நல்வரவு_()_

****
என்ன பாட்டோ என நினைத்து வந்திருந்தால் மன்னிக்கவும்:))

Monday, 4 April 2011

என் எழுத்து:)பெண் எழுத்து அதுதானே “என் எழுத்து”.

முதலில் என்னை “பெண் எழுத்து” எனும் தொடருக்கு... “ஹைலைட்ல” அழைத்த வானதிக்கு நன்றி(கர்ர்ர்ர்ர்:)) சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.

என்னை தெரிஞ்சோ தெரியாமலோ அழைத்துவிட்டீங்க, இனி என் அலட்டலை எல்லாம் பொறுமையோடு கேளுங்க.

“பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” .. இது ஒளவையார் சொன்னது(யாரும் குறுக்க பேசிடக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:))

இதைவிட வேறென்ன வேணும் பெண்ணெழுத்திப் பற்றி பெருமையாக சொல்லுவதுக்கு.இந்த மசாஜ் போதுமா?:))))

ஒவ்வொரு பெண்ணின் எழுத்துக்கும் பின்னால் ஒரு ஆண்தான் உறுதுணையாக இருக்கிறார். வலைப்பூக்களை எடுத்துக்கொண்டாலே திருமணமான பெண்கள்தானே அதிகம் வலைப்பூவில் எழுதுகிறார்கள்(நானறிந்து). அவர்களின் ஊக்கத்துக்கு கணவர்தானே காரணம். என்னைப்பொறுத்து பப்ளிக்கில் கதைக்கவே எனக்கு பயம், ஒவ்வொரு விஷயத்தையும் கணவரோடு பகிர்ந்து பகிர்ந்துதான் என் தன்னம்பிக்கையை வளர்த்து.... வலைப்பூவை இதுவரை ஓட்டிவந்திருக்கிறேன். யார் என்ன பதில் போட்டாலும், என் கணவர் ஒரு வார்த்தை “நீங்கள் எழுதியிருக்கும் விதம் நன்றாக இருக்கு” எனச் சொல்லிவிட்டாலே எனக்கு போதும், மனம் சோராது.

சரி விஷயத்துக்கு வருவோம். நான் ஓடி ஓடி நிறையப் பேரிடம் கேட்டுவிட்டேன்.. அனைவரும் சொல்கிறார்கள்... பெண் எழுதினால் அது பெண் எழுத்துதானே என. அதைத்தானே நான் தினமும் எழுதிக்கொண்டிருக்கிறேன் அதையும் மீறி பெண் எழுத்துப் பற்றிக் கேட்டால் நான் எங்கே போவேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.

எந்த ஒரு நல்ல விஷயத்தையும் எவர் ஒருவர் அழகாக வெளிப்படுத்துகிறாரோ.. அது பாராட்டப்படவேண்டியதே, இதில் பெண் என்ன ஆண் என்ன? எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. பெண்ணின் எழுத்துக்கு வரையறை இருக்கு என்கிறார்கள், இந்த வரையறையைக் கொண்டுவந்தது யார்? எதிலாவது சட்டம் தீட்டப்பட்டிருக்கோ?. பெண்ணுக்கு மட்டுமல்ல, பப்ளிக்கில் எழுதும் ஒவ்வொருவருக்கும் வரையறை வேண்டும், இதில் பெண்ணை மட்டும் குறிப்பிட என்ன இருக்கு.

பெண் உடைக்கு வரையறை, ஒழுக்கத்துக்கு வரையறை... இதையெல்லாம் நம்மவர்தான் கொண்டுவந்தார்கள், சரி அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பெண் எழுத்துக்கு வரையறை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

அதாவது ஒரு கதை படிக்கிறோம்.. அதை யார் எழுதியது என்பதனைத் தெரிந்துகொண்டு படிப்பதற்கும், தெரியாமல் படிப்பதற்கும் மனதளவில் நிறைய வேறுபாடு இருக்கிறது. எம் மனம்தான் அனைத்துக்கும் காரணம்.

 சமீபத்திலே, ரீவியிலே ஒரு பேட்டி நிகழ்ச்சியில் ஒருவர் கலந்து கொண்டார். அவர் வலைப்பூக்கள் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னார். அதில் அவர் சொன்னது. யாரும் வலைப்பூ ஆரம்பிக்கலாம், அது ஒரு பெரிய விஷயமே இல்லை, அதுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது, ஏனெனில் அது அவரவர்க்கு சொந்தமானதே. அதில் அவர் எதையும் எழுதலாம், ஆனால் ஆரம்பத்தில் எப்படி எழுதுவது எதை எழுதக்கூடாது என்றெல்லாம் புரியாது, சிலகாலம் போக, தாமாகவே புரிந்துகொண்டு, தமக்கென ஒரு வரையறையை உருவாக்கிக் கொள்வார்கள்.. அதாவது அடுத்தவரை தாக்கிடாமல், அடுத்தவர் மனம் புண்படாமல் எழுதப்பழகிடுவார்கள் என்று சொன்னார்.

அது உண்மையே, வரையறை என்பது இருபாலாருக்கும் பொதுவான ஒன்றென்பதுதான் என் கருத்து. ஒவ்வொருவருக்கும் என ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது, ஒரு நிகழ்வை வெளிப்படுத்தும் விதம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.

உதாரணமாக ஒரு பூனை மரத்திலே இருந்ததைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பார்த்த விதத்தை ஒருவர் கையை அசைத்துக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் கண்ணையும் விரித்து கையையும் ஆட்டிக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் உடல் அங்கம் அனைத்தையுமே அசைத்துச் சொல்வார், இன்னொருவர் ஆடாமல் அசையாமல் சொல்வார்... இப்படிப் பலவகை உண்டு. இப்படித்தான் பெண் எழுத்தும்... ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்....

அதேபோல, அதை ரசிப்பவர்களுக்கும் தம் ரசனைக்கேற்ப ஒவ்வொருவிதம் பிடிக்கும். ஒவ்வொரு பெண்ணின் எழுத்து நடையும் ஒவ்வொரு விதமாக(ஸ்டைலாக) இருக்கும், அதனை மாற்ற முடியாது.... முடிவு என்னவென்றால்..... “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”.

