்க்கும் பசு மாடு போல் நம் மனது இருக்கே!

  மனதை பலபடுத்த வேண்டும். ஞானி சொல்லும் கருத்தால். மரம் சாய்ந்து போனால் சிலை ஆகலாம். இந்த மனம் சாய்ந்து போனால் என்ன செய்வது!

  அதை திடமாக்க பயிற்சி செய்ய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அது உண்மைதான் கோமதி அக்கா.. மனம் தான் அனைத்துக்கும் காரணம், வருத்தம் உடலில் இல்லை மனதால்தான் உருவாகிறது...

   Delete
 35. வணக்கம் அதிரா சகோதரி

  கோவில் படங்கள் எல்லாம் அவ்வளவு அழகு. முதல் படமும் அதன் வாசகமும் மனதை கொள்ளை கொண்டன.

  அந்த பழங்கள் காயினால் அலங்கரிப்பட்ட பிள்ளையார் வெகு அழகு. எல்லாமே புனரமைப்பு செய்யும் கோவிலாக சென்றுள்ளீர்கள். எல்லா கோவில்களும் மிக அழகாக உள்ளது. உங்கள் மகன் சின்ன வருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். சீரோடும், சிறப்போடும் ஆரோக்கியமாக பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். தாமதம் என்றாலும், நீங்கள் சொன்னவுடன் வாழ்த்து கூறுவதில் தவறில்லை எனவும் நினைக்கிறேன்.

  ஊசிக்குறிப்பு, ஜோக் என அனைத்தும் நன்றாக இருக்கிறது. நான் வெளியிலிருந்து வந்தவுடன் தங்கள் எ. பியின் ரெசிபிக்கு பதிலளித்து விட்டேன். அதுவும் நன்றாக வந்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..
   //எல்லாமே புனரமைப்பு செய்யும் கோவிலாக சென்றுள்ளீர்கள்//

   அப்படி இல்லை, பெரும்பாலும் அனைத்துக் கோயில்களும் கொஞ்சம் கொஞ்சமாக பெருப்பித்துக் கொண்டு வருகிறார்கள். சின்னவரை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள்.. டெய்லி வாழ்த்தினால்கூட தப்பில்லையே.. டெய்லி எல்லோரையும் வாழ்த்த வேஎண்டும் எனத்தான் சொல்கிறார்கள்.

   ஹா ஹா ஹா என் வத்தலுடன் தான் இன்று சாப்பிட்டிருக்கிறீங்கள். மிக்க நன்றி கமலாக்கா.

   Delete
 36. முதல் படமே அழகா இருக்கு. //இவர் மூலஸ்தானத்தின் இடப்பக்க மூலையில் இருப்பவர் // கர்ர்ர்ர்ர்ர்ர் ...ஏன் பிள்ளையார்,விநாயகர் என சொல்லாம்தானே. அதென்ன இடப்க்க மூலையில் இருப்பவர்.
  கந்தசுவாமி கோவில் பார்க்க ஊர் கோவில் ஞாபகம் வருது. பழங்களால் அலங்கரிக்கப்பட்ட கணேஷர் அழகு.நீங்க சொன்னமாதிரிதான், அத்தோடு சிலவற்றை ஆட்களுக்கும் கொடுப்பார்கள். பக்தி மயமான பதிவு. அஞ்சு பாடியபாட்டையே நானும் ரிப்பீட்டு....பச்சை நிறமே..பச்சை நிறமே.. அழகா இருக்கிறீங்க. சங்கமித்திரை இந்த பதிவு எழுத்து பிழையில்லாமல் இருக்கு!!!குட்
  கண்ணுக்கு மை அழகு பாட்டு என்னால் மறக்கமுடியாத பாட்டு.. என் திருமண வீடியோவில் மணப்பெண்ணை அலங்கரித்து கொள்ளும் போது போட்ட பாடல்.. ஷையா வருது. நல்ல பாட்டு. எனக்கு பிடிக்கும்.
  இரண்டு ஊசிகளும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ...

   //கர்ர்ர்ர்ர்ர்ர் ...ஏன் பிள்ளையார்,விநாயகர் என சொல்லாம்தானே//

   ஹா ஹா ஹா அது செல்லமாக விளையாடினேன் குண்டுப்பிள்ளையாரோஒடு அது டப்பா?:)).

