நல்வரவு_()_


Monday 27 June 2011

கலரு கலருதான்:)))

தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா என்பது உங்கட கண்களில்தான் தங்கியிருக்கூஊஊஊஊஊ....:).

இம்முறை எங்களுக்கு கோடை என்பது இல்லைப்போலவே தெரிகிறது, அவ்வளவு மழையும் குளிரும். ஆனாலும் அதுக்கிடைப்பட்ட காலத்தில் பூத்த மலர்களின் அழகிலே, கலரிலே  மயங்கி படமெடுத்தேன்...

என்ன என்ன கலர்கள்... திரும்பும் வீடுகள் எல்லாம் பூ மயம்தான்.... போனவருடம் போட்ட மலர்களை விடுத்து, இம்முறை கலருக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன், அதால திட்டமாட்டீங்க என நம்பிக்கை இருக்கூஊஊ...

நான், பூங்கா எங்கும் போய் எடுக்கவில்லை, இவை எல்லாம் எங்கள் அயல் வீடுகளில் இருக்கும் பூக்களே.... இங்கு வீடுகள் வீதியோரமெல்லாமே பூக்கள்தான், ஸ்பிரிங் ஆரம்பித்துவிட்டாலே... ஊரே பூங்காவனம்போல காட்சிதரும்..

இது பிங் கலர்தானே? கரெக்ட்:).


இது மரூண்?...


இது மஞ்சள்....?


லைட் பேப்பிள்?(இது வேற லைட்:))


குங்குமப் பூக்கலர்?:)

 இவை நிலத்திலே செடிபோல இருந்து பூக்கும், இவற்றில் பல நிறங்கள், கொத்துப்பூ, கொத்தில்லாதது என பல ரகம் இருக்கு...


இவர் பிங்கி:)வெள்ளை நிற மல்லிகையோ?:)


(பிந்தியகுட்டி இணைப்பு:))

இது ஒரேஞ்:

இது பிங் அண்ட் ஒரேஞ்:

இவர் பேப்பிள்:


கீழே இருப்பவை மூன்றும், பிரவுண் நிற மரங்கள், அதாவது வின்ரர் முடிந்து, பட்டமரம்போல இருப்பதில், இலைகள் முளைக்கத் தொடங்கும்போது இப்படித்தான் வரும், பின்பு நல்ல வெப்பநிலை உருவானதும்(கோடை) பச்சையாக மாறிவிடுமென நினைக்கிறேன், ஆனா இப்பவும் ஒரு கண்ணை இவற்றின் மேல் போட்டபடிதான் போய் வருகிறேன், இன்னும் பச்சையாகவில்லை:(.
இது மட்டும், அருகிலிருக்கும் ஒரு குழந்தைகள் பூங்காவில் எடுத்தேன்:)


இது என்னவெனத் தெரிகிறதோ? ஒரு குட்டி நீரோடை, மலைப்பகுதி என்பதால் வீடுகளுக்கிடையே சில நீரோடைகள் இப்படி இருக்கும், இத்தண்ணி ஓடிச்சென்று எங்கள் முன் இருக்கும் எங்கட:) ஆற்றிலே இரண்டறக்:) கலக்கும்..
 =========================================================
மெசின் ஊசி இணைப்பூஊஊ:)
இந்தக் கதையைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கோ.. இங்குள்ள மக்கள் தமக்கு செலவழிக்கிறார்களோ இல்லையோ, பூனை நாய்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மிகச் செல்லமாக வளர்க்கிறார்கள். ஆரம்பகாலத்திலே என் கணவர் எனக்குச் சொன்னார்,  இங்கே பூனை நாய்களைக் கண்டால் தொட்டுத் தடவிடாதீங்கோ, படமெடுக்கக் கூடாது, உணவேதும் கொடுக்கக்கூடாது, என்ன செய்வதாயினும் உரிமையாளரின் அனுமதிபெற்றே செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்களுக்குக் கோபம் வரும்.

அதனால நான் படமெடுக்கவும் பயப்பிடுவேன். அன்று ஒருநாள், லேசான மழைநாள், ஆரோக்கியத்துக்காக:)  நடந்துகொண்டிருந்தபோது, எதிர்பார்க்கவில்லை, ஒரு பூஸார் ஓடிவந்து கால்களைச் சுத்தத் தொடங்கிட்டார்... சுத்தக் கறுப்புப் பூஸார்.. காலை நகர்த்த மனமில்லை, படமெடுக்காமல் விடவும் மனமில்லை,  நின்றபடியே மேலிருந்து படமெடுத்துவிட்டேன்...:).