நான் எப்பவுமே எதையுமே தப்பான கண்ணோட்டத்தில் படிப்பது மிக மிகக் குறைவு, எதுவாயினும் எனக்கு சாதகமாக மாத்திப் படிப்பதுதான் வழக்கம். அதிலும் சமீபத்திலே ஒரு பதிவில் ஜெய்... சொன்னார் “மாத்தி யோசியுங்க” என, அதுவும் ஆழமாக மனதில் பதிஞ்சுபோச்ச்ச்ச்ச்.. இப்போ பலதையும் மாத்திமாத்தி யோசிக்கிறேன். (தப்பாக அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

யாம் பெற்ற இன்பம் பெறவேண்டாமோ இவ் வையகம்.... அதுக்காகத்தானே நான் அழைக்கிறேன்....

ஜலீலாக்கா, இமா, இலா, சந்தனா.
ஃபோர் எ சேஞ்..... ஜெய்...(100 உடன் 101 ஆக உங்கட எழுதாமவிட்ட லிஸ்ட்ல இதையும் சேர்த்திடுங்க அவ்வ்வ்வ்வ்வ்).

ஐவரையும் அழைத்திருக்கிறேன்..... எழுதினால் சந்தோஷம், எழுதாதுவிட்டால் அதைவிட சந்தோஷமா?:)) எனக் கேட்டிடாதீங்க கர்ர்ர்ர்ர்ர்.... நான் எதுக்கும் கோபிக்கப்போறதில்லை. இதென்ன பணத்துக்காகவா தொடர்ப்பதிவு நடத்துகிறோம்.... ஒரு மகிழ்ச்சி, பொழுது போக்கிற்காகத்தானே.... இதில் கோபித்து முகம் சுழிக்க என்ன இருக்கிறது, தலைப்பு பிடித்திருந்தால், உங்களால் எழுதமுடிந்தால் எழுதுங்கோ.

=========================================================
இது அன்புத் தம்பி ஜீனோ, அக்கா அடிக்கடி கர்ர்ர்ர்ர் சொல்லிச்சொல்லி பல்லுப் பழுதாகியிருக்குமாம் என புதிதாக ஒரு பல்செட் அனுப்பியிருக்கிறார்.... வைரம் பதித்தது.... இப்ப நான் இதோடுதான் திரிகிறேன்....:) (தம்பிக்கு அக்காவில் இருக்கும் அக்கறை, வேற ஆருக்குமே இல்ல:)).


============================================================================
இல்ஸ் உம் ஒரு பெரிய கயிறு அமெரிக்காவில இருந்து அனுப்பியிருக்கிறா, ஏதும் பிரித்தானியாவில நிலநடுக்கமென்றால்.... இதைப் பிடிச்சு ஏறி அங்கின வந்திடட்டாம்... நுனியை(கயிற்றின்) அவ இறுக்கமாகப் பிடிச்சிருக்கிறா....

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

ஊசி இணைப்பு:
TODAY A READER TOMORROW A LEADER

62 comments :

 1. //உதாரணமாக ஒரு பூனை மரத்திலே இருந்ததைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பார்த்த விதத்தை ஒருவர் கையை அசைத்துக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் கண்ணையும் விரித்து கையையும் ஆட்டிக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் உடல் அங்கம் அனைத்தையுமே அசைத்துச் சொல்வார், இன்னொருவர் ஆடாமல் அசையாமல் சொல்வார்... இப்படிப் பலவகை உண்டு. இப்படித்தான் பெண் எழுத்தும்... ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்....
  //

  ha ha ha சிரிச்சு முடியலை.... ஹ ஹ ஹா.... செம!!

  ReplyDelete
 2. சூப்பரா சொல்லிருக்கீங்க,அதிரா!!

  ReplyDelete
 3. நல்லா இருக்கு அதிரா உங்க எழுத்து! கிட்டத்தட்ட ஒரே மனநிலை இருக்கும் ஆட்களாப் பார்த்து தொடர்பதிவுக்கு கூப்பிட்டுடாங்க வானதி! :)

  கூடவே அங்கங்கே எட்டிப்பார்க்கும் வழக்கமான காமெடியும் சூப்பரா இருக்கு.படங்கள் க்யூட்ட்ட்ட்! சீக்கிரம் கயிறைப் பிடிச்சு இங்கே வாங்கோ,உங்க பல்செட் நிசம்தானான்னு செக் பண்ணனும்!;);)

  ReplyDelete
 4. இருங்க படிச்சிட்டு வரேன் ..!!! :-)))

  ReplyDelete
 5. சத்தியமா சொல்லப்போனா...சபாஷ்...!!நான் என்ன மனசுல நினைச்சேனோ அதையே நீங்க அச்சு பிசகாம எழுதிட்டீங்க ..!!! இதுல இருக்கிற ஒவ்வொரு வரிக்கும் நான் உடன் படுகிறேன் .!!!

  ஒரு சேஜ்ஜுக்கு என்னையும் கூப்பிட்டு இருக்கீங்க ..கொஞ்ச நாள் போகட்டும் ஆனா கண்டிப்பா நான் இதை பத்தி எழுதுவேன் :-)))

  ReplyDelete
 6. வெளி வேஷம் போடாம ஒரிஜினல் பதில்கள்...!!

  தனிமையில் நாம் எப்படியோ அதுதான் உண்மையில் நாம் :-))

  --எங்கேயோ எப்போதோ படித்ததில் பிடித்தது ..

  ReplyDelete
 7. அன்னு வாங்க, சிரிச்சு முடிச்சிட்டீங்களோ?. உண்மைதான் சின்ன வயதிலே நான் விளையாடப்போவதற்கு அம்மாவிடம் பெமிஷன் கேட்பேன், இல்லை இப்போ வேண்டாம் 4 மணியாகட்டும் என்று சொல்லுவா, நான் நின்ற இடத்திலேயே துள்ளி துள்ளி காலை நிலத்திலே அடித்து கேட்பேன், ஓக்கே ஓக்கே கெதியாப்போய்விட்டு வா என்பா அம்மா.

  ஆனால் என் அக்கா அப்படியில்லை, மிகவும் அமைதியாக நின்றுதான் எதையும் கேட்பா... அதுதான் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம்...

  மியாவும் நன்றி அன்னு.

  ReplyDelete
 8. வாங்க மேனகா பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சுதோ? மிக்க நன்றி வரவுக்கு.

  ReplyDelete
 9. வாங்க மஹி, என்னாது பல் செட் உண்மைதானான்னு செக் பண்ணப்போறீங்களோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் படம் போட்டுக் காட்டியும் நம்பமாட்டேன் என அடம் பிடித்தால்?? அவ்வ்வ்வ்வ்... அது வைரம் பதித்திருக்கு நான் யாருக்கும் காட்டமாட்டேன்:))))).