   //அழகா இருக்கிறீங்க. சங்கமித்திரை இந்த பதிவு எழுத்து பிழையில்லாமல் இருக்கு!!!குட்//
   ஹா ஹா ஹா நன்றி நன்றி நான் இப்போ முன்னேறிட்டேனெல்லோ:))..

   ஓ திருமண வீடியோப்பாட்டோ அப்போ எப்படி மறக்க முடியும்..

   மிக்க நன்றிகள் அம்முலு.

   Delete
 37. தமிழில் டி வாங்கியவர் டி படுத்தும் பாடு பற்றி எழுதியிருந்தது நன்றாக இருந்ததுடி. சாரி ஒரு ஃபிளோவில் வந்துவிட்டது. 
  கனடாவில் இத்தனை அழகான கோவில்கள் உள்ளதா? என் மகள் துர்க்கை அம்மன் கோவில் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறாள். 

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ பானுமதி அக்கா.. ஹா ஹா ஹா பானுமதி அக்காவுக்கும் இப்போ ஃபுளோல வருதே வார்த்தைகள்:))..

   கனடாவில் நிறையக் கோயில்கள் உண்டு பானுமதி அக்கா.. இன்னும் சரியாக கட்டப்படவில்ல்லை, எல்லாக் கோயிலும் இப்போ பணம் சேர்க்கிறார்கள் இன்னும் ஒரு பத்து/15 வருடத்தில் மிக அழகழகாக கோபுரங்களோடு மிளிரும் என நினைக்கிறேன்...

   மிக்க நன்றி.

   Delete
 38. //மூலஸ்தான பிள்ளையாரை இப்படி மரக்கறிகள் பழங்களால் அலங்கரிச்சிருந்தார்கள். // - எந்த எந்தக் காய்களால அலங்கரிச்சிருந்தாங்க?

  ஆரஞ்சு, மஞ்சள் வண்ண குடமிளகாய், பச்சை நிற பஜ்ஜி மிளகாய், வெண்மை நிற பெரிய கத்தரி, வயலட் நிற வழுதுணங்காய் (கத்தரியில் ஒரு வகை), கேரட், சோளக்கதிர், ஆரஞ்சு.

  எதிரில் சாத்துக்குடி (அல்லது மஞ்சள் நிற ஆரஞ்சு), திராட்சை.

  இதெல்லாம் அங்கே உள்ளூரில் விளையும் காய் கனிகள் போலிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ///எந்த எந்தக் காய்களால அலங்கரிச்சிருந்தாங்க?//
   ஹா ஹா ஹா நீங்க வேற நெ.தமிழன்:), படமெடுக்ககும் படபடப்பில் அதை ஆர் கவனிச்சது:).. நல்லவேளை படமெடுத்தமையால இங்கு யூஊஉம் பண்ணித்தான் நானும் பார்க்கிறேன் ஹையோ ஹையோ கணபதியே நமக!!:).

   உங்களுக்கு ஒன்று சொல்லோணும் நெ.தமிழன், கனடாவில் நம்மவர்கள் காணி வாங்கி தோட்டம்.. விவசாயம் செய்கினமாமே.. சம்மரில தம் தோட்ட மரக்கறிகள், கீரை வெங்காயம் எடுத்து வந்து கடைகளில் கொடுக்கின்றனர் விற்றுத்தரும்படி ஹா ஹா ஹா.. இப்படியானோர் கோயிலுக்கும் க்டுப்பினம் என நினைக்கிறேன்ன்...

   இப்படி நிறைய நியூஸ் இருக்கு சொல்வதற்கு... மிக்க நன்றிகள் நெ.தமிழன்.

   Delete
  2. பஹ்ரைனில், பங்களாதேசிகளை (கேரளத்தவர்களும் உண்டு) தங்கள் தோட்டத்தைப் பார்த்துக்கொள்ள அரபிக்கள் நியமிப்பார்கள் (தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே அரபிக்களின் மாளிகை உண்டு. இவங்களுக்கு தோட்டத்தின் பக்கத்தில் சிறிய வீடு உண்டு). இவர்கள் அங்கேயே முட்டைக்கோஸ், கீரை போன்றவற்றை விளைவித்து மார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள். மல்லிகைப்பூ, அகத்திக் கீரை முருங்கை போன்றவற்றையும் விளைவிப்பார்கள்

   Delete
 39. அழகிய படங்களுடன் கோவில் தரிசனம்.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.