என் காலைத்தான் அதிகம் சுத்தினார்... தூரத்து உறவாக இருப்பாரோ?:))).
முடிவு என்னன்னாஆஆஆ:
புளொக் ஆரம்பித்தமையால் ஒரு நன்மை, ரசனை அதிகமாகியிருக்கு, ஆராயும் திறன் கூடியிருக்கு. அ-து... ஒவ்வொரு கால மாற்றத்துக்கும் இயற்கையின் மாற்றம் எப்படி இருக்கு என்பதையெல்லாம், ரசித்து ரசித்துப் படமெடுக்கிறேன்.

பொன்னான குறிப்பு:
என் பக்கத்தில ஸ்மைலி வேர்க் பண்ணவில்லை, அதனால தயவு செய்து ஆரும் ஸ்மைலி போட முயற்சித்து ஏமாந்திடாமல், ஒண்ணொண்ணாத் தட்டுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்.. நான் எழுத்தைச் சொன்னேன்...

-----()-----


26 comments :

 1. அதிரா பூக்கள் படம் எல்லாம் சூப்பர்.நீங்க அந்த மரத்தால கண் எடுங்கோ அதிரா. கண்வலி வந்துடும். ஏன் என்றால் அது பச்சையாகாது.என்வீட்டில் நிற்கிறது. நான் படம் அனுப்புகிறேன்.
  உண்மையில் அந்த நாளும் வராதா.என நினைப்பவர்களில் நானும் ஒருத்தி. அண்ணன்,தம்பி,அக்கா,அன்ரி எல்லாரும் வருவார்கள் அழாதேங்கோ பூஸ்.
  2,3,4,படப்பூக்கள் என் பக்கத்துவீட்டில் இருக்கு.
  8வது பூ மரம் இம்முறை நான் வைத்துள்ளேன்.
  9வதில் பிங்க் கலரும் இருக்கு.
  நீங்க சொன்னமாதிரிதான் இங்கும் காலநிலை.இன்றுதான் 35டிகிரி. பின் மாறிவிடும் என கூறியிருக்கிறார்கள்.
  எல்லாப்பூக்களும்,படமும் அழகாக இருக்கு.

  ReplyDelete
 2. ப்ளாக் ஆரம்பித்தது உங்க திறமையை வெளிக்காட்டிறீங்க அதிரா. பார்த்தீங்களா றேட்டில பூசார்,அன்னம், காகம் இப்படி எல்லாம் படம் எடுத்து போடுறீயள். அப்ப படம் எடுக்கிறதிலயும்,ஆராச்சி செய்யிறதிலயும் எக்ஸ்போர்ட் ஆகிட்டீங்க.
  இது தொடர வேணும்.கவனம் பூஸார்.பின் உங்க கூடவே வந்துடப்போறார்.

  ReplyDelete
 3. அழகான புகைப்படங்கள்!!

  ReplyDelete
 4. அதீஸ் பூனைக்கும் உங்களுக்கும் ஆன பந்தம்...எப்படி இப்பூடி...

  ReplyDelete
 5. கலர் கலரா பூக்கள் கண்களை கட்டுதே.

  ReplyDelete
 6. பூனை உங்கள் காலை சுற்றி சுற்றி வருவதை நான் இங்கிருந்தே பார்த்தாலே உடம்பெல்லாம் நடுங்குதே.ஐயோ..இந்த ஆட்டத்திற்கு நான் வரலே.

  ReplyDelete
 7. இந்த அழகழகு பூக்கள் தெருவோரம் அக்கம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்ரால் நம்பவே முடியவில்லை

  ReplyDelete
 8. உங்கட குட்டி நீரோடை எங்கட சக்கடை கால்வாய் போல் இருக்கிறதே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

  ReplyDelete
 9. ஆ... வாங்க அம்முலு... ஒவ்வொன்றாக ரசிச்சு ரசிச்சு எழுதியிருக்கிறீங்க...

  //அண்ணன்,தம்பி,அக்கா,அன்ரி எல்லாரும் வருவார்கள் அழாதேங்கோ பூஸ்.//
  நிஜமாத்தான் சொல்றீங்களோ? நீங்க சொன்னதை நம்பி அழுகையை நிறுத்துறேன்... இருந்ததையும் இழந்தாய் போற்றி என்றாகிடுதோ தெரியேல்லை:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:).

  ஆசைக்கு ஒரு கோடை உடுப்புபோடவே முடியேல்லையே...:(((.