  மியாவும் நன்றி மஹி.

  ReplyDelete
 10. வாங்க ஜெய்....
  நான் எழுதியவைகளை நீங்க ஆமோதிக்கிறேன் எனச் சொல்வதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.

  ///வெளி வேஷம் போடாம ஒரிஜினல் பதில்கள்...!!///
  என் கண்ணே கலங்கிட்டுது ஜெய்.....

  நான் எப்பவுமே என்னை நல்லபிள்ளையாகக் காட்டவேணும் என நினைத்து எதையும் எழுதுவதில்லை, மனதில் என்ன நினைக்கிறேனோ அதை அப்படியே எழுதிக்கொண்டே போவேன்.

  முடியும்போது நிட்சயம் எழுதுங்க ஜெய் எதிர்பார்த்திருக்கிறோம், பெண் எழுத்துப்பற்றி நாம் சொல்வதைவிட எதிர்ப்பாலார் சொல்லும்போதுதான் எமக்கும் சரிபிழை தெரியும்.

  ///தனிமையில் நாம் எப்படியோ அதுதான் உண்மையில் நாம் :-))///
  உண்மையே அருமையான வாக்கியம்.

  மியாவும் நன்றி ஜெய்.

  ReplyDelete
 11. அருமையாக சொல்லிட்டீங்க,அதே சமயம் நகைச்சுவை குறையாமல் அதிராவின் எண்ணம் போலவே எழுத்தும் அழகு...

  ReplyDelete
 12. //TODAY A READER TOMORROW A LEADER//
  போட்டிருக்கும் ஃபோட்டோவுல இருக்கும் ஆளுக்கும் பொன்மொழிக்கும் டச்சே ஆவலியே!!!
  ஹெ ஹெ ஹே...

  ReplyDelete
 13. வாங்க ஆசியா....எழுத்து அழகோ?:), என் மனக் கருத்தைத்தான் சொல்லியிருக்கிறேன், சரி பிழை தெரியவில்லை.
  மியாவும் நன்றி ஆசியா.

  ReplyDelete
 14. வாங்க அன்னு.... என்னாது? ஆளுக்கும் மொழிக்கும் டச்சாகவில்லையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இப்போதானே பூஸார் ரீட் பண்ண ஆரம்பித்திருக்கிறார்.... 2012 டிஷம்பருக்கும் பின் அவர்தான் லீடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... எங்க லீடர் எனக் கேட்டிடப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

  மியாவும் நன்றி அன்னு.

  ReplyDelete
 15. //. அவர்களின் ஊக்கத்துக்கு கணவர்தானே காரணம். //

  மறுக்கிறேன் :)))

  //அதைத்தானே நான் தினமும் எழுதிக்கொண்டிருக்கிறேன் அதையும் மீறி பெண் எழுத்துப் பற்றிக் கேட்டால் நான் எங்கே போவேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.//

  அதானே.. அவ்வவ்..

  //பெண்ணின் எழுத்துக்கு வரையறை இருக்கு என்கிறார்கள், இந்த வரையறையைக் கொண்டுவந்தது யார்? எதிலாவது சட்டம் தீட்டப்பட்டிருக்கோ?. பெண்ணுக்கு மட்டுமல்ல, பப்ளிக்கில் எழுதும் ஒவ்வொருவருக்கும் வரையறை வேண்டும், இதில் பெண்ணை மட்டும் குறிப்பிட என்ன இருக்கு.//

  அது தான் எனது கருத்தும் அதீஸ்..

  நல்லா எழுதியிருக்கீங்க அதிரா.. நான் இத்தனை நாள் பூனை எழுத்து என்றே உங்க பதிவைப் படிச்சு வந்தேன்.. இன்று தான் தெரிந்துகொண்டேன், அது பெண் பூனை என :))))))))

  அதீஸ்.. தலைப்பு எனக்கு சரியாக பிடிபடவில்லை.. அதனால்.... மீ த எஸ்ஸ்ஸ்.........

  ReplyDelete
 16. அதீஸ், தொடக்கத்தில் ஆரை பார்த்து உறுமினீங்க? என்னை இல்லை தானே? ( அவ்வளவு அப்பாவி ).
  நல்லா எழுதி இருக்கிறீங்க. பூனை மரத்திலிருப்பதை பார்த்துட்டு பேசாமல் போறவர்கள் எந்த பிரிவில் வருவார்கள்???
  தொடர்பதிவு ஆளுங்க -- ஜலீலா அக்கா தவிர மற்றவர்கள் எஸ்கேப்பு ஆயிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.
  //நான் என்ன மனசுல நினைச்சேனோ அதையே நீங்க அச்சு பிசகாம எழுதிட்டீங்க ..!!! இதுல இருக்கிற ஒவ்வொரு வரிக்கும் நான் உடன் படுகிறேன் .!!! //
  ஜெய், வேலை சுகத்துக்காக இதையே காப்பி & பேஸ்ட் பண்ணப் படாதூஊஊ!!! ஓக்கை.

  ReplyDelete
 17. //ஜெய்...(100 உடன் 101 ஆக உங்கட எழுதாமவிட்ட லிஸ்ட்ல இதையும் சேர்த்திடுங்க அவ்வ்வ்வ்வ்வ்).//

  தொடர் எல்லாம் எழுதி டிராஃப்டாக இருக்கு .கடைசி நேர இடை வெளியில் மனசு மாறி விடும் . மக்கள்ஸ் தொடரை மறக்கும் நேரம் எல்லாமே வெளியே வரும் :-)))))))))))))))))))))))))))))

  ReplyDelete
 18. அதிரா எப்படி இருக்கிங்க? உங்க எழுத்தில் நிங்க சொல்லாமலே எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால் மனதில் தோன்றியதை அப்படியே எழுதுவது அடுத்து நகைசுவையோடு நல்ல உங்களுக்கே உரிய தமிழில் எழுதுவது. எல்லாமே கலந்த உங்க பென் எழுத்து தொடர் சூப்பர்.

  அதிரா நான் உங்களுக்கு ஒரு இ மெயில் போட்டிருக்கேன், எனக்காக உங்க இமெயில் போய் பார்த்து முடிந்தால் அதில் எழுதவும். நாங்கள் லண்டன் வருவதாக இருக்கோம். முடிந்தால் நேரில் சந்திப்போம்.

