நல்வரவு_()_


Thursday 19 May 2011

எனக்கு Double or Triple OOkai, ஆனா இது முடியாது சாமீஈஈஈஈ:)

இந்த வீடியோவில் இருப்பவர்களே வந்திருந்தார்கள்...


இங்கே ஆரம்பப் பாடசாலைகளில்(Primary Schools) 10 வயதினருக்கு சைக்கிள் ஓடும் விதிமுறைகள் சொல்லிக்கொடுத்துப் பழக்குவார்கள், முடிவில் சோதனை வைத்து சேர்டிபிகேட் கொடுப்பார்கள். அதன் பின்பு அவர்கள் ரோட்டில் சைக்கிள் ஓடலாம்.

எங்கள் மகனின் வகுப்பும் இந்த Term பழகுகிறார்கள்.  அதனால் அவர்கள் வகுப்பை இன்னொரு பாடசாலைக்கு அழைத்துச் சென்றார்கள், ஏனெனில் அங்கு பிரபல்யமான சைக்கிள் ஓட்ட வீரர்கள் வந்து சாகசங்கள் காட்டிப் பின்பு, இவர்களுக்கும் சைக்கிள்பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தார்கள்.

வழமையாக இப்படியான ட்ரிப்புக்கு பெற்றோரை உதவிக்கு கேட்பார்கள், ஆசியர்களோடு ஒருசில பெற்றோரும் சேர்ந்து மாணவர்களை அழைத்துப்போய்வருவது வழக்கம். இம்முறை நானும் உதவுகிறேன் எனக் கூறிச் சென்றேன்.

இதுவரை ரீவியில் பார்த்திருக்கிறேன், இம்முறை நேரில் பார்த்தபோது மிகவும் நன்றாக இருந்தது.

=========================================================

பின்னாலே -”- 10 அடி உயரமுள்ள மேடை அமைத்து, முன்னுக்கு ஒரு 5,6 அடி உயரமுள்ள இன்னொரு மேடையமைத்து, பின் மேடையிலிருந்து கீழே மிகவும் ஸ்பீட்டாக இறங்கி, அதே வேகத்தில் முன் மேடைமேல் ஏறிக் கீழே பாய்ந்து கால் நிலத்தில் முட்டாமல் சைக்கிளிலேயே நின்றார்கள்.


பின் மேடையில் ஏறி ஆயத்தமாகிறார்கள்.

=================================================================


சைக்கிளின் பின் ரயறிலேயே
நீண்ட நேரம் மேடையில்
தூக்கித் தூக்கித் துள்ளிக்கொண்டிருந்தார்

======================================================================
பின் மேடையில் ஏறித் தயாராக நிற்கிறார்கள்,
முன் மேடையிலே மீண்டும்,
 ஒன்றரை மீற்றர் உயரத்திலே
உயரம் பாய்வதற்கு ஒரு கம்பி பொருத்தப்பட்டிருக்கு


அக் கம்பியைக் கடக்கிறார் சைக்கிளோடு,
இவர் ஒரு பெண் வீராங்கனை.


=====================================================

முன் மேடைக்கு அருகில் இன்னும் இரு மேடைகள்,
 இன்னும் உயரமானவை இருக்குதெல்லோ,
அந்த முன் மேடையில் இருந்து,
பக்கத்து உயர மேடைக்கு தாவி,
 பின் சைக்கிளாலேயே படியேறி,
 மிக உயர்ந்த மேடைக்குச் செல்கிறார்.மேலேயிருந்தும் ஒரு சில்லில் சாகசம் காட்டியபின்,
கீழ் மேடைக்குக் குதித்தார்.
 இவரிடம் இருந்தது மிகவும் குட்டிச் சைக்கிள்.அதேபோலவே இன்னொருவர்,
பெரிய சைக்கிளோடு ஏறியிருக்கிறார்.இவர் மேலேயிருந்து நேரடியாகக் கீழே குதித்து,
 விழாமல் தொடர்ந்து ஓடினார்.

இது, அந்தக் குட்டிச் சைக்கிள்காரர்,
கீழே எனவுன்ஸ் பண்ணுபவரை
படுக்கச் சொல்லிப்போட்டு பக்கத்திலே பாய்ந்தார்.


தவறாமல் அருகிலே பாய்ந்திருக்கிறார்.

============================================

இவர் குட்டி சைக்கிளோடு
உயரம் பாய ஆயத்தமாகிறார்.வெற்றிகரமாகப் பாய்ந்து கால் நிலத்தில்
ஊன்றாமல் நின்றார்.