  //அப்ப படம் எடுக்கிறதிலயும்,ஆராச்சி செய்யிறதிலயும் எக்ஸ்போர்ட் ஆகிட்டீங்க.//

  கிக்..கிக்..கீஈஈஈ... தங்கியூ.. தங்கியூ... எஸ்பேர்ட் ஆன ஆட்கள் அடிக்கக் கலைப்பதுபோல ஒரு ஃபீலிங்சூஊஉ வருதூஊஊ:).

  //கவனம் பூஸார்.பின் உங்க கூடவே வந்துடப்போறார். //
  என்னை ஆரும் கொஞ்சம் வெருட்டினாலே மிரண்டு போயிடுவன்:), இதுவும் அப்பூடித்தான் ஆசையாக வந்த பூஸாரைத் தொட்டு தடவி விடவும் பயமாக இருந்து, வீட்டுக்காரர் பார்த்திட்டாலும் என, அதனால படமெடுத்ததே போதுமென விட்டுவிட்டேன்.

  மியாவும் நன்றி அம்முலு... சந்தோஷமாக இருக்கு.

  ReplyDelete
 10. வாங்க ஸாதிகா அக்கா..
  என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க, எங்கட ஊர்ப் பூஸார் எனக்குமேலதான் படுத்து நித்திரை கொள்ளுவார்.

  //இந்த அழகழகு பூக்கள் தெருவோரம் அக்கம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்ரால் நம்பவே முடியவில்லை //

  உண்மைதான் ஸாதிகா அக்கா.. நான் செலக்ட் பண்ணித்தானே படங்கள் எடுத்தேன்... இங்கே ஒரே பூ மயமாகவே இருக்கும், காட்டுப் பகுதியில்கூட பல நிறப்பூக்கள் பூத்துக் குலுங்கும்... மலைநாடென்பதாலும் முக்கியமாக..... நான் இருக்கிறேனெல்லோ அதனாலேயே கொள்ளை அழகான பூக்கள் தெரியுது... சரி சரி முறைக்காதீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

  ReplyDelete
 11. //உங்கட குட்டி நீரோடை எங்கட சக்கடை கால்வாய் போல் இருக்கிறதே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), சென்னை சாக்கடை இவ்ளோ அழகாகவோ இருக்கூஊ?:) அப்போ இனி ஆரும் சென்னையையும், குப்பை கூழம் பற்றியும் குறை சொல்லப்பூடாது சொல்லிட்டேன் ஆமா:).

  ஸாதிகா அக்கா, இதுவும் நல்ல தண்ணி அல்ல என்றே நினைக்கிறேன், அதாவது மலைத்தண்ணி ஓடிவந்து அதை ஆற்றுக்குப் போவதற்குப் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் அங்காங்கு... அதனால் ரோட்டுக்கு கீழால ஓடி, சில இடங்களில் இப்படி நீரோடை கட்டியிருக்கு, அருவி பாய்வதுபோல சலசலவென சத்தம் கேட்கும், அதைச்சுற்றி அழகான பூக்கள், தாவரங்கள் படர்ந்திருக்கும் நேரில் பார்க்க ஒரு அழகாகவே இருக்கும்...

  இப்படி நிறைய இருக்கு, நான் சாம்பிள் மட்டுமே இங்கு காட்டுகிறேன், மிகுதி எல்லாம் நேரில் வருவோருக்கு மட்டுமே...:).

  எப்போ வாறீங்க ஸாதிகா அக்கா? ஏன் எனக் கேட்கிறீங்களோ? கட்டிலுக்குக் கீழ ஒளிக்கத்தான்.... ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்..:)))).

  மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

  ReplyDelete
 12. தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா என்பது உங்கட கண்களில்தான் தங்கியிருக்கூஊஊஊஊஊ....:).//

  எத்தினை பேர் இப்படிக் கிளம்பியிருக்கிறீங்க.

  கடிச்சு குதற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இருக்கீங்க போல இருக்கே;-))))

  ReplyDelete
 13. என் காலைத்தான் அதிகம் சுத்தினார்... தூரத்து உறவாக இருப்பாரோ?:))). //

  அவ்....என்ன ஒரு டெரர் தனம்...

  ஹி....ஹி...

  கமெராக் கை வண்ணத்தில் பூக்களின் அழகினை ரசித்துப் படம் பிடித்திருக்கிறீங்க. ரசித்தேன்.