  ReplyDelete
 19. //நாங்கள் லண்டன் வருவதாக இருக்கோம். முடிந்தால் நேரில் சந்திப்போம். //


  விஜியக்காவ்....பூஸ் அப்பாயின் மெண்ட் வாங்கனுமெண்டால் முதல்ல சில புரோஸீஜர் இருக்கு ...

  12 சுண்டெலி ஃபிரஷா (இது வேற ஃபிரஷா) இருக்கனும் .
  10 லிட்டர் பாலை 3 லிட்டரா சுண்ட காய்ச்சி இருக்கனும் .
  60 அவிச்ச கோழி முட்டை
  4 கிலோ மட்டன் பிரியாணி


  முதல்ல இதை ரெடி செய்யுங்க ..ஹி..ஹி... அப்பாயின்மெண்ட் டேட் உடனே கிடைக்கும் :-))))))

  குண்டூசி குறிப்பு :- இதுல பாதி ஸைடில வளர்பவங்களுக்கு ஹா..ஹா...!!!

  ReplyDelete
 20. அதீஸ்ஸ்.. சுப்பர் போஸ்டிங்.
  சொல்றது எல்லாம் சொல்லிப் போட்டு 'தொடருங்கோ' என்றால் எப்பிடி?? ;) வாறன், பொறுங்கோ. கூப்பிட்டதுக்கு நன்றி.

  ReplyDelete
 21. வாங்க சந்து...
  என்னாது மறுக்கிறீங்களோ?. என்னா தைரியம் பூஸையே எதிர்த்துப்புட்டீங்க?:))) உங்கள் வெளிப்படையான பதிலையும் வரவேற்கிறேன்... அப்படியும் இருக்கலாம் ஆனால் மஜோரிட்டி குறைவே...

  கடசி ஒத்துழைப்பு இல்லாவிடினும் அந்த வசதியை ஏற்படுத்தித் தந்திருப்பது கணவர்தானே?:).

  அப்போ ஏன் திருமணமாகாத பெண்களின் வலைப்பூக்களை விட திருமணமான பெண்களின் வலைப்பூக்கள்தான் அதிகமாக இருக்கு?... சப்போட் பண்ணாவிடினும் எமக்குப் பின்னால் நம் கணவர் இருக்கிறார் ஒரு பிரச்சனை வந்தால் கை கொடுப்பார் எனும் தைரியம் நம்மவர்க்கு இருப்பதால்தானே பப்ளிக்கில் ஒரு வலைப்பூவை ஆரம்பிக்க முடிகிறது. இப்படித்தான் நான் சிந்தித்தேன்...

  //இன்று தான் தெரிந்துகொண்டேன், அது பெண் பூனை என :))))))))//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... சீறும்போதே தெரியவில்லையோ? ஆண் பூஸ் சீறாதாம்:)))).

  //அதீஸ்.. தலைப்பு எனக்கு சரியாக பிடிபடவில்லை.. அதனால்.... மீ த எஸ்ஸ்ஸ்......... // இட்ஸ் ஓக்கை சந்து, நானும் தலைப்பைப் பார்த்ததும் தலை சுற்றியது நிஜம். அதுவும் முதன் முதலில் ஸாதிகா அக்கா பகுதியில் பார்த்து, இவ என்ன எழுதியிருக்கிறா என்றுதான் குழம்பினேன்... பின்புதான், புரிந்ததுமாஆஆஆஆதிரி இருந்துது... சரி கிட்னியை யூஸ் பண்ணலாமே என கொஞ்சம் யூஸ் பண்ணினேன்... ஆனா இங்கு நான் ஏதும் எழுதவில்லையே:))).

  மியாவும் நன்றி.

  ReplyDelete
 22. வாங்க வான்ஸ்ஸ்!!!
  //அதீஸ், தொடக்கத்தில் ஆரை பார்த்து உறுமினீங்க? என்னை இல்லை தானே? ( அவ்வளவு அப்பாவி ).// சே..சே.. அப்பாவிகளைப்பார்த்து உறுமமாட்டேன்... தைரியமாக கிட்ட நெருங்கி பிராண்டிடுவேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))))).

  //பூனை மரத்திலிருப்பதை பார்த்துட்டு பேசாமல் போறவர்கள் எந்த பிரிவில் வருவார்கள்??? /// ஹா..ஹா... ஹா... ஒரு குட்டிப் பூஸுக்குப் பயந்து ஒளித்து ஓடுவோர்/இருப்போர் பிரிவு. எங்கள் அயல் வீட்டு அண்ணன் இப்போ கனடாவில் இருக்கிறார்... அவர் பூனையைக்(real:)) கண்டாலே ஓஓஓஓஓடுவார்... அவ்ளோ பயம்.

  நீங்க வேற:), எஸ்கேப் ஆவுற ஆட்களாப் பார்த்துத்தானே கூப்பிட்டிருக்கிறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:). பாருங்க இல்ஸ் ஐ, வந்து பார்த்து படிச்சிட்டு தெரியாதமாதிரி எஸ்கேப் ஆகியிருக்கிறா... விட்டிடுவனா நான் அந்தக் கயிற்றில கட்டி இழுத்து வந்திடுவேன்:))). இல்ல வான்ஸ், தலைப்பு பிடித்தா எழுதலாம் மாதிரி இருந்தா எழுதுவாங்க இல்லையெண்டால் எஸ்தான்... மீ யும் அப்பூடித்தான்:))).

  எனக்கொரு ஆசை, வலைப்பூவிலேயே ஒரு பட்டிமன்றம் ஆரம்பித்து, அப் பூ உரிமையாளரே நடுவராக இருந்து, தீர்ப்பை வழங்கி, அடுத்த நடுவரை அறிவிக்க வேண்டும்.... அடுத்தவர் தம் பூவில் தலைப்பை போட வேண்டும், இப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்குமென நெடுநாளாக யோசித்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் எல்லோரும் பங்குபற்றினால்தான் உண்டு, அதுக்கு முதலில் விரும்புவோர் வந்து நான் இணைவேன் எனச் சொல்லவேண்டும்... ஆட்கள் சேர்ந்தால் ஆரம்பிக்கலாம்.... இதெல்லாம் நடக்கிற விஷயமா? ஆனால் நடந்தால் கொஞ்சம் வித்தியாசமாக கலகலப்பாக இருக்கும். ம்ஹூம்ம்ம்.