இவர் பெரிய சைக்கிள் வைத்திருப்பவர்..
 தூர இருந்து ஓடிவந்து பாய்கிறார்.எப்படி சைக்கிள் ஸ்ரன் ஷோ பிடிச்சிருக்கா?
இவை என் மொபைலால் எடுத்தவைகளே.

================================================

பின் இணைப்பு:
இவை தம்பி ஜீனோ, என் கொசு மயிலுக்கு அனுப்பியவை....சைக்கிள் இல்லாவிட்டால் என்ன, நாங்கதான் சாகசங்கள் செய்வோமே...:), ஆராவது பிடிக்க முடியுமோ?:).


உஸ் அப்பா... சோ....ஓ.. ரயேர்ட்...
இது ச்சோஓ சுவீட்டாம் தம்பிதான் சொன்னவர்ர்ர்ர்ர்:).


  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விரும்பியது கிடைக்கவில்லையே என்பதற்காக
கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பக்கூடாது
......கண்ண..தாசன் சொன்னவர்....
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

30 comments :

 1. இதுபோல் ஸ்டண்ட் ஷோக்கள் பார்க்கும்போது வியப்பும், ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயமும் உண்டாகும் எனக்கு. ஆனா சர்வ சாதாரணமாக அவர்கள் செய்துக் காட்டுவதற்கு தனி திறமைதான் வேணும். பகிர்வுக்கு நன்றி அதிரா!

  ReplyDelete
 2. அதிரா..கலக்குறிங்க...படங்கள் ஒவ்வொன்றுமே அருமையாக தெளிவாக விளக்கி இருக்கின்றிங்க...

  ReplyDelete
 3. super super ஸ்டெப் பை ஸ்டெப் படங்களோட விரிவா எழுதியது நல்லாவே இருக்கு. எனக்கு இந்த சாகஸங்களை பார்த்தால் கொஞ்சம் பயமாகவும் ஆனல ஆச்சரியமாகவும் இருக்கும் அதிரா.

  ReplyDelete
 4. வாங்க அஸ்மா, உண்மைதான் நேரில் பார்க்கும்போது திக் திக் என்றுதான் இருக்கும். இதைவிட மோசம் மோட்டார்பைக் ரேசிங் நேரில் பார்த்தோம்... அப்போ படமெடுக்க முடியாமல் குளிரும் மழையுமாக இருந்ததால் எடுக்கும் யோசனை வரவில்லை, அது 2009 இல்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 5. வாங்க கீதா. கமெரா எடுத்துச் செல்லவில்லை, அதனால் ஃபோன் மூலம் எடுத்தேன், தூரமாக இருப்பதனால் பார்க்கப் புரியாதென.... வி...ள....க்...க..ம்ம்ம்ம் கொடுத்திருக்கிறேன்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 6. வாங்க விஜி.. நலமோ? நீண்ட நாளின் பின்பு..

  உண்மையே... இடையிலே ஒரு தடவை மேலே பாய்ந்து ஒரு சுற்று தலைகீழாக சுற்றி கீழே இறங்கினார்... அதை படமெடுக்க முடியாமல் போச்சு.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 7. விளக்கபடங்களுடன் அருமை அதிரா!!பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 8. சோஓஓஓஓஓஓஒம்பேரி பூஸ் .கொஞ்சம் எழுந்து வேறு வேறு கோணத்தில் இப்படி அப்படி நகன்று போட்டோ எடுத்து இருக்கக்கூடாதா?உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் உட்கார்ந்து கொண்டு போட்டோ எடுத்து இருக்கீங்களே நியாயமா?

  ReplyDelete
 9. ஸாதிகா அக்கா வாங்கோ...

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்கிறீங்க... அப்பூடியே ஓடிவந்து கட்டித்தழுவி, என்ன அதிரா இப்பூடி வயக்கெட்டுப் போனீங்களே... ஒழுங்காச் சாப்பிடுறீங்களோ? நலமோ? எண்டெல்லாம் கேட்பீங்களெனப் பார்த்தால்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்:).