  ReplyDelete
 14. என் பக்கத்தில ஸ்மைலி வேர்க் பண்ணவில்லை, அதனால தயவு செய்து ஆரும் ஸ்மைலி போட முயற்சித்து ஏமாந்திடாமல், ஒண்ணொண்ணாத் தட்டுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்.. நான் எழுத்தைச் சொன்னேன்...//

  அக்காச்சி, யாரையோ நேரடியாத் தாக்கிறா..

  சத்தியாம எனக்கில்லை என்பது மட்டும் தெரியும்,

  ஹி,....ஹி...

  ReplyDelete
 15. அழகான கண்ணைக்கவரும் படங்கள் விமரிசனங்கள்

  ReplyDelete
 16. நல்ல படங்கள் அக்கா...

  ReplyDelete
 17. பூக்கள் அழகு. பூஸார் ஸோ ஸோ. எனக்கு கறுப்பு பூனை என்றாலே ஒரு வித பயம். சாக்கடை இல்லை...லை.... நீரோடை நோ கமன்ட்ஸ். நடக்க போகும் போது இந்த ஸூ தான் போடுவீங்களோ??? ஸ்னீக்கர்ஸ் போட்டா இன்னும் வேகமா நடக்கலாம்.

  ReplyDelete
 18. வாங்க நிரூபன்...

  //கடிச்சு குதற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இருக்கீங்க போல இருக்கே;-)))) //

  நான் இன்னும் சிரிச்சு முடியேல்லை:))...நொந்து நூடில்சாகிப்போயிருக்கிறீங்களென நினைக்கிறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:).

  எனக்கொருகதை நினைவுக்கு வருது.... எங்கள் ஊரில் ஒருவர் இருந்தார்... நிறைய சொத்துபத்து, பணம் இருந்தது அவரிடம், ஆனா குடும்பம் இல்லை, அவர் கிட்டத்தட்ட ஒரு சாமியார்போலதான், எப்பவும் கோயிலும் விரதமும், சைவம். அத்தோடு ஒரு போக்கானவர்.

  அவருக்கு எல்லோருமாகச் சேர்ந்து ஊரிலிருந்த ஒரு அழகான பெண்ணை...மணம் முடித்துக் கொடுத்தனர். பெண் மிகவும் வறுமையில் இருந்தார், பெற்றோர் இல்லை. அதனால் சம்மதித்துவிட்டார்.

  ஆனால் அவரோடு குடும்பம் நடத்த முடியாதென உடனேயே பிரிந்துவிட்டார் பெண். உடனே சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாகப் போய்விட்டார்.

  நல்ல குணமான பெண், பெயர் “தங்கம்”. அதன்பின் எல்லோரும் இவரை பேசினார்கள், குடும்பம் நடத்தத் தெரியாமல் நல்ல ஒரு பெண்ணை இழந்துவிட்டீங்களே என. அதிலிருந்து இவருக்கு ஆராவது “தங்கம்”(gold):) பற்றிக் கதைக்கப்படாது, கதைத்தால் உடனே தன் மனைவியைத்தான் சொல்கிறார்கள் என ஏசத் தொடங்கிடுவார்..

  ஒருநாள் ஈழநாட்டுப் பேப்பரில் தலைப்பு “சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்தி வந்தவர் கட்டுநாயக்காவில் பிடிபட்டார்” அதனை ஆரோ சத்தமாக வாசிக்க, இவர் சிங்கப்பூரில் இருக்கும் தன் தங்கம் பற்றிச் சொல்கிறார்கள் என அடிக்கப் போய்விட்டாராம்.... அது நினைவு வந்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்:)))).

  ReplyDelete
 19. ///அக்காச்சி, யாரையோ நேரடியாத் தாக்கிறா..

  சத்தியாம எனக்கில்லை என்பது மட்டும் தெரியும்,

  ஹி,....ஹி...///

  நிரூபன், சைக்கிள் எடுத்ததும் நீங்களில்லை எனத் தப்பிட்டீங்கள், இதுவும் நீங்களுக்கில்லையோ? அவ்வ்வ்வ்வ்வ்:)). இப்ப புரியுதோ, நான் நேரடியாகத்தான் மோதுவன், உள்குத்தெல்லாம் வைக்கமாட்டன்... ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...... ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்:))).

  மியாவும் நன்றி நிரூபன்.

  ReplyDelete
 20. வாங்க லக்ஸ்மி அக்கா... மிக்க நன்றி.

  ReplyDelete
 21. வாங்க அரசன்...

  ஊருக்குப் போனதோடு, என் பக்கத்தை மறந்திட்டீங்கள் என நினைத்தேன்.... நினைவு இருக்கு இல்ல?:))..