  ///ஜெய், வேலை சுகத்துக்காக இதையே காப்பி & பேஸ்ட் பண்ணப் படாதூஊஊ!!! ஓக்கை./// உஸ்ஸ்ஸ்ஸ்... அழகான பின்னூட்டம் தந்த ஒருவரைப் பார்த்து உப்பூடிப் புகை விடப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). அவர் நிஜமாகவே கடலுக்கடில போயிடப்போறார்(இது வேற கடல்:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்.

  மியாவும் நன்றி வான்ஸ்ஸ்.

  ReplyDelete
 23. ஜெய்லானி said... 17
  //ஜெய்...(100 உடன் 101 ஆக உங்கட எழுதாமவிட்ட லிஸ்ட்ல இதையும் சேர்த்திடுங்க அவ்வ்வ்வ்வ்வ்).//

  தொடர் எல்லாம் எழுதி டிராஃப்டாக இருக்கு/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உப்பூடிச் சொன்னா நாங்க நம்பிடுவமாக்கும்... காதில நாலு(4)தரம் குத்தி, எனக்கு பிடிச்ச நாலாம்(4) நம்பரில 4 தோடு போட்டுவச்சிருக்கிறேன்:)).

  //மக்கள்ஸ் தொடரை மறக்கும் நேரம் எல்லாமே வெளியே வரும் // ஹீக் ஹிக் ஹீஈஈஈ அப்போ 2012 க்குப் பிறகு எண்டு சொல்லுங்கோ... அந்நேரம் தொடர் இருக்கும் ஆனா படிக்க மக்கள்ஸ்ஸ் இருக்க மாட்டினம்..... ஆ.... ஆரும் முறைக்கப்பிடாதூஊஊஊஊஊ:).

  மியாவும் நன்னி நன்னி நன்னி ஜெய்... வான்ஸ் போன்ற ஆட்கள் மிரட்டுவினம், நீங்க பய்ந்துபோய் வராமல் விட்டிடாதீங்க... நான் அவர்களைப் பார்த்துக்கொள்ளுவன்:))).

  ReplyDelete
 24. விஜி வாங்க விஜி....

  நீங்க “அங்க” தொடங்கி இங்க வரைக்கும் என் எழுத்தை ரசிக்கிறீங்க மிக்க நன்றி.

  விஜி நீங்க அன்று சொன்ன உடனேயே நான் இங்கு பதில் போட்டிட்டனே.... அது ஏப்ரல் ஃபூலாக்கும் என நினைத்து. ஜனவரி 1 க்கு வாழ்த்து அனுப்பியிருந்தீங்க, அதுக்குப் பின் எனக்கு எந்த மெயிலும் வரவில்லையே, அப்படி வந்திருந்தால் ஒரு வரியாவது பதில் போட்டிருப்பேன், மீண்டும் உங்கள் செண்ட் மெயில் பொக்ஸ் ஐ செக் பண்ணுங்கோ/ திருப்பி அனுப்புங்கோ எனக்கேதும் வரவில்லை:((((.

  இப்போ இங்கு ஈஸ்டர் பிரேக்க்க்க் 2 வீக்ஸ் க்கு... அதனைத்தொடர்ந்து விட்டு விட்டு சில ஹொலிடே வருது.... டயானா சார்ஸ் மகன் வில்லியத்தின் வெடிங்க்கு(29) நஸனல் ஹொலிடே... அதனால இப்போ நானும் வீட்டில நிற்கிறேன்....

  மியாவும் நன்னி விஜி.

  ReplyDelete
 25. ஜெய்லானி said... 19
  ///விஜியக்காவ்....பூஸ் அப்பாயின் மெண்ட் வாங்கனுமெண்டால் முதல்ல சில புரோஸீஜர் இருக்கு ...///

  கரெக்ட்ட்ட், நெக்ஸ்ட்...

  ///12 சுண்டெலி ஃபிரஷா (இது வேற ஃபிரஷா) இருக்கனும் .///

  கரெக்ட்ட்ட்... பட் கழுவின சுண்டெலியா இருக்கோணும்... ஓடாததாக இருக்கோணும் பிக்கோஸ்.... இப்பெல்லாம் ஓடிப்பிடிக்க பஞ்சியாக இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்:). நெக்ஸ்ட்ட்ட்..

  ////10 லிட்டர் பாலை 3 லிட்டரா சுண்ட காய்ச்சி இருக்கனும் .///

  கரெக்ட்ட்ட், முடிஞ்சால் கால் கிலோவுக்கு அரைக்கிலோ பாதாம் போடோணும்(எங்கேயோ பார்த்தமாதிரி இல்ல:))). நெக்ஸ்ட்ட்...

  ///60 அவிச்ச கோழி முட்டை/// இன்கரெக்ட்ட்ட்..... இன்னும் கூட்டோணும்.. நான் நெம்பரைச் சொன்னேன்:)). நெக்ஸ்ட்ட்ட்...


  ///4 கிலோ மட்டன் பிரியாணி ///

  கரெக்ட்ட்ட், நல்ல உறைப்பா இருக்கோணும், அதுக்குள்ளயும் அ.கோ.மு ஒ”லி” ச்சு வச்சிருக்கோணும்:)... நெக்ஸ்ட்ட்ட்....


  ///முதல்ல இதை ரெடி செய்யுங்க ..ஹி..ஹி... அப்பாயின்மெண்ட் டேட் உடனே கிடைக்கும் :-))))))///

  சியேர்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

  ////குண்டூசி குறிப்பு :- இதுல பாதி ஸைடில வளர்பவங்களுக்கு ஹா..ஹா...!!!///

  ஹா..ஹா...ஹாஆஆஆ பாதி குடுத்ததும் என்ன நடக்குதெண்டால்... மளமளவெனச் சாப்பிட்டுப்போட்டு... என் கையெல்லாம் ஒரே பிராண்டல் + இடி விழுது போதாது இன்னும் கொடு என:)... என் இடப்பக்க கையே இடி வாங்கி வாங்கி மெலிஞ்சுபோச்சு... அவ்வ்வ்வ்வ்வ். நான் அவசரமாச் சாப்பிட மாட்டேன் மெதுவாத்தான் சாப்பிடுவேன்... அதிலும் அவிச்ச கோழி முட்டை என்றால் லபக் என உள்ளே தள்ளிட மாட்டேன்...ருசிச்சு...சுசிச்சு... சாப்பிட நேரமெடுக்கும்.... அதனால நான் பாதி + பாதி கொடுத்தே மெலிஞ்சு வயக்கெட்டிட்டேன்... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ் ஐ வோண்ட் பிங் கலர்....