  இருப்பதைவிட்டுவிட்டு பறப்பதுக்கு ஆசைப்பட்ட கதையாப்போச்சே.... அதிராவோ இவ்ளோ அழகாக, அதுவும் மொபைலில் எடுத்திருக்கிறா எனப் பாராட்டாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  இல்லை ஸாதிகா அக்கா, இங்கு ஸ்கூலில் படங்கள் எடுக்கப்படாது என்பது சட்டம். அதனால் நான் பேசாமல் இருந்தேன், பக்கத்திலே நின்ற ரீச்சர் மொபைலால் எடுத்தா, அதைப் பார்த்ததும் நானும் எடுத்தேன்... இதில ஓடி ஓடி எடுத்தால் அவ்ளோதான்... தெரிஞ்சும் தெரியாமலும்தான் எடுக்கலாம்.

  மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

  ReplyDelete
 10. சைக்கிள் ஸ்ரேன் சோ பார்ப்பதற்கு ப்யங்கரமாக இருக்கிறது.
  சைக்கிள் ஸ்ரேன் சோ பற்றிய விளக்கத்திற்கும், பதிவிற்கும் நன்றிகள் சகோ.

  ReplyDelete
 11. படங்களும் விளக்கங்களும் அருமை அதிரா.மொபைலில் எடுத்திருந்தாலும் அழகாக வந்திருக்கிறது.இங்கு மகனும் இப்படிஒரு சாகச நிகழ்ச்சிக்கு ஸ்கூலால் போனார்.ஆனால் மொபைலால் கூட எடுக்கமுடியவில்லை.பிள்ளைகளுடன் அப்பா அல்லது அம்மா கூடச்செல்லலாம்.அதனால் குறிப்பிட்ட அளவினரே வந்தனர்.ஒரு ஸ்கூலின் உள்ளே நடந்ததால் மொபைலை off செய்யச்சொல்லிவிட்டார்கள்.உங்களுக்கு பரவாயில்லை.

  ReplyDelete
 12. அதீஸூ, படங்கள் நல்லா இருக்கு. அடுத்த முறை நீங்க இப்படி சைக்கிள் ஓட்டி, படங்கள் போடுங்கோ பார்க்க ஆவலா இருக்கு. இங்கே டிவியில் சில நேரங்களில் காட்டுவார்கள். நான் பார்ப்பதே இல்லை.

  ReplyDelete
 13. Hello Dear miyaa !
  Awesome Pictures.. Thanks for sharing with us :)

  ila

  ReplyDelete
 14. /அடுத்த முறை நீங்க இப்படி சைக்கிள் ஓட்டி, படங்கள் போடுங்கோ பார்க்க ஆவலா இருக்கு./:))))))) ஆமாம் அதிரா,நானும் இதையே வழிமொழிகிறேன்.

  நேரில் பார்க்க கொஞ்சம் திகில் +ஆர்வமா இருந்திருக்கும்.நான் ட்ராவல் சேனலில் வரும் எக்ஸ்ட்ரீம் ரைட்ஸ் அப்படிப் பார்ப்பேன்.சிலமுறை இந்த சைக்கிள் ரேஸும் பாத்திருக்கேன்.நல்ல பகிர்வு!

  கூகுளுக்கு என்னாச்சுன்னு தெரியல,எத்தனை முறை லாக் இன் செய்தாலும்,அனானிமஸ் கமென்ட்டாவே காட்டுது!!
  -மகி

  ReplyDelete
 15. சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............!

  படத்தை புடிச்சு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !!

  ReplyDelete
 16. வாங்க நிரூபன்...

  நேரில் பார்க்கும்போது பயமாகத்தான் இருந்துது...நாமதான் தெனாலி ஆச்சே...:))

  மிக்க நன்றி.

  ReplyDelete
 17. அம்முலு வாங்கோ.... ஆளைக் காணல்லியே என யோசிச்சேன்....:).

  அப்போ நான் கொடுத்து வச்சனான் எனச் சொல்றீங்க... ஒவ்வொரு ஸ்கூல் ஒவ்வொரு விதமென நினைக்கிறேன்... எங்கள் பிள்ளைகளின் ஸ்கூல் கடும் ஸ்ரிக்ட். இது வேறு ஸ்கூல், அவர்கள் ஒன்னும் சொல்லவில்லை.

  எங்கள் ஸ்கூலில் ஒருமுறை ஒரு கிரான் பேரண்ட், பேரன் ஸ்கூலால் வருவதை வெளியே நின்று படமெடுத்தார், அதைக் கண்ட செக்கியூறிடி ஓடிவந்து, அது டிஜிரல் கமெரா, அதை வாங்கி அனைத்தையும் டிலீட் பண்ணிட்டார்.

  மியாவும் நன்றி அம்முலு.

  ReplyDelete
 18. அதிராதான்:)Tuesday, May 24, 2011 9:55:00 pm

  வாங்க வான்ஸ்ஸ்....