  மிக்க நன்றி அரசன்.

  ReplyDelete
 22. வாங்க வான்ஸ்ஸ்...

  ஒருமாதிரி சத்தம் கேட்டபோதே நினைச்சேன்.... வான்ஸ்ஸ்ஸ் ஆகத்தான் இருக்குமென..:)).

  பூஸ் எண்டால் எல்லாம் பூஸ்தான்..மெத்தெண்டுதான் இருப்பினம்... இதில் கறுப்பென்ன சிகப்பென்ன.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  //நடக்க போகும் போது இந்த ஸூ தான் போடுவீங்களோ???// கர்ர்ர்ர் இது சூஸ் அல்ல பூட்ஸ். மழை நாட்களில் பூட்ஸ்தான் பாவிப்பேன், நடப்பதும் சுலபம்.

  ஆனா இது நடக்கப்போவதற்காக போட்டதல்ல. சின்னவரை, கிட்டார் கிளாசில் இறக்கிவிட்டபின், யோசித்தோம் வீட்டுக்குப் போய்வருவதைவிட, காரை இங்கேயே பார்க் பண்ணிட்டு ஒரு ரவுண்ட் நடக்கலாமே என... அரை மணித்தியாலம்தான் வகுப்பு. அப்பூடி நடக்கப்போனதுதான் இதூஊஊஊஊ ஓக்கை... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), விபரம் புரியாமல் குய்யோ முறையோ எனக் கத்தி... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  மியாவும் நன்றி வான்ஸ்ஸ்...

  ReplyDelete
 23. அம்முலு..அம்முலு.... மறந்தே போயிட்டேன்... நீங்க சொன்னபின்புதான் எனக்குத் தெரியும் பிரவுண் மரம் இருப்பது, இன்று போய்வரும்போது அம்மரங்களைப் பார்த்ததும் அம்முலுவின் நினைவு வந்து சிரித்திட்டேன்... வைத்த கண்ணையும் எடுத்திட்டேன் மரத்திலிருந்துதான்:)))...

  இத்தனை காலமும் நான் இதைக் கவனிக்கவே இல்லை. இவ்வருடம்தான் அதுவும் புளொக்கில் படம் போடுவதற்காக படமெடுத்தமையால் கவனித்தேன்.:)))))).

  ReplyDelete
 24. அதிரா,25வது கமென்ட் போட கரெக்ட்டா வந்திட்டேன்! :)

  பூக்கள் எல்லாமே அழகா இருக்கு. அந்த பிங்க்&ஒரேஞ்ச் பூக்களை இங்கே பொக்கேல பாத்திருக்கேன்,செடியில் பூக்களைக் காட்டியதுக்கு தேங்க்ஸ் அதிரா! :)

  கருப்பு பூனைகளைப்பார்த்தா எனக்கும் பயம்..சிவப்புரோஜாக்கள்ல வர கருப்பூ பூனை நினைவுவந்துடும்! உங்க நீரோடைகள் எல்லாமே இப்படித்தான் இருக்குமா?? ;)

  ReplyDelete
 25. வாங்க மகி...

  25 ஆவது கொமெண்ட்டுக்கு நோ வடேஏஏஏஏ:))).

  நீங்க சொன்னதன்பின்புதான் என் கிட்னியிலும் தட்டுப் படுது, இங்கும் இப்பூவில் நிறைய பொக்கே விக்குதூஊஊஊ... பல நிறங்களில்.

  எனக்கு கறுப்புப்பூஸாரின் கண்ணுக்கு மட்டும்தான் பயம்ம்ம்ம்...

  //உங்க நீரோடைகள் எல்லாமே இப்படித்தான் இருக்குமா?? ;) //

  அம்மாஆஆஆஆஆஆஆஆ மகியைப் பாருங்க... ஒரு பேபி அதிராவைப் பார்த்து என்ன என்ன கேள்வியெல்லாம் கேட்கினம்.... :). இது எப்பூடிப்பட்ட கேள்வி என்றே என்னால புரிஞ்சுகொள்ள முடியேல்லையே... அவ்வ்வ்வ்வ்வ்:)))... அதால ஒண்ணுமே சொல்ல மாட்டேன்...:))).

  மியாவும் நன்றி மகி. எங்கட சந்துவைக் கண்டனீங்களோ? உங்களுக்குக் கிட்டத்தானே இருக்கிறாவாம்... மயில் கொஞ்சம் தூரமாக்கும்.... பறவாயில்லை... இருக்கட்டும் இருக்கட்டும்.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.