  மியாவும் நன்னி ஜெய்... யூ ஆர் எ குட் செக்ரட்டரி... ஆஆஆஆஆ பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். நான் இப்போ வழிப்போக்கராயிட்டேன்ன்ன்ன் மியாவ் மியாவ்வ்வ்வ்வ்:).

  ReplyDelete
 26. வாங்க இமா!!

  என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க, நான் எதுவுமே சொல்லவேயில்லையே... எழுதி முடிச்சதும் எனக்கே வெய்க்கம் வெய்க்கமா வந்துது.... சரி பானையில இருப்பதுதானே அகப்பையில வரும் என விட்டிட்டேன்.... டீஈஈஈஈஈஈப்பா திங் பண்ணுங்க இம்ஸ்ஸ்ஸ் வித்தியாசமா ஏதும் வரும்... உடனே நோட் பண்ணி வச்சிட்டு எழுதிடுங்க.... ட்ரை பண்ணுங்க முடியாதுவிட்டால் ஓக்கை.... அடுத்த தொடருக்கு மூவ் பண்ணுவோம்.

  மியாவும் நன்னி இம்ஸ்ஸ்ஸ்ஸ்.

  ReplyDelete
 27. டயானா சார்ஸ் மகன் வில்லியத்தின் வெடிங்க்கு(29) நஸனல் ஹொலிடே... அதனால இப்போ நானும் வீட்டில நிற்கிறேன்....//ஓ! இரண்டுக்கும் கல்யாணமோ. நீங்க தான் flower girl என்று டிவியில் சொன்னார்கள். உண்மையோ!!!!!?????

  ReplyDelete
 28. ஹீ... ஹீ... அதை அமெரிக்காவிலயும் எனவுண்ஸ்ஸ்ஸ் பண்ணிட்டினமோ? நான் எனக்கிதெல்லாம் புடிக்காது.... மீடீயால எதுவும் வெளிவரத் தேவையில்லை என ஸ்ரிக்ட்டாச் சொன்னனே...... கேக்க மாட்டினம்.... இனி என்னைப் பார்க்கவே உலக நாடுகளெல்லாம் திரண்டு வரப்போகுது....:))))))))

  ReplyDelete
 29. இதுல ஒரு பாட்டுதானே இருக்கு ரெண்டாவது எங்கே இருக்கு???????

  ReplyDelete
 30. //அதுக்கு முதலில் விரும்புவோர் வந்து நான் இணைவேன் எனச் சொல்லவேண்டும்... ஆட்கள் சேர்ந்தால் ஆரம்பிக்கலாம்.... இதெல்லாம் நடக்கிற விஷயமா? ஆனால் நடந்தால் கொஞ்சம் வித்தியாசமாக கலகலப்பாக இருக்கும். ம்ஹூம்ம்ம்.//

  நான் கையை தூக்கி ரொம்ப நேரமாச்சு ...ஆனா மத்தவங்க சத்தம் மட்டும் கேக்கலையே...!!! :-)))))

  ReplyDelete
 31. //ஓ! இரண்டுக்கும் கல்யாணமோ// வான்ஸ்ஸ் இப்பத்தான் கவனித்தேன், என்ன இரண்டைச் சொல்றீங்க? மகனுக்குத்தான் கல்யாணம்.

  ReplyDelete
 32. ஜெய்லானி said... 29
  இதுல ஒரு பாட்டுதானே இருக்கு ரெண்டாவது எங்கே இருக்கு???????

  //
  புரியேல்லையே ஜெய். என்ன பாட்டு?.

  எங்கட மக்கள்ஸ்ஸ் எல்லோரும் கொஞ்சம் மேடையேற கூச்ச சுபாவம் அதிகம்.... அதனால கையைத் தூக்க மாட்டினம், அதை எண்ணித்தான் நான் வெளியில் சொல்லாமலே இருந்தேன் இத்தனை காலமும்.

  நீங்க கையைக் கீழ விட்டிடாதீங்க... பார்க்கலாம்.

  ReplyDelete
 33. ///“பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” .. இது ஒளவையார் சொன்னது(யாரும் குறுக்க பேசிடக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:))//உணமையா அதி...சூப்பர்ப்...


  //எழுதினால் சந்தோஷம், எழுதாதுவிட்டால் அதைவிட சந்தோஷமா?:)) எனக் கேட்டிடாதீங்க கர்ர்ர்ர்ர்ர்.... நான் எதுக்கும் கோபிக்கப்போறதில்லை.//ரொம்ப நல்ல மனசு...நல்லா இருக்கனும் நீங்க...

  ReplyDelete
 34. சிரிச்சி மீளல ///

  ReplyDelete
 35. ஹாஹா புவாஹாஆஅ இங்கு உதாரணத்துக்கு பூஸாரேஎ வந்துட்டாரா ஒரே சிரிப்பு, அதிரா பெண் எழுத்து என்பது என்னா அதிரா
  இதை என்னைகோர்த்து விட்டு இருக்கீஙக் பதிவு மெதுவா தான் வரும் சிம்பிலாஅ.
  எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் அதிராவின் உள்ளம் பளிச்,

  ReplyDelete
 36. அம்மாடி இந்தக் கலகலப்பு....என்றும் வாழனும். நீங்களும்சிரிச்சி மற்ற வர்களையும் சிரிக்க வைக்கும்
  உங்களை எப்படி பாராட்டுவது .
  ........மியாவ்.

  ReplyDelete
 37. வாங்க கீதா... சின்ன வயசில ரீச்சர் அப்பூடித்தான் சொல்லித்தந்தவ.

  //ரொம்ப நல்ல மனசு...நல்லா இருக்கனும் நீங்க...
  /// குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லையாமே....

  மியாவும் நன்றி கீதா.

  ReplyDelete
 38. வாங்க அரசன், முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு.

  சிரிக்கிறீங்களோ.... மியாவ்..மியாவ்..(நன்றி அப்படின்னு சொன்னேன்:)).

  ReplyDelete
 39. வாங்க ஜலீலாக்கா... ஊர்க்களை எல்லாம் போய்விட்டுதோ?