  இதுக்கே பயப்புடுறீங்க, நான் வித்தைகாட்டிப் படமெடுத்துப் போட்டா... நித்திரையே கொள்ளமாட்டீங்க பயத்தில, அதனால வாணாம் விட்டிடுங்க ஆசையை:)))

  மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்.

  ReplyDelete
 19. அதிராமியா:)Tuesday, May 24, 2011 10:03:00 pm

  இல்ஸ்ஸ்ஸ்... வாங்க இல்ஸ்ஸ்ஸ்..

  நீங்களும் இல்லையா... வாழ்க்கையே வெறுத்துப்போச்செனக்கு....ஒரு கவி வரிகள் நியாஆபகத்துக்கு வருது.... சின்ன வயசில படித்தேன் பிடித்துவிட்டது....

  “எனக்குப் பிடிக்காது
  வாழ்க்கையே
  வெறுத்துப்போச்சுது
  எனச் சொல்லிக்கொண்டே
  இன்னும்
  உயிரோடிருப்பவர்களைப்
  பிடிக்காது”

  இப்பூடி இருந்துது அது...

  உண்மைதானே... வாழ்க்கையே வெறுத்துப்பொச்செண்டால், எங்காவது ஆறு குளம் தேடிப் போவதை விட்டுப்போட்டு இன்னும் என்ன முருங்கைமரம் வாண்டிக்கிடக்கு எனக் கேட்பது கேட்குது.... என்ன செய்ய..:)).. அஜீஸ் பண்ணிக்கொள்ளுங்க மை டியர்..

  கூகிளார் எனக்கு விளையாட்டுக்காட்டுறார்... அதிராவோ கொக்கோ... அதுதான் நான் அவருக்கு பெயரை மாத்தி மாத்திப்போட்டு விழை:)யாடுறன்:)))).

  மியாவும் நன்றி இல்ஸ்ஸ்ஸ்... கடலைவடை இருக்கு... கெதியா வாங்க முருங்ஸ்ஸ்ஸ்க்கு:)).

  ReplyDelete
 20. கண்டுபிடிங்க:)Tuesday, May 24, 2011 10:05:00 pm

  வாங்க கவிக்கா...

  மியாவும் நன்றி... அனைத்து ஹெல்ப்புக்கும் நன்றி.

  ReplyDelete
 21. அதிராதான்:)Tuesday, May 24, 2011 10:08:00 pm

  வாங்க மஹி...

  அனானியாக வந்ததால கொஞ்சம் மாறிட்டுது பதில் மன்னியுங்க.

  எனக்கும் அனானியா வருது ஆனா பின்னூட்டமுடியேல்லை:)).

  கூகிள் இம்முறை அனைவரையும் ஒரு கலக்கு கலக்குறார்.

  மிக்க நன்றி மஹி.

  ReplyDelete
 22. //கண்டுபிடிங்க:) said...

  வாங்க கவிக்கா...//

  நீங்க சொன்னதுக்காக எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. அது இருக்கட்டும் கண்டுபிடிக்குறதுக்கு நீங்க என்ன டி.வி’யா ரேடியோவா இல்ல ரைட் பிரதர்ஸ் கண்டுபிடிச்ச விமானமா..? ஐயோ ஐயோ :P

  ReplyDelete
 23. // நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்கிறீங்க... அப்பூடியே ஓடிவந்து கட்டித்தழுவி, என்ன அதிரா இப்பூடி வயக்கெட்டுப் போனீங்களே... ஒழுங்காச் சாப்பிடுறீங்களோ? நலமோ? எண்டெல்லாம் கேட்பீங்களெனப் பார்த்தால்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்:).//

  நீண்ட நாள் கழித்து தான் நானும் வாரேன். இப்ப உங்களிடம், அளவா சாப்புடுறீங்களா, அதிகமா ரெஸ்ட் எடுக்கிறீங்களா (தூங்குறீங்களா என்பதை சொல்லாம கேட்டினம் அவ்வ்வ்வவ்..!!) எண்டெல்லாம் கேட்கமாட்டேன்!! ஏன்னா நீங்க அதிலெல்லாம் சமத்து எண்டு எனக்கு நல்லாவே தெரியும். இந்த மொபைல் கேமராவிலேயே இவ்வளவு சூப்பரா எடுத்திருக்கீங்களே, நூல் பிடித்த மாதிரி கேமரா இங்கிட்டும் அங்கிட்டும் அசையாமல் இருக்கே, இதிலிருந்து நீங்க எவ்வளவு நிதானமானவர் (கேமரா கலையை கற்றவர்) தானெண்டு எனக்கு விளங்குது மியாவ்! ஆகவே தோழர்களே தோழிகளே ஒருமுறை ஜோரா கைதட்டுங்க எங்க பூஸாருக்கு வாழ்த்துகளை சொல்லி..... மீ எஸ்ஸ்ஸ்...

  ReplyDelete
 24. வாங்க , இன்னும் என்னைக் கண்டுபிடிக்காத கவிக்கா:)..

  //நீங்க சொன்னதுக்காக எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. அது இருக்கட்டும் கண்டுபிடிக்குறதுக்கு நீங்க என்ன டி.வி’யா ரேடியோவா இல்ல ரைட் பிரதர்ஸ் கண்டுபிடிச்ச விமானமா..? ஐயோ ஐயோ //

  கடவுளே... ரீவி, ரேடியோ எல்லாம் “கண்டுபிடிக்கிறது” ஈசி, இது வேற கண்டுபிடிக்கிறது... ஹையோ...ஹையோ.....

  இவிங்களையெல்லாம் வச்சுக்கொண்டு எப்பூடித்தான் இவ்ளோ காலமும் வலைப்பூவை ஓட்டிவந்தேனோ ஆண்டவனுக்கே வெளிச்சம்:).... இன்னும் 2012 வரைக்கும் ஒரு மாதிரி முருங்ஸ்ஸில இருந்தே மிகுதிக் காலத்தையும் ஓட்டி முடிச்சிடுவேன்:))...

  இங்க மோதுறத்துக்கு சுவரும் இல்ல, ஓடுறதுக்கு நாய்க்குட்டியும் இல்ல:)... என்ன செய்ய அவ்வ்வ்வ்வ்வ்:)).
  தேங்கிஸூ கவிக்கா.

  ReplyDelete
 25. ஜலீலாக்கா வாங்க,
  நீங்க அடிவாங்கப்போறீங்க... இப்பவெல்லாம் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுறீங்க என்னோடு:)...

  ம்ம்ம்ம்ம்ம்... மகன் போனபின்பு ஒயுங்கா வரோணும் ஓக்கை...

  மியாவும் நன்றி ஜல் அக்கா.

  ReplyDelete
 26. வாங்க அப்துல் காதர்...

  //நீண்ட நாள் கழித்து தான் நானும் வாரேன்//

  கடவுளே... அது ஸாதிகா அக்காவுக்கு மட்டுமான கொப்பிரைட் வாக்கியம்.... நீங்களெல்லாம் படிக்கப்புடா:)).... லேட்டா வந்தாலும் கரெக்ட்டா கழுத்தில கத்தி வைக்கிறமாதிரிப் புடிக்கிறீங்களே... பதிலையெல்லாம் அவ்வ்வ்வ்வ்வ்:)).

  //ஏன்னா நீங்க அதிலெல்லாம் சமத்து எண்டு எனக்கு நல்லாவே தெரியும்//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... மெலிஞ்சு வயக்கெட்டு... அமெரிக்காவில அடிக்கிற டொனாடோவுக்கு, பிரித்தானிய முருங்கை ஆடுற ஆட்டத்தில... மேல் கொப்பில இருக்கமுடியாமல் ஒரு நெட்டில பிடிச்சுக்கொண்டு ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிற எங்களைப் பார்த்து... அதிகம் ரெஸ்ட், அளவான சாப்பாடென்றால்... கர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  படமெடுத்த விதத்தை ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க மிக்க நன்றி.

  எல்லோரும் கை தட்டுற தட்டில புகைப் புகையா வந்து பிரித்தானியாவையே மூடிட்டுது:).... நேற்று எயார்போர்ட்டே குளோஸ் பண்ணியாச்சென்றால் பாருங்களன்.:).

  மிக்க நன்றி அப்துல்காதர்.

  ReplyDelete
 27. விரும்பியது கிடைக்கவில்லையே என்பதற்காக
  கிடைக்கும் எல்லாவற்றையும் விரும்பக்கூடாது//

  அட நம்ம கண்ணதாசன் வரிகள் எப்பவுமே சூப்பர் தான்....

  ReplyDelete
 28. கையிலாங்கடையில போடற மாதிரி ஒரு சைக்கிள் இருக்கு நானும் தாவி பாக்குறேன்ன்ன்ன்ன்ன்ன்ன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.