  உங்களால முடியும் வான்ஸ்ஸ் உம் சொல்லிட்டா நீங்க எழுதுவீங்க என, முயற்சி செய்யுங்க... முடிஞ்சால் நாங்களும் படிக்கலாம்...


  மியாவும் நன்றி .

  ReplyDelete
 40. வாங்க நிலாமூன்.... ஹா..ஹா...ஹா... இங்க வாற எல்லாருக்குமே பூஸ் பாஷை வந்திடுது:))).

  மியாவும் நன்றி.

  ReplyDelete
 41. "எந்த ஒரு நல்ல விஷயத்தையும் எவர் ஒருவர் அழகாக வெளிப்படுத்துகிறாரோ.. அது பாராட்டப்படவேண்டியதே, இதில் பெண் என்ன ஆண் என்ன? எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. "

  ரொம்பவும் எளிமையான, யதார்த்தமாகன வரிகள் அதிரா! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 42. //பப்ளிக்கில் எழுதும் ஒவ்வொருவருக்கும் வரையறை வேண்டும், இதில் பெண்ணை மட்டும் குறிப்பிட என்ன இருக்கு//

  என்னுடைய கருத்தும் அதேதான் அதிரா :)

  //கீதா... சின்ன வயசில ரீச்சர் அப்பூடித்தான் சொல்லித்தந்தவ//

  அடப்பாவமே..! இந்த அநியாயத்த கேட்க யாருமில்லையா? :))))

  கீதாச்சல்... இந்த பூஸ் சொல்வதை நம்பாதீங்கபா! உண்மையான்னு அப்பாவியா கேட்கிறீங்க, அதுக்கு டீச்சர் மேல பழி போடுது பூஸ் :)))...??

  ReplyDelete
 43. வாங்க யூஜின். மிக்க நன்றி.

  என்னத்தைத்தான் அப்படிக் கலக்கிட்டேன்:)))).

  ReplyDelete
 44. வாங்க மனோ அக்கா மிக்க நன்றி. இப்பவெல்லாம் நீங்கள் அதிகம் பிஸியோ? எங்கேயும் முன்பைப்போல காண முடிவதில்லையே....

  ReplyDelete
 45. வாங்க அஸ்மா, மிக்க நன்றி.

  //அடப்பாவமே..! இந்த அநியாயத்த கேட்க யாருமில்லையா? :))))
  // இருக்கிறாங்க ஆனா இல்ல:))).

  //கீதாச்சல்... இந்த பூஸ் சொல்வதை நம்பாதீங்கபா! உண்மையான்னு அப்பாவியா கேட்கிறீங்க, அதுக்கு டீச்சர் மேல பழி போடுது பூஸ் :)))...??
  // உப்பூடியெல்லாம் பத்த வைக்கப்பூடாது... சொல்றதை நம்போணும்:)))).

  ReplyDelete
 46. அதிரா நலமா?
  நீங்க எழுதியதைப்பார்த்தால் யோசிச்சுப்போட்டு எழுதினமாதிரி தெரியவில்லை.
  எனக்கு ஒளவையார் சொன்னது மறந்துபோட்டுது.அதிராசொன்னதுதான் ஞாபகமாக நி{வி}க்குது.
  அதிரா ரெம்ப அருமையாக எழுதியிடுக்கிறீங்க.எனக்கு உடனுக்குடன் பதிவுபோடமுடியவில்லையே என்பது கவலை.மன்னிக்க.

  //"எந்த ஒரு நல்ல விஷயத்தையும் எவர் ஒருவர் அழகாக வெளிப்படுத்துகிறாரோ.. அது பாராட்டப்படவேண்டியதே, இதில் பெண் என்ன ஆண் என்ன? எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.//
  உண்மையான கருத்தை நீங்க மனம்திறந்து சொல்லியிருக்கீங்க அதிரா.பாராட்டுக்கள்.
  வைரபல் செட் கவனம்.களவு அதிகம் எனக்கேள்வி.

  ReplyDelete
 47. நல்ல பதிவு !!

  //உதாரணமாக ஒரு பூனை மரத்திலே இருந்ததைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பார்த்த விதத்தை ஒருவர் கையை அசைத்துக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் கண்ணையும் விரித்து கையையும் ஆட்டிக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் உடல் அங்கம் அனைத்தையுமே அசைத்துச் சொல்வார், இன்னொருவர் ஆடாமல் அசையாமல் சொல்வார்... இப்படிப் பலவகை உண்டு. இப்படித்தான் பெண் எழுத்தும்... ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்..//

  உதாரணத்துக்கு கூட பூனைதானா? ஐயோ ஐயோ...! ஏன் பறவை எல்லாம் மரத்தில் இருப்பதை பார்த்ததில்லையோ..? ;)

  ReplyDelete
 48. வாங்க அம்முலு.... காணவில்லையே எனத் தேடினேன்.... ஒழுங்காக வருபவர்கள் வராமல் போனால் மனம் தேடுவது இயல்புதானே.

  //எனக்கு ஒளவையார் சொன்னது மறந்துபோட்டுது.அதிராசொன்னதுதான் ஞாபகமாக நி{வி}க்குது.
  // அது யான் செய்த பாக்கியம்:):). இனி மறந்திடாதீங்க.... இன்றுமுதல் அதிகம் வல்லாரை சாப்பிடுங்கோ.

  ///வைரபல் செட் கவனம்.களவு அதிகம் எனக்கேள்வி.///

  உண்மையாகவோ அம்முலு... நல்லவேளை சொல்லித்தந்தீங்க... நான் இப்போ சிரிப்பதைக்கூட குறைத்திட்டேன், இனி அப்பூடியெண்டால் நல்ல ஒரு பட்லொக் வாங்கிப் போட்டிடவேண்டியதுதான்....:)))).

  வரவுக்கு மியாவும் நன்றி அம்முலு.

  ReplyDelete
 49. வாங்க கவிக்கா...உங்களுக்கும் பூஸ் என்றால் பயமோ? உள்ளே வர பலமாக யோசிக்கிறீங்க:))), சரி இது நமக்குள் இருக்கட்டும்:)).

  பறவை மரத்திலிருந்தால் ஆராவது அதை புதினமாகச் சொல்லுவினமோ? ஆனா பூஸார் மரத்தில இருந்து மியாவ்... மியாஆஆஆஆஆவ் என்றால் அது புதினம்தானே....

  அதிலயும் ஒரு பூஸ் குடும்பமே மரத்தில இருந்தால் அது இன்னும் புதினமெல்லோ.... இதில தலையை சுவரில மோதுற ஸ்மைலி போட்டிருக்கிறேன்... அதுவும் 10 தரம் மோதுறதுபோல.... உங்களுக்குத் தெரியுதோ?:)..

  மியாவும் நன்றி கவிக்கா.

  ReplyDelete
 50. //வாங்க கவிக்கா...உங்களுக்கும் பூஸ் என்றால் பயமோ?//

  ரொம்ப பயம்... அதுவும் வயதான பாட்டி பூஸ் என்ரால் ரொம்ப ரொம்ப பயம்...( இது கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல)

  //பறவை மரத்திலிருந்தால் ஆராவது அதை புதினமாகச் சொல்லுவினமோ? ஆனா பூஸார் மரத்தில இருந்து மியாவ்... மியாஆஆஆஆஆவ் என்றால் அது புதினம்தானே....//

  ஒண்ணும் சொல்ல முடியல... சொல்லிவிட்டு ஓடுறதுக்கு இங்கே நாய்குட்டி இல்லையே...

  //அதிலயும் ஒரு பூஸ் குடும்பமே மரத்தில இருந்தால் அது இன்னும் புதினமெல்லோ.... //

  குடும்பமா??? இருக்கிற ஒண்ணையே சமாளிக்க முடியல... வேணாம் வேணாம்...

  //இதில தலையை சுவரில மோதுற ஸ்மைலி போட்டிருக்கிறேன்... அதுவும் 10 தரம் மோதுறதுபோல.... உங்களுக்குத் தெரியுதோ?:)..//

  தெரியலையே... ஹ்ம்ம்ம் மோதுறதுக்கு ஸ்மைலி இல்லாட்டி என்ன, தலை இருக்கே... மோதிக்கலாம்...

  ReplyDelete
 51. தொடர்ந்திருக்கிறேன் -> http://imaasworld.blogspot.com/2011/04/blog-post_16.html

  ReplyDelete
 52. //ரொம்ப பயம்... அதுவும் வயதான பாட்டி பூஸ் என்ரால் ரொம்ப ரொம்ப பயம்...( இது கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல)

  // வாங்க கவிக்கா... கரெக்ட்டாச் சொன்னீங்க..

  எங்கட பாட்டி வயதானவ.. அவ வளர்த்ததுதான் இந்தக் குட்டிப்பூஸ்ஸ்ஸ்... இதுக்கே இப்பூடிப் பயந்தால்... அட கடவுளே... இதில கற்...பனை வேறா.... என் தலையை சுவரில இல்லை... ரோசாப்பூப்புவில மோதுறேன்... 10 தரம்:))... ம்ஹூம்ம்ம் நாங்க ரொம்ப விபரமானவங்க... சுவரில எல்லாம் மோதி தலையை உடைச்சிட மாட்டமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).


  //ஒண்ணும் சொல்ல முடியல... சொல்லிவிட்டு ஓடுறதுக்கு இங்கே நாய்குட்டி இல்லையே...
  //
  இங்கு எலிப்பொறி வச்சிருக்கு... உள்ளே வந்திட்டால், நாய்க்குட்டி இல்ல, யானைக்குட்டி இருந்தாலும் தப்பி ஓடவே முடியாது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  //குடும்பமா??? இருக்கிற ஒண்ணையே சமாளிக்க முடியல... வேணாம் வேணாம்...
  ///
  ஹிமியாவ்... ஹிமியாவ்வ்வ்...ஹிமியாவ்வ்வ்வ்வ்.... இது சந்தோஷச் சிரிப்பூஊஊஊஉ:).

  //தெரியலையே... ஹ்ம்ம்ம் மோதுறதுக்கு ஸ்மைலி இல்லாட்டி என்ன, தலை இருக்கே... மோதிக்கலாம்//

  வாணாம் கவிக்கா வாணாம்.... உங்கட தலை உடைஞ்சிட்டா... என் அடுத்த பதிவுக்கு எப்பூடிப் பின்னூட்டம் போடுவீங்க.... அதால வாணாம் சுவரில மோதிடாதீங்க.

  மியாவும் நன்னி...நன்னி....

  ReplyDelete
 53. மியாவும் நன்னி இமா....

  இதைப் படிக்காதீங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்:::
  ரீச்சரே தொடராட்டில் மாணவர்கள் எப்பூடித் தொடர்வார்கள்...

  ReplyDelete
 54. //வாணாம் கவிக்கா வாணாம்.... உங்கட தலை உடைஞ்சிட்டா... என் அடுத்த பதிவுக்கு எப்பூடிப் பின்னூட்டம் போடுவீங்க.... அதால வாணாம் சுவரில மோதிடாதீங்க.
  //

  நான் என்ன தலையாலையா பின்னூட்டம் போடுறேன்? கையால தானே.... ஐயோ ஐயோ...

  ReplyDelete
 55. //நான் என்ன தலையாலையா பின்னூட்டம் போடுறேன்? கையால தானே.... ஐயோ ஐயோ...
  /// ஆ... நான் இதைக் கவனிக்கவில்லையே.. கவிக்கா:)).

  அப்போ தலை இல்லாட்டிலும் பின்னூட்டம் போடுவீங்க இல்ல?:))))), கால் இருக்குதுதானே?:).... நேக்குப் பயம்ம்ம்ம்மாக்கிடக்கே.... மீ.... எஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 56. //அப்போ தலை இல்லாட்டிலும் பின்னூட்டம் போடுவீங்க இல்ல?:))))), கால் இருக்குதுதானே?:).//

  எனக்கு காலெல்லாம் இருக்குது...! நீங்க கேக்குற கேள்விய பார்த்தா உங்களுக்கு பெரியயயயயய வால் இருக்கும்னு நினைக்கிறேன்....!

  ReplyDelete
 57. என்னாதூஊஊஊஊஉ? கேள்வியை வச்சே... வால்.... அதுவும் பெரீஈஈஈஈய வால் இருக்கெனக் கண்டுபிடிச்சீங்களோ?:))..... கடவுளே.... “இது அது” தான்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))

  ReplyDelete
 58. இதில் உள்ள பல் செட்டை இப்ப தான் பார்த்தேன்,
  ஜூப்பரு

  ReplyDelete
 59. ஜலீலாக்கா... அது தம்பி அனுப்பினவர்:).. வைரம் பதிச்சிருக்கூஊஊஊஊஊஊஊஊஊஊ:)))